சமீபத்திய சென்னை பெருநகராட்சி மாமன்ற நிதிநிலை அறிக்கை சமர்ப்பின் போது, மாமன்றத்தலைவர் சைதை.துரைசாமி அவர்கள் பல திட்டங்களை அறிவித்தார் ,ஆனால் அவற்றை எல்லாம் ஊடகங்களும் சாமனியர்களும் பெரிதும் கவனிக்கவில்லை ,அதே சமயம் சென்னை மாநகரில் "அம்மா திரையரங்கம்" என மலிவு கட்டண திரையரங்குகள் அமைக்கப்படும் என ஒரு மாபெரும் புரட்சித்திட்டத்தினை அறிவித்ததையே அனைவரும் ,வாயில நொரைதள்ளும் அளவுக்கு விவாதித்து மகிழ்கிறார்கள்( நொரை தள்ளப்பதிவு எழுதிட்டு பேசுறப்பேச்சப்பாரு அவ்வ்)
இணைய வெளியிலோ, அய்யய்யோ ச்சொல்லவே வேண்டாம் ,முகநூல்,பிளஸ், துவித்தர் ,பழம்பஞ்சாங்கமான பிலாக்கர்னு எல்லா இடத்திலும் "இணைய சமூக போராளிகள்" பிரிக்கட்டி பிரிச்சு அடிச்சுட்டு இருக்காங்க!
நாட்டில ஆயிரம் பிரச்சினை ஓடுது ,கூவத்துல சாக்கடை ஓடுது ,அதுல கொசு மேயுது, அதைப்பற்றிலாம் எழுத நமக்கு முடியலை ,இந்த லட்சணத்துல இதைப்பத்தி எழுதனுமானு விரக்தி வெரட்டியடிக்க ,வழக்கம் போல மாட்டு சாணத்தில் இருந்து பெட்ரோல் தயாரிப்பது எப்படினு ஒரு பதிவு எழுதி "நான் ரொம்ப நல்லவன்" எனக்காட்டிக்கலாமானு மனசுல ஒரு நமைச்சல்.ஏற்கனவே புள்ளிவிவர அறிக்கை போல எழுதுற "கவர்ச்சியா" எழுதனும்னு பெரியவங்களால அறிவுரைக்கப்பட்டும் இன்னுமா திருந்தாம இருக்கணும் ,அவ்வப்போது "கவர்ச்சியா" எழுதி நாமளும் பதிவேண்டானு காட்டிக்கலாமேனு , அம்மா திரையரங்க திட்டத்தினை அலசிக்காயப்போடலாமே என இப்பதிவு.
புரட்சித்தலைவினு பட்டம் போட்டுக்கிறிங்களே ,என்ன புரட்சி செய்தீர்கள்னு யாராவது கேட்டுட்டாங்களானு தெரியலை ,சமீப காலமாக அறிவிக்கப்படுவன எல்லாமே புரட்சிகரமாகவே இருக்கின்றன ,பாவம் என்னை போன்ற அப்பிராணிகளுக்கு தான் மிரட்சியில முழுப்பிதுங்குது அவ்வ்!
இனிமே எவனாச்சும் அம்மையாரைப்பார்த்து "என்ன புரட்சி பண்ணினிங்கனு" நாக்கு மேல பல்லு போட்டு சொல்லுவான் ,சொன்னான் வாயில வெத்தலைப்பாக்கு போட வச்சிட மாட்டாங்க ரெத்தத்தின் ரெத்தங்கள் அவ்வ்!
இம்மாபெரும் புரட்சிகர சோசலிச முற்போக்கு திட்டத்தினை ஆதியோடு அந்தமாக அலசி ,பொருளாதார ரீதியாக சாத்தியமா என வரலாறு,புவியியல் ,புள்ளியியல் ஆதாரங்களோடு காண்போம் வாரீர்,வாரீர்!
# அம்மா திரையரங்க திட்டம் நடைமுறையில் சாத்தியமா?
சாத்தியமே!
# பொருளாதார ரீதியாக லாபமளிக்க கூடியதா?
லாபகரமான திட்டமே!
# இதனால் சமூகத்துக்கு பலன் உண்டா?
உண்டு!
# அப்படியானால் மக்களுக்கு அவசியமான திட்டம் தானே என்றால்,
இல்லை என்பேன்!
ஏனெனில் திரைப்படத்துறையினை முட்டுக்கொடுத்து காக்கும் சூழல் இல்லை, மேலும் இதனை விட அத்தியாவசிய தேவைகள் மக்களுக்கு இருக்கின்றன ,அவற்றின் மீது கவனம் செலுத்தலாம் என்பேன்.
இப்போ பொதுவா அரசே திரைத்தொழிலில் பங்குப்பெற்று நடத்துவதன் முன்,பின் வரலாற்றினைப்பார்ப்போம்.
# அரசுக்கு திரையரங்கம் நடத்துவது தான் வேலையா ,இந்த கொடுமைய எல்லாம் அம்மையார் மட்டும் தான் செய்வாங்கனு சில,பலர் நினைக்கலாம்,ஆனால் அரசே திரையரங்குகள் மற்றும் கலையரங்குகளை நடத்துவது ஆதி காலம் தொட்டே இருக்கிறது.
பல நாடுகளிலும் அரசே படத்தயாரிப்பிலும் ஈடுபடுகின்றன, இதற்கு ஆரம்பப்புள்ளி திரைப்படங்களின் ஆதி மூலமான ஃபிரான்ஸ் நாடு ஆகும்.
பிரான்ஸை சேர்ந்த, Auguste and Louis Lumière சகோதரர்கள் கி.பி 1895 இல் "உணவு இடைவேளை" என்ற முதல் சலனப்படத்தினை திரையிட்டதில் இருந்து "திரைப்பட தயாரிப்பில்" பிரான்சின் பங்கு துவங்குகிறது.
ஆரம்பத்தில் உலகிலேயே மிக அதிகமான திரைப்படங்கள் பிரான்சில் தான் தயாரிக்கப்பட்டன, பல தயாரிப்பு நிறுவனங்களும் துவங்கின,உலக அளவில் திரையிடப்பட்டன. லூமியர் சகோதரர்களால் தயாரிக்கப்பட்டு திரையிடப்பட்ட படங்களே இந்தியாவிலும் பார்க்கப்பட்டது,அப்படி திரையிடப்பட்ட ஒரு படத்தினை "தாதா சாகேப் பால்கே" பார்க்க நேரிட்டதால் தான் இந்திய சினிமா துறையும் உருவானது.
*(எச்சரிக்கை: பால்கே வரலாற்று பதிவு கிடப்பில் இருக்கு ,எந்நேரமும் வரலாம் அவ்வ்)
ஆனால் அமெரிக்காவும் படத்தயாரிப்பில் குதித்து பெருமளவில் தயாரிக்க ஆரம்பித்ததும் ,பிரஞ்சு படத்தயாரிப்புகளுக்கான உலக சந்தை சுருங்கியது,உள்நாட்டு சந்தையிலும் அமெரிக்க படங்கள் ஆதிக்கம் செலுத்தவே ,பிரஞ்சு தயாரிப்பாளர்கள் ,திரையரங்குகள் ஆகியன நெருக்கடியில் சிக்கின. எனவே 1911 ஆம் ஆண்டு ,பிரான்சில் 7 அயல்நாட்டு திரைப்படங்கள் திரையிடப்பட்டால் கண்டிப்பாக ஒரு பிரஞ்சு படத்தினை திரையிட வேண்டும் என தியேட்டர்களுக்கு கட்டுப்பாட்டினை அரசு விதித்துள்ளது.
அப்படியும் பிரஞ்சு படத்தயாரிப்பு நிறுவனங்கள் சிக்கலில் தவிக்கவே, படத்தயாரிப்பினை ஊக்குவிக்க ,அரசே கடனுதவி அளித்தது மேலும் Georges Méliès என்பவரின் படத்தயாரிப்பு நிறுவனத்தினை பிரஞ்சு அரசே வாங்கி படத்தயாரிப்பிலும் ஈடுபடலாயிற்று.
இவ்விடத்தே ஜியார்ஜெஸ் மெலைஸ் பற்றி சிறிது நினைவு கூர்வோம்,இல்லையெனில் ,திரை ஆர்வலன் என நினைத்துக்கொள்வதில் பொருளேயில்லை, தேவையில்லாத கதை என நினைப்பவர்கள் ஒரு லாங்க் ஜம்ப் அடித்து அடுத்தப்பகுதிக்கு தாவவும்!
Georges Méliès என்பவர் அக்காலத்தில் மேஜிக் நிபுணராக இருந்து ,திரைப்படத்துறையில் இயக்கம்,நடிப்பு, தயாரிப்பு என பல துறைகளிலும் பிரான்சில் கலக்கியவர். இன்றும் பயன்ப்படுத்தப்படும் பல திரை சிறப்பு நுணுக்கங்கள் இவராலேயே உருவாக்கப்பட்டவையே. அதனாலே "திரைப்பட சிறப்புக்காட்சிகளின் தந்தை" என அழைக்கப்படுகிறார். எடிட்டிங்கில் பேரலல் கட், ஜம்ப் கட் எல்லாம் இவரால் கையாளப்பட்ட உத்திகளே!
உலகின் முதல் அடல்ட்ஸ் ஒன்லி படமும் இவர் தான் எடுத்தாராம், ஒரு அம்மணி உடைமாற்றுவது தான் மொத்த படமே, படம் முடிச்சதும் அம்மணியையே கண்ணாலம் கட்டிக்கினார் அவ்வ்!(ஹி...ஹி இப்படி ஒரு படம் எடுத்து ...எடுத்து அடப்போங்கப்பா)
கி.பி 1900 ஆம் ஆண்டில் ,மவுனப்படக்காலத்திலேயே , இவர் ஒருவரே ஏழுத்தோற்றங்களில் ஒரே காட்சியாக தோன்றி "சப்தவதாரம்" எடுத்து சாதித்தவர். தொழில்நுட்பம் வளர்ந்தக்காலத்தில் கூட தசவதாரம் எடுக்க ரொம்ப கஷ்டப்பட்டதாக பில்ட் அப் தான் நம்ம ஊரில் கொடுக்கிறாங்க அவ்வ்!
மேலும் ஒவ்வொரு ஃப்ரேமையும் கைகளால் வண்ணம் தீட்டியே கி.பி 1902 இல் வண்ணப்படங்களையும் எடுத்துள்ளார்.
சப்தவதாரம்- The One-Man Band
வண்ணப்படம்- A Trip to the Moon
---------------------------------------------------
பிரஞ்சு மொழியில் பல உலக சிறப்புப்பெற்ற கலைத்துவம் வாய்ந்த திரைப்படங்கள் ,அரசு தயாரிப்பில் தான் உருவான, பிரஞ்சு புதிய அலை சினிமா பிறப்பதற்கும்.அரசின் இம்முயற்சியே காரணமாகும்.
கி.பி 1946 முதல் the Centre national du cinéma et de l'image animée (CNC) என்ற அமைப்பின் மூலம் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி படத்தயாரிப்பில் பிரஞ்சு அரசு ஈடுபட்டு வருகிறது,மேலும் உலக சினிமா நிதி என்ற ஒன்றினை உருவாக்கி பல்வேறு நாட்டு திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்தும் உலக படங்களையும் தயாரிக்கிறது.
குறிப்பு:
உலகத்திலேயே இந்தியர்களுக்கு சினிமா மோகம் அதிகம்,அதிலும் தமிழனுக்கு வெறீயே அதிகம்னு பொதுவா பேச்சுண்டு, ஆனால் அதையெல்லாம் அசால்ட்டா பிரெஞ்சுக்காரங்க தூக்கியடிக்கிறாங்க,
உலகத்திலேயே திரையரங்க வருவாயில் மூன்றாவது இடம் பிரான்ஸ் தான் , முன்னால அமெரிக்காவும்,அடுத்து இந்தியாவும் இருக்கு.
மூன்றாவது இடம் தானேனு நினைக்கலாம் அங்கே தான் இருக்கு மேட்டர், அமெரிக்கா பெரிய நாடு, மக்கள் தொகை நம்ம அளவுக்கு இல்லைனாலும் 32 கோடி இருக்கு,மேலும் நிறைய தியேட்டர் அதோடு உலக அளவில் மார்க்கெட் உள்ளவர்கள்.
இந்தியா பெரிய நாடு ,அதிக மக்கள் நிறைய பேர் படம் பார்க்கிறாங்க,எனவே இரண்டாம் இடம்.
ஆனால் வெறும் 5.9 (6.58 crores-2013)கோடி மக்கள் தொகை கொண்ட பிரான்சில் 5,465 தியேட்டர்கள் இருக்கு(தமிழ் நாட்டின் மக்கள் தொகை சுமார் 7 கோடி ,1,150 தியேட்டர்களே உள்ளன), மேலும் ஒரு மாநகர பகுதியில் உலகிலேயே மிக அதிக தியேட்டர்கள் கொண்ட நகரம் பாரிஸ் தான்!!!
இனிமே எவனாது தமிழனுக்கு சினிமா வெறினு சொன்னால் "ப்ரெஞ்ச் ஃப்ரை" செய்துடணும் :-))
# அதே காலக்கட்டத்தில் இங்கிலாந்திலும் படத்தயாரிப்பில் நெருக்கடியான சூழல் உருவாகவே ,இங்கிலாந்து அரசும்,1925 இல் அயல்நாட்டு படங்களுக்கு கட்டுப்பாடு,உள்நாட்டு தயாரிப்புக்கு வரிச்சலுகை என வழங்கியது, இங்கிலாந்து சினிமாட்டோகிராபி சட்டம் என ஒன்றினையும் போட்டுள்ளது.
பின்னர் மீண்டும் 1949 இல் "the National Film Finance Corporation (NFFC)" என்ற அமைப்பினை உருவாக்கி தயாரிப்பு, விநியோகம் ஆகியவற்றிற்கு கடனுதவி அளித்து வருகிறது. மேலும் கட்டண வசூலில் 50% தயாரிப்பாளருக்கு கட்டாயம் பங்கு தர வேண்டும் என சட்டமும் இயற்றியது.
# ஐக்கிய அரசநாடுகளின் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் திரைப்படத்துறையினை மேலும் விரிவாக்க வேண்டும் என திட்டமிட்டு, கி.பி. 1960 இல் பேருந்துகளை "நகரும் திரையரங்குகளாக"(movi bus) வடிவைமத்து ,நகரில் உலாவ விட்டது.
(மூவி பஸ் குழு)
(டிக்கெட் வாங்க(சினிமாவுக்குதேன்) காத்திருக்கும் சீமான்கள்)
இதில் கவனிக்க வேண்டிய விடயம் என்னவெனில்,அப்பொழுதெல்லாம் டிஜிட்டல் புரொஜெக்ஷன், வண்ணத்தொலைக்காட்சியெல்லாம் இல்லை, வழக்கமான சினிமா புரொஜெக்டரையே பேருந்துக்குள் வைத்து இயக்கினார்கள்!
( அக்கால மூவி பஸ் உட்புறம்,அப்பவே ஒருத்தன் தூங்குறான்யா)
ஆம்னி பஸ்ஸில் டிவிடில படம் போடுறதுக்கு பெரியார் சுழியே ,இங்கிலாந்தில தான் போட்டிருக்காங்க :-))
தற்பொழுது ஐக்கிய அரசநாடுகள் அரசு இத்தகைய "சினிமா பேருந்துகளை" இயக்குவதில்லை, ஆனால் அதே பழைய சினிமா பேருந்துகளை சில திரையார்வலர்கள் விலைக்கு வாங்கி ,செப்பனிட்டு டிஜிட்டல் புரொஜெக்ஷன்,சர்ரவுண்டு சவுண்டில் இன்றும் லண்டனில் இயக்கி வருகிறார்கள்.
(தற்கால டிஜிட்டல் மூவி பஸ்)
# திரைப்படங்களுக்கு முன்னரே நாடகங்களை அரங்கேற்ற என அரசே 'நாடக அரங்கங்களையும்" கட்டியுள்ளது.
கி.பி 1879 இல் ஷேக்ஸ்பியர் நாடகங்களை அரங்கேற்ற என " தி ஷேக்ஸ்பியர் மெமோரியல் தியேட்டர்" என ஒரு நாடக அரங்கினை சிலர் ஒன்று சேர்ந்து உருவாக்கினர், பின்னர் 1939 இல் ராயல் ஷேக்ஸ்பியர் தியேட்டர் என அரசின் நிதியுதவியுடன் மேம்படுத்தப்பட்டது.
(ஷேக்ஸ்பியர் நாடக கொட்டாய்)
அக்காலக்கட்டத்தில் ,பெர்னாட் ஷா முதலான எழுத்தாளர்கள் மற்றும் நாடக ஆர்வலர்கள் ஒன்று கூடி அரசே ஒரு நாடக அரங்கினை கட்டித்தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்,அதன் பலனாக கி.பி 1948 இல் லண்டன் கவுண்டி கவுன்சில் ,தேம்ஸ் நதிக்கரையோரம் இடம் ஒதுக்கி தந்தது. பின்னர் கி.பி 1949 இல் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் சட்டமியற்றி ,நிதி ஒதுக்கி "தி ராயல் நேஷனல் தியேட்டர்" என ஒன்றினை நாடக அரங்கேற்றங்களுக்காக கட்டினார்கள்.
(நேஷனல் நாடகக்கொட்டாய்)
நவீன கால மாற்றத்திற்கு ஏற்ப, அரங்கில் நடைப்பெறும் நாடகங்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் பல்வேறு சினிமா தியேட்டர்களின் திரையில் செயற்கைக்கோள் மூலமும் ஒளிப்பரப்பப்படுகிறது.
தமிழகத்தின் நிலை:
நம் நாட்டில் தமிழ்நாடு என மொழி வாரியாக மாநிலமாகாத அக்காலத்தில், சென்னை மாகாண ஆட்சி மன்ற செயல்பாடுகள் ,அரசினர் தோட்டம் எனப்படும் ஓமாந்தூரார் தோட்டத்தில் இருந்த "பழைய கவர்னர் மாளிகையில்" தான் கூடியது ,பின்னர் இடத்தேவை கருதி ஒரு புதியக்கட்டிடமும் கட்டப்பட்டது, இந்தியா குடியரசாக ஆன பின்னர் செயல் பட்ட தமிழக சட்ட மன்றம் அப்புதியக்கட்டிடத்தில் தான் கி.பி 1952-57 வரையில் செயல்ப்பட்டது.
மேற்கண்ட சட்டமன்ற வரலாறு எதுக்குனு குழம்பலாம், விசயமிருக்கு,இன்று அம்மா திரையங்கத்தினை நக்கலடிக்கும் கழக சொம்புகள் ஒன்றினை வசதியாக மறந்து விட்டார்கள், சென்னையில் முதல் அரசு திரையரங்கினை 1974 இல் உருவாக்கியது வேறு யாருமல்ல சாட்சாத் மஞ்சத்துண்டு அய்யா அவர்களே :-))
ஆமாம் அப்பழைய சட்டமன்ற வளாகத்தினை கி.பி 1974 இல் மேம்படுத்தி , 1039 நபர்கள் அமரும் வகையில் திரையரங்காகவும், மாலையில் நாடக அரங்காகவும் செயல்படும் வகையில் மாற்றி கட்டி,அதற்கு கலைவாணர் என்.எஸ் கிருஷ்ணன் நினைவாக "கலைவாணர் அரங்கம்" எனப்பெயரிட்டார்கள். எனவே சென்னையில் முன்னரே அரசால் திரையரங்கம் நடத்தப்பட்டுள்ளது என்பது தெளிவாகும்.
லாபகரமாக இயங்கியதா என்ற கேள்விக்குள் எல்லாம் போகத்தேவையிலை ,கலைவாணர் அரங்கு 2009 வரையில் சிறப்பாகவே இயங்கியது, மாலையில் பி.சி சர்க்கார் மேஜிக் ஷோ, நாடகம் போன்றவை நடக்கும்,பகல் வேலையில் இரு காட்சிகள் மட்டும் ஆங்கிலம்,தமிழ் என ஏதேனும் திரைப்படங்களை மலிவு கட்டணத்தில் திரையிடுவார்கள்.
நானே பல முறை பார்த்துள்ளேன்,முதல் வகுப்பு கட்டணமே 10 அல்லது 12 ரூ என இருக்கும், பெரும்பாலும் பல இடங்களில் ஓடி முடித்த திரைப்படங்கள் அல்லது உலக திரைப்பட வரிசையில் வந்த படங்களை தமிழக அரசின் செய்தி விளம்பரத்துறை வாங்கி திரையிடும், சில சமயங்களில் "கிளாசிக்கான ஸீன்" படங்களும் காணக்கிடைக்கும் ஹி...ஹி!
(இடிப்பட்ட கலைவாணர்)
இத்தகைய பாரம்பரியமிகு கலையரங்கை 2009 இல் புதிய தலைமை செயலகம் கட்டுகிறேன் என இடித்து தள்ளியதும் ,மாண்புமிகு மஞ்சத்துண்டு அவர்களே, மேலும் புதிதாக ஒரு கலையரங்கு கட்டி கலைவாணர் பெயரே வைப்பேன் என வாக்குறுதியளித்தார் , அவசரமாக அரைகுறையாக தலைமைச்செயலகத்தினை கட்டி திறந்தாரே ஒழிய "கலையரங்கை கட்ட மறந்துவிட்டார்" அவ்வ்!
சென்னையில் மட்டுமல்ல திருச்சியில் கூட மாநகராட்சியின் சார்பில் "கலையரங்கம்" என்ற தியேட்டர் கட்டப்பட்டு ,இன்றளவும் இயங்கி வருகிறது,தற்சமயம் நீண்டக்கால குத்தகைக்கு விடப்பட்டு ,டிடிஎஸ், டிஜிட்டல் புரொஜெக்ஷனில் "கதிர் வேலன் காதலை" மக்களுக்கு காட்டி மகிழ்வித்து வருகிறது!
இது போன்று நெய்வேலி நகரியத்தில் , மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள வணிக வளாகத்தில் ,பழுப்பு நிலக்கரி நிறுவனத்தால் "அமராவதி" என்ற திரையரங்கம் நடத்தப்பட்டது, தற்சமயம் செயல்பாட்டில் இல்லை.
எனவே அரசு எந்திரங்களின் சார்பாக திரையரங்குகள் கட்டி நிர்வாகிப்பது ஒன்றும் வழக்கில் இல்லாத செயல் அல்ல.
கம்யூனிச நாடுகளில் எல்லாம் வழக்கமாகவே திரைப்படத்தயாரிப்பு,விநியோகம், திரையிடல் என அனைத்தையும் அரசே செய்யும்(முன்னாள் சோவியத் யூனியன்) ,அவர்களை உதாரணம் காட்டக்கூடாது என்றே ஜனநாயக நாடுகளை சொல்லியுள்ளேன்.
# இந்திய அளவில் ,திரைப்படங்களின் வளர்ச்சிக்காக தேசிய திரைப்பட வளர்ச்சிக்கழகம் (NFDC formerly Film Finance Corporation)என ஒன்று நிறுவப்பட்டு , பல படங்களை அரசின் நிதியில் தயாரிக்கப்படுகின்றன.
ஜி.வி.அய்யரின் மகாபாரதம்(முதல் சமஸ்கிருத மொழிப்படம்) , மேலும் சலீம் லாங்டே பீ மாத் ரோ ,மீரா நாயரின் மிர்ச்சி மசலா,சலாம் பாம்பே,மம்முட்டி நடித்த "பாபா சாகெப் அம்பேத்கார்" ,டிரெயின் டு பாகிஸ்தான், ஷபனா அஸ்மி நடித்த தாராவிபோன்ற விருது வென்றப்படங்கள் எல்லாம் NFDC ஆல் தயாரிக்கப்பட்டவையே.
தமிழிலும் பல படங்கள் NFDC நிதியில் தயாரிக்கப்பட்டுள்ளன, பாலு மகேந்திராவின்(காலம் சென்ற) வீடு,சந்தியாராகம் , மகேந்திரனின் "சாசனம்", ஹரிஹரனின் "ஏழாவது மனிதன்" கே.எஸ்.சேதுமாதவன்(கேரளா)இயக்கத்தில் நடிகர் சிவகுமார் நடித்த "மறுபக்கம்"போன்ற திரைப்படங்கள் குறிப்பிடத்தக்கவை.
ஆரம்பத்தில் புதுமுக இயக்குனர்கள், பிரபல இயக்குனர்கள் என அனைவருக்கும் NFDC நிதியளித்து உதவியது ,சமீபகாலமாக புதுமுக இயக்குனர்களுக்கு படம் தயாரிக்க நிதியளிப்பதில்லை( தற்காலிகமாக அனைத்து படத்தயாரிப்பினையும் நிறுத்தியுள்ளார்கள்). தற்சமயம் இணையத்தில் கட்டண சேவையாக படங்களை ஒளிப்பரப்பி வருகிறார்கள்.
அரசின் நிதியில் திரைப்படங்கள் தயாரிக்கலாம் எனில் திரையரங்குகளும் கட்டலாம் தானே!
# பொருளாதார சாத்தியம்.
திரையரங்குகளை அரசே நடத்தினால் அவற்றிற்கு நல்ல திரைப்படங்கள் கிடைப்பது கடினம் மேலும் பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்களின் விநியோக விலை அதிகம் அவற்றினை வாங்கி மலிவாக திரையிட்டால் நட்டம் வரும் என்கிறார்கள்.
ஆனால் அதற்கும் ஒரு வழி இருக்கிறது, தமிழில் பெயர் சூட்டப்படும் திரைப்படங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது ,இதனால் அரசுக்கு வரவேண்டிய வரி வருவாய் இழப்பு ஏற்படுகின்றது, இதனை சரி கட்டும் விதமாக , வரிவிலக்கு பெற்ற படங்களின் ஒன்று அல்லது இரண்டு பிரதிகளை "திரைப்பட *பிரதி" தயாரிப்பு செலவின் விலைக்கு மட்டுமே அரசிற்கு விற்க வேண்டும் என சட்டம் போடலாம்.
* பிரதி தயாரிப்பு செலவு தற்போது டிஜிட்டல் DCP க்கு சுமார் 50 ஆயிரங்கள் மட்டுமே
இப்படி செய்வது அரசே ,அதிகார துஷ்பிரயோகம் செய்யும் செயல் என நினைக்கலாம், அப்படியல்ல வழக்கமாக தேசிய விருது வென்ற படங்களின் ஒரு பிரதியை,படப்பிரதியிட ஆகும் செலவுக்கே தேசிய திரைப்பட வளர்ச்சி கழகத்திற்கு கொடுக்க வேண்டும் என விதி இருக்கு.
அவர்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் திரையிட்டுக்கொள்வார்கள், தூர்தர்ஷனிலும் ஒளிப்பரப்பிக்கொள்வார்கள். விருது கிடைக்குது எனில் படப்பிரதி விலைக்கு விற்கும் தயாரிப்பாளர்கள் ,வரி விலக்கு கிடைக்க,படப்பிரதியின் விலைக்கு கொடுக்க கூடாதா?
இது நம்ம நாட்டில மட்டும் இல்லை ஆஸ்கார் போன்ற விருதுகளுக்கு படம் அனுப்பினாலும் இப்படி ஒரு பிரதியை கொடுக்கணும், அவர்கள் அவற்றை எல்லாம் ஆஸ்கார் பெஸ்ட் மூவி கலெக்ஷன்" என டிவிடி போட்டு விற்றுக்கொள்வார்கள் அவ்வ்!
மேலும், ஆஸ்கார் நாமினேஷன் செய்யும் போது தயாரிப்பாளர் சுமார் 200 டிவிடி பிரிண்டுகளும் இலவசமாக அளிக்கனும், அதெல்லாம் ஜூரிகள் பார்க்கவாம்!
பல கோடி ரூபாய்கள் மதிப்பில் கேளிக்கை வரிச்சலுகை கொடுக்கும் அரசுக்கு பதில் கைமாறாக இதனைக்கருதி தயாரிப்பாளர்கள் செய்யலாம்,செய்வார்கள்! அம்மையார் உத்தரவு இட்டால் மீற முடியுமா,இல்லை மீறித்தான் படமெடுக்க முடியுமா!!!
# மேலும் பல எண்ணற்ற சிறு,குறு முதலீட்டு திரைப்படங்களுக்கு அரங்கம் கிடைப்பதேயில்லை எனவே அவர்களுக்கும் பெரும்பயனாக இருக்கும்.
# தற்பொழுதெல்லாம் குறும்படம் தயாரிப்பவர்களும் ,மெனக்கெட்டு பிரிவியூ தியேட்டர்களை அதிக வாடகைக்கு பிடித்து திரையிட்டு காட்டுகிறார்கள், அவர்களுக்கு மலிவான கட்டணத்தில் திரையிட அனுமதியளிக்கலாம். இது திரைக்கலையினை வளர்க்க உதவும்.
# சென்னையில் மட்டும் சில திரையரங்குகள் அமைப்பதை விட தமிழகம் முழுவதுமே மாவட்டம் தோறும் சில அரங்குகள் அமைத்து விட்டு ,சென்னையில் ஒரு மத்திய திரைப்பட ஒளிப்பரப்பு சேவை வழங்கியை நிறுவி அனைத்து அரங்குகளிலும் ,செயற்கை கோள் மூலம் திரையிட செய்யலாம்,எனவே ஒன்றிரண்டு டிஜிட்டல் பிரிண்ட் கிடைத்தாலே பல அரங்குகளில் திரையிட்டு ,குறைவான செலவில் அதிக வருவாய் திரட்ட முடியும்.
# ஒவ்வொரு திரையரங்க வளாகத்திலும் ,கடைகள்,உணவங்கள் அமைக்க இடம் ஒதுக்கி வாடகைக்கு விடலாம்,எனவே நிரந்தர வருவாய் நிச்சயம்.
இவ்வாறு பல்வேறு வருவாய் வழிமுறைகளை ஒருங்கிணைத்து செயல்ப்படுத்தினால் அரசின் திரையரங்க திட்டத்தின் மூலம் நிலையான வருவாய் கிடைக்கும், இயக்குதல் ,பராமரிப்பு செலவீனங்களை சமாளிக்கவும் இயலும்,நட்டம் தவிர்க்கப்படும்.
மலிவுக்கட்டண திரையரங்குகள் உருவானால் ,தற்போதுள்ள திரையரங்குகள் அடிக்கும் கட்டண கொள்ளைக்கு சாவு மணியாக அமையும், மொக்கைப்படத்துக்கெல்லாம் 100 ரூக்கு மேல் அழும் மக்களுக்கு பெரிதும் உதவும்.
சேவை மற்றும் தொழில் துறை ஆகியவற்றை எல்லாம் அரசே நடத்துவது என்பது பொதுவுடமை சித்தாந்தம் ஆகும் .அம்மா குடிநீர்,உணவகம், அம்மா திரையரங்கம் என பல பொதுவுடைமை வணிக நிறுவனங்கள் அரசால் துவக்கப்படுவதை பார்த்தால் வருங்காலத்தில் , தமிழ்நாடு சோசலிச அரசாக மாறினாலும் ஆச்சர்யமில்லை, எல்லாம் செவப்புத்துண்டு கட்சிக்காரங்களோட வச்சிருக்க கூட்டணி சவகாச தோஷமோ என்னவோ!!!
ஒரு உற்சாக குறிப்பு:
பதிவை கவர்ச்சிகரமாக எழுதனும்னு நினைச்சாலும் ,அப்படி ஒரு அசாம்பாவிதம் நம்ம எழுத்துல நடக்கவேயில்லையேனு ஒரே ஃபீலிங்ஸ், எனவே, ஹி...ஹி இன்னொரு படம் போட்டுக்கிறேன் !
(என்னப்பார்வை உந்தன் பார்வை...ஹி..ஹி)
-------------------------
பின் குறிப்பு:
தகவல் மற்றும் படங்கள் உதவி,
# http://en.wikipedia.org/wiki/Royal_National_Theatre
#http://en.wikipedia.org/wiki/Shakespeare_Memorial_Theatre
#http://www.nationaltheatre.org.uk/support-us/why-support-the-national-theatre/national-theatre-live-digital-innovation
# http://www.cnc.fr/web/en/missions
# http://www.nfdcindia.com/
# http://stats.uis.unesco.org/unesco/TableViewer/tableView.aspx
மற்றும் விக்கி,யூ டியூப், கூகிள் இணையத்தளங்கள்,நன்றி!
-------------------------------
42 comments:
வவ்ஸ்,
மேம்போக்காகத் தான் படித்தேன். விரிவான பின்னூட்டம் முழுக்க படித்தபின்.
<அதென்ன ஆண்டுகளுக்கு முன் "கி.பி". எதாவது உள்குத்தா?
<வேலூரில் கூட அரசு நடத்தும் அண்ணா கலையரங்கம் உள்ளது.
<தியேட்டர் கட்டியபின் ஒழுங்காக பராமரிப்பார்களா என்பது சந்தேகமே.
டியர் வவ்வால்...
* கையால் வரைந்தே முழு வண்ணப்படம்...? ஜியார்ஜெஸ் மெலைஸ்-ன் உழைப்பு பிரமிக்க வைக்கிறது. * ஆம்னி பஸ்ஸில் டிவிடில படம் போடுறதுக்கு பெரியார் சுழியே ,இங்கிலாந்தில தான் போட்டிருக்காங்க :-)) -தகவல் புருவம் உயர்த்த வைக்கிறது * திருச்சி கலையரங்கம், சென்னை கலைவாணர் அரங்கம் போன்றவற்றை அரசு நடத்தியதுன்ற விவரம் தெரிஞ்சிருந்தாலும், மத்த புள்ளிவிவரங்கள் மலைக்க வைக்கிறது. * கடைசியில நீங்க தந்திருக்கற யோசனைகள் எல்லாம் படிச்சதும் ‘சரியாத்தான்யா சொல்லிருக்கார்’னு தலையாட்ட வைக்கிறது. * பதிவின் கடைசியில நீங்க வெளியிட்டிருக்கற படம் சூப்பர் என்று ‘ஜொள்ள’ வைக்கிறது. ஹி... ஹி... ஹி...!
குட்டிப்பிசாசு,
வாரும்,நன்றி!
சீக்கிரம் விரிவான பின்னூட்டத்துடன் குதியும்!
# கி.பி எனப்போடாமல் பொது ஆண்டு = பொ.ஆ என போடலாம், அப்புறம் அது என்ன? ஏதேனும் உள்க்குத்தானு கேட்டால் அவ்வ்!
# வேலூரில் கூட இருக்கா,நல்ல தகவல். இப்படி மாநகராட்சிகளில் இருக்கும்னு நினைக்கிறேன்.
சரியாக நிர்வகிக்காமல் வீணாக விட்டு இருப்பாங்க. சென்னையில கூட ஒருக்காலத்தில் ஓஹோனு ஓடின பைலட்,கேசினோ,கெயிட்டி,உட்லண்ட்ஸ்,ஜெயப்பிரதா எல்லாம் இப்படித்தான் பொலிவிழந்து விட்டன,இத்தனைக்கும் தனியார் அரங்குகள் அவை.
------------------
அன்பின் "பால கணேஷர்"
வாங்க,நன்றி!
# அக்காலத்தில் 16 எம்.எம் ,கருப்பு வெள்ளை ஃபிலிமில், மெக்கானிக்கல் கேமிராவில்(ஸ்பிரிங் வைண்டிங்,கையால் சுத்தி சாவிக்கொடுக்கணும்) இப்படிலாம் எடுக்க கடுமையா உழைக்கணும். இத்தனைக்கும் ஸூம் லென்ஸ் கூட கிடையாது, கேமிரா லேசா ஆடினால் கூட படம் விழாது அவ்வ்.
இப்ப படம் எடுக்கிறவங்க எல்லாம் "கஷ்டப்பட்டு" படம் எடுத்தேன் என்பதெல்லாம் ஒன்னுமே இல்லை.
அக்கால சினிமா இடர்ப்பாடுகள் வச்சே ஒரு பதிவ எழுதலாம் அவ்ளோ மேட்டர் இருக்கு. பார்ப்போம்.
# நம்ம ஊரில் புதுசா எதுவும் முயற்சிப்பதேயில்லை,எல்லாம் யாராவது செய்தால் "சுடுவது" மட்டுமே அவ்வ்!
இட்லிய குஷ்பு இட்லியா மாத்தினது போன்று சில சாதனைகள் உண்டு :-))
#//* கடைசியில நீங்க தந்திருக்கற யோசனைகள் எல்லாம் படிச்சதும் ‘சரியாத்தான்யா சொல்லிருக்கார்’னு தலையாட்ட வைக்கிறது. * //
உள்ளதை தானே சொல்வோம், உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுவதில்லை!!!
# // பதிவின் கடைசியில நீங்க வெளியிட்டிருக்கற படம் சூப்பர் என்று ‘ஜொள்ள’ வைக்கிறது. ஹி... ஹி... ஹி...//
ஹி...ஹி நம்மள போலவே ரசிக சிகாமணியா இருக்கிங்களே ,நன்றி!
அது என்ன பெரியார் சுழி! தெரிந்து கொள்ளலாமா? எப்படி போடுவது என்பதையும் விளக்கிவிடுங்கள்.
வேலூரில் உள்ள அண்ணா கலையரங்கத்தில் பொழுதுபோக்கு திரைப்படங்கள் மட்டுமல்லாது. விழாக்களுக்கும் வாடகைக்கு விடுகிறார்கள். குழந்தைகளுக்கான படங்கள் ஒளிபரப்புகிறார்கள். நான் சொல்வது பல வருடங்களுக்கு முந்தைய நிலவரம், தற்போது எப்படி என்று தெரியவில்லை. சரியான பராமரிப்பு இல்லை, நாற்காலி பழுதடைந்து கிடக்கின்றன எனக் கேள்விப்பட்டேன்.
§ தற்போது தமிழக அரசும் தியேட்டர்கள் துவங்கினால், ஒழுங்காக பராமரிக்க வேண்டும். இல்லாவிடில் எம்ஜிஆர் திரைப்பட நகருக்கு ஏற்பட்ட நிலைதான் ஏற்படும்.
§ தமிழ் நாட்டில் பலருக்கு உலக சினிமா ஜுரம் அடிப்பதால், "உலக சினிமா"களும், ஆவணப்படங்களும் இரண்டு மூன்று காட்சிகள் போடலாம்.
§ மகேந்திர பல்லவர் அவரே நாடகங்கள் எழுதி, நடத்தியுள்ளதாக படித்துள்ளேன். ஒருவேளை அவர்கூட தமிழக அரசுக்கு முன்னோடியாக இருக்கலாம்.
§ தற்போது அம்மா தியேட்டர் ஒழுங்காக நடந்தாலும், கலைஞர் ஆட்சிக்கு வந்தால், அவர் கதை--வஜனம் எழுதிய படங்கள், உதயநிதி நடித்த படங்களை ஒளிபரப்பி திவாலாக்கினாலும் சொல்வதற்கு இல்லை.
//# சென்னையில் மட்டும் சில திரையரங்குகள் அமைப்பதை விட தமிழகம் முழுவதுமே மாவட்டம் தோறும் சில அரங்குகள் அமைத்து விட்டு ,சென்னையில் ஒரு மத்திய திரைப்பட ஒளிப்பரப்பு சேவை வழங்கியை நிறுவி அனைத்து அரங்குகளிலும் ,செயற்கை கோள் மூலம் திரையிட செய்யலாம்,எனவே ஒன்றிரண்டு டிஜிட்டல் பிரிண்ட் கிடைத்தாலே பல அரங்குகளில் திரையிட்டு ,குறைவான செலவில் அதிக வருவாய் திரட்ட முடியும்.//
இந்த paragraph-ஐ படித்த பிறகு தான் வவ்வால் பதிவ படிச்ச திருப்தி எனக்கு. What an Idea! (SIM Card அ இல்ல நிஜ idea வ சொன்னேன்).
நல்ல பதிவு
தகவல்கள் அசத்தல்..
வாழ்த்துக்கள்..
வவ்வால்,
கணிணியை விட்டு புரட்சித் திட்டங்களுக்கு வந்துவிட்டீர். பலே. அம்மா தியேட்டருக்கு முன்னோடியான பல முதாளித்துவ நாடுகளை சுட்டிக்காட்டி அரிய (அறிய) தகவல்களை வழங்கியுள்ளீர். இன்னொரு பலே. கைகளால் வண்ணம் செய்யப்பட்ட படம் பற்றிய தகவல் ஒரு வியப்பு.இந்த டிஜிடல் யுகத்தில் நம்மூர் ஆட்கள் முகத்தில் மாஸ்க் ஒட்டிக்கொண்டு நடிப்பதற்கு விடும் அலப்பரையையும் , குள்ளமாக நடித்ததன் "ரகசியத்தை" போற்றிப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தையும் , சண்டையில் டூப் போடாமல் நடிக்கும் சாகசத்தையும் எங்கே போய் சொல்வதென்றே தெரியவில்லை.
வழக்கம்போல் நிறைய புள்ளிவிவரத் தகவல்கள், கொஞ்சம் புதைபொருள் ஆய்வுகள், புராதான காலத் தகவல்கள் என்று கலந்துகட்டி 'வவ்வால் பிராண்ட்' கட்டுரையாகச் செய்திருக்கிறீர்கள்.
அந்த அம்மா இன்னமும் என்னவெல்லாம் பூச்சாண்டி காட்டலாம் என்று எதையெதையோ சொல்லிவைக்க, நீங்கள் அதை சீரியஸாக எடுத்துக்கொண்டு அந்தக் காலத்திலேயே பழுதடைந்த பேருந்துக்களையெல்லாம் சினிமாத் தியேட்டர் ஆக்கினாங்க என்ற உபரித் தகவலைப் பரிமாறி புதிய புதிய யோசனைகளையெல்லாம் சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கியுள்ளீர்கள். இவர்களும் எல்லா ஊரிலும் பழுதடைந்த பேருந்துகளையெல்லாம் விலைக்கு வாங்கி தியேட்டராக மாற்ற ஆரம்பித்தால் என்ன ஆவது?
இன்னும் ஒருபடி மேலே சென்று பழுதடைந்த விமானங்களை விலைக்கு வாங்கி அதனைத் தியேட்டராக மாற்றலாம். ராமன் தேடிய சீதையையும், குமரிக்கோட்டம் முதலிய படங்களையும் திரும்பத் திரும்ப போடலாம்.
மற்றபடி அரசாங்கம் சினிமாத் தியேட்டர் கட்டுவது என்பதும் அதனை அரசாங்கமோ, அல்லது அரசு சார்ந்த மாநகராட்சி அதனை நடத்துவது என்பதோ வழிவழியாக நடைபெற்று வருவதுதான். நீங்களே சொல்லியிருப்பதுபோல் கலைவாணர் அரங்கம் அத்தகைய ஒன்றுதான்.
கர்நாடகத்தில்கூட அத்தகைய தியேட்டர்கள் உண்டு. பாதாமி ஹவுஸ், புட்டண்ண கனகால் திரையரங்கம், சங்கர்நாக் திரையரங்கம் என்று பெங்களூரிலேயே நான்கைந்து உள்ளன. ஆனால் இவையெல்லாம் நீங்களே சொன்னதுபோல் சில விசேஷ திரைப்படங்களைத் திரையிடுவதற்கும், திரைப்படம் சம்பந்தப்பட்ட விழாக்களை நடத்துவதற்கும் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.
அதிலும் குறிப்பாக இதெல்லாம் அரசாங்கத்தின் ஒரு சிறப்பு அம்சம் என்ற அளவில்தான் -ஒரு அடையாளமாகத்தான் - பயன்படுத்தப்படுகிறதே தவிர 'ஓட்டு வங்கியை'- அதிலும் குறிப்பாக நலிவுற்ற பிரிவினரின் ஓட்டு வங்கிக்காக எந்த மாநிலமும் நடத்துவதில்லை.
நீங்கள் கிண்டலடிக்கும் கலைவாணர் அரங்கத்தையும் கலைஞர் தவறுதலாகப் பயன்படுத்தினார் என்று தகவல் இல்லை.மற்றபடி,
சிவகுமார் நடித்த மறுபக்கம் படம் பற்றிய தகவலில் இதன் இயக்குநர் எஸ்.மாதவன் என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். தமிழில் எஸ்.மாதவன் என்று இருந்த பிரபல இயக்குநர் எம்ஜிஆரின் தெய்வத்தாய் படம் மூலம் அறிமுகமாகி பின்னர் சிவாஜியின் நிரந்தர இயக்குநராகப் பல படங்கள் இயக்கியவர்.மறுபக்கம் இயக்குநர் இவரல்ல. அவர், பிரபல மலையாளப் பட இயக்குநர் எஸ்.சேதுமாதவன். இவர் ஏற்கெனவே மலையாளத்தின் மூலம் பல தேசியப் பரிசுகள் பெற்றவர்.
குட்டிப்பிசாசு,
மீள் வருகைக்கு நன்றி!
# புள்ளையார் புராண நாயகன், பெரியார் பகுத்தறிவு நாயகன்,எனவே தான் அறிவியல் படைப்பிற்கு பெரியார் சுழி!
பெரியார் ,ஏன் ,எதற்கு,எப்படினு கேள்விக்கேட்க சொன்னாரில்ல,எனவே "?" போட்டால் அதான் பெரியார் சுழி :-))
"உ" எனப்போட்டால் யானையின் துதிக்கை போல இருக்குனு புள்ளையார் சுழினு ஆக்கிட்டாங்க போல ,வட இந்தியாவில் எல்லாம் இந்தப்பழக்கமே இல்லையே ஏன்? அவங்களுக்கு ஜிலேபி போல எழுத்து தான் ஆரம்ப சுழி.
# பராமரிப்பு செய்யப்பட வேண்டும் ,அதுக்கு ஏற்ப குழுக்கள் அமைக்கணும்.
# எம்.ஜி.ஆர் திரைப்பட நகரம் வீணாப்போனதற்கு காரணம் பராமரிப்பு மட்டுமல்ல, சினிமாக்காரங்களின் சில செயலும் தான்.
ஒரு இடத்தினை ஷூட்டிங்கிற்கு புக் செய்தால் தயாரிப்பு நிர்வாகிக்கு கமிஷன் கொடுக்கணும், அரசு இடமாச்சே கமிஷன் எப்படி கிடைக்கும்.
மேலும் தனியார் ஸ்டூடியோக்கள் சரியாக மார்க்கெட்டிங் செய்ததால் ,அங்கேயே எல்லாம் போனார்கள்.
இதை விட பெப்சி யூனியன் செய்தது இன்னொரு கொடுமை , வடப்பழனி,சாலிக்கிராமம் தவிர எங்கே ஷூட்டிங்க் போனாலும் "டபுள் பேட்டா" தரணும் என அடம்பிடிச்சாங்க அவ்வ்!
தரமணி எம்ஜிஆர் சிட்டிக்கு போனாலே டபுள் பேட்டாக்கேட்டதால் அங்கே ஷூட்டிங்க் போவதே குறைஞ்சுப்போச்சு, வருமானம் குறைய ,பராமரிப்பும் கோயிந்தா!
இதெல்லாம் சினிமா யாவாரம்னு பொய்யா கதை விடுறவன்க என்னிக்கும் சொல்ல மாட்டாங்க அவ்வ்!
# பல்லவ பரம்பரையில் ஒரு முதல்வர் அவ்வ்!
# மஞ்சத்துண்டு படத்தை சத்யம் தியேட்டரில் ஓட்டினால் கூட ஊத்தி மூடிக்குமே அவ்வ்!
--------------------
வேற்றுகிரகவாசி,
வாரும்,நன்றி!
//இந்த paragraph-ஐ படித்த பிறகு தான் வவ்வால் பதிவ படிச்ச திருப்தி எனக்கு. What an Idea! (SIM Card அ இல்ல நிஜ idea வ சொன்னேன்).//
ஆன் இல் ஆல் அழகுராஜா கடை,இங்கு ஐடியாக்கள் விற்பனைக்கு என போர்ட் மாட்டிரலாமா அவ்வ்!
-------------------
மது,
வாங்கு,நன்றி!
பின்னூட்டத்துடன் பிந்தொடர்பவர்களின் பட்டியலிலும் சேர்ந்திட்டிங்க போல,நன்றி!
------------------
காரிகன்,
வாங்க,நன்றி!
ஒரே பலே பலே மயமா இருக்கு ,பலேலக்க்கா பலே லக்கா!
//ந்த டிஜிடல் யுகத்தில் நம்மூர் ஆட்கள் முகத்தில் மாஸ்க் ஒட்டிக்கொண்டு நடிப்பதற்கு விடும் அலப்பரையையும் , குள்ளமாக நடித்ததன் "ரகசியத்தை" போற்றிப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தையும் , சண்டையில் டூப் போடாமல் நடிக்கும் சாகசத்தையும் எங்கே போய் சொல்வதென்றே தெரியவில்லை.//
ஹி..ஹி லோகநாயகர் என்றாலே "மிகைப்படுத்தல்" என இன்னொரு பொருள் அகராதியில் சேர்க்கலாம் :-))
குள்ளமாக நடித்தது "ஜஸ்ட் ஒரு லென்ஸ்" டிரிக் தான், அதை வச்சு வழக்கம் போல டபுள் ஆக்ட் செய்யப்பயன்ப்படும் மாஸ்க் டெக்னாலஜியில் எடுத்தது.
அலாவுதினின் அற்புத விளக்கு படத்தில் அசோகன் பெரிய பூதமாக தோன்றுவது போல , ரிவர்ஸில் ஒரு உருவத்தை சின்னதாக காட்டுவது.
ஹனி ஐ ஷ்ரங்க் மை கிட்ஸ் என எப்போவோ இது போல படமெல்லாம் ஹாலிவுட்ல எடுத்தாச்சு.
----------------------
அமுதவன் சார்,
வாங்க,நன்றி!
வவ்வால் பிராண்ட் என டிரேட் மார்க் செய்துடலாமா அவ்வ்!
# நம்ம அய்டியாக்கள் எல்லாம் அந்த அளவுக்கு நல்லா இருக்கா, அப்போ நகரும் திரையரங்குகள் வரும்னு சொல்லுறிங்க அவ்வ்!
வெளிநாட்டுல, பழைய விமானங்களை ஹோட்டல்களாக மாற்றி வச்சிருக்காங்கலாம்,எனவே தியேட்டராகவும் மாத்தலாம்!
# கர்நாடகாவிலும் அரசு அரங்குகள் இருக்கென தகவலுக்கு நன்றி!
இது போல கேரளாவிலும் இருக்காம்.
நலிந்த பிரிவினருக்கு என்பது ஓட்டு வங்கி அரசியல், ஏற்கனவே இருப்பதை மாற்றி போடுறாங்க,,ஆனால் தமிழக அரசு தான் தியேட்டர் முதல் முதலாக அதுவும் முட்டாள் தனமாக கட்டுதுனு சில கழக சொம்புகள் ஜல்லியடித்ததால் இப்பதிவைப்போட்டேன்.
#//சிவகுமார் நடித்த மறுபக்கம் படம் பற்றிய தகவலில் இதன் இயக்குநர் எஸ்.மாதவன் என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். தமிழில் எஸ்.மாதவன் என்று இருந்த பிரபல இயக்குநர் எம்ஜிஆரின் தெய்வத்தாய் படம் மூலம் அறிமுகமாகி பின்னர் சிவாஜியின் நிரந்தர இயக்குநராகப் பல படங்கள் இயக்கியவர்.மறுபக்கம் இயக்குநர் இவரல்ல. அவர், பிரபல மலையாளப் பட இயக்குநர் எஸ்.சேதுமாதவன். இவர் ஏற்கெனவே மலையாளத்தின் மூலம் பல தேசியப் பரிசுகள் பெற்றவர்.//
தகவலுக்கு நன்றி! பிழை திருத்திட்டேன்
போஸ்டர் படம் போட்டிருந்தேன் அதில் கே.எஸ்.சேது மாதவன் என்று போட்டிருக்கு,அதனைக்கவனிக்கலை. விக்கியில் எஸ்.மாதவன் எனப்போட்டிருக்கு, பேரு கூடவா தப்பா போட்டிருக்கும் என அப்படியே பயன்ப்படுத்திட்டேன், இதில் என்ன கொடுமைனா,அந்த போஸ்டரும் அதே பக்கத்தில் தான் இருக்கு அவ்வ்!
பிரான்ஸ் மக்கள் தொகை 5.9 கோடினு ஒரு தளத்துல இருக்கு இன்னொன்னு 6.58 கோடினு இருக்கு என்பதால் இரண்டையுமே போட்டு வச்சேன், இப்படி எப்பவும் ஒன்றுக்கு மேல ரெபரென்ஸ் பார்ப்பது வழக்கம், சமயங்களில் சோம்பல் பட்டுக்கொண்டு ,விக்கியை அப்படியே போட்டால்,காலை வாரிடுறாங்க அவ்வ்!
------------------------------------
நானும் அவசரத்தில் ஒரு தப்பான தகவலைப் பகிர்ந்திருக்கிறேன். தெய்வத்தாயில் ஆரம்பித்து பின்னர் சிவாஜியின் ஆஸ்தான இயக்குநராக இருந்தவர் எஸ்.மாதவன் இல்லை, பி.மாதவன். நல்லவேளை இன்னமும் யாரும் இதனைச் சுட்டிக்காட்டவில்லை.
அமுதவன் சார்,
உங்க கடமை உணர்ச்சி மெய்யாகவே ஆச்சர்யப்பட வைக்குது!
மாதவன் என்பவர் தான் தெய்வத்தாய் படத்தினை இயக்கினார் என்பதே எனக்கெல்லாம் தெரியவே தெரியாது, நீங்க சொன்னப்புறம் தான் ஓஹோ அவரானு தெரிஞ்சிக்கிட்டேன், இதுல எஸ் அல்லது பி. என்பதெல்லாம் தப்பா போச்சுனு கவலைப்படுறிங்க.
ஆனால் அக்காலத்தைய இயக்குனர்கள் எல்லாம் பெரும்பாலும் முதலெழுத்துடன் தான் பெயரைப்போட்டுக்கொண்டார்கள் என நினைக்கிறேன்,
ப.நீலகண்டன்,ஏ.சி.திருலோகசந்தர்.எம்.ஏ(இவர் பட்டத்தோடு பேரு போடுவதை விரும்புவார்னு நினைக்கிறேன்)எஸ்.ஏ.சாமி,கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்,பி.ஆர்.பந்துலு, என போகும்..
நடிகர் திலகம் சிவாஜி அவர்களுக்கு கூட ஆரம்பத்தில் வி.சி.கணேஷ்(சில படங்களில் கணேசன் என வரும்) என பேரு போட்டு இருக்காங்க :-))
இயக்குநர் பி.மாதவன் ஸ்ரீதரிடம் உதவியாளராக இருந்தவர். கூடவே தேவராஜ்-மோகனும் அங்கே இருந்தவர்கள்தாம். தெய்வத்தாய் படத்திற்காக மாதவன் தனியாக வந்து டைரக்ஷனை ஆரம்பித்தபோது அவர் தம்முடன் தேவராஜ்-மோகனையும் அழைத்துவந்துவிட்டார்.
தெய்வத்தாய் படத்தில் புதிதாய்த் தமது பயணத்தை ஆரம்பித்தவர்களில் இன்னொருவர் கே.பாலச்சந்தர். அவருடைய கதை வசனத்தில் வந்த படம்தான் தெய்வத்தாய் என்பதை நம்ப முடிகிறதா?
தெய்வத்தாய் படத்திற்குத் தமது வழக்கப்படி கே.பாலச்சந்தர் கதைவசனம் எழுத (முக்கால்வாசியும் ஆங்கில வசனங்கள்)அதைப் பார்த்து மிரண்ட எம்ஜிஆர் 'யாருய்யா அது கதைவசனக்கர்த்தா? என்ன எழுதியிருக்கான்யா? இதெல்லாம் ஒரு வசனமா' என்று கேட்டுக் களேபரம் செய்தது, பின்னர் நடந்த விஷயங்கள் என்று ரொம்பவும் சுவாரஸ்யமாய்க் கதைக் கதையாய்ச் சொல்வார் தேவராஜ்(மோகன்).
அதையெல்லாம் பந்தி விரித்தால் இன்னமும் நிறைய எதிர்ப்புகளைத்தான் சம்பாதிக்கவேண்டியிருக்கும்.
இங்கு உண்மை பேசாமல் வெறும் பாசாங்கு பண்ணிக்கொண்டிருக்கவேண்டும் என்றுதானே நிறையப்பேர் எதிர்பார்க்கிறார்கள்!
அமுதவன் சார்,
ஒன்றில் இருந்து இன்னொன்று என சங்கிலித்தொடராக தகவல்களை பொழியிறிங்க, எனக்கு இது போல பழைய சம்பவங்களை கேட்பதென்றால் "குதுகளமாகிடும் :-))
நீங்க சொன்னது போன்ற சம்பவத்தை பாலச்சந்தர் பேட்டியில் கூட படித்துள்ளேன், ஆர்.எம்.வீரப்பன் கூப்பிட்டு ,நீங்க மாறன் என்ற கதாபாத்திரத்துக்கு வசனம் எழுதலை,எம்ஜிஆருக்கு எழுதுறிங்க என்பதை மனசில வச்சிக்கிட்டு வசனம் எழுதுங்கனு ,மாத்தி எழுத சொன்னதாக ,பாலச்சந்தர் சொல்லி இருப்பார்.
உங்களுக்கு நேரடியான அனுபவங்களாகவே எல்லாம் கிடைச்சிருக்கு , வெளியில் வராத பல சம்பவங்களும் தெரிஞ்சிருக்கும்,அவ்வப்போது பகிரவும்.
# நாடகத்தில் இருந்து வந்த சினிமாவை மீண்டும் நாடகத்துக்கே இழுத்துப்போனவர் .கே.பாலச்சந்தர்னு சொல்வாங்க!
மேஜர் சுந்தரராஜன் ,ஆங்கிலம் தமிழ்னு ரெண்டு முறை வசனம் சொல்லக்காரணமே ,பாலச்சந்தரின் வசன மகிமைனு கேள்விப்பட்டேன் :-))
# //இங்கு உண்மை பேசாமல் வெறும் பாசாங்கு பண்ணிக்கொண்டிருக்கவேண்டும் என்றுதானே நிறையப்பேர் எதிர்பார்க்கிறார்கள்!//
அதே தான்! இங்கே பாசாங்கு செய்யலைனா நமக்கு "பாய்சன்" வச்சிடுவாங்க அவ்வ்!
ஆனாலும் உங்களைப்போல சிலர் "உண்மைகள் உறங்காது" என எழுப்பிவிட்டுறிங்க!!!
nice post i like it keep it up premium blogger templates free download
ஊன்றி ஒன்றி படித்தேன். அபார உழைப்பு!
கலைவாணர் அரங்கம் இடிச்சுட்டாங்களா! வருத்தம்.
ரவி விஜய்,
நன்றி!
-----------
அப்பாதுரை சார் ,
வாங்க,நன்றி!
எப்பவோ இடிச்ச கலைவாணர் அரங்கிற்கு இப்போ கவலைப்படுறியேனு நம்மள கலாய்க்கலையே அவ்வ்!
திருச்சியில் இருந்த கலையரங்கில் படம் பார்த்துள்ளேன். தனியார் அரங்கத்தைவிட நன்றாகத்தான் இருந்தது. தஞ்சையில் உள்ள திருவள்ளுவர் அரங்கம் கூட நகராட்சியுனடையது என்று கேள்விப்பட்டேன். அதில் சூப்பர் படங்களா போட்டு பேரு கெட்டு பின் அரங்கை செப்பனிட்டு நல்ல படங்களாக போட்டார்கள், இப்ப எப்படியோ.
சென்னை கலைவாணர் அரங்கை வெளியில் இருந்து தான் பார்த்துள்ளேன்.
நல்ல தகவல்கள்.
? - பெரியார் சுழியோடு ஆரம்பிக்கிறேன்.
சினிமா பற்றிய பதிவுக்கே சிரமம் பார்க்காது நன்கு ‘உழைத்து’ எழுதியுள்ளமைக்காக என் பாராட்டுகள்.
குறும்பன்,
வாங்க,நன்றி!
நீங்க சொன்னாப்போல திருச்சி,தஞ்சைனு பல இடங்களிலும் அரசு சார்பான அமைப்புகளால் திரையரங்குகள் இயக்கப்பட்டுள்ளன, சரியான முறையில் நிர்வகித்தால் லாபகரமாக இயங்கக்கூடிய திட்டமே.
-------------------------------
தருமிய்யா,
வாங்க,நன்றி!
நம்மப்பதிவையே அடிக்கடி பார்க்கும் பழக்கமில்லை,எனவே உடனே கவனிக்கலை.
நாம வாயால சொன்னாலும் செயலில் காட்டும் செயல் வீரர் நீங்க,உடனே பெரியார் சுழியை அமலுக்கு கொண்டு வந்துட்டிங்களே :-))
// நன்கு ‘உழைத்து’ எழுதியுள்ளமைக்காக என் பாராட்டுகள்//
உழைப்பை சிறப்பித்தமைக்கு நன்றி!
நம்ம தாரக மந்திரமே "உண்மை ,உழைப்பு,உயர்வு!
(எமக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது அவ்வ்!)
இவ்வளவு பெரிய பதிவை தலைகீழே நின்னாலும் என்னால எழுத முடியாது.
உங்க தேடுதல் வேட்கையைப் பாத்தா கூகிள் காரன் தனியா உங்களுக்காவே ஒரு சர்ச் இஞ்சின் உருவாக்கலாம்.
ஆச்சர்யமான சுவாரசியமான தகவல்கள் .
நெய்வேலியில் கூட என் எல் சி நடத்தும் திரை அரங்கம் ஒன்று இருந்தது. இப்போது இல்லை.
வவ்வால்,
இப்போதைய செய்தியான மலேசிய ஏர்லைன்சு கடத்தல் பற்றி விரிவா ஒரு இடுகை போடுங்க. அடுத்த வாரம் எழுதுனாலும் சரி இவங்க அப்பவும் கண்டுபிடிச்சிறுக்கமாட்டாங்க.
ஆ.. என் URL ஐ எடுத்துக்கமாட்டிக்குது. மந்திரவாதிய கூட்டியாந்து பார்த்துறவேண்டியது தான்.
அய்யோடா!பழைய போஸ்டரை இன்னுமா ஒட்டிகிட்டிருக்கீங்க:)
அய்யோடா!பழைய போஸ்டரை இன்னுமா ஒட்டிகிட்டிருக்கீங்க:)
என்னது!கலைவாணர் அரங்கம் இடிஞ்சு போச்சா!படைச்சவனே இடிச்சு விட்டாண்டி:)
சினிமாங்கிறதால இன்னும் நிறைய கிண்டியிருக்கலாம்.அதுவும் சினிமாவோட நாடக கதா காலட்சேபம் வேற சொல்லியிருக்கலாம்.ம்த்தவங்க படம் எடுத்தா மட்டும் ஆயிரம் நொள்ளை சொல்லத் தெரியுது.பதிவுல சுரத்தே இல்ல:)
வர்றேன்!
முரளீ!
வாங்க,நன்றி!
____________
குறும்பன்,
நன்றீ, பதிவு போட முயற்சிக்கிறேன். கொஞ்சம் வேலை,அதான் பதிவே போடாம பின்னூட்டம் மட்டும் போட்டுக்கிட்டு இருக்கேன் ஹி...ஹி!
________________
ராச நட,
வாரும்,நலமா?
நன்றி!
தொழிலதிபரா ஆனதும் காணோமேனு பார்த்தேன்,வந்ததும் போஸ்டரை கொற சொல்லூறீர்,எல்லாம் டிஜிட்டல் போஸ்டர் அய்யா!
ம்ம்க்கூம் பெருசா விரிவா எழூதிட்டா மட்டும்? எல்லாம் இதுவே நம்ம மக்களுக்கு ரொம்ப அதிகம்!
அந்தக்கா பீல்டுலேயே இல்ல!அதுக்குப் போய் இன்னும் புரமோட் செஞ்சுகிட்டிருக்கீங்களே:)
ஒண்டியா டபுள் செஞ்சுரிக்கு மேல ஆடிட்டு...உங்களுக்கு கைதட்டுறாங்க பாருங்க அவங்களை சொல்லனும்.
பதிவுங்கிறது எதிர்காலத்துக்கு எழுதி வச்சிட்டுப் போற உசிலுங்ண்ணா!
அய்யா வாசகர் கூட்டமே!உங்க பசிக்கு இதுவே போதுமாம்!நீங்களாச்சு!இவராச்சு!
வணக்கம் அண்ணா...
உங்கள் கருத்தை சீனு தளத்தில் பார்த்தேன். பதிவுகளில் உள்ள தவறுகளை நிச்சயம் சுட்டிக்காட்டுங்கள்...
அதை நான் எந்த சூழலிலும் தவறாக கொள்ள மாட்டேன்...
நன்றி...
இன்னும் கடை கடையா போய் சண்டை போடுற பழக்கம் விடல போல இருக்கே!
ஆளையும் காணோம்!அக்காவையும் காணோம்:)
ராச நட,
வாரும்,நன்றி!
தொழில் எல்லாம் அமோகமா போகுதா? எண்ணைக்கிணறு வாங்கினா எனக்கு தூர் வாரும் வேலையாச்சும் போட்டுக்கொடுங்க்ணா!
# ஹி...ஹி நம்ம மனசு என்னும் ஃபீல்ட்ல இன்னும் இருக்கே அவ்வ்!
# ஏதோ தக்கி முக்கி இப்போ தான் 200 அக் கடந்திருக்கேன் ,இன்னும் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கு,அது வரைக்கும் "டேங்க்" காலியாகாம இருக்கணுமேனு பார்க்கிறேன் :-))
# ஏற்கனவே பெருசா எழுதுற ,ஸ்கிரால் செய்யவே கைய வலிக்குதுனு சிலர் பிராது கொடுத்தாங்களே ,அத எல்லாம் பார்க்கலியா? இதுல பெருசா இல்லைனு , பிராது கொடுக்க வேண்டியது,உம்ம பேச்ச நம்பி "பெருசா" எழுதினா , இன்னொரு சைட்ல இருந்து புகார் வருது ,நான்ன் யார் பேச்ச நம்பி எழுத ,ஒன்னியுமே பிரியலையே அவ்வ்!
# ஹி...ஹி நாம தான் தமிழ் இணையத்தின் மனசாட்சி, அமைதியா இருக்க முடியுமா,அதான் கடை கடையா போய் பஞ்சாயத்த கூட்டிக்கிட்டு இருக்கேன், ஏதோ என்னாலான இணைய தமிழ் சேவை!
# அக்காவின் தரிசனத்தோட ,அடுத்தப்பதிவு வருது , இப்போ கொயப்பமே ,மலேஷிய விமானமா, இல்லை அரசியல் பதிவா என்பது தான், ஹி...ஹி இந்த தட ரெண்டு பதிவுக்கு "மேட்டர்" தேத்தித்தொலைச்சுட்டேன் ,எதை முதலில் முடிக்கனு கொயம்புதுங்கோ அவ்வ்!
---------------------
வெற்றிவேல்,
வாங்க,நன்றி!
தப்பா நினைக்க மாட்டேன்னு சொன்னதுக்கு நன்றி!, அப்பாலிக்கா பேச்சு மாறக்கூடாது :-))
நாம எதாவது விமர்சிக்க போய் "மனசு சங்கடப்படுவாங்கனு" நினைச்சால் ஒன்னும் சொல்லாம போயிடுவேன் ,அவ்ளவு தான். ஏன்னா நமக்கு "இடக்கர் அடக்கல்' கட்டுப்பாடுலாம் இன்னும் கைவரலை, டமால் டுமீல்னு கருத்த சொல்லி வச்சிடுவேன் அவ்வ்!
உங்க கடைக்கு வந்ததே பாராளுமன்ற அரசியல் ஏதாவது பேசுவீங்களோன்னுதான்.
டைடானிக் கப்பலாவது தொலைஞ்சு போனது அப்பவே தெரியும்.மலேசியா விமானம் புரியாத புதிராக இருக்குதே!
கடத்தல்,நீருக்குள் மூழ்கியது,தரையில் நொறுங்கியது என எந்த பார்முலாவுக்குள்ளும் அடங்க மாட்டேங்குதே!
வந்ததற்கு பழைய கதை ஒண்ணு சொல்றேன் கேளுங்க!இப்படித்தான் ஒரு விமானம் ஐஸ் கட்டி பிரதேசத்தில் பறந்து காணாமல் போய்விட்டது.தேடிப்பார்த்தும் கண்டு பிடிக்க முடியலை.சுமார் 25 வருடம் கழித்து பூமி சுழற்சியில் ஐஸ் கட்டிபுரண்டு? விமான பாகங்கள் வெளியே தெரிய கண்டு பிடித்தார்கள்.
ராச நட ,
வாரும்,நன்றி!
அரசியல் சமாச்சாரம் கொஞ்சம் குறிப்பு எழுதுறேனா,அதுக்குள்ள வேற செய்தி வருது, கூடவே நம்ம எழுதியது போல சிலர் பதிவு எழுதிடுறாங்க (எல்லாம் வேகமா இருக்காங்கோ) நாம கொஞ்சம் கொஞ்சமா எழுதி "வவ்வால்" சேர்க்கிறாப்போல சேர்த்து ஒட்டி முடிப்பதுக்குள் "கதை" மாறிடுது ,எனவே அடிச்சு திருத்தி எழுதிட்டே இருக்கேன் அவ்வ்!
எதையாவது கிறுக்கி வேகமா போட்டிறணும் போல அவ்வ்!
#//கடத்தல்,நீருக்குள் மூழ்கியது,தரையில் நொறுங்கியது என எந்த பார்முலாவுக்குள்ளும் அடங்க மாட்டேங்குதே!
//
இதில் அமெரிக்க சதி இருக்கலாம்,அல்லது அவர்களுக்கு விவரம் தெரிஞ்சிருக்கணும்.
ஏன் எனில் விமானம் விபத்தான பகுதியில் டீகோ கார்சியாவில் அமெரிக்க கடற்படை தளம் உள்ளது ,சக்தி வாய்ந்த ரேடார் மற்றும் பல நவீனவசதிகள் உள்ளது.
"SosuS" எனப்படும் கடல் கண்காணிப்பு சிஸ்டமும் அமெரிக்கா நிறுவி ,டீகோவில இருந்து கண்காணிக்குது.
இந்திய பெருங்கடலில் நீர்மூழ்கி கப்பல், முதல் சின்ன கப்பல் போனால் கூட "வைப்ரேஷன்" வச்சே அமெரிக்கா கண்டுப்பிடிச்சுடும்.
எனவே கடலில் விமானம் கிராஷ்லேண்ட் ஆனால் அது உருவாக்கும் ஒலி,வைப்ரேஷன் அமெரிக்க கடல் புலனாய்வு கருவியில் பதிவாகி இருக்கணும்,ஆனால் ரொம்ப மவுனம் சாதிச்சாங்க, எனவே டீகோ கார்சியாவில் புகைச்சல் இருக்கு.
அமெரிக்கா தற்செயலாக கூட மலேசிய விமானத்தினை சுட்டிருக்கலாம், இன்னொரு ரகசிய கருவி இருக்கு "EMP attack" அதை வச்சு பறக்கும் விமானம் என இல்லை.எந்த எந்திரத்தையும் செயலிழக்க வைக்கலாம், அப்படி ஏதேனும் அமெரிக்கா செய்திருக்கலாம்.
என்னோட கணிப்பு அமெரிக்காவின் கை இதில் இருக்கணும் அல்லது உண்மை அவர்களுக்கு தெரியும்.
விரிவாப்பதிவில் அனைத்து பாசிபிளிட்டியும் சொல்கிறேன்.
//என்னோட கணிப்பு அமெரிக்காவின் கை இதில் இருக்கணும் அல்லது உண்மை அவர்களுக்கு தெரியும்.//
இந்த மாதிரி விசயத்துல அமெரிக்காதான் முன்னாடி குதிக்கும்.எல்லோரும் விமானத்துல பறந்து கண்டுபிடிக்க முயற்சி செய்தா அமெரிக்கா ஆற அமர்ந்து யோசனை செய்து இப்பத்தான் சப்மரைனை விட்டிருக்கு.விமானம் நீருக்குள் மூழ்கியிருந்தா அமெரிக்கா நிச்சயம் கண்டுபிடிக்கும்.ஆனால் உயரத்திலிருந்து பறந்து விழுந்தாலும் புற பகுதி அலுமினிய்ம் சிதறி மிதக்கனுமே!அதையேன் கண்டு பிடிக்க முடியல?
கிழக்கே போகும் விமானம் திரும்ப ஏன் மேற்கு திசையில் பறக்கனும்?விமானப் பயணிகளின் பெயர்,விபரம் அனைத்தும் புலான்ய்வுப் பிரிவால் தேடப்பட்டு யார் மீதும் சந்தேகம் வரவில்லை.அதிலும் பெரும்பாலும் சைனீஸ் பேர்வழிகள்.
நீங்க சொல்லும் டீகோ பகுதிக்கும் விமானம் பயணிக்கும் பகுதிக்கும் மிக அதிக தூரம்.
நீங்க சொல்ற கான்ஸ்பைரசி தியரி பொருந்தற மாதிரி இல்லையே:)
நேற்று விமானத்தளம்,விமான ஓட்டிகளுக்கான டிரான்ஸ்கிரிப்ட் படிக்க நேர்ந்தது.விமான ஓட்டிகளின் தவறு,மெக்கானிக்கல் கோளாறு என்ற எந்த கோணத்திலும் சந்தேகம் கொள்ள முடியாத வண்டியை அந்த ரோட்டுக்கு கொண்டு போ,இதோ பறக்கப் போறேன்,பறந்துட்டேன்,வர்றேன்,குட்நைட் என சராசரி இருபக்க கலந்துரையாடல் மட்டுமே.
மலேசியன் ஏர்லைன்ஸ் மீதும்,போயிங் நிறுவனம் மீதும் கேஸ் போட்டு நஷ்ட ஈடு வாங்குவது மட்டுமே தற்போதைய நிலையில் பயணிகள்,விமான ஓட்டிகள் குடும்பத்துக்கான ஆறுதலாக இருக்கும்.
//என்னோட கணிப்பு அமெரிக்காவின் கை இதில் இருக்கணும் அல்லது உண்மை அவர்களுக்கு தெரியும்.//
இந்த மாதிரி விசயத்துல அமெரிக்காதான் முன்னாடி குதிக்கும்.எல்லோரும் விமானத்துல பறந்து கண்டுபிடிக்க முயற்சி செய்தா அமெரிக்கா ஆற அமர்ந்து யோசனை செய்து இப்பத்தான் சப்மரைனை விட்டிருக்கு.விமானம் நீருக்குள் மூழ்கியிருந்தா அமெரிக்கா நிச்சயம் கண்டுபிடிக்கும்.ஆனால் உயரத்திலிருந்து பறந்து விழுந்தாலும் புற பகுதி அலுமினிய்ம் சிதறி மிதக்கனுமே!அதையேன் கண்டு பிடிக்க முடியல?
கிழக்கே போகும் விமானம் திரும்ப ஏன் மேற்கு திசையில் பறக்கனும்?விமானப் பயணிகளின் பெயர்,விபரம் அனைத்தும் புலான்ய்வுப் பிரிவால் தேடப்பட்டு யார் மீதும் சந்தேகம் வரவில்லை.அதிலும் பெரும்பாலும் சைனீஸ் பேர்வழிகள்.
நீங்க சொல்லும் டீகோ பகுதிக்கும் விமானம் பயணிக்கும் பகுதிக்கும் மிக அதிக தூரம்.
நீங்க சொல்ற கான்ஸ்பைரசி தியரி பொருந்தற மாதிரி இல்லையே:)
நேற்று விமானத்தளம்,விமான ஓட்டிகளுக்கான டிரான்ஸ்கிரிப்ட் படிக்க நேர்ந்தது.விமான ஓட்டிகளின் தவறு,மெக்கானிக்கல் கோளாறு என்ற எந்த கோணத்திலும் சந்தேகம் கொள்ள முடியாத வண்டியை அந்த ரோட்டுக்கு கொண்டு போ,இதோ பறக்கப் போறேன்,பறந்துட்டேன்,வர்றேன்,குட்நைட் என சராசரி இருபக்க கலந்துரையாடல் மட்டுமே.
மலேசியன் ஏர்லைன்ஸ் மீதும்,போயிங் நிறுவனம் மீதும் கேஸ் போட்டு நஷ்ட ஈடு வாங்குவது மட்டுமே தற்போதைய நிலையில் பயணிகள்,விமான ஓட்டிகள் குடும்பத்துக்கான ஆறுதலாக இருக்கும்.
//ஹி..ஹி லோகநாயகர் என்றாலே "மிகைப்படுத்தல்" என இன்னொரு பொருள் அகராதியில் சேர்க்கலாம் :-))//
லோகம் உலோகம் (பத்ம=தாமரை) வாங்கிட்டு வந்துட்டாரு சனாதிபதி பிரணாப்கிட்ட.நீங்க இன்னும் தனி ஆவர்த்தனமா முகாரி பாடிகிட்டு இருக்கீங்க:)
பெரியார் சுழி சொற்பதத்துக்கே தமிழ்நாட்டை உங்க பேருக்கு எழுதி வைக்கலாம்!
மலிவு திரையரங்கம் சரியாகப் பராமரிக்காவிடில், ஒரு பெட்டிய வாங்கிட்டு multiplex கட்டண வரம்பை நீக்கிட்டா .... 120 ரூபாய் கட்டணம் 500 ரூபாய்க்கும் மேல் போகும்...
வவ்ஸ்,
வாழ்த்துக்கள். உம்மை எதிர்ப்பதற்க்காகவே கொலாப்ஸ் புது பிளாக்கே ஆரம்பிச்சிட்டான். நீ பெரிய ஆளுதான் போ.............!!
http://wvavaal.blogspot.in/2014/05/blog-post_5.html
சுவாரசியமான கட்டுரை.
ப்ரெஞ்சு கிஸ்ஸுன்றாங்களே அதுவும் அந்தப் பசங்க தான் மொதல்ல கண்டுபிடிச்சாங்களா? ஒண்ணை விட்டு வக்கலியே..
கலைவாணர் அரங்கம் இடிச்சுட்டங்களா.... ச்சே.. இடியட்ஸ்.
ஏற்கனவே படிச்சது நினைவே இல்லை.. ஹிஹி அந்த அளவுக்கு எழுதுறீங்க..
லோக நாயகரின் “உத்தம குள்ளன்” கூட ஒரு மலிவுவிலை திராபைப்படமா?
Post a Comment