கருங்காலி கூட்டமும் குமரி மாவட்டமும்!
குமரி மாவட்டம், பழைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் அடக்கி வைக்கப்பட்டிருந்தது,அய்யா வைகுண்ட சாமி,மார்ஷல் நேசமணி போன்றோர் போராடி, தமிழகத்துடன் 1956 இல் இணைத்தனர், இந்த நவம்பர் 1உடன் 55 ஆண்டுகள் ஆகிறது. இன்னும் அதிக தகவல்கள் வேண்டுவோர் இணையத்தினை நாடலாம்.
இப்போ இதுக்கு என்னா என்கிறீர்களா?
இந்த வார குமுதம் ரிப்போர்ட்டரில்(6.11.2011) ஒரு கட்டுரை வந்துள்ளது, அதன் சாரம்சம் இதுவே,
குமரி கேரளாவுக்கே சொந்தம் என ஒரு அமைப்பு கேரளாவில் போராடி வருகிறதாம் (பெயர் போடவில்லை) இவர்களுடன் வகுண்டசாமி தர்ம பரிபாலன சங்கம் என்ற அமைப்பும்(தலைவர் சந்திர சேகரன்) சேர்ந்து கேரளா சட்டம்மன்றம் எதிரே நவம்பர் 1 ஆம் தேதி தர்ணா நடத்தப்போவதாக அறிவித்துள்ளார்கள்.மேலும் அவர்கள் இது நாள் வரை நவம்பர் ஒன்றை துக்க தினமாக அனுசரித்து வந்தார்களாம்!
இதற்கு அவர்கள் சொல்லும் காரணம் , குமரி மாவட்டம் புறக்கணிக்கப்பட்டுள்ளது, தமிழக அரசு குமரி மாவட்டத்திற்கு சாலை முதலான எந்த அடிப்படை வசதிகளையும் செய்து தரவில்லையாம்(ஒரு மெடிக்கல் காலேஜ் கூட அங்கே புதுசா வந்துச்சே)
இது பற்றி பாலப்பிரஜாப்தி அடிகளிடமும் கேட்டு இருக்கிறார்கள்,இவரும் அந்தப்போராட்டத்தில் கலந்துக்கொள்வதாக சொல்லியுள்ளார். அவர் சொன்ன கருத்துகள்,
#தமிழ் நாட்டில் குமரி மாவட்ட இணைப்புக்காக போராடியவர்களுக்கு சிலை வைக்கவில்லை(அட டா சிலை வச்சா காக்கா உச்சா தானே போகும் என்ன ஒரு கோரிக்கை),
#தமிழகத்துடன் குமரி இணைந்ததை தமிழ் நாட்டில் யாரும் கொண்டாடவில்லை,
#ஆனால் கேராளாவில் குமரி பிரிந்து போனதற்காக வருந்துகிறார்கள்,
அவர்களுக்கு எங்கள் மீது இன்னும் பாசம் இருக்கு, எனவே இங்குள்ள மக்கள் விரும்பினால் குமரி கேரளாவுடன் சேரலாம், வேணாம்னு சொன்னா வேண்டாம்னு சொல்லி இருக்கார்.சேர வேண்டாம்னு போராடினால் அதிலும் முதல் ஆளாக கலந்து கொள்வேன் என்றார்.(ரொம்ப தெளிவு)
இதே கருத்தை தமிழ்நாடு நாடார் மஹாஜன சங்க தலைவர் கருங்கல் ஜார்ஜ் அவர்களும் பிரதிபலித்தாராம்(கருங்கல்லு பிரதிபலிக்குமா அது என்ன கிரானைட்டா)
ஜான் ஜேக்கப், கிள்ளியூர் காங் எம் எல் ஏ மட்டும் இது ஜாதி, மதம் சார்ந்து கிளம்புற பிரச்சினை இதுக்கு ஆதரவு தர மாட்டேன்னு வெளிப்படையா பேசி இருக்கார்(காங் ல கூட வெளிப்படையா பேச ஆள் இருக்குப்பா)
போறப்போக்க பார்த்தா குமரி மாவட்டத்த லெமுரியா கண்டத்துக்கூட இணைக்கனும்னு யாரேனும் போராடுவார்களோனு பயமா இருக்கு! :-))
சரி சென்னப்பட்டினத்த ஆந்திரா கூட இணைக்கனும் யாரும் போராடுவதற்குள், சென்னை தமிழ் நாட்டுக்கேனு நாம போராட்டத்த ஆரம்பிச்சுடுலாம் ..ரெடி ஸ்ஸ்ட்டார்ட் த மியுஜிக்!
பின் விளைவு குறிப்பு:
ரிப்போர்ட்டர் என்ற வார பத்திரிக்கையில் வந்தசெய்தியே இது , முழுதுமாக காபி ,பேஸ்ட் செய்யப்படவில்லை, இது ஒரு " gist news" எனவே சந்தேகம் இருப்பவர்கள் அந்த பத்திரிக்கையைப்படித்து தெரிந்து கொள்ளவும்.
13 comments:
வணக்கம் நண்பரே
நீங்கள் சொல்வது கொஞ்சம் கவனத்தில் வைக்க வேண்டிய விடயமே!.நன்றி
சார்வாகன்,
வணக்கம் நண்பரே, நன்றி,எதையெல்லாமோ காபி&பேஸ்ட் பன்ற மக்கள் இதை கண்டுக்கலை சரி நாமாவது பண்ணுவமேனு பண்ணிட்டேன். ஊருல அக்கப்போர் பண்றதுக்குனே ஒரு கூட்டம் எப்பவும் தயாரா இருக்குது நண்பா!
கேரளாவில
ஓட்டுக்கு பணம் கிடைக்காது
டிகிரி முடிச்ச பெண்களுக்கு 50000 பணம் கிடைக்காது
பிரசவத்திற்க்கு பணம் கிடைக்காது
இலவசஅரிசி கிடையாது
இலவச பேன் மிக்ஸி கிரைண்டர் டிவி ஏகப்பட்டது
கிடைக்காது போனா போகட்டும் விடுங்க...
குமரி மாவட்டம் தமிழக அரசால் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது என்ற கருத்து மக்களிடையே பரவலாக உண்டு. மருத்துவக் கல்லூரிகூட நீண்ட நாள் கோரிக்கைக்குப் பின்பு வந்ததுதான். திராவிடக் கட்சிகளைவிட மற்ற கட்சிகளுக்கு ஆதரவு அதிகமாக இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். நெல்லை எங்கள் எல்லை குமரி என்றும் தொல்லை என்று சொன்னவர்தான் கருணாநிதி. ஆனால் கேரளாவுடன் சேர்ந்தாலும் ஒரு முன்னேற்றமும் இருக்காது.
வீடு,
வாங்க,வணக்கம், நன்றி!
நீங்க சொல்றத எல்லாம் வாங்கிட்டு போனால் ? அப்புறமா வீடு கூட தரும் திட்டம் இருந்துச்சே இன்னும் இருக்கா?ஏற்கனவே பறிப்போன பீர் மேடு, தேவிக்குளம், பத்மநாபபுரம் எல்லாம் வாங்க சொல்லி நாமும் சவுண்டு விட்டிருக்கணும்.
ரோபின்,
வாங்க,வணக்கம்,நன்றி!
தமிழ் நாட்டுல பல மாவட்டமும் அப்படிப்புறக்கணிப்பு நிலைல இருக்கு, எல்லாரும் வேற மாநிலம் போறேன்னு சொன்னா சரியா வருமா? தர்மபுரி, நாகப்பட்டினம் மாவட்டம்லாம் போன பாருங்க ஒரு முன்னேற்றமும் தெரியாது.
//நெல்லை எங்கள் எல்லை குமரி என்றும் தொல்லை என்று சொன்னவர்தான் கருணாநிதி.//
ஹி..ஹி..அதுலாம் கலிஞருக்கு உடன் பிறப்புகள் அடங்காமல் கொடுத்த இம்சையால் சொன்னது.
கேரளா என்னமோ துபாய் போல நினைப்பு நீங்க சொன்னா மாதிரி தான் அங்கே சேர்ந்த டவுன் பஸ் கூட வராது ஊருக்கு.கேரளாவில டாஸ்மாக் ,போல சாராயக்கடை,கள்ளுக்கடை இருக்கு அதுக்கு ஆசப்பட்டாங்களோ என்னமோ?
அணுசக்தி அபாயம் குறித்து.
123-agreement.blogspot.com
http://poar-parai.blogspot.com/search/label/123
அனானி,
வருகைக்கு நன்றி, உங்கள் சுட்டியும் பார்க்கிறேன், எவ்வளவோ பார்த்தாச்சு இதப்பார்க்க மாட்டோமா?
ஆஹா இன்னொரு பிரச்சினையா திசை திருப்ப ?
சூர்யா,
வாங்கோ, என்னாது திசை திருப்பவா,யாரை,எதை, இது குமுதம் ரிப்போர்ட்டரில் வந்த்அ செய்தினு போட்டு இருக்கேனே பார்க்கலையா?
//சரி சென்னப்பட்டினத்த ஆந்திரா கூட இணைக்கனும் யாரும் போராடுவதற்குள், சென்னை தமிழ் நாட்டுக்கேனு நாம போராட்டத்த ஆரம்பிச்சுடுலாம் ..ரெடி ஸ்ஸ்ட்டார்ட் த மியுஜிக்!//நீங்களே போட்டுக்கொடுத்துடுவீங்க போல இருக்குதே!சென்னைப்பட்டினம் மெய்யாலுமே ஆந்திராக்காரனுடையதுதான்.திருப்பதியைக் கொடுத்திட்டு மெரினாவை வாங்கிகிட்டது.திருப்பதி சாமி பெரிசா?மெரினா கடல் பெரிசான்னு ஒரு பட்டிமன்றம் ஆரம்பிக்கலாம் போல இருக்குதே:)
//ஏற்கனவே பறிப்போன பீர் மேடு, தேவிக்குளம், பத்மநாபபுரம் எல்லாம் வாங்க சொல்லி நாமும் சவுண்டு விட்டிருக்கணும்.//இந்த விபரமெல்லாம் தெரிஞ்ச ரெண்டே பேர்!
ராஜ்,
வாங்க ,வணக்கம்,நன்றி!
//சென்னைப்பட்டினம் மெய்யாலுமே ஆந்திராக்காரனுடையதுதான்.திருப்பதியைக் கொடுத்திட்டு மெரினாவை வாங்கிகிட்டது.//
நீங்களும் அத நம்புனிங்களா?
அப்படி சொல்லி நம்ம ஆட்களை அமுக்கிட்டாங்க, அப்போ தாய் மாநிலம் சென்னை மாகாணம்,எனவே நாம தான் முன்ன நின்னு எல்லை பிரிக்க வரைவு கமிட்டி அமைச்சு இருக்கணும், நமக்கு தான் உரிமை அதிகம், நம்ம முதலமைச்சர் அப்போ காமராசர், அவருக்கு தேசியவாத எண்ணம் அதிகம் ,மேலும் இந்திராகாந்தி-காமராசர் பனிப்போர் ,அதான் ஆந்திரா,கர்நாடகா, கேரளாவுக்கு அவங்க கேட்டதுக்கு எல்லாம் மறுப்பு சொல்லாம இருந்தார் இது பின்னால பெரிய அரசியலே இருக்கு. முழுசா அப்புறம் பேசலாம். மபொசி தான் ஏதோ கொஞ்சத்துக்கும் கொஞ்சம் மீட்டார்.
கச்ச தீவ இலங்கைக்கு நாம தான விட்டுக்கொடுத்தோம், அது போல தான் திருப்பதியும், சென்னைக்கு பதிலா எல்லாம் இல்லை.
Post a Comment