Saturday, November 05, 2011

கருங்காலி கூட்டமும் குமரி மாவட்டமும்!





கருங்காலி கூட்டமும் குமரி மாவட்டமும்!



குமரி மாவட்டம், பழைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் அடக்கி வைக்கப்பட்டிருந்தது,அய்யா வைகுண்ட சாமி,மார்ஷல் நேசமணி போன்றோர் போராடி, தமிழகத்துடன் 1956 இல் இணைத்தனர், இந்த நவம்பர்  1உடன் 55 ஆண்டுகள் ஆகிறது. இன்னும் அதிக தகவல்கள் வேண்டுவோர் இணையத்தினை நாடலாம்.

இப்போ இதுக்கு என்னா என்கிறீர்களா?

இந்த வார குமுதம் ரிப்போர்ட்டரில்(6.11.2011) ஒரு கட்டுரை வந்துள்ளது, அதன் சாரம்சம் இதுவே,

குமரி கேரளாவுக்கே சொந்தம் என ஒரு அமைப்பு கேரளாவில் போராடி வருகிறதாம் (பெயர் போடவில்லை) இவர்களுடன் வகுண்டசாமி தர்ம பரிபாலன சங்கம் என்ற அமைப்பும்(தலைவர் சந்திர சேகரன்) சேர்ந்து கேரளா சட்டம்மன்றம் எதிரே நவம்பர் 1 ஆம் தேதி தர்ணா நடத்தப்போவதாக அறிவித்துள்ளார்கள்.மேலும் அவர்கள் இது நாள் வரை நவம்பர் ஒன்றை துக்க தினமாக அனுசரித்து வந்தார்களாம்!

இதற்கு அவர்கள் சொல்லும் காரணம் , குமரி மாவட்டம் புறக்கணிக்கப்பட்டுள்ளது, தமிழக அரசு குமரி மாவட்டத்திற்கு  சாலை முதலான எந்த அடிப்படை வசதிகளையும் செய்து தரவில்லையாம்(ஒரு மெடிக்கல் காலேஜ் கூட அங்கே புதுசா வந்துச்சே)

இது பற்றி பாலப்பிரஜாப்தி அடிகளிடமும் கேட்டு இருக்கிறார்கள்,இவரும் அந்தப்போராட்டத்தில் கலந்துக்கொள்வதாக சொல்லியுள்ளார். அவர் சொன்ன கருத்துகள்,

#தமிழ் நாட்டில் குமரி மாவட்ட இணைப்புக்காக போராடியவர்களுக்கு சிலை வைக்கவில்லை(அட டா சிலை வச்சா காக்கா உச்சா தானே போகும் என்ன ஒரு கோரிக்கை),

#தமிழகத்துடன் குமரி இணைந்ததை தமிழ் நாட்டில் யாரும் கொண்டாடவில்லை,

#ஆனால் கேராளாவில் குமரி பிரிந்து போனதற்காக வருந்துகிறார்கள்,

அவர்களுக்கு எங்கள் மீது இன்னும் பாசம் இருக்கு, எனவே இங்குள்ள மக்கள் விரும்பினால் குமரி கேரளாவுடன் சேரலாம், வேணாம்னு சொன்னா வேண்டாம்னு சொல்லி இருக்கார்.சேர வேண்டாம்னு போராடினால் அதிலும் முதல் ஆளாக கலந்து கொள்வேன் என்றார்.(ரொம்ப தெளிவு)

இதே கருத்தை தமிழ்நாடு நாடார் மஹாஜன சங்க தலைவர் கருங்கல் ஜார்ஜ் அவர்களும் பிரதிபலித்தாராம்(கருங்கல்லு பிரதிபலிக்குமா அது என்ன கிரானைட்டா)

ஜான் ஜேக்கப், கிள்ளியூர் காங் எம் எல் ஏ மட்டும் இது ஜாதி, மதம் சார்ந்து கிளம்புற பிரச்சினை இதுக்கு ஆதரவு தர மாட்டேன்னு வெளிப்படையா பேசி இருக்கார்(காங் ல கூட வெளிப்படையா பேச ஆள் இருக்குப்பா)

போறப்போக்க பார்த்தா குமரி மாவட்டத்த லெமுரியா கண்டத்துக்கூட இணைக்கனும்னு யாரேனும் போராடுவார்களோனு பயமா இருக்கு! :-))

சரி சென்னப்பட்டினத்த ஆந்திரா கூட இணைக்கனும் யாரும் போராடுவதற்குள், சென்னை தமிழ் நாட்டுக்கேனு நாம போராட்டத்த ஆரம்பிச்சுடுலாம் ..ரெடி ஸ்ஸ்ட்டார்ட் த மியுஜிக்!

பின் விளைவு குறிப்பு:

 ரிப்போர்ட்டர் என்ற வார பத்திரிக்கையில் வந்தசெய்தியே இது , முழுதுமாக காபி ,பேஸ்ட் செய்யப்படவில்லை, இது ஒரு " gist news" எனவே சந்தேகம் இருப்பவர்கள் அந்த பத்திரிக்கையைப்படித்து தெரிந்து கொள்ளவும்.