(ஹி...ஹி வாழ்த்தினது சரியா கேட்கலை ,காதுல சொல்லுன்னு கேட்கிறாங்க)
மலையாள புத்தாண்டு "விஷூ" வாழ்த்துக்கள்!
மலையாளம் பேசும் மக்களுக்கு இன்னிக்கு "விஷூ" தினமாம், அதான் புது வருட பிறப்பாம், எனவே நம்ம பக்கத்து மாநில மக்கள்,நம்ம உறவுகள் ஆச்சே , விட்ற முடியுமா எனவே விஷூ வாழ்த்துக்கள் சொல்லி நட்புறவை பேணிக்காப்போம்.
விஷூ வாழ்த்துக்கள்!
*******
ஹிந்து சித்திரா புத்தாண்டு வாழ்த்துக்கள்!
ஹி...ஹி வைதீக (திராவிட)ஹிந்துக்களுக்கும் இன்னிக்கு புத்தாண்டாம்,14.04.2013 ,ஞாயிறு ,நள்ளிரவு 2.38 AM, க்கு தான் புது வருஷமே "விஜயம்" ஆகுதாம் எனவே அவசரப்பட்டு ஆங்கில வழக்கப்படி நள்ளிரவு 12 .00 மணிக்கே கொண்டாட்டத்தை ஆரம்பிச்சிடாதிங்க மக்களே, மத நல்லிணக்கத்துக்காக அவாளுக்கும் புத்தாண்டு வாழ்த்து சொல்லுவோம்.
சித்திரா புத்தாண்டு வாழ்த்துக்கள்!
************
இன்னிக்கு பொழுது போகாம விடுமுறை தின /பண்டிகை /சித்திரை புத்தாண்டு தின சிறப்பு நிகழ்ச்சிகள் என்ற பெயரில் மொக்கை படங்களையும், நிகழ்ச்சிகளையும் பார்த்து போரடிச்சா ,தமிழ்ப்புத்தாண்டு குறித்து நாம் முன்னர் இட்ட இடுகைகளின் சுட்டியை இணைத்துள்ளேன்,படித்து இன்புறவும் :-))
# வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: புத்தாண்டு வாழ்த்துகள்!- தைப்புத்தாண்டு பின்னணி ஒரு மாற்றுப்பார்வை!
# வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: சித்திரை-1 இல் புத்தாண்டு கொண்டாடுவோருக்கு வாழ்த்துகள்
# வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: அஃதே,இஃதே-6.
----------
பின்க்குறிப்பு:
தகவல் மற்றும்படங்கள் உதவி:
இலவச காலண்டர் மற்றும் கூகிள் படங்கள்,நன்றி!
---------------------