Thursday, February 13, 2014

அஃதே இஃதே-9


(புதுசு புதுசா ஏதோ சொல்றானே ,ஆமாம் மின்னூல் தொட்டா ஷாக்கடிக்குமா?..ஹி...ஹி)

# வலைப்பதிவுகளை எளிதாக மின்னூலாக்கம் செய்தல்.


மின்னூல் என்பது வெறும் பிடிஎஃப் மட்டுமல்ல , உலாவ தக்க வகையில் வடிவமைக்கப்பட்ட "epub, mobi,azw3” (மேலும் பல மின்னூல் வடிவங்கள் உள்ளன)போன்றவையும் ஆகும். இதில் " epub” (version-2,3)என்பது திறமூல மின்னூல் வடிவம் ஆகும், இதனை பல மின்னூல் வாசிப்பு(ebook readers) கருவிகளிலும் வாசிக்க இயலும், ஆனால் " mobi,azw3” போன்றவை அமேசான் நிறுவனத்தால் அவர்களின் கிண்டில் கருவிக்காகவே உருவாக்கப்பட்ட மின்னூல் வடிவம் ஆகும், அவர்களின் கருவியை தவிர மற்ற கருவிகளீல் படிக்க இயலாது. mobi ,azw3” ஆகியவை பழைய வடிவம் ஆகும் தற்போது KF8- kindle format-8 என்ற புதிய மின்னூல் வடிவினை அமேசான் முன்னெடுத்து செல்கிறது. இதோடு இல்லாமல் கிண்டில் எக்ஸ்ரே என ஒரு முறையினையும் அறிவித்துள்ளார்கள்,எப்ப இந்தியா பக்கம் வரும்னே தெரியலை.

மின்னூல் என்பது ஏதோ ஒரு வடிவில், கையடக்க கருவிகளுகளில் மின்னூல் என்பது தற்சமயம் பலராலும் வாசிக்க பயன்ப்பட்டு வருகிறது. தமிழ் ஒருங்குறி உருவான பின் இணையத்தில் தமிழில் எழுதுவது எளிதானது போன்றே , கையடக்க கருவிகளுக்கான மின்னூல் உருவாக்கத்திலும் ஒருங்குறி மிகவும் கைக்கொடுக்கிறது

தமிழ் ஒருங்குறியில் தட்டச்சு செய்யப்பட்டு ,நன்றாக கட்டமைக்கப்பட்ட (formatted) ஒரு கோப்பினை "மின்னூலாக்கம்" செய்யும் மென்ப்பொருளில் உள்ளீடு செய்தால் போதும் , சில நிமிடங்களில் மின்னூல் தயார்.

கேட்பதற்கு எளிதாக இருப்பினும் ,இதிலும் சில சிக்கல்கள் உள்ளன, அதனை பின்னர் ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் விரிவாக காணலாம். வணிக ரீதியில் விற்கத்தக்க தரமான மின்னூல் தயாரிப்பிற்கு தான் சிறிது மெனக்கெட வேண்டும், சும்மா பொழுதுப்போக்காக நண்பர்களுக்குள் படிக்க பரிமாறிக்கொள்ள எனில் மிக எளிதாக ஒரு வலைப்பதிவு இணைப்பு கருவி(blogger plug-in) மூலமே செய்ய இயலும்.

அதனை செயல் முறை பட விளக்கத்துடன் காணலாம்,

# கீழ் கண்ட ஜாவா ஸ்கிரிப்டினை பிரதியெடுத்துக்கொள்ளவும்,


//script src="http://dotepub.com/p/widget.php?lang=en&links=1&img=2" type="text/javascript"//

 டபுள் ஸ்லாஷ்களை மாற்றிவிட்டு,முன்னும் பின்னும்,"<" , ">"  என போட்டுக்கொள்ளவும்.


ஜாவாஸ்கிரிப்ட் மூலம்,


இணையத்தளம்,நன்றி!

குறிப்பு: கூகிள் குரோம் உலாவிக்கு நீட்சி/இணைப்பியாகவும்(browser extension) கிடைக்கிறது. உலாவியில் இணைத்துக்கொண்டால் அனைத்து தளங்களையும் மின்னூலாக சேமித்துக்கொள்ள இயலும், பிடிஎஃப் விட மிக சிறிய அளவே இடம் பிடிக்கும்.

# வலைப்பதிவுனுள் நுழைவு செய்யவும், வலைப்பதிவு மோதுப்பலகை ஹி...ஹி டேஷ் போர்டிற்கு(blogger dasgboard) செல்லவும்.

# டேஷ் போர்டில் இடப்பக்க வரிசையில்,கீழே "அடைவுகள்" -டெம்ப்ளேட் "எனக்காட்டப்படுவதை அழுத்தவும்.

# தற்போது கீழ் கண்டவாறு ஒருப்பக்கம் திறக்கும்.


இதில் , வலைப்பதிவு அடைவுகள், அலைப்பேசி அடைவுகள் என இருபகுதிகள் காட்டும், அதில் வலைப்பதிவு அடைவுகளில் , மீயுயர் திருத்தி( edit html) என்ற பட்டையை அழுத்தவும்.

# படத்தில் காட்டியவாறு ,அடைவுகள் பக்கம் திறக்கும்.



கருவிகள் பட்டையில் குதிக்கவும்(jump to widget) என்பதெல்லாம் தேர்வு செய்ய தேவையில்லை, html ஆக காட்டும் அடைவுக்குறியீட்டுப்பகுதியில் (பெட்டியில்)சுட்டெலிப்புள்ளியை(mouse curser) வைத்து தேர்வு செய்யவும்,

பின்னர்,

விசைபலகையில் “ctrl+f “ அழுத்தினால் , அடைவுக்குறியீட்டுப்பெட்டியில் வலது மூலையில் தேடுதல் பெட்டி(serach box) தோன்றும்.

பதிவில் வலப்பக்கம்,இடப்பக்கம்,மேலே ,கீழே என பல கருவிகள் இணைத்திருப்போம், அதில் எந்த கருவிக்கு மேலாக மின்னூலாக்கம் செய்யும் கருவியின் பட்டை வர வேண்டும் என நினைக்கிறீர்களோ,அதன் பெயரை தேடுதல் பெட்டியில் கொடுத்து , எண்டர் தட்டவும்.

நான் செய்த முறை என்னவெனில்,

எனது பதிவில் சமீபத்திய வரவுகள் தான் ,வலப்பக்க வரிசையில் மேலாக முதலில் இருப்பதால் அதற்கு மேலாக மின்னூலாக்க கருவிப்பட்டையை வர வைக்க நினைத்தேன் ,எனவே "recent post” என தேடல் பெட்டியில் கொடுத்து தேடினேன், அதனை அடைவுக்குறியீட்டுப்பெட்டியில் கண்டுக்கொண்டேன்,

காண்கப்படம்.


"recent post” இன் குறியீட்டு வரைவு ஆக ஒரு கமெண்ட் உள்ளதை வட்டமிட்டு காட்டியுள்ளேன், அதன் கீழாக மின்னூலாக்க ஜாவா ஸ்கிரிப்டினை ஒட்டிவிட்டேன்.

அவ்ளவு தான், அடைவு மாற்றத்தினை சேமித்து விட்டு வெளியேறியாச்சு.

இப்பொழுது பதிவினை திறந்து பார்த்தால் , "recent post” தலைப்பிற்கு மேலாக மின்னூலாக்க கருவிப்பட்டை "e-book” என தெரியும்.




# எந்த பதிவினை மின்னூலாக்கம் செய்ய வேண்டுமோ அதனை திறந்து வைத்துக்கொண்டு , “ e-book” கருவிப்பட்டையை அழுத்தவும், இப்பொழுது ஒரு "துள்ளுப்பெட்டி" (pop-up box/window)தோன்றும், அதில் படங்களுடன் மின்னூலாக்கம் செய்யவா எனக்கேட்கும்,


ஆம் எனக்கொடுத்து விட்டால் தானியங்கியாக படங்களுடன் கூடிய மின்னூலை உருவாக்கி விடும்.

அதனை நமது கணினியில் சேமித்துக்கொள்ள வேண்டியது தான்.

கவனத்தில் கொள்க,

# இம்மின்னூல் நமது வலைப்பதிவின் மைய பகுதியில்- உள்ளடக்கத்தில்(body) உள்ளவற்றை மட்டுமே மின்னூலாக்கும்.

# அதிகமான படங்கள் இருக்குமெனில் அவற்றினை சேகரிக்க இயலாது ,குறிபிட்ட எண்ணிக்கையில் மட்டும் படங்களை சேகரிக்கும் என அறிவித்து விடும், அப்பொழுது அதற்கு ஏற்ப ,ஆம் இல்லை என தெரிவித்து மின்னூலாக்க வேண்டும்.

# மின்னூல் உலாவி(navigation), உள்ளடக்கப்பட்டியல்(Table of contents) ஆகியன , நமது பதிவில் உள்ளடக்கத்தினை எவ்வாறு தலைப்பிட்டு  வகைப்படுத்தியுள்ளோம் என்பதனை பொறுத்தே அமையும்.

# இம்மின்னூலினை கணினியில் ,அடோப் டிஜிட்டல் எடிஷன் , கிண்டில் கணினி படிப்பான் போன்ற மின்னூல் வாசிப்பு செயலிகளில்(applications) படிக்க இயலும். மேலும் அண்ட்ராயிட் அலைப்பேசி, நூக், கிண்டில் போன்ற கையடக்க கருவிகளிலும் படிக்க இயலும்.

# ஒருப்பதிவில் எந்த அளவுக்கு ஒருங்குறியில்* சிறப்பாக உள்ளடக்கம் கொண்டுள்ளதோ அதைப்பொறுத்தே "சேதமில்லாமல்மின்னூல் உருவாகும்.

*
மின்னூலின் சிறப்பான வெளியாக்கத்திற்கு ஒருங்குறி(ஆங்கிலம் தவிர்த்து மற்ற மொழிகளூக்கு இது அவசியமாகும்),மீஉயர் மொழி(HTML), விரிவாக்க மீயுயர் மொழி( XHTML) ஆகியவற்றின் அடிப்படையில் , மின்னூலின் வடிவமைப்பு(formatting) மற்றும் கட்டமைப்பு (structure) சிறப்பாக இருக்க வேண்டும்.

இலவச மின்னூல் வாசிப்பு கருவிகள்,





# android -Moon+ reader என கூகிள் பிளேயில் ஆண்ட்ராய்ட் போனில் இருந்து தேடினால் ,கிடைக்கும்,அதனை நிறுவிக்கொள்ளலாம்.


நம்மப்பதிவை மின்னூலாக்கியதன் மாதிரிகள்,

அடோப் டிஜிட்டல் எடிஷனில்.


கிண்டில் கணினி படிப்பானில்.



கிண்டில் கருவியில் படிக்கும் பொழுது, e-ink, paper white ஆகியவற்றை மட்டும் தேர்வு செய்யவும், ஃபயர், எச்டி, எச்டி.டிஎக்ஸ் எல்லாம் உடைந்த வடிவில் காட்டும்.

இரு வகையிலும் மின்னூலாக்கியதில் "கிண்டில்" வடிவில் எழுத்துக்கள் தெளிவாக உள்ளன, ஈபுக்கில் கொஞ்சம் பிசிறடிக்குது.

android phone:



மேலும் மின்னூலுக்கு அட்டையாக "நிலையாக" பச்சைக்கலரில் அவர்களின் இணையத்தளப்பேரை போட்டுக்கொடுக்கிறாங்க, எனவே அட்டைப்படம் மாற்றுதல் மற்றும் மேலும் சில மேம்பாடுகளை , கேலிபர் எனப்படும் இலவச மின்னூல் உருவாக்கும் கருவியில் செய்துக்கொண்டேன்,




இந்த ஜவா ஸ்கிரிப்ட் பிளக்கினின் "epub" வடிவம் கொஞ்சம் பிசிறடித்தது, எனவே மொபி வடிவத்தினை , "கேலிபர்" மூலம் மீண்டும் "epub" ஆக மாற்றிக்கொண்டேன் ,அப்பொழுது நன்றாக எழுத்துக்கள் தெரிந்தன, முன்னரும் நன்றாக தெரிந்தது,ஆனால் வரிகளுக்கிடையே இடைவெளி குறைவாக,நெருக்கமாக தோன்றின.



வடிவம் மாற்றும் போதே அட்டைப்படமும் மாற்றிக்கொண்டேன் ,சும்மா பளிச்சுனு தெரிஞ்சது ,...ஹி ...ஹி மின்னூல் தான்!

அனேகமாக தமிழ் வலைப்பதிவுலக வரலாற்றில் மின்னூல் வலைப்பதிவை வெளியிட்டது அடியேனாக தான் இருக்கும் , ஹி...ஹி! ஓசி ஜாவா ஸ்கிரிப்டுக்கே இந்த அலப்பறையா என யாரோ தூரமா கூவுறாங்க போல அவ்வ்!

இப்படி வலைப்பதிவுகளை மின்னூலாக்கி வெளியிடுவதை "epublog”- மின்வலைப்பூ" என அழைக்கலாம் என நினைக்கிறேன்.

நேரம் கிடைப்பின் ,கேலிபர், சிஜில் போன்ற இலவச மின்னூலாக்க கருவிகளைக்கொண்டு தரமான மின்னூல் உருவாக்கும் முறையினையும் பதிவிடுகிறேன்.

அவல நகைச்சுவை குறிப்பு:

இந்த ஸ்கிரிப்டை சில நாட்களூக்கு முன்னர் பதிவில  இணைத்தேன்,இது வரைக்கும் வேறு எந்தப்பதிவிலும் காணாத ஒன்றுனு தான் இணைச்சேன்(எல்லாம் நினைப்புதேன்), வழக்கமாகவே ஆட் ஆன், பிளக்கின் சேர்க்க விரும்புவதேயில்லை. இதை வச்சு யாரும் மின்னூலாக உங்க பதிவை மாற்றினேனு சொல்லவேயில்லை என்பதால் ,ஹி...ஹி சுய விளம்பரமாக ஒரு பதிவை போட்டு தொலைச்சேன் அவ்வ்!

இம்புட்டு மொக்கையாக ஒருப்பதிவானு சபையில யாரும் கேட்டிரக்கூடாதுனு தான் இந்த பின் ஜாமீன் ஹி...ஹிi!


பின் குறிப்பு:

தகவல் மற்றும் படங்கள் உதவி,


மற்றும்,

அடோப், கிண்டில்,கூகிள், இணையத்தளங்கள்,நன்றி!
-----------------------------------