(ஹி..ஹி..முத்தம் ஒன்று கொடுத்தால் முத்தமிழ்னு யாரும் பாடாதிங்கோ)
நமது பல பதிவுகளிலும் தொழில்நுட்ப சொற்களை சிரத்தையுடன் தமிழாக்கம் செய்து பயன் படுத்தி வந்தாலும் ,பலரும் அதனை கருத்தில் கொள்ளாமல் மேலோட்டமாக படித்து செல்கிறார்கள் ,அப்படி சென்றாலும் பரவாயில்லை ஒரே மட்டையடியாக பொதுவாக தமிழில் அறிவியல் சொற்கள் இல்லை, மேலும் பல வடமொழிச்சொற்கள் தான் இருக்கு ,எனவே தமிழின் மொழி வளம் குறைவு என மட்டையடிக்கிறார்கள் , தமிழில் சுமார் ஏழு லட்சத்திற்கும் மேல் தனித்தமிழ் சொற்கள் உண்டு(வைரமுத்தே சொல்லிக்கீறார்), மேலும் இன்றைய உலகவழக்கிற்கு தேவையான அறிவியல் சொற்களையும் உருவாக்கிக்கொள்ளலாம், அதற்குத்தமிழில் இடம் உண்டு, தமிழ் ஒரு நெகிழ்வான மொழியாகும்.எனவே அவ்வப்போது தனித்தமிழ் சொற்களை பட்டியலிட்டு வரலாம் என நினைக்கிறேன்.
அல்லக்கை:
இது ஒரு தெள்ளுத்தமிழ் சொல்லாகும்.
அல்ல= இல்லை ,+கை ,அதாவது இல்லாத கை, ஒரு பெரும்புள்ளிக்கு அவரது வழக்கமான கரம் போக இல்லாத மூன்றாவது கரமாக செயல்ப்படும் ஒருவரை குறிப்பது.
வழக்கமாக ஒரு முக்கியமானவரின் நெருங்கியவரை இவரு அவரோட ரைட் ஹேண்ட் (right hand)என ஆங்கிலத்தில் சொல்வதுண்டல்லவா.
மேலும் அல்ல என்பதற்கு தீயவை என்றும் பொருள் உண்டு.
"அல்லவை நீக்கி நல்லவை நாட வேண்டும்"
பெரும்பாலும் அல்லக்கையாக இருக்கும் மனிதர் ,தலைவரு சொன்னாருன்னு ஏகப்பட்ட ஆட்டம் ஆடுவார்,பலருக்கும் கெடுதல் செய்வது வழக்கம்.
அல்லக்கை என்றால் தீயவர், இன்னொருக்கு அடிப்பொடி எனலாம்.
அதிகாரி:
இது வடமொழியாகும்,
அதி= கூடுதலாக , உயர்வாக,
காரி = செய்பவர் , காரியம் செயல்.
அதிகாரி என்றால் ஒரு செயலை செய்பவர், வேலை செய்பவர்.
இணையான தமிழ்ச்சொல் அலுவலர்.
ஆணி:
இதுவும் வடமொழியே, இரும்பு முளை என்று பொருள்.
ஆட்டோ ரிக்ஷா (auto riksha):
ஆங்கில,ஜப்பானிய கலவை சொல்.
ஆட்டோ= தானியங்கி
ரிக்ஷா =கையால் இழுப்பது.
எனவே தமிழில் அப்படியே மொழிப்பெயர்க்காமல்,
ஆட்டோ ரிக்ஷா =தானியங்கி மூவுருளி.
மூன்று சக்கரங்களை கொண்ட மோட்டார் வாகனம் எனப்பொருள்.
Bicycle:
இதற்கு தமிழில் மிதிவண்டி என்பார்கள், இன்னொருப்பெயரும் இருக்கிறது "ஈர் உருளி" இரண்டு சக்கரங்களை கொண்ட வண்டி.
கிரேன்(crane):
ஓந்தி= உயரத்தூக்குதல், உந்துதல் என்றால் முன்னால் தள்ளுதல் ,ஓந்துதல் என்றால் உயரத்தில் தள்ளுவது,தூக்குவது.
ஆகாயவிமானம்(aeroplane):
வடமொழி, இதற்கு தமிழில் வானூர்தி ,இல்லை எனில் பறக்கும் எந்திரம் என சொல்லலாம். ஏன் எனில் ரைட் சகோதரர்கள் முதலில் கண்டுப்பிடித்த போது "ஃப்ளையிங் மெஷின்" (Flying machine)என்று தான் பெயர் வைத்தார்கள்.
அத்தகைய வானுர்தியில் இரண்டு அடுக்கில் சமதளமான இறக்கைகள் இருக்கும் இதனால் அதனை "பை பிளேன்" (bi-plane)என்று அழைத்தார்கள், ஏர்-ஏரோ என்றால் காற்று எனவே ஏரோ பிளேன் ஆயிற்று.
ஹெலிகாப்டர்(helicopter);
இணையான தமிழ் சொல்:
உலங்கு வானூர்தி:
உலங்கு = சுழலுதல் , ஹெலிஹாப்டரில் மேல் உள்ள விசிறிகள் சுழன்று அதன் மூலம் பறப்பதால் உலங்கூர்தி.
முதலில் ஹெலிஹாப்டருக்கு "ஏர்ஸ்க்ரு" (airscrew)என்று பெயர் வைத்தார்கள், திருகாணிப்போல விசிறிகள் சுழல்வதால் ,பின்னர் ஹெலிகாப்டர் ஆயிற்று. ஹெலி (heli)என்றாலும் சுழலுவது தான்.
திசைகளும் காற்றும்:
கிழக்கு- கொண்டல் காற்று
மேற்கு: மாருதம்*
தெற்கு :தென்றல்
வடக்கு: வாடைக்காற்று.
*மாருதம் , இதில் இருந்து மாருதி வருகிறது அப்படியானால் வட மொழி என தோன்றலாம், ஆனால் தமிழிலிருந்தும் பல சொற்கள் வடமொழிக்கு சென்றுள்ளது, உதாரணமாக கூலி என்ற சொல், திருக்குறளிலும் உண்டு.
காளிதாசர் மேகதூத் என்ற காவியம் எழுதியுள்ளார், இதனை தமிழில் மேகதூது எனலாம், மேகம் வட மொழி என்றாலும், தூது வட மொழி என சொல்ல முடியாது ,தூது என்றே திருக்குறளில் ஒரு அதிகாரம் உள்ளது, மேலும் சங்க இலக்கியங்களில் தலைவி தலைவனுக்கு தூது விடுவதாக நிறையப்பாடல்கள் இருக்கிறது. எனவே தூது தமிழில் இருந்து வடமொழிக்கு சென்று இருக்கலாம்.
மேகம்;
தமிழ் சொற்கள்: கொண்டல் ,முகில்,மாரி, மஞ்சு ஆகியவை.
காக்கா:
இதுவும் வடமொழியே, கா என்றால் சமஸ்கிருதத்தில் யார், காக்கா கரையும் போது கா ..க்கா என ஒலிப்பது யார்..யார் என சமஸ்கிருதத்தில் கேட்பது போல இருப்பதால் காக்கா என பெயர் வைத்துவிட்டார்கள்.
தமிழ் இணைச்சொல்: முட்டம்
நாகர்கோவிலில் முட்டம் என்ற ஊர் உள்ளது.
ஶ்ரீமுஷ்ணம் என்ற ஊரினை தமிழில் திருமுட்டம் என்பார்கள், அவ்வூரில் ஒரு காக்கா மோட்சம் அடைந்தது என்பது தலபுராணம்.
மேலும் வேலூர் அருகே குரங்கணிமுட்டம் என ஊர் உள்ளது , குரங்கு ,அணில்,முட்டம்(காக்கா) ஆகியவை மோட்சம் அடைந்ததாக தலபுராணம், எனவே மூன்றின் பெயரை சேர்த்து ஊருக்கு குரங்கணிமுட்டம் என பெயர் வந்துள்ளது.
தொடரும்...
---------
பின் குறிப்பு:
#இங்கு சில சொற்களை நானே உருவாக்கியும் ,மேலும் முன்னர் படித்தவற்றின் நினைவில் இருந்தும், தமிழ் விக்ஷனரி, தமிழ் இணைய பல்கலை, அகரமுதலி ஆகியவற்றின் உதவியுடனும் தொகுத்துள்ளேன், பிழை இருப்பின் சுட்டிக்காட்டவும். நன்றி!
#இப்பதிவிற்கு கோவியாரின் "பந்தயம்" குறித்தான பதிவும் ஒரு தூண்டுகோல், வழக்கமான பந்தயம் என்ற சொல்லுக்கே ஆராயும் நிலையில் தமிழ் சொற்களை பொருளுணர்ந்து பயன்படுத்தும் நிலை அருகி வருவதாக தோன்றியதால் ,அவ்வப்போது தனித்தமிழ் சொற்களை தனியே பட்டியலிட்டால் என்ன என தோன்றியது.
---------
101 comments:
வணக்கம் சகோ,
நல்ல பதிவு.தமிழ் சொற்கள் தேவைக்கு ஏற்றப்டி ஏற்கெனெவே இருப்பின் அறிய வேன்டும்.இல்லை எனில் உருவாக்க வேண்டும்.
ஆங்கில கலப்பு என்பது தமிழ் பேச்சு,எழுத்தில் இருக்ககூடாது என்பதே முதன் நோக்கமாக இருக்க வேண்டும் என்பதே நம் கருத்து.
நாம் பயன்படுத்தும் சி(ப?!))ல சொற்கள் வடமொழி என்ப்படும் சமஸ்கிருதம்.இதை பிரித்து அறிதல் மிக கடினம்.
ஆகவே முதலில் பயன்படுத்தும் ஆங்கில சொற்களுக்கு தூய தமிழ் சொல் அல்லது வட மொழி[இல்லாத சூழலுக்கு மட்டுமே] பயன்படுத்தலாம் என்பது நம் கருத்து.
இதனை எழுதும் பதிவுகளில் கடைப்பிடிக்க்லாம்.முதலில் வடிவமைக்கும் சொற்களுக்கு ஆங்கிலம் அடைப்புக் குறியில்{ஹி ஹி] இட்டு விடலாம்.
ஒரு பதிவில் ஒரு சொல் கற்றாலே கொஞ்ச நாட்களில் ஆங்கில கலப்பின்றி அனைவரும் எழுத முடியும்.
உங்களின் முயற்சிக்கும் வாழ்த்துக்கள்,பாராட்டுக்கள்.
****************
டிஸ்கி: இதற்கும் பதிவிற்கும் தொடர்பு இல்லை.உங்களின் நோக்கு குறித்த விமர்சனம். ஏன் பல் இடங்களில் உங்கள்க்கு மாற்று கருத்து சகோக்களுடன் முரண் வருகிறது என்பதை நான் கண்டு பிடித்து விட்டேன்.
ஏன்? நீங்கள் அசின் இரசிகர்!!!!!!
நான் ஷகீலா இரசிகன்.!!!!!!!!!!!!!!!!!!
இதுக்கும் அதுக்கும் என்னய்யா தொடர்பு என்றால் பாருங்கள் .நான் பரந்த விரிந்த உலகளாவிய பன்முகப் பார்வை கொண்டு இருக்கிறேன்.
பாரிய பன்முகப் (மேக்ரோ) பார்வை!!
நீங்கள் குறிபிட்ட சிறிய ,குறிப்பிட்ட பிரச்சினையை கூர்ந்து நோக்கி சூழலுக்கு மட்டுமே சார்ந்து பார்க்கிறீர்கள்.
கூரிய ஒருமுக(மைக்ரோ) பார்வை!!!.
அசினுக்கும் ஷகீலாவுக்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்து கொண்டால் முரண்பாடுகள் தவிர்க்க்லாம்.
எப்புடீஈஈஈஈஈஈஈஈ!!!!!!!!!!!!!!!
நன்றி!!!
கலக்குங்க..
ஆர்குட் குழுமங்களில் பாலா பிள்ளை இப்படி ஒரு தமிழ் சொற்கள் உருவாக்குமரி இயக்கத்தை நடத்தும் முயற்சியில் இருந்தார்...
உங்கள் முயற்சி சிறக்க வாழ்த்துக்கள்...
வவ்வால்,
அறிவியல் சொற்களை தமிழில் பயன்படுத்தலாம். ஆனால் எளிமையாக,சொல்லைப் படித்து அதன் பயன் விளங்கும் படி இருக்க வேண்டும்.
வடமொழியினால் மற்ற திராவிடமொழிகள் பாதிக்கப்பட்ட அளவிற்கு தமிழ் பாதிக்கப்படவில்லை. ஆனாலும் நாம் தமிழை புறக்கணித்தே வருகிறோம்.
'வளவன் ஏறா வானூர்தி' என்று சங்க இலக்கியத்தில் உள்ளது.
"பகல்வெல்லுங் கூகையைக் காக்கை"
திருக்குறளில் சில இடங்களில் வருகிறது. காக்கை தமிழ்ச்சொல்.
//கா என்றால் சமஸ்கிருதத்தில் யார், காக்கா கரையும் போது கா ..க்கா என ஒலிப்பது யார்..யார் என சமஸ்கிருதத்தில் கேட்பது போல இருப்பதால் காக்கா என பெயர் //
கா கா என கத்துவதால் காக்கை என பெயர் வந்திருக்கும். யார் யார் என்பதெல்லாம் லாஜிக்காக இல்லை.
நல்ல முயற்சி பாஸ்.தொடர்க
நல்ல அருமையான விளக்கம் தமிழ் கற்றேன்...
காக்கா என்பதை காகம் காக்கை என்று தான் சொல்லவேண்டும். அது வடமொழியா என்பது சரியா என தெரியவில்லை. கா கா என கத்துவது காகம் :)
கார்மேகம் (மழை மேகம்) என்பது பழைய திரைப்படங்களில் அல்லது ஊரில் மாரியம்மன் திருவிழாவுக்கு போடும் நாடகங்களில் இடம் பிடிக்க கூடிய பெயர்.
மேகத்திற்கு மாரி என்ற பெயர் உண்டா என்பது ஐயமே. மாரின்னா மழை என்பது தானே பொருள்.
நல்ல முயற்சி. தேவையான செயலும்.
சார்வாகன் பேச்சை கேட்டு பரந்த விரிந்த உலகளாவிய பன்முகப் பார்வை வேணுமுன்னு நினைக்காதிங்க உங்களின் கூரிய ஒருமுக பார்வை தான் எங்களுக்கு பிடிச்சிருக்கு :))
இன்னும் கூட தொகுத்து இருந்து இருக்கலாம்...குறைவா முடிச்ச மாதிரி இருக்கு...
நிறைய வார்தைகள் இருக்கே..அப்புறம் மெட்ராஸ் ல பேசற நிறைய தமிழ் வார்த்தைகள் இன்னும் புரியாம இருக்கு...அதையும் சொல்லி இருக்கலாம்
அப்புறம் என் பக்கம் வந்துட்டு போய் இருக்கீங்க...நானும் பிரபலம் ஆகிட்டேன்...ஹி ஹி ஹி...
பார்வைக்கே சொந்தக்காரன் நான் தான்!இதுல பன்முகப் பார்வை,ஒரு முகப் பார்வைன்னு கூட்டணி வேறயா?
சரி!என்னய்யா எப்ப பார்த்தாலும் சம்பந்தமேயில்லாம கூவுறன்னு நீங்க கூவினாலும் மெய்யாலுமே உங்க ஆடு,மொளகாய் பொடிக்கெல்லாம் இப்பத்தான் நான் பொழிப்புரையே கண்டு பிடித்தேன்:)
கோனார் நோட்ஸ் போடறது சரி!ஆனா ஆங்கிலத்தை அப்படியே முக்கி எடுத்து பஜ்ஜி போடுறீங்கன்னு உங்க மேல் ஒரு குற்றச்சாட்டு இருக்குறதே!அதுக்கு என்ன சொல்றீங்க?
செத்தது தமிழ் என்று டைட்டிலை மாற்றுங்கள் .
ஹிட்ஸ் நிறைய கிடைக்கும் அதனால சொன்னேன் ....................
நல்ல விளக்கம் ...வேளங்கிரிச்சி....................
யோவ் நகைசுவைக்குதான் சொன்னேன் . வரிந்து கட்டி சண்டையை ஆரம்பிசிராதீங்க ...........
வணக்கம் சகோ.
தமிழ் ஆர்வமுள்ளவர்களுக்கு சிறந்த பதிவு அனைத்து அரியாச் சொற்களுக்கும் ஓர் அட்டவணைப்படுத்தி பதிவிடலாமே.
நன்றி!!!
இனியவன்...
சகோ.சார்வாகன்,
வாங்க,நன்றி!
ஆமாம்,அதே தான், அதனால் தான் தமிழில் உள்ள தொழில்நுட்ப சொற்களை கூடுமானவரையில் பயன்ப்படுத்துவேன் மேலும் பேச்சு வழக்கும் கலந்து கொள்வது அப்போது தான் இயல்பாக இருக்கும் என,கட்டாயமாக தமிழோ,கலப்போ என வைத்துக்கொள்வதில்லை.
நீரிழிவு நோய் என எழுதினால் என்னது என கேட்கிறார்கள். :-))
அடைப்புக்குறி போட உங்க அளவுக்கு நமக்கு வராது :-))
உங்க டிஸ்கி,முடியலை அவ்வ் :-))
ஷகிலாவை பார்க்க பரந்தப்பார்வை தேவை தான் :-))
--------------
மாயன்,
வாங்க,நன்றி!
வழக்கமாக கட்டுரையில் அதிகம் மக்கள் பயன்படுத்தாத தமிழ் சொற்களை புழக்கத்தில் இருக்கவேண்டும் என எழுதுவது,அப்புறம் நாம் ஒன்றும் தமிழறிஞர் இல்லையே என அதிகம் மெனக்கெடுவது இல்லை, ஆனால் மற்றவர்கள் எழுதுவதைப்பார்க்கும் போது அட நம்ம தமிழ் அறிவுக்கு ஒன்றும் குறையில்லை, இன்னும் கொஞ்சம் முயன்றால் நல்லாவே தமிழ் வரும் போல என நினைத்துக்கொள்வேன் :-))
தமிழில் நிறைய சொற்கள் இருப்பதை அறிந்துக்கொள்ள மக்கள் முயலாமல்,இல்லைனு அதனால் ஆங்கிலம் என்பதால், சரி நாம கொஞ்சம் முயற்சிக்கலாம்னு தான் இப்பதிவு, உங்களைப்போன்றவர்கள் அதாரவு இருக்கையில் தொடர வேண்டியது தான்.
---------
குட்டிபிசாசு,
வாங்க,நன்றி!
தமிழ் அதிகம் கலாப்பாகிப்பாதிக்கப்படவில்லை,ஆனால் மக்கள் பயன்ப்படுத்துவதில்லை.முன்னர் எல்லாம் பேசினால் நூற்றுக்கு 10 ஆங்கிலவார்த்தைக்கலப்பு இருக்கும்,இப்போ 10 தமிழ் சொல் இருந்தாலே அதிசயம் தான் :-))
வானூர்தி சங்க இலக்கியத்திலும் இருக்கா , உதாரணத்துக்கு நன்றி!
காக்காவிற்கு குறலிலும் இடம் இருக்கா, காக்கை பாடினியார் என ஒரு பெண்ப்புலவர் கூட இருந்தார், தமிழாகவும் இருக்கலாம்.
இங்கே லாஜிக் படி சொல்லவில்லை, காக்கா என்ற சொல்லை சமஸ்கிருத அகராதியில் போட்டு இப்படி விளக்கி இருக்கார்கள்.
எனவே தமிழில் இருந்து வடக்கே போயிருக்கலாம்,அல்லது அங்கிருந்து வந்திருக்கலாம்.
--------------
முரளி,
வாங்க,நன்றி!
---------
மனசாட்சி,
வாங்க,நன்றி!
சேர்ந்து கற்போம்!
---------
குறும்பன்,
வாங்க,நன்றி!
காகம்,காக்கா என்பது வடமொழியா,தமிழா என அறுதியிட்டு கூறமுடியா நிலையே, ஆனால் முட்டம் என காக்காவிற்கு இணைச்சொல் இருக்கு அதையும் புழக்கத்தில் விடலாம் அல்லவா.
மாரி என்பது மழை, மேகம் என இரண்டுக்கும் பொருந்தும், கிராமத்தில வெக்கையான காலங்களில் ஒரு மழைமாரியில்லை என பேச்சுவாக்கில் சொல்வார்கள், கிராமத்தினர் பேசுவது நல்ல தமிழாக இருக்கும்,ஆனால் பார்த்தால் கொச்சையான வழக்கு சொல்ப்போல் கொஞ்சம் சிதைவுற்று இருக்கும்.
ஹி..ஹி பரந்தமனசு வேண்டாம்னு சொல்லுறிங்க,குறுகிய பார்வை பரந்த நோக்கில் செலுத்துவோமே :-))
-----------
கோவை"ஜீவா"
வாங்க,நன்றி!
அதான் தொடரும் போட்டிருக்கேனே, ஒரு பத்து ,பத்து சொற்களாக போடலாம்னு இருக்கேன், ஒரே பதிவில் 100 போட்டாலும் மக்கள் படிக்க மாட்டர்கள், அனைத்தும் எனக்கு தெரிந்தவரையில் தொகுத்து இடுகிறேன்.
ஆஹா ஒரு பிரபலமே இப்படி சொல்லுறாரே :-))நான் முகமூடி யாருக்கு தெரியும், உங்கப்பதிவுகளும் படிச்சுக்கிட்டு தான் இருக்கேன், புக் மார்க் மூலம்ம் வருவதால் இடைவெளிவிட்டு வருவேன் . விகடனில் வலையோசையில் வந்தப்போது கூட கமெண்ட் போட்டேனே.
---------
ராச நடராசர்,
பார்வைக்கே சொந்தக்காரர் 99 ஆண்டுக்கு குத்தகை எடுத்து இருக்கார் :-))
இப்பவும் புரியலை எப்படி எங்கே,யார் ஆடு,மொளகாப்பொடிக்கு பொழிப்புரை கொடுத்தாங்க?
அந்த பட்ஜி சுடுற வேலையை வேற யாராவது செய்தால் நான் ஏன் பஜ்ஜி சுடப்போறேன், பிரியாணி கிண்ட போயிடமாட்டேன்,தானும் படுக்கமாட்டாங்க தள்ளியும் படுக்கமாட்டேன்னு சொன்னா எப்பூடி?
-------------
அஞ்சா ஸிங்கம்,
செத்ததும் ,மெரினா பீச்சில் சமாதிக்கட்டி சிலை வச்சிடலாம் ஆனால் அஞ்சா ஸிங்கம் சாக விட்ருவாரா என்ன ... உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு போராடி வாழவைப்பார்ன்னு தமிழ் கூறும் நல்லுலகமே காத்திருக்கிறதய்யா :-))
ஹி...ஹி நான் எங்கேப்பா சண்டை போடுறேன் ..சொல்வதை அழுத்தமா சொல்கிறேன், எல்லாம் கருத்து ரீதியான பேச்சுகளே ...நோ சண்டை.
ச்சியர்ஸ்!
---------
இனியவன்,
வாங்க,நன்றி!
நீங்க சொன்னது போல தொகுக்கும் முயற்சியில் இது ஒரு ஆரம்பமே, ஒரே இரவில் செய்ய முடியுமா என்ன? சிறிது சிறிதாக தான் செய்யவியலும்.
----------------
///ஸ்ரீமுஷ்ணம் என்ற ஊரினை தமிழில் திருமுட்டம் என்பார்கள் ///
அப்ப முட்டம் என்பதும் வடமொழிதானே! அதற்குக் காக்காயே தேவலையே!
சரவணன்
ச்ரவணன்,
தமிழில் முட்டம்னு போட்டு இருக்காங்க அதையே நானும் சொல்கிறேன், முட்டம் வட மொழியா என சரியாகப்பார்த்து சொல்லவும்.
அதானே!அமெரிக்கா பங்காளிகிட்ட தனியா நின்னு நான் சண்டை போட்டதைப் பார்த்தாதானே பொழிப்புரைக்கு பொருள் புரியும்!
நல்லவேளை வவ்வாலுக்கு வக்கீலா என்ற அடைமொழியோடு தப்பித்தேன்:)
நான் ஜின் போட்டுகிட்டிருக்கிறேன்.அப்புறமா வாரேன்.
ராசா,
//அதானே!அமெரிக்கா பங்காளிகிட்ட தனியா நின்னு நான் சண்டை போட்டதைப் பார்த்தாதானே பொழிப்புரைக்கு பொருள் புரியும்!
//
ஆரம்பிச்சதே அந்த பங்காளித்தான்னு தெரியாம இத்தனை நாளா நான் கரடுமுரடுன்னு சொல்லிக்கிட்டு இருந்தீர், நீர் போட்ட சிலம்பமும் பார்த்தேன், ஆனால் நான் அவரை எல்லாம் கண்டுக்கிறது இல்லை என்பதால் எதுவும் சொல்வதே இல்லை.
இப்போ இந்த நியாத்தினையும் கேட்பது, என்னை யாராவது திட்டினால் அங்கே வாலண்டியரா வந்து ...அவனை அடி ,கொல்லு என கும்பலில் கோவிந்தாப்போட்டார் ,அவர்களே இவரையும் கலாய்க்கவே இப்போ இவரு அய்யோ நான் நல்லவன் என்னை அனானிகுருப்பு அடிக்குதுன்னு பொலம்பி பதிவ போட்டு இருக்கார் :-))
இதில உச்சப்பட்ச காமெடி என்ன தெரியுமா ,நேத்து வவ்வால் இன்னிக்கு நானானு நியாயம் கேட்கிறார் ,நேத்து வவ்வாலை வம்புக்கு இழுக்கும் போது கூட போய் நின்னத மறந்துட்டார் :-))
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்னு சொல்வது சரி தான் போல :-))
ஆனால் உங்களை போன்றவர்கள் என்ன நடக்குது என தெரிந்தாலும் வாய்க்கு வந்தப்படி நடுநிலைப்போர்வையில் இளிச்சவாயன் ,முகமூடி வவ்வாலை தான் குறை சொல்வீங்க.
உங்க பின்னூட்டத்தில் இருக்கும் அந்த சார்பு தன்மையும் நான் அறிவேன் , ஆனால் எனக்கு யாருடைய ஆதரவும் தேவை இல்லை.
நீங்க புரிந்துக்கொள்ளும் காலத்தில் பேசும் வேதவியாக்கியானங்கள் எனக்கு முன்னரே புரிந்துவிடுவதால் அவ்வளவாக கவலைப்படுவதில்லை.
அய்யா மக்களே! எனக்கு வந்த நிலைமையப் பார்த்தீங்களா?வவ்வாலுகிட்டயேயும் அடி.பங்காளிகிட்டேயும் கடி.
மறுபடியும் சொல்றேன்!பலாப்பழம் மாதிரி நீங்க கரடு முரடான பின்னூட்டங்கள் போடுவதில் அர்த்தமிருக்கிறது.ஆனால் அந்த அர்த்ததைப் புரிந்து கொள்ளுவதற்கு தடையாக முட்கள் இருக்கின்றன என்பதைத்தான் சொல்கிறேன்.அதனால்தான் சர்ச்சைகளும் கிளம்புகின்றன என்பதை சக பின்னூட்டக்காரர்களும் சொல்கிறார்கள்.
எடக்கு மடக்குகளை நீங்க ஒருத்தராகத்தானே சமாளிச்சீங்க.அதனால் என்னுடைய ஆதரவு தேவையில்லையென்பதையும் அறிவேன்.
வருண் எந்த மனநிலையிலிருந்து பதிவு போட்டாரோ!ஆனாலும் அவரது பதிவின் கருத்துக்கள் சரியானதே.இப்படித்தான் பதிவின் அடிப்படையிலேயே கருத்து சொல்கிறேன் என்று சொல்லி பெரிய நீதிபதி...யென்று அவரிடம் வாங்கியும் கட்டிக்கொண்டேன்:)
ராசநடராசர்,
சும்மா யாராவது கரடுமுரடா சொல்வாங்களா?
மேலும் ஒரு பொதுப்புத்தியில் கரடுமுரடு என்கிறீர்கள், மதவாதிகள், மற்றும் ஆங்கிலத்தில் fuck, asshole, etc என்றால் நல்ல வாழ்த்து என்பது போல பேசுபவர்களிடம் மட்டும் தான் அப்படி பேசி இருக்கேன். மற்றவர்களிடம் எங்கே அப்படி பேசினேன்?
கலாய்க்கிறாப்போல வேண்டுமானால் இருக்கும், பூனைக்கண்னை மூடிக்கிச்சாம்னு சொன்னால் கூட கோவப்பட்டால் என்ன சொல்வது.
unparliamentary words வெகு குறைவாக அல்லது இருக்காதே, ஆனால் அப்படி ஒருத்தோற்றம் மற்றவர்களாக உருவகப்படுத்திக்கொள்வதற்கு நான் செய்யவேன் paranoids தான் அப்படி நினைப்பாங்க.
//ஆனாலும் அவரது பதிவின் கருத்துக்கள் சரியானதே.இப்படித்தான் பதிவின் அடிப்படையிலேயே கருத்து சொல்கிறேன் என்று சொல்லி பெரிய நீதிபதி...யென்று அவரிடம் வாங்கியும் கட்டிக்கொண்டேன்:)//
அவர் பதிவின் கருத்துக்கள் சரியே, ஆனால் எப்போ என ஒரு கேள்வி இருக்கு?
எடக்கு மடக்கு வெளிப்படையாக பதிவுப்போட்டு தாக்குவது தெரிந்தே அங்கே வந்து ,வவ்வாலை ஒழிக்கணும் என்பது போல பேசியது எப்படி? அப்புறம் நான் கரடு முரடா பேசாம தடவியாக்குடுக்க முடியும். அதற்கும் முன்பும் அதே நிலை தான்.
இப்போ அதே எடக்கு மடக்கு அவரையும் தாக்கும் போது தான் இது மாஃபியானு உணர்வு வருதா?
எனவே அடுத்தவர் சண்டையில் குளிர் காய்ந்தால் சமயங்களில் அந்த நெருப்பு சுட்டுவிடும் :-))
இப்ப நடப்பது கட்டப்பஞ்சாயத்து வகைனு எனக்கு தெரிந்தாலும் நான் எதுவும் சொல்லாமல் வாயத்தான் மூடிக்கிட்டு இருக்கணும் ,வேற வழி.
என்னைப்பொறுத்த வரைக்கும் கருத்தினை அவங்கப்பதிவில் தான் சொல்கிறேன் ,எப்போ என் கருத்து வெளியாகவில்லையோ அப்போ வேண்டுமானால் பதிவாக்குவேன் , நேராத்தானே போய் பேசுகிறேன் , சரி தப்பு சொல்லிட்டு போகலாம்.
ரச நடராசர்,
ஊரு ரெண்டுப்பட்டால் கொண்டாட்டம் எனவும் ஒரு இடத்தில் சொன்னீர்கள், ஆனால் என்ன நடக்கிறது என அப்படி சொன்னீர்கள், கரடுமுரடு என்றால் இதெல்லாம் என்ன வகை?
உண்மையில் வேடிக்கைப்பார்த்து கைத்தட்டிக்கொண்டு இருப்பது உங்களைப்போன்றவர்கள்,ஆனால் பேசுவது இப்படி :-))
வவ்ஜி!வேடிக்கை பார்க்கிறேன் எனபது என்னமோ உண்மைதான்.ஆனா கைதட்டுகிறேன் என்பதெல்லாம் ரொம்ப ஓவர்!அதுக்குத்தான் நாட்டாமை பார்க்கிறேன்னு வாங்கி கட்டிக்கிறேனே அது போதாதா?
நீங்க இப்படியே என் மேல் கடுப்பானீங்கன்னா இரண்டு பேரும் பேசி வச்சிகிட்டுத்தான் நாடகம் போடுறாங்கன்னு இணைய புத்திசாலிகள் யாராவது நினைச்சிடப்போறாங்க:)
யப்பே!நான் வவ்வாலுக்கு வக்கீல் அல்ல ன்னு இப்பவாவது நம்புங்கப்பா!
வவ்ஜி!என்னோட பங்காளி உங்க கிட்ட விவாதம் செய்யனுமின்னுதான் வந்தார்.நீங்க ஒரு சிலேடை சொல்ல அதுக்கு அவர் ஒண்ணு சொல்ல இப்படியே இரண்டு பேருக்கும் முத்திப் போச்சு.கடும் வார்த்தை துவங்கினா அதற்கு மேல் விவாதத்தை நீட்டக்கூடாது.ஒருவர் முறுக்க இன்னொருவர் முறுக்க விட்டேனா பார் என unparliamentary யா மாறிப்போகுது.
இப்போதைய மாற்றத்தை எப்படி கையாளலாம் என நான் சொன்னால் மறுபடியும் சொம்பைத் தூக்குகிறேன்னு பேர் வரும்.சொல்லாமல் விட்டாலும் கைதட்டி வேடிக்கை பார்க்கிறேன்னு பேர் வரும்.
ஓ!மை லார்ட்!நான் என்ன செய்வேன்:)
ராஜ்,
//வவ்ஜி!என்னோட பங்காளி உங்க கிட்ட விவாதம் செய்யனுமின்னுதான் வந்தார்//
இதுக்கு மேல் நீங்க எதுவுமே பேச வேண்டாம் ,அங்கே நடந்தது,அவர் என்னப்பேசினார் எனக்கூட புரியாமல் விவாதம் செய்ய வந்தார்னு சொல்லுறிங்களே ஒரு கடுகு அளவுக்கு கூட காமெண் சென்ஸ் இருக்காதா உங்களுக்கு?
இப்போ அவரைப்பற்றி அவங்க பதிவுக்கூட போடவில்லை ஆனால் இத்தனை கோவம் காட்டுகிறார்,ஆனால் என்னைப்பற்றிப்பதிவுப்போட்டு என்ன எல்லாமோ கதையும் விடும் போது என்னோடு என்ன விவாதம் அங்கே வேண்டிக்கிடக்கு> இல்லை விவாதம் செய்வது போல என்ன ஆரம்பித்தார், யாரோ நாளுபேரு இவனை அடிக்கிறாங்க கிடைக்கிற கேப்பில் நாமும் அடிப்போம்னு வந்து பேசினார், அது உங்களுக்கு விவாதம் நல்லா இருக்கு உங்க கதை?
இப்போ கூட நான் அங்கே பேசும் போது என்னையா பாலிடிக்ஸ் செய்றிங்கனு சொல்லிவிட்டே ஆரம்பித்தேன், ஏன் எனில் நடப்பது என்ன என எனக்கு புரிகிறது.
நீங்க எல்லாம் என்ன அயல்நாட்டு டீ.வீல உலக அரசியலைப்பார்த்து புரிஞ்சுக்கிட்டிங்களோ, உலக விவரம் எல்லாம் பேச வேண்டியது :-))
இனிமேலும் உங்களுக்கு எதுவும் புரியப்போறதில்லை, குத்து மதிப்பா ஒரு பின்னூட்டம் போட்டுக்கோங்க :-))
எந்த அளவுக்கு அவர் அங்கே விவாதம் செய்ய வந்தார்னு அங்கே போய் பார்த்தாலே தெரியும்,
//என்ன வவ்வாலு பதிவுலகமே உங்களுக்கு எதிரா திரும்பிடுச்சு!! :(//
நாகரீகமாக ஆரம்பிக்கும் போதே இப்படி சொல்லி அவங்களுக்கு ஜால்ரா போட்டிருந்தார், அதாவது எடக்கு மடக்கு பதிவு போட்டதில் அவருக்கு ஏற்பட்ட எண்ணம் இது :-))
அதை அவர் விவாதம் செய்யத்தான் வந்தார்னு எனக்கு வந்து சொல்லுங்க :-))
மனவளர்ச்சி இல்லாவங்க கூட அங்கே அவர் வந்த நோக்கம் என்ன என சொல்வாங்க, போங்கய்யா நீங்களும் உங்க நடுநிலையும் !
சகோ வவ்வால்,
நம்ம(ஹி ஹி நமக்கும்தான்) பங்காளி கிட்ட விவாதிப்பதோ ,அல்லது அவரின் பதிவு,பின்னூட்டங்களை பற்றி விவாதிப்பது நேர விரயம்.
//மனவளர்ச்சி இல்லாவங்க கூட அங்கே அவர் வந்த நோக்கம் என்ன என சொல்வாங்க, போங்கய்யா நீங்களும் உங்க நடுநிலையும் !//
நமக்கு பதிவுலகில் நிறைய வேலை இருக்கிறது!!!!!!!!!!.
நன்றி
சகோ.சார்வாகன்,
வான்ங்க, அதே தான் , ஒரு பதிவு போடவே எனக்கு ஒரு வாரம் ஆகுது சும்மா , வந்து சொரிஞ்சுக்கிடே இருந்தா எப்படி.
எனக்கு பின்னூட்டம் போட எளிதாக வருது, ரொம்ப எல்லாம் யோசிக்காம நினைவில் இருந்து அப்படியே சொல்லிடலாம்,தப்பாச்சுன்னா ஹி...ஹி னு சொல்லிட்டு சரிப்பார்ப்பேன். ஆனால் பதிவு போட எல்லாம் சரிப்பார்த்தே செய்வேன் ,அதுக்கே நேரம் இல்லை, சொந்த வேலைகள் என பலவும் ஓடுது, எதைனு கவனிக்க.
ராச நடராசர் நடுநிலை என்றப்பெயரில் இன்னமும் எப்படி பேசுறார்ப்பாருங்க.ஒருக்கூட்டம் பேரப்போட்டு பதிவு எழுதி திட்டிக்கிட்டு இருக்கும் போது ஜால்ரா அடிச்சது எல்லாருக்கும் தெரியுது இவருக்கு மட்டும் அவர் நல்லவிதமாக கருத்து சொல்ல வந்தாரம் :-))
இனிமேல் நாமளும் கமெண்ட் மாடரேஷன் வச்சு பிராபல்யப்பதிவராக ஆகிடனும் போல :-))
வவ்ஜி!உங்ககிட்ட மறுபடியும் தர்க்கம் செஞ்சா இன்னும் விவாதம் நீண்டுகிட்டுப் போய் விடுவதோடு நான் வருணுக்கு வக்கீலாகி விட்டேன்னு சொல்வீங்க.நீங்க நாலடி பாஞ்சா வருண் எட்டடி பாய்கிறார் என்று அவரிடமே சொல்லியிருக்கிறேன்.
A provocation argument becomes another provocation answer.அதுதான் உங்களுக்கிடையில் நிகழ்ந்தது.
விட்டுருவோம்.
என்னது!பிராபல்ய பதிவரா பின்னூட்டத்தை மூடி வச்சிகிட்டு வேணுமின்னா திறந்து விடப் போறீங்களா:) எலிகள் மட்டுமே எட்டிப்பார்த்து விட்டு வங்குக்குள் போய் ஒளிந்து கொள்ளூம்.என்னோட சத்தத்துக்கே கதவைப் பூட்டி வைச்சிக்கிறாங்கன்னா என்னத்த சொல்ல?
ராச நடராசர்,
நான் நான்கடிப்பாய காரணமாக இருப்பது யார்ன்னு உங்களுக்கு கண்ணுக்கு தெரியாத போது பேசுவது வீண் என்பதை தான் முன்னர் இருந்தே சொல்லிக்கிட்டு வரேன்,
மேலும் இன்னமும் அங்கே என்ன நடந்தது இவருக்கு அங்கே என்ன வேலை ,அப்படியே வந்திருந்தாலும் பொதுவா வேடிக்கை தானே பார்க்கணும் என்பது கூட புரியவில்லை
//A provocation argument becomes another provocation answer.//
என பிதற்றிக்கொண்டு :-))
ஆவேசமாகவோ, அல்லது அழுத்தமாகவோ பேசுவதனை கூட கேட்டுக்கலாம் ஆனால் மொன்னையாக பேசுவதை கேட்டுக்கொண்டிருக்க பொறுமை இல்லையே என்ன செய்ய்யவேஏஏன்ன்ன்!!
சரிவிடுங்க சார்வாகனுக்கு புரியுது உங்களுக்கு புரியலைனா அப்புறமும் பேச ஒன்றும் இல்லை,வழக்கம் போல பொத்தாம் பொதுவாக எதாவது சொல்லுங்க கேட்டுக்கிட்டு இருப்போம் :-))!
car-மகிழூந்து
ice cream-குளிர்களி
வவ்வால்,
எடக்கு மடக்கு தளத்தில் வருணுடைய பின்னூட்டங்கள் இன்னும் உள்ளன. தமிழ் படிக்கத் தெரிந்தவர்கள் பார்த்தால், கட்டாயம் வருணுடைய நோக்கம் என்னவென்பது புரியும். நடுநிலைவியாதி இருந்தால் இப்படித்தான் எதாவது சொல்வார்கள். கண்டு கொள்ளாதீர்கள்.
இன்னொரு காமெடி என்னவென்றால், நீங்கள் வருணை ஒருமுறை தான் திட்டினீர். அதனை வருண் பல தடவை காப்பி & பேஸ்ட் பண்ணிக் கொண்டிருந்தார். :))
பி.கு:
இங்கே Fuck, bastard என்பவை கெட்ட வார்த்தை அல்ல. அதையே தமிழில் சொன்னால் பொத்துக்கொள்ளும். :))
தமிழில் எல்லாவற்றையும் எழுதிவிட்டு கடைசியாக ஒரு மொக்கை ஆங்கில பிட்டு போடும் பதிவர்களை என்ன செய்யலாம்.
//வவ்வால் said...
மனவளர்ச்சி இல்லாவர் என்பது உண்மை தான் அதுக்காக அவரையெல்லாம் தமிழ்மணத்தில் பதிவு விட அனுமதிக்கணுமா//
மனவளர்ச்சியே இல்லாத ஒரு மென்டலை தமிழ்மணத்தில் பதிவு எழுத அனுமதிப்பது தமிழ் சமூகத்திற்கு செய்யும் பெரிய பெருங்கேடு. உடனடியாக தடை விதிக்கணும்.
//குட்டிபிசாசு said...
இங்கே Fuck, bastard என்பவை கெட்ட வார்த்தை அல்ல. அதையே தமிழில் சொன்னால் பொத்துக்கொள்ளும். :))
தமிழில் எல்லாவற்றையும் எழுதிவிட்டு கடைசியாக ஒரு மொக்கை ஆங்கில பிட்டு போடும் பதிவர்களை என்ன செய்யலாம்//
ஆங்கிலத்தில் இரண்டு வார்த்தை கிறுக்கினால் அதை பெரிதாக நினைக்கும் எங்களில் சிலர் மன நிலை மாறும் வரை அமெரிக்காவில் உள்ள தமிழ் மென்டல் வருண் எங்கள் காதில் நிறைய பூ வைப்பார்.
@ வௌவால்
இப்பதான் அந்த லூஸ் கமெண்ட்ஸ் பார்த்தோம்.விடுங்க மீண்டும் நம்மகிட்ட மாட்டாமயா போய்டும் மெண்டல்.
என்ன ஒண்ணு மிக்ஸ்டு கலாச்சாரம் என்பதால் நம்ம பின்னாடி
இரும்பு தடுப்பு வச்சிக்கிட்டு போகணும்.
அதுதான் அவங்க பழக்கம்.
டோன்ட் வோரி.பி ஹாப்பி.
வேணும்னா நாங்க எதுவுமே போடாம உங்க ரெண்டு பேர் பேரை மட்டும் போட்டு பதிவு போடுறோம்.அவனை வர சொல்லுங்க.நீங்களும் வாங்க.
கமெண்ட்ஸ் மாடுரேசன் இருக்காது.முடிஞ்ச அளவுக்கு ரத்தம் குடிச்சிக்க.
நன்றி.மீண்டும் அடுத்த அடில சந்திப்போம்.
ஆட்டோ ரிக்ஷாவுக்கு தானி என்ற தமிழ் சொல் இருக்கின்றது !!!
விமானத்துக்கு சரியான தமிழ்ச் சொல் வானூர்தி தான் !
ஹெலிகாப்டர் = உலங்கு வானூர்தி ( விடுதலைப் புலிகளுக்கு நன்றிகள் ! அவர்கள் தான் இச்சொல்லை பிரபலம் ஆக்கினார்கள் )
திசைகள் - காற்று : தென்மேற்கு பருவக் காற்று என ஒருப்பாட்டில் கேட்டதுண்டு !!!
காக்கா - காகம் / காக்கை என்பது தமிழ் சொல் என்று நினைக்கின்றேன். ஏனெனில் திராவிட மொழிகள் அனைத்திலும் காகம் என்ற வேர்ச் சொல் உடைய சொற்கள் இடம்பெற்றுள்ளன ! அவற்றை வடமொழி என்று முடிவுக்கு வந்துவிட முடியாது .. மணியன் எழுதிய திராவிட மொழிகளின் ஒப்பீட்டு இலக்கணத்தில் காகம் என்ற சொல்லும் அதற்கிணையான பிற திராவிட மொழிச் சொற்களும் ஒன்று போலவே இருப்பதைப் படித்த நியாபகம் !
வருண் பதிவில் நானிட்ட கருத்துக்களை எல்லாம் நீக்கிவிட்டார் ! வருணுக்கு எதோ ஒரு மன நோயின் அறிகுறி தென்படுகின்றது ! அவர் நல்ல டாக்டராகப் பார்த்து சிகிச்சை எடுத்துக் கொண்டால் நல்லது !
இல்லை என்றால் The man on the Ledge போல ஆகிவிடுவாரோ என்ற அச்சம் எனக்கு ஏற்பட்டுள்ளது !!!
F word-யினை தமிழில் மட்டுமல்ல ஆங்கிலம் பேசும் உலகிலும் வலைப்பதிவுகளில் பெரும்பாலும் பயன்படுத்துவதில்லை. வெறும் வட அமெரிக்கர்கள் மட்டும் படிக்கும் பதிவுகள் என்றால் பிரச்சனை இல்லை. ஏனெனில் செமக் கடுப்பு என்ற சொல்லுக்கு இணையாக I am Fxxxed என்று சொல்வது இங்கு வழக்கம் !
ஆனால் அதே சொல்லை ஐரோப்பாவிலோ, ஆஸ்திரேலியாவிலோ சொன்னால் வேறு அர்த்தமாகிவிடக் கூடும் .. தமிழில் எழுதும் நாம் ஆங்கில வட்டார வழக்குகளை பொதுச் சபையில் கொண்டு வருவது நாகரிகம் இல்லை !!!
குறிப்பாக சென்னையில் செம காண்டாக இருக்கின்றது என சொல்வோம் ! ஆனால் காண்டு என்ற வார்த்தை வடநாட்டில் படுமோசமான கெட்ட வார்த்தையாக இருக்கின்றது !!! அதே காண்டு என்ற சொல் பிற பகுதிகளில் இருக்கும் தமிழர்களுக்கு புரியாது என்பதால் பதிவுலகில் பொதுத் தமிழில் மட்டும் எழுதுவது சிறந்தது !!!
வட்டார வழக்குக்களை நல்லதோ கெட்டதோ பயன்படுத்துதலைக் குறைத்துக் கொள்ளலாம் !
வருண் உண்மையில் அமெரிக்காவில் இருக்கின்றாரா என டவுட் ஏனெனில் Bastard என்ற வார்த்தை இங்கு பெரும்பாலும் பயன்படுத்துவதில்லை. அது பிரித்தானிய ஆங்கிலம் ! Son of Bxxxx என்று தான் கூறக் கேட்டுள்ளேன் ! ஒரு வேளை எனது ஆங்கில அறிவு கம்மியோ என்னவோ. நானறிந்த வட அமெரிக்க ஆங்கிலம் அவ்வளவு தானுங்கோ !!!
கமல பாலன்,
வாங்க,நன்றி!
இன்னும் நிறைய சொற்கள் இருக்கு, படிப்படியாகவே பட்டியலிடனும் ,கார் எல்லாருக்கும் தெரியும் என்பதால் போடவில்லை ஆனால்ல் பட்டியலா தொகுக்கும் போது சேர்க்க வேண்டும் என்ன்றே நினைக்கிறேன்.
ஐஸ்கிரீம் என்பதற்கு அப்படி ஒரு பெயர் இருக்கா, பனிக்கூழ் என ஒரு சொல் இருக்கு. ஏன் என்னில் ஐஸ் கிரீம் என்பது காற்றுக்கூழ்மம், (colloid)ஆம் ஐஸ்கிரிமில் பாதி காற்று தான் இருக்கு.
அடுத்த பட்டியலில் இன்னும் கொஞ்சம் பார்க்கலாம்.
---------
குட்டிப்பிசாசு,
வாங்க,நன்றி!
அதே தான், சிலர் எல்லாருக்கும் நல்லவராக இருக்கணும் என நினைத்து பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.
ஆங்கிலத்தில் திட்டினால் அது ஆங்கிலகலாச்சாரம் ,படிச்சவங்க பாஷை,இனிக்கும், தமிழில் திட்டலாமோ ,காட்டுமிராண்டி பாஷை ஆச்சே அதான் பொத்துக்கிது :-))
ஹி...ஹி அவருக்கு அதே வேலை தான், வாரத்துக்கு ஒருப்பதிவாவது அடுத்தவரை திட்டிப்போடவில்லை எனில் தூக்கம் வராது, இப்போது எதுவும் நடக்கும் முன்னரே அவரை யாரோ தாக்கப்போவது போல பினாத்துகிறார், பேரனாய்ட் ஆகிவிட்டார் என நினைக்கிறேன்.
ஹி...ஹி நீங்க சொல்றவரு ரொம்ப பிராபல்யம் , பிட்டு படம் போட்டாலும் மக்கள் கலைச்சேவைனு சொல்வாங்க :-))
-------------
வேகநரி,
வாரும்,நன்றி!
அதே தான் ஆனால் என்ன மக்களுக்கு பொழுப்போக்கு என படிக்கிறார்கள் போல , பதிவுலகில் சிலர் இருக்காங்க அவங்களை திட்டினால் தான் இது எல்லாம் தப்புன்னு கூட்டமாக சொல்வாங்க,நம்மளை போல சாமானியன்னை திட்டினால் இதெல்லாம் சகஜமப்பா என்பார்கள் :-))
ஹி..ஹி வெள்ளைக்காரன் பாசை தேவ பாஷை அல்லவா அதில் எதுவும் ஆபாசம் இல்லை :-))
-----------
முட்டாப்பையர்,
மறுபடியும் ஆரம்பத்தில இருந்தா அவ்வ் :-))
-------------------
இக்பால்,
வாங்க,நன்றி!
தானியியங்கி மூவுருளி என்பதில் தானியங்கி என்பதை மட்டும் சுருக்கி சொல்வது தான் "தானி" நானே பல முறை பயன்ப்படுத்தியுள்ளேன். பழையப்பதிவர்கல் ஆசிப் மீரான், பாலபாரதி போன்றோர் "தானி' என்றே எழுதுவார்கள்.
அப்புறம் பெருசா நான் போடுற பின்னூட்டத்திற்கு எல்லாம் தானிப்பின்னூட்டம்னு பேரு கூட வச்சேன், ராச நடராசர் பதிவில் அப்படி பேரு வச்சு ஒரு கும்மியே அடிச்சோம் :-))
நானும் வானுர்தி என்று தான் போட்டு இருக்கேன், அச்சொல் இலக்கியத்திலும் இருக்கு என குட்டிப்பிசாசு தரவு கொடுத்துள்ளார்.
முன்னர் எல்லாம் நல்ல தமிழ் விவாதங்கள் ஓடும் ,நல்ல தமிழில் பேசினால் புரிந்துக்கொள்ளக்கூடியவர்கள் இருந்தார்கள், இப்போ மாறிப்போச்சு தமிழில் பேசிட்டு கூடவே ஆங்கிலத்தில் சொல்ல வேண்டியதாக இருக்கு :-))
தென் மேற்கு பருவக்காற்று தேனிப்பக்கம் வீசும் போது சாரல் இன்பச்சாரல் னு கருத்தம்மா படத்தில் வரும் மழைப்பாடல் அது, தென்மேற்கு பருவக்காற்று என ஒரு படம் கூட வந்தாச்சு.
காகம் தமிழ் சொல் என்பதாக இருக்க வாய்ப்புள்ளது, ஆனால் சமஸ்கிருத அகராதியில் நான் சொன்னதை போட்டு வச்சு இருக்காங்க, முட்டம் என சில இடங்களில் காணக்கிடைக்கவே தமிழில் முட்டம் என சொல்லி இருக்கேன்.
--------
அவருக்கு என்னமோ மன உளைச்சலாக இருக்கலாம். ராச நடராசர் நல்லப்பதிவுகளை தொகுத்து அச்சாக இடலாம் என்றார்,அப்படி தொகுக்கப்பட்டால் அதில் சேர்க்க அமெரிக்க பங்காளிப்பதிவில் ஒன்றாவது தேர்வாகுமா என நடுநிலை ஆரச நடையே சொல்லணும் :-))
------------
அவரு எந்த நாடாக இருந்தால் என்ன ஆனால் அவர் பேசுவது கிராம்மரே இல்லாத ஒன்று ,ஒரு வேளை நீங்க சொன்னாப்போல நம்ம ஆங்கிலம் தான் சரி இல்லை போல :-))
-------------
நல்ல முயற்சி
வவ்வால், இப்படி ஆங்கில தொழில்நுட்ப பெயர்களை
தமிழ் செய்கிறேன் பேர்வழி என்று கிளம்புபவர்கள் தான் உண்மையில் தமிழை கொலை செய்கிறார்கள்.ஒரு கதையில் அவன் ஹெலிகாப்டரில் வந்து இறங்கினான் என்று சொன்னால் மேட்டர் முடிந்தது. சின்னக் குழந்தைக்கும் அது புரியும். உலங்கு வானூர்தியில் வந்தான் என்று சொல்லி வாசகர்களை குழப்ப வேண்டாம். இப்படி டெர்ரராக வாலண்டியராக சொற்களை மொழிபெயர்ப்பதன் மூலம் அவர்கள்
தமிழுக்கு தொண்டு செய்வதில்லை. பார் நான் மொழி வல்லுனன் என்று காட்டும் ஒரு exhibitionism மட்டுமே தெரிகிறது...பிற மொழி குறிப்பாக ஆங்கிலம் கலக்காமல்
தமிழ் பேசுவது என்பது அசாத்தியம். இரண்டு தமிழ் அறிஞர்கள் சந்தித்தால்
உலங்கு வானூர்தி என்றெல்லாம் பேசிக் கொள்ளலாம்.மற்றபடி , வேஸ்ட்.தமிழ் ஒரு கவிதை மொழி ..தொழில்நுட்ப மொழி அல்ல.
சமுத்திரா,
வாங்க,நன்றி!
வேற யாராவது இப்படி சொல்வாங்கன்னு நினைச்சேன்,நீங்களே சொல்லுறிங்க ,
//பார் நான் மொழி வல்லுனன் என்று காட்டும் ஒரு exhibitionism மட்டுமே தெரிகிறது...//
கண்டிப்பாக அப்படியும் இருக்கலாம்,இல்லைனே சொல்ல முடியாது.
ஓஷோ கதைகளோ, எந்திரன் விமர்சனமே, அடல்ட் ஜோக்கோ எழுதி பதிவிடுவதும் எனக்கு இதெல்லாம் தெரியும்பாருன்னு காட்டிப்பதே :-))
நான் ஆங்கில தளங்களை பிராய்ஞ்சு மொழியாக்கம் செய்து??!! போட்டாலும் அதுவும் எனக்கு ஆங்கிலமும் தமிழும் நல்லா தெரியும்னு காட்டிகிறதாக சொல்லலாம் :-))
எனவே அப்படிலாம் இல்லை என சொன்னால் பதிவெல்லாம் எழுதாமல் வழக்கப்படி தொ.காவில் மொக்கைப்படம் பார்க்க போக வேண்டியது தான் :-))
வாட்டர்ஃபால்ஸ் ஐ நீர்வீழ்ச்சி என பெயர்த்தால் அது கொலை அருவி என்றால் என்ன பிழை?
மேலும் தமிழுக்கான மொழி வளம் நிறைய இருக்கு , நாம் சில குறிப்பிட்ட சொற்களையே மீண்டும் பயன்ப்படுத்தி வருவதால் சொற்களே இல்லை என்பதான தோற்றம் ஆகிவிடுகிறது.
//ஒரு கதையில் அவன் ஹெலிகாப்டரில் வந்து இறங்கினான் என்று சொன்னால் மேட்டர் முடிந்தது. சின்னக் குழந்தைக்கும் அது புரியும். உலங்கு வானூர்தியில் வந்தான் என்று சொல்லி வாசகர்களை குழப்ப வேண்டாம். //
சின்னக்குழந்தைக்கும் புரியும் ,அந்த குழந்தை ஆங்கில வழியில் படித்து இருந்தால் :-))
மேலும் ஆங்கிலம் எல்லாருக்கும் புரியும்னா "ஆங்கிலம்-ஆங்கிலம்" அகராதியே விற்பனை ஆகாது :-))
snake ,என எழுதினால் புரிந்துக்கொள்ளும் ஆங்கிலப்புலமைகளும் serpent என எழுதினால் மண்டை சொறிவார்கள், இது போல பல பல ஆங்கில சொல்லுக்கும் பொருள் தெரியாத ஆங்கிலம்ப்படித்தவர்களும் இருக்காங்க.
ஆங்கிலம் எழுதப்படிக்க தெரிஞ்ச் எல்லோராலும் ஆங்கில கதைகளையோ, படங்களையோ முழுசாக புரிஞ்சுக்க முடியுதா?
அப்படி இருக்கும் போது தமிழில் சொற்களை கொண்டுவந்தால் ஆரம்பத்தில் கடினமாக இருந்தாலும் புழக்கத்தின் அடிப்படையில் பழகிவிடும்.
// வேஸ்ட்.தமிழ் ஒரு கவிதை மொழி ..தொழில்நுட்ப மொழி அல்ல.//
ஹி...ஹி அப்போ ஆங்கிலம் மட்டும் அறிவியல் மொழியா?
ஆங்கிலத்தில் நூல்கள் எழுதப்படாத காலத்திலேயே தமிழில் பல உன்னத நூல்கள் உண்டு.
நாம் எழுதிய நடை கவிதை நடை அதாவது அக்கால மொழி வழக்கு அவ்வாறு ஆனால் பல துறை நூலக்ள் உண்டு.
சித்தர்களின் நூல்கள் அனைத்து வகையான அறிவியலும் கொண்டவை.
கலைங்கத்துப்பரணி எல்லாம் போர் வரலாறு எனலாம்.
மேல்நாட்டிலும் ஆரம்ப்பக்காலத்தில் தனிப்பட்ட துறைகளே இல்லை ,அவர்கள் அவர்கள் ஆர்வத்தின் பேரில் செய்தார்கள்.
லியானார்டோ டாவின்சி ஓவியம், இலக்கியம்,அறிவியல்,மருத்துவம் என எல்லாம் கலந்துக்கட்டி செய்தார், அது போல தமிழ்நாட்டு சித்தர்களும், புலவர்களும் எல்லாவற்ரையும் ஒரே முறையில் எழுதியதால் கவிதையாக மட்டுமே உங்களுக்கு தெரிகிறது.
எனவே தமிழில் அறிவியலை கொண்டுவரலாம், சாத்தியமானதே.பயனற்றது அல்ல.
/////////நாம் எழுதிய நடை கவிதை நடை அதாவது அக்கால மொழி வழக்கு அவ்வாறு ஆனால் பல துறை நூலக்ள் உண்டு.///
அப்படி இருக்க முடியாது வவ்வால் அது மொழி வழக்கு என்று கொள்வதை விட அக்காலத்தில் சிறந்த எழுது பொருள் இல்லை. அவர்கள் சொல்ல நினைப்பதெல்லாம் பனை ஓலையில் தான் எழுத வேண்டி இருந்தது . இடம் சிறியது ஆனால் பொருள் பெரியது . உரைநடை பாணியில் எழுத முடியாமைக்கு முக்கிய காரணமாக இருக்கலாம் . கவிதை நடை என்பது குறைந்த இடத்தில நிறைய கருத்தை திணிக்க முடியும் ஷார்ட் ஹன்ட் மாதிரி . மேலும் நன்கு கற்றவர்களுக்கு மட்டுமே அது புரியும் என்பதால் . ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தினர் மட்டுமே கல்வியின் பயனை அடைந்தார்கள் என்றும் கொள்ளலாம் .
அஞ்சா சிங்கம்,
நீங்க சொல்வது ஓரளவுக்கு சரியாக இருக்கலாம், ஆனால் இலத்தின் ,ரோமன் வகையின் இலக்கிய,அறிவியல் நூல்கள் இலவசமாக இணையத்தில் இருக்கு பார்த்தேன் , மேலும் இலத்தின்,ரோமன் வரலாற்றிலும் மொழி வளர்ச்சி,பயன்ப்பாடு எல்லாம் சொல்லும் போது கிட்டத்தட்ட தமிழ் போல தான்.
எழுத்து வடிவமும், பேச்சு வடிவமும் வேறு.
கிளாசிக்கல் லத்தின், வல்கர் லத்தின் என்று சொல்கிறார்கல்.
வல்கர் என்றால் கெட்ட வார்த்தை என நினைக்கிறோம், வல்கர் என்பதற்கு பொருள் "common' பொதுமக்கள் பேசும் மொழி.
அதே நிலை தான் தமிழிலும் ,பொதுமக்கள் மொழி,அறிஞர் மொழி என கவிதை நடை.
கம்பராமாயணம் எல்லாம் இன்னிக்கு அச்சடிச்சாலும் 1000 பக்கம் போகும், அதையே ஓலைச்சுவடில எழுத முடியும் போது விரிவா அறிவியலையும் உரை நடையில் எழுதமாட்டாங்களா?
இப்போ இருப்பது போல அப்போது தனித்துறைகள் இல்லை. புலவராக இருப்பவரே பல்துறை அறிஞராகவும் இருந்திருக்கலாம்.
மாணிக்கவாசகர் ஆன்மீகவாதி ஆனால் ஆன்மீகத்தையும் இலக்கியமாக தானே எழுதினார்.
இப்போ சங்க்ராச்சாரியாரால் ஒரு திருவாசகம் போல எழுத முடியுமா?
எனவே அப்போது கற்றோரின் மொழி கவிதை நடையாக இருந்து இருக்க வேண்டும்.
அதிலும் சித்தர்கள் ஒரு படி மேலே போய் குறியீடுகளாக எழுதிவிட்டார்கள்.
சித்தர்கள்,முனிவர்கள், புலவர்கள் எல்லாம் பன்முகத்தன்மைக்கொண்டவர்களாக இருக்க வேண்டும்.
அவர்கள் சொன்னதில் அறிவியலும் கலந்திருக்கும் , ஆகாயவிமானம் எல்லாம் கண்டுப்பிடிக்கும் முன்னரே வானூர்தி என குறிப்பிட ஒரு அளவுக்கேனும் அறிவியல் சிந்தனை இருந்திருக்க வேண்டும்.
ஆங்கிலத்திலும் புதிதாக ஒரு பொருள் வரும் போது பழைய சொற்களை இனைத்தோ அல்லதோ ஏதோ ஒரு பழைய சொல்லினை,பெயரைக்காரணப்பெயராக தான் வைத்துள்ளார்கள். எனவே ஒரு புதுச்சொல் உருவாக்கி இருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.
உ.ம்: ஏரோ பிளேன் ,விளக்கம் பதிவில் இருக்கு.
புளுடூத் எனப்பெயரிட்டது ஒரு பின்லாந்து மன்னனின் காரணப்பெயரை வைத்தே, அவனுக்கு மந்திசக்தி உண்டாம், எனவே வயர் இல்லாமல் இணைக்கும் ஒரு நுட்பத்திற்கு புளுடூத் எனப்பெயரிட்டார்கள்.
அதே போல இதுவரையில் இல்லாத சொல்லுக்கு நாமும் அறிவியல் பெயர்களை தமிழில் உருவாக்கி கொள்ளலாமே.
பழைய தமிழ் சொல்லில் இருக்கும் இணைச்சொற்கலை எடுத்தாளலாம்.
வவ்வால், அப்ப நான் ஒரு லிங்கை கொடுத்து எல்லாரும் இதை கூகிள் translator இல் போட்டு படித்துக்
கொள்ளுங்கள் என்று சொல்லி விடலாமே? எதற்கு மெனக்கெட்டு
எழுதனும்? நீங்கள் உங்கள் ப்ளாக்கில் போடும் அசின், ஸ்ரேயா
கவர்ச்சி படங்கள் என்ன நீங்களே போய் எடுத்ததா?அதுவும்
வாசகர்களை ஈர்க்கும் உத்தி தானே?
காபி பேஸ்ட் செய்து போடுவதற்கு மொழிபெயர்ப்பு செய்து போடுவது
பரவாயில்லை. இணையத்தில் எழுதுவதற்கு எல்லாருக்கும் உரிமை உண்டு.
ப்ளாக்கை விட்டு விடு. anyway , மொழிபெயர்ப்பு தானே செய்கிறாய்
போய் மொக்கை படம் பாரு என்று எனக்கு சொல்வதாகப் படுகிறது. உங்கள் ப்ளாக்கில் போடும் தகவல்கள் இணையத்தை நாடாமல் நீங்களே மெனக்கெட்டு சேகரித்தது என்று நினைக்கிறேன். ஒருவர் உங்கள் பக்கத்துக்கு வந்து பின்னூட்டம்
இட்டால் அவரை நேரடியாக 'நீ மட்டும் என்ன பெரிய கொம்பா' என்ற ரேஞ்சுக்கு தாக்கும் பழக்கத்தை குறைத்துக் கொள்ளவும்.
எனக்கு எல்லாம் தெரியும் என்று
நினைப்பது தவறு அல்ல. கூடிய சீக்கிரமே வாழ்க்கை உனக்கு எதுவும் தெரியாது என்று புரிய வைத்து விடும்.
எனக்கு பெரிய பதிவர் ஆக வேண்டும் என்ற ஆசையோ எல்லார் ப்ளாக்கிற்கும் சென்று பின்னூட்டம் இட்டு சண்டை போட்டு publicity தேடிக் கொள்ளும் ஆசையோ கிடையாது.ஓஷோவின் கருத்துக்களை தமிழில் சொல்வதற்கு தான் இந்த ப்ளாக் ஆரம்பித்தேன்.
வவ்வால், ஒலக மொழிச் சொற்களை
தமிழில் மொழிபெயர்ப்பது இருக்கட்டும்.முதலில் தமிழில் பிழையில்லாமல் எழுதுங்கள்.பதிவை எழுதி விட்டு ஒருதரம் தமிழில்
ஸ்பெல் செக் செய்யவும். நிறைய எழுத்துப் பிழைகள் காணக் கிடைக்கின்றன.சண்டை போடுவது என்று முடிவு ஆகி விட்டது :):):)
சமுத்திரா,
ஏன் இந்த அவசரம்,
நீங்க சொன்ன வெளிப்படுத்திக்கொள்ளும் ஆவல் இப்படி தமிழ்னு சொல்லிக்கொள்வது மட்டும் என்ன வகைனு சொல்லுங்க?
மேலும் என்னையும் அப்படியான வகையில் சேர்த்துள்ளேன்,
//நான் ஆங்கில தளங்களை பிராய்ஞ்சு மொழியாக்கம் செய்து??!! போட்டாலும் அதுவும் எனக்கு ஆங்கிலமும் தமிழும் நல்லா தெரியும்னு காட்டிகிறதாக சொல்லலாம் :-))//
என்னையும் சேர்த்தே அப்படி எல்லாம் எழுதவில்லை என்றால் தொ.காவில் மொக்கை படம் பார்க்க மட்டுமே எனக்கும் விதிக்கப்படும் என்பதாக சொல்லி இருக்கிறேன்.
நான் எங்கே நானே கண்டுப்பிடித்து எழுதினேன் என சொல்லிக்கொண்டேன், மேலும் நான் பதிவின் அடியில் எங்கு இருந்து தகவல்கள் திரட்டப்பட்டது என்பதையும் , தேவை எனில் அந்த சுட்டியையே நேரடியாக கொடுத்துவிடுவேன், அந்த அளவுக்கூட சிலருக்கு நேர்மையிருப்பதில்லை என்பது வேறு விடயம்.
எனவே நீங்கள் உங்களை சொன்னதாக ஏன் நினைக்கவேண்டும் நான் என்னையே மொழியாக்கம் செய்துக்கொள்வதாக சொன்ன சுயவிமர்சனம்.
//எனக்கு பெரிய பதிவர் ஆக வேண்டும் என்ற ஆசையோ எல்லார் ப்ளாக்கிற்கும் சென்று பின்னூட்டம் இட்டு சண்டை போட்டு publicity தேடிக் கொள்ளும் ஆசையோ கிடையாது.//
இது என்ன சார் :-))
முதலில் தமிழ்படுத்துவதையே வேண்டாம்னு சொன்னது நீங்கள், அப்புறம் நான் உங்களை சொன்னதாக நீங்களே நினைத்தும் கொள்கிறீர்கள், நான் என்னையும் சேர்த்து சொல்லி இருப்பது தெளிவாக பதிலில் இருந்தும் ஏன் கவனிக்கவில்லை.
இப்பவும் உங்களை சொல்லவில்லை, பொதுவாகவே பதிவுலகில் தமிழ்னு ஆரம்பிச்சிட்டா வம்பா போயிடுது.
சிலர் தப்பு தப்பா பிற மொழிச்சொல்லையும் தமிழ்னு தமிழுக்கு இறக்குமதி செய்ய முயல்கிறார்கள்,அவர்களை கூட யாரும் ஒன்னும் சொல்லக்காணோம், ஆனால் தூயத்தமிழ் சொற்களை பதிவில் அறிமுகம் செய்யலாம்னு சொன்னால் கிண்டலாக பார்க்கப்படுகிறது.
எனது பதிவில் பின்குறிப்பினையும் படிங்க , என்ன காரணம் என்பதையும் விளக்கி இருக்கேன்.மேலும் எங்கே இருந்து தகவல் திரட்டினேன் என்பதற்கான கிரெடிட் கொடுத்துவிடுவேன், எதுவும் மூடு மந்திரம் இல்லை.
ஹி...ஹி மாதத்திற்கு ஒன்றிரண்டு முறைக்கூட அசின் ,ஷ்ரியா படம் போட்டதிற்கே இப்படியா, எல்லாப்பதிவிலும் போட்டால் என்ன சொல்வீங்களோ ?
நான் அசினுக்கு ரசிகர் மன்றம் ஆரம்பிக்கவே பதிவு ஆரம்பிச்சேன் என வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம் :-))
சமுத்திரா,
ஆஹா நல்லா இருக்கே :-))
//ஸ்பெல் செக் செய்யவும். நிறைய எழுத்துப் பிழைகள் காணக் கிடைக்கின்றன.சண்டை போடுவது என்று முடிவு ஆகி விட்டது :):):)//
கண்டிப்பாக பிழை இருந்தால் சுட்டிக்காட்டினால் திருத்திக்கொள்வேன், இப்பதிவின் அடியில் பின் குறிப்பிலும் சொல்லி இருக்கிறேன் , பிழை இருப்பின் சுட்டிக்காட்டவும் ,வருத்தமே இல்லை, ஏன் எனில் நான் பிழை திருத்தம் செய்வதேயில்லை, சோம்பல் தான் காரணம்.
நான் பிழை இருக்கு என சொன்னால் என்ன பிழை என்பதனை "குறிப்பிட்டு" சொல்வேன்,எனவே எவ்விடம் என்ன பிழை என குறிப்பிட்டால் உடனே சரி செய்வேன்.
நன்றி!
வவ்வால், நீங்கள் எழுதிவிட்டு அதற்கு விளக்க உரை தெளிவுரை எல்லாம் எழுதி விடவும். பிறகு அந்த அர்த்தத்தில்
சொல்லவில்லை என்று நீங்கள் சொன்னால் அதை புரிந்து
கொள்ளும் அளவு தமிழறிவு எங்களுக்கு இல்லை.
கீழ்வரும் பிழைகளை சரிசெய்க:
பலப்பதிவுகளிலும்- பல பதிவுகளிலும்
அல்லது பதிவுகள் பலவற்றிலும்
செய்துப்பயன்ப்படுத்தி -செய்து பயன்படுத்தி
வடமொழி சொற்கள் - வடமொழிச்சொற்கள்
அதற்கு தமிழில் -அதற்குத் தமிழில்
பொருளணர்ந்து - பொருளுணர்ந்து
பயன்ப்படுத்தும் -பயன்படுத்தும்
பெரும்பாலும் சந்திப்பிழைகள்..
சமுத்திரா,
இது என்னங்க வம்பா போச்சு, ஒரே பின்னூட்டத்தில் பாதியை கட் செய்து பொருள் பார்த்துவிட்டு சொன்னால் எப்படி அடுத்த வரியில் என்னையும் சேர்த்து ஆங்கிலத்தில் பிறாய்ஞ்சு மொழியாக்கம் செய்கிறேன் ,என சொல்லி இருப்பதை கவனிக்கவில்லை என்றால் என்ன செய்வது.
எல்லாப்பதிவிலும் கிரெடிட் கொடுத்துவிடும் போது எப்படி நானே எழுதினேனா என நீங்களாக கற்பனையாக கேள்வி கேட்டால் என்ன சொல்வது. பின் குறிப்பினையோ என்ப்பதிவினையோ சரியாக படிக்காமல் இப்படிலாம் பேசினால் சொல்வதற்கு ஏதுமில்லை.
சமுத்திரா,
நன்றி, பிழைகளை சரி செய்துவிடுகிறேன், எனக்கு பெரும்பாலும் சந்திப்பிழைகள் வருவது வழக்கம், மற்றபடி பொருட்பிழை வருமளவுக்கு இன்னும் முற்றவில்லை :-))
பிழைகளை குறைத்துக்கொள்ள எப்பொழுதும் விருப்பமே.
அதிகாரி என்றால் கூடுதலாக காரியம் செய்பவர் என்று பொருள்
படுவதாக தோன்றவில்லை. 'அதிகாரி' என்பது ஒரே சொல் என்று
நினைக்கிறேன்.
அதிகாரம் = authority . ஆளுமை. அலுவலர் என்பது அதற்கு சரியான தமிழ்ப் பதமா என்று தெரியவில்லை . அலுவலர் என்றால் தன் அலுவலை செய்பவர். அவ்வளவு தான்.not necessarily has authority .
பொறுப்பாளர் நிர்வாகி or ஆளுநர் என்று வேண்டுமானால் மொழி பெயர்க்கலாம்.
இதற்கு தான் நான் சொல்கிறேன் அதிகாரி = அலுவலர் என்று அர்த்தத்தை சிதைக்கும்படி மொழி பெயர்க்காமல் அதிகாரி என்றே சொல்லி விடலாம்.
சமுத்திரா,
தங்களின் ஆலோசனைகள் வரவேற்கப்படுகிறது.
அதிகாரி என்பது ஒரே சொல் போல தோன்றலாம், ஆனால் அவை இரு தனிச்சொல்லின் இணைப்பு ,சமஸ்கிருதத்தில் அப்படி நிறைய உண்டு, மேலும் அதில் ஒர் எழுத்துக்கும் ஒரு பொருள் உண்டு.
பெங்களுரில் பொது கழிவறைகளுக்கு நிர்மலா டாய்லெட் என போட்டிருக்கும்,
நிர்மலா என்பது ஒரே சொல் அல்ல, நிர் = இல்லை , மலம் = அழக்கு எனவே அழுக்கில்லாத சுத்தமான கழிவறை எனப்பொருள்.
அதே போல தான் அதிகாரியும்.
காரி என்றாலே வேலை செய்பவர் தான் ஆனால் ஒரு உயர்ச்சி கொடுக்க அதிகாரி என்கிறார்கள்.
office-officer என்றாலும் வேலை செய்பவர்கள் தானே ஆனால் அலுவலர் என பொதுவாக சொல்லலாம் கூடவே உயர்ச்சி காட்ட உயர் அலுவலர் சேர்க்கலாம், ஆனால் இங்கே அதிகாரி என்பது அலுவலருக்கு இணையானது மட்டும் என்பதால் அலுவலர் என்பதோடு நிறுத்திக்கொண்டேன்.
மேலும் அலுவலருக்கு கீழ் உள்ளோரை பணியாளர், மற்றும் ஊழியர் என அழைக்க முடியும், ஆனால் எல்லாமே பொதுவானவை.
எனவே தமிழில் பல்வேறு சொற்கள் உள்ளன நாம் அனைத்தையும் பொத்தாம் பொதுவாக கையாள்வதால் ஏற்படும் விளைவு இது.
office-அலுவலகம்
officer- அலுவலர்
govt.servant- அரசு பணியாளர்.
govt employee- அரசு ஊழியர்.
இப்படி பல இடங்களுக்கு மாறுபட்ட சொற்கள் உள்ளன.
எனவே அலுவலர் என்பதில் தேவையான அத்தாரிட்டி உள்ளது.
//பொறுப்பாளர் நிர்வாகி or ஆளுநர் என்று வேண்டுமானால் மொழி பெயர்க்கலாம்.//
இவை எல்லாம் வேறு சொற்களுக்கானது.
பொறுப்பாளர்- இன்சார்ஜ்
மேனஜர்- நிர்வாகி என்பது வட மொழி என நினைக்கிறேன், மேலாளர் என்பதே சரியான சொல்.
ஆளுநர்- கவர்னர்.
வவ்வால், அதிகாரி என்பதே அதிகாரம் என்பதில் இருந்து வந்திருக்கலாம்.
எனவே அதிகாரம் என்பதை அதிக காரம் என்று மொழி பெயர்ப்பீர்கள்
போலிருக்கிறது :)
..அலுவல் பணி ஊழியம் எல்லாம் வேலையை குறிக்கின்றன.
வேலைக்கு அதிகாரம் கொண்டவரை அல்ல.எனவே i cant accept அதிகாரி =அலுவலர். மேல் அலுவலர் என்று வேண்டுமானால் சொல்லலாம்.
//ஹெலிகாப்டர்(helicopter);
இணையான தமிழ் சொல்:
உலங்கு வானூர்தி://
Plane = பறனை
Aeroplane = வான்பறனை
Aircraft = வானூர்தி
Helicopter = சுரிப் பறனை, சுரினை
சமுத்திரா,
நன்றி மேலும் சில இணைச்சொல்லினை கொடுத்ததற்கு.
மற்றபடி உலங்கு வானூர்தி என்பது தவறானது அல்ல, அதே போல வானூர்தியும்.
அதிகாரம் என்பது தமிழ் என நினைத்துக்கொண்டு சொல்கிறீர்கள், அதிகார் என்பதில் இருந்தே அதிகாரம் என தமிழ் வடிவம் எடுத்துள்ளது.அதிகார்- அதிகாரி , எல்லாம் அதிலிருந்தே. அதிகார் என்றால் பவர் அவ்வளவு தான். அதிகாரி ஒரு வேலையை செய்ய வல்லவர். மேலும் பிரித்து பொருள் கொடுத்தது சமஸ்கிருத அகராதி நானல்ல.
athikar என்ற பெயரில் வந்துள்ள ஹிந்தி படங்கள்,
http://en.wikipedia.org/wiki/Adhikar
ஹிந்தி பொருள்:
http://dict.hinkhoj.com/words/meaning-of-adhikar-in-english.html
-------
நான் இங்குப்பட்டியலிட்டது மக்களுக்கு ஓரளவுக்கு புழக்கத்தில் பயன்ப்படுத்தக்கூடிய நிலை சொற்களையே இன்னும் பல இருக்கு.
சில சொற்கள் இணை ,இணைக்கு இணையாக போய் வேறு பொருளில் முடிகிறது அதனை எல்லாம் கூறி குழப்ப வேண்டாமே என விட்டுவிட்டேன்.
சமுத்திரா ,
சொல்ல மறந்துவிட்டேன்ன்,
இக்பால் செல்வன் சொன்னதை நீங்கள் கவனிக்கவில்லை போலும்,
// இக்பால் செல்வன் said...
ஆட்டோ ரிக்ஷாவுக்கு தானி என்ற தமிழ் சொல் இருக்கின்றது !!!
விமானத்துக்கு சரியான தமிழ்ச் சொல் வானூர்தி தான் !
ஹெலிகாப்டர் = உலங்கு வானூர்தி ( விடுதலைப் புலிகளுக்கு நன்றிகள் ! அவர்கள் தான் இச்சொல்லை பிரபலம் ஆக்கினார்கள் )//
நானாக சில சொற்களை கட்டமைத்தேன் என சொன்னதை வைத்து எல்லாமே நானே சொல்கிறேன் என நினைத்துவிட்டீர்களா?
அப்படி சொன்னது அல்லக்கை என்ற சொல்லுக்கு :-))
ஹி...ஹி அவ்வப்போது இது போல எனது சுய மொழியாக்கமும் வரும் என்பதால் முன்குட்டியே சொல்லி வைத்தால் ,எல்லாம் அப்படியாகிவிடுமா? மேலும் அப்படி நானே வடிவமைத்த சொல்லாக இருந்தாலும் அதில் உங்களுக்கு என்ன பிரச்சினை, நன்றாக இருந்தால் மக்கள் பயன்ப்படுத்தப்போறாங்க.
மற்றபடி நான் அகராதி ,சில நூல்கள் என ரெஃபெர் செய்தே வெளியிடுகிறேன் என்பதையும் நினைவில் கொள்ளவும்.
நன்றி!
கற்றது தமிழ் அஞ்சலி போட்டோவிற்கு பதில் "சிங்கள ஆதரவு" அசின் போட்டோவை போட்டதற்கு நீங்கள் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்.
நீங்கள் எழுதியது ஓகே. நான் தமிழுக்கு எதிரானவன் இல்லை. ஆனால் இந்த மாதிரி தூய தமிழ் வார்த்தைகளில் எனக்கு சுத்தமாய் ஆர்வமும் இலை.
Tamil is gone. but not completely
இப்போது தமிழுக்கு இடையில் ஆங்கில வார்த்தைகளை பயன் படுத்தி கொண்டிருக்கும் நாம், இன்னும் கொஞ்ச நாளில் ஆங்கிலத்திற்கு இடையில் தமிழை பயன்படுத்தலாம்.
இது போல பதிவு போடுவது தப்பில்லை. ஏனென்றால் யாரும் இதை கண்டு கொள்ள மாட்டார்கள்.
ஆனால் இந்த தமிழ் வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும் என்று சொல்வது முட்டாள்தனமாக உள்ளது.
just understand the realism.
கேபிள் சங்கர் ஏதாவது மொக்கை போஸ்ட் போட்டிருப்பார்(எல்லாமே மொக்கை தான்). போரடித்தால் அங்கு போய் ஒரு கமென்ட் போடுங்கள்.
You are mingling with dumps. But you are not dump. I hope so.
"நான் ஒரு முகமூடி" என்பதை அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்காதிர்கள். போரடிக்கிறது. அப்புறம் மிஸ்கின் படத்தை போல ஆகி விடும்.
உங்களின் சில கமெண்டுகள் சுவாரஸ்யமாய் இருக்கலாம். ஆனால் நீங்கள் ஒரு முகமூடி என்பதில் யாருக்கும் அக்கறையில்லை.
அனானி,
வாங்க,நன்றி!
//Tamil is gone. but not completely//
உங்களுக்காகவே பாரதியார் ஒரு பாட்டே பாடி வச்சிட்டு போயிருக்கார்,
"இன்றொரு சொல்லினைக் கேட்டேன் - இனி
ஏது செய்வேன்? எனதாருயிர் மக்காள்!
கொன்றிடல் போலொரு வார்த்தை - இங்கு
கூறத் தகாதவன் கூறினான் கண்டீர்!
"புத்தம் புதிய கலைகள் - பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்
மெத்த வளருது மேற்கே - அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை
சொல்லவும் கூடுவதில்லை - அவை
சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை
மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்"
என்றந்தப் பேதை யுரைத்தான் - ஆ!
இந்த வசை எனக்கெய்திடலாமோ?
சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!
தந்தை அருள் வலியாலும் - இன்று
சார்ந்த புலவர் தவ வலியாலும்
இந்தப் பெரும்பழி தீரும் - புகழ்
ஏறிப் புவிமிசை என்றும் இருப்பேன்."
ஆங்கிலம் ,தமிழ் என கலந்து பேசினாலும் , தமிழ் வளர்ந்து கொண்டே தான் இருக்கும்.
தூய தமிழ்சொல்லில் கட்டாயம் பேச சொல்லவில்லை, ஆனால் சொற்கள் உள்ளன என்பதை நினைவில் கொண்டால் போதும் ஆனால் இருப்பதே அறியாமல் தமிழில் சொல்வளம் இல்லை என சிலர் சொல்வதற்கு தான் நான் பதிலாக பதிவிட்டுள்ளேன்.
யாரையும் அப்படி பேசுங்கள் என கட்டாயமாக்கவில்லை, பேசலாமே என தான் சொல்கிறேன், நானும் மணிபிரவாள நடைக்கு எதிரானவன் அல்ல ,கலந்து தான் எழுதுகிறேன்,ஆனால் அறியாமையால் அல்ல எழுத எளிதாக இருக்கு என்பதால்.
கால்குலேட்டர் எல்லாம் வந்தாச்சுன்னு பள்ளியில் பெருக்கல் வாய்ப்பாடு சொல்லித்தராமல் போவதில்லை.
பொழுது போக்கிற்கு போட்டப்பதிவுன்னே எடுத்துக்கொங்க :-))
------
அசின் ஒருப்பட ஷீட்டிங்க்கிற்கு போனதாலே சிங்கள ஆதரவாளரா? அப்போ அங்கே போய் கிரிக்கெட் ஆடும் அணியை என்ன சொல்வது?
வர வர தமிழனுக்கு அழகியல் உணர்வும் குறைஞ்சு போச்சுப்பா :-))
//தூய தமிழ்சொல்லில் கட்டாயம் பேச சொல்லவில்லை, ஆனால் சொற்கள் உள்ளன என்பதை நினைவில் கொண்டால் போதும் ஆனால் இருப்பதே அறியாமல் தமிழில் சொல்வளம் இல்லை என சிலர் சொல்வதற்கு தான் நான் பதிலாக பதிவிட்டுள்ளேன்.//
இது சரி தான்.
//யாரையும் அப்படி பேசுங்கள் என கட்டாயமாக்கவில்லை, பேசலாமே என தான் சொல்கிறேன்//
இது தான் காமெடி. இன்னொரு முறை நீங்கள் இதை படித்தால் உங்களுக்கே சிரிப்பு வரும்.
//அசின் ஒருப்பட ஷீட்டிங்க்கிற்கு போனதாலே சிங்கள ஆதரவாளரா? அப்போ அங்கே போய் கிரிக்கெட் ஆடும் அணியை என்ன சொல்வது?
வர வர தமிழனுக்கு அழகியல் உணர்வும் குறைஞ்சு போச்சுப்பா :-))
//
நான் எழுதியது Satire என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியாத போது, தவறு என் மீதே!
//ஆங்கிலம் ,தமிழ் என கலந்து பேசினாலும் , தமிழ் வளர்ந்து கொண்டே தான் இருக்கும்//
It may go down... not reverse...never...
தமிழில் கூட விக்கி பீடியா பேஜ் இருக்கு. ஆனால் யாரும் அதை படிப்பதில்லை. நடைமுறையில் பேசும் தமிழில் இருந்தால் மட்டுமே அதை படிக்க முடியும். நீங்கள் சொல்லும் வார்த்தைகள் இருந்தால், அதற்கு ஆங்கிலமே புரிவதற்கு எளிதாக இருக்கும்.
டிஸ்கவரி தமிழ் சேனல் போல இருக்க வேண்டும்.
என்னை விட என் மகன் ஆங்கிலம் நன்கு பேசுவான் (still single...). அதே சமயம் தமிழ் குறைவாக தான் அவனுக்கு தெரியும்.
By the way, Who is Barathi?
//நான் எழுதியது Satire என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியாத போது, தவறு என் மீதே!//
Its downside of satire too.
it is an interesting post.
he is an interesting blogger!
இதில் வரும் தடித்த சொல்லுக்கு நற்றமிழ் நல்க.
(பல நாட்களாகப் பதிவுலகில் கேட்டு வந்துள்ளேன். இதுவரை எனக்குப் பிடித்த சொல் கிடைத்தபாடில்லை!)
பொறுங்கள் தருமி.
வவ்வால் "தமிழ் விக்ஷனரி, தமிழ் இணைய பல்கலை, அகரமுதலி " இவற்றில் துலவி கொண்டு இருக்கிறார்.
//பிழை இருப்பின் சுட்டிக்க்காட்டவும்//
யாராவது சுட்டிக்க்காட்டுங்கோ!
சந்தி பிழை அதிகம் என சமுத்ரா சுட்டிக் காட்டிய பிறகும், உங்களுக்கு இந்த சந்தி பிழைகளை நீக்க உங்களுக்கு ஆர்வம் வரவில்லையே!
தமிழ் வளர்ப்போம் என நீங்கள் சொல்வது காமெடி.
வவ்வால் அண்ணாச்சி முதல்முதலா உங்க கிரௌண்டுகுள்ள காலடி வெச்சிருக்கேன்,ஆட்டத்தில நம்மளையும் சேர்த்துக்கோங்க.
பல வார்த்தைகள் தமிலுனு (நம்ம கேப்டன் தமிழ்) நெனச்சிக்கிட்டு இருந்தேன் இப்பதானே புரியுது.
அனானி,
சிரிப்பு வந்தா சிரிச்சுடுங்க :-))
////நான் எழுதியது Satire என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியாத போது, தவறு என் மீதே!//
Its downside of satire too.//
ஹி...ஹி நான் சொன்னதும் சட்டையர் னு ஏன் உங்களுக்கு புரியாம போச்சு ... சிரிப்பான் கூடப்போட்டிருக்கேன் அப்போ கண்டிப்பா
Its downside of satire too
:-))
பாரதி-யார் னு கேட்டப்பொறவு நாம என்ன பேசி என்ன பலனய்யா?
உங்க மகனுக்கு சீக்கிரம் அமெரிக்க விசா கிடைக்க கடாவது!
--------------
தருமிய்யா ,
வாங்க,நன்றி!
உங்களுக்கே அய்யமா? அய்யகோ இது என்ன மதுரைக்கு வந்த சோதனை ?
//it is an interesting post.
he is an interesting blogger!//
ஆர்வத்தினை தூண்டக்கூடியப்பதிவு,
அக்கறைசெறிந்தப்பதிவு
(கவனம்)ஈர்க்க கூடிய பதிவு,
விருப்பப்பதிவு,
கருத்தூன்றிய பதிவு
Conflict of interest' என்பதை கருத்து வேறுபாடு என்கிறோம் அல்லவா.
கவனிக்க தக்க பதிவு
உத்வேகமிக்க பதிவு(உத்வேகம் தமிழா என சந்தேகம்),
பதிவர் என இதனுடன் சேர்த்துக்கொள்ளலாம்,
மேலும் ஈடுபாடுமிக்க பதிவர், நாட்டமுள்ளப்பதிவர்,அக்கறையுள்ளப்பதிவர், நலமிக்கப்பதிவர் ,நலமானப்பதிவர், என சொல்லலாம்.
ஹி..ஹி காமப்பதிவர் என்றும் சொல்லலாம் ,
deep interest - காமம், ஆசை ,விருப்பம், ஆர்வம் என பொருள் உண்டு.
காமாக்ஷி - காமம் +அக்ஷி
காமம் = விருப்பம் , அக்ஷி =கண்
காஞ்சி காமக்கோட்டி என்பதில் வரும் காமம் என்பது ஆசை ,விருப்பம் , கோட்டி என்றால் துறந்த , கடந்த.
i lost interest in life = காமகோட்டி நிலை எனலாம்.
இன்ட்ரஸ்ட் என்பதற்கு காமம் என்பதும் ஒத்து வரும்.
பக்தர்களை விருப்பத்துடன்,ஆர்வத்துடன் , அக்கறையுடன் பார்ப்பாதக பொருள்.
காம ராஜர் என்றால் மற்றவர்கள் மீது அக்கறைக்காட்டக்கூடிய ராஜா,(காரசர் உண்மையில் அப்படித்தானே)
காமசூத்திரா என வட மொழி நூல் இருக்கே எனலாம், ஆனால் "கற்றாரை கற்றாரே காமுறுவர் "என தமிழிலும் இருக்கு. எனவே தமிழா ,வடமொழியா என உறுதியாக தெரியவில்லை.
அனானி,
ராசாக்களா, சில மணி நேரங்களுக்கு முன்னர் சொல்லிட்டு போனவுடன் உடனே மாறிவிட நான் என்ன மாய மனிதனா, பழக்க தோஷம் உடனே போயிடுமா, திருத்திக்கொள்ள முயல்கிறேன் என சொல்லியாச்சு.
இப்போ அனானினு வரும் போது ஒரு பேரு போடுங்கன்னு கூட சொல்லிக்கிட்டு இருக்கேன் யாரு கேட்கிறிங்க, அம்மாவாசை, ஆறுச்சாமின்னாவாது ஒரு பேரு போடுங்க ராசா எந்த அனானினு தெரிஞ்சுக்க தான் .
வணகக்ம் வவ்வால்& தருமி அய்ய, அனானி அய்யா?
தமிழ் பற்றிய விவாதம் நன்மையே.
தமிழில் ஆங்கில சொற்கள் கலக்கலாமா இல்லையா என்பதுதான் விவாதப் பொருள் என நினைக்கிறேன். நம் பங்கிற்கும் ஏதாவது சொல்வோம்.
1. தொழில் நுட்ப முன்னேற்றத்திற்கு ஏற்ற தமிழ் சொற்கள் உருவாக்கப் பட வேண்டுமா?
ஆம்.எப்படி?
அ) ஏற்கெனெவே வழக்கத்தில் இருக்கும் சில சொற்களையோ,அல்லது இலக்கியத்தில் இருந்தோ எடுத்து உருவாக்கலாம்.
ஆ) தமிழில் பயன்பாட்டில் இருக்கும் வடமொழி சொல் கூட பயன் படுத்தலாம்.
2.ஆங்கிலம் என்பது பிற மொழிச் சொற்களை தன் வசப்படுத்தியதுதான் வளமைக்கு காரணம் எனினும் தமிழுக்குஆங்கில சொற்கள் தேவை என்பதை ஏற்கலமா?
தமிழில் ஆங்கிலக் கலப்பு என்பது தவிர்க்கப் பட வேண்டும். வெளி நாடுகளில் வாழும் ஆங்கிலம் கலந்து தமிழ் பேசுவோரின் அடுத்த தலைமுறை தமிழ் பேச மாட்டார்கள் என்றே கூறுகிறோம்.
நாம் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் இட சூழல் பற்றியே விவாதிக்க்லாம். தமிழர் நாடுகளில் வாழும் தமிழர்கள் தூய தமிழ்+ கொஞ்சம் வட மொழி பயன்படுத்தலாம். ஆங்கிலம் தவிர்க்கப்பட்டே ஆக வேண்டும்.
தொழில் நுட்பம் சார்ந்து ஆங்கில சொற்களுக்கு தமிழ் சொற்கள் உருவாக்குதல் என்பது காலத்தின் கட்டாயம்.
******
it is an interesting post.
வவ்வாலின் இப்பதிவு ஈடுபாட்டை ஏற்படுத்துகிறது.
வவ்வாலின் இப்பதிவு ஆர்வம் ஊட்டுகிறது.
***
he is an interesting blogger!
வவ்வால் ஒரு கவன ஈர்ப்பு செய்யகூடிய பதிவர்
வவ்வால் ஒரு வித்தியாசமான பதிவர்
*********
//சந்தி பிழை அதிகம் என சமுத்ரா சுட்டிக் காட்டிய பிறகும், உங்களுக்கு இந்த சந்தி பிழைகளை நீக்க உங்களுக்கு ஆர்வம் வரவில்லையே!
தமிழ் வளர்ப்போம் என நீங்கள் சொல்வது காமெடி.//
வணக்கம் அனானி(பெயரிலி??) அய்யா,
தமிழை யாரும் வளர்க்கவில்லை தமிழ்தான் எங்களை வளர்க்கிறது.
சொற்குற்றம் ,பொருள் குற்றம் என் இருவகை உண்டு.
வவ்வாலின் பதிவில் உள்ள சொற்குற்றம் எளிதில் திருத்தப்படக் கூடியது.எல்லோரும் இப்படி நான் எழுதிய சொற்குற்றம் கூடிய தமிழை பயன்படுத்தியே ஆகவேண்டும் என அவர் சொல்லவில்லையே!!.
தவறை சுட்டிக் காட்டினால் திருத்துகிறார்.
ஆங்கில கலப்பின்றி தமிழ் தனித்தியங்க முடியாது என்பது பொருள் குற்றம்.கருத்து திணிப்பு!!!!
ஆங்கிலம் கலப்பினை கொஞ்சம் கொஞ்சமாக குறைக்க வேண்டும்.இதற்கான் எந்த முயற்சியும் ஊக்குவிக்கப்பட வேண்டும்!!
நன்றி!!
அறிவுக்கடல்,
வாங்க,நன்றி!
நம்ம கடை எப்போதும் திறந்தே இருக்கும் ,அனைவருக்கும் இடம் உண்டு ,ஆனால் நீங்க கடல் ஆச்சே சுனாமி கீது வருமா? :-))
வந்து ஆட்டத்துல கலக்குங்க.
அட கடவுளே இவ்ளோ அக்கபோரா ....வவ்வால் இனிமேல் பிரபல பதிவர் என்று அழைக்க படுவாராக ..ஆமென்
Satire என்பதற்கு கேலி,கிண்டல்,நையாண்டி,வஞ்சப் புகழ்ச்சி என்று கூட சொல்லலாம்
@ வவ்வால்.
செந்தில் பதிவுல பார்த்தேன்.
சுத்தமான கள் காரைக்காலில் கிடைக்கும்.என்னிடம் சொன்னால் இறக்குபவரின் போன் நம்பர் தருகிறேன்.
போன் பண்ணிவிட்டு சென்றால் நம் எதிரிலே இறக்கி தருவார்.
தங்களுக்கு உதவ காத்திருக்கிறேன்...
தங்களுக்கு உதவினால் நான் தனயன் ஆவேன்...
நாய் நக்ஸ் said...
@ வவ்வால்.
செந்தில் பதிவுல பார்த்தேன்.
சுத்தமான கள் காரைக்காலில் கிடைக்கும்.என்னிடம் சொன்னால் இறக்குபவரின் போன் நம்பர் தருகிறேன்.
போன் பண்ணிவிட்டு சென்றால் நம் எதிரிலே இறக்கி தருவார்.
தங்களுக்கு உதவ காத்திருக்கிறேன்...
தங்களுக்கு உதவினால் நான் தனயன் ஆவேன்...
////////////////////////////////////////////////////////////////////////////////////////
கொசுவா இருந்தா மருந்தடிச்சி விரட்டலாம் ..............உன்னை என்னையா பண்றது .......?
சகோ.சார்வாகன்,
வாங்க ,நன்றி!
ஆமாம் நான் சொல்வதும் தமிழில் சொல் இல்லை என்ன்ற நிலை வரக்கூடாது ,அல்லது சொல்லக்கூடாது என்பதே, பாரதியார் பாடலையும் உதாரணம் காட்டியுள்ளேன்.
உங்களைப்போன்றவர்கள் பிறமொழி அறிவியலை தமிழில் ஏற்கனவே வழங்க்கிவருகிறீர்கள் அது போன்ற முன்னெடுப்புகளே வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு.
----------
நீங்க சொன்னது ஒத்த மொழிபெயப்புகளை நான் பட்டியலிட்டுள்ளே பார்த்தீர்களா?
-------------
அனானிகளுக்கு தெரியவில்லை தட்டச்சு பிழை, மற்றும் அவசரத்தில் செய்யும் பிழைக்கும் சரியான சொல்லே தெரியாமல் செய்யும் பிழைக்கும் உள்ள வேறுபாடு.
அதே சமயம் நானே ஒவ்வொரு முறையும் பிழை இருந்தால் நீக்கவும் செய்ய்கிறேன்,சுட்டினால்லும் நீக்குவேன் என்று தான் சொல்கிறேன்.
-------------
அஞ்சா ஸிங்கமே,
ஏன்...ஏன் இந்த கொலைவெறி, அப்புறம் ஆப் ஆயில் போடுறவன், ஆட்டோ ஓட்டுறவங்க எல்லாம் என் வாசகர்னு மனப்பிராந்தியில் அலையவா?
நான் வழக்கம் போல ஒரு ஓரமா குந்தியிருக்கும் ஆர்வக்குட்டி அனானி தலைமறைச்சான் (முகமூடினு சொன்னா நல்லா இல்லையாம்) :-))
#அது என்ன மாயமோ ,மந்திரமோ தெரியவில்லை தமிழ்னு சொல்லிட்டா சிலர் கூட்டம் கூட்டமா வந்து அக்கப்போர் செய்யறாங்கப்பா :-))
சார்வாகன் ,
மேலும் பல தமிழ்சொற்களை அளிக்கிறீர்கள், நன்றி!
நான் வழக்கமாக நையாண்டி என்று தான் சட்டையருக்கு சொல்லுவேன் (என்னமோ அய்யர்னு ஏன் சொல்லனும்)
தொடர்ச்சியாக பல தமிழ் சொற்களை பட்டியலிடலாம் , நீங்களும் எடுத்துக்கொடுப்பீர்கள் என தெரியும்.
----------
நக்ஸ் அண்ணே,
ஆஹா என்ன ஒரு உதவும் மனப்பான்மை, மிக்க நன்றி!
ஆனால் எனக்கு புதுவை கூப்பிடும் தூரம் காரைக்கு எம்புட்டு தூரம் போகணும்.
அந்தப்பக்கம் போனால் தான் முயற்சிக்கணும்.
-----------
அஞ்சா ஸிங்கம்,
:-))
நக்ஸ் அண்ணே கலியுக கர்ணன் திட்டாதீர், கேட்காமலே உதவிக்கரம் நீட்டுறார்ப்பா. யாரு இந்தக்காலத்தில இப்படி இருப்பா.
ஆனால் தமிழ்னு சொல்லிட்டு சரக்கு அடிக்க பேசுறாங்கன்னு கலாச்சாரக்காவலர்கள் பொங்கிடுவாங்க என அடக்கி வாசிப்போம் தோழர்களே!!!
அப்ப இதை இந்நேரம் ஸ்க்ரீன் ஷாட் எடுத்திருப்பான்களா???
ஐ ...ஜாலி..ஜாலி...மீண்டும் சண்டை வர போகுது.
வா வவ்வால் பொழுது போகும்.
யாரப்பா அது சீக்கிரம் பதிவு போடுங்க.
ரோம்ப போர் அடிக்குது.
@ சிங்கம்.
:))))))))))
நக்ஸ் அண்ணே,
ஏன் ஏன் இந்த கொல வெறி!
கண்டிப்பாக மார்க்கப்பந்துக்கள் இதெல்லாம் நோட் செய்து இருக்கும் , அடுத்து பதிவுப்போடுவாங்க தமிழ் என்றப்பெயரில் மதுவிருந்துக்கு சதியாலோசனைனு ...மனிதாபிமானமே இல்லாம :-))
அதை ஏன்பா அப்படிலாம் சொல்றிங்கன்னு கேட்ட நடுநிலைகளுக்கு சிலுத்துக்கும் அப்புறம் என்னை கும்பலா கும்முவாங்க, நீங்க வேடிக்கை பார்க்கணும் ... அவ்வ் முடியலை ...மி பாவம் :-((
அதை ஏன்பா அப்படிலாம் சொல்றிங்கன்னு கேட்ட நடுநிலைகளுக்கு சிலுத்துக்கும் அப்புறம் என்னை கும்பலா கும்முவாங்க, நீங்க வேடிக்கை பார்க்கணும் ... அவ்வ் முடியலை ...மி பாவம் :-((////////////
நாம இணைஞ்சி போனா வெற்றிதான்,..
நாம பிரபல பதிவர்கள்...
அப்புறம் என்னை தொடார்புகொல்லுவீர்களா மாட்டீர்களா??
தொடர்பு கொள்ள வில்லை எனில்
இனி நான் இங்கு வருவது சந்தேகமே...
ஆனா பிரச்சனைன்னு வந்துட்டா
உடனே வந்துடுவேன்...
நாம இணைந்து செல்ல வேண்டிய இடம் நிறைய இருக்கு...
அதான்..
வவ்வால்,
////////
அப்படி இருக்கும் போது தமிழில் சொற்களை கொண்டுவந்தால் ஆரம்பத்தில் கடினமாக இருந்தாலும் புழக்கத்தின் அடிப்படையில் பழகிவிடும்.
////////
தமிழ் சொல் இதுதான் என்று தீர்மானித்து விட்டால், நீங்க சொன்னதை போலதான் ஆரம்பத்தில் கடினமாக இருந்தாலும் போக போக பழகிவிடும்.
தொழில்நுட்ப வார்த்தைகளை தவிர்த்து, மற்ற துறைகளில் சொற்களஞ்சியம்(vocabulary) தமிழில் இருக்கின்றது. ஆங்கிலத்தில் எப்படி நாம் சொற்களஞ்சியங்களை வளர்த்து கொள்கிறோமோ, அதை போல தமிழில் வளர்த்து பயன்படுத்தலாம்.
நன்றி.
வவ்வால்,
யாருப்பா அந்த motor mouthed useless fellow சயிண்டிஸ்ட்??? ROFL நம்ம சார்வாகனா???
இங்கே பெரிய கும்மியே நடந்திருக்குதே!
அசின் பக்கவாட்டுல நிற்கிறதைப் பார்த்துட்டு பழைய சிறுக்கிதானேன்னு தலைப்போடு போய்விட்டேன்:)
நக்ஸ்!உங்க போட்டோவை பதிவர் சந்திப்பு பதிவுகளில் காண நேரிட்டது.இந்த சாந்தி...சீ...காந்தி முகத்துக்கா இத்தனை கும்மாங்குத்துன்னு நினைச்சேன்:)
சும்மா போற ஓணனானை உள்ள விடறதுக்கு இதென்ன வேலி காத்தான் மரமா என்ன?வவ்வாலய்யா!வவ்வாலு.வந்தமா கொஞ்சம் கடலை போட்டமான்னு இல்லாம தனியா சந்திப்போமா!போன் போட்டு பேசுவோமான்னு காதல் கதை பேசிகிட்டு:)
நரேன்!எங்கே ஆங்கிலமே கலக்காமல் ஒரு விஞ்ஞானப் பதிவை வவ்வாலை இறக்கச் சொல்லுங்க பார்ப்போம்.
பி.கு:அல்லக்கையாகவோ பக்கவாட்டிலோ அடைப்பானுக்குள் ஆங்கில சொற்பதங்கள் உபயோகிக்கலாம்
வணக்கம்
பதிவுலகில் தமிழ் வளர்க்கும் சகோதரனே
ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!!
நன்றி!!
நக்ஸ் அண்ணே,
கண்டிப்பா ஆடு வந்தா தலைக்கறி உங்களுக்கு தான். கண்டிப்பா பேசலாம் ஆனால் அதுக்குள்ள என்ன அவசரம், ச்சியர்ஸ்!!!
--------------------
நரேன்,
வாரும்,நன்றி,
அத்ஏ ...அதே தான் , சரியான சொற்களை உருவாக்கிவிட்டால் பின்னர் படிப்படியாக பயன்ப்பாட்டிற்கு கொண்டு வரலாம். அதற்கு தான் புளூடூத் உதாரணம் சொன்னேன், புதிய வயர்லெஸ் தொழில்நுட்பத்திற்கு அதற்கு முன் பெயரில்லை, எனவே புதிதாக உருவாக்கித்தானே பயன்ப்படுத்தினார்கள், நாமும் வெள்ளைக்காரன்ன் கண்டுப்பிடிச்சா என்ன நம் வசதிக்கு பொருத்தமாக உருவாக்கிப்பயன்ப்படுத்தலாம்.
----------
அப்புறம் சகோ.சார்வாகன் மேல என்ன கான்டு , மோட்டார் மவுத் சொன்னால் அவரை புடிச்சு இழுக்குறீர், சார்வாகன் பாவம்யா பரிணாம அறிவியலை பைந்தமிழில் அளிப்பவர். நான் சொன்னது இங்கிலீபீசு தொரைய ...ராச நடராசருக்கு பங்காளி இப்போவாது புரியுதா( புரிஞ்சாலும் பத்த வைக்கவே அப்படி கேட்டு இருப்பார்)
----------
ராச நடராசர்,
வாங்க ,நன்றி!
அசின் நேரா நிக்கவச்சு படம் போட்டால் புதுசுன்னு நினைப்பீரோ, என்ன ரசனையோ.
நக்ஸ் அண்ணாச்சி பேசுறதுலாம் மொக்கை ,கடலைனா பொருள் தெரியாம பேசிக்கிட்டு , ஃபிகர் கூட பேசினால் தான்ன் கடலையா, எல்லாத்தையும் தப்பு தப்பாவே புரிஞ்சுப்பார் :-))
தூய தமிழில் எப்போவோ எழுதியாச்சு , இனிமேல் எழுதினால் சொல்லி அனுப்பறேன்.
-----------
சகோ.சார்வாகன்,
வாங்க ,நன்றி!
அறிவியல் தமிழ் வளர்க்கும் பரிணாமவியலாளரின் வாழ்த்துக்கு மிக்க நன்றி. தங்களுக்கும் வாழ்த்துக்கள்!
சகப்பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
------------
என்னையா தமிழால் இவ்ளோ பெரிய கலவரமா ? நான் சொல்ல நினைத்ததை எல்லாம் சார்வாகன் பாக்கட் பண்ணிவிட்டார் ... அதனால் எனக்கு வேலை மிச்சம்..
தமிழில் நாவி என்ற ஒரு இணைய மென் பொருள் இருக்கு..
http://tamilpoint.blogspot.ca/p/naavi.html
வவ்வால் உங்களின் சந்திப் பிழைகளை இதில் சென்று திருத்திக் கொள்ளுங்கள். 90 சதவீதம் இது பயன் தருகின்றது எனலாம் ! எனக்கும் சந்திப் பிழைகள் ஏற்படுவதுண்டு ! அவற்றை நாவி ஊடாகவே திருத்திக் கொள்கின்றேன்.
உலங்கு வானூர்த்தி என்ற சொல் இலங்கை வானொலி, ஊடகங்களில் பிரபலம். சின்னக் குழந்தைக்குக் கூட தெரியும். நாம் ஒரு வார்த்தையை எப்படி பயன்படுத்துகின்றோம் என்பதில் தான் அது கடினமா, எளிதா எனக் கூறமுடியும் ..
மிதிவண்டியை ஈருருளி என்றார்கள் ஆனால். மிதிவண்டி என்ற சொல் நிலைத்துவிட்டது. மிதிவண்டி என்று சொன்னாலே அனைவருக்கும் இப்போது சைக்கிள் என்று தெரியும் .. என்னக் கொடுமை தெரியுமா கனடாவில் சைக்கிள் என்றால் முழிப்பார்கள். பைக் என்று சொல்கின்றார்கள் ... ஆக நாம் தமிழில் கலந்து பேசும் பல ஆங்கில சொற்கள் ரொம்ப பழையவை. பிரித்தானியரின் எச்சங்கள் ... !!!
இக்பால்,
வாங்க,நன்றி!
பின்னூட்டம் எல்லாம் விடாம படிச்சிட்டு வரிங்க போல ,நன்றி!
ஹி...ஹி சிலருக்கு தமிழ் என்றாலே பத்திக்கிது :-))
நாவி என்ற மென்பொருளைப்பற்றி முன்னரும் ஒருவர் பதிவிட்டிருந்தார், மீண்டும் முயற்சிக்கிறேன்.
உலங்கு வானூர்தி என்பதனை நானும் சில இணைய தளங்களில் பார்த்துள்ளேன், இலங்கையில் நன்கு புழக்கத்தில் உள்ளது எனலாம். உலங்கூர்தி என சுருக்கியும் சொல்லி பயன்ப்படுத்திக்கொள்ள வேண்டியது தான்.
ஆங்கிலத்திலேயே பல பெயர்களும் இரவல் அல்லது புதிதாக தேவைக்கு உருவாக்கி கொண்டது தானே.
நம்ம இன்னும் வெள்ளைக்காரன் விட்டுப்போனதையே பத்திரமா பாதுகாத்து வருகிறோம். சைக்கிள், பைக், எலிவேட்டர், லிஃப்ட் என நாட்டுக்கு நாடு ஒரே பொருளை வேறு இணைச்சொல்லில் அழைக்கிறார்கள், நாம் தமிழில் அழைத்தால் அப்பொருட்கள் ஒன்றும் கோபித்துக்கொள்ளாது :-))
சார்வாகன் முதல் விமர்சனம் நீங்களா? கலக்குறீங்க? இப்படியெல்லாம் யூத்தா எழுதுவீங்களா?
.தமிழ் ஒரு கவிதை மொழி ..தொழில்நுட்ப மொழி அல்ல.
ரொம்ப நாளா சந்தேகம்.
கொரியன், சீனம், ப்ரெஞ்ச் போன்ற நாடுகளில் கல்லூரி வைக்கும் முழுக்க முழுக்க அவர்கள் தாய் மொழியில் தான் அத்தனை பட்ட மேற்படிப்புகளையும் படிக்கிறார்கள். ஆனால் உலக அளவில் கலக்குறாங்க?
மக்கள் தொலைக் காட்சியில் உலக வானூர்தி என்று தான் சொல்லுகிறார்கள். ஆனால் ஒன்றும் கெட்டுப் போனதில்லை.
நாமே நமக்குத் தடை.
ஆரம்பித்தில் பின்னூட்டம் என்பதை கிண்டல் அடித்தார்கள். இப்போது அதுவொரு இயல்பான ஒன்று.
வலைபதிவுகள் அதைப் போலத்தான்.
மாற்றம் உருவாக்க நம் மனதில் மாற்றம் தேவை.
91 விமர்சனம் என்ற போதே ஏதோவொரு ஏடாகூடம் என்று நினைத்தே உள்ளே வந்தேன் வவ்வால்.
ஜோதிஜி,
வாங்க,நன்றி!
சார்வாகன் என்னைப்போன்ற யூத்தான பதிவர்களுக்கு யூத்தா தான் பின்னூட்டமிடுவார் :-))
ஓ அப்போ நிறைய பின்னூட்டம் இருக்கணுமா நீங்க படிக்க?
ஹி...ஹி எல்லாம் தமிழால் யாம் பெற்ற இன்பம் :-))
உலங்கு வானூர்தி இலங்கைத்தமிழால் அறியப்பெற்ற ஒன்று நம்ம மக்களுக்கு சின்ன குழந்தைக்கு ஹெலிகாப்டர் தான் தெரியும்னு ஒரு நம்பிக்கை :-))
பின்னூட்டம்னா என்னமோ புண்ணாக்கு ஊட்டம்னு நினைச்ச மக்களும் இப்போ வழக்கமாக பயன்ப்படுத்தவில்லையா, அதே போல எல்லாம் பழகினால் சரியாப்போயிடும் சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் என சும்மாவா சொன்னாங்க.
பயன்ப்படுத்த படுத்த தன்னால வரப்போகுது.
முன்னர் எல்லாம் வலைப்பதிவுகளுக்கு என தேவையான தமிழ் சொற்களை உருவாக்க, தமிழ் பற்றி கதைக்க என பல பதிவர்கள் இருந்தார்கள், இப்போதெல்லாம் சினிமா பற்றி பேச மட்டுமே கூட்டம் கூடுகிறது,
அப்போது அறிமுகப்படுத்திய சொற்கள் தான் ,
பின்னூட்டம், உரல், சுட்டி, தொடுப்பு போன்றவை.
மனமிருந்தால் மார்க்கமுண்டு!
முகில் என்பது ஈழத்தில் சிலவேளைகளில் வானத்தையும் சிலவேளைகளில் cloud ஐயும் குறிக்கப் பயன்படும்.
அன்பு வவ்வால், அல்லக்கை என்பதற்கு உங்கள் விளக்கம் வித்தியாசமானதாகவும் எதிர்மறை பொருள் தருவதாகவும் இருக்கிறது. கை பெரும்பாலும் எங்கே இருக்கும், தோளில். இந்தக்கை அல்லையில் (அதாவது விலாப்புறம்). எனவே அல்லக்கை, அவ்வளவுதான். எங்கள் கொங்குநாட்டில் அல்லக்கை / அல்லைக்கை என்றும் சொல்வோம்.அதாவது side-characters, அல்லைக்கைகள்
சக்திவேல்,
வாங்க,நன்றி!
முகில் , மாரி என்பன பயன்ப்படுத்தும் இடம் பொறுத்து பொருள் மாறலாம்.
மாரி மழை, மழை மாரியில்லை என கிராமங்களில் பேச்சுவழக்கில் சொல்வதுண்டு, மழைக்கும் மாரி தான் அதே சமயம் மேகத்திற்கும் சொல்லலாம் என முன்னரே சொன்னேன்.
இளைய நில பொழிகிறது இதயம் வரை நனைகிறது....
...
முகிலினங்கள் அலைகிறதே ..முகவரிகள் தவறியதால் அழுகின்றதே
அது மழையோ...
என திரைப்பாடல்களிலும் முகில் என்ற சொல் மேகத்தினை குறிக்கிறது.
------------
அன்பின் அந்தோணி,
வாங்க நன்றி!
ஹி...ஹி கோவையில் அல்லைக்கை என்ற பொருளில் சொல்வார்களா, நானே சில சொற்களை பிரித்து உருவாக்கம் செய்தும் இடுகிறேன்.
அல்லையில் இருக்கும் கை என்றாலும் துணை பாத்திரம் கூட சுற்றும் என்றப் பொருளில் தான் உள்ளது ,நானும் அப்பொருள் வரும்படியாகவே சொல்லி இருக்கேன்.
கூடுதலாக கெடுதல் செய்வதால் என்பதற்கும் பொருத்தமாக இருக்கிறது என சொல்லி இருக்கிறேன், எதிர் மறைக்காக அல்ல.
அல்லையில் கை இருந்தாலும், தோளில் கை இருந்தாலும் பக்கவாட்டில் தானே வருகிறது?
எனவே ஒரு கூடுதல் கையாக செயல்ப்படும் ஆசாமி என வைத்துக்கொள்வதே சரியாக இருக்கும்.
side-kicks or deputy of main character ஐ அல்லக்கை எனலாம் தானே.
தமிழுக்கு நீங்கள் செய்துள்ள சேவைக்கு, ச்சேசே, பணிக்கு, உங்களுக்கு கவுரவ டாக்டர், ச்சேசே மதிப்புமிகு முனைவர் பட்டம் தர, ஏதாவது பல்கலைக் கழகத்திற்கு பரிந்துரை செய்யப் போகிறேன். நான் சொல்வதை பெரும்பாலும் யாரும், ஏன் நானே கூட, கேட்பதில்லை. எனவே, உங்கள் அல்லக்கையைப் பயன்படுத்தி, பட்டத்தைப் பெற்றுக் கொள்ளவும்.
ஏவிஎஸ்,
பழைய பதிவையும் படிக்கிறீங்களே,நன்றி1
முனைவர்(டாக்குடர்) பட்டம் மட்டும் கொடுத்தா போதுமா கூட ஒத்தாழைக்கு அழகான நர்ஸ்(செவிலி)உம் கிடைக்க ஆவண செய்யவும் :-))
வவ்ஜி!உங்ககிட்ட மறுபடியும் தர்க்கம் செஞ்சா இன்னும் விவாதம் நீண்டுகிட்டுப் போய் விடுவதோடு நான் வருணுக்கு வக்கீலாகி விட்டேன்னு சொல்வீங்க.நீங்க நாலடி பாஞ்சா வருண் எட்டடி பாய்கிறார் என்று அவரிடமே சொல்லியிருக்கிறேன். A provocation argument becomes another provocation answer.அதுதான் உங்களுக்கிடையில் நிகழ்ந்தது. விட்டுருவோம்.
doug,
// A provocation argument becomes another provocation answer.//
அதை தான்யா நானும் சொல்லுறேன் , ஆரம்பத்திலேயே ஆங்கிலத்தில் திட்ட ஆரம்பிச்சார்,அது எல்லாம் உங்க கண்ணில் தென் படாமல் போன ரகசியம் என்னவோ?
சரி எப்படியோ போங்க ,ஆங்கிலத்தில் திட்டினால் ஆபாசம் இல்லைனு நினைக்கிற வம்சம் போல நீங்க ,இனிமே நானும் ஆங்கிலத்தில் திட்டிட்டு போறேன் ,:-))
Post a Comment