Friday, November 06, 2009

நீள் உறக்கம்



ஓர் உயிரினம் வாழ்வியலுக்கு சாதகமான சூழல் இல்லாத காலங்களில் தனது செயல்பாடுகளை குறைத்துக்கொண்டு நீண்ட உறக்கத்திலாழ்வதனை பொதுவாக ஹைபர்னேஷன்(hibernation) என்பார்கள்.வெப்ப ரத்த உயிரினங்கள் குளிர்காலத்தில் மேற்கொள்ளும் நீண்ட குளிர் உறக்கத்திற்கு தான் ஹைபர்னேஷன் என்று பெயர்.


அதுவே குளிர் ரத்த உயிரினங்கள் கோடையில் மேற்கொள்ளும் கோடை உறக்கத்திற்கு

எஸ்டிவேஷன்(estivation) என்று பெயர். அதுவே பூச்சிகள் மேற்கொள்ளும் நீண்ட உறக்கத்திற்கு டயாபாஸ்(diapause) என்று பெயர்.


இந்த மூன்றும் நீண்ட காலத்திற்கு மேற்கொள்ளும் உறக்கம்,அதுவே மிகச்சிறிய கால இடைவெளியில் மேற்கொள்ளும் உறக்கத்திற்கு பெயர் டோர்போர்(torpor).இது காலையில் தூங்கி இறவில் எழுவது அல்லது இரவில் தூங்கி காலையில் எழுவது போன்றது இதனை சாதரணமாக கால் செண்டர் பார்டிகளும், மனிதர்களும் செய்வது தான்.


ஆனால் ஹைபர்னேஷன்,எஸ்டிவேஷன், டயாபாஸ் எல்லாம் சில மாதங்கள் தொடர்ந்து உணவின்றி தூங்குவது, இது மனிதருக்கு சாத்தியமில்லாத ஒன்று!அந்த உயிரினங்களின் ஜீன்களின் இதற்கான தகவல்கள் பொதிந்துள்ளன. தாவரங்களிளும் உண்டு ஆனால் அது விதைகளுக்கு மட்டுமே, தேவையான ஈரப்பதம் இல்லாமல் உலர்ந்து விதை முளைக்கும் தன்மை இழந்து விடாமல் இருக்க குறிப்பிட்ட அளவு ஈரப்பதம் கிடைக்கும் காலம் வரைக்கும் உயுருடன் விதை இருக்க கடினமான மேல் தோலுடன் விதை இருக்கும்,இந்நிலைக்கு டார்மன்சி என்பார்கள்,அத்தகைய விதைகளுக்கு டார்மண்ட்(dormant) விதை எனப்பெயர்.எனவே தான் விதைக்கும் முன்னர் தண்ணீரில் சில விதைகளை நனைத்து வைத்து விதைப்பார்கள்.



ஏன் இந்த நீண்ட உறக்கம்?

கோடை/குளிர் என்ற இரு கால நிலையிலும் நீர்/உணவுக்கு ஏற்படும் தட்டுப்பாடும், புற வெப்பம் உடல் வெப்ப நிலையை விட அதிகம்/குறைவு ஆவதால் ஏற்படும் சூட்டினை/குளிர்ச்சியை தாங்கும் திறன் இல்லாமை மேலும் மனிதனை போன்று ஏசி/ஹீட்டர் போட்டுக்கொண்டு வாழிடத்தின் தட்ப வெப்பத்தினை கட்டுப்படுத்தும் வசதி விலங்குகள்/பூச்சிகளுக்கு இல்லாமையால் இயற்கையாக அமைந்த தகவமைவே இந்த நீண்ட உறக்கம்.


எப்படி நீண்ட உறக்கதிற்கு தயாராவது?

குளிர்/கோடை காலம் வரும் முன்னரே முடிந்த வரை அதிகம் உணவினை உண்டு உடல் எடையை அதிகரித்து கொள்ளும் ,இதனால் உடலில் கூடுதல் கொழுப்பு சேரும்,இந்த கொழுப்பு தான் நீள் உறக்கத்தின் போது உயிர் வாழ சக்தி அளிக்கும்.

அவ்வாறு தேவையான கொழுப்பு சேமிப்பை முடித்ததும் எதிரிகள் வராத பாதுகாப்பான ஒரு இடத்தினை தேர்வு செய்து உடலினை சுருட்டிக்கொண்டு தூங்க ஆரம்பித்து விடும்.இவ்வாறு தூங்கும் போது கிட்டத்தட்ட இறந்தவை போன்றே காணப்படும், உடனே எழுந்திருக்க முடியாது, எழுந்தாலும் நடக்கவோ ஓடவோ முடியாது இந்த நிலையில் எதிரிகள் கண்ணில் பட்டால் எளிதாக கொத்துக்கறி ஆகிவிடும்.


நீள் உறக்கத்தின் போது இதய துடிப்பு,ரத்த ஓட்டம்,சுவாசம் ஆகியவை மிகக்குறைந்த அளவே நடக்கும் உடல் வளர்சிதை மாற்றங்களும் இருக்காது.கிட்டத்தட்ட சேப் ம்னோடில் உயிரினை உடலில் தக்க வைத்துக்கொள்ளும் அளவுக்கே உள் உறுப்புகள் செயல்படும். குளிர் காலத்தில் புற வெப்பம் 30-40 டிகிரி இருந்தால் அதே வெப்ப நிலைக்கு உடலினை கொண்டு வரவே இந்த செயல்பாடுள்.சாதாரணமாக வெப்ப ரத்த உயிரினங்களின் வெப்பம் 98.6 பாரன்ஹீட் இருக்கும்.

குளிர் ரத்த உயிரினங்கள் நிலையான உடல் வெப்பத்தினைக்கொண்டிருக்காது புற வெப்பம் 100 என்றால் அவையும் 100க்கு போகும் ,60 என்றால் அவையும் 60க்கு போகும், ஆனால் மிக மோசமான பருவக்காலத்தில் இப்படி உடல் வெப்பத்தினை அடிக்கடி மாற்றிக்கொண்டும், உணவு வேட்டைக்கு போவதும் சாத்தியப்படாது என்பதால் குளிர் ரத்த உயிரினங்களும் கோடையில் இந்த உறக்கத்தினை மேற்கொள்கின்றன.


நீள் உறக்கம் கொள்ளும் சில உயிரினங்களின் பட்டியல்:


குளிர் ரத்த உயிரினங்கள்:


தேரை













ஆமை










பல்லி


பாம்பு(பெரும்பாலும் பாலைவன பாம்புகள்-ராட்டில் ஸ்னேக்)



பூச்சிகள்:











தேனீ


வெப்ப ரத்த உயிரினங்கள்:

சிப்மங்க்










லெமுர்












கரடி











ஹேம்ஸ்டர்

அணில்


கூடவே வவ்வாலும் நீள் உறக்கம் கொள்ளும்!













மனிதரில் இத்தகைய நீள் உறக்கம் சாத்தியமில்லாது போனாலும் இதிகாசத்தில் இது போன்ற நீள் உறக்கம் கொண்ட ஒருவர் உண்டு பெயர் கும்ப கர்ணன்(என்னைப்பொருத்தவரை கும்பகர்ணன் மனிதனே). ஆறு மாதம் உறக்கம் ஆறு மாதம் விழிப்பு என வாழும் வசதிக்கொண்டவர்! இதிகாசங்கள் அறிவியல்ப்பார்வை கொண்டது என ஜல்லி அடிப்போருக்கு உதவலாம் இது!