Tuesday, November 13, 2012

துப்பாக்கி (THE PISTOL OR GUN): ஒரு மாற்றுப்பார்வை.



 (ஹி...ஹி மறந்து போய் டிரிக்கரை அமுக்கிடாதிங்க ,சிதறிடும் தலை)

 துப்பாக்கி என்ற சொல்லின் மூலம் பாரசீகம் ஆகும்,முகலாயர்கள் காலத்தில் இந்தியாவில் புழக்கத்திற்கு வந்தது. பல ஹாலிவுட் படங்களிலும் துப்பாக்கிக்கு முக்கிய இடம் உண்டு , குறிப்பாக வெஸ்டர்ன் படங்கள் என சொல்லப்படும் மாட்டு பையன்கள்(Cow boy) படங்களில் துப்பாக்கிக்கு முக்கிய இடம்  உண்டு, எவ்வளவு வேகமாக துப்பாக்கியால் சுடுகிறார்களோ அதற்கேற்ப பெரிய வீரன் என பெயர் பெற்றவர்களாக கருதப்படுவார்கள்.

மிக பழங்காலத்தில் ஒரு முறை சுடும் சிங்கிள் ரவுண்ட் துப்பாக்கிகள் தான் புழக்கத்தில் இருந்தது, ஒரு இரும்பு குண்டு ,வெடி மருந்து எல்லாம் போட்டு கிடித்து சுட வேண்டும் பின்னரே தோட்டா எனப்படும் வெடிமருந்தும், குண்டும் இணைந்த அமைப்பு உருவாக்கப்பட்டது ,இதனை கேட்ரிஜ் என்பார்கள். முனையில் இருக்கும் உலோக துண்டே புல்லட் எனப்படும்.

கேட்ரிஜ்= புல்லட் + ஷெல்(கேஸ்) ஆகும்.

தோட்டாவின் பாகங்கள்:


The case is the brass cylinder that all the other parts fit into.

The primer is the component that the hammer of the gun hits and ignites.

Powder is the chemical compound ignited by the primer that propels the bullet.

The bullet is a projectile, usually made of lead and other metals, that the powder fires out the barrel of the gun.

சிங்கிள் ரவுண்ட் துப்பாக்கியால் வேகமாக சுட முடியவில்லை, என ஒன்றுக்கு மேற்பட்ட தோட்டாக்களை நிரப்பும் வசதியுள்ள துப்பாக்கியை உருவாக்கினார்கள். இம்முறையில் 5-6 தோட்டாக்களை சிலிண்டரில் நிரப்பி , சுடும் பேரலுக்கு வருமாறு சுழல வைத்திருப்பார்கள், இதனை ரிவால்வர் என பெயரிட்டார்கள்.  தமிழில் கூட நிறைய வெஸ்டர்ன் டைப் படங்கள் தழுவி எடுக்கப்பட்டன , தமிழின் ஆஸ்தான கவ்பாய் ஹீரோ மறைந்த மக்கள் கலைஞர் ஜெய்சங்கர்  தான். அவரோட கையில ரிவால்வர் சும்மா விளையாடும் :-))



ஜெய்சங்கரின் கவ்பாய் படங்களில் குறிப்பிட தக்கவை கங்கா, எங்க பாட்டன் சொத்து, ஜக்கம்மா, கருந்தேள் கண்ணாயிரம் போன்றவை ஆகும். அக்கால ஒளி ஓவியர் கர்ணனின் கேமிராவும்,இயக்கமும் போட்டிப்போட்டுக்கொண்டு துப்பாக்கி சண்டை ,வாளைக்குமரிகளின் வெண்ணிர ஆடை  ஜில் ஜிலீர் ஜலக்கிரிடை என திரை ரசிகர்களின் கண்ணுக்கு  விருந்து படைத்தன என சொன்னால் மிகையல்ல.

எத்தனை நாட்களுக்கு தான் வறட்சியாக ஆண் கவ்பாய்களை பார்ப்பது என தெலுகு மணவாடுகள் வித்தியாசமாக பெண் கவ்பாய் படங்களை எடுத்தார்கள், ஜோதி லக்‌ஷ்மி, விஜயலலிதா ,விஜய கோகிலா ஆகிய இளமை துள்ளும் காந்தக்கண் காரிகைகளின் மலர்க்கரத்தில் மரண ஆயுதமாம் ரிவால்வர் ஏந்தி ரிவார்வர் ரீட்டா, கன் ஃபைட் காஞ்சனா ,புல்லட் ராணி என அவதாரம் எடுத்து தீய சக்திகளை சுட்டு தள்ளினார்கள், படம் பார்த்த வாலிப வயோதிக அன்பர்களும் தூக்கத்தினை தொலைத்த 70's கால கட்டம் அது. பின்னர் அப்படங்கள் தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டு தமிழக ரசிகர்களையும் சித்திரவதைக்குள்ளாக்கியது வரலாறு :-))

ஆரம்ப காலத்தில் ரிவால்வர்களின் சிலிண்டர் தானாக சுழலாது , அதனை கையால் சுழற்ற வேண்டும், இப்படி கையால் சுழற்றிக்கொண்டே சுடுவதே ஒரு தனி கலை, பழைய ஹாலிவுட் வெஸ்டர்ன் படங்களில் இப்படி சிலிண்டரை சுழற்றவே இன்னொரு கையை துப்பாக்கியின் மீது வைத்திருப்பது போல காட்டுவார்கள்.

சில கில்லாடியான கவ்பாய்கள் மின்னல் வேகத்தில் சுட தோட்டாக்கள் நிரப்பிய சிலிண்டரை வேகமாக ஒரு சுற்று சுற்றிவிட்டு சுழற்சி நிற்கும் முன் அனைத்து ரவுண்டுகளும் சுடுவதாக எல்லாம் ஹாலிவுட் கவ்பாய் படங்களில் காட்டியுள்ளார்கள். cow boy comics hero lucky luke நிழலை விட வேகமாக சுடுவார் என பட்டப்பெயர் கொண்டவர்.

பின்னர் சிலிண்டர் தானாக சுழன்று தோட்டா சுடுவதற்கு பேரலில் வருவது போல செய்யும் ரிவால்வரை சாமுவேல் கோல்ட் என்ற அமெரிக்கர் வடிவமைத்தார். பின்னாளில் அதுவே ரிவால்வர்களின் நிரந்தர வடிவம் ஆயிற்று. இன்றும் கோல்ட் நிறுவனம் துப்பாக்கி தயாரிப்பில் முன்னனியில் உள்ளது.

ஹாலிவுட் படங்களில் கதாபாத்திரங்கள் பயன்ப்படுத்தும் துப்பாக்கிகள் உண்மையானவை ஆகும், அவற்றில் டம்மி புல்லட் பயன்ப்படுத்தியோ அல்லது கிராபிக்ஸ் மூலமாகவோ சுடுவது போல காட்டுவார்கள்.




அதுவும் ஜேம்ஸ்பாண்ட் போன்ற கதாபாத்திரங்களுக்கு என ஒரு முத்திரைப்பதித்த புகழ்வாய்ந்த துப்பாக்கி மாடலையே கொடுப்பார்கள்.

இயான் ஃபிளெமிங் , தனது நாவலில் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தினை வடிவமைத்தபோது என்ன வகையான ஆயுதம் கொடுக்கலாம் என யோசித்து ,பின்னர் அவர் கடற்படை உளவுத்துறையில் பணிப்புரிந்த போது கொடுத்த Beretta 418, .25 காலிபர் பிஸ்டலையே  ஜேம்ஸ்பாண்டும் பயன்ப்படுத்துவதாக முதல் ஜேம்ஸ் பாண்ட் நாவல் ஆன  கேசினோ ராயலில் எழுதிவிட்டார்.

நாவலைப்படித்த ஒரு ஆயுத ஆய்வாளர் பெரட்டா 418 என்பது பெரும்பாலும் பெண்கள் கைப்பையில் வைத்துக்கொள்ளும் சிறிய வகை தற்காப்பு ஆயுதம், ஷார்ட் ரேஞ்ச் கொண்டது ,மேலும் அதன்  stopping power என்பது குறைவு என எழுதினார். ஜேம்ஸ்பாண்ட் போன்ற அதிசூர ரகசிய உளவாளி ,பல எதிரிகளை வேட்டையாட வேண்டியவருக்கு நல்ல சக்தி வாய்ந்த துப்பாக்கி கொடுக்கவும் என ஆலோசனை வழங்கினார்.

 stopping power: 

ஒரு முறை சுட்டவுடன் எதிராளி சுருண்டு விழ செய்வது, குண்டடி வாங்கிய பின்னும் திடகாத்திரமாக இருந்தால் துப்பாக்கியின்  stopping power குறைவாக உள்ளது என பொருள். அதிக காலிபர் உள்ள துப்பாக்கிகளுக்கு அதிக  stopping power இருக்கும்.

காலிபர்: 



காலிபர் என்பது சுடும் குழல்- பேரலின் விட்டம்  ஆகும் அதற்கு ஏற்ப தோட்டாவின் விட்டம் இருக்கும்.பெரிய தோட்டா ,அதிக வெடி மருந்து, அதிக வேகம், எனவே ஆழமாக ஊடுருவும், பெரிய காயம், நிறைய இரத்த இழப்பு , எனவே எதிராளி சுருண்டு விழுவான் .

(பல காலிபர் தோட்டாகள் ஒரு ஒப்பீடு)

அதற்கு ஏற்ப பாண்ட் சக்தி வாய்ந்த துப்பாக்கியான  Colt M1911 .45 cal auto pistolஐ மூன் ரேக்கர் படத்தில் பயன்ப்படுத்தினார்.

ஆனாலும் ஒரு ராணுவ/ உளவு அதிகாரிக்கு என டிரேட்மார்க் ஆக ஒரு துப்பாக்கி இருக்க வேண்டும் என ஆய்வு செய்து   Walther PPK 7.65 mm என்ற துப்பாக்கியை பாண்டிற்கு கொடுத்தனர்.

Walther PPK :

இதில் ஒரு முரண்நகை என்னவெனில்  Walther PPK 7.65 mm  துப்பாக்கி ஜெர்மானிய தயாரிப்பு , அவர்களின் காவல் துறை மற்றும் உளவு துறையின் அதிகாரப்பூர்வ ஆயுதம் ஆகும். அதனை பிரிட்டீஷ் உளவாளியான ஜேம்ஸ் பாண்டின் அதிகாரப்பூர்வமான ஆயுதமாக மாற்றிவிட்டார்கள். தற்போது வந்த ஸ்கைஃபால் வரையில் ஜேம்ஸ்பாண்டின் அதிகாரப்பூர்வ கைத்துப்பாக்கி  Walther PPK 7.65 mm  மற்றும்  Walther PP99 மாடல்கள் ஆகும்.பாண்ட் அவ்வப்போது கையில் கிடைக்கும் ஆயுதங்கள் , Kalashnikov AKS-74U.Kalashnikov AK-74 போன்ற எந்திர துப்பாக்கிகள், பெரட்டா 92 FS என பல வகையான கைத்துப்பாக்கிகளும் பயன்ப்படுத்துவதுண்டு.

Walther PPK 7.65 mm  :



Carl Walther  என்ற ஜெர்மானியர் உருவாக்கிய மாடல் ஆகும், PPK = கிரைம் போலீஸ் பிஸ்டல் என்பதன் ஜெர்மானிய சுருக்கம் ஆகும்.

துப்பாக்கியின் விவரம்;

நீளம்= 155 மி.மீ

அகலம்:25 மி.மீ

பேரல் நீளம்:83 மி.மீ,

எடை:590 கிராம்.

மேகசீன்:



தோட்டாக்கள் அடங்கிய உறையின் பெயர் , 7,8,9 குண்டுகளுடன் ,சற்றே மாறுபட்ட காலிபர் வகைகளுக்கு கிடைக்கிறது. ஜேம்ஸ்பாண்ட் பயன்ப்படுத்தும் .32 ஏசிபி வகைக்கு 8 தோட்டா மேகசின் பயன்ப்படுத்தப்படுகிறது.

இத்துப்பாக்கியால் சுடும் போது தோட்டா செல்லும் வேகம் 220 மீ/வினாடி, எனவே வினாடிக்கு 221 மீட்டர் வேகத்தில் ஓடினால் தோட்டாவால் உங்களை தொலைக்க முடியாது :-))

கைத்துப்பாக்கியின் பேரல் நீளம் குறைவானது என்பதால் குறைவான தூரத்திற்கே கொல்லும் சக்தியுடன் தோட்டா பாயும், 30 மீட்டருக்குள் நல்ல தாக்குதல் இருக்கும், அதற்கு பிறகு அவ்வளவாக இம்பாக்ட் இருக்காது. எலும்புகளை துளைக்காது, அல்லது பெரிதாக காயம் ஏற்படுத்தாது.

தற்போது ஜேம்ஸ் பாண்டிற்கு வழங்கப்பட்டிருக்கும் வால்த்தர் கைத்துப்பாக்கியில் கைரேகை பாதுகாப்பு வசதியுள்ளது, பாண்டை தவிர வேறு யாராலும் அத்துப்பாக்கியால் சுட முடியாது.

Walther P99



இத்துப்பாக்கி அளவிலும், எடையிலும் பெரிய வகை, இத்துப்பாக்கியை பாண்ட் பெரிய அளவிலான சண்டையின் போது பயன்ப்படுத்துவார், பெரும்பாலும் இதனை காரில் வைத்திருப்பார், Walther PPK 7.65 mm  காம்பேக்ட் ஆக இருக்கும் என்பதால் கோட்டின் உள் புறமாக விலாபக்கத்தில் ஸ்ட்ராப் போட்டு ஒரு பவுச்சில் வைத்துக்கொள்வார்.

Walther P99 இன் பேரல் விட்டம் 9 மி.மீ ,நீளம் 102 மி.மீ என்பதால் அதிக சக்தியுள்ளது.

துப்பாக்கியின் விவரம்:

நீளம்:180 -184 மி.மீ

அகலம்:29-32 மி.மீ

உயரம்:135 மி.மீ.

எடை; 630-655 கிராம்.

பேரல் நீளம்: 102 மி.மீ.

தோட்டா வேகம்:344 மீ/வினாடி, மற்றும் 408 மீ/வினாடி
விசையுடன் சுடும் தூரம்:60 மீட்டர்.

மேகசீன்:

12 மற்றும் 16 தோட்டாக்கள் கொண்டவை. சிலர் புத்திசாலித்தனமாக எப்படி 6 குண்டுகளுக்கு மேல் சுட முடியும் என விமர்சனம் எழுதும் போது கேட்பதுண்டு , அதெல்லாம் இப்படித்தான் , பல வகையான மேகசின் கெப்பாசிட்டிகள் , துப்பாக்கியின் மாடலுக்கு ஏற்ப இருக்கிறது. ஒரு சில மாடல்களில் 22 ரவுண்டுகள் வரை சுட முடியும்.


(33 ரவுண்டு மாகசீன் +Glock17 pistol)

அதற்கும் மேல் ஒரே தடவையில் தொடர்ச்சியாக சுட எக்ஸ்டெண்டட் மேகசின் எனப்படும் நீளமான மேகசின்கள் உள்ளது ,30-40 ரவுண்டுகள் சுட முடியும்,துப்பாக்கி தயாரிப்பு நிறுவனம் மாடல் பொறுத்து எத்தனை ரவுண்டுகள் சுடும் என்பது மாறுபடும். ஆனால் அதிக ரவுண்டுகள் சுடும் மேகசீன்கள் துப்பாக்கியின் கைப்பிடிக்கு வெளியே நீட்டிக்கொண்டு இருக்கும், கையடக்கமாக வைத்துக்கொள்ள முடியாது. எனவே ஏதேனும் பெரிய தாக்குதலின் போது மட்டும் பயன்ப்படுத்துவார்கள்.

Heckler&Koch USP pistols 



ஹாலிவுட் படங்களில் துப்பாக்கிக்கு ஒரு கவர்ச்சியை கொடுத்தவர் ஏஞ்சலினா ஜூலி , அவர் நடித்த Tomb Raider, MR&mrs Smith, Salt, wanted, ஆகிய படங்களில் கன் ஃபைட் காஞ்சனா, ரிவால்வர் ரீட்டாவாக கலக்கியவர்.

டாம் ரைடரில் ,அவரது உடை,பிரத்யோகமாக இடையில் துப்பாக்கி வைக்கும் பெல்ட், அவரது பாவனைகள் எல்லாம் அந்த பாத்திரத்தின் வீச்சினை பல மடங்கு உயர்த்தியது, கணினி ஆக்‌ஷன் கேம்களில் டாம் ரைடருக்கு தனி மார்க்கெட்டும் பிடித்து கொடுத்தது.



அப்படத்தில் ஏஞ்சலினா ஜூலி கதாபாத்திரத்தின் பெயர் "லாரா கிராப்ட்" ஆகும் ,அவர் பயன்ப்படுத்திய துப்பாக்கி  Heckler & Koch USP Match என்ற 9 மி.மீ பேரல் வகை .இத்துப்பாக்கியும் ஒரு ஜெர்மானிய தயாரிப்பாகும், பொதுவாகவே ஜெர்மானிய துப்பாக்கிகள் தரமானவை என உலக அளவில் பெயர் பெற்றவை.

USP என்பது  Universal self-loading pistol என்பதன் சுருக்கமாகும்.


துப்பாக்கியின் பண்புகள் :

Type: Double Action or Double Action Only
Calibers: 9x19mm Luger, .40 S&W, .45 Auto, .357SIG (USP Compact only)
Dimensions (9 x 19 version)
Length: 194 mm
Height: 136 mm
Width: 32 mm
Weight: 720 g
Capacity: USP, USP Match - 15 rds (9mm), 13 rds (.40), 12 rds (.45); USP Compact - 13 rds (9mm), 12 rds (.357 and .40), 8 rds (.45)

இத்துப்பாகியிலும் 8 முதல் 15 ரவுண்டுகள் சுடக்கூடிய மேகசீன்களுடன் கிடைக்கிறது.

எல்லா மாடல் பிஸ்டல்களிலும் இடக்கை மற்றும் வலக்கை பயன்ப்பாட்டாளர்களுக்கு என தனி தனி வகை தயாரிப்பு உண்டு.

துப்பாக்கி தவறுதலாக வெடித்து விடாமல் இருக்க பாதுகாப்பு அம்சம் உள்ளது, சுடுவதற்கு முன்னர் பேரலை பின் பக்கமாக தள்ளிவிடுவதை திரைப்படங்களில் பார்த்திருப்போம், அப்படியும் சேப்டி லாக் விடுவிக்கலாம் அல்லது கட்டை விரல் அருகே ஒரு லீவர் இருக்கும் அதனை தள்ளியும் சுடுவதற்கு தயாராகலாம்.



அந்த லீவர் வலக்கை பழக்கம் உள்ளவர்களுக்கு துப்பாக்கியின் இடப்பக்கமும், இடக்கை பழக்கம் உள்ளவர்கள் பயன் படுத்தும் துப்பாக்கியில் வலப்பக்கமும் இருக்கும். அதன் அருகே ஒரு சிவப்பு வண்ண LED  இருக்கும், தோட்டா தீர்ந்து விட்டதை அறிவிக்க பயன்ப்படும், LED  எரியவில்லை எனில் துப்பாக்கி பயன்படுத்த தயாராகவில்லை அல்லது தோட்டா தீர்ந்துவிட்டது என அறியலாம்.

ஒவ்வொரு முறை சுடும் போதும் தோட்டா  வெடித்து முன்னோக்கி செல்லும் போது வெடி மருந்தில் இருந்து உருவாகும் வாயு பின்னோக்கி சென்று ஒரு விசை உருவாகும் இதனை கொண்டே அடுத்த தோட்டாவை சுடும் அறைக்குள் லோட் செய்யுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது இதனை  "Blow back action pistol" என்பார்கள் பெரும்பாலானா Automatic pistol கள் இவ்வகையே.

டொக்டரின் துப்பாக்கி:

ஹி...ஹி இவ்வளவு தூரம் துப்பாக்கிய பற்றி பேசிவிட்டு டொக்டர் விசய் நடித்த அமர காவியம் "துப்பாக்கி"ஐ பற்றி ஒன்றும் சொல்லாமல் போனால் நல்லாவா இருக்கும், டொக்டர் ரசிகர்கள் வேற கோச்சுப்பாங்க ,



டொக்டர் விசயின் இந்த துப்பாக்கி படத்தை எத்தனை முறை உற்று பார்த்தும் அது என்ன மாடல்னே சரியா  கண்டுப்பிடிக்க முடியலை, டொக்டரின் வெப்பன் சப்ளையர் பெரிய கில்லாடியாக இருக்கணும். ஒரு வேளை தீவாளி துப்பாக்கியா இருக்குமோ?

பெராட்டா 92 FS எனப்படும் மாடல் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாடியோட இருக்கு, கிட்டத்தட்ட அதை போலவே இருக்கு , ஆனால் படத்தில் லெஃப்ட் ஹேண்ட் மாடல் (சேப்டி லாக் வலப்புறம் இருக்கு) பிஸ்டலை ரைட் ஹேண்டில் பிடிச்சுக்கிட்டு போஸ் கொடுக்கிறார் :-))


ஹி...ஹி என்னா ஒரு கண்டுப்பிடிப்புன்னு தீபாவளியும் அன்னிக்கு நீங்க எல்லாம் என் மேல கொலை வெறியில   பாயாதீங்க, அனைவருக்கும்  இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!
(இன்று அனைவருமே தீவாளி வாழ்த்துன்னு சொல்லி இருப்பாங்க அதான் வித்தியாமாக இருக்கட்டுமேன்னு ...ஹி...ஹி :-)) )

வர்ரட்டா!!!!
-------------------
தீவாளி போனஸ்:

பதிவு முழுக்க சூடா சுடுவதையே பேசிவிட்டதால் ஜில்லுனு ஒரு ஜில்பான்ஸ் படம் ,பார்த்து மகிழுங்கள்!



ஹி...ஹி சுட்டும் விழியால்  சுடும் காரிகை!
------------------------------------------------------------------

பின் குறிப்பு: 

படங்கள் மற்றும் தகவல் உதவி,

http://world.guns.ru/handguns/hg/de/hk-usp-e.html

http://www.leelofland.com/wordpress/lori-l-lake-part-2-guns-guns-guns-outfitting-your-sleuths/

http://guns4u.info/?cat=12

http://www.imfdb.org/wiki/Lara_Croft:_Tomb_Raider

மற்றும் விக்கி, கூகிள் இணைய தளங்கள், நன்றி!
-----------------

35 comments:

Anonymous said...

"ஹி...ஹி சுட்டும் விழியால் சுடும் காரிகை"

Good post on guns..I expect "Gun" movie review from you "Vov"..

By--Maakkaan.

குறும்பன் said...

-- தீவரவாதிகள் கொல்லப்பட்டனர் -- தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர் அங்கிருந்து 5 ஏகே 47 ரக துப்பாகிகளும் 3 மாகசின்களும் கைப்பற்றப்பட்டன என செய்தி தாள்களில் வரும். அதை படிக்கறப்ப பரவாலயே தீவிரவாதியா இருந்தாலும் மாகசின்கள் எல்லாம் வச்சு இருக்காங்களே அப்படின்னு. என்ன மாகசின்கள் அப்படின்னு போட்டா இவங்க எதை படிக்கறாங்கன்னு தெரிஞ்சுக்கலாமேன்னு நினைச்சுக்குவேன். பல காலம் கழித்து தான் இவங்க சொன்ன மாகசின்களின் பொருள் புரிந்தது :)). ஆலிவுட் படத்தில் இருப்பது உண்மையான துப்பாக்கியாதான் இருக்கும் இங்க தான் துப்பாக்கி, இயந்திர துப்பாக்கி விக்கறதுக்குன்னே கடை இருக்கே. நான் நம்ப காவல்துறை வைத்திருத்த நீளமான குருவி சுடும் துப்பாக்கியதான் பார்த்திருக்கேன். அமெரிக்காவுல தான் செக்குயூரிட்டி எல்லாம் சின்ன துப்பாக்கி வச்சிருந்ததை பார்த்தேன். டொக்டர் வைத்திருப்பது இனிமேல் தயாரிக்கப்போகும் சிறப்பு வகை துப்பாக்கி. ;)

நாய் நக்ஸ் said...

Nice
post.......

@ vavvaal......
Vadivel....
Sema
comedy
post
pottirukkaar......

Naama pesaama
comedy tv
paakkaama
panthukkalin.....
Post
mattum
padichchaa
pothum.......

Avvalavu
commedy.......!!!!!

Vaanga poi
karuththu
solluvom.......!!!!

Sorry for thangilish
comment.....
In mobile......

காரிகன் said...

துப்பாக்கி பற்றிய செய்திகளுக்கு நன்றி. ஒரு விஷயம். "துப்பாக்கி" என்பது ஒரு போர்சுகீசிய வார்த்தை என்று நினைக்கிறேன். நீங்கள் பாரசீகம் என்று குறிப்பிட்டு இருப்பதால் எனக்கு இப்போது சந்தேகம் வந்து விட்டது. கலாச்சாரப்படி பார்த்தால் கூட பாரசீகத்தை விட ஐரோப்பியர்கள் முதலில் துப்பாக்கியை உருவாக்கி உபயோகப்படுத்தியதால் இது எப்படி சாத்தியம் என்று தோன்றுகிறது.

காரிகன் said...

துப்பாக்கி பற்றிய செய்திகளுக்கு நன்றி. ஒரு விஷயம். "துப்பாக்கி" என்பது ஒரு போர்சுகீசிய வார்த்தை என்று நினைக்கிறேன். நீங்கள் பாரசீகம் என்று குறிப்பிட்டு இருப்பதால் எனக்கு இப்போது சந்தேகம் வந்து விட்டது. கலாச்சாரப்படி பார்த்தால் கூட பாரசீகத்தை விட ஐரோப்பியர்கள் முதலில் துப்பாக்கியை உருவாக்கி உபயோகப்படுத்தியதால் இது எப்படி சாத்தியம் என்று தோன்றுகிறது.

முத்தரசு said...

அசின் ரசிகரே, துப்பாக்கி விமர்சனம் ச்சே விவரம் அறிந்தேன் நன்றி

அஞ்சா சிங்கம் said...

வவ்வால் பசங்க படம் பார்த்தாச்சா ......................?

துப்பாக்கி பாபர்தான் இந்தியா கொண்டுவந்தார் ஆனால் அதற்க்கு முன்பாகவே தென் இந்தியாவில் துப்பாக்கி புழக்கத்தில் இருந்தது ........எல்லாம் கடல் வழி வணிகம்தான் ......
அதனால்தான் பொதுவாக முகலாயர்கள் அவுரங்கசீப் காலம் வரை விந்திய மலை தாண்டி தக்கான பீட பூமியை தாக்க முயற்சிக்க வில்லை .......................

தோட்டாக்களில் இருவகை இருக்கிறது . முனைகூர்மையாக இருப்பது ஒரு வகை . முனையில் சிறு பள்ளம் வைத்து மொட்டையாக இருப்பது ஒருவகை . இரண்டாவது வகை மிகவும் ஆபத்தானது . சில நாடுகளில் தடை செய்துவிட்டார்கள் என்று நினைக்கிறேன் ..

அது எப்படி கூர்மையான முனைதானே ஆபத்தாக இருக்க முடியும் ....?
அங்கு தான் விஷயம் இருக்கிறது . முனைகூர்மையான தோட்டா காற்றை கிழித்து செல்லும்போது பெரிதாக தடை ஏதும் இல்லாததால் சுலபமாக இலக்கை துளைத்துவிடும் சேதம் அந்த தோட்டாவின் விட்டம் அளவிற்கே இருக்கும் .

ஆனால் முனை பள்ளம் ஆக்கப்பட்ட தோட்டா காற்றை கிழித்து செல்லும்போது அதன் முனையில் ஒரு காற்று தடை ஏற்ப்படுகிறது . அதனால் தோட்டாவின் முன்னாள் ஒரு அதிர்வலை உருவாகிறது . அதன் விட்டம் தோட்டாவின் விட்டத்தை விட நான்கு மடங்கிற்கு மேல் இருக்கும் . அதனால் இது இலக்கை துளைப்பதற்கு பதில் இலக்கை சிதைத்துவிடும் . அதாவது இது உடலுக்குள் நுழைந்தால் . உடலில் ஒரு பெரும் பள்ளத்தை ஏற்படுத்தி விடும் . அதன் விட்டம் தோட்டாவின் விட்டதை விட பல மடங்கு பெரிதாக இருக்கும் எலும்பை துளைப்பதற்கு பதில் எலும்பை சிதைத்துவிடும் . உயிர் பிழைப்பது கடினம் .

வவ்வால் said...

மாக்கான்,

நன்றி!

நீங்க எந்த படம் சொல்லுறிங்க Gun or Guns, கன்ஸ் படம் Do or Die வகையறா படம் , பிகினி மங்கையர்கள் கன் வச்சு கவர்ச்சியா சண்டைப்போடுவாங்க :-))

ஹி...ஹி வாய்ப்பு வரும் போது ரெண்டையுமே அலசிடலாம்.
----------------
குறும்பன்,

நன்றி!

//என்ன மாகசின்கள் அப்படின்னு போட்டா இவங்க எதை படிக்கறாங்கன்னு தெரிஞ்சுக்கலாமேன்னு நினைச்சுக்குவேன்.//

குறும்புக்காரர் தான் :-))

#நம்ம ஊரு போலீசு வச்சிருக்கிற கட்டை துப்பாக்கிய உலகில் எந்த போலீசும் வச்சிருக்காது, ஆனால் பழைய மாடலாக இருந்தாலும் பேரல் நீளம் கூட என்பதால் லாங் ரேஞ்ச் உள்ளது. அநேகமாக போலிசுக்கு டிரில் கொடுக்கவே இன்னும் வெயிட்டான துப்பாக்கியை வச்சிருக்காங்கன்னு நினைக்கிறேன்.
#டொக்டரு யாரு உலக ஆக்சன் ஹீரோ அல்லவா அதான் சிறப்பு வடிவமைப்பு ஆயுதம் வச்சிருக்கார் தோட்டா இல்லைனாலும் வெடிக்கும் :-))
----------------
நக்ஸ் அண்ணாத்த,

நன்றி!

தீவாளி பக்‌ஷணம் எல்லாம் சாப்பிட்டாச்சா?

யாரை சொல்லுறிங்க சு.பி.சுவாமிகளையா? ஹி...ஹி அவருக்கு நகைச்சுவை உணர்வு ரொம்ப அதிகம், அவரோட பதிவில் நாம் எப்போதும் பின்னூட்டமிடுவது வழக்கம் , ஏற்கனவே கருத்து சொல்லி இருக்கேன், வெளியிடுவார்.
--------------

காரிகன்,

நன்றி!

துப்பாக்கியை ஐரோப்பியர்கள் கண்டு பிடித்து இருக்கலாம், நான் சொன்னது துப்பாக்கி என்ற பெயரின் மூல சொல்லை. மொபைல் போனை கைப்பேசி என தமிழில் அழைப்பது போல பாரசீகத்தில் பிஸ்டல்/கன் ஆகியவற்றை tapaancheh,Tofang, toopdasty என அழைக்கிறார்கல் ,அச்சொல் இந்தியாவிற்கு வந்த போது துப்பாக்கி ஆகிவிட்டது என நினைக்கிறேன்.

பதிவில் விரிவாக இதெல்லாம் சொல்லவில்லை, சுருக்கமாக எழுத முயன்றேன்.
-----------------------
முத்தரசு,

நன்றி!

ஹி...ஹி நிஜமான துப்பாக்கி விமர்சனம் என்றால் அது நம்மளுது தானுங்க்ணா:-))
--------------

அஞ்சா ஸிங்கம்,

வாரும்,நன்றி!

வவ்வால் பசங்க படம் இன்னும் பார்க்கலை, டிவிடி ல தான் பார்க்கணும்,நம்ம பெயருக்கு பெருமை சேர்க்கிறாப்போல படம் இருக்குமா?

----------

நீர் சொன்னது போல தென்னிந்தியாவில் துப்பாக்கி முன்னரே வந்திருக்கலாம், ஆனால் முகலாயர்கள் நீண்ட தூரம் அழைத்து செல்வது சிரமம் என்றே ரொம்ப காலம் தென்னிந்தியா பக்கம் வரவில்லை, மேலும் அப்போது மத்திய இந்தியாவில் பெரும் வனங்கள், பள்ள தாக்குகளை கடப்பதும் சிரமம்.

தோட்டா பற்றி எல்லாம் விரிவாக எழுத நேரமில்லை, முனை கூர்மையாக, மற்றும் ஒரு சிறு பள்ளம் உள்ள தோட்டாப்பற்றியும் படித்துள்ளேன்.

ஆனால் காரணம் நீங்க சொல்வது போல போட்டில்லையே?

சிறு பள்ளம் உள்ள தோட்டா உடலின் மீது மோதியதும் சிறு துண்டுகளாக சிதறிவிடும், அதற்கு தான் சிறு பள்ளம், இதனால் உடலில் பெரிய காயம் உண்டாகி ரத்தப்போக்கு அதிகம் ஆகும்.

இன்னும் சில தோட்டாக்களில் உள்ளே வெடி மருந்தும் இருக்கும் , மோதியதும் வெடித்து சிதறும் இதனாலும் காயம் பெரிதாகும்.

இது போன்ற தோட்டாக்கள் மனிதர்கள் மீது பயன்ப்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் வேட்டைக்கு இத்தகைய சிறு துண்டுகளாக சிதறும் குண்டுகள் பயன்ப்படுத்துகிறார்கள்.

ஷாட் கன் வகைகளில் பல சிறு பெல்லட்கள் வெடித்து சிதறும்.சிங்கிள் பேரல்,டபுள் பேரல் ஷாட் கன்கள் உண்டு. இதனை வைத்து வேட்டையாடுவது வழக்கம், ஒரு முறை சுட்டால் பெரிய வட்டத்தில் 20 பெல்லட்கள் பறக்கும்,எப்படியும் விலங்கு அடி படும்.

ஒலிம்பிக்கில் டபுள் டிராப் துப்பாக்கி சுடும் போட்டியில் ஷாட் கன் எனப்படும் ரைபிள் தான் பயன்ப்படுத்துகிறார்கள். டிஸ்கவரி சேனலில் விரிவாக படம்ம் காட்டியிருக்காங்க.
-----------------

ராஜ நடராஜன் said...

துப்பாக்கி கலிபர் ஜேம்ஜ்பாண்ட்,சுஜாதா கதைகள் துவங்கிய சந்தேகம்.ஜேம்ஸ்பாண்டின் சாகசங்கள் பார்த்தமா 007 கவர்ச்சிக்கன்னிகளை ரசிச்சமாங்கிறதோட சரி.இப்ப வர்ணனைகளில் கொஞ்சம் விளங்கிய மாதிரி இருந்தாலும் இன்னும் தொட்டுப்பார்க்காத காரணத்தால் யானை தடவிய குருடன் கதைதான்.அசின் உட்பட:)

ஆமா!உங்களுக்கு புடிச்ச ஜேம்சு யாரு?



Unknown said...

வணக்கம் வவ்வால்,

துப்பாக்கி கடைக்கு விளம்பரம் கொடுத்தாப்ல இருக்கு.நல்ல தகவலுக்கு நன்றி.

//ஹி...ஹி சுட்டும் விழியால் சுடும் காரிகை!//

விழியால் சுடும் வீராங்க‌ணை விசிறியாகிவிட்டேன்...ஹி...ஹி...

ராஜ நடராஜன் said...

பிளமிங்கின் ராயல் காசினோ நாவல் முதலில் எழுதினாலும் படமாக பின்னாடிதான் வந்தது.முதல் ஜேம்ஸ்பாண்ட் படம் டாக்டர் நோ என நினைக்கிறேன்.

தீபாவளி வாழ்த்துக்கள்.

ராஜ நடராஜன் said...

@இனியவன்!இப்படியெல்லாம் பேர் வச்சிட்டு பின்னூட்டத்துல குறுக்கே புகுந்து டிக்கெட் எடுக்கிறீங்களே:)

Anonymous said...

ஒரு வேளை தீவாளி துப்பாக்கியா இருக்குமோ?

-:)

Anonymous said...

வவ்வால்ஜி...இந்த டீடைல்ஸ் முன்னாடியே முருகதாஸ்ட்ட குடுத்திருந்தீங்கன்னா இப்படி அட்டைத்துப்பாக்கி...பிளாஸ்டிக் துப்பாக்கி ..தீபாவளி துப்பாக்கி வச்சுக்கற பிஸினசை விட்டிருப்பார் தானே...

ஜோதிஜி said...

உங்க அக்ரமத்திற்கு அளவே இல்லையோ?

உள்ளே வந்தவங்க நொந்து நூடுல்ஸ் ஆகி பேதியாக போயிருப்பாங்க.

இப்ப எழுதி போட்டுருக்ற பதிவ பார்த்துச் சொல்லுங்க.

வவ்வால் said...

ராச நடராசர்,

வாங்க,நன்றி!

ஜேம்ஸ் பாண்ட் படங்களில் பொண்னையும்,கன்னையும் தான் பார்த்து ரசிச்சு இருக்கீங்க :-))

கன்னை தொட்டுப்பார்க்கலை என வருத்தப்படுறதோட நிறுத்திக்குங்க அது என்ன அசினும் சேர்த்துக்கிறிங்க ?

பழைய ஜேம்ஸ் பான்ட் படங்களின் கலெக்‌ஷன் எல்லாம் டிவிடியாக வாங்கி பார்த்துள்ளேன், 4 படம் இருக்கும் டிவிடி 20 ரூ ,இதுக்கு முன்ன நெட்ஃப்ளிக்ஸ் எல்லாம் எடுபடுமா?

அதுவும் பழைய படம் என்றால் பிரிண்ட் எல்லாம் நல்லா வேற இருக்கும்.

சில படங்களின் பெயர் மறந்துவிட்டது, ரோஜெர் மூரின் மூன் ரேக்கர், ஷான் கானெரியின் நெவெர் சே நெவெர் அகெயின்,யூ ஒன்லி லைவ் டிவைஸ், டாக்டர் நோ இன்னும் சில படங்கல்,

டாக்டர் நோவில் உர்சுலா ஆண்ட்ரெஸ் பிகினியில் 6 பேக் போல காட்டும் :-))

பழைய பாண்ட் நடிகர்கள் ஒரு அமர்த்தலான நடிப்பை வழங்கி இருப்பார்கள் அது இப்போ வரும் பாண்ட் நடிகர்களிடம் மிஸ்ஸிங் ,அதுவும் டேனியல் கிரெக் சுத்த தண்டம்.

ஷான் கானெரி ,ரோஜெர் மூர் பெஸ்ட் எனலாம், பின்னர் பியர்ஸ் ப்ராஸ்னன் அவ்ளவு தான். இவர்கள் தான் பாண்ட்க்கு உரிய ஒரு டிரேட்மார்க் நடிபை வழங்கினார்கள் எனலாம்.

பழைய பாண்ட் படங்களில் இருந்து நிறைய காட்சிகள் சுடப்பட்டு இப்போ வரும் தமிழ் படங்களில் கூட வைத்துள்ளதை பழைய படங்கள் பார்க்கும் போது தான் கண்டு பிடித்தேன்,

மூன் ரேக்கரில் வில்லன் நாய்க்கு மாமிச துண்டு போட்டுவிட்டு விரல் சொடுக்கியதும் சாப்பிடும், அக்காட்சி அஜித் நடித்த வில்லன் படத்தில் வரும் :-))

அஜித் , பாண்ட் விட சூப்பர் ஹீரோ ஆச்சே எனவே அஜித் சொடுக்கு போட்டதும் நாய் கக்கிவிடும் :-))

# நாவல் அடிப்படையில் தானே படம் அதனால்ல் நாவலில் குறிப்பிடப்பட்ட ஆயுதம் தான் முக்கியம் என சொல்லி இருக்கிறேன். டாக்டர் நோ தான் முதல் படம்.
-----------
இனியவன்,

நன்றி!

ஹி ஹி...வாங்க சுட்டும் விழி சுடருக்கு மன்றம் வைக்கலாம், ஆனால் தலிவரு நான் தான் சொல்லிப்புட்டேன் :-))
-----------------
ரெவரி,

வாங்க ,நன்றி!

போதி தர்மரையே விக்கி பீடியாவில் கண்டுப்பிடிச்ச முருகதாசர் துப்பாக்கியையும் விக்கியில கண்டுப்பிடிச்சு சரியா செய்ய்வார்னு நினைச்சேன், தெரிஞ்சிருந்தா ஒரு மெயில் போட்டு சொல்லி இருப்பேன் :-))
----------

ஜோதிஜி,

வாங்க,நன்றி!

ஒரு உண்மையான துப்பாக்கி விமர்சனத்தை கஷ்டப்பட்டு எழுதினா இப்படியா சொல்லுறது.

சில பேருக்கு தியேட்டரில் படம் பார்த்ததால் பேதியாகுதாம் :-))

உங்க பதிவை படித்துவிட்டேன், பின்னூட்டமும் போட்டாச்சு, இப்போ தான் ஆட்டம் சூடு பிடிக்குது.
--------------------------

சார்வாகன் said...

வணக்கம் நண்பரே,
துப்பாக்கினா துப்பாக்கி தோட்டா போட்ட துப்பாக்கி!!
கலக்கல் பதிவு. துபாக்கி வைக்க அனுமதி உள்ள அமெரிக்கா நாடுகளில் ஏன் அவ்வப்போது டுமீல் டுமீல் நு சுடுகிறான் என புரிந்தது. துப்பாக்கி பற்றிய பதிவு படிக்கவே கவர்ந்து இழுக்குது!!! பதிவே இப்படின்னா துப்பாக்கி கையில் இருந்தா ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
********
மக்கள் கலிஞ ஜேம்ஸ்பான்ட் ஜெய்சங்கர் அருமையான நடிகர். அவரின் பல படங்கள் கூறினாலும் ஜம்பு எனும் கர்ணனின் காவியத்தை கூறாமல் விட்டது தவறு. காமிரா மேதை கர்ணன் இரட்டைக் குழல் துப்பாக்கி ஏனும் படத்தையும் இயக்கி துப்பாக்கியின் பயனை விள்க்கினார் என்பதையும் பதிவு செய்கிறேன்.
**************
ஜேம்ஸ்பாண் படங்களிலும் கைத்துபாக்கி விதம் வித்மாக வரும். அவர் தமிழ் பட ஹீரோ போல் எப்படியும் இறுதி வெற்றி அவருக்கே!.
என்ன ஜேம்ஸ் படங்களில் முதலில் வில்லன்கள் சோவியத் இரஷ்யா உளவாளிகள் இப்போது
வேண்டாம் சொன்னால் பிரச்சினை ஹி ஹி.
ஏற்கெனெவே வாய்க்கால் தகராறில் விள்க்கம் சொல்லியே ஓய்ந்து விட்டேன்.
*********
ஏஞ்சலினா ஜோலி துப்பாக்கியுடன் நல்ல திறமை காட்டினார்.
"ஏஞ்சலினா ஜோலியையே ஏங்க வைத்த அழக்ன் நான்" என தமிழ்படம் பாட்டு எழுதியவன் அம்மணி கையில் கிடைத்தால் சங்குதான் ஊஊஊஊஊஊஊஉ.
********
டொக்டர் எந்த துப்பாக்கியையும் எந்த கையிலும்{அல்லக்கை உட்பட) சுடுவார்னு தெரியாதா!!
பாவம் நீண்ட நாள்களுக்கு பிறகு ஒரு சூப்பர் ஹிட். நல்லா இருக்கட்டும், மார்க்கெட் போனா , அரசியல்,சாதிக்கட்சி என்று தொல்லைக்கு சினிமாவே பரவாயில்லை!!பிடிக்கலைனா பாக்காமா இருக்க்லாம் ஹி ஹி.
லைட் கேமரா ஆக்சன் சொல்லி அசின் இயக்குனர் ஆகுதா.ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
எதுவும் நடக்கும்!!!!!!!!
***8
துப்பாக்கி பற்றிய விவரங்களை சுட்ட விவரமும் கொடுத்த்தும் அருமை
*****
என்ன ஒரு மார்க்கமாக பின்னூட்டம் என்றால் ஒரு மார்க்கவாதியிட்ம் சரமாரியாக விவாதம் செய்ததின் விளைவு ஹி ஹி ஹி
மார்க்கம் என்றால் என்னவென்று எனக்கு புரிந்து விட்டது!!!!

தீப ஒளி நாள் வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்

நன்றி!!!

? said...

துப்பாக்கி பத்தி வழக்கம் போல கடும் ஆராய்ச்சி பண்ணி எழுதியிருக்கறீங்க. அதுவும் டாக்குடர் கையில இருக்கற டுப்பாக்கி என்ன மாடல்ன்னு சொல்லுற ரேஞ்சுக்கு பலே!இங்கு $45 க்கு சுட பயிற்சி தருவதாக ஆஃபர் விளம்பரம் வரும்.

டூப்பாக்கி எல்லாம் நம்ம ரேஞ்சுக்கு ஓவர் என்பதால் தோட்டா பத்தி மாத்திரம் எழுதுறேன். மொக்கை தோட்டா hollow-point bullet எனப்படும். இந்த தோட்டா உடலின் மீது மோதியதும் சிறு துண்டுகளாக சிதறிவிடாது. அப்படி சிதறினால் நீங்கள் இலக்கிற்கு ஏத்த வலுவான தோட்டா உபயோகப்படுத்தவில்லை அல்லது புல்லட் தாங்கும் வேகத்தைவிட அதிக வேகத்தில் தோட்டாவை செலுத்திவிட்டீர்கள் என அர்த்தம். வெடிக்கும் புல்லட்டுகள் என தனிவகையுண்டு, அவைதான் சிதறும்.

மொக்கை தோட்டா உடலில் நுழைந்தவுடன் அதன் முனையிலிருந்து விரிவடையும். அடிக்கும் சுத்தி முனை மாதிரி. ஆகவே புல்லட்டின் அளவு அதிகரிப்பால் அதிக தாக்கம்.விளைவு அதிக இரத்தப்போக்கு மற்றும் நரம்பு மண்டலத்திற்கு அதிக அதிர்ச்சி. ஆகவே டார்கெட் தாக்கப்பட்ட இடத்திலேயே வீழ்ந்து மடியும். http://www.youtube.com/watch?v=DaXcXVvRuJ83

இவ்வகை தோட்டாக்களை யுத்தங்களில் உபயோகப்படுத்த தடையுள்ளது.நேடோ கூர்மையான தோட்டாக்களையே உபயோகப்படுத்துகிறது. கூரிய தோட்டாக்களின் நன்மை அடிபட்டவரை காப்பாற்றாலாம், மேலும் தோட்டா ஏவிய திசையிலேயே அதிகதூரம் பாயும்.

ஆனால் போலீஸ் இன்னமும் இந்த மொக்கை தோட்டாக்களையே பயன்படுத்துகிறது. ஏனெனில் சுடும் போது குத்தாவாளி அங்கையே குத்தவச்சு உட்கார்ந்துவிடுவான். மேலும் அவனது உடலை துளைத்து தாண்டி தோட்டா பின்னால் நிக்கும் அப்பாவி பொதுசனத்தை ஆப்படித்துவிடாது. வேட்டையாடுதல் மற்றொரு உபயோகம்.

கடைசியாக http://www.youtube.com/watch?v=f8XcVc_0ykU இது எப்படி இருக்கு?

-------------------------------

சகோ தீபாவளி முடிஞ்சு தீபாவளி லேகியம் சாப்பிடற நேரத்துல வாழ்த்து சொல்லுறார். தீபாவளிக்கு சாப்பிட்ட தீர்த்தம் தெளியலையா?

naren said...

வவ்வால்,

திருவள்ளுவர், அப்போதே டிவிட்டரில் சொல்லிவிட்டார்.

”துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉமழை."

டாகடர் பீல்டு மார்ஷல் விஜய் வைத்திருக்கும் துப்பாக்கி, பேன்சி ஸ்டோரில் வாங்கினது. கொஞ்சம் உத்துப்பார்த்தால் விளங்கும் :)))

டாக்டர் உண்மையிலேயே தீபாவளி துப்பாக்கியை சுட்டிருப்பாரா என்பதே சந்தேகம்.

துப்பாக்கி தகவலுக்கு நன்றி.

கலாகுமரன் said...


ஹிட்லரின் கைத்துப்பாக்கி PPK 7.65mm என்றும், புலித்தலைவர் weapon M-16 A2
உபயோகித்து வந்ததாகவும் படித்தேன்.

அந்த திருக்குறளை விட்டு வெச்சிட்டீங்களேன்னு நெனச்சேன் நரேன் போட்டு தள்ளீட்டார். ஹா..ஹா !

வவ்வால் said...

சகோ.சார்வாகன்,

நன்றி!
அமெரிக்கா என்பதே ஆயுதத்தின் முனையில் உருவான தேசம் ஆச்சே, கவ்பாய்கள் உருவானதே, பூர்வ குடி செவ்விந்தியர்களை அழிக்க தான்,அதனால் தான் பிற்காலத்தில் மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்க்கவே டர்ட்டி ஹாரி டைப் படங்கள் எடுப்பதை ஹாலிவுட் ஸ்டுடியோக்கள் நிறுத்திக்கொண்டன, இல்லை என்றால் இன்றும் டேனியல் கிரெக் பொன்றவர்கள் கவ்பாயாக டிஷ்யூம் என சுட்டுக்கொண்டு இருப்பார்கள்.

ஏலியன்ஸ்* கவ்பாய் பார்த்தேன் செம காமெடியா போச்சு :-))
----------

ஹி...ஹி நீங்களும் ஒளிஓவியர் கர்ணனின் ரசிகரா, ஜம்பு டார்சான் டைப் படம், இரட்டைகுழல் துப்பாக்கி கார்த்திக், ராதாரவி எனவே மக்கள் கலைஞரின் கவ் பாய் படத்தில் சேர்க்கவில்லை, இது இன்னும் சில படங்களும் இருக்கு ,பேர் தான் மறந்து போச்சு.

//முதலில் வில்லன்கள் சோவியத் இரஷ்யா உளவாளிகள் இப்போது
வேண்டாம் சொன்னால் பிரச்சினை ஹி ஹி.//

ஹாலிவுட் படத்தில் காட்டினால் ஒன்றும் சொல்ல மாட்டார்கள் :-))
-----------
மார்க்கப்பந்துக்களின் தாக்கம் ரொம்ப அதிகம் போல இருக்கே :-))
------------
தீவாளி வாழ்த்துக்கு நன்றி , பொங்கல் வாழ்த்து சொல்லும் நேரம் :-))
--------------
நந்தவனம்,

நன்றி!

சும்மா போய் கத்துக்கிட்டு , துப்பாக்கியோட ஒரு போட்டா எடுத்து பதிவுல போட்டா ஒரு டெர்ரர் லூக் கிடைக்குமே :-))

300 டாலருக்கே தரமான துப்பாக்கி கிடைக்குதாம், சீன தயாரிப்புனா மலிவுனு படிச்சேன் .

நீங்க சொன்ன மொக்கை புல்லட் பற்றியும் படிச்சேன், நான் பர்த்ததில் புல்லட் ஊடுருவி தெறிக்கும் என்பது போல இருந்தது, இரண்டாம் முறையும் வெடிக்கும் புல்லட்களும் ஆபாத்தானவை.
----------

நரேன் ,

நன்றி!

திருவள்ளுவரின் துவித்தர்கள் எக்காலத்துக்கும் பொறுத்தமானவை.

ரெங்க நாதன் தெரிவில் வாங்கின துப்பாக்கியா இருந்தாலும் டொக்டர் கைப்பட்டா பட்டாசா வெடிக்கும்ல :-))

தீபாவளி துப்பாக்கியை விட நிறைய போலீஸ் துப்பாக்கியை இப்போ நேரா பார்த்துக்க்கிட்டு இருப்பார், மார்க்க பந்துக்களின் அலப்பறையால் போலீஸ் கட்டை துப்பாக்கியோட பாதுகாப்பாம் :-))
--------------

கலாகுமரன்,

நன்றி,

நிஜ துப்பாக்கி வைத்திருந்தவர்களின் தகவலுக்கு நன்றி!

ஹி...ஹி நானும் அந்த குறளை நினைச்சேன்,அப்புறம் எழுதும் போது மறந்துட்டேன், அனால் நரேன் மறக்காம எடுத்து கொடுத்துட்டார்.

Anonymous said...

துப்பாக்கியை துவக்கு என மலையாளத்தில் சொல்கின்றார்களே, அதுவும் தமிழ் ( மலையாள ) சொல் தானா, அல்லது அந்நிய சொல்லா .. ரொம்ப நாளவே இந்த டவுட்டு எனக்கு.

unknown said...

அண்ணாச்சி, உங்க பதிவுகள படிச்சேன், எல்லா தலைப்புகளையும் பிரிச்சி விளாசுரீங்க... என் தளதிருக்கும் கொஞ்சம் வாங்களேன்,
http://kavithai7.blogspot.in/
என் பதிவுகள் தொழிற்களத்தில்
http://tk.makkalsanthai.com/2012/11/talk.html
http://tk.makkalsanthai.com/2012/11/tamil.html

குறும்பன் said...

இரட்டைக்குழல் துப்பாக்கி படத்தில் கதாநாயகி ஜூவி சாவ்லா தான? சிறுவனாக இருக்கும் போது பார்த்தது கார்த்திக் படமுன்னு நினைச்சி குடும்பத்தோட வந்தவங்க இடைவெளிக்கு முன்னாடியே தலைதெறிக்க ஓடிட்டாங்க. நானும் கார்த்தி படமுன்னு நினைச்சிதான் போனேன். அற்புதமான காட்சிகள் உள்ள படம். ஜூகி சாவ்லா புகழ் பெற்றதுக்கு பிறகு இப்படி அழகா நடிச்சிருப்பாங்களான்னு தெரியலை.

குறும்பன் said...

அதில் நடித்தது சுகந்தி ஜூகி அல்ல. இவ்வளவு நாளா ஜூகி நினைச்சிக்கிட்டு இருந்தேனே :(. சுகந்தி நல்லா நடிச்சிருப்பாங்க.

ராஜ நடராஜன் said...

//ஷான் கானெரி ,ரோஜெர் மூர் பெஸ்ட் எனலாம//

சரியான தேர்வு.ஜேம்சுகளின் பொற்காலம் எனலாம்.

விஜயின் தீவாளி துப்பாக்கி அசலா குண்டு வெக்கிறவங்க முன்னாடி நமுத்துப் போச்சு போல இருக்குதே:)

வவ்வால் said...

இக்பால்,

நன்றி!

துப்பாக்கியை பற்றி படித்த போது, இலங்கையில் துவக்கு என சொல்வார்கள் எனப்பார்த்தேன் , மலையாளத்திலும் அச்சொல் உள்ளதா, தமிழ் தான் மூலம் என்பதால், தமிழில் இருந்தே போய் இருக்க வேண்டும், மேலும், பாராசீக துப்பாஞ்ச் என்பதை இந்தியாவில் துப்பாக்கி என சொல்லி , தமிழில் துவக்கு ஆகி இருக்கலாம், ஆனால் பொதுவாகவே துப்பாக்கி என்ற சொல் அந்நிய சொல்லே.

anglo saxon ,Gundilha - பாறையை கவன் போல வீசும் ஒரு பொறி அதுவே gun என சுருக்கமாக அழைக்கப்பட்டது.

தமிழில் கவன்டி வில் என கல்லை எறியும் ஒரு கிராம புற ஆயுதம் உண்டு, எனவே ஆதிகாலத்திலேயே கவன்டிவில் அயல்நாட்டுக்கு போய் கன்டில்லா ஆகி ,கன் ஆகி இருக்கலாம்.

trigger = துவக்குதல் , எனவே அதில் இருந்து கூட தமிழ்ப்படுத்தி துப்பாக்கியை துவக்கு எனவும் சொல்லி இருக்கலாம்.

துப்புதல் என்றால் விசையுடன் வெளியேற்றுதல், எனவே தோட்டாவை வெளியேற்றுதல்-துப்புதல் செய்யும் கருவி துப்பாக்கி என நாமே தமிழ் படுத்திவிட்டால் போச்சு :-))
----------

செழியன்,

நன்றி,

உங்க பதிவை படிக்கிறேன்.

---------
குறும்பன்,

நன்றி!

நீங்க பெரிய கர்ண பரம்பறை ரசிகரா இருப்பீங்க போல, இரட்டைகுழல் துப்பாக்கி படத்தின் ஹீரோயின் பேர் எல்லாம் சொல்லுறிங்களே,

ஹி...ஹி ஆமாம் மனம் திறந்த நடிப்பினை"காட்டி'யிருப்பார்கள்.
---------

ராச நடராசர்,

நன்றி!

ஆமாம் அக்கால ஜேம்ஸ் பாண்டுகள் அசத்தியிருப்பதை இப்போது தான் உணரவே முடிகிறது.

// அசலா குண்டு வெக்கிறவங்க முன்னாடி நமுத்துப் போச்சு போல இருக்குதே:)//

உங்கலை சு.பி.சுவாமிகள் கிட்டே புடிச்சு கொடுத்தால் தான் சரியா வரும், சினிமாவில குன்டு வைக்கிறாங்கன்னு காட்டினாலே பொங்குவார், நீங்க வேற அசலான்னு சொல்லி உண்மையாக்கிட்டிங்கன்னு , உங்களை காய்ச்சுவார் :-))

தலைப்பு: ராச நடராசரின் இந்துத்வா பாசம்!

உடனே அதற்கு ஆதரவா உங்க பங்காளி, ராச நடராசரின் வேடம் கலைந்தது என ஒரு பதிவு போடுவார் :-))

நல்லா மாட்டினிங்க!!!

naren said...

வவ்வால்,

எத்தனையோ துப்பாக்கி சண்டைகளை (சினிமாவில்தான் ) பார்த்திருக்கிறேன்.
ஆனால் இதுதான் ஒன் ஆப் தி பெஸ்ட்.

http://www.youtube.com/watch?v=KJMxGFco57Y

ராஜ நடராஜன் said...

வவ்வால்!பதிவுகள்,சகோக்கள் எல்லாம் சேர்ந்து நேற்று துப்பாக்கி பார்க்க வச்சுட்டாங்க.எந்த வித வெட்டும் இல்லாமல் தமிழகத்தின் கூச்சல்களையெல்லாம் கண்டு கொள்ளாமல் படம் ஓடிக்கொண்டிருக்கிறது.

படத்திற்கான ஓசி விளம்பரம் கிடைக்காமல் இருந்திருந்தால் விஜய் ரசிகர்களை கவர்ந்தும் ஏனையவர்களை ஓரளவுக்கு படம் பரவாயில்லையென்றே பேச வைத்திருக்கும்.மும்பாய் கதைகளத்திற்கு யாரும் தமிழகம் சார்ந்து யோசித்திருக்க மாட்டார்கள்.மாறாக இந்தப்படம் இந்திய ராணுவ வீரர்களுக்கு சமர்ப்பணம் என்ற டைட்டில் கார்டுக்கான மொத்த இந்தியாவிற்குமான அடையாளமாக எந்த ரயில்வே ஸ்டேசனிலும் பெட்டி,படுக்கையோடு காணப்படும் இந்திய ராணுவ வீரன் பற்றிய அங்கீகரகமாக மட்டும் உருவகப்படுத்தப்பட்டிருக்கும்.மேலும் இப்போதைய ஓசி விளம்பரத்தால் ஸ்லீப்பர் செல் என்ற கதை இல்லாமல் இருந்திருந்தால் படத்தில் விஜய்யும்,காஜலின் நகைச்சுவை,டூயட்டு மட்டுமே மிஞ்சியிருக்கும்.எதிர் விளம்பரம் படம் பார்க்கும் பார்வையை மாற்றியிருப்பதோடு இன்னும் பல விவாதங்களை உருவாக்கியிருக்கிறது.

நேற்று தெகாவின் பதிவைப் படிக்கும் போது முந்தைய பதிவான தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் பாரம்பரிய புத்த சிலையை இடித்ததற்கு முன்பு பின்னூட்டம் போட்டதை நினைவு படுத்திக்கொள்கிறேன் மறுபடியும்.இந்துத்வா,இஸ்லாமிய தீவிரவாதம் இரண்டும் அழியட்டும் என்பதே நமது நிலை அப்பொழுதும் இப்பொழுதும்.

சு.பி சுவாமிகளுக்கு பின்னூட்டம் போட்டால் தலிபான்கள் சுதந்திர போராட்ட வீரர்கள் என்று பட்டமளிக்கிறார்:)எனவே காய்ச்சவும் காய்ச்சுவதை எதிர்கொண்டே ஆகவேண்டும்.பங்காளிகிட்ட எத்தனை சண்டை போட்டாச்சு!இதையும் சமாளிக்க மாட்டோமா என்ன:)

வருகை,நன்றின்னு மட்டுமே பின்னூட்ட விளக்கங்கள் சொல்வதாலும்,கால அவகாசங்கள் கருதியும் ஒவ்வொருவர் பதிவு சார்ந்தும் கருத்துக்களை வெளியிட முடிவதில்லை.மோகன் குமார் பதிவில் திரைப்பட இடைவேளையில் ஒரு இஸ்லாமிய கணவனை அவரது மனைவி சினிமாதானே என்று தேத்தியதாக படித்தேன்.சராசரி இஸ்லாமியர்கள் ஏனைய மக்களைப் போலவே சமூகத்தின் ஒரு அங்கமாக விளங்குகிறார்கள்.அரசியல்,சமூகம்,கல்வி சார்ந்து இஸ்லாமியர்கள் உயரவேண்டிய அவசியமிருக்கிறது.ஆனால் துப்பாக்கி திரைப்படத்திற்கு எழும் குரல்கள் வரவேற்புக்குரியதாக இல்லை என்பதோடு ஒரு சிலர் ஒரு சமூக அடையாளத்துடன் மொத்த மக்களுக்கும் தவறான வழியைக் காட்டுகிறார்கள் என்பதே நமது கவலை.

ராஜ நடராஜன் said...

//தமிழில் கவன்டி வில் என கல்லை எறியும் ஒரு கிராம புற ஆயுதம் உண்டு//

எது? V மாதிரி மரக் கவட்டையில் ரப்பரைக் கட்டி குருவி குறி பார்ப்பதா? குருவியை குறிபார்க்கிறேன் பேர்வழின்னு கை தோலை உரிச்சுகிட்டதுதான் மிச்சம்.

குருவி,வில்லு,துப்பாக்கியெல்லாம் நமக்கு ஆவாத டேஸ்ட்:)

naren said...

வவ்வால்,

கிருஷ்ணருடன் ஒரு சந்திப்பு நடத்தி கருத்துக்களை வாரி வழங்கினீர்களாமே. அந்த இண்டர்வியூவை ஏன் நீக்கப்பட்டது என்று தெரியவில்லை.

அதன் ஸ்கிரீன் ஷாட் இருந்தால் போடவும்.

சுரேகா said...

மிகவும் பயனுள்ள தகவல்கள் வவ்வால்..!!

கலக்குங்க!

வவ்வால் said...

நரேன்,

நன்றி!

அந்த துப்பாக்கி சண்டை காணொளிப்பார்த்தேன்,நல்லா இருக்கு, இணையத்தில் தான் நிறைய நானும் பார்த்தேன், பழைய கால கவ்பாய் படங்கள் இன்னும் நல்லா இருக்கும்(கருத்து ரீதீயாக அல்ல).

பேட்ரியாட் படத்தில் சிங்கி௳ள் ரவுண்ட் துப்பாக்கி வச்சு சுட்டுக்கிட்டு ரெண்டு தரப்பும் அடுத்து அடுத்து சாவுவதை காட்டுவாங்க, ஒரு வரிசை சுட்டதும் கீழ உட்கார்ந்து லோட் செய்யும், பின்னால் வரிசை சுடும், அதே போல எதிரணியும், எனவே ரென்டு பக்கமும் மாறி மாறி சாவாங்க.

ஆள் எண்ணிக்கையும்,துப்பாக்கியும் கூட வைத்திருப்பவர்களே இம்முறையில் போரில் வெல்ல முடியும்.
----------
அந்த கீலா கிருஷ்ணன் என்ன எழுதிச்சுன்னே தெரியலை, கனவுல நான் தான் வந்து பயமுறுத்துகின்றேன் போல , வர வர என் பேரைக்கேட்டாலே சிலருக்கு பேதியாகும் போல இருக்கு :-))

நானே படிக்கலை என்கிட்டே வந்து கேளுங்க!
---------------

ராச நட ராசர்,

துப்பாக்கிய பார்த்தாச்சா, என்னமோ வேண்டா வெறுப்பா பார்த்தாப்போல சொல்லுறிங்க, காஜல் அகர்வாலை ஜொள்ளுவிட்டுப்புட்டு :-))

சுமாரான படத்துக்கு இலவசமாக விளம்பரம் கொடுத்து சூப்பர் ஹிட் ஆக்கிட்டாங்க போல :-))

உலகமே அமைதி வேண்டும் என்று தான் சொல்லும்,ஆனால் அதற்கும் கொஞ்சம் பலம் வேண்டும், அமைதி என்பதையே சத்தமா சொன்னாத்தானே நாலு பேரு காதில் விழும் :-))

எனவே சமாதான புறாவாக இருக்க நினைக்கும் நாட்டுக்கும் ,ராணுவம் தேவை, ராணுவ வீரர்கள் அவர்கள் பெரும் ஊதியத்திற்கும் மேலாக சேவை செய்கிறார்கள் என்பதை மறுக்கவே முடியாது. ராணுவ அத்துமீறல்கள் இருந்தாலும் ராணுவவீரர்களை அதனை வைத்து இழிவாக பேசிட கூடாது,வேலை இல்லை பிச்சை எடுக்கிரேன் என சொல்லாமல் உயிருக்கு ஆபத்து என்பதை உணர்ந்தே ராணுவப்பணிக்கு செல்ல ஒரு துணிச்சல் வேண்டும், மேலும் யுத்தமில்லாவிட்டாலும் கடினமான சூழலில் தான் பணியாற்ற வேண்டும், எனவே அதனை எல்லாம் கணக்கில் எடுக்காமல் கொலை தொழில் என இழிவாக பேசும் "சமாதான அறிவு ஜீவிகளை" என்னவென்பது?

இறை நம்பிக்கை வேண்டும் என்பார்கள், சரி நம்பிக்கை வைக்கிறேன் என்றால் ,என் இறைவன் மீது தான் நம்பிக்கை வைக்கணும் இல்லை என்றால் நீ காபீர் , மோசக்காரன் என்பார்கள், இவர்களோடு ஒரே குப்பாச்சு குழப்பாச்சு தான்.

இதில் உங்க பங்காளியும்,மார்க்க பந்துக்களும் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க நினைக்கும் "நல்லவர்கள்" :-))

நெருப்பை நெருப்பென்று சொன்னால் அதில் எந்த மத நெருப்பை சொன்னதாக எடுத்துக்கொள்வது. எதிரி நாட்டின் சிலீப்பர் செல் ,அவ்வளவு தான். அந்த எதிரி நாடு ஒரு மதம் பின்ப்பற்றுகிறது என்றால் அதனை ஒத்த பெயர்கள் தான் சொல்ல வேண்டும், நாட்டால் பிரிந்து மதத்தால் இணைய வைத்து வன்முறை செய்வதை கடந்த கால வரலாறு சொல்கிறது,அதனை காட்சியப்படுத்தினால் , இங்குள்ளவர்கள் கூப்பாடு போட்டால் எதை தான் காட்சியாக வைக்க முடியும்?
----------
அதே உண்டி வில் தான் ,அணில் ,குருவி எல்லாம் அடிச்சு இருக்கேன், அது ஒரு கனாக்காலம்.

உங்களுக்கு கை தோல் பிச்சுக்கிச்சா? வீரனுக்கு காயம் சகஜம்னு எடுத்துக்க வேண்டாமா? விழுப்புண் இல்லாமல் குழந்தையாக இறந்துவிட்டால் மார்பில் வாளால் கீறி பின்னரே புதைப்பார்களாம் சங்க தமிழகத்தில்.

வீரம் வெளைஞ்ச மண்ணுய்யா ,இப்போ வெங்காயம் கூட விளையாம பெல்லாரியில இருந்து லாரியில வருது :-))
--------------
சுரேகாஜி,

வாங்க,நன்றி!

ஏதோ நாம கிறுக்கியதிலும் ஒரு பயன் இருக்குன்னு சொல்லுறிங்க அதுவே யான் பெற்ற பயன்!!!
--------------

அறிவியல் தமிழ் said...
This comment has been removed by the author.
அறிவியல் தமிழ் said...

//துப்பாக்கி என்ற சொல்லின் மூலம் பாரசீகம் ஆகும்//

துப்பாக்கி என்பது தமிழ் சொல் தான்.

துப்புதல் + அக்கி (அங்கி=கனல்) = துப்பாக்கி


பீரங்கி = பீரும் + அக்கி(அங்கி=கனல்) = பீரங்கி