அரபு நாட்டில் இசைக்கச்சேரி நடத்திய இளையராஜாவின் நிகழ்ச்சியைப்பற்றி கிட்டத்தட்ட ஒரு டஜன் பேர்கள் , பலரும் பல விதமாக பதிவு போட்டு விட்டார்கள், ஆனால் இந்த வாரம் குமுதம் படித்தப்போது நம்ம பதிவர்கள் எப்படி ஒரே மாதிரி மாவு ஆட்டி இருக்காங்க என்பது தெரியவந்தது.
குமுதத்தில் வந்த செய்தி, இசை நிகழ்ச்சிக்கு வந்த இளையராஜாவை அரபு நாட்டில் உள்ள மிகப்பெரிய அய்ந்து நட்சத்திர விடுதியில் தங்க வைக்க அழைத்து சென்றுள்ளார்கள், ஆனால் வேட்டி சட்டையுடன் வந்த ராஜாவை அங்கிருந்த ஊழியர்கள் , வேட்டி,சட்டையுடன் வருபவர்களை தங்குவதற்கு அனுமதிக்க முடியாது என்று சொல்லி ,தங்க அனுமதிக்க வில்லை. அதைப்பார்த்த ராஜா பரவாயில்லை என்று வேறு விடுதிப்பார்க்க சொல்லி இருக்கிறார். இதற்குள் விடுதி நிர்வாகத்திற்கு ராஜாவின் பெருமைகள் சொல்லப்பட்டு , பின்னர் அவ்விடுதி நிர்வாகியே தலையிட்டு அனுமதி அளித்த பின்னரே அங்கே ராஜா தங்க வைக்கப்பட்டுள்ளார்.
இளையராஜா பெரிய இசைக்கலைஞர் என்பதாலேயே அவ்விடுதி நிர்வாகம் பின்னர் ஒத்துக்கொண்டுள்ளது, அவர்கள் வேட்டி சட்டையை ஏற்றுக்கொண்டல்ல என்பது தான் இங்கே குறிப்பிடதக்கது. இந்தியாவிலேயே வேட்டி சட்டையை மதிக்காத போது அங்கே என்ன நடந்தா என்ன என்று கேட்கலாம். ஆனால் கேள்வி கேட்டாகனுமே!
மேலும் வேட்டிக்கட்டிக்கொண்டு வரக்கூடாது என்று அவமானப்படுத்தியது படுத்தியது தானே , இதைக்கேட்டால் அங்கே எல்லாம் டிரஸ் கோட் அப்படித்தான் அதை தெரிந்து கொண்டு கடைப்பிடிக்க வேண்டாமா , இல்லைனா அங்கேலாம் எதுக்கு போகனும் என்பார்கள்! ஆனால் அமெரிக்காவிலோ ,கனடாவிலோ முக்காடு போடுவதை எடுக்க சொன்னால் எங்கள் உரிமையில் தலையிட கூடாது என்பார்கள்.
எங்கே போனாலும் உடைக்கட்டுப்பாடு என்று சொல்லி கொலைப்பண்றாங்கப்பா, பெண்ணிற்கு ஏற்பட்டா மட்டும் ஆள் ஆளுக்கு பதிவு போட்டு தாளிக்கிறாங்க, ராஜாவுக்கு என்றால் ..ஹா ...அக்காங்க் வேற வேலை இல்லை எங்களுக்கு என்று ஒதுங்கிடுறாங்கப்பா.
இதை விட , ராஜா இசை நிகழ்ச்சிக்கு வந்த போது அங்கே நடந்த திரை மறைவு வேலை எல்லாம் எனக்கு தெரியும், ஒரு சின்னப்ப்பையனை(பெண்?) டான்ஸ் ஆடக்கூடாது சொல்லிட்டார், வேற யாரு படமும் வைக்க கூடாதுனு சொல்லிட்டார்னு செய்திகளை முந்தி தருவது தினத்தந்தி போல எல்லாம் பதிவு போட்டாங்க ஆனா இதை மட்டும் சொல்லவே இல்லை!
இன்னும் சிலர் நிகழ்ச்சி சொதப்பல், ராஜா பேசினது சரி இல்லை, வேலி தாண்டி போனோம் , இத்தனை ரூபா டிக்கெட் எடுத்தோம் என்றெல்லாம் பதிவு போட்டு அவங்க பதிவு எண்ணிக்கையை கூட்டிக்கிட்டாங்க.
குமுதத்தில் வந்த செய்தி, இசை நிகழ்ச்சிக்கு வந்த இளையராஜாவை அரபு நாட்டில் உள்ள மிகப்பெரிய அய்ந்து நட்சத்திர விடுதியில் தங்க வைக்க அழைத்து சென்றுள்ளார்கள், ஆனால் வேட்டி சட்டையுடன் வந்த ராஜாவை அங்கிருந்த ஊழியர்கள் , வேட்டி,சட்டையுடன் வருபவர்களை தங்குவதற்கு அனுமதிக்க முடியாது என்று சொல்லி ,தங்க அனுமதிக்க வில்லை. அதைப்பார்த்த ராஜா பரவாயில்லை என்று வேறு விடுதிப்பார்க்க சொல்லி இருக்கிறார். இதற்குள் விடுதி நிர்வாகத்திற்கு ராஜாவின் பெருமைகள் சொல்லப்பட்டு , பின்னர் அவ்விடுதி நிர்வாகியே தலையிட்டு அனுமதி அளித்த பின்னரே அங்கே ராஜா தங்க வைக்கப்பட்டுள்ளார்.
இளையராஜா பெரிய இசைக்கலைஞர் என்பதாலேயே அவ்விடுதி நிர்வாகம் பின்னர் ஒத்துக்கொண்டுள்ளது, அவர்கள் வேட்டி சட்டையை ஏற்றுக்கொண்டல்ல என்பது தான் இங்கே குறிப்பிடதக்கது. இந்தியாவிலேயே வேட்டி சட்டையை மதிக்காத போது அங்கே என்ன நடந்தா என்ன என்று கேட்கலாம். ஆனால் கேள்வி கேட்டாகனுமே!
மேலும் வேட்டிக்கட்டிக்கொண்டு வரக்கூடாது என்று அவமானப்படுத்தியது படுத்தியது தானே , இதைக்கேட்டால் அங்கே எல்லாம் டிரஸ் கோட் அப்படித்தான் அதை தெரிந்து கொண்டு கடைப்பிடிக்க வேண்டாமா , இல்லைனா அங்கேலாம் எதுக்கு போகனும் என்பார்கள்! ஆனால் அமெரிக்காவிலோ ,கனடாவிலோ முக்காடு போடுவதை எடுக்க சொன்னால் எங்கள் உரிமையில் தலையிட கூடாது என்பார்கள்.
எங்கே போனாலும் உடைக்கட்டுப்பாடு என்று சொல்லி கொலைப்பண்றாங்கப்பா, பெண்ணிற்கு ஏற்பட்டா மட்டும் ஆள் ஆளுக்கு பதிவு போட்டு தாளிக்கிறாங்க, ராஜாவுக்கு என்றால் ..ஹா ...அக்காங்க் வேற வேலை இல்லை எங்களுக்கு என்று ஒதுங்கிடுறாங்கப்பா.
இதை விட , ராஜா இசை நிகழ்ச்சிக்கு வந்த போது அங்கே நடந்த திரை மறைவு வேலை எல்லாம் எனக்கு தெரியும், ஒரு சின்னப்ப்பையனை(பெண்?) டான்ஸ் ஆடக்கூடாது சொல்லிட்டார், வேற யாரு படமும் வைக்க கூடாதுனு சொல்லிட்டார்னு செய்திகளை முந்தி தருவது தினத்தந்தி போல எல்லாம் பதிவு போட்டாங்க ஆனா இதை மட்டும் சொல்லவே இல்லை!
இன்னும் சிலர் நிகழ்ச்சி சொதப்பல், ராஜா பேசினது சரி இல்லை, வேலி தாண்டி போனோம் , இத்தனை ரூபா டிக்கெட் எடுத்தோம் என்றெல்லாம் பதிவு போட்டு அவங்க பதிவு எண்ணிக்கையை கூட்டிக்கிட்டாங்க.
36 comments:
தல
என்னது இது, கொஞ்ச நாளா சூடா இருக்கீங்க
டெண்டு கொட்டகை மாதிரி ஆடை அணிந்தவர்களுக்கு வேட்டி ஒத்துக்கொள்ளவில்லையா..விந்தை விந்தையிலும் விந்தை...
ஆனா, வெளி நாட்டிலே, நம் உடைப் பற்றி அறியாமல் விடவில்லை என்றால் , என்னளவில் பெரிய தவறு எதுவும் இல்லை. ஏன்னா, பெரும்பாலும், அவர்கள் வாயிலிலே இந்த உடை அணிந்து வரவேண்டாம்
என்று சொல்லிவிடுவார்கள்.
உள்ளூரிலே என்ன கதை...5***** வேட்டி கட்னா விடுறாங்களா..
சாமன்யனுக்கு என்பது விட்டுப்போச்சி..
....அரசியல் தலைகள் எல்லாம்..அங்கே தான் கும்மியடிக்கும்...
அங்கிள் நாங்க ஆதரவு பதிவு போட்டுட்டோம். ஒரு பதிவு போதுமா இல்ல எல்லா குட்டீஸ்ம் தனி தனியா பதிவு போட்டு விளக்கம் குடுக்கனுமா?
நீங்க அங்கிருக்கும் ஐந்து நட்சத்திர விடுதியை கூறுகிறீர்கள், இந்தியாவிலேயே நமது உடைகளுக்கு மதிப்பில்லை. சிலநாட்களுக்கு முன்னால் மும்பையில் ஒரு நட்சத்திர விடுதியில் ( அதென்னமோ 7 நட்சத்திரமாமே) மராத்தி நடிகர்கள் மூவர் கோலாப்பூர் செருப்புக்களை அணிந்து வந்ததற்காக தடுக்கப்பட்டுள்ளனர். :((
இப்படி ஒரு தகவலை இப்போது தான் கேள்வி படுகிறேன்!
கானா தல,
நன்றி!
சூடுலாம் ஒன்னும் இல்லை, இது அறச்சீற்றம் அதான் சூடாத்தெரியுது!
-----------------------------------
tbcd,
நன்றி!
உள்ளூரில் விடவில்லை என்றால் , அதனை மக்கள் எப்படி கேள்விக்கேட்கிறார்கள் என்று சொல்ல வந்தேன். அதுவே வெளிநாட்டில் என்றால் கேட்பதில்லை.
அதுவும் துபாய் ஒன்றும் மேற்கத்தைய நாடு அல்ல, ஆசிய நாடு தானே. நீங்கள் சொன்னது போல கூடாரம் போல ஆடை அணிந்தவர்கள், அவர்களே பாரம்பரிய ஆடையைத்தானே அணிகிறார்கள்.
--------------------------
பவன்,
நன்றி!
அப்படிலாம் இல்லை. நிறைய தெரியும், ராஜா நிகழ்ச்சிப்பற்றி என்று பல தகவல்களையும் சொன்னார்களே இதை ஏன் சொல்லவில்லை என்று தான் கேட்டு வைத்தேன்.நம் பாரம்பரிய உடையை மதிப்பது அவசியம் தானே.
----------------------------
மணியன்,
நன்றி,
இங்கும் ஒப்படி ஒரு சில இடங்களில் நடக்கிறது. ஆனால் அவற்றை எல்லாம் கண்டித்து பதிவு உடனே போட்டு விடுவார்கள் நம்ம மக்கள். அதான் இம்முறை சத்தமே இல்லையே என்று பார்த்தேன்.
நம்மோட வெள்ளைக்கார விஸ்வாசம் எந்த அளவுக்கு முத்தி போச்சுனு இதை வச்சே தெரிஞ்சுக்கலாம்.
---------------------------
கோபிநாத்,
நன்றி,
இந்த வாரக் குமுதத்தில் வந்துள்ளது.
வவ்வால்,
உடைக்கட்டுப்பாடுகள் என்று தனிப்பட்ட அமைப்புகள் எப்படி வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும்வைத்துக் கொள்ளலாம் , ஆனால் அது ஒரு சமூகத்தின் அடையாளத்தை தடுத்து கேவலப்படுத்தக்கூடாது. ஒவ்வொரு இடத்திற்கும் dress code இருக்கலாம். ஆனால் தனியாரின் அந்த dress code சட்ட திட்டங்கள் மாநில பெரும்பான்மை உடையை உள்ளடக்கி இருக்கிறதா? என்பதை கண்காணிக்க வேண்டியது அரசின் கடமை.
மாநில/மத்திய அரசுகள் இந்த விசயத்தில் எந்த ஒரு வழிகாட்டுதலையும் சொல்லவில்லை என்றே நினைக்கிறேன்.
சேலை உலக அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டு ஏன் வேட்டி தமிழ்நாட்டிலேயே கேவலப்படுத்தப்படுகிறது?
தமிழக நீதி மன்றங்களில் ஏன் தமிழ் முதன்மை மொழியாக இருக்க போராட வேண்டியுள்ளது?
...
என்று பல கேள்விகளை கேட்கலாம்....
ஒரு மாநிலத்தை ஆளும் அரசு அந்த மாநில அடையாளம் என்று நம்பப்படும் விசயங்களில் சில தெளிவான வரைமுறைகளை உலகுக்கு அறிவித்தல் அவசியம். எந்த வழிகாட்டுதலும் இல்லாத அரசில் யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்ளலாம். அதுதான் தமிழகத்தில் நடக்கிறது
மணிமேகலையின் துப்பட்டா விவாதிக்கப்பட்ட அளவிற்கு சென்னை ஜிம்கானா கிளப், சென்னை கிரிக்கெட் கிளப்பின் உள் அரங்க வேட்டி மறுப்பு வலைப்பதிவுகளில் விவாதிக்கப்படவில்லை.
**
அரபு நாடுகளின் அங்கியை தமிழ்நாடு நட்சத்திர ஓட்டல் தடுக்க முடியாது. ஏன் என்றால் பணம்.
**
அரபு நாடுகளில் இருக்கும் இந்தியர்கள் அங்கு நிரந்தரவாசியோ அல்லது குடியுரிமையோ (மலேசியா/சிங்கப்பூர்/அமெரிக்கா/இங்கிலாந்து வாழ் இந்திய வம்சாவழியினர் போல) பெறமுடியாது.
இ.ராசாவை விமர்சிக்கலாமே தவிர அங்கே உள்ள சட்ட/நடைமுறைகளை விமர்சிக்க முடியாது. இவர்கள் விரும்பும் உரிமைகளுக்காக போரட வழியே இல்லை.
பாஸ்போர்ட்டின் கலரைப் பொறுத்து சம்பளம் வேறுபடும் தகுதிகள் சமமாக இருந்தாலும். அது வேறு உலகம்.
கல்வெட்டு,
நன்றி!
//மணிமேகலையின் துப்பட்டா விவாதிக்கப்பட்ட அளவிற்கு சென்னை ஜிம்கானா கிளப், சென்னை கிரிக்கெட் கிளப்பின் உள் அரங்க வேட்டி மறுப்பு வலைப்பதிவுகளில் விவாதிக்கப்படவில்லை.//
நீங்கள் சொல்வது சரிதான். தமிழகத்திலும், இப்படி இருக்கு. ஆனால் நீங்கள் சொன்னது போல துப்பட்டா பற்றி விவாதித்த அளவுக்கு இல்லையே என்பதும் ஒரு காரணம். மேலும் ஒரு பதிவர், ராஜா துபாய் வந்த போது அங்கே நடந்த நிகழ்ச்சி ஏற்பாடு விவரம் எல்லாம் தெரியும் என்று சிலதை பட்டியல் இட்டு,ராஜ பெரிய இசை ஞானிப்போல நடந்துக்கொள்ளவில்லை, இந்த நிகழ்ச்சி சொதப்பல் என்று எல்லாம் சொல்லி இருந்தார். அவர் காதுக்கு இந்த தகவல் மட்டும் எப்படி வராமல் போச்சு?
மேலும் வேட்டி என்பது பாரம்பரிய உடை. தமிழனுக்கு மட்டும் சொந்தம் அல்ல இந்தியா முழுவதும் கட்டுகிறார்கள். ஆனால் ஏன் இந்த பாரபட்சம் ? இதை எல்லாம் மாற்றுவது என்று, அந்த ஆதங்கத்தில் தான் பதிவிட்டேன்.
//ஆனா இதை மட்டும் சொல்லவே இல்லை!//
ஐயா, இது behind the screen.எல்லாரு முன்னாலயும் இது நடக்கலை. நடந்திருந்தால் எல்லாருக்கும் தெரிந்து கண்டன பதிவு போட்டிருப்பார்கள்.
//எங்கே போனாலும் உடைக்கட்டுப்பாடு என்று சொல்லி கொலைப்பண்றாங்கப்பா, பெண்ணிற்கு ஏற்பட்டா மட்டும் ஆள் ஆளுக்கு பதிவு போட்டு தாளிக்கிறாங்க, ராஜாவுக்கு என்றால் ..ஹா ...அக்காங்க் வேற வேலை இல்லை எங்களுக்கு என்று ஒதுங்கிடுறாங்கப்பா.//
கரீட்டா சொன்னீங்க! ஆண்கள் ரொம்ப பாவம்:((((((((
http://truetamilans.blogspot.com/2007/05/blog-post_30.html
வேட்டி என்பது அங்கே ஒரு உள்ளாடையாகக் கருதப்படுகிறது - எனவே அனுமதி அளிக்க யோசித்திருக்கிறார்கள். விளக்கமளித்தவுடன் அனுமதித்து விட்டார்கள். இதற்கு ஒரு அநாவசிய பில்ட்-அப் கொடுத்து, அந்த தேசத்தினரை தாழ்வு படுத்தும் சில பின்னூட்டங்களையும் (உதாரணம் TBCD) அனுமதிப்பது, நம்முடைய தாழ்வு மனப்பான்மையை மட்டுமே பறைசாற்றுகிறது. கொஞ்சம் லூஸ்ல விடுங்க வவ்வால்ஜி. நாலு நாள் நல்லா ரெஸ்ட் எடுத்தீங்கன்னா எல்லம் சரியாகிவிடும் :-)
ஆடுமாடு,
//ஐயா, இது behind the screen.எல்லாரு முன்னாலயும் இது நடக்கலை. நடந்திருந்தால் எல்லாருக்கும் தெரிந்து கண்டன பதிவு போட்டிருப்பார்கள்.//
"behind the screen" சம்பவங்கள் எல்லாம் பார்த்தேன் அதனால் ராஜா மீது இருந்த மதிப்பே போச்சு, எனக்கு பலவும் தெரியும்னு சிலர் பதிவு போட்டாங்க ,அதனால் தான் அதை சொல்லியே இது மட்டும் தெரியாம போச்சேனு கேட்டேன்.
நீங்க சரியா பதிவைப்படிங்க!
----------------------------------
குசும்பன்,
ஆண்பாவம் பொல்லாதது என்பதால் தான் ஆண்குலத்தின் சார்பா பதிவைப்போட்டேன், நீங்களும் வாங்க சேர்ந்து ஆண்களுக்காக குரல் கொடுப்போம்.
--------------------------------
அனானி,
உண்மைத்தமிழன் சொன்னது அப்போது ,மீண்டும் ஒரு முரை அதே போல நடக்கும் போதும் குரல் கொடுத்தால் தவறா?
-----------------------------
//வேட்டி என்பது அங்கே ஒரு உள்ளாடையாகக் கருதப்படுகிறது - எனவே அனுமதி அளிக்க யோசித்திருக்கிறார்கள். விளக்கமளித்தவுடன் அனுமதித்து விட்டார்கள். இதற்கு ஒரு அநாவசிய பில்ட்-அப் கொடுத்து, அந்த தேசத்தினரை தாழ்வு படுத்தும் சில பின்னூட்டங்களையும் (உதாரணம் TBCD) அனுமதிப்பது, நம்முடைய தாழ்வு மனப்பான்மையை மட்டுமே பறைசாற்றுகிறது.//
அனானி,
அரபு தேச விஸ்வாசியாக இருக்கலாம் அதுக்குனு இப்படியா?
அவ்வளவு பெரிய உள்ளாடையை யார் சாமி அணியரா? அரபு தேசத்தில் உள்ளாடை அவ்வளவு பெரிசா இருக்குமா? :-))
ஆமாம் அவர்களை இழிவு படுத்தும் வண்ணம் என்ன சொல்லிட்டார் tbcd, அப்படியே அவர் சொன்னால் இதில் தாழ்வு மனப்பான்மை எங்கே வந்தது? ஒன்னுமே புரியலையே?
மீனாட்சி அம்மன் கோவிலில் கைலி கட்டிக்கொண்டு வரக்கூடாதுனு போர்ட் வச்சு இருக்கு ஏன் என்று கேட்டுக்கூட பதிவு வருது, அப்போலாம் போய் அது இரவு உடைனு விளக்கம் சொல்ல வரலையே நீங்க?
ஆனா வேட்டியை உள்ளாடைனு அர்த்தமே இல்லாம சொல்லிக்கிட்டு வரும் நோக்கம் என்ன?
எது எதுக்கோ பதிவு போட்டு தாளிக்கிறாங்க இதை ஏன் யாரும் கண்டுக்களைனு கேட்டா நான் ஓய்வுக்கு போகனுமா, சமூக நீதி பாதிக்கும் போது கொடாநாடுக்கோ, ஹைதராபாத்திற்கோ ஓய்வுக்கு போக நான் ஒன்றும் , போயஸ் தோட்ட அம்மையார் வழி வந்தவன் அல்ல!
இப்போது தந்த பதிலே அதிகம்,அனானியா வரும்போது எல்லாம் பதில் அதிகம் எதிர்ப்பார்க்காதிங்க, வலைப்பதிவர் பெயரில் வந்தால் இன்னும் விளக்கம் தரவும் தயார்.
வவ்ஸ்,
எல்லாம் பணக்கார நாடாயிட்டா கோவணத்தைக் கூட எங்கள் கலாச்சாராத்தின் அடையாளமென்று ஏற்றுக் கொள்ளச் செய்யலாம். :-) உண்மையாகவே சொல்கிறேன்.
எல்லாம் அவ்வளவு தொலைவிலேயே இருக்கிறது - பணம் படைத்து விட்டால் எதனையும் கேட்டு வாங்கிக் கொள்ள முடியும் அந்த டெண்டு கொட்டகையை வைத்துக் கொண்டு லாஸ் வேகஸ் வரைக்கும் தன்னுடைய பலத்தை காட்டவில்லையா அவர்கள், எல்லாம் அப்படித்தான் ;).
//"behind the screen" சம்பவங்கள் எல்லாம் பார்த்தேன் அதனால் ராஜா மீது இருந்த மதிப்பே போச்சு,//
எனக்கும் அப்படித்தான் தோணச் செய்கிறது. ராஜா போன்ற பிரபலங்கள் தன்னுடைய சொந்த இமெஜ் விசயத்தை அப்படி கொஞ்சம் தள்ளி வைத்து விட்டு இதனை ஒரு கலாச்சாரத்திற்கு நேர்ந்த அவமானமாக ப்ரெஜெக்ட் பண்ணி பேசியிருந்தால் கண்டிப்பாக பின்னாலிள் இதற்கு ஒரு தீர்வு கிடைத்திருக்கும் (அவரும் தன் சார்ந்த சமூகத்திற்கு தொண்டாற்றியதாக இருந்திருக்கக் கூடும்).
நான் நினைக்கிறேன், ராஜா கூட இன்னமும் அந்த பர்சனல் லெவலிள் ஷேம் ஆகியிருப்பாரோ, like any other person when they are ridiculed...
//அனானியா வரும்போது எல்லாம் பதில் அதிகம் எதிர்ப்பார்க்காதிங்க//
இன்னாது?! வவ்வால்னு பேர் வச்சிகினு குண்டக்க மண்டக்க பதிவெழுதும்போதே இந்த ராங்க் பண்ணிகினுகீறீங்களே, சொந்த பேர்ல பதிவெழுதினா இன்னா பேச மாட்டீங்க? மெய்யாலுமே பிரியாமதான் கேக்குறேன் "வவ்வாலுக்கும்" அனானிக்கும் இன்னாபா பெரிய வித்யாசம் கண்டுகின?
கொ.ப.செ.
ராயபேட்டை அனானி சங்கம்
தெகா,
//எல்லாம் பணக்கார நாடாயிட்டா கோவணத்தைக் கூட எங்கள் கலாச்சாராத்தின் அடையாளமென்று ஏற்றுக் கொள்ளச் செய்யலாம். :-) உண்மையாகவே சொல்கிறேன்.//
நிதர்சனம் அதானே :-))
//நான் நினைக்கிறேன், ராஜா கூட இன்னமும் அந்த பர்சனல் லெவலிள் ஷேம் ஆகியிருப்பாரோ, like any other person when they are ridiculed...//
அப்படித்தான் ஆகி இருக்கனும், வெளில சொன்னா அசிங்கம்னு நினைத்திருப்பார் போல!
ஆனால் அவரைப்போன்றவர்கள் வெளியில் வந்து உரிமைக்குரல் கொடுத்தால் தானே ஒரு விடிவு ஏற்படும்.
----------------------
அனானி,
//மெய்யாலுமே பிரியாமதான் கேக்குறேன் "வவ்வாலுக்கும்" அனானிக்கும் இன்னாபா பெரிய வித்யாசம் கண்டுகின?//
வலைப்பதிவுகளில் வவ்வால்னு சொன்னா ஒன்னு தான் இருக்கு, ஆனா அனானி எத்தனை அனானியடா? எந்த அனானி என்ன சொன்னார்னு யாருக்குமே தெரியாது.
என்னால் வவ்வாலுக்கு என்று ஒரு பதிவைக்காட்ட முடியும். நான் எங்காவது போய் முறைக்கேடாக பேசினால் என்ப்பதிவில் எதிரொலிக்கும்.
நீங்களும் உங்களுக்கு என்று ஒரு பதிவைக்காட்டுங்கள், போதும்!
நீங்க என்ன வேணா பேசிட்டு கையத்தட்டிக்கிட்டு போய்டுவிங்க , நாங்க அப்படியா?
வவ்வால்!
வேட்டிக்கு இவ்வளவு விபரமா??
இங்கே சில அரபு நாட்டுத் தலைவர்கள்
தங்கள் பாரம்பரிய உடையுடனே வருவார்கள்.
சமீபத்தில் லிபிய கடாபி வந்தார், ஐரோப்பிய பாணி உடை ,அதற்கு மேல் ஒரு போர்வையைச் சுற்றிக் கொண்டு ஜனாதிபதி மாளிகையில் விருந்துண்டு, பிரதமர் வாசஸ்தலத்தருகில் பாலைவனப் பாணிக் கூடாரமைமைத்து ,தன் விருந்தினருக்கு விருந்து கொடுத்து, 22 மில்லியனுக்கு போர்த் தளபாடமும் வாங்கிச் சென்றார்.
பாரம்பரிய உடையில் வரும் அரபு அரசர்களைக் கட்டித் தழுவி ,மில்லியன் கணக்கில் கையொப்பம் வாங்கிக் கட்டி அனுப்பி
விடுவார்கள்.
கோமாளி வேசம் போட்டு வந்தாலும் காசு கொண்டுவந்தால் இங்கு வரவேற்பே!!
'வேட்டி என்பது ஒரு உள்ளாடை எனக்
கருதப்பட்டது' என நண்பர் கூறக்காரணம் அரேபியர்கள்...மிக விலை உயர்ந்த,அழகிய உடைகளை
அணித்து பின் எல்லாவற்றையும் தலையணை உறை போல் ஒன்றால்
மூடி விடுவார்கள்.
அதனால் உள்ளாடை என கூறிப்பிட்டுள்ளார் என நினைக்கிறேன்.
ஆனால் ஹஹ் யாத்திரை யாத்திரீகர்கள், கபா (இறை இல்லம்) வைச் சுற்றும் போது ,வெள்ளாடை நம் வேட்டி போல் கட்டிக் கொண்டே வலம் வருவார்கள்.
சமுத்திரம் போல் பளீர் வெள்ளாடையில் அந்த கோடிக் கணக்கான யாத்திரீகர் கொள்ளை அழகே!!
இந் நிலையில் அரபு தேசம் இளசின் வேட்டியை வெறுத்ததும், பின்பு விட்டதும் ஏனோ புரியவில்லை.
இன்சா அல்லா!
யோகன் நன்றி!
பல நல்லத்தகவல்களை தந்துள்ளீர்கள்.
பணம் கொண்டு வருபவர் கோவணம் கட்டி இருந்தாலும் வரவேற்பு கிடைக்குமே! :-))
வழக்கமாக அணியும் ஆடைகளை மூடிக்கொண்டு மேலாடைப்போட்டால் அப்போ எல்லாம் உள்ளாடையா, பேண்ட் மீதும் அவர்கள் மூடிக்கொள்வார்கள் எனில் அதுவும் உள்ளாடைத்தானே!
ராஜாவைப்பார்த்தால் கருப்பாக கிராமத்தானாக தெரியும் அதிலும் வேட்டியில் சென்றதும் சரிதான் ஏதோ இடம் தெரியாம வந்த ஆள்ப்போலனு தொரத்தப்பார்த்து இருப்பாங்க. பின்னர் அவர் அருமை பெருமைகளை சொன்னதும், புரிந்து விட்டு இருக்காங்க!
அதனால் தான் அப்போவே நம்ம ஊரில ஆள்ப்பாதி ஆடைப்பாதினு சொல்லி வச்சாங்க போல!
ஆனாலும் ஆடைக்கு தர மரியாதைல ஒரு கால்ப்பங்காவது மனுசனுக்கு வேண்டாமா?
//சூடுலாம் ஒன்னும் இல்லை, இது அறச்சீற்றம் அதான் சூடாத்தெரியுது//
ஆனா இவுக வேற மாதிரி சொல்றாகளே:
http://abiappa.blogspot.com/2008/01/blog-post.html
என்னமோ போங்க!
வவ்வால்,
நீங்கள் சொல்வதையும், தெகா சொல்வதையும் ஆமோதிக்கிறேன்.
இந்தியர்கள் பெரும் பணக்காரர்கள் என்ற நினைப்பு உலகுக்கு வரும் வரைக்கும் நம்மை இழிவு செய்வதும் தொடரும். அதன் தொடர்ச்சியாக நம்மையும் நம் கலாச்சாரத்தையும் நம் மக்களே இழிவு செய்வதும், நம் மக்களே "அமெரிக்காவை பார், ரஷ்யாவை பார், சீனாவை பார்" என்று அலட்டுவதும் தொடரும்.
இந்த புத்தாண்டில் நாம் இந்தியர்கள் பணக்காரர்கள் என்ற நிலை உலகெங்கும் வரட்டும்.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும், உங்கள் நண்பர்களுக்கும், வலையுலக நண்பர்களுக்கும் எல்லா நலமும் பெற்று நீடூழி வாழ மனம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.
####
கண்ணுக்குக் கண் என்று பழிவாங்க ஆரம்பித்தால் உலகமே குருடாவதில்தான் முடியும்
- காந்தி
####
எனக்குத் தெரிந்து அரபு நாடுகளில் சவூதி தவிர, இத்தகைய டிரஸ்கோட் இருப்பதாகத் தெரியவில்லை.
செந்தொடைகளைக் காட்டிக் கொண்டு சுற்றுலா வரும் ஐரோப்பியர்களுக்குக் கிடைக்கும் மரியாதை நம்மூர் இளையராசவுக்குக் கிடைக்காமல் போனது ஆச்சரியமளிக்கிறது.
மற்றபடி சொல்வதற்கு ஒன்றுமில்லை.
நன்றி.
வவ்வால் சார்,
http://pettagam.blogspot.com/2008/01/tag.html
இதில் பாருங்கள்
வவ்வால் சார்,
உங்களை நான் tag இல் இணைத்துள்ளேன்..இப்போதுதான் பார்த்தேன்..இம்சையும் இணைத்துள்ளார்..
அதனாலென்ன? அவர் கேட்டது சீரியஸ் பதிவு..நான் கேட்டது மொக்கைப்பதிவு..ரெண்டுமே எழுத மாட்டீர்களா என்ன?
http://kummionly.blogspot.com/2008/01/blog-post.html
unakku soodu soranai illayaa? thooo
அனானி1,
யார் என்ன சொன்னா என்னப்பா, என்னைப்பார்த்து எதுவும் சொல்ல இங்கே யாருக்கும் அருகதையே கிடையாது, நீங்க சொன்ன ஆசாமி எல்லாம் சோற்றால் அடித்த பிண்டம். என்ன நடந்தது என்று நானும் பார்க்கவில்லை எனவே எதுவும் சொல்வதற்கில்லை!
எதுக்கு இப்படி பயந்து சாவுறிங்க இதை சொல்லவும் அனானி என்று வரிங்க இதுல என்னைப்பார்த்து வேற கேள்வி? :-)) ஒரு பதிவராக கேள்வி கேட்டால் நானும் இன்னும் கொஞ்சம் விளக்கமாக பதில் சொல்வேன்!
-------------------------------------
தமிழ் மணி ,
நன்றி,
நீங்கள் சொன்னதில் எனக்கு மாற்றுக்கருத்தே இல்லை.உடன் படுகிறேன். சரியாக சொல்லியுள்ளீர்கள். நாம்(இந்தியர்கள்) யார் என்று காட்ட வேண்டியக்காலம் வந்து விட்டது.
-------------------------
நல்லடியார்,
நன்றி,
//செந்தொடைகளைக் காட்டிக் கொண்டு சுற்றுலா வரும் ஐரோப்பியர்களுக்குக் கிடைக்கும் மரியாதை நம்மூர் இளையராசவுக்குக் கிடைக்காமல் போனது ஆச்சரியமளிக்கிறது.//
அதனால் தான் நானும் ஆச்சர்யப்பட்டேன். எப்படியோ ஆசிய நாடுகளுக்குள்ளேயே இப்படிலாம் பேதம் பார்க்க ஆரம்பித்தால் அமெரிக்கா காரன் சும்மா இருப்பானா, சந்தில சிந்து பாடப்மாட்டானா?
------------------------------------
பாசமலர்,
நன்றி,
உங்கள் பதிவில் பின்னூட்டம் போட்டுள்ளேன். நீங்கள் சொல்ல வருவது சரியாக புரியவில்லை அதான். விரைவில் எதிரிவினையாற்றுகிறேன்! உஷார்!
---------------------------
அனானி2,
எனக்கு இருக்கும் சூடு பத்திலாம் அப்பாலிக்கா கவலைப்படலாம் இதை சொல்ல ஓடி வந்த அல்லக்கை நீ யார் என சொல்வது தானே வலைப்பதிவே இல்லாத அனானி என்றால் பொத்திக்கொண்டு போ என்பது மட்டுமே பதில்!
//டெண்டு கொட்டகை மாதிரி ஆடை அணிந்தவர்களுக்கு வேட்டி ஒத்துக்கொள்ளவில்லையா//
:)) அதானே??
//பாஸ்போர்ட்டின் கலரைப் பொறுத்து சம்பளம் வேறுபடும் தகுதிகள் சமமாக இருந்தாலும். அது வேறு உலகம்.//
உண்மையோ...உண்மை!!
//வேட்டி என்பது அங்கே ஒரு உள்ளாடையாகக் கருதப்படுகிறது //
சரியான காமெடி!! அப்போ, வெள்ளக்கார தொரமாருங்க, தொரசாணிங்க போட்டுகிட்டு வறாங்களே, அதுக்கெல்லாம் இன்னாபா பேரு?
தமிழன்னா எல்லாருக்கும் எளக்காரம்தான்... என் கண்டனங்கள்.
தஞ்சாவூரார்,
நன்றி!
//சரியான காமெடி!! அப்போ, வெள்ளக்கார தொரமாருங்க, தொரசாணிங்க போட்டுகிட்டு வறாங்களே, அதுக்கெல்லாம் இன்னாபா பேரு?//
அதானே 8 முழ வேட்டியவையே உள்ளாடைனு சொன்னா , அரை முழ துணிய சுத்திட்டு வரதுங்களை என்னானு சொல்வதாம்?
உண்மைல பிரபலங்களும் சரி, சாமன்யனும் சரி வேட்டிக்கட்டுவதை தவறாக நினைக்கும் இக்காலத்துல் இசைஞானி வேட்டியுடன் வெளி நாடு சென்றதே எனக்கு பெரிய விஷயமாக தெரிகிறது, ஆனால் அவரும் கொஞ்சம் தன் கருத்தை மற்றவர்களுக்கு தெரியும் வண்ணம் சொல்லி இருக்க வேண்டும்.
வேட்டிப்பற்றி அதிகம் பேசும் நீ வேட்டிக்கட்டுவியா என்றால் நான் லுங்கிக்கு பதில் வேட்டித்தான் கட்டுகிறேன் என்பதையும் சொல்லிக்கொள்கிறேன்.பேண்ட் போடாத நேரங்களில் வேட்டி, லுங்கி என்று பல பல இடங்களுக்கும் போவேன்,(இங்கே சில சூப்பர் மார்கெட்டுகளில் செக்யூரிட்டி முறைத்து வேறு பார்க்கிறான்) எங்கம்மா கூட என்ன இது வயசானவன் போல வேட்டிக்கட்டுற என்று சொல்கிறார்கள்(வயசானவங்கதான் வேட்டிக்கட்டுவாங்கனு யார் ரூல்ஸ் போட்டா)
இன்னாபா வவ்வாலு...
ஆளையே காணோம்.. நம்ம தெரு பக்கம் வர்ரதே இல்லா...
நீ கோவணத்துல தல கீழா தொங்கிட்டு வந்தாலும் நான் அலவ் பன்றேன் ராசா.. ஒரு எட்டு வந்துட்டு போ...
அப்புறம்...
ஓவரா தொங்குனா ஒடம்புக்கு ஆகாது.. அப்பப்போ பக்கத்து மரத்துக்கு பறந்து பாருய்யா... :)
இசை,
நன்றி,
//ஓவரா தொங்குனா ஒடம்புக்கு ஆகாது.. அப்பப்போ பக்கத்து மரத்துக்கு பறந்து பாருய்யா... :)//
நான் பறந்து பறந்து பின்னூட்டம் போடுவேன்னு(குடைச்சல் கொடுப்பேன்) என்னை திட்டும் மாமிகளும் , ஆசாமிகளும் சொல்லும் இவ்வேளையில் இப்படி சொல்வது நியாயமா?
சில சமயங்களில் பதிவுகள் தட்டுப்படாமல் போய் விடுகிறது, மற்றப்படி வரமாட்டேன் என்றெல்லாம் இல்லை வருகிறேன்.(இப்படி என்னை வர சொல்லி வம்பை விலைக்கொடுத்து வாங்கும் உம்மை என்ன சொல்வது)
வவ்வால் சார்,
எதிரி வினை வேண்டாம்..நல்வினை புரியுங்கள்...சூதாட்டம் ஒண்றுமில்லை...சும்மா ஒரு ஆட்டந்தான்..மொக்கை போட வேண்டும்.
சங்கிலித் தொடரில் நால்வரை இணைக்க வேண்டும்..
//என்னைப்பார்த்து எதுவும் சொல்ல இங்கே யாருக்கும் அருகதையே கிடையாது, நீங்க சொன்ன ஆசாமி எல்லாம் சோற்றால் அடித்த பிண்டம்.//
வவ்வாலு, இப்டி திட்டுறது உனக்கே ஞாயமா கீதா? இப்போ பாரு அந்த பதிவரு பதிவையே மூடிகினு போறேன்னு சொல்லிப் போட்டாரு.
இங்கன பாரு:
http://abiappa.blogspot.com/2008/01/105.html
இத்தொட்டுதான் பதிவு மேட்டர்ல கொஞ்சம் டீஜென்டா இருக்கோணோம்னு சொல்றது.
என்ன கரீட்டுதான? புர்ஞ்சா சர்தான்.
அனானி,
டீஜண்டாவா அதைப்பத்திலாம் பேசணும்னா சில அடிப்படை தகுதிகள் இருக்கணுமே, எனக்கு இல்லை என்று வைத்துக்கொண்டாலும், உமக்கும் இல்லை சரியா!
மேலும் இப்படி இந்த பதிவுக்கு(இசைஞானி வேட்டிக்கட்டியது) சம்பந்தமே இல்லாத பின்னூட்டம் தொடர்ந்து போட்டால் அதை நான் நீக்க நேரிடும்!
எனவே உமது "அபி"மானத்தைக்காட்ட இடம் இதுவல்ல! :-))
நானும் படித்தேன் வவ்வால். எத்துணை முறை என்பதிவிற்கு வந்து சென்றிருக்கின்றீர், ஆனால் எனக்கு ஒரு முறையும் முதுகு சொறிந்து விட்டதில்லை. உங்கள் மீது மிகவும் கோகோவம். :) . மாமிகள் முதுகென்றால் சொறிவது சுகம் தானே. :) கலக்குங்கள். பதிவிற்கு எதிர்பதிவென்று இறங்காத நிதானம் முதிர்ச்சியை காட்டுகிறது. விட்டுத்தள்ளுங்கள். :)
இளையராஜா விடயம் இது வரை தெரியாதது.அரபிகள் ஏற்றத் தாழ்வுகள் பார்த்து வேட்டி சட்டையை ஒதுக்கியுள்ளனர்.தகவலுக்கு நன்றி.
Post a Comment