Thursday, March 27, 2008

என்னக்கொடுமை சார் இது!

சில சம்பவங்களை பார்க்கும் போதோ, சில செய்திகளை படிக்கும் போதோ ரொம்ப கொடுமையா இருக்கும்! அப்படி இந்த வாரம் செய்திகளில் கூத்தாடிய சில கொடுமைகளை பார்த்த போது என்னக்கொடுமை சார் இதுனு தான் சொல்ல தோன்றியது, என் கண்ணில் சிக்கிய சில கொடுமை பட்டியல்!

கொடுமை-1

ரிலையன்ஸ் மூன்றில் இரண்டு பகுதி பெட்ரோல் விற்பனை நிலையங்களை வரும் ஆறு மாத காலத்தில் மூடப்போகிறது என்று அறிவித்துள்ளது. அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், இந்தியாவில் பெட்ரோலிய பொருட்கள் சர்வதேச கச்சா எண்ணை விலைக்கு ஏற்ப விற்கப்படவில்லை, அரசு சார் நிறுவனங்கள் விலைக்குறைத்து விற்கின்றன, ஏற்படும் இழப்புக்கு அரசு அவர்களுக்கு மானியம் தருகின்றது, ஆனால் தனியார்கள் சந்தை விலைக்கு விற்க வேண்டியது இருக்கு , அது இந்தியாவில் மற்ற அரசு விற்பனையாளர்களை விட கூடுதல் விலையாக இருப்பதால் விற்பனை சரிவு ஏற்பட்டு நட்டம் ஏற்படுகிறது என்று சொல்லி இருக்கிறார்கள்.

மேலும் விற்பனை போட்டியில் அரசுக்கும் தனியாருக்கும் சம விகிதம் இல்லை, அவர்களுக்கு மானிய சலுகை இருக்கு அதனால் எங்களால் போட்டிப்போட இயலவில்லை, எங்களுக்கும் மானியம் அளித்தால் போட்டி சமச்சீராக இருக்கும்,அல்லது அவர்களுக்கு மானியத்தை நிறுத்தி சந்தை விலைக்கு ஏற்ப விற்க செய்ய வேண்டும், அப்போது தான் அழகான வியாபார நடைமுற ஏற்படும் என்று அரிய கருத்தினையும் சொல்லி இருக்கிறார்கள்.

இதான் எனக்கு புரியவில்லை, அரசு நிறுவனங்கள் மக்கள் பணத்தால் நடத்தப்படுகிறது, மானியம் பெறும் அந்த நிறுவனங்களின் லாபம் மீண்டும் மக்கள் பணிக்காக செலவிடப்படுகிறது. எனவே அரசு மானியம் அளித்தால் அது மக்கள் நன்மைக்காக தானே.

ஆனால் தனியாருக்கு மானியம் அளித்து அவர்களுக்கு கிடைக்கும் லாபத்தினை எடுத்து மக்கள் பணிக்கு செலவிடப்போகிறார்களா இந்த தனியார்கள்.இல்லையே அவங்க குடும்பத்தினர் மட்டுமே அனுபவிப்பார்கள் , அதுக்கு எதுக்கு மானியம் தரனும் தனியாருக்கு.

மானியம் அரசு நிறுவனங்களுக்கு தருவதால் , குறைந்த விலையில் விற்கிறாங்க, மக்கள் அதை தான் வாங்கிறாங்க எங்களுக்கு விற்பனைப்பாதிக்குதுனு இப்போ சொல்றவங்க, ஆரம்பத்தில் அரசு மட்டும் விற்பனை செய்துக்கொண்டு இருந்தப்போது ஏன் எங்களுக்கும் விற்பனை செய்ய அனுமதிக்கனும் போய் கேட்டாங்க, அப்படிக்கேட்கும் போதே ஆரம்பத்தில இருந்தே அரசு சார் நிறுவனங்கள் மானியம் பெற்றுத்தானே விற்பனை செய்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பது தெரியாதா?

இப்போ அரசு பெட்ரோலிய நிறுவனங்கள் குறைந்த விலைக்கு விற்பது தப்பு அதுக்கு அரசே உதவி செய்வதால் "fair trade practice " செய்ய முடியலைனு புலம்புறாங்களே,

தனியார் விமான நிறுவனங்கள் ஆரம்பித்ததும், ஜெட், சஹாரா, போன்றவை சில இருக்கைகளை மட்டும் ஒதுக்கி 1 ரூபாய்க்கு கூட பறக்கலாம் , குறைந்த விலை பயணச்சேவைனு , என்னமோ முழுக்க முழுக்க குறைந்த கட்டணம் என்பது போல விளம்பரம் செய்து அரசு விமான சேவைகளுக்கு போட்டிக்கொடுக்கலையா? அப்போ அரசு விமான நிறுவனங்கள் ஒரு நியாமான கட்டணம் தான் நிர்ணயிக்கணும் இப்படிலாம் செய்யக்கூடாதுனு சொன்னா என்ன சொல்லி இருப்பாங்க இவங்க, முடின்சா நீங்களும் விலையைக்குறைத்து போட்டிக்கு வாங்க இல்லைனா மூடிக்கிட்டு போங்கனு சொல்லி இருக்க மாட்டாங்களா?

இப்படியே போனா , இவர்களும் எங்களுக்கும் மானியம் வேண்டும் என்பார்கள்.


* அரசு மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை அளிப்பதால் தனியார் மருத்துவ மனைக்குலாம் கூட்டமே வரலை, நாங்க மருத்துவர்களுக்கு சம்பளம், இன்ன பிற செலவுகள் எல்லாம் இருக்கு, அதை சமாளிச்சு நாங்களும் தொழில் செய்யனும் , எனவே அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கு அரசே சம்பளம் தராப்போல எங்க தனியார் மருத்துவமனை மருத்துவர்களுக்கும் சம்பளம் தரணும்.

இல்லைனா அரசும் எங்களைப்போல கட்டணம் வசூலிச்சு ஒரு "fair trade practice " நடத்த வழி செய்யணும்னு கேட்பாங்க போல இருக்கு!

*அரசுப்பள்ளியில் இலவச கல்வித்தருவதால் எங்கள் கல்வித்தொழில் பாதிக்குது அரசு பள்ளியிலும் கட்டணம் வாங்கு, இல்லைனா எங்களுக்கு மானியம் தா என்று தனியார் பள்ளி நடத்துறவங்களும் கேட்பாங்க!

*அரசு பேருந்துகளில் குறைவா கட்டணம் இருப்பதால், எங்களுக்கு தொழில் பாதிக்குது என தனியார் பேருந்து அதிபர்கள் மானியம் கேட்பார்கள்!

என்ன கொடுமை ...சார் இது!

கொடுமை -2

வர்த்தக துறை அமைச்சகம் தற்போது ஒரு உத்தரவு போட்டு இருக்கு பகுதி -15 இல் உள்ளப்பொருட்களை ஏற்றுமதி செய்ய தடைனு அதுல சொல்லி இருக்காங்க,அந்த பகுதி -15 இல் என்ன பொருட்கள் இருக்குனா சமையல் எண்ணைகள் இருக்கு. இதன் மூலம் சமையல் எண்ணைகளை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய முடியாது. இப்படி அறிவிக்க காரணம் உள்நாட்டில் சமையல் எண்ணைக்கு அதிக தேவை இருக்குனு சொல்றாங்க , சரி நல்ல காரணமாத்தானே இருக்குனு நினைச்சா, ஆமணக்கு எண்ணை உற்பத்தியாளர்கள் கோவப்படுறாங்க, ஏன்னு பார்த்தா ஆமணக்கு எண்ணையும் ஏற்றுமதி செய்யக்கூடாதுனு தடை பண்றாங்களாம் , பகுதி -15 இல் பட்டியலிடப்பட்ட எண்ணைகளில் ஆமணக்கு எண்ணையும் இருக்கு அதனால் அதனை ஏற்றுமதிக்கு அனுமதிக்க முடியாதுனு சொல்லிட்டாங்க.

ஆமணக்கு எண்ணைல சமைக்க முடியுமா அதை ஏன் சமையல் எண்ணைல போய் சேர்த்தாங்க, அதை "industrial oil" அப்படினுத்தான் சொல்றாங்க,அதை ஏறுமதி செய்வதும் பெயிண்ட், வார்னிஷ், லுப்ரிகேஷன், எரிபொருள் ஆகிய பயன்ப்பாட்டுக்கு தான்.வருடத்திற்கு 800 கோடி மதிப்புக்கு இந்தியாவில இருந்து ஆமணக்கு எண்ணை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி ஆகுதாம். சமையல் எண்ணைக்கு தடைப்போட போய் எங்க பொழப்பு போச்சேனு ஆமணக்கு ஏற்றுமதியாளர்கள் பொலம்புறாங்களாம்!

என்னக்கொடுமை ...சார் இது!

கொடுமை-3

காரைக்குடியை சேர்ந்த 64 வயது இளைஞர்?! நாராயணன் ஒரு விவசாயி இவரது 60 செண்ட் நிலத்திற்கு பட்டா கேட்டு 20 ஆண்டுகளாக போராடி வருகிறாராம், இது வரைக்கும் கொடுத்தப்பாடில்லை, முதல்வர் வரைக்கும் புகார் கொடுத்துப்பார்த்தும் வழக்கம் போலவே பலன் எதுவும் இல்லையாம், எனவே முதல்வர் கோட்டைக்கு வரும் போது தான் கட்டிய வேட்டியை திடீர் என உருவி முதல்வர் கார் மீது வீசி தனது எதிர்ப்பைக்காட்டியுள்ளார். அவரைக்காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகிறார்களாம்.

பதவி தோளில் போட்டுள்ள துண்டு போன்றது , சுயமரியாதை வேட்டிப்போன்றது, துண்டை இழந்தாலும் வேட்டியை இழக்க மாட்டோம் என்று கலைஞர் அடிக்கடி சொல்வார், அதனால் தானோ என்னவோ தனது எதிர்ப்பை நாராயணன் வேட்டி உருவி எறிந்து காட்டி விட்டாரோ?

என்னக்கொடுமை ...சார் இது!

கொடுமை-4

இது ஒரு தமிழ் மணக்கொடுமை, லக்கி லுக் என்ற பிரபல கும்பி /கும்மி பதிவரை தமிழ்மணத்திலிருந்து அலேக்காக தூக்கிட்டாங்களாம், ஏன் என்று பார்த்தால் அது ஒரு சங்கிலித்தொடர் வினையா இருக்கு, ஒரு அம்மணி முன்னர் எல்லாம் யோனி பிரசங்கம் அவர்கள் பதிவில் செய்துக்கொண்டிருந்தாங்க, அவங்களுக்கும் பிரபல "மாட்ரிக்ஸ்"பதிவர் பெயரிலிக்கும் தற்காலமா ஒரு சொற்போர்/ மற்போர் நடந்து வந்தது , பலருக்கும் அது ஒரு நல்லப்பொழுது போக்காக இருந்தது என்பது தனிக்கதை! அதுக்கும் லக்கி ஒரு கை கொடுத்துள்ளார், அம்மணி சார்பாத்தான்.

இப்படி இருக்கையில் அம்மணி பதிவை அலேக்கா கிரேன் வைத்து தூக்கிட்டாங்க , அதுக்கும் லக்கி அம்மணி சார்பா ஆதரவு தெரிவித்துள்ளதால் தான் லக்கிக்கும் "தூக்கு" என்று "நைற் ஆந்தை" செய்தி வாசித்தார்.

அம்மணி பதிவில் கோரமான வார்த்தை தாண்டவம் நடந்தபோது எல்லாம் பொது வெளியில் எழுத்து நாகரீகம் எதிர்ப்பார்த்த பதிவர்கள் சிலர் பதிவை தூக்க சொல்லி பிராது கொடுத்தாங்க ஆனால் அப்போதெல்லாம் நீதி தேவன் விடுப்பில் இருந்தார் போல பதிவை தூக்க காணோம், இப்போ திடீர் என விழிப்பு வந்து தமிழ்மண சட்ட திட்டங்களின் படி தூக்கிட்டதா ஓலை அனுப்பி இருக்காங்க. இப்போ மட்டும் "சட்டம் தன் கடமையை "செய்ய பாய்ந்த காரணம் மேட்ரிக்ஸ் பதிவர் பெயரிலியுடனான சொற்போர் தான் என்று சொல்கிறாங்க.

பலான பலான புகார்கள் வந்தபோது செய்திருந்தா பிராது கொடுத்த பதிவர்கள் இதனை கண்டிக்க செய்த செயல்னு சந்தோஷப்பட்டு இருப்பாங்க, இப்போ இது ஏதோ தனிப்பட்ட காரணங்களுக்காக தண்டிக்க செய்த செயலோனு சந்தேகப்படுறாங்களே. இப்போ மட்டும் ஏன் இந்த திடீர் சுறு சுறுப்பு, ஒரு வேளை அரசன் அன்று கொல்வான் தமிழ்மண தெய்வம் நின்று கொல்லும்னு சொல்லாம சொல்றாங்களா?

தெய்வமே நீங்க எங்கேயோ போய்ட்டிங்க :-))

என்னக்கொடுமை ...சார் இது!