நதியை தேடியலைந்தேன் பாலைவனத்தில் நல்ல இதயத்தை தேடியலைந்தேன் நகரத்தில்
மெல்லிசையைத் தேடியலைந்தேன் மயானத்தில்
நெருப்பைத் தேடினேன் நீர்க்குடத்தில்
நிலவைத் தேடினேன் அம்மாவாசையில்
நித்திரையை தேடினேன் நீயில்லாமல்
தேடிக்கிடைப்பதில்லை என்று தெரிந்த பின்னும்!
இருக்குமிடத்தை விட்டு
இல்லாத இடங்களில்
திக்கெட்டு திசையும் தேடினேன்
தேடிக்களைத்தும் தீரவில்லை தேடல்!
மீண்டும் துவங்கியது தேடல்
என்னுள்ளே எதையோ தேடினேன்
எதுவும் கிடைக்கவில்லை ஏமாற்றத்தை தவிர!