Tuesday, September 18, 2012

KKNP-கூடங்குளம் அணு உலை அரசியல்.அணு சக்தி வேண்டுமா? வேண்டாமா ? என்றக்கேள்விக்கான விடையை கண்டறிவது கடினம் இல்லை ஆனால் பொதுவாக அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் ஒரு பதிலை சொல்வதில் தான் உண்மையான சவாலே இருக்கிறது.

சென்னையில் இருப்பவர், கூடங்குளத்தில் இருப்பவர், தினந்தந்தி படித்தவர், இந்து, டெக்கான் குரோனிக்கல் போன்றவற்றை வாசித்தவர்,சன் ,ஸ்டார் ,பிபிசி என தொலைக்காட்சி பார்ப்பவர்கள், அடுத்தவர்கள் பேசியதை ஐந்து நிமிடம் செவிமடுத்தே ஞானம் பெற்றவர்கள், வலைப்பதிவில் எழுதியவர்கள், எழுதியதைப்படித்தவர்கள், படிக்காமலே நல்ல பகிர்வு ,த.ம.9 என பின்னூட்டியவர்கள் , என சகலருக்கும் அணு உலைக்குறித்தான அறிவு தலையை குலுக்கினால் பொல பொலவென கொட்டும் அளவுக்கு பெருகிய சூழலில் ,நானும் கொஞ்சம் கொட்டலாம்னு பார்க்கிறேன் :-))இந்திய அணு சக்திக்கான முதல் அடி 1944 இல் ஹோமி பாபா, ஜாம்ஷெட்ஜி டாடா கூட்டணியில் துவங்கி , 1956 இல் ஒரு செயல்படும் ஆய்வு அணு உலையை ,ஆசியாவிலேயே முதல் நாடாக இந்தியா தான் அமைத்தது என்ற பெருமையும் பெற்று பல ஆண்டுகள் ஓடியாச்சு.

இப்போது மொத்தம் 20 அணு உலைகள் செயல் பாட்டில் உள்ளன, 4780 மெ.வாட் மின் உற்பத்தி நடந்து கொண்டுள்ளது.அணு சக்தி உற்பத்திக்கு ரஷ்யா தான் நமக்கு அதிகம் உதவிக்கொண்டிருப்பதாக பெரும்பாலும் ஒரு நம்பிக்கை நிலைவுகிறது, ஆனால் கூடங்குளம் திட்டத்திற்கு முன்னர் ரஷ்யா நமக்கு செய்த அணு சக்தி உதவி என்பது ஒரு அணுசக்தி நீர்மூழ்கி வடிவமைக்க உதவியது மட்டுமே. மேலும் சின்ன சின்ன உதவிகள் மட்டுமே.

பெருமளவில் நமக்கு இது வரையில் உதவிய நாடுகளைப்பார்ப்போம்.

9 அணு உலைகளும்,அதற்கான எரி பொருளையும் அளித்தது கனடா,

2 அணு உலைகளும் ,எரி பொருளும் ஃபிரான்ஸ் அளித்துள்ளது.

2 அணு உலைகளும் எரி பொருளும் அளித்தது அமெரிக்காவின் ஜெனரல் எலக்ட்ரிக்ஸ் ஆக்கும்.

மீதம் 7 அணு உலைகளும் மேற்கண்ட நாடுகளில் இருந்து பெறப்பட்ட தொழில்நுட்பத்தினை வைத்தும் ,இந்திய தொழில் நுட்ப்பத்தினை வைத்துமே செய்துள்ளோம்.

அப்போ ரஷ்யா என்ன தான் செய்தது? நமக்கு யுரேனியம் தேவைப்படும் போது கொடுத்தது, மேலும் யுரேனியம் என்ரிச்மெண்ட், புளுட்டோனியம் பிரிக்க என கொஞ்சம் சொல்லிக்கொடுத்துள்ளது.

கூடங்குளம் அணு உலைத்திட்டமே ரஷ்யா நமக்கு அளித்த மிகப்பெரிய அணு உலை தொழில்நுட்பம்.

அப்போ இத்தனை நாளும் அமெரிக்க நிர்பந்தம் , அதனால் மேலை நாடுகள் தடை என்று சொல்வதெல்லாம், என்ன?

அமெரிக்க ஒரு பக்கம் சில நிபந்தனைகளை சொன்னாலும் மறுபக்கம் நமக்கு வேலை நடந்து கொண்டு தான் இருந்தது.ஏன் எனில் நமக்கு அணு உலையை விற்ற நாடுகளே அவை, அவற்றிடம் யுரேனியம் வாங்கினால் அவர்களுக்கு தான் லாபம், ஆனால் அணு ஆயுதம் தயாரித்ததால் சில நாட்களுக்கு மிரட்டிவிட்டு மீண்டும் வியாபாரம் செய்து கொண்டே இருந்தார்கள் என்பதே உண்மை.

இந்தியா ஏன் அடுத்தவர்களிடம் யுரேனியம் வாங்க , வளைந்து, நெளிய வேண்டும் என சொந்தமாக யுரேனியம் என்ரிச்மெண்ட் செய்ய ஆரம்பிக்க ரஷ்ய உதவியை நாடியது, உதவியும் கிடைத்தது, சும்மா உதவ முடியுமா வியாபாரம் பேசினார்கள் , அதன் விளைவே கூடங்குளம்.(1986 இல் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது என்றாலும்,அதற்கான பேச்சு வார்த்தைகள் பல ஆண்டுகளாக நடைப்பெற்றே வந்தது என்பதனை நினைவில் கொள்ளவும்)

அமெரிக்காவின் நிலை என்னவெனில் ,இந்தியா அணு உலை,அணு குண்டு என்ன வேண்டுமானாலும் தயாரிக்கட்டும்,ஆனால் இந்தியா அந்த தொழில்நுட்பத்தினை சில குறிப்பிட்ட நாடுகளுக்கு கொடுக்க கூடாது. காரணம் ஏற்கனவெ இந்தியா இரானுக்கு உதவ போவதாக பேச்சு கிளம்பியதே.

இந்த கட்டுப்பாட்டிற்கு ஒத்துக்கொண்டிருந்தால் நமக்கு ஜெனரல் எலெக்ட்ரிக்ஸ், வெஸ்டிங் ஹவுஸ் , கனடா, ஃபிரான்ஸ் எல்லாம் வழக்கம் போல உதவி செய்திருப்பார்கள்.

இந்தியாவோ இத்தனை கோடி செலவு செய்து அணு உலை எல்லாம் கட்டுறோம், அதை வச்சு வியாபாரமும் செய்யலாம்னு ஆசைப்படுகிறது.

இப்போது நாம் பயன்படுத்தும் அணு உலைகள் எல்லாம் மேற்கத்திய வடிவமைப்புகள், கன நீர் பயன்பாடுள்ள அணு உலைகள், மேலும் இதனை மறுவடிவமைப்பு செய்து விற்க அனுமதியில்லை. அதனை விட எல்லாமே 500 மெ.வாட் திறனுக்கு கீழானவை, இதனை வணிக ரீதியாக இந்தியா தயாரித்து விற்க நினைத்தாலும் பெரும்பாலான நாடுகள் வாங்காது.

நமக்கு பயன்ப்படுத்த, தயாரிக்க, விற்பனை செய்ய என முழு உரிமையோட அணு உலையும் ,தொழில்நுட்பமும் தேவை, யாரு கொடுப்பா? ரஷ்ய அண்ணாத்தை மட்டும் தான் கொடுப்பாரு.

ரஷ்யாவிடம் பேரம் பேசியதில் , அப்படி கொடுக்கணும் என்றால் இன்னும் சில நிபந்தனைகளும் போடப்பட்டது அவை என்னவென ஆரம்பத்தில் தெரியவில்லை, முதல் கட்டமாக 3 பில்லியன் டாலர் அளவுக்கு அணு உலையினை விற்கப்போடப்பட்ட ஒப்பந்ததில் 2 பில்லியனை கடன் எனவும் அதுவும் சுலப தவணைகளில், 12% ஆண்டு வட்டி மட்டுமே. ஒரு பில்லியன் மட்டும் முதலில் பணமாக தவணைகளில் கொடுத்தால் போதும் என்ற கவர்ச்சியான வியாபாரம் என்பதால் இந்தியாவும் அதி ஆர்வம் காட்டியது, ஆனால் ரஷ்யாவில் பொருளாதாரம் சரிந்ததால் கடனுக்கு விற்க முடியாத நிலை, காசு கேட்டால் இந்தியாவால் கொடுக்க முடியாத நிலை,இப்படித்தான் இத்திட்டம் தூங்க தொடங்கியது, மேலும் ஒவ்வொரு முறை பேச்சுவார்த்தைகளின் போதும் ரஷ்யாவிடம் இருந்து ஏதேனும் கூடுதலாக வாங்க நிர்பந்திக்கவும் பட்டோம், ஆரம்பத்தில் மிக் விமானம், துப்பாக்கி ,பிற ஆயுதங்கள், சுகோய் போர் விமானம், பீரங்கிகள், எனப்போய் கடைசியில் பழைய விமானம் தாங்கி கப்பல் குர்ஷ்கோவ் என நம் தலையில் கட்டியது ,


குர்ஷ்கோவ் என்ற விமானந்தாங்கி கப்பல் ,ரஷ்ய கடற்படையில் இருந்து ஓய்வுப்பெற்ற ஒன்று, அது கயலான்கடை சரக்கு, ஆனால் இந்தியா தொழில்நுட்பத்தோடு அணு உலை கேட்டதும் அதனையும் விற்றுவிட்டது,அக்கப்பலை பழுப்பார்த்து , புதிப்பித்து தர என 1.8 billion dollar கொடுத்தோம் , ஏன் இந்தியாவுக்கு வேற வழியே இல்லையா எனலாம், கடனுக்கு ரஷ்யாவை விட்டால் யாரு தருவா, அதுவும் சுலப தவணை, மேலும் நாம் வாங்கியப்பொருட்களுக்கு பாதிக்கு மேல் கோதுமையாக கொடுத்து கழித்தாயிற்று, அதாவது உணவுக்கு ஆயுதம்,அணு உலை என ஒரு பண்டமாற்று திட்டம்.

மிக் விமானங்கள் அடிக்கடி விபத்தானாலும் அதனையே மீண்டும் புதுப்பித்து ஓட்டிக்கொண்டிருக்க காரணம் , கோதுமையோ, சக்கரையோ, கொடுத்து கொஞ்சம் பணமும் கொடுத்தால் விமான உதிரிப்பாகம், விமானம் என எல்லாமே ரஷ்யா கொடுப்பதால் தான்.

உணவுக்காக ரஷ்யா ,ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை விற்க தயார், மற்ற நாடுகள் அப்படி செய்யாது என்பதாலே இந்தியா பல எதிர்ப்புகளுக்கிடையேயும் வாங்கத்தயாராக உள்ளது.

இது வரை இந்தியாவில் உள்ள அணு உலைகள் எல்லாம் கன நீர் பயன்படுத்தும் தொழில்நுட்பம் கொண்டவை, அவற்றை மீண்டும் தயாரித்து விற்கவும் முடியாது.

ரஷ்யா கொடுப்பது இலகு நீர் அணு உலை, மேலும் முழு தொழில்நுட்ப உரிமையும் நமக்கு கொடுக்கப்பட்டு விடும், எனவே இந்தியா அணு சக்தி நாடாக மட்டுமில்லை, அணு சக்தி வியாபார நாடாகவும் மாறிவிடும். இதனை ஏற்கனவே அணு சக்தியில் வல்லரசாக உள்ள நாடுகள் விரும்பவில்லை எனவே தான் மேலை நாடுகளில் இருந்து பலத்த கூச்சலும் அதிக அழுத்தமும் கொடுக்கப்படுகிறது.

இதற்கு ஒரு காரணமாக சொல்லப்படுவது NPT, NSG என பல ஒப்பந்தங்களை,அவற்றில் கை எழுத்திடவில்லை எனில் யுரேனியம் இறக்குமதி செய்ய முடியாது. இந்தியாவில் யுரேனியம் என்ரிச்மெண்ட் செய்ய ஆரம்பித்து விட்டாலும் நமது தேவைக்கு உற்பத்தி இல்லை. எனவே வெளிநாடுகளை குறிப்பாக ஃபிரான்ஸ்,ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகளை சார்ந்திருக்க வேண்டும், அவையோ அமெரிக்கா சொல்வதை கேட்கும் நாடுகள்.எனவே தான் 1.2.3 ஒப்பந்தம் எல்லாம் போட்டு தாஜா செய்யப்பட்டது.

பிரான்ஸை குளிர்விக்க பிரான்ஸின் அரேவா அணுசக்தி நிறுவனத்துடன் 2008 இல் ஒரு ஒப்பந்தம் போட்டு ஜெய்தாப்பூரில் வேலை ஆரம்பிக்க பார்த்து அதுவும் பிரச்சினையில் இருக்கிறது.

இந்தியா காலா காலத்தில் திட்டங்களை நிறைவேற்றி இருந்தாலே பிரச்சினை இருந்திருக்காது, அல்லது சொந்தமாக யுரேனியம் என்ரிச்மெண்ட் செய்தே தேவையை பூர்த்தி செய்திருக்கணும். இதெல்லாம் செய்ய முடியாதுன்னா அணு உலையே வேண்டாம்னு சும்மா இருந்திருக்கணும், ஆனால் ஆடி அசைந்து வேலை செய்து எல்லாப்பக்கமும் சிக்கலாக்கிக்கொண்டாச்சு.ஒரு 2000 மெகா வாட் அணு உலை அமைக்க 5-7 ஆண்டுகளே மற்ற நாடுகளில் பொதுவாக ஆகும்.

அணுசக்தி அழிவு சக்தி வேண்டாம் என கிளம்பும் எதிர்ப்புகள், மற்றும் ஊடக பிரச்சாரங்களில் பெரும்பாலும் அணுசக்தி வியாபார நாடுகளின் கையே பின்னால் இருக்கும் என்பது பொதுவான ஒரு நியதி.

செல் போன் தயாரிக்கும் சாம்சங்க் நிறுவனம் தென் கொரியாவில் ஒரு முக்கியமான அணு சக்தி நிறுவனம், அவர்கள், அமெரிக்க, ரஷ்ய நுட்பம் எல்லாம் காப்பி அடிச்சு, தென் கொரியாவில் அணு உலையும் கட்டி இருக்காங்க ,இப்போ அதன் அடிப்படையில் அணு உலை விற்பனையும் செய்றாங்க, UAE இல் ஒரு அணு உலை அமைக்க ஒப்பந்தமும் போட்டுள்ளார்கள்.அமெரிக்கா ஒன்னுமே சொல்லக்காணோம் :-))

காரணம் தென் கொரியா அமெரிக்காவின் நட்பு வளையத்தில் இருக்கு, மேலும் அமெரிக்க எதிர்ப்பு நாடுகளுக்கு விற்பனை செய்யாது.வட கொரியா அணு ஆயுத சோதனை செய்யப்போகுதுன்னு சும்மாவே கொதிக்கும் அமெரிக்கா, தென் கொரியா அணு உலைக்கட்டியதை ஒன்றுமே சொல்லவில்லை, இதெல்லாம் நடந்து ரொம்ப நாளாச்சு,ஆனாலும் உலக அளவில் அணுசக்திக்கு எதிரா எதிர்ப்பு கிளம்பினால் பின்னாடி அமெரிக்கா இருக்கும் என்பது எழுதப்படாத விதி.

அணுசக்தி பயன்பாடு மற்றும் விற்பனை என்பது அமெரிக்க வழிக்காட்டுதலின் படி இருக்க வேண்டும் என்பதே பெரியண்ணனின் ஆசை, அதற்கு எதிராக போனால் ஆப்பு தான்.

இந்தியா அணு ஆயுதத்திற்காக தான் அணு உலை மீது ஆர்வம் காட்டுதுண்ணு சொல்கிறார்கள், ஆனால் இப்போது சுமார் 4320 டன் யுரேனியம் ஆண்டுக்கு செலவழிக்குது அதன் மூலம் கிடைக்கும் புளுட்டோனியத்தினையே முழுசா பிரிச்சு எடுக்க வசதியில்லை, எனவே பெரும்பாலான ஃப்யூல் ராட்கள் சும்மா பாதுகாக்கப்பட்டே வருது.

அணுசக்தி ஆபத்தானது தான் ஆனால் அதனை யாரோ ஒரு சில அணு வியாபாரிகள் சொல்வதால் எதிர்ப்பது சரியல்ல. அதுவும் 99% வேலை முடிந்த திட்டத்தினை எல்லாம் அரசு கைவிடுவது சாத்தியமில்லாதது.

இன்னும் சொல்லப்போனால் இந்தியா உரிய காலத்தில் முழு முதலீட்டையும் செய்திருந்தால் கூடங்குளம் திட்டம் 2000 இலேயே செயல்பட ஆரம்பித்திருக்கும். புதுசா 2011 இல் போராட கிளம்பியவர்களுக்கு பிம்பிளிக்கு பிளாக்கி தான் :-))

வெள்ளம் வந்த பின் அணையை மூடினால் நிற்குமா?
*******
#கடந்த ஆண்டு கூடன் குளம் அணு உலை குறித்து ஒரு மாற்றுப்பார்வை என ஒரு பதிவிட்டிருந்தேன் அதனை இங்கு காணலாம்.


# உலகில் மிக பாதுகாப்பான அணு உலை வடிவமைப்பு என்பதே இல்லை, மிக சிறிய அளவில் கதிர்வீச்சு கசிவு இருக்கவே செய்யும்,மேலும், பராமரிப்பு, பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தான் கையாண்டு ,விபத்தினை தவிர்க்க முடியும் என்பதனை விளக்கும் ஒரு பதிவு.


ஹி...ஹி எவ்ளோ நடு நிலைமையா எல்லாவற்றையும் சொல்லி இருக்கேன்னு என்னை யாரும் பாராட்ட வேண்டாம் ,திட்டாமல் இருந்தாலே போதும் :-))
----------
பின் குறிப்பு:

படங்கள்,தகவல் உதவி,

கூகிள்,விக்கி, DAE,NPCIL, இணைய தளங்கள்,நன்றி!
-----------------

62 comments:

கோவை நேரம் said...

வணக்கம்.தெளிவா சொல்லி இருக்கீங்க.இன்னும் கொஞ்சம் கூட அலசி இருக்கலாம் போல இருக்கிறது.அதன் சாதகம் பாதகம், எதனால் எதிர்க்கிறார்கள் என்பதையும்...
எவ்ளோ கோடிகள் செலவு செய்து கட்டபட்டு இருக்கு கூடங்குளம் அணு மின் நிலையம்..இதை ஆரம்பத்திலெயே தடுக்காமல் இப்போ ஏன் தடுக்கிறார்கள்.அதுவும் செயல்பட ஒரு மாதம் இருக்கும் போது..காரணம் சொல்லி இருக்கலாமே வவ்வால்.....

கோவை நேரம் said...

புதுசா டெம்ப்லேட் மாத்தி இருக்கீங்க...என்ன விஷயம்..?

சார்வாகன் said...
This comment has been removed by the author.
சார்வாகன் said...

வணக்கம் சகோ,
நல்ல பதிவு. நாம் இயற்கை ஆர்வலர் என்ற முறையில் அணு உலை தேவையில்லை என்னும் கருத்து கொண்டவர். அணு உலைக்கு மாற்றாக மையப்படுத்தாத உற்பத்தி,பரவல் சார்ந்து பல்ருக்கும் வேலையளிக்கும் ஆற்றல் தொழில் நுட்பத்தையே எதிர் பார்க்கிறோம்.

நமக்கு மதப்பற்று,சாதிப்பற்று இவையோடு வல்லரசு நாட்டுப் பற்றும் இல்லாத‌ படியால் அணு உலையைப் பற்றிய உண்மை சான்றுகள் அறியவே முயல்கிறோம்.

உங்கள் பதிவில் இருந்து பல விவரங்கள் அறிய முடிந்தாலும் ,அணு உலை பற்றிய விவரங்கள் மூடு மந்திரம் ஆகவே உள்ளன?

நாம் சான்றுகளையே ஏற்கிறோம். ஆகவே இதுவரை நடந்த விவரங்களை அரசு வெளிப்படையாக் அறிவித்தால் மட்டுமே அரசை நம்ப முடியும்!!

1. இந்தியாவில் உள்ள 20 அணு உலைகள் அமைக்க எவ்வளவு இடம் ,பணம்,பயன்படுத்தப் பட்டுள்ளது?

2.இடம் கையகப் படுத்திய போது நிலத்தில் வாழ்ந்த மக்களுக்கு என்ன நட்ட ஈடு வழங்கப்பட்டது?மீள் குடியேற்றம் பற்றிய தக்வல்கள்.

3.எவ்வளவு [மின்] ஆற்றல் இதுவரை உருவாக்கி பயன்படுத்தப் பட்டுள்ளது? ஒரு மெகாவாட்டுக்கான செலவு என்ன?

4. ஒரு அணு உலையின் பயன்பாட்டுக் காலம் எவ்வளவு? இந்தியாவில் அப்படி பயன்பாடு முடிந்தவை உண்டா?அவை பற்றிய விவரம்

5. இந்தியாவில் அணு உலைக் கழிவுகளை என்ன இதுவரை செய்து வருகிறார்கள்?

இவைகளுக்கு விடை ஒருவேளை அறிந்தாலும் இக்கேள்விகளே மிக இன்றியமையாதது.

அ)ஏன் கதிரவன் ஆற்றல ,உயிர் எரிபொருள் போன்ற ஆபத்தற்ற அதிக மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் முயற்சிகளை முன்னெடுப்பது இல்லை!!?

ஆ)மக்களுக்காக தொழில் நுட்பமா? தொழில் நுட்பத்திற்காக மக்களா??கூடங்குள மக்களிடன் கருத்துக் கணிப்பு[ஓட்டு] எடுத்து முடிவெடுகலாமே!!
தமிழகம் முழுதும் கூட நடத்தலாம்!!

எந்த பகுதியில் அதிக அணு உலை ஆதரவாளர்கள் இருக்கிறார்களோ அங்கேயே அணு உலை அமைக்க ஆதரவாளர்கள் இடம் நிச்சயம் இலவசமாக கூட வழங்குவார்கள்.வல்லரசு கனவு ஆச்சே சும்மாவா!!!!!!!!!!!!

இ)யுரேனியத்திற்கு வெளிநாட்டை சார்ந்து இருப்பது சுதேசி நாட்டுப் பற்றா???இந்தியாவில் கிடைக்கும் தோரியம் மூலம் அணு உலை அமைக்க முடியுமா?

நாம் சொல்வது இதுதான் எந்த இடத்தில் அணு உலை நாட்டுப் பற்றாளர்கள் அதிகம் இருக்கிறார்களோ அங்கே தோரியம் பயன்படுத்தும் அணு உலை அமைத்து வல்லர‌சு கன‌வு கண்டு புல்லரிக்கட்டும்!!!

நன்றி

Guru said...

Thank u very much brother . Cristal clear explain .

Guru said...

Thank u very much brother . Cristal clear explain .

நாய் நக்ஸ் said...

This template is ok....
Can read in
mobile......

:)
:)
:)

வவ்வால் said...

கோவை ஜீவா,

வாங்க,நன்றி நண்பா,

அணு உலையை பற்றி 1000 பக்கத்திற்கு கூட எழுதலாம், பல விடயங்களும் பல ஊடகங்களில் வந்தாச்சு, சாதக,பாதகம் எல்லாம்ம் பிரிச்சு அலசி இருக்காங்க, அதிலிருந்து சுருக்கமாக முக்கியமானவற்றை மட்டுமே தொகுத்திருக்கேன்.

விக்கி லீக்ஸ் வெளியிட்ட ஒரு ஆவணத்தில் இந்தியா ஏன் குர்ஸ்கோவ் கப்பலை வாங்கியது என்ற பகுதியில் அணு உலை ஒப்பந்தமும் ஒரு காரணம் என இருக்கு, முன்னர் படித்தது, சுட்டி தேட நேரமில்லை.

அணு உலை எதிர்ப்புக்கு காரணம் என்ன என்பதை தான் சொல்லி இருக்கேனே இன்னும் எப்படி சொல்வது?

இந்தியா அணுசக்தி உற்பத்தி நாடாக இருந்தவரையில் இத்தனை எதிர்ப்பில்லை, 1976 இலே அணு குண்டு கூட வெடிச்சு பார்த்தாச்சு,அதன் பின்னரும் பல அணு உலைகள் அமைத்தாச்சு. இப்போது அணு சக்தி தொழில்நுட்ப வியாபார நாடாக உருவாக போவதை தான் உலக நாடுகள் விரும்பவில்லை.

கூடங்குளம் அணு உலை ஒப்பந்தம் போடப்பட்ட காலத்திலேயே இந்திய அணு விஞ்ஞானிகளுக்கு ரஷ்யாவில் பயிற்சி ஆரம்பம் ஆகிடுச்சு, இப்போ அணு உலை செயல்ப்பட ஆரம்பித்த சில நாட்களில் ,இந்தியா அணு உலை தயாரித்து விற்க முற்படலாம் . அதனால் தான் NPT போன்றவற்றில் கையெழுத்திடாமல் இருக்கிறது.

அமெரிக்கா பயப்படுவது இரானுக்கு அணு உலை தயாரிச்சு கொடுத்திடுவோமோனு பயப்படுவதும் ஒரு காரணம்.

# டெம்ப்ளேட் மாத்துன்னு ஆள் ஆளுக்கு சொல்லிக்கிட்டே இருந்தாங்க, அதுவும் நக்க்ஸ் அண்ணே தான் ஓவரா குடைச்சல் :-))

-----------------
சகோ.சார்வாகன்ன்,

வாங்க,நன்றி!

அணு தேவையில்லை என நினைப்பவன் தான், மரபுசாரா எரிசக்தியினை பல இடங்களிலும் அறிவுறுத்தியே வருகின்றேன்.

ஆனால் எதிர்ப்பு தெரிவித்தாலும் வேலை நடக்கும் முன்னே தெரிவிக்க வேண்டும், முடிந்த பின் தெரிவித்தால் சாத்தியமில்லை, மேலும், இதனை ஒட்டி பல அரசியலும், திட்டங்களும் உள்ளது. எனவே அரசு உடனுக்குடன் ஒரு முடிவு எடுக்காது.

இந்திய அணு உலைகள் அமைக்க ஆன செலவு என்பது வெளியில் சொல்லப்படுவது ஒன்று உண்மையில் வேறு பல பெயர்களில் இன்னும் பல செலவுகள் செய்யப்பட்டே இருக்கிறது, எனவே அதனை எல்லாம் அரசு வெளியில் சொல்லாது.

வழக்கமான அரசு திட்டங்களின் போது வழங்கபடும் இழப்பீடு போன்றவையே நிலத்திற்கும் வழங்கப்பட்டிருக்கும்.

நீங்க கேட்ட பல கேள்விகளும் ,எல்லா வகையான திட்டங்களுக்கும் பொருந்தும்.

1956 இல் வடிவமைக்கப்பட்ட சிறிய அணு உலைகள் டிகமிஷண் செய்யப்பட்டு மூடப்பட்டுள்ளது.

ஸ்பெண்ட் ஃப்யூயல் ராட்கள் வழக்கம் போல நிலத்தடியில் சேமிக்கப்பட்டுள்ளது.தயாரிக்கும், மின்சாரம், யுரேனியப்பயன்ப்படு பதிவில் சொல்லி இருக்கிறேன்ன்.

அணு ஆயுதம் கூட முழு அளவில் தயாரிப்பதில்லை, 32 கிலோ புளுட்டோனியம் மட்டுமே ஆண்டுக்கு அணு ஆயுதமாக மாற்றும் திறனே நம்மிடம் உள்ளது,எனவே பலஆயிரம் கிலோ புளுட்டோனியம் கிடங்கில் சும்மா தான் கிடக்கிறது.

தோரிய அணு உலை பற்றிய ஆய்வு ஹோமிபாபா காலத்திலிருந்து நடக்கிறது இது வரையில் முழுசாக ஒன்றும் வடிவமைக்கப்படவில்லை, இப்போது ஒரு புரோட்டோ டைப் வெற்றிகரமாக செய்து முடித்து , வணிக ரீதியில் செயல்ல்பட கூடிய 300 மெ.வாட் தோரிய அணு உலையின் இரண்டாம் கட்டம் முடிந்துவிட்டது என செய்திகள் வருகின்றது,கல்பாக்கத்தில் தான் கட்டப்பட்டு வருகிறது. இன்னும் 4-5 ஆண்டுகளில் செயல்படும் என சொல்கிறார்கள், அடுத்தக்கட்ட வேலைக்கு 250 கோடி பணம் தேவை அரசிடம் கேட்டு இருக்கிறோம் என பேட்டிக்கொடுத்துள்ளார்கள்.

ஆண்டுக்கு கொஞ்சம் என நிதி ஒதுக்கி வேலை நடக்கிறது, தோரியம் அணு உலை முழுக்க இந்திய தொழில் நுட்பம் ,எனவே வெளிநாட்டுக்கும் விற்கலாம் என சொல்கிறார்கள்.

இந்திய அணுசக்தி துறை மின் உற்பத்தி மட்டும் அல்லாமல் ,வணிக ரீதியாக தயாரித்து விற்கும் அளவுக்கு முன்னேற வேண்டும் என திட்டம் வைத்துள்ளது. இன்னும் முழுசா எதையுமே செய்யவில்லை, ஆனால் அதற்குள் சில நாடுகளுக்கு அணு உலை அமைத்து தருகிறோம் என ஒப்பந்தம் போடுகிறார்கள், அமெரிக்க எதிர்ப்புக்கு இதுவும் ஒரு காரணம், வியட்நாமிற்கு கூட அணு உலை அமைத்து தர ஒப்பந்தம் போட்டிருக்கிறோம், உள்நாட்டிலேயே இன்னும் முழுசா வேலை செய்யவில்லை :-))

பலப்பிரச்சினைகளுக்கும் காரணம் அதிகாரிகளும்,அணு சக்தி விஞ்ஞானிகளின் அதிக நம்பிக்கையும், தவறான வாக்குறுதிகளும் காரணம் என நினைக்கிறேன்.
--------------------
குரு,

வாங்க,நன்றி!
-----------
நக்ஸ் அண்ணே,

வாங்க,நன்றி!

இந்த டெம்ப்லேட் தான் ஆரம்பத்தில இருந்துச்சு, இது நல்லா இல்லைனு ஒருத்தர் சொல்லி மாத்தி...ஒவ்வொன்னா மாத்தி மீண்டும் இதுக்கே வந்தாச்சு :-))
------------------

அஞ்சா சிங்கம் said...

அப்பப்பா இதை பற்றி இந்த மாதிரி கோணத்தில் நாங்கள் அலசி ஆராய்ந்து கடிச்சி துப்பி போர் அடித்து விட்டது ...
இதன் பின்னணியில் அமெரிக்கா இருக்கிறது என்பது அனைவரும் அறிந்த ரகசியம் தான் ..
ராக்கெட் தொழில் நுட்பம் விண்வெளி தொழில் நுட்பம் போன்றவற்றில் . இந்திய ரசியா கூட்டு எப்படி இருந்ததோ .அதே போல் அணுசக்தி துறையிலும் இருக்கும் .. பனிப்போர் காலத்தில் அணிசேரா நாடுகள் ,மூன்றாம் உலக நாடுகள் என்று குட்டி குட்டி நாடுகளை சேர்த்துக்கொண்டு . நடுநிலை வகிக்கிறோம் என்று அறிவித்து விட்டு கொல்லை புறமாக ரசியாவுடன் கை குலுக்கி கொண்டிருந்தார் நேரு ..............ரசியாவின் வீழ்ச்சிக்கு பிறகு அணிசேரா நாடுகளின் முக்கியத்துவம் இல்லாமல் போய் விட்டது இப்போது சார்க் நாடுகள் கூட்டமைப்பு என்று வைத்து கொண்டு நானும் ரவுடிதான் என்னையும் பஞ்சாயத்தில் சேர்த்துகொள்ளுங்கள் .என்பதுதான் இந்தியாவின் நிலைப்பாடு .
இந்தியாவின் வெளியுறவு கொள்கையை நன்றாக உற்று பார்த்தால் விலாங்கு மீன் மாதிரி இருக்கும் ஒரு பக்கம் தலையையும் மறு பக்கம் வாலையும் காட்டிக்கொண்டு இருக்கும் .....................

வவ்வால் said...

அஞ்சா ஸிங்கமே,

வாரும்,நன்றி!

//அப்பப்பா இதை பற்றி இந்த மாதிரி கோணத்தில் நாங்கள் அலசி ஆராய்ந்து கடிச்சி துப்பி போர் அடித்து விட்டது ...
இதன் பின்னணியில் அமெரிக்கா இருக்கிறது என்பது அனைவரும் அறிந்த ரகசியம் தான் ..//

அதே கதை தான் இங்கும், பல இடத்திலும் பின்னூட்டங்களில் குடுமி பிடி சன்டையே போட்டு போரடிச்சு போச்சு, அது என்னமோ தெரியலை அணு சக்தி வேண்டாம்னு சொல்றவங்க எல்லாம் நல்லவங்க, ஆனால் அணு சக்தியின் பின்னால் இருக்கும் அரசியலையும், யதார்த்தத்தையும் சொன்னால் மானிட குலவிரோதி போலவும் பார்க்கிறாங்க.

இந்தியாவின் நிலைப்பாடு அணுசக்தி உற்பத்தி என்பதையும் தாண்டி , ஒரு அணுசக்தி வியாபார நாடாக உருவாக ஆசைப்படுது, மேலும் நீர் சொன்ன விலாங்கு மீன் உத்தி தான், அதோடு அமெரிக்காவையும் பகைச்சுக்காம ,தனியா ஒரு சக்தியாகவும் ,மூன்றாம் நாடுகளிடையே பிஸ்தாவகவும் ஆக ஆசைப்படுது, கிட்டதட்ட ரஜினி முதல்வராக ஆசைப்படுவது போல, அவருக்கு யாரும் அரசியல் எதிரியாக (கலைஞர்,ஜெயா)இருக்கவும் கூடாதாம், ஆனால் அவரும் அரசியல் சக்தியாகனுமாம் :-))

ஆனால் அணு சக்தி வேண்டாம்னு சொல்றவங்க ,கூடங்குளத்தினை மட்டும் பார்க்கிறாங்க ,அதன் பின்னால் இருக்கும் அரசியலைப்பார்ப்பதில்லை, 3 பில்லியன் டாலர் மதிபினையும் தாண்டிய ஒரு நோக்கம் அதன் பின்னால் இருக்கு.

இப்போ கூட கல்பாக்கத்தில் 300 மெ.காவாட் தோரியம் அணு உலை 65% வேலை முடிந்து இருக்காம், இப்படி பல புதிய அணு உலைகள் ஏற்கனவே இருக்கும் அணு உலைகள் வளாகத்தில் சத்தம் போடாமல் கட்டப்பட்டு வருகிறது, யார் போராட்டம் நடத்துறா?

உண்மையான நடைமுறையினையும்,அரசியலையும் உள்ளப்படியாக சொன்னால் சண்டைப்போட ஒரு கூட்டமே ஓடி வரும் :-))

நாய் நக்ஸ் said...

@ bat

CHEERS WITH
KOZHUKKATTAI
SIDEDISH.....

:)
:)
:)

by
periyaarin
orey
seedan.....

குரங்குபெடல் said...

மிக மேலோட்டமான கட்டுரை . . .

கூடங்குளம் ஆரம்பித்த காலத்திலிருந்தே

எதிர்ப்பும் இருக்கு அண்ணே . . .

வருடத்திற்கு முன்பு வெளிவந்த

பாமரனின் புத்தர் சிரித்தார் படித்தது இல்லையா . . ?

"அதுவும் 99% வேலை முடிந்த திட்டத்தினை எல்லாம் அரசு கைவிடுவது சாத்தியமில்லாதது."

இந்த வாதம்

அப்பாவி மக்களை குண்டு வைத்து கொல்ல போறவன்

கடைசி நேரத்துல யோசிக்கும்போது . . .

"கஷ்டப்பட்டு குண்டு செஞ்சிருக்க அதனால வெடிச்சுதான் ஆகணும்கற "சொல்ற மாறி இருக்குEasy (EZ) Editorial Calendar said...

பகிர்வுக்கு நன்றி.......


நன்றி,
பிரியா
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

Katz said...

good work!

naren said...

வவ்வால்,

கூடங்குளம் போராட்டதின் பின்னால் இருக்கும் விடயத்தின் ஒரு பகுதியை நன்றாக அலசியது பதிவு. இதே அமெரிக்கா கூடங்குளம் அணுமின் நிலையத்தை கட்டியிருந்தால் இந்த அளவுக்கு எதிர்ப்பு வந்திருக்காது. போராட்டக்காரர்களுக்கு வரும் பணமும் நின்று போயிருக்கும். பாவாடை சாமியார்களும் ஆதரவு தந்திருக்க மாட்டார்கள்.

இதில் மெச்ச வேண்டியது தொழில் முறை போராட்டகாரரான உதயகுமாரைத்தான். தொழில்முறை போராட்டக்காரர்கள், உதயக்குமாரை ஒரு “கேஸ் ஸ்டடி”யாக படித்தால் நல்ல பயன் தரும். வருமானதிற்கு வருமானம் புகழுக்கு புகழ். இதில் வேடிக்கை என்னவென்றால் ஊடகங்கள் இரண்டு பக்கத்தை சொல்வதை விட்டு விட்டு போராட்டகாரர்களின் மாயையில் விழுந்து கிடப்பதுதான்.

அணு உலை வேண்டுமா வேண்டாம என்ற கேள்விக்கு......
அணு உலை தொழில்நுட்பம் இந்தியாவிற்கு தேவை. அதை வைத்து வியாபாரம் செய்வது இந்தியாவின் விருப்பம். இந்தியாவிற்கு அணுகுண்டு தேவை. தேவையில்லை என்பவர்கள் முதலில் சீனாவை நிறுத்தச் சொல்லுங்கள். அணு சக்தி வேண்டுமா என்பதற்கு, மற்ற சக்திகள் பூர்த்தி செய்யாத நிலையில் அணு சக்தியையும் ஒரு பகுதியாக, மிகுதியாக வைக்காமல், பார்த்துக்கொள்ளலாம்.
கூடங்குளம் தற்போது கட்டிமுடித்திருக்கும் சூழ்நிலையில் அதனை எதிர்ப்பது சரியாகாது. போராட்டக்காரர்களே இப்போது எங்களுக்கும் புகிஷிமோ பிறகு ஏற்படுத்தபட்ட 17 பாதுகாப்பு நிபந்தணைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற நிலைக்கு வந்துவிட்டார்கள்.
அணு உலை தேவையில்லைதான். ஆனால் தேவை என்று இருக்கும்போது அதை குறைந்த அளவே வைத்துக்கொள்ளலாம். புதிதாக கட்டப்படும் அணு உலைகளை, அணு சக்தியின் வேண்டாம் என்ற தற்போதிய நிலைப்பாட்டை பொருத்த பார்க்கலாம்.

மையப்படுத்தாத உற்பத்தி முறை, இந்தியாவிற்கு இந்தியர்களுக்கு பொருந்துமா என்பதையும் பார்க்க வேண்டும். தனிமனித சமுதாய ஒழுக்கத்தின் வெளிப்பாடே மையப்படுத்தாத உற்பத்தி முறை. நமக்கு எந்த காலத்தில் சமுதாய பொறுப்பு இருந்திருக்கிறது.

வவ்வால், என்னது இது, பாகிஸ்தானுக்கு காஷ்மீரின் ஒரு பகுதியையும், சீனாவிற்கு அக்‌ஷை ஷின்னையும் தாரை வார்த்து கொடுத்திட்டீங்களே. அந்த பகுதிகள் அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்தாலும் இப்படியா அப்பட்டமா தாரைவார்ப்பது. இந்தியாவின் வரைப்படத்தை கொஞ்சம் மாத்தவும்.
முதலில் உங்களை தேசதுரோக சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கணும்.))))

நன்றி

வவ்வால் said...

நக்ஸ் அண்ணே,

வழக்கமா பகலில் ,வெயிலில் சரக்கடிக்க மாட்டேன் ச்சியர்ஸ் சொல்லி அடிக்க வச்சிருவீங்க போல இருக்கே அவ்வ்வ்!

கொள்ளிக்கட்டையுடன் புள்ளையார் சுத்தி வாழ்த்துகள்!

இப்படிக்கு
உலகின் ஒரே நாத்திகன்!
---------

கு.பெ,

வாரும்,நன்றி!

அடியோட்டமாக எழுதுவது எப்படின்னு சொல்லித்தரவும் :-))

கூடங்குளம் திட்டம் என்பது அணு உலை மட்டுமல்ல ,அணு வியாபாரத்திற்கான ஒரு ஆரம்பம், இதனை இயக்கிக்காட்டினால் தான் ,இந்தியாவல் வெளிநாட்டில் வியாபாரம் பேச முடியும் , எனவே எப்படி அரசு கடைசி நேரத்தில் கைவிடும்?

நடை முறை என்ன என சொல்வதே எனது நோக்கம், அணு சக்தி மீதெல்லாம் காதலோ கள்ளக்காதலோ இல்லை!

//கூடங்குளம் ஆரம்பித்த காலத்திலிருந்தே

எதிர்ப்பும் இருக்கு அண்ணே . . .

வருடத்திற்கு முன்பு வெளிவந்த

பாமரனின் புத்தர் சிரித்தார் படித்தது இல்லையா . . ? //

இதே கதைய எல்லாம் சொல்றிங்க,ஆனால் நான் ஒரு கேள்வி கேட்டால் பதிலே சொல்வதில்லை, அதையே மீண்டும் கேட்கிறேன்,

அந்த ஆரம்பகால அணுசக்தி எதிர்ப்பாளர்கள் இன்றும் உயிரோடு தான் இருக்காங்க, ஏன் அவர்கள் இப்போராட்டத்தில் முன்னிறுத்தப்படவில்லை?

மேலும் இப்போராட்டத்தினை மாவட்ட அளவில் கூட பரப்ப யாரும் முயலவில்லை, சில கிராம மக்களை மட்டும் முன்னிறுத்தி போராடப்படுகிறது, அவர்களும் எங்கள் வாழ்வாதாரம் என்கிறார்கள், அப்படி எனில் அவர்களுக்கு ஒரு இழப்பீடு கொடுக்கப்பட்டால் எதிர்க்க மாட்டார்கள் என்பது தானே, அணுசக்தி அழிவு சக்தி என்பதனால் எதிர்க்கவில்லை சரியா?

இன்னும் நிறைய கேள்விகள் தொங்கிக்கொண்டு இருக்கிறது.
-------------

ஈசி நன்றி!
--------
katZ,

நன்றி!
---------

தி.தமிழ் இளங்கோ said...

கட்டுரையில் நல்ல விவரங்கள்.. போராட்டக்காரர்களின் உண்மையான நோக்கம் என்ன என்பதையும் அலசி இருக்கலாம்.

தமிழ் காமெடி உலகம் said...

உங்கள் பகிர்வுக்கு நன்றி...நல்ல தகவல்

நன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)

வவ்வால் said...

நரேன்,

வாரும்,நன்றி!

போராட்டத்தின் இன்னொரு பகுதியை ,மணல் மனிதர் விவகாரம் என முன்னரே பதிவு ஆக போட்டு இருக்கேன்,ஆனால் அம்மையாரே இப்போ நேரடியாக களத்தில் இறன்ங்கியாச்சு இனிமே அவர் செயல்பட மாட்டர் என நினைக்கிறேன்.

பொதுவாக அணு சக்தி வேண்டாம் என்ற புள்ளியில் ,சிலரும், சிலர் தூண்டலின் காரணமாகவும் எதிர்ப்பு என்ற நிலையில் ஓடிக்கிட்டு இருக்கு.

அமெரிக்க ,கனடா, பிரான்ஸ் உதவியுடன் 20 அணு உலைகள் அமைத்தாச்சு, இன்னும் சொல்லப்போனால் இப்போவும் ஆந்திர, ஹரியானாவில் அமெரிக்க நுட்பத்தில் அணு உலை அமைக்க ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டு இருக்கோம்.

இப்போதைய எதிர்ப்பினை பெரிதாக்க ரஷிய நுட்பம், மேலும், இந்தியா தனி வியாபாரியாக உருவாக கூடாது எனப்பல அரசியல் நடக்குது,யார்,யாரோட ஆதரவாலர்கள் என தெரியலை.

அமெரிக்கா சீனாவுக்கே தொழில்நுட்பம் வித்துக்கிட்டு தான் இருக்கு, ஒரு தடவை வாங்கிட்டு அவங்க அதை போல தயாரிச்சுப்பாங்க :-))

சீனாவில் அணு சக்தி திட்டத்தில், அமெரிக்கா,ஃபிரான்ஸ்,கனடா,ஜப்பான் எல்லாம் வியாபாரம் செய்துக்கொண்டு தான் இருக்காங்க.

அமெரிக்காவோட கவ்வலை எல்லாம் அவங்க எதிரி நாடுக்கு நாம அணுசக்தி திட்டம் வித்துடக்கூடாது அவ்ளோ தான்.

மேப் என்ன நானா வரைந்தேன், இணையத்தில கிடைச்சது போட்டேன், விக்கியில் இருக்கும் மேப் சரியாக வரவில்லை, இப்போ மாத்திட்டேன்,சரியான மேப் ஆ சொல்லும்.

-----------

தமிழ் இளங்கோ சார்,

வாங்க,நன்றி!

இதில் பல அரசியல் இருக்கு ,போராட்டம் எந்த அரசியலின் அடிப்படையில்னு ஓரளவு தான் சொல்ல முடியும். ஏற்கனவே கடந்த ஆண்டே ஒரு பதிவு இது பற்றி போட்டாச்சு, அதில் சொல்லாதவற்றை இப்போ சொல்லி இருக்கேன்.

---------
தமிழ் காமெடி,

நன்றி!

விளம்பரங்கள் ஓய்வதில்லை :-))

நாய் நக்ஸ் said...
This comment has been removed by the author.
நாய் நக்ஸ் said...
This comment has been removed by the author.
வவ்வால் said...

நக்ஸ் அண்ணாத்த,

என்ன கருமாந்திரம், என்ன போதும்? எதாவது புரியிற போல சொல்லுறாரா?

ஓவரா மப்பா?

நாய் நக்ஸ் said...
This comment has been removed by the author.
வவ்வால் said...

அட என்ன கூத்துப்பா இது, ஒன்னியுமே பிரியலை...என்னமோ தேவரகசியாம பேசிக்கிட்டு இருக்கரே,

நக்ஸ் அண்ணாத்தை ரொம்ப மப்பாயிட்டா அப்படியே குப்புற அடிச்சு படுக்கவும், மி... எஸ்கேப்பு ...

நாய் நக்ஸ் said...
This comment has been removed by the author.
வவ்வால் said...

யோவ் நக்ஸ்,

//only man.......i want..//

அவனா நீ...னு வடிவேலு கதையாக்குறீர்.

என்ன எழவோ... இங்கே அது எல்லாம் நடக்காது,நான் கடுப்பாகும் முன் எடத்தை காலி செய்யும்.

குறும்பன் said...

அணுமின் உலை ஆபத்தானது அதனால் ஏதாவது பாதிப்பு வந்தால் அரசாங்கம் கையை விரித்துவிடும், 50 ஆண்டுகளுக்கு மேல் போராடி சிலருக்கு சிறிய நட்ட ஈடு கிடைக்கும். மிகப்பெரிய ஆலை விபத்தான போபால் நச்சு வாயு கதை நமக்கு தெரியும். அதனால் மிக அதிகம் பாதிக்கப்பட போவது கூடங்குள சுற்றுப்புற மக்கள் தான்.
பன்னாட்டு அரசியலே இந்த அணு உலையை இயங்க வைக்க நம்ம அரசாங்கம் வாக்குறுதிகளை அள்ளி தெளிக்க காரணம் (நன்றி வவ்வால்). இதில் பல அரசியல் இருந்தாலும் மக்கள் அச்சத்தை போக்க அரசு வெளிப்படையா சிலவற்றை சொல்லனும். நிப்பானில் சுனாமியால் புகுசிமா அணுஉலைக்கு பாதிப்பு ஏற்படாவிட்டால் இந்த அளவு எதிர்ப்பு இருந்திருக்காது என்பது உண்மை. அப்ப அதான பரபரப்பு செய்தி. செர்னோபில் மோசமான விபத்தா இருந்தாலும் அது பற்றி மக்களுக்கு அவ்வளவா தெரியாது. அங்க சுனாமி வர வச்சதும் அமெரிக்கா தான் என்று சிலர் சொல்லக்கூடும் :)). 1984ல் அடிக்கல் நாட்டி தொடங்கப்பட்ட திட்டத்தை நாம் வெகு விரைவாக 2012ல் செயல்பாட்டுக்கு கொண்டு வரும் போது இப்படி போராட்டம் வரும் என்று தெரியாம போச்சே :)). அணு உலைக்கு எதிரானவர்கள் எல்லாம் தேச துரோகிகள், அமெரிக்க கைக்கூலிகள், நாட்டு முன்னேற்றத்தை விரும்பாதவர்கள் என்றும் அணு உலைக்கு ஆதரானவங்க தேச பக்தர்கள், நாட்டு முன்னேற்றத்தை விரும்புபவர்கள் என்றும் கூறப்படும் செய்தி உங்களுக்கு தெரியாதா.

ஜெய்தாப்பூரின் அணுஉலையை எதிர்த்தும் போராட்டம் நடக்கிறது.
ஐயம்- உருசியா கட்டிக்கொடுத்த கூடங்குளம் அணுஉலையை அச்சுதானந்தன் ஏன் எதிர்க்கனும்? அச்சு அமெரிக்க ஆளாயிட்டார்ன்னு சொல்லாதிங்க :) இந்த அணுஉலை முதலில் கேரளாவில் கட்டப்படுவதாக இருந்ததாகவும் அங்கு எதிர்ப்பு இருந்ததால் இங்கு வந்ததாகவும் சொல்லப்படுவது உண்மையா என்று தெரியவில்லை.

நம்ம நாடு ஏன் இத்திட்டத்தை செயல்படுத்தியே ஆகனும் என்று முரண்டுபிடிக்குதுன்னு நீங்கள் விலாவாரியா சொன்னதால நிப்பான், யெர்மனி போன்ற நாடுகள் ஏன் அணுஉலையை மெதுவாக கைவிட முடிவு செய்துள்ளன என்ற செய்தியை இங்கு சொல்வது சரியல்ல. தெரிந்து கொள்ள.
http://www.climatespectator.com.au/commentary/nuclears-heavy-double-blow - http://www.bellona.org/articles/articles_2012/Russia_reveals_dumps - http://www.bbc.co.uk/news/world-europe-13595171 - http://www.bbc.co.uk/news/world-europe-13592208 -

இந்தியாவின் வரைபடம் தவறாக உள்ளது.

குட்டிபிசாசு said...

வவ்வால்,

நான் சொல்லவந்த சில தகவல்களை நரேன் சொல்லிவிட்டதால், எனக்கு வேலை மிச்சம். அணுசக்தித்துறையில் இந்தியா பல ஆண்டுகளாக ஆராய்ச்சி முதலீடுகளை செய்துவருகிறது. ஆதலால் அணுசக்தியை முழுமையாக தவிர்க்காமல் ஓரளவிற்கேனும் பயன்படுத்திக் கொள்வதே சரி. ஆனால் அவற்றிற்குரிய பாதுகாப்பு குறித்த கேள்விகள் கேள்விகளாகவே இருக்கின்றன. இந்தியாவைப் பொருத்தவரை இதுபோன்ற அணு உலை பாதுகாப்பில் பெருதும் கவனக்குறைவாகவே இருந்துவருகிறது. மற்றபடி உலையில் உபபொருளாக கிடைக்கும் புளுடொனியத்தைப் பிரித்தெடுக்கும்முறை அதிக கதிர்வீச்சும் அதிக மில்லியன் பணச்செலவும் உடையது. பிழைத்தால் விபத்து பெரியதாக இருக்கும். இதற்காக கல்பாக்கத்தில் KARP என்றொரு பிரிவு ஏற்கனவே இயங்குகிறது.

கல்பாக்கத்தில் FBTR செயல்படுத்திவந்து, தற்போது PFBR கட்டிமுடிவடையும் தருவாயில் உள்ளது. (சுனாமியின் தாக்கத்தால் இதன் கட்டுமானப்பணி கொஞ்சம் பாதிக்கப்பட்டது).

தற்போது நடக்கும் போராட்டம் சரி? தவறா? என்பது சொல்ல முடியவில்லை. அணு உலை கட்டிமுடிக்கும் தருவாயில் போராட்டம் பெரிய அளவில் கிளம்பியுள்ளது சந்தேகத்தை வரவழைக்கிறது.

இந்தியாவின் அணுசக்தி வியாபாரத்தைத் தாண்டி மக்களுக்கான பயன், நம் நாட்டிற்குப் போதுமான மின்சாரத் தேவை என்ன என்பதையும் பார்க்க வேண்டுமே!

*************

நம்ம மோட்டர் மவுத் கூட இது பற்றி ஒரு காமெடிப்பதிவு போட்டு இருக்கு. ரொம்ப டென்ஷனாக இருந்தால் படித்து சிரித்துவிட்டு வரவும்.

naren said...

வவ்வால்,

இந்தியாவின் எல்லைகளை பச்சை நிறமாக்கிட்டீங்களே.
இந்தியாவின் கொண்டை பாதி நம் கையில் இல்லையென்றாலும், கொண்டை நம் கையில் இருப்பது போல வரைவது, தற்பெருமைக்கு நல்லது.

நன்றி.

வவ்வால் said...

குறும்பன்,

விரிவா ஒரு கருத்திஅ சொல்லி இருக்கீங்க, ஆனால் கூடங்குளம் அணு உலை வேண்டுமா,வேண்டாமன்னு சொல்லவில்லையே,தெளிவா ஒரு வார்த்தையில் ஆம் ,இல்லை சொல்லிட்டா, அதுக்கு ஏற்றார்ப்போல ஒரு பதில் சொல்வேன், ஏன் எனில் இந்த விடயத்தில் நான் ஒரு நடுநிலைவியாதி :-))

கேரளாவில் வேண்டம் என சொன்ன திட்டம் தான், அச்சு இப்படி செய்ய அவர் மீது விழுந்த கொலைப்பழி,அதற்கு பொலிட் பீரோவும் ஒன்றும் சொல்லவில்லை,எனவே காங்கிரசை சிக்கலில் மாட்ட இப்படி ஒரு முடிவு.

ஒரு நல்ல மேப் எங்கே இருக்குன்னு சொன்னிங்கன்னா எடுத்துப்போட்டுப்பேன்.

-----------

குட்டிப்பிசாசு,

இந்தியா நீண்ட நாட்களாக அணு ஆய்வு மற்றும் மின் உற்பத்தியில் ஈடுபட்டு வந்தாலும் எல்லாம் பிர நாட்டு உபகரணங்கள், நாம் சொல்வது எல்லாம் நாமே செய்வது போல. இப்போதைய கூடங்குளம் செயல்ப்பாட்டுக்கு வந்தால் இந்தியாவுக்கு அடுத்த கட்ட உயர்வு கிடைக்கும்.

எந்த ஒரு வளர்ந்த நாட்டிலும் 200 மெ.வாட் உலை எல்லாம் செயல்பாட்டில் இல்லை, இது வரைக்கும் ஒரு சில 500 மெ.வாட் மற்றவை எல்லாம் 150, 200 மெ.வாட் உலைகளே.கூடங்குளம் மட்டுமே 1000 மே.வாட் உலைகளை கொண்டுள்ளது, எனவே தயாரித்து விற்க வசதியாக இருக்கும்.

ஃபாஸ்ட் பிரீடர் எனப்படும் தோரியம் ரியாக்டர் வேலை இதோ ,அதோ என பல ஆண்டுகளாக போய்க்கொண்டு இருக்கிறது,கல்பாக்கத்தில் 65 சதவீத வேலை மட்டும் முடிந்திருப்பதாக செய்தி 2015-17 இல் உற்பத்தி செய்யுமாம்.

//மக்களுக்கான பயன், நம் நாட்டிற்குப் போதுமான மின்சாரத் தேவை என்ன என்பதையும் பார்க்க வேண்டுமே!

//

அப்படியான கணக்கீட்டில் இந்தியாவில் ,சாலை,ரயில் திட்டங்கள் கூட போடுவதில்லை.காரனம் எல்லா திட்டங்களுக்கும் மிக சொற்பமாகவே தொகை ஒதுக்குவது வழக்கம், எனவே மெதுவாக நடைபெறும்.

சீனாவை ஒப்பிடக்கூடாது என சிலர் நினைக்கலாம், ஆனால் ஒப்பிட்டே ஆக வேண்டிய நிலை, எல்லா அறிவியல் திட்டங்களிலும் நமக்கு பின்னரே ஆய்வுகளை செய்ய ஆரம்பித்த சீனா நம்மை விட முன்னேறிய நிலையிலே இருக்கிறது, காரணம் இவ்வளவு நிதி, இத்தனைக்காலம் செய்ய வேண்டும் என்றால் ,செய்து முடித்து இருப்பார்கள்.

ஜனநாயகம் மெதுவாக தான்ன் செய்யும் என்றால் , எவ்வளவு மெதுவாக என ஒரு கேள்வி இல்லையா?

5 ஆண்டுகளில் முடிய வேண்டியது 10 ஆண்டு ஆனாலும் சரி எனலாம் 20 ஆண்டு ஆகிறது ஆனாலும் வேலை முடியவில்லை என்றால் என்ன சொல்வது?

---------

மோட்டார் மவுத்து எது செய்தாலும் காமெடி தான் :-))
-----------

நரேன்,

அணு உலைகள் இருப்பது போல மேப் எல்லாம் இப்படித்தான் இருக்கு, DAE,தளத்தில் இதை விட கொடுமையா ஒரு மேப் இருக்கு :-))

பிபிசி இணைய தள மேப்பில் தெளிவா காஷ்மீரின் பாதி இல்லை :-((

இனிமே நானே ஒரு மேப் உருவாக்கினால் தான் உண்டு போல.

உபகாரி said...

@வவ்வால்,

http://www.downtoearth.org.in/dte/userfiles/images/Earth_quake_map.jpg

நாய் நக்ஸ் said...

அட...நேத்திக்கு மோன நிலையில் இருந்தேன்....என்ன கமெண்ட்
போட்டேன் என்றே தெரியவில்லை...
கமெண்ட் நான் எப்ப போட்டேன்...???
சரி வவ்வால்...கமெண்ட் நீக்க எனக்கு ஆப்சன் காட்டலை...நீங்களே நீக்கிவிடவும்...
புரிதலுக்கு நன்றி...


@ வவ்வால்....சாரி...

நாய் நக்ஸ் said...

இப்ப டெலீட் பண்ண முடியுது...நீக்கிட்டேன்...

வவ்வால் said...

நக்ஸ் அண்ணாத்த,

வாங்க, நல்லா இருக்கு உங்க மோனம் ,அதுல தீய வச்சு கொளுத்த.

அணு உலைப்பத்தி பேசிட்டு இருக்கும் போது சரக்கு அடிச்சுட்டு மொக்கை போடுறாங்கன்னு சொல்லிடுவாங்க அதான் சொன்னேன்.

நான் எல்லா பின்னூட்டமும் வெளியிடுவது,மட்டுறுத்தல் இல்லை ,ஓவொருவர் ஒவ்வொரு மாதிரி புரிந்து கொள்ளக்கூடும்.

நாய் நக்ஸ் said...

:)))))))))))

ராஜ நடராஜன் said...

இது வரை யாரும் சொல்லாத மாற்றுப்பார்வை.

வவ்வால் said...

உபகாரி,

செய்ஸ்மிக் ஸோன் மேப்பும் பார்த்துள்ளேன்,அதில் என்ன ? இந்தியா முழுக்க ஏதேனும் ஒரு செய்ஸ்மிக் ஸோனில் தான் இருக்கும்.அங்கு அதிகம் பாதிப்பு இல்லாத இடம் என புவியியல் ஆய்வு செய்து தான் இடம் தேர்வு செய்வார்கள்.

கடசியில் வந்து வேண்டாம் என்பதும், இதுக்கு முன்னரே இருக்கும் கல்பாக்கத்தை மூடு என சொல்லாமல் இருப்பதும் ,இது ஒரு குழுவின் போராட்டமாக காட்டுகிறது,அணுசக்திக்கு எதிரானதாக இல்லை.

நடுவில நாம தான் பேசிக்களைக்கிறோம்!

வவ்வால் said...

நக்ஸ் அண்ணாத்த,

:-)))))

ஸ்கிரின்ஷாட் உஷார் :-))

-------

ராச நடராசர்,

வாங்க,நன்றி!

இது வரை யாரும் சொல்லாத பின்னூட்டம் :-))

உபகாரி said...

@வவ்வால்,
நீங்கள் அணு உலைகள் குறிக்கப்பட்ட தெளிவான இந்திய வரைபடம் கிடைக்கவில்லை என்று சொன்னதால் நில அதிர்வு மண்டலம் பற்றிய கூடுதல் தகவலும் இருந்தது பொருத்தமாக இருக்கும் என்று அந்த இணைய பக்க இணைப்பை பின்னுட்டம் இட்டுருந்தேன்.

Anonymous said...

அணுசக்தி ஆபத்தானது தான் ஆனால் அதனை யாரோ ஒரு சில அணு வியாபாரிகள் சொல்வதால் எதிர்ப்பது சரியல்ல. அதுவும் 99% வேலை முடிந்த திட்டத்தினை எல்லாம் அரசு கைவிடுவது சாத்தியமில்லாதது.
//

Same side goal...

ஏன்னா தலைவா நீங்க...கோடிக்கணக்கிலே செலவளிச்சதனால உங்க பொண்ணுக்கு பார்த்த மாப்பிள்ளை ஒரு பொம்பள பொறுக்கி...கண்ட வியாதியும் உண்டுன்னு கடைசில தெரிஞ்சா இவ்வளவு செலவு செய்துட்டோம்னு பேசாம கல்யாணம் பண்ணி வச்சிருவீங்க போல...

வவ்வால் said...

உபகாரி,

இங்கே மேப் சரியா இல்லைனு பேசினது, எல்லை பிரச்சினையை, எந்த மேப்பில் எல்லை சரியா காட்டி இருக்குன்னே தெரியலை, நரேன்,குறும்பன் சொன்னதை கவனிக்கலையா?

செய்ஸ்மிக் ஸோன் மேப்பும் எல்லை சரியான்னு தெரியலை, மேலும் கலர் கலராக குழப்புவது போல இருக்கவே வேண்டாம் என விட்டுவிட்டேன்.
---------

ரெவரி,

வாங்க, நன்றி!

எனக்க்கும் அணு சக்தி மீது நம்பிக்கை எல்லாம் இல்லை, அதனை ஆதரிக்கவும் இல்லை, ஆனால் எதிர்ப்பினை காலம் கடந்து காட்டுவதாகப்படுகிறது, மேலும் இப்போராட்டமும் சரியா வழிகளிகளோ, தெளிவான ,ஒளிவு மறைவற்ற பொதுவான அணுசக்தி எதிர்ப்பு போராட்டமாக படவில்லை.

# கடந்த காலங்களில் அணுசக்திக்கு எதிராக போராடியவர்கள் இன்றும் உயிரோடு தான் இருக்கிறார்கள் ,ஏன் அவர்கள் இதில் கலந்து கொள்ளவில்லை,அல்லது புறக்கணிக்கப்படுகிறார்களா?

# பெரிய அளவில் மக்களை ஒருங்கிணைக்காமல் , குறிப்பிட்ட மக்கள் ,வாழ்வாதாரம் என சிறிய வட்டத்தில் நின்றுகொண்டு அணுசக்தி, அரசு என பெரும் சக்திகளை எதிர்ப்பது சரியான வழியா?

# நீங்க சொன்ன திருமண உதாரணத்திற்கே வருவோம், பொண்ணு பார்த்து பேசி முடிச்சு ,கல்யாண மேடையில் உட்கார்ந்து தாலிக்கட்ட போகும் போது ,பொண்ணு மூக்கு கோணலா இருக்கு ,கல்யாணம் வேண்டாம்னு சொன்னா , சரின்னு கல்யாணத்தினை நிறுத்திடுவாங்களா?

கல்யாணத்திற்கு என செலவிடுவதில் சிறிது தான் விரயம் ஆகும், நகை,சீர்வரிசை, இன்ன பிற எல்லாம் அப்படியே தான் இருக்கும்.

அதே மண்டபத்திலேயே இன்னொரு மாப்பிள்ளை,அல்லது பெண்ணை கூட உடனே ஏற்பாடு செய்து திருமணம் செய்யவும் முடியும், எனவே கல்யாணத்தினை ஒப்பீடாக சொல்லிக்கொண்டு இருப்பது சின்னப்புள்ளை தனமா இருக்கு :-))

Anonymous said...

வவ்வால்ஜி..

#ஆனால் எதிர்ப்பினை காலம் கடந்து காட்டுவதாகப்படுகிறது,

~ எதிர்ப்பு எப்பவுமே இருந்துட்டு தான் இருக்கு...என்ன இவங்க உலை கட்டி முடிக்குமுன் முதல்ல எதிர்த்தவங்க பாதி பேர் டிக்கட் எடுத்துட்டு போய்ட்டாங்க...

#மேலும் இப்போராட்டமும் சரியா வழிகளிளோ, தெளிவான ,ஒளிவு மறைவற்ற பொதுவான அணுசக்தி எதிர்ப்பு போராட்டமாக படவில்லை.

~எப்பவுமே கால் மேல கால் போட்டு குறை சொல்றது சுலபம்...இத்தனை வருஷம் ஆனாலும் காந்தி அதை அப்படி பண்ணியிருக்கலாம்..இப்படி பண்ணியிருக்கல்லாம்னு சொல்றவங்க தான் அதிகம்...
இது அவங்க எடுத்துக்கிட்ட வழி...வல்லரசு...நம்ம மத்திய...மாநில அரசு...எல்லாத்தையும் அமைதியா இவ்வளவு நாள் எதிர்கொள்ளும் இந்தப்போராட்டம் என் வாழ்வில் கண்டிராத ஒன்று...ஒரு வேளை நீங்க நேர்ல போய்...காசு எங்க இருந்து வருது...எப்படி ஆட்கள் இணைகிறார்கள் இப்படிலாம் பார்த்திருந்தா நீங்க இப்படி ஒளிவு பற்றிலாம் பேச மாட்டீங்க...

Anonymous said...

# கடந்த காலங்களில் அணுசக்திக்கு எதிராக போராடியவர்கள் இன்றும் உயிரோடு தான் இருக்கிறார்கள் ,ஏன் அவர்கள் இதில் கலந்து கொள்ளவில்லை,அல்லது புறக்கணிக்கப்படுகிறார்களா?

~நல்ல கேள்வி...அவங்க கிட்ட கண்டிப்பா கேளுங்க...அவங்க நிலை மாறி இருக்கானு கேளுங்க...

# பெரிய அளவில் மக்களை ஒருங்கிணைக்காமல் , குறிப்பிட்ட மக்கள் ,வாழ்வாதாரம் என சிறிய வட்டத்தில் நின்றுகொண்டு அணுசக்தி, அரசு என பெரும் சக்திகளை எதிர்ப்பது சரியான வழியா?

~ அது அவர்கள் தப்பா இல்லை கை கட்டி கால் மேல் கால் போட்டு வியாக்கியானம் பேசும் நம் தப்பா?

Anonymous said...

# நீங்க சொன்ன திருமண உதாரணத்திற்கே வருவோம், பொண்ணு பார்த்து பேசி முடிச்சு ,கல்யாண மேடையில் உட்கார்ந்து தாலிக்கட்ட போகும் போது ,பொண்ணு மூக்கு கோணலா இருக்கு ,கல்யாணம் வேண்டாம்னு சொன்னா , சரின்னு கல்யாணத்தினை நிறுத்திடுவாங்களா?

~மூக்கு கோணல் இல்லைங்க..முற்றிலும் கோணல்...

-NO MOCK EVACUATION DRILL...
-CONFLICTING PLANS TO HANDLE ATOMIC WASTE...
-THOSE 17 BASIC THINGS STIPULATED BY THE ATOMIC COMM'S COMMITTEE TO BE MET BEFORE GOING LIVE...

இப்படி அடுக்கிட்டே போகலாம்...

Please read my other post for the rest...

http://reverienreality.blogspot.com/2011/10/open-letter-to-mrmanmohan-singh.html

குறும்பன் said...

Nuclear power corporation of india limited ( http://164.100.50.51/main/RTI_Doc01.aspx )
http://www.downtoearth.org.in/content/how-vulnerable-are-indias-nuclear-power-plants-disaster
http://www.world-nuclear.org/info/inf53.html
http://ibnlive.in.com/news/india-nuclear-and-seismological-map/146125-3.html ---
இந்த தொடுப்பில் முழு இந்தியாவும் அணுஉலைகளும் இருக்கு. புடிச்சி போடுங்க.

இராச தந்திர முறையில் சொன்னா கேட்கமாட்டீங்களே :)). புசுக்கு அண்ணணா இருக்கீங்களே :). நான் மாந்தருக்கு நாசம் விளைவிக்கும் அணுஉலைகளுக்கு எதிரானவன். கூடங்குளத்திற்கு எதிரானவன். 5 அல்லது 6 ஆண்டுகளுக்கு முன் உதயகுமாரை சந்தித்துள்ளேன். அப்போது அவர் இந்தியாவில் கல்வி பயிற்றுவித்து வந்தார். படித்தவர்கள் கல்வி சேவையில் ஈடுபட்ட வேண்டும் அதன் மூலம் தான் சமூக புரட்சி\மாற்றம் முடியுமென்றார். அவர் அமெரிக்காக்கிட்ட காசு வாங்கிட்டு தான் செயல்படறாருன்னு சொல்றத நம்ப முடியவில்லை. தெரிந்தால் சொல்லலாம் இல்லைன்னா அவதூறு சொல்லாம இருக்கனும். அணு அறிவியல் மேதை அமைச்சர் நாராயணசாமி சொல்றத சொல்லக்கூடாது. உதயகுமார் இந்த அளவு மக்கள் ஆதரவு கிடைக்குமுன்னு நினைச்சிருக்கமாட்டார். மக்கள் இவரை நம்பி களத்தில் குதிச்சிருக்காங்க. அதை உடைக்க நாராயணசாமி வகையறாக்கள் முயன்றாலும் மக்கள் இவர் மீது நம்பிக்கையை இவர் இழக்கவில்லை.
எளிதில் உணர்ச்சிவசப்படும் மீனவர்களை இத்தனை நாளா வன்முறையை மறந்து அறவழியில் போராடுவது வைப்பது என்பது எளிதல்ல. இது காசு கொடுத்தாலும் நிறைவேறாதது (நாராயணசாமி வகையறாக்களுக்கு). இஸ்ரேலை நிறுத்தச்சொல்லு - ஈரான், இந்தியாவ நிறுத்தச்சொல்லு - பாக்கிஸ்தான், சீனாவ நிறுத்தச்சொல்லு - இந்தியா, அமெரிக்காவ நிறுத்தச்சொல்லு - சீனா. அமெரிக்கா இருசியா எல்லாம் நிறுத்தற ஆளுக்களா. நம்ம மக்களுக்கு எது நன்மையோ அதை தான் நாம செய்யனும். \பெரிய அளவில் மக்களை ஒருங்கிணைக்காமல் , குறிப்பிட்ட மக்கள் ,வாழ்வாதாரம் என சிறிய வட்டத்தில் நின்றுகொண்டு அணுசக்தி, அரசு என பெரும் சக்திகளை எதிர்ப்பது சரியான வழியா?\ சரியான முறையே. ஏன் அவர்கள் வருகிறார்கள் என்றால் பாதிக்கப்படபோவது அவர்கள் தான் மேலும் பெரிய அளவில் என்றால் ஆற்றல் விரையமாகிவிடும். \ கடந்த காலங்களில் அணுசக்திக்கு எதிராக போராடியவர்கள் இன்றும் உயிரோடு தான் இருக்கிறார்கள் ,ஏன் அவர்கள் இதில் கலந்து கொள்ளவில்லை,அல்லது புறக்கணிக்கப்படுகிறார்களா? \ - அவர்கள் போராட்டத்தில் இல்லை என்று என்னால் உறுதியாக சொல்ல முடியாது. மேலும் உதயகுமார் தலைமை ஏற்று இருப்பதால் செய்திதாள்களில் அவர் பெயர் மட்டுமே வருகிறது. முன்பு திமுக அணுஉலையை எதிர்த்தது அப்ப வைகோ திமுக. இப்ப திமுக அணுஉலையை ஆதரிக்கிறது. அப்பவும் இப்பவும் வைகோ அணுஉலையை எதிர்க்கிறார்.\நீங்க சொன்ன திருமண உதாரணத்திற்கே வருவோம், பொண்ணு பார்த்து பேசி முடிச்சு ,கல்யாண மேடையில் உட்கார்ந்து தாலிக்கட்ட போகும் போது ,பொண்ணு மூக்கு கோணலா இருக்கு ,கல்யாணம் வேண்டாம்னு சொன்னா , சரின்னு கல்யாணத்தினை நிறுத்திடுவாங்களா?\ பொண்ணுக்கு மூக்கு கோணலா இருந்தா திருமணம் நின்று விடும். அத்திருமணத்திற்கு வந்த பொண்ணை யாராவது கட்டிக்க முடியும். ஆனா பொண்ணு வயசுக்கு வரலைன்னு தெரிஞ்சா எவன் கட்டிக்குவான். சிரிக்காதிங்க இந்த கதையை(உண்மையை) நான் கண்டுள்ளேன். வயசுக்கு வந்தபின் வான்னு சொல்லி பொறந்த வீட்டுக்கு அனுப்பிட்டாங்க. இதுக்கு இப்படி இருந்தா எப்படின்னு நிறைய காட்டுகள் சொல்லலாம் அதனால இக்கதையுடன் இதை பற்றி பேசுவதை நிறுத்திக்கிறேன்.

வவ்வால் said...

ரெவரி ,

உங்களுக்கு உங்கள் பதிவில் பதில் சொல்லியுள்ளேன்.

-------

குறும்பன்,

நான் பொது மக்களில் மனதில் இருப்பதை சொன்னால் உங்களுக்கு புரியலைனா எப்படி? நானும் ஒரு இயக்கத்து ஆசாமி போல அடிச்சு பேசினால் தான் புரியும் என்றால் ,அப்படியே பேசிட்டு போகலாமே?

2005 இல் பேசினிங்க என சொல்கிறீர்கள், ஏன் அப்போதெல்லாம் அவருக்கு இந்த விழிப்புணர்வு ,இல்லை தீவிரம் இல்லை?

அப்போ அவரு எழுத படிக்க தெரியாம இருந்தாரா?

நீங்க அணு சக்திக்கு எதிரானவர்னு சொல்வதை நம்புறேன், எனக்கு தெரிஞ்சு , நீங்க இதுக்கு முன்ன பேசினதை இணையத்தில் நான் பார்க்கவில்லை.

இப்போ ஒரு 2000 அதிக பட்சம் 5000 பேரு தான் போராடுறாங்கன்னு வச்சிக்கலாம்,அணு உலை வெடிச்சா அவங்களுக்கு மட்டும் தான் பாதிக்குமா அப்போ?

மத்தவங்கள் எல்லாம் வந்தா சக்தி வீணா போயிடுமா? அப்புறம் ஏன் நீங்க எல்லாம் பேசிக்கிட்டு சக்தி வீணா போயிட போவுது :-))

//அவர்கள் போராட்டத்தில் இல்லை என்று என்னால் உறுதியாக சொல்ல முடியாது. மேலும் உதயகுமார் தலைமை ஏற்று இருப்பதால் செய்திதாள்களில் அவர் பெயர் மட்டுமே வருகிறது.//

அது எப்படிங்க சிரிக்காம சொல்லுறிங்க, 2011 இல் இருந்து போராட ஆரம்பிச்ச உதயகுமாரு தான் தலைவரு, அவரு பேரு மட்டும் தான் பத்திரிக்கையில வருமா? இல்லை வர வச்சாங்களா?

முந்தைய எதிர்ப்பாளர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டும் யாரும் புகைப்படத்திலோ, பேரோ வராமல் செய்ய காரணம் இருக்கா அப்போ?

திமுக எதிர்த்ததா எப்போ?திட்ட காலத்தில் இரண்டு முறை ஆட்சிலும்,மத்தியிலும் தொடர்ந்து இருக்கும் திமுக எதிர்த்து இருந்தால் நிறுத்தி இருக்கலாம் என்பது கூட யாருக்கும் தெரியாதா என்ன?

// ஆனா பொண்ணு வயசுக்கு வரலைன்னு தெரிஞ்சா எவன் கட்டிக்குவான். சிரிக்காதிங்க இந்த கதையை(உண்மையை) நான் கண்டுள்ளேன். //

பொண்ணு வயசுக்கு வரலைனு கண்டுப்பிடிக்க 24 வருஷமா அவ்வ்வ் :-))

மேலும் அதே பொண்ணே 20 கல்யாணமும் செய்து கொழந்தையும் பெற்று இருக்காம் :-))

இப்பவும் வயசுக்கு வரலை இல்லைனா மலடி சொல்லிடுங்க :-))

குட்டிபிசாசு said...

வவ்வால்,

கல்வெட்டு கூட இது தொடர்பாக ஒரு பதிவு போட்டு இருக்கார்.
http://kalvetu.balloonmama.net/2012/09/blog-post_12.html

வவ்வால் said...

குட்டிப்பிசாசு,

கல்வெட்டும் கலத்தில் இறங்கிட்டாரா ,பலே கல்வெட்டு!

பார்க்கிறேன்,தகவலுக்கு நன்றி!

-----------

குறும்பன்,

//மேலும் பெரிய அளவில் என்றால் ஆற்றல் விரையமாகிவிடும். \ //

நான் அனைத்து அணு சக்தி எதிர்ப்பாளர்களும் ஒன்ற்ராக கூடி , மாவட்ட அளவில் கூட போராட்டம் பரவவில்லையே என்றதற்கு ,ஆற்றல் வீணாகிடும் சொன்னிங்க, இப்போ உதய குமார் ,இனிமே மாநிலம் முழுவதும் போராட்டத்தினை பரப்ப போறேன்னு சொல்லி இருக்காரே, அதுவும் இவ்ளோ லேட்டா ,இப்போ யுரேனியம் நிரப்பும் வேலையை முடிக்க போறாங்க.

எல்லாத்தையும் லேட்டா தான் செய்வாங்க போல :-))

Anonymous said...

Spot on with this write-up, I really think this website wants far more consideration. I'll probably be again to learn way more, thanks for that info.

குறும்பன் said...

வவ்வால் நான் நீங்கள் எந்தப்பக்கமும் இல்லை என்பதை அறியாதவனா? நீங்க தான் முதல்லிலேயே சொல்லிட்டிங்களே நடுநிலைன்னு :) எனது கருத்து அணுஉலை ஆதரவு மக்களுக்கும் பின்னால் யாராவது வவ்வால் பதிவுல என்னயா போட்டிருக்குன்னு பின்னூட்டத்தையும் சேர்த்து படிச்சாங்கன்னா புரியுனுமில்லை அதுக்காக தான். நான் எப்பவும் சில வரி பின்னூட்டம் அல்லது பின்னூட்டம் போடாம படிச்சிட்டு மட்டும் போற ஆளு. என்னைப்போய் இவ்வளோ பெரிய பின்னூட்டம் போட வச்சுட்டிங்க :) நியாயமா? 2005ல் பேசினேன் அப்ப கல்வியை பற்றிதான் பெரிதாக பேசினார்கள். அவரும் பள்ளி வைத்திருந்தார். கூடங்குளம் சிக்கலில் இவர் ஆளுங்கட்சிக்கு ஆதராவ செயல்படவில்லை என்றதும் அவர் பள்ளியை இடித்துவிட்டார்கள். (முழு பள்ளியையும் இடிச்சாங்களா என்பது தெரியாது). அவர் கன்னியாகுமரி மாவட்டத்துக்காரர் என்பது உங்களுக்கு தெரியும் என நினைக்கிறேன். கூடங்குளத்தால் அவர்களுக்கும் பாதிப்பு உண்டு எனவே இதை சுயநலம் கலந்த பொதுநலம் எனலாம்.
உதயகுமார் 2005ல் ஏன் கூடங்குளத்திற்கு எதிரா போராடலை என்று என்னை கேட்டா நான் ஏதாவது சொல்லலாம் அது உண்மையா இருக்காது :) 2000 பேராகவே இருக்கட்டும் அவர்கள் சிற்றூரைச் சேர்ந்தவர்கள் (20,000 பேருக்கு மேல இருந்தா அதை சிற்றூருன்னு சொல்ல முடியாதுன்னு நினைக்கிறேன்) அவர்களை கட்டுக்குள் வைத்திருப்பது சிரமான செயல். அது இவரால் முடிந்திருக்கிறது ஏனென்றால் நமக்கு பாதிப்பு ஏற்படும் என்று அவர்கள் நினைப்பதால். சிற்றூர் ஒற்றுமையை குழைக்க அரசால் முடியவில்லையே, இது அரசு எதிர்பாராதது. நான் என் வலைப்பதிவில் நிறைய எழுதுவதில்லை. பேருக்கு ஒன்னு இரண்டு நான் எழுதுவதை விட நம் அரசு விரைவா செயல்படும், அப்பன்னா என் எழுதும் வேகத்தை புரிஞ்சுக்குங்க :)) . நிறைய பாதி செய்தியோட சேமிப்பில் இருக்கு. பாதிப்புன்னு தெரிந்தாலும் எத்தனை பேர் போராட வருவார்கள்? நாட்டுல டீசல், சமையல் வாயு, பேருந்து கட்டணம், மின் கட்டணம் உயர்வு, மின்சாரம் 10 மணி நேரத்துக்கு அதிகமா இல்லாதது என்பதை எதிர்த்து எத்தனை பேர் போராடறாங்க? போராடாதவர்கள் அதை வரவேற்கறாங்கன்னு சொல்லமுடியுமா? குசும்பு எதுக்கு? இப்ப வந்த யுவராசன் இராகுல் தான் செய்தியில் காங்கிரசு சார்பா அதிகம் அடிபடற ஆளு, ஏன்? நூற்றாண்டு கண்ட கட்சியில் வேற யாருமே இல்லையா? திமுகவுலயும் இது தான் நிலைமை. அதிமுகாவில் ஜெ, சசி தவிர்த்து மற்றவர்கள் பற்றி பேச்சே வருவதில்லையே? ஏன்னா செய்திஇதழ்கள் போடறது தான் செய்தின்னு ஆகிவிட்டது. உதயகுமார் நல்லா இங்கிலிபீசு பேசுவாறு, தன் தரப்பை தெளிவா விளக்குவாறு என்று ஊடகங்கள் நினைக்கின்றன. அது காரணமாக இருக்கலாம். என்ன திமுக எதிர்க்கலையா? வைகோ நாடாளுமன்றத்தில் கூடங்குளத்தை எதிர்த்து அமளி செய்தார் என்று தினகரனில் செய்தி வந்திருக்கு. மேலும் எதிர்ப்பு காரணமாக பிரதமர் அடிக்கல் நாட்டு நிகழ்ச்சிக்கு வரலைன்னும் தினகரனில் எழுதியிருக்கு. அப்ப வைகோ திமுக. திமுக ஏன் தன்நிலையை மாற்றியது என்று கேட்காதீர்கள் அப்ப எதிர் கட்சி. ஆளும் கட்சியான நிலை வேற. நாம பார்க்காததா திமுகவா? திமுகவை பெருசா எடுத்துக்காதிங்க. பொண்ணுக்கு 24 வயசுல தான் திருமணமாச்சுன்னா நான் சொன்னேன் :). இப்ப அவர்கள் குழந்தையோடு மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். எப்படி மகிழ்ச்சியா இருக்காங்கன்னு கேக்காதிங்க :). இச்சம்பவம் என் பகுதியில் 20 ஆண்டுக்கு முன்னாடி நடந்தது. உதயகுமார் மாநிலம் முழுக்க போராட்டத்தை பரப்பினால் அது வெற்றி பெறுமா என்று தெரியவில்லை. வெற்றி பெறாது என்பது என் கருத்து.

வவ்வால் said...

குறும்பன்,

இதனை சுத்தி ,சுத்தி பேசலாம். முடிவே இல்லை.

தயாநிதிக்கு ஆங்கிலம்,இந்தி தெரியும் எனவே எடுத்ததும் கேபினெட் மினிஸ்டர் ஆக்கினோம்னு சொல்லும் கதை போல இருக்கு உதயகுமாரை மட்டும் முன்னிறுத்திய கதை.

அணு உலையை அனைத்து அரசியல் கட்சிகளும் வரவேற்றன என்ற உண்மையாவது புரிஞ்சுக்கோங்க, வைகோ பேசியது எல்லாம் அக்கடெமிச் பேச்சு.

இப்போவும் வைக்கோ உசுரோடத்தானே இருக்கார் , மத்தியபிரதேசத்துக்கு பஸ் ஒஉடிச்சு போறவர்க்கு, கூடங்குளம் வர தெரியாதா?

டிம்.கே,ஏ.எடி.எம்.கே,காங்,பிஜேபி,வைகோ எல்லாருக்கும் அணுசக்தி வேண்டாம்னே சொல்ல மனசு வராது.

காங்கிரஸ் போட்ட ஒப்பந்தம், 2001 இல் பிஜேபி காலத்தில் பணப்பட்டுவாடா செய்து வேலை துவங்கியது.மத்தியில் டி.எம்கே கூட்டணி,மாநிலத்தில் ஏடிஎம்கே. இப்போ சொல்லுங்க ,அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு என்னனு?

ஆனால் அணு உலைக்கு எதிரான உச்சக்கட்ட போராட்டத்தின் போது லீவ் போட்டு ஓட்டு போட போனதன் பின்னணி என்ன?

அணு உலை வேண்டாம்னு ,ஓட்டு போடாமல் இருக்க வேண்டியது தானே?

அணு உலை கொண்டு வருவதன் பின்னணியும் அரசியல், வேண்டாம்னு போராடுவதும் அரசியல், யாரோ சிலரின் அரசியலுக்கு எல்லாம் ஆடணுமா?

ராஜ் said...

வழக்கம் போல், சூப்பர் போஸ்ட்.. :):)
//"அதுவும் 99% வேலை முடிந்த திட்டத்தினை எல்லாம் அரசு கைவிடுவது சாத்தியமில்லாதது."////
உண்மை..உண்மை....அரசு இத்தனை பணிகளை முடித்த பிறகு அனுஉலையை கை விடாது...

வவ்வால் said...

ராஜ்,

வாங்க,நன்றி!

நாம் சொல்வது அரசின் நடைமுறை,மற்றும் எதார்த்தம், மறுப்பு தெரிவிப்பதற்கும் ஒரு கால வரையறை உள்ளதல்லவா?

முட்டாப்பையன் said...

வௌவாலு வாங்க நம்ம மெண்டல் வருண் போச்ட்கு போவோம்.
சுபி சாமிகள் நாங்க எல்லாரும் இருக்கோம்.
நமக்கு ஒரு அடிமை சிக்கிட்டான்.

வவ்வால் said...

முட்டாப்பையர்,

அந்த அடிமை என்னை பார்த்தாலே அய்யோ அம்மா ..என்னை கொல்றானே என மஞ்சத்துண்டு போல சவுண்டு வுடுதே... என்னையா செய்ய... என் பின்னூட்டமும் வெளியிடாது, வேற எடத்தில வச்சு அது தோலையும் உரிச்சாச்சு ,ஆனாலும் விடாமல் வாய் சவடால் மட்டும் பேசுது.

போப்பா ஒரே போர் அதோட. :-))

முட்டாப்பையன் said...

அட சும்மா வாப்பா.சுபி சாமிகளையும் ஒரு கை பார்ப்போம்.

Unknown said...

இந்தியாவின் மின் தேவைகளுக்காகவும் ராணுவத் தேவைகளுக்காகவும் மட்டுமே அணு சக்தி தேவை.

இது பற்றி படிக்க வேண்டுமென்றால் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் படி நிறையப் படித்த பின்பே ஒரு தெளிவான கருத்துக்கு வர முடியும்.

ஆனால் மின் தேவைகளுக்காக(எலக்ரிசிடி) அணுசக்தியை இவ்வளவு சார்ந்திருப்பது நல்லதல்ல என்பதுதான் பல உலகநாடுகள் இப்போது வந்திருக்கும் முடிவு.

இந்த நிலையில் இந்தியாவுக்கு அவசியமா என்ற கேள்வியின் நோக்கில் கூடங்குளம் அவசியமில்லை என்பதே தெரிவாக இருக்கிறது..

முழுக்க இது தொடர்பாகப் படித்தறிந்த பின் எழுதும் உத்தேசம் இருக்கிறது..

ஜோதிஜி said...

இது வரை யாரும் சொல்லாத மாற்றுப்பார்வை.

ஒரு நல்ல சூழ்நிலையில் வரிக்கு வரி படிக்க முடிந்தது. நடாஜி சொன்னதும் உண்மை.

ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க.

இதுவரைக்கு அணுமின்சாரம் என்பதற்காக இந்திய அரசு என்ன அளவுக்கு செலவு செய்து உள்ளார்கள். எந்த அளவுக்கு மின்சாரம்கிடைத்துள்ளது.

‘தெரியுமா?

இந்திரா காந்தி காறி துப்பிய கதையை படித்து இருக்கேன்.

கேள்வியே கேட்க முடியாத துறையாக இந்த துறை இருப்பதால் வெளியே பல விசயங்கள் தெரிவதில்லை.

கூத்தாடி said...

@ நேதாஜி ,

இந்திரா காந்தி காரித்துப்பிய கதை? இது ஏதோ கிழக்கு பதிக்கத்தின் நூல் என நினைக்கிறேன். அதே வரி.

@வவ்வால்

இந்தியாவை பொறுத்த வரை எதற்குமே ஆகாத துறை அணுசக்தி. (நாராயணசாமி அமைச்சராக போட்ட போதே புரிந்திருக்க வேண்டுமே?)

நீங்கள் பிரிதொரு பதிவில் குறிப்பிட்டுளதைப்போல இது பழைய ரக அணு உலை. ரஷ்யா தற்போது புதிய அணு உலைக்கு மாறி விட்டது (அதையும் கைவிடப்போவதாக படித்தேன்)

என்னுடைய சில கேள்விகளுக்கு பதில் அளிக்கவும்.

1. உதயகுமார் மீது எத்தகைய குற்றச்சாட்டை சுமத்த விரும்புகிறீர்கள்?

அமெரிக்க கைக்கூலியா அல்லது மணல் தொழில் அதிபரின் கை ஆளா?

ஆஸ்திரேலியாவில் அரசியல் பயிற்றுவிப்பஅதை விட்டுவிட்டு இங்கே பள்ளி நடத்தும் ஒரு மனிதன் வெறும் (வெறும்) பணத்திற்கு ஆசைப்பட்டு இதை செய்வானா??

2. இந்தியாவில் ஆயுட்காலம் க்முடிந்த அணுவுலை எதேனும் உள்ளதா? (கல்ப்பாக்கம் புதுப்பித்தல் நிலை). அப்படி முடிந்த பின் அணுக்கழிவுகளை மீதி (Half life is about million years) காலம் என்ன செய்வார்கள்????

3. சிவகாசியில் தொழிசாலைகளை சரியாக பாதுகாக்க முடியாத நமக்கு, பள்ளி வேனில் ஓட்டை இருக்கிறதா என சரி பார்க்க முடியாத நமக்கு, கட்டட விதிகள் மீறப்படுகின்றவனவா என லஞ்சம் வாங்கிக்கொண்டு கண்ணை மூடிக்கொள்ளூம் இந்த அரசாங்கத்திற்கு அணுவுலை தேவையா??

4. பணம் செலவாகி விட்டது எனில், குட்ரொச்சி தொடங்கி, 2ஜி , வதேரா என தினமும் போகும் பணத்தோடு (அப் கோர்ஸ் - வெளி நடப்பு மூலம் வீணாகும் பணமும் சேர்த்தி) இதையும் சேர்த்தால் என்ன தப்பு??

நன்றி

கூத்தாடி -

http://erumbhu.blogspot.com

www.twitter.com/koothaadi

Anonymous said...

If America wants to stop this plant it need not to go to Udayakumar to protest. Obama will make phone call and ask his slave Manmohan to stop this. He will also stop the plant immediately.

Lakshmana Perumal said...

தங்களின் கூடங்குளம் குறித்த கட்டுரைகளையும், தமிழக மின் உற்பத்தி, தட்டுப்பாடு என சில கட்டுரைகளை படித்தேன். உங்களின் கடின உழைப்பு நன்கு தெரிகிறது. வாழ்த்துக்கள். நானும் கதிராலைகள், காற்றாலைகள், அனல் மின் நிலையங்கள், புனல் மின் நிலையம் பற்றியும் எழுதி உள்ளேன். ஆனால் எனது கட்டுரையில், தொழில் நுட்ப பார்வையில் மட்டுமே அணுகி இருப்பேன். இங்கு பலரும் சமூக, பொருளாதார, அரசியல் சார்ந்து கட்டுரைகளைப் படிக்கிறார்கள். ஆகையால், தொழில் நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு சில கட்டுரைகள் எழுதி உள்ளேன். உங்களுக்கு நேரம் கிடைத்தால், எனது இணையதளத்தை ஒருமுறை பார்வை இடவும். http://lakshmanaperumal.com

லீ(LEE) said...

என் தமிழை நீங்களே அழிக்காதீர்கள்...
வவ்வால் அல்ல அறிவிலிகளே... "வௌவால்"...
நசுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் என் தமிழை கண்டு மனம் வெடிக்கிறது..

--இப்படிக்கு தமிழன்.