Tuesday, November 10, 2009

சிரிப்பொலி!

ஷங்கரோட எந்திரன் படத்தில கமல ஹாசன் நடித்திருந்தா என்ன பெயர் வைத்திருப்பார்?

எந்திரன் சந்திரன்!
---------------------------------------------------
மணிரத்னம் படத்தில் மு.க அழகிரி கதாநாயகனா நடிக்கிறார்...
படம் பேர் ?
மதுர நாயகன்!
--------------------------------------------------
நடிகர் ஜீவா அகோரியா ஒரு படத்தில் நடிக்கிறார்...

படம் பெயர் என்ன?

சிவா மனசுல பக்தி!
---------------------------------------------------
முழுவதும் தென் ஆப்பிரிக்காவில எடுக்கிற ஒரு படத்தில் விஜயகாந்த் நடிக்கிறார்.

பேர் என்ன?

கேப்டவுன் பிரபாகரன்!
-----------------------------------------------------
ஷூ கடை வைத்திருப்பவர் ஜேம்ஸ் பாண்ட் ஆக நடித்தால் படத்துக்கு என்னப்பேர் வைப்பாங்க?

குவாண்டம் ஆப் ஷூலேஸ்!
-----------------------------------------------------

தமிழ் படங்களை ரிமேக் செய்தால் நம்ம ஊர் பிரபலங்கள் நடிக்க விரும்பும் படங்கள்.

கலைஞர்- ஆசையில் ஓர் கடிதம்!

ஸ்டாலின் - அடுத்த வாரிசு!

உதயநிதி ஸ்டாலின் - ஒரு வாரிசு உருவாகிறது!

சுப்ரமணியம் சுவாமி- ஜகதலப்பிரதாபன்! அல்லது மணல் கயிறு!

கார்த்திக்- மாயாவி.

வைகோ- அக்ரஹாரத்தில் கழுதை!

மருத்துவர் ராமதாஸ் - பூந்தோட்ட காவல்காரன் அல்லது நாடோடிகள்!

ஜெயலலிதா - இருவர்

தா.பாண்டியன் - தோழா!

சோனியா காந்தி!- இட்டாலியன் ஜாப்(ஆங்கிலம்)

ராகுல் காந்தி - பிள்ளையோ பிள்ளை (கதை, வசனம் மு.க)

மம்தா பானர்ஜி - கிழக்கே போகும் ரயில்!

"ஸ்பெக்ட்ரம்" ராசா - அனுபவி ராஜா அனுபவி!

என்.கே.பி.பி.(எஸ்கேப்)ராஜா - சட்டம் என் கையில்!

விடுபட்ட மற்ற பெருந்தலைகளுக்கும் ஏற்ற மாதிரி ரீமேக்க படங்கள் இருந்தால் நீங்களும் சொல்லுங்க!

Monday, November 09, 2009

பெங்களூரு புத்தக விழா

பெங்களூருவில் பேலஸ் கிரவுண்டில் புத்தக கண்காட்சி நடப்பதாக "முற்போக்கு மற்றும் கலவரப் பதிவர்" தோழர் செந்தழல் ரவி!(இன்னும் பல பட்டங்களுக்கும் தகுதியானவரே, இடம் போதாமையால் இது மட்டும்) "பதிவிட்டிருந்தது சும்மா கிடந்த என் மனச்சங்கை ஊதிவிட்டிருந்தது, அதற்கேற்றவாறு பெங்களூருக்கு செல்லும் வாய்ப்பு வந்தது , அப்படியே புத்தக கண்காட்சியையும் ஒரு நடைப்போய்ப்பார்த்தாச்சு, பார்க்க மட்டுமே செய்தேன் எதுவும் வாங்கவில்லை.

மெஜஸ்டிக் கெம்பே கவுடா பேருந்து நிலையத்தில் இருந்து ஆட்டோவில் சென்றேன் மீட்டர் போடாமல் குத்து மதிப்பாக 100 வாங்கிக்கொண்டான்(ர்), ஆனால் வரும் போது மீட்டர் போட்ட ஆட்டோவில் 35 ரூபாய் தான் ஆச்சு! (அது வேறு வழி, இது வேறு வழியா எனத்தெரியவில்லை)அப்போது தான் நான் பல்பு வாங்கியது தெரிந்தது!


கண்காட்சி என்றார்கள் ஆனால் அங்கே யாரும் கண்ணை தோண்டி காட்சிக்கு வைத்திருக்கவில்லை(கண்காட்சி என்பது தவறு கருத்துக்காட்சி தான் சரி என நான் படிக்கும் காலத்தில் தமிழாசிரியர் சொன்னார்) , புத்தகங்கள் தான் அதுவும் பெரும்பாலும் கனட, ஹிந்தி , ஆங்கிலம் கொஞ்சமே கொஞ்சம் தமிழ் நூல்கள் கொண்ட கடைகளை விரிந்திருந்தார்கள்.

மழைக்கு பயமில்லாத உள்ளரங்குகளில் அமைத்திருந்தார்கள். நுழைவு சீட்டுக்கொடுக்கும் இடம் கொஞ்சம் உள் தள்ளி இருந்ததால் பெரும்பாலோர் /சிலர் அதற்கு முன்னரே இருந்த வாசல் வழி சும்மாவே போய்க்கொண்டிருந்தார்கள்.நான் டிக்கெட் எடுத்து தான் சென்றேன்(மொழி தெரியாத இடத்தில் வம்பு வேண்டாம் என்று தான்), 20 ரூபாய் , இது சென்னை புத்தக விழா கட்டணத்தை விட அதிகம்.ஆனாலும் வழ வழப்பான , மங்கலான அட்டைகளுடன் தடித்த , மெலிந்த என பல ரூபாய் விலைகளில் பல விதமான புத்தகங்கள் கண்களைக்காய்ச்சி எடுத்து விட்டது!

இரவு 8.30 வரைக்கும் என சொல்லி விட்டு 8 மணிக்கே கடையை மூட ஆரம்பித்து விட்டார்கள். அரங்கில் புத்தக விழா பேனர்களில் எல்லாம் ஒரு உப்புமா நடிகர் புத்தகம் வாசிப்பது போன்ற படத்தை பெரிதாக போட்டிருந்தார்கள், விளம்பர யுக்தியாம்!

இதற்கு மேலும் அதிகம் எழுதி எழுத்து வன்கொடுமை எதுவும் செய்யாமல் சுமாராக எடுத்த சில புகை இல்லாத(நிழல்) இல்லாத சில படங்களை மட்டும் பதிவில் போட்டு விட்டு எஸ் ஆகிக்கொள்கிறேன்!





நுழைவுவாயில் அலங்கார விளக்குகளுடன் ஜொலித்தது!(மழை வந்து எனது திட்டத்தை எல்லாம் கெடுத்திருந்தது)

விஸ்தாரமான உணவகம்! நுழைவுக்கு அருகிலேயே உள்ளது.பிரெட் ஆம்லெட் கிடைக்கிறது வேறு என்ன வைத்திருக்கிறார்கள் என தெரியவில்லை.

அனுமதி சீட்டு வழங்கும் இடம்!

நூல் அரங்கம்.
சாகித்ய அகதமியின் அரங்கம்.

சென்னையை சேர்ந்த டவ் மல்டி மீடியாவின் அரங்கு.(பொதுவாகவே எல்லா அரங்குகளிலும் சொற்ப கூட்டமே இருந்தது) ஹாயாக தேநீர் பருகிக்கொண்டிருந்தார்கள்.
திருமகள் தமிழ் நூல் அரங்கம்

கிழக்கு பதிப்பத்தின் அரங்கம். நான் இங்கே வரும் போதெல்லாம் கடையை கட்டும் நேரம் ஆகி விட்டதால் தார்ப்பாய் போட்டு மூடிக்கொண்டிருந்தார்கள்.

நேஷனல் புக் டிரஸ்ட்டின் அரங்கம்

ஆனந்த விகடன் அரங்கம்.
ஒரு தமிழ் ஆன்மீக நூல் பதிப்பகத்தின் அரங்கம்.
அரிய , மற்றும் பழமையான நூல் அரங்கம் என்றுப்போட்டிருந்தார்கள், அட்டை பிய்ந்த நூல்கள் எல்லாம் இருந்தது(எவ்வளவு பிய்ந்து இருக்கோ அவ்வளவு அரிய வகை போல).சென்னையில் பெல் ரோட்டில் இது போல பல கடைகள் இருக்கு என்பதால் அரங்கை அதிகம் ஆராயவில்லை.

எதை எடுத்தாலும் 50 ரூபாய் என சகாய விலையில் ஒரு கடை(வாசிக்க பிடிக்காத வகையில் பல நூல்கள் இருந்தது)

எதை எடுத்தாலும் 100 ரூபாய் தான் முன்னர் கூறிய அதே ரக நூல்கள் தான், ஒரு வேலை தம்கட்டி தேடினால் நல்ல நூல்கள் கிடைக்கலாம்.

விவசாயம் சம்பந்தமான குறுந்தகடுகள் வைந்திருந்தார்கள்.

இராம கிருஷ்ண மடத்தின் சார்பில் அனைவருக்கும் இலவசமாக சிறு கையேடுக்கொடுத்துக்கொண்டிருந்தார்கள் இங்கே!

இந்த கடையில் சிறிய கையடக்கமான மின்சார தையல் எந்திரங்கள் விற்றார்கள் (படித்துக்கிழிந்த நூல்களை தைக்குமா எனத்தெரியவில்லை, நூல் கொண்டு "நூல்" தைக்க முடியாதா?).

இன்னும் கொஞ்சம் படங்கள் உள்ளன ஆனால் அவை எல்லாம் இன்னும் சுமாராகவே வந்திருக்கு , அதையும் போட்டு மக்களை பரிசோதிக்க விரும்பவில்லை.

Friday, November 06, 2009

நீள் உறக்கம்



ஓர் உயிரினம் வாழ்வியலுக்கு சாதகமான சூழல் இல்லாத காலங்களில் தனது செயல்பாடுகளை குறைத்துக்கொண்டு நீண்ட உறக்கத்திலாழ்வதனை பொதுவாக ஹைபர்னேஷன்(hibernation) என்பார்கள்.வெப்ப ரத்த உயிரினங்கள் குளிர்காலத்தில் மேற்கொள்ளும் நீண்ட குளிர் உறக்கத்திற்கு தான் ஹைபர்னேஷன் என்று பெயர்.


அதுவே குளிர் ரத்த உயிரினங்கள் கோடையில் மேற்கொள்ளும் கோடை உறக்கத்திற்கு

எஸ்டிவேஷன்(estivation) என்று பெயர். அதுவே பூச்சிகள் மேற்கொள்ளும் நீண்ட உறக்கத்திற்கு டயாபாஸ்(diapause) என்று பெயர்.


இந்த மூன்றும் நீண்ட காலத்திற்கு மேற்கொள்ளும் உறக்கம்,அதுவே மிகச்சிறிய கால இடைவெளியில் மேற்கொள்ளும் உறக்கத்திற்கு பெயர் டோர்போர்(torpor).இது காலையில் தூங்கி இறவில் எழுவது அல்லது இரவில் தூங்கி காலையில் எழுவது போன்றது இதனை சாதரணமாக கால் செண்டர் பார்டிகளும், மனிதர்களும் செய்வது தான்.


ஆனால் ஹைபர்னேஷன்,எஸ்டிவேஷன், டயாபாஸ் எல்லாம் சில மாதங்கள் தொடர்ந்து உணவின்றி தூங்குவது, இது மனிதருக்கு சாத்தியமில்லாத ஒன்று!அந்த உயிரினங்களின் ஜீன்களின் இதற்கான தகவல்கள் பொதிந்துள்ளன. தாவரங்களிளும் உண்டு ஆனால் அது விதைகளுக்கு மட்டுமே, தேவையான ஈரப்பதம் இல்லாமல் உலர்ந்து விதை முளைக்கும் தன்மை இழந்து விடாமல் இருக்க குறிப்பிட்ட அளவு ஈரப்பதம் கிடைக்கும் காலம் வரைக்கும் உயுருடன் விதை இருக்க கடினமான மேல் தோலுடன் விதை இருக்கும்,இந்நிலைக்கு டார்மன்சி என்பார்கள்,அத்தகைய விதைகளுக்கு டார்மண்ட்(dormant) விதை எனப்பெயர்.எனவே தான் விதைக்கும் முன்னர் தண்ணீரில் சில விதைகளை நனைத்து வைத்து விதைப்பார்கள்.



ஏன் இந்த நீண்ட உறக்கம்?

கோடை/குளிர் என்ற இரு கால நிலையிலும் நீர்/உணவுக்கு ஏற்படும் தட்டுப்பாடும், புற வெப்பம் உடல் வெப்ப நிலையை விட அதிகம்/குறைவு ஆவதால் ஏற்படும் சூட்டினை/குளிர்ச்சியை தாங்கும் திறன் இல்லாமை மேலும் மனிதனை போன்று ஏசி/ஹீட்டர் போட்டுக்கொண்டு வாழிடத்தின் தட்ப வெப்பத்தினை கட்டுப்படுத்தும் வசதி விலங்குகள்/பூச்சிகளுக்கு இல்லாமையால் இயற்கையாக அமைந்த தகவமைவே இந்த நீண்ட உறக்கம்.


எப்படி நீண்ட உறக்கதிற்கு தயாராவது?

குளிர்/கோடை காலம் வரும் முன்னரே முடிந்த வரை அதிகம் உணவினை உண்டு உடல் எடையை அதிகரித்து கொள்ளும் ,இதனால் உடலில் கூடுதல் கொழுப்பு சேரும்,இந்த கொழுப்பு தான் நீள் உறக்கத்தின் போது உயிர் வாழ சக்தி அளிக்கும்.

அவ்வாறு தேவையான கொழுப்பு சேமிப்பை முடித்ததும் எதிரிகள் வராத பாதுகாப்பான ஒரு இடத்தினை தேர்வு செய்து உடலினை சுருட்டிக்கொண்டு தூங்க ஆரம்பித்து விடும்.இவ்வாறு தூங்கும் போது கிட்டத்தட்ட இறந்தவை போன்றே காணப்படும், உடனே எழுந்திருக்க முடியாது, எழுந்தாலும் நடக்கவோ ஓடவோ முடியாது இந்த நிலையில் எதிரிகள் கண்ணில் பட்டால் எளிதாக கொத்துக்கறி ஆகிவிடும்.


நீள் உறக்கத்தின் போது இதய துடிப்பு,ரத்த ஓட்டம்,சுவாசம் ஆகியவை மிகக்குறைந்த அளவே நடக்கும் உடல் வளர்சிதை மாற்றங்களும் இருக்காது.கிட்டத்தட்ட சேப் ம்னோடில் உயிரினை உடலில் தக்க வைத்துக்கொள்ளும் அளவுக்கே உள் உறுப்புகள் செயல்படும். குளிர் காலத்தில் புற வெப்பம் 30-40 டிகிரி இருந்தால் அதே வெப்ப நிலைக்கு உடலினை கொண்டு வரவே இந்த செயல்பாடுள்.சாதாரணமாக வெப்ப ரத்த உயிரினங்களின் வெப்பம் 98.6 பாரன்ஹீட் இருக்கும்.

குளிர் ரத்த உயிரினங்கள் நிலையான உடல் வெப்பத்தினைக்கொண்டிருக்காது புற வெப்பம் 100 என்றால் அவையும் 100க்கு போகும் ,60 என்றால் அவையும் 60க்கு போகும், ஆனால் மிக மோசமான பருவக்காலத்தில் இப்படி உடல் வெப்பத்தினை அடிக்கடி மாற்றிக்கொண்டும், உணவு வேட்டைக்கு போவதும் சாத்தியப்படாது என்பதால் குளிர் ரத்த உயிரினங்களும் கோடையில் இந்த உறக்கத்தினை மேற்கொள்கின்றன.


நீள் உறக்கம் கொள்ளும் சில உயிரினங்களின் பட்டியல்:


குளிர் ரத்த உயிரினங்கள்:


தேரை













ஆமை










பல்லி


பாம்பு(பெரும்பாலும் பாலைவன பாம்புகள்-ராட்டில் ஸ்னேக்)



பூச்சிகள்:











தேனீ


வெப்ப ரத்த உயிரினங்கள்:

சிப்மங்க்










லெமுர்












கரடி











ஹேம்ஸ்டர்

அணில்


கூடவே வவ்வாலும் நீள் உறக்கம் கொள்ளும்!













மனிதரில் இத்தகைய நீள் உறக்கம் சாத்தியமில்லாது போனாலும் இதிகாசத்தில் இது போன்ற நீள் உறக்கம் கொண்ட ஒருவர் உண்டு பெயர் கும்ப கர்ணன்(என்னைப்பொருத்தவரை கும்பகர்ணன் மனிதனே). ஆறு மாதம் உறக்கம் ஆறு மாதம் விழிப்பு என வாழும் வசதிக்கொண்டவர்! இதிகாசங்கள் அறிவியல்ப்பார்வை கொண்டது என ஜல்லி அடிப்போருக்கு உதவலாம் இது!