(ஹி...ஹி முன்னாலே போனால் நான் பின்னாலே வாரேன்)
காகதாளிய நியாயம்!
கூகிள்காரன் ஓசியில பிலாக்னு ஒன்னு கொடுத்தாலும் கொடுத்தான் ஆள் ஆளுக்கு ஒரு பிலாக் ஆரம்பிச்சுட்டு, எதையாவது கிறுக்கி தள்ள ஆரம்பிச்சுட்டாங்க, சில சமயம் நல்லாவும் எழுதி தொலைச்சுடுறாங்க, ஆனால் சிலர் பண்ணுற அலப்பரை இருக்கே அது ஒரு தனிரக பயங்கரமா இருக்கும், தான் ஒரு திரைவிமர்சனம் எழுதினா மணிரத்னம்,ஷங்கர் வரைக்கும் படிக்குறாங்கல ஆரம்பிச்சு அமெரிக்க சனாதிபதி ஓபாமாவே என் வாசகர்,எனக்கு மெயில் அனுப்பினார் என்பதாக பெரும்பீத்து பீத்துறாங்கய்யா :-))
சரி அதுவாது போகட்டும்னு விடலாம், நேத்து மழை பெஞ்சா கூடா நான் முத்தாநேத்தே மழை வராப்போல இருக்குனு துவித்தர்ல சொன்னேன், பிளஸ்ல சொன்னேன் ,பிலாக்கர்ல சொன்னேன்னு சொல்லிக்கிறாங்க, இதமாரி தான் ஒருப்பதிவர் இருக்கார், அவர் எழுதுறத அவர தவிர நாலுப்பேர் படிச்சாலே அதிசயம், பிரபல திரட்டிகள் கூடக்கண்டுக்காத ஒரு டொக்குப்பதிவு வச்சுக்கிட்டு, எதையாவது எழுதிட்டு ,கொஞ்ச நாள் கழிச்சு நான் சொன்னா மாதிரியே நடந்துப்போச்சுனு ஓவரா பில்டப்பு கொடுக்கிறார்,
கொஞ்ச நாள் முன்ன லோகநாயகர் டிடிஎச் இல் படம் வெளியாகும் முன் வெளியிடுவேன்னு சொன்னதும், அதெல்லாம் சாத்தியமில்லைனு முழ நீளத்துக்கு ஒரு பதிவு போட்டு வெளக்கு வெளக்குனு வெளக்கினார், என்ன எழவு மாயமோ தெரியலை அதே போல டிடிஎச் இல் படம் வெளியாகவில்லை, அப்புறம் படம் வந்து ஒரு வாரத்தில் டிடிஎச் என லோகம் சொன்னார் ,ஆனால் இன்னிவரைக்கும் டிடிஎச் இல் படமே வரலை, உடனே அந்த வெளங்காவெட்டிப்பதிவர் பார்த்தீரா ...நான் அப்பவே சொன்னேன்ல என ஒரு அலப்பரைய கொடுத்தார் :-))
கெரகம் ஏதோ நல்ல நேரம் குத்து மதிப்பா சொன்னது போல நடந்துப்போச்சுனு மக்கள் பொறுத்துக்கொண்டார்கள், பின்னர் உரமானியத்தில் ஊழல் நடக்குதுனு ஒரு பதிவுப்போட்டார், ஒரு மாசம் கழிச்சு, உரமானிய ஊழல் பற்றி அம்மையார் ஒரு அறிக்கை விட்டாங்க, இதுல இன்னொரு கொடுமை என்னனா, அலப்பரைப்பதிவர் சொன்ன மாதிரியே கணக்கும் சொல்லி இருக்கவும், ஆசாமிக்கு உச்சந்தலையில கிர்ருனு ஏறிடுச்சு, நான் அப்பவே சொன்னேன்ல என அதை எடுத்து போட்டு ஒரு பதிவு போட்டு , காலரை தூக்கிவிட்டுக்கிறார்,எல்லாம் நேரம்யானு அப்பாவி பொதுமக்களும் ஏதோ போனாப்போவுதுனு அவர் பதிவை படிச்சு தொலைக்கிறாங்க என்பதை புரிந்துக்கொள்ளாமல் அடுத்த அலப்பரைக்கு அடிப்போட ஆரம்பிச்சுட்டார்.
சுட்டி:
உரமானிய ஊழல்.
அந்த அலப்பரைப்பதிவர் நவக்கிரகங்களுக்கும் நண்பனாகிட்டார் போல எந்த பதிவு போட்டாலும் அதுக்கு பின்விளைவாக இப்போலாம் ஒரு செய்தி மாட்டிக்குது,கச்சத்தீவு பற்றி ஒரு பதிவு போட்டு , கச்சத்தீவை விட்டுக்கொடுத்தது இந்திய அரசியல் அமைப்பு சட்டப்படி செல்லாது, அக்காலத்தில் திமுக பக்கோடா சாப்பிட்டுக்கிட்டு வேடிக்கை பார்த்தது ஏன் ? அப்படினு வில்லங்கமா ஒரு பதிவைப்போட்டார், ஆனாப்பாருங்க பதிவு வந்த சில நாட்களில் டெஷோ கூட்டமைப்பு சார்பாக ,கச்சத்தீவை விட்டுக்கொடுத்தது தவறு என உச்ச நீதிமன்றத்தில் வழக்குப்போடப்படும்னு அறிவிப்பு வருது.
நீங்களே அந்த செய்தியப்பாருங்க,
//* கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதி. இந்தியாவின் எந்த ஒரு பகுதியையும், வேறு ஒரு நாட்டிற்கு விட்டுக் கொடுப்பதென்றால், இந்திய அரசியல் அமைப்புச் சட்டம், 368வது பிரிவின்படி, பார்லிமென்டின் பரிசீலனைக்கு வைத்து, சட்டம் இயற்ற வேண்டும். கச்சத்தீவைப் பொறுத்தவரை, அப்படி எந்தவொரு சட்டமும், இதுவரை நிறைவேற்றபடாததால், கச்சத்தீவை இலங்கைக்கு, ஒப்பந்தத்தின் மூலம் விட்டுக் கொடுத்தது, அரசியல் சட்ட ரீதியாகச் செல்லுபடி ஆகாது.
* எனவே, 1974ல் ஏற்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்யவும், கச்சத்தீவு, இந்தியாவின் ஒரு பகுதிதான் என்பதைப் பிரகடனப்படுத்தவும், உச்சநீதி மன்றத்தை டெசோ அமைப்பு அணுகும்//
செய்தி மூலம்:
http://tamil.oneindia.in/news/2013/04/16/tamilnadu-teso-decides-approach-sc-cancel-kac-173503.html
ஹி..ஹி இதான் அந்த அலப்பரையின் தீர்க்க தரிசனப்பதிவு,
கட்சத்தீவு
அடப்பாவிகளா, 1974 இல் விட்டுக்கொடுத்துட்டு 2013 வரைக்கும் சும்மா குந்தியிருந்துட்டு , இப்போ வழக்குப்போடுவோம்னு அறிக்கை வெளியிட்டா, பொங்கலுக்கே பட்டாசு வெடிக்கிறவன், தீபாவளிக்கு சும்மா இருப்பானா அதுக்கு ஏற்றார்ப்போல லட்டுப்போல செய்தி வந்து மாட்டிக்கிட்டதும், எல்லாம் என்னால தான், எம்பதிவை படிச்சப்பொறவு தான் "டேஷோ"தலிவருக்கு ஞானம் வந்து வழக்கு போட்டிருக்கார்னு டமாரம் அடிச்சுட்டு கிளம்பிட்டான்யா கிளம்பிட்டான்!
ரொம்ப தாமதம் என்றாலும் 2008 இல் அம்மையார் வழக்கு போட்டாச்சு, அப்போலாம் சும்மா இருந்துட்டு இப்போ வழக்கு போட்டால் ,ஜட்ஜே கேட்பார் "ஏன் மிஸ்டர் 1974 இலே உங்க கட்சி தானே மாநில ஆட்சியில் இருந்துச்சு ,அப்போலாம் ஏன் வழக்குப்போடலைனு :-))
ஏதோ காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதையா இப்படி எதாவது நடந்து தொலைக்குது அதுக்கெல்லாம் வெட்டிப்பந்தா விடப்படாதுனு சொல்லலாம்னு நானும் பார்க்கிறேன் ,ஆசாமி கண்ணுலவே சிக்க மாட்டேங்கிறப்படி, நீங்களாச்சும் எங்காவது பார்த்தா சொல்லி வையுங்க, அப்பவாவது நல்லப்புத்தி வருதா பார்ப்போம்.
(நீ கலக்கு மாமு ...ALL THE BEST!!!!)
என்ன கொடுமை சார் இது!
--------------------
எல்லாமே அரசியல்-2
(ஓடாது தெரிஞ்ச பின் உஷாரா ஏறி போராட்டம்)
மாணவர்கள் போராட்டத்தில் திடீர் திருப்பமாக , அதே லயோலா கல்லூரியில் இருந்து ஒரு பிரிவு மாணவர்கள் குழுவாக போய் 61 வயது ஆகியும் நரைகூடி கிழப்பருவம் அடையாத நித்திய இளைஞரான ,இளைஞரணி தலைவர் மு.க.இசுடாலினை(தமிழ்..தமிழ்) சந்தித்து இளைஞர் அணியில் ஐக்கியமாகி ,டெஷொவுக்கு ஆதரவாக போராடப்போவதாக தெரிவித்துள்ளனர்.
இதில் உள்ள இராச தந்திரம் என்னவெனில் , முதலில் ஈழப்பிரச்சினைக்காக போராடுவதாக சொல்லிக்கொள்ளும் மாணவர்கள் சைக்கிள் கேப்பில் டெஷோவை எதிர்க்கிறோம் எனவும் பதாகை பிடித்திருந்தார்கள், மேலும் தொடர்ந்து திமுகவிற்கு எதிரான விமர்சனங்களை வைத்தார்கள்,ஆனால் மறந்தும் ஆளுங்கட்சியை விமர்சிக்கவேயில்லை,இது மக்களிடயே கழகத்தின் இமேஜை டேமேஜ் செய்து வந்தது. இதனை கட்சி ரீதியாக எதிர்க்கொண்டால் எடுபடாது என புரிந்து கொண்டு ,இன்னொரு மாணவர் குழுவை வளைத்துவிட்டார்கள், இனி அவர்கள் மூலம் ஈழப்பிரச்சினைக்கான போராட்டம் ,அதே நேரம் டெஷோவையும் விளம்பரப்படுத்துவார்கள், வழக்கமாக எந்த ஒரு போராட்டத்திற்கும் காவல்துறை எளிதில் அனுமதி கொடுக்காது,அதுவும் ஆளுங்கட்சிக்கு விருப்பமில்லாத போராட்டம் எனில் அனுமதிக்கிடைப்பது குதிரைக்கொம்பு,
இப்பொழுது கழகத்தின் ஆதரவு மாணவரணிக்கு அனுமதி மறுத்தால், முன்னர் போராடிய மாணவர்களுக்கும் அனுமதி கொடுக்க இயலாது, அனுமதி கொடுத்தால் இரு தரப்புக்கும் கொடுக்க வேண்டும், அப்படிக்கொடுத்தால் கழகத்தின் டெஷோவிற்கு விளம்பரம் கிடைத்துவிடும்,எனவே அனுமதிக்க முடியாது ,அதே போல இனி முதலில் போராடிய மாணவர்கள் குழுவிற்கும் அனுமதி கிடைப்பது கடினம், மாணவர்களும் தடையை மீறி எல்லாம் போராட மாட்டார்கள்,எனவே இப்பொழுது தானாகவே மாணவர்கள் எழுச்சி அடங்கிவிடும், அல்லது இரு தரப்புக்கும் அனுமதிக்கொடுக்கப்படும் இதனால் கழகத்தின் இமேஜ் டேமேஜ் ஆகாமல் காக்கப்பட்டு விடும், இதுவே மஞ்சத்துண்டின் ராசதந்திரம்.
இச்சம்பவங்களே எந்த அளவுக்கு மாணவர்கள் போராட்டத்தின் பின்னால் அரசியல் இருந்து இயக்கியது என்பதனை விளக்கப்போதுமானது.
எல்லாமே அரசியல் தான்!
என்ன கொடுமை சார் இது!
-------------------------------
தனி ஆவர்த்தனம்!
ஆரம்பத்தில் பெரியாரின் திராவிடர் கழகம் திராவிட நாடு என தனி நாடு வேண்டும் என கோஷம் போட்டு வந்தது, பின்னர் தி.கவில் விருந்து பிரிந்த அண்ணதுரை அவர்கள் திமுக கண்டார், அவரும் திராவிட நாடு என முழங்கினார், பின்னர் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்படவே ,மொழிவழி பிரிந்து இனவழி ஒன்று கூடுவோம் ,அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு என்றெல்லாம் முழங்கினார்.
ஆனால் இதுக்கெல்லாம் மொத்தமாக ஆப்பு வைக்கும் விதமாக கி.பி 1962 இல் இந்திய அரசியல் சட்டத்தின் 19 ஆம் பிரிவில் ஒரு திருத்தம் கொண்டு வந்தார்கள், இதனை பதினாராவது அரசியல் சட்டத்திருத்தம் அல்லது தனிநாடு தடைச்சட்டம் என்றார்கள். மேலும் இதனடிப்படையிலேயே பதவிப்பிரமாணமும் எடுக்க வேண்டும்.
இச்சட்டத்திருத்தத்தின் படி , இந்தியாவில் இயங்கும் எந்த ஒரு அமைப்போ, தனிநபரோ தனி நாடு என கோரிக்கை வைத்து இயங்கக்கூடாது, அப்படி செய்தால் தேர்தலில் போட்டியிடத்தடை விதிக்கப்படும், தேவைப்பட்டால் நிரந்தர தடையே விதிக்கப்படும்.
சட்ட திருத்த விவரங்களுக்கு காண்க...
http://indiacode.nic.in/coiweb/amend/amend16.htm
இச்சட்டத்திருத்த மசோதா விவாதத்தின் போது ராஜ்யசபாவில் அண்ணா அவர்கள் தம் கட்டி நீண்ட எதிர் விவாதம் எல்லாம் செய்தார் ஆனாலும் ,சட்டத்திருத்த மசோதா அபார வெற்றிப்பெற்றது, இனிமேல் திராவிட நாடு எனப்பேசினால் தேர்தல் தடை என்ற சூழலில் , தனிநாடுக்கோரிக்கைக்கு மூடுவிழா நடத்திவிட்டு , மத்தியில் கூட்டாச்சி ,மாநிலத்தில் சுயாட்சி என புதிய கோஷம் உருவாக்கிக்கொண்டார், அதாவது ஃபெடரல் கவெர்ண்மெண்ட் அமைப்பில் மாநிலங்களுக்கு அதிக தன்னாட்சி உரிமை கேட்பதாகும்.
இந்த பழைய மேட்டரெல்லாம் எதுக்குனு கேட்கிறிங்களா விடயம் இருக்கு, அண்ணா காலத்திலே ஊத்தி மூடப்பட்ட, ஒரு சமாச்சாரத்தினை பற்றி இப்பவும் ஒரு அரசியல் தலைவர் பேசிக்கிட்டு இருக்கார், அவர் வேறு யாருமல்ல புரட்சிப்போராளி குருமா ச்சே திருமா தான்.அவருக்கு அவ்வாறு பேசுவது அரசியல்சட்டப்படி தடை செய்யப்பட்டது என தெரியுமா என தெரியவில்லை,
சமீபத்தில் நடந்த அம்பேத்கார் பிறந்த நாள் விழாவில் வீர உரையாற்றிய திருமா, நான் நாடாளுமன்றத்திலேயே தனித்தமிழ் நாடு வேண்டும் எனக்குரல் கொடுத்தேன் என சொல்லி இருக்கிறார்.(செய்தி ஜூவியில் வந்துள்ளது)
இவ்வாறு நாடாளுமன்றத்தில் ஒரு உறுப்பினரின் கருத்து சுதந்திரம் என்ற அடிப்படையில் சில முரணான கருத்துக்களையும் சொல்லலாம்,ஆனால் யாரேனும் ஒரு உறுப்பினர் ஆட்சேபம் தெரிவித்தால் அவைக்குறிப்பில் இருந்தும் நீக்கப்படும், மேலும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தால் ,சபாநாயகர் விரும்பினால் இடைநீக்கமும் செய்யலாம்.சட்ட மன்றமோ,நாடாளுமன்றமோ சபாநாயகருக்கு "வானாளவிய அதிகாரம்"உண்டு என்பது கடந்த கால வரலாறு!
எனவே நாடாளுமன்றத்தில் பேசினேன் என சொல்லிக்கொண்டு மேடைப்போட்டு பேசிக்கொண்டு இருந்தால் ,யாரேனும் தேர்தல் ஆணையத்திடம் ஆதாரப்பூர்வமாக புகார் அளித்தால் தேர்தலில் கலந்துக்கொள்ள தடைவிதிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. சூனா சாமியின் கவனத்திற்கு இதெல்லாம் இன்னும் செல்லவில்லை போல ,தெரிந்தால் உடனே பெட்டிஷன் போட்டு அலப்பரையை கொடுக்கலாம்.(ஹி...ஹி ,வருங்காலத்தில் அப்படி நடந்தால் அடியேனின் தீர்க்க தரிசனத்தின் அருமையை நினைவு கூறவும்)
இந்திய அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு நடைப்பெற சாத்தியமுல்ல தெலுங்கானா தனிமாநில கோரிக்கைக்கே தெலுங்கான மக்களுக்கு ஒரு விடிவு கிடைக்கவில்லை, அப்படி இருக்க சட்டத்தின் படி நிறைவேற வாய்ப்பேயில்லாத தனிநாடு பற்றிப்பேசினேன் என பெருமையாக பேசி மக்களின் உணர்ச்சிகளை தூண்டி அரசியல் செய்ய நினைக்கும் அரசியல் தலைவர்களை என்னவென்பது?
திருமாவிற்கு அரசியல் சட்ட நிலை என்னனு தெரிஞ்சு பேசினாரா, தெரியாம பேசினாரானு தெரியலை ஆனால் எதைப்பேசினாலும் நம்ப ஒரு கூட்டம் இருக்கும் வரையில் அரசியல் கட்சிகளுக்கு வாழ்வுதான் :-))
என்ன கொடுமை சார் இது!
---------------
வாய்ப்பும்,வரமும்:
கருப்பு வெள்ளைக்காலப்படங்களில் வரும் ஜாலியான பாட்டுக்களை டப்பாங்குத்து பாட்டுக்கள் என்பார்கள், கிராமிய இசையின் பின்னணியில் பாடல் அமைக்கப்பட்டிருக்கும்.
இப்ப வரும் படங்களில் ஜாலியான பாட்டு என்றால் குத்துப்பாட்டு என்பார்கள், ஆனால் இசைனு சொல்லிக்கிறாப்போல எதுவும் இருக்காது, வெறும் டம்முக்கு டிப்பான் டப்பானு ஒரு பீட்ஸ் தான் பாட்டு முழுக்க ஓடும்.
மாமா ...மாமா மாமா ஏமா...ஏமானு ஜாலியான டப்பாங்குத்தாக இருப்பினும், பாட்டின் நடுவில் "தாலிக்கட்டும் முன்னே கை மேனியில் படலாமானு "கலாச்சாரமும் பேசு(பாடு)கிறார்கள் :-))
இப்போலாம் டாடி மம்மி வீட்டில் இல்லைனு நேரா இன்விட்டேஷன் தான் :-))
இந்த பாட்டில உள்ள கவனிக்க தக்க அம்சம் என்னவெனில் ,பாடலுக்கு ஆடும் ஆண் நடிகர் தான்,அவர் பெயர் "கள்ளப்பார்ட் நடராஜன்",அக்கால நாடகங்களில் வில்லனாக நடிப்பவர்களை "கள்ளப்பார்ட்"என்றும் ஹீரோவை "ராஜ பார்ட்" என்றும் சொல்வார்கள்.
நாடக நடிகர்கள் எல்லாருமே நடனம்,இசை என கற்றுக்கொண்டவர்களே, எனவே வில்லன் நடிகராக நாடகத்தில் நடித்தவர் என்றாலும் செமையா "உட்கார்ந்து எழுந்து" என குத்தாட்டம் போட்டிருக்கார். பாட்டின் நடுவில் எம்.ஆர்.ராதாவும் கனவாக ஒரு சில குத்துக்கள் போட்டிருக்கார்.
இப்படிலாம் நடனம் ஆடத்தெரிந்த நாடக நடிகர் பெரிய நடிகராக வந்தாரா என்றுப்பார்த்தால் இல்லை ,கடைசியில் பார்த்தால் தேவர் மகன் படத்தில் ரேவதிக்கு அப்பாவாக " மாயன் பார்த்தால் எங்களுக்கு தான் பிரச்சினை போயிடுங்க தம்பி " என அழுகாச்சி வசனம் பேசி நடித்தவர் இவர் தான் என தெரிய வருகிறது.
திறமை இருக்கும் பலருக்கு சரியான வாய்ப்புகள் கிடைப்பதில்லை, ஆனால் திறமை என பெரிதாக இல்லாதவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு ,கிடைத்து பின்னர் திறமையை வளர்த்துக்கொண்டு பெரிய அளவில் வந்துவிடுவதும் நடக்கிறது. வாய்ப்பு கிடைப்பதை விட வரம் கிடைக்க வேண்டும் போல!
இப்போலாம் சினிமாவில ஹீரோவாக ஆகணும் என்றால் ஹீரோவிற்கு மகனாக பிறந்திருக்க வேண்டும், அரசியலில் முதல்வராக /தலைவராக ஆக வேண்டும் என்றால் முதல்வருக்கு மகனாக பிறந்திருக்க வேண்டும் என ஆகிவிட்டது.
என்ன கொடுமை சார் இது!
--------------
பின் குறிப்பு:
தகவல் மற்றும் படங்கள் உதவி,
விக்கி,கூகிள்,ஜீவி,நன்றி!
**********
65 comments:
கவலைப்படாதிங்க! சிக்காமய போவும் சிக்குனா அலப்பரைபதிவரை கட்டிவச்சி தோலை உறிச்சிடுவோம்.
//பொங்கலுக்கே பட்டாசு வெடிக்கிறவன், தீபாவளிக்கு சும்மா இருப்பானா//
This is funny.... :- ) இதை விட வேற ஒண்ணுமே புரியலே!
படங்கள் எல்லாம் அருமை ஹி ஹி...
வவ்வால் அவர்களே தமிழ்நாட்டின் மின்சார நிலைமையை வைத்து ஒரு பதிவு எழுதவும். உங்களின் தீர்க்கதரிசனம் பலிக்கட்டும். உங்களுக்கு ஆயிரம் குண்டு பல்புகள் பரிசாக அனுப்பி வைக்கப்படும்.
இலங்கைப் பிரச்சினையில் மாணவர்கள் படும்பாட்டைப் பற்றி நன்றாகச் சொன்னீர்கள். தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் நிறைய கூத்துகள் நிறைவேற்றுவார்கள்.
நன்றாகச் சொன்னீர்கள்
//அவர தவிர நாலுப்பேர் படிச்சாலே அதிசயம், பிரபல திரட்டிகள் கூடக்கண்டுக்காத ஒரு டொக்குப்பதிவு வச்சுக்கிட்டு//
இதற்கு பெயர் தான் தன்னடக்கமா? இல்ல, இது தன்னடக்கத்துக்கு உதாரணமா?
தன்னடக்கத்தையே வெட்கப்பட வச்சிடீங்க போங்க!
தீர்க்கதரிசன பதிவெல்லாம் எழுதுவதாக விளம்பரப்பதிவு போடும் பதிவர் விரைவில் மேல்மருவத்தூர் ஸ்டைலில் குறி சொல்லும் யாவாரம் ஆரம்பிப்பார் போலிருக்கிறதே?
//இப்படிலாம் நடனம் ஆடத்தெரிந்த நாடக நடிகர் பெரிய நடிகராக வந்தாரா என்றுப்பார்த்தால் இல்லை//
டப்பாங்குத்து டேன்ஸ் ஆடத்தெரிந்தால் பெரிய நடிகராகிவிட வேண்டுமா? அப்ப பிரபுதேவாதான் தமிழகத்தின் பெரிய நடிகரா?
எங்கடா பிசின் படம் இல்லைன்னு பார்த்தா கீழே வருது........... ம்...... வவ்வாலாவது பிசினை விடுவதாவது..........!!
பாக்கியராஜ் தன்னையே நக்கல் பண்ணி படமெடுப்பார். அந்த பாணியோ?!
ஹிந்தி எதிர்ப்பு என்று மாணவர்களை ஆயுதமாகப் பயன்படுத்தி ஆட்சியைப் பிடித்த நரிக்கு அதே மாதிரி மாணவர் போராட்டத்துக்கு ஆப்பு வைக்கவும் தெரிகிறது என்பதில் ஆச்சரியம் இல்லை.
\\இப்போலாம் சினிமாவில ஹீரோவாக ஆகணும் என்றால் ஹீரோவிற்கு மகனாக பிறந்திருக்க வேண்டும்.\\ ஏன் பவர் ஸ்டார் தன்னோட சொந்த உழைப்பால் ஸ்டார் நடிகராயிருக்காரே?!!
குட்டிப்பிசாசு,
நன்றி!
வாழப்பழத்தோலை உறிக்கிறாப்போல சொல்லுறாரே, மாட்டினால் மெய்யாலுமே தோலை உறிப்பாங்களோ,அவ்வ்!
பீ கேர்ஃபுல்(என்னைய சொல்லிக்கிட்டேன்)
------------------
வியாசர்,
நன்றி!
தலைவரே அந்தளவுக்காவது புரிஞ்சதே அதுவே பெருசு :-))
------------------
மனோ,
நன்றி!
ஹி...ஹி நீர் தான் என் இனமய்யா இனம்,எப்படி கலையை ரசிக்கிறதுனு தெரிஞ்சு வச்சு இருக்கீர், சில அல்சர் பார்ட்டிகள் தான் வயித்தெரிச்சல் படுறாங்க.
இதுக்கெல்லாம் ஒரு கலைக்கண் வேண்டும் ,அதெல்லாம் நமக்கு தான் இருக்கு :-))
-----------------------
காரிகன்,
நன்றி!
ஓய் நானென்ன நம்மீத்தா ரசிகனா எனக்கு குண்டூ பல்பு அனுப்பரேன்னு சொல்லுறீர், எனக்கு "லைட் வெயிட்" போதும் :-))
மின்சாரம் குறித்து ஏற்கனவே சில பல தீர்க்க தரிசனங்கள் சொல்லியாச்சு அதையெல்லாம் பார்த்துவிட்டு, இன்னும் என்ன தேவைனு சொன்னால் அருள்வாக்கை ஆரம்பிச்ச்டலாம் :-))
நம்ம மின்சாரப்பதிவுகள்,
# வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: மின்சாரக்(கொடுங்)கனவுகள்.
# வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: மிரட்டும் மின்சாரக் கொள்(ளை)கை!
# மின்வெட்டு எல்லாம் ரொம்ப சகஜமப்பா!
# மின்வெட்டு குறையும்!
# சூர்ய சக்தி மின்சாரம்
# தலைகீழ் மின்மாற்றி சேமகலன்
--------------
தி.தமிழ் இளங்கோ சார்,
வாங்க,நன்றி!
விழிப்பிரச்சினை சரியாகிவிட்டதா, உங்கள் வாசிப்பார்வம் வியப்பளிக்கிறது. உடல் நலனை கவனம் கொள்ளவும்.
மாணவர்களை அரசியல் பகடைக்காய் ஆக்குவது தான் அரசியல்வாதிகளின் வேலையே. முன்னரே எசுதிய எல்லாமே அரசியல் தான் பதிவும் படித்திருப்பீர்கள் என நினைக்கிறேன்,அதன் தொடர்ச்சியை தான் கொஞ்சமாக சொல்லி இருக்கிறேன்.
-------------------
முருகானந்தம்,
வாங்க,நன்றி!
டொக்டர் சரியா தான் சொல்லி இருக்கேனா, அப்போ ஓகே.
-------------
வேற்றுகிரகவாசி,
நன்றி!
ஹி..ஹி வெட்கத்துக்கே வெட்கம் வர வைப்போம்ல :-))
ஏதோ நம்மால ஆனது, சொல்லி வைக்கிறோம்,நடக்குது, ஆனால் அதுக்காக கிரீடம் எல்லாம் சூடிக்கொள்வதில்லை,அவ்வளவு தன்னடக்கம் :-))
------------------
நந்தவனம்,
வாரும்,நன்றி!
ஓய் குறி சொல்லும் யாவரம் தான் இன்னிய தேதில முதலுக்கு மோசம் வைக்காத யாவாராம் ஏன்னா முதலே கிடையாது, நேரா வருமானம் தான் :-))
குறி சொல்லி தங்க கோயிலே கட்டிப்பிட்டாங்க, இதுக்கே வருமான வரிவிலக்கு வேற அவ்வ்.
ஆமாம் நீர் ஏதும் ஆண் குறி,பெண் குறி என டபுள் மீனிங்கில் சொல்லலையே அவ்வ்!
# நான் சொன்ன பெரிய நடிகர் அர்த்தம் சிறந்த நடிகர் என்ற பொருளிலோ, உச்ச நடிகர் என்ற பொருளிலோ அல்ல, பேர் சொன்ன தெரியும் அளவுக்கு ஒரு நடிகராக வரவில்லை என்ற பொருளில்.
தேவர் மகனில் ரேவதிக்கு அப்பாவா நடிச்சவர் பேர் என்ன என ஒரு நாலு பேரிடம்ம் கேட்டுப்பார்க்கவும், சொல்லுகிறார்களா எனப்பார்ப்போம்.
குருப் டான்ஸ்ல ஆடி, மலையாளப்பிட்டு படமெல்லாம் நடித்தவரை தானே இப்போ லோகநாயகர்னு சொல்லி கொண்டாடுறிங்க,,அத வச்சு ஒப்பிட்டு சொன்னேன்.
---------------------------
பாகவதரே,
வாரும்,நன்றி!
வயசான கிட்டப்பார்வை,தூரப்பார்வை எல்லாம் சகஜம் தான், ஒரு நல்ல கண் டொக்டரைப்பார்த்தா சரி செய்திடலாம், டாப்பில செம டாப்பா படம்ம் போட்டிருக்கேன், அது கூட கண்ணுக்கு தெரியாம போச்சே :-))
உமக்காக ஒரு நல்ல கருத்தாழம் மிக்க பாடல்,
"வெறும் ஆணவத்தினாலே
பெரும் ஞானியைப் போலே நினைந்து
வீணிலே அலைய வேண்டாம்!
தினம் நினைக்கும் பொழுது மனம்
இனிக்கும் விதத்தில் சுகம்
அளிக்கும் கலைகள் அறிவோம்.
ஓ…ரசிக்கும் சீமானே வா"
ரசிக்கணும்யா ரசிக்கணும், அப்போ வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்!
# நம்மளை நக்கல் விடுறளவுக்கு வட்டாரத்திலே ஆளே லேது,அதான் நமக்கு நாமே திட்டம் :-))
நரித்திட்டம் ,இன்னொரு நரித்திட்டத்தின் விளைவே, எல்லாருமே நரிங்க தான் அதுல கள்ள நரி ,குள்ள நரினு பல இருக்கு :-))
# பவர் ஸ்டார் அவரா காசு போட்டு படம் எடுத்துக்கிட்டார்யா, அதுவும் பிராட் செய்த காசு.இப்பொ என் கையில சில பல கோடிகள் இருந்தாலோ,இல்லை எங்க தாத்தா முன்னால் முதல்வரோ என்றால் நானும் ஹீரோ தான்யா,ஹீரோயின் யார்னு நான் சொல்ல மாட்டேன்...ஹி...ஹி!
நான் சொன்னது வாய்ப்பு தேடி பெற்று உருவாகும் ஹீரோக்களை பற்றி.
-----------------------------
\\வயசான கிட்டப்பார்வை,தூரப்பார்வை எல்லாம் சகஜம் தான், ஒரு நல்ல கண் டொக்டரைப்பார்த்தா சரி செய்திடலாம், டாப்பில செம டாப்பா படம்ம் போட்டிருக்கேன், அது கூட கண்ணுக்கு தெரியாம போச்சே :-))\\ அது அசின் படம் இல்லியே வவ்வால்............ புரியலையா? கண்ணாடி போட்டுகிட்டீங்க, மூளை இப்படி வேலை செய்யாமப் போனா என்ன வைத்தியமோ?!
பாகவதரே,
//அது அசின் படம் இல்லியே வவ்வால்............ புரியலையா? //
இப்போ புரிஞ்சிடுச்சு ... நீர் கிரிக்கெட் வெள்ளாடும் போது கீழ விழுந்து மெடுலா அப்லுங்க்கேட்டாவில அடிப்பட்டு போச்சு சரியா :-))
கண்ணு தெரியாம குத்துமதிப்பா பார்த்துப்புட்டு, என்னா ஒரு சமாளிப்பு,வெளங்கிடும்!
வாழ்த்துகள் தீர்க்கதரிசியே....:-)))
Maakkaan.
எங்க ஊர்ல இதுக்கு
'ஐ ஆம் ராசைய்யா'
ன்னு சொல்வாங்க...-:)
BUDGET DEFICIT
ELECTRICITY DEFICIT
FISCAL DEFICIT
WATER...
இதெல்லாம் இல்லாம கூடிய சீக்கிரம் தமிழ்நாடு இருக்கப்போதுன்னு ஒரு நீண்ட பதிவு போடுங்க...:)
(YOU MAY QUOTE PANNEER'S BUDGET...
ஜெ புகழாரத்தை நீக்கினா கடைசிப்பக்கம் மட்டும் தான் மிஞ்சும்...அங்க மட்டும் தான் நம்பரையே பார்க்க முடிஞ்சது...)
ஹாய் வவ்வால்.
அரசியல விட அசின் தான் பிடிச்சிருக்கு..
முதல் படம் அற்புதம். நம்ம நாட்டுல பிரச்சனையா இல்ல ஆனா அதை விரிவா வெளக்கமாக புரியற மாதிரி சொல்ற ஆளு தான் இல்ல. ஏதோ நமக்கு புரியற மாதிரி விளம்பர பதிவர் எழுதிகிட்டு வராரு அவரு மேல் ஏன் இவ்வளவு காண்டு? அவருக்கு மட்டும் அவரை கிண்டல் செய்து எழுதுனது தெரிந்தது உன்னை தலைகீழா தொங்க விட்டு அடிப்பாரு :)
Not able to score a century left blog and on tour at present.Will be back:)
மாக்ஸ்,
நன்றி!
ஆஹா தீர்க்க தரிசினு நம்ப ஆளு கிடைச்சிடுச்சு, அப்படியே தீர்க்க தரிசன கடைய ஓப்பன் செய்து கல்லா கட்டி ,ஒரு தங்க கோயிலோ, வெள்ளிக்கோயிலோ கட்டி செட்டில் ஆகிட வேன்டியது தான் :-))
--------------
ரெவரிஜி,
நன்றி!
ரொம்ப "முக்கிய"பிரமுகராகிட்டிங்க, கருத்துப்பொட்டிய எல்லாம் தூக்கிட்டு, மக்களுக்கு கருத்து சொல்லுறிங்க :-))
ராசைய்யானு சொல்லுறதுக்கு இப்படியும் பொருள் இருக்கா?
இளையராசாவோட நிஜ பெயர் கூட டேனியல் ராசைய்யா தான்,அவரும் இப்படி கெரகம் புடிச்ச வேலை செய்வாரோ?
//BUDGET DEFICIT
ELECTRICITY DEFICIT
FISCAL DEFICIT
WATER...
இதெல்லாம் இல்லாம கூடிய சீக்கிரம் தமிழ்நாடு இருக்கப்போதுன்னு ஒரு நீண்ட பதிவு போடுங்க...:)//
இப்போவே தமிழ்நாடு எல்லா வளமும் பெற்று ச்பிட்சமா தானே இருக்கு, இப்படிலாம் சொல்வது எதிர்க்கட்சிகளின் சதினு தெரியாதோ?
கரண்ட் கட்டுக்கு காரணம் மத்திய அரசு, தண்ணியில்லைனா அதுக்கு காரணம் கர்நாடகா, பட்ஜெட்டில் பற்றாக்குறைனா அதுக்கு காரணம் சிவகங்கை சின்னப்பையன், மற்றபடி தங்கமான ஆட்சி நடக்குது,அதனால் தான் தங்கம் விலைக்கூட குறைஞ்சு இருக்கு :-))
பன்னீரு பட்ஜெட்லாம் படிச்சார எப்புடி கைய கட்டிக்கிட்டே படிச்சாரோ?
ஒரு பக்கத்திலவாது நம்பர் போட்டாங்களேனு சந்தோஷப்பட வேண்டாமோ :-))
----------------
கோவை ஜீவா,
நன்றி!
//அரசியல விட அசின் தான் பிடிச்சிருக்கு..//
அடடா காம்பெடிஷன் கூடிகிட்டே வருதே ,அவ்வ்!
------------
குறும்பன்,
நன்றி!
கொஞ்சநாளா கண்ணிலே காணோம்,ஐ.நா சபை பக்கம் போயிட்டிங்களோ?
# அற்புதம் நிகழ்வதே தீர்க்க தரிசனத்தின் மகிமை :-))
நாட்டுப்பிரச்சினைக்காக அல்லும் பகலும் ஓயாது சிந்திக்கும் அந்த அலப்பரை பதிவரின் அருமை உம்மை தவிர மற்றவர்களுக்கு தெரியலையே அவ்வ்!
-----------
ராச நட,
வாரும்,நன்றி!
சுற்றுலாவா ,இன்ப சுற்றுலாவா? அரபிய பாலைவனத்தில் ஒட்டகத்தினை கட்டிக்கொண்டு என்ன இன்ப சுற்றுலா கிடைக்கும்னே தெரியலையே?
நம்ம பதிவில 100 அடிக்கலைனு இவரு எதுக்கு வெளிநடப்பு செய்றார், சுற்றுலா போயிட்டு வாரும் பஞ்சாயத்தை வைப்போம்.
read all leftovers.do u wanna spin doctor for one more century? hi...hi...hi...hi...
வாழ்்த்த வயதில்லை வணங்குகிறோம்
இவன்
வவ்வால் இணைய பேரவை
ராச நட,
வாரும்,நன்றி!
சுற்றுலாவின் போதும் சமூக கடமையாற்றும் ஆர்வம் மெய்சிலிர்க்க வைக்குது :-))
அது யாரு ஸ்பின் டாக்டர், பன் டாக்டர்னு சொல்லிக்கிட்டு, நாம எல்லாம் ஸ்பின்னை ரிவர்ஸ் ஸ்வீப் அடிக்கிற ஆளுங்க, வரச்சொல்லும் பார்க்கலாம்.
------------
அனானி ராசா,
உமது பொற்பாத கமலங்களை தடவி,இழுத்துப்பிடிச்சு கெஞ்சிக்கேட்டுக்கொள்கிறேன் , போதும் இத்தோடா நிறுத்தும்!
யாருப்பா நீர், இம்புட்டு ஆர்வமா ஊதி விடுறீர், ஏற்கனவே ஏத்தம் அதிகமாகிப்போகி தலைகால் புரியாம தலைகீழா தொங்கிட்டு இருக்கிறதா ஊருக்குள்ள அரசல்புரசலா பேசிட்டு இருக்காக, இதுல இணையப்பேரவைனு எல்லாம் சொல்லி உசுப்பிவிட்டா , எங்க போய் முடியுமோ அவ்வ்!
குவார்ட்டர் கோழி பிரியானியும் கொடுத்து சேர்த்த கூட்டம் இல்ல தல உன் எளுத்துக்காக தானா சேர்ந்த கூட்டம்
வவ்வால் said...
ரெவரிஜி,
நன்றி!
ரொம்ப "முக்கிய"பிரமுகராகிட்டிங்க, கருத்துப்பொட்டிய எல்லாம் தூக்கிட்டு, மக்களுக்கு கருத்து சொல்லுறிங்க :-))//
முக்கியம்லா ஒன்னும் இல்லீங்க...
இடுக்கண் வருங்கால் ஓடி ஒளிகன்னு பெரியவங்க சொன்னதால தான்...
Anticipatory Bail...-:)
நானும் தொடக்கத்தில் ஒரு வசதிக்காக இந்த அசினை போடுறீங்களேன்னு பார்த்தா தொடர்ந்து இத்தனை ரசனையோடு,
பிசின் போல ஒட்டிக்கிட்டி இருக்காங்களோ?
யாரை குறிப்பிட்டு பேசுறீங்கன்னு மொதல்ல புரியல்ல. பின்னூட்டத்தில் வந்த ஒரு வரி புரிய வச்சுடுச்சு.
ரெவரிஜி,
வாங்க,நன்றி!
என்னது "முக்கிய" பிரமுகர் நீங்க இல்லையா, அதெல்லாம் சும்மா தன்னடக்கம்னு அடக்கிட்டு சொல்லுறிங்க, நீங்க "முக்கிய" பிரமுகரா ஆகியாச்சு :-))
"முக்கிய" பிரமுகராக கருத ஒரு தகுதி என்னவெனில் , நாஞ்சொல்றத கேளு, அப்புறம் நீயும் எதாச்சம் சொல்லணும்னு நினைச்சா சொல்லு ஆனால் அதை அப்படி ஓரமா போய் சொல்லு எனக்கு வேற வேலை இருக்குனு "ரொம்ப பிசியா" இருக்கிறதே :-))
# உங்களுக்கு அனானியா வந்து யாரோ இம்சை பண்றதா நினைக்கிறேன், யார் மீதாவது சந்தேகமா இருந்தா சொல்லுங்க , கொத்துக்கறி போட்டுடலாம், எனக்கும் சலம்பல் பண்ணி ரொம்ப நாளாச்சு :-))
நீங்க இதுக்கே இப்படி அலுத்துக்கிறிங்க எனக்கு சில நாதாரிகள் வயக்கரா, காமக்கதைகள்னு லின்க் போட்டு அனானியா பின்னூட்டம் போட்டுக்கிட்டு இருக்கு, ஆனால் எல்லாம் ஸ்பாம் பொட்டிக்கு போயிடுது, நேத்து மட்டும் சுமார் 250 அனானி ஸ்பாம்களை டெலிட் செய்தேன்( அது இந்த வாரத்துக்கு அடுத்த வாரம் புதுசா போடுவாய்ங்க)
வயாக்கரா விளம்பரம் போடுற பரதேசிய என்னனு சொல்ல,போயிட்டு போவுது ஸ்பாம்ல தானே போவுதுனு விட்டுடு நம்ம வேலைய பார்க்க வேண்டியது தான்.
எனக்கு ஒரே ஒரு டவுட்டு தான் அது ஏன் எனக்குனு வயக்கரா விளம்பரத்த போடுறானுங்க,எல்லாருக்கும் போட்டிருப்பானுங்க ,எனக்கு ஒரு 50-60 வருது அவ்வ்!
---------------
ஜோதிஜி,
வாங்க,நன்றி!
//ஒரு வசதிக்காக இந்த அசினை போடுறீங்களேன்னு பார்த்தா //
"படம்" விட்டுப்போயிச்சு :-))
இப்படி வண்ணப்படம் போட மூலக்காரணமே நீங்க தான்னு சொன்னேன் அத பார்க்கலையோ :-))
வறட்சியான நம்ம பதிவிலே வளப்பமா ஒரு படம் போட்டால் சும்மா ஜிவ்வுனு இருக்குதுல்ல ,அதுக்குதேன் கண்கவர் படங்கள் போடுறோம், ,வண்ணப்படங்ளை அள்ளி தருவது உங்கள் கூகிள் அடியேன் அதனை பயன்ப்படுத்திக்கொள்கிறேன்!
# பின்னூட்டம் பார்த்து தான் புரிஞ்சுக்கிட்டிங்களா, ரொம்ப்ப்ப ஷார்ப்பு :-))
Back to pavilion.
ஒட்டகம் சீக்கிரம் களம் இறங்கப் போகிறது:)
இப்படி வண்ணப்படம் போட மூலக்காரணமே நீங்க தான்னு சொன்னேன் அத பார்க்கலையோ :-))
இதென்ன புதுக்கதை
அனானி ராசா,
தானா சேர்ந்தவங்களா ரொம்ப நன்றி! இப்போ கோழி பிரியாணி குவாட்டர்லாம் வேன்டாம்னு சொன்னது போலவே எப்பவும் இருக்கணும் ,அப்புறமா கேட்டா வாயில சூடு தான் கிடைக்கும் :-))
----------------
ராச நட,
வாரும் என்னமோ சிங்கம் கிளம்பிடுச்சு ரேஞ்சில ஒட்டகத்துக்கு பில்ட் அப், வந்துட்டு வழக்கம் போல வாய பெருசா தொறந்து வியாக்கியாணம் தானே செய்யப்போறீர் :-))
கலாய்க்க ஆள் இல்லாம போர் அடிக்குது வாரும் ஆட்டத்தை ஆரம்பிக்கலாம்!
---------------
ஜோதிஜி ,
போனப்பதிவிலே சொன்னேன் பார்க்கலை போல , இப்போ பாருங்க,
//நம்ம பதிவில படமெல்லாம் போட மூலக்காரணமே நீங்க தான், நீங்களே இப்படி சொல்லலாமா,நன்றாக சிந்தித்துப்பார்க்கவும், பெட்ரோலிய விலை மோசடி பற்றிய பதிவில் ஒரே புள்ளிவிவரமா ,தகவல்களாக இருக்கு வறட்சியா இருந்தா எப்படி படிப்பாங்க ,கொஞ்சம் கவர்ச்சியா பதிவு இருக்கணும்னு சொன்னீங்களே நியாபகம் இல்லையோ?
சரி பதிவ கவர்ச்சியாக்க என்னவழினு குவாட்டர் அடிச்சிட்டு குப்புற அடிச்சு படுத்து யோசிச்சப்போ கணநேரத்தில் கபாலத்தில் உதித்த சிந்தனை தான் இப்படி படம் போடும் யுக்தி :-))
//அந்த உடைகளை தைத்தவர், மற்றும் அதற்கு தேவைப்படும் பல விசயங்களைப் பற்றி யோசித்த போது//
அழகை அனுபவிக்கணும் இப்படிலாம் தச்ச டைலரு யாருனு ஆராயப்படாது, ஜானம் அதிகமாகிடுச்சு போல :-))//
இப்போ புரியுமே :-))
குப்புற அடிச்சுப்படுத்து யுக்தி கண்டு பிடிச்ச கபால சிந்தனையாளரே!
போரடிச்சா தொட்டுக்க ஊறுகாயா நக்ஸ்,நந்தவனத்தானை விட்டுட்டுப் போனேனே!எங்கே அவர்கள்?
சூர்ய சக்தி மின்சாரம் பதிவை மீண்டுமொரு முறை ஒப்பிடுதலுக்காக பார்வையிட்டேன்.ஒரு இடத்திலும் நிலை கொள்ள முடியாத தொடர் ஊர் சுற்றலில் கேரளாவிலும் மின் தடையுள்ளது.ஆனால் சூர்ய சக்தி மின்சாரம் பற்றியெல்லாம் யாரும் தெரிந்து வைத்திருக்கிற மாதிரி தெரியவில்லை.பம்பாயில் சில மணி நேரம் சில தினங்கள் மின் தடையிருந்தாலும் சூர்ய சக்தி உபகரணங்களை வியாபார ரீதியாக யாரும் பிரபலபடுத்துவதாக இல்லை.மாறாக தமிழகம் யு.பி.எஸ்,மின் அலை விசிறி,சூரிய கதிர் உபகரணம் என அனைத்து முயற்சிகளையும் பரிட்சை செய்து பார்க்க முயற்சிப்பதை காண முடிந்தது.
போன பதிவுல அசினைப் பார்த்தவுடன் ஓவர் பில்டப்பா இருக்குதேன்னு நினைச்சேன்.படத்துக்கும் பதிவுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குதா?அப்படியிருந்தும் ஜொள்ளர்கள்,சொல்லர்கள் இணைந்து செஞ்சுரி அடிக்க வேண்டிய பதிவு அது.நான் இல்லாததால் ஊத்திகிச்சு போல:)
அழகான பதிவுக்கு திருஷ்டி பொட்டு அவ்ளோ பெருசா போடுவாங்க:)இதுல சும்மா இருக்குறவங்களை தூண்டிவிட்டு கமெண்டடுனதுதான் மிச்சம்.
முதலில் வவ்வால் என்னை மன்னிச்சு தொடர்ந்து வர முடியவில்லை வேலை பழு .......இப்போதான் மூணு பதிவையும் படித்தேன் .. அட அட என்ன ஒரு அடக்கம் ...என்ன ஒரு தீர்க்கதரிசனம் . இது எல்லாம் சாதாரண விஷயம் நீங்க கண்டசாலா காலத்து ஆளுன்னு இப்போ தான் தெரிஞ்சிக்கிட்டேன் ..அட கொடுமையே இவ்ளோ நாளும் ஆதாம் ஏவாளுக்கு பிறந்த மூத்த பையனுக்கு தான் நான் கமண்ட்டு போடுறேன் என்று நினைக்கும் பொது கண்ணா பின்னான்னு பெருமையா இருக்கு . பேத்தி அசினை விட்டுவிடுங்களேன் .. நம்ம ரேஞ்சுக்கு ஒரு கே.ஆர்.விஜயா , ஒரு பத்மினி ஒரு சாவித்திரி . தலைவரே அடுத்த மாதம் கொலை வெறியோடு நாணும் காலத்தில் இறங்குகிறேன் ..........(சும்மா ஜாலிக்கு சொன்னேன் மூஞ்சை உர்ர் என்று வச்சிக்கிட்டு ஒரு குவாட்டருக்கு மேல் அடிக்க வேண்டாம் .) :-)
ராச நட,
வாரும்,
கபாலம் முழுக்க களி மண்ணு இருக்கும்னு நினைச்சீரா எல்லாம் சிலிக்கான் சில்லை விட சூப்பர் ஃபாஸ்ட் நியுரானாக்கும் :-))
குப்புற அடிச்சாலும் குபீர்னு வேலை செய்யும்,மூளைய சொன்னேன்!
நீர் விட்டுப்போன ஊறுகாய் எல்லாம் ஊசீப்போனது போல தாக்குப்பிடிக்கமுடியாமல் தலைமறைவாகிட்டாங்க :-))
# சுற்றுலா முழுக்க இந்தியாவிலா? அதுவும் நேரா கேரளாவுக்கு போயிருக்கீர் ,ம்ம் சேச்சிகள் பார்க்கவா?
இந்தியா முழுக்கவே மின் தடை உண்டு, தலைநகர் டெல்லியில் கூட முக்கியமான இடங்கள் தவிர்த்து மற்ற இடங்களில் மின் தடை, குடிநீர் தட்டுப்பாடு உண்டு.
தமிழகத்தில் மின் தடை அதிகம் பேசப்படக்காரணம் ஆரம்பத்தில் இத்தனை அதிக மின்வெட்டே இல்லாமல் , சமீபமாக மின்வெட்டு அதிகரித்திருப்பதேயாகும்.
இப்போ தமிழகத்தில் மின் வெட்டு கணிசமா குறைஞ்சிருக்கு, எங்க பகுதியில் இப்போ சுமார் 2 மணி நேரம் மின்வெட்டு இருந்தாலே அதிகம், இதே நிலை நீடிக்க வேண்டும்.
மஞ்சத்துண்டு ஆட்சியின் போது மின்வெட்டுக்கு விளக்கமாக ,உ.பி.ம.பி,பிகாரில் எல்லாம் 10-12 மணி நேர மின்வெட்டு தமிழகத்தில் இரண்டு மணி நேரம் தான் என சொன்னதை நினைவுப்படுத்திக்கொள்ளவும் :-))
தமிழகத்தில் விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பது தனிநபர் வகை, அரசு கொள்கை ரீதீயாக இப்பொழுது தான் சோம்பல் முறிக்கிறது, குஜராத்தில் சுமார் 654 மெ.வா சூர்ய சக்தி மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.
ராஜஸ்தான்,ஆந்திராவில் எல்லாம் பல ஆண்டுகளுக்கு முன்னரே சோலார் பிளாண்ட்கள் அமைக்கப்பட்டுவிட்டது,ஆந்திராவில் ஒரு கிராமம் முழுக்க சூர்ய சக்தி செயல்ப்படுத்தப்பட்டு, இந்தியாவின் முதல் சூர்ய சக்தி கிராமம் எனப்ப்பெயரும் வாங்கி ரொம்ப நாளாச்சு.
நம்ம ஊரில் அரசு ஒன்னும் செய்யலைனாலும்,மக்களாக சூர்ய சக்தி உபகரணங்களை வாங்க ஆர்வம் காட்டியதால் அவற்றுக்கான வியாபார வாய்ப்புகள் நிறைய உருவாகி இருக்கு எனலாம்ம்.
வியாபாரிகள் கையில் முழுக்க இருப்பதால் இதில் ஒரு கொள்ளையும் நடக்குதுனு அப்பதிவிலே சொல்லி இருப்பேன், அதாவது மானியம் அளிக்கப்படும் தொகைக்கு ஏற்ப விலை குறைய வேண்டும்,ஆனால் விலையை உயர்த்தி விற்று மாநியத்தின் பலன் மக்களுக்கு கிடைக்காத வகையில் செயல்படுகிறார்கள்.அரசே ஒரு கி.வா பேனல் அதிகபட்ச விலை என்னவென நிர்ணயிக்க வேண்டும் அப்பொழுது தான் மாநியத்தின் பல்லன் மக்களுக்கு கிடைக்கும்.
---------
படத்தை மட்டும் பார்த்தா சம்பந்தம் எப்படி தெரியும்,கூடவே நம்ம கமெண்டும் படிக்கோணும் , அந்த வரி பிபி.எஸ் பாடல் , ஹி..ஹி பி.பிஎஸ் பத்தி பதிவிலும் இருக்கு ,எப்படி சம்பந்தம்ம் :-))
திருஷ்டி பொட்டா ? உமக்கு எல்லாமே கோணலாதான் தெரியும் ... அதிஷ்ட பொட்டு அது , உள்ளத்தை கொள்ளை கொள்ளும் கண்கவர் வண்ணப்படங்களை கண்டு களிக்க தெரியாத வறண்டு போன மண்டை இருந்தா இப்படித்தான் பேசத்தோணும் :-))
----------------
அஞ்சா ஸிங்கமே,
வாரும்,நன்றி!
பிரபல தொழிலதிபராகிட்டாலே வேலைப்பளு அதிகமாகத்தான் இருக்கும்,
அடக்கம் அமரருள் உய்க்கும்! அய்யன் வள்ளுவர் வாக்கு அதுவே அடியேனின் தாரகமந்திரம்!
பொறக்கும் போதே கபாலம் முழுக்க மூளையோட பொறந்துட்டதால் பல தலைமுறைகளின் பூர்வ ஜென்ம வரலாறு ,புவியியல்னு மண்டையில் ஏறிப்போச்சு அதனால் தான் கண்டசாலா,காண்டசா காருலாம் தெரிஞ்சு வச்சிருக்கோம் :-))
தொல்பொருள் துறையால் அடக்கம் செய்யப்பட்ட பழங்கால வஸ்துக்களை எல்லாம் சொல்லிக்கிட்டு இருக்கீர் , அப்போ உமக்கு தான் பேத்தி ,நமக்கு mera dil chahta hai..hai :-))
குவாட்டர் மட்டுமே ஹி...ஹி சூடா இருக்குனு கொஞ்சம் கூலா ஒரு பீரும் மிக்சிங் செய்திடுறது :-))
//அடுத்த மாதம் கொலை வெறியோடு நாணும் காலத்தில் இறங்குகிறேன் //
சீக்கிரமா வாரும் ,தமிழ்ப்பதிவுலகமே துவண்டுப்போய் கிடக்குது, நான் ஒருத்தனே எத்தினி நாளிக்கு தூக்கி நிறுத்துறது :-))
வயாக்ரா போன்ற எழுச்சி எழுத்தோவியங்கள் நயாக்கராவை பொங்கி வழிய விரைந்து வாரும் :-))
வாழ்த்துகள்....
கொங்குநாட்டான்.
என்னதான் முதுகை காட்டினாலும் கடைல போணியாகாது போல தெரியுதே!
கண்ணா!மறுபடியும் திருப்பதி லட்டு தின்ன ஆசையா!
ப.ம.கவின் உருட்டைக்கட்டைல ஏதாவது மாட்டிகிட்டாரோ!
மன்னா!
//ப.ம.கவின் உருட்டைக்கட்டைல ஏதாவது மாட்டிகிட்டாரோ!//
பாதுகாப்பு காரணம் கருதி சிறைச்சாலையில் இருக்கிறார் என்று நம்பப்படுகிறது....:-))
--கொங்குநாட்டான்.
கொங்கு மன்னா!அசினின் சுயவரத்தில் கலந்து கொள்வதற்கு விசாவுக்கு அலைவதாகவும் ஒரு வதந்தி கேள்விப்பட்டேன்.நந்தவனத்தான் சிபாரிசு செல்லுபடியாகவில்லையாம்:)
மன்னா!
மெக்சிகோ சென்று விட்டார் என்று கேள்விப்பட்டேன்...:-)
------கொங்குநாட்டான்.
என்னது!மெக்சிகோ சலவைக்காரியை தேடிக்கொண்டு போய் விட்டாரா:)
ராச நட,& கொங்கு நாட்டார்,
அடஅட என்னா ஒரு கடமை உணர்ச்சி, கடைய தொறந்துப்போட்டுட்டு ஆறுமாசம் தேசாந்திரம் போனாலும் ரெண்டு பேரும் வந்து போய் போக்குவரத்து செய்து காப்பாத்திருவீங்கனு தெரியுது :-))
# போணியாவது கோணியாவது , நம்ம கடையில கஸ்டமரே இல்லைனாலும் நானே டீ ஆத்தி, ஊதி ..ஊதி குடிப்பேன்ல :-))
# அடிக்கிற வெயிலுல லட்டு திண்ண எல்லாம்ம் அம்ம்புட்டு தூரம் போவமுடியாது.
உருட்டுக்கட்டையில மாட்டி தப்பிச்சு வந்தாச்சு, அதை வச்சு ஒரு பதிவு போடல்லாம்னா நேரக்கொடுமை :-((
# இன்னும் ஜெயிலுக்கு மட்டும் தான் போகலை ,அதையும் தான் பார்த்துப்புடலாமே :-))
# அமெரிக்கா,மெக்சிகோனு ஒரு மாம்பழத்துக்காக ஒலகம் சுத்தின முருகரு போல சுத்த விடுவீங்க போல இருக்கே, நாம எல்லாம் முருகரு அண்ணேன் கணேசரு போல உள்ளூர சுத்தியே மாம்பழத்தை கெலிப்போம்ல :-))
ஓய் மெக்சிகோ சலவைக்காரி ஜோக் முழுசா தெரியுமா, சும்மா டிரெய்லர் வச்சுக்கிட்டு பேசப்படாது, அட்லீஸ் ஃபாதர் பாவமன்னிப்பு சோக்காவது தெரியுமா ?
நாங்கெல்லாம் இஸ்கோல் படிக்கச்சொல்லவே அடல்ட்ஸ் ஜோக் ஆங்கிலத்துல படிச்சு"ஜெனரல் நானெலெட்ஜ்& வொக்காபுலரி" வளத்துக்கிட்டவங்கோ :-))
# சன்னல் வச்ச கணினி தொங்கிப்போச்சு என்பதால் உபந்துவில் உலாத்துறேன், தமிழே இல்லை ,வெரசா சன்னலை சீராக்கிட்டு வந்து வச்சுக்கிறேன் கச்சேரியை!
வவ்வால் பறக்குது பார்!அப்பாடா!
மெக்சிகோ ஜோக் சுஜாதா நான் பொது இலக்கியம் படிக்கிறதுக்கும் முன்னாடியே சொன்னது.மனுசன் விடுகதையை அவிழ்க்காமலே போய் சேர்ந்துட்டார். விடை அதுதான் இதுன்னு பதிவுலகம் சொல்லக் கேள்வி மட்டுமே.
பாதர் பாவமன்னிப்பு ஜோக் தெரியாம என்ன தமிழ் எலக்கியத்தை தெரிஞ்சிக்க முடியும்:)
நானும் சாம்சங் நோட்டு வச்சுகிட்டே சமாளிச்சிடலாம்ன்னுதான் வந்தேன்.காசு சல்லிசு,ரோமிங் வசதியெல்லாம் இந்தியாவில் நல்லாத்தான் இருக்குது.ஆனாலும் சாம்சங் பதிவை காண்பிச்சுட்டு பின்னூட்டப்பகுதியை அப்படியே முழுங்கிடுச்சு.காரணம் என்ன?
ராச நட,
தமிழ் எலக்கியமெல்லாம் தெரிஞ்சு தான் வச்சிருக்கீங்க ஆனால் "செயலில்" ஒன்னும் காணோமே :-))
சாம்சங் நோட்டு வச்சிருக்கிங்களா, 40 பக்கம் நோட்டா இருக்கும் அதான் முழுசா காட்டலை ,ஒருக்கொயர் நோட் வாங்கிப்பாருங்க :-))
அதுல ஜல்லி கொஞ்சம் கொட்டி அப்டேட் கொடுத்துப்பாருங்க, ஜல்லி மீன் பிரச்சினை பண்ணும், இல்லை முழுசா பேஜ் லோட் ஆகும் முன் நெட் கட் ஆகி/சிக்னல் வீக் ஆனாலும் சரியா வராம போயிருக்கும்.
பின்னூட்ட பொட்டி வராம எப்படி பின்னூட்டம்?
இந்த ஆந்தையார் போனில் இருக்க ஒரு பிரச்சினை என்னனா அடிக்கடி அப்டேட் செய்துக்கிட்டே இருக்கனும் இல்லைனா சுருட்டிக்கிட்டு பொந்துல படுத்துக்கும் :-))
ஆஹா!! சித்தர்கள் பாடல் போல இருக்கு பதில்...விளங்க தனி ஞானம் வேண்டும் போலயே...
------கொங்குநாட்டான்.
என்ன தான் இடுகை நன்றாக இருந்தாலும் Walk King வந்தா தான் இடுகையே களைகட்டுது :))
வவ்வால் உங்கள் அருமை நண்பர் இயக்கநராகி இருக்கார். அவரு படம் வந்ததும் நீங்கள் தவறாம படம் வந்த இரு நாட்களுக்குள் விமர்சனம் எழுதவேண்டும். அவரின் படத்தை பற்றி செய்திகள் ஏதாவது உண்டா?
-குறும்பன்
அனானி அண்ணா / அக்கா! இன்னும் கொஞ்சம் உரக்க சொல்லுங்கோ!பேட்மேன் ஐ.பி.எல்க்கு பேட் எடுத்துகிட்டு நெஞ்சை நிமிர்த்திகிட்டு மட்டும் வந்துடறார்.ரன் என்னமோ 30 தாண்டுவதில்லை.
பார்டன்ஷிப் நல்லாயிருக்கனுமில்ல.சொல்லி அடிப்போமில்ல!
இதோ 50:)
அனானி அண்ணா / அக்கா! இன்னும் கொஞ்சம் உரக்க சொல்லுங்கோ!பேட்மேன் ஐ.பி.எல்க்கு பேட் எடுத்துகிட்டு நெஞ்சை நிமிர்த்திகிட்டு மட்டும் வந்துடறார்.ரன் என்னமோ 30 தாண்டுவதில்லை.
பார்டன்ஷிப் நல்லாயிருக்கனுமில்ல.சொல்லி அடிப்போமில்ல!
இதோ 50:)
ஒண்ணு இந்த பதிவை தூக்கனும்...இல்லாட்டி கொங்கு மன்னன் ஆட்டத்துக்கு தோள் கொடுக்கனும்.யாருக்கு எப்படி வசதி?
வெளியே போகும் போது சிம்ரானின் குர்குரே வசனம் நினைவுக்கு வந்தது.அதனால.......
மொக்கையா இருந்தாலும் என்னுடையதாக்கும்!
கொங்கு நாட்டார்,
அடியேன் வண்டலூர் வவ்வால் சித்தர் , ஆனால் வெளியில் சொல்லிக்கொள்வதில்லை, நீரும் யாரிடமும் சொல்லீடாதீர், அடிச்சுக்கூட கேட்பாங்க சொல்லிடாதீர்!
--------------
குறும்பன்,
நன்றி!
பொதி சுமக்கிறது ஒரு மாடு ,புண்ணாக்கு திங்குறது இன்னொரு மாடு கதையா சொல்லுறீர், ஆனாலும் ராச நட வந்தால் தான் காமெடி கலைக்கட்டும், எனவே அவர் வருகை நல்வரவாகுக!
# என்னோட நண்பர் ரொம்ப நாளா படம் இயக்கிட்டு தான் இருக்கார் ,முன்ன கூட டைனோசர் வச்சு படம் எடுத்தார் ,அதுக்கு நான் தான் நாளு டைனோசர் முட்டை அனுப்பி வச்சேன், படம் பேரு கூட என்னமோ பார்க்குனு வரும்.
ஆமாம் நீங்க யார சொல்லுறிங்க?
------------
ராச நட,
அதான் குறும்பன்னு கை எழுத்து போட்டிருக்காரே அப்புறமும் என்ன அக்கா,சொக்கானுகிட்டு, சும்மா ஆடுவீர் குறும்பன் வேற ஊதிவிட்டார் இனிமே கெரகம் எடுத்துல்ல ஆடுவீர் அய்யகோ!
# என்னமோ வட சென்னை தாதா ஆள தூக்குடானு சொல்லுறாப்போல பதிவை தூக்கனும்னு சொல்லுறாரே அவ்வ்!
நாளை புயல் மையம் கொள்ளும் பொறுத்திரும்!
//வெளியே போகும் போது சிம்ரானின் குர்குரே வசனம் நினைவுக்கு வந்தது.//
வெளியே போகும் போது யூ மீன் கக்கா போறச்சேவா, கக்கா போறப்போ எதுக்கு ஓய் குர்க்குரே கோணலா இருக்கானு நினைச்சு பார்த்தீர் ,அடக்கர்மமே , ஒரு வேளை முறுக்கு பிழியிற நியாபகமோ அவ்வ் :-))
வவ்வால்!எ ஜோக்குதான் கேள்விப்பட்டிருக்கிறேன்.இதென்ன சீ ஜோக்?
வினோத்! பவர் கட் மாதிரியே இருக்குது பதிவுகள்:)
ஒரு பதிவுக்கு ஒன்பது பதிவு தேத்தறது எப்படியென்பதை உங்களிடமிருந்துதான் கற்றுக்கொள்ள வேண்டும் போல இருக்குதே:)
உங்கள் பவர் அக்கறைக்கு வாழ்த்துக்கள்.
எல்லோரும் அம்போன்னு விட்டுட்டாங்களே!
என்னா இது?
http://microbar10.meelabo.com/chan-6393125/all_p1.html
மன்னா!
என்னா இது? ஆளில்லாத கடையில் உமக்கு என்ன வேலை???? :-))
------கொங்குநாட்டான்.
வினோத்,
நன்றி!
நீர் தான் மின்சாரவியலின் ராமர் பிள்ளையோ :-))
உங்கப்பதிவை படிச்சேன் காமெடியா,சீரியசானே புரியலை அவ்வ்!
மின்சாரத்தினை அலையாக மாற்றலாம்,ஆனால் அதனை வைத்து மின்சாதனங்களை இயக்க முடியாது, மேலும் மாற்றுவதால் மினிழப்பு அதிகமாகும்.
ஒரு கே.வி மின்சாரத்தினை அலையாக அனுப்ப 10 கேவி மின்சாரம் செலவாகும் :-))
ஏன் சாத்தியமில்லைனு இன்னும் விரிவாக சொல்ல முடியும், ,ஆனால் நீங்க காமெடி செய்கிறீர்களோ என தோன்றுவதால் இத்தோடு விடுகிறேன்!
-----------
ராச நட,
வாரும்,
ஏ சோக்கு இருக்கும் போது சீ சோக்கு இருக்கப்ப்படாதா?
அம்போனு விட அம்பும் வில்லும் எடுத்து வாரும் :-))
# என்னமோ சுட்டி போட்டிருக்கீர்னு போய் பார்த்தால் நம்ம பதிவுகளா இருக்கு, அது என்ன விரும்பிய பதிவுகளை தொகுத்து போட்டிருக்காரா, இல்லை சுட்டு போட்டு இருக்காரா?
ஒன்னியும் பிரியலையே?
இதே போல பலரும் நம்ம பதிவை எடுத்துப்போட்டுக்கிறாங்க, என்ன ஏதுனு ஒரு வார்த்தை சொல்லவும் மாட்டேங்கிறாங்க, யாராவது பார்த்துட்டு சொன்னால் தான் உண்டு.
------------
கொங்கு நாட்டார்,
வாரும்,
ஆரும் கடையை களவாடிட்டு போயிடாம இருக்க ராச நட காவக்காக்கிறார் :-))
எங்க ஊரு காவக்காரா நுனி மூக்கு மேல கோவக்காரா ...
உள்ளுக்குள்ள பொங்கி வரும் பாசத்துல ,நேசத்தில ஊரையெல்லாம் கட்டி இழுப்பான்,
நல்ல பேரையெல்லாம் தட்டிஎடுப்பான்...
டப்பு சிக்கு டப்பு சிக்கு ..டப்பு சிக்கு!
Thank you for making this interesting article. I'm happy to visit here
கொங்கு மன்னா! நம்ம கடைக்கே டீ ஆத்த முடியல.ஆனாலும் இங்கே பொதுசேவையை விடற்தில்ல:)
என்ன கொடுமை மன்னா! இந்த மொக்கை பதிவு செஞ்சுரி போட்டுடும் போல இருக்குதே:)
வவ்வால்! அப்ப நான் கொடுத்த சுட்டிக்கு சொந்தக்காரர் நீங்க இல்லையா? அடக் கொடுமை 14 ஏ:)
இப்படியெல்லாமா வடை சுடுறாங்க!எப்படியோ கூகிள் கூகிள் பண்ணிப் பார்த்தேன் ஒலகத்திலே!இந்த லோகத்தில் இப்படி சுட்ட வடை பார்த்ததேயில்லை:)
பேசாம அசினை விட்டுப்புட்டு காஜலையாவது கொஞ்ச நாளைக்கு வெச்சுக்கலாம்!(நான் படத்தை சொன்னேன்:))
அய்யா!சிகலோகா!இந்த பேட்டையில நான் உங்களை முன்பு பார்த்ததேயில்லையே?
மன்னா! நீர் வந்தாலே செஞ்சுரி உறுதி...ம்ம்ம்ம்...அடித்து ஆடுங்கள்...
பாட்டை கேட்டீங்களா...(டப்பு சிக்கு டப்பு சிக்கு ..டப்பு சிக்கு!)...என்னாமா மெட்டு போடுறாரு....உள்ளுக்குள்ள இருக்கும் இசைக் குயில்...சே..சே..இசை வவ்வால் கண் விழித்து விட்டது போல..எல்லாரும் ஓடுங்க...:-)
---கொங்குநாட்டான்.
Post a Comment