Monday, March 04, 2013

என்ன கொடுமை சார் இது-11


(ஹி...ஹி ஆடைக்கட்டி வந்த நிலவோ?)


வெட்கம் கெட்ட விளம்பர மோகம்!

கராத்தே வீரர் ஷிஹான் ஹீசைனி அடிக்கடி விளம்பரத்துக்காக எதையாவது செய்வார் ,அதுவும் அம்மையார் ஆட்சிப்பொறுப்பில் இருக்கும் காலங்களில் எல்லாம் தன் மீது கவனத்தினை திருப்ப தவறாமல் ரத்தத்தில் படம் வரைவது, அல்லது கோணங்கி தனமாக  எதையாவது செய்து கவனம் ஈர்க்க முயல்வார், அதன் உச்சக்கட்டமாக்க இப்பொழுது ஒரு பைத்தியக்காரத்தனமான வேலை செய்துள்ளார், சுமார் 11.5 லிட்டர் மனித இரத்தத்தினை மைனஸ் 27 டிகிரி செல்சியசில் உறைய வைத்து அதனைக்கொண்டு அம்மையாரின் மார்பளவு(BUST)  ஒரு சிலை செதுக்கியுள்ளார் , இதற்கு அவர் நடத்தும் வில்வித்தை பயிற்சி நிலைய மாணவர்களிடம் இருந்து  இரத்தம்  சேகரித்துள்ளார்,மேலும் அவர் ரத்தமும் பயன்ப்படுத்தி இருக்கிறார்.இதற்காக எட்டு ஆண்டுகளாக அவரது இரத்தத்தினை சேகரித்து வைத்திருந்தாராம், இப்படி செய்வதற்கு பதில் இரத்தம் தேவைப்படும் நோயாளிகளுக்கு தானமாக கொடுத்திருக்கலாம், ஒரு யூனிட் இரத்தம் என்பது சுமார் 200 மிலி என நினைக்கிறேன், எனவே 11.5 லிட்டர் ரத்தமும் சுமார் 57 யூனிட் அளவுக்கு வருகிறது, சாதாரணமாகவே 2 யூனிட் இரத்தம் இருந்தாலே ஒரு மேஜர் ஆபரேஷன் செய்யலாம்,எனவே சுமார் 114 மேஜர் ஆபரேஷன்களை இவர் சிலை வடிக்க பயன்ப்படுத்திய ரத்தித்தின் மூலம் செய்திருக்கலாம்,அத்தனை உயிர்களை காப்பாற்றி இருக்கலாம்,எத்தனையோ பேர் ஆபரேஷன்களுக்கு ரத்தம் கிடைக்காமல் அலைகிறார்கள், இணையம், தொலைக்காட்சி என விளம்பரமெல்லாம் கொடுக்கிறார்கள், ஆனால் ஒரு மனிதன் தனது அல்ப விளம்பர மோகத்திற்காக  விலைமதிப்பில்லா மனித இரத்தத்தினை சிலையாக்கி வீணடித்துள்ளார், இதனையும் தொலைக்காட்சிகள் செய்தியாக்கி மகிழ்கின்றன, இதற்கெல்லாம் ஒரு தண்டனையும் கிடையாதா?

என்ன கொடுமை சார் இது!
-------------------

கடலில் கரையும் கண்ணீர் துளிகள்!

இலங்கையில் முள்ளி வாய்க்கால் கோரச்சம்பவம் நடந்து கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் ஆகிறது ,அப்பொழுதே புலிகள் தலைவர் பிரபாகரன் மற்றும் குடுப்பத்தார் கொல்லப்பட்டது குறித்தான படங்கள் நக்கீரன் பத்திரிக்கை முதல் பல பத்திரிக்கைகளிலும்,இணைய தளங்களிலும்  வெளியானது,ஆனால் சில  தமிழக அரசியல் தலைவர்கள் இறப்பினை உறுதிப்படுத்தாமல் பிரபாகரன் உயிரோடு வருவார் என்பதாகவே மேடைகளில் பேசிவந்தனர், இவ்வாறு செய்வதால் போராட்டம் முடிவுக்கு வராமல் தொடரும் என நினைத்தார்களோ என்னமோ,ஆனால் அப்படிப்பேசியது ,நடந்த படுகொலைகளின் தீவிரத்தினை   உணரவிடாமல் மக்களை செய்து விட்டது என்பேன்.சில ஆண்டுகள் கடந்த பின் இப்பொழுது சேனல் நான்கில் பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் துப்பாக்கியால் துளைக்கப்பட்டு இறந்த காட்சியினை வெளியிட்ட உடன் , தமிழக அரசியல் தலைவர்கள் இது நாள் வரையில்  கேள்வியேப்படாமல் இன்று தான் கேள்விப்பட்டது போல பேசுவது பல்வேறு கேள்விகளையும் எழுப்புகிறது, இவர்கள் ஈழ மக்களுடன் தொடர்பில் இருப்பதாகவும், அங்கு நடக்கும் சம்பவங்கள் தங்களுக்கு மட்டும் தெரிய வரும் என்பது போல இத்தனை நாட்களாக பேசி வந்தது  எல்லாம் கட்டுக்கதையா?

கோரச்சம்பவம் நடந்த அன்றே உண்மையை விளக்கி  பேசியிருந்தால் தமிழக மக்களின் மனதில் ஒரு மாற்றம் கொண்டு வந்திருக்கும், ஆனால் மொன்னையாக ,தெளிவில்லாமல் பேசி நடந்த கோரச்சம்பவத்தின் தாக்கம் தமிழக மக்களின் மனதில் பதியவிடாமல் செய்துவிட்டார்கள்.

ஒரு போராளி ஒரு அதிகார மையத்திற்கு எதிராக போராடினால் அவனை மட்டுமே  எதிரியாக பார்க்க வேண்டும், ஆனால் அவனது குடும்பத்தினரையும் எதிரியாக நினைத்து ஒரு சிறுவனைக்கூட விட்டு வைக்காமல் அழித்துவிட்டு ,சர்வதேச அரங்கில் ஒரு நாட்டின் அதிபர் என தலை நிமிர்த்தி ஒரு  மனிதன் நடக்கிறான்,அதனை உலக நாடுகளும் வேடிக்கைப்பார்ப்பதை எல்லாம் பார்த்தால்,மனித குலம் நாகரிமடைந்துவிட்டது, நாம் வாழும் உலகம் ஜனநாயக விதிகளுக்குட்பட்டு இயங்குகிறது என்பதெல்லாம் வெறும் ஏட்டு சுரக்காயாக கற்பிக்கப்படும் சித்தாந்தங்கள் மட்டுமே என்பது தெளிவாகிறது.

மேலும் இராச பக்சே, பாலச்சந்திரன் படுகொலைக்கும் இலங்கை இராணுவத்துக்கும் தொடர்பில்லை என்கிறார் விட்டால் இலங்கைக்கும் ,இலங்கை இராணுவத்துக்குமே தொடர்பில்லை என்று சொன்னாலும் நாம் வேடிக்கை மட்டுமே பார்ப்போமாக :-))

நல்ல வேளை சின்னப்பையன் ,அப்பா போன துக்கம் தாங்காமல் ,ஒரு துப்பாக்கிய எடுத்து நெஞ்சில ஐந்து முறை அவனே சுட்டு தற்கொலை செய்துக்கொண்டான் என சொல்லாமல் விட்டார்களே என நிம்மதியடையலாம்.


இதில் சேனல் நான்கு பல தவணைகளாக ஆண்டுக்கணக்கில் காணொளிகளை வெளியிட்டு வருவதும் சரியல்ல, ஒரு கோரச்சம்பவத்தினை தங்கள் சேனலின் டி.ஆர்பி ரேட்டிங்க் அதிகரிக்க உதவும் ஒரு நிகழ்ச்சியாக பயன்ப்படுத்துகிறார்கள் ,மேலும் படுகொலைகளை படமெடுத்தவர்களோ நல்ல விலைக்கு பேரம் பேசி கொஞ்சம் கொஞ்சமாக விற்பதாகவும் தெரிகிறது, இதனை போர்க்குற்ற ஆவணமாக கருதி சரியான காலத்தில் முழுமையாக வெளிப்படுத்தினால் தான் ,பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலன் தரும், கொலை செய்யப்பட்டவர்களுக்கும் அஞ்சலியாக அமையும், ஏன் எனில்  சேனல் நான்கின் காணொளிகள் மட்டுமே இப்பொழுது உள்ள ஒரே போர்க்குற்ற ஆவணம், ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணையத்திலும் இந்த ஆவணப்படங்கள் காட்டப்பட்டுள்ளது, ஆனால் முழுமையாக காட்டாமல் பகுதியாக காட்டுவதால் சரியான தாக்கம் ஏற்படுத்தாமல் போய்விடக்கூடிய அபாயம் உள்ளதை கருத்தில் கொண்டு சேனல் நான்கு செயல்ப்பட வேண்டும்.

பாலச்சந்திரன் படுகொலை குறித்து, விரிவாகவும் தெளிவாகவும் தனது கருத்துக்களை மூத்த பத்திரிக்கையாளரும் ,வலைப்பதிவருமான திரு. அமுதவன் அவர்கள் ஒரு பதிவிட்டுள்ளார்,அவசியம் படிக்க வேண்டிய ஒன்று.

அமுதவன் பக்கங்கள்: பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் படுகொலை…….நமக்குள் எழும் கேள்விகள்

# இதில் நம்ம ஊர் அரசியல் கட்சிகள் இன்னமும் வழக்கம் போல மேடைக்கச்சேரி மட்டுமே செய்துக்கொண்டுள்ளன. கழகமோ ராஜ்ய சபாவில் பேசி அதன் மூலம் மற்றக்கட்சிகளுக்கு புரிய வைத்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வைப்போம் , ஜெனிவா மாநாட்டில் இலங்கைக்கு எதிராக இந்தியாவை ஓட்டளிக்க செய்வோம் என்கிறது, எனக்கு ஒன்னு விளங்கவில்லை  தி.மு.க மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சி தானே , கூட்டணிக்கட்சியாக மத்திய அரசை நேரடியாக வலியுறுத்தி ஒரு முடிவெடுக்க  வைக்க  முடியாதா? அப்படி பேசக்கூட முடியாத நிலையில் என்ன கூட்டணி வேண்டிக்கிடக்கு?

இதில் உட்சபட்ச கொடுமை என்னவெனில் ராஜ்யசபாவில் விவாதம் முடிந்த அன்றே காங்கிரசை சேர்ந்த ஒரு மத்திய அமைச்சர் (சல்மான் குர்ஷித்) சொல்கிறார் ,இலங்கை எதிரி நாடல்ல, ஜெனிவாவில் என்ன முடிவெடுப்போம் என்பதை இப்பொழுது சொல்ல முடியாது என்கிறார், இதன் மூலமே ராஜ்யசபாவில் தொண்டைக்கிழிய பேசினால் எல்லாம் வேலைக்காவாது என்பது நன்கு புலப்படும்.

தி.முக இப்படி செய்வதற்கு பதில் கொக்கு தலையில் வெண்ணை வைத்து கொக்கு பிடிக்க முயற்சிக்கலாம் :-))

என்ன கொடுமை சார் இது!
--------------

படிப்பது இராமாயணம் இடிப்பது பரிணாமம்!

வழக்கமாக மார்க்கப்பந்துக்கள் பரிணாமம் இல்லை ,உலகம்,உயிர்கள் அனைத்தும் அல்லா படைத்தார், விரித்தார் என கதை விடுவது வழக்கமே, ஆனால் அவர்களோடு சோடிப்போட்டுக்கொண்டு சில வைதீக மதப்பற்றாளர்களும் இப்பொழுது பரிணாமம் இல்லைனு கிளம்பி இருக்கிறார்கள்.

இதில் என்ன காமெடி எனில் , மார்க்கப்பந்துக்களை பொறுத்த வரையில் அறிவியல் பார்வைக்கொண்ட நாத்திகர்களும் காஃபீர்கள் தான் , இறை நம்பிக்கைக்கொண்ட வைதீக மதப்பற்றாளர்களும் காஃபீர்கள் தான்,ஆனால் நாத்திகர்கள் முன் வைக்கும் பரிணாமவியல் கோட்ப்பாட்டினை எதிர்க்க மட்டும் மார்க்கப்பந்துக்கள் வைதீகர்களுடன் கைக்குலுக்கிக்கொள்கிறார்கள் :-))

வைதீக மதப்பற்றாளர்கள் பரிணாமத்தினை கேள்விக்குள்ளாக்க ,மார்க்கப்பந்துக்கள் கேட்ட அதே கேள்வியான , பரிணாமத்தில் இடைப்பட்ட உயிரினத்தின் படிமம் இருக்கிறதா எனக்கேட்கிறார்கள், அதாவது மனிதன் குரங்கிலிருந்து உருவானவன் என்றால் மனிதனுக்கும் குரங்குகிற்கும் இடைப்பட்ட வடிவில் ஒரு உயிரினம் இருக்க வேண்டும்,அதன் படிமம் எங்கே என கேட்கிறார்கள்.

இக்கேள்வியை அரேபிய மதத்தினை பின்ப்பற்றுபவர்கள் கேட்கலாம்,ஏன் எனில் அவர்களுக்கு இராமாயணமெல்லாம் தெரியாது, படித்திருக்க மாட்டார்கள்,ஆனால் சதா சர்வகாலமும் ,எம்பெருமான் கிருஸ்ணாவின் சரச சல்லாப லீலைகளை நினைத்து புளகாங்கிதம் அடையும் வைதீகர்கள் அப்படி எல்லாம் கேட்கலாமோ?

பகவான் பெருமாளின் தசாவாதரங்களில் ஒன்றான இராமாவதாரத்தின்  மகிமையை போற்றிப்பாடும் இராமாயணத்திலேயே பரிணாமத்திற்கு ஆதரவான சான்றுகள் உள்ளது, நம்பாதாவர்கள் கீழ்க்கண்ட படத்தினை காணவும்.அனுமார் மனிதனைப்போல் இருகால்களில் நிற்கிறார், உடலும் மனித உடலை ஒத்துள்ளது ,ஆனால் குரங்கு போல முகமும்,வாலும் உள்ளது,இதன் மூலம் குரங்கிற்கும்,மனிதனுக்கும் இடைப்பட்ட உயிரினம் இருந்தது தெளிவாகிறது, அனுமான் படத்தினை பார்த்த பின்னும் பரிணாமத்தினை நம்பாதவர்கள், பகவான் எடுத்த தசாவதாரத்தினையும் நம்பாதாவர்கள் ஆவார்கள் :-))

இராமாயணத்தினை படித்துவிட்டு பரிணாமத்தினையும் எதிர்க்க நினைக்கும் வைதீகர்கள் படிப்பது இராமாயணம் இடிப்பது பரிணாமம் என்ற செயலை செய்யலாமா?

என்ன கொடுமை சார் இது!
---------------

மதமெனும் போதை!
புதுவை அண்ணா சாலையில் இராஜா திரையரங்கம் அருகில் இப்புண்ணியமிகு திருக்கோவில் உள்ளது, மாலை வேளையில் பக்த கோடிகள் பெரும் திரளாக வருவது வாடிக்கை. கோபுர தரிசனம் கோடி புண்ணியமாம் எல்லாம் கன்னத்துல போட்டுக்கோங்க!


கோயிலைபார்த்து பரவசமானீர்களா,வாங்க அப்படியே பக்தி பரவசமாகி ஏகாந்தமான பக்தர்களையும் தரிசிப்போம் ..........


பக்தி பெருக்கெடுத்த சில பக்தர்கள், புதுவையின் புகழ்மிகு புண்ணிய தீர்த்தம் அருந்திவிட்டு அம்மனிடம் அடைக்கலமாகிவிட்டார்கள் போலும் :-))

என்ன கொடுமை சார் இது!
----------------

பின் குறிப்பு:

படங்கள் மற்றும் தகவல் உதவி ,

விக்கி,கூகிள் இணைய தளங்கள் ,நன்றி!
-------------------

125 comments:

சஞ்சய் said...

//பக்தி பெருக்கெடுத்த சில பக்தர்கள், புதுவையின் புகழ்மிகு புண்ணிய தீர்த்தம் அருந்திவிட்டு அம்மனிடம் அடைக்கலமாகிவிட்டார்கள் போலும் :-))//

நீங்களும் போட்டோவில் இருப்பது போலத் தெரிகிறது.

…//அனுமான் படத்தினை பார்த்த பின்னும் பரிணாமத்தினை நம்பாதவர்கள், பகவான் எடுத்த தசாவதாரத்தினையும் நம்பாதாவர்கள் ஆவார்கள் :-))//

…இராமாயணத்தை கேள்விகேட்கும் இவர்களுக்கு நரகம் தான்.

Anonymous said...

வவ்சு, பதிவு அருமைங்க.

இந்தியா செய்த துரோகம் மறக்க முடியாதது...பலன் விரைவில் கிடைக்கும்...


by---Maakkaan.


சார்வாகன் said...

சகோ வவ்வால்,
வணக்கம்.
சென்ற பதிவில் குரங்கின முன்னோரில் இருந்து பரிணமித்த ஹோமோ சேஃபியன் கோமகள் அசின் வாழ்க ஹி ஹி
**
ஷிகான் ஹுசைனி எனக்கு தெரிந்த நாள் இருந்தே சர்ச்சைக்குறிய ஆள்தான். சரி இரத்த்த்தின் இரத்தமே என்பதை எப்பூடி(?!) புரிந்து கொண்டாரோ??
**
ஈழப் பிரச்சினையில் முள்ளிவாய்க்கலில் இருந்து என்ன நடந்தது,நடக்கிறது என்பது சரியாகத் தெரிவது இல்லை.

வல்லரசுப் போட்டியில் இரு அணியும் இராஜபக்சேவை மிரட்ட , அவ்வப்போது ஏதோ செய்வதும், ஐ.நா என்று பூச்சாண்டி காட்டுவதை உணர முடியும். வீட்டோ அதிகாரம் கொண்ட சீனா ,இரஷ்யா இருப்பதால் இராஜபக்சே அசருவது இல்லை.இராசபக்சே அல்லாத ஜனநாயக சிங்கள இயக்கங்களுடன் இணைந்து ஒரு சுமுக தீர்வு நோக்கி ஈழ தமிழர்கள் போராடினால் மட்டுமே ஏதாவது நல்லது நடக்கும்.

அதை விட்டு இந்தியா,மேலை நாடுகள் உதவி செய்து தீர்வு பெற்றுக் கொடுக்கும் என்பது நடக்குமா??

இதில் இந்தியா என்ன ஈழத்தில் செய்யப் பார்த்தது,செய்கிறது என்ன செய்யும் என்பதும் புரியாது.

ஈழம் நம் இதயத்திற்கு நெருக்கமான பிரச்சினை என்பதால், மூளை சொல்வதை நம் உண‌ர்வே கேட்பது இல்லை!!

**

பரிணாம எதிர்ப்பில் மதவாதிகள் ஒன்று கூடுவது நமக்கும் மகிழ்ச்சியே. ஒரே கல்லில் பல மாங்காய் ஹி ஹி.

பரிணாமம் நீண்ட காலம் நடக்கும் செயல் என்பதால், நுண்ணுயிர்கள்,பழ ஈக்களில் நடைபெறும் பரிசோதனைகள் பரிணாமத்தை மெய்ப்பிக்க போதுமானது.பரிணாமம் என்பது கைவிடப்படும் சாத்தியமற்ற ஒன்று.
ஜீனோம் மாற்றங்கள் தொடர்ந்து ஆவணப் படுத்தப் படுவதால் பரிணாம பரிசோதனைகள் மூலம் அனைவரும் ஏற்கும் வண்ணம் நிரூபணம் வரும்.
இப்போ இரத்தப் பரிசோத்னை மையம் போல் தெருவுக்கு தெரு ஜீனோம் பரிசோத்னை மையம் வரும். அப்போதே அனைவரும் அறிவார்.


நாம் "எங்கள் மத பிரிவினர் என்றுமே [இறையால்]வழிநடத்தப் பட்ட பரிணாமம் என்னும் கொள்கைக்கு வரவே மாட்டோம்,அது மத விரோதம்" என உறுதி மொழி கேட்டால் மார்க்க பந்துக்கள் நழுவும் அழகே அழகு. ஏன் எனில் காலப் போக்கில், இக்கொள்கைக்கு வந்தே ஆக வேண்டும் என அவர்களுக்கும் தெரியும். அவ்வளவு மதத்தின் சான்றுகள் மீது நம்பிக்கை!!

**
வேத,உபநிஷத்துகளில் பல நாத்திக,அக்கால உணர்ந்த உண்மைகள் எழுதி இருப்பதை மொழி பெயர்ப்பில் திரிப்பதே இந்துத்வ மதவாதிகளின் வேலை.

பாருங்கள் உலகம் பழமையானது என்பதை ஒரு அளவுக்கு சொல்லி இருக்கிறார்கள்.

அனுமார் ஹோமோ எரக்டசு போல் இருப்பதும் ஒரு வியப்பான விடயமே. ஹோமோ எரக்டஸ் இந்தியாவில் வாழ்ந்தது,மொழி பேசியது என்பதால் குரங்கு பேசியது என்பது அப்போது சாத்தியமே. இடைச்சொருகலில் இராமன் கதை வந்து விடுகிறது.
http://en.wikipedia.org/wiki/South_Asian_Stone_Age
Homo erectus lived on the Pothohar Plateau, in upper Punjab, Pakistan along the Soan River (nearby Rawalpindi) during the Pleistocene Epoch. Soanian sites are found in the Sivalik region across what are now India, Pakistan and Nepal.[2]

இஸ்க்கான் குரு பிரபுபாத பரிணாமத்தை எதிர்த்தால் அவர் சிஷ்யன் நம்ம பாகவதர் மாப்ளேயும் எதிர்ப்பார். பிரபுபாத கிஷ்னர் அவதாரம் என்பதால் படைத்த அவருக்கு தெரியாதா என் மாப்ளே நினைக்கிறார்!!!
**

மத போதை, மது போதை கொஞ்சம்தானே வித்தியாசம்!!

அக்காலத்திலும் சோம பானம் அருந்தி, படைத்து வழிபட்டார்கள் என்பதால், வியப்பு இல்லை!!

நன்றி!!

கோவை நேரம் said...

வணக்கம் வவ்வால்...
ரொம்ப நாளாவே ஒரு டவுட்டு..
நீங்க அசின் ரசிகரா...எப்பவும் ஏதோ ஒரு போட்டோ போட்டு விடறீங்க...

அப்புறம்..ஒரு யூனிட் ரத்தம் 350 மிலி...இந்த அளவு தான் எடுத்தாங்க எனக்கு...

புதுவையில் இருந்துவிட்டு யாரும் மல்லாக்க விழவில்லை என்றால் தான் ஆச்சரியம்...

அகலிக‌ன் said...

"பிரபாகரன் உயிரோடு வருவார் என்பதாகவே மேடைகளில் பேசிவந்தனர், இவ்வாறு செய்வதால் போராட்டம் முடிவுக்கு வராமல் தொடரும் என நினைத்தார்களோ என்னமோ,ஆனால் அப்படிப்பேசியது ,நடந்த படுகொலைகளின் தீவிரத்தினை உணரவிடாமல் மக்களை செய்து விட்டது என்பேன்."

பிரபாகரன் இறந்துவிடவில்லை என்பதை வேண்டுமெண்றேதான் பரப்பினார்கள். தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவும் சிங்கள அரசின் இன அழிப்பு நடவடிக்கைக்கு தடைபட்டுவிடக்கூடாது என்பதற்காகவும்தான் இவ்வாறான மழுப்பல்கள் பரப்பப்பட்டன.


Anonymous said...

சகோ சார்வாகன்,

//இதில் இந்தியா என்ன ஈழத்தில் செய்யப் பார்த்தது,செய்கிறது என்ன செய்யும் என்பதும் புரியாது.///

Answer may be here please watch this interview...

https://www.youtube.com/watch?v=hUWc0AHvOwI


"Oil politics" is a big concern for USA and India...for more information Google it.

http://www.thehindu.com/news/national/sri-lanka-alive-to-indian-concerns-at-allocating-oil-blocks/article4333659.ece


http://www.bbc.co.uk/news/business-17337054


----By-- Maakkaan.


தி.தமிழ் இளங்கோ said...

கொடுமையிலும் கொடுமை ஒருவர் தனது விளம்பரத்திற்காக அடுத்தவர் இரத்தத்தை வீணடித்ததுதான்.

Anonymous said...

அப்பாவி இந்துக்களை கோத்ராவில் எரித்து கொன்ற கயவர் கூட்டத்தை பழி வாங்கிய குஜராத் மக்களுக்கு மோடி எப்படி பொறுப்பாவார் ? எப்பவுமே மோடியை குறை கூறும் நீங்கள், எண்டா கோத்ர ரயில்வண்டி எரிப்பை பற்றி வாய் , கு..டி மூடி பேச மாட்டேங்கிரீர்கள் ? உனக்கு ஒரு நீதி, மோடிக்கு ஒரு நீதியா? உன்னைபோன்ற நாசகாரிகளுக்கு மோடிதான் வரவேண்டும். உன் வாலை அமெரிக்காவில் போய் ஆட்டிபாருடா..

வவ்வால் said...

சஞ்சய்,

வாங்க,நன்றி!

ஹி...ஹி என்னோட மொபைல் மட்டும் தனியா போய் படமெடுத்துடுச்சு :-))

#அதுவும் அனுமாரையே நம்பலைனா, சும்மாவா , எண்ணை சட்டியில போட்டு வறுக்க சொல்லிடுவார் பெருமாள் :-))
----------------

மாக்ஸ்,

வாங்க,நன்றி!

புலிகள் செய்த படுகொலை என்பதற்கான கோபம் எல்லாம் அவர்கள் இருந்த வரையில் சரி, ஆனால் அவர்கள் அழிக்கப்பட்ட பின்னும் தொடர்வது சரியல்ல, மேலும் போராளிகள் தவிர்த்த பொதுமக்களையும் அழிப்பதை இந்தியா வேடிக்கை பார்ப்பதோ,இராச பக்சேவை நியாயப்படுத்துவதோ வரலாற்று பிழையாக முடியும்.
----------------

சகோ.சார்வாகன்,

வாங்க,நன்றி!

ஹி...ஹி அடியேனும் ஹோமோ சேப்பியனின் வழித்தோன்றல் என்பதால்ல் கோமகளை வாழ்த்துவதை வழி மொழிகிறேன் :-))

# இந்தியா தீர்வு காணுமா என்பதை விட நடக்கும்/நடந்த அநியாயத்துக்கு துணையாக நிற்கக்கூடாது, எங்கோ இருக்கும் நார்வே எல்லாம் நடுநிலைமை என வரும் போது, அண்மை நாடு,சாகோதரத்துவம் என்ற அடிப்படையில் உதவி செய்ய வேண்டும்,அல்லது உபத்திரம் கொடுக்காமலாவது இருக்க வேண்டும், இந்தியா கண்டித்தால் ,பிற நாடுகளும் கண்டிக்கும், இந்தியாவே கண்டிக்காத போது நமக்கேன் என மற்ற நாடுகளும் சும்மா இருக்கும்.

மத்திய அரசு என்பது தனிப்பெரும்பான்மையில் இருந்தால் ,தமிழகம் என்ன செய்யும் என சொல்லலாம்,கூட்டணியை நம்பி நடக்கும் ஒரு அரசை கூட கண்டிக்க இயலாத தமிழக கட்சிகளை நினைத்தால் ,இவர்கள் எல்லாம் அரசியல் செய்து என்ன கிழித்தார்கள் என்று தான் கேட்க தோன்றுகிறது.

மூளைக்கு வேலை கொடுக்க முடியவில்லை என்று சொல்வது சரியா என தெரியவில்லை, ஆனால் ஒரு மனித அழிப்பு செயலை நியாயப்படுத்தக்கூடாது என்ற தார்மீக அடிப்படையில் எந்த அரசும் செயல்படலாம், காப்பாற்ற முயற்சிப்பது வேறு கண்டிப்பது வேறு ,கண்டிக்க கூட இயலாத ஒரு அரசு வருங்கால வல்லரசு என பீற்றிக்கொள்ளும் காமெடியை என்ன என்பது.

# பரிணாம எதிர்ப்புவாதிகள் சந்தர்ப்பத்தின் அடிப்படையில் கூட்டணி வைக்கிறார்கள், மாமிசம் சாப்பிடலாமா என்றால் கூட தெளிவாக்க கருத்து வராது :-))

வைதீக மதப்பற்றாளர்களுக்கு வேதத்திலேயே எல்லாம் நம்பிக்கை இல்லை :-))

வேதம் சொல்வதில் இவர்களுக்கு ஏற்றதை மட்டும் எடுத்துக்கொண்டு கதையளப்பார்கள்.

அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்ய இயலாத காலத்தில் வாழ்ந்த மக்கள் தங்களது சிந்தனைக்கு எட்டியதை வேதம் என எழுதி வைத்தார்கள்,அதில் சில தத்துவார்த்தமாகவும்,சில வேதாந்தமாகவும் இருக்கிறது,ஆனால் அதனை முழுமையாக புரிந்துக்கொள்ளாத வைதீகர்கள் சில பழம் மூடநம்பிக்கைகளை மட்டுமே முன்னெடுத்து செல்ல விரும்புகிறார்கள்.

காலத்துக்கு ஏற்ப சிந்தனையை செம்மைப்படுத்தவில்லை,எனில் தனித்து விடப்பட வேண்டும்.

வேதம்,புராணம் என பேசும் எந்த வைதீகன் குடுமி வைக்க சொன்னால் வைப்பான், சப்ளாக்கட்டை அடிப்பதெல்லாம், தன்னை உயர்வாக கடவுளின் ஆசிர்வாதம் பெற்ற இனம் என காட்டிக்கொள்ளவே :-))

# சோம பானம்,சுறாப்பானம் என அருந்தி ,யாகத்தில் ,பன்றி,ஆடு,கோழி என இட்டு வேக வைத்து ,தந்தூரி போல சாப்பிட்ட வைதீகர்கள் இப்பொழுது மனிதன் மாமிசம் சாப்பிடுவது இயற்கைக்கு முரண் என்பது வேடிக்கையே :-))
----------

கோவை ஜீவா,

வணக்கம்,நன்றி!

ஹி...ஹி இயற்கையின் ரசிகன்,அழகின் ரசிகன் எனவே அசினுக்கும் ரசிகன் என சொன்னாலும் தப்பில்லை :-))

#ஒரு யூனிட் ரத்தம் பல அளவுகளில் இருக்கு, ரத்த தானம் செய்பவர் உடல் நிலையைப்பொறுத்து எடுக்கும் அளவு மாறுது, நான் கொடுக்கப்போனப்போது 200-250 மிலி தான் எடுப்போம்னு சொன்னாங்க, ரத்தம் இருக்கும் கவர் கூட சின்னதாகவே இருக்கு, நீங்க சொன்ன பிறகு எதுக்கும் செக் செய்துடலாம்னு இணையத்தில்ல் துழாவினால் 175 மிலி தான் சர்வதேச அளவில் அடிப்படை யூனிட் எனப்போட்டிருக்கான், அப்போ 350 மிலி என்பது டபுள் யூனிட் :-))

இந்த அளவு நாட்டைப்பொறுத்து மாறுது, நம்ம நாட்டில் மக்கள் தானா இரத்தம் கொடுக்க வர மாட்டாங்கிறாங்கனு வரும் போதே 350 மிலி எடுத்துடுறாங்க போல, 500 மிலி கூட எடுக்கலாம் ஒன்னும் ஆகாதுனு வேற போட்டிருக்காங்க.

#புதுவை மல்லாக்க ,குப்புறக்கா விழுந்து கிடக்கும் மக்கள் நிறைய பார்க்கலாம், இவங்க கோவில் வாசில் போதையிலும் பக்தியுடன் சரணடைந்து கிடக்காங்கன்னு தான் படமெடுத்தேன், அதிலும் நடுவில் படுத்து கிடக்கும் நபர் செமையா சாமியாடினார் :-))
------------

வவ்வால் said...

அகலிகன்,

வாங்க,,நன்றி!

//பிரபாகரன் இறந்துவிடவில்லை என்பதை வேண்டுமெண்றேதான் பரப்பினார்கள். தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவும் சிங்கள அரசின் இன அழிப்பு நடவடிக்கைக்கு தடைபட்டுவிடக்கூடாது என்பதற்காகவும்தான் இவ்வாறான மழுப்பல்கள் பரப்பப்பட்டன.//

இப்படியான ஒரு எண்ணமே எனக்கும்,ஆனால் ஈழப்போராட்டத்தை ஆதரிப்பது போல பேசிவரும் சீமான், வைகோ,திருமா, பழ.நெடுமாறன் எல்லாம் இப்படியாக பேசினார்களே, அப்போ அவர்களும் இதற்கு உடந்தை தானே?

அப்போலாம் எங்கே மீட்டிங் நடந்தாலும் போய் கலந்துப்பேன், 11-12 வரைக்கும் தொண்டைக்கிழிய பேசுவாங்க,அதுவும் சீமான் எல்லாம் செமையா கழுத்து நரம்பு புடைக்க பேசுவார் :-))

வைகோ துண்டை முறுக்கிட்டு பேச ஆரம்பிச்சா விடிஞ்சிறும் :-))
-----------------

மாக்ஸ்,

அந்த செய்திகள் முன்னரே படித்துள்ளேன், ஆனால் இலங்கையில் பெருமளவு எண்ணை இருக்க வாய்ப்பில்லை, இந்தியாவில் இருப்பது விட குறைவாகவே இருக்கும், ஆரம்பக்கட்ட ஜோரில் இப்படி ஆய்வு செய்து பார்க்க கிளம்பி இருக்கலாம்.

இந்தியாவில் இருக்கும் கிருஷ்ணா-கோதாவரி ஆற்றுப்படுகையில் இருக்கும் எரிவாயு தான் உலகின் மிகப்பெரிய எரிவாயு சேமிப்பு என சொல்லி இருக்கிறார்கள். இந்தியாவிலேயே நிறைய இருக்கலாம்,ஆனால் அரசு நிறுவனங்கள் அதனை தனியாருக்கு பின்னர் தாரை வார்க்கலாம் என பைலட் பிராஜெக்ட் உடன் நிறுத்திவிடுகின்றன, பின்னர் அதே இடத்தில் ரிலையன்ஸ் போன்ற தனியார் போய் அவர்களே கண்டுப்பிடித்தது போன்று ஸீன் போட்டு உரிமைக்கொண்டாடிக்கொள்வார்கள், இந்திய எண்ணை நிறுவன அதிகாரிகளும்,அரசியல்வாதிகளும் சேர்ந்துக்கொண்டு செய்யும் சதி இது.
-------------------

தி.தமிழ் இளங்கோ சார்,

வாங்க,நன்றி!

வலைச்சர பணிக்கு பின் கொஞ்சம் ஓய்வெடுத்து ஆசுவாசமாகி இருப்பீர்கள் என நினைக்கிறேன்.

சரியாக சொன்னீர்கள், எதற்கும் பயன்ப்படாத ஒரு சிலை ,அதுவும் ஒரு தனிநபரை துதிப்பாட, சுய விளம்பரத்துக்காக செய்துள்ளார், இவரெல்லாம் சமயங்களில் சமூகம் பற்றி கருத்து சொல்ல கிளம்புவார் பாருங்கள் ,அது பெரிய கொடுமை :-))

வவ்வால் said...

ஓய் அனானி,

யாரைப்பற்றி,யாரிடம் பேசுறீர்னே புரியலை, சொல்வதை கொஞ்சம் தெளிவாத்தான் சொல்லித்தொலையிறது.

மோடி வந்தாலும் சரி ஒரு தாடி வந்தாலும் சரி உம்மை ஒன்றும் வெளியுறவு துறை அமைச்சர் ஆக்கப்போறதிலை,எதுக்கு வீணா டென்ஷன் ஆகிட்டு,போய் கட்டிங்க் அடிச்சுட்டு அனுமார் கோவில் வாசலில் படுத்து தூங்குய்யா :-))

Jayadev Das said...

சிரங்கு புடிச்சவன் கையும் இரும்பு.......... சாரி மவுஸ் புடிச்சவன் கையும் சும்மா இருக்காது என்பார்கள் !! ஒரே ஒரு பதிவுக்கு வேற யாரு படத்தையோ போட்ட உம்மால அதற்க்கு அடுத்த பதிவுக்கு சும்மா இருக்க முடியல, கை அரிக்க ஆரம்பிச்சுடுச்சு, மீண்டும், "அசின்...... நீதான் என் பிசின்" அப்படின்னு விழுந்துட்டீரு. ஒரு மனுஷன் மயக்கத்தில இருக்கலாம் ஆனாலும் இந்த லெவலுக்கு போகக்கூடாது. ஐயோ..........ஐயோ..........

அம்மாவோட சிலை......... உவ்வே.......

முள்ளி வாய்க்கால் என்னைப் போல உயிர் வதை கூடாதுன்றவன் அதை எதிர்த்து குரல் குடுக்கலாம். ஆனால் நீர் போனால் "யோவ் நீ வாரா வாரம் ஆட்டை போட்டுத் தள்ளுறியே அது மட்டும் சரியா?" அப்படின்னு ஒரு கேள்வி கேட்டா உம்மால பதில் சொல்ல முடியாது.

பரிணாமம்: நாம் உம்மைப்போல சந்து போந்து என்று பேதம் பார்ப்பதில்லை உண்மையை யார் சொன்னாலும் ஏற்ப்போம், பொய்யை எப்பேர்பட்ட விஞ்ஞானி வந்து சொன்னாலும் நிராகரிப்போம். உணவுக் கலப்படம் மாதிரி பரிணாமம் அறிவியல் கலப்படம். அறிவியல் அல்லாததை அறிவியலுக்கு புறம்பானதை அறிவியல் என்று ஏமாற்றி விற்கும் ஒரு வியாபாரம் தான் பரிணாமம். மற்ற ஏமாற்று வேலைகளை எதிர்ப்பது போலவே அதையும் எதிர்க்கிறோம் அவ்வளவே .

இராமாயணம்: வழக்கம் போல படிக்காமலேயே நீர் விட்டிருக்கும் இன்னொரு கப்சா. வாலியை இராமன் நின்று கொன்றது நியாயமா என்ற கேள்வியை வாலியே எழுப்புகிறான் அதற்க்கு பதிலுரைத்த இராமன், இது இக்ஷ்வாகு மன்னர்கள் உள்ள தேசம், மன்னர்கள் வேட்டைக்குச் செல்வதும், மறைந்து நின்று மிருகங்களைக் கொள்வதும் வழக்கமாக நடக்கும் ஒன்றுதான் என்று தான் செய்தது சரியே என்று கூறுகிறார். அங்கே அவர் நீ பாதி மனிதன் பாதி குரங்கு என்று சொல்லவில்லை நீ மிருகம் என்றே சொல்கிறார். போய் சரியாகப் படியும்.

வவ்வால் said...

பாகவதரே ,

வாரும்,நன்றி!

ஓய் கிருஸ்ணாவை நினைத்து நீர் "பஜனை" செய்வதை விட ,நான் செய்வது ஒன்றும் பிழையில்லை, அபிமானத்துக்குரியவர்களின் படத்தினை தானே போட்டிருக்கேன், நான் என்ன கிருஸ்ணா போல உள்ப்பாவையா திருடினேன் :-))

#அப்போ உமக்கு ஆடும்,மனிதர்களும் ஒன்றா? ஹையங்கார் பாடகி போலவே மனித தன்மையில்லாமல் பேசும் நீர் ஆன்மிக கதாகாலச்சேபம் செய்வது முரண்நகை :-))

முதலில் மனிதனாக சிந்திக்கவும்,பின் ஆன்மீகம் எல்லாம் பேசலாம்.

#பரிணாமம் என்பது அறிவியல் ரீதியாக ஆய்வகங்களில் நுண்ணுயிர் பரிணாம மாற்றம் மூலம் நிறுவப்பட்ட ஒன்று, பல்லுயிர் பரிணாம பெருக்கம் குறித்து தொல்படிம ஆய்வுகள் மூலம் முடிந்த நிறுவப்பட்டுள்ளது, இது ஒரு தொடரும் ஆய்வு, ஆனால் அறிவியல் பூர்வமான் உண்மை என்பது சந்தேகத்திற்கு அப்பாற்ப்பட்டு நிறுபிக்கப்பட்டயிற்று.

உமக்கு அறிவியலும் தெரியாது,ஆன்மீகம் தெரியாது என்பதை நீரே உளறி காட்டிக்கொள்கிறீர் :-))

#அப்போ வாலி மிருகம்னு சொல்லுறீர், மிருகமாகிய வாலி பேசிய பாஷை என்ன,அது எப்படி இராமனுக்கு தெரியும்? இராமனும் குரங்கு பாஷை தான் பேசுவாரா?

சித்தரிக்கப்பட்ட உருவ அமைப்பினை ஒப்பிட்டு பாரும்,

நான்கு காலில் நிற்கும் விலங்கு போல் இல்லாமல் இருகால்களில் நிற்பதே பரிணாமத்தின் ஒரு நிலையை காட்டுகிறது.

மார்ஃபாலஜிப்படி மனிதனை ஒத்த வடிவத்தில் அனுமார் சித்தரிக்கப்பட்டுள்ளார் அப்படி எனில் குரங்குக்கும் ,மனிதனுக்கும் இடைப்பட்ட உயிரினமாகவே கருத வேண்டும்.

ஆன்மீகவாதி என சொல்லிக்கொண்டு, அனுமார் பேசினார் என்பதை எல்லாம் நம்ப மறுக்கலாமா :-))

அனுமாரை குரங்கு என சொன்னால் அனுமார் கனவில வந்து கண்னைக்குத்திடுவார் சாக்கிரதை :-))

சஞ்சய் said...

//மோடி வந்தாலும் சரி ஒரு தாடி வந்தாலும் சரி உம்மை ஒன்றும் வெளியுறவு துறை அமைச்சர் ஆக்கப்போறதிலை,எதுக்கு வீணா டென்ஷன் ஆகிட்டு,போய் கட்டிங்க் அடிச்சுட்டு அனுமார் கோவில் வாசலில் படுத்து தூங்குய்யா :-)) //

வோவர் குசும்பு! பேசாம அம்மாவிடம் சொல்லி எல்லா கோவிலுக்கும் பக்கத்தில் டாஸ்மாக் திறக்கசொல்லலாம். கட்டிங்கை போட்டுட்டு கவுந்து கிடக்கலாம்.

சார்வாகன் said...


மாப்ளே தாசு,

//, பொய்யை எப்பேர்பட்ட விஞ்ஞானி வந்து சொன்னாலும் நிராகரிப்போம். உணவுக் கலப்படம் மாதிரி பரிணாமம் அறிவியல் கலப்படம். அறிவியல் அல்லாததை அறிவியலுக்கு புறம்பானதை அறிவியல் என்று ஏமாற்றி விற்கும் ஒரு வியாபாரம் தான் பரிணாமம். மற்ற ஏமாற்று வேலைகளை எதிர்ப்பது போலவே அதையும் எதிர்க்கிறோம் அவ்வளவே //

அறிவியலை விஞ்ஞானிதான் சொல்லணும், இஸ்க்கான் பிரபுபாத அல்ல. பரிணாமத்தை அனைத்து விஞ்ஞானிகளும் ஏற்கிறார்,பல்கலைக் கழகங்களில் கற்பிக்கப்படுவது என நீர் ஒத்துக் கொள்வது, மார்க்க வியாதிகள் அளவுக்கு பொய் சொல்ல தெரியவில்லை எனக் காட்டுகிறது.

ஏன் வழிநடத்தப் பட்ட பரிணாமம் என்ற நிலைப் பாட்டுக்கு எப்போதும் வரவே கூடாது, அது குரானுக்கு முரண் ஆனது என மார்க்க வியாதிகள் ஒத்துக் கொள்ள மறுக்கிறார்கள் என்பதை சிந்திக்க மாட்டீர்களா??

எப்படி இரு உயிரிகளை,ஒரே இனம்,வெவ்வேறு இனம் என வரையறுப்பது என்ற கேள்விக்கும் பதில் அளிக்க மறுக்கிறார்கள் என்பதையும் சிந்திக்க மாட்டீர்களா?

நல்லவேளை நீர் இஸ்கான் நிலைப்பாட்டினை விளக்குகிறீர் என்பதால் பிற இந்துக்களுக்கு இதில் தொடர்பு இல்லை என் ஆகி விட்டது.அது வரைக்கும் நல்லது.

**
இராமன் வாலியைக் கொன்றது சுக்ரீவனுக்கு உதவ,சுக்ரீவனின் அண்னன் மனைவி தாராவை மணம் செய்தது{?} பற்றி இராமன் கண்டு கொள்ள‌ வில்லை.ஆனால் சுக்ரீவன் மனைவி ருமாவை வாலி பதிலுக்கு அபகரித்தது இராமன் தவறு என்கிறான்.

http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=81104301&edition_id=20110430&format=html

http://en.wikipedia.org/wiki/Tara_(Ramayana)

வாலி இறக்கும் போது நாங்கள் விலங்குகள் எங்களுக்கு மனிதர்களுக்கான திருமண விதிகள் கிடையாது என்கிறான்.
http://publishing.cdlib.org/ucpressebooks/view?docId=ft5q2nb449&chunk.id=d0e2329

"Rama, you simply don't understand us ...
No marriage by those ancient customs
None of that righteous conduct of kings
Guides us who follow where our emotions lead,
Oh, Rama, whose weapon drips with ghee and flesh.[5]

"I see your point, Rama—you shot at me because I took my brother's wife—but that reasoning only shows your ignorance. Sugriva may have said that I committed wrongs against him and his wife, but among us monkeys there is no 'marriage' and no rule that we must 'marry' the women we sleep with. You are a human, a warrior, so you marry one woman, only one, whereas we wander in the forest looking for food, and if we want to, we have sex. That's all. What is right for you is not necessarily right for us."

ஆகவே வாலி,அனுமன் ஆகியோர் பேசும் குரங்கினம்.

மனிதர்களும் அதிக அறிவு கொண்ட ஒருவகைக் குரங்கு இனமே.

Thank you

? said...

//என்ன கொடுமை சார் இது-11//

ஊரில் நடக்கும் கொடுமைகளை தேடி பிடித்து எழுதவே ஒரு தொடரா? என்ன கொடுமை சார் இது?

--

தனது சொந்த குடிமக்கள் மீதே விமான தாக்குதல் நடத்தி சிறு குழந்தைகளை கொன்ற நாடு இலங்கை. பாலசந்திரனாவது 12 வயது சிறுவன். ஷெல்லடித்து கைக்குழநதைகூட செத்திருக்கின்றதே? ராசீவ் காந்தி மீது பல விமர்சனங்கள் இருந்தாலும் அவர் முன் வைத்த தீர்வை ஏற்றுக்கொண்டிருந்தால் 1989க்கு பின்பு நடந்த பல லட்சம் மனித உயிர்களை காப்பாற்றி இருக்கலாம். இப்போது உயிரும் போய் கிடைக்கவிருந்த சிறு உரிமையும் போய்விட்டது

ஒரு மொழிக்காக இத்தனை உயிர்கள் என்பதால் எமக்கு இதில் உடன்பாடு இல்லை. இங்கு பிரான்ஸிலிருந்து பிஎச்டி படிக்க வந்தவர், தமிழ் தொடர்பில் நண்பராக மாறினார். ஒருமுறை அவரிடம் இலங்கை பிரச்சனை குறித்து பேசியபோது, அவர்கள் சிங்களத்தை திணித்து தமிழை அழிக்க முயன்றது குறித்து உணர்ச்சி வயப்பட்டு விளக்கினார். அப்போது அவருக்கு போன் வர எடுத்து பிரஞ்சு மொழியில் பேசினார். பின் தங்கையுடன் பேசியதாகவும், தங்கைக்கு தமிழ் தெரியாது ஏனெனில் அவர் பிரஞ்சு நாட்டில் பிறந்தவர், தானோ இலங்கையில் பெற்றோர் இருந்த போது பிறந்தவன் ஆதலால் எனக்கு தமிழ் தெரியும் என்றார். எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை! இதைத்தானேடா சிங்களனும் சொன்னான்? இதுக்கு இத்தனை உயிரா? நம்மூரில் சொந்த மொழிகளான இந்தியையும் சமஸ்கிருத்ததையும் எதிர்த்துவிட்டு ஆங்கிலத்திடம் தமிழை இழந்து வருவது போலத்தான் இதுவும். நல்லகாலமாய் மொழிப்போரில் உயிர் சேதம் வருமளவுக்கு தமிழ்நாட்டுகாரனுக்கும் பிற இந்தியர்களுக்கும் மூளை மழுங்கிவிடவில்லை.

Anonymous said...

***நம்மூரில் "சொந்த மொழிகளான" இந்தியையும் சமஸ்கிருத்ததையும் எதிர்த்துவிட்டு ஆங்கிலத்திடம் தமிழை இழந்து வருவது போலத்தான் இதுவும். ***

;-)))))

வவ்வால் said...

சஞ்சய்,

நன்றி!

ஹி...ஹி சும்மா இருக்கவனையும் சொரன்டிவிட்டு குசும்பு செய்ய வைக்குறாங்களே என்ன செய்ய :-))

இனிமே தான் கோயில் பக்கத்தில கடைய தொறக்கணுமா, தமிழ்நாட்டில பெரும்பாலும் கோயில்,பள்ளிக்கூடம், பஸ்டான்ட் வாசலில் தான் அரசு மதுபானக்கடைகளே இருக்கு, எல்லாம் வாஸ்து பார்த்து வச்சிருப்பாங்க போல :-))

புதுவையில் அந்த கோயிலுக்கு ரெண்டு கட்டிடம் தள்ளி முனியான்டி விலாஸ் ஒயின்ஸ்னு இருக்கு, மேலும் எதிரில் ரெண்டு கடை :-))

இன்னும் புதுவை அளவுக்கு தமிழ்நாடு டெவெலப் ஆகலை ,ஆனால் கூடிய சீக்கிரம் டெவெலப் செய்துடுவாங்க :-)
-------------

சகோ.சார்வாகன்,

நன்றி!

நம்ம பாகவதர் ஒரு போலி ஆன்மீகவாதி , அவருக்கு ஒரு பக்கம் கிருஸ்ணாவின் சரச சல்லாப லீலைகளின் மேல் ஆசை இன்னொரு பக்கம் ,அறிவியலின் மேலும் ஆசை,ஆனால் முழுக்க அறிவியல் பேசினால் ஆன்மீகம் அடிவாங்கிடும் என்பதால், அவரது ஆன்மீகத்துக்கு தோதாதன அறிவியல் கொள்கைகளை தேடிக்கிட்டு இருக்கார், அதான்ன் மார்க்கப்பந்துக்களின் அல்டிமேட் புக் இருக்கே அது போதாதா :-))

# இராமயணத்தில் மேலும் பல ஆதாரங்கள் இருக்கு ஜடாயு என்ற கழுகு பேசும் :-))

கும்பகர்ணன் 6 மாதம் தூங்குவதெல்லாம் பனிக்கரடியின் நீள் உறக்கம் போன்றது ,எனவே விலங்குகளில் இருந்து மனிதன் பரிணமம் அடைந்ததால் சில பல விலங்குகளின் பண்புகள் மனிதனுக்கும் அக்காலத்தில் இருந்துள்ளது :-))

ராட்சஷர்கள் என சொல்வது ,கூட ஆதாம் அலை 90 அடி உயரமாக படைக்கப்பட்டார் என்பதை ஒத்துள்ளது,எனவே ஆதி மனிதன் இந்திய துணைக்கண்டத்தில் தான் தோன்றியிருக்க கூடும் :-))

வால்மீகி ஒரு பரிணாமவியல் சித்தராக இருந்திருக்க கூடும்,அக்காலத்தில் சில கருத்துக்களை சொன்னால் எதிர்ப்பு வருமென புராணமாக பாடிவிட்டார் :-))

உலகம் உருண்டை என சொன்ன கலிலியோ கூட அக்கருத்தை ஒரு சிறுவர் கதை வடிவிலேயே எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாலி,ச்க்ரீவன்,அனுமார் எல்லாம் பரிணாமத்தின் இடை நிலை உயிரினங்களே, இதனை ஏற்காதவர்களை பகவான் மஹாவிஷ்ணு ஆதி சேஷனை விட்டு கடிக்க வைப்பார் என சர்ப்ப புரணாத்தில் உள்ளது :-))

வவ்வால் said...

நந்தவனம்,

வாங்க,நன்றி!

கொடுமைக்கும் மேல பெரிய கொடுமைன்னு சொல்லுறிங்களா?

ராஜிவ் காந்தி காலத்து பரிந்துரைகள் அக்காலத்துக்கு பிற்போக்காக தென்பட்டது என்பதை மறுக்கவியலாது,மேலும் இந்தியா தமிழர்களுக்கு சாதகமான ஒரு தீர்வை முன் வைக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பும் இருந்தது.

எனவே அக்காலத்திய பரிந்துறை நிராகரிக்கப்பட்டதில் ஆச்சரியமில்லை.

ஆனால் பின்னர் வன்மமாக மாறி படுகொலை வரை சென்றதை தவிர்த்திருக்க வேண்டும்.

பின்னர் தற்போது புலிகள் அழிக்கப்பட்ட பின்னரும் ,இந்திய அரசு ஒட்டும்மொத்தமாக தமிழர்களை புலிகளைப்போலவே பார்க்கும் அனுகுமுறையும் சரியல்ல.

மொழிக்காக இப்படி செய்யலாமா, பிராண்சில் குடியேறிய ஈழத்தமிழர் பிரெஞ்சு பேசுகிறார் என சொல்கிறீர்கள், எனக்கு வசதியான நாட்டிற்கு சென்ற புலம் பெயர் தமிழர்களுக்கு எல்லாம் உண்மையில் எந்த பற்றும் இருக்காது என தெரியும் :-))

இந்தியாவுக்கு வெளியில் குடியிருக்கும் ஈழத்தமிழர்களுக்காக இலங்கையில் அமைதி நிலவ வேண்டும் என நினைக்கவில்லை,ஏன் அவர்களே கூட நினைக்கமாட்டார்கள், அவர்களுக்கு ஈழம் என்பது இனி இருந்தால் விடுமுறைக்கு வரும் ஒரு இடம், அவர்கள் ஒரு போதும் அங்கு வாழ திரும்ப வரப்போவதில்லை.

இங்கே தமிழகத்தில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேல் இலங்கை தமிழர்கள் இருக்கிறார்கள், அவர்களுக்கு வருமானமோ, வேறு எந்த பிடிப்போ இல்லை, கல்வி கூட வெகு அரிதாகா யாரேனும் விடா முயற்சியுடன் படித்தால் தான் சாத்தியம்.

அவர்களுக்கு இந்தியாவிலும் நல்வாழ்வு இல்லை, அயல்நாட்டுக்கும் செல்ல வசதியில்லை, சொந்த மண்ணில் தான் வாழ்க்கை முழுமையாக அமைக்க முடியும்.அதற்கு இலங்கையில் சுமூக நிலை நிலவ வேண்டும்.


மேலும் இலங்கையிலேயே இருந்து கஷ்டப்ப்படும் தமிழர்களுக்கு தீர்வு வேண்டும், அதற்காகவே இந்தியா ஏதேனும் செய்ய வேண்டும்,ஆனால் எல்லாமே அரசியலாப்போச்சு.

ஒரே குடும்பத்தில இருக்கவங்களே போனில் பேசிக்கொள்வது போல கூட்டணியில் இருக்கும் கட்சி ,ராஜ்யசபையில பேசித்தான் காங்கிரசுக்கு புரிய வைக்கும்னு சொல்வதெல்லாம் என்ன நாடகமோ?

அந்நிய நாட்டின் அரசியலில் தலையிட முடியாது என சொல்லிக்கொண்டே ,அதே நாட்டின் அதிபருடன் சில உடன்படிக்கைகள் செய்துக்கொண்டு ,அந்நாட்டு மக்களை எப்படி அழிக்க முடியும்?

குறைந்த பட்சம் மனித உரிமை மீறல் என்றாவது பேசலாமே. இப்போ ஜெனிவாவில் எதிர்ப்போம்னு சொல்ல வைக்கவே குட்டிக்கரணம் போட்டு சாதிக்க வைக்க்க வேண்டியதாக இருக்கே,அப்புறம் என்ன அண்டை நாடு,சகோதரத்துவம், இதில் தமிழக அரசியல் தலைவர்கள் எல்லாம் ஏன் ஈழப்பிரச்சினைக்காக பாடுபடுவது போல பல ஆண்டுகளாக ஒரு தோற்றத்தினை உருவாக்கி வைக்க வேண்டும், எங்க பொறுப்பு இல்லைனு வெளிப்படையாக சொல்லிட்டு போக வேண்டியது தானே.

மொழிக்காக என்பதாக பார்ப்பது குறுகிய ஒன்றாகவே சொல்ல்வேன், இங்கே மொழி தாண்டி அடிப்படை உரிமைகளும் இருக்கு.

எல்லா பிரச்சினைக்கும் அடிப்படையான காரணம் ஈழத்தமிழர்களிடையே ஒற்றுமை இல்லாததும் ஆகும்.

இலங்கையில் இருப்பவர்கள் எல்லாம் தமிழர்கள் என ஒற்றுமையாக இன்று வரையிலும் சிந்திக்கவேயில்லை என்பதே நிதர்சனம்.
-------------

அனானி,

சமஸ்கிருதம்,இந்திலாம் சொந்த மொழியா ? சொல்லவேயில்லை :-))

மகாராஷ்டிராவில் போய் இதே போல சொல்லிப்பாரும் , பின்னிடுவாங்க ;-))

Anonymous said...

****சமஸ்கிருதம்,இந்திலாம் சொந்த மொழியா ? சொல்லவேயில்லை :-))

மகாராஷ்டிராவில் போய் இதே போல சொல்லிப்பாரும் , பின்னிடுவாங்க ;-))****

அது நந்தவனம் சொன்னது...:-))))


-பார்த்திபன்


வவ்வால் said...

பார்த்திபன்,

மன்னிக்கவும்,நந்தவனத்தின் பின்னூட்டத்தில் தான் அப்படி இருக்கிறது,அவருக்கு நீண்ட பதில் சொல்லுவதில் கவனம் சென்றுவிட்டதால் கடசியாக சொன்னதை கவனிக்கவில்லை, உங்களுக்கு சொன்னது தான் அவருக்கும் .

ஆங்கிலம் எப்படி அன்னிய மொழியோ,சமஸ்கிருதமும்,இந்தியும் தமிழனுக்கு அன்னியம் தான். இந்தியா பல மொழி பேசும் மக்களை சிறு நாடுகளின் பிரதிநிதியாக கொண்டு இணைக்கப்பட்ட நாடு, யுனைட்டட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்கா என சொல்வதை போல ஐக்கிய இந்திய நாடுகள் என சொல்லலாம்.யூனியன் ஆஃப் இந்தியா என்று தான் நமது சட்டத்திலும் இருக்கு.

உங்களுக்கு ஒரு சிறிய ஆலோசனை,

ஒருவர் சொன்னதை மேற்கோள் காட்டி பதில் சொல்வதாக இருந்தாலும், இன்னாரை சொல்கிறோம்னு தெரியுமாறு அவரை குறிப்பிடுங்கள், மேலும் அனானியாக பின்னூட்டமிட்டாலும் இப்பொழுது போல ஒரு பெயரை அடியில் சொல்லிவிடவும்.

இதனால் பல குழப்பங்கள் தவிர்க்கப்படும்.

Anonymous said...

நன்னி வவ்வால்.
-பார்த்திபன்? said...

//சமஸ்கிருதம்,இந்திலாம் சொந்த மொழியா ? சொல்லவேயில்லை?//

சொந்த மொழி என்றால் இந்திய மொழி என அர்த்தத்தில் சொன்னேன். முன்பு சம்ஸ்கிரதத்தை எழுத தமிழின் கிரந்த எழுத்தைதானே உபயோகப்படுத்தினர். ஆக இரு மொழி பேசுவோரும் ஒற்றுமையாத்தான் இருந்துள்ளார்கள். ஆனால் உடனே மொழி அடிப்படைவாதிகள் தோன்றி கலகம் விளைவித்தன் விளைவு தமிழ் நீச பாசையாகி பின் தமிழ்நாட்டில் மட்டும் வடமொழி எதிர்ப்பு. ஆனால் இது பிற திராவிட மொழி பகுதிகளில் இல்லை.

மொழி ஒரு இனத்தவருக்கு சொந்தமானது அல்ல. யார் வேண்டுமாலும் மொழியை கற்று பேசலாம் அல்லவா? இலங்கையில் இருக்கும் ஒரே இனத்தவர் இரு வேறு மொழி பேசுவாதால் இருவேறு இனத்தவராக நினைத்து சண்டை போடுகிறார்கள், இப்போது.பிரபாகரன் ஒருதடவை, தமிழரும் சிங்களவரும் சகோதரர்; இங்கே அந்நியரான இந்தியருக்கு என்ன வேலை என்று கேட்டார். இதுதான் உண்மை. தற்போதைய ஆராய்ச்சிகள் ஈழத்தமிழர் சிங்களவருக்கு தொப்புழ் கொடி உறவு என்று கூறுகின்றன. அவர்களுக்கும் இந்திய தமிழருக்கும் தூரத்து சொந்தமாம். அசோகர் தொடர்பினால் சிலர் வட இந்திய மொழியையும் சோழ படையெடுப்பினால் தமிழும் கற்று இரு மொழி பிரிவினர் ஆகி உள்ளார்கள். மொழி போன்ற பற்றுக்கள் மதத்தை போலவே போதைதான். அதனால்தான் அக்காலத்தில் விவரமாக யாரும் ஊரே யாவரும் கேளிர் என்று சொன்னார்கள். ஆனால் இப்போது பிரிவினை புத்திதான் வளருகிறது. மொழி விடயத்தில் நான் பெரியார் கட்சி. மொழி ஒரு தகவல் தொடர்பு சாதனம், இனத்தின் அடையாளமாக கருதவில்லை.இதை பலர் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்பதை அறிவேன்.மதபற்று, நாட்டுப்பற்று கேடுகெட்டது ஆனால் மொழிபற்று ஒகேவாம். எனக்கு எந்த பற்றுமில்லை.


//மகாராஷ்டிராவில் போய் இதே போல சொல்லிப்பாரும் , பின்னிடுவாங்க என்பதின் அர்த்தம் என்னவோ?// மகாராஷ்ராவில் 30 நாட்களில் இந்தி புத்தகத்தை வைத்து பலநாள் சமாளித்து உள்ளேன்.

? said...


ஏனுங்க பார்த்திபன், தனித்தமிழ் இயக்கத்தின் ஒரே தலைவர் வவ்வாலுகிட்ட என்னைய கோர்த்துவிடுறீங்களே இது சரியா? அவரு கண்டுக்காம போனாலும் கோட் பண்ணி மாட்டி விடுறீங்க... இது நியாயமா?

? said...

ஹார்வேர்டு பல்கலையில் சம்ஸ்கிருத பிஎச்டி முடித்துவிட்டு கலிபோர்னியா பல்கலையில் தமிழ் பேராசிரியராக (?) இருக்கும் ஜார்ஜ் ஹர்ட் சொல்லுவதை கவனியுங்கள்.
http://tamil.berkeley.edu/sanskrit-and-tamil

இதுதான் எனது கருத்தும்

Anonymous said...

சகோ.நந்து,

குழப்பத்தை தீர்க்கவே வினவினேன்...:-))

-பார்த்திபன்

Anonymous said...

சகோ.நந்து,

மொழியை அடையாளமாக கருதவில்லை எனில், இந்தியம் எனும் சுனாமி விரைவில் செரித்து விடும் நம் அடையாளத்தை.

ஒரு உறையில் ஒரு கத்தி!-பார்த்திபன்? said...

//மொழியை அடையாளமாக கருதவில்லை எனில், இந்தியம் எனும் சுனாமி விரைவில் செரித்து விடும் நம் அடையாளத்தை.//

சகோ பார்த்திபன், எனக்கும் தமிழார்வம் உண்டு. இதனால்தான் இங்கு வந்து தமிழில் எழுதுகிறேன். ஆனால் மொழி ஆர்வம் பற்றாகி பின் வெறியாவதையே வெறுக்கிறேன்.

உலகின் பல பிரச்சனைகளுக்கு இந்த அடையாளங்களும் அவற்றின் மீது வரும் வெறியும் அல்லவா காரணம். போரில் அடிபட்டு இறக்கும் குழந்தையின் உயிரை விடவா இனமும் மொழியும் பெரிது? மொழி இனம் இவற்றை தாண்டி முப்பாட்டன் சொன்ன படி யாதும் ஊரே யாவரும் கேளிர் என மனிதன் வாழ வேண்டும் என்பதே எனது ஆசை.

Anonymous said...

சகோ.நந்து,

""ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால் அவர்கள் பேசும் மொழியை அழித்து விடுங்கள் அந்த இனம் தானாக அழிந்து விடும்.""

இதுவும் ஒரு மேலை நாட்டு அறிஞர் சொன்னது தான்.

-பார்த்திபன்

Anonymous said...

சகோ.நந்து,
சகோ.நந்து,

""முப்பாட்டன் சொன்ன படி யாதும் ஊரே யாவரும் கேளிர் என மனிதன் வாழ வேண்டும் என்பதே எனது ஆசை.""


இதுபோல் நம்மை எதிரியாக நினைப்பவர்களும் நினைத்தால் உலகில் ஏது சர்சை.

-பார்த்திபன்

? said...

சரியாக சொன்னீர்கள். இந்த நாட்டுப்பற்று, இனப்பற்று போன்ற விடயமெல்லாம் மேலைநாட்டுலிருந்து வந்த இங்கு இறக்குமதியாவைதான்.

சங்க பாடல் எதிலும் தமிழ் இனமே சூப்பர் இனம் என போற்றும் அல்லது வெறியேற்றும் பாடல் இருப்பதாக தெரியவில்லை. மேலே நான் சொன்ன கணியன் பூங்குன்றனார் காட்டும் சமத்துவப்பாடலே எனக்கு தெரிகிறது.

? said...

//இதுபோல் நம்மை எதிரியாக நினைப்பவர்களும் நினைத்தால் உலகில் ஏது சர்சை//

ஒரளவுக்கு வெள்ளையர்கள் இதிலிருந்து விடுபட முயற்சிக்கிறார்கள். இதனால்தான் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் பிற இனத்தவரால் குப்பை கொட்ட முடிகிறது. ஐரோப்பாவை இணைத்தும் விட்டார்கள்.

ஆனால் நாம் பின்னோக்கி போய் கொண்டிருக்கிறோம். தெற்காசியாவில் பிரிவினை பிரிவினை மேலும் பிரிவினைதான்.

? said...

ஆமாம் குறிப்பாக பல மொழி பேசும் ஐரோப்பாவை இணைத்திருக்கிறார்கள். குறிப்பாக இங்கிலாந்தையும் சேர்த்திருக்கிறார்கள். இந்தி சுறாமீன் என நாம் பயந்தால் ஆங்கிலம் ஒரு திமிங்கலம் அல்லவா?

Anonymous said...

சகோ.நந்து,

கருத்து பகிர்வுக்கு நன்றி.


-பார்த்திபன்

? said...

//கருத்து பகிர்வுக்கு நன்றி//

இவனை திருத்த முடியாது போல என முடிவு செய்துவிட்டீர்கள் போல!:)

கவலைப்படாதீர்கள். இப்போதைக்கு அமெரிக்காவிலும் தமிழ் வளர்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்.தமிழை விட்டுவிட மாட்டோம் என்பதிலாவது இருவரும் ஒத்துப்போகிறோம். நன்றி

Anonymous said...

சகோ.நந்து,

""இந்தி சுறாமீன் என நாம் பயந்தால் ஆங்கிலம் ஒரு திமிங்கலம் அல்லவா?"


ஆழ்கடல் திமிங்கலம் = குளத்தங்கரை சுறாமீன் ஒன்றா...தெரியவில்லையே!

-பார்த்திபன்

Anonymous said...

சகோ.நந்து,

கருத்து பகிர்வுக்கு நன்றி.


-பார்த்திபன்

Anonymous said...

இடம் தந்து உதவிய அண்ணன் வவ்வாலுக்கு நன்னி.


-பார்த்திபன்

? said...

சகோ பார்த்தி,

ஒப்பீடு மிகச்சரியாக இல்லைதான். ஆனால் இந்தியினால் தமிழுக்கு பாதிப்பு வர வாய்ப்பே இல்லை என்று நினைக்கிறேன். தமிழின் மிகபெரிய போட்டியாளர் தமிழ்நாட்டில் இப்போது ஆங்கிலமே. ஆனால் ஆங்கிலத்தை வேணாம் என்று சொல்லும் தைரியம் உமக்கும் இருக்காது என நினைக்கிறேன்.அப்படியே சொன்னாலும் தங்கள் பிள்ளைகளை ஆங்கில மீடியத்தில் விடும் மறத்தமிழர்கள் அடிக்கவருவார்கள்!

? said...

//இடம் தந்து உதவிய அண்ணன் வவ்வாலுக்கு நன்னி//

கூடவே அண்ணன் வவ்வாலுக்கு இடம் தந்து உதவிய கூகிளுக்கும் நன்றி தெரிவிக்க கடமைபட்டுள்ளோம்!

Anonymous said...

சகோ.நந்து,

""இந்தியினால் தமிழுக்கு பாதிப்பு வர வாய்ப்பே இல்லை என்று நினைக்கிறேன்.""


லேசா வாய்ப்பு கொடுத்துப் பாருங்கள் மீதத்தை நம் மக்கள் முடித்து விடுவார்கள். மாற்றான் தோட்டத்து மல்லிகையே மணக்கும் என்பவர்கள் நம் மக்கள்.


-பார்த்திபன்

வவ்வால் said...

நந்தவனம்,

நன்றி!

நீங்கள் பல பின்னூட்டங்களாக ,பல கருத்துக்களை சொல்லி இருக்கீறீர்கள் ,எல்லாவற்றையும் சேர்த்து பதில் சொல்லிவிடுகிறேன்,ஏதேனும் விடுபட்டால் பின்னர் பார்த்துக்கொள்ளலாம்.

#நமக்கு தனித்தமிழ் என்ற வெறியெல்லாம் இல்லை,ஆனால் நல்ல தமிழ் புழக்கத்தில் இருந்தால் நன்றாக இருக்கும் என நினைப்பவன்.கனியிருப்ப காய்க்கவர்ந்தற்று!

#//ஆனால் இது பிற திராவிட மொழி பகுதிகளில் இல்லை.//

தவறான புரிதல்.

மற்ற திராவிட மொழிகள் தமிழின் குழந்தை என்ற சாயலில் இருந்து வெளி வர விரும்பின, ஏன் எனில் அவற்றுக்கென லிபி இல்லாத நிலையில்,அனைத்தும் தமிழின் டயலெக்ட் ஆகவே பார்க்கப்பட்ட நிலை.

உம். கோவை தமிழ்,செட்டி நாடு தமிழ் ,நெல்லைத்தமிழ் என இருக்கு, ஆனால் அனைத்தும் தமிழ் லிபியில் தான் எழுதப்படுகிறது.

தமிழில் இருந்து தனி மொழி என கூறிக்கொள்ள விரும்பும் சூழலில் தமிழ் லிபியை வைத்துக்கொள்வார்களா?,எனவே தமிழை விட உயர்வாக கூறப்படும் தேவப்பாஷைக்கு சலாம் போட்டு ,அதன் லிபியை சுவிகரித்துக்கொண்டார்கள்,மேலும் வட மொழி தாக்கம் கொண்ட பகுதிகள் எல்லைகளாக இருந்ததும் ஒரு அனுகூலம்.

இப்படித்தான் பிற திராவிட மொழிகள் வட மொழிக்கு இணக்கமாக போயின.

தமிழில் ஏன் அது சாத்தியமாகவில்லை என்ன்றால்,தமிழில் ஆதி காலம் தொட்டே இலக்கியம் வளர்ந்து,தமிழின் தனி அடையாளத்தை நிறுவிவிட்டன.

கனடம்,தெலுகு,மலையாளம், மொழிகளில் சுமார் 2000 ஆண்டுக்கு முந்தைய மொழி இலக்கியம் என எதுவுமே இல்லை ,அதனால் தான் அவை செம்மொழி என தகுதி அடையவில்லை.

நீங்கள் சுட்டிப்போட்ட பெர்க்லி பல்கலை கழக தமிழ் ஆய்வாளரே இதனை சொல்லி இருக்கிறார் :-))

//மொழி ஒரு இனத்தவருக்கு சொந்தமானது அல்ல. யார் வேண்டுமாலும் மொழியை கற்று பேசலாம் அல்லவா? //

இதனை போய் ஸ்காட்லாந்துகாரனிடம்,ஐரிஷ் காரனிடம்,ஆங்கிலேயரிடம் சொல்லிப்பாருங்களேன் :-))

மொழியை ஒருவர் கற்றுப்பேசலாம்,ஆனால் அவன் அம்மொழிக்காரன் ஆக முடியாது, என்னதான் பிரிட்டிஷ் அக்சென்டில் நாம் ஆங்கிலம் பேசினாலும் நம்மை வெள்ளையர் என இங்கிலாந்துக்காரன் சொல்லிவிட மாட்டான் :-))

# பிரபாகரன் சொன்னது நாட்டின் அடிப்படையில் எனலாம்.

சிங்களர்களும் இந்திய வம்சாவழி தான்,கர்நாடக,கேரள தொடர்புண்டு,ஆனால் அவர்கள் தங்களுக்கு என தனி இன அடையாளம் வேண்டி,கம்போடியாவிற்கு தாவி மன்னர் ஶ்ரீவிஜயாவின் வழி வந்தவர்களாக காட்டிக்கொள்கிறார்கள்.சிங்கத்துக்கு பிறந்தவர்களோ அல்லது சிங்கம் வளர்த்த இளவரசன் என கதை போகிறது(ரோம சாம்ராஜ்யம் ஓநாய் வளர்த்த சகோதரர்கள் எனப்போகும் என்பதை நினைவில் கொள்க)

மன்னன் ஶ்ரீ விஜயாவுக்கு இலங்கை அரசு ஒரு அஞ்சல் தலையும் வெளியிட்டுள்ளது.அதன் ஒரு புகைப்பட பிரதி கூட என்னிடம் உள்ளது.

யாதும் ஊரே ,யாவரும் கேளீர், என்றால் எல்லா மொழி,இனமும் ஒன்று என எடுத்துக்கொள்ளவும் வேண்டியதில்லை அதே சமயம் மற்ற மொழிக்காரர்களை எதியாகவும் கொள்ள தேவையில்லை.

அப்பழமொழி சொன்னக்காலத்தில் தமிழ் மொழிப்பேசும் நிலத்திலேயே பல நாடுகள் உண்டு.சேர,சோழ,பாண்டிய பேரரசு மற்றும் பல குறு நில மன்னர்கள்,ஆனால் அனைவருக்குள்ளும் சண்டை,பகைமை,எனவே யாதும் ஊரே,யாவரும் கேளீர் என்றார்.

இப்பவும் பொருந்துமே என்றால் பொருந்தும், ஆனால் அதற்கு என சில எல்லைகள் உண்டு.

#//மொழி ஒரு தகவல் தொடர்பு சாதனம், இனத்தின் அடையாளமாக கருதவில்லை.இதை பலர் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்பதை அறிவேன்.மதபற்று, நாட்டுப்பற்று கேடுகெட்டது ஆனால் மொழிபற்று ஒகேவாம். எனக்கு எந்த பற்றுமில்லை.//

நீங்கள் பலவற்றை மேம்போக்காக சொல்கிறீர்கள்.

நாட்டுப்பற்றை கேடுக்கெட்டது என பல நாட்டில் இருந்து வந்து ஒருங்கிணைந்த அமெரிக்காவிலும் சொல்ல மாட்டார்கள்.ஸ்பைடர் மேன்,ராம்போ என படம் எடுத்தாலும் அமெரிக்கன் என்ற நாட்டுப்பற்றினை தூவி தான்ன் எடுக்கிறார்கள் :-))

மொழி இனத்தின் அடையாளமாக கருதவில்லை என்றால் ஒரு இனத்தினை எப்படி அடையாளப்படுத்துகிறார்கள்.

உலகில் உள்ள நாடுகளே மொழியின் அடிப்படையில் தான் உருவாகி இருக்கு.அதில் இருந்து இனம்.எனவே மொழி ஒரு மண்ணின்,இனத்தின் அடையாளமே.

இந்தியாவில் பல மொழிப்பேசும் தனி நாடுகள் இணைக்கப்பட்டுள்ளது.அதானாலே தேசிய அளவில் மொழி சார்ந்து குழப்பம்.

# நாட்டுப்பற்று,மொழிபற்று எல்லாம் ஆதிக்காலம் தொட்டே இந்தியா என்றழைக்கப்படும் நிலத்தில் உண்டு.

பாண்டிய நாடு சோழ நாடுக்கு அடிமை இல்லை என சண்டை எல்லாம் போட்டார்கள்.

அதே போன்று வட மொழிக்கு தொடர்ந்து ஈடு கொடுத்து தமிழும் நின்றது, மொழிக்கலப்பு சொற்களில் நிகழ்ந்தாலும் ,ஒரே அடியாக தமிழ் என்ற மொழி இலக்கியம் நின்றுவிடவில்லை. அதனால் தான் இந்தியாவில் சமஸ்கிருதம் அடுத்து தமிழ் தனித்தன்மையோடு நின்றது.

வவ்வால் said...

தொடர்ச்சி...

# ஐரோப்பா இணைந்தது வர்த்தக,அரசியல் ரீதியாக மட்டுமே, இன்னும் யுனைடெட் கிங்க்டம் இல் அயர்லாந்து பிரச்சினை உண்டு.

ஸ்காட்லாந்துகாரனை ஒயிட் மேன் என்றால் ஐ'ம் ஸ்காட் என்பான் :-))

ஸ்காட்லாந்து,அயர்லாந்துக்காரர்கள் செல்டிக் மொழி பூர்வாசிரமம், இங்கிலாந்துக்காரர்கள் நார்வீஜியன் பூர்வாசிரமம் ,வைக்கிங்க்ஸ் வழி வந்தவர்கள்
+ ரோமன் கலப்பு,ஆனால் அனைவருமே ஸ்கான்டிநேவியன் மொழிக்கூட்டம், ஆனால் மூவருக்கும் ஒற்றுமை கிடையாது.

பிரேவ்ஹார்ட் படமெல்லாம் பார்க்கலையோ?

பிரெஞ்ச்காரர்களே பிரிட்டீஷை ஒத்துக்க மாட்டார்கள்,பிரிட்டீஷ் பிரெஞ்சை கேவலப்படுத்துவாங்க,எல்லாம் மொழி,இனம் படுத்தும் பாடு.

இன்னும் போஸ்னியா,பல்கேரியா,ஜெர்மனி என போனால் ஏகப்பட்ட இனக்கூறுகள், பிரிவினைகளை காட்ட முடியும்.

யாரும் அவரவர் மொழியை விட்டுக்கொடுப்பதேயில்லை. ஒருங்கிணைவது எல்லாம் அரசியல் நோக்கில் மட்டுமே.

# இலங்கையில் மொழி தாண்டி,உரிமை பிரச்சினைகளும் உருவாக்கப்பட்டதே பிரச்சினைகளுக்கு காரணம், நீங்கள் மேம்போக்காக மொழியால் மட்டுமே என பார்க்கிறீர்கள்.

---------------

பார்த்திபன்,

சில முக்கியமான கேள்விகளை கிளப்பிவிட்டீர்கள் :-))

ஏதோ அதை வைத்து நானும் ஒரு ஜல்லியடித்துவிட்டேன்:-))

நன்றி!

வவ்வால் said...

நந்தவனம்,

//ஆனால் இந்தியினால் தமிழுக்கு பாதிப்பு வர வாய்ப்பே இல்லை என்று நினைக்கிறேன். //

இந்தியினால் மராத்தி,குஜராத்தி,போஜ்புரி,பிகாரி, ராஜஸ்தானி,பஞ்சாபி எல்லாம் பாதிக்கப்படுவதாக அங்கெல்லாம் பேச்சு உண்டு,ஆனால் அவர்கள் இந்தி பேசிக்கொண்டு தான் இருக்கிறார்கள்,அது போல தும்பை விட்டு வாலைப்பிடிக்கும் நிலை தமிழுக்கு வராமல் போய்விட்டது அவ்வளவே.

# ஆங்கில மோகம் மிகப்பெரிய சவால் தான் ஆனால் தமிழை இடிப்பது ஆங்கிலம் அல்ல :-))

பள்ளியில் ஆங்கில மீடியம்,தமிழ் மீடியம் என எதில் படித்தாலும், மொழிப்பாடத்தில் ஆங்கிலம் கட்டாயம்,இது அகில இந்தியாவுக்கும் பொருந்தும்.

ஆனால் மொழிப்பாடத்தில் தமிழ் என்பது விருப்பத்தேர்வு,எனவே தமிழ்நாட்டில் மக்கள் தனியார் பள்ளியில் படிக்க வைக்கும் பிள்ளைகளை தமிழுக்கு பதில் இந்தி அல்லது ஜெர்மன்,பிரெஞ்ச் என தேர்வு செய்ய வைத்துவிடுகிறார்கள்.

அதுவே வட இந்தியாவில் யாரும் இந்தியை தூக்கிவிட்டு இன்னொரு மொழிப்படிக்க வைக்கவில்லை.

நம்ம மக்களின் விபரீத போக்கே காரணம், ஆங்கில வழியில் படித்தாலும் மொழிப்பாடமாக தமிழ்ப்படித்தால் கூட தமிழ் அடுத்த தலைமுறைக்கு போகும்.

எல்லாம் மார்க் கூட வாங்க செய்யும் சதி.

தமிழுக்கு சிலபஸ் அதிகம்,பிற மொழிக்கு ,+2 அளவில் கூட அ,ஆ படித்தாலே போதும் :-))

எனவே தமிழுக்கான இடத்தை ஆங்கிலம் அபகரிக்கவில்லை, பிற மொழிகளே அபகரிக்கிறது என்பது தான் அடிப்படை உண்மை.

Anonymous said...

வவ்சு,

இடியாய் இறங்கி அதிர வைத்த வைத்தீர்..அருமையான கருத்துகள்.. நன்றி.-பார்த்திபன்

சார்வாகன் said...
This comment has been removed by the author.
சார்வாகன் said...

சகோ வவ்வால்,

நல்ல விவாதம். இந்தி மொழி படிப்பது தமிழின் முக்கியத்துவத்தை குறைக்குமா என்பது நல்ல விவாதத் தலைப்பு என்றாலும். இலங்கைப் பிரச்சினையில் மொழியின் பங்கு குறைவே எனவே நினைக்கிறேன்.

இலங்கையில் நடப்பது போல் உலகின் பல நாடுகளிலும் இனச்சிக்கல் உண்டு என்பதால் அதே கண்ணோட்டத்தில் மட்டும் பார்ப்பதே சரி.

மேலை நாடுகளில் இருந்து விடுதலை பெற்ற போது, அரசியல் தலைகள்+தொழில் அதிபர்கள்+ அரசு அலுவலர்கள் ஜனநாயக நாடுகளில் பலம் வாய்ந்த சக்தியாக உருவெடுத்த்னர். இதில் விடுதலைக்கு முந்தைய குழுவினருக்கு மாற்று குழு இன அடிப்படையில் இருக்க முயலும் போது இன சிக்கலின் அடிப்படை ஆரம்பம் ஆகிறது.

பெரும்பான்மை மத,மொழி,இன குழு இப்படி பிரிவினை ஏற்படுத்தி ஆட்சி பிடிப்பது ஜனநாயகத்தில் எளிது என கருதுகிறது. ஏன் எனில் அதிகரிக்கும் மக்கள் தொகை, குறைந்து வரும் வளங்கள்,முதலாளித்துவ‌ பொருளாதார போட்டியில் சிலரே சுகவாழ்வும்,பலர் அன்றாட வாழ்வுக்கே கஷ்டம் மட்டுமே படமுடியும்.

பொருளாதார சிக்கலை தீர்ப்பதை விட, சமூகரீதியான பிளவுகளின் மூலம் ஓட்டு வாங்குதல்,வெற்றி பெறுதல் எளிது.

பல இன மத மக்கள் வாழும் நாடுகளில் இனக் கலவரம் போன்றவை சில இடங்களில் ஏற்படுவதை, நாடு முழுதும் பொதுப்படுத்துதல் இனப்பிரிவினையை நிரந்தரம் ஆக்குகிறது.

வரலாறு இனரீதியாக சித்தரிக்கபடுவதும் ஒருவகைப் பிரச்சாரமே.அனைவரும் ஒருவகை ஆப்பிரிக்க குரங்கினமே, அங்கிருந்தே உலகம் முழுதும் பரவினோம் என்பதை மனதில் இருத்தினால் இனம்,மதம்,மொழி அடையாளம் தாண்டி மனிதம் என்னும் பொதுப் புரிதல் வரும்.

நம் பிரச்சினைகளை ஒத்துக் கொண்டு, இருக்கும் வாய்ப்புகளில் இருக்கும் சுமுக தீர்வை ஏற்பதே அனைவருக்கும் நன்மை.

தமிழ் பழைய மொழிதான்.நம் சிந்தனைதான்.ஆனாலும் எதையும் மற்றவர் மேல் திணிக்ககூடாது. எந்த மனிதனும் இன்னொருவனை விட பிறப்பு,மதம் ,மொழி,இனம் ஆகியவற்றால் சிறந்தவன் இல்லை என்பதை உணர்ந்து அனைவருக்கும் வாழ்வாதாரம் என்னும் நோக்கம் நோக்கி செல்லாவிடில் ,நிச்சயம் மூன்றாம் உலகப் போர் நோக்கி செல்வோம்.பேரழிவு நிச்சயம்.

மகாபாரதத்தில் பூமா தேவி .மஹா விஷ்னுவிடம் மக்கள் தொகை அதிகரித்து பாரம் தாங்க முடியவில்லையே என்கிறாள். அதற்கு விஷ்னு கிருஷ்னர் அவதாரத்தில் மகாபாரதப் போரை மூட்டி ,தொகையை குறைப்பேன் என்கிறார்.

http://yabaluri.org/TRIVENI/CDWEB/mahabharatakalaandkarmaapr96.htm

On any theory it is impossible to get a consistent view of the Mahabharata treatment of life. The ultimate cause of the Great War is the desire of Mother Earth to have her burden lightened. Mother Earth complains to God that the human population she has to bear is too much for her and that some relief should be given. And the Devas and the Danavas accordingly take birth in order to create a relief measure for her in the shape of a devastating war.

இது இயற்கைத் தேர்வினை உணர்ந்தவன் எழுதியது என் நான் சொன்னால், என்னை ஒருமாதிரியாக பார்க்கிறார்.

ஐ.நா இலங்கை மீது கொண்டுவரும் தீர்மானம் ஏதோ ஒரு தீர்வை தமிழர்களுக்கு பெற்று தரும் என நம்புவோம்.தொடர்ந்து குரல் கொடுப்போம்.மாற்றம் ஒன்றே மாற்றம் இல்லாதது.

நன்றி!!

? said...

//தவறான புரிதல்.//

மற்ற திராவிட மொழிகளில் சமஸ்கிருதத்திற்கு எதிர்ப்பு இல்லை என எழுதினேன். அதற்கு நீங்கள் காரணங்களை அடுக்கி என்னுடையது தவறான புரிதல் என்றால் எப்படி?

சம்ஸ்கிருதத்தில்தான் அறிவியல் உட்பட பலகலை நூல்கள் எழுதப்பட்டன. அது அறிவாளிகளின் மொழியாக கருதப்பட்டது. இதனால் சம்ஸ்கிருத தமிழ் கலப்பில் பிறந்த பிற திராவிட மொழிகள் வடமொழியோடு தொடர்பு கொண்டதாக காட்ட விரும்பின எனவும் சொல்லாமே. இப்படி பல காரணங்களை ஊகித்து சொல்ல முடியும். ஆனால் அங்கு வடமொழிக்கு எதிர்ப்பில்லை என்பதே எனது பாயின்ட். மேலும் தமிழில் தனிதமிழ் இயக்கம் வரும் வரையிலும் வடமொழிக்கு எதிர்ப்பில்லை.வடமொழி எதிர்ப்பே அரசியல் காரணங்களுக்காக ஆங்கிலேயரால் வளர்த்தெடுக்கபட்டது என கருத முகாந்திரம் உண்டு. அதுவரை மொழி சண்டை வந்தாக தெரியவில்லை. நாயக்கர்களும் மகாராஷ்ராகார்களும் இங்கு ஆண்டிருக்கிறார்கள்.


//மொழி இனத்தின் அடையாளமாக கருதவில்லை என்றால் ஒரு இனத்தினை எப்படி அடையாளப்படுத்துகிறார்கள்.//

தமிழில் இனம் என்ற வார்த்தை ethnicity மற்றும் race இரண்டையும் குறிக்க பயன்படுத்துவதால் வரும் குழப்பம் அது. நீங்கள் எப்போது வேண்டுமாலும் ஒரு மொழியை கற்று ethnicity-யை மாற்ற முடியும். ஆனால் raceயை மாற்ற முடியாது. ஆக ஒரே race ஆட்கள் மற்றவரின் மொழியை கற்று ethnicity மாற்றிக்கொள்ளலாம். அதாவது ஒரு வட இந்தியன் இங்கு வந்து நன்றாக தமிழ் கற்றால் அவனை வேறுபடுத்துவது சிரமமே. அதே மாதிரி வெள்ளையன் இன்னொரு வெள்ளையனின் மொழி கற்று சுலபமாக மாறலாம்.

சிங்களரும் தமிழரும் ஒரே race ஆனால் ethnicity வேறு. அதனால் சுலமாக மாற்றிக்கொள்ளலாம்

//இதனை போய் ஸ்காட்லாந்துகாரனிடம்,ஐரிஷ் காரனிடம்,ஆங்கிலேயரிடம் சொல்லிப்பாருங்களேன் :-))மொழியை ஒருவர் கற்றுப்பேசலாம்,ஆனால் அவன் அம்மொழிக்காரன் ஆக முடியாது, என்னதான் பிரிட்டிஷ் அக்சென்டில் நாம் ஆங்கிலம் பேசினாலும் நம்மை வெள்ளையர் என இங்கிலாந்துக்காரன் சொல்லிவிட மாட்டான் :-))/


உங்களை வெள்ளைக்காரன் என ஒப்புக்கொள்ள மாட்டான். ஏன்னா வெள்ளைக்காரன் பல மொழி பேசுவான், மேலும் வெள்ளை என்பது Caucasian race. ஆனால் பிரிட்டனில் வளர்ந்து பிரிட்டீஷ் ஆங்கிலம் பேசுபவனை பிரிட்டீஷ்காரன் (national ethnicity) என ஒப்புக்கொள்ளத்தான் செய்கிறார்கள். உதாரணமாக போன உலக கால்பந்து போட்டி நடந்த காலத்தில் ஹாலாந்துகார பாஸ் உடன் போய் ஏர்போர்டில் ஒரு ஜெர்மன்காரனை பிக்அப் செய்தேன். ஜெர்மன்காரன் காரில் ஏறியது இங்கிலாந்து அணியை திட்ட ஆரம்பித்தான். சற்று நேரம் கழித்து என்னை கவனித்தவன் கவலையா, நீ இங்கிலாந்துகாரனா என்றான். நான் சிரித்தபடி "என் கலரைப் பார்த்தால் அப்படியா தெரியுது" என்றேன். நீ தெற்காசியன்தான், ஆனால் இங்கிலாந்து குடிமகனா என கேட்டேன் என்றான். ஆக இப்பவெல்லாம் குடியுரிமைகூட முக்கிய விடயமாகிவிட்டது.அமெரிக்கா ஐரோப்பா வில் பல இனத்தவர் குடியேற்றத்தினால் பல மனமாற்றங்கள் நிகழ்ந்துவருகின்றன். உதாரணமாக அமெரிக்காவில் இன வேற்றுமையை அதிகமாக்க தேச அடிப்படையில் குடியேற்ற அனுமதி அளிக்கபடுகிறது. நாமே பின்னோக்கி போகிறோம்.


//சிங்களர்களும் இந்திய வம்சாவழி தான்,//

மகாவம்சம் விட்ட கதைகளை விட்டுத்தள்ளுங்கள்.மரபணு ஆராய்ச்சிகள் இலங்கையில் உள்ள தமிழருக்கும் சிங்களவருக்கும் நெருங்கிய தொடர்பையும் அவர்கள் இருவரும் இந்தியரும் (இந்திய தமிழரும்) விலகியுள்ளதையும் காட்டுகின்றன. இதனால்தான் அவர்கள் இங்கிருந்து போனவர்களிடமிருந்து தனிதனியான மொழியை கற்றுக்கொண்டதாக கருதப்படுகிறது. அங்கு குடியேறிய மக்கள் இந்தியா வழியாகவே அங்கு சென்றிருப்பார். ஆனால் இந்தியரிடமிருந்து விலகி தனி மரபியல் குணம் கொண்டவர்களாகி விட்டார்கள். டைவர்சிடி அதிகமாகிவிட்டது. சிங்களரும் ஈழத்தமிழரும் இலங்கையின் பூர்வ குடியினராகவே கருதப்படுகிறார்கள். அதாவது இலங்கையர் இந்திய மொழிகள் உருபொறுவதற்கு முன்னரே அங்கு சென்றுவிட்டவர்கள். பின்னர் இந்தியாவிலிருந்து வடக்கிலிருந்து புத்தமதம் பரப்பவும் தெற்கிலிருந்து படை எடுத்தும் சென்றவர்களால் வேறுபட்ட இரு மொழிகளை கற்று பேசுகிறார்கள்.

இந்த ஆராய்ச்சிக்கும் பிரபாகரனின் ஸ்டேட்மெண்டுக்கும் சம்மந்தமில்லை. 2000-ல் செய்ப்பட்ட மரபணு ஆராய்ச்சி முடிவுகள் இவை. பிரபாகரன் இந்திய அமைதிபடையை விரட்ட சிங்களவருடன்- பிரமதாசாவுடன் சேர்ந்து கொண்டார் அப்ப சொன்னது அது.

? said...

பிரேவ்ஹார்டு படமெல்லாம் விடுங்கள். அதெல்லாம் பழங்கதை. இன்னமும் ஐரோப்பா முழுவதும் இணையவில்லை. ஆனால் ஒரே கரன்சி வைக்குமளவுக்கு ஒற்றுமை வந்திருக்கிறது. ஆனால் அங்கும் பிரச்சனை உண்டு. 2014-ல் ஸ்காட்லாந்து UKவிலிருந்து பிரிய தேர்தல் நடத்துகிறது. ஆனாலும் நம்மை விட யூரோப்பாவில் ஒற்றுமை மேம்பட்டிருக்கிறது. நாடு அடிப்படையில் போரிட்டு உலகப்போர்களில் கடும் ஆட்சேதத்தை சந்தித்தவர்கள் இப்போது ஒற்றுமையாக இருக்க முயற்சி செய்கிறார்கள். ஆனால் நம்மிடம் அவ்வளவு கடும் பகை இல்லாவிட்டாலும் ஒருவரை ஒருவர் வெறுக்கிறோம்.

ஐரோப்பாவில் மொழியை யாரும் விட்டுக்கொடுப்பதில்லை ஆனால் மொழி என்று யாரும் இப்படி அடித்துக்கொள்ளுவதும் இல்லை. ஆங்கில பிரஞ்சு சண்டைகள் பழங்கதை. எல்லா அறிவியல் படித்த ஐரோப்பியரும் ஆங்கிலம் கற்றுக் கொள்ளுகிறார்கள். நீங்கள் காட்டும் ஐரோப்பா 19ம் நூற்றாண்டின் ஐரோப்பா. அப்போதுதான் அங்கு தேசியம் எனும் பிணி அவர்களை பிடித்து ஆட்டியது. விளைவு உலகப்போர்கள் மற்றும் கடும் அழிவு.

தேசிய வெறியே ஜரோப்பாவில் 18-19ம் நூற்றாண்டுகளில் தோன்றி பரவிய சமாச்சாரம். இங்கு பாண்டிரும் சோழரும் அடித்துக்கொண்டாலும் மக்களுக்கு நாட்டுபற்று வெறி என்பதெல்லாம் இல்லை. பாண்டிய சோழ போர் அரசருக்குள் நடந்த போர். ஆனால் மக்கள் இந்தியா பாக் மாதிரி வெறுப்பாக இருந்ததாக தெரியவில்லைஇதை இங்கு மேலும் விளக்க முடியாது.

இந்திய எப்படி ஒரே நாடாக இல்லயோ அதே மாதிரி தமிழ் வெறியெல்லாம் இல்லாத காரணத்தால்தான் ஐரோப்பாவில் உள்ளது போல் மொழிவாரி தமிழ்நாடு என்றும் ஒன்று முன்பு இருந்ததில்லை. எல்லாம் நாமாக வலிந்து உருவாக்கும் பிரிவினைகள்.


இலங்கை பிரச்சனை குறித்தான முழு விபரமும் ஒரளவுக்கு தெரியும். இருதரப்பிலும் இருந்த இனப்பிரச்சனை 9 நூற்றாண்டிலிருந்து நடந்தாலும் தற்போதைய காலங்களில் மொழிப்பிரச்சனையாவே முன்னிறுத்தபடுகிறது. 20-ம் நூற்றாடிண்டில் இனபகை வளர முக்கிய காரணமே SLFP சிங்களத்தை நாட்டின் மொழியாக 1958ல் முன்னிறுத்தியதுதான்,தவிர கல்வி என பலவேறு காரணங்களும் உண்டு. நீங்கள் நினைப்பது போல் மேம்போக்கா எதையும் சொல்லவில்லை. இங்கு எழுதினால் அதே பதிவு அளவுக்கு போய்விடும் என்பதினால் அடக்கிவாசிக்கிறேன். மேலும் சண்டை வேறுவரும்.? said...

//எனவே தமிழுக்கான இடத்தை ஆங்கிலம் அபகரிக்கவில்லை, பிற மொழிகளே அபகரிக்கிறது என்பது தான் அடிப்படை உண்மை.//

இப்படியே போனால் தமிழில் பேசும் எல்லா வார்த்தையும் ஆங்கில வார்த்தையாக மாறி தமிழே காணாமல் போய்விடும் என்றால் பள்ளிக்கூடத்தில் மார்க்கு வாங்குவது பற்றி பேசுறீங்கள்.

இப்போதைக்கு உங்க வாதப்படி எடுத்துக் கொண்டாலும் எப்படி வடஇந்தியாவில் சில மொழி காணாமல் போனதே அதே மாதிரி சில நூற்றாண்டு கழித்து தமிழே வேணாம் எதுக்கு வெட்டியாக என பள்ளியில் எடுத்துவிட்டு ஆங்கிலம் மட்டும் படித்தால் என்னவாகும்?

ஆனால் இதெல்லாம் நடக்காது என இந்தியும் ஆங்கிலமும் படித்து தன் மொழியின் மீதும் நம்பிக்கையுடன் இருக்கும் மலையாளியின் தன்நம்பிக்கை நம்மிடம் ஏன் இல்லை?

? said...

நம்ம உலகவிசயமெல்லாம் பேசி வீணாப்போகும் நேரத்தில் வவ்வாலுக்கு அதிர்ச்சி செய்தி போலிருக்குதே....

அமெரிக்க மாப்பிள்ளை தயார்... திருமணத்துக்குத் தயாராகும் அசின்?
Read more at: http://tamil.oneindia.in/movies/heroines/2013/03/asin-marry-us-citizen-170807.html

வவ்வாலு எதுக்கும் பாண்டில ஒரு கேஸ் சரக்கு வாங்கி ஸ்டாக் வைச்சுக்குங்க!

வவ்வால் said...

சகோ.சார்வாகன்,

விரிவான பதிலுக்கு நன்றி!

//தமிழ் பழைய மொழிதான்.நம் சிந்தனைதான்.ஆனாலும் எதையும் மற்றவர் மேல் திணிக்ககூடாது. எந்த மனிதனும் இன்னொருவனை விட பிறப்பு,மதம் ,மொழி,இனம் ஆகியவற்றால் சிறந்தவன் இல்லை என்பதை உணர்ந்து அனைவருக்கும் வாழ்வாதாரம் என்னும் நோக்கம் நோக்கி செல்லாவிடில் ,நிச்சயம் மூன்றாம் உலகப் போர் நோக்கி செல்வோம்.பேரழிவு நிச்சயம்.//

ஆம் அஃதே,அஃதே!

தேவையான ஒன்றாக இருந்தாலும் திணிப்பதாக உணர்வு ஏற்பட்டால் எதிர்ப்புணர்வு தானாக உருவாகிடும்.

# பகவான் செயல் எல்லாம் பரிணாமவியல் அடிப்படையிலேயே உள்ளது ,ஆனால் அதையும் பக்தியாக மட்டுமே பார்க்கிறார்கள்,டார்வின் மட்டும் காவி வேஷ்டிக்கட்டிக்கொண்டு ஒரு சாமியாராக வேஷம் கட்டிக்கொண்டு பரிணாமம்ம் சொல்லி இருந்தால் ,பாகவதர் போன்றவர்கள்,பார்த்தீர்களா எங்கள் மதத்தின் அறிவியலை என்றிருப்பார் :-))

டார்வீன் ஒரு இறைத்தூதர் ,அவர் வழங்கியது இறை வேதம் ,டார்வின் பற்றி புனித நூலில் இருக்குனு சொன்னாப்போதும் மார்க்கப்பந்துக்களும் பரிணாமத்தினை ஏற்றுக்கொண்டுவிடுவார்கள் :-))
--------------------

நந்தவனம்,

நன்றி!

மொழி மட்டுமே இலங்கைப்பிரச்சினைக்கு காரணமல்லனு கடசியில் சொல்லிவீடீர்களே,அப்புறம் என்ன,நானும் அதான்னே சொல்ல வருகிறேன்.

மொழி தாண்டி அரசியல்,மற்றும் உரிமை பிரச்சினைகள் உள்ளன.

ஆங்கிலத்தில் சிந்திந்து தமிழில் பேசுகிறீரக்ள் என நினைக்கிறேன்.

எத்னிசிட்டி,ரேஸ், என ,காக்கேசியன் ,பிரிட்டிஷ் என சொல்கிறீர்கள்.

ஐரோப்பியர்கள் எல்லாமே காக்கேஷியன் தானே. ஆனால் ஒயிட்ச்,இங்கிலீஷ் மென் என்றால் இங்கிலாந்தினை சேர்ந்தவர்களை மட்டுமே குறிக்கும்.

ரேஸ் என்பதற்கு காக்கேசியன் என ஏன் சொல்ல வேண்டும் மனிதர்கள் எல்லாமே ஹியுமன் ரேஸ் தான்ன் என ஒட்டு மொத்தமாகவும் சொல்லிவிடலாம் :-))

ஒரு ஸ்பீசிசில் உள்ள தனித்துவம் உபப்பிரிவே ரேஸ். டாக்ஸானாமி அப்படித்தான் சொல்கிறது :-))

பிரிட்டீஷ் என்பதற்கும் இங்லீஷ் என்பதற்கும் வேறுபாடுள்ளது.ஒரு ஸ்காட்டிஷ் பிரிட்டிஷ் என்றால் ஏற்றுக்கொள்வான் ,ஆனால் இங்க்லீஷ் என்றாம் மறுப்பான் :-))

எனவே மொழி அங்கு வந்து இனக்குழுவினை உருவாக்குகிறது என்பது தெளிவு.

ஆங்கிலம் பேசி யு.கே குடியுரிமை வாங்கினால் பிரிட்டிஷ் என சொன்னாலும் ,ஒயிட் அல்லது இங்லீஷ் மென் என சொல்ல மாட்டார்கள். டிப்ளமேட்டிக் ஆக குடியுரிமை வைத்து சொல்வதெல்லாம் இருந்தாலும், ஒரு மொழி இனக்குழு உணர்வு தனித்துவமாக உலகெங்கும் உண்டு.

ஆப்ரிக்காவில் இருப்பவர்கள் எல்லாம் கருப்பின மக்கள் என நாம் பொதுவாக சொன்னாலும், அவர்கள் பேசும் மொழி வைத்து தனி இனக்குழுவாக தான் இருக்கிறார்கள்,எனவே சண்டையும் நடக்கிறது, காரணம் ஒரு மொழி இனக்குழு ஆட்சிக்கு வந்து இன்னொன்றை அழிக்க/அடக்க பார்க்கிறது.

காமரூன்,காங்கோ, சிம்பாவே ,ருவாண்டா என எங்கும் இப்பிரச்சினை உள்ளது.

இலங்கையில் எதுக்கு மொழிக்காக சண்டை என சொன்னதால் இதெல்லாம் சொல்கிறேன்,ஒரே தேசியம் என்றாலும் உலகெங்கும் மொழி வழி இன அடையாளப்படுத்தல் உண்டு, ஒன்று இன்னொன்றை அடக்க முயன்றால் பிரச்சினை எழும்.எனவே இது மொழிக்கான சண்டையல்ல,பொதுவான சம உரிமை சண்டை என்றே பார்க்க வேண்டும்.

வவ்வால் said...

தொடர்ச்சி...
//இந்திய எப்படி ஒரே நாடாக இல்லயோ அதே மாதிரி தமிழ் வெறியெல்லாம் இல்லாத காரணத்தால்தான் ஐரோப்பாவில் உள்ளது போல் மொழிவாரி தமிழ்நாடு என்றும் ஒன்று முன்பு இருந்ததில்லை. எல்லாம் நாமாக வலிந்து உருவாக்கும் பிரிவினைகள்.
//

ஹி..ஹி அங்கே உள்ள நாடுகள் ஆரம்பத்தில் இருந்தே மொழி அடிப்படையில் தனியாவெ இருக்கு.

ஹாலந்து,டென்மார்க், எல்லாம் தனி நாடாகவே இருந்துவிட்டன, இங்கிலாந்து,௶காட்லாந்து,அயர்லாந்த்,வெல்ஸ் எல்லாம் ஒன்றாக்கப்பட்டதால் ,இப்பவும் தனியா போக நிக்கிறாங்க.

அதே போல இந்தியாவில் பல பிரிவு நிலமக்கள் ஒன்றாக்கப்பட்டு வைக்கப்பட்டதால்ல் அவ்வப்போது சலசலப்பு.

தமிழன் தனி நாடு முன்னர் கேட்டான்,அப்புறம் தேசியம் என வந்தாச்சு. ஆனால் தமிழ்நாட்டில் மொழி பற்றி பேசினால் வெறி என்கிறீர்கள், யு.கேவில் எல்லாம் தனியாக தானே சொல்லிக்கிறாங்க, ஸ்காட்லாந்து,அயர்லாந்துக்கு என தனி பிரதமர்,பார்லிமெண்ட் எல்லாம் இருக்கு. வடக்கு அயர்லாந்து தான் யூ.கேவுடன்ன் இருக்கு,அங்கும் சண்டை, இதெல்லாம் ஒரே குடுவையில் பிற மொழிக்குழுவை அடைச்சு ஏற்பட்ட பிரிவினகள்,அவங்க எல்லாம் மொழி வெறி இல்லாதவர்களா?

எனவே மொழி ,இனம்,மதம் என பிரிவினைகள்,போராட்டங்கள் உலகமெங்கும் உண்டு. தமிழ்நாட்டில் மட்டும் மொழி வெறி வந்துவிடவில்லை. எப்பொழுதெல்லாம் திணிக்கப்படுவதாக தோன்றுகிறதோ அப்பொழுதெல்லாம் எதிர்ப்பு உருவாகிடும்.

பிரிட்டிஷ் காலத்தில் ஆங்கிலம் திணிக்கப்படுகிறது என காந்தி நினைச்சார்,எனவே சுதேச கல்வி முறைக்கொண்டு வரவேண்டும் என்று கூட சொன்னார், ஆனால் அதில் சமஸ்கிருத(பார்ப்பண தாக்கம்) அதிகம் இருக்கவே தோல்வியும் அடைந்தது. தமிழ் நாட்டில் வ.வே.சு.அய்யர் அப்படி ஒரு சுதேச கல்வி நிலையம் அமைச்சார்,அதில் உருவான கருத்து வேறுபாட்டால் தான் பெரியார் காங்கிரஸ் விட்டே வெளியேறினார்.

சமஸ்கிருத /இந்தி பற்றாளர்களுக்கு ஆங்கிலம் திணிப்பாக ,அன்னியமாக தெரிந்தது, தமிழர்க்கு ,சமஸ்கிருதம்,இந்தி,ஆங்கிலம் எல்லாமே திணிப்பு தான். ஆங்கிலம் கூட வேலைக்கிடைக்கிறது எனப்படித்தார்கள்.

ஒவ்வொரு மொழியினரும் மற்ர மொழியின் ஆதிக்கத்தினை விரும்புவதில்லை என்பதே உண்மை,தனியா தமிழ் மொழி வெறி என பிரித்து சொல்லுவது சரியல்ல.
------------------

//இப்படியே போனால் தமிழில் பேசும் எல்லா வார்த்தையும் ஆங்கில வார்த்தையாக மாறி தமிழே காணாமல் போய்விடும் என்றால் பள்ளிக்கூடத்தில் மார்க்கு வாங்குவது பற்றி பேசுறீங்கள்.//

பள்ளியில் தமிழ் அகரம் கற்காமல் விடுவதால் எழுத படிக்க தெரியாமல் போய்விடுகிறது,இப்போது தமிழ்நாட்டில் நிறைய பேர் தமிழ் பேசமட்டும் தெரிந்தவர்களாக உருவாகி வருகிறார்கள்.அதுவே பின்னாளில் தமிழ் தெரியாமல் செய்துவிடும் என்பதால்,முக்கியமான பிரச்சினையாக சொல்கிறேன்.

//ஆனால் இதெல்லாம் நடக்காது என இந்தியும் ஆங்கிலமும் படித்து தன் மொழியின் மீதும் நம்பிக்கையுடன் இருக்கும் மலையாளியின் தன்நம்பிக்கை நம்மிடம் ஏன் இல்லை?//

அவங்க மொழி உணர்வை அவங்களே வெறினு சொல்லிக்கொள்வதில்லை :-))

அவங்க ரெண்டுப்பேர் சந்தித்தால் மலையாளத்தில் பேசிப்பாங்க, நாம ரெண்டு பேர் சந்தித்தால் தமிழில் பேசுவாங்கன்னு சொல்ல முடியாது, தமிழில் பேசுங்கன்னு சொல்லிட்டா உங்களைப்போல சிலர் உடனே மொழி வெறினு சொல்லிடுவீங்க :-))
-----------
#//எதுக்கும் பாண்டில ஒரு கேஸ் சரக்கு வாங்கி ஸ்டாக் வைச்சுக்குங்க!//

ஏன் ..ஏன் இந்த கொலவெறி, சரக்கு வாங்க ஐடியா தராமல் ,அமெரிக்க குடியுரிமை வாங்க ஐடியா கொடுக்கிறது, அப்புறம் நாமளும் சுயம்வரத்துக்கு அமெரிக்க குடிமகனா போட்டிக்கு போகலாம்ல :-))

வர வர இந்தியாவில் இந்தியனுக்கு மதிப்பே இல்லாம போச்சே ...அவ்வ்

30 நாளில் அமெரிக்க குடியுரிமை வாங்குவது எப்படினு புக்கு இருக்கா? நீங்க தான் 30 நாளில் வகைப் புக்கெல்லாம் படிப்பவராயிற்றே தெரிந்தால் சொல்லவும் :-))
----------------
பார்த்திபன்,நன்றி!
-----------

Anonymous said...

சகோ வவ்வால்,

""பள்ளியில் தமிழ் அகரம் கற்காமல் விடுவதால் எழுத படிக்க தெரியாமல் போய்விடுகிறது,இப்போது தமிழ்நாட்டில் நிறைய பேர் தமிழ் பேசமட்டும் தெரிந்தவர்களாக உருவாகி வருகிறார்கள்.""


உண்மையான கருத்து.

-பார்த்திபன்

ராஜ நடராஜன் said...

//இதனை போய் ஸ்காட்லாந்துகாரனிடம்,ஐரிஷ் காரனிடம்,ஆங்கிலேயரிடம் சொல்லிப்பாருங்களேன் :-))//

இந்த வசனத்தை எங்கோ கேட்ட மாதிரி இருக்குதே:)

ராஜ நடராஜன் said...

ஈழப்பிரச்சினையை பல பகுதிகளாக தொகுத்து சொல்ல வேண்டியவை.கடைசிப்பக்க மூலையில் செய்தி மாதிரி சொல்றிங்களே.

எதுக்கெல்லாமோ ரன் எடுக்கத் தெரியுதுல்ல?

வவ்வால் said...

பார்த்திபன்,

தமிழர்கள் என சொல்லிக்கொள்ளும் சிலர் என்னிடம் ,தமிழ் எழுதப்படிக்க தெரியாது என சொல்லியதை கேட்டுள்ளேன் :-))

எல்லாம் நம்ம ஊர் கல்வி முறையில் உள்ள கோளாறு :-))
------------

ராச நட,

வாரும்,

கண்ணு தெரியுதா ,இல்லை அதே நொள்ளைக்கண்ணா :-))

இந்த வசனம் எல்லாம் முன்னர் நான் சொன்னதே தான் :-))

# ஈழப்பிரச்சினை பற்றி நான் பேசி என்னாகப்போகிறது என்பதால் பேசுவதில்லை, அப்படியே பேசினாலும் பலப்பக்கம் இருந்தும் வருத்தம் உண்டாகிறது, உம்ம பதிவில் ஒரு முறை இதனை சொல்லியும் இருக்கிறேன்.

மொழிக்காக மட்டுமே நடக்கும் மொழி வெறி சண்டைனு நந்தவனம் சொல்லிவிட்டதால் ,அதையும் தாண்டி காரணம் இருக்குனு நான் பேச வேண்டியதாகிவிட்டது.

#ரன் மட்டுமே குறிக்கோள் என நினைக்கும் சச்சின் அல்ல நாம், எனது ஆட்டம் எனக்கே பிடிக்க வேண்டும் என நினைத்து ஆடும் ஒரு விளையாட்டு ரசிகன் அடியேன் :-))

நாள் ஒன்றுக்கு ஒரு பதிவு என மாதம் 30/31 நாளும் பதிவு போடுவது ஒன்றும் பெரிய காரியமேயல்ல :-))

இத்தனை நாளாக இருந்தும் என்னால் 241 பதிவுகளே போட முடிகிறது என்றால் ,நீர் நினைக்கும் ரன் அடிக்கும் வேகம் நமக்கு இல்லை என்றே நினைக்கிறேன் :-))

எனவே இந்த ஆட்டத்துக்கு நான் வரலை!!!

ராஜ நடராஜன் said...

மொழி குறித்த பின்னூட்ட விவாதங்கள் சிறப்பாக இருக்கின்றன.அசத்துறீங்க.வாழ்த்துக்கள்.

ராஜ நடராஜன் said...

முந்தைய பின்னூட்டம் பின்னூட்டங்களை படிச்சிட்டு சர்டிபிகேட் தந்தது.ஆன்லைன்ல குந்திகிட்டிருக்கிற மாதிரி தெரியுதே:)

ராஜ நடராஜன் said...

ஒவ்வொருத்தரும் பதிவு போட்டு நன்றின்னு பின்னூட்டம் சொல்லிட்டு அடுத்த பதிவு அதுக்கு அடுத்த பதிவின்னு போய்கிட்டே இருக்கிறாங்க.மற்றவங்களை விட தலைகீழா நீங்க தொங்குறதால் நீங்க பதிவு போட்டுட்டு பின்னூட்டத்துல கவனம் செலுத்துறீங்க.எத்தனை பதிவு போட்டோமென்பது முக்கியமல்ல.எத்தனை விசயங்கள் சொன்னோம் என்பதே முக்கியம்.அந்த விதத்தில் நீங்க உசத்திதான். முதுகில் தட்டி இன்னுமொரு வாழ்த்து:)

? said...

வவ்வால் எல்லா வாதக்காரர்களைப் போல் நான் சொல்ல வந்ததைவிட்டு திரிக்கின்றீர்கள்.

டைப் அடிச்சு அடிச்சு கை வலிக்குது. (வேலைவிடயமாகவும் இதே செய்ய வேண்டிஇருக்குது)

இதுதான் நான் சொல்ல வந்தது.


இலங்கையில் இரு எத்தனிக் குழுக்களிடையே பிரச்சனை. இரண்டு குழுக்களையும் பிரிப்பது மொழி. ஆக மொழியே அடிப்படையான முக்கிய காரணமாகும். பிற உபகாரணங்களும் உண்டு.

திரும்ப திரும்ப ஐரோப்பிய பிரச்சனைகளை சுட்டிக்காட்டுகிறீர்கள். வெள்ளையர்களியே பெரும் பிரிவினைகள் இருந்தன, இருக்கின்றன. அவற்றை தாண்டி வர அவர்கள் முயற்சி செய்கின்றனர். நாம் பிரச்சனைகள் அதிகரிக்க, பிரிவினை பெருக்க முயல்கிறோம்.

மொழிவிடயத்தில் நான் என்ன சொல்கிறேன் என்பதே உமக்கு புரியவில்லை. தமிழர்கள் சந்தித்தால் ஆங்கிலம் பேசவேண்டும் என்ற நினைப்பில் இருந்தால் நான் ஏன் வவ்வால் பதிவிற்கு வரவேண்டும்? நான் தினசரி வாழ்வில் ஆங்கிலம் பேசி வாழ்பவன், அதுதான் சோறு போடுகிறது.

ஆர்வம் வெறியாக மாறி எனது மொழிதான் சிறந்தது என்று சொல்லுவதே தவறு என்கிறேன். மொழித்திமிர் சிங்களவர்களுக்கு மட்டுமல்ல ஈழத்தமிழருக்கும் உண்டு. இலங்கை பிரச்சனைக்கு முன்பு, இலங்கை தமிழர் சிங்களனை மட்டுமல்ல இந்திய தமிழனையும் மதிக்கமாட்டார்கள். இதையெல்லாம் எழுதினால் பிரச்சனை வளரும். நான் சொல்ல வருவது இந்த மனப்போக்குதான் பிரச்சனைக்கு இரு தரப்பிலும் காரணம்.

இதுமேல முடியல நன்றி!

? said...

//30 நாளில் அமெரிக்க குடியுரிமை வாங்குவது எப்படினு புக்கு இருக்கா? நீங்க தான் 30 நாளில் வகைப் புக்கெல்லாம் படிப்பவராயிற்றே தெரிந்தால் சொல்லவும் :-))//

ஒரே ஒரு வழிதான் உண்டு. மெக்சிகோ அல்லது கனடா வந்து திருட்டுதனமாக அமெரிக்காவுக்குள் நுழையவும். இதற்கு என்றே சில சிவப்பிந்தியரும் மெக்ஸிகன் மாபியாவும் இருக்கிறார்கள். அப்புறம் அசின் உமக்கே உமக்குதான்.

அமெரக்காவுக்கு விசா வாங்கிட்டு வருவதில் ஒரு பிரச்சனை, உம்மைப் பத்தி ரெக்கார்டு (கைரேகை) அமெரிக்க அரசிடம் மாட்டிவிடும். அப்புறம் அசின் புருசன் கதையை நீர் முடித்தால் ஈசியாக மாட்டிக்கவீர்!

(உடனே 30 நாளில் 'அடுத்தவ புருசனை போட்டுத்தள்ளுவது எப்படி என்ற புத்தகம் படிச்சியா என ஓசி கேட்காதீர்!)

? said...

@இன்னமொரு விடயத்தை தெளிவுபடுத்திவிடுகிறேன்.

நான் இங்கு எல்லா மொழிவெறி குறித்துதான் பேசுகிறேன்.தமிழை மட்டுமல்ல. ஆனால் தமிழில் சக தமிழரோட உரையாடல் என்பதினால் தமிழை முன்னிலைபடுத்துகிறேன். அவ்வளவுதான்.

ஏன் நம்மால் சக தமிழனை மட்டுமே நேசிக்கவேண்டும். மொழிரீதியாக மனித இனத்தை குறுக்குவதற்கும் சாதி வெறிக்கும் பெரிய வேறுபாடு இல்லை. இரண்டுமே வேறுவித டெபனிசன் மூலம் இனகுழு போட்டியை உருவாக்கி அழிவனை தேடுகின்றன. சிலரால் சாதி தாண்டி சிந்திக்க முடிவதில்லை. உம்மால் மொழி சார்ந்த இனத்தை தாண்டி சிந்திக்க இயலவில்லை. அம்புட்டுதான்!

மனிதன் என்பது ஸ்பீஸிஸ். அதை மட்டும் பிடித்து ரேஸையும் விடுவது நல்லது என்பதுதான் நான் சொல்லுகிறேன்.யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதற்கு இதுதான் அர்த்தம்!;)))) மனிதனையும் தாண்டி வள்ளலார் மாதிரி வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்பது இன்னமும் உயர்நிலை. நன்றி!

Anonymous said...

சகோ.நந்து,

மொழிரீதியாக, சாதீயரீதியாக, இனரீதியாக மக்கள் ஒடுக்கப்படும் போது....அதற்கு எதிராக ஒரு குழுவாக போராடுவதும், ஒன்றுபடுவதும் எப்படி தவறாகும்.

-பார்த்திபன்

1 said...
This comment has been removed by the author.
? said...

டிஸ்கி;முந்தய பின்னூட்டம் ஒரு சகாவின் அக்கவுண்டிலிந்து வெளியாகிவிட்டது நீக்கிவிட்டேன்.

சகோ பார்த்தி,
//மொழிரீதியாக, சாதீயரீதியாக, இனரீதியாக மக்கள் ஒடுக்கப்படும் போது....அதற்கு எதிராக ஒரு குழுவாக போராடுவதும், ஒன்றுபடுவதும் எப்படி தவறாகும். //

தவறே இல்லை.நான் சொல்வது மொழி மதம் கலாச்சாரம் போன்ற காரணங்களால் மனிதன் குழுக்களாக பிரிந்து தனிஇனம் என ஒரு ஐடென்டியை நிறுவி சண்டையிடுதல் தவறு என்பதே.

நடுநிலையோடு எழுதப்பட்ட இலங்கை வரலாற்றை முழுவதும் படித்தால் இரு குழுக்களும் செய்த அட்டூழியம் புரியும். இப்போது சிங்களர் கையில் அதிகாரம் இருப்பதாலும், நாம் தமிழர் செய்யும் தவறுகளை கண்டுகொள்வதில்லை என்பதினாலும் சிங்களவன் செய்வது பூதாகரமாக தெரிகிறது. ஆனால் எவரிடம் அதிகாரம் போகிறதோ தடியெடுத்தவராகவே இருந்திருக்கிறார்கள். ஆனால் சிங்களவரும் தமிழரும் இணைந்து ஒரே இனமாக உணர்ந்திருந்தால் அடுத்தவர் செய்யும் தவறு பூதாகரமாக தெரியாது. ஆனால் இது இல்லாத்ததாலே அங்கு சண்டை. இப்படி ஒரே இனமாக உணர முதலில் நமது எத்தனிக் மற்றும் ரேஸ் அடிப்படையிலான பிரிவினைக்கு முக்கியத்துவம் தருவதை நிறுத்தனும் என்பது எனது வேண்டுகோள். ஆனால் எப்படி தமிழ்நாட்டில் பலரால் சாதிபற்றை விட முடியவில்லையோ அதேமாதிரி மிகவும் கடினமான ஒன்றே. ஏனெனில் மனிதன் ஏதோ ஒரு காரணத்தை சொல்லி குழுவாக வாழவே பரிணம ரீதியாக பழகி போனவன். ஆயிரம் சொன்னாலும் மரபணுக்களால் கட்டுப்படுத்தபடும் ஒரு விலங்குதான் மனிதன்!

நான் சொல்ல வருவதை சரியாக ஒரளவுக்கு இங்கு புரிந்து கொண்டவர் சகோ சார்வாகன் மட்டுமே. ஏனெனில் அவரிடம் மொழி பாசத்தை தாண்டி அறிவியல் ரீதியான சிந்தனை உண்டு. இதற்கு முக்கிய காரணம் அவரது பரிணாமம் குறித்த அறிவும் ஆர்வமும். நன்றி!

Anonymous said...

சகோ.நந்து,

"தனிஇனம் என ஒரு ஐடென்டியை நிறுவி சண்டையிடுதல் தவறு என்பதே."


ஒரு குழு மக்கள் *ஒடுக்கப்படும் போது* அதற்கு எதிராக ஒரு குழுவாக போராடுவதும் ஒன்றுபடுவதும் எப்படி தவறாகும்.

-பார்த்திபன்

வவ்வால் said...

ராச நட,

வாரும்,

என்ன ஓய் இன்னிக்கு அதிசயமா வாழ்த்துறிங்க,பாராட்டுறிங்க :-))

நன்றி!

நாம ரன்"சேகரிக்க" தெரியாத பேட்ஸ்மன், ஒரே ஒரு பால் அடிச்சா சிக்சர், இல்லைனா ஸ்டம்ப் தூக்கிடும் :-))

# பின்னூட்டம் போட்டுவிட்டு ,வெளியானதா எனப்பார்க்கும் போது உங்க பின்னூட்டம் பார்த்தேன்,ஆனால் நீங்களும் உடனே பதில் சொல்லுவீங்கனு நினைக்கலை, வழக்கம் போல ஊர்சுற்ற போயிருப்பிங்கனு நினைச்சேன் :-))

ஆனால் நான் தான் ஊர்ச்சுற்ற போயிட்டேன்ன் போல இருக்கு அவ்வ்வ்!
--------------
நந்தவனம்,

வாரும்,நன்றி!

கை வலிக்கும் அளவுக்கு "கைக்கு "வேலையா ...அவ்வ்வ்!

நான் என்ன கயிறு திரிக்கும் சங்கத்தலைவனா, உண்மையில கயிறு திரிப்போர் சங்கம்னு கூட ஒன்னு இருக்கு, கடலூரில் தென்னை நாரில் இருந்து கயிறு திரிக்கும் தொழில் நடக்குது, அதுக்கு ஒரு சங்கம் இருக்கு பேரு "கடலூர் நகர கயிறு திரிப்போர் சங்கம்" :-))

கயிறு திரிப்போர் உண்மையில் கடுமையான உழைப்பாளிகள், இவ்வேலையை செய்வது பெரும்பாலும் பெண்களே, எத்தனை கிலோ கயிறு திரிக்கிறார்கள் என எடை அடிப்படையில் சம்பளம். கையாள் சுத்தும் எந்திரத்தை வைத்து கை வலிக்க சுற்ற வேண்டும்,இன்னொரு பக்கம் இறுக்கமாக கயிற்றின் முனையை பிடித்து இழுத்தபடி நகர வேண்டும், கயிறு திரிச்சால் கையெல்லாம்ம் வலிக்கும் :-))

உடனே திரிச்சுட்டேன் ,உறிச்சுட்டேனு கிளம்பிடாதீர் :-))
#//இலங்கையில் இரு எத்தனிக் குழுக்களிடையே பிரச்சனை. இரண்டு குழுக்களையும் பிரிப்பது மொழி. ஆக மொழியே அடிப்படையான முக்கிய காரணமாகும். பிற உபகாரணங்களும் உண்டு. //

நீங்க மொழி மட்டுமே அடிப்படைக்காரணம் என்கிறீர்கள்,நான் அது மட்டுமேயில்லை என்கிறேன்,இதில் என்ன திரிப்பு உள்ளது?

மேலும் ஐரோப்பாவில் ஒற்றுமை செழித்து நிலவுகிறது ,மொழி வெறி இல்லை என சொன்னதும் நீங்கள் தான் எனவே அங்கும் பிரச்சினை நிலவுகிறது ,அதற்கும் மொழி காரணமாக இருக்கே என நினைவூட்டினேன்.

IRA, வடக்கு அயர்லாந்த்தில் இன்னும் குண்டு வச்சுக்கிட்டு தான் இருக்கு, ஆனால் அதெல்லாம் வேறு ஏதோ ஒரு காரணம் ,சரியா சொல்லிட்டேனா :-))

# உங்களை போய் ஆங்கில வெறியர்னு சொல்வேனா, நந்தவனம்னு அழகா பேரு வச்சு,அருமையாக தமிழில் கதைக்கிறிங்க,நான் சொன்னது பொதுவா இரண்டு தமிழர்கள் பேச ஆங்கிலமே அதிகம் பயன்படுதுனு. எனவே தமிழில் தமிழர்கள் பேசிக்கொண்டாலும் வளரும்னு சொன்னேன்.

மலையாளிகள் இந்தி,ஆங்கிலம்ம்னு படிச்சாலும் ,மலையாளம் குறித்து தன்னம்பிக்கை இருக்குனு சொன்னதும் நீங்களே, காரணம் அவங்க மொழியிலே தான் பேசிக்கிறாங்க.

#//ஆர்வம் வெறியாக மாறி எனது மொழிதான் சிறந்தது என்று சொல்லுவதே தவறு என்கிறேன். மொழித்திமிர் சிங்களவர்களுக்கு மட்டுமல்ல ஈழத்தமிழருக்கும் உண்டு. இலங்கை பிரச்சனைக்கு முன்பு, இலங்கை தமிழர் சிங்களனை மட்டுமல்ல இந்திய தமிழனையும் மதிக்கமாட்டார்கள்.//

இருக்கலாம்,ஆனால் அது எப்படி மொழி வெறியால்னு சொல்ல முடியும்,உண்மையில் அதுக்கு வேறு காரணம் இருக்கு,பேசினால் வம்பு :-))

# //உம்மால் மொழி சார்ந்த இனத்தை தாண்டி சிந்திக்க இயலவில்லை. அம்புட்டுதான்!//

எனக்கு மட்டும் என்ன பற்று கூடி ,வெறியேறியாப்போச்சு, பாருங்க, மலபார் படத்தை தான் பதிவில் போடுறேன், மொழி வெறி இருந்தால் அப்படிலாம் செய்வேனா :-))

மொழியை நேசிக்கும் ,மொழிகளை கடந்த ரசிகனய்யா அடியேன்!

ஹி...ஹி...கில்லாடி 786னு ஒரு இந்தி படம் கூட சமீபத்தில் பார்த்தேன் !
----------------

# நந்தவனம் , அமெரிக்காவுக்கு வழிக்காட்ட சொன்னா அமெரிக்க ஜெயிலுக்கு வழிக்காட்டுறிங்களே, என்னை வச்சு ஷாஷங்க்ஸ் ரிடெம்ப்ஷன் இரண்டாவது பாகம் எடுக்கவா ...அவ்வ்!

மாப்பிள்ளையை தானே தேடுறாங்க,அதுக்குள்ல புருஷன் கிருஷன்னு சொல்லிக்கிட்டு, அமெரிக்க குடியிரிமை வாங்கிட்டா அப்புறம் நாமளும் தகுதி சுற்றுக்கு நுழைவோம்ல ,காண்பிடன்ஸ் இல்லாம பேசப்படாது :-))
-----------
பார்த்திபன்,

//மொழிரீதியாக, சாதீயரீதியாக, இனரீதியாக மக்கள் ஒடுக்கப்படும் போது....அதற்கு எதிராக ஒரு குழுவாக போராடுவதும், ஒன்றுபடுவதும் எப்படி தவறாகும். //

இதைத்தானே விலாவாரியா கேட்டுக்கிட்டு இருக்கேன், நீங்க ரெண்டே வரியில கேட்டால் ,உடனே சொல்லிடுவாங்களா, உமக்கு மொழி வெறி ஜாஸ்தியாகிடுச்சு :-))
----------------

வவ்வால் said...

நந்தவனம்,

//நடுநிலையோடு எழுதப்பட்ட இலங்கை வரலாற்றை முழுவதும் படித்தால் இரு குழுக்களும் செய்த அட்டூழியம் புரியும். இப்போது சிங்களர் கையில் அதிகாரம் இருப்பதாலும், நாம் தமிழர் செய்யும் தவறுகளை கண்டுகொள்வதில்லை என்பதினாலும் சிங்களவன் செய்வது பூதாகரமாக தெரிகிறது. //

ஆதியில் நடந்தது ,பாதியில் நடந்தது என்றெல்லாம் சொல்லணும் போல இருக்கே.

கடந்த 50 ஆண்டுகாலமாக நடப்பதை வைத்து சொல்லுங்களேன், யார் ஒடுக்கப்பட்டிருக்கிறார்கள் ,எனவே ஒடுக்குதல் செய்யப்படோர் தான் போராட வேண்டும் என்ற நிலை, இப்போ யார் போராட வேண்டும்?

//தவறே இல்லை.நான் சொல்வது மொழி மதம் கலாச்சாரம் போன்ற காரணங்களால் மனிதன் குழுக்களாக பிரிந்து தனிஇனம் என ஒரு ஐடென்டியை நிறுவி சண்டையிடுதல் தவறு என்பதே.//

இது பொதுவாக மிகச்சரி ,ஆனால் குறிப்பிட்ட பிரச்சினைக்கு தவறு!

ஏன் எனில் ஒருக்குழு நீண்ட காலமாக ,மொழி,இனம் என சொல்லி அடக்கிவிட்டது,அதற்கு எதிராக செயல்ப்பட ,மற்ர தரப்பும் மொழி,இனம் அடிப்படையில் ஒன்று திரள வேண்டியது ,காலத்தின் கட்டாயம்.

அவனை நிறுத்த சொல்லு ...நான் நிறுத்துறேன் என்ற நிலையாகிப்போச்சு, எனவே இப்போ அடையாளம் காட்டிக்க கூடாது என சொல்ல முடியாது.

//நான் சொல்ல வருவதை சரியாக ஒரளவுக்கு இங்கு புரிந்து கொண்டவர் சகோ சார்வாகன் மட்டுமே. ஏனெனில் அவரிடம் மொழி பாசத்தை தாண்டி அறிவியல் ரீதியான சிந்தனை உண்டு. இதற்கு முக்கிய காரணம் அவரது பரிணாமம் குறித்த அறிவும் //

எங்களுக்கும் புரிய வைத்தால் கோடி புண்ணியம் :-))
----------
பார்த்திபன்,

ஹி...ஹி , ஆத்தா வையும் ,சந்தைக்கு போகணும் ,காசு கொடு போல, விடாமல் அதே கேள்வி, ஆனால் உங்களுக்கு மொழி வெறி அதிகமாகிவிட்டதை நீங்கள் ஏற்றுக்கொண்டு, மொழி ,இனம் என்றெல்லாம் பேசுவதை விடக்கற்றுக்கொண்டால் தான் ,எல்லாம் புரியும் இதை நான் சொல்லவில்லை நந்தவனம் சொல்லுவாறு :-))

மொழி வெறியன் என்பதில் இருந்து நான் திருந்தி மறுவாழ்வு பெறப்போகிறேன் ,எனக்கு மொழி,இனம்,தேசம் பாசம் எல்லாம் இல்லை இன்னில இருந்து நான் மெக்சிகன் அமெரிக்கன் , என் மொழி லத்தின் :-))

பார்த்திபன் நீங்களும் திருந்தி மறுவாழ்வு பெறவும் :-))
-------------

Anonymous said...

வவ்வால்,

அட! ஆமா சார்... நான் வெறியன் தான் போல..நன்றி! வாழும் உரிமை கேட்டால் இப்படித்தான் ஆகும் போல. இனி நான் ஜப்பான்காரன்..:-)))

-பார்த்திபன்.

? said...

வவ்வால் என்ன மேட்டர் எழுதுனாலும் உடனே வாத்தியராக மாறி கிளாஸ் எடுக்கறீங்க. முடியல.

ஆக மொத்தம் நான் தமிழ் எதிர்ப்பு வெறியன் இல்லை.நீரும் தமிழ் வெறியன் இல்லைன்னு முடிவாயிருச்சு. நீங்க அசினுக்காக இந்தி என்ன, போஜ்பூரி படம்கூட சளைக்காம பார்ப்பீங்கங்கறது தெரிஞ்ச விடயம்தான் விடுங்க.

சகோ பார்த்திபன் இனியாவது ஏசி ரூமில் உட்கார்ந்துகிட்டு இணைத்துல புர்ச்சி பண்ணுறன் பேர்வழின்னு நம்ம மாதிரி இ.வாயனுங்க ரெண்டு பேரை தூண்டி விட்டு வேடிக்கை பார்த்து பொழுது போக்காமல் சுத்தவீரனா ஆயுதம் ஏந்தி வாழும் உரிமைக்காக போராடுவார் என நம்புகிறேன்.

வாழ்க டமில், வளர்க இங்கிலீஸ் என என் உறையை சாரி உரை முடிக்கிறேன்.என்னை ஆளைவிடுங்க சாமிகளா! நன்றி

Anonymous said...

//சகோ பார்த்திபன் இனியாவது ஏசி ரூமில் உட்கார்ந்துகிட்டு இணைத்துல புர்ச்சி பண்ணுறன் பேர்வழின்னு நம்ம மாதிரி இ.வாயனுங்க ரெண்டு பேரை "தூண்டி விட்டு" வேடிக்கை பார்த்து பொழுது போக்காமல் சுத்தவீரனா ஆயுதம் ஏந்தி வாழும் உரிமைக்காக போராடுவார் என நம்புகிறேன்.//

தமாசா...எல்லாரும் சிரிங்க..:-)))

-பார்த்திபன்.

? said...

//தமாசா//
போராடுவோம் போராடுவோம் ன்னு ஒரே சத்தமா இருந்தது.. இப்ப தமாசுங்கறீங்க.

சத்யராஜ் சீமான் முதற்கொண்டு பல போராட்ட புரட்சிகளை தாங்கியவன்தான் உங்க வாழ்க்கை போராடத்தை தாங்காமலா போயிருவேன்.

நீங்க தமிழ்நாட்டின் சே...விட்டுவிடாதீங்க.

வவ்வால் said...

பார்த்திபன்,

செம ஃபாஸ்டா இருக்கீங்களே, சொன்னதும் ஜப்பான்காரனாக ஆகிட்டிங்க, நன்று! ஆனா ஒன்னு ஜப்பான்காரனா ஆகிட்டோமேன்னு ஜப்பானிய வெறிய மட்டும் ஏத்திக்கவே கூடாது :-))

ஜப்பானில் கல்யாணராமன் டிவிடி பார்க்கவும் :-))
----------------

நந்தவனம்,

இந்த நேரங்கெட்ட நேரத்தில கிளாஸ்னு சொல்லி கட்டிங்க் அடிக்க வைக்குறிங்களே, இப்போ சரக்குக்கு எங்கே போவேன் :-))

உங்களை யாருமே தமிழ் எதிர்ப்பாளர்னு சொல்லவேயில்லை, குறிப்பாக நான் சொல்லவேயில்லை, ஆனால் நீங்களாக அப்படி நினைக்க மனப்பிராந்தி தான் காரணம் என நினைக்கிறேன் லெ மார்ட்டின் அல்லது ரெமி மார்ட்டின் நைண்டி அடிச்சு பாருங்க ,பிராந்தி ஏறினா தான் மனப்பிராந்தி இறங்கும் :-))

நான் மொழிகளை கடந்தவன் என்பதால் போஜ்புரியும் பார்ப்பேன், ஆனால் அதுக்கெல்லாம் மலபார் தான் காரணம்னு வழக்கம் போல நீங்க குற்றப்பத்திரிக்கை வாசிப்பிங்க போல இருக்கே அவ்வ்வ் :-))

# ஆயுதம் தூக்க சொல்லிட்டரே அடுத்து ஆயுதத்துக்கு பூஜை போடணும்னு சொல்லி ஆயுத பூஜையும் செய்ய சொல்வாரோ, இனிமே நாத்திகன்னு கூட சொல்லிக்க முடியாது போல இருக்கே அவ்வ் :-))
----------------

பார்த்திபன்,

சீரியசாக பேசும் போது என்ன சிரிப்பு வேண்டிக்கிடக்கு பீ சீரியஸ்,யு க்னோ ஐம் சோ சீரியஸ் , soon i will meet you at japanese consulate and let's disscuss about mexico and japanese developement , ,கூடிய சீக்கிரம் உங்களை ஜப்பானிய தூதரகத்தில் சந்திப்போம், மெக்சிகோ மற்றும் ஜப்பான் வளர்ச்சி பற்றி பேசலாம்!

? said...

சகோ பார்த்திபன், இதை ரொம்ப சீரியஸாக எடுத்துக்காதீங்க. பதிவுலகில் முன்பு பல பேர் இப்படிதான் சாதி திராவிடம் என ரொம்ப சீரியஸாக சண்டை போட்டுவிட்டு இப்ப சமத்தாக பிள்ளை குட்டிகளை படிக்க வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

நீங்க புதியவராக தெரிகிறது. போக போக இந்த விடயம் உமக்கும் புரி்யும். இதனால்தான் மிகவும் சீரியஸான இலங்கை பிரச்சனையின் போதும் நானும் வவ்வாலும் டென்சன் ஆகவில்லை. நாம பேசி என்ன ஆகப்போகிறது? ஒன்றுமில்லை!

Anonymous said...வல்லரசு நாட்டில் இருந்திருந்தால் உம்மைப் போல் சிந்தித்து இருப்பேன் போல.


-பார்த்திபன்

வவ்வால் said...

நந்தவனம்,

என்ன கன்னாட்டம் பதில் உடனுக்குடன்ன் வருது, பலே,

இதில் சீரியசாக என்ன இருக்கு, பேசுவோம்,பேசிக்கொள்வோம், பேசிக்கொண்டே இருப்போம் அஃதே!!!

ஹி...ஹி பரவாயில்லை ,நம்ம மேல காண்டாகலை , தெளிவான புரிதல்!

பார்த்திபனுக்கும் புரியும்,அவர் பேசுவதை பார்த்தால் அவரும் பழம்பெருச்சாளி போலத்தான் தெரிகிறது, என்ன நிர்பந்தமோ பார்த்திபன் கண்ட கனவாய் வந்திருக்கார் :-))

இப்போ ராச நட வந்து ,சொக்காயை கிளிச்சுப்பிங்கன்னு நினைச்சேன் எல்லாம் விக்ரமன் படம் கிளைமாக்ஸ் போல பேசிட்டு போறிங்களேனு குதிச்சாலும் குதிப்பார் :-))

வவ்வால் said...

அட டா பார்த்திபனும் வில்லோடு தான் இருக்கார் போல அம்பு போல பதில் கணைகள் பாய்கிறது :-))

கூல் ..கூல் ..நீங்க ஜப்பான்காரன் ஆகி சில மணி நேரங்கள் ஆகுது,ஜப்பான் தான் ஆசியாவின் முதல் வல்லரசு ,இரண்டாம் உலகப்போரில் அணுகுண்டு போடும் வரையில்!!!

இப்பவும் பொருளாதார வல்லரசு,எனவே வல்லரசு நாட்டின் பிரதிநிதி நீங்கள் :-))

? said...

வவ்வால், ச அப்படின்னு உடனே சரக்கா இது என்ன அநியாமாக இருக்கு.

உமக்கு எதுக்கு ஓய் சரக்கு? சேச்சி படத்தை படத்தை பார்த்துகிட்டே தன் கையே தனக்குதவின்னு போய்படும். போதை தானா ஏறும்!

பார்த்திபன் இன்னும் கொஞ்ச நேரம் விட்டா பொலிவியா தமிழ்நாடு ஈழம் புரட்சிம்பாரு போல இருக்குது. நான் ஏற்கனவே பீதில இருக்கேன். நீர்வேற அவரை ஜப்பான் சமுராய்ன்னு கிண்டி விடுறீர்.

Anonymous said...


சகோ.நந்து,

டென்சன் ஆகவில்லை.நன்றி.:-)


வவ்சு,

அருமையான கருத்துகள்.. நன்றி. soon, we will meet at Japanese consulate :-)))-பார்த்திபன்
? said...

//வவ்சு,அருமையான கருத்துகள்//


பார்த்திபரே சொல்லிவிட்டார். இனி உமது பாட்டுக்கு சோழ நாடே அடிமையப்பா அடிமை! :)

வவ்வால் said...

நந்தவனம்,

கைவலிக்குது ரொம்ப வேலைனு நீங்க சொல்லும் போதே மைல்டா டவுட்டானேன் :-))

என்னையும் கைத்தொழில் செய்ய சொல்லுறிங்களே அவ்வ் :-))

ஒரு புதிய சமுராய் உருவாவது உங்க கண்ண உறுத்துதா ?

பார்த்திபன், தி லாஸ்ட் சமுராய் ஆஃப் தி நியு மில்லனியம் :-))

# பாலைய்யா டையலாக்கு எல்லாம் நல்லா சொல்லுங்க, நான் தான் மெக்சிகோக்கு ஓடிப்போறேன்னு சொல்லிட்டேன் ,அப்புறமும் சோழ நாட்டை கட்டி இழுத்தா எப்பூடி ?

தலையில ஒரு மெக்சிகன் ஹேட் போட்டுக்கிட்டு ,கையில கிட்டார் வச்சிக்கிட்டு ஓஹ் செனோரிட்டா..ஓஹ் மாஸ் ஃபினா ...ஓஓ.. ஊனு பாடிக்கிட்டு இருக்கிற என்னை சோழநாட்டுக்கு மீண்டும் தள்ளிவிடும் உமது மொழி வெறியை வன்மையாக கண்டிக்கிறேன் :-))
---------------

பார்த்திபன்,

நன்றி!

ஜப்பானை விடக்கூடாது,மொழி வெறியராக இல்லாமல் நாமெல்லாம் கரையேறிட்டோம், நந்தவனம் தான் இன்னும் கரையேராமல் இருக்கார் :-))

Anonymous said...

வவ்வால்ஜி...

ரெண்டு தடவை வந்தேன்...

503 Error while commenting...Too many comments I guess..-:)

வெட்கம் கெட்ட விளம்பர மோகம்/

அம்மையார் ஒரு ரத்தக்காட்டேரின்னு

சிம்பாலிக்கா சொல்றார் போல...-:)

Anonymous said...

கடலில் கரையும் கண்ணீர் துளிகள்!/

கொலைகாரன்களா இருந்தும் சோனியாவிற்கும் ராஜ பக்ஷேக்கும் இருந்த முனைப்பு எந்த தமிழனுக்கும் அப்ப இல்லாம போனது தான் உண்மை வவ்வால்ஜி...

Anonymous said...

படிப்பது இராமாயணம் இடிப்பது பரிணாமம்//

எனக்கு இந்த விசயத்தில் இரண்டு பக்கங்களிலும் அவ்வளவா அறிவு கிடையாது...ஏனோ அதிகமா படிக்கணும்னு தோணல...

Anonymous said...

மதமெனும் போதை!/

இதை விட பெரிய கொடுமை கோயிலுக்குள்ளேயே குடும்பம் நடத்துற சாமியார்கள் கதை தான்...

என்ன கொடுமை சார் இது...

வவ்வால் said...

செனோர் ரெவரிஜி,

வாங்க,நன்றி!

உங்களை தான் நினைச்சிட்டு இருந்தேன்,சரியா வந்திட்டிங்க!!!

ஹி...ஹி மொழி,இன வெறிலாம் இருக்கக்கூடாதுனு நண்பர் நந்தவனம் சொன்னதால் ,மெக்சிகனாக மாறியாச்சு, எனவே ஸ்பானிஷ் படிக்க போறேன் :-))

நீங்க தான் ஸ்பானிஷ் மொழி அறிஞராச்சே, 30 நாளில் ஸ்பானிஷ் கற்றுக்கொள்வது எப்படினு எதாவது தளம் இருக்கானு சொல்லுங்க :-))

பிலாக்கர் அப்போ அப்போ என்னையுமே சோதிக்குது, பிலாக்கருக்கு வயசாச்சு போல :-))

# இரத்தக்காட்டேறினே முடிவு செய்தாச்சா ,ம்ம் உங்க ஊருக்கு ஆட்டோ வராதுனு தெகிரியம் :-))

# இலங்கைப்பிரச்சினையைப்பொறுத்த வரையில் ராஜிவ் படுகொலைக்கு முன்,பின் என ஒரு நிலை,

அதே போல முள்ளிவாய்க்காளுக்கு முன் ,பின் என ஒரு நிலை என்றே தம்மிழகத்தில் மக்கள் நிலைப்பாடு எடுக்கிறார்கள்.

முள்ளிவாய்க்காலுக்கு பின்னர் பலரும் ஆதரவான மனநிலையில் தான் இருக்கிறார்கள்,ஆனால் தமிழக அரசியல்வாதிகளோ அல்லது வேறு எந்த தலைவரோ ஒருங்கிணைக்கவேயில்லை, வழமைப்போல மேடைக்கச்சேரி மட்டுமே.

முன்னர் புலிகள் இயக்கம் இருந்தது ,அவர்களே பார்த்துக்கொள்வார்கள் என்று நினைத பொது ஜனம் கூட இப்போ எதாவது செய்யணும் என நினைக்கிறார்கள்,அதனை வழிநடத்தி செல்ல ஆள் இல்லை,இங்கே எல்லாம் அட்டக்கத்திகளாக இருக்கே?

தமிழ்க அரசியல் சூழலில் முன்னெப்ப்தும் இல்லாத அளவில் தலைவர்களுக்கு பஞ்சம்,கொள்கையில்லாத இயக்கங்கள் என ஒரு வெற்றிடம் தான் நிலவுது.

# இராமாயணம் தெரியலைனாலும் பரிணாமம் தெரிஞ்சுக்கலாம், சகோ.சார்வாகன் பதிவுப்பக்கம் எட்டிப்பார்த்தாலே போதும்!

# பக்தியும் போதை தான்னு தெள்ளத்தெளிவாக மக்கள் நிருபீக்கிறாங்க :-))

போதையிலும் பாதை மாறாமல் அம்மனிடம் அடைக்கலம் ஆகிவிட்டார்கள்!!!

? said...

//கைவலிக்குது ரொம்ப வேலைனு நீங்க சொல்லும் போதே மைல்டா டவுட்டானேன் :-))
என்னையும் கைத்தொழில் செய்ய சொல்லுறிங்களே அவ்வ் :-))//

கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள்,கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்' என்று உமக்காகவே அன்றே தமிழ் புலவர்கள் பாட்டெழுதி வைத்துள்ளார்கள். நீர் ஓவரா அசின் ரேஞ்சுக்கெல்லாம் கனவு கண்டால் கைத்தொழில்தான் செய்ய முடியும்! ;) வேறென்ன செய்ய முடியும்!


\தலையில ஒரு மெக்சிகன் ஹேட் போட்டுக்கிட்டு ,கையில கிட்டார் வச்சிக்கிட்டு ஓஹ் செனோரிட்டா..ஓஹ் மாஸ் ஃபினா ...ஓஓ.. ஊனு பாடிக்கிட்டு இருக்கிற என்னை சோழநாட்டுக்கு மீண்டும் தள்ளிவிடும் உமது மொழி வெறியை வன்மையாக கண்டிக்கிறேன் :-))>

டக்கீலா அடிக்க இம்புட்டு பில்டப்பா?

மெக்ஸிகனுகளும் பிரேசில்காரனுகளும் நம்மைப்போலவே இருப்பதால் சில சமயம் சூப்பர் மார்கெட்டில் நம்முடன் வந்து அவர்கள் பாசையில் பேசி பேஜார் ஆக்குவானுக.
பார்த்திபர் சப்பான்காரர் ஆவது கடினம் ஆனா நீர் நிச்சயமாக மெக்ஸிகன் ஆவலாம்.தப்பில்லை. அவனுக உணவும் நம்முதுமாரியே காரசாரமாய் இருக்கும். ஆதியோஸ் எர்மானோ!

naren said...

வவ்வால்,
அசினுக்கு வர வர நமீதா சாயல் வர்ர மாதிரி இருக்குதே.

பாலசந்திரினின் படுகொலை, நம்ம தமிழ்நாட்டில், அரசியலை தொழிலாக கொண்டிருக்கும் அரசியல்வாதிகளின் மனதை குறு குறுக்க வைத்திருக்கிறது. என்னத்தான் பிரபாகரன் மீது குற்றச்சாட்டுகள் இருந்தாலும், தான் ஏற்றுக்கொண்ட கொள்கைக்கு தன்னையும் தனது குடும்பத்தையும் அர்ப்பணித்து உயிர்தாகமும் செதுள்ளனர். இதை எங்கே மக்கள் மனதில் பதிந்து விடுமோ என்று அஞ்சி இல்லாத பொல்லாத நாடகங்கள் எல்லாம் ஆடுகின்றனர்.

வெட்கி தலைகுணிய வேண்டியவர்கள்.

மத்தத்தை எல்லாத்தை எல்லோரும் பேசி முடிச்சிட்டீங்க, நான் வந்து புதுசா என்னத்தை சொல்ல.

நாய் நக்ஸ் said...

வவ்வால்....நான் கேட்டது எந்த அளவில் இருக்கு...????

வவ்வால் said...

நநந்தவனம்,

நீங்க பெரிய (கை)தொழிலதிபரா இருப்பிங்க தெரியுதே :-))

கை போச்சே னு கூட படம் வந்திருக்கே அதனால தானா அவ்வ் :-))

என்ன கொடுமை சார் இது, ஒரு பாவப்பட்ட ஏழைப்பதிவன் ,கூகிளில் சுட்டு பதிவுல படம் போட்ட குத்தத்துக்காக கட்டுனா அவளைத்தான் கட்டணும்னு கட்டப்பஞ்சாயத்து செய்றாங்களே அவ்வ் :-))

டக்கீலா எல்லாம் புதுவையிலே கிடைக்குது ,சாம்பிள் பாட்டில்னு ஒரு பெக் அளவுக்கு வாங்கி அடிச்சிப்பார்த்தேன்,ஒன்னும் பெருசா வித்தியாசமேயில்லை,நம்ம ஊரு டக்கீலா போல :-))

நல்லவேளை ஷக்கீலாவை 'அடிச்சி"பார்க்கணும்னு சொல்லாவிட்டாரே :-))

ஆமாம் படத்துல பார்த்திருக்கேன் மெக்சிகன் எல்லாம் பார்த்தா வட இந்தியர்கள் போலவே இருக்காங்க, அப்போ நீங்க ஜாக்கி ஷெராஃப் போல இருப்பிங்கனு நினைக்கிறேன் :-))


ஆதியோஸ் எர்மானோவா,என்னமோ ஆதிவாசி எறுமைனு திட்டுறாப்போல இருக்கே அவ்வ் !
----------

நரேன்,

வாரும்,நன்றி!

போராளிகள் மட்டுமில்லாமல் அப்பாவிகள்,குழந்தைகள் என பலரும் கொல்லப்பட்டுள்ளது ,காலம் கடந்தாவது ஒரு அதிர்வை உண்டாக்கியுள்ளது,ஆனால் இப்பவும் வெண்ணை வெட்டிக்கொண்டு தான் இருக்கிறார்கள்,என்ன செய்ய தமிழ்நாட்டு அரசியல் கொள்கை இழந்து ரொம்ப நாளாச்சு,இப்போ எல்லாம் கொடி ஒட்ட, தோரணம் கட்ட கூட அரசியல் கட்சிகள் கான்ராக்ட் தான் விடுகின்றன, அந்தளவுக்கு தொண்டர்கள் கூட சலிச்சு போயிட்டாங்க.

இந்திய அரசியலின் தொய்வும்,சரிவும் ,முதுக்கெலும்பற்ற தன்மையும் தெளிவாக தெரிகிறது.

நாய் நக்ஸ் said...

அட கொடுமையே...பதிவை படிச்சிட்டு அப்படியே போயிட்டேன்....நெட் பிரச்சனை....

இம்ம்புட்டு கமெண்ட்-ஆ????

நூறு அடிக்க நம்ம நடராசர் கரெக்ட்-ஆ வருவார்...

கமெண்ட்ஸ் அப்புறம் படிக்கிறேன்...

வேகநரி said...

சகோ நந்தவனத்தான்,
இலங்கை விடயத்திலே ஆக்கபூர்வமான உண்மையை சொன்னது நீங்க தான்.அடுத்து சகோ சார்வாகன்.
//தங்கைக்கு தமிழ் தெரியாது ஏனெனில் அவர் பிரஞ்சு நாட்டில் பிறந்தவர் தானோ இலங்கையில் பெற்றோர் இருந்த போது பிறந்தவன் ஆதலால் எனக்கு தமிழ் தெரியும் என்றார்//
நன்றாகவே எல்லாம் அவதானித்திருங்கீங்க சகோ.நானும் கவனிச்சிருக்கேன் அவர்கள் அப்படி தமிழ் தெரியாம தாங்கள் இருக்கும் நாட்டின் மொழியை மட்டும் தெரிந்திரிப்பதில் தப்பில்லை.ஆனா எதற்காக சொந்த நாட்டில் சிங்கள மொழி மீது குரோதமாக இருக்க வேண்டும்? அதற்காக எவ்வளவு பெரிய அழிவுகள்.இலங்கை தமிழர்களும் சிங்களவர்களும் ஒரே மரபணுவை சேர்ந்தவர்கள் என்பது நிருபிக்கபட்டுவிட்டது அரபு மரபணுவை கொண்ட இலங்கை இஸ்லாமியர்கள் சகோதரா என்று சிங்கள காபிர்களுடன் ஒற்றுமையாக இருக்கிறார்கள்.
சகோ சார்வாகன் சொன்னது மூளை சொல்வதை நம் உண‌ர்வே கேட்பது இல்லை. வவ்வாலும் அப்படி மூளை சொல்வதை கேட்காமல் உண‌ர்வுரீதியாக சீமான் வைகோ சொல்வதை கேட்டு எழுதுகிறார்.
//கண்டிக்க கூட இயலாத ஒரு அரசு வருங்கால வல்லரசு என பீற்றிக்கொள்ளும் காமெடியை என்ன என்பது//
சீமான் வைகோ கேட்டதிற்காக கண்டித்தால் அது தான் காமெடி. வவ்வால் நாலு வார விடுமுறை எடுத்து கொண்டு இலங்கை போய் வரவும். தமிழகத்தில் உள்ள கற்பனை கதைகளுக்கும் நிஜத்திற்கும் உள்ள வேறுபாட்டை அறிவீர்கள்.

//சார்வாகன் said...
மேலை நாடுகள் உதவி செய்து தீர்வு பெற்றுக் கொடுக்கும் என்பது நடக்குமா??//
அமெரிக்கா மேற்கு நாடுகளின் நோக்கம் இலங்கையை தங்கள் செல்வாக்கின் கீழ் கொண்டு வர வேண்டும் என்பதே. இவர்கள் ஆதரவு பெற்ற ஒருவர் நாளை இலங்கை அதிபரானால் ஜெனிவா மனித உரிமை எல்லாம் காணாமல் போய்விடும்.

Anonymous said...

//சீமான் வைகோ கேட்டதிற்காக கண்டித்தால் அது தான் காமெடி. வவ்வால் நாலு வார விடுமுறை எடுத்து கொண்டு இலங்கை போய் வரவும். தமிழகத்தில் உள்ள கற்பனை கதைகளுக்கும் நிஜத்திற்கும் உள்ள வேறுபாட்டை அறிவீர்கள்.//


சீனாவின் முற்றுகையில் இந்தியா...ஆப்பு வைக்கும் போது நீங்கள்லாம் என்ன செய்வீர்கள் என்று பார்க்கத் தான் போகிறோம். வெளியுறவுக் கொள்கையின் அரிச்சுவடி தெரியாமல்....

--பார்த்திபன்.

Anonymous said...

நரிமா,

//இலங்கை தமிழர்களும் சிங்களவர்களும் ஒரே மரபணுவை சேர்ந்தவர்கள் என்பது நிருபிக்கபட்டுவிட்டது அரபு மரபணுவை கொண்ட இலங்கை இஸ்லாமியர்கள் சகோதரா என்று சிங்கள காபிர்களுடன் ஒற்றுமையாக இருக்கிறார்கள்.//

நீங்களும் தமிழ்இஸ்லாமியர்களும் ஒரே மரபணுவை கொண்டகொண்டவர்கள் தானே, பின் எதற்காக விவாதம் செய்கிறீர்கள்..சகோதரர் என்று அமைதியாக இருக்கவேண்டியது தானே.

--பார்த்திபன்.

வவ்வால் said...

நக்ஸ் அண்ணாத்த,

வாரும்,நன்றி!

நீங்க சொன்னதை கேட்டுக்கிட்டு இருக்கிறேன்,ஆனால்ல் நீங்க சொல்ற சூப்பர் டூப்பர் தகுதிகள் தான் காணோம், நல்லதா தெரிஞ்சுக்கிட்டு சொல்கிறேன்.

# ஆகா ,கஷ்டப்பட்டு டெவலப் செய்தா 100 அடிக்க ராச நடத்தான் வருவாரா, இந்த தடவை நானே நடிச்சிப்புடுறேன் ;-))

--------------

வேகநரி,

வாரும்,நன்றி!

உங்களை சிந்தனைகளை நினைத்தால் நெம்ப காமெடியாக இருக்கு :-))

மொழிக்காக மட்டுமல்லன்னு அம்புட்டு சொன்னப்பிறகும்,ஆஹா நல்லா சொன்னீங்களேனு சொல்லிட்டு இருக்கீங்களே -))

மரபணு ரீதியாக சகோதரர்களாகவே இருக்கட்டும் ,அப்போ ஒத்துப்போயிடலாம் என சொல்கிறார்கள்,நல்லது,ஆனால் அப்புறம் ஏன் அடக்குமுறை, தான் உஅர்ந்தவன் என்ற போக்கினை சிங்களம் முன்னெடுக்க வேண்டும்.

அரேபிய மரபணு கொண்ட இஸ்லாமியர்கள் கூட சிங்களருடன் இணக்கமாக போகிறார்கள் என்கிறீர்கள் ,நல்லது அரேபியர்களும்,யூதர்களும் அவர்கள் நம்பும் புனித நூலின் படியும் கூட சகோதரர்கள் தான், அப்புறம் மரபணுவும் கூட ஒத்து போகலாம், ஆனால் இணக்கமாக வாழாமல் பாலஸ்தீனம் -இஸ்ரேல் சண்டை ஏன்?

அட அவங்க தான் அப்படினா ,இந்த ஷியாவுக்குலாம் மரபணு வேறவா இருக்கும் போல , விடாம அடிக்கிறாங்க அரபிய மரபணு இஸ்லாமியர்கள் :-))

மூளை சொல்வதை கேட்டு நடக்கலாம்,ஆனால் அதுக்கு முதலில் மூளை வேலை செய்யனூம் :-))

# சீமான்,வைக்கோ போன்றவ்வர்கலை தான் அட்டக்கத்தினு சொல்லியாச்சு,அப்புறமும் அவங்க சொன்னத கேட்டுப்பேசுறோம்னு சொன்னா எப்பூடி?

ஏகப்பட்ட அப்பாவிகள் கொல்லப்பட்டு இருக்காங்க,அதற்காகவாது பேசாமல் ,மூளை,இதயம் என தர்க்கம் பேசுவதால் என்ன கிடைக்கப்போகிறது?

# சார்வாகன் சொன்ன மேலை நாடுகள் உதவியுடன் என்பதில் எனக்கு உடன் பாடில்லாதா நிலையில் நீங்கள் சொல்வது சார்வாகனுக்கு தான் பொருந்தும் :-))

மேலை நாடுகளுக்கு உல்நோக்கம் வேறாக இருக்கலாம்,எனவே அவர்களை நாட்டாமை செய்ய சந்தர்ப்பம் கொடுக்காமல் இந்தியாவே ஏதேனும் செய்ய வேண்டும் என்பதே எனது சிற்றறிவுக்கு எட்டியது.
------------

பார்த்திபன்,

நன்றி!

சீனாவோ,அமெரிக்காவோ சிங்கள அரசுடன் நெருங்கி வருவது இந்தியா இடம் கொடுப்பதால், சிங்களப்பேரினவாதம் முழுக்க வளர்ந்தால் இந்தியாவின் சொல்லை கேட்க மாட்டார்கள், உண்மையில் ஒரு ஜனநாயக ரீதியான ,சிங்கல,தமிழர்க்கு பொதுவான ஒரு மிதவாத அரசு இலங்கையில் உருவானால் தான் இரு நாட்டுக்கும் நீண்ட கால நோக்கில் நல்லது,ராசபக்சே போன்ற சந்தர்ப்பவாத சிங்கள இனவாத தலைவர்களால் என்றுமே இந்தியாவுக்கும்,இலங்கை தமிழர்களுக்கும் தொல்லைதான் உருவாகும்.

#//நீங்களும் தமிழ்இஸ்லாமியர்களும் ஒரே மரபணுவை கொண்டகொண்டவர்கள் தானே, பின் எதற்காக விவாதம் செய்கிறீர்கள்..சகோதரர் என்று அமைதியாக இருக்கவேண்டியது தானே.
//

அப்போலாம் மரபணு வேலை செய்யாது, சிறுமூளை தான் கொதிச்சு கும்மாளம் போடும் :-))

வேகநரி said...

//இந்தியாவே ஏதேனும் செய்ய வேண்டும் என்பதே எனது சிற்றறிவுக்கு எட்டியது.//
வவ்வால், காலம் சென்ற பிரபாகரனே சிங்களவனும் நாங்களும் சகோதரங்க எங்க சகோதர பிரச்சனைய நாங்க பார்த்துகுவோம் அந்நியன் இந்தியன் தலையிட வேண்டியதில்லை என்று சொல்லிட்டு இறந்திட்டார். அமெரிக்கா மாதிரி தீமையை வளர்க்க தலிபான்களை வளர்த்துவிட்டமாதிரி இந்தியா தீய செயல்களை செய்யாது. ஈழ போர் நடத்தியதால் பாதிப்படைந்த இலங்கை தமிழர்களுக்கு நிறைய பல்வேறு பணித்திட்டங்கள் மட்டும் இந்தியா செய்ய வேண்டும் .உதவிகள் செய்வதற்கு தமிழக அரசியல்வாதிகள் எதிர்கிறார்கள் என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும்.இலங்கையில் ஒரு சுமூக நிலை வந்த விட கூடாதே என்பதில் தான் இலங்கை தமிழர்களை வைத்து அரசியல் செய்பவர்கள் நோக்கம் உள்ளது.

Indian said...

// தி.மு.க மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சி தானே , கூட்டணிக்கட்சியாக மத்திய அரசை நேரடியாக வலியுறுத்தி ஒரு முடிவெடுக்க வைக்க முடியாதா? அப்படி பேசக்கூட முடியாத நிலையில் என்ன கூட்டணி வேண்டிக்கிடக்கு?
//

முடியும், மனமிருந்தால்.

தீதி மண்ணுமோகன் பங்களாதேஷுடன் டீஸ்டா நதிப் பங்கீட்டு ஒப்பந்தத்தை நிறைவேற்ற விடாமல் செய்தார்.

Anonymous said...

//கழகமோ ராஜ்ய சபாவில் பேசி அதன் மூலம் மற்றக்கட்சிகளுக்கு புரிய வைத்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வைப்போம் , ஜெனிவா மாநாட்டில் இலங்கைக்கு எதிராக இந்தியாவை ஓட்டளிக்க செய்வோம் என்கிறது, எனக்கு ஒன்னு விளங்கவில்லை//

ஈழப்போர் உச்சத்தில் 'ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு என்ன செய்ய முடியுமென' புலம்பியவர் 4 வருட கும்பகர்ணத் தூக்கத்துக்குப் பின் இனப்படுகொலையைக் கண்டிப்பது பச்சோந்தித்தனம்.

வவ்வால் said...

ஹி...ஹி 100,சொல்லி அடிப்போம்ல :-))

Anonymous said...


கஞ்சியான்களும் பார்ப்பான்களும் வெளியுறவுத்துறையை விட்டு வெளியேறினால் தான் நல்லது நடக்கும்.

தம்பிதுரை.

வவ்வால் said...

வேகநரி,

நானும் அதை தானே சொல்லிடு இருக்கேன், எதாவது நல்லது செய்யனும்,இத்தனை நாளா மேடைக்கச்சேரி செய்தது போதும்னு.

அரசியல்வாதிகள் ஏமாற்றுவதையும் சிலர் ,அடடா என்னமா போராடுறார் தலைவர்னு இதே இணையத்தில் தான் சிலர் சிலாகிச்சுட்டு இருக்காங்க ,கூட்டணியில் இருந்துக்கிட்டு உறுப்படியா எதுவும் செய்யாமா , டெசோ மாநாடு, வேலை நிறுத்தம்னு கணக்கு காட்டுறாங்க :-))

என்ன கொடுமை சார் இது!

-----------

இந்தியன் ,வாங்க,நன்றி!

நல்ல சுட்டிப்போட்டிங்க, மாநிலத்தலைமை உறுதியா நின்றா மத்திய அரசால் எதுவும் செய்ய முடியாது என்பதை நான் பல முறை சொல்லி இருக்கிறேன்,மம்தா செய்றாங்க,அதே போல கலிஞரோ,ஜெவோ செய்தால் சாதிக்கலாம்.

--------------

//ஈழப்போர் உச்சத்தில் 'ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு என்ன செய்ய முடியுமென' புலம்பியவர் 4 வருட கும்பகர்ணத் தூக்கத்துக்குப் பின் இனப்படுகொலையைக் கண்டிப்பது பச்சோந்தித்தனம்.//

அனானி,

கலிஞ்ர் நல்ல வசனக்கர்த்தா ஆச்சே அப்புறம் இதக்கூட பேசலைனா எப்படி,அப்படியே நெஞ்சை நக்கிறுவார் :-))
----------

தம்பித்துரை,

வாங்க,நன்றி!

வெளியுறவுத்துறை நந்திகளுக்கு இதில் என்ன லாபம்?

ஒரு வேளை செமையா கில்மா கிடைக்குமோ?

நாய் நக்ஸ் said...

தல...இப்ப மிக பெரிய பிரச்சனை....
குடல்வால்..... அதுவும் ஒரு வருடம் வீணாக போய் விடுமோ????உடனே என்னை விருப்பம் இருந்தால் தொடர்பு கொள்ளவும்....இதுக்கு மேல் நான் உங்களை கேட்பதில் அர்த்தம் இல்லை.....ஏதாவது ஒரு நம்பர்....பேசுங்கள்....புல்லட் மாதிரி....(கவலை...+5....என் கூகிள் +,,,fb,,,சாப்பாட்டு கடை இன்னும் சற்று நேரத்தில் பார்க்கவும்....கொஞ்சம் உங்களுக்கு அதிர்ச்சிதான்...!!!!!!!!!)

Anonymous said...

மேனன்களும், தீட்சித்களின் தவறான வழிகாட்டல் -அமைதிப்படை- வெளியுறவுக்கொள்கை...தேடி படியுங்கள் இவர்களின் நோக்கம் புரியும்.


தம்பித்துரை

நாய் நக்ஸ் said...

வவ்வால்....இதோ லிங்க்ஸ்....


https://plus.google.com/u/0/118389571953021708608/posts/2aabXYMsMFd

fb-ல லிங்க் எடுக்க எனக்கு தெரியலை....ப்ளீஸ்....

Indian said...

India's Vietnam

JN Dixit interview

Harkirat Singh's interview

What was Dixit's approach to your attempts to buy peace with LTTE?

* Once he said, Shoot Prabhakaran, shoot Mahathiah. I said, Sorry I don't do that. Those were his orders. When they came to me at 12 o'clock at night for some work, he said shoot them. General, I have told you what I have ordered. I said, I don't take your orders. And we are meeting under a white flag, you don't shoot people under white flag.

So who messed up during the boat tragedy?

* The responsibility is entirely on the diplomats, entirely on the army headquarters. Otherwise, for me to save those people was no problem. I would have just put them into few APCs and smuggled them out. Sri Lankans tho dekthe raha jathe [The Sri Lankans would have just looked on]. We would have taken them out, we had all the troops there. No problem.

ராஜ நடராஜன் said...

//ஹி...ஹி 100,சொல்லி அடிப்போம்ல :-))//

யாரிங்கே காசு வாங்கிட்டுப் பின்னூட்டம் போடுறாங்கன்னு பார்க்கிறேன்:)

ராஜ நடராஜன் said...

//ஆகா ,கஷ்டப்பட்டு டெவலப் செய்தா 100 அடிக்க ராச நடத்தான் வருவாரா, இந்த தடவை நானே நடிச்சிப்புடுறேன் ;-))//

வசனம் கொஞ்சம் சந்தேகமா இருக்குதே!நந்தவனத்தான்,நக்ஸ்,வேகநரி.ரெவரின்னு சில தலைகள் தெரியுது.அப்படியும் கூட 100ல்லாம் இவங்க மொத்தமா அடிச்சாலும் தேறாதே!

ராஜ நடராஜன் said...

வவ்வால்!பின்னூட்டங்களை மறுபடியும் விட்டதிலிருந்து மேய்ந்ததில் ஒரு வாக்கியம் பார்வையை இழுத்தது.

ராஜிவ் காந்திக்கு முன் பின்
முள்ளிவாய்க்காலுக்கு முன் பின்.

Anonymous said...


யாராங்கே! மன்னர் வந்திருக்கிறார் வரச்சொல்! வவ்வாலை...:-)

கொங்கு நாட்டான்.

ராஜ நடராஜன் said...

படம் பார்க்க யாரும் ஆட்களையே காணோமே:)

Anonymous said...


மன்னா! படம் முடிந்து பல நாட்கள் ஆச்சு....:-)

கொங்கு நாட்டான்.

ராஜ நடராஜன் said...

கொங்கு மன்னரே!வவ்வால் துக்கத்தில் புதுச்சேரி போய் விட்டதாக கேள்வி.

நீங்க அந்த சீட்ல உட்கார்ந்துக்கங்க!நான் இங்கே.காத்தாட படம் பார்க்கலாம்:)

Anonymous said...

//நீங்க அந்த சீட்ல உட்கார்ந்துக்கங்க//


மன்னரே! தலைகீழா எம்மால் தொங்கவும் முடியாது..."மாறு பட்ட பார்வை வேறு பட்ட கோணத்தில்" பாக்கவும் தெரியாது...

அமெரிக்க மாப்பிள்ளையாகும் முயற்சியில் வவ்வால்!....????

கொங்கு நாட்டான்.


ராஜ நடராஜன் said...

கொங்கு மன்னரே! அமெரிக்க விசாவுக்கு நந்தவனத்தானிடம் வவ்வால் தலைகீழா தொங்குவதாக கேள்விப்பட்டேன்.

தரகர் சுப்ரமணிய சாமி கிட்ட சொன்னாலாவது ஒரே நாளில் டெல்லி பயணம்,அடுத்த நாள் பிளேக்கை சந்தித்து மறுநாள் காலையே ஒசாமா ஒப்பந்தத்தோடு விசாவோடு எங்கள் வெள்ளை மாளிகையின் தேர்வு மாப்பிள்ளை வவ்வால் என சி.என்.என்,வாஷிங்டன் போஸ்ட் என அறிக்கையும் வெளியாகியிருக்கும்:)

Anonymous said...

**காலையே ஒசாமா ஒப்பந்தத்தோடு***


ஒபாமாவா??...

வவ்வாலின் "விஷ்வரூப" தொடர் பதிவுகளை படித்த ஒபாமா, விசாவை ரத்து செய்தார்....மேலும் கைது செய்ய நடவடிக்கை...சி.என்.என்கொங்கு நாட்டான்.


வவ்வால் said...

தம்பிதுரை,நக்ஸ் அண்ணாத்த,இந்தியன் நன்றி!

---------------
ராச நட ,

வாரும்,நன்றி!

சரியான நொள்ளைக்கண்ணரா இருக்கீரே ,ஆப்பரேட்டரே இல்லாத தியேட்டரில் வந்து படம் ஏன் ஓடலைனு கேட்டா எப்பூடி?

# இத்தனப்பேரு வந்து 100 அடிச்சா ,காசுனு கேசுனு சொல்லிக்கிட்டு, இவரு தனியா 100 அடிக்க வைப்பாருனு சொல்லிப்பாரு :-))

# எல்லாம் நானா சேர்த்தக்கூட்டம் இல்லை தானா சேர்ந்தக்கூட்டம்,என் வழி தனி வழி....!!!

--------

கொங்கு நாட்டார்,

யாருப்பா இது புதுவரவா, இல்லை பழைய கள் புதிய மொந்தையா?

ராச நட ஆல்டர் ஈகோவா கொங்கு நாட்டார்?

விட்டால் என்னை அமெரிக்காவுக்கு நாடே கடத்திருவீங்க போல இருக்கே.

நான் முதலில் மெக்சிகோ குடிமகன் ஆகிடுறேன் ,அங்கே தான் நிறைய செனோரிட்டாஸ் இருக்கு :-))
-----------

ராச நட,

நந்தவனம்ம் தான் விசா கொடுக்கிற ஆப்பிசரா ,சொல்லவேயில்லை, நந்தவனம் "கை"வலியில் இருப்பதால் சிறிது காலம் இந்தப்பக்கம் தலைக்காட்ட மாட்ட்டார் :-))

சு.சாமியிடம் மாட்டினா நேரா குவாண்டனமோ சிறைக்கு தான் வழிக்காட்டுவார் :-))

பத்தாதுக்கு கொங்கு நாட்டார் வேற சிறை,பொறைனு பீதிய கிளப்புறார், என்ன தான் ஓய் நடக்குது இங்கே, ஆளாளுக்கு ஒரு மார்க்கமா பேசிட்டு இருக்கீர்.

எனக்குள்ள தூங்கிட்டு இருக்க காண்டாமிருகத்தை தட்டி எழுப்பிடாதீர்கள்,அப்புறம் தாங்க மாட்டிங்க சொல்லிட்டேன்!
--------------

ராஜ நடராஜன் said...

கொங்கு மன்னா! ஒசாமா எப்படி பின்னூட்ட வேகத்துல உள்ளே புகுந்தான்னு தெரியலையே:)

உங்களுக்குப் பூனைக் கண்ணா இல்லை யானைக்கண்ணா:)

டக்கீலா சாப்பிட்டாத்தான் இந்த மாதிரி கண் பளிச்சின்னு தெரியும்ன்னு கேள்வி:)எதுக்கும் வவ்ச கேட்கலாம்.

நாய் நக்ஸ் said...

Yow.....vavvaal....
Irukkeeraa....????

Enakkaaga
feild...
Research......
Panna
poi irukkeer.....
Enru
ninaiththeen.....

True-thaane....????

Anonymous said...

வவ்வால்,

**யாருப்பா இது புதுவரவா, இல்லை பழைய கள் புதிய மொந்தையா?**

பழைய கள் தான்...ஜப்பான்காரன்...


சார்வாகன் பதிவில் பாகவதரை பந்தாடி இருக்கீரு...:-)

அடுத்த பதிவு எப்போ வரும்...???

"வனம்"...பாலைவனம்...???!!!:-)

கொங்கு நாட்டான்.


ராஜ நடராஜன் said...

நக்ஸ்!துக்கத்திலும் தூக்கத்திலும் இருக்குற ஆளைப் போய் பீல்டு தேடுறார்,பேட்டை தேடுறார்ன்னு ஏன் ரவுசு பண்றீங்க:)

வவ்சு!நான் ஏன் காண்டாமிருக தூக்கத்தையெல்லாம் கெடுக்கப்போறேன்:)ஆளில்லாத காட்டுல தனியா சுத்தறதுக்கு காரணம் மேலே இந்தியன் ரீடிஃப் சுட்டி கொடுத்ததை கொஞ்சம் கொஞ்சமா படிக்கத்தான்.நீங்க நல்லா தூங்குங்க:)

Indian said...

Check this out as well.


காந்தி தேசத்தின் மறு பக்கம்

Indian said...

Marines' return: Kerala politics had a say in Delhi’s stand, Italy says

drench said...

I think you should consider thisnews

ஜட்ஜ்மென்ட் சிவா. said...

ரத்தத்தில சிலையா? ... அட ஆக்கங் கெட்ட கூ___... இவன் இப்போ எங்க இருக்கான் ....
https://www.scientificjudgment.com/