(பிளாட்டோ)
அரேபியா என்பதான பெயரில் இப்பகுதி முதன் முதலில் வரலாற்றில் பதிவானது ,அசிரியன் அரசன் சால்மானேசர் கி.மு 853 இல் இப்பகுதி மீது படை எடுத்து வென்றதனைக்குறிப்பிடும் கல்வெட்டில் ஆகும்,அப்போது அரிபி என இப்பகுதியை அராமைக்கில் குறிப்பிட்டுள்ளார், அரிபி என்றால் சூரிய உதயம் ஆகும் பகுதி, என்பதை குறிக்கும் வகையில் கிழக்கு என சொல்வது.
ஏன் எனில் அசிரிய தேசம் என்பது தற்போதைய இராக்,இரான் அடங்கியப்பகுதியில் உள்ள நாடு ஆகும், அரேபிய தீபகற்பம் அவர்களுக்கு கிழக்கில் உள்ள நிலப்பரப்பு.
அதன் பின்னர் திக்லாத்-பைலேசர்-3 (கி.மு.745-727) என்ற அரசனின் ஆட்சியின் போதும் அரிபியா என குறிப்பிடப்பட்டுள்ளது, கிமு ஏழாம் நூற்றாண்டின் இறுதி வரை அசிரியர்கள் ஆட்சியின் கீழ் அரேபியா இருந்தது.
கி.மு.ஏழாம் நூற்றாண்டின் முடிவில் பாபிலோனிய மன்னன் நபடோனியஸ் அரேபிய பகுதியை கைப்பற்றி ஆட்சி செய்யலானான், இன்றைய மெதினா வரைக்கும் நபடோனியஸ் ஆட்சியின் கீழ் இருந்தது.இந்த அரசாட்சியின் தலைநகரம் பெட்ரா ஆகும், இதன் காரணமாக மத்திய தரைக்கடல் பகுதிக்கு நபதியான் என்ற பெயரும் உண்டு. இவர்கள் ஆட்சிக்குட்பட்ட அரேபியாவை பெட்ரா அரேபியா என்றும் சொல்வதுண்டு.
--------------------------------------
அரேபிய தீபகற்பத்தில் நாடுகளை உள்ளடக்கியப்பகுதிகளை மூன்று பிரிவாக பிரித்துள்ளார்கள்,
தெற்கு கடற்கரைப்பகுதி -இந்திய கடற்பகுதியை நோக்கி இருக்கும் நாடுகள், இதில் தற்போதைய யேமன், ஓமன் ஆகிய நாடுகள் வரும்.
மத்திய அரேபியா- நாடோடிகள் பகுதி எனப்படும் ,இது இன்றைய சவுதி அரேபியா போன்ற பகுதிகள் அடங்கியது.
வடமேற்கு பகுதி- ஜோர்டான்,சிரியா போன்ற நாடுகள் கொண்ட பகுதி, இதுவே ஆசியா மைனர், பகுதிக்கு அரேபியாவின் நுழைவு பகுதி ஆகும்.
இப்பகுதிகளை ஹீரோடட்டஸ்,ஸ்டார்போ போன்ற இலத்தின் வரலாற்று அறிஞர்கள் கீழ்கண்டவாறு பெயரிட்டு அழைத்தனர்.
அரேபியா ஃபெலிக்ஸ்- அப்படி என்றால் மகிழ்ச்சியான அரேபியா. ஏன் எனில் அக்காலத்தில் இந்தியாவுடன் அதிகம் கடல் வாணிபம் புரிந்து வசதியாக வாழ்ந்த பகுதி, எனவே வளமான நாடுகள், மகிழ்ச்சியான நாடுகள் என பெயரிட்டார்கள்.
அரேபியர்கள் இந்தியாவோடு கடல் வாணிபம் புரிந்தார்கள் என சொல்வதெல்லாம் கடற்கரையோர அரேபிய நாடுகளான ஏமன்,ஓமன் போன்ற தேசத்தவர்களே.
அரேபியா டெசெர்ட்டா: பாலைவன அரேபியா எனப்படும் மத்திய அரேபியா,இன்றைய சவுதி அரேபியா ஆகும், வளம் குன்றிய நாடோடிகளை கொண்ட நிலப்பரப்பு.
அரேபியா பெட்ரா:
பாறை நில அரேபியா எனப்பொருள், ஆனால் இதற்கான காரணம் அப்போது பெட்ரா என்ற ஒரு தேசமாக இப்பகுதி இருந்ததும் ஒரு காரணம். இப்பகுதியே ரோமானிய,கிரேக்கர்களுடன் அதிகம் தொடர்பில் இருந்த பகுதி, பின்னாளில் ரோமானிய ஆட்சிக்கு வந்தது.இதில் ஜோர்டான்,சிரியா,பாலஸ்தீனம், போன்ற பகுதிகள் அடக்கம்.
#மத்திய கிழக்கு:
அப்போதைய இலத்தின் நாடுகளுக்கு கிழக்கில் உள்ளப்பகுதியை ஆங்கில வழக்கில் மத்திய கிழக்கு நாடுகள் என பொதுவாக அழைக்கப்படுவதும் உண்டு,இப்பகுதி மத்திய தரைக்கடலின் மோராக்கோ, அரேபிய தீபகற்பம் மற்றும் இரான் அதன் பகுதிகள் அனைத்திற்கும் பொதுவான பெயர்.
முதன் முதலில் மத்திய கிழக்கு நாடுகள் எனப்பெயரிட்டு அழைக்க ஆரம்பித்தது இங்கிலாந்து ஆகும், இரண்டாம் உலகப்போரின் போது ,ராணுவ தகவல் தொடர்பின் போது இப்பகுதி நாடுகளை மிடில் ஈஸ்ட் என குறிப்பிட ஆரம்பித்து பின்னாளில் அதுவே மேற்கத்திய நாடுகளின் வழக்கமாக போய்விட்டது.
இங்கிலாந்து மிடில் ஈஸ்ட் என பட்டியல் இட்ட நாடுகள்,
territories of Turkey, Cyprus, Syria, Lebanon, Iraq, Iran, Palestine (now Israel), Jordan, Egypt, The Sudan, Libya, and the various states of Arabia proper (Saudi Arabia, Kuwait, Yemen, Oman, Bahrain, Qatar, and the Trucial States, or Trucial Oman [now United Arab Emirates]. & The three North African countries of Tunisia, Algeria, and Morocco .
பொதுவாக அனைத்து நாடுகளுக்கும் மத்திய கிழக்கு நாடுகள் என சொன்னாலும் ,அவற்றினை மூன்று பிரிவாக பிரித்தார்கள்,
அண்மை கிழக்கு:
பாரசீக வளைகுடா பகுதியில் இருந்து தென்கிழக்கு ஆசியா பகுதி,அதாவது இந்தியாவை நோக்கியுள்ள பகுதிகள்.
தூர கிழக்கு:
இரானுக்கு அந்த பக்கம் பசிபிக் பெருங்கடலை நோக்கியுள்ள நிலப்பரப்பு.
--------------------
அரேபிய மொழி மூலம்:
அக்காடியன் மொழி ஆப்ரோ-செமிட்டிக் மொழிக்கலவையை மூலமாக கொண்டது.
(அக்காடியன் கியுனீஃபார்ம் எழுத்துக்கள்)
Semitic (western Asia) மொழியில் இருந்து Akkadian, Aramaic, South Arabic, Arabic, Hebrew, Eblaite, Amorite, Maltese, Ugaritic, Amharic, Canaanite, Phoenician ஆகிய மொழிகள் பிரிந்து உருவாகின.
இதில் அக்காடியன் மொழி சார்கோன் எனப்படும் அக்காடியன் அரசாட்சியின் போது(கி.மு 2234-2279) உருவானது, இது அசிரியன் -பாபிலோனிய அரசாட்சியின் வழி உருவான மொழி. பின்னர் சுமேரிய அரசாட்சியின் போது சுமேரிய மொழியாக உருவானது. சுமேரிய அரசாட்சி நடைபெற்ற இடம் மெசபடோமியா , இருந்த போதிலும் அக்காடியன் அதன் பூர்வ மொழி வழியான அசிரியன் மற்றும் பாபிலோனிய மொழிய மெசபடோமியாவின் வடக்கு, தெற்கு பகுதியில் பயன்ப்பட்டு வந்தது.
பின்னர் கி.மு 6-7 ஆம் நூற்றாண்டுகளில் அராமைக் மொழியாக உருவெடுத்து நின்றது.
அரபிய தீபக்கற்ப நாட்டில் உள்ள பலநாடுகளின் மூல மொழியாக அக்காடியனும், அதன் பின்னர் அராமை மொழியின் தாக்கமுமே இருந்தது. ஏசு கிருத்து பேசிய மொழி கூட அராமைக் தான்.
மெசபடோமியா ,மெசோ- இடையில் ,படோமியா இரண்டு ஆறு,இரண்டு ஆறுகளான ,யூப்ரடீஸ் மற்றும் டைகரீஸ் நதிகளுக்கு இடைப்பட்ட நிலம்,இதுவே தற்கால இராக் ஆகும் ,இதனை அசிரியன், சுமேரியன் அரசாட்சி செய்தாலும் , அசிரியன் சுமேரியன் அரசாட்சி பாராசிகத்திலும் பரவி இருந்தது. பாரசீகம் என்பது தற்கால இரான்.
பொதுவாக இரான்,இராக்கின் பகுதிகளிலும், வலுவாக இருக்கும் போது அருகில் உள்ளப்பகுதிகளிலும் அசிரியன்,சுமேரியன் ஆட்சி நடைப்பெற்றது.
எனவே பாராசிக மொழியின் மூலமாகவும் அக்காடியன் விளங்கியது. அந்தந்த நாட்டின் அரசாட்சிக்கு ஏற்ப மொழியின் கூறுகள் கொஞ்சம் மாறி ஒரு புதிய டயலெக்ட் ஆக உருவெடுத்து பின்னர் ஒரு மொழியாக நிலைப்பது வழக்கம்.
சிரியா,ஜோர்டான்,ஓமன்,அம்மான் , மத்திய அரேபியா என அரேபிய தீபக்கற்பம் முழுவதும் புழங்கிய மொழிகளுக்கு மூலமாக பாராசிகம், அராமைக், அக்காடியன் ஆகியன விளங்கின.ஒவ்வொன்றும் கொஞ்சம் வேறுபட்ட டயலெக்ட் ஆகும்.
சமஸ்கிருதம், பிராம்மியின் வழியாக இந்தி ,பிஹாரி, குஜராத்தி, பஞ்சாபி,மராத்தி(புரொட்டொ இன்டோ -திராவிடன்) சவுராஷ்ரா ,போஜ்புரி என பல இந்திய மொழிகள் இப்படித்தான் உருவாகின. இந்தி என்பது இந்தியா முழுவதுக்குமான மொழியல்ல, ஒவ்வொரு மக்களுக்கும் தனி மொழி உள்ளது. ஆனால் அனைவரும் இந்தி மொழி பேசும் மக்கள் போல ஒரு தோற்றம் உண்டு.இதற்கு காரணம் இந்தி, இந்தியா என நாட்டின் பெயரோடு இணைந்து காணப்படுவதே.
அனைத்து அரேபிய மொழிகளும் பாரசீகம், அராமக் இன் வழி வந்த டயலெக்ட்டுகளாக இருந்த போதும் இன்றும் சிரியா ,இரான்,இராக், ஜோர்டான் ,ஏமன் போன்ற பகுதிகளில் ஒற்றுமையின்மை நிலவக்காரணம், அரேபிய மொழியை முதன்மையான மொழியாக கருதி மற்றவர்கள் பூர்வீமாக அரபிய மொழியை தாய் மொழியாக கொண்டவர்கள் இல்லை என இன்றைய சவுதி அரேபியர்கள் நினைப்பதும் ஒரு காரணம் ஆகும்.
மற்ற நாட்டு மக்கள் வீட்டில் யேமனி, சிரியன், பெர்சியன் என பேசினாலும், அவர்கள் பொதுவில் அரேபியும், முதன்மையான மொழியாக அரபியை புழங்க வேண்டும் என நிர்பந்திக்கப்படுதாகவும் சொல்கிறார்கள்.
---------------------
அட்லாண்டிஸ்:
இன்றைய நாளில் இருந்து சுமார் கி.மு 10,500-12,000 ஆண்டுகளுக்கு முன்னால் அட்லாண்டிக் கடலில் மிகப்பெரும் சாம்ராஜ்யம் இருந்தது என்றும் நிலநடுக்கம்,சுனாமி, போன்ற ஏதோ ஒன்றால் ஒரு இரவு மற்றும் பகல் பொழுது காலத்திற்குள் கடலில் மூழ்கி அழிந்து விட்டது என ஒரு எடுகோள் அல்லது கிரேக்க புராணம் சொல்கிறது.
முதன் முதலில் அட்லாண்டிஸ் பற்றி தனது நூலில் விரிவாக எழுதியவர் கிரேக்க தத்துவஞானி மற்றும் அறிஞர் பிளாட்டோ (கி.மு.427-347) ஆவார். அவரது நூலான Timaeus, & Critias ஆகியவற்றில் அப்பெயர்களை கொண்ட கதாப்பாத்திரங்களின் உரையாடலின் வழியாக அட்லாண்டிஸ் பற்றி பேச வைக்கிறார், பிளாட்டோவின் நூல்களில் அவரது குருவான சாக்ரட்டிசும் உரையாடுவதாகவும், கேள்விகளை துவக்கி ,பதில் கொடுப்பது போல வருவதுண்டு,எனவே இவை எல்லாம் பிளாட்டோ தனது கற்றல் மற்றும் சாக்ரட்டீஸுடன் உரையாடிய போது கிடைத்த ஞானத்தின் வெளிப்பாடாக இப்படியாக ஒரு கற்பனையான மிக உயர்ந்த ஞானம் , கலாச்சாரம் கொண்ட மக்களைப்பற்றி எழுதி இருக்கலாம்,அல்லது அப்போதைய கிரேக்க அரசின் அதிகார துஷ்பிரயோகம் கண்டு வெறுப்படைந்து அதன் விளைவாக மிகப்பெரும் சாம்ராஜ்யம் ஒன்று உருவாகி காலத்தால் அழிந்தது என்று கிரேக்க சாம்ராஜ்யத்தினை மறைமுகமாக அறிவுறுத்தி இருக்கலாம் என பல வரலாற்று ஆசிரியர்களும் கருதுகிறார்கள்.
ஏன் இப்படி எழுத வேண்டும் என கேள்வி எழும், காரணம் இருக்கிறது,சாக்ரட்டிசின் (கி.மு.469-399)தத்துவப்பள்ளியில் தான் பிளாட்டோ மாணவராக பயின்றார், கிரேக்க மன்னர்கள் தங்களின் கடவுளின் நேரடி வாரிசாக கருதிக்கொண்டு தங்களையே கடவுளாக கருதி செயல்பட்டு வந்தார்கள், ஆனால் சாக்ரட்டீஸ் ,உன்னையே அறிந்து கொள், ஏன் எதற்கு என கேள்வி கேள் என அப்போதைய கடவுள் நம்பிக்கைக்கு எதிராக பேசினார். இதனால் அவர் கடவுள் இல்லை என பேசுவதாகவும், அரச நம்பிக்கையான கடவுளை விட புனித தன்மையை அடைய முடியும் அல்லது இருக்கிறது என இளைஞர்களை தவறான வழிக்கு திருப்புவதாகவும் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்து சிறையிலடைக்கப்பட்டார். சாக்ரட்டீசே வரலாறு அறிந்த ஆதாரப்பூர்வமான பகுத்தறிவாளர் எனலாம். இந்த நவீன காலத்திலேயே பகுத்தறிவுப்பேசினால் அவாளுக்கும் பிடிக்கமாட்டேங்குது ,இவாளுக்கும், பிடிக்கமாட்டேங்க்குது :-))
ஒரு மாத விசாரணைக்கு பின் அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது, அவருக்கு கருணையுடன் அவரே ஹெம்லாக் என்ற நச்சு செடியின் விஷத்தினை அருந்தி மென்மையாக மரணத்தினை தழுவ அனுமதி அளிக்கப்பட்டது. விஷம் அருந்தி மரணம் நேரிடப்போகும் நேரத்திலும் வெகு சில நெருக்கமான மாணவர்களுடன் சாக்ரட்டீஸ் மரணத்திற்கு பின் மனித ஆத்மாவிற்கு என்னவாகும், ஆத்மா அழிவில்லாதது என்பவற்றை மரணம் நேரிடும் போது தனக்கு உண்டான அனுபவத்தின் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார், அவ்வுரையை கேட்ட வெகு சிலரில் பிளாட்டோவும் ஒருவர்.பிளாட்டோ அப்போது அங்கில்லை என்றும் ,மஞ்சத்துண்டு திமுக ஆரம்பித்தபோது ராயபுரம் ராபின்சன் பூங்காவிற்கு போனாரா என்பது போல ஒரு கேள்வியும் உண்டு :-))
மரணத்திற்கு பின் சிலரின் ஆன்மா பாதல லோகத்திற்கு செல்லும், சிலரின் ஆன்மா மேல் உலகம் செல்லும், மேல் உலகத்தில் பசுமையான மரங்கள்,உண்மையான ஒளி,நிலம், மாசுபடாத தாதுக்கள், என அனைத்தும் தூய்மையான நிலையில் இருக்கும், நாம் வாழும் உலகில் மிக பரிசுத்தமானது என நாம் நினைக்கும் ஒன்றே அசுத்தமானது என்றெல்லாம் சாக்ரட்டீஸ் மரண தருவாயில் ஏற்பட்ட காட்சியினை பகிர்ந்துள்ளார்.
உண்மையான உலகம் என்பதே மேல் உலகம் தான் என்றும் ,பூலோகம் ஆனது மேல் உலகின் மோசமான பிரதி ,நம் ஆன்மா மேல் உலகில் இருந்து கீழ் இறக்கம் அடைவதே மனித பிறப்பு ,மரணத்திற்கு பின் அடையும் மறு பிறப்பு என்பது மேல் உலகிலோ அல்லது பாதாள உலகிலோ நடக்கும் என்பதே சாக்ரட்டீசின் சித்தாந்தம்.
இதன் பாதிப்பு மற்றும் , சாக்ரட்டீஸுடன் மேற்கொண்ட உரையாடல்கள் இவற்றின் அடிப்படையிலேயே "republic" என்ற நூலை எழுதி இருக்க வேண்டும் என்கிறார்கள்.
மனிதன் பிறப்பது மேல் உலகத்தில் மாசு அடையும் ஆன்மாவினால் அவன் ஆன்மா கீழ் உலகான பூமியில் பிறக்கிறது ,மரணத்திற்கு பின் மீண்டும் மறுபிறப்பாக மேல் உலகம் செல்கிறது .அதற்கு அவர்கள் கீழ் உலகில் பரிசுத்தமான வாழ்வினை வாழ்தல் வேண்டும் என சாக்ரட்டீசின் அடிப்படையிலேயே ,பிளாட்டோவும் வலியுறுத்தினார் என்கிறார்கள்.
கிரேக்க மன்னர்கள்,சண்டை, அதிகார வெறி என மாசடைந்து விட்டதால் அழிவை அடைவார்கள் என்பதனை மறைமுகமாக உணர்த்தவே அட்லாண்டிஸ் என்ற பரிசுத்தமான ,சகல வல்லமை படைத்த தேசத்தினை தனது நூலில் உருவாக்கி அழிவினை சந்திப்பதாக காட்டியுள்ளார் அப்படியான நகரம் உண்மையில் இல்லை என்பது பல வரலாற்று ஆசிரியர்கள் கருத்து.
அட்லாண்டிஸ் புராணம்;
கடல் தெய்வம் போசிடானுக்கும் மனித பெண் கிளிட்டோவுக்கும்(Poseidon and the mortal woman Cleito) 5 இரட்டைக்குழந்தைகள் பிறந்தார்கள் ,அவர்களில் மூத்தவர் அட்லாஸ், அவரது மற்ற சகோதரர்கள் புரோமெதியாஸ்,எபிமெத்தியாஸ்,மெனோஷியஸ்(Menoetius) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
அவர்களுக்காக அட்லாண்டிக் கடலில் மூன்று வளையங்களாக நீர் சூழந்த உள்வட்டங்களை கொண்ட ஒரு நாட்டினையும் ,அதன் மத்தியில் ஒரு மலையும் கொண்ட தீவினை கிரேக்க கடவுள் ஸீயஸ் உருவாக்கி தந்தார் , அதனை பத்து சகோதரர்களும் சமமாக 10 பாகங்களாக பிரித்து ஆண்டு வந்தார்கள்.
காலம் செல்ல செல்ல சாதாரண மனிதர்கள் போல போட்டி பொறாமை கொண்டு சச்சரவுகளில் ஈடுப்பட்டு, சண்டையிட்டுக்கொண்டார்கள், பின்னர் அவர்கள் ஏதன்சின் மீது போர் தொடுத்து சண்டையிட்டார்கள் என்றும் , இம்மக்களின் பொறுப்பற்ற தன்மை கண்டு கிரேக்க கடவுள்களின் தலைவரான ஸீயஸ் இடி ,மின்னலை ஏவி விட்டு அழித்ததோடு அல்லாமல் பெரும் நில நடுக்கம் ஏற்பட வைத்து அட்லாண்டிஸ் தீவினை ஒரு இரவு மற்றும் பகலில் கடலில் மூழ்க வைத்தார் என்றும் கூறுகிறார்கள்.
இது பிளாட்டோ கூறும் சம்பவம், இதனை சலோன் என்ற கிரேக்க துறவி, எகிப்துக்கு சென்றிருந்த போது அங்கிருந்த துறவி சொன்னதாகவும் அதனை கேட்டு கிரியோஸ் ,டைமெனோஸிடம் சொல்வதாகவும் கூறியுள்ளார்.
இது முழுக்க கற்பனையாகவும் இருக்கலாம் ,அல்லது உண்மையில் நில நடுக்கம்,சுனாமியால் அழிந்த ஒரு தீவின் வரலாற்றினை பொதுவாக சொல்லி அதற்கு அட்லாண்டிஸ் என பிளாட்டோ பெயரிட்டு அழைத்தும் இருக்கலாம்.
பிளாட்டோ காலத்திற்கு முன்னரே அட்லாஸ், புரோமெத்தியாஸ் போன்ற கிரேக்க டைட்டான் கதைகள் உண்டு, அவை எல்லாம் கொஞ்சம் மாறுபட்டவை.
அட்லாஸ்-கிரேக்க புராணம்:
கிரேக்க புராணப்படி அட்லாஸ் , கேயா என்ற பூமிக்கும், குரோனாஸ் என்ற வானத்திற்கும் பிறந்த ஒரு டைட்டான் அவரது சகோதரர்கள் தான் புரோமெத்தியாஸ்,மெனிஷியஸ் போன்றோர்.
மெனிசியஸுக்கும் ,ஸீயஸ் தலைமையிலான கிரேக்க கடவுள்களுக்கும் சண்டை வரவே ,அப்போது அட்லாஸ் மெனிஷியஸ் சார்பாக சண்டையிட்டு , கடவுள்கள் வாழும் புனித மலையான ஒலிம்பஸில் ஏறி சண்டையிடவே பொறுமை இழந்த ஸீயஸ் தனது சக்தி வாய்ந்த ஆயுதமான இடியை ஏவி அனைவரை அழித்து , சகோதர டைட்டான்களுக்கு கடும் தண்டனை விதித்தார்.
மெனிஷியஸை டார்டாரஸ் எனப்படும் பாதாள உலகில் அடைத்தார், புரோமெத்தியாசை காக்கஸ் மலையில் சங்கிலியால் கட்டிப்போட்டு ,ஒரு கழுகை விட்டு கொத்தவைத்து துன்புறுத்தி பின்னர் டார்டாரஸில் அடைத்தார்.
அட்லாசை வானத்தினை தோளில், அல்லது தலையில் தாங்கிப்பிடித்து ,மீண்டும் பூமியோடு சேராதபடி எப்போதும் சுமந்திருக்க வேண்டும் என சபித்தார். இதன் தாத்பரியம் என்ன வென்றால், வானமும், பூமியும் சேர்ந்து டைட்டான்களை உருவாக்கியதால் தான் இப்பிரச்சினை எனவே இனி எக்காலத்திலும் அவர்கள் ஒன்றாக சேர்ந்து டைடான்களை குழந்தைகளாக பெற்றுக்கொள்ளக்கூடாது, எனவே அவர்களின் மகன் அட்லாசை வைத்தே பிரித்துவிட்டார்.
இது மட்டும் அல்லாமல் இன்னும் பல கிளைக்கதைகள், மாறுபட்ட வடிவங்கள் என அட்லாசின் கதைகள் கிரேக்கத்தில் புழக்கத்தில் உண்டு.
வழக்கமாக படங்களில் சித்தரிக்கப்படுவது போல அட்லாஸ் பூமியை தோளில் தூக்கிக்கொண்டு நிற்க தண்டிக்கப்படவில்லை, பின்னாளில் ஒரு பிரஞ்ச் /இத்தாலி உலக வரைப்பட தயாரிப்பாளர் Antonio Lafreri தனது சின்னமாக அட்லாசை வைத்திருந்தார், அதனை வரைப்படத்திலும் பெயராக போட்டு வெளியிட்டார் "Gerardus Mercator" என்ற வரைப்பட தயாரிப்பாளர், ஆனால் அவர் வானியலில் புகழ்ப்பெற்ற மரிஷியானா அரசர் அட்லாஸ் என்பவரையே பெருமை படுத்த அப்படி செய்தார்.மேலும் ஃபார்னெஸ் என்ற நிறுவனம் உலக உருண்டையை தயாரித்து அட்லாஸ் என்றப்பெயரிலும் விற்க ஆரம்பித்தால், அனைவரும் அட்லாஸ் உலகத்தினை தோளில் தூக்கிக்கொண்டு நிற்பது போல வரைய ஆரம்பித்துவிட்டார்கள்.
அட்லாண்டிஸ் குறித்த பிளாட்டோவின் குறிப்புகள்.
# ஏதன்சில் இருந்து அட்லாண்டிஸ் 2,500 மைல்கள் தொலைவில் உள்ளது.
# ஜிப்ரால்டர் வளைகுடாவில் பில்லர்ஸ் ஆப் ஹெர்குலசில் இருந்து மேற்கில் உள்ளது.
#அதன் பரப்பளவு ஆசியா மைனர் மற்றும் லிபியா சேர்ந்த அளவுக்கு இருக்கும்.
# மூன்று உள்வட்டங்களில் ஏரி சூழ அமைந்த நாடு, கடற்கரையோரம் உள்ளது. தீவின் மத்தியில் ஒரு மலை உள்ளது அதில் கடல் அரசன் போசிடான் கோயிலும் ,ஆறு குதிரைகளை இழுக்கும் தேருடன் கூடிய போசிடான் சிலையும் உள்ளது.
# அட்லாண்டிஸ் நிலம் மிக வளமானது, நல்ல விளைச்சலும்,உயர்ந்த பசுமையான மரங்களும், கொண்ட வளமான நாடு.
#அட்லாண்டிஸ் மக்கள் , வீரமும், அறிவும் நிரம்பியவர்கள், தொழில்நுட்பத்தில் மிக முன்னேறியவர்கள்.
# கடல் பயணத்திலும், கப்பல் கட்டுவதிலும் வல்லவர்கள், மூன்று அடுக்குகளை கொண்ட மிகப்பெரிய கப்பல்களை பயன்ப்படுத்தி வந்தார்கள்.
#கட்டிடக்கலையில் வல்லவர்கள், பிரமிட் போன்ற கட்டுமானங்களும், உயர்ந்த கட்டிடங்களும் கட்டினார்கள்.
அனைத்து வகையிலும் பரிபூரணமானவர்களும், மிக நல்ல நாடாகவும் ஏதன்ஸுக்கு 9000 ஆண்டுகளுக்கு முன்னரே விளங்கியது எனக்குறிப்பிட்டுள்ளார்.
முன்னரே சொன்னது போல கிரேக்க ஆட்சியாளர்களுக்கு அழிவு வரும் என குறிப்பால் உணர்த்த எழுதப்பட்டதாக இருக்கலாம் ,ஆனால் பின்னர் ஏன் வரலாற்று ஆய்வாளர்களும், தொல்லியல் ஆய்வாளர்களும் மிக தீவிர ஆய்வுகளும் , தேடல்களும் செய்கிறார்கள், அதுவும் இது வரைக்கும் மனித வரலாறு நன்கறிந்த பழமையான மனித நாகரீக வரலாற்றின் காலம் கிமு 4500 தாண்டிப்போகவில்லை, அவர்களைப்பற்றி கிடைக்கும் சான்றுகளும் மிகவும் பின் தங்கிய நாகரீகமாகவே காட்டுகிறது.
அப்படி இருக்கும் போது இன்றைக்கு சுமார் 12,000 ஆண்டுகளுக்கு முன்னர் மிக மேம்பட்ட நாகரீகம் என எழுதப்பட்டதை வைத்து தேடுவானேன்?
காரணமுள்ளது, பிளாட்டோ குறிப்பிட்ட காலமான 12,000 ஆண்டு என்பது தான், ஏன் எனில் சுமார் அதே காலக்கட்டத்தில் தான் கடைசி பனிக்காலம் முடிவுற்று பெரு வெள்ளம் ஏற்பட்டு, உலகின் கடல் மட்டம் சராசரியாக்க 100 மீட்டர் உயர்ந்தது, மேலும் பெரும்பனி உருகியதால் பூகம்பம்,சுனாமி என பல இயற்கை சீற்றங்களும் ஏற்பட்டது.
மேலும் பெரு வெள்ளம் , உலக அழிவு என உலகின் அனைத்து புராணங்களிலும் தவறாமல் ஒரு கதை உள்ளது,
இந்தியாவில் பார்த்தால் லெமுரியா கண்டம் ,பஹ்ருளி ஆறு என தெற்கேவும், கிழக்கு கடற்கரை பகுதியில் கடல் கொண்ட பூம்புகார் எனவும், மேற்கு கடற்கரைப்பகுதியில் கட்ச்,காம்பே வளைகுடாவில் மதுரா நகரம் கடல் கொண்டது பற்றி எல்லாம் நிறைய இலக்கிய ,புராண குறிப்புகள் உள்ளது.
கியுபா, அருகே கடல் அடியில் சில கட்டுமானங்கள் கண்டுள்ளனர், ஜப்பானில் யோங்குமுனி என்ற இடத்தில் கடல் அடியில் கட்டுமானங்கள் கண்டறியப்பட்டுள்ளது.
கிரேக்கம், ரோம் அருகேயே சில கடல்கோள் நிகழ்வுகள் நடந்துள்ளது, எனவே 12,000 ஆண்டுகளுக்கு முன்னர் கடல் மட்டம் பொதுவாக உயர்ந்து பல இடங்களை அழித்து இருக்கலாம், அது போல அட்லாண்டிசும் அழிந்து இருக்கலாம், இதெல்லாம் செவிவழிக்கதைகளாக பரவி பிளாட்டோ நூலாக எழுதி இருக்கலாம், மேலும் அவர் காலத்தில் நான்காம் பனிக்காலம் ,அதன் முடிவு 12,000 ஆண்டுகளுக்கு முன் என்பதெல்லாம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அப்படி இருக்கும் போது தோராயமாக சொன்னாலும் ஆண்டு கணக்கும், இன்ன பிற நிகழுகளும் சரியாக ஒத்திருப்பதாக சில வரலாற்று ஆய்வாளர்கள் நினைக்கிறார்கள்,எனவே தான் இன்றளவும் அட்லாண்டிஸ் ரகசியம் மிகவும் ஆர்வத்தினை தூண்டுவதாக உள்ளது.
-----------------
திரும்பிப்பார்த்தல் தொடரும்...
------------
படங்கள்,செய்திகள் உதவி,
கூகிள்,விக்கி,என்சைக்கிளோ பீடியா,பிபிசி,sron.nl,atlantisquest,national geography இணைய தளங்கள் ,நன்றி!
*********
31 comments:
//ஏன் எனில் அசிரிய தேசம் என்பது தற்போதைய இராக்,இரான் அடங்கியப்பகுதியில் உள்ள நாடு ஆகும், அரேபிய தீபகற்பம் அவர்களுக்கு கிழக்கில் உள்ள நிலப்பரப்பு.//
கிழக்கில் அல்ல. மேற்கில் உள்ளது.
//அரிபி என்றால் சூரிய உதயம் ஆகும் பகுதி//
சூரிய உதயம் அல்ல. சூரிய அஸ்தமனம்.
பிழை சரி செய்துவிட்டு, இந்த பின்னூட்டத்தை தூக்கிவிடவும்.
முதல் இடுகைக்கு இது பரவாயில்லை. தாவித்தாவி செல்லவில்லை. குழப்பம் இல்லாமல் ஒரு ஃப்லோ உள்ளது.
//புரோமெத்தியாசை காக்கஸ் மலையில் சங்கிலியால் கட்டிப்போட்டு ,ஒரு கழுகை விட்டு கொத்தவைத்து துன்புறுத்தி பின்னர் டார்டாரஸில் அடைத்தார்.//
ப்ரோமெதியஸ் நெருப்பைத் திருடிவந்து மனிதனுக்கு கொடுத்ததால், அவனை சங்கிலியில் பிணைத்து தினமும் அவன் ஈரலை கழுகு வந்து கொத்தித்தின்னும்படி ஜீயஸ் சபித்தார். இதையும் இது தொடர்பான ஒரு திரைப்படத்தைப் பற்றி எழுதவேண்டும் என நினைத்திருந்தேன். இன்னும் நினைத்துக் கொண்டே இருக்கிறேன்.
//முன்னரே சொன்னது போல கிரேக்க ஆட்சியாளர்களுக்கு அழிவு வரும் என குறிப்பால் உணர்த்த எழுதப்பட்டதாக இருக்கலாம் ,ஆனால் பின்னர் ஏன் வரலாற்று ஆய்வாளர்களும், தொல்லியல் ஆய்வாளர்களும் மிக தீவிர ஆய்வுகளும் , தேடல்களும் செய்கிறார்கள்//
இவனுங்க இதுமட்டுமா தேடுராங்க, நோவா கப்பல், ark of covenant என எதைஎதையோ தேடிக்கிட்டு இருக்காங்க.
குட்டிபிசாசு,
அசிரியா என்பது இராக் ,வடமேற்கு இரான் பகுதி, அவர்கள் சாம்ராஜ்யம் வளர்ந்து பலப்பகுதிகளை பின்னர் பிடித்தது,அதனை ஒரு மேப்பில் காட்டியுளேன்.
இப்போது குறிப்பாக திக்லத் பிளேசர்-3 கால மேப்பும் இணைத்துள்ளேன் பார்க்கவும்.
அசிரியாவுக்கு கிழக்கு திசையில் பாரசீக வளைகுடா இருப்பதை காணலாம், அவர்களுக்கு அரேபியா கிழக்கு தான்.
நமக்கு தான் வடமேற்கு ஆக வரும்.
--------
ஆரம்பத்தில் அப்படித்தான் தொடர்பு அற்றது போல இருக்கும், கொஞ்சம் உள்வாங்கிவிட்டால் சீராக செல்வது போல இருக்கும்.
கிரேக்க,ரோம புராணங்களில் எல்லா கதாபாத்திரங்களும் ஒத்து இருக்கும், ஒரே கதாபாத்திரங்களுக்கே பல வெர்ஷன் கதைகள் இருக்கு.
அட்லாஸ்க்கே நிறைய கதை இருக்கு,வாய்ப்பு கிடைக்கும் போது ஆங்காங்கு கதையும் சேர்க்கலாம்னு இருக்கேன், இந்தப்பதிவில் அட்லாண்டிஸ் கதையே பெருசா போச்சு,ஹெர்குலஸ் பற்றி கூட சொல்லவில்லை.
--------
பிபிசி,நேஷனல் ஜியாகிரபி சேனல் எல்லாம் தேடுறதுக்காக புரோகிராம் எல்லாம் நடத்துறாங்க.
நம்ம ஊர்ல மானாட மயிலாடவுக்கும் சூப்பர் சிங்கருக்குமே கூட்டம் கூடும்.
நண்பா மன்னிக்கணும்.. போஸ்ட் ரீட் பண்ணாம உங்க பதிவில போன்ற முதல் கமென்ட்.. சின்ன வேண்டுகோள் உங்க தளம் அகல திரைக்கே பொருத்தமா இருக்கு சிறிய திரைகள்ல ஸ்க்ரோல் பண்ணி பார்கிற மிக கஷ்டமா இருக்கு.. ஸோ இதுக்கு ஏதாவது பண்ணுங்க.. நான் முக்கியமா வந்தது. "கேளுங்க" தளம் மூலமா கேள்வி பதில் ஆரம்பிக்க பட்டு இருக்கு.. அதில் முதல் பகுதியிலே உங்களை பற்றியும் இருக்கு.. திரட்டியில் இணைக்க இயலவில்லை.. http://kelunga.harry2g.com/2012/10/neengale-sollalaam.html இந்த தளத்தில உங்களை குறித்த கேள்வி எழுப்ப பட்டு இருக்கு.. மேலும் உங்க மெயில்ல தான் சொல்ல வேண்டிய விடயம் ஆனா கிடைக்கல்ல.. நன்றி.. வருகையை எதிர்பார்க்கிறோம்.. ஆலோசனை டூ..
The root of the word has many meanings in Semitic languages including "west/sunset," "desert," "mingle," "merchant," "raven" and "comprehensible" with all of these having varying degrees of relevance to the emergence of the name. It is also possible that some forms were metathetical from ʿ-B-R "moving around" (Arabic ʿ-B-R "traverse"), and hence, it is alleged, "nomadic."
The plurality of meanings results //partly from the assimilation of the proto-Semitic ghayin with ʿayin in some languages. In Hebrew the word ʿarav thus has the same triconsonantal root as the root meaning "west" (maʿarav) "setting sun" or "evening" (maʿariv, ʿerev). The direct Arabic cognate of this is ġarb ("west", etc.) rather than ʿarab; however, in Ugaritic and Sayhadic,[2] languages which normally preserve proto-Semitic ghayin, this root is found with ʿayin adding to the confusion.[3]//
http://en.wikipedia.org/wiki/Arab_%28etymology%29
mele kodukkappatta suttiyil paarkkavum
இவ்வளவு தகவலையும் பகிந்ததர்க்கு நன்றி. படிகுரதுக்குல நாக்கு தல்லீருச்சு http://eththanam.blogspot.in/2012/10/blog-post_4.html?
உலகில் ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன. 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், உலகின் மொத்த சனத்தொகை 50 இலட்சம் முதல் 1 கோடி வரை இருந்த போது, அவர்களிடையே 12 ஆயிரம் மொழிகள் பேசப்பட்டன.
இவைகளுள் மிகப் பழமைவாய்ந்த மொழிகளாக
1. எபிரேயம்
2. வல்காத்து
3. ஷிட்டா
4. அரமைக்
5. சால்ட்டியம்
6. பழைய கிரேக்கம்
உலகில் பேசப்படும் ஏழாயிரத்திற்கு மேற்பட்ட மொழிகளிலே மூவாயிரம் மொழிகள் மட்டுமே எழுத்து வடிவமும், இலக்கிய இலக்கணமும் உள்ள மொழிகளாகும்.
யூனஸ்கோ ஆய்வின்படி உலகில் சில மொழிகள் அழிந்து விட்டன. அதாவது, செட்டிடே, எஸ்ருக்கன் ஆகிய மொழிகள் வழக்கிழந்து இல்லாமல் போய்விட்டன.
சுமேரியன், ஒல்லாந்து, அரமை ஆகிய மொழிகள் வேறு மொழிகளாக உருமாறித் தங்களை அழித்துக் கொண்டுள்ளன.
சில மொழிகள் அழிவடையும் நிலையில் உள்ளன. அவற்றுள் தமிழும் ஒன்று என்று கூறுகிறது இந்த ஆய்வு.
மேலும் உலகில் பேசப்படும் மொழிகளைப் பின்வருமாறு குடும்பங்களாக வகுத்து நோக்க முடியும்.
1. செமித்திய ஹமிட்டே மொழிக் குடும்பம்
2. இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பம்
3. திராவிட மொழிக் குடும்பம்
4. மலாய - யோலீசியன் மொழிக் குடும்பம்
5. துரோனிய மொழிக் குடும்பம்
6. பாண்டூ மொழிக் குடும்பம்
7. சீன - தீப்பேத்திய மொழிக் குடும்பம்
8. ஆசிய மொழிக் குடும்பம்.
திராவிட மொழிக் குடும்பத்துள் பின்வரும் மொழிகள் அடங்கும். தெலுங்கு, கன்னடம், தொண்டி, குறூக் அல்லது ஓரான், துளு, கூய், குவி அல்லது கோந், கோயா, பிராகூப், மால்டோ, கொடது, படாக், கொலாமி, இருளா, குறவத, பார்ஜி, கொண்டா அல்லது கூயி, கதபா, நாய்க்கி, பெங்கோஈ கோட்டா, ஒல்லாரி, தோடா என 25 மொழிகள் திராவிட மொழிக் குடும்பத்தில் அடங்கும்.
*******************************
அட்லான்ட்டீஸ் பற்றிய ஆய்விற்கு பல கோடி டாலர்கள் செலவு செய்கிறார்கள் . கோட்ப்பாடு அடிப்படையில் அது இருக்க சாத்தியம் என்று நம்புவதால்தானே . நிறைய ஆவன படம் வந்திருக்கிறது .
எடுத்துகாட்டிற்கு ஒன்று .
http://topdocumentaryfilms.com/atlantis-evidence/
ஹாரி,
வாங்க,நன்றி!
உங்க கேளுங்க தளம் பார்த்தேன், என்ன கொடுமைய்யா இது, என்னை பத்தி உங்க தளத்தில கேட்டால் நான் என்னன்னு சொல்ல?
தளத்தினை முடக்க முடியுமா என்பதற்கு வேண்டுமானால் எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்.
--------------
குட்டி பிசாசு,
நினைத்தேன் விக்கி பீடியாவில் இருப்பதை தான் சொல்றிங்கன்னு, நான் முன்னரே அதைப்பார்த்துவிட்டேன்.
அசிரியா மேப் போட்டு இருக்கேன்னே பார்த்தாலே அரேபியா எங்கே இருக்குன்னு தெரியுமே.
அதனால் தான் அரேபியாவுக்கு மேற்கே இருக்கும் நாடுகளை சேர்ந்தவர்கள், மிடில் ஈஸ்ட், நியர் ஈஸ்ட்,ஃபேர் ஈஸ்ட் என குறிப்பிடுகிறார்கள்.
அரிபியா என்றால் அராமக்-பெர்ஷியன் வழியில் கிழக்கு என போட்டு இருந்தார்கள், புக் மார்க் கூட செய்தேன்,ஆனால் வழக்கம் போல கும்பலில் காணாமல் போயிடுச்சு ,தேடி எடுத்து சுட்டி தருகிறேன்.
விக்கியில் அரேபிய மக்ரிப் மூலமாக வைத்து சொல்கிறார்கள்,அரேபியாவே அராமை,பெர்ஷியனில் இருந்து உருவானது, மேலும் அரேபிய மூலத்தினை காட்ட வேண்டும் என்றே அப்படி செய்திருக்கலாம் என நினைக்கிறேன்.
orient- orieos - east. sun rise ,lavent - rise, east என்ற பொருளிலேயே கிரேக்க,லத்தின், மற்றும் மேலை நாடுகளால் அரேபிய பகுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹெரொடட்டஸ்(கி.மு 484-425) காலத்தில் இந்து குஷ் மலையோடு உலகம் முடிந்துவிட்டது, அதற்கு அப்பால் கடல் இருக்குன்னு எழுதி இருக்கார்.
இந்தியா என்ற நாடு அவர்களுக்கு அப்போது மர்ம தேசம், எங்கோ கடலில் இருக்கிறது,அதன் வழி அரேபியர்களுக்கு மட்டும் தான் தெரியும் என எழுதி இருக்கிறார்.
அரேபிய மூலத்தினை மட்டும் வைத்து கொண்டு விக்கியில் பிழையாக சுட்டி இருக்கலாம் என நினைக்கிறேன்.
------------------
சேகர்,
வாங்க,நன்றி!
எனக்கும் எழுதுவதற்கு நொறை தள்ளிவிட்டது,ஒரு வரியில் சொல்லப்பட்டிருப்பதற்கு எல்லாம் ரெபரென்ஸ் தேட வேண்டிய நிலை.
---------------
அஞ்சா ஸிங்கம்,
வாரும்,நன்றி!
மொழி,இனம்,நாடு ஆகியவற்றின் வரலாறு கொஞ்சம் சிக்கலானது, நீங்கள் சொன்னது போல மொழிகள் இருக்கிறது, பல அழிவடையும் நிலையிலும் இருக்கு.
இணையத்திலும் சரி நூல்களிலும் சரி அதனை எழுதுபவர்கள் ஏதேனும் ஒரு நிலையினை சார்ந்தே கருத்தினை வெளிப்படுத்துகிறார்கள். ஆண்டு, பழமை இதனை எல்லாம் அவரவர் விருப்பம் போல மாற்றி ,அதற்கும் ஒரு தரவு காட்டுகிறார்கள்.
எனவே பல தளங்களிலும் குறுக்கு மேற்பாற்வை செய்ய வேண்டியதாக இருக்கு, அப்புறம் எனது லாஜிக்கிற்கு சரி எனப்படுவதை எடுத்துக்கொள்கிறேன். எனவே பொதுவாக புழங்கும் வரலாற்றுக்கு கொஞ்சம் முன்ன ,பின்ன முரண் படவும் செய்யலாம். இப்படி இன்னொரு இடத்தில் எழுதப்பட்டிருக்கு என தெரிய வைப்பதே எனது நோக்கம்.
---------
எபிரேய மொழியை மிக பழமையானது என சொல்ல முடியாது, அனேகமாக யூதவரலாற்று சார்புள்ளவர்கள் அதனையும் சேர்த்து இழுத்து வந்திருக்கலாம்.
உலகத்தில் இருக்கும் எல்லா மொழிக்கும் மூலம் இந்தோ-ஆர்யன் மொழி தான் மூலம்ம்னு கூட ஒரு தளத்தில் போட்டு இருக்கு, மொழிக்குள் பேச நிரைய இருக்கு ,எல்லாவற்றையும் எழுத முடியாது என்பதால் முடிந்த அளவுக்கு சுருக்கிட்டேன்.அவ்வப்போது நடுவில் சொல்லிக்கலாம்னு.
--------
அட்லாண்டிஸ் ,அதன் மக்கள் பற்றி மேலை நாடுகளில் இன்றும் நம்புகிறார்கள், கடலில் சோனார் மூலம் ஆய்வு செய்துக்கொண்டு இருக்கிறார்கள்.
அட்லாண்டிஸ் வெளியில் வருதோ இல்லையோ ,பல மூழ்கிய நகரங்கள் பற்றி தெரிய வருது.தென்னமரிக்க அஸ்டெக், இன்கா, மாயன் எல்லாம் அட்லாண்டிஸ் மூழ்கிய போது தப்பி வந்தவர்கள்னு சொல்றாங்க, சிலர் அவர்களுக்கும் திராவிடர்களுக்கும் தொடர்ப்புண்டு என்கிறார்கள்.
இந்தியாவில் தான் பெருமளவு ஆய்வு செய்யவில்லை, செய்தால் லெமுரியா, பூம்புகார்,மதுரா ,இன்னும் பல நகரங்கள் பற்றி தகவல் கிடைக்கலாம்.
கடலில் மூழ்கிய நகரங்கள் பற்றி பின்னர் இன்னும் கொஞ்சம் விரிவாக சொல்லலாம்னு இருக்கிறேன் .
-------------
வவ்வால்,
இரண்டாவது பகுதி சீராக போகிறது.
நிறைய தகவல்கள். அனைத்தையும் முதலில் படித்திருந்தாலும் எளிமைபடுத்தியதற்கு நன்றி.
சவுதி அரபியா ஒரு சாதாரண நிலப்பகுதியாகத்தான் சரித்தரம் கருதியுள்ளது என்பது தெரிகிறது. அதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என தெரிகிறது.
அன்றைய காலகட்டத்தில் கிரேக்கர்கள் மட்டும் தத்துவங்கள் பேசுபவர்களாகவும் மற்றவர்கள் பரிணாமம் பெறாமல் மரத்தில் தொங்குகொண்டிருப்பதற்கு ஏதாவது சிறப்பான காரணம் இருக்கிறதா? ( இது ஒரு படத்தின் வசனம்).
எல்லா சமுதாயத்திலும் புராணங்களின் கதைகள் மிகவும் கற்பனை வளமாக உள்ளது. உற்று நோக்கினால் எல்லாமே ஒருவிதத்தில் ஒற்றுமையாக இருக்கிறது. நடைப்பெற்ற நிகழ்வுகளின் ஞாபகங்களின் எச்சங்களோ?
ப்ளேடா, சாக்ரடீஸ் போன்றவர்கள் ஒருவகையில் இறைதூதவர்களோ?
அட்லாண்டீஸ் கதை சொல்லப்பட்ட காலத்தில் இந்தியா குறிப்பாக தமிழகத்தின் நிலை எப்படி இருந்தது.
நன்றி
//Blogger வவ்வால் said...
ஹாரி,
வாங்க,நன்றி!
உங்க கேளுங்க தளம் பார்த்தேன், என்ன கொடுமைய்யா இது, என்னை பத்தி உங்க தளத்தில கேட்டால் நான் என்னன்னு சொல்ல?
தளத்தினை முடக்க முடியுமா என்பதற்கு வேண்டுமானால் எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்.
//
Its ok வவ்வால் ஜி
//இந்தியா என்ற நாடு அவர்களுக்கு அப்போது மர்ம தேசம், எங்கோ கடலில் இருக்கிறது,அதன் வழி அரேபியர்களுக்கு மட்டும் தான் தெரியும் என எழுதி இருக்கிறார்.//
அலெக்சாண்டருக்கு முந்தைய காலத்தில் இந்தியாவில் விசித்திர மனிதர்களும் மிருகங்களும் இருப்பதாக கதை சொல்லப்பட்டு வந்தது.
//அரேபிய மூலத்தினை மட்டும் வைத்து கொண்டு விக்கியில் பிழையாக சுட்டி இருக்கலாம் என நினைக்கிறேன்.//
விக்கியில் பல தகவல்கள் தவறு என்பதை அறிவேன். அதில் கொடுக்கப்பட்டுள்ள ரெஃபரென்ஸ் முதலானவற்றை எல்லாம் பார்த்துவிட்டு மட்டுமே முடிவு சொல்ல இயலும்.
இருப்பினும் தங்களின் பொறுமையான, விரிவான பதிலுக்கு நன்றி.
//இணையத்திலும் சரி நூல்களிலும் சரி அதனை எழுதுபவர்கள் ஏதேனும் ஒரு நிலையினை சார்ந்தே கருத்தினை வெளிப்படுத்துகிறார்கள். //
இது முற்றிலும் உண்மை. சமீபத்துல் ஒரு கட்டுரை படித்தபோது அமெரிக்காவில் உள்ள (இந்தியர்) ஒரு உயிரியல் ஆராய்ச்சியாளர் "Nature" பத்திரிகையில் திராவிடர்கள் கி.மு. 3000 வருடத்திற்கு முன் இந்தியாவிற்கு வந்ததாக குறிப்பிட்டு இருந்தார்.
திருப்பதி கணேசா! திரும்பிப்பார்! என்பது போல இடையிடையே கொஞ்சம் அரசியல்! வித்தியாசமான பதிவு.
பாலைவனத்தில் சில வரலாறுகள் இருந்திருக்கலாம் ஒன்னு மட்டும் போதும் என்று எல்லாத்தையும் அழிச்சுட்டாங்களே. அவர்களுக்கு தெரியாம ஏதாவது இருக்கும் என்றாலும் தேட விடமாட்டேன்னு அழிச்சாட்டியம் பண்றவங்க தான் இப்ப இருக்காங்க. எனக்கு தெரிந்து பாரசீகம் தான் அங்கு பெரிய அரசு மற்றும் பல கலைகளை வளர்த்தது. துருக்கி இன்னொரு பெரிய அரசு ஆனால் அதைப்பற்றி எனக்கு அவ்வளவா தெரியாது. நிறைய தகவல்கள் தெரிந்து கொண்டேன் தொடருங்கள். வரைபடத்தை பார்த்ததும் குட்டிபிசாசுக்கு வந்த ஐயம் தான் எனக்கும் வந்தது. ஏன்னா கிழக்கு பகுதியில் தான் அதிகளவு அதன் ஆட்சிக்குட்பட்டது போல் தெரிகிறது. மேற்கில் இருந்து கிழக்கு வரை அரைவட்டம் போல் உள்ளதால் இந்த ஐயம் வந்துவிட்டது, ஆனால் அரேபிய தீபகற்பம் அவர்களுக்கு கிழக்கில் உள்ள நிலப்பரப்பு என்று சொல்வதும் ஒரு விதத்தில் சரியாகும் கிழக்கு பகுதிகளை எப்ப பிடித்தார்கள் என பல காரணங்கள் அதற்கு இருக்கலாம்.
நரேன்,
வாரும்,நன்றி!
முடிந்த வரை எளிமைப்படுத்தி ,சுருக்கி இருக்கிறேன், அட்லாண்டிஸ் பற்றி சில குறிப்புகளை சொல்லி இருக்கிறேனே அதுவே 50 பக்கத்தின் சுருக்கம், பக்கம் பக்கமாக எழுதி தள்ளி இருக்காங்க :-))
நீர் கேட்பது எல்லாம் ஒரு பதிவ��ல்ல நாகரீகம்,வளம் இருந்தது,என்ன கிரேக்க,ரோமானிய காலத்தில் ா0��ல?
விரிவாக பதிவில் சொல்கிறேன்.
தமிழ்நாட்டிலோ, இந்தியாவிலோ அப்போது யாரும் மரத்தில் தொங்கிக்கொண்டு(என்னைப்போல) இல்லை, நல்ல நாகரீகம்,வளம் இருந்தது,என்ன கிரேக்க,ரோமானிய காலத்தில் ஹிரோடட்டஸ், ஸ்டார்போ,பிளாட்டோ போன்றவர்கள் தத்துவம்,வரலாறு என ஆவணப்படுத்தினார்கள்.மன்னர்களும் அவர்களுக்கு சம்பளம் கொடுத்தார்கள்.
நம்ம ஊரில் அப்படிலாம் ஒரு முறையான ஆவணப்படுத்துதல் இல்லை, எனவே புலவர்கள் எழுதிய பாடல்கள் தான் சான்று.புலவர்களும் எந்த மன்னனிடம் பரிசு வாங்க செல்கிறார்களோ அவனை இந்திரன்,சந்திரன்,மூவுலகின் வேந்தே ,நீ நடந்தால் நடை அழகு ,நீ பேசும் தமிழ் அழகு என மஞ்சத்துண்டுக்கு நடத்தும் கவியரங்கம் போல எழுதி தள்ளிவிட்டார்கள் :-))
இதில் முக்கியமானது என்னவெனில் ..சாக்ரட்டீஸ் என்றால் ஒரு தனி மனிதன் அல்ல , அவர் நடத்தியது ஒரு பள்ளி, இப்போதைய பல்கலை போல, அவருக்கு பின் அவர் சீடர்கள் ,அவரது எழுத்துக்களை கற்பித்து ,அவர்களும் புதிதாக எழுதி என ஒரு தொடராக அறிவினை பிற்காலத்திற்கு கடத்தி வந்தார்கள்.
நம்ம ஊரிலும் அப்படி குருகுலம் என நடந்தது ஆனால் அதில் வேதப்பாடம் தான் தலைமுறையாக சொல்லிக்கொடுக்கப்பட்டது.
ராமாயணம்,மாகாபாரதம் கூட இப்படி தான் தலைமுரை கடந்து வந்தது.அவையும் கூட அக்கால மன்னனின் வாழ்க்கையை வைத்து புனையப்பட்டிருக்கலாம், நம்ம ஊரில் புனித தன்மை கொடுக்கவில்லை எனில் படிக்க மாட்டாங்க என, ராமன் ,மகாவிஷ்ணுவின் அவதாரம்னு சொல்லி இருக்கலாம்.
இம்முறை கிரேக்க, ரோமானிய அரசர்களிடமும் உண்டு,அவர்கள் எல்லாம் கடவுளுக்கு, மானிட பெண்ணுக்கும் பிறந்தவர்கள்,கடவுள் என்றே சொல்லிக்கொள்வார்கள்.
கர்ணன், பாண்டவர்கள் எல்லாம் தேவர்களின் வரம் மூலம் பிறந்தவர்கள் என சொல்வது போல.
உலகம் முழுக்க ஆண்ட பரம்பரையின் வரலாறு இவ்வாறு கடவுளின் வழி வந்ததாகவே கட்டமைக்கப்பட்டுள்ளது. அப்போது தான் சாதாரண பொது மக்கள் அடங்கி நடப்பார்கள் என்பதால் இருக்கலாம்.
சாக்ரட்டீஸ்,பிளாட்டோ எல்லாம் அவர்களை இறைத்தூதர்கள் என சொல்லி இருந்தால் நம்பி இருக்கத்தான் செய்வார்கள்,ஆனால் அவர்களுக்கு அப்படியான ஆசை இல்லாதது நம் அதிஷ்டம் :-))
----------
ஹாரி,
நன்றி!
---------------
குட்டிபிசாசு,
நன்றி!
//இது முற்றிலும் உண்மை. சமீபத்துல் ஒரு கட்டுரை படித்தபோது அமெரிக்காவில் உள்ள (இந்தியர்) ஒரு உயிரியல் ஆராய்ச்சியாளர் "Nature" பத்திரிகையில் திராவிடர்கள் கி.மு. 3000 வருடத்திற்கு முன் இந்தியாவிற்கு வந்ததாக குறிப்பிட்டு இருந்தார்.//
காலகட்டம் குறித்து பின்னால் வருகிறது, ஏன் எனில் மனிதர்கள் ஒரு இடத்தில் தோன்றி பின்னர் உலகம் முழுக்க பரவினார்கள் என்பதனை பெரும்பாலும் அனைவரும் ஏற்றுக்கொன்டிருக்கிறார்கள், ஒரு நிலப்பரப்பில் முதலில் போய் யார் குடியேறினார்களோ ,அவர்கள் பூர்வ குடிகள்.
இந்தியாவைப்பொறுத்தவரை திராவிடர்கள் முதலில் வந்தவர்கள், ஆனால் 3000 ஆண்டு அல்ல அதற்கு முன்னரே இருக்கும் எப்படியும் 10000 ஆண்டுகள் ஆவது இருக்கும்.
----------------
தி.தமிழ் இளங்கோ சார்,
வாங்க, நன்றி!
நமக்கு எதுக்கு சார் எல்லாம் ,நானொரு பொடியன் அய்யா.
கில்லாடியா இருக்கீங்களே, ரெண்டு வரி அரசியல் பேசியதை கப்புன்னு புடிச்சிட்டிங்க(யாரும் கவனிக்க மாட்டாங்கன்னு நினைச்சேன்)
----------------
குறும்பன்,
வாங்க,நன்றி!
ஆமாம் மத்திய அரேபியாவில் பெரிதாக நாகரீகம் இல்லை,வளர்ச்சியும் இல்லை, இருந்த கொஞ்ச நஞ்ச சான்றுகளும் அழிக்கப்பட்டு இருக்கலாம்னு சொல்கிறார்கள், கி.பி 623 க்கு அப்புறம் அங்கே நடந்தது பற்றி மட்டும் தான் உலக்கிற்கு தெரிய வருகிறது.
கி.மு காலத்தில் அவர்கள் எல்லாம் நாடோடிகள் என்றே அறியப்பட்டனர்.
அரேபிய பகுதியினை கிரேக்க,ரொமானியர்கள் கிழக்கு பகுதி என்றே அழைத்து அதன் காரணமாக தான் இப்போவும் மிடில் ஈஸ்ட் என அழைக்கப்படுகிறது, அவர்களுக்கு அரேபியாவுக்கு அந்த பக்கம் நாடுகள் இருக்கும் என்பதே கற்பனை கதை.
அசிரியர்களுக்கு கிழக்கு தேசம் அரேபியா என அறியப்பட்டதை தான் சொல்லி இருக்கிறேன்.இதெல்லாம் ரிலேட்டிவ் டெர்ம் தானே.அவர்களுக்கு கிழக்கு,நமக்கு மேற்கு :-))
ASA= east , கிரீக்கில்,Asia என அதனால் தான் பெயர்,மேலும் ஏசியா என்பது கடல் அரசன் போசிடோனின் மகளின் பெயரும் கூட.
இன்னும் விரிவாக பின்னால் வருகிறது.
-----------------------
//உலகம் முழுக்க ஆண்ட பரம்பரையின் வரலாறு இவ்வாறு கடவுளின் வழி வந்ததாகவே கட்டமைக்கப்பட்டுள்ளது. அப்போது தான் சாதாரண பொது மக்கள் அடங்கி நடப்பார்கள் என்பதால் இருக்கலாம்.//
அரசர்கள் மிகுந்த சக்தி படைத்தவர்களாக காட்ட இப்படி கடவுள் வழி வந்தவர்களாக, கடவுளின் அவதாரமாக எழுதிவைத்தார்கள்.
ஆனால் அதற்கு தலைகீழாக சாதாரணகுடியில் பிறந்தவர்களை அவர்களின் குலத்திலிருந்து பிரித்து அவர்களை தெய்வீகமானவர்களாகவும் காட்ட முயன்றார்கள். மதுரைவீரன், காத்தவராயன் இதற்கு உதாரணங்கள்.
//இந்தியாவைப்பொறுத்தவரை திராவிடர்கள் முதலில் வந்தவர்கள், ஆனால் 3000 ஆண்டு அல்ல அதற்கு முன்னரே இருக்கும் எப்படியும் 10000 ஆண்டுகள் ஆவது இருக்கும்.//
10000 ஆண்டுகளுக்கு முன்னர் இருக்குமா என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் கி மு 3000 என்பது தவறு. இது நேட்சர் பத்திரிகையில் வருவது கொடுமை. இதை எழுதியவர் பெயர் அரவிந்த சக்ரவர்த்தி.
//நம்ம ஊரில் அப்படிலாம் ஒரு முறையான ஆவணப்படுத்துதல் இல்லை,//
ஏனிப்படியாயிற்று?
இன்னொரு ஐயம்: முகமதுவின் வாழ்க்கையில் ந்டந்த போர்கள், இன்னும் பல - எல்லாவற்றையும் டைரி எழுதுவது போல் ஆண்டுவாரியாக எழுதி வைத்துள்ளார்கள். ஆனால் அதற்கு முன்பு 600 ஆண்டு வித்தியாசத்தில் ஏசுவிற்கு ஏதும் எழுதப்படவில்லை. ஏன்?
இன்னுமொரு கேள்வி. தயவு செய்து கேள்வி காண இங்கே வாருங்களேன்.
குட்டிப்பிசாசு,
ஆண்ட பரம்பரை கதை போல அல்ல காத்தவராயன், மதுரை வீரன் கதை, அவர்களை கொன்று விட்டு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க கூடாது என கடவுள் ஆக்கியது.
நந்தனார் ,தீப்புகுந்த கதை போல,அவரை எரித்து கொன்றுவிட்டு , சிவனடி சேர்ந்து மோட்சம் அடைந்தார் என சொல்லி நாயன்மார்களில் ஒருவராக சேர்த்துக்கொள்ளப்பட்டார்.
ஆனால் நாயன்மார்களில் எத்தனைப்பேர் இருந்தாலும் சைவ சமய குறவர் என அப்பர்,சுந்தரர், சம்பந்தர்,மாணிக்கவாசகர்களுக்கு மட்டும் தான் முதல் மரியாதை என்பதில் இருக்கு தந்திரம்.
திருவேர்க்காடு மாரியம்ம்மன் முதல் கொண்டு பெண்களின் கற்பினை சந்தேகப்பட்டு தீப்புக வைத்து , பின்னர் தெய்வமாக்கி விடுவார்கள்.
எங்க மாவட்டத்தில் தீப்பாய்ந்தம்மன் என்ற பெயரில் நிறைய சிறிய அம்மன் கோயில்கள் உண்டு. எல்லாம் இந்த கதை தான்.
கற்பின் பெயரால் தீப்புகுவது,இன்னொன்று உடன் கட்டை வகை.அனைவரையும் அம்மனாக்கி கோயில் கட்டிறுவாங்க :-))
-----
நேச்சர் ஒரு பத்திரிக்கை அவ்வளவு தான் ,சரியான ஆளை பிடித்தால் கட்டுரை வெளியிடலாம், முனைவர் பட்டம்,ஆய்வு என கொஞ்சம் கெத்து வேண்டும்.
ஆய்வுக்கு காட்டும் ரெபரென்ஸ் என்ன தரம்னு கவலைப்படாமல் இதான் ஆதாரம்னு காட்டி எழுத வேண்டியது தான் :-))
இந்தியன் ஜர்னல் ஆப் ஹிஸ்டரி அன்ட் கல்ச்சர் அப்படினு ஒரு பத்திரிக்கை, பேர பார்த்து ஏதோ இந்திய அரசாங்கம் நடத்துது என நினைக்கப்படாது, சி.பி.ராமசாமி அய்யர் ஃபவுண்டேஷன்ன்னு ஒன்னு தான் நடத்துது.
அவர்கள் ஒரு ஆய்வு கட்டுரை வெளியிட்டு இருக்காங்க, திருவள்ளுவர் ஒரு கிருத்துவர், ,புனித தாமஸ் அவ்வரை கிருத்துவராக மாத்திட்டார், திருக்குறள் கிருத்துவ நூல் அதற்கு மூலம் பைபிள்னு :-))
புனித தாமஸ் இந்தியாவுக்கு வந்தாரா, சென்னையில் இருப்பது அவரது கல்லறையான்னே சந்தேகம்,வாட்டிகன் அதை ஏற்பதே இல்லை. வாட்டிகனின் கூற்று புனித தாமசின் கல்லறை ஸ்பெயினில் இருக்கு என்பதாகும்.
இப்படி இருக்கும் போது நம்ம ஆளுங்க ஆய்வு எப்படி இருக்குன்னு பாருங்க :-))
தருமிய்யா ,
வாங்க,நன்றி!
நம்ம நாட்டில் மோனார்ச் தான் ,செனட் கவுன்சில் இல்லை, ரோம்,கிரீக்ல எல்லாம் மன்னரும், செனட் கவுன்சிலும் உண்டு, எனவே எல்லாம் கொஞ்சம் முறைப்படி இருந்தது எனலாம்.
இந்த வகையில் நம்மை விட முன்னேறிய கலாச்சாரம் ஆகிட்டாங்க. அங்கே மன்னர்கள் வருவார்கள் போவார்கள் ஆனால் நகர நிர்வாகம் செயல்பட்டு கொண்டே இருக்கும்,அப்படி ஒரு அமைப்பு. பொது நூலகம்,மியுசியம் என நிர்வாக ரீதியாக செயல்ப்பட்ட அரசு, அதுவும் நகர அரசு முறை.
நம்ம நாட்டில் மன்னர் தான் எல்லாம்.ஒரு மன்னர் போயிட்டா அதோடு எல்லாம் போயிடும், மாறிடும்.அதிகாரப்பூர்வமாக வரலாற்றினை எழுத ஆள் நியமிப்பதில்லை.புலவர்களின் பாட்டும்,மன்னரின் மங்கலாசன கல்வெட்டுகளுமே சாட்சி.
-----------
ஏசு கிருத்து அவரது 32-35 வயதுக்குள் கொல்லப்பட்டாச்சு, அவரோட காலத்தில் பின்ப்பற்றிய மக்கள் குறைவு.மேலும் அவர் அரசரோ,இல்லை சக்தி வாய்ந்த அரிஸ்டோகிரேட் குடும்பமோ இல்லை.
ஏசு ஞானம் வந்து போதனை செய்யும் முன் வரைக்கும் கார்பெண்டர் வேலை செய்தே சாப்பிட்டார்.எனவே அவரால் குறிப்பெழுத ஆள் எல்லாம் வைத்துக்கொள்ள முடியமால் போய்விட்டது.
முகமது அய்யாவின் கதையில் ,அவர் சாமானியர் என சொல்லப்பட்டாலும், 23 ஆண்டுகள் புனித செய்தியைக்கேட்கும் காலத்தில் வசதியானவராக இருந்தார்.
ஜிப்ரீல் கூட பேசுவதற்கு முன்னரே... அங்கிருந்த பாகன் வழிபடும் கோயிலான காபாவின் அஸரத்து அவர் தான்..அதாவது காபாவில் வழி பட வாருங்கள் என அழைப்பு விடுக்கும் வேலை, மேலும் அப்போதைய அரேபியாவில் முகமதுவின் குரேஷி இனம் செல்வாக்கானது, அஸ்ரத் எனும் பூஜாரி வேலை எல்லாம் சேர்ந்து அவர் சொன்னதும் மக்களை நம்ப வைத்தது.
அடுத்து மெக்காவில் இருந்து தொறத்திய பின் மெதினாவிற்கு போய் அம்மக்களின் நம்பிக்கையை பெற்று அவர்களின் தலைவனாக ஆகிட்டார், பின்னர் மெக்கா மீது படை எடுத்து வென்று கலிபா என மன்னன் ஆகிவிட்டார், என நல்லா குறிப்பெழுத ஆட்கள் கிடைத்து இருக்கலாம் :-))
------------------
ஆங்கில பதிவு எல்லாம் போட்டு இருக்கிங்களா, நீங்க சொன்னவற்றை போன்றே நிறைய முறை நானும் நினைத்து ,காரணம் தேடி இருக்கேன்,சிலப்பதிவுகளிலும் விவாதம் செய்திருக்கேன், உங்க கூட ஒன்னும் செய்யாம போயிட்டனோ?
நீங்க சொன்னதுக்கு பதில் சுருக்கமா சொல்வது கடினம், ஆனால் சுருக்கமாக சொன்னால், சமூக,பொருளாதார,அரசியல் நிலை எனலாம்.
இதனை எல்லாம் விரிவாக பார்ப்பதே இப்பதிவின் நோக்கம், உங்களுக்கு ஒரு பதிவா போட்டு அதனை சொல்லிவிடுகிறேனே.
(எல்லாம் தெரிஞ்சுக்கிட்டே கேட்ப்பீங்களே)
@வவ்வால்
இந்த அம்மன்கள் கதை எல்லாமே சுவாரசியமானது . மேற்கு தொடர்ச்சி மலை அருகே எங்கே என்று சரியாக நினைவு இல்லை . பேச்சியம்மன் கோயில் ஒன்று உள்ளது . அந்த கிராமத்தில் உள்ளவர்கள் பெண்குழந்தை பிறந்தால் .தங்கள் பெயரோடு பேச்சி என்று வரும் வகையில் பெயர் வைக்கிறார்கள் .
கதை என்னவென்றால் வேடவ குலத்து பெண்ணான பேச்சி .மிகுந்த தைரியசாலியாம் . ஒரு நாள் மலை தேன் ஒன்றை பார்த்து விட்டு தன அண்ணன்மார்களிடம் காட்டி இருக்கிறாள் . அவர்கள் அது பள்ளத்தில் இருக்கிறது எடுக்க முடியாது என்று சொல்லி விட்டார்கள் . (அவளுக்கு ஏழு அண்ணன்கள் ) .
ஆனால் பேச்சி ஒரு மரத்தில் ஊஞ்சல் கட்டி அதன் மூலம் அந்த தேன் அடை எடுத்திருக்கிறாள் . ஆண்பிள்ளைகளால் முடியாததை ஒரு பெண் செய்துவிட்டாலே .இதனால் தங்கள் வீரத்திற்கு அவமானம் ஏற்ப்பட்டதாக நினைத்து அவளின் அண்ணன்கள் கையிற்றை அறுத்து பேச்சியை கொன்று விட்டார்களாம் . அதன் பிறகு அந்த மலை பிரதேசத்தில் பிறந்த பெண்குழந்தைகள் தங்குவது இல்லை . இதனால் பயந்து போன ஊர்மக்கள் பேச்சிக்கு ஒரு கோயில் கட்டி அங்கு பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு பேச்சி என்று பெயர் இடுகிறார்கள் .
இந்த கதை நான் நேரடியாக அந்த மக்களிடம் கேட்டு தெரிந்து கொண்டது .
அதே போல் திருவொற்றியூரில் உள்ள பட்டினத்தார் சமாதி அருகே வாழும் மக்களிடம் கேட்டு பாருங்கள் . அவர்கள் பட்டினத்தார் எப்படி ஜோதியில் ஐக்கியமானார் என்று சொல்வார்கள் .
ஒரு மூட்டை கற்பூரத்தை போட்டு கொளுத்திவிட்டதாக சொல்கிறார்கள் .
இன்னும் நிறைய கதையிருக்கு பாப்போம் நேரம் இருந்தால் தனி தனியாக எழுதலாம் ..
அஞ்சா ஸிங்கமே,
வாரும்,
ஆமாம் எலா அம்மன்களும் இப்படி உருவானவர்கள் தான்.
அம்மன் கோவிலில் தீமிதிப்பது கூட, அநியாமாக ஒரு அப்பாவி பெண்ணை தீப்புக வைத்துவிட்டோமே என்ற குற்ற உணர்ச்சியால் மக்கள் செய்வதாக இருக்கலாம்.
----------
திருவொற்றியூர் பட்டிணத்தார் சமாதி ,முன்னர் வந்திருக்கேன், ராகவேந்திரா தியேட்டர் சந்து தானே. அப்போ எல்லாம் அங்கே மாலை வேளையில் போகவே பயப்படுவாங்க.
எரிச்சு தான் கொன்றார்களா?
வடலூர் ராமலிங்க அடிகளையும் வீட்டோடு வைத்து எரித்துவிட்டதாகத்தான் சொல்வார்கள்.
அவரது பக்தர்கள் சண்டைக்கு வரக்கூடாதுன்னு ...ஜோதியில் ஐக்கியமாகிட்டதாக கதைய சொல்லுறாங்க.அந்த பக்கத்து பெருசுகல் சொல்வது இது.
அந்த பகுதி போனால் படத்துடன் பதிவு போடுறேன்.(இப்போ கொஞ்சம் படம் இருக்கு நல்லா இல்லை)
@வவ்வால்
////திருவொற்றியூர் பட்டிணத்தார் சமாதி ,முன்னர் வந்திருக்கேன், ராகவேந்திரா தியேட்டர் சந்து தானே. அப்போ எல்லாம் அங்கே மாலை வேளையில் போகவே பயப்படுவாங்க.///////
அதெல்லாம் பழைய காலம் .இப்போ ராகவேந்திரா, .வெங்கடேஸ்வரா, பாலகிருஷ்ணா , என்று எந்த தியேட்டரும் இல்லை .
எல்லாவற்றையும் , இடித்து பெரிய நகராகவே மாற்றி விட்டார்கள் . ஒரு கிரவுண்ட் ஒரு கோடிக்கு மேல் போகிறது .
தயிரியமாக வரலாம் ........................
//வடலூர் ராமலிங்க அடிகளையும் வீட்டோடு வைத்து எரித்துவிட்டதாகத்தான் சொல்வார்கள்.//
எம்.ஆர்.ராதா கூட அவர் இறுதிக்காலத்தில் நடித்த படமொன்றில் குறிப்பிடுவார்.
//நம்ம நாட்டில் மன்னர் தான் எல்லாம்.ஒரு மன்னர் போயிட்டா அதோடு எல்லாம் போயிடும், மாறிடும்.அதிகாரப்பூர்வமாக வரலாற்றினை எழுத ஆள் நியமிப்பதில்லை.புலவர்களின் பாட்டும்,மன்னரின் மங்கலாசன கல்வெட்டுகளுமே சாட்சி.//
மன்னர் மதம் மாறும் போது, முந்தைய மதத் தொடர்பான நூல்களும் இலக்கியங்களும் அழிப்பதுண்டு.
//ஏசு, முகம்மது//
ஏசு, முகம்மது போன்றவர்கள் உண்மையாக இருந்தார்களா? என்ற கேள்வி தற்போது கேட்கப்படுகிறது. இவர்களின் வரலாறு 500 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டவை என சொல்லப்படுகிறது.
அஞ்சா ஸிங்கம்,
// ஒரு கிரவுண்ட் ஒரு கோடிக்கு மேல் போகிறது . //
ஒரு கோடின்னு சொன்னப்பிறகு இப்போ வேற பயம் வருது, எங்கே தகிரியம வர்ரது :-))
ஒரு காலத்தில அந்தப்பக்கம சுத்துவேன், அப்போவே டிராபிக் டெர்ரரா இருக்கும்.இப்போவும் டிராபிக் செமையா இருக்கு.
பேசின் பிரிட்ஜ் பக்கம் வந்தேன்,அது வரிக்கும் டிராபிக் இல்லை பாரத் தியேட்டர் தாண்டினா அப்படியே முட்டிக்குது.
---------
குட்டிப்பிசாசு,
எம்.ஆர்.ராதா போல,நிறைய விஷயம் கவனிச்சு இருக்கீரே,
ஏசு,முகமது எல்லாம் இருந்து இருப்பாங்க,ஆனால் இப்போ சொல்லப்படுவது போல புனிதர்களா இருந்தார்களா என்பது கேள்விக்குறியே.
முகமது காலம் எல்லாம் ரொம்ப லேட்டஸ்ட் 7 ஆம் நூற்றாண்டு எல்லாம் பல நாடும் முன்னேறிய காலம்.
அப்போ அரேபியா தான் பின் தங்கி இருந்த நாடு, யாரோ ஒருத்தர் புதுசா சொன்னதும் கூட்டமா நம்பி இருக்கலாம்.
மெக்காவின் ஜனத்தொகை சில ஆயிரம் தான்,அதே போல மெதினாவும்.
முகமது மெதினாவில் இருந்து 500 பேரோடு போய் மெக்காவில் இருந்து சண்டைக்கு வந்த 1500 பேரை வீழ்த்தி மெக்காவை பிடித்து கலிபா ஆனார்னு போட்டு இருக்கு. அம்புட்டு தான் படை பலம்.
நிறைய மிகைப்படுத்தல் உண்டு.
பல விஷயங்களைக் கோர்த்து தருகிறீர். தொடர்க. ஆனால் இச்ச்ய்தி பற்றி விவரிக்கவும்..
இயேசுவின் வாழ்விற்கே சான்று ஏதும் கிடையாது. இயேசு தன் வாழ்நாளில் உலகம் அழியும் எனப் பார்த்தார். கடைசியில் என் கடவுளே! என்னை ஏன் கைவிட்டாய் எனப் புலம்பி இறந்தார். சீடர்கள் ஜெருசலேமில் உலக அழிவை எதிர்பார்த்து யூதர்களை மட்டும் சேர்த்து சொத்துக்களை விற்று- எபோனியர் என்னும் பெயரில் வாழ்ந்தனர். பவுல் என்பவர், இவர் யூதரல்லாதவர்களை சேர்த்து உலகம் அழிவு ஏசுவின் இரண்டாவது வருகை- நம் வாழ்நாளில் என்றார்.
65- 70 போரில் 60 லட்சம் யூதர்கள் கொல்லப்பட்டனர், சுவிசேஷங்கள் புனையப்பட்டது. கிறிஸ்து எனில் யூதர்களின் ராஜா போய் கடவுளின் மகன் என ஆரியக் கோட்பாடு நுழந்தது. சீடர்கள் இதை ஏற்கவில்லை என்பதை மறைக்க சீடர்கள் வெவ்வேறு நாடு சென்று இறந்தார்கள் எனக் கட்டுக்கதைகள் நான்காம் நூற்றாண்டில் புனையப்பட்டது.
//அவர்கள் ஒரு ஆய்வு கட்டுரை வெளியிட்டு இருக்காங்க, திருவள்ளுவர் ஒரு கிருத்துவர், ,புனித தாமஸ் அவ்வரை கிருத்துவராக மாத்திட்டார், திருக்குறள் கிருத்துவ நூல் அதற்கு மூலம் பைபிள்னு :-))//சாந்தோம் சர்ச் இதை பரப்ப பல கோடிகள் செலவு செய்து வருகிறது. நீங்கள் சொல்லும் நிறுவனத்தின் புத்தகப் பெயர் அல்லது இதழ் மாதம்- கட்டுரை ஆசிரியர் பெயர் தரவும்.
தேவபிரியா சாலமன்,
வாங்க,நன்றி!
எனது பதிவுகளை அடிக்கடி கவனிப்பதில்லை, அதனாலேயே தாமதம் ஆகிவிட்டது.
கிருத்து சாதாரன குடும்பத்தில் பிறந்து , சில கொள்கைகளை பிரச்சாரம் செய்தவ்ராக மட்டுமே இருக்க வாய்ப்பிருக்கிறது.
அவரை புனிதராக காட்ட மற்ற கட்டுக்கதைகள் புனையப்பட்டிருக்கலாம்.
உண்மையில் கிருத்துவின் பெயர் என்னவென்றே எங்கும் குறிப்பிடப்படவில்லை, அவருக்கு சூட்டிய ஜீசஸ் கிரைஸ்ட்
ஜீஸஸ்- சேவியர்- காப்பவன்.
கிரைஸ்ட் = மெசெஞ்சர்= இறைத்தூதர்
என்பது ஒரு பட்டப்பெயரே ,பிற்காலத்தில் ரோமானியர்கள் கிருத்துத்திற்கு மாறியப்போது செய்திருக்கலாம்.
உண்மையான பெயர் ஜெஹோவா என தோராயமாக தான் சொல்கிறார்கள்.
எனவே பெயர் ,ஊர் தெரியாத ஒருவர் , ஏதேனும் பிரசங்கம் செய்து , மாண்டிருக்கலாம் ,பின்னர் அவரையே புனிதர் ஆக்கி பின் தொடர்பவர்கள் பெருகி , மதமாக மாறியிருக்கலாம்.
ரோமானிய சக்ரவர்த்தி காண்ஸ்டான்டைன் மதம் மாறிய பின்னரே கிருத்துவம் வேகமாக பரவியது, பைபிள் உருவாக்கப்பட்டு,பல மத சட்டம்,சம்பிரதாயம் உருவானது ,ஆனால் அனைத்தும் பழைய ரோமானிய பாகன் வழிப்பாட்டின் முறையிலேயே.
இன்னும் விரிவாக பதிவில் சொல்கிறேன்.
--------
இந்த சுட்டியில் பார்க்கவும்,
http://ishwarsharan.wordpress.com/parts-2-to-9/indian-historian-makes-a-mockery-of-indian-history-veda-prakash/
இந்த தளம் இந்து மத சார்புள்ளவர்களால் நடத்தப்படுகிறது, எனவே இந்து மதத்திற்கு எதிரான கருத்துக்களுக்கு மட்டும் முக்கியம் கொடுத்து எதிர்த்திருக்கிறார்கள் என நினைக்கிறேன்,
ஆனால் ஆதாரங்கள்,தரவுகள் என பட்டியலிட்டே கருத்தினை வைக்கிறார்கள்.
கி.பி 372 வரையில் பைபிளே இல்லை ,அப்படி இருக்கும் போது வள்ளுவர் பைபிள் படித்து திருக்குறள் எழுதினார் என்பதை எல்லாம் சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பியுள்ளார்கள்.
புனித தாமஸ் வரலாறு ,என மேலும் பல கட்டுரைகள் உள்ளது,நான் முழுவதும் படிக்கவில்லை.
Mr. Vovval
Once again detailed writings. I wonder how you get time to type all those, (I pray for more, You are doing excellent)
I Work in Yemen, Yemeni's do have only one language ARabic, (ofcourse you can hear different slangs, like coimbatore tami, Chennai tamil)
Please write more about Yemen, Which I love to know.
Many thanks and appreciate your excellent writings.
K.Sundaramurthy
கே.சுந்தரமூர்த்தி சார்,
வாங்க,நன்றி!
ஏதோ நம்மால் முடிந்ததை எழுதி வைக்கிறேன்,நல்லா இருக்குன்னு சொன்னா சந்தோஷம்.
யேமானி ,அரபி எல்லாம் ஒரே பெர்சியன் - அராமைக் கூட்டில் உருவான டையலெக்ட் தான்.(இந்தோ-இரானியன் வகைனும் சொல்வாங்க)
கிட்ட தட்ட ஒரே போல தான், ஆனால் யேமன், அரேபியா என தனி நாடு என்பதால் தனி மொழின்னு வரையறுத்துவிட்டார்கள்.
அரேபிய தீபகற்பத்தில் மட்டும் 64 மேஜர் டயலக்ட்கள் உண்டுன்னு படித்த நினைவு.
கண்டிப்பாக நீங்கள் குறிப்பிட்டவற்ரையும் எழுத முயல்கிறேன்.
நன்றி!
அரேபியா, அட்லாண்டிஸ், அம்மன் என பல அரிய தகவல்கள் அறியத்தந்தமைக்கு நன்றி. அட்லாண்டிஸ் லெமூரியா பிடித்த ஒன்று. தொடர்ந்து நீங்கள் எழுத வேண்டும்.
//உங்களுக்கு ஒரு பதிவா போட்டு அதனை சொல்லிவிடுகிறேனே.//
இன்னும் போடலையான்னு பார்க்க வந்தேன்.
(எல்லாம் தெரிஞ்சுக்கிட்டே கேட்ப்பீங்களே) //
அப்டில்லாம் இல்லைங்க...வவ்ஸ். நிஜமா தெரிஞ்சுக்கத்தான் கேட்டேன்...கேட்டுக்கிட்டே இருக்கேன்.
Post a Comment