மருத்துவ மாணவர்களின் கல்வி செலவுக்கென dme வழியாக அரசு ஒதுக்கும் பணம் 712.20 கோடி,(மக்கள் சுகாதாரப்பட்ஜெட் தனியா உள்ளது) எனில் அதில் மாணவர்களுக்கு செலவு ஆவது வெகு குறைவு என்கிறார்கள்.ஆனால் அப்படி அல்ல என்பதை கொஞ்சம் அலசினால் தெரியும்.
மாணவர்களுக்கு கையில் எந்த நிதியியும் போய் சேராது , அவர்களுக்கு தரப்படும் கல்வி உதவித்தொகை தவிர. மற்ற செலவுகள் எல்லாம் மறைமுக செலவுகள்.
உதாரணமாக ...
மருத்து விரிவுரையாளர்கள்,
கல்லூரி பணியாளர்கள்,
ஆய்வுக்கருவிகள்,
ஆய்வக செலவுகள்,
நூலகம்,
கான்பெரன்ஸ் ஹால்,
வகுப்பரை,
விடுதி,
சமையல் கூடம்,
நூலகம்,
தொலைப்பேசி, அலுவலக ஸ்டேனரி , நிர்வாக செலவுகள்,
குடிநீர்,
மின்சாரம்,
இன்ன பிற என்று 1000 செலவீனங்கள் உண்டு.
ஒரு சின்ன உதாரணம்,
சென்னை மருத்துவக்கல்லூரியில் உள்ள மொத்த mbbs இடங்கள் 165 மட்டுமே.
ஆனால் தற்போது அங்குள்ள விரிவுரையாளர்களின் எண்ணிக்கை 510. ஆகும் இதிலும் இன்னும் பல இடங்களில் ஆசிரியர்கள் அங்கே நியமிக்கப்படவே இல்லை,அவர்களும் நியமிக்கப்பட்டால் எண்ணிக்கை அதிகரிக்கும்.
இந்தச்சுட்டியில் சென்னை மருத்துவக்கல்லூரியில் வேலை செய்யும் விரிவுரையாளர்களின் பட்டியல் உள்ளது.
http://www.tnhealth.org/dmedoctorslist/dmelistprocess.asp
ஒரு விரிவுரையாளர் தோராயமாக சராசரியாக குறைந்த பட்சம் 20,000 சம்பளம்(15000- இல் இருந்து 35000 வரைக்கும் சம்பளம் இருக்கு) வாங்குகிறார் என்று வைத்துக்கொண்டாலும் ,
510x20,000= 10,200,000
ஒரு மாதத்திற்கு மட்டும் teaching staff சம்பளம் மட்டுமே ஒரு கோடியே இரண்டு லட்சம்! இதை மட்டும் ஒரு மாணவனுக்கு கற்பிக்க ஆகும் செலவு என்று கணக்கிட்டால் 61,818 ரூபாய் வருகிறது. ஒரு வருடத்திற்கு 7,41,818(ஏழு லட்சத்து சொச்சம்) இது வெறும் கற்பித்தலுக்கான செலவு மட்டுமே!
மற்ற மாதாந்திர செலவுகள் எவ்வளவு வரும்? எல்லாம் கூட்டிக்கழித்துப்பார்த்தால் மொத்த தொகை எங்கோ போய்விடும்.இது சென்னை மருத்துவக்கல்லூரியை மட்டும் வைத்து சொல்வது.மக்களே கொஞ்சம் சிரத்தை எடுத்து நேரம் ஒதுக்கினால் தோராயமாக என்ன செலவு ஆகிறது என்பதை சுயமாக கண்டுப்பிடித்து விடலாம். கூகிள் போதுமே உதவிக்கு.
இப்போ சொல்லுங்க மக்களே மருத்துவ மாணவர்களுக்கான அரசின் செலவு அற்பமா? அவை எல்லாம் மக்களின் வரிப்பணம் தானே!