Tuesday, November 10, 2009

சிரிப்பொலி!

ஷங்கரோட எந்திரன் படத்தில கமல ஹாசன் நடித்திருந்தா என்ன பெயர் வைத்திருப்பார்?

எந்திரன் சந்திரன்!
---------------------------------------------------
மணிரத்னம் படத்தில் மு.க அழகிரி கதாநாயகனா நடிக்கிறார்...
படம் பேர் ?
மதுர நாயகன்!
--------------------------------------------------
நடிகர் ஜீவா அகோரியா ஒரு படத்தில் நடிக்கிறார்...

படம் பெயர் என்ன?

சிவா மனசுல பக்தி!
---------------------------------------------------
முழுவதும் தென் ஆப்பிரிக்காவில எடுக்கிற ஒரு படத்தில் விஜயகாந்த் நடிக்கிறார்.

பேர் என்ன?

கேப்டவுன் பிரபாகரன்!
-----------------------------------------------------
ஷூ கடை வைத்திருப்பவர் ஜேம்ஸ் பாண்ட் ஆக நடித்தால் படத்துக்கு என்னப்பேர் வைப்பாங்க?

குவாண்டம் ஆப் ஷூலேஸ்!
-----------------------------------------------------

தமிழ் படங்களை ரிமேக் செய்தால் நம்ம ஊர் பிரபலங்கள் நடிக்க விரும்பும் படங்கள்.

கலைஞர்- ஆசையில் ஓர் கடிதம்!

ஸ்டாலின் - அடுத்த வாரிசு!

உதயநிதி ஸ்டாலின் - ஒரு வாரிசு உருவாகிறது!

சுப்ரமணியம் சுவாமி- ஜகதலப்பிரதாபன்! அல்லது மணல் கயிறு!

கார்த்திக்- மாயாவி.

வைகோ- அக்ரஹாரத்தில் கழுதை!

மருத்துவர் ராமதாஸ் - பூந்தோட்ட காவல்காரன் அல்லது நாடோடிகள்!

ஜெயலலிதா - இருவர்

தா.பாண்டியன் - தோழா!

சோனியா காந்தி!- இட்டாலியன் ஜாப்(ஆங்கிலம்)

ராகுல் காந்தி - பிள்ளையோ பிள்ளை (கதை, வசனம் மு.க)

மம்தா பானர்ஜி - கிழக்கே போகும் ரயில்!

"ஸ்பெக்ட்ரம்" ராசா - அனுபவி ராஜா அனுபவி!

என்.கே.பி.பி.(எஸ்கேப்)ராஜா - சட்டம் என் கையில்!

விடுபட்ட மற்ற பெருந்தலைகளுக்கும் ஏற்ற மாதிரி ரீமேக்க படங்கள் இருந்தால் நீங்களும் சொல்லுங்க!

21 comments:

பாரதி said...

itk

வவ்வால் said...

itk னு எப்படி தெரியும்? அப்படி அழைக்கும் பாரதி-யார்?

Anonymous said...

ஐதிங்க் சாமியோவ்,

உம்மைத் தேடி தேடி எல்லாரும் சலிச்சு போய்ட்டாங்க! திடீர்னு ஒரு நாள் வந்து தலையை காட்டிட்டு போயிட்டீராம்! உம்மோட மேட்டர் யாருக்குமே புரியல!

முரட்டுக்காளை

padma said...

itk,
welcome..ethana naalachu? nalama...happy to see ur posts.ethana murai vanthu old posts mattum paathuttu poiruken..

padma said...

murattu kaalai nalama?ennai theriyutha?

Anonymous said...

Padma = veenanara?

MurattukkaaLai

Tamil Home Recipes said...

நீங்கள் சொல்வது அருமை

Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

ராஜ நடராஜன் said...

இந்த கடை முன்னாடி நல்லா வியாபாரமாகிட்டுத்தானே இருந்தது!!!

TBCD said...

காணாமல் போனவர்கள் பட்டியலில் வவ்வால் வந்து பல காலமாகிவிட்டது !

padma said...

பாருங்க ITK உங்களை இந்த வலையுலகம் மறக்காது .நண்பர் ராஜா நடராஜன் உங்களுக்காக கவிதையே எழுதிருக்கார் .we miss u சீக்கிரம் வாங்க .எங்கூர் பக்கம் வந்தீங்களா .ந மெயில் அனுப்பறேன் படிங்க .கீப் இன் டச் . என் புதிய இந்த வருடத்திற்கு உரிய பதிவெல்லாம் படிங்க. thanks a lot for ur comments

Anonymous said...

enga poiteenga itk...ellarum romba miss pannarom...eppa varuveenga... pazhaya itk va naanga paarkanum...anbudan geetha.

Anonymous said...

enga poiteenga itk...ellarum romba miss pannarom...eppa varuveenga... pazhaya itk va naanga paarkanum...anbudan geetha.

சுரேகா.. said...

வாங்க..வாங்க..வாங்க.. என்னங்க இடையில் ரொம்ப நாளா பாக்கவே முடியலை!

உங்களை நிறைய மிஸ் பண்ணினேன்.

களத்துல எறங்கி பட்டைய கெளப்புங்கப்பு!

நறுமுகை said...

உஷ்ஷப்பா.. ரொம்ப பழைய ஸ்டைல் சோக்குங்க.. புதுசா எதாவது???

\www.narumugai.com

நானானி said...

ரொம்ப நாளாச்சு பாத்து. தலை கீழா தொங்கியே தூங்கிட்டீங்களா?

தலைவர்களுக்கான பட டைட்டிலை சொன்னீங்க...ரொம்ப நொந்துருப்பீங்க போல.

வால்பையன் said...

நல்லாயிருக்கு தல

பார்வையாளன் said...

நல்லா இருக்கு

ஆமினா said...

உங்களை வலைச்சரத்தில் இன்று அறிமுகப்படுத்தியுள்ளேன். நேரம் இருக்கும் போது பார்க்கவும் :-)

http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_26.html

இனிய தீபாவள் நல்வாழ்த்துக்கள்

மாய உலகம் said...

சிரிப்பொலி ரசிக்க வைத்தது....

வலைச்சரத்தில் அறிமுகமாகிருக்கும் தங்களுக்கு வாழ்த்துக்கள்...

வவ்வால் said...

ஆமினா,

வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி அங்கும் தலைகீழாக தொங்க வாய்ப்பளித்தமைக்கு நன்றி
--------------------------------------------------
மாய உலகம்,

வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி, அப்படியே எனது புதிய பதிவுகளும் பாருங்க, இது 2 வருடத்து முந்திய சரக்கு!
---------------------------------------------------

நான் அஞ்ஞாத வாசம் சென்றிருந்த போதும்,என்னை மறக்காமல் வந்து உற்சாகப்படுத்திய அன்பு நெஞ்சங்கள்,

பார்வையாளன், வால்பையன், நனானி,நறுமுகை,சுரேகா, கீது,உஷ், திபிசிடி,ராஜ்,போகி,தமிழ்வீட்டு சமையல்,புல்ஸ் சாமியோவ்!,பாரதி ஆகிய அனைவருக்கும் மில்லியன்ஸ் அன்ட் ட்ரில்லியன்ஸ் நன்றிகள்.தமிழில் சொல்வதென்றல் சங்கம் மற்றும் பதுமம் கோடி நன்றிகள்!