Friday, September 07, 2007

லிப்டில் போனால் உடல் எடை குறைக்கலாம்?

சாதாரணமாக உடல் எடையை குறைக்க வேண்டும் என எண்ணுபவர்கள் , சில சிறிய வேலைகளையும் உடல் உழைப்பின் மூலம் செய்வதால் அதிக கலோரிகள் எரித்து உடல் எடைக்குறைக்கலாம் என சொல்வார்கள். அந்த வகையில் மாடிப்பகுதிகளுக்கு செல்ல லிப்டிற்கு பதில் படிகளில் ஏறி சென்றால் எடை குறையும் என்பார்கள், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சாட்சியாக சொல்கிறேன், லிப்டில் இறங்கி வந்தால் உடனடியாக உடல் எடை குறையும் , 100 சதவீதம் உத்திரவாதம் !

அது எப்படி என்று சொல்கிறேன்,

முதலில் உங்கள் எடை என்னவென்று குறித்துக்கொள்ளுங்கள்

முதல் தளத்தில் இருக்கும் ஒரு லிப்டில் ஏறி நின்று கொள்ளுங்கள் , எடை குறைவதைக் காண கையோடு ஒரு எடை பார்க்கும் கருவியும் எடுத்து செல்லுங்கள். இப்பொழுது எடை பார்க்கும் எந்திரத்தின் மீது நின்று கொண்டு முதல் தளத்தில் இருந்து தரை தளத்திற்கு வாருங்கள். அப்படி வரும் போது உங்கள் எடை என்னவென்று எடை பார்க்கும் எந்திரத்தில் பாருங்கள், கண்டிப்பாக எடை குறைவாக காட்டும் எடைப்பார்க்கும் எந்திரம்! கடினமாக உழைக்காமல் எப்படி எடை குறைந்தது, ஆச்சரியமாக இருக்கிறதா , அது தான் இயற்பியலின் விந்தை!

நம் உடல் எடை என்பது புவி ஈர்ப்பு விசை ஆனது உடலின் பருமன் மீது செயல்படுவதால் ஏற்படும் விசை ஆகும், அவ்விசையை எடைப்பார்க்கும் கருவி உணர்வதால் அதில் எடை காட்டுகிறது.

லிப்டில் மேல் இருந்து கீழ் நோக்கி இறங்கும் போது எடை குறைவாக காட்டக்காரணம் , லிப்ட் அது ஒரு வேகத்தில் இறங்குகிறது எனவே அதன் மூலம் ஒரு விசை நம் உடலில் செயல்படும், எனவே இப்பொழுது நம் உடலின் மீது இரண்டு விசை செயல்படுகிறது , புவி ஈர்ப்பு விசை மேல் திசையிலிருந்து கீழ் நோக்கிய விசை , கூட லிப்டின் மேலிருந்து கீழ் நோக்கிய விசை இரண்டும் ஒரே திசையில் இருப்பதால் , இப்போது புவீஈர்ப்பு விசையில் ஒரு மாற்றம் ஏற்படும் அதன் காரணமாக உடலின் மீது மொத்த விளைவு ஈர்ப்பு விசை குறையும்! எனவே தான் எடை குறைவாக காட்டும் எடைப்பார்க்கும் எந்திரம்!

இரண்டு விசையும் எதிர் எதிராக இருந்தால் எடை கூடுதலாக காட்டும் .

*லிப்டில் கீழ் இருந்து மேல் மாடிக்கு செல்லும் போது எடை அதிகம் காட்டும் எடைப்பார்க்கும் கருவி.

*லிப்ட் நிற்கும் போது உடலின் உண்மையான எடைக்காட்டும் !

எடைப்பார்க்கும் எந்திரத்தின் மீதான விசை = எடை
f =m*a

இங்கு a = g , லிப்டின் மேல் , கீழ் செயல்பாட்டினால் நம் உடலில் ஏற்படும் விசை ,மேலும் லிப்ட் இயங்கும் வேகத்தினால் வரும் முடுக்கத்தினால் (a= acceleration)வருவது என இரண்டு விசை , எனவே மொத்த கூட்டு விசை

f= m*(g - or +(a)

இதன் மூலம் நிகர எடை அறியாலாம்.

இந்த சூத்திரம் கொண்டு லிப்ட் வேகத்தீற்கு ஏற்ப மேல் அல்லது கீழ் செல்லும் போது ஏற்படும் எடை மாற்றத்தினை கணக்கிடலாம்.கீழ் இறங்கும் போது "-" மேல் ஏறும் போது "+".

உடல் எடையை குறைக்கணும்னா இனிமே வேகமா லிப்டில் இறங்கினா போதும்! உண்மையா உடல் நலம் ,எடைக்குறைத்தல் பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் ஓடி வந்து படித்த மக்கள் அடியேனை பொருத்தருள்க!

27 comments:

பட்டுக்கோட்டை பாரி.அரசு said...

வாழ்த்துக்கள் வவ்வால்,
உங்களுடைய அறிவியல் மிக எளிமையாக இருக்கின்றன. அறிவியலை நடைமுறை வாழ்வோடு இயைந்து பார்க்கவேண்டும் என்கிற என்னுடைய ஆவலை உங்களுடைய கட்டுரைகள் அப்படியே பிரதிபலிக்கின்றன.

தொடர்ந்து எழுதுங்கள்!

வவ்வால் said...

வாங்க பாரி,

வருகைக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி!

வடுவூர் குமார் said...

இதானா,வேண்டாம் என்கிறது!!
போன பதில் ஏற்கனவே கண்டுபிடித்ததை குச்சி வைத்து கண்டுபிடிக்கலாம் என்றீர்கள்,இப்போது இருக்கிற எடையை கொஞ்ச நேரத்துக்கு குறைத்து காண்பிக்கலாம் என்கிறீர்கள். இதுவும் ஏதாவது பாட புத்தகத்தில் இருந்து சுட்டதா?இந்த
விபரம் நான் கேள்விப்பட்டதில்லை இருந்தாலும் மின் தூக்கிக்குள் எடை பார்க்கும் இயந்திரத்துடனா? ஒரு மாதிரி பார்ப்பார்கள்.
ஏன் இந்த கொலைவெறி எங்கள் மேல்? :-))

TBCD said...

வவ்வால் மாதிரி தலைகீழாக தொங்கிக்கொண்டு வெயிட் பார்த்தால்...:))))

ச.மனோகர் said...

லிப்ட்டை விட்டு வெளியேறிவிட்டால் அதே எடைதானே இருக்கும்? :-)

அரை பிளேடு said...

எப்போதும் எடை குறைய ஸ்பிரிங் வைத்த காலணி அணியவும்.


சாதாரணமாக எடை...
f =m*g

ஸ்பிரிங் மீது நிற்கும்போது ஸ்பிரிங் நம்மை மேல் நோக்கி தள்ளும். அந்த எதிர் முடுக்கத்தை a எனக்கொண்டால் நம் நிகர எடை
f =m*(g-a). குறையும்.

ஆகா ஸ்பிரிங் வைத்த காலணி அணிவதால் 24 மணிநேரமும் உடற்பயிற்சி தேவையின்றி குறைவான எடையோடு இருக்கலாம்.

24 மணிநேரமும் லிஃப்டில் இருக்கமுடியாது அல்லவா.


:)

வவ்வால் said...

வாங்க குமார்,

இது ஒரு கணக்காக பாடப்புத்தகத்தில் தான் உள்ளது, போட்டித்தேர்வுகளில் இப்படி தான் கேட்கிறாங்க!

சும்மா ஆர்வத்தை தூண்டுவது போலவும் இருக்கு , விசை, முடுக்கம் ,நிறை எல்லாம் பார்த்தாப்போலவும் இருக்குனு தான் போட்டேன். நீங்கள் எடைப்பார்க்கும் கருவியோடு லிப்ட்டில் போய்த்தான் பாருங்களேன்!

வவ்வால் said...

//வவ்வால் மாதிரி தலைகீழாக தொங்கிக்கொண்டு வெயிட் பார்த்தால்...:))))//

அப்படி தலைகீழா தொங்க ஸ்பிரிங் பேலன்ஸ்னு ஒன்னு இருக்கு!

வவ்வால் said...

பாபுமனோகர் அதான் லிப்ட் நிற்கும் போது அதே எடை இருக்கும்னு சொல்லி இருக்கேனே ,அப்புறம் தனியா லிப்ட் விட்டு வந்தா அதே எடைனு வேற சொல்லனுமா!

வவ்வால் said...

அரைபிளேடு,

//எப்போதும் எடை குறைய ஸ்பிரிங் வைத்த காலணி அணியவும்.//

அந்த ஸ்பிரிங்க் மாட்டிய காலை தூக்கி எங்கே வைப்பிங்க, அதை எடைகருவி மேல தானே வைக்கனும் எனவே நிகர எடை கூடிவிடும், ஸ்ப்ரிங்க் எடையும் சேர்ந்து!

தண்ணில எடைப்பார்த்த குறைவா இருக்கும்!(குவார்டர் அடிச்சிட்டு இல்லை) நிஜமா ஒரு தண்ணீர் தொட்டிக்குள் நின்றுகொண்டு எடைப்பார்க்கணும்!

யோசிப்பவர் said...

கண்டுபிடிச்சிட்டேன்!!
சமீபத்தில் "பொழுதுபோக்கு பௌதிகம்" மாதிரி ஏதோ ஒரு அறிவியல் புத்தகத்தை படித்திருக்கிறீர்கள்(CBSE புத்தகமாக கூட இருக்கலாம்)!

;-))

யோசிப்பவர் said...

ஒரு உபரி தகவல்(பொறுத்தருள்க;-)) : தன்னிச்சையாக (காற்றுத்தடையின்றி) கீழே விழுந்து கொண்டிருக்கும் பொருளுக்கு எடையே கிடையாது!!!

வவ்வால் said...

யோசிப்பவர்,
//கண்டுபிடிச்சிட்டேன்!!
சமீபத்தில் "பொழுதுபோக்கு பௌதிகம்" மாதிரி ஏதோ ஒரு அறிவியல் புத்தகத்தை படித்திருக்கிறீர்கள்(CBSE புத்தகமாக கூட இருக்கலாம்)!//

இந்த ஆண்டின் சிறந்த கண்டுப்பிடிப்பாளர் நீங்க தான் :-))

நானே இதனை அந்தப்பதிவில் சொல்லியாச்சு!

நீங்கள் சொல்வது சரி தான், அதனை சொல்ல இடம் வரவில்லை என்று சொல்லவில்லை , அது பற்றி சொல்லாமல் விட்டதை நீங்கள் சமன் செய்து விட்டீர்கள்! நன்றி!

ஜெயன்ட் வீல் என்ற ராட்டினத்தில் சுற்றும் போது கீழ் வரும் போது அந்த எடை அற்ற உணர்ச்சி சிறிது நேரம் தாக்கும்!

வின்வெளி வீரர்களுக்கு பயிற்சி கொடுக்க ஜெட் விமானத்தில் உயரத்திர்கு சென்றுவிட்டு வெகு வேகமாக கீழ் நோக்கி பாய்வார்கள் எனப்படித்தேன்.

அதே போல ஒரு centrifuge போல வேகமாக சுற்றும் அமைப்பில் உட்கார வைத்தும் சுற்றுவார்களாம்!

யோசிப்பவர் said...

//அதே போல ஒரு centrifuge போல வேகமாக சுற்றும் அமைப்பில் உட்கார வைத்தும் சுற்றுவார்களாம்!
//
அமாம். ஆனால் அது அதிக எடையை சமாளிக்கும் பயிற்சி!!

சிவபாலன் said...

வவ்வால்

கலக்குறீங்க..

சூப்பர்..

பகிர்வுக்கு நன்றி!

வவ்வால் said...

யோசிப்பவர்,
நன்றி!
அது எடை அதிகமானால் சமாளிக்கவா, நான் எடையற்ற தன்மைக்கு என நினைத்திருந்தேன்.

வவ்வால் said...

சிவபாலன் ,
நன்றி,
இன்னும் கலக்கவே இல்லை ,அதுக்குள்ளவேவா...:-))

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வவ்வால்!
சற்று வேகமாகச் செல்லும் லிப்டில் அடி வயிறு கூசுமே அது எதனால்??

இல்யாஸ் said...

ஏறும்போது மாடி படியில் ஏறி பின் இறங்கும்போது லிஃப்டில் இறங்கினால் உன்மயிலேயே எடை குறைய வாய்ப்பிருக்கலாம் தானே?

வவ்வால் said...

யோகன்,
நன்றி, நம் உடல் பூமியின் இயக்கத்திற்கு மட்டுமே சமநிலைத்தன்மை வருமாறு இருக்கும். தனியே வேறு ஒரு இயக்கத்தில் சேர்ந்து இயங்கும் போது ஏற்படும் இயக்கத்தில் சமநிலையை வைக்க கொஞ்சம் தடுமாறும் அந்த உணர்வுகளாக இருக்கும். மேலும் வேகமாக கீழ் நோக்கி இறங்கினால் ஈர்ப்புவிசை குறையும் அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

பேருந்து, கப்பல் ,விமானப்பயணங்களில் வாந்தி , தலை சுற்றல் வருவதற்கு இது தான் காரணம்.

வவ்வால் said...

இலியாஸ்,

எந்த வேலை செய்தாலும் சரி , கலோரிகள் எரித்தால் உடல் எடை குறையும்.

முகவை மைந்தன் said...

நான் படித்ததில் விரும்பிய முயற்சி. உங்களை என்னுடைய விருப்ப வரிசையில் சேர்த்துக் கொண்டேன்.புதியவர்களை அழைக்க உங்களை மேற்கோள் காட்டலாம்.

வவ்வால் said...

முகவை மைந்தன்,
நன்றி!

ஆனால் எப்படி இப்படி ஒரு முடிவுக்கு வந்திங்க , நாமளும் மொக்கை போடுவோம்ல!

குமரன் (Kumaran) said...

நல்லா இருக்கு வவ்வால். படிக்கத் தொடங்குன உடனேயே புரிந்தது. மிக எளிமையாகச் சொல்லியிருக்கிறீர்கள். :-)

வவ்வால் said...

வாங்க குமரன்,

எளிதாக இருக்கிறதா , நன்றி! சிலர் அது எப்படி புரியவில்லையே எனக்கேட்டார்கள், ஒரு வேளை நாமத்தான் சொதப்பிட்டோம்னு இருந்தேன்.இயற்பியல் கொஞ்சம் நினைவுப்படுத்திக்கிட்டா போதும்.

எதுக்கும் ஜகா வாங்காதவன் said...

வவ்வால்
லிப்ட்டை சில நேரம் வேலை (out of order) செய்யாத போது
நமக்கு BP அதிகமாவது ஏன் ?

1.உடல் குறைத்து காட்ட லிப்டின் உள் சிறப்பு லென்ஸ்
பொறுத்திய கண்ணாடி மாட்டினால் தடித்த உடல்
மெலிதாக தெரியும். ஆனால் வாவ்வால் தலைகீழ்
தொங்குவது நேராக தெரியும். y2= xw01 .

2. லிப்டில் நமீதா படம் மாட்டுவதன் மூலம்
உடல் எடை அதிகம் உள்ளவர்கள் நமீதா
படத்தை பார்பதன் மூலம் அவர்கள் விடும்
அதிக சொல்லினால் உடல் எடை தன்னால்
குறைந்து விடும்.

வவ்வால் said...

ஜகா வாங்காதவன்,

1)அது என்ன மாயக்கண்ணாடியா , மெல்லிசாவும் காட்டும் , தலைகீழா இருக்கிறத நேராவும் காட்ட ,எதாவது ஒன்றைத்தானே செய்ய முடியும்!

2) நமிதா படம் போட்ட பிறகு யாரும் லிப்ட் விட்டு வெளில வரவே மாட்டேன்கிறாங்கனு ஒரு லிப்ட் ஆபரேட்டர் சொல்றார்! :-))

ஆமாம் நீங்க எதுக்குமே ஜகா வாங்க மாட்டிங்களா, சாலையில் பிரேக் புடிக்காத மண்ணு லாரி கண்ணு மண்ணு தெரியாம வேகமா எதிர்க்க வந்தாக்கூடாவா?