Wednesday, December 19, 2007

எனக்கு தெரிந்த நல்ல நடுவர்கள்! இவர்களையும் சேர்த்துக்கோங்க!








"நாற்று "நடுபவர்கள்" எல்லாரும் நடுவர் தானே, ஏன் அவங்களை எல்லாம் நடுவர்னு சொன்னா குற்றமா? இவங்க எல்லாம் சேற்றில் கால் வைக்கலைனா நாம யாரும் சோற்றில் கை வைக்க முடியாது! வவ்வால் என்னும் பிலாக்காளி கண்டெடுத்த நடுவாளி(நடுவர்)

இந்த நடுவர்கள் போதுமா இன்னும் கொஞ்சம் வேண்டுமா?

பலான படத்துக்கு போனாலும் அதிலும் ஒரு மெஸ்ஸேஜ் தேடும் வாசக அன்பர்களுக்காக , சும்மா படம் மட்டும் காமிக்காம ஒரு மெஸ்ஸேஜும் தருகிறேன்.(வவ்வால் மொக்கை போட்டாலும் கருத்தா மொக்கை போடுவான்னு நீங்க நினைப்புது எனக்கு புரியுது...(cool ..buddy")

இந்தியா விவசாயத்தில் நெல் நாற்று நடும் வேலையில் ஆண்களை விட பெண்களே அதிகம் ஈடுபடுத்தப்படுகிறார்கள். அதே சமயம் ஒரு ஆண் நாற்று நட்டால், அவருக்கு , பெண்ணை விட அதிகம் சம்பளம் அளிக்கப்படுகிறது(ஆணுக்கு 75 எனில் பெண்ணுக்கு 60 ரூபாய்). ஆணை விட பெண்ணே "நடுவராக" செயல்படுவதில் வல்லவர் என்பது விவசாயிகளுக்கு நன்கு தெரியும் , அப்படி இருந்தும் , இப்படி பாலியல் ரீதியான சமச்சீர் இன்மை சம்பள விகிதத்தில் இருக்கிறது.

இதில் எந்த உள், வெளி குத்தும் இல்லை... இது விவசாய குத்துங்கோ ....சும்மா கில்லியாட்டாம் இருக்கும்!

நாத்து நடும் வேளையில பாட்டு ஒண்ணு வேணும், பாட்டுக்குள்ள மாமனுக்கு சேதி சொல்ல வேணும்.... ஏலே லோ ...ஏலே...லோ....

19 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வவ்வால்!
நாட்டுகளுக்குத் தேவையான நடுவர்களை இனம் கண்டுள்ளீர்கள்.

ILA (a) இளா said...

உங்க படங்களில் பாதி சிங்கி(சப்பை மூக்கு) மக்கள் மாதிரி தெரியுதுங்களே!

Unknown said...

அது நடுபவர் வவ்ஸ். நடுவர் அல்ல. உன் பதிவில் எழுத்து, கருத்து அப்புறம் ம்ம்ம்ம்ம் நடுவர் பிழை எல்லாமே உள்ளது. ஆட்டயில சேத்துக்க மாட்டோம், தண்டனையா இன்னும் கொஞ்ச நாளைக்கு ஒன்டி புளிய மரத்தில் நடு கிளையில் தொங்குவாயாக... :)

Thekkikattan|தெகா said...
This comment has been removed by the author.
தங்ஸ் said...

வவ்ஸ்,
நேரா தொங்கிட்டு பாத்தீங்களா என்ன? ஏன் இந்த கொலவெறி:-)))

Thekkikattan|தெகா said...

வவ்ஸ்,

:-)) எங்கே போய்ச் சேரணுமோ அங்கே போய்ச் சேர்ந்துடும்... நான் நாத்தெச் சொன்னேன்...

மொக்கையிலும் கருத்தா, இதெல்லாம் த்ரீ மச் :-P

நிம்மதியா ஃப்ரீ ஸ்கூலிளாவது போய் எந்த போட்டியுமில்லாம இருக்கலாமின்னு போன அங்கே ரெண்டு சீப்புற மிட்டாய் தரப்படும் யார் நல்லா மதிய நேரத்தில தூங்கிறாங்களோன்னு அவங்களுக்கும் அங்கேயும் போட்டியக் கொண்டாந்து தூக்கம் வரமா பண்ற மாதிரி... அடச் ச்சே :-))

குட்டீஸ் கார்னர் said...

அங்கிள் நீங்களுமா? நம்பமுடியவில்லை நேத்து தான் ஒரு அங்கிள் கிட்ட இருந்து நல்லா டோஸ் வாங்கினோம்

நாங்க உங்க கிட்ட ஒரு உதவி கேட்டோமெ...உங்க பதிவுகளை நாங்க காப்பி பண்ணிக்கலாமா உங்க பர்மிசன் தேவை...

கோவி.கண்ணன் said...

//உள், வெளி குத்தும் இல்லை... //

இரண்டையும் 'சேத்து' குத்துறிங்களே...

படங்கள் சூப்பர்...கிரமத்துக்கு அழைத்துச் சென்றதற்கு நன்றி !

வவ்வால் said...

வாங்க யோகன்,
நன்றி, எந்த நாட்டுக்கும், என்னாளும் தேவையான நடுவர்கள் இவர்கள் தானே!
---------------------
இளா,
நன்றி!

சப்பை மூக்கா இருந்தாலும் உழைப்பில் சளைக்காதவர்கள்.

இவர்கள் எல்லாம், இந்தியா, பர்மா, பிலிப்பைன்ஸ், சீனா, வியட்நாம், இலங்கை என்று பல நாட்டையும் சேர்ந்த நடுவர்கள்.உள்ளூர் நடுவர்களை மட்டும் காட்டாம ஒரு சர்வதேச நடுவர்கள் குழுவைக்காட்டி இருக்கோம்ல!
--------------
இசை,
//அது நடுபவர் வவ்ஸ். நடுவர் அல்ல. உன் பதிவில் எழுத்து, கருத்து அப்புறம் ம்ம்ம்ம்ம் நடுவர் பிழை எல்லாமே உள்ளது.//

நன்றி, உங்க பேரு இசைனு இருக்கு வெறும் இசையா இல்லை இசைத்தமிழா நீங்க? ஹே ...ஹே இது எப்படி இருக்கு.

இந்த சொற்றொடர்களைப் பாருங்க,

1)தமிழர்கள் தங்கள் வீடு தேடி வரும் இரவலருக்கு அன்னமிடுவர்!

2) பெரும் தலைவர்கள் தங்கள் பிறந்த தினத்தை முன்னிட்டு மரம் நடுவர்!

இடுவார்கள் = இடுவர் , நடுவார்கள் =நடுவர்,தொடுவார்கள் = தொடுவர், கெடுவார்கள்= கெடுவர் என்றெல்லாம் சுருக்கி புழங்குவது தமிழில் வழக்கத்தில் உள்ள ஒன்று.

நீங்க இசைத்தமிழா இருக்கலாம், ஆனால் நாம் முத்தமிழும் அறிந்த தமிழன்! :-))
-----------------------------

தங்க்ஸ்,
நன்றி!

ஒருத்தன் வித்தியாசமா யோசித்து விடக்கூடாதே... அவனை நேரா யோசிச்சியா , படுத்துக்கிட்டு யோசிச்சியானு கேட்பிங்க! ஹெ ஹே... நாங்க எல்லாம் பொறக்கும் போதே மூளையோட பொறந்தோம்ல :-))
-------------------------

தெ.கா,
நன்றி!

மக்கள் கிட்டே தான் போய் சேரணும் ... நாத்து!

//மொக்கையிலும் கருத்தா, இதெல்லாம் த்ரீ மச் :-P//

இப்போலாம் கருத்தே சொல்லாம இருந்தாக்கூட என்ன வவ்வாலு கருத்து எதுவும் சொல்லலையானு கேட்டு நம்மை கருத்துக்கந்த சாமி ஆக்கிடுறாங்க. பாவம் மக்கள் ஏமாற்றத்தை தவிர்க்கவே மொக்கையிலும் ஒரு கருத்தேற்றம் செய்துள்ளேன்!

//போட்டியக் கொண்டாந்து தூக்கம் வரமா பண்ற மாதிரி... அடச் ச்சே :-))//

போட்டிய உருவாக்கினா தானே அடுத்தவன் வேட்டிய உருவ முடியும்... ச்சே ஏதோ ஒரு புளோல சொல்லிட்டேன்.... ஏன் இப்படினுலாம் கேட்காதிங்க :-))
-------------------------

குட்டீஸ்,
நன்றி!

நாம என்ன மொக்கை துறந்த முனிவரா என்ன? நாம எல்லாம் மொக்கைக்கே மொக்கை போடுவோம் ,களத்துல குதிச்சுட்டா பட்டைய கிளப்பிடுவோம்ல!

என் பதிவ காபி ,டீ என்ன வேண்டுமானாலும் செய்துக்கொள்ளுங்க, ஆனா என்னையே power pointla மாத்த சொல்லாதிங்க, அது கொஞ்சம் சிரமம் அதான் எதுவும் சொல்லாம அடக்கி வாசிச்சேன்.
---------------------

கோவி,
நன்றி!

நான் குத்து எதுவும் வைக்கலை...ஆனா சேத்து குத்து ஒன்று உங்கள் கலைக்கண்ணுக்கு மட்டும் தெரிந்து இருக்கு :-)). ஒரு வேளை வயலில் இருக்கும் சேற்றை சொல்றிங்களோ?

கிராமத்தானாகி எனக்கு கிராமம் தானே தெரியும், அதான் நாத்து நடும் படம் காட்டினேன்.

கிராமத்துல எல்லாம் காலைலவே நாத்து நட வந்துடுவாங்க, ஒரு 9 மணிக்கு காலை சாப்பாடுக்கு கலைவாங்க,நேரம் பார்க்கிறது கூட அந்த டைம்ல வர பஸ் வச்சு தான், பஸ் சத்தம் கேட்டதும் சாப்பாட்டுக்கு கரையேறிடுவாங்க. தூக்கு சட்டில இருக்க பழைய சாதம், தொட்டுக்க கறுவாட்டு(மீன்)கொழம்புனு அந்த ஏரியாவே மணக்கும் அப்போ!

நானும் அப்படி பழைய சாதம் கறுவாட்டுக்கொழம்புனு சாப்பிட்டவன் தானே! மறக்குமா பழசெல்லாம்!

Sridhar V said...

நல்லாத்தான் கருத்து சொல்றீங்க. :-))

மரம் நடுவர், நாத்து நடுவர் எல்லாம் இன்னொரு பொருளை மண்ணில் நடுகிறார்கள்.

போட்டி நடுவர், போட்டியாளர்களுக்கு நடுவே தங்களைத் தாங்களே நட்டு கொள்கிறார்கள் :-))

//தூக்கு சட்டில இருக்க பழைய சாதம், தொட்டுக்க கறுவாட்டு(மீன்)கொழம்புனு //
//நானும் அப்படி பழைய சாதம் கறுவாட்டுக்கொழம்புனு
//

காய்ந்து கருகி போனதால் அது கருவாடு ஆனது. நீங்க ஏதோ மனசுக்குள்ள கறுவிகிட்டே சொல்ற மாதிரி இருக்கே :-))

துளசி கோபால் said...

அருமையான படங்கள் வவ்வால்.

காட்டாறு said...

நடுவர்களுக்கு பாட்டேதும் வேணுமின்னா மறக்காம சொல்லுங்க...
:-)

Unknown said...

நல்ல 'நடுவர்'கள் தான்... படத்துலயாவது பாத்து ரசிக்கலாம்..தண்ணியோட வயல!

இதுல எந்த வகையான 'குத்து'ம் இல்லன்னு சான்றளிக்கிறேன் :)

Anonymous said...

\\நாத்து நடும் வேளையில பாட்டு ஒண்ணு வேணும், பாட்டுக்குள்ள மாமனுக்கு சேதி சொல்ல வேணும்.... ஏலே லோ ...ஏலே...லோ....\\
இந்தப்பாட்டை மட்டும்தான் விட்டு வைச்சிருந்தீங்க. இப்ப அதுவும் கடைசில வந்துருச்சு. நடவு பத்தி ஏதாச்சும் சொல்வீங்கன்னு எதிர்பாத்தேன். உங்களுக்கு ஒரு கேள்வி இருக்கு. அதை சீக்கிரமே கேக்கறேன்.

புரட்சி தமிழன் said...

//ஒருத்தன் வித்தியாசமா யோசித்து விடக்கூடாதே... அவனை நேரா யோசிச்சியா , படுத்துக்கிட்டு யோசிச்சியானு கேட்பிங்க! ஹெ ஹே... நாங்க எல்லாம் பொறக்கும் போதே மூளையோட பொறந்தோம்ல :-)) //
மத்தவங்க எல்லாம் கசாப்பு கடையில வாங்கி வச்சிகிட்டாங்களோ

வவ்வால் said...

ஸ்ரீதர் வெங்கட்,
நன்றி!
//போட்டி நடுவர், போட்டியாளர்களுக்கு நடுவே தங்களைத் தாங்களே நட்டு கொள்கிறார்கள் :-))//

ஒருத்தர் நட்டுக்கிட்டார்னா புட்டுக்கிட்டார்னு அர்த்தம் ஆச்சே :-))

ஆட்டுக்கறி, கோழிக்கறினு "றி" போட்டு சொல்வதால் கறுவாடாக இருக்கலாம்னு நினைத்துவிட்டேன். மற்றப்படி கறுகல் அல்லது இடைச்செறுகள் இல்லாம தான் சொல்லி இருந்தேன்!
-------------------

துளசி கோபால்,
நன்றி!
---------------------

காட்டாறு,
நன்றி!

நல்லப்பாட்டா ஒன்றை எடுத்து விடுங்களேன்...
உன்னை அறிந்தால் நீ ...உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் ... பாட்டை ரி.மிக்ஸ் அடிச்சுடலாமா?
-----------------

தஞ்சாவூரார்,
நன்றி!

யானைக்கட்டிபோரடித்த நெல் வயல் கொண்ட ஊரு காரர் என்பதால் உங்களுக்கு இந்த "நடுவர்கள்" அருமை தெரிந்து இருக்கு!

//இதுல எந்த வகையான 'குத்து'ம் இல்லன்னு சான்றளிக்கிறேன் :)//

எனக்கு தெரிஞ்சு இதுல ஒரே ஒரு குத்து தான் இருக்கு அது நாத்து குத்து(குற்று) நடும் ஒரு நாற்றுக்கு ஒரு குத்துனு தான் சொல்வாங்க.(hill in english) :-))

----------------
சின்ன அம்மிணி,
நன்றி!
//நடவு பத்தி ஏதாச்சும் சொல்வீங்கன்னு எதிர்பாத்தேன். உங்களுக்கு ஒரு கேள்வி இருக்கு. அதை சீக்கிரமே கேக்கறேன்.//

ஏற்கனவே நம்ம தெகா... மொக்கைப்பதிவில கருத்தா 3 மச்னு சொல்லிட்டார். நீங்க என்னடானா கருத்து எங்கேனு கேட்கறிங்க :-))
உங்க அறிவுப்பசியா நினைச்சா எனக்கு புல்லரிக்குது :-))

கேள்வியா... நீங்க என்ன கேள்வியின் நாயகியா :-))
------------------------------

புரட்சித்தமிழன்,

முனியாண்டி விலாஸ்ல, ஒரு பிளேட் மூளை பொறியல்னு பலர் ஆர்டர் தறாங்களே,, அவங்களுக்குலாம் அப்போ மட்டும் தான் "மூளை" இருக்கிறதே தெரியும்... நான் அதை சொன்னேன்! :-))

Baby Pavan said...

குட்டீஸ்,
நன்றி!

நாம என்ன மொக்கை துறந்த முனிவரா என்ன? நாம எல்லாம் மொக்கைக்கே மொக்கை போடுவோம் ,களத்துல குதிச்சுட்டா பட்டைய கிளப்பிடுவோம்ல!

என் பதிவ காபி ,டீ என்ன வேண்டுமானாலும் செய்துக்கொள்ளுங்க, ஆனா என்னையே power pointla மாத்த சொல்லாதிங்க, அது கொஞ்சம் சிரமம் அதான் எதுவும் சொல்லாம அடக்கி வாசிச்சேன்.

நன்றி இப்ப நாங்க PDF க்கு மாறிட்டோம், நாங்களெ கன்வர்ட் பண்ணிக்கறோம்... அனுமதி கொடுத்ததற்கு மீண்டும் நன்றி.

Ayyanar Viswanath said...

Thekkikattan|தெகா said...

/நிம்மதியா ஃப்ரீ ஸ்கூலிளாவது போய் எந்த போட்டியுமில்லாம இருக்கலாமின்னு போன அங்கே ரெண்டு சீப்புற மிட்டாய் தரப்படும் யார் நல்லா மதிய நேரத்தில தூங்கிறாங்களோன்னு அவங்களுக்கும் அங்கேயும் போட்டியக் கொண்டாந்து தூக்கம் வரமா பண்ற மாதிரி... அடச் ச்சே :-))/

சமீபத்தில படிச்சதிலயே நல்ல நச் இதான் :))

வவ்வால் said...

அய்யனார்,
நன்றி,
தெகாவின் சொல்வண்ணம் இப்போத்தான் தெரியுமா! :-))