Thursday, March 27, 2008

என்னக்கொடுமை சார் இது!

சில சம்பவங்களை பார்க்கும் போதோ, சில செய்திகளை படிக்கும் போதோ ரொம்ப கொடுமையா இருக்கும்! அப்படி இந்த வாரம் செய்திகளில் கூத்தாடிய சில கொடுமைகளை பார்த்த போது என்னக்கொடுமை சார் இதுனு தான் சொல்ல தோன்றியது, என் கண்ணில் சிக்கிய சில கொடுமை பட்டியல்!

கொடுமை-1

ரிலையன்ஸ் மூன்றில் இரண்டு பகுதி பெட்ரோல் விற்பனை நிலையங்களை வரும் ஆறு மாத காலத்தில் மூடப்போகிறது என்று அறிவித்துள்ளது. அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், இந்தியாவில் பெட்ரோலிய பொருட்கள் சர்வதேச கச்சா எண்ணை விலைக்கு ஏற்ப விற்கப்படவில்லை, அரசு சார் நிறுவனங்கள் விலைக்குறைத்து விற்கின்றன, ஏற்படும் இழப்புக்கு அரசு அவர்களுக்கு மானியம் தருகின்றது, ஆனால் தனியார்கள் சந்தை விலைக்கு விற்க வேண்டியது இருக்கு , அது இந்தியாவில் மற்ற அரசு விற்பனையாளர்களை விட கூடுதல் விலையாக இருப்பதால் விற்பனை சரிவு ஏற்பட்டு நட்டம் ஏற்படுகிறது என்று சொல்லி இருக்கிறார்கள்.

மேலும் விற்பனை போட்டியில் அரசுக்கும் தனியாருக்கும் சம விகிதம் இல்லை, அவர்களுக்கு மானிய சலுகை இருக்கு அதனால் எங்களால் போட்டிப்போட இயலவில்லை, எங்களுக்கும் மானியம் அளித்தால் போட்டி சமச்சீராக இருக்கும்,அல்லது அவர்களுக்கு மானியத்தை நிறுத்தி சந்தை விலைக்கு ஏற்ப விற்க செய்ய வேண்டும், அப்போது தான் அழகான வியாபார நடைமுற ஏற்படும் என்று அரிய கருத்தினையும் சொல்லி இருக்கிறார்கள்.

இதான் எனக்கு புரியவில்லை, அரசு நிறுவனங்கள் மக்கள் பணத்தால் நடத்தப்படுகிறது, மானியம் பெறும் அந்த நிறுவனங்களின் லாபம் மீண்டும் மக்கள் பணிக்காக செலவிடப்படுகிறது. எனவே அரசு மானியம் அளித்தால் அது மக்கள் நன்மைக்காக தானே.

ஆனால் தனியாருக்கு மானியம் அளித்து அவர்களுக்கு கிடைக்கும் லாபத்தினை எடுத்து மக்கள் பணிக்கு செலவிடப்போகிறார்களா இந்த தனியார்கள்.இல்லையே அவங்க குடும்பத்தினர் மட்டுமே அனுபவிப்பார்கள் , அதுக்கு எதுக்கு மானியம் தரனும் தனியாருக்கு.

மானியம் அரசு நிறுவனங்களுக்கு தருவதால் , குறைந்த விலையில் விற்கிறாங்க, மக்கள் அதை தான் வாங்கிறாங்க எங்களுக்கு விற்பனைப்பாதிக்குதுனு இப்போ சொல்றவங்க, ஆரம்பத்தில் அரசு மட்டும் விற்பனை செய்துக்கொண்டு இருந்தப்போது ஏன் எங்களுக்கும் விற்பனை செய்ய அனுமதிக்கனும் போய் கேட்டாங்க, அப்படிக்கேட்கும் போதே ஆரம்பத்தில இருந்தே அரசு சார் நிறுவனங்கள் மானியம் பெற்றுத்தானே விற்பனை செய்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பது தெரியாதா?

இப்போ அரசு பெட்ரோலிய நிறுவனங்கள் குறைந்த விலைக்கு விற்பது தப்பு அதுக்கு அரசே உதவி செய்வதால் "fair trade practice " செய்ய முடியலைனு புலம்புறாங்களே,

தனியார் விமான நிறுவனங்கள் ஆரம்பித்ததும், ஜெட், சஹாரா, போன்றவை சில இருக்கைகளை மட்டும் ஒதுக்கி 1 ரூபாய்க்கு கூட பறக்கலாம் , குறைந்த விலை பயணச்சேவைனு , என்னமோ முழுக்க முழுக்க குறைந்த கட்டணம் என்பது போல விளம்பரம் செய்து அரசு விமான சேவைகளுக்கு போட்டிக்கொடுக்கலையா? அப்போ அரசு விமான நிறுவனங்கள் ஒரு நியாமான கட்டணம் தான் நிர்ணயிக்கணும் இப்படிலாம் செய்யக்கூடாதுனு சொன்னா என்ன சொல்லி இருப்பாங்க இவங்க, முடின்சா நீங்களும் விலையைக்குறைத்து போட்டிக்கு வாங்க இல்லைனா மூடிக்கிட்டு போங்கனு சொல்லி இருக்க மாட்டாங்களா?

இப்படியே போனா , இவர்களும் எங்களுக்கும் மானியம் வேண்டும் என்பார்கள்.


* அரசு மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை அளிப்பதால் தனியார் மருத்துவ மனைக்குலாம் கூட்டமே வரலை, நாங்க மருத்துவர்களுக்கு சம்பளம், இன்ன பிற செலவுகள் எல்லாம் இருக்கு, அதை சமாளிச்சு நாங்களும் தொழில் செய்யனும் , எனவே அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கு அரசே சம்பளம் தராப்போல எங்க தனியார் மருத்துவமனை மருத்துவர்களுக்கும் சம்பளம் தரணும்.

இல்லைனா அரசும் எங்களைப்போல கட்டணம் வசூலிச்சு ஒரு "fair trade practice " நடத்த வழி செய்யணும்னு கேட்பாங்க போல இருக்கு!

*அரசுப்பள்ளியில் இலவச கல்வித்தருவதால் எங்கள் கல்வித்தொழில் பாதிக்குது அரசு பள்ளியிலும் கட்டணம் வாங்கு, இல்லைனா எங்களுக்கு மானியம் தா என்று தனியார் பள்ளி நடத்துறவங்களும் கேட்பாங்க!

*அரசு பேருந்துகளில் குறைவா கட்டணம் இருப்பதால், எங்களுக்கு தொழில் பாதிக்குது என தனியார் பேருந்து அதிபர்கள் மானியம் கேட்பார்கள்!

என்ன கொடுமை ...சார் இது!

கொடுமை -2

வர்த்தக துறை அமைச்சகம் தற்போது ஒரு உத்தரவு போட்டு இருக்கு பகுதி -15 இல் உள்ளப்பொருட்களை ஏற்றுமதி செய்ய தடைனு அதுல சொல்லி இருக்காங்க,அந்த பகுதி -15 இல் என்ன பொருட்கள் இருக்குனா சமையல் எண்ணைகள் இருக்கு. இதன் மூலம் சமையல் எண்ணைகளை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய முடியாது. இப்படி அறிவிக்க காரணம் உள்நாட்டில் சமையல் எண்ணைக்கு அதிக தேவை இருக்குனு சொல்றாங்க , சரி நல்ல காரணமாத்தானே இருக்குனு நினைச்சா, ஆமணக்கு எண்ணை உற்பத்தியாளர்கள் கோவப்படுறாங்க, ஏன்னு பார்த்தா ஆமணக்கு எண்ணையும் ஏற்றுமதி செய்யக்கூடாதுனு தடை பண்றாங்களாம் , பகுதி -15 இல் பட்டியலிடப்பட்ட எண்ணைகளில் ஆமணக்கு எண்ணையும் இருக்கு அதனால் அதனை ஏற்றுமதிக்கு அனுமதிக்க முடியாதுனு சொல்லிட்டாங்க.

ஆமணக்கு எண்ணைல சமைக்க முடியுமா அதை ஏன் சமையல் எண்ணைல போய் சேர்த்தாங்க, அதை "industrial oil" அப்படினுத்தான் சொல்றாங்க,அதை ஏறுமதி செய்வதும் பெயிண்ட், வார்னிஷ், லுப்ரிகேஷன், எரிபொருள் ஆகிய பயன்ப்பாட்டுக்கு தான்.வருடத்திற்கு 800 கோடி மதிப்புக்கு இந்தியாவில இருந்து ஆமணக்கு எண்ணை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி ஆகுதாம். சமையல் எண்ணைக்கு தடைப்போட போய் எங்க பொழப்பு போச்சேனு ஆமணக்கு ஏற்றுமதியாளர்கள் பொலம்புறாங்களாம்!

என்னக்கொடுமை ...சார் இது!

கொடுமை-3

காரைக்குடியை சேர்ந்த 64 வயது இளைஞர்?! நாராயணன் ஒரு விவசாயி இவரது 60 செண்ட் நிலத்திற்கு பட்டா கேட்டு 20 ஆண்டுகளாக போராடி வருகிறாராம், இது வரைக்கும் கொடுத்தப்பாடில்லை, முதல்வர் வரைக்கும் புகார் கொடுத்துப்பார்த்தும் வழக்கம் போலவே பலன் எதுவும் இல்லையாம், எனவே முதல்வர் கோட்டைக்கு வரும் போது தான் கட்டிய வேட்டியை திடீர் என உருவி முதல்வர் கார் மீது வீசி தனது எதிர்ப்பைக்காட்டியுள்ளார். அவரைக்காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகிறார்களாம்.

பதவி தோளில் போட்டுள்ள துண்டு போன்றது , சுயமரியாதை வேட்டிப்போன்றது, துண்டை இழந்தாலும் வேட்டியை இழக்க மாட்டோம் என்று கலைஞர் அடிக்கடி சொல்வார், அதனால் தானோ என்னவோ தனது எதிர்ப்பை நாராயணன் வேட்டி உருவி எறிந்து காட்டி விட்டாரோ?

என்னக்கொடுமை ...சார் இது!

கொடுமை-4

இது ஒரு தமிழ் மணக்கொடுமை, லக்கி லுக் என்ற பிரபல கும்பி /கும்மி பதிவரை தமிழ்மணத்திலிருந்து அலேக்காக தூக்கிட்டாங்களாம், ஏன் என்று பார்த்தால் அது ஒரு சங்கிலித்தொடர் வினையா இருக்கு, ஒரு அம்மணி முன்னர் எல்லாம் யோனி பிரசங்கம் அவர்கள் பதிவில் செய்துக்கொண்டிருந்தாங்க, அவங்களுக்கும் பிரபல "மாட்ரிக்ஸ்"பதிவர் பெயரிலிக்கும் தற்காலமா ஒரு சொற்போர்/ மற்போர் நடந்து வந்தது , பலருக்கும் அது ஒரு நல்லப்பொழுது போக்காக இருந்தது என்பது தனிக்கதை! அதுக்கும் லக்கி ஒரு கை கொடுத்துள்ளார், அம்மணி சார்பாத்தான்.

இப்படி இருக்கையில் அம்மணி பதிவை அலேக்கா கிரேன் வைத்து தூக்கிட்டாங்க , அதுக்கும் லக்கி அம்மணி சார்பா ஆதரவு தெரிவித்துள்ளதால் தான் லக்கிக்கும் "தூக்கு" என்று "நைற் ஆந்தை" செய்தி வாசித்தார்.

அம்மணி பதிவில் கோரமான வார்த்தை தாண்டவம் நடந்தபோது எல்லாம் பொது வெளியில் எழுத்து நாகரீகம் எதிர்ப்பார்த்த பதிவர்கள் சிலர் பதிவை தூக்க சொல்லி பிராது கொடுத்தாங்க ஆனால் அப்போதெல்லாம் நீதி தேவன் விடுப்பில் இருந்தார் போல பதிவை தூக்க காணோம், இப்போ திடீர் என விழிப்பு வந்து தமிழ்மண சட்ட திட்டங்களின் படி தூக்கிட்டதா ஓலை அனுப்பி இருக்காங்க. இப்போ மட்டும் "சட்டம் தன் கடமையை "செய்ய பாய்ந்த காரணம் மேட்ரிக்ஸ் பதிவர் பெயரிலியுடனான சொற்போர் தான் என்று சொல்கிறாங்க.

பலான பலான புகார்கள் வந்தபோது செய்திருந்தா பிராது கொடுத்த பதிவர்கள் இதனை கண்டிக்க செய்த செயல்னு சந்தோஷப்பட்டு இருப்பாங்க, இப்போ இது ஏதோ தனிப்பட்ட காரணங்களுக்காக தண்டிக்க செய்த செயலோனு சந்தேகப்படுறாங்களே. இப்போ மட்டும் ஏன் இந்த திடீர் சுறு சுறுப்பு, ஒரு வேளை அரசன் அன்று கொல்வான் தமிழ்மண தெய்வம் நின்று கொல்லும்னு சொல்லாம சொல்றாங்களா?

தெய்வமே நீங்க எங்கேயோ போய்ட்டிங்க :-))

என்னக்கொடுமை ...சார் இது!

69 comments:

இம்சை said...

என்னக்கொடுமை ...வவ்வால் இது. அது எப்படி உங்களால மட்டும் இப்டி முடியுது... நல்லா இருக்கு உங்க பதிவுகள்

துளசி கோபால் said...

கொடுமை கொடுமைன்னு புலம்பிக்கிட்டுத் தமிழ்மணம் பக்கம் வந்தால் இங்கேயும் கொடுமையா? :-)))

கோவி.கண்ணன் said...

பல செய்திகள்,

ரிலையன்ஸ் பற்றிய ஆய்வும் அருமை.

ஒட்டகம் தலையை நுழைக்கும் கதைதான், உடம்பு உள்ளே போகவில்லை என்பதால் குடிசையை கொளுத்த முடிவு போல இருக்கு !
:)

ஆமணக்கு எண்ணை சமயலுக்காக மிகச் சிலர் அதுவும் தாளிக்க மட்டுமே பயன்படுத்துவார்கள், வயிற்றுவலி, சுளுக்கு போன்றவற்றிற்கு நிவாரணியாக பயன்படுகிறது.
முற்றிலும் சமையன் எண்ணை என்ற பிரிவில் சேர்த்தது தவறுதான்.

60 செண்ட் மேட்டரா ? வி.காந்த் 28 ஏக்கர் லபக்கியதையும் இதையும் ஒப்பீடு செய்து பாருங்கள், நாட்டுக்கு எந்த பிரச்சனையை தீர்ப்பது முக்கியம் ? கலைஞர் கவனம் நாட்டு நலனில் இருப்பது புரியவில்லையா ?

- லக்கி டென்சனில் இருக்கார் போல வந்து பதில் சொல்ல மாட்டார், அவர் சார்பில் நான் சப்பைக் கட்டிக்கிறேன். :)

//ஒரு வேளை அரசன் அன்று கொல்வான் தமிழ்மண தெய்வம் நின்று கொல்லும்னு சொல்லாம சொல்றாங்களா?//

தெய்வமே நீங்களும் எங்கேயோ போய்ட்டிங்க ! :)))

வடுவூர் குமார் said...

பெட்ரோலிய விஷயத்தில் இன்னும் ஏதோ கூடுதல் காரணம் இருக்கக்கூடும்,ரிலையன்ஸ் வெளிப்படையாக தெரிவித்தால் ஒழிய எதுவும் தெரியாது.
வேட்டி - உருவல் - பொது ஜன மக்களின் பொருமையை ஒருவர் கோடி காண்பித்துள்ளார்.

Unknown said...

வவ்வால்,

பின்னிட்டீங்க :)

ரிலையன்ஸ் கொடுமை - மூடிகிட்டுப் போனா போகட்டுமே (எதையா இருந்தாலும்!)

60 சென்ட் கொடுமை - ஏங்க ஆட்சியாளர்களுக்கு இருக்குற எவ்வளவோ முக்கியமான வேலைகளுக்கு நடுவுல, இதுதான் முக்கிய விசயமாக்கும்? வேட்டி என்ன, கோவணத்தைக் கழட்டுனாலும் அவங்களுக்குக் கவலையில்லை!

ஆமணக்கு கொடுமை: மீன் குழம்பு தாளிக்க மட்டும்தான் எனக்குத் தெரிந்து விளக்கெண்ணை பயன்படுத்துவாங்க. சமையல் எண்ணையில் சேத்தவன், சாப்பாடுதான் திங்கிறானான்னு, ஒரு சந்தேகம்!

மத்தக் கொடுமைகளைப் பற்றி நமக்கு, ஆந்தை, பூனை, கிளி எதுவும் சொல்லாததால், ஜகா வாங்கிகிறேன் :)

வடுவூர் குமார் said...

ஆமனக்கு எண்ணையில் 800 கோடி இழப்பா?சட்டம் போடும் முன்பு இதெல்லாம் அலசமாட்டார்களா?
என்னவோ போங்க...

வவ்வால் said...

இம்சை,
நன்றி!

கொடுமையே தான் :-))

ஒரு கொடுமையை போய் நல்லா இருக்குனு சொல்லிட்டிங்களே :-))

------------------------
துளசிகோபால்,
நன்றி!

இங்கேயும் ஒரு கொடுமை ஆடுதேனு நொந்துட்டிங்களோ! :-))
-----------------------------------
கோவி,
//குடிசையை கொளுத்த முடிவு போல இருக்கு !
:)//

அதுவும் பாவப்பட்ட மக்களின் குடிசையை கொளுத்தனுமாம்!

பட்டியலில் சேர்த்த ஆசாமி வீட்டில சாப்பாடு கசந்திருக்கும் ஒரு வேளை விளக்கெண்ணை சமையைல் இதுனு நினைச்சிருப்பார் போல :-))அதான் விளக்கெண்ணையை சமையல் எண்ணை ஆக்கிட்டார்!

//60 செண்ட் மேட்டரா ? வி.காந்த் 28 ஏக்கர் லபக்கியதையும் இதையும் ஒப்பீடு செய்து பாருங்கள், நாட்டுக்கு எந்த பிரச்சனையை தீர்ப்பது முக்கியம் ? கலைஞர் கவனம் நாட்டு நலனில் இருப்பது புரியவில்லையா ?//

60 செண்டா , 60 ஏக்கரா முக்கியம் இல்லை 20 வருஷமா பட்டா வாங்க அலைஞ்சுக்கிட்டு இருந்து இருக்கார் மனுஷன், இன்னும் உயிரோட இருக்காரே அதுவே பெரிய விஷயம்!

//தெய்வமே நீங்களும் எங்கேயோ போய்ட்டிங்க ! :)))//

என்னையும் தூக்கினா எங்கேயாவது போய் தான் ஆகனும் :-))
-------------------------

வடுவூர் குமார்,
ரொம்ப நாட்களுக்கு பிறகு வரிங்க வாங்க , நன்றி!
//பெட்ரோலிய விஷயத்தில் இன்னும் ஏதோ கூடுதல் காரணம் இருக்கக்கூடும்//

பெரிசா வேறக்காரணம்லாம் இல்லைனே நினைக்கிறேன், ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரிலையன்ஸில் 7 ரூபாய் அதிக விலை மற்றவர்களை விட யார் வாங்குவாங்க, வேற பெட்ரோல் பங்க் இல்லாத இடத்தில வண்டி பெட்ரோல் இல்லாம நின்னு போனா தான் இவங்க கிட்டே போவாங்க மக்கள்.

நாட்டிலேயே பெரிய சுத்திகரிப்பு நிலையம் ரிலையன்ஸுது , அவங்க கிட்டே பெட்ரோல் நிறைய இருக்கு , ஆனா போட்டிப்போட்டு விக்கத்தான் முடியலை! செல் போனை எல்லாம் விலைக்குறைச்சு விக்க முடிஞ்சவங்களால இது மட்டும் ஏன் முடியலை, காரணம் செல்போன் சேவையில் பின்னாடி கறந்துடுவாங்க காசை!இதுல முடியாதே.

//வேட்டி - உருவல் - பொது ஜன மக்களின் பொருமையை ஒருவர் கோடி காண்பித்துள்ளார்.//

அதுவும் இருபது வருஷமா கேட்டு அலைந்து கிடைக்கலைனா யாருக்கு தான் பொறுமை இருக்கும்.

-------------------
தஞ்சாவூரார்,
நன்றி!

//ரிலையன்ஸ் கொடுமை - மூடிகிட்டுப் போனா போகட்டுமே (எதையா இருந்தாலும்!)//

மூடிக்கிட்டு போகணும் என்பது தான் நம்ம ஆசையும், ஆனா அவங்க என்னமோ அரசாங்கம் கொடுமை படுத்திட்டா போல புலம்பி இருக்காங்க அதை தான் கொடுமைனு சொன்னேன்.

//60 சென்ட் கொடுமை - ஏங்க ஆட்சியாளர்களுக்கு இருக்குற எவ்வளவோ முக்கியமான வேலைகளுக்கு நடுவுல, இதுதான் முக்கிய விசயமாக்கும்? //

அதுவும் 20 வருஷாம ரொம்ப அலைய விட்டு இருக்காங்க போல.ஆட்சியாளர்களுக்கும் 20 வருஷமா வேலை பெண்ட் கழட்டிக்கிட்டு இருந்திருக்கும் போல :-))

//சமையல் எண்ணையில் சேத்தவன், சாப்பாடுதான் திங்கிறானான்னு, ஒரு சந்தேகம்!//

அவனுங்க எல்லாம் சொந்த காசுல சாப்பாடு தின்னா தானே இதெல்லாம் தெரிய :-))

//மத்தக் கொடுமைகளைப் பற்றி நமக்கு, ஆந்தை, பூனை, கிளி எதுவும் சொல்லாததால், ஜகா வாங்கிகிறேன் :)//

பறவைகள், விலங்குகள் கிட்டே அன்பா காட்டி இருந்தா இப்படி ஆகி இருக்குமா, உங்களை தேடி வந்து செய்தி சொல்லி இருக்குமே :-))
---------------------------

குமார்,
//ஆமனக்கு எண்ணையில் 800 கோடி இழப்பா?சட்டம் போடும் முன்பு இதெல்லாம் அலசமாட்டார்களா?//

நீங்க வேற , தடை போடும் போது என்னத்துக்கு எல்லாம் சேர்த்து போட்டோம்னே தெரிஞ்சு இருந்திக்காது, ஏற்றுமதியாளர்கள் சரக்கை பார்சல் கட்டி துறைமுகத்துக்கு எடுத்துப்போன பிறகு தான் கஸ்டம்ஸ்ல அனுப்பமுடியாதுனு சொல்லி நிறுத்தி வச்சு இருக்காங்கலாம்.

அந்த அளவுக்கு தெளிவா சட்டம் போட்டு இருந்து இருக்காங்க!

Kasi Arumugam said...

'ராஜாகைய வச்சா அது ராங்கா போனதில்ல' ரேஞ்சுக்கு ரிலையன்ஸ் தொட்டாத் துலங்கும்னாங்க, இந்த பங்க்குக்கள் மூடுவதைப் பார்த்தா (அவையெல்லாம் தேவையற்ற ஆடம்பரத்தோடு கட்டப்பட்டவைவேறு, அதனாலோ என்னவோ இப்போது எல்லா பெட்ரோல் பங்க்கிலும் ஆடம்பரம் சிரிக்கிறது, ஆளுக தன்மைதான் முன்னேறக் காணோம். ஆமா நாலெழுத்துப் படிச்சவருங்க, ஊருக்கு சேதி சொல்றவங்க பொழப்பே இங்க நாறுதே, அப்புறம் அவங்களை என்ன சொல்ல, அடச்சே என்ன ஒரு டைக்ரஷன்! எங்க வுட்டேன்...) அவங்க வண்டவாளமெல்லாம் தெரியுது. மூடட்டும், மூடிக்கிட்டுப் போகட்டும், தஞ்சாவூரார் சொன்னமாதிரி.

ஆனாலும் வவ்வாலு எழுத்து! சுவாரசியத்துக்கும் பிரயோசனத்துக்கும் ஒரு ஓ

கல்வெட்டு said...

வவ்வால் நல்ல அலசல் !


கொடுமை 1

ரிலையன்ஸ் சமீபத்தில் Power IPO வெளியிட்டு உலக சாதனை புரிந்தது. சந்தையில் பட்டியலிட்ட முதல் நாளே உண்மை தெரிந்து ஊத்திக் கொண்டது. அப்புறம் 2 இலவசம் என்றார்.


ரிலையன்ஸ் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் நல்ல முயற்சிதான். ஆனால் அவர்கள் பொது நிறுவனங்கள் அடிக்கும் கொள்ளையைவிட ( பெட்ரோல் விலையும்... மானியம் என்னும் மாயையும் http://wethepeopleindia.blogspot.com/2006/06/blog-post_03.html) அதிகம் அடிக்கப் பார்த்தார்கள். தொலைத்தொடர்பில் செய்தது போல் தகிடுத்தித்தங்கள் செய்ய முடியவில்லையோ என்னவோ, இப்போது மங்களம் பாட முடிவெடுத்து விட்டார்கள்.

**
கொடுமை 2

பாவிகளா ஒரு காலத்தில் ஆமணக்கு பயிரிடுங்கள் என்று சொன்னார்களே? அதென்ன சமைக்கவா? ஏற்றுமதி நோக்கில்தானே?

**
கொடுமை 3

இதெல்லாம் முதல்வர வரை வரவிட வேண்டுமா? அதிகாரிகள்/ அலுவலகங்கள் இந்த இலட்சணத்தில் உள்ளது.

**

வவ்வால் said...

காசி அண்ணாச்சி,
நன்றி!

//ராஜாகைய வச்சா அது ராங்கா போனதில்ல' ரேஞ்சுக்கு ரிலையன்ஸ் தொட்டாத் துலங்கும்னாங்க,//

எரிபொருள் இல்லையா அதான் ராஜா கைய எரிச்சிருச்சு :-))

//அடச்சே என்ன ஒரு டைக்ரஷன்! எங்க வுட்டேன்.//

வேகப்பந்து வீச்சாளர்கள் ரிவெர்ஸ் சுவிங் பந்து வீசும் போது டைரக்ஷன் எதுனே கண்டுப்பிடிக்க முடியாதாம், அதப்போல நீங்க சொல்ற அந்த டைரக்ஷனே புரியல தயவு செய்து விளக்கவும் :-))

ஆனாலும் ஓவர் ஆடம்பரம் தான் அதுலாம். பெருசா பெட்ரோல் பங்க் கட்டினா போதும்னு நினைச்சுட்டாங்க, அந்த பங்க் எல்லாம் என்ன பண்ணுவாங்க, ரிலையன்ஸ் பிரெஷ் கடையா மாத்திடுவாங்களோ?

//ஆனாலும் வவ்வாலு எழுத்து! சுவாரசியத்துக்கும் பிரயோசனத்துக்கும் ஒரு ஓ//

விவரம் புரியாதவராவே இன்னும் நீங்க இருக்கிங்களே, நான் எழுதினத சுவாரசியம், பிரயோசனம் னு சொல்றத தான் சொல்றேன், இங்கே இருக்க அறிவு சீவிங்க எல்லாம் எனக்கு ஆக்கப்பூர்வமா எழுத தெரியலைனு "இலவசமா" அருள்வாக்கு சொல்லிட்டு இருக்காங்க :-))

உங்க "ஓ" வுக்கு மீண்டும் நன்றி!

Anonymous said...

அரிசி, பருப்பு, எண்ணெய் அப்படியே வரிசையா எல்லாத்துக்கும் ஏற்றுமதி தடை போட்டா என்ன ஆவறது.(இங்க வர்ற பருப்பு எல்லாம் பிஜியில இருந்துதான் இப்ப வருது). இல்ல வருசத்துக்கு இத்தன மூட்டை/லிட்டர் ஏற்றுமதின்னு ஒரு அளவாவது இருக்கா? இல்லாட்டி வியாபாரிகள் லாபத்தைப்பாக்கறது எப்படி.

வவ்வால் said...

கல்வெட்டு,
நன்றி!

//ரிலையன்ஸ் சமீபத்தில் Power IPO வெளியிட்டு உலக சாதனை புரிந்தது. சந்தையில் பட்டியலிட்ட முதல் நாளே உண்மை தெரிந்து ஊத்திக் கொண்டது. அப்புறம் 2 இலவசம் என்றார்.//

பங்கு வெளியிட்ட அன்றே 100 பில்லியன் அளவுக்கு புக் பில்டிங்ல அசத்தியது, அப்புறம் தலைக்கீழ் மாற்றம் தான்.

//ஆனால் அவர்கள் பொது நிறுவனங்கள் அடிக்கும் கொள்ளையைவிட ( பெட்ரோல் விலையும்... மானியம் என்னும் மாயையும் http://wethepeopleindia.blogspot.com/2006/06/blog-post_03.html) அதிகம் அடிக்கப் பார்த்தார்கள்.//

ஆமாம் 40- 45 % அரசின் வரி தான் பெட்ரோலிய விலைல இருக்கு, மீதில தான் அடக்க விலை, லாபம் எல்லாம்.இதுல மானியம் இல்லைனா விலை எகிறிடும் தான்.

//தொலைத்தொடர்பில் செய்தது போல் தகிடுத்தித்தங்கள் செய்ய முடியவில்லையோ என்னவோ, இப்போது மங்களம் பாட முடிவெடுத்து விட்டார்கள். //

தொலைத்தொடர்புல bsnl நெட்வர்க் இல்லைனா ரிலையன்ஸ் லாபமே பார்த்திருக்காது, அவங்க நெட்வர்க் பயன்படுத்தி நோகாம நோம்பு கும்பிட்டுக்கிட்டு இருக்கு ரிலையன்ஸ் டெலிகாம்.போதாக்குறைக்கு கள்ளத்தனம் வேற.

பிஜேபி இருந்திருந்தா, ரிலையன்ஸ் பெட்ரோல அரசு சார் நிறுவன பங்குகளிலேயே ஒரு ஓரமா வச்சு வித்துக்கலாம்னு வசதி செஞ்சு தந்திருப்பாங்க :-))

சந்தைல ஒரே விலைல விக்க முடியலைனா மூடிட்டு போகட்டும் என்னப்போச்சு இப்போ!

//பாவிகளா ஒரு காலத்தில் ஆமணக்கு பயிரிடுங்கள் என்று சொன்னார்களே? அதென்ன சமைக்கவா? ஏற்றுமதி நோக்கில்தானே? //

ஒரு வேளை மக்கள் தலைல தடவிக்க ஆமணக்கு பயிரிட சொல்லி இருப்பாங்களோ :-))

//இதெல்லாம் முதல்வர வரை வரவிட வேண்டுமா? அதிகாரிகள்/ அலுவலகங்கள் இந்த இலட்சணத்தில் உள்ளது. //

வெட்ட வேண்டிய காசை வெட்டி இருந்தா அந்த பெரியவருக்கு அரசாங்க சொத்தையே பட்டாப்போட்டு கொடுத்திருப்பாங்க, பாவம் அவர் கொடுக்கலை,இவங்களும் கண்டுக்கலை, அதுவும் 20 வருஷமா என்று சொல்லும் போது, அரசு ஊழியர்களின் கடமை உணர்வை பாராட்டியே ஆகனும் :-))

வவ்வால் said...

சின்னம்மிணி,
நன்றி!

//இல்ல வருசத்துக்கு இத்தன மூட்டை/லிட்டர் ஏற்றுமதின்னு ஒரு அளவாவது இருக்கா? இல்லாட்டி வியாபாரிகள் லாபத்தைப்பாக்கறது எப்படி.//

சில சமயங்களில் அப்படி ஏற்றுமதிக்கு இத்தனை டன்/ லிட்டர்னு அளவுலாம் வச்சு அனுமதிப்பாங்க, அதுக்கான அனுமதி வாங்க திரைமறைவு வேலைலாம் நடக்கும்.

உள்நாட்டு தேவையை கணக்கில் கொண்டே இப்படித்தடைகள் போடுறாங்க, ஆனா சமையல் எண்ணைக்கு தடைப்போட போய் உபரியா உற்பத்தி ஆகிற ஆமணக்கும் இதில மாட்டிக்கிட்டது தான் கொடுமை.

அரசு உத்தரவு போடும் போது இதை எல்லாம் யோசிச்சு பார்க்கணும், அவங்களுக்குலாம் எங்கே யோசிக்க நேரம் இருக்கு :-))

Kasi Arumugam said...

வவ்வால்,
அது டைரக்ஷன் இல்லை, டைக்ரஷன் digression
:-)

வவ்வால் said...

காசி அண்ணாச்சி,
//வவ்வால்,
அது டைரக்ஷன் இல்லை, டைக்ரஷன் digression
:-)//

நன்றி!

அதுக்கு தான் புரியலைனு சொல்லி விளக்கம் கேட்டுக்கிட்டேன் அது நல்லதா போச்சு :-)

எனக்கும் இங்லிபீசூக்கும் தூரம் அதிகமா அதான் அப்படி எனக்கு தெரிந்த ஒன்றை போட்டு வச்சுட்டேன். ...உங்க தயவில ஒரு புதிய சொல் கற்றுக்கொண்டதும் ஒரு லாபம் தான்.

நீங்க ஜிம்பிளா "track" மாறிட்டேன்னு தமிழ்லவே சொல்லி இருந்திருக்கலாம் :-))எனக்கும் புரிஞ்சு இருக்கும்!

சுரேகா.. said...

அந்த ரிலையன்ஸ் மேட்டர்...தலைவா...
நீங்க மட்டும்தான் எழுதமுடியும்.!

கலக்குங்க!

லக்கிலுக் said...

கொடுமை நாலுக்கு என்னோட பதில் :

நாட்டாமை தீர்ப்பை மாத்தி சொல்லாதே! :-)

RATHNESH said...

வவ்வால்,

(1) இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்கள் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப விற்கப்படவில்லை என்று தெரியாமலா ரிலையன்ஸ் பெட்ரோல் விற்பனை நிலையங்களை ஆரம்பித்தார்கள்?

இது வேறு ஏதோ பெரிய அளவு அரசியல் விளையாட்டிற்கான அறிவிப்பு மாதிரித் தான் தோன்றுகிறது. வவ்வாலுடைய ஆய்வு இன்னும் ஆழமாகத் தேவை.

(ஆனால் தொடர்பான தங்கள் வாதங்கள் / ஒப்புமைகள் அசத்தல்)

(2) பல பட்டியல்களில் இப்படித் தான் தவறான இடம்பெறல்கள் இருந்து விடும். அரசுத் துறையில் சகஜமான விஷயங்களே இவை. ஓரிரண்டு அனுபவங்களுக்குப் பிறகும் திருந்தவோ திருத்தவோ முன்வரமாட்டர்கள் என்பது தான் அரசுத் துறையின் தனித் தன்மையும். எதாவது காரனம் இருக்கும்; 'நமக்கெதுக்கு வம்பு, இதில போய் கையை வச்சுக்கிட்டு என்பது தான் பொதுவான நிர்வாகப் பார்வை'. (உதாரணமாக, ஐநூறு ரூபாய்க்கு ஆசனம் CHAIR ரிப்பேர் செய்து கொள்ளலாம்; ஆனால் இருநூறு ரூபாய்க்குப் புதியது வாங்க முடியாது என்று ஒரு விதி உண்டு பொதுத் துறை நிறுவனங்களில். யாரும் மாற்ற முன்வரவில்லை. டைப்ரைட்டர், அதன் ரிப்பேர், எல்லாவற்ரிற்கும் அனுமதி உண்டு; டைப்பிஸ்ட் பதவி தடை செய்யப்பட்ட கேட்டகரி என்று இருக்கும். இது போல் பல உதாரணங்கள் சொல்லலாம்.ஆமணக்கு விஷயம் என்ன ஆகிறது என்று பார்ப்போம்).

(3) அந்த நாராயணனுக்கு விரைவில் அம்மா கட்சியின், 'மகளிர் அணி - கோர்ட் வளாக வரவேற்புத் துறை' பொறுப்பாளர் பதவி வழங்கப்படலாம்.

Mohandoss said...

வவ்வால்,

//எரிபொருள் இல்லையா அதான் ராஜா கைய எரிச்சிருச்சு :-))//

அவர்களுடைய சொந்த ரிஃபைனரிஸ் 2008 நவம்பரில் இருந்து தொடங்கும் என்று தெரிகிறது.

//பங்கு வெளியிட்ட அன்றே 100 பில்லியன் அளவுக்கு புக் பில்டிங்ல அசத்தியது, அப்புறம் தலைக்கீழ் மாற்றம் தான்.//

லட்சங்களில் அப்ளை செய்துவிட்டு வெறும் 17 கிடைத்ததற்கு திட்டிக் கொண்டிருந்தவர்கள் வெளியான அடுத்த நாளே தலை தப்பினது தம்பிரான் புண்ணியம் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். என் டிமேட் அக்கவுண்டில் கொஞ்சம் பிரச்சனை இருந்ததால் 17 கூட வாங்காமல் நான் தப்பித்தேன்!

Athisha said...

ரிலையன்ஸின் இந்த செயலால் 50000 பேருக்கும் மேல் வேலை இழக்க நேரிடும் .

உங்க கட்டுரை ஓ பக்கங்கள் சாயல்ல இருந்தாலும் , ஞானியவிட நல்லா எழுதீருக்கீங்க...

அருமையான பதிவிற்கு நன்றி...

அன்புடன் அதிஷா

வவ்வால் said...

சுரேகா அண்ணாச்சி,

//அந்த ரிலையன்ஸ் மேட்டர்...தலைவா...
நீங்க மட்டும்தான் எழுதமுடியும்.!
//

இப்படிப்போட்டு தாக்கிட்டிங்களே, பயமால்ல இருக்கு!
----------------------------
லக்கி,
உங்கள் பதிவைப்பார்த்தேன், அங்கே பின்னூட்டமும் போட்டாச்சு!

வவ்வால் said...

ரத்னேஷ்,
நன்றி!
//இது வேறு ஏதோ பெரிய அளவு அரசியல் விளையாட்டிற்கான அறிவிப்பு மாதிரித் தான் தோன்றுகிறது. வவ்வாலுடைய ஆய்வு இன்னும் ஆழமாகத் தேவை.//

நான் செய்தியின் அடிப்படையில் மட்டும் எழுதினேன்,மேற்கொண்டு என்ன விவரம் என்று தேடனும் என்று தான் இருக்கேன்.ஆய்வு என்றெல்லாம் ரொம்ப பெரிசா ஆக்கிட்டிங்களே :-)

இதில் ரிலையன்ஸ் ஏதோ ஒரு ஆட்டம் ஆட திட்டம் போட்டிருக்குனு மட்டும் தெரியுது.

என் யூகங்கள் சில இருக்கு,
*இப்படி கண்ணைக்கசக்கிட்டு நிக்கிறா போல நிக்கிறேன் நீங்க ஆதரவு சொல்றாப்போல சலுகை குடுங்க என்று ஏதேனும் அரசிடம் பேரம் பேசிட்டாங்களோனு ஒரு சந்தேகம் இருக்கு.

ஏன் எனில் கமல்நாத், தனியார் பெட்ரோல் விற்பனையாளர்கள் இது வரை அரசிடம் நேரிடையாக மானியம் வேண்டும் என்று கேட்க வரவில்லை என்று சொல்லி இருக்கார். நேரா வந்து பேரம் பேசினா கொடுப்போம்னு சொல்றாப்போல இருக்கு அது.

*இப்போ ரிலையன்ஸ் பங்க்கள் இருக்கும் இடத்தின் ரியல் எஸ்டேட் மதிப்பு கூடி இருக்கலாம், அல்லது வேறு தேவைக்கு நிலம் தேவைப்படலாம், எப்படி இருந்தாலும் பெட்ரோல் விற்பது நட்டம் அதை வைத்திருப்பதற்கு பதில் மூடிவிட்டு அதன் மூலம் வேறு காசு வரும் வழியைப்பார்க்கலாம் என்று எண்ணம் இருக்கலாம்.

சென்னையில் இருந்த பின்னி மில்லை மூடக்கூட காரணம் அந்தமில்லின் மதிப்பை விட ரியல் எஸ்டேட் மதிப்பு படி அந்த இடத்தின் மதிப்பு அதிகம் ஆகிப்போனதே.மில்லை நடத்தி கஷ்டப்படுவதை விட சுலபமாக நிலமாக விற்றோ அல்லது ப்ளாட்ஸ் கட்டியோ அதிகம் காசு பார்க்கலாமே.

* ரிலையன்ஸ்க்கு என்று சொந்தமாக எண்ணைக்கிணரு இதுவரைக்கும் இல்லை, அவர்கள் எக்ஸ்புலோரேஷன் வேலைகள் இப்போ தான் துவங்கி இருக்கு, கோதாவரில கண்டுப்பிடிச்சு இருக்கிறதில இருந்து எண்ணை எதுவும் இன்னும் எடுக்கவே ஆரம்பிக்கலை.இப்போ அவங்களுக்கு எண்ணை எப்படி கிடைக்கிறதுனா, வெளிநாட்டு கச்சாவை சுத்திக்கரித்து தருகிறார்கள் அதுக்கு கட்டணமாக எண்ணையையே வாங்கிக்கொள்கிறார்கள்.அதை தான் இப்போ வித்துக்கிட்டு இருக்காங்க. ஒரு வேளை வெளிநாட்டு நிறுவனங்கள் அவர்கள் தேவை அதிகமாக இருப்பதால் எண்ணைக்கு பதில் பணமாக வாங்கிக்கொள்ளுங்கள் என்று சொல்லி இருக்கலாம். எனவே இப்போது இவர்களுக்கு விற்க எண்ணை தட்டுப்பாடும் வரலாம், வாங்கி நட்டத்தில் விற்பதை விட பேசாமல் மூடிவிடலாம் என்று திட்டம் போட்டார்களோ என்னவோ.

ஆமணக்கு போல தான் அரசின் பல செயல்பாடுகளும் இருக்கும் போல.

//அந்த நாராயணனுக்கு விரைவில் அம்மா கட்சியின், 'மகளிர் அணி - கோர்ட் வளாக வரவேற்புத் துறை' பொறுப்பாளர் பதவி வழங்கப்படலாம்.//

வேட்டி உருவிய நாராயணனை மகளீர் அணில போட்டுட்டிங்களே, ஆடவர் அணி இவர் :-))மகளீர் அணில இருக்கவங்க பாவாடையை தூக்குவாங்க சு.சாமி தான் அதை எல்லாம் பார்த்து ரசித்தவர் :-))

முரளிகண்ணன் said...

we will avoid thamizmanam

வவ்வால் said...

மோஹன்,
நன்றி!
//அவர்களுடைய சொந்த ரிஃபைனரிஸ் 2008 நவம்பரில் இருந்து தொடங்கும் என்று தெரிகிறது. //

ரிபைனரிஸ் இருக்கு அவங்க கிட்டே சொந்தமாக எண்ணை எடுக்க கிணறு தான் இன்னும் வெட்டலை. அதைப்பற்றி ரத்னேஷுக்கு சொன்ன பதிலில் விரிவா சொல்லி இருக்கேன், அதை ஒரு முறை பார்த்திருங்க.

//என் டிமேட் அக்கவுண்டில் கொஞ்சம் பிரச்சனை இருந்ததால் 17 கூட வாங்காமல் நான் தப்பித்தேன்!//

அப்போ மயிரிழையில்(டிமேட் இழையில்) தப்பிட்டிங்களே :-))

எதிர்ப்பார்ப்ப கிளப்பிட்டு புஸ் ஆனதுக்கு என்ன காரணம்னு கொஞ்சம் சொல்லுங்க.

-------------------------------
அதிஷா ,
நன்றி!
//ரிலையன்ஸின் இந்த செயலால் 50000 பேருக்கும் மேல் வேலை இழக்க நேரிடும் .
//
அதைப்பத்திலாம் முதலாளி வர்க்கம் கவலைப்படுமா?

//உங்க கட்டுரை ஓ பக்கங்கள் சாயல்ல இருந்தாலும் , ஞானியவிட நல்லா எழுதீருக்கீங்க..//

ஆ..அந்த அளவுக்கா நான் மோசமா எழுதுறேன் :-))

ஞானியை விட நல்லா எழுதுறேன் சொன்னதால அப்படிலாம் இல்லைனு எடுத்துக்கிறேன் :-)

வவ்வால் said...

முரளிக்கண்ணன்,
//we will avoid thamizmanam//

என்ன இத்தனை தீவிரம், பொறுமை, என்ன நடக்குதுனு பார்ப்போமே!

Mohandoss said...

//ரிபைனரிஸ் இருக்கு அவங்க கிட்டே சொந்தமாக எண்ணை எடுக்க கிணறு தான் இன்னும் வெட்டலை. அதைப்பற்றி ரத்னேஷுக்கு சொன்ன பதிலில் விரிவா சொல்லி இருக்கேன், அதை ஒரு முறை பார்த்திருங்க.//

இந்த இன்ஃபர்மேஷனை ஒரு முறை வெரிஃபை செய்துவிடுங்கள் வவ்வால்.

அவர்களிடன் சொந்தக் கிணறு இல்லை என்பது உண்மைதான் ஆனால் இன்றுவரை ரிஃபைனரியும் இல்லை என்று தான் நினைக்கிறேன்.

ஆனால் சரியாகத் தெரியாது தேடிப்பார்த்து விவரம் கிடைத்தால் சொல்கிறேன், நீங்களும் 'லிங்க்' அடிக்கமுடிந்தால் அடியுங்கள்.

Mohandoss said...

//Reliance Petroleum Ltd has announced that the Company has successfully completed the second year of implementation of its complex refinery, coming up in a Special Economic Zone at Jamnagar. The Company has achieved 82% overall progress in just 24 months since commencement of the Project. Based on the progress so far, the Company is on course to complete the project ahead of its initial schedule of December 2008.//

என்று சொல்கிறார்கள், காம்ப்ளக்ஸ் ரிஃபைனரிஸாமாம்.

சாதாரண ரிஃபைனரிஸ் எதுவும் கைவசம் இருக்கா தெரியலை. ஆனால் எனக்குத் தெரிந்து Reliance Petroleum ஒரு Fundamental இல்லாத ஸ்டாக் என்பது தான் இதுவரை எனக்கு வந்த தகவல்கள். ரிபைனரி இருந்திருந்தால், ரிபைன் செய்து கொண்டிருந்தால் Fundamental இருக்கும் இல்லையா?

ஒரு வருட அனுபவத்தில் Reliance petroleum ஒரு மொமண்டம் ஸ்டாக் என்பது மட்டும் தெளிவாக தெரியும். :)

லக்கிலுக் said...

//லக்கி,
உங்கள் பதிவைப்பார்த்தேன், அங்கே பின்னூட்டமும் போட்டாச்சு!//

பின்னூட்டம் காணோமே? காக்கா தூக்கிட்டு போயிடிச்சா? :-)

வவ்வால் said...

மோஹன்,

ரிலையன்ஸுக்கு சொந்தமாக ரிபைனரிலாம் இருக்கு,
இங்கே பாருங்க,
http://www.ril.com/rportal/jsp/eportal/media/PressRelease.jsp?id=332

2005 இல் சிறந்த சுத்திகரிப்பாள்ராக விருதே வாங்கி இருக்காங்க.

//ஆனால் எனக்குத் தெரிந்து Reliance Petroleum ஒரு Fundamental இல்லாத ஸ்டாக் என்பது தான் இதுவரை எனக்கு வந்த தகவல்கள்.//

அப்படி சொல்ல காரணம் , அவர்களுக்கு என்று சொந்த எண்ணைக்கிணறு இல்லை, அவர்கள் செய்வதெல்லாம் job work வகை bpo தான், வெளிநாட்டு கச்சாவை சுத்தப்படுத்தி அவர்களுக்கு தந்து சேவைக்கட்டணம் வாங்குவது தான்.நாளைக்கே சீனாவில் மலிவா சுத்திகரிப்பு செய்வதாக தெரிந்தால் வெளிநாட்டு கச்சா சுத்திகரிப்பு ஆர்டர் அங்கே போய்விடும் , இங்கே இவர்கள் கடையை மூட வேண்டியது வரும்.மேலும் அவர்களது விற்பனை நெட்வொர்க் பெரியது அல்ல.எனவே எல்லாமே யாரையோ சார்ந்திருக்கும் தன்மை. அதான் அடிப்படை இல்லாத ஒன்று என்று சொல்கிறார்கள் போல.

கோதாவரி பேசினில் அவர்கள் துரப்பணம் போட்டுக்கொண்டிருக்கிறார்கள்,அதில் இருந்து கச்சா எடுக்க சில ஆண்டுகள் ஆகும்.அது வரைக்கும் வெளி வேலையை மட்டுமே நம்பிக்கொண்டு இருக்கனும்.

இப்போது நீங்கள் சொன்னது ஜாம் நகரில் உள்ள sez இல் அமைக்க உள்ள இன்னொரு பிளாண்ட். இதில் பல கட்ட வாலை வடித்தல் செய்ய முடியும், இப்போது இருப்பதை விட முன்னேறியது எனலாம்.

வவ்வால் said...

லக்கி,
//பின்னூட்டம் காணோமே? காக்கா தூக்கிட்டு போயிடிச்சா? :-)//

என்னடா இது பின்னூட்டத்திற்கு வந்த சோதனை, மீண்டும் போட்டு இருக்கேன். வந்தால் உங்க கணக்கு, வரலைனா காமராஜர் கணக்கு :-))(எத்தனை நாளுக்கு தான் காந்தி பேரே சொல்றது)

Mohandoss said...

லிங்கினதுக்கு நன்றி.

TBCD said...
This comment has been removed by the author.
TBCD said...

வவ்வால்,

எனது பின்னுட்டத்தை மின்னஞ்சலில் இருந்தால் எடுத்து ஒட்டவும்.

தவறுதலாக நீக்கிவிட்டேன்.

லக்கிலுக் said...

//வந்தால் உங்க கணக்கு, வரலைனா காமராஜர் கணக்கு :-))//

நீங்கள் தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளையில் உறுப்பினரா?

RATHNESH said...

வவ்வால்,

பார்த்தீர்களா இவ்வளவு கோணங்கள் உங்களுக்குள் இருந்து!

//சென்னையில் இருந்த பின்னி மில்லை மூடக்கூட காரணம் அந்தமில்லின் மதிப்பை விட ரியல் எஸ்டேட் மதிப்பு படி அந்த இடத்தின் மதிப்பு அதிகம் ஆகிப்போனதே.மில்லை நடத்தி கஷ்டப்படுவதை விட சுலபமாக நிலமாக விற்றோ அல்லது ப்ளாட்ஸ் கட்டியோ அதிகம் காசு பார்க்கலாமே.//

அதற்கு சாட்சி மதுரை மீனாட்சி மில். அந்த மொத்த மில் ஏரியாவும் பதினெட்டு கோடியில் விற்கப்பட்டு அங்கே ஃப்ளாட்ஸ் கட்டியவர் (சுமார் 2000 வீடுகள்) பலநூறு கோடிகளைப் பார்த்து விட்டார். (வீடுகளின் தரம் நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று).

//வேட்டி உருவிய நாராயணனை மகளீர் அணில போட்டுட்டிங்களே,//

பொறுப்பாளராத் தான் போட்டேன். வன இலாகா மந்திரியா மனுஷனைத் தானே போடறாங்க?

வவ்வால் said...

திபிசிடி,
இது தானா அந்த பின்னூட்டம்,எடுத்து போட்டாச்சு!

TBCD has left a new comment on your post "என்னக்கொடுமை சார் இது!":

ரிலையன்ஸ்>>திட்டம் ஏதோ இருக்கு..சொன்னாப்ல, 50000 பேர் வாழ்க்கையயை காட்டி ஏதேனும் பெறலாம்..

பேசாமல் அந்த பெ.பங்குகளை அரசு நிறுவனத்திற்கு விற்று விடலாம். பங்குகள் இருந்தால், தேவை இருக்கு என்று தானே அர்த்தம்.
****
ஆமனக்கு மேட்டர் எல்லாம் ஜூஜூபி, நம்மாளுங்க பிசியா, ராமர் பாலத்திற்கு எஸ் சொன்னா, அத்வானி கோவிப்பாரா என்ற மும்மரத்தில் மறந்திருப்பாங்க.

****

அதிகாரிகள் வேலை செய்யாமல் இருக்கிறார்களா என்றுக் கண்டுப்பிடிக்க கீ பூராசஸ் பாராமீட்டர்ஸ் வைக்கனுமப்பா...

****

****
அப்ப அப்ப, பஞ்ச் வைச்சிட்டே இருக்கியமா..கலக்கு...

//
இங்கே இருக்க அறிவு சீவிங்க எல்லாம் எனக்கு ஆக்கப்பூர்வமா எழுத தெரியலைனு "இலவசமா" அருள்வாக்கு சொல்லிட்டு இருக்காங்க :-))
//

வவ்வால் said...

மோஹன்,
நன்றிக்கு நன்றி!
---------------------------------------
லக்கி,
//நீங்கள் தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளையில் உறுப்பினரா?//

நல்ல வேளை என்னை கட்சில உறுப்பினராக ஆக்காம விட்டிங்களே,அப்புறம் என் டவுசர கிழிச்சுடுவாங்க அங்கே :-))
------------------------------
ரத்னேஷ்,
//பார்த்தீர்களா இவ்வளவு கோணங்கள் உங்களுக்குள் இருந்து!
//

மாறுப்பட்ட கோணங்களில் பார்க்கும் கோணங்கி தானே நான், கண்ணில பாகை மானி வச்சிருக்கேன்ல :-))

//பொறுப்பாளராத் தான் போட்டேன். வன இலாகா மந்திரியா மனுஷனைத் தானே போடறாங்க?//

இதுக்கும் மேல எதாவது சொல்ல முடியுமா :-))

ஆனாலும் மகளீர போட்டா, அப்படிப்பட்ட போராட்டத்தின் போது ஒரு கை குறைஞ்சா அவங்களே களம் இறங்கி பாவாடைய தூக்கலாம் :-))

---------------------------
திபிசிடி,

ஆமாம் ஏதாவது கோல்மால் செய்வாங்க ரிலையன்ஸ், அவங்க கல்லில நார் உறிக்கிற ஆளுங்க ஆச்சே!

//பேசாமல் அந்த பெ.பங்குகளை அரசு நிறுவனத்திற்கு விற்று விடலாம். பங்குகள் இருந்தால், தேவை இருக்கு என்று தானே அர்த்தம்.//

கட்டுப்படியாகிற விலைக்கு தந்தால் அரசு வாங்கலாம்.ஆனால் அரசு நிறுவனங்களே நடத்தும் பங்க்கள் விட ஏஜண்ட்கள் மூலம் நடத்துவது தான் அதிகம், அரசே நடத்தினால் அவர்கள் எல்லாம் அரசாங்க சம்பளம் கேட்பாங்க.

//ராமர் பாலத்திற்கு எஸ் சொன்னா, அத்வானி கோவிப்பாரா என்ற மும்மரத்தில் மறந்திருப்பாங்க.//

வாஸ்தவம் தான்!
//அதிகாரிகள் வேலை செய்யாமல் இருக்கிறார்களா என்றுக் கண்டுப்பிடிக்க கீ பூராசஸ் பாராமீட்டர்ஸ் வைக்கனுமப்பா...
//
அதெல்லாம் வைப்பாங்களா,அப்படி வச்சா தமிழ் நாடு அமெரிக்கா தான்!

//அப்ப அப்ப, பஞ்ச் வைச்சிட்டே இருக்கியமா..கலக்கு...//

ச்சும்மா ...டைம் பாஸ் :-))

லக்கிலுக் said...

வவ்வால் உங்களுக்கும் கூட நாற்பது பின்னூட்டம் வரப்போகிறது. கும்மிப் பதிவரானதற்கு வாழ்த்துக்கள்!

நையாண்டி நைனா said...

"என்னக்கொடுமை சார் இது!"
இதுக்கு ஒரு பின்னூட்டம் போடலாம்னா....
நமக்கு CURRENT POLITICS தெரிய மாட்டேங்குது,
இல்லை தமிழ்மனத்தில் கும்மி போடலாம்னா POWER POLITICS
வரமாட்டேங்குது.
"என்னக்கொடுமை சார் இது!"

உண்மைத்தமிழன் said...

//லக்கிலுக் said...
வவ்வால் உங்களுக்கும் கூட நாற்பது பின்னூட்டம் வரப்போகிறது. கும்மிப் பதிவரானதற்கு வாழ்த்துக்கள்!//

அந்தக் கொடுமையை நானே என் கையால செஞ்சு தொலையறேன்.. இந்தாங்க வவ்ஸ் 40-வது கமெண்ட்டு..

நல்லாயிருங்க..

நையாண்டி நைனா said...

40 கும்மி என்பது, தமிழ் நாட்டின் MP கணக்கோ????

Anonymous said...

It is a lie about subsidy. Reliance told right inthe beginning
that govt should give them crudeoil at same price as for the
other organisations. Do you think they are loosu to buy at higher cost
and compete?

//Reliance talking bauot unfair trade practice.//
hihihi. Everyone knows how they competed with the
small retailers in the retail market ?

Athisha said...

கும்மினா என்னங்க ? சொல்லிக் குடுத்த நானும் சேர்ந்து கும்முவேன்ல.....

வவ்வால் said...

லக்கி,
//வவ்வால் உங்களுக்கும் கூட நாற்பது பின்னூட்டம் வரப்போகிறது. கும்மிப் பதிவரானதற்கு வாழ்த்துக்கள்!//

இதெல்லாம் ஓவரா இருக்கே , ஏன் நாங்கலாம் 40 ஆம் நம்பர பார்க்க கூடாதா, நான் எல்லாம் கலத்தில காலை வச்சா மத்தவங்க எல்லாம் பீல்ட் அவுட் தான்:-))
---------------------------
நைனா,
//நமக்கு CURRENT POLITICS தெரிய மாட்டேங்குது,
இல்லை தமிழ்மனத்தில் கும்மி போடலாம்னா POWER POLITICS
வரமாட்டேங்குது.//

தமிழ் மணத்தை படிச்ச பொறவுமா இதெல்லாம் பிரியாம கீது, அப்போ சரியா படிக்காத அப்ரண்டிசா நீ ;-))
--------------------------
40 என்பது தமிழ் மணக் குடும்பக்கட்டுப்பாட்டு உச்சவரம்பு எண் :-))40க்கு மேல பெத்துக்கிட்டா(பின்னூட்டம் வந்தா) ரேஷன் கட் :-))
-----------------------------
உண்மைத்தமிழர்,
//அந்தக் கொடுமையை நானே என் கையால செஞ்சு தொலையறேன்.. இந்தாங்க வவ்ஸ் 40-வது கமெண்ட்டு..

நல்லாயிருங்க..//

அட டா எம்மாம் நல்ல மனசு :-))
அப்படியே ஒரு 100 அடிக்கவும் கை கொடுக்கிறது!
--------------------

அதிஷா,

நீங்களும் அப்ரண்டிசா, இன்னும் கும்மியே தெரியாம தமிழ் மணத்தில குப்பை கொட்டுறிங்க , அதான் உங்க பாச அண்ணன் உ.தமிழன் தொலைப்பேசி சேவைல எல்லாம் சொல்லி தரன்னு சொல்லி இருப்பாரே , ஒரு ரூபா காயின் போன்ல அவரை தொடர்பு கொள்ளவும் :-))

வவ்வால் said...

//Reliance told right inthe beginning
that govt should give them crudeoil at same price as for the
other organisations. Do you think they are loosu to buy at higher cost
and compete?//

அனானி,

அப்படிலாம் ஆரம்பத்தில ரிலையன்ஸ் கச்சா எண்ணைக்கேட்டதா தெரியல, ஏனில் இப்போ கூட கமல்நாத் தனியார் மானியம் நேரடியாக கேட்கவில்லைனு புளியக்கரைக்கிறார். விட்டா மக்கள் வரிப்பணத்தில அவங்களுக்கும் மானியம் தருவார் போல :-))

ரிலையன்ஸ் பெட்ரோல் விக்க வந்ததுக்கு காரணமே அவர்களுக்கு சுத்திகரிப்பு செய்வதில் சேவைக்கட்டமாக கிடைக்கும் எண்ணையினை விற்க ஒரு இடம் வேண்டி தான்.ஆனால் வேலைக்கொடுத்தவர்கள் சர்வதே மதிப்பில் கணக்கில் கழிப்பதால் அது அவர்களுக்கு நட்டம் வருகிறது.

காசுக்கொடுத்து கச்சா வாங்கிறதா இருந்தா ஆரம்பத்துலவே ரிலையன்ஸ் இந்த தொழிலை ஆரம்பிச்சே இருக்காது.

//hihihi. Everyone knows how they competed with the
small retailers in the retail market ?//
இதான் செம கொடுமை, இவங்களுக்கு ஒரு நியாயம், ஊருக்கு ஒரு நியாயமாம், அதனால தான் கொடுமைனே சொன்னேன் இவனுங்களை!

லக்கிலுக் said...
This comment has been removed by a blog administrator.
வவ்வால் said...

லக்கி,

சார் மோர்லாம் என்னாத்துக்கு யோவ் வவ்வாலுனு கூப்பிடலாம், இங்கே மட்டுறுத்தல் இல்லை, அதான் போட்டதும் வெளியாயிடுச்சு, இப்போ எடுத்ட்டேன். நீங்க நினைப்பது போல நான் அவன்(அவர்) இல்லை :-)

பிழைத்துக்கிடந்தால் என்றாவது ஒரு நாள் சந்திக்கலாம் அது வரைக்கும் என்சாய் மேட்!

கோவி.கண்ணன் said...

//வவ்வால் said...
லக்கி,

சார் மோர்லாம் என்னாத்துக்கு யோவ் வவ்வாலுனு கூப்பிடலாம், இங்கே மட்டுறுத்தல் இல்லை, அதான் போட்டதும் வெளியாயிடுச்சு, இப்போ எடுத்ட்டேன். நீங்க நினைப்பது போல நான் அவன்(அவர்) இல்லை :-)
//

வவ்ஸ்,
அங்கே என்ன எழுதி இருந்தது ? அதை நான் படிக்கவில்லை என்றால் நம்புவிங்களா ?

வவ்வால் said...

கோவி,
//வவ்ஸ்,
அங்கே என்ன எழுதி இருந்தது ? அதை நான் படிக்கவில்லை என்றால் நம்புவிங்களா ?//

நம்பிட்டோம் :-))

வேறொன்றும் ரகசியம்லாம் இல்லை, என்னுடன் பேசி இருப்பதாகவும் அவரா நீங்கள் என்றுக்கேட்டார், நான் தான் அந்நியன் ஆச்சே வலைப்பதிவில் வேறு யாரையோ நினைத்துக்கொண்டு எனக்கு சார் என்று மரியாதை எல்லாம் தருகிறார், அதான் நான் அவன்(அவர்) இல்லை சொன்னேன்.

கோவி.கண்ணன் said...

//வவ்வால் said...
கோவி,


நம்பிட்டோம் :-))

வேறொன்றும் ரகசியம்லாம் இல்லை, என்னுடன் பேசி இருப்பதாகவும் அவரா நீங்கள் என்றுக்கேட்டார், நான் தான் அந்நியன் ஆச்சே வலைப்பதிவில் வேறு யாரையோ நினைத்துக்கொண்டு எனக்கு சார் என்று மரியாதை எல்லாம் தருகிறார், அதான் நான் அவன்(அவர்) இல்லை சொன்னேன்.
//

ம் அதை அழிக்கும் முன்பே படிச்சேன்.
:)

சரவணகுமார் said...

வவ்வால்
என்னாத்துக்கு "என்னக்கொடுமை ...சார் இது!" அப்படீன்னு போடுரீங்க?

இதுக்கு பேர்தான் "க்" வச்சு பேசுரதா?:)

என்ன கொடுமை (அ)என்னக்கொடுமை...எது சரி ?

சரவணகுமார் said...

/// சரவணகுமார் said...
வவ்வால்
என்னாத்துக்கு "என்னக்கொடுமை ...சார் இது!" அப்படீன்னு போடுரீங்க?

இதுக்கு பேர்தான் "க்" வச்சு பேசுரதா?:)

என்ன கொடுமை (அ)என்னக்கொடுமை...எது சரி ?
///

வவ்வால்

ஏதேனும் பதில் வரும் என்று எதிர் பார்த்தேன்?

வவ்வால் said...

சரவணக்குமார்,
மன்னிக்கவும், என்ப்பதிவையே அடிக்கடி பார்க்கும் பழக்கம் எனக்கு இல்லை அதான் :-))

"க்" வைத்து பேசுவதில் பெரிதாக எந்த காரணமும் இல்லை... என்னக்கொடுமை சரவணன்ன்னு இழுத்துப்பேசினா "க்" வருகிறாப்போல தோன்றுகிறது,அதே ஸ்லாங்க்ல வர அதான் தலைப்பில் க் வைத்து விட்டேன், உள்ள போடும்போது க் வைக்கவில்லை, இப்போ வரைக்கும் "க்" வருமா,, வராதானு சந்தேகமா இருக்கு ?

நீங்களே சொல்லுங்க "க்" வேணுமா வேணாமனு!

சரவணகுமார் said...

த்தோடா...சரவண குமார் அப்படீன்னு இருக்குற என் பேருக்கும் சரவணக்குமார் அப்படீன்னு "க்" வச்சுட்டீங்களே ?:)

இது வேணுமா வேணாமா சமாசாரமில்லை..தமிழில் தவறின்றி எழுதுவது பற்றியது, எவரேனும் தமிழ் இலக்கணம் தெரிந்தவர் சொல்லலாம்.:)

உங்களுக்கு தெரிந்திருக்கலாம் என்று கேட்டேன்.

வவ்வால் said...

சரவண குமார்,

"க்" பேசியதால் தானாகவே ஒரு க் வந்து விழுந்துடுச்சு :-))

வேண்டுமா? வேண்டாம என்றது சரியா தவறானு கேட்கத்தான், எனக்கும் குழப்பம் ஆகிடுச்சு, ஆனா அந்த டையலாக் மாடுலேஷனில் பேசிப்பார்த்தால் க் போடணும் போல இருக்கு, சரி விடுங்க இதெல்லாம் காமெடி'க்'கு தானே! :-))

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

உங்க பதிவைப் படிச்சுட்டேன்.

ராஜ நடராஜன் said...

கொடுமை எண் 2 ல் ஆமணக்கு வார்னிஷ்,பெயிண்ட் போன்ற தயாரிப்புக்கு பயன்படுத்தப் படுகிறதா? எனக்குத் தெரிந்து நம்ம ஊர் ஆமணக்கு எண்ணை லண்டன் பெயர்ப் பலகை சுற்றி மருத்துவக் கடைகளில் வயிற்று பேதிக்கு விற்கப் படுகிறது.நுகர்வோர் கடைகளிலும்,இதர இடங்களிலும் கிடைப்பதில்லை.(ஆமணக்கு இலையில் காற்றில் பட்டம் விட்ட அனுபவம் யாருக்காவது உள்ளதா?)இந்தக் கணினிக்குள்ளேயே உட்கார்ந்து கண்கள் நொள்ளையாகிப் போனதால் அந்தக் காலத்து பாட்டி,அம்மா வைத்தியப் படி நான் கண்களில் இட்டு காலத்தை ஓட்டுகிறேன்.சாரு நிவேதிதா மலச்சிக்கல் தடுக்க உபயோகிப்பதாகச் சொன்னார்.இல்லாத ஊரில் இழுப்பைப் பூ சர்க்கரை மாதிரி 70பதுகளின் எண்ணைப் பற்றாக் குறையில் தேங்காய்,எள்ளு,கடலை எண்ணைகளின் இருப்பு இல்லாத ஒரு அவசரத் தேவை மட்டுமே ஆமணக்கு.உங்கள் கொடுமைத் தகவல் 2 எனக்குப் புதிது.

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

வவ்வால், இது சம்பந்தமா நீங்க ஏதாவது எழுதினா நல்லாருக்கும்.

ஏப்ரல் 4ஆம் தேதிய செய்தி - மத்திய அரசு கமாடிட்டி சந்தையில் 18 லட்சம் டன் கோதுமையை "கால் ஆப்ஷனில்" வாங்குகிறது

விலை 406 டாலர் ஒரு டன்னுக்கு
பிரிமியம் 35 டாலர்
வாங்க வேண்டிய கடைசி தேதி 15ஜீலைக்குள்

பாருங்க மத்திய அரசே கமாடிட்டி சந்தைக்குத்தான் போகிறது.
அப்ப இதுவும் சூதாட்டமா?
[மேற்க்கண்ட எண்கள் குத்துமதிப்பானவையே]

Anonymous said...

வவ்வாலு எங்கய்யா ஆளையே காணோம்? பிஸியா?

சீக்கிரம் வாய்யா தமிழ்மணம் சுவாரசியமில்லாம போவுது

Anonymous said...

Wish you a very happy birth day. May god shower all his blessings on you

அகரம் அமுதா said...

உயர்திரு தோழர் அவர்களுக்கு தங்களின் வெண்பா எழுதும் ஆற்றலை இயன்றவரையில் இனிய தமிழ் வலையின் மூலம் அறிந்தேன். எனது வெண்பா எழுதலாம் வாங்க வலைத்தளத்தில் ஈற்றடிக்கு வெண்பா எழுதும் விளையாட்டை நடத்திவருகிறேன். அதில் கலந்து கொள்ள தங்களை அழைக்கிறேன். நன்றி http://venbaaeluthalaamvaanga.blogspot.com/

Subramanian said...

என்ன ஆச்சு உங்களுக்கு?ஆளையே காணோம்?மேலுக்குச் சொகமில்லையா?அல்லது வேறு ஏதும் பிரச்சனையா?

SHARFUDEEN said...

dear friend, i would like to talk with you about some of science related matters, if you like pls send mail to my id - sharf_2000@yahoo.com . thanks.

தமிழ் காமிக்ஸ் உலகம் said...

Dear Vawwal,

Nice Post.

Wanted to know about the cornucopia of Tamil Comics World?

Kindly visit the new Kid in the Comics Blog Field. www.tamilcomicsulagam.blogspot.com

This is a Palce where you will find Comics Scans, Celebrity Postings, News On Comics, Comics Reviews, Availablity of Comics on Many Places, Interview with Some of the People involved in Making Comics (National / International), Star Bloggers, Comics Experts, Hardcore Comic Fans, etc.

Keep involved with www.tamilcomicsulagam.blogspot.com.

its your place to become what you always wanted to be = Youthfulness.

Thanks & Regards,

King Viswa.

Thamiz Priyan said...

/// வவ்வால் ரசிகன் said...

வவ்வாலு எங்க ஆளையே காணோம்? பிஸியா?

சீக்கிரம் வாங்க தமிழ்மணம் சுவாரசியமில்லாம போவுது///
ரிப்பிட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே

ராஜ நடராஜன் said...

பதிவே படிக்கல!வவ்வால் எப்படியிருக்கீங்க?

இனி பதிவுக்குப் போகிறேன்!

ராஜ நடராஜன் said...

மீள் பதிவு.ரொம்ப நாளா பார்க்காத அவசரத்துல தலைப்பைக் கூட பார்க்கவில்லை:)

ரவி said...

ஏன் தொடந்து எழுதுவதில்லை ??

vasanth said...

இவை அனைத்தையும் பார்க்கும் பொது அனைவருடைய என்னமும் எவரை எவர் அடித்து சாப்பிடுவது என முடிவகிபொனது பொல் தொனுகிறது.