dotEPUB

Friday, November 11, 2011

11-11-11

                                                       

                                                         11-11-11


இதில் ஏதேனும் சிறப்பு இருக்கா? இருக்கு என்று சொல்பவர்கள் (மூட) நம்பிக்கையின் அடிப்படையில் சொல்பவர்களாக மட்டுமே இருக்க முடியும், ஆனால் இது வெறும் எண்களீன் தற்செயல் நிகழ்வு என்பவர்கள் கணிதத்தின் அடிப்படையில் சொல்பவர்களாக இருக்க வேண்டும்.

11-11-11 போலவே 10-10-10 என போன ஆண்டும் வந்துள்ளது, இது போல 1 முதல் 12 வரைக்கும் எல்லா நூற்றாண்டிலும் வரும் ஏன் எனில் வருடத்திற்கு 12 மாதம் இருக்கில்லையா?

ஆனால் ஒரே போல என் திரும்ப வர 100 ஆண்டுகள் ஆகும், ரொம்ப முக்கியமாக எண் ஒத்துப்போவது என்றால் 11-11-1111,12-12-1212,22-2-2222 என்பது போன்றது தான் இது போல வர 1000 ஆண்டுகள் ஆகும், உ.ம் 10.10.1010  போல இதெல்லாம் வெறும் தற்செயலே.(ஆனால் எல்லா எண்களும் ஒத்து வருவது தனிச்சிறப்பு என்போறும் உண்டு)

ஆனால் இந்த 11-11-2011 ஐ கூட்டினால் நியுமராலஜிப்படி 8 வருது அது சனி எண், 11 என்பதைக்கூட்டினால் 2 அது நிலவின் எண், எனவே நிலவும், சனியும் சேர்ந்த ஆண்டு மோசமான ஆண்டு என்று ஜோசியக்காரர்கள் ஜல்லியடிக்க கூடும்!

11 மணிக்காலை , நவம்பர் 11 தான் முதல் உலகப்போர் முடிவுற்றதாக அறிவிக்கப்பட்டதாம் எனவே எல்லா வருடமும் 11-11 அப்போது போர் நினைவு தினம் ,நேரம் கடைபிடிக்கப்படுகிறது.

2011 ஆண்டில் ஒருவரது வயது என்னவோ அதனுடன் அவர்கள் பிறந்த ஆண்டின் கடைசி இரண்டு இலக்கத்தை கூட்டினால் 111 என்று மட்டுமே வருமாம்!(ஏன்பா அப்போ ஒருத்தர் 111 வயசுக்கு மேல வாழ்ந்து கூட்டினாலும் அப்படி வருமா?)

11 ஐ வைத்து ஒரு பாலிண்ரோம்(மலையாளம் போல)

11*11=121

111111*111111=12345654321

111111111*111111111=12345678987654321

முன்னாலிருந்தும்,பின்னாலிருந்தும் ஒரே போல வருமாம்!

அப்புறம் எதையும் விட்டு வைக்காத ஹாலிவுட் 11-11-11 என ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் படத்தை அதே பெயரில் அதே நாளில் வெளியிடுகிறது!(கூடிய சீக்கிரம் உலக சினிமா விமர்சகர்கள் தங்கள் பொன்னான விமர்சனத்தை அறங்கேற்றுவாī2;்கள்(சீன் இருந்தால் உடனே வரும்)

ஏதோ என்னால் முடிஞ்ச ஜல்லி! ஜோதிடக்காரங்களுக்கு நாளைக்கு பேப்பர் பார்த்த பிறகு தான் பதிவு போட மூடு வரும்!