Thursday, January 24, 2013

உரமானிய ஊழல்.


(த்தோடா வவ்வாலு சொன்னது கூட நடந்துடுச்சு!!!)

கடந்த 31-12-2012 அன்று வெளியிட்ட "FDI IN RETAIL MARKET-2:வர்த்தகமும் நுகர்வோர் நலனும்" எனும் இடுகையில் இந்தியாவில் வழங்கப்படும் உர மானியத்தின் பயன் விவசாயிகளுக்கு பலனளிப்பதில்லை,மாறாக உர நிறுவனங்களுக்கு அதிகப்படியான லாபம் அளிக்கவே என்பதை ,சர்வதேச விலை ,இந்திய சில்லரை விலை மற்றும் லாப விகிதங்களை ஆதாரத்துடன் விளக்கியிருந்தேன்,

சுட்டி:

வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: FDI IN RETAIL MARKET-2:வர்த்தகமும் நுகர்வோர் நலனும்.

குறிப்பிட்ட பகுதியை மீண்டும் இங்கு தந்துள்ளேன் ,முழுவதும் படிக்க சுட்டியை அழுத்தவும்.

கீழே காண்க.

//பொட்டாஷ் மற்றும் பாஸ்பேட்டின்  சர்வதேச விலை விவரங்கள் மற்றும் மானியம் ,சந்தை விலை நிலவரங்களை காண்போம்,


பொட்டாஷ் உரம்:

ஒரு டன் பொட்டாஷ் - 425 டாலர்/டன்.

இந்திய ரூபாயில் -425*50=21,250 ரூ மட்டுமே,

இந்திய விற்பனை விலையை விட சர்வதேச சந்தையில் விலை குறைவாகவே உள்ளது ,ஆனால் அதற்கு டன்னுக்கு மானியம் 14,777 ரூபாய்!

21,250 ரூபாய் மதிப்புள்ள பொட்டாஷ் உரத்தினை இறக்குமதி செய்து ரூ 24,000 என விலை வைத்து விற்க அம்மானியத்தொகையை அரசு அளிக்கிறது.

இதன்  மூல உர நிறுவனங்களுக்கு கிடைக்கும் நிகர வருவாய்=

14,777+24,000-21,250=17,527 ரூ.

சதவீத அடிப்படையில் வருவாய்=17,527/21,250*100=82.48%

போக்குவரத்து செலவு, கையாளும் செலவுகள் இருக்கும் தான் ஆனால் இப்படி 82.48 சதவீதம் அளவுக்கா இருக்கும்.


பாஸ்பேட் உரம்:

பாஸ்பேட்-524.08 டாலர்/டன்.

இந்திய ரூபாயில்,

524.08*50=27,252.16 ரூபாய்கள்.

இந்திய விற்பனை விலை ரூ =24,000

மாநியம்=18,474ரூ

நிகர வருவாய்=24,000+18,474-27,252.16=15,221.84 ரூ.

சதவீத அடிப்படையில்,=15,221.84/27,252*100=55.85%

இந்தியா 100 சதவீதம் பொட்டாஷ் உரங்களையும், 90 சதவீதம் பாஸ்பேட் உரங்களையும் இறக்குமதி செய்கிறது.

இவ்விரண்டு உரங்களையும் பெருமளவில் இறக்குமதி செய்து அதிக மானியம் கொடுக்கப்பட்டும் குறைவான விலையில் விவசாயிகளுக்கு உரங்கள் கிடைக்கவில்லை என்பதை மேற்கண்ட கணக்குகள் மூலம் எளிதாக புரிந்துக்கொண்டிருக்கலாம்.

அரசு அளிக்கும் மாநியம் அனைத்தும் உர நிறுவனங்களின் லாப விகிதத்தினை அதிகரிக்கவே பயன்ப்படுகிறது.//

தற்போது உரமானியத்தில் ஊழல் என புகார் வெளிப்படையாக கிளம்பியுள்ளது ,அது குறித்து அம்மையார் வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ளது என்னவெனில்,

//இந்தச் சூழ்நிலையில், ஜூன்  2012-ல் உர உற்பத்தி நிறுவனங்கள்  DAP உரத்தினை சில்லரை விலையில் மெட்ரிக் டன் ஒன்றுக்கு  25,000 ரூபாய் என சந்தையில் விற்பனை செய்தன என்றும், அரசு மெட்ரிக் டன் ஒன்றுக்கு 14,300 ரூபாய் மானியம் வழங்கியுள்ளது என்றும்; ஆனால், அதே காலகட்டத்தில் இறக்குமதி செய்யப்பட்ட டி.ஏ.பி. உரத்தின்  விலை மெட்ரிக் டன் ஒன்றுக்கு  31,900 ரூபாய் தான் என்றும்;  போக்குவரத்து மற்றும் விநியோகச் செலவுகளை கணக்கில் எடுத்துக் கொண்டாலும், ஒரு டன்னிற்கு  5,000 ரூபாய் வரை உரக் கம்பெனிகள் எதிர்பாராத வகையில் கொள்ளை லாபம் ஈட்டியுள்ளன என்றும்;  MOP  உரத்தைப் பொறுத்தவரையில், 2011-2012 ஆம் ஆண்டில், மெட்ரிக் டன் ஒன்றுக்கு  16,054 ரூபாயை அரசிடமிருந்து மானியமாக பெற்றுக் கொண்டு உபரியாக 5,500 ரூபாயை உரக் கம்பெனிகள் எடுத்துக் கொண்டுவிட்டன என்றும்; மத்திய ரசாயனம் மற்றும் உரத் துறை இணை அமைச்சர் ஸ்ரீகாந்த் ஜெனா  மத்திய ரசாயனம் மற்றும் உரத் துறை அமைச்சர் அழகிரியின் கவனத்திற்கு இவற்றை கொண்டு வந்ததாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும்,  3.8.2012 அன்று, உரத் தயாரிப்பு நிறுவனங்கள்,  DAP  உரத்தில் டன் ஒன்றுக்கு 4,000 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரையிலும், காம்ப்ளெக்ஸ் உரத்தில் டன்  ஒன்றுக்கு சுமார் 6,000 ரூபாயையும் கபளீகரம் செய்துவிட்டன என்று  தெரிவித்ததோடு மட்டுமல்லாமல்; உர உற்பத்தி நிறுவனங்கள் பயன்பாட்டுச் சான்றிதழை சமர்ப்பித்து,  உரம் தயாரிப்பதற்கான விலையின் விவரங்களை மத்திய உரத் துறைக்கு தெரிவிக்க வேண்டுமென்று மத்திய ரசாயனம் மற்றும் உரத் துறை இணை அமைச்சர்ஸ்ரீகாந்த் ஜெனா மத்திய ரசாயனம் மற்றும் உரத் துறை அமைச்சர்  மு.க. அழகிரிக்கு குறிப்பு வைத்ததாகவும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.//

//ஆனால், வேளாண் தொழிலை முதன்மைத் தொழிலாகக் கொண்டுள்ள இந்திய நாட்டில், ஊழலுக்கு ஊக்கமளிக்கும் வகையில், தனியார் உர உற்பத்தி நிறுவனங்கள் கொள்ளை லாபம் அடையும் வண்ணம் உரக் கொள்கை  வகுக்கப்பட்டு, இதன் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக விவசாயிகள் சுரண்டப்பட்டு வருகின்றனர்.//

தகவல் உதவி: இன்னேரம் இணைய தளம்,நன்றி!

http://www.inneram.com/news/tamilnadu-news/tamilnadu-cm-jayalalitha-asked-pm-to-sack-alakiri-from-cabinet-8416.html

மேற்கண்ட செய்தியின் மூலம் எனது பதிவில் புள்ளிவிவரங்களுடன் ஆதாரப்பூர்வமாக முன்னரே சொன்ன தகவல்களை உறுதிப்படுத்தும் வண்ணம் ,அதே விவரங்களுடன் உரமானிய ஊழல் குறித்து புகார் எழுந்துள்ளது தெளிவாக தெரிகிறது.

இதே போல சமையல் எண்னை இறக்குமதிக்கு அளிக்கப்படும் மானியம் விரயமாகிறது என்பதையும் அப்பதிவில் விளக்கியிருக்கிறேன், அதிலும் ஊழல் என எப்பொழுது வெடிக்குமோ தெரியவில்லை :-))

நாம் தொடர்ந்து,விவசாயம் ,மாற்று எரிப்பொருள் ,சுற்று சூழல்,அறிவியல் என அலசி ஆய்வு செய்து எழுதினாலும் ,மக்கள் இதெல்லாம் இணையத்தில் இருப்பது தானே என்ன புதுசா எழுதிட்டான் என நினைத்துக்கொள்வது வழக்கம், இணையத்தில் இருந்தாலும் சரியான தகவலை தேடி எடுத்து, அதனைப்புரிந்துக்கொண்டு எழுதுவது எவ்வளவு கடினம் என சினிமா, அரசியல் என மொக்கை போடுபவர்களுக்கு எளிதில் புரியாது.

தூற்றுவார் தூற்றட்டும் போற்றுவார் போற்றட்டும்,காலம் பதில் சொல்லும் என நம்ம கடமையை செய்வோம்!!!

ஹி...ஹி நாமளும் பஞ்ச் டயாலாக்கு பேசுவதற்கு ஒரு காலம் வரும்னு காட்டத்தான் இந்த பதிவு :-))

வரலாறு முக்கியம் மக்களே!!
------------------------------------------

24 comments:

வெளங்காதவன்™ said...

அசினை மட்டும் போட்டு காலத்தை ஓட்டுவதைக் கண்ணடிக்கிறேன்....

ச்சே, கண்டிக்கிறேன் ஆங்.....

#யோவ், வெளவாலு....
//தூற்றுவார் தூற்றட்டும் போற்றுவார் போற்றட்டும்,காலம் பதில் சொல்லும் என நம்ம கடமையை செய்வோம்!!!////


அம்மண நாட்டுல, கோமணம் கட்டுனவன் கோமாளி...ஆதலால், இருப்பதைத் துறந்திட வேண்டுகிறேன்.

-இங்ஙனம்,
குடிமகன்.

ராஜ நடராஜன் said...

வவ்வால்!நான் இன்னும் முந்தைய பின்னூட்டம் போட்டே முடிக்கவில்லை.அதற்குள் பதிவை தியேட்டரிலிருந்து தூக்கச்சொல்லி எந்த பந்து உங்களுக்கு அழுத்தம் கொடுத்தார்:)

இதோ ஒரு பந்து சினிமாவுக்கு புது வியாக்கியானம் சொல்லுது.சினிமான்னா நகைச்சுவை இருக்கவேண்டும்.ஆபாசம் இருக்க வேண்டும்:) எப்பூடி?

கமல் சொல்கிற மாதிரி இந்தப் பின்னூட்டத்துக்கும் ஆதாரம் இருக்குது:)

? said...

@ராசநட
இப்பதான் உம்ம கொலை வெறி பின்னூட்டம் பார்த்தேன். சார்வாகனோட பதிவுல வெளியில இருந்து ஆதரவு கொடுத்தனே அதுக்குள்ள மறந்துட்டீரோ...ஐயகோ...


இதுதான் சாக்குன்னு ஆளுக்காளு லோகத்ததை அப்புறானுவ...எரியற ஊட்டுல பீடி பத்தவைக்குற கதைய நீதிபதி குடும்பத்தோட ரிலிசுக்கு முன்னாடி படம் பாக்க வசதியா தீர்ப்பு சொல்லிட்டார்....வாழுக இந்திய நீதித்துறை!

@வவ்வால்

உர ஊழலை ஏங்காணும் பெரிசுபடுத்தறீர். எதுக்காக உரத்துல ஊழல் பண்ணுறா? தனக்காகவா? இல்லைங்காணும்...உரம் வாங்க முடியமா எல்லோரும் இயற்கை விவசாயத்துக்கு மாறனுங்கறதுதான் அவா எண்ணம். அதுமட்டுமில்லாம எலசன் டையத்துல பொதுஜனத்துக்கு பணவுதவி பண்ணவேணாமோ... ஆக மக்களுக்கு நல்லது செய்யத்தான் இந்த ஊழல்... நம்பும்.

வவ்வால் said...

வெளங்காதவன் ,

நன்றி!

என்னப்போல அன்னாடங்காச்சி பதிவரால் தினம் ஒரு பாவையை தேடி படம் போட முடியாதே, எனவே சிக்கனமா இருப்பதை வைத்து ஒப்பேத்துறேன் :-))

ஏற்கனவே முற்றும் துறந்த முனிப்போல தான் நம்ம வாழ்க்கை ஓடுது கையில இருக்க ஓட்டை மண் சட்டியையும், கிழிஞ்ச கோவணத்தும் உருவாம விட மாட்டீர் போல இருக்கே ..அவ்வ்!
---------------

ராச நட,

வாரும்,நன்றி!

உண்மையில உமக்கு விவரம் பத்தாதா? இல்லை தெரியாத போல ஆக்டிங்கானு கன்பியூஷனா இருக்கு.

நம்ம கிட்டே மார்க்கப்பந்துக்களின் டகுல்பாட்சா எல்லாம் வேலைக்காவாதுனு ஊருக்கே தெரியும்.

மாட்டினா மடக்கி வச்சு குமுறிடுவேன்னு , என்னப்பார்த்தாலே தெறிச்சு ஓடுவாங்க மார்க்குகள் :-))

நீர் என்னிக்கு புரியுறாப்போல பேசப்போறீர்னே தெரியலை ,ஆட்டிசம் வந்த ஆட்டுக்குட்டியாட்டம் எதுனா கெக்கேபிக்கேனு பேசினா யாருக்கு பிரியும்?

என்னமோ சு.சாமிப்போல ஆதாரம்னுலாம் சொல்றீர் , ஹே பக்வான் என்னாது ,கேட்டு சொல்லும் :-))

---------------
நந்தவனம்,

வாரும்,நன்றி!

ராச நடவுக்கு கொலவெறி கண்ணு ,காது ,மூக்குனு கன்னாபின்னானு ஏறியிருக்கும் போல :-))

படம் எடுத்தாமட்டும் போதாது , பிரிமியர் ஷோ நடத்தி நீதிபதி, அரசியல்வாதி, போலீஸுனு இலவச பாஸ் கொடுத்திருந்தா இப்படிலாம் ஆகி இருக்குமா?

# இயற்கை விவசாயத்த இப்படி கூட வளக்கலாம்னு நீரே வழி சொல்லிக்கொடுப்பீர் போல இருக்கே :-))

கட்சியின் உறுப்பினர் எல்லாம் அலைவரிசையில கோடிகளையே லட்சக்கணக்கில் அள்ளும் போது ,தலிவரோட பையன் பிசாத்து 1000 கோடி ஊழலில் மாட்டினால் ,உலகம் என்ன நினைக்கும்? நாம்ம் எம்மாதிரியான சமுகத்தில் வாழ்கிறோம் , யாரோ ஒரு ராசா எல்லாம் பிபிசியில் செய்தியாகும் போது , மாபெரும் தலிவரின் மகருக்கு சில்லரை ஊழலில் சிக்கி, உள்ளூர் சேனலில் ,செய்தியாகும் அவல நிலையை நினைத்தால் , நெஞ்சு பொறுக்குதில்லையே அய்யகோ :-))
-------------------

Anonymous said...

வவ்வாலின் வார்த்தை பொய்காது...Vovs always rocks...



By---
Maakkaan.

ராஜ நடராஜன் said...

@நந்தவனத்தான்!எங்க ஊர்ப்பக்கம் ஊர் மேயுறான்னாலே அர்த்தம் வேற.நானும் ஊர் மேய்பவனே!நீங்க எந்த கொலைவெறியை சொல்றீங்கன்னு தெரியலையே!

இதோ!உங்களுக்குன்னே காத்துகிட்ட மாதிரி வவ்வால் எப்படி எனக்கு கொலவெறின்னு சுதி ஏத்துறார் பாருங்க.

@வவ்வால்!இப்பத்தான் ஆனா மூனா பதிவுல உங்க மண்டை மேல கொட்டிட்டு வந்தேன்.இங்கே வந்து விவசாயம் பேசுனா கூட பரவாயில்லை.உர ஊழல் எப்படியெல்லாம் விவசாயத்தையும் பாதிக்குதுன்னு பேசலாம்.

நீங்க பந்து உதைச்சா தெரிச்சு ஓடுறதுதான் ஊர் அறிந்த விசயமாச்சே.ஆனால் இரண்டு வேறு திசைகளில் ஆரம்பிச்சு ஒரு புள்ளியில் சங்கமிக்கும் போது சொல்ல வேண்டிய அவசியமிருக்குதுல்ல.

ராஜ நடராஜன் said...

இது யாரு அனானிகள் ரூபத்தில் வந்து உங்களை மட்டும் ராக்கு,மூக்குன்னு சொல்லி பாராட்டுவது?ஒரு வேளை சாருவுக்கு மாதிரி ரகசிய பெண் ரசிகர்களோ?நாங்கெல்லாம் விடாம வவ்வால் மண்டையில் கொட்டுவதெல்லாம் கண்ணுக்கு தெரியாதோ:)

வவ்வால் said...

மாக்கான்,

வாங்க,நன்றி!

நான் உன்மையை தான் சொல்லுறேன்னு உங்களுக்காவது புரியுதே!!!
-----------

ராச நட,

வாரும்,நன்றி!

நான் வேற தனியா சுதி ஏத்திட்டுதான் இருக்கேன் :-))

என் மண்டையில கொட்டப்பார்த்தவங்க கை உடைஞ்சு போனது தான் மிச்சம்!

மார்க்கப்பந்துக்களுக்கு படம் என்னனே தெரியும் முன் நான் கதைய ஆரம்பிச்சவன் ,ஆரோ 3டி பற்றிய பதிவின் தேதிப்பார்க்கவும், அப்போவே நான் சொன்ன கதை சுருக்கத்தை இப்போ ஒருத்தர் எழதி பேரு வாங்கிட்டு இருக்கார் :-))

--------

எனக்கு மெய்யாலுமே பெண் வாசகர்கள் உண்டு, எல்லாம் நம்ம நண்பர்கள் தான்,அதுக்குனு மாக்கான்னு பேரு போட்டிருக்கார் பெண் வாசகரான்னு கேட்குறிங்களே அடுக்குமா இது ...அவ்வ்வ்.

குரங்குபெடல் said...

அண்ணே . .

அழகிரி படம் போடாம

இதிலயும் அசின் படமா . . .?

ராஜ நடராஜன் said...

இங்கே கடையே காத்து வாங்குது போல!எல்லோரும் விசுவரூபம் பத்தியே பேச்சு.

பின்னூட்டங்களில் பலரும் ஒளிந்து கொண்டிருக்கிறார்களா?இனி பின்னூட்டம் படிக்கிறதோட பெயர்களையும் சொல்லும் முறையில் பெண் நளினம் தெரிகிறதான்னு கவனிக்கனும் போல:)

Anonymous said...

ராசண்ணே...சாமி சத்தியமாய் நான் ஆம்பளணே...நம்புங்கணே..


By--
மாக்கான்.(Maakkaan).

? said...

@ராசா நட
//@நந்தவனத்தான்!எங்க ஊர்ப்பக்கம் ஊர் மேயுறான்னாலே அர்த்தம் வேற.நானும் ஊர் மேய்பவனே!நீங்க எந்த கொலைவெறியை சொல்றீங்கன்னு தெரியலையே!//

வவ்வாலின் போன பதிவில் தமிழ்மணத்துல என்னை ஊடுகட்டி அடிக்க ஆசை வெளியிட்டு இருந்தீர்களே அதை சொன்னேன்.

நீங்க பெரும்பாலும் கன்பூசன்லேயே திரிவீங்க போலயே... தீடீர்னு எதுக்கு ஊர் மேய்வது பத்தி எழுதுனீங்க? அதைப் பத்தி நான் ஒண்ணுமே சொல்லலியே?

ராஜ நடராஜன் said...

நந்தவனத்தான்!நான் எனது தளத்தைக் கூட எட்டிப்பார்க்காமல் பல இடங்களில் சுற்றுகிறேன் என்கிற அர்த்தத்தில் ஊர் மேயுறேன்னு சொன்னேன்.இதற்கு கூட நான் கோனார் நோட்ஸ் எழுதனுமா:)

நான் பதிவு உட்பட எதையும் குறிப்பெடுத்தி வைத்துக்கொள்ளாமல் நினைவிலிருந்தே செப்புவதால் சில நேரங்களில் கன்பூசனாகி விடுகிறேன் என்ற உங்கள் கருத்தையும் வழிமொழிகிறேன்:)

போங்க!விஸ்வரூப விமர்சனங்கள் எங்கும் தூள் பறக்குது.

வவ்வால் எங்கும் பறப்பதையே காணோம்.ஒருவேளை கேரளாவுக்கு விஸ்வரூபம் படம் பார்க்கிறேன் பேர்வழின்னு அசினைப் பார்க்கப் போயிட்டாரோ:)

? said...

வவ்வால் எங்கும் பறப்பதையே காணோம்.ஒருவேளை கேரளாவுக்கு விஸ்வரூபம் படம் பார்க்கிறேன் பேர்வழின்னு அசினைப் பார்க்கப் போயிட்டாரோ:) //

வார இறுதி வந்தாச்சே, அநேகம டாஸ்மாக் புண்ணியத்துல அசினோட சொர்க்கத்துக்கே போயிருப்பார்! :)

வவ்வால் said...

கு.பெ,

வாரும்,நன்றி!

அரசியல் முக்கியத்துவம் கொடுக்கவேண்டாம் என்று தான்,மேலும் அழகிரினு பேரு இருந்தா மட்டும் போதுமா,அழகா படம் இருக்கணுமே :-))

---------------

ராச நட,

வாரும் ,நன்றி!

கடை காத்தாடுனாலும் , நல்லா காத்தோட்டம் இருந்தா புழுங்காது தானே?


# மாக்கான் சொல்வது காதில விழுதா ,இல்லை ஒட்டப்பிரியாணி சாப்பிட்டு காதும் மந்தமா பூடுச்சா?

----------

நந்தவனம்,

நன்றி!

//நீங்க பெரும்பாலும் கன்பூசன்லேயே திரிவீங்க போலயே... தீடீர்னு எதுக்கு ஊர் மேய்வது பத்தி எழுதுனீங்க? அதைப் பத்தி நான் ஒண்ணுமே சொல்லலியே?//

நீங்க ரொம்ப லேட்டா புரிஞ்சிக்கிட்டு இருக்கீங்க ,என்னிக்கு தான் தெளிவா இருந்து இருக்கார் ராச நட, கிழக்குனு நாம சொன்னாக்கூடா , மேற்கில் சூரியன் அஸ்தமிக்கும்னு ஆரம்பிச்சு நமக்கு புதுசா ஒரு கதைய சொல்ல ஆரம்பிச்சுடுவார் ,கேட்டால் கிழக்குனு திசையை பற்றி பேசும் போது ஏன் மேற்குனு திசையைப்பத்தி பேசக்கூடாதுனு வியாக்கியானம் வேற கொடுப்பார் :-))

நான் சரஸ்வதி டீச்சருக்கு மனுப்போட்டதை பார்க்கலையோ?

------------

ராச நட,

இணையத்திலே 24 மணிநேரமும் பறந்துக்கிட்டு இருக்க முடியுமா?

ராவோட ராவா பஸ்ஸில தொத்திக்கீட்டு ஊருக்கு வந்தாச்சு, நாளையோ,நாளை மறுநாளோ புதுவையில் போய் விஸ்வரூபம் பார்க்கும் திட்டமும் இருக்கு, என்ன ஒரு இம்சைனா, சரக்கு கடை எல்லாம் லீவா இருக்கும்னு சொல்லுறாங்க,பார்ப்போம் நம்ம அதிஷ்டம் எப்படியிருக்குனு.

விடிய விடிய பஸ்சில வந்தாலும் பொறுப்பா வந்து சேவை செய்யுறேன், இதைப்பாராட்டி இணையரத்னானு ஒரு அவார்டு கிவார்டு கிடைக்குமா :-))
--------

நந்தவனம்,

கடையடைச்சுட்டாங்க ஓய், சுறாபானம்,சோம பானம் இல்லாமல் சோகராகம் பாடும் வேளையில் எங்கே டூயட் பாட் அவ்வ்வ்!

புதுவையில இருக்க சாராயக்கடைக்கு சொர்க்கம்னு பேரு வச்சிருக்காங்க,சொர்க்கவாசல் தொறக்குதானு அங்கே தான் போய்ப்பார்க்கணும் :-))

ராஜ நடராஜன் said...

என்னது சாராயக்கடைக்குப் பேரு சொர்க்கமா:))))

புதுவையிலேயே சொர்க்கம் இருக்கும் போது பந்துகள் எதுக்கு தீயா சொர்க்கத்த தேடுறாங்க!

வவ்வால் said...

ராச நட ,

வாரும்,

ஆமாம் புதுவையில பலசாயக்கடைகளுக்கு சொர்க்கம்னு பேரு வச்சிருப்பாங்க, தேங்காத்திட்டு அருகேயுள்ள சொர்க்கம் நல்லா ஃபேமஸ் ;-))

வெறும் சொர்க்கத்தை மட்டும் காட்டினா பொதுமா சகோ.சார்வகன் அடிக்கடி சொல்லும் "நித்திய கன்னிகள்' வேண்டாமா? புதுவை சொர்க்கத்தில கிழவிங்க தான் சரக்கடிக்க வரும் :-))

அதும் ஒன்ன்னா ரெண்டா, 72 நித்திய கன்னிகள் ஒரே மார்க்கப்பந்துக்கு வேண்டுமாம் , அப்படிப்பார்த்தா உலகில் இருக்கும் மக்கள் தொகையை விட நித்திய கன்னிகள் எண்ணிக்கை அதிகமா இருக்கனுமே :-))

ஒருத்தனுக்கு எழுந்து நிக்கவே வக்கில்லையாம் ,72 நித்திய கன்னிகள் வேண்டுமாம், என்ன கொடுமைடே :-))

Anonymous said...

தல we are waiting
வளைகுடா வாழ் வவ்வால் ரசிகர்கள்

ராஜ நடராஜன் said...

எனக்குத் தெரியாம யாரு அது வளைகுடா வாழ் வவ்வால் ரசிகர் கள்?

அசின் சேச்சியோட சேச்சி கள்:)

Anonymous said...

ஐயா ராசா சேச்சிகள் இல்ல அசினின்ட அத்தான்கள்

Anonymous said...

உடல் மண்ணுக்கு உயிர் அசினுக்கு

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

இதுல இவ்வளோ விஷயம் இருக்கா.இதெல்லாம் சிந்திக்க நேரம் எங்க இருக்கு.விவசாயம் சம்பந்தப் பட்ட பதிவை இப்போதான் பாக்கிறேன். உங்க கடமைய செய்யுங்க பாஸ்.

வவ்வால் said...

அனானி அண்ணாத்தைகளா,

என்ன விளையாட்டு இது பிச்சு ..பிச்சு... ரசிகர் மன்றம் ஆரம்பிச்சமா, கைய தட்டினமோ,விசில் அடிச்சமா, வருங்கால அமெரிக்க ஜனாதிபதி வாழ்கனு குரல குடுத்தமானு எடத்தை காலி செய்யணும் ,அதை விட்டுப்புட்டு எனக்கு போட்டியா தலைவிக்கிட்டே வந்தீங்க,ரசிகர் மன்றத்தையே கலைச்சிப்புடுவேன் சொல்லிட்டேன் :-))

----------

ராச நட எல்லாம் உங்க வேல தானோனு டவுட்டா இருக்கு?
----------

முரளி,

வாங்க,நன்றி!

மக்கள் பெரும்பாலும் கண்டுக்கொள்ளாததால் தான் அரசியல்வாதிகள் எல்லாத்திலும் ஊழல் செய்கிறார்கள்.

நம் கடன் பணி செய்து கிடப்பதே !!!~

ஜோதிஜி said...

இன்னும் தெளிவாக வந்து இருக்க வேண்டிய பதிவு.