Sunday, June 03, 2012

பெட்ரோல் விலை குறைப்பெனும் நாடகம்!




நேற்று நள்ளிரவு முதல் பெட்ரோல் 2 ரூ விலைக்குறைப்பு செய்யப்பட்டுள்ளது .ஏற்றியது 7.50 ரூ இறக்கியது 2 ஆக நிகர விலையுயர்வு 5.50 ரூ.உண்மையில் மத்திய அரசின் திட்டமிட்ட விலையுயர்வு 5.5 ஆகவே இருக்கும், கொஞ்சம் கூடுதலாக ஏற்றிவிட்டு பின்னர் மக்கள் நலன் கருதி குறைத்தது போல ஒரு செட் அப் செய்யவே இந்த விலை ஏற்றம் ,இறக்கம்.

இதற்கிடையில் மஞ்சள் துண்டு அய்யா, ரய்யில் பொட்டி அக்கா எல்லாம் அவங்க மிரட்டி குறைக்க வச்சோம்னு கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம அறிக்கை விட்டுப்பாங்க :-))

பெட்ரோல் விலை ஏற்றமே ஏமாற்று வேலை ,அன்னிய செலவாணி உயர்வால் கச்சா விலை உயரவில்லை என



ஆகிய இரண்டு பதிவிலும் முன்னரே சொன்னேன்.

மேலும் பெட்ரோல் விலையில் பெருமளவு அரசின் வரியே என்பதை விளக்கும் பதிவு...


அங்கு சொன்னது மீண்டும் இங்கு,

"உண்மையில் அரசுக்கோ எண்ணை நிறுவனங்களுக்கோ அன்னிய செலவாணி பணப்பரிமாற்று விகிதத்தில் பெரிய நட்டம் வருவதில்லை என்பதே உண்மை,ஆனால் அப்படி சொல்லி விலையேற்ற வழிக்காண்கிறார்கள் எனலாம், எப்படி எனில்,

டாலரின் மதிப்பு இந்திய ரூபாய்க்கு எதிராக உயர்ந்தது போல ,உலக அளவிலும் உயர்ந்தே வருகிறது,எனவே எண்ணை உற்பத்தி நாடுகளின் நாணயத்திற்கு எதிராகவும் உயரும்,இதனால் முன்னர் ஒரு பேரல் கச்சா எண்ணை 100 டாலருக்கு விற்றது எனில், டாலர் உயர்வுக்கு ஏற்ப குறைந்து 90 டாலர்கள் என்பது போல குறைவான விலையிலே விற்பனை ஆகும்.

அதாவது வழக்கமாகவே டாலரின் மதிப்பு சரிந்தால் கச்சா எண்ணையின் விலை ஏறும், டாலர் உயர்ந்தால் கச்சா விலை குறையும்.

எனவே தற்போது நாம் வாங்கும் கச்சாவுக்கு கொடுக்கும் டாலரின் அளவுகுறைந்து விடுவதால், கூடுதலாக உயர்ந்த டாலரின் மதிப்பு சரி செய்யப்பட்டு விடும். எனவே பெரும்பாலும் எண்ணை நிறுவனத்திற்கு நட்டம் வராது, அல்லது மிகச்சிறிய அளவில் இருக்கலாம். அதனை விலையேற்றாமல்லே சமாளிக்க முடியும்.ஆனால் எப்போது விலை ஏற்றலாம் என ஏங்கிக்கொண்டு இருக்கும் எண்ணை நிறுவனங்கள் கிடைத்த வாய்ப்பை வீணாக்க விரும்பாமல் விலை ஏற்றி மக்களோடு விளையாட ஆரம்பித்து விட்டன."

மேலும்,

இந்த விலையேற்றத்திற்கு பின்னால் தனியார் எண்ணை நிறுவனங்களான ரிலையன்ஸ், ஷெல், எஸ்ஸார் போன்றவர்களின் கைவரிசையும் இருக்கலாம், ஏன் எனில் பொது துறை நிறுவனங்களுக்கு நஷ்டம் வரவில்லை அப்படியே வந்தாலும் அரசு மீட்டு எடுக்க நிதிக்கொடுக்கத்தான் போகிறது. ஆனால் தனியார் எண்ணை நிறுவனங்களுக்கு அவையே பொறுப்பு என்பதால் நல்ல லாபத்தில் விற்க வேண்டும். ஏற்கனவே தனியார்கள் பொது துறை எண்ணை நிறுவனங்களை விட ரூ 1 அல்லது 2 கூடுதலாகவே விற்கிறார்கள்.

மேலும் விலையேற்றம் செய்யவும் தனியார்களுக்கு ஆசை இருக்கிறது ஆனால் பொது துறை நிறுவனங்கள் விலையை ஏற்றவில்லை எனில் தனியாராலும் விலை ஏற்ற முடியாது, எனவே அவர்களுக்கு விலை ஏற்றம் செய்ய வேண்டும் என்பதற்காகவே பொதுத்துறையை விலை ஏற்றம் செய்ய அழுத்தம் கொடுத்து செய்திருக்கலாம் என தோன்றுகிறது.

கார்ப்பரேட்களின் கைக்கூலியாக மாறிவிட்ட அரசும், தலையாட்டியும்அவர்களுக்காக எதுவும் செய்வார்கள்.

இப்படி நாடகம் ஆடி மறைமுகமாக நாட்டுமக்களிடம் சுரண்டுவதற்கு மன்னு மோகன் மற்றும் குழுவினர் முகமூடிப்போட்டுக்கொண்டு கொள்ளையே அடிக்கலாம் யார் கேட்கப்போகிறார்கள் :-))

இவங்க சாப்பிடுற சாப்பாட்டின் ஒவ்வொரு பருக்கையிலும் நாட்டு மக்களின் வியர்வை இருக்கு, ஆனால் குனியாமல் ,நிமிராமல் தலையை ஆட்டி மட்டுமே சம்பாதிக்கும் இவருக்கு எப்படி சாப்பிட்ட சாப்பாடு செரிக்கும் என தெரியவில்லை.

*****