(ஹி...ஹி...WISHINGரூபம் இது)
டிடிஎச் இல் அரங்க வெளியீட்டுக்கு முன் விஷ்வரூபம் வெளியாகும் என லோகநாயகர் சொன்னப்போது பல விசிலடிச்சான் குஞ்சுகளும் யதார்த்தம் புரியாமல் மானாவாரியாக பினாத்தி வந்த போது ,உண்மையான நிலையை ஆதாரப்பூர்வ அலசி வெளியிட்டது , புள்ளி விவர ஆய்வுகளுக்கு புகழ்ப்பெற்ற ஒரு கில்லாடிப்பதிவர் மட்டுமே(ஹி...ஹி), ஆனால் உண்மையான நிலவரம் புரியாமல் பலர் ,லோகநாயகருக்கும் , அந்த கில்லாடிப்பதிவருக்கும் வாய்க்கா வரப்பு தகறாறு போல புனைவுகளை சொல்லி திரிந்தது செம காமெடி.
டிடிஎச் இல் வெளியீடு பின்வாங்கப்பட்டு திரையரங்கத்தில் வெளியிடுவது தவிர வேறு வழியில்லை என்ற நிலை வந்தப்போதும் "மீசையில் மண் ஒட்டவில்லை" என்பது போல என்ப்படம் நான் தான் தேதி சொல்வேன் என தத்துப்பித்துவென பேசினார் லோக நாயகர்,ஆனால் தியேட்டர் உரிமையாளர்கள் சொன்ன தேதி தான் இப்போ படம் வெளியாகும் தேதி என்பது சொல்ல மறந்த கதை. :-))
500 தியேட்டர்கள் தமிழ் நாட்டில் தர முன்வந்துள்ளார்கள் ,அதனால் தான் டிடிஎச் இல் முதலில் வெளியிடவில்லை என தானாகவே வேற சொல்லிக்கிறார், கார்த்தி படமே சுமார் 700 தியேட்டர்களில் தமிழ் நாட்டில் வெளியாகும் காலமிது.
படம் வெளியாகி ஒரு வாரம் கழித்து டிடிஎச் இல் வெளியாகும் என்ற நிலை வந்த பின்னும், என் வழி பின்னால் பொது வழியாகும்னு புதுமை படைச்சாப்போல இன்னமும் சொல்லிக்கொண்டிருப்பது அதை விட பெரிய காமெடி.
படம் வெளியான பின்னர் டிடிஎச் இல் நான்காவது நாளிலேயே இந்திப்படங்கள் வருகிறது( இதனையும் முன்னரே சொல்லியாச்சு), அப்படி இருக்கும் போது ஏற்கனவே இருக்கும் வழியில் போய்விட்டு தானே புது வழியினை முதன் முதலில் உருவாக்கியது போல ஒரு மாயத்தோற்றம் உருவாக்கி சிற்றின்பம் அடைவதேன் :-))
மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் நடித்து, யூ டீவி தயாரித்த "கிராண்ட் மாஸ்டர் " என்ற மலையாளப்ப்படம் மே -3,2012 அன்று திரையரங்கில் வெளியான அன்றே அமெரிக்கா,கனடா ஆகிய நாடுகளில் நெட்ஃப்ளிக்ஸிலும் 'ராச நடைப்போட்டு' வெளியானது.
அப்போதெல்லாம் மலையாள திரையுலகில் பெரிதாக கரைச்சல் இல்லை ஏன் எனில் , படத்தின் பட்ஜெட் மற்றும் தியேட்டரில் அதிகம் வெளியாகாத இடங்களில் மட்டும் மாற்று முறையான நெட்ஃப்ளிக்ஸ், டிடிஎச் என வெளியானால் யாருக்கும் இழப்பு இருக்காது என்பதால் ஆகும்.
பெருவாரியாக திரையரங்கில் வெளியாகும் இடத்திலும் ஒரு நாள் முன்னதாக டிடிஎச் இல் வெளியிடுவது கண்டிப்பாக திரையரங்க வசூலை பாதிக்கும் என்பதால் தான் தமிழகத்தில் எதிர்ப்பு, ஆரம்பத்தில் டிடிஎச் இல் பணம் கூறையைப்பிய்த்துக்கொண்டு கொட்டும் என மனக்கணக்குப்போட்டு செயல்ப்பட்டதன் ,பலன் பொங்கல் அன்று வெளியிட முடியாமல் போனதே, பொங்கலை ஒட்டி சுலையாக ஐந்து விடுமுறை நாட்கள் கிடைத்தது ,படம் வெளியாகி இருக்குமானால் மிகப்பெரிய ஓப்பனிங் வசூல் கிடைத்திருக்கும், அதனை இழந்தது தான் மிச்சம். படு மொக்கையான அலெக்ஸ் பாண்டியன் கூட பொங்கல் விடுமுறையில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி கல்லாக்கட்டியது. எனவே படம் வாங்கியவர்களுக்கு பெரிய அளவில் சேதாரம் இல்லை.
மேலும் டிடிஎச் புக்கிங்கில் பெரிய அளவு வருமானம் வரவில்லை, ரசிகர்களும் ஆர்வம் காட்டவில்லை என்பதும் வெட்ட வெளிச்சமாகிவிட்டதால், லோகநாயகருக்கு பெரிய ரசிகர்கள் பின்ப்புலம் இருக்கு என்ற மாயையும் உடைந்துப்போனது தான் மிச்சம்!
இதில் அல்வா வாங்கியது , லோகநாயகர் சொன்னதை நம்பி 1000 ரூவா பணங்கட்டிய சில,பல ஆர்வக்கோளாறு அப்பாவிகள் தான், படம் தியேட்டரில் வெளியான பின் டிடிஎச்சில் பார்க்க ஆயிரம் என்பது டைரக்ட் டு ஹோம் கொள்லை :-))
பெரிய பட்ஜெட்டில் லோகநாயகர் நடித்தால் விலைப்போகாத நிலை உள்ளது என்பதும் வெட்ட வெளிச்சமாகிவிட்டது, எனவே இனி வரும் காலங்களில் எந்த தயாரிப்பாளரும் லோகநாயகரை நம்பி பெரிய அளவில் முதலீடு செய்ய முன்வர மாட்டார்கள்.
எந்த ஒரு நடிகருக்கும் படம் எளிதாக கேட்ட விலைக்கு போகும் நிலையை வைத்தே "மார்க்கெட்" உள்ளது என்பார்கள், எப்பொழுது ஒரு நடிகரின் படத்தினை சொன்ன விலைக்கு வாங்க ஆள் இல்லையோ அவர்களுக்கு மார்க்கெட் போய்விட்டது என்பார்கள் சுருக்கமாக "ஃபீல்ட் அவுட்" என்பார்கள்.
கிட்டத்தட்ட "ஃபீல்ட் அவுட்" நிலைக்கு லோகநாயகரே தன்னைக்கொண்டு போய் நிறுத்திக்கொண்டார் எனலாம், இனி தயாரிக்கவும், வாங்கவும் திரையுலகில் அனைவரும் தயங்குவார்கள், சொந்தமாக தயாரித்து, வெளியிட்டுக்கொண்டால் மட்டுமே களத்தில் நிற்க முடியும் என்ற நிலைக்கு தானே உள்ளாக்கி கொண்டு விட்டார்.
இத்தனை நாளும் லோகநாயகரின் படங்கள் எம்ஜியில் விலையானது , டிடிஎச் இல் பெரிதாக பணம் வரும் என்ற நப்பாசையில் சதவீதத்தில் வெளியிடுகிறேன் என ஒப்புதல் வாக்கு மூலம் வேறு கொடுத்துவிட்டார், எனவே டிடிஎச் இல் வெளியாகாத நிலையிலும் இப்பொழுதும் சதவீதத்தில் தான் வெளியாகிறது, எனவே இனி வருங்காலத்தில் லோகநாயகர் படம் வெளியானாலும் சதவீதத்தில் வெளியிட சொல்வார்கள், இவ்வாறு வெளியிடுவது தயாரிப்பு தரப்புக்கு பெரிய " ரிஸ்க்" எனவே இனிமேல் வெளித்தயாரிப்பாளர்கள் யாரும் முன் வந்து ரிஸ்க் எடுக்க மாட்டார்கள்.
எனவே விஷ்வரூபம் என்ற ஒரே படத்தின் மூலம் லோகநாயகரின் தமிழ் சினிமா பயணம் ஒரு இறுதிக்கட்டத்திற்கு வந்துவிட்டது எனலாம், படம் வெளியாகி வெற்றிகரமாக தயாரிப்பு செலவினை மீட்டெடுத்தால் மட்டுமே கொஞ்சம் நிம்மதி மூச்சு விடமுடியும்.
ஆனால் அதற்கும் ஆப்பு வைப்பது போல இஸ்லாமிய அமைப்புகள் கொடி பிடிக்க ஆரம்பித்துவிட்டன இந்த இடத்திலும் லோகநாயகரின் தப்புக்கணக்கே காரணம்.
படம் தயாரிக்கப்பட்டு ரொம்ப நாட்களாகிறது , ஜனவரி 11 இல் வெளியாகும் என்ற நிலை இருந்தப்போது கூட படத்தினை போட்டுக்காட்ட எண்ணவில்லை,இத்தனை நாளாக போட்டுக்காட்டாதவர் திடீர் என ஏன் போட்டுக்காட்ட வேண்டும்? இலவசமாக விளம்பரம் கிடைக்கும் என நினைத்து போட்டுக்காட்டினார், ஆனால் அவர் எதிர்ப்பார்த்ததைவிட எதிர்ப்பு அதிகமாகி , வளைகுடா நாடுகளில் தடை என பிரச்சினை விஷ்வரூபம் எடுத்துள்ளதால் இப்பொழுது பின்னால் பற்றிக்கொண்டது :-))
மேலும் சமீபத்திய செய்தியாக , தமிழக அரசும் தடை விதித்துள்ளதாக தெரிகிறது. ஆரம்பத்தில் ஜெயா டீவிக்கு சேட்டலைட் உரிமம் கொடுத்துவிட்டதால் எதிர்ப்புகள் வராது என பலரும் சொன்ன நிலையில் , இச்செய்தி ஒரு திருப்பு முனை எனலாம், அனேகமாக டிடிஎச் ஒளிப்பரப்பில் சன் டிடிஎச் ஐயும் சேர்த்துக்கொண்டதன் பின் விளைவாக இருக்கலாம் என நினைக்கிறேன்.
தணிக்கை அறிக்கை:
http://cbfcindia.gov.in/html/uniquepage.aspx?lang=TAMIL&va=vishwaroopam&Type=search
படத்தில் ass, bitch, bastard, matherchood , போன்ற வசைச்சொற்கள் ஒலிநீக்கம் செய்யப்பட்டுள்ளது, வெடித்து சிதறுவது, கையை வெட்டுவது, கழுத்தை அறுப்பது போன்ற காட்சிகள் உட்பட 10 வெட்டுக்களுடன் U/A கொடுத்துள்ளார்கள்.
அரசியலமைப்புள்ள ஒரு நாட்டில், சட்டப்பூர்வமாக இயங்கும் தணிக்கை அமைப்பால் பொது மக்கள் பார்க்கலாம் என சான்றளிக்கப்பட்ட பின் , அதில் உள்ள கருத்துக்கள் ஏற்புடையது அல்ல ,வெளியிட கூடாது என இஸ்லாமிய அமைப்புகள் சொல்வது யதேச்சதிகாரம் ஆகும்.
இப்படி படத்தினை போட்டுக்காட்டாமல்,துப்பாக்கி பட பாணியில் வெளியிட்டு விட்டு பின்னர் எதிர்ப்பு காட்டினால் ,கொஞ்சம் கட் செய்து விட்டோம்னு சொல்லி ஒரு அறிவிப்பு விட்டு இருக்கலாம் , கூடுதலாக அடுத்த படத்தில் ஒரு இஸ்லாமியராக நடிப்பேன், ஒரு இஸ்லாமிய பெண்ணை ஹீரோயினாக நடிக்க வைப்பேன்னு சொல்லி சமாதானக்கொடியை ஆட்டியிருந்தால் துப்பாக்கி போல ஹிட் ஆகிடும்:-))
துப்பாக்கி படம் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் காரைக்காலில் ஷமினா என்ற தியேட்டரில் 25 நாட்களுக்கு மேல் வெற்றிகரமாக ஓடியது, தியேட்டரும் இஸ்லாம்மியருக்கு சொந்தமானது ஆகும்.
எப்படி எனில் படத்தில அப்படி என்ன நம்மளைப்பத்தி தப்பா சொல்லி இருக்காங்கன்னு பார்க்க ஒரு தடவை படம் பார்ப்பாங்க, அப்புறம் சொன்னாப்போல காட்சிகள் நீக்கி இருக்கானு உறுதி செஞ்சுக்க இன்னொரு தடவை படம் பார்ப்பாங்க ,எனவே படம் கண்டிப்பா ஹிட் ஆகிடும் :-))
லோகநாயகர் இனியும் நிம்மதியா நல்ல முறையில் படம் எடுக்கணும் என்றால் அவரை சுற்றி இருந்துக்கொண்டு தப்பா ஆலோசனை வழங்கும் விசிலடிச்சான் குஞ்சுங்க கூட்டத்தினை விரட்டிவிட்டாலே போதும் அவரு பொழச்சுப்பார்.
ஹி...ஹி அப்படியே ஆக்கப்பூர்வமான முறையில் ஆலோசனை வேண்டுமெனில் என்னைப்போன்றவர்களை அனுகலாம் :-))
என்ன கொடுமை சார் இது!
***********
# திருட்டு கரும்பு இனிக்கும்!
இந்த கொடுமையும் லோகநாயகரை முன் வைத்தே, டிடிஎச் இல் வெளியிடுவது திருட்டு டிவிடியை ஒழிக்கும் என ஆருடம் சொன்னார், ஆனால் மக்கள் திருட்டு டிவிடி தியேட்டரை விட விலை மலிவாக இருப்பதால் தான் பார்க்கிறார்கள் என்ற அடிப்படை உண்மையை மறந்துவிட்டார்.
டிடிஎச் இல் பார்க்கும் கட்டணம், நியாயமானதாகவும், படம் நன்றாக இருந்தால் மட்டுமே டிடிஎச் இல் பார்ப்பார்கள், ஒரு படம் டிடிஎச் இல் வருகிறது என்பதற்காகவே அனைவரும் பார்க்க மாட்டார்கள்.
திருட்டு டிவிடியை ஒழிப்பது என்பது தயாரிப்பாளர்கள் கையில் தான் உள்ளது. சிங்கப்பூர் ,மலேஷியா, அமெரிக்காவிற்கு விற்கப்படும் திரைப்படங்களில் இருந்து தான் திருட்டு டிவிடி தயாராகிறது, அதனை திருட்டு டிவிடி என சொல்வதே தவறு , அய்ங்கரன், லோட்டஸ் ஆகிய நிறுவனங்கள் 5.1 இல் தரமான டிடிவிடிக்களை விற்கிறார்கள், அதுவும் பெயர், ,முகவரி தொலைப்பேசி எண் , இமெயில் எல்லாம் விலாவாரியாகப்போட்டு :-))
டிவிடியில் முகவரி...
அமெரிக்கா, சிங்கப்பூர் ,மலேஷியாவில் டிவிடி விற்கும் உரிமையா கொடுத்தார்கள், விநியோக உரிமைத்தானே கொடுத்தோம் என இந்த தயாரிப்பாளர்கள் ஏன் கேட்பதில்லை?
அப்படிக்கேட்டால் வெளிநாட்டு விநியோக உரிமையை ஒருத்தரும் வாங்க மாட்டாங்க ,எனவே வந்த வரை லாபம் என கேள்வியே கேட்காமல் வெளிநாட்டுக்கு விற்கிறார்கள் ,அவர்களும் டிவிடி தயாரிச்சு உலகமெங்கும் விற்கிறார்கள், தமிழ்நாட்டில் ஒரு வாரத்திலேயே தரமாக 5.1 இல் டிவிடி கிடைப்பது இப்படித்தான்,இதில் படம் வந்ததும் ஹீரோவும், தயாரிப்பாளரும் திருட்டு டிவிடிஐ ஒழிக்க வேண்டும் என கமிஷ்னர் அலுவலம் போய் பேட்டிக்கொடுப்பதை பார்த்தால் உலகமகா நடிப்புடா சாமினு சொல்ல தோன்றும் :-))
இந்த கொடுமையில இன்னொரு கொடுமையும் சேர்த்தே சொல்லுறேன், டிடிஎச் இல் வெளியாகிறது என செய்தி வந்ததுமே ,ஒரு கத்துக்குட்டி,300 கோடிக்கு புக்கிங் ஆகி சரித்திர சாதனைனு முகநூல் ,வலைப்பதிவு போஸ்டர் ஒட்டியது , அப்படி புரளியக்கிளப்பிவிட்டவர் இதே போல பல புரளிகளை கிளப்பிவதில் வல்லவர், ஒரு காலத்தில் நடிகை சினேகவுடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு திருமணம் செய்யப்போவதாக ஒரு புரளியைக்கிளப்பியவர்.
மேற்படி நபர் ,மச்சக்காரன் படத்திற்கு சிங்கப்பூர் ,மலேஷிய விநியோகம் வாங்கிவிட்டு திருட்டு டிவிடி தயாரிக்க முயன்றப்போது கையும் களவுமாக மாட்டி உதைக்கூட பட்டார்னு செய்தியுண்டு, திரையுலகில் இருப்பவர்களுக்கு எப்படி திருட்டு டிவிடி உருவாகிறது ,யார் செய்கிறார்கள் என தெரியும், ஆனாலும் எந்த முயற்சியும் செய்யாமல் ,புதுசு புதுசா ஒரு காரணம் சொல்வதே வாடிக்கையாகப்போய்விட்டது.
செய்தி:
Nag Ravi Corporate Chief or Thief
Posted by Editor on November 9th, 2007
Nag Ravi Corporate Chief or Thief
Insight Media has offices in Singapore, Canada, New Zealand, Malaysia, UAE, USA and Mauritius with Head Quarters in Chennai.. Insight’s local and overseas distributions include Sivaji, Kireedam, Veerappu and the forthcoming, Bommalattam, Machchakkaran and Vambusandai. Besides Tamil film audio, the company has also brought out a VCD titled Padmini .
The Legend on the legendary actor and educational CDs at rock bottom prices to contain piracy. The ostentatious Nag Ravi, also known as Sneha’s former lover was caught in the act of taking a camera print of Machakaran at Devi Sridevi preview theatre. Ravi was beaten up by the producer Nanthagopal but he managed to escape and is now absconding, while the manager of the preview theatre Eknath and the operator was also beaten up. Ravi and his Insight Media were the overseas distributors of Machakaran. They had taken seven prints of the film from the Lab, but only dispatched six of them on Tuesday evening mainly to Malaysia and Singapore.
http://www.kollywoodtoday.net/news/nag-ravi-corporate-chief-or-thief/
திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது!
என்ன கொடுமை சார் இது!
*******************
# அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்!
அஞ்சா நெஞ்ச அண்ணனும், காமாண்டர் தம்பியும் அக்னி நட்சத்திரமாய் அவ்வப்போது உரசிக்கொள்வது வழக்கம், அடுத்த தலிவரு தம்பித்தான்னு சொன்னதும் சங்கரமடமா இதுனு அண்ணன் சாமியாடினார்.
அதுக்கு கொஞ்ச நாளுக்கு முன்னர் , எனது எதிரிகளை இயற்கை பார்த்துக்கொள்ளும்னு சாபம் எல்லாம் விட்டது நினைவிருக்கும். இதனை வைத்து சில அரசியல் வதந்திகளும் அப்போது உலவியது, ஆனால் அதில் உண்மை இருக்குனு நம்பத்தகுந்த வட்டாரங்களில் ஒரு தகவலும் உலாவுது(எந்த அளவுக்கு நம்பகம்னு தெரியாது கேள்விப்பட்டதை சொல்கிறேன்), இளையவர் இப்பொதெல்லாம் அடிக்கடி லண்டன் பயணமாவதே மருத்துவ சோதனைக்கு தான் எனவும் ,அவருக்கு ஆரம்ப நிலை இரத்தப்புற்று நோய் எனக்கண்டுப்பிடித்திருப்பதாகவும், அதற்கு ரகசிய சிகிச்சை எடுக்கவே ஏதேனும் ஒரு காரணத்தினை முன்னிட்டு லண்டன் செல்வதாக சொல்கிறார்கள், ஒராண்டுக்கு முன்னர் இருந்தே சிகிச்சை நடக்கிறதாம்.இப்பொழுது அரசல் புரசலாக பலருக்கும் தகவல் கசிந்து , கட்சியின் மேல்மட்டத்திலேயே சூடாகப்பேசப்படும் வதந்தி இது தான்.
இதனை நம்புவதா வேண்டாமா என தெரியவில்லை!
என்ன கொடுமை சார் இது!
-------------------
பின்குறிப்பு:
தகவல் மற்றும் படங்கள் உதவி,
CBFC.gov.in,kollywoodtoday.net, wiki, google,இணைய தளங்கள் நன்றி!
---------------------