Friday, August 24, 2012

Total recall:2007 ஆகஸ்ட்-5 தமிழ்ப்பதிவர் சந்திப்பு மற்றும் பட்டறை.வலைப்பதிவர்கள் சந்திப்பு ஆகஸ்ட் 26,2012 அன்று நடக்க இருப்பது அனைவரும் அறிந்ததே ,முதலில் பதிவர் சந்திப்பு சிறப்பாக நடக்க வாழ்த்தினை சொல்லிவிடுகிறேன்...

வலைப்பதிவு சந்திப்புக்கு வாழ்த்துக்கள்!அதிக இடித்தல் (hits)வாங்கும் நோக்கில் இச்சந்திப்பினை ஒட்டி பலரும் பலவிதமாக புனைவுகளை முன்வைத்து பதிவுகளை போட்டு இருக்கிறார்கள், பெரும்பாலான புனைவுப்பதிவுகள் "மது" என்ற ஒன்றினை முன்னிறுத்துகின்றன, ஆனால் அவர்கள் சொல்வது உண்மையில்லை என அவர்களுக்கே தெரியும்,இருந்தாலும் ஏதோ ஒரு மனமயக்கத்தில் அப்படியெல்லாம் பேசுகிறார்கள் என நினைக்கிறேன்.

தமிழ்ப்பதிவர் சந்திப்பில் இது ஒன்றும் முதல் பெரும் சந்திப்பும் இல்லை ,கடைசியான ஒன்றாகவும் இருக்கப்போவதில்லை, தொடரும் நிகழ்வாகவே இருக்கும்.இதற்கு முன்னர் இப்போது விட தொழிற்நுட்பம் ,பொருளாதாரம் என பல வகையிலும் பிந்தங்கிய காலமான 2007 இல் மிகப்பிரம்மாண்டமான பதிவர் சந்திப்பு மற்றும் பட்டறை ஒன்றினை ,இணையம்,கணினி என சகல தொழிட்பத்துடன் , நேரடி கற்றல் முகாமாக சென்னை பல்கலை வளாகத்தில் நடத்திக்காட்டி இருக்கிறார்கள் தமிழ்ப்பதிவர்கள் என்பதை தற்போது புதிதாக வந்தவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள்,சில பழைய திமிங்கில பதிவர்களும் மறந்திருக்க கூடும் என்பதால் ஒரு டோட்டல் ரீகால் டு 2007 ஆகஸ்ட்-5 தமிழ்ப்பதிவர் சந்திப்பு மற்றும் பட்டறையினை இப்போது காணலாம்.


தமிழ்ப்பதிவர்களின் முதல் பெரும் பதிவு பட்டறைக்கு பெரிதும் உழைத்து முன்னெடுத்து சென்றப்பதிவர்களின் பட்டியல், நினைவில் இருந்து எழுதுவதால் சிலர் விடுப்பட்டிருக்கலாம், மன்னிக்கவும் ,மேலும் சில பதிவுகளை தேடி அவர்கள் பட்டறைக்குறித்து வெளியிட்ட அனுபவப்பதிவுகளையும் இணைத்துள்ளேன்.அனைத்தும் தேடி எடுக்க அவகாசம் இல்லை எனவே சில மட்டுமே இருக்கும், விடுபட்டவர்கள் மன்னிக்கவும்.

(தமிழ்மணத்தினை செதுக்கிய சிற்பி"காசி"அண்ணாச்சி,உடன்,முகுந்த்,இகரஸ் பிரகாஷ்.)

மா.சிவகுமார்,

"தமிழ்மணம்"காசி அண்ணாச்சி.

உண்மைத்தமிழன்,

செந்தழல் ரவி,

பொன்ஸ்,

சிந்தாநதி,

பாலபாரதி,

நாமக்கல் சிபி,

லக்கிலுக்'யுவகிருஷ்ணா"

"ஓசை"செல்லா.

வினையூக்கி,

விக்கி,

நந்தா,

ரவிஷங்கர்,

பெனாத்தல் சுரேஷ்,

மற்றும் பலர், pre production, execution,post production, என பலவகையிலும் பலரும் பங்காற்றினார்கள், tamilbloggers.org என்ற இணையத்தளம் முதற்கொண்டு உருவாக்கி தொழிற்நேர்த்தியுடன் செயல்பட்டார்கள்.எனவே எத்தனையோ பேரின் பங்களிப்புண்டு, அனைவரும் என் நினைவில் இல்லை,மேலும் அப்பொழுதும் நான் வாசகனாக/பார்வையாளனாக/முகமூடியாகவே இருந்தப்படியால் படித்தவற்றையே இங்கு சொல்கிறேன்."I din't have any first hand experince on that event" so errors and omissions except!


அன்றைய பதிவர் சந்திப்பு மற்றும் பட்டறையும், இன்றையப்பதிவர் சந்திப்பும் தற்செயலாக ஆகஸ்ட் மாதத்தில் அமைந்துள்ளது எனலாம்.

பெண்கள் பலர் பட்டறையில் ஆர்வமுடன் கலந்துக்கொண்டக்காட்சி!
-------------------

கீற்று இணையதளத்தில் பதிவர் பட்டறையின் சுற்றறிக்கை,நிகழ்ச்சி நிரல், என முதன்மை விவரங்கள் வெளிவந்தது .

கீற்று இணைய தளத்தில்...
பதிவர் பட்டறை-2007 ஆகஸ்ட்-5
எப்போ?
ஆகஸ்டு 5, 2007 - ஞாயிற்றுக் கிழமை

எங்கே?
சென்னைப் பல்கலைக் கழக தமிழ்த் துறையின் அரங்கு - மெரினா வளாகம் (Marina Campus)

எவ்வளவு நேரம்?
காலை ஒன்பதரை மணி முதல் மாலை ஐந்து மணி வரை பட்டறை நடைபெறும்.

எதற்கு?
பதிவர்கள், அல்லது வலைஞர்களுக்கிடையில் ஒரு தொடர்பு-பின்னல்(network) உருவாக்குவது.
பயன் தரக் கூடிய தகவல்களை அளிப்பது.
புதியவர்களுக்கு வலைப்பதிவு, தமிழில் எழுதுதல் போன்றவற்றை அறிமுகப்படுத்துதல்
வலைப்பதிவர்களுக்கு தொழில் நுட்ப விபரங்களில் பயிற்சி தருதல்
பதிவுகள் மூலம் தொழில், தனி வாழ்க்கை மேம்படலுக்கு வழிகளை விவாதித்தல்
பதிவர்கள் ஒன்றிணைந்து வணிக முயற்சிகள், வணிகம் சாராத சேவை முயற்சிகள், தொழில் நுட்ப பணிகளை ஆரம்பிக்க வித்திடுதல்.
இணையத்தில் தமிழ் தழைக்க பணி புரிந்தவர்களுக்கு நன்றி தெரிவித்தல்
இன்னும் ஏதாவது சேர்க்க விரும்பினால் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.

மேலும் படிக்க அழுத்தவும்:
------------------------------------
(பட்டறையில் ஒரு பாடம்"எடுப்பவர் "விக்கி")

-----------------------------------
எழுத்தாளர் மற்றும் ஊடகவியலாளர் திரு.பாமரன் (கோவை)அவர்கள் பதிவர் பட்டறைக்கு காணொளி மூலம் வாழ்த்து சொல்லியிருந்தார், இதற்கான முயற்சிகளை எடுத்தது பல்லூடக நிபுணராக அப்பொழுது விளங்கிய "ஓசை" செல்லா என்றப்பதிவர் ஆவார். போட்டோகிராபி இன் தமிழின் அங்கத்தினர்.

அவர் அப்போது உடனுக்குடன் புகைப்படங்கள் எடுத்து கைப்பேசி மூலம் பதிவேற்றி அசத்தினார், அப்போதைய இணைய வேகத்திற்கு அது அபாரசாதனை என்பதை நினைவில் கொள்ளவும்.

எழுத்தாளர் பாமரனின் வாழ்த்து.

----------------

பதிவுலநண்பர் மோகன் தாஸ் ,தனது பதிவர் பட்டறை அனுபவங்களை பகிர்ந்துள்ளார் ,இப்பொழுது படித்தாலும் சுவாரசியமாக இருக்கிறது.

மோகன் தாஸ் அவர்களின் பதிவில்...

ஆரம்பத்தில் இருந்தே முதல் முறையாக பட்டறை நடத்துகிறார்கள் என்ற எண்ணம் துளி கூட வராத அளவிற்கு பட்டறை நடத்தியவர்களின் செயல்பாடுகள் இருந்தன. நிறைய இடங்களில் "ச்ச எப்படி யோசிச்சு செஞ்சிருக்காங்க" என்று புருவம் தூக்கிக் கொள்ளும் கேள்விகள் வரும் அளவிற்கு நிறைய விஷயங்களைச் சின்ன சின்ன விஷயங்களானாலும் சரி பெரிய விஷயமானாலும் சரி செய்திருந்தார்கள். அவர்களுக்கு என் தனிப்பட்ட பாராட்டுக்கள், பட்டறைக்கு கீறிக் கூட ஒன்றும் செய்யவில்லை என்றாலும், சிறு சிறு நாடகங்கள் நடத்தி கல்லூரிகளில் விழாக்கள் நடத்தி - பங்குபெற்றவன் ஆதலால் நிச்சயமாய் அவர்கள் செய்திருந்த முன்னேற்ப்பாடுகள் பற்றி ரொம்பவும் பெருமையாகவே சொல்லமுடியும். நம்மால் ஒன்றும் செய்யமுடியவில்லையே என்ற ஆதங்கம் இருந்தாலும்...

முழுவதும் படிக்க சுட்டியை அழுத்தவும்:
-------------

மோகன் தாசின் பதிவு மட்டும் இல்லை கண்ணும் பேசும் ,அதாவது கேமிரா கண்ணன் அவர் ,அவரது கேமராவில் சுட்ட பதிவர்ப்பட்டறையின் அழகானப்படங்கள் காண சுட்டியை அழுத்தவும்.

-------------------
"youthblogger" 'தருமிய்யா மற்றும் மாலன்
----------------------------

அக்காலத்தில் பெண்ப்பதிவர்களில் கலக்கியப்பதிவர்,போக்கிரி என்ற வலைப்பதிவின் ஓனர், வலைச்சரத்தின் ஆதாரம், என பல முகம் உண்டு.சென்னையில் நடந்த முதல் பதிவர் பட்டறைக்கு மிகவும் பாடுப்பட்டுள்ளார், அவரது அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.படித்துப்பாருங்கள்.

பொன்ஸ் அவர்களின் பதிவில்...

முதல் அமர்வு தகடூர் கோபி தமிழ் குறியேற்றங்கள், விசைப்பலகை, போன்றவற்றை விளக்கினார். அப்போதே திருவள்ளுவர் அறை, இடம் கொள்ளாத கூட்டமாக திரளத் தொடங்கிவிட்டது. நின்றபடி எல்லாம் கேட்டார்கள் மாணவர்கள்.

அடுத்த அமர்வாக வந்த தமிழியின் ப்ளாக்கர், வோர்டுபிரஸ் விளக்கத்திற்கும் கூட்டம் அலைமோதியது. ஆர்வமாக கேட்டவர்கள், மிகவும் உதவியாக இருந்தது என்றும் சொன்னார்கள். ‘ஏங்க, அவரு, தமிழி பேராசிரியருங்களா? இத்தனை நல்லா எடுக்கிறாரே!’ என்று ஒருவர் என்னிடம் வந்து கேட்டுவிட்டுப் போனார்!

HTML அறிமுகம் கொடுக்க வந்த செந்தழல் ரவி, HTML மட்டுமின்றி ஒரு அடிப்படைக் கணிமை தொடங்கி வலைபதிதல் வரை மிகவும் விரிவாகவே சொல்லிக் கொடுத்துவிட்டார். செல்லாவின் ஒலி ஒளிப்பதிவுகள், கோபியின் எழுத்துரு மாற்றப் பயிற்சி என்று கேன்சலான பிற அமர்வுகளின் நேரமும் சேர்த்து கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம், ரவியின் பேச்சுக்குக் கட்டுப்பட்டு அமர்ந்து கேட்டனர் மாணவர்கள். இடையில் உணவு இடைவேளை எல்லாம் இருந்தும், தலைவர் தொடர்ச்சி விட்டுப் போகாமல் வகுப்பெடுத்ததாக கேள்வி!

முழுவதும் படிக்க செல்லவும்->

-------------------------------

(முகுந்த் ,ஈ-கலப்பையை செதுக்கிய இணையக்கார்பெண்டர்,உடன் மா.சி)

(நன்றி சொல்லும் பட்டறை நிர்வாகிகள், மைக் வைத்திருப்பவர் பாலபாரதி,நீலச்சட்டை கண்ணாடிக்காரர் மா.சி)

-------------------------------

அண்ணாச்சி உண்மைத்தமிழனை அறியாதோர் இருக்கமுடியாது, அவர் பதிவர் பட்டறைக்கு பெரிதும் உழைத்தவர், பஞ்சர் ஆன வண்டியை எல்லாம் வேர்வை வழிய மூச்சு வாங்கி தள்ளித்தான் பட்டறையை நடத்த உதவியுள்ளார்.மேற்கொண்டு நீங்களே படிச்சுப்பாருங்கள் அதிகமில்லை ஒரு 5 அல்லது 6 பதிவு கொஞ்சமா 500 பக்கத்தில் தான் எழுதி இருப்பார் :-))

உண்மைதமிழன் அவர்கள் பதிவில்...

இந்த முனையில் இருந்து அந்த முனைவரை வியர்வையில் குளித்தபடியே தள்ளிக் கொண்டு வந்தவன் நேரத்தைப் பார்த்தேன். மணி 10. இனி அவ்வளவுதான்.. ஆட்டோ புடிச்சு 500 ரூபாவுக்கு செலவுதான் என்று நினைத்து காளியப்பா மருத்துவமனை அருகே வந்து சோர்வாக நின்றேன்.

மேலும் படிக்க அழுத்தவும்:

Read more:# truetamilan
--------------

சிவபாலன் என்றப்பதிவர் அப்பொழுது புதிய இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸில் வந்த செய்தியுடன் பட்டறைக்குறித்து தனது கருத்தினைப்பகிர்ந்த்துள்ளார்.


சிவபாலன் அவர்களின் பதிவில்...

மேலும் படிக்க அழுத்தவும்:
--------------------------------------------

(பட்டறை நடக்கும் போதே என்னா தில்லா குடிக்கிறாங்கப்பா ...ஹி...ஹி அது காப்பி தான்னு சொன்னா நம்பவா போகுதுங்க அப்ரண்டீசுகள்)


---------------------------------------------

பதிவர் ஜே.கேயின் பதிவில் அவரது பட்டறை அனுபவங்களை படித்துப்பாருங்கள்...

ஞாயிறு காலை, சிவக்குமார், பொன்ஸ் ஆகியோர் சில Extension Boxes கொண்டுவந்தார்கள். உண்மைத்தமிழன், தகடூர் கோபி, மற்றும் அதியமான் டெஸ்க்கை சரி செய்து கணினிகளை வரிசைப்படுத்த மிகவும் உதவினார்கள். பின் தான் எல்லா கணினிகளிலும் எ-கலப்பை நிறுவ வேண்டியதாயிற்று. 9 - 9.30 க்குள் 5 முறைக்கு மேல் மின்சாரம் நின்று வந்ததால், கொஞ்சம் கலக்கம் ஆகிவிட்டது.

மேலும் படிக்க அழுத்தவும்:

-----------------------------------------

(இந்த சேப்பு சட்டைக்காரர் யாருன்னு சரியா சொல்றவங்களுக்கு புதிய தலைமுறையின் ஒரு பழைய காப்பி சன்மானமா கிடைக்கலாம் :-))}

------------------------------------------

பதிவர் நந்தா அவர்கள் தனது அனுபவங்களைப்பகிர்ந்துக்கொண்டுள்ளார்.பட்டறை உழைப்பாளிகளில் ஒருவர்.

நந்தா அவர்களின்பதிவில்...

Physically challenged என்று சொல்லப்படுபவர்களில் ஒரு சிலர் வந்திருந்தனர். அவர்களில் கண்பார்வை குறைபாடு உடையவர்கள் என்னிடம் சொன்னது, “சார் இங்க பேசுனதை எல்லாம் கேக்க ரொம்ப ஆர்வமா இருக்கு. ஆனா நாங்க பண்றது இது சாத்தியமா?”. நான் அவர்களிடம் சொன்னது, நீங்கள் எழுதிதான் வலைப் பதிய வேண்டும் என்று அவசியமில்லை சார். ஒலிப்பதிவுகளாகவும் பதிவுகளிடலாம். நீங்கள் அதற்கு தயாராயிருந்தால் சொல்லுங்கள், உங்களது பதிவை வெளிச்சத்திற்குக் கொண்டு வர இங்கே பலர் இருக்கிறோம் என்று. அந்த அன்பர்கள் எங்களில் ஒரு சிலரின் தொலைபேசி எண்களை வாங்கிச் சென்றுள்ளனர்.

மேலும் படிக்க அழுத்தவும்.
------------------

ஓசை செல்லா அப்போதைய பல்லூடக விற்பன்னர், நிறைய புகைப்படங்களுடன் ,உடனுக்குடன் பட்டறையை இணையத்தில் ஏற்றினார், பட்டறைப்புகைப்படங்கள் நிறைய காணக்கிடைக்கின்றன.

ஓசை செல்லாவின் பதிவில்...


சந்திப்புக்கு முன் தினம் "தாகசாந்தியில்"தோழர்கள்


அடுத்தநாள் பட்டறையில் சுமார் இரண்டு மணி நேரம் ஓரமாக நின்று வகுப்பெடுக்காமல் பார்வையாளர் கூட்டத்தோடு கலந்து இணைய தொழில்நுட்ப வகுப்பெடுத்து அசத்திய "செந்தழல் ரவி" , (போதையில் இதெல்லாம் சாத்தியமா?) வேலைன்னு வந்த்துட்டா தீயாய் வேலை செய்வாங்க ,ஜாலின்னா பட்டாசா வெடிப்பாங்க அதான் தமிழ்ப்பதிவர்கள்.

மதுவுக்காக யாரும் பதிவர் சந்திப்போ, பட்டறையோ நடத்துவதில்லை, நிகழ்சிக்கு முன்னர், பின்னர், அவரவர் வசதிக்கு நண்பர்களுடன் அளவலாவ ஏதோ ஒரு இடத்தில் சந்தித்து தங்கள் கேளிக்கைகளை வைத்துக்கொள்வார்கள் என்பது கூட புரியாதவர்களுக்காகவே இப்படங்களை இணைத்துள்ளேன் மேலும் படங்கள் ஓசை செல்லாப்பதிவில் உள்ளது.

பி.கு: இப்படங்கள் செந்தழலுக்கோ மற்றவர்களுக்கோ மனவருத்தம் ஏற்ப்படுத்துமாயின் நீக்கப்படும், ஆனால் அனைத்துப்படங்களும் ஓசை செல்லாவின் தளத்தில் உள்ளது,நன்றி!


பட்டறைப்படங்கள்.

#http://chellaonline.blogspot.in/
-----------

குளோபல்வாய்ஸ் என்ற இணையத்தளத்தில் புகைப்படத்துடன்ன் வந்த செய்தியைக்காண செல்லவும்...


------------

பதிவர் சத்தியா ,அப்போதே கரைசல் செய்த ஒரு பதிவருக்கு விளக்கமாக பதில் கொடுத்துள்ளார்.

சத்தியா அவர்களின் பதிவில்...

பட்டறை பற்றிய பல பதிவுகளிலும் தவறாமல் செந்தில்குமார் என்று ஒருவர் பின்னூட்டமிட்டுருந்தார். உறுத்தலாக இருந்தாலும் மிகவும் கண்ணியமாகவும். ஒரு வித கோபத்துடனும் எழுப்பி இருந்த அவர் கேள்விகளுக்காகவே இந்த பதிவு. இந்த பட்டறையில் எள்ளளவு கூட பங்கெடுக்காத எனக்கு இவர் எழுப்பி இருந்த கேள்விகளுக்கு பட்டறையில் பங்கெடுக்காவிட்டாலும்
வெறும் தமிழ்ப்பதிவுலகம் குறித்த பொதுவான கேள்விகளாகவே இருப்பதால்
பதிலளிக்க முயல்கிறேன்.

மேலும் படிக்க அழுத்தவும்:


------------------------------------

(சங்கத்தமிழர்கள் என நிறுபிக்கும் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தினர், முதுகு தெரியுது ,மூஞ்சு தெரியல ஒத்துக்க மாட்டோம்னு சொல்லிடாதிங்க!!)

------------------------------------

கப்பி கய் என்றப்பதிவர் ,பட்டறையின் பின்விளைவாய் ஒரு காமெடி பதிவுப்போட்டுள்ளார் ,படித்து மகிழுங்கள்.

கப்பிகய் பதிவில்...

பல பிரபலங்களும் எழுத்தாளர்களும் இந்தி திரைப்பட நடிகர்களும் பதிவெழுத ஆரம்பித்திருப்பதை அறிந்த நம் கோலிவுட் நட்சத்திரங்கள் தாமும் பதிவுலகிற்குள் எண்ட்ரி கொடுக்க ஆயத்தமாக வேண்டி வடபழனி கிரீன்பார்க் ஓட்டலில் டிஸ்கஷனில் இருக்கிறார்கள். ஹீரோவாக நடிக்க ஒரு புது இயக்குனரிடம் கதை கேட்க வரும் சந்தானம் அங்கிருக்கும் நட்சத்திரங்களைப் பார்த்து ஜோதியில் ஐக்கியமாகிறார்.

மேலும் படிக்க அழுத்தவும்:
---------------

பின்குறிப்பு:

#மா.சிவகுமார், தமிழ்மணம் காசி அண்ணாச்சி இன்னும் சிலரின் பதிவுகளையும் தேடிப்பார்த்து அவர்கள் அனுபவங்களையும் இடலாம் என நினைத்தேன் , சிக்க மாட்டேன்கிறது ,சீக்கிரம் அப்டேட் ஆக இணைக்கிறேன்.மேலும் பலர் விடுபட்டிருக்கலாம் அனைத்தும் நேரமின்மைக்காரணமே எனவே மன்னிக்கவும்.

#பதிவர் சந்திப்பு என்பது சும்மா சந்தித்து கதைத்துப்போக என வரலாறு தெரியாமல் பலர் பேசிக்கொண்டு இருப்பதால் "வரலாறு முக்கியம்" பதிவரே என தொகுத்து வெளியிட்டுள்ளேன், இதிலும் அரசியல் செய்ய யாரேனும் நினைத்தால் அடியேன் பொறுப்பல்ல!

# புகைப்படங்கள் காணொளி உதவி யூடியூப், ஓசை செல்லா, மோகன் தாஸ், கூகிள், தளங்கள், நன்றி!

# கருத்து சுதந்திரம் இல்லாதவர்கள் ,இவ்விடம் கருத்து கூற முயலவேண்டாம், அப்படி கூறினால் அவை நீக்கப்படும்.


********


65 comments:

நாய் நக்ஸ் said...

வவ்வால்....
போச்சிடா...
மதுவை பத்தி எழுதிட்டியா....

இனி உனக்கு ஏழரை தான்...

தருமி said...

வவ்ஸ்,
எப்டிங்க இப்படி தோண்டிப் பிடிச்சி போட்டீங்க.
நல்ல தொகுப்பு.

நாய் நக்ஸ் said...

அதிக இடித்தல் (hits)வாங்கும் நோக்கில் இச்சந்திப்பினை ஒட்டி பலரும் பலவிதமாக புனைவுகளை முன்வைத்து பதிவுகளை போட்டு இருக்கிறார்கள்,////////

இடித்தல்-னா இன்னாயா....????

சிவானந்தம் said...

தமிழ் பதிவுலகம் குறித்து இவ்வளவு விஷயங்களா! நீங்கள் ஒரு என்சைக்ளோபீடியாதான்.

அதுவும் இரண்டே நாட்களில் (கடந்த பதிவு 22 Aug) இவ்வளவு தகவல்களை திரட்டி, படித்து...

ஆச்சர்யமான வேகம். வாழ்த்துக்கள்

நாய் நக்ஸ் said...

யோவ்வ்வ்வ்வ்...வவ்வால்...பதிவை போட்டுட்டு எங்கேயா போன...
உன்னை கேள்வி கேக்க பின்னானானானானாடி...
கூட்டம் கூட்டமா வராங்க பாரு...

நாய் நக்ஸ் said...

@ வௌவால்
இந்தியாவுல இருந்து ரோம்ப போர் அடிக்குதுயா...

அப்படியே வேற கிரகத்துல பிளாட் வாங்கி தாயா...ஆனா ஒண்ணு அங்கயும் நான்தான் HMT TIME OF UNIVERSE...
சொல்லிட்டேன் ஆமா...

நாய் நக்ஸ் said...

@வவ்வால்...

உனக்கு 1,2,3, தெரியாதா....
போச்சுடா....இனி நீ படிக்காதவன்னு சொல்ல போறாங்க...
1,2,3...போட்டு தான்யா கமெண்ட்,, பதிவு போடணும்...

வவ்வால் said...

நக்ஸ் அண்ணே,

வாங்க,நன்றி!

என்னது எனக்கே ஏழரையா ? பரவாயில்லை வரட்டும் கூட ஒரு அறை காதோட சேர்த்து போட்டு எட்டா ஆக்கிடுறேன் :-))

----------

கிழவிங்க அந்த காலத்தில ஒரு உரலில் போட்டு டங்கு டங்குன்னு பாக்கு இடிப்பாங்களே அதான்... சின்னம் சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோனுதடி கண்ணம்மா பாட்டில் ஒரு பாட்டி பாக்கு இடிக்கும் பாருங்க, நீங்களே ஷபாஷ் அப்படி போடு சொல்வீங்க :-))
------
வர்ராங்களா வரட்டும் ..வரட்டும் :-))

ஏன் சார் சிட்டிசன் டைம் எல்லாம் பார்க்க மாட்டிங்களா :-))
HMT ஆஹ் சிங்க்கில் மீனிங்க் ஆர் டபுள் மீனிங் ?
செவ்வாய் கிரகத்திலும் ஏதோ நிழல் ஆடிச்சுன்னு இப்போ நியூஸ் :-))

-----------------
தருமிய்யா ,

வாங்க ,நன்றி!

தோண்டுறது கூட பெரிசா இல்லை, ஆனால் சோதனையே எல்லாப்பதிவும் பின்னூட்டங்கள் உட்பட படிச்சப்பிறகே பதிவுப்போடணும்னு படிக்க ஆரம்பிச்சேன் ..சுமார் 20 பதிவுகள் படிச்சேன் அப்போ கூட ஒன்னும் ஆகலை உண்மைத்தமிழர் பட்டறையைப்பத்தி அறிமுகம் +5 பதிவுன்னு போட்டு நொறை தள்ள வச்சிட்டாரு :-))

உங்களை வேற ஆங்காங்கே செல்லமா கலாய்ச்சிருந்தாரே நியாபகம்ம் இருக்கா?

மதுரையில் வைகையாத்துல பட்டறைப்போட பாலபாரதி காதுல குசு குசுன்னு பேசினதா சொல்லியிருந்தார், அப்படி ஒரு வைபவம் நடந்துச்சா? எப்போ வந்து கேட்கிறேன் பாருங்க :-))

----------

சிவானந்தம்,

வாங்க,நன்றி!

புது ஊரு ,புது புரோஃபைல் பேரு கலக்குறிங்க :-))

போன இடத்தில் எல்லாம் நல்லபடியா அமர்ந்தாச்சா?

இணைய வசதி பெற்றுட்டிங்கன்னு நினைக்கிறேன்ன்.

என் கிட்டே சைக்கிள் ஒன்னு இருக்கு ஒரு கட்டு காஜா பீடி வாங்கிட்டா நானும் என்சைக்கிள் பீடியா தான் :-))

தருமிய்யாவுக்கு சொன்னதை பாருங்க தேடி எடுப்பது பெருசா இல்லை ,எல்லாப்பதிவும் படிக்க தான் படுத்தி எடுத்துடுச்சு ;-))

ஆனாலும் சுவையான படுத்தல்,அப்போதைய பதிவர்களின் நட்பும், ஒருங்க்கிணைப்பும் சும்மா சொல்லக்கூடாது ..நினைத்தாலே இனிக்கும் தான்!

நாய் நக்ஸ் said...

@ vavvaal...
சொன்னா கேக்கவே மாட்டீறு...
உன்னை எப்படியா கான்டக்ட் பண்ணுறது...
பாரு வருண் பதிவுல அவன் அவனும் வாந்தி எடுக்குரத்தை...
உன்னை பிடிக்க முடிஞ்சா உடனே கூப்பிடுவேன்ல...

போயா....ங்...ங்...ங்...

நாய் நக்ஸ் said...

பாரு வவ்வால்..நான் போனாலே..
எல்லாரும் ஓடிராணுக....

அப்புறம்...
உங்க டேம்ப்லாட்..மாத்துங்க...
மொபைல்-ல் பாக்கவே முடியலை...
scroll பண்ண வரவே மாட்டன்குது...

உடனடியா மாற்றவும்...

வவ்வால் said...

நக்ச் அண்ணே,

உங்க அன்புக்கு நன்றி, அந்தப்பதிவை எல்லாம் கண்டுக்காதிங்க , லூசுப்பசங்க, நம்ம கமெண்ட் வெளியிடாமல் அவனுகளே பேசி ,ஜெயிசுட்டோம்னு பீத்திப்பானுங்க,


நம்மை போல மட்டுறுத்தல் இல்லாமல் வைக்க சொல்லுங்க, கிழிச்சு தோரணம் கட்டிற மாட்டேன்.

சரி சரி விடுங்க ,பதிவர் சந்திப்பை "வழக்கம்" போல கொண்டாடுங்க ...ச்சியர்ஸ்!

ILA (a) இளா said...பதிவுலக நாட்களை திரும்ப ஒருமுறை பார்க்க வைத்ததற்கு நன்றி!

படங்கள் வேணுமின்னா கைப்புள்ள, இல்லைன்னா நாமக்கல் சிபி கிட்ட நிறைய இருக்கும். மாம்ஸ்(பாலபாரதி தயிர் சோத்தை வழிச்சி போட்டதைப் பத்தி ஒன்னுமே சொல்லலியே :()

அதெல்லாம் இருக்கட்டும். முகம் தெரியாத நீங்க யாரு சார்.

நாய் நக்ஸ் said...

வாயா,,,வருண் பதிவுக்கு போவோம்...
அங்க மாடுரேசன் இல்லை...

இல்லாட்டி
உங்க பதிவு தான்....அதிகமாய்டுச்சினா....எங்க போறது..

வவ்வால் said...

நக்ஸ் அண்ணே ,

நிறைய தடவை டெம்ப்ளேட் மாத்திட்டேனே, இன்னுமா?

நீங்க மொபைல் வியுவில் பாருங்க,ஃபுல் வியு பார்த்து இருப்பீங்க.

---------

அந்த வருண் மாமா என் கமெண்ட் மட்டும் போடாது :-))

சரி விடுங்க அவங்களுக்கு தெரிஞ்சது அம்புட்டு தான் :-))

நம்ம கடை 24*7 ஓப்பன் தான் ஆள் இல்லாவிட்டாலும், வாங்க ,தாரளமா.

---------

இளா,

வாங்க,நன்றி!

ஆமாம் பாலபாரதி அவர்கள் ஆட்டோவில் சிதறிவிட்ட தயிர் சாத டப்பாக்களை சேகரித்து மீண்டும் ஒழுங்கு படுத்தி பொறுமையாக குனிந்து ,நிமிர்ந்து சாதம் எடுத்துக்கொண்டிருந்தார்னு உண்மைத்தமிழன்ன் சிலாகிச்சு எழுதி இருக்கார். அதை சுட்டியில் படிப்பார்கள் என இருந்துவிட்டேன்.

பாலபாரதி தளத்தில் விடுபட்டவை ,நன்றி அறிவுப்புன்னு மட்டுமே இருந்துச்சு ,அதான் எதுவும் போடவில்லை.

மா.சி ,சாப்பிட்ட இடத்தில் சிதறியதை எல்லாம் சுத்தம் செய்தார் என்பதெல்லாம் உண்மைத்தமிழன் பட்டறை டயரிக்குறிப்பில் இருக்கு ,அங்கே படித்தால் நல்லா இருக்கும்னு இங்கே சுட்டியோட விட்டுவிட்டேன்.

நிறைய படங்கள் ஓசை செல்லா ,மோகன் தாஸ் பதிவில் இருக்கு எனவே சுட்டி கொடுத்திருக்கேன்.

ஹி...ஹி நான் மனிதன் , பதிவும் எழுதுவதால் பதிவன் :-))

நாய் நக்ஸ் said...

mobile view தான் பாக்குறேன்...ரோம்ப
பிரச்சனையா இருக்கு...உடனே மாத்தவும்...

அப்புறம்..ஏதாவது தொடர்புக்கு தரவும்...

எதிர் பார்த்து காத்திருக்கிறேன்...
சில இடங்களில் நாம சேர்ந்து போக வேண்டி இருக்கு...

புரிந்து கொள்ளவும்....

சார்வாகன் said...

வணக்கம் சகோ,

அருமையான வியக்க வைக்கும் அற்புத பதிவு.நான் பதிவுலகம் எழுத வந்து 1 வருடமே ஆவதல் இந்த ஃப்ளாஷ் பேக் கதை எல்லாம் தெரியாது!.

கொஞ்சம் கடந்தகாலம் சென்று பொ ஆ.2007 பதிவர் சந்திப்பை பார்த்தது போல் இருந்தது!.

அப்போது கணிணி அறிவு,தமிழில் தட்டச்சு,எழுத வேண்டிய விடயங்கள் என கற்றூக் கொடுக்க மிகவும் சிரமப்பட்ட பீஷ்ம பிதாமகர்க‌ளுக்கு மனமார்ந்த நன்றி!எல்லா இணைப்பிலும் சென்று மிகவும் பொறுமையாக படிக்கவே ஒரு நாள் ஆகும் போல் தெரிகிறது.

சரி 2012 மாநாட்டுக்கு செல்ல முடியவில்லையே என்பதை ஃப்ளாஷ் பேக் போட்ட்டுக் காட்டி(டார்டாய்ஸ் சுருள்முகத்தில் எதிரே நானே சுற்றிக் கொள்கிறேன் ஹி ஹி)

பதிவுலக சுவன‌த்திற்கே( இது வேற விட முடியவில்லை!!!) அழைத்து சென்றதற்கு நன்றி நன்றி நன்றி!!!

டிஸ்கி இதே போல் இந்த 2012 மாநாட்டு செய்திகளையும் சுடச்சுட வழங்குவீர்கள் என் அறிந்தாலும் துண்டு போட்டு இடம் பதிவு செய்து விட்டோம்!!

குட்டிபிசாசு said...

நானும் 2008-ல் மெரீனாவில் சென்னை பதிவர் சந்திப்புக்குப் போனேன். அன்னைக்கு சரியான மழை, அதனால் அதிக நேரம் எல்லாரோடும் கதைக்க முடியவில்லை. சந்திப்பு முடிந்த எல்லோரும் குடித்தோம். மசாலா பால்!
…பதிவர் சந்திப்பிற்கு வாழ்த்துக்கள்!

ராஜ நடராஜன் said...

பழைய நெனப்புத்தான் வவ்வாலு பழைய நெனப்புத்தான்.

நான் வடிவேல் மாதிரி தவறிப்போய் பஸ் ஏறிட்டேன்:)

http://vovalpaarvai.blogspot.com/2007_08_17_archive.html

ராஜ நடராஜன் said...

இனியும் ஒரு மலரும் நினைவுப் பதிவு போடுவீங்க நினைப்பில் ஆகஸ்ட 26,2012 வலைப்பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

ராஜ நடராஜன் said...

வவ்ஸ்!பழைய நினைவுகள் பரவசப்படுத்தினாலும் கூட விட்ட ரயிலை மீண்டும் தொத்திப்பிடிச்சு ஏறிய நீங்க உட்பட தொடர் பயணம் செய்வோர்கள் தருமி,உண்மைத்தமிழன் போன்றவர்கள் மட்டுமே.ஏனையவர்கள் எப்பொழுதாவது ஒருமுறையாவது பின்னூட்டங்கள் மூலமாவது தங்களை அடையாளப்படுத்திக் கொள்வது மகிழ்ச்சி தரும்.

வில்லவன் கோதை said...

தகுந்த நேரத்தில் தரப்பட்ட தகவல்கள்.
மகிழ்ச்சியூட்டுகிறது.
வில்லவன் கோதை .வேர்கள்

ஹாரி R. said...
This comment has been removed by the author.
ஹாரி R. said...

அண்ணே கலக்கிட்டிங்க.. சூப்பரா நிறைய தகவல்கள் திரட்டி இருக்கீங்க.. உண்மையிலே ஒரு நல்ல பிளாஸ் பாக் அண்ணே.. உங்க இந்த பதிவோட லிங்கை என்னோட ஒரு பதிவுக்கு கொடுக்கிறேன் அண்ணா :):):):):) நன்றி

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

நிறைய விஷயங்களை படங்களோட தெரிஞ்சுகிட்டோம். நன்றி.

Anonymous said...

தமிழ் வலைப்பதிவர்களின் வரலாற்றைத் தொகுக்க நினைப்போருக்கு இப்பதிவு மிக உதவியாக இருக்கும், எவ்வளாவு தகவல்கள் .. நீங்கள் பட்டறை நடத்தியக் காலத்தில் நான் வெறும் கவிதைகளை மட்டுமே வலைப்பதிவில் எழுதி வந்தேன். நெட்வோர்க், திரட்டி என்பது பற்றி ஒன்றும் தெரியாது எனக்கு ..

அப்போது தமிழ்நாட்டில் இருந்தேன். இப்போது தமிழ்நாட்டில் இருந்திருக்கலாமே என்று தோன்றுகின்றது !!!

Manimaran said...

பிளாஷ் பேக் அருமை...

ராஜ் said...

உங்க உழைப்பிற்கு ஒரு ராயல் Salute . நான் வலைப்பூ படிக்க ஆரம்பித்தது 2009 யில் இருந்து தான் , இந்த பதிவு முலம் நிறைய விஷயங்கள் அறிந்து கொண்டேன். இதை பூக்மார்க் செய்து படிக்கிறேன்.

ஒரு விண்ணப்பம் ..நீங்கள் நிறைய நல்ல விசயங்கள் எழுதுகிறேர்கள் , நல்ல விஷயங்கள் நிறைய மக்களை சென்று அடைய திரட்டிகள் நமக்கு பெரும் உதவி
செய்கிறது . நீங்கள் எதாவது திரட்டியில் இணையலாமே,
I feel ppl(unknown readers) shouldnt miss a good blog like urs.
I know you dont mind abt hits, but a blogger should be reached to more ppl.

வவ்வால் said...

நக்ஸ் அண்ணே,

கண்டிப்பா பார்க்கலாம்,அப்புறம் சொல்கிறேன்.

---------
சகோ.சார்வாகன்ன்,

வாங்க,நன்றி!
//அப்போது கணிணி அறிவு,தமிழில் தட்டச்சு,எழுத வேண்டிய விடயங்கள் என கற்றூக் கொடுக்க மிகவும் சிரமப்பட்ட பீஷ்ம பிதாமகர்க‌ளுக்கு மனமார்ந்த நன்றி!//

ஆமாம் மிக முக்கியமாக முகுந்த் என்பவர் தான் யுனிக்கோட்டில் தமிழ் அடிக்க எல்லாம் செய்தது ,ஈ.கலப்பை அவரின் உருவாக்கம், அதனை விட்டுவிட்டேன்ன், இப்போது பதிவில் சேர்க்கிறேன்.

அப்போது சிறு குழுமத்திற்கு என இல்லாமல் ஒட்டுமொத்த தமிழ் கணிமைக்கும் பாடுபட்டார்கள் வலைப்பதிவர்கள். தமிழ் விக்கிப்பீடியா எல்லாம் நன்கு பரவ அவர்களும் ஒருகாரணம்.

சுடச்சுட இகே இருக்காதே ஊரல் போட்டுத்தான் கிடைக்கும், ஆனா செம கிக் :-))
----------------
குட்டிப்பிசாசு,

வாங்க,நன்றி!

அப்போ அடிக்கடி மெரினா தான்ன் சந்திப்பு மையம்.

நீங்களும் கலந்துக்கொண்ட மகிழ்ச்சி,

மசலா பால் ஆ அதிலும் கிக் இருக்காம் வடிவேலு சொன்னார் ஜிகிர் தண்டா தூத் குடிச்சா துக்குமாம் :-))

----------

ராச நடராசரே,

வாங்க,நன்றி!

நீங்க பேசறது உங்களுக்காவது புரியுதா ?என்னமோ குழப்படியா சொல்லுறிங்க, கடசியில் கவனிக்கிறேன் என்னன்னு.
-------------
பாண்டியஜி,,

வாங்க ,நன்றி!

பழையக்கதை சொன்னாலும் ரசிக்கிறிங்களே ,நன்றி!
------------
ஹாரி,

வாங்க,நன்றி!
சுட்டிப்போட எல்லாம் அனுமதி கேட்கணுமா, பதிவையே எடுத்தாலும் ஒன்னு சொன்னதில்லை, நாம திறந்த வீடுங்க!

உங்கப்பதிவும் படிச்சேன், நன்றாக தொகுத்துள்ளீர்கள்,நன்றி!

--------------
முரளி,

வாங்க,நன்றி!

----------
இக்பால்,

வாங்க,நன்றி!

ஆமாம் அப்போது நிறையப்பேருக்கு தமிழில் டிரான்ஸ்லிடெரேஷனாக தட்டச்சு செய்யலாம் என்பதே தெரியாது,திரட்டியுலும் பெரும்பாலும் சேராமல்லே இருந்தவர்கள் அதிகம். அப்போது சந்திப்பு என்பது பிளாக்கின்அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கும் என இருந்தது.

--------------
மணிமாறன்,

வாங்க,நன்றி!

ராஜ்,

வாங்க பாஸ்,நன்றி!

ஹி...ஹி ராயலுக்கு ,சல்யூட்டுக்கும் நடுவில் சேலன்ஞ் எதுவும் இல்லையே :-))

சிலப்பதிவுகளை படிக்கும் போது பெரும்பாலோருக்கு அப்போதே குழுமம் உருவாக்கினார்கள் என்பது தெரியவே இல்லை என்பது தெரியவந்தது சரின்னு ஒரு ரிகால் போட்டாச்சு.

இன்னும் கூட நிறையப்பழையப்பதிவுகள் தகவல்கள் இருந்துச்சு எல்லாம் படிச்சு முடிக்க நேரமில்லை, மேகி நூடில்ஸ் போல போட்டேன் அதுவே நல்லா இருக்குன்னு சொல்லிட்டிங்களே :-))

எல்லாத்திரட்டியிலும் இல்லை, ஏன் எனில் நான் மனசில பட்டதை விமர்சிப்பேன், அப்புறம் வம்பாயிடும், எனவே நானாகத்தான் ஒரங்கட்டிக்கிட்டேன். எனக்கு கொஞ்சம் ஓட்டை வாய்யின்னு கூட சொல்லலாம் :-))

இன்ட்லி,இன்டி பிளாக்கரில் இருக்கேன் அதுவும் சமீபமாக தான்.உங்களைப்போன்றவர்கள் சிலர் படிச்சா போதாதா.அப்போ பின்னூட்டம் போட என பிளாக் ஆரம்பிச்சவன் இத்தனைப்பேரு படிச்சதே பெருசு தான் :-))

----------

Unknown said...

நிறைய தேடிபிடிச்சு தொகுத்திருக்கீங்க வாழ்த்துக்கள்! அவசியம் தெரிஞ்சுக்க வேண்டியவை!

குரங்குபெடல் said...

அண்ணே உனக்கு ஏன் இந்த வேலை . .


UFO / QUBE / PXD


பத்தி தெளிவா புரியற மாறி ஒரு பதிவை போடுண்ணே

உபகாரி said...

@வவ்வால்,
எனக்கு பதிவும் கிடையாது பதிவர்களையும் தெரியாது இப்பொழுதுதான் உங்களுடைய பாணியில் அர்த்தமுள்ள பின்னுட்டம் போடும் வேலையே செய்து வருகிறேன் ஆகவே மீட்டிங்,சங்கம் பற்றியெல்லாம் எதுவும் தெரியாது.இன்று தான் கேபிளின் "வலிக்காமல் கொள்ளையடிக்கும் மால்கள்" பதிவில் தங்களுடைய பின்னுட்டத்திற்கு பதில் போட்டுள்ளேன்.

ezhil said...

ஹாரிபாட்டர் பதிவின் மூலம் உங்கள் பதிவைப் படித்தேன். க்ணிணியில் குறைந்த வசதிகளே இருந்த , வலைப்பதிவு என்ற ஒன்றை நான் அறியாத காலத்திலேயே நடந்த மாநாட்டுச் செய்திகள் கண் முன்னே கொண்டு வந்தமைக்கு நன்றி.அருமை.

”தளிர் சுரேஷ்” said...

சிறப்பான பகிர்வு !நன்றி!

இன்று என் தளத்தில்
சித்துண்ணி கதை!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_25.html
பிறந்த குழந்தை பேசியது! பரவிய வதந்தி!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_1427.html

வவ்வால் said...

வரலாற்று சுவடுகள்,

வாங்க, நன்றி!

----------
கு.பெ,

வாரும்,நன்றி!

ஒரே மாதிரியாக பதிவு போடாமல் கொஞ்சம்ம் வெரைட்டியும் காட்டணும்ல, மேலும் அக்கால வரலாறு இப்போ பலருக்கும் தெரியலை, வரலாறு முக்கியம் பதிவரே!

சினிமா கக்கத்துல வச்சு இருக்கவங்களைக்கேட்காம என்னை கேட்கிறது நியாயமா?

அப்படியே எழுதினாலும் விக்கியில இருக்கு எங்களுக்கு தெரியாதன்னு சொல்லுவாங்க மூளைக்காரய்க :-))

--------------
உபகாரி,

வாங்க,நன்றி!

ஓ ரொம்ப முக்கியமா ஏதோ சொல்லி இருப்பிங்க போல இங்க வரைக்கும் வந்து கூப்பிடுறிங்க :-))

பார்க்கலாம்.

அப்படியே பதிவும் போடுங்க,நானே போடும் போது நீங்க போடக்கூடாதா என்ன?
--------------

எழில்,

வாங்க,நன்றி!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

அக்காலத்தில் 50க்கும் மேற்பட்ட கணினி, இணைய வசதி, இலவச மென்பொருள் சிடி,உணவு எனக்கொடுத்து 300க்கும் மேற்பட்டோரை கூட்டி செய்துள்ளார்கள் என்பது மறக்கக்கூடாத ஒரு நிகழ்வு ஆகும் என்பதால் மீண்டும் நினைவு கூறப்பதிவாக்கினேன்.
------------
சுரேஷ்,

வாங்க ,நன்றி!

தினம் ஒருப்பதிவு என அசத்துறிங்க போல!
-----------

-------------

ராஜ நடராஜன் said...

//செவ்வாய் கிரகத்திலும் ஏதோ நிழல் ஆடிச்சுன்னு இப்போ நியூஸ் :-))//

வவ்வால் மாதிரி ஏதோ படுத்துக்கிடப்பதை இப்பத்தான் பார்த்தேன்.உங்களுக்கு முன்னாடியே சொல்லி அனுப்பிட்டாங்களா!

வவ்வால் said...

ராச நடராசர்,

கியுரியாசிட்டி எனக்கு நேரா படம் அனுப்புது :-))

அதான் இணையத்துல எல்லாம் சொல்லிடுறங்களே.

அஞ்சா சிங்கம் said...

http://pinnoottavaathi.blogspot.com/2012/08/blog-post_27.html


அட போங்கப்பா தனியா நான் மட்டும் அங்க சண்ட போட்டுட்டு இருக்கேன் போர் அடிக்குது

வவ்வால் said...

அஞ்சா ஸிங்கம் ,

ஹி...ஹி கொஞ்ச நேரம் முன்னர் அந்தப்பதிவைப்பார்த்தேன், இதில காமெடி என்ன தெரியுமா என்னை வச்சு பதிவுப்போட்டுவிட்டு என் பின்னூட்டம் வெளியிடுவதில்லை, அப்புறம் நான் எங்கே இருந்து பேச.

அவர் சும்மா ஹிட்ஸ்க்கு எழுத்உற ஆளு, நாளு பேரு ஏத்திவுடுறாங்க, இதில கூட சிராஜ் வேற என்னத்த சொல்ல , கண்டுக்காம விடுங்க.

மாடரேஷன் இல்லாத பதிவில பேசிக்கலாம்.

ஜோதிஜி said...

உங்க பாணியே தனிதான். எதுல இறங்கினாலும் நோண்டி நொங்கெடுத்து அடேங்கப்பா..... வியப்பாக இருக்கிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக படித்த விசயங்களை ஒரே விதமாக கோர்த்து. நன்றி வவ்வால். ஆனால் நாலைந்து தடவைகள் உள்ளே வந்து ஒவ்வொன்றாக படித்து பார்க்க வேண்டும்.

ஒரே ஒரு எழுத்துப் பிழை கண்ணில் பட்டது. நிருபிக்கவும், நிறு என்று வந்துள்ளது.

மறுபடியும் வர்றேன்,

ஜோதிஜி said...

இதுவொரு ஆவண பொக்கிஷம்,

வவ்வால் said...

ஜோதிஜி ,

வாங்க,நன்றி!

ஆவணப்பொக்கிஷமா? அட டா இப்படிலாம் சொல்வீங்கன்னு தெரிஞ்சு இருந்தா ,இன்னும் நல்லாவே தோண்டியிருப்பேன், கடைசி நேரத்தில அவசரமாக பதிவிட்டேன் ...எழுத்துப்பிழையெல்லாம் வழக்கமாக சரிசெய்யணும் என நினைத்து அப்படியே விட்டுவிடுவது, ஹி...ஹி ஒரே ஒரு எழுத்து பிழைதான் கண்ணுல பட்டுச்சா, நான் நிறைய இருக்கும்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன் :-))

நான் பதிவை போட்டு அப்படியே ஊர சுத்தப்போய்டுறது ,எங்கே சரி செய்ய.

பதிவர் சந்திப்பு பெரிய அளவில் நடத்துவதே சிரமம், இதில் தொழில்நுட்பரீதியாக அமர்வுகள்,வகுப்புகள், கணிகள் , வீடியோ புரொஜெக்ஷன் என வைத்து நடத்துவது இன்னும் சிரமம் என்பதால் கடந்த கால ஜாம்பவான்களின் முயற்சிக்கு மரியாதை செய்யும் விதமாக ஒரு ரிகால் பதிவு போட்டேன்.

ஹி...ஹி..இப்போதைய பதிவர் சந்திப்புக்கு அடுத்த முறை ஒரு ரீகால் போட்டுற மாட்டேன் :-))

ஜோதிஜி said...

ஒரு திரட்டியில் இணைந்து மற்றவர்களுக்குத் தெரியப்படுத்தும் பொழுது கருத்து சுதந்திரத்தை மதிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறார் என்று சொன்னார். எவர் ஒருவருக்கு பொறுப்புணர்ச்சி அதிகமாக இருக்கிறதோ அவருக்கு சுதந்திரமும் அதிகம் இருக்கலாம் என்றும். பொறுப்புணர்ச்சி இல்லாத சுதந்திரம் சரியான ஒன்றாய் இருக்காதென்று சொன்னார். உதாரணமாய் தனியாய் வீட்டில் அலையும் பொழுது நிர்வாணமாக இருக்க நினைக்கும் ஒருவருக்கு தன்னுடைய மனைவி முன்னால் கூட அப்படி நிற்க மனது வராதென்றும் இந்த விதமான உணர்வு எழுத்திலும் இருக்கவேண்டும்

இதை கொட்டை எழுத்துக்களில் போட்டுருக்கலாமே?

ஜோதிஜி said...

எல்லாவற்றையும் ஒரு சுற்றுலா போல போய்விட்டு வந்தேன்.

1. பொன்ஸ் பதிவு ஏதோ பிரச்சனை என்று சொல்கின்றது. விமர்சனத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.

2. எனக்குத் தெரிந்தவர்கள் ஒரு பத்துப் பேருக்குள் இருக்கலாம். ஆலமரங்கள் எல்லாம் அமைதியாகி விட்டார்கள் போலும்.

3. உண்மைத்தமிழன் எழுத்து நடையில் இன்று வரையிலும் எந்த மாற்றமும் இல்லை? ஏன்?

4. 2007 நமக்கு இப்படி ஒரு உலகம் இருக்குதுன்னே தெரியாது.

5. மாலன் பேசிய வார்த்தைகளுக்கு ஒரு அப்ளாஸ்.

ஆனால் அன்று முதல் இன்று வரையிலும் மொத்த ஒருங்கிணைபு இல்லாதது ஒரு பெருங்(கறை)குறையே.

படித்த எனக்கே தலை சுத்துது. ஒரு நாள் ஆயிருக்குமா அத்தனையும் கோர்க்க.

நன்றி வவ்வுஜி

வவ்வால் said...

ஜோதிஜி,

சுட்டிக்குள்ள போக ஆரம்பிச்சு இருக்கிங்க, ஆனால் இப்படி மொட்டையாக சொன்னால் எப்படி?

நான் எல்லாப்பதிவும் மீண்டும் படித்துவிட்டு தொகுத்ததால் இப்போ நினைவில் இருக்கு , அது மோகந்தாஸ் பதிவில் ,மாலன் பேசியதை எழுதி இருக்கிறார் என.

நான் தொகுக்கும் போது பெரும்பாலும் பதிவர் தன்னிலையில் பேசுவதை போட நினைத்தேன், மேலும் அக்கருத்து பதிவரின் கருத்தல்ல, அது படித்தால் உடனே அப்பட்டறையை நினைவூட்டாது என்பதும் ஒரு காரணம்.

அப்புறம் அவர் சொன்ன கருத்து அப்பொழுதே பலராலும் புறக்கணிக்கப்பட்டது, அப்பொழுது நடந்த விவாதத்தினை முழுசாக அறிந்திருந்தால் இப்படி சொல்லி இருக்கமாட்டிர்கள்.

வலைப்பதிவுக்கு எல்லாம் சென்சார் வைக்க வேண்டும் என்பதாக்க போனப்பேச்சு அது.

அதில் உங்களுக்கு உடன் பாடு இருக்கிறதா?

அது சரி யாரோ 2007 இல் சொல்லிட்டு போயிட்டாங்க ,என்னை வந்து கேட்கிறிங்க பாருங்க :-))

வவ்வால் said...

ஜோதிஜி,,ஆஹா கலக்கிட்டிங்க, இந்தப்பதிவு போட்டதுக்கு ஒரு பலன் இருக்குன்னா நீங்க முழுசா எல்லா சுட்டியிலும் போய்ப்படிச்சது தான்,நன்றி!


நாம மெனக்கெட்டு ஒன்று செய்தால் அதனை மேலோட்டமாக பார்த்துவிட்டு செல்வார்கள் என்பது பொதுவாக நடப்பது தான், யாராவது முழுசா படிச்சா ஒரு குதூகளம் தான் :-))

ஆமாம் அந்த காலத்தில் அப்படி அப்படி இருக்கத்தானே செய்யும், அதை எல்லாம் தாண்டி தான் இணையத்தில் தமிழ் செல்கிறது.

வலைப்பதிவு என்பது இணைய டயரி என்ற நிலையினை கடந்து இணையத்தமிழ் கணிமை, மொழியாளுமை என்பதை அடைய வேண்டும்,ஆனால் இன்றும் பலர் காலையில் கக்கா போனேன் ,மஞ்சளாக போச்சு என நகர்த்திக்கொண்டு இருக்கிறார்கள், ஆனாலும் இணையத்தமிழ் மெல்ல அதன் இலக்கில் செல்கிறது என்பதையும் உணரலாம்.

//3. உண்மைத்தமிழன் எழுத்து நடையில் இன்று வரையிலும் எந்த மாற்றமும் இல்லை? ஏன்?//

உண்மைதான் ஒரே போல இருக்கு ,ஆனால் அதுக்கு இப்போ உண்மைத்தமிழன் ஸ்டைல் என்று பெயரும் வச்சிட்டாங்க :-))

நீங்க இப்படி மனசில பட்டதை சொல்லுறிங்க சிலப்பேருக்கு அதெல்லாம் பிடிக்கிறது எனவே பார்த்து சூதனமா சொல்லுங்க :-))

பொன்ஸ் பதிவில் பிரச்சினைப்பற்றி சொல்லியிருக்கு என எதை சொல்லுறிங்க? அப்போ வேறு சில அக்கப்போருகளும் நடந்துச்சு.

மேலும் பதிவர் சந்திப்பு தேவை இல்லாதது என சிலர்/ஒருவர் சொன்னதாகவும் பேச்சு ஓடிச்சு. எதை சொல்லுறிங்க என புரியவில்லை.

ஒருங்கிணைப்பு இருந்துச்சு, ஆனால் அவ்வப்போது இணைய இணைப்பு கட் ஆவது போல ஆகிக்கொண்டு இருக்கு. நடுவில் பதிவுலக பிரச்சினைகள் கேள்விப்பட்டு இருப்பிங்க அதனால் கொஞ்ச காலத்துக்கு எல்லாம் தடையாச்சு.

இப்போ மீண்டும் கொஞ்சம் துவங்குது.

வாழ்க்கை ஒரு வட்டம் ;-))

தணல் said...

நல்ல தொகுப்பு!

உண்மைத்தமிழன் said...

பழைய நினைவுகளை மீட்டுக் கொடுத்தமைக்கு மிக்க நன்றிகள் வவ்வால்ஜி..! அதுவொரு காலம்..!

நம்பள்கி said...

வவ்வால் அய்யா,
நீங்க வந்து கொஞ்சம் இங்க "பீட்டர் விடுவது காரணப் பெயரா? ரத்தக்கண்ணீர் ராதா படி ஆம்!" என்ற இடுகையில் கொஞ்சம் மொய் வையுங்க!

வவ்வால் said...

தணல்,

வருகைக்கும்,கருத்துக்கும்,நன்றி!

----------

உ.த.அண்ணாச்சி,

வாங்க ,வணக்கம்,நன்றி!

ஆமாம் அது ஒரு கனாக்காலம் தான் போங்க, மிக ஒரு நல்ல துவக்கம் அமைந்து ... சில இடர்களால் ..இடையில் நின்று போனது மிகவும் வருத்தமானது, அப்போ இருந்த தொழில்நுட்ப வல்லுனர்கள் போல இப்போ யாரும் பதிவுல இருக்கிறாப்போலவே தெரியலை.வலைப்பதிவுக்கு தேவையான எதையும் உருவாக்கி கொடுப்பாங்க இல்லை, உங்களுக்கு கூட இன்ஸ்கிரிப்ட் டைப்பிங் செய்து கொடுக்க சொல்லி முகுந்த்கிட்டே கேட்டதா எழுதி இருந்தீங்க, நமக்கு ஒரு உதவின்னா கேட்கக்கூடிய அளவுக்கு மக்கள் இருந்தாங்க.

மீண்டும் அது போல வலுவான குழுமம் உருவாகணும். அதற்கான ஆரம்பம் துவங்கி இருக்கு எனலாம்.

நன்றி!

-----------

நம்பள்கி,

வாங்க,நன்றி!

நம்பள்கி தேடி வந்து அழைப்பதை பார்த்தால் எனக்கு அங்கே ஏதோ அப்பு இருப்பதாக படுதே :-))

முட்டாப்பையன் said...

வௌவாலு.உனக்கு செம விருந்து வச்சிருக்கோம் எங்க தளத்துல.
வா வந்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு ரத்தம் குடிச்சிக்கோ
இன்னும் என்ன எல்லாம் வேண்டுமோ சாப்பிட்டுக்கோ.

நாளை எங்கள் தளத்தில்.

வவ்வால் said...

முட்டாப்பையன் ,

நீ என்ன வேண்டும்னா புளுத்திக்கோ ,நீ எல்லாம் யாருன்னு எனக்கு தெரியும் ,மூடிக்கிட்டு போறியா? ஏற்கனவே எல்லாம் போட்டு வாங்கியாசு இனிமே இங்கே வந்து கூவாத உனக்கு பதிலே கிடைக்காது , ஆனால் நீ கூவுறதை நான் ஒன்னும் சொல்ல மாட்டேன் ,உன் நேரம், உன் இணையம் ... என்ன வேண்டும்னாலும் கூவிக்கலாம் :-))

பார்ப்போமே நீயும் எத்தனை நேரம் கொடுத்தக்காசுக்கு கூவுறன்னு :-))

but dont forget final punch will be mine :-))

முட்டாப்பையன் said...

@ வௌவால்
நோ டென்ஷன் .இந்த முறை முக்கா முட்டா பசங்க .


but dont forget final punch will be mine :-))/////

இதை அங்க வந்து காட்டு.

தலைவர், அகில உலக தமிழ் பதிவர் சங்கம், எருமைப்பட்டி said...

இப்படியே அந்த தமிழ்மணம் ஆளுகளை உசுப்பேத்தி உசுப்பேத்தி விடுங்க. இன்னிக்கு அவனுங்க ஆடுற ஆட்டம் இருக்கே. திரட்டிய வெச்சுட்டு சைலண்டா அராஜகம் பண்ணிட்டு இருக்கானுங்க. ஒருத்தன் கூட அவனுகளை பத்தி விமர்சனம் பண்ண முடியலை. பண்ணினா உடனே திரட்டில இருந்தே தூக்கிடுவோம்னு பயப்படுத்தி வச்சிருக்கானுங்க. இது எல்லாருக்கும் தெரியும். தெரிஞ்சும் ஹிட்சுக்கும், ஓட்டுக்கும் ஆசைப்பட்டு எல்லாத்தையும் பொத்திட்டு இருக்கானுங்க. இணையமாம், ப்ளாக்காம், கருத்து சுதந்திரமாம்... கேவலம்.
வவ்வால் மாதிரி எதுக்கும் அஞ்சாதவங்க எல்லாத்தையும் அம்பலப்படுத்தி இதுக்கு ஒரு முடிவு கட்டினா நல்லது.

வவ்வால் said...

யாருப்பா எருமைப்பட்டி அய்யா துரை?

ஏனப்பா நானே திரட்டியும் வேண்டாம் வறட்டியும் வேண்டாம்னு ஒதுங்கி கிடக்கேன் இப்போ வந்து உசுப்பிக்கிட்டு :-))

யாரும் ,யாரையும் அடக்க முடியாதுங்க, உங்களுக்கு வலைப்பதிவு இருக்கா, கூகிளில் தேடினா கிடைக்கிறாப்போல தலைப்பை வையுங்க , தானா கூட்டம் வரும், என்ன கூகிளில் மகுடம் ,வோட்டு எல்லாம் போட மாட்டாங்க :-))

உங்கப்பதிவுக்கு ஆள் வரலையேன்னு வருத்தப்படவே வேண்டாம் தானா வருவாங்க.

தமிழின் முன்னணிப்பதிவர்கள் என அவங்களே நாளுப்பேர பிரண்ட் புடிச்சு வச்சுக்கிட்டு சொல்லிக்கொள்வது தான், எல்லாம் ஒரு வெளம்பரம் தான் :-))

--------

உங்களுக்காக ஒரு ஆறுதல் பாட்டு ஒன்னு போடுறேன் பாடிக்கிட்டு ஊட்டுக்கு போங்க,


வடுகப்பட்டி அய்யத்துரை

வாராண்டி கதவை தொற..

எறுமை மாட்டு மேலே

ஏறிவரான் ரோட்டு மேலே...


மேளம் கொட்டி தாலிக்கட்ட நல்ல நாள் வந்தாச்சு...

ஹொய்யா ஹொய் ..ஹொய் ..ஹொய்யா ...

பாடல் இடம் பெற்ற திரைப்படம், மேகம் கறுத்திருக்கு :-))

Unknown said...

ஹலோ வவ்வால் ஸார்! என்னங்க லக்கி போட்டோவை போட்டுடு "image name" மாத்தாம விட்டுட்டீங்க?

வவ்வால் said...

கூகிள் விஜய்,

ஆஹ் என்ன கொடுமை சார் இது.

டொக்டர் விஜய் கூட செமிச்சு போச்சு ஆனால்லும் இந்த கூகிள் விஜய் ரொம்ப ஓவர் :-))


போட்டோ என்ன தெரியாத போட்டோவ, சும்மா எடுத்துப்போட்டேன் பா, என்னமோ மதுரை நக்கிரார் போலவே கேள்வி கேளுங்க, ஆனால் ஒரு நாளும் நம்ம பதிவை படிக்கவே படிக்காதிங்க :-))

உங்களுக்கெல்லாம் பதிலை சொல்லிக்கிட்டு ... இதே மூதேவி அங்கே போய் சூப்பர் தலன்னு இன்ன்ப்ரு பேருல கமெண்ட் போடும் :-))

perumal karur said...

அண்ணா வவ்வால் அண்ணா ,

நீங்கா யாரு எவருன்னு தெரியாது !!

யுவகிருஷ்ணாவின் பிளாக்கில் உங்க கமென்ட் பார்த்திட்டு அப்டியே இந்த பக்கம் வந்தேன். உங்க பதிவெல்லாம் நல்லாத்தான் இருக்கு ! ஆனா படிக்க தான் சிரமமா இருக்கு ஐ மீன் உங்க ப்ளாக்கோட பேக்ரவுண்ட் கலரா சொல்றேன். தயவு செஞ்சு யுவகிருஷ்ணா வைத்துள்ள மாதிரி பேக் ரவுன்ட் வொயிட்டா மாத்துங்க. அப்புறம் போஸ்ட் எழுதும் பகுதியின் அகலத்தையும் குறைங்க . எழுத்துருவையும் கொஞ்சம் சின்னது பண்ணுங்க யுவகிருஷ்ணா வெச்சிருக்கா மாதிரி ! அப்போதான் படிக்க நல்லா இருக்கும்.

நான் யாருக்கும் அட்வைசோ டிப்சோ சொல்வதில் என்றாலும் இது எனக்காக ஏனென்றால் படிப்பவர்களுக்கு அசவ்கரியத்தை கொடுக்கும் அதனால!!

தப்பா ஏதாவது சொல்லிருந்தா மன்னிச்சு உட்டுருங்கோவ் :-)

Unknown said...
This comment has been removed by a blog administrator.
Unknown said...

இந்த லட்சணத்துல இது வேற..

பின்னூட்டமிடுவோருக்கும் கட்டற்ற கருத்து சுதந்திரம் உண்டு ,எனவே மட்டுறுத்தல் இல்லை ஆனால் அது ஆபாசமாக கருத்திட அல்ல.மற்றவர்களின் கருத்துகளுக்கு இப்பதிவு பொறுப்பாகாது,நன்றி!

வவ்வால் said...

விஜய்,

பொறம்போக்குன்னு சொல்லிக்கிட்டு எல்லாம் இந்தப்பக்கம் வரவேண்டாம், நான் எல்லாருக்கும் நிறைய இடம் கொடுத்தாச்சு , அப்புறம் மூதேவின்னு நானும் ஜாலியாத்தான் சொன்னேன் ஏன் டென்ஷன் ஆகணும் , அதோடு இல்லாமல் ஏதோ கொளுத்தி போடுறதுக்கு சிலர் கமெண்ட் போட்டுக்கிட்டு இருக்காங்க, நடுவில் வந்ததால் அப்படி சொல்ல வேண்டியதாச்சு, வருத்தமடைய செய்திருந்தால் மன்னிக்கவும்.

உங்களுக்கு எல்லாம் மட்டுறுத்தல் இல்லாத இடத்தில் தான் வாய் நீளும், மத்த இடத்தில் ஏன் பின்னூட்டம் வரலைனு கூட தெரியாம நிப்பீங்க,அங்கே ஒன்னும் வாயை தொறக்காதிங்க.

---------

பெருமாள்,

நீங்க யாரு,எவருன்னு எல்லாருக்கும் தெரியும் போல :-))

எல்லாருக்கும் நல்லாத்தான் படிக்க வருது, நீங்க மொபைலில் படிக்கிறீங்களா?

மேலும் இது வரையில் பல முறை டெம்ப்ளேட் மாத்தியாச்சு ஆளுக்கு ஒன்று சொல்கிறார்கள், இப்படியே மாத்திக்கிட்டு இருந்தால் தினம் இதான் செய்யணும், அப்புறம் வெள்ளையாக இருந்தது மாற்று என சொல்லித்தான் இந்த கலருக்கு போன மாசம் மாறினேன் :-))

Unknown said...

வவ்வால் said..
ஏதோ கொளுத்தி போடுறதுக்கு சிலர் கமெண்ட் போட்டுக்கிட்டு இருக்காங்க, நடுவில் வந்ததால் அப்படி சொல்ல வேண்டியதாச்சு, [நான் அப்படிபட்ட ஆளில்லை]

உங்களுக்கு எல்லாம் மட்டுறுத்தல் இல்லாத இடத்தில் தான் வாய் நீளும், மத்த இடத்தில் ஏன் பின்னூட்டம் வரலைனு கூட தெரியாம நிப்பீங்க,அங்கே ஒன்னும் வாயை தொறக்காதிங்க. [என்னுடைய முதல் கமெண்டே ஏறக்குறைய இதுதான்]

முதலில் எதையும் தெளிவாக புரிந்து பேசுங்க. வவ்வால் என்னும் நபரை cablesankar தளத்தின்மூலம்தான் தெரியும். ஆனாலும், நீங்க இவ்வளவு நல்லவரா இருப்பீங்கன்னு தெரியல.

நாய் நக்ஸ் said...

@ வௌவால் ....
என்ன பெரிய template ...
அதுதான் பிரச்சனை என்று எல்லாரும் சொன்னால்....
என்னை மாதிரி,...
சென்கோவி மாதிரி...
சிம்பிள் டேம்ப்லாடே வச்சிட்டு போறது....

யாருக்காக பதிவு போடுறோம்....????


புரிதலுக்கு நன்றி....


இந்த மேட்டர்ஐ நான் முன்பே சொல்லி உள்ளேன்.....

எப்பதான் என்னை தொடர்பு கொள்வீர்கள்.....????????????
IM WAITING FOR UR REPALY....

PERSONALTY....

இதுக்கு பிறகும் என்னை தொடர்பு கொள்ள வில்லை எனில்...
என்னை மறக்கவும்....

வவ்வால் said...

விஜய்,

இப்போ தான் வரிங்கன்னு சொல்லிட்டு அதுக்குள்ள நீங்களே முடிவுக்கட்டிக்கிட்டா,நீங்களும் புரிஞ்சுப்பேசுங்க,இங்கே வேறு ஒரு பிரச்சினை போகிட்டு இருக்கு,சிலப்பேரு டம்மி ஐடில வந்து ஸ்பாம் செய்றாங்க, அதனால் அடிக்கடி நான் பார்த்து பார்த்து எடுக்க வேண்டி இருக்கு,அப்படியும் மாடரேஷன் இல்லாம இருக்கு, என்னும் போது இங்கே எவ்வளவு சுதந்திரம் இருக்குனு புரிய வேண்டாம்.

-------

நக்ஸ் அண்னே,

அட நீங்க வேற ஒவ்வொரு ஹடவை டெம்ப்ளேட் மாற்றும் போதும் எல்லாம் அலைண்மென்ட் மாறிடுது,சரி செய்ய டைம் இல்லை.

எனக்கு சாம்சங்க் கேலக்சி ல நல்லாவே ஒபன் ஆகுது.

வேற நல்ல டெம்ப்ளேட் பார்க்கிறேன்.

ஹி...ஹி நான் எல்லாம் பொறுமையா தான் நகர்வேன், அதுக்குள்ள காண்டாக் செய்யலையேனா எப்பூடி.

Unknown said...

விஜய்,

இப்போ தான் வரிங்கன்னு சொல்லிட்டு அதுக்குள்ள நீங்களே முடிவுக்கட்டிக்கிட்டா,நீங்களும் புரிஞ்சுப்பேசுங்க,இங்கே வேறு ஒரு பிரச்சினை போகிட்டு இருக்கு,சிலப்பேரு டம்மி ஐடில வந்து ஸ்பாம் செய்றாங்க, அதனால் அடிக்கடி நான் பார்த்து பார்த்து எடுக்க வேண்டி இருக்கு,அப்படியும் மாடரேஷன் இல்லாம இருக்கு, என்னும் போது இங்கே எவ்வளவு சுதந்திரம் இருக்குனு புரிய வேண்டாம்.

சரி. அதற்காக........

உங்களுக்கெல்லாம் பதிலை சொல்லிக்கிட்டு ... இதே மூதேவி அங்கே போய் சூப்பர் தலன்னு இன்ன்ப்ரு பேருல கமெண்ட் போடும் :-))
இப்படிப்பட்ட கமெண்ட் எல்லாம் ரொம்ப ஓவர். ரொம்பவே நல்லா இருக்குது உங்க வரவேற்பு........

perumal karur said...

யண்ணோவ் !! வவ்வால் அண்ணோவ் ,

நாஞ் சொன்னது ’’’உங்கள எனக்கு யாரு எவருண்ணு தெரியாதுன்னு’’ தான்.

நான் ஒன்னும் ஜெயலலிதா மகன் கிடையாது !! எல்லொருக்கும் தெரிஞ்சிருக்க !! :-)

நா ஒரு சாதரண வாசகன் மட்டும் தாங்ணோவ்!!

நா மொபைலில் வாசிக்கலைங்ணா... கம்ப்பூட்டர்லதாங்ணா வாசிக்கறேன்.

பேக் ரவுண்ட் கலர் இப்படி இருக்கறதால கண்ணுக்கு ப்ளீசிங் கா இல்லங்ணா.. அதனால அப்படி சொன்னேங்ணா...

அதுக்கு மேல உங்க இஷ்ட்டங்ணோவ்!! :-)