Monday, December 31, 2012

FDI IN RETAIL MARKET-2:வர்த்தகமும் நுகர்வோர் நலனும்.



(ஹி...ஹி..பசுமை புரட்சிக்கு வழிகாட்டுறாங்களாம்)


இந்தியா பன்னெடுங்காலமாக விவசாயத்தினையே முதன்மை தொழிலாக கொண்ட நாடாக விளங்குவதால் ,இந்திய பொருளாதாரதினை விவசாயப்பொருளாதாரம் என்றே பொதுவாக அழைக்கப்படுகின்றது.  21  ஆம் நூற்றாண்டில் நவீன தொழில்நுட்ப வளர்ச்சிகள், தொழில் துறை வளர்ச்சி ஆகியன பெருகி உள்நாட்டு மொத்த  உற்பத்தியில் விவசாயத்தின் பங்கு கணிஅசமாக குறைந்தாலும் விவசாயம் மற்றும் விவசாயம் சார் தொழில்களே பெரும்பான்மை மக்களுக்கு வேலை வாய்ப்பினை அளிக்கின்றது. மேலும் விவசாய உற்பத்தியானது பல தொழில்களுக்கும் மூலப்பொருட்களை அளிப்பதாலும், உலகின் இரண்டாவது பெரிய மக்கள் தொகைக்கு உணவினை அளிக்கும் மாபெரும் பொறுப்பு வகிப்பதாலும் இந்நவீனக்காலத்திலும் இந்தியாவுக்கு வேளாண்மை மிக இன்றியமையாத ஒரு தொழிலாகும்.

வேளாண் உற்பத்தியும், அதனை நுகர்வோருக்கு கொண்டு சென்று சேர்க்கும் சில்லரை வர்த்தகமும் இந்திய பொருளாதாரத்தில் மிக முக்கியமான இடத்தினை வகிக்கிறது. 

"நிலம் -உற்பத்தி- வணிகம்- நுகர்வோர் "

என்ற "உற்பத்தி -விநியோக" சங்கிலித்தொடர் சிறப்பாக இயங்கினால் ஒழிய மிகப்பெரும் மக்கள் தொகைக்கொண்ட ஒரு தேசத்தில் அனைவரின் உணவுசார் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது.

ஆனால் பன்னெடுங்காலமாக இச்சங்கிலி தொடர் அமைப்பு எவ்வித முறைமைப்பாட்டின் கீழும் அமையாமல் தன்னிச்சையான உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துதலாகவே இயங்கிவருகின்றது.  இதனால் உற்பத்தி விரயம் , நுகர்வோருக்கு பண விரயம் என பல குறைபாடுகள் இந்திய நுகர்வு சந்தையில் வேருன்றியுள்ளது,.

இக்குறைப்பாடுகள் விரைவில் களையப்பட்டு , சீரான முறையிலும் ,மலிவாகவும் உற்பத்தி நுகர்வோருக்கு விநியோகிக்கப்படவில்லை எனில் பெருகி வரும் மக்கள் தொகைக்கு வருங்காலத்தில் கட்டுப்படியாகும் விலையில் ,முழுமையாக உணவுப்பொருட்களை அளிக்க முடியாத சூழல் ஏற்படும்.

இதனால் உற்பத்தி உபரியாக இருந்தாலும் அதீத உணவுப்பொருள் பணவீக்கம் ஏற்பட்டு மக்களால் வாங்க முடியாத சூழல் ஏற்படும்.கண்ணுக்கெதிரே உணவு இருந்தும் ,வாங்கி நுகர முடியாத சூழலுக்கு நலிவுற்ற பொருளாதார பிரிவினர் தள்ளப்படுவார்கள்.

இந்தியாவின் மொத்த விளை நிலம் என்பதற்கு எல்லையுண்டு, அதன் உற்பத்தி திறனுக்கும் எல்லையுண்டு, எனவே உற்பத்திக்கும் தேவைக்குமான இடைவெளி பெருகாமல் ,விரயம் குறைத்து நுகர்வோருக்கு உணவுப்பொருட்களை வழங்க சிறப்பான கொள்முதல் மற்றும் முறைப்படுத்தப்பட்ட சில்லறை வர்த்தக அமைப்பு தேவையான ஒன்றாகும்.
---------------------------------


இந்திய விவசாயம்&உற்பத்தி ஒரு பார்வை:

விவசாய உற்பத்தி படம்:1


மேற்கண்ட படத்தின் மூலம் அடிப்படையான உற்பத்தி தகவல்களை அறியலாம்.
மேலும்,

மொத்த உணவு தானிய உற்பத்தி= 257 மில்லியன் டன்கள்.

மொத்த காய்கறி&பழங்கள் உற்பத்தி= 150 மில்லியன் டன்கள்.

இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் விவசாயத்தின் பங்கு சுமார் 17%

விவசாயத்தில் ஈடுபடும் மக்கள் தொகை= 64%

விவசாய வேலை வாய்ப்பு= 58.5%

அடிப்படையாக புரிந்துக்கொள்ள இப்பொழுது இத்தகவல்களே போதுமானது ,மேற்கொண்டு சில குறிப்பிட்ட அத்தியாவசியமான உணவுப்பொருட்கள் உற்பத்தி அதன் சந்தை படுத்தல்,விலைவாசி நிலவரம் ஆகியவற்றை பதிவினுள் காணலாம்.

---------------
உணவு உற்பத்தி மீதான அழுத்தங்கள்:




விவசாய உற்பத்தியினை பாதிக்கும் சில பிரதான காரணிகளை காணலாம்.

# இடு பொருட்களான ,விதை,உரம், பூச்சி மருந்து,நீர்ப்பாசன  செலவீனங்கள் அதிகரித்து வருதல்.

# விளைப்பொருட்களுக்கு செலவீனத்துக்கு ஏற்ற விலை கிடைக்காமை.

# அதிகரித்து ஆட்கூலி மற்றும் ஆட்கள் தட்டுப்பாடு.

இவை மூன்றும் உணவுப்பொருள் உற்பத்தியில் மீது எதிர்விளைவுகளை உருவாக்குவதில் மிக முக்கியமான பங்கு வகிக்கின்றன.

இவை அல்லாமல்,

# சீரற்ற பருவ மழை ,மற்றும் மழை பொய்த்தல்- வறட்சி.

# நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருதல்.

# தரமான விதைகளுக்கு தட்டுப்பாடு.

# அதிகப்படியான உரம் மற்றும் வேதியல் பூச்சிக்கொல்லி பயன்ப்பாட்டால் நில வளம் குன்றுதல்(leaching of fertility)

# பூச்சி தாக்குதல் மற்றும் நோய் தாக்குதல் அதிகரித்தல் மற்றும் ஒரே பயிரை தொடர்ந்து பயிரிடுவதால் எதிர்ப்பு தன்மை மற்றும் மண்ணில் ஊட்டச்சத்து குறைப்பாடு ஏற்படுதல்(Depletion of nutrients)

# தொழிற்வளர்ச்சி மற்றும் நகர்ப்புற விரிவாக்கத்தினால் விளை நிலப்பரப்பு சுருங்கி வருதல்.

# மொத்த சாகுபடி பரப்பு குறைதல் மற்றும் தரிசாக நிலங்கள் விடப்படுதல்.

#விவசாயம் தவிர மற்றப்பயன்ப்பாட்டிற்கு, கட்டுமானங்களுக்கு என நிலங்களை பயன்ப்படுத்தும் போக்கு அதிகரித்து வருதல்.

#உலக சராசரி உற்பத்தி திறனுடன் ஒப்பிடுகையில்,நில வளம் குன்றி வருவதால் சராசரி உற்பத்தி திறன் குறைந்து வருதல்.

# நீர், பருவநிலை மாற்றம் , உரவிலை உயர்வு,ஆட் தட்டுப்பாட்டால்,ஒரு ஆண்டில் பயிரிடும் சாகுபடிகளின் எண்ணிக்கை , குறைந்து வருதல்.

உ.ம்: மூன்று போக சாகுபடி செய்த காலம் போய் இரண்டாகி ,தற்போது ஒரே சாகுபடி மட்டும் பல இடங்களில் செய்யப்படுகிறது.

# சிறிய அளவிலான விளை நிலங்கள் அதிகம் இதனால் பாதகமான சூழல் ஏற்படுகையில்  விவசாயிகளை அதிகம் பாதிக்கிறது.

--------------------------

பண்ணை அளவு(Farm size)

இந்தியாவில் சிறிய மற்றும் குறு நில விவசாயிகளின் எண்ணிக்கை சுமார் 83% ஆகும், ஆனால் இவர்கள் மொத்தமாக கொண்டுள்ள நிலப்பரப்பு சுமார் 40% க்கும் கீழ் ஆகும், அதே சமயத்தில் 17% பெரு விவசாயிகள் 60 சத நிலப்பரப்பினை உரிமைக்கொண்டுள்ளார்கள்.

விளைநில பரப்பளவின் படி இந்தியாவில் உள்ள விவசாயிகளின் நிலவரம்.

சிறு விவசாயி - ஒரு ஹெக்டேருக்கும் குறைவான நிலம்.

குறு விவசாயி - 1-2 ஹெக்டேர்.

நடுத்தர குறுவிவசாயி- 2-4 ஹெக்டேர்.

நடுத்தர விவசாயி- 4-10 ஹெக்டேர்.

பெரு விவசாயி- 10 ஹெக்டேருக்கும் அதிகமான நிலம்.

மாநில வாரியாக நிலப்பரப்பின் அடிப்படையில்  பண்ணைகள் மற்றும் விவசாயிகளின் எண்ணிக்கை.

படம்.2



இந்தியா சுதந்திரமடைந்த காலக்கட்டத்தில் பெரும்பான்மையான நிலம் சிறுபான்மை நிலச்சுவாந்தார்கள் வசமே இருந்தது, இதனால் உணவு உற்பத்தி மற்றும் விவசாய வேலை வாய்ப்பினை எதேச்சதிகாரப்போக்குடன் கட்டுப்படுத்தியதாலே , உணவுப்பஞ்சம் உருவானது எனலாம்.


ஏன் எனில் பெரும் நிலஞ்சுவாந்தார்கள் எவ்வளவு உற்பத்தி செய்தாலும் உடனே விற்கவேண்டிய தேவையற்றவர்கள் எனவே உணவுப்பொருட்கள் சீராக தொடர்ந்து  சந்தைக்கு  வருவதில்லை, மேலும் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நிலம் வைத்து இருப்பதால் பல சமயம் பாதிக்கு மேல் தரிசாக போடவும் செய்வார்கள் எனவே உற்பத்தி சீராக இல்லாமல் உணவுக்கு தட்டுப்பாடு உருவானது.

1952 இல் இருந்து உணவுப்பொருள் உற்பத்தியை காட்டும் படம்.

படம்-3


படத்தில்  1952 இல் இருந்து 2010 வரையிலான உணவு உற்பத்தி வளர்ச்சி விகிதத்தினை காணலாம். 1952 இல் உணவுப்பஞ்சம் இருந்த சூழலிலும் உற்பத்தியானது சராசரி உற்பத்தி விகிதத்துக்கு மேல் இருப்பதை காணலாம், அப்படி எனில் எப்படி உணவு பஞ்சம் ஏற்பட்டது, ஏன் அரசு உணவு இறக்குமதி செய்யும் சூழல் எல்லாம் அப்போது உருவானது என்றால் மேலே நாம் பார்த்த பெரும் நிலஞ்சுவாந்தார்களின் ஆதிக்கமே என்பதை அறியலாம்.

உற்பத்தி திறன் வளர்ச்சி:

படம்-4;



அக்காலத்தில் உற்பத்தி திறன் குறைவாக இருந்து தற்போது அதிகரித்து இருப்பதாக தோன்றுவதை வைத்து, இதெல்லாம் பசுமை புரட்சியின் விளைவு என சில அறிவு ஜீவிகள் சொல்லக்கூடும் ஆனால் இது முழு உண்மையல்ல, அக்காலத்தில் நிறைய விவசாய நிலப்பரப்பு இருந்தாலும்  முழுவதுமாக விவசாயம் செய்யப்படவில்லை, எனவே மொத்த உற்பத்தியினை ,மொத்த விளை நிலப்பரப்பால் வகுத்து இருப்பார்கள் எனவே உற்பத்தி திறன் குறைவாக தெரிகிறது.

அக்கால விளைநிலங்கள் இயற்கையான ஊட்டச்சத்துடன் செழிப்பாகவே இருந்தன , நமது பாரம்பரிய விவசாயத்தினை  விவசாயம் செய்யப்படாத  நிலங்களிலும் செயல் படுத்தி சாகுபடி பரப்பினை அதிகரித்து இருந்தாலே நமக்கு தேவைக்கு ஏற்ப உணவு உற்பத்தியாகி இருக்கும்.

ஆனால் பெருமளவு நிலங்கள் மிக சிறும்பான்மை நிலஞ்சுவாந்தார்களின் வசமும் ,பெரும்பான்மை விவசாய உழைப்பாளர்கள் நிலமற்றவர்களாவும் இருந்தமையால் இது சாத்தியமில்லாமல் போயிற்று.

பின்னர் நிலச்சீர்திருத்த சட்டத்தின் படி நில உச்சவரம்பு கொண்டுவரப்பட்டு நிலம் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது, மேலும் வினோபாவே போன்றவர்களின் பூமிதான இயக்கத்தால் பெரும்பாலோருக்கு நிலம் பகிரப்பட்டது.

இதனால் உழைக்கும் மக்களிடம் நிலம் சென்றடைந்தது ,உற்பத்தி அதிகரித்து அனைவருக்கும் உணவு கிடைக்கும் வகையில் தன்னிறைவு பெற்றோம்.

அக்காலத்தில் நிலம் பகிரப்பெற்று சிறு விவசாயிகள் உருவானது ,உணவு உற்பத்திக்கு உதவியது,ஆனால் தற்காலத்தில் விவசாயத்துக்கு பாதகமான சூழல் உருவாகும் நிலையில் அச்சிறு விவசாயிகளே முதலில் பாதிக்கப்படுகிறார்கள்,ஏன் எனில் அவர்களுக்கு பெரும் நிதி பின்புலம் இருப்பதில்லை,எனவே விவசாயத்தினை மேம்படுத்தி சோதனைகளை எதிர்க்கொள்ள முடிவதில்லை, எனவே விவசாயம் நட்டமாகும் சூழலில் முதல் ஆளாக விவசாய தொழிலை விட்டு வெளியேறி விவசாய கூலிகளாகவோ அல்லது வேலை வாய்ப்பினை தேடி நகர்ப்புறங்களுக்கு இடம் பெயரவோ செய்கிறார்கள்.

விவசாய உற்பத்தியும், உள்நாட்டு மொத்த உற்பத்தியில் அதன் பங்களிப்பும் ஆண்டு தோறும் குறைந்து வருவதை காட்டும் வரைபடம்.



இப்போக்கு தொடருமானால் மீண்டும் உணவு உற்பத்தியில் தொய்வு ஏற்பட்டு ,பெருகி வரும் மக்கள் தொகையின் உணவு தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலை உருவாகும், விலைவாசி மிக கடுமையாக உயரும். எனவே சிறு விவசாயிகளும் உணவு உற்பத்தியில் தொடர்ந்து ஈடுபடும் வகையில் விவசாயம் லாபகரமானதாக இருக்க வேண்டும் அதற்கு நியாயமான கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.
------------------------

விலை நிர்ணய கொள்கை:


இந்திய விவசாய விளைப்பொருள் கொள்முதல் சந்தையானது,"De centralised Regulated Procurement Market" வகையாகும். அதாவது அரசும் ,தனியாரும் கொள்முதல் செய்யலாம், ஆனால் அரசு கொள்கை முடிவுகளையும், குறைந்த பட்ச விலையும் தீர்மானிக்கும்.

உலக அளவில் விவசாயக்கொள்முதல் மற்றும் விலை நிர்ணயம் ஆகியவை "Market linked,Free Float Market"  ஆகவே இயங்குகின்றன. 

தற்சமயம் இவற்றை மட்டும் கவனத்தில் வைத்துக்கொண்டு கொள்முதல் விவகாரங்களை படியுங்கள், அடுத்தப்பகுதியில் விரிவாக காணலாம்.

உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைய விவசாய உற்பத்தியை பெருக்க வேண்டும், அதற்கு விவசாயிகளின் உற்பத்தியை பெருமளவு கொள்முதல் செய்ய வாய்ப்பு உருவாக்க வேண்டும் ,எனவே அரசே நேரடி கொள்முதல் செய்ய திட்டமிட்டு , விவசாய உற்பத்திப்பொருள்களுக்கு என குறைந்த பட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்து மத்தியில் இந்திய உணவுக்கழகம் மூலமும் ,மாநிலத்தில் சம்பந்தப்பட்ட மாநில நுகர்பொருள் துறை மூலமும் கொள்முதல் செய்ய திட்டம் வகுக்கப்பட்டது.

ஆரம்பகாலத்தில் இடு பொருள், கூலி, முதலீடு ஆகியவை குறைவாக தேவைப்பட்டது ஆனால் பின்னர் விவசாய செலவுகள் கூடிய போது அதே விகிதத்தில் கொள்முதல் விலை உயர்த்தப்படவில்லை, அதுவே இன்று விவசாயிகளின் தலையாய பிரச்சினையாக உள்ளது.

மொத்த உற்பத்தியில் சுமார் 20-25 சதவீதம் மட்டுமே அரசால் கொள்முதல் செய்யப்படுகிறது எஞ்சியவை வெளிமார்க்கெட்டில் வியாபாரிகளால் தான் வாங்கப்படுகிறது ஆனால் அவர்களோ அரசு நிர்ணயத்த குறைந்த பட்ச ஆதரவு விலைக்கு மேல் வாங்குவதில்லை என கூட்டணி அமைத்து விவசாயிகளை நசுக்குகிறார்கள்.

உலக சந்தையில் நெல்லின் விலையை விட இந்தியாவில் அரசு நிர்ணய விலை பல மடங்கு குறைவாகவே எப்பொழுதும் உள்ளது.

அதனை விளக்கும் வரைப்படம்.



இந்தியாவில் 26 பயிர்கள் குறைந்த பட்ச ஆதரவு திட்டத்தின் கீழ் உள்ளன, அவற்றின் விலையை அரசே ஒவ்வொரு ஆண்டும் விவசாய பருவத்தின் போதும் ' Commission for Agriculture Costs and Prices (CACP)" பரிந்துரையின் அடிப்படையில் அறிவிக்கும்.


பயிர்களும் அவற்றின் ஆதரவு விலையும்.

படம்-

கடந்த காலங்களில் மொத்த விளைச்சலில் அரசு கொள்முதல் செய்த நெல் மற்றும் கோதுமையின் அளவினைக்காட்டும் படம்.

படம்-1: நெல்.


மாநில வாரியாக நெல் கொள்முதல்.(2010)


ஆந்திராவில் மாநில அரசின் கொள்முதல் வெறும் 2.0 லட்சம் டன்கள் தான், ஆனால் மத்திய அரசின் கொள்முதல் 71 லட்சம் டன்கள்.

தமிழ்நாட்டில் மாநில அரசு மட்டுமே கொள்முதல் செய்கிறது, 2010 இல் 12.16 லட்சம் டன்கள், 2011 இல் 23 லட்சம் டன்கள் என செய்திகள் உள்ளது.

குஜராத்தில் மத்திய,.மாநில அரசுகள்  கொள்முதல் செய்வதே இல்லை., அங்கெல்லாம் தனியார் ராஜ்ஜியம் தான், இதனால் விவசாயிகள் தீவிரமாக பாதிக்கப்படுகிறார்கள்.

பஞ்சாப்பில் ,மத்திய,மாநில அரசுகள் போட்டிப்போட்டுக்கொண்டு கொள்முதல் செய்வதால்,தனியாருக்கு தானியம் கிடைப்பதில் சிக்கல்,எனவே அரசின் குறைந்த பட்ச விலையை விட கூடுதல் விலை கொடுத்து வாங்குவது வழக்கம்.

படம்-2:கோதுமை:


கோதுமை கொள்முதலில் ,பஞ்சாப்,ஹரியானா,உ.பி,எம்.பி ஆகிய நான்கு மாநிலங்களே அதிகம் பங்களிக்கின்றன.


இதில் பஞ்சாப்,ஹரியானாவில் மட்டும் நாட்டின் தேவையில் 60 சதம் கொள்முதல் செய்யப்படுகிறது.

ஆனால் பஞ்சாப்,ஹரியான இரண்டு மாநிலங்களை விட தனியே சுமார் 28.8 மிலியன் டன் கோதுமை உற்பத்தி செய்து ,நாட்டில் அதிகம் கோதுமை உற்பத்தி செய்யும் மாநிலமான உ.பி யில் மிக சிறிய அளவே அரசால் கொள்முதல் செய்யப்படுவதால், குறைந்த பட்ச விலையை விட குறைவான விலைக்கு தனியாரிடம் உ.பி விவசாயிகள் விற்கிறார்கள்.

மகாராஷ்ட்ராவில் கொள்முதலே செய்வதில்லை,எனவே தனியார் வைத்தது தான் விலை,இதனாலேயே மகாராஷ்ட்ராவில் விவசாயிகள் தற்கொலை அதிகம்.

மத்திய அரசு கொள்முதல் செய்வதன் மூலம் ஒரு மாநில அரசின் கொள்முதல் நிதி சுமையை குறைத்து,விவசாயிகளுக்கு உதவ முடியும்,ஆனால் சில அரசியல் காரணங்களுக்காக சில மாநிலங்களை புறக்கணிப்பதும், சில மாநிலங்களில் வியாபாரிகளின் ரகசிய நிர்பந்தங்களுக்காகவும் அடக்கி வாசிப்பதும் நடக்கிறது எனலாம்.

இந்த ஆண்டு மொத்த தானிய உற்பத்தி 257 மில்லியன் டன்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.


இவற்றில் நெல் மட்டும் சுமார் 99 மில்லியன் டன்களும், கோதுமை 93 மில்லியன் டன்கள் எனவும் சொல்லப்படுகிறது.


ஆனால் அரசு கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ள அளவு,


 நெல்லுக்கு 35 மில்லியன் டன்களும், 

கோதுமைக்கு 28 மில்லியன் டன்களும் மட்டுமே.


எஞ்சியவை அனைத்தும் தனியார் வசம் சென்று விடும் ஆனால் அவர்களோ அரசு விலைக்கு மேல் ஒரு ரூபா கொடுக்கவும் யோசிப்பார்கள். அறுவடை முடிந்து ஆஃப் சீசனில் விற்றால் கூடுதல் விலை விவசாயிக்கு கிடைக்கும் ,ஆனால் அப்படி செய்ய பல விவசாயிகளால் முடியாது, சுமார் 85% விவசாயிகள் சிறு மற்றும் குறு விவசாயிகளே, எனவே உடனே கையில் காசு பார்த்தால் தான் கடனை அடைத்துவிட்டு அடுத்த சாகுபடிக்கே தயார் ஆக முடியும்.


விவசாயிகளின் சூழலையும் ,அரசின் குறைவான விலை நிர்ணயக்கொள்கையையும் வியாபாரிகள் சாதகமாக பயன்ப்படுத்திக்கொண்டு , அறுவடையின் போது குறைவான விலையில் வாங்கி அடுக்கிவிட்டு, பின்னர் மக்களுக்கு அதிகம் தேவைப்படும் போது உயர்ந்த விலையில் விற்று பல மடங்கு லாபம் சம்பாதிக்கிறார்கள்.


உபரி தானியத்தினை ஏற்றுமதி செய்யலாம் என பெர்மிட் கொடுக்கும் போதும் அதன் பலன் வியாபாரிகளுக்கே செல்கிறது. இந்திய அரிசி மொத்த கொள்முதல் விலையில் 250 டாலர்களே, ஆனால் உலக சந்தையில் எப்பொழுதும் 400-500 டாலர்கள் ஆகும், எனவே எப்பொழுதெல்லாம் அரசு உபரி ஏற்றுமதி செய்ய அனுமதிக்கிறதோ அப்பொழுதெல்லாம் வியாபாரிகளுக்கு இரட்டிப்பு லாபம்.


அரிசி ஏற்றுமதி மற்றும் சர்வதேச விலை:

படம்.

தானிய வகைகளுக்கு ஏற்றுமதி அனுமதி எப்பொழுதும் கொடுக்கப்படுவதில்லை, அவ்வப்பொழுது தடை செய்துவிடுவார்கள், அவ்வாறு இல்லாமல் வழக்கமான ஒன்றாக ஏற்றுமதிக்கு அனுமதி கொடுக்கப்படுமானால் சர்வதேச விலை நிர்ணயம் இந்திய அரிசிக்கும் நிர்ணயிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் நெல் கொள்முதல் செய்யப்பட்டால் விவசாயிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும்.


அவ்வாறு செய்வதில் உள்ள சிக்கல் என்னவெனில் டாலருக்கு ஆசைப்படும் வியாபாரிகள் மிக அதிக அளவில் ஏற்றுமதி செய்து , ஒரே அடியாக உணவுப்பஞ்சத்துக்கு வழிக்காட்டிவிடுவார்கள், ஆனால் அரசு சீரான முறையில் தொடர்ந்து ஏற்றுமதிக்கு அனுமதிக்கொடுத்துக்கொண்டே , ஏற்றுமதி அளவையும் கண்காணித்து வரலாம்,இதனால் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்க வாய்ப்பு உருவாகும். அரசு ஏனோ அப்படி செய்யாமல் வச்சா குடுமி ,அடிச்சா மொட்டை என ஒரே அடியாக ஏற்றுமதிக்கு தடை அல்லது உபரி இருப்பதை வைத்து குறிப்பிட்ட அளவுக்கு ஏற்றுமதி பெர்மிட் என கொடுக்கிறது. இம்முறையினால் கிடைக்கும் கூடுதல் லாபத்தில் விவசாயிக்கு  நயாபைசா பங்கு இல்லை என்பதே பெருங்கொடுமை.


இந்த பெர்மிட் முறை ஏற்றுமதியில் ஏன் அரசியல்வாதிகள் ஆர்வம் காட்டுகிறார்கள் என்றால் ஒவ்வொரு முறை பெர்மிட் கொடுக்கவும் "கட்டிங்க்" கிடைக்கும், நிரந்தரமாக ஏற்றுமதி உரிமம் கொடுத்தால் அப்படி கட்டிங் அடிக்க முடியாது.


MSP TREND:


இப்போது விவசாயிகளுக்கு கிடைக்கும் விலையே போதுமானது ,சிக்கனமாக விவசாயம் செய்தால் லாபகரமானது, நெல் கொள்முதல் விலையை ஏற்றினால் , சந்தையில் அரிசி விலை ஏறிவிடும் என அரசு எந்திரம் போலவே சில அறிஞர்கள் !!??சிந்திக்க கூடும்.

கொள்முதல் விலையில் உள்ள அநியாயத்தினை புரிந்து கொள்ள ,கொள்முதல் விலை வளர்ச்சி விகிதத்தினை மற்ற பொருட்களின் விலை உயர்வு விகிதத்துடன் ஒப்பிட்டாலே எளிதில் புரிந்து கொள்ள முடியும்.

கடந்த பத்தாண்டு கால நெல் கொள்முதல் விலை விவரம்.



மற்ற பயிர்களின் கொள்முதல் விலை விவரம் 5 ஆண்டுகளுக்கு




கி.பி.1998-99 இல் ஒரு குவிண்டால் நெல் (100 கிலோ மூட்டை) விலை =470 ரூ ஆகும்.

அதற்கு முந்தைய கால விலை விவரத்தினை தனியாக தேடிப்பார்த்ததில் ,

கி.பி.1970 இல் ஒரு மூட்டை(100 கி.கி) விலை = 53 ரூபாய் ஆகும்.

தற்போது கி.பி.  2012 இல் , விலை 1280 ரூ ஆகும்(2013 க்கு தான் 1350 ரூ)

நெல்லுடன் ஒப்பிட ,தங்கத்தினை எடுத்துக்கொள்வோம்,



(ஜோதிஜியின்"G + 'இல் இருந்து சுடப்பட்ட படம்,நன்றி!)

அதில் பார்த்தால் ,

கி.பி. 1970 இல் ஒரு சவரன் தங்கம் =147 ரூபாய்.

அதாவது சுமார் இரண்டரை மூட்டை நெல்லை விற்று ஒரு சவரன் தங்கத்தினை கி.பி  1970இல் வாங்க முடியும்.

ஒரு ஏக்கரில் மிக குறைந்த பட்சமாக 1,500 கிலோ நெல் விளைகிறது எனக்கொண்டாலும், 

1500/250=6 சவரன் தங்கம் .

பொன்னு விளையிற பூமின்னு சும்மாவா சொன்னாங்க.

இன்றைக்கு தங்கத்தின் விலை என்ன?

ஒரு ஏக்கர் நெல் விளைச்சலை கொண்டு ஆறு சவரன் தங்கம் வாங்க முடியுமா? ஒரு ஏக்கர் விளைச்சலை முழுசாக விற்றால் கொஞ்சம் தக்கி முக்கி ஒரு சவரன் வாங்கலாம் என்றாலும் மேற்கொண்டு வாட், செய்கூலி,சேதாரத்துக்கு பணம் கட்ட கடன் வாங்க வாங்க வேண்டும் :-))


உரமானியமும்,உண்மை நிலவரமும்:


உரம்:

பசுமை புரட்சிகாலத்திற்கு பின் இந்தியாவில் இரசாயன உரங்களின் பயன்ப்பாடு ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது, உற்பத்திப்பொருளின் விலை அதிகரிப்பு விகிதத்தினை விட உரங்களின் விலை வேகமாக அதிகரித்து வருகின்றது, இதனால் விவசாயத்தின் லாப விகிதம் சரிவை சந்திக்கின்றது.

உரங்களுக்கு தான் அரசு மானியம் தருகின்றதே பின்னரும் ஏன் விலை உயர்கின்றது என தர்க்க ரீதியாக ஒரு கேள்வி எழலாம், ஆனால் அதன் பின்னால் உள்ள ராசதந்திரம் அறிந்தால் அப்படி சொல்ல மாட்டீர்கள். 1992 இல் பொருளாதார சீர்திருத்தம் என்ற பெயரில் யூரியா தவிர மற்ற உரங்களின் மீதான அரசின் கட்டுப்பாட்டினை தளர்த்திவிட்டார்கள், உரங்களின் விலையை உர நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ளலாம் என சுதந்திரம் வழங்கப்பட்டது, 2002 வரையில் அரசின் பரிந்துரையையும் பரிசீலித்தே விலை ஏற்றும் நிலை இருந்தது, தற்சமயம் அதுவும் நீக்கப்பட்டு பூரண விலை சுதந்திரம் வழங்கப்பட்டுவிட்டது.

ஆனாலும் அரசின் மாநியம் நேரடியாக உர நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டே வருகிறது,விவசாயிகள் அம்மானிய பலனை அடைய வேண்டும் எனில் உரங்களை வாங்கியாக வேண்டும்.

இப்போது அரசின் நிதி சுமையை குறைக்க மாநிய அளவையும் குறைத்துக்கொண்டு வருகிறார்கள், எனவே இன்னும் உரங்களின் விலை கூட வாய்ப்புள்ளது.

இந்திய உரப்பயன்பாடு அளவு:

படம்-




ஊட்டச்சத்து அடிப்படையில் ஒரு கிலோவுக்கு அரசு அளிக்கும் மாநியம்.

படம்:


Pottash and Phosphate Fertilizer subsidy per Ton:

படம்-


மேற்கண்ட விவரங்களின் மூலம் ஒவ்வொரு டன்னுக்கும் கணிசமான மானியம் அளிக்கப்படுகிறது ,இதனால் தான் நம் நாட்டில் உரங்களின் விலை குறைவாக இருக்கிறது,விவசாயிகளுக்கு நல்ல பலன் கிடைப்பதாக சிலர் நினைக்கலாம்.உண்மை அதுவல்ல.

மாநியத்துக்கு பின்னர் , பொட்டாஷ் மற்றும் பாஸ்பேட் உரங்களின் விலை ஒரு டன் சுமார் 24,000 ரூபாய் என நம் நாட்டில் விற்கப்படுகிறது,


யூரியா-5,360 ரூ/டன்

தகவல்:

http://profit.ndtv.com/news/economy/article-cabinet-hikes-urea-based-fertilizer-price-by-rs-50-per-tonne-311935

யூரியா 90 சதவீதத்திற்கும் மேல் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுவதால் அதனை தவிர்த்துவிட்டு ,அதிகம் இறக்குமதி  செய்யப்படும் பொட்டாஷ், பாஸ்பேட் உரங்களை அலசுவோம்.

பொட்டாஷ் மற்றும் பாஸ்பேட்டின்  சர்வதேச விலை விவரங்கள் மற்றும் மானியம் ,சந்தை விலை நிலவரங்களை காண்போம்,


பொட்டாஷ் உரம்:

ஒரு டன் பொட்டாஷ் - 425 டாலர்/டன்.

இந்திய ரூபாயில் -425*50=21,250 ரூ மட்டுமே,

இந்திய விற்பனை விலையை விட சர்வதேச சந்தையில் விலை குறைவாகவே உள்ளது ,ஆனால் அதற்கு டன்னுக்கு மானியம் 14,777 ரூபாய்!

21,250 ரூபாய் மதிப்புள்ள பொட்டாஷ் உரத்தினை இறக்குமதி செய்து ரூ 24,000 என விலை வைத்து விற்க அம்மானியத்தொகையை அரசு அளிக்கிறது.

இதன்  மூல உர நிறுவனங்களுக்கு கிடைக்கும் நிகர வருவாய்=

14,777+24,000-21,250=17,527 ரூ.

சதவீத அடிப்படையில் வருவாய்=17,527/21,250*100=82.48%

போக்குவரத்து செலவு, கையாளும் செலவுகள் இருக்கும் தான் ஆனால் இப்படி 82.48 சதவீதம் அளவுக்கா இருக்கும்.


பாஸ்பேட் உரம்:

பாஸ்பேட்-524.08 டாலர்/டன்.

இந்திய ரூபாயில்,

524.08*50=27,252.16 ரூபாய்கள்.

இந்திய விற்பனை விலை ரூ =24,000

மாநியம்=18,474ரூ

நிகர வருவாய்=24,000+18,474-27,252.16=15,221.84 ரூ.

சதவீத அடிப்படையில்,=15,221.84/27,252*100=55.85%

இந்தியா 100 சதவீதம் பொட்டாஷ் உரங்களையும், 90 சதவீதம் பாஸ்பேட் உரங்களையும் இறக்குமதி செய்கிறது.

இவ்விரண்டு உரங்களையும் பெருமளவில் இறக்குமதி செய்து அதிக மானியம் கொடுக்கப்பட்டும் குறைவான விலையில் விவசாயிகளுக்கு உரங்கள் கிடைக்கவில்லை என்பதை மேற்கண்ட கணக்குகள் மூலம் எளிதாக புரிந்துக்கொண்டிருக்கலாம்.

அரசு அளிக்கும் மாநியம் அனைத்தும் உர நிறுவனங்களின் லாப விகிதத்தினை அதிகரிக்கவே பயன்ப்படுகிறது.

இத்தனைக்கும் அமெரிக்கா வளைகுடா நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து ஒரு டன்னுக்கு 50 டாலர்கள் விலை வித்தியாசத்தில் தான்  உள்நாட்டில் விவசாயிகளுக்கு விற்கிறது. அங்கு உர மானியம் எல்லாம் இல்லை, சர்வதேச சந்தை நிலவரப்படி விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.விவசாயிகளுக்கான மாநியம் அவர்களின் சாகுபடி பரப்பு மற்றும் உற்பத்திக்கு ஏற்ப நேரடையாக கொடுக்கப்படுகிறது.

உணவுக்கான மாநியத்தினை நேரடியாக மக்களுக்கு கொடுக்கிறோம் என சொல்லிவிட்டு சொற்ப தொகையினை மக்களுக்கு அளித்துவிட்டு பொது விநியோக திட்டத்தினை ஊத்தி மூட திட்டம் போடும் பொருளாதார புலி மன்னு மோகன் அரசு ஏன் அதே போல விவசாயிகளுக்கு நேரடியாக மானியம் அளிக்கும் திட்டத்தினை செயல்ப்படுத்தக்கூடாது?

அப்படி செயல்படுத்தினால் ,உரங்களின் விலை ஏறிவிடும் என்பார்கள் ஆனால் அது கட்டுக்கதை என்பதை பார்த்தோம் ,பின் ஏன் செய்ய வில்லை?,

மாநியம் நேரடியாக விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டுவிட்டால் , விவசாயிகள் உரங்களைப்பயன்ப்படுத்தாமலே விவசாயம் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள்,இதனால் உர நிறுவனங்களின் வியாபாரம் பாதிக்கப்படும் என்பதே உண்மையான காரணம் ஆகும்.


கடந்த கால மொத்த உர மாநிய நிலவரம்:

2001-02 = 12695.02 crore,

2008-09=  99494.71 crore

 2009-10=  64032.29 crore .

 2010-11 = 52840.73 crore


உர விலை நிலவரம்:


2000-01 இல் பாஸ்பேட் உரம் ஒரு டன் -8,900 ரூ.

பொட்டாஷ் ஒரு டன் - 4,255 ரூ.

ஒரு டன் நெல் விலை- 5,400 ரூ

ஆனால் இன்று

ஒரு டன் பாஸ்பேட் உரம் - 24,000 ரூ.

ஒரு டன் பொட்டாஷ் உரம் - 24,000 ரூ.

ஒரு டன் நெல்- 12,800 ரூ.

நெல் விலை உயர்வு வளர்ச்சியை விட உரங்களின் விலை உயர்வு பல மடங்கு என அறியலாம்.


எவ்வளவு மாநியம் அளித்தாலும் மலிவான விலையில் விவசாயிகளுக்கு உரங்கள் கிடைக்கப்போவதில்லை. விவசாயிகளும் கடனை வாங்கியாவது உரங்களை பயன்ப்படுத்துவதை நிறுத்தப்போவதில்லை.

விவசாய நில அளவுகளின் அடிப்படையில் உரப்பயன்பாட்டின் வளர்ச்சி விகிதம்.

படம்-


இப்புள்ளி விவரங்களின் மூலம் அறிய வருவது என்னவெனில், பெரு விவசாயிகளை விட சிறு விவசாயிகளே அதிகம் உரம் பயன்ப்படுத்துகின்றார்கள் என்பதை அறியலாம்.

காரணம் என்னவெனில் அவர்களிடம் உள்ள நிலப்பரப்பு சிறியது ,அதன் மூலம் கிடைக்கும் வருவாயை நம்பித்தான் அவர்களின் வாழ்க்கையே உள்ளது,எனவே அதிக உற்பத்தி கிடைக்க அனைத்து சாத்தியங்களையும் முயற்சி செய்கிறார்கள், என்ன முயன்றாலும் நிலத்தின் உற்பத்தி அதிகரித்து லாபம் வராத சூழலில் ,இடுப்பொருட்களுக்கு அதிகம் செலவிட்டு கடனுக்கு ஆளாகிறார்கள்.

அதே சமயம் பெரு விவசாயிகளிடம் நிலப்பரப்பு அதிகம் இருப்பதால் , குறைவான உரம் போட்டாலும் உற்பத்தியில் சிறிது குறைவதால் பெருமளவு வருவாய் பாதிப்பு உண்டாகாது ஏன் எனில் அவர்களின் ஒட்டு மொத்த உற்பத்தியின் அளவு மிக அதிகம் இருக்கும், மேலும் அவர்களுக்காக வாழ்வியல் தேவைகளை பூர்த்தி செய்ய முழுக்க நிலத்தின் வருமானத்தினையும் நம்பி இருப்பதில்லை எனவே விளைச்சலில் சிறிது குறைந்தாலும் கவலைப்படுவதில்லை.

இது வரை அலசியதன் மூலம் அறிய வருவது என்னவெனில்,

#விவசாய ஆட்கூலி, இடுபொருள் விலை உயர்வு, நீர் பாசன மேலாண்மை செலவுகள் அதிகரித்து ஒட்டுமொத்த விவசாய செலவுகள் கடுமையாக உயர்ந்துள்ளது.

#அரசு மானியங்களால் விவசாயிக்கு யாதொரு பயனும் இல்லை.

# அரசு அளிக்கும் குறைந்த பட்ச ஆதரவு விலை , விவசாய செலவீனங்களுக்கு ஏற்ப உயரவில்லை. மேலும் விளைப்பொருளின் விலையை ஒரு குறிப்பிட்ட அளவில் "FREEZ" செய்கிறது, அதற்கு மேல் சந்தையில் விலைக்கிடைக்கவிடாமல் வியாபாரிகள் செய்துவிடுகிறார்கள்.

# அரசு குறைவான அளவிலேயே கொள்முதல் செய்கிறது எனவே கிடைக்கும் குறைந்த பட்ச விலையும் அனைவருக்கும் கிடைப்பதில்லை, இதனால் முழுதாக விளைப்பொருட்களை விற்க முடியாமல் விவசாயிகள் நட்டமடைகிறார்கள்.

இது வரையில் இந்திய சந்தை விவசாய உற்பத்தியாளருக்கும் சாதகமான சூழலை உருவாக்கவில்லை என்பதை அலசினோம், இனி இந்திய சந்தை எவ்வாறு நுகர்வோருக்கும் சாதகமாக இல்லை என அலசுவோம்.

பதிவு ரொம்ப நீண்டுக்கொண்டே போவதாக உணர்பவர்கள், ஒரு சின்ன பிரேக் எடுத்துக்கொண்டு ஒரு கோப்பை கொட்டை வடிநீர் அருந்திவிட்டு புத்துணர்ச்சியுடன் மீண்டும் தொடரலாம் ....



மீண்டும் தொடர்வோம்.........

1
.
2
.
3
தொடர்கிறது.....

உற்பத்தி மற்றும் தேவை இடைவெளி:
(supply and demand gap:)

நமது உள்நாட்டு உணவு பொருள் உற்பத்தியின் நடப்பு நிலவரத்தினையும், நமக்கான தேவை மற்றும் பற்றாக்குறையினை பார்ப்போம், இதுவே உள்நாட்டு உணவுப்பொருள் விலை உயர்வு மற்றும் உணவுப்பொருள் பணவீக்கத்தினை தீர்மானிக்க காரணமாக அமைகின்றது.

அக்டோபர் ,2012 நிலவரம்:

நெல்- 99.5 மில்லியன் டன்கள்.

கோதுமை- 93.9 மில்லியன் டன்கள்.

பருப்பு வகைகள்- 16.0 மில்லியன் டன்கள்.

எண்ணை-8.3 மில்லியன் டன்கள்.

சர்க்கரை -24.0 மில்லியன் டன்கள்.

வெங்காயம் - 12.6 மில்லியன் டன்கள்.

உருளை- 44.83 மில்லியன் டன்கள்.

மேற் சொன்னவை படங்கள் மற்றும் பட்டியல் வடிவில்.

படம்-


ஏற்றுமதி,இறக்குமதி நிலவரம்:


உணவுப்பொருள் உற்பத்தி மற்றும் தேவை பட்டியல்.




நடப்பாண்டு நிலவரம்.



மேற்கண்ட விவரங்களில் இருந்து ,


உணவு தானியங்கள் ,சர்க்கரை, உருளை போன்றவை உபரியாக உள்ளன, எண்ணை, பருப்பு வகைகள், மற்றும் வெங்காயம் ஆகியவை மட்டுமே பற்றாக்குறையாக ,இறக்குமதி செய்ய வேண்டிய தேவையுள்ளது.

இதில் கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவெனில் பல உணவுப்பொருட்கள் அதிகம் உற்பத்தி ஆனாலும் சந்தைக்கு வராமல் அல்லது கொள்முதல் செய்யப்படாமல் , தேவையினை அதிகரித்து காட்டும் போக்கு இந்தியாவில் உண்டு, அதனை பின்னர் காணலாம்


பருப்பு உற்பத்தி(pulse production):

உலக அளவில் பருப்பு வகைகள் பயிரிடும் நிலப்பரப்பில் 75 சதவீதம் இந்தியாவில் தான் உள்ளது ஆனால் ஒட்டு மொத்த உற்பத்தியில் நாம் மிகவும் பின் தங்கியுள்ளோம், இதற்கு காரணம் சராசரி உற்பத்தி திறன் குறைவாக உள்ளதே ஆகும்.

ஒரு ஹெக்டேருக்கு 600 கி.கி என்பதே நமது உற்பத்தி திறனாக உள்ளது.

படம்-



உற்பத்தி திறன் குறைவாக இருக்க காரணம் ,பருப்பு வகைகள் மானாவரி சாகுபடி, ஊடுபயிர், Rice Fallow Pulse,ஆகிய முக்கியத்துவம் குறைந்த சாகுபடியாக இந்தியாவில் செய்யப்படுவதேயாகும்.

ஆண்டு வாரியாக பருப்பு வகை உற்பத்தி நிலவரம்.

படம்-




இதே நிலை தான் எண்ணை வித்து சாகுபடியிலும் , உலக அளவில் எண்ணை வித்து சாகுபடியில் 5 ஆவது இடம் ஆனால் எண்ணை உற்பத்தில் முதல் 10 இடங்கள் கூட இல்லை, ஆனால் நமது சமையல் எண்ணை நுகர்வு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, உலக அளவில் நுகர்வில் மூன்றாவது இடம், ஆண்டு சராசரி எண்ணை நுகர்வு 14.5 கி.கி.

நமது எண்ணை தேவையில் சுமார் 70% இறக்குமதி செய்தே பூர்த்தி செய்யப்படுகிறது.

படம்-


--------------------------------------------

சர்க்கரை உற்பத்தியிலும் தன்னிறைவு பெற்றே உள்ளோம்.

படம்-




பட்டியலில் இருந்து அறிய வருவது என்னவெனில்,

நமது 21.193 மில்லியன் டன்கள், ஆனால் உற்பத்தி தேவையை விட கூடுதலாக 22.383 மில்லியன் டன்கள் என்ற அளவில்  இருக்கிறது ஆனாலும் சுமார் 4.1 மில்லியன் டன்கள் இறக்குமதி செய்கிறோமே ஏன்?

சர்க்கரை உற்பத்தி உபரி நிலையில் இருக்கும் போதும் மொத்த வியாபாரிகளுக்கு சர்க்கரை இறக்குமதி செய்ய அனுமதிப்பதால் ,உள்நாட்டு சர்க்கரையின் விலை குறைக்கப்படுகிறது,இதன் விளைவாக கரும்பின்  குறைந்த பட்ச ஆதரவு விலையை குறைவாக வைக்க முடிகிறது. அதாவது விவசாயிக்கு உரிய விலை கிடைக்காமல் செய்யப்படுகிறது ,இதற்கு அரசு ஆதரவும் உண்டு!

--------------------------------------


PRODUCER PRICE INDEX(PPI) AND CONSUMER PRICE INDEX(CPI).


ஒரு நாட்டின் ஒட்டு மொத்த பணவீக்கத்தினை கணக்கிட WHOLE SALE PRICE INDEX(WPI) ஐ அடிப்படையாக வைத்து நுகர்வோர் விலையுடன் ஒப்பிடுவார்கள்.

ஒட்டுமொத்த விலைப்புள்ளி கணக்கீட்டில் உணவுப்பொருட்கள், உலோகம், எந்திரம் என பலப்பொருட்கள் அடங்கியுள்ளதால் நுகர்வோர் பணவீக்கத்தினை துல்லியமாக காட்டாது என்பதால் ,PRODUCER PRICE INDEX(PPI) AND CONSUMER PRICE INDEX(CPI). ஆகியவற்றை ஒப்பிட்டு நுகர்வோர் பணவீக்கம் மற்றும் உணவுப்பொருட்கள் பணவீக்கத்தினை கணக்கிட ஆரம்பித்துள்ளார்கள்.

இந்தியாவிலும் இம்முறையினை 2010 இல் இருந்து பின்ப்பற்ற ஆரம்பித்துள்ளார்கள்,

WHOLE SALE PRICE INDEX(WPI) 

மொத்த கொள்முதல் விற்பனை மையத்தில் வியாபாரி விற்கும் மொத்த விலை நிலவரங்களின் அடிப்படையில் கணக்கிடப்படுவது.அடிப்படை ஆண்டின் விலையுடன் ,நடப்பாண்டின் விலையினை ஒப்பிட்டு கணக்கிடப்பட்டு சதவிகிதத்தில் கூறப்படுவது.

PRODUCER PRICE INDEX(PPI) 

ஒரு உற்பத்தியாளருக்கு சந்தையில் கிடைக்கும் விலையினை ,குறிப்பிட்ட அடிப்படை ஆண்டின் விலையுடன்,நடப்பாண்டு விலையினை ஒப்பிட்டு  கணக்கிடப்படுவது.

CONSUMER PRICE INDEX(CPI).

ஒரு அடிப்படை ஆண்டில் ஒரு குறிப்பிட்ட பொருட்களை ,ஒரு குறிப்பிட்ட தொகைக்கு வாங்க முடிகிறது எனில் அதே பொருட்களை நடப்பாண்டில் வாங்க எவ்வளவு செலவாகிறது என ஒப்பிட்டு ,நுகர்வோர் விலைப்புள்ளி கணக்கிடப்படுகிறது.

உதாரணமாக ,நுகர்வோர் விலை புள்ளியின் அடிப்படை ஆண்டு 1984-85 ஆகும்,

அவ்வாண்டில் ,

அரிசி, கோதுமை ,சர்க்கரை,சமையல் எண்ணை,காய்கறிகள் தலா ஒரு கிலோ என மொத்தமாக 100 ரூபாய்க்கு வாங்க முடிகிறது எனக்கொள்வோம்,அப்போது நுகர்வோர் விலைப்புள்ளி 100 என வைத்துக்கொள்ளப்படும்.

குறிப்பிட்ட அதே வகையான பொருட்களை நடப்பாண்டு(2012) இல் வாங்க 150 ரூபாய் தேவைப்படுகிறது எனில் இவ்வாண்டின் நுகர்வோர் விலைப்புள்ளி

=(நடப்பாண்டு விலை/அடிப்படை ஆண்டு விலை)*100
=(150/100)*100=150 சதவீதம் ஆகும்.

அடிப்படை ஆண்டினை விட 50% சதவீதம் குறிப்பிட்ட பொருட்களின் விலை கூடியுள்ளது எனலாம்.

மேற்கண்ட விலைப்ப்புள்ளிகளின் அடிப்படையிலேயே , பணவீக்க விகிதம், உணவுப்பொருள் பணவீக்க விகிதம்,வாங்கும் திறன்,நாணய மதிப்பு ஆகியன தீர்மானிக்கப்படுகிறது.

ஒரு நாட்டில்,உள்நாட்டு உற்பத்தியில் உபரி இருந்து நிகர ஏற்றுமதி நாடுகள் எனில் அனைத்து விலைப்புள்ளிகளும் குறைவாக இருக்கும்.

உற்பத்தி குறைவாக இருந்து, நிகர இறக்குமதி நாடு எனில் , மேற்கண்ட விலைப்புள்ளிகள் மிக அதிகமாக இருக்கும், அது நாட்டின் பொருளாதாரத்துக்கு ஆரோக்கியமானதல்ல.

இந்தியாவில் பயன்ப்படுத்தப்படும் பலவகையான விலைப்புள்ளி குறீயிடுகள்.

படம்-

அமெரிக்காவுடன் ஒப்பீடு:

PPI எனப்படும் உற்பத்தியாளர் விலைக்குறீடு ஏறினால் அதனுடன் சரியான விகிதத்தில் CPI விலைக்குறியீடு உயரும்  எனப்பொதுவாக சொல்லலாம். ஆனால்  CPI  மட்டும் மிக அதிகமாக உயர்ந்து PPI எனப்படும் உற்பத்தியாளர் விலை மிக குறைவாக  இருக்கும் பொருளாதாரம் ஒரு நாட்டில் நிலவினால் அதனை எப்படி அழைப்பது? நம் நாட்டில் அத்தகைய நிலையே நிலவுகிறது.

அமெரிக்க PPI குறியீட்டு புள்ளி நிலவரம்.





2011 ஜனவரி ஆரம்ப நிலை PPI= 182.7

2012 இறுதி நிலை PPI=197.5

மாற்றம்= 197.5-182.7=14.8


CPI குறீட்டு புள்ளி நிலவரம்,




2011 ஜனவரி ஆரம்ப நிலை CPI= 219.44

2012 இறுதி நிலை CPI= 231.41

மாற்றம்= 231.41- 219.44=     11.97

இதிலிருந்து தோராயமாக சொல்லலாம், அமெரிக்காவில் விளைப்பொருட்களின் கொள்முதல் விலை உயர்ந்தாலும், நுகர்வோர் சந்தையில் வாங்கும் விலை அதிகமாக உயர்வதில்லை என, அது எப்படி சாத்தியமாகும் எனக்கேட்கலாம்,

இதனை ,PPI  மற்றும் CPI அதே காலக்கட்டத்திற்கு ஒப்பிட்டால் புரிந்துக்கொள்ள முடியும்.

2011 ஜனவரியில் PPI =182.7

2011 ஜனவரி ஆரம்ப நிலை CPI= 219.44

ஒப்பிடுகையில் நுகர்வோர் விலைக்குறியீடு  கூடுதலாக இருப்பதில் இருந்து  உற்பத்தி விலையை விட கூடுதல் விலையில் தான் வியாபாரி விற்றுள்ளார், நட்டத்தில் விற்கவில்லை என அறியலாம், வித்தியாசம் 36.74 புள்ளிகள் உள்ளது.

மேலும் ,

2012 இறுதி நிலை PPI=197.5

2012 இறுதி நிலை CPI= 231.41

இப்பொழுதும் நுகர்வோர் விலை கூடுதலாக இருக்கிறது, ஆனால் வித்தியாசம் என்னவெனில்,33.91 புள்ளிகள்.

CPI, 2011 ஜனவரியில் இருந்ததை விட 2012 இறுதியில் உள்ள வித்தியாசம் குறைவாக உள்ளதை காணலாம். அதாவது உற்பத்தியாளர் விலைக்குறியீடு உயர்வடைந்த போதும் நுகர் விலைக்குறியீட்டுப்புள்ளி  அதீதமாக உயரவில்லை என்பதை உணரலாம்.

இது எப்படி சாத்தியமாகிறது?

ஒரு சின்ன உதாரணத்தின் மூலம் பார்க்கலாம்.

முதல் நாள் ஒரு மாம்பழத்தின் கொள்முதல் விலை ஒரு ரூபாய் ,அதனை ரூ 1.50க்கு விற்றால் கிடைக்கும் லாபம் 50 காசு.

அடுத்த நாள் மாம்பழத்தின் கொள்முதல் விலை ரூ 1.10 , ஆனால் அதனை மீண்டும் முந்தைய நாள் விற்பனை விலைக்கே விற்கிறார்கள் எனில் லாபம் 40 காசு கிடைக்கும்,அப்பொழுதும் நட்டமில்லை.

ஆனால் முந்தைய நாள் லாபம் 50 காசு கிடைக்க வேண்டும் என 1.60 காசுக்கும் விற்கலாம், ஏன் எனில் கொள்முதல் விலை உயர்வு என நியாயம் கற்பிக்க முடியும்.

அமெரிக்காவில் சிறிய கொள்முதல் விலை உயர்வை உடனே விற்பனை விலையில் ஏற்றுவதில்லை, விற்பனை விலை லாபகரமாக இருக்கும் வரையில் முந்தைய விற்பனை விலையை தொடர்கிறார்கள் என கருதலாம்.

இப்பொழுது அதே காலக்கட்டத்திற்கான இந்திய  PPI மற்றும் CPI புள்ளிக்குறியீடுகளை ஒப்பிடலாம்.

இந்திய PPI நிலவரம்.

படம்-




2011 ஆரம்ப நிலை PPI= 143.8.

2012 இறுதி நிலை PPI =168.7

மாற்றம் = 168.7-143.8=24.9


இந்திய CPI  நிலவரம்.

படம்-





2011 ஆரம்ப நிலை CPI = 182.0

2012 இறுதி நிலை CPI = 217.46

மாற்றம்= 217.46-182=35.36

ஒராண்டு காலத்தில் , PPI புள்ளிகள் 24.9 மாறினால், CPI புள்ளிகள் அதனை விட அதிகமான விகிதத்தில் 35.36 புள்ளிகள் உயர்கின்றது.

ஆனால் அமெரிக்காவில் அப்படி நிகழவில்லை என்பதை முன்னரே பார்த்தோம்.

அமெரிக்காவில் ஒரு ஆண்டு காலத்தில்,

PPI =14.8 என மாற்றம் காட்டினால், அதற்கு கீழாக 11.9 புள்ளிகள் மட்டுமே CPI மாறுகிறது.இது நுகர்வோர்களுக்கு சாதகமாக சில்லரை விற்பனை சந்தை உள்ளதை காட்டுகிறது.

ஒரே காலக்கட்டத்திற்கு இந்தியாவின் PPI மற்றும் CPI  உயர்வினை நீங்களே ஒப்பிட்டு பார்த்துக்கொள்ளுங்கள், கொள்முதல் விலையில் ஒரு பைசா ஏறினாலும் நுகர்வோர் விலையில் அதனை விட கூடுதலாக இந்தியாவில் ஏறிவிடும்.எனவே இந்திய சில்லரை விற்பனை சந்தை நுகர்வோருக்கு பாதகமாக இருக்கிறது எனலாம்.அதே சமயம் கொள்முதல்ல் விலையும் மிக குறைவு என்பதை நினைவு கொள்ளவும்.

இந்திய வியாபாரிகள் லாபத்தில் சிறிதளவு குறைவதையும் அனுமதிப்பதில்லை, உற்பத்தியாளர் விலை சிறிது ஏறினாலும் டைனமிக்காக நுகர்வோர் விலையை உயர்த்திவிடுவார்கள்,ஆனால் மீண்டும் உற்பத்தியாளர் விலை குறைவடையும் போது ,நுகர்வோர் விலை ஏறிய விகிதத்தில் குறைவடையாமல் , முந்தைய குறைந்த விலைக்கும் மேல் ,ஒரு புதிய விலையில் வந்து நிற்கும்,இதனால் விலைவாசி உயர்வு எப்பொழுதும் உயர்ந்த பட்சமாக உள்ளது.

இத்தனைக்கும் இந்திய கொள்முதல் சந்தை கட்டுப்படுத்தப்பட்ட சந்தை, ஆனால் அமெரிக்க சந்தையோ திறந்த "Market linked,Free Float Market" ,ஆகும்.

விலைப்பொருட்கள் ஃபியூட்சர் டிரேடிங் செய்யப்படுபவை எனவே கம்மோட்டி மார்க்கெட்டிலும் வியாபாரம் நடக்கும்,விவசாயிகள் நேரடியாக கம்மோடிட்டி மார்க்கெட்டில் ஈடுபடுவார்கள்.ஆனாலும் நுகர்வோருக்கு சில்லரை சந்தையில் விலை உயர்வதில்லை.

அதே சமயம் ஃபியூட்சர் டிரேடிங் மூலம் விவசாயிகள் நேரடியாக , தங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பினை "ஹெட்ஜிங்" செய்து குறைக்க  முடிகின்றது.

HEDGING:

Future Trading:

நடவு பருவத்தின் போது ,விளைப்பொருளின் விலை உயர்வாக இருக்கும், எனவே இத்தனை டன் என ஃபியுட்சர் டிரேடிங்கில் உயர்ந்த விலைக்கு கம்மோடிட்டியை விவசாயி விற்று லாபம் பார்ப்பார்.

பின்னர் அறுவடையின் போது ஃபியுட்சர் டிரேடிங் பங்குகள் விலை குறைவாக இருக்கும் ,அப்போது அவரே மீண்டும் குறைவான விலையில் வாங்கிவிடலாம், ஆரம்ப விலைக்கும், இறுதி விலைக்கும் இடையே உள்ள வித்தியாசம் அவருக்கு லாபம் ,இவ்வாறு இழப்பினை தவிர்ப்பதை "ஹெட்ஜிங்" என்பார்கள். பின்னர் விளைப்பொருளை விருப்பப்படும் போது சந்தையில் விற்றுக்கொள்ளலாம்.

அல்லது ஃபியூட்சர் டிரேடிங் ஒப்பந்தத்தின் படியே விற்கவும் செய்யலாம்.

சுட்டி:

http://www.cftc.gov/ConsumerProtection/EducationCenter/economicpurpose

FORWARD CONTRACT:

எதிர்காலத்தில் விளைப்பொருளின் விலை சரியும் என நினைத்தால் , முன்கூட்டியே ஒரு விலை நிர்ணயம் செய்து முன் பேர ஒப்பந்தம் செய்துக்கொண்டு விவசாயம் செய்வார்கள். அறுவடையின் போது விலை உயர்ந்தாலும், சரிந்தாலும் ஒப்பந்த விலைக்கு விற்க முடியும்.

பெரிய முறைப்படுத்தப்பட்ட சில்லறை வியாபார அமைப்புகள் ,விவசாயிகளிடம் இவ்வாறு ஒப்பந்தம் செய்கின்றன.

இந்திய விவசாயிகளுக்கு இத்தகைய சந்தை பாதுகாப்பு தன்மையில்லை.


இருந்த போதிலும் எப்படி கொள்முதல் விலை உயர்வுடன் ஒப்பிடுகையில் சில்லரை விலை விகித உயர்வு குறைவாக உள்ளது எனில் அங்கு முறைப்படுத்தப்பட்ட சில்லரை வர்த்தகம் சிறப்பாக  உள்ளதே காரணமாகும். யாரும் சில்லரை விற்பனை மார்ஜினை அதிகரித்து அதிக லாபம் ஈட்ட முயலாமல், சரியான மார்ஜினை வைத்தே விற்கிறார்கள், காரணம் என்னவெனில் அங்குள்ள முறைப்படுத்தப்பட்ட வர்த்தகர்கள் தங்கள் வாடிக்கையாளர்களை இழக்க விரும்புவதில்லை, மேலும் போட்டியாளர்கள் இடையே ஒப்பிட்டு சில்லரை விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

இந்தியாவில் சில்லரை விற்பனையில் போட்டியாளர்கள் என தனியே யாரும் இல்லை, தனித்தனி கடைகள் என்றாலும் அனைவரும் ஒன்றாக கூடியே விலையை நிர்ணயம் செய்து விடுகிறார்கள்.

கொள்முதல் விலை குறைவாக இருந்தாலும் ,சில்லரை விலையை எப்பொழுதும் உயர்த்தி விற்பது வழக்கம், ஏன் எனில் 10 ரூபாய் விலையில் 100 டன் விற்பதை விட 100 ரூபாய் விலையில் 10 டன்னை விற்றாலும் அதே லாபம், ஆனால் குறைவான காலம் ஆகும் என  விபரீதமாக கணக்கிடுபவர்கள்  நம் நாட்டு வியாபாரிகள்:-))

--------------------------

வளரும் நாடுகளுடன் ஒப்பீடு:

சில வளரும் பொருளாதார நாடுகளின் உற்பத்தியாளர் மற்றும் நுகர்வோர் விலைப்புள்ளி குறியீடுகளை ஒப்பீட்டளவில் பார்க்கலாம்.

உற்பத்தியாளர் விலைப்புள்ளி குறியீடு.

படம்-




படத்தின் மூலம் அறியலாம்,

ருஷ்யா வில் உற்பத்தியாளர் விலைக்குறியீடு உச்சத்தில் இருக்கிறது, காரணம் கம்யூனிச ஆட்சி முடிவுக்கு பின் உள்நாட்டு உற்பத்தி மொத்தமாக சரிவடைந்துவிட்டது , எனவே குறைவான உற்பத்தி நடப்பதால் கொள்முதல் விலை கடுமையாக உயர்ந்துவிட்டது.

பிரேசிலில் உற்பத்தி அடிக்கடி மாறிக்கொண்டிருக்கும் வளரும் பொருளாதாரம் , எனவே அவ்வப்போது இந்தியாவுக்கு மேலும் கீழும் பயணிக்கிறது, ஆனால் சராசரியாக நம் நாட்டு அளவில் தான் உற்பத்தியாளர் விலைக்குறியீடு அமையும் எனலாம்.

இந்தியாவில் உற்பத்தி அதிகம் தொய்வடையாமல் செல்கிறது ,மேலும் பெரும்பாலான கொள்முதல் விலையை அரசே தீர்மானித்து விடுவதால் உற்பத்தியாளர் விலைக்குறியீட்டில் அதிக மாற்றம் இருப்பதில்லை.

சீனாவில் , தனிநபர் நில உரிமை என்பதே இல்லை ,கிராம அளவில் குழுவாக விவசாய உரிமம் 15 ஆண்டுகளுக்கு என வழங்குவார்கள், எனவே அரசே கொள்முதல் விலை, உற்பத்தியின் அளவு என திட்டமிட்டுவிடும், மேலும் கொள்முதல் விலை என்பது குறிப்பிட்ட அளவுக்கு மேல் உயராமல் செய்துவிடும், அதே போல நுகர்வோர் விலையும் உயராமல் செய்துவிடும்.

கொள்முதல் விலை குறீயீட்டில் நம் நாட்டின் நிலவரம் இடை நிலையாக உள்ளதை வைத்து பார்த்தால் , நுகர்வோர் விலைக்குறியீட்டில் நாம் பிரேசில் அல்லது சீனாவுக்கு அருகில் இருக்க வேண்டும் ஆனால் அப்படி நடப்பதில்லை , என்ன நடக்கிறது எனக்காணலாம்.

நுகர்வோர் விலைக்குறியீடு:



ரஷ்யாவில் உற்பத்தி குறைவு எனவே , நுகர்வோர் சந்தையிலும் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதால் உச்சத்தில் உள்ளது.

சீனா ,பிரேசில் போன்ற நாடுகளும் அவற்றின் உற்பத்தியாளர் குறியீட்டுக்கு ஏற்றபடி ,நுகர்வோர் விலைக்குறியீடு அமைந்திருக்கிறது எனலாம்.

ஆனால் உற்பத்தியில் தன்னிறைவு பெற்றுள்ள இந்தியாவின் நுகர்வோர் விலைக்குறியீடு ருஷ்யாவுடன் போட்டிப்போடுவதை காணுங்கள்.

உற்பத்தி போதுமானதாக பெரும்பாலான உணவுப்பொருட்களில் உள்ளது,பலவற்றில் உபரியும் காண்கிறோம்,ஆனால் நுகர்வோர் புள்ளியோ ருஷ்யா போன்ற பற்றாக்குறை நாட்டுக்கு இணையாக உள்ளது,காரணம் இந்தியாவில் கொள்முதல் விலையை மட்டுமே அரசு கட்டுப்படுத்துகிறது, ஆனால் சந்தையில் நுகர்வோர் விலையை கட்டுப்படுத்துவதில்லை எனவே செயற்கையாக கமிஷன் மண்டிகளும், சில்லரை வியாபாரிகளும் விலையை நிர்ணயம் செய்து உயர வைத்துவிடுகிறார்கள்.



சந்தையினைக்கட்டுப்படுத்தி சில்லரை விலை சந்தையில் விலை உயர்வை எப்படி உயர்த்துகிறார்கள் என்பதை வெங்காய விற்பனை மூலம் காணலாம்.

படம்-



படத்தில் காணலாம், வெங்காய கொள்முதல் 10 ரூபாய் அளவில் இருக்கும் போது சில்லரை விற்பனை 35 ரூபாயாக இருக்கிறது. பின்னர் வெங்காய உற்பத்தி தொடர்ந்து அதிகமாகவும், சந்தை வரத்தும் அதிகரிக்கவே  சில்லரை விலை கீழே வருகிறது.

பின்னர் மீண்டும் உயர்ந்துக்கொண்டு போகிறது ஆனால் வெங்காய கொள்முதல் விலை மட்டும் தொடர்ந்து 10 ரூபாய் அருகிலேயே உள்ளதை காணலாம்.

கடந்த 5 ஆண்டு காலத்தில் வெங்காய உற்பத்தி:


வெங்காயம் கிலோ 35 ரூ என சில்லரை விற்பனையில் விற்றக்கால கட்டத்தில் உற்பத்தியும் மிக அதிகமாக உள்ளதை காணலாம்.

முழு உற்பத்தியையும் கொள்முதல் செய்து ,நுகர்வோருக்கு மலிவாக கொடுப்பதற்கு பதில், குறைவாக கொள்முதல் செய்து ,அதிக விலையில் விற்பதே கமிஷன் மண்டி, வியாபாரிகளின் நடை முறையாகும்.

கொள்முதல் செய்யப்படாத வெங்காயம்,காய்கறிகள் வீணாக சாலையில் கொட்டப்படுவது  இந்தியாவில் வாடிக்கையான ஒரு நிகழ்வு ஆகும்.

சாலையில் கொட்டப்படும் வெங்காயம்:

//தேவைக்கு அதிகமாக உற்பத்தியானதால், உரிய விலை இல்லை.இதனால், திண்டுக்கல் பகுதிகளில், வயலில் இருந்து வெங்காயத்தை பறிக்காமல் விட்டுள்ளனர். சில விவசாயிகள், பறித்த வெங்காயத்தை ரோடு ஓரங்களில் கொட்டி வைத்துள்ளனர்.இதுகுறித்து ஜாதிக்கவுண்டன்பட்டி விவசாயி வீரன் கூறுகையில், ""ஏக்கருக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை செலவாகியுள்ளது. கிலோ 5 ரூபாய்க்கு, வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். ஆனால், செடியில் இருந்து பறித்து, அனுப்ப 5 ரூபாய் செலவாகும். இதனால் பறிக்கவில்லை. தெரிந்தவர்கள், இலவசமாக எடுத்துச் செல்கின்றனர்,'' என்றார்.//

தகவல்:தினமலர்.

http://www.dinamalar.com/business/news_details.asp?News_id=20094&cat=1

கத்திரிக்காய் விலை சரிவு:


//சென்னையில் ஆரம்ப காலத்தில் கிலோ 20 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை விற்கப்பட்ட கத்தரிக்காய், தற்போது அதிக விளைச்சல் காரணமாக விலை வீழ்ச்சியடைந்துள்ளது.
கிலோ 8 லிருந்து 10 ரூபாய் வரை விற்பதால் சரியான லாபம் கிடைக்கவில்லை என விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். வரும் தை மாதத்தில் விலை ஏறுமுகமாக இருக்கும், அந்த நேரங்களில் அறுவடை செய்பவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும் என விவசாயிகள் கூறினார்.
அமோக விளைச்சல் நேரத்தில் தங்கள் விளைபொருளுக்கு ஏற்ற விலை கிடைக்காததால் இப்பகுதி விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.//


தகவல் தினமலர்:

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=612687

அப்படி எனில் வெங்காய உற்பத்தி நன்றாக இருந்தாலும், விலை குறைவதில்லை, ஆனால் உற்பத்தி  குறைந்துவிட்டால் ஆகாயத்தை தொடும் நிலைக்கு விலை போவதையும் காணலாம். ஆனால் அப்பொழுதும் கொள்முதல் விலையை உயர்த்த மாட்டார்கள் என்பதை கவனத்தில் கொள்ளவும்.

இதன் மூலம் இந்திய வேளாண் சந்தை விவசாயிகளுக்கும் சாதகமாக இல்லை ,நுகர்வோருக்கும் சாதகமாக இல்லை என்பதை அறியலாம்.

சமையல் எண்ணை:

உற்பத்தி அதிகம் இருக்கும் வெங்காயத்திலேயே சில்லரை விற்பனை சந்தையில் இப்படி இருக்கிறது என்றால் உற்பத்தி குறைவாக இருக்கும் சமையல் எண்ணை சில்லரை விற்பனையில் என்ன நடக்கிறது எனப்பார்க்கலாம்.


(மில்லியன் டன்களில்)

உணவுப்பொருள் உற்பத்தியில் பருப்பு,எண்ணை ஆகியவை குறைவாக இருப்பதால் நாம் அதிக அளவு இறக்குமதியை நம்பியுள்ளோம்..

எண்ணை உற்பத்தி&நுகர்வு படம்:


2012 ஆம் ஆண்டு நிலவரப்படி ,

நமது மொத்த சமையல் எண்ணை நுகர்வின் அளவு சுமார் 17 மில்லியன் டன்கள்.

உள்நாட்டு உற்பத்தி= 6.6(இறுதி அளவு=8.2மி.டன்) மில்லியன் டன்கள்.

எனவே  பற்றாக்குறையை தீர்க்க இறக்குமதி செய்ய எதிர்ப்பார்க்கப்படும் சமையல் எண்ணையின் அளவு= 10.8 மில்லியன் டன்கள்.

இறக்குமதி செய்யப்பட்ட எண்ணையின் அளவு= 9.6 மில்லியன் டன்கள்.

மிக அதிகம் இறக்குமதி செய்யப்பட்ட எண்ணைகள்,

பாமாயில்=7 மில்லியன் டன்கள்.

சோயா எண்ணை= 1.4 மில்லியன் டன்கள்.

சூரிய காந்தி எண்ணை= 6 லட்சம் டன்கள்(up to june-2012)

இதர எண்ணைகள்= 15,000 டன்கள்.

மக்களின் அபிமான சமையல் எண்ணையாக கருதப்படும்(தமிழகத்தில் தான்) சூரிய காந்தி எண்ணையின் சந்தை நிலவரத்தினை பார்ப்போம்,

100 கிலோ சூரிய காந்தி எண்ணை வித்தின் குறைந்த பட்ச ஆதரவு விலை=2,800 ரூ.

சாகுபடி பரப்பு= ஒரு மில்லியன் ஹெக்டேர்.
உற்பத்தி=6.5 லட்சம் டன்கள்.

தகவல்:

http://articles.economictimes.indiatimes.com/2012-01-17/news/30635812_1_sunflower-edible-oil-lakh-tonnes

ஏற்கனவே பார்த்துள்ளோம் 6 லட்சம் டன்கள் என, ஆண்டு இறுதியில் 10.8 லட்சம் டன்கள் சூரிய காந்தி எண்ணை இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

தடையற்ற வகையில் மக்களுக்கு எண்ணை கிடைக்க வேண்டும் என இறக்குமதியை ஊக்குவிக்க அரசு மானியம் வழங்குகிறது.மேலும் சுத்திகரிக்கபடாத எண்ணைக்கு முழு வரி விலக்கும் உண்டு.

//NEW DELHI(Commodity Online): India Government has announced this year's subsidy rates for pulses and edible oils as there are prospects for a fall in the production that may in turn fail to cater to demand signals. India's subsidy for pulses this year would be Rs 20 a kg and for edible oils, Rs 15 a litre, acccording to K.V. Thomas, Union Minister of State for Consumer Affairs, Food and Public Distribution.//

தகவல்:

http://www.commodityonline.com/news/india-govt-subsidy-for-pulses-edible-oils-as-production-scenario-grim-50749-3-50750.html

ஒரு லிட்டர் சமையல் எண்ணைக்கு வழங்கப்படும் மானியம்= 15 ரூ.

சர்வதேச சந்தையில் டிசம்பர் மாத நிலவரப்படி ,

ஒரு டன் சூர்யகாந்தி எண்ணையின் விலை =1,270 டாலர்கள்.

இந்திய மதிப்பில்(1 டாலர்=50ரூ என)= 1,270*50=63,500 ரூபாய்.

sunflower oil density=0.919 g/ml.

எனவே ஒரு டன்னில் உள்ள லிட்டர்கள்= 1000*0.919=1,088 லிட்டர்கள்.

ஒரு லிட்டரின் சர்வதேச விலை=63,500/1,088=58.36 ரூபாய்களே.

இதில் ஒரு லிட்டருக்கு மத்திய அரசின் மானியம் 15 ரூபாயை கழித்தால் நிகர விலை= 58.36-15.0= 43.36 ரூபாய்களே.

மேற்கண்ட விலை விவரங்கள் அனைத்தும் 2012 ,டிசம்பர் மாத தகவல்களின் படி கணக்கிடப்பட்டுள்ளது,

2012 டிசம்பரில் ஒரு லிட்டர் சூரிய காந்தி எண்ணையின் சில்லறை விற்பனை= 95 ரூபாய்!!!

அப்படி எனில் ஒரு லிட்டருக்கு வியாபாரிகளின் நிகர மார்ஜின்= 95-43.36=61.64 ரூபாய்!

சதவீததின் அடிப்படையில் சந்தை  விலை= 95/43.36*100=215.09%

சதவீதத்தின் அடிப்படையிலநிகர வருவாய் மட்டும்= 115.09%

அதாவது ஒரு ரூபாய் முதலீட்டுக்கு 1.15 ரூ கூடுதலாக திரும்ப கிடைக்கும்.


சமையல் எண்ணைக்கு பலகோடிகள் அல்லது லட்சங்கள் கொடுத்து நடிகைகளை வைத்து விளம்பரப்படம் தயாரித்து ,நொடிக்கு ஒரு முறை தொலைக்காட்சிகளில் போடுவதன் ரகசியம் இப்பொழுது புரிந்து இருக்குமே.

நம் நாட்டில் பல மில்லியன் ஹெக்டேர்கள் வளமான விளை நிலங்கள் இருக்கிறது, விளைச்சலுக்கு உரிய கொள்முதல் விலை கொடுத்தாலே பொதும் விவசாயிகள் போட்டிப்போட்டுக்கொண்டு வேளாண்மை செய்து , கூடுதல் எண்ணை வித்துக்கள் உற்பத்தி செய்துவிடுவார்கள், ஆனால் அப்படி சரியான விலையை கொடுக்காமல் சுமார் 57% மொத்தமாக சமையல் எண்ணையும் சூர்ய காந்தி எண்ணையில் 87% சதவீதமும் இறக்குமதி செய்து விற்க காரணம், அரசின் தவறான விலை நிர்ணயக்கொள்கை ஆகும் அதனைப்பயன்ப்படுத்திக்கொண்டு வியாபாரிகள் உற்பத்தியை அடக்கி வைக்கவே நினைக்கிறார்கள்.

மேலும் இறக்குமதி எண்ணைக்கு மாநியமும் கிடைக்கிறது, அதிக அளவு இறக்குமதியை சார்ந்துள்ள ஒரு பொருளுக்கான சந்தையின் சப்ளை& டிமாண்டினை வியாபாரிகளே எளிதில் தீர்மானிக்க முடியும், இதனால் விலையைக்கட்டுப்படுத்த முடிகிறது.

உள்நாட்டிலேயே அதிகம் உற்பத்தி ஆனால் ஒவ்வொரு பருவத்தின் போதும் புதிய விளைச்சல் சந்தைக்கு வந்து விடும் என்பதால் வியாபாரிகளால் செயற்கையாக சப்ளை&டிமாண்டினை  கட்டுப்படுத்த இயலாது என்பதனை கவனத்தில் கொள்ளவும்.

உள்நாட்டு உற்பத்தியோ ,அயல்நாட்டு இறக்குமதியோ , பொருட்களை குறைவான விலையில் கொள்முதல் செய்து அதிக விலைக்கு விற்க வேண்டும், அதற்கு ஏற்றவாறு நாட்டின் உற்பத்தி பின் தங்கி இருக்க வேண்டும் என்றே வியாபாரிகளின் பொதுவான வியாபார கொள்கையாக இருக்கிறது எனலாம்.
---------------------


உணவுப்பொருள் பணவீக்கம்(Food Price Inflation):

உற்பத்தியாளர் விலைப்புள்ளியைவிட அதிக வேகத்தில் நுகர்வோர் விலைப்புள்ளி உயர்வதால் , மக்களின் வாங்குன் திறன் பாதிக்கப்பட்டு உணவுப்பொருள் பணவீக்கம் உயர்கிறது.

படம்:


படத்தின் மூலம் காணலாம் ஆரம்பத்தில்  உணவுப்பொருள் பணவீக்க விகிதம் உயர்வாக இருக்கிறது பின்னர் குறைந்து , மீண்டும் உயர்கிறது. ஆனால் ஒட்டு மொத்தமாக இந்திய உணவுப்பொருள் உற்பத்தி போதுமானதாகவே உள்ளது, மேலும் கொள்முதல் விலையானது ஆண்டு முழுவதும் சீராகவே உள்ளது என்பதையும் பார்த்தோம் பின்னர் எப்படி இம்மாற்றம்?

ஏன் எனில் அறுவடைக்காலத்தின் போது மொத்தமாக வாங்கி குவித்துவிட்டு பின்னர் அடுத்த பருவம் வரும் வரையில் விலையினை உயர்த்துவார்கள் ,மீண்டும் புது அறுவடைப்பொருள் சந்தைக்கு வரும் வரையில் இந்நிலை தொடரும், அக்காலத்தில் மட்டுமே உணவுப்பொருள் விலை வீக்கம் குறையும். இதுவே முறைப்படுத்தப்படாத சில்லரை வர்த்தகர்களின் செயல்படும் முறை, ஆனால் முறைப்படுத்தப்பட்ட சில்லரை வர்த்தகத்தில் தொடர்ந்து சீரான விலையினை செயல்படுத்துவது வழக்கம்.

முறைப்படுத்தப்பட்ட சில்லரை வர்த்தகத்தில் பெருமளவு முடக்கி விலையை உயர்த்தி அதனால் வாடிக்கையாளர்கள் இடம் மாறிவிடுவார்களோ என்றோ அல்லது மாற்று உணவுப்பொருளுக்கு மாறினால் நீண்ட நாள் தேக்கி வைத்தது நட்டம் ஆகிவிடும் என்றோ அச்சப்படுவதுண்டு. மேலும் போட்டியாளராக உள்ள இன்னொரு முறைப்படுத்தப்பட்ட சில்லரை வியாபாரி விலையை உயர்த்தவில்லை என்றால் மொத்த வாடிக்கையாளரும் அங்கு இடம் மாறிவிடுவார்கள்,எனவே பெரும்பாலும் முறைப்படுத்தப்பட்ட சில்லரை வர்த்தகம் நடைப்பெறும் நாடுகளில் சீசனுக்கு சீசன் விலை அதீதமாக ஏறி இறங்கி நுகர்வோரை பதம் பார்ப்பதில்லை.

இன்னும் சொல்லப்பட நிறைய விவரங்கள் உள்ளன,ஆனால் நீண்டு கொண்டே செல்வதால் அடுத்தப்பதிவில் தொடரலாம் என நினைக்கிறேன்.

அடுத்தப்பதிவில் ,

சில்லரை வர்த்தகம், வாங்கும் திறன், நுகர்வு கலாச்சாரம், உணவு பொருள் விரயம் ஆகியவற்றை காணலாம்.

தொடரும்....
--------------------------------------

பின்குறிப்பு:

#இப்பதிவினை பொறுமையாக படித்தோர்க்கு நன்றி!

# பிழைதிருத்தம் செய்யப்படாமல் வெளியிடப்பட்டுள்ளது,விரைவில் திருத்தம் செய்யப்படும்.

#பதிவில் உள்ள தகவல்கள்,புள்ளி விவரங்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட இணைய தளங்களில் உள்ளவையே, ஏதேனும் தகவல் பிழைகள், மற்றும் நம்பகத்தன்மைக்கு அடியேன் பொறுப்பல்ல.

# முடிந்தவரையில் 2011-12 தகவல்களும், சில 2009-10 ஆகவும் இருக்கின்றன, விவசாய புள்ளிவிவரங்களை பொறுத்த வகையில் அதனால் பெரிதாக மாற்றம் இருக்கப்போவதில்லை, கிட்டத்தட்ட நிகழ்காலத்தினையே பிரதிபலிக்கும் எனலாம்

#மாற்றுக்கருத்துக்களை வரவேற்கிறேன்,ஆனால் பதிவை படிக்காமல் கொல வெறியில் கும்மி அடிப்பதை தவிர்க்கவும்.நன்றி!
---------------------------------------


#தகவல் மற்றும் படங்கள் உதவி,

National sample survey,national council for Applied economics &Research,Fertilizers Association of India, Ministry of Agriculture,Ministry of Commarce,Food Corporation of India,USDA,FAO,The hindu,Business Line,Times of India, Economics Times,wiki,google,இணைய தளங்கள்,நன்றி!

**********

Sunday, December 16, 2012

சினிமா ரகசியம்-5:வியாபார தந்திரம்.


 (அய்யோடா...புள்ளிவிவரத்தோட கிளம்பிடான்யா..கிளம்பிட்டான்)


DTH இல் முதன் முறையாக ரிலீஸ்,Barco Auro-3D Sound,3000 பிரிண்டுகள் என்றெல்லாம் பிரமாண்டமாக கதைக்கிறார்கள், அதை எல்லாம் கேட்கும் போது தமிழ் சினிமா எங்கேயோ போய்விட்டது என சாமானிய ரசிகர்கள் வாய் பிளக்கிறார்கள், உண்மையில் தமிழ் சினிமாவின் வியாபார வீச்சு எந்த அளவுக்கு உள்ளது, சொல்வது போல செயலில் காட்டுவது சாத்தியமா என அலசுவதே இப்பதிவின் நோக்கம்.

முதலில் தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகளின் நிலவரத்தினைப்பார்ப்போம்.

தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகளின் மொத்த எண்ணிக்கை நிலவரம்.As per tn govt revenue department stats.

ஒன்றுக்கும் மேற்பட்ட திரைகளைக்கொண்ட பன்னரங்குகளின் எண்ணிக்கையும் இதில் அடக்கம் என நினைக்கிறேன்.

CINEMA THEATRES IN TAMIL NADU:

2010-11

Permanent -1085

Open Air Theatres-5

 Semi Permanent-75

Touring Theatres-32

Total=1,197

http://www.tn.gov.in/deptst/Tnataglance.htm#CINEMA THEATRES

இதில் பெருநகரம்,நகரம், சிற்றூர் வாரியாக திரையரங்குகளின் பரவலை காணலாம்.

மெட்ரோ-1 :சென்னை

மாநகராட்சி-9

திருச்சி,மதுரை,கோவை,சேலம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடி, ஈரோடு,திருநெல்வேலி.

சென்னை மாநகர எல்லைக்குள் மட்டும் சுமார் 40 அரங்குகள் தேறினாலே அதிகம், எனவே 40 எனக்கொள்வோம்.

மற்ற ஒன்பது மாநகர எல்லைக்குள் தலா 20 எனக்கொண்டால், மொத்தம் 180 அரங்குகள்.

எனவே மாநகரப்பகுதிகளில் உள்ள அரங்குகள் மொத்தம் -220

நகராட்சி -150

செங்கல்பட்டு,காஞ்சிபுரம் ,கடலூர் போன்ற ஊர்கள் ஆகும்.

மறைமலைநகர் போன்ற நகராட்சிகளில் தியேட்டர்களே கிடையாது.

நகராட்சி வகை ஊர்களில் ஒரு ஊருக்கு சுமார் 4- 5 அரங்குகள் இருக்கலாம், தோராயமாக 4 என வைத்துக்கொண்டால் ,

4*150= 600 அரங்குகள்.

டவுன் பஞ்சாயத்து-559

கூடுவாஞ்சேரி, வளசரவாக்கம் போன்றவை எல்லாம் டவுன் பஞ்சாயத்துகள் ஆகும், பெரும்பாலான இடங்களில் தியேட்டர்கள் இருக்காது, அப்படி இருக்கும் பல திரையரங்குகளில் புதியப்படம் வெளியாவதில்லை.

செமி பெர்மனண்ட் தியேட்டர் 75 இருப்பதாக பார்த்தோமே அவை இங்கு இருக்கலாம்.

இன்னும் சில டவுன் பஞ்சாயத்துகளில் ஓரளவு நல்ல தியேட்டர்கள் இருக்கலாம், ஆனால் புது படம் வெளியாவது வெகு அறிதே, அப்படியும் புதுப்படங்கள் வெளியாகும் வகையில் சுமார் 150 அரங்குகள் இருக்கலாம் என வைப்போம்.

கிராம பஞ்சாயத்து-12,524

இங்கு டூரீங்க் கொட்டகை போன்றவையே இருக்கும், அதும் அழிந்து தற்சமயம் 32 மட்டுமே இருக்கிறது.

(the show over-end of the entertainment)

டிஜிட்டல் மயமான திரையரங்குகளின் எண்ணிக்கை:

qube theatres-510

http://www.qcn.in/theatres/Tamil-Nadu

UFO theatres -242

http://www.ufomoviez.com/UFO_Presence.aspx?mode=state

தமிழகத்தில் உள்ள 1,197 அரங்குகளில் மொத்த டிஜிட்டல் அரங்குகள்எண்ணிக்கை=510+263=773.

இவற்றில் புதிய படங்கள் வெளியிட வாய்ப்புள்ள திரையரங்குகள்:

மாநகரம்=220

நகரம்=600

டவுன் பஞ்சாயத்து= 150

மொத்தம்= 970

ஆனால் அனைத்து தியேட்டரிலும் ஒரே படத்தினை வெளியிட இயலாது, ஒரு நகரில் 4 அரங்குகள்  இருந்தால் ஒன்றில் தான் வெளியிடுவார்கள், முதல் சில நாட்கள் மட்டும் ஒரே நகரில் இரண்டு அரங்குகளில் ஷேரிங்கில் வெளியிடும் வழக்கம் உண்டு, அது ஓப்பனிங் வாரத்திற்கு மட்டுமே இருக்கும் எனலாம்.

எனவே ஒரே ஒரு புதிய படம் அதிகப்பட்சம் எத்தனை அரங்கில் தமிழ்நாட்டில் வெளியாக வாய்ப்புள்ளது எனப்பார்ப்போம்.

மாநகராட்சியில் 220 அரங்கு எனில் அதில் சுமார் 100 அரங்குகள் என கொள்ளலாம்.

நகரப்பகுதியில் நகருக்கு ஒன்று என கொண்டால் -150

இரண்டு அரங்கு எனில் 300

டவுன் பஞ்சாயத்து 150 இலும் வெளியாகிறது என வைத்துக்கொண்டாலும் ,

மொத்தமாக 100+300+150= 550 அரங்குகள் மட்டுமே.

இந்த எண்ணிக்கையில் வெளியாகும் படங்களுக்கு மட்டுமே நல்ல பார்வையாளர் கூட்டம் வருவதற்கு வாய்ப்புண்டு, மற்றபடி அதிக அரங்குகள் என வெளியிடுவதால் வருமானம் பெரிதாக உயராது.

ஏன் எனில் அருகிலேயே இன்னொரு அரங்கு இருந்தால் பார்வையாளர்கள் பிரிந்து ,அரங்க வருமானம் தான் பகிரப்படும், எனவே வருவாய் அதிகம்  உயராது.

அப்படியே மிக அதிக எண்ணிக்கையில் எல்லா ஊரிலும் ,எல்லா தியேட்டரிலும் வெளியிட்டாலும் 1090 தியேட்டர்களில்  மட்டுமே வெளியிட முடியும்.அப்படி செய்வது சாத்தியமேயில்லை என்று வைத்துக்கொண்டாலும் 1090 தியேட்டர்கள் என வைத்துக்கொண்டால் , 3000 பிரிண்ட்கள் என வெளியிடுவதாக சொல்லுபவர்கள் மற்றவற்றை எங்கு திரையிடுவார்கள்?

தமிழ்நாட்டுக்கு வெளியில் தான் திரையிட வேண்டும், தமிழ்நாட்டுக்கு வெளியில் எல்லாம் தமிழ் படங்களின் வியாபாரம் தியேட்டர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இல்லை, மொத்தமாக தெலுங்கு, மலையாளம் ,இந்தி என விலைப்பேசுவார்கள், பின்னர் அயல்நாடு.

எனவே 2000 பிரிண்ட் என சொல்லி எல்லாம் விற்க இயலாத போது 2000 பிரிண்ட் போட ஆகும் செலவே அதிகம் ஆகும் என்பதால், ஒரு குறிப்பிட்ட வருவாய் தரும் அவுட் சைட் தமிழ்நாடுக்கு எல்லாம் யாரும் 2000 பிரிண்ட் போட வாய்ப்பேயில்லை.

இது வரையில் வெளியான தமிழ்ப்படங்களிலேயே மிக அதிக எண்ணிக்கையில் பிரிண்ட் போடப்பட்டு வெளியான தமிழ்ப்படம் சூப்பர் ஸ்டாரின் எந்திரன் மட்டுமே, சுமார் 2500 பிரிண்ட்கள் என்கிறார்கள்.

தமிழ்நாட்டில் சுமார் 900 பிரிண்ட்கள் வெளியாகி இருக்கக்கூடும், சரியான எண்ணிக்கை உறுதியாக எந்த தளத்திலும் இல்லை, ஆனால் வெளிநாட்டு பிரதிகளின் எண்ணிக்கை 300 என தெளிவாக சொல்லியுள்ளார்கள், இன்றைய தேதி வரையில் உலக அளவில் 300 பிரிண்ட்கள் வெளியான ஒரே தமிழ்ப்படம் எந்திரன் மட்டுமே.

//Tamil Superstar Rajinikanth's fans camped outside cinema halls and queued up at ticket counters since early morning today to buy tickets to his latest venture 'Enthiran (Robot).

Being shown across 300 screens outside India, 'Enthiran' is the largest worldwide release after Hollywood film 'Spiderman'. The movie is being screened in Singapore, Malaysia, UK, China and the US.//

http://www.indianexpress.com/news/rajinikanths-enthiran-magic-grips-malaysia/691605/0

எனவே எந்திரன் தமிழ் நாடு 900 +வெளிநாடு 300 =1200 பிரிண்ட்கள், மற்ற 1300 பிரிண்ட்கள் இந்தியாவின் மற்ற மொழிகளில் வெளியாகி இருக்கும் எனலாம், இதுவே தமிழ் சினிமாவின் மிக அதிகப்பட்ச வியாபார எல்லையாகும், இதனை தாண்டிய எண்ணிக்கையில் வெளியிடுவது , வியாபார ரீதியாக லாபகரமானதாக எந்த தமிழ்ப்படத்திற்கும் இருக்க வாய்ப்பில்லை.

அப்போ 3000 பிரிண்ட் போட்டு உலக அளவில் வெளியிடப்போவதாக சொல்வதெல்லாம் வாயிலேயே வடைசுடும் தொழில்நுட்பமே :-))



சமீபத்திய தகவல்களின் அடிப்படையில், விஷ்வரூபம் 2000 தியேட்டர்களில் வெளியாகும் என தெரியவருகின்றனது.

லோகநாயகர் ,இந்து பிசினெஸ்லைனுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

மொத்தம் 2000 பிரதிகள் வெளியாகும் என்றும் ,அவற்றில் 400 தமிழிலும்,அகில இந்திய அளவில் 1200 பிரதிகளும் என்கிறார், அப்படியானால் அயல்நாட்டில் 400 பிரதிகள் என கணிக்கலாம்.

செய்தி:

http://www.thehindubusinessline.com/industry-and-economy/marketing/we-have-to-embrace-technology-and-sail-with-that-kamal-haasan/article4188449.ece

//Have you signed up with all the six DTH players?

No. So far, we have signed up with Airtel, Dish, Videocon and Reliance. They came as a consortium.

How many DTH homes do you expect to watch the movie at this price point?

The DTH players we have tied up with so far, collectively reach around 15 lakh homes. I expect at least 40-50 per cent would watch.

Have you already sold the satellite rights of the film?

Yes, to Jaya TV.

How much do you think Viswaroopam would gross?

I do not want to predict. But I can safely say the movie would gross at least Rs 150 crore.

How many screens are you planning?

Globally 2,000 screens. Of this, 400 in Tamil Nadu, 1,200 in other parts of the country.

Would you be able to rope in so many with this kind of protest?

In politics and business, there is no permanent enemy. The same people who are on my side now were on the other side of the fence when I said we cannot fight satellite channels 20 years ago. This is the way going forward, and we have to embrace technology and sail with that.//

அகில இந்திய அளவில் டிடிஎச் மார்கெட் அளவினை காட்டும் படம்.


இதில் மொத்தம் 48 மில்லியன் டிடிஎச் பயணாளர்கள் என்றாலும் ஆக்டிவ் சப்ஸ்கிரைபர் எண்ணிக்கை 29 மில்லியன்கள் என்பதை கவனிக்கவும், ஏன் எனில் அவர்கள் தான் உண்மையான  வாடிக்கையாளர்கள், மற்றவை எல்லாம் பயன்ப்பாட்டில் இல்லாத செட் டாப் பாக்ஸ்களின் எண்ணிக்கை எனலாம்.

மேலும் தற்போது டாடா ஸ்கை பின்வாங்கியதாக தெரிகிறது, டிஷ், வீடியோகான், ரிலையன்ஸ் பிக் டீவீ,ஏர் டெல் ஆகிய நான்கிலும் தமிழில் மட்டுமே டிடிஎச் இல் வெளியாகும் என்கிறார்.

தமிழ்நாட்டின் டிடிஎச் வாடிக்கையாளர்களில் முதலிடம் வகிக்கும் சன் டிடிஎச் 75-80% வைத்துள்ளது, அப்படி இருக்கும் போது மற்ற நான்கு சேவைகளிலும் 15 லட்சம் பேர் என சொல்வது மிகையான எண்ணிக்கையாகும்.

ஏன் எனில் தமிழ்நாட்டில் உள்ள மொத்த டிடிஎச்  வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையே சுமார் 21 லட்சம் தான். அதில் சுமார் 80% சன் டிடிஎச் வசம் என்னில் எஞ்சியவர்களின் எண்ணிக்கை எவ்வளவு இருக்கும் என ஒரு கணக்கீடு,

//Sun Direct, with 17.5 lakh connections, controls 80% to 85 % of the DTH subscriber base in Tamil Nadu. The balance is shared by other operators like Airtel, Videocon, Tata Sky and Dish TV.//

http://articles.timesofindia.indiatimes.com/2011-09-16/chennai/30164367_1_dth-arasu-cable-tv-entertainment-tax

தமிழ் நாட்டில் 80-85% டிடிஎச் இணைப்புகளை சன் டிவி வைத்துள்ளதாகவும் அதன் எண்ணிக்கை 17.5 லட்சங்கள் என்கிறார்கள்.

80% என்றே எடுத்துக்கொள்வோம், = 17.5 லட்சம் என்றால் 100%?

17.5*100/80=21.875 லட்சங்கள்.

சன் டிவி யின் புள்ளிவிவரங்கள் சரியாக இருக்குமானால் தமிழ்நாட்டில் செப்டம்பர் ,2011 வரையில் 21.875 லட்சங்கள் தான் மொத்த டிடிஎச் இணைப்புகள் மட்டுமே.

சன் டிடிஎச் இன் 17.5 லட்சம் போக மீதம், 4.375 லட்சங்கள்.

அதனை டாடா, டிஷ், ஏர்டெல், பிக் டீவி, விடியோகான் ஆகியோர் சமமாக பிரித்துகொள்வதாக கொண்டால்.

ரிலையன்ஸ், டிஷ், விடியோகான், ஏர்டெல் ஆகியோருக்கு சுமார் நான்கு லட்சம் இணைப்புகளுக்கு கீழ் தான் வரும், இதில் ஆக்டிவ் சப்ஸ்கிரைபர்கள் எண்ணிக்கை என பார்த்தால் இன்னும் குறையும், அவற்றில் கட்டாயாம் 1000 ரூ செலுத்தி லோகநாயகரின் படத்தை எத்தனைப்பேர் பார்ப்பார்கள்? அதுவும் ஒரே ஒரு முறைக்கு!!!

தியேட்டர் கட்டண உயர்வுக்கு யார் காரணம்?


தியேட்டரில் கட்டணம் உயர்ந்துவிட்டதால் தான் மக்கள் திரையரங்குகளுக்கு வருவதில்லை ,அப்படி வராதவர்களை வர வைக்கவே டிடிஎச்சில் வெளியிடுவதாக லோகநாயகர் சொல்வது சாத்தான் வேதம் ஓதுவது போல எப்படி என்றுப்பார்ப்போம்.

ஆதிகாலத்தில் எல்லாம் திரைப்பட விநியோகம் சதவீத அடிப்படையில் திரையிடப்படும், விநியோகஸ்தரும், திரையரங்கங்களும் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தினை  வசூலில் எடுத்துக்கொள்வார்கள், அதாவது சுமார் 40% ,மீதி 60% தயாரிப்பாளருக்கு, இம்முறையில் விநியோகஸ்தர்கள், திரையரங்கங்கள் முதலில் பணம் முதலீடு செய்ய தேவையில்லை.

பின்னர் படம் கிடைக்க போட்டி உருவாகவே ஒரு குறிப்பிட்ட நடிகரின் படம் எடுத்து திரையிட்டால் நல்ல வசூலாகும் என்ற நம்பிக்கையில் விநியோகஸ்தர்கள் முன்னதே தயாரிப்பாளருக்கு பணம் கொடுத்து ஏரியா வாங்க ஆரம்பித்தனர் ,இப்படியாக எம்.ஜி எனப்படும் மினிமம் கியாரண்டி பணம் செலுத்தும் முறை உருவாகியது.

(MGR- The Real Box Office King)

எம்ஜிக்கு பிள்ளையார் சுழி போட்டது புரட்சித்தலைவர் எம்ஜிஆர் என்றால் மிகையல்ல, அவரது படங்கள் நிச்சயம் விநியோகஸ்தரை காலை வாரிவிடாது என்ற நம்பிக்கையில் ,படம் துவங்கிய அன்றே ஏரியா விற்பனை ஆகி தயாரிப்பாளர் கையில் பணம் கிடைத்துவிடும், அதை வைத்தே தயாரிப்பாளர்கள் படத்தினை எடுத்து முடிப்பார்கள்.

இதனால் எம்.ஜி.ஆர் என்பதையே மினிமம் கியாரன்டி .ராமசந்திரன் என சொல்வார்களாம்.

விநியோகஸ்தரிடம் நியாயமான அளவுக்கு எம்ஜி வாங்கி தயாரித்தவரையில் இம்முறையில் யாருக்கும் நட்டம் வரவில்லை. பின்னர் நடிகர்கள் சம்பளம் கோடிகளில் போய் தயாரிப்பு செலவு அதிகம் ஆனது ,எனவே போட்டக்காசினை எடுக்க தயாரிப்பாளர் அதிக எம்.ஜி கேட்க , விநியோகஸ்தர்களும், திரையரங்குகளிடம் அதிக எம்ஜி தொகை கேட்கலாயினர்.

எம்ஜி தொகைக்கு ஏற்ப வசூலானால் பரவாயில்லை நூற்றுக்கு 90 படங்கள் ஒரு வாரம் கூட ஹவுஸ்ஃபுல் ஆக ஓடுவதில்லை பின் எப்படி திரையரங்குகள் கட்டிய எம்ஜி ஐ எடுக்க முடியும் , எனவே ஓடும் ஒரு வாரத்திற்குள் போட்ட காசை எடுக்க அரசு நிர்ணயித்த கட்டணத்திற்கு மேல் வசூலிக்க திரையரங்குகள் முற்பட்டன. இப்படியாகத்தான் திரையரங்குகளில் கட்டணம் உயர்ந்தது.

மலிவாக படம் பார்க்க நினைக்கும் ரசிகர்கள் திருட்டு டிவிடி பக்கம் போனார்கள், தாய்குலங்கள் தொலைக்காட்சி சீரியல்களில் மூழ்கினார்கள் ,இதனால் பல திரையரங்குகளும் காற்றாடின, 2000 ஆண்டு வாக்கில் தமிழ் நாட்டில் சுமார் 2000 அரங்குகள் இருந்தன இன்று அவை 1,197 என்ற எண்ணிக்கையில் சுருங்கிவிட்டன, இன்னும் சில ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் கீழ் போய்விடும் எனலாம்.

சிறிய படங்களை போட்டாலும் கட்டணம் குறைவாக வைப்பதில்லை என்கிறார்கள், உண்மை தான் ஆனால் எந்த சிறிய படத்தயாரிப்பாளரும் குறைவான கட்டணம் வைத்து பொறுமையாக வசூலீக்க நினைப்பதில்லையே, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் போட்ட முதலை எடுக்க நினைக்கிறார்கள்.

ஏன் எனில் திரையரங்க வருமானம் என்பது ஒரு நாள் அரங்க வாடகை என நிர்ணயித்த கட்டணம் மட்டுமே, டிக்கெட் விலை கூட இருந்தாலும், குறைவாக இருந்தாலும் அத்தொகை மட்டுமே அரங்க உரிமையாளருக்கு, மற்றவை எல்லாம் விநியோகம் செய்தவர் மூலம் தயாரிப்பாளருக்கு போய்விடும்.

தினசரி வசுலின் அடிப்படையில் பணத்தினை பெறுவது ரிஸ்க் என எம்ஜியில் விற்கிறார்கள், எம்.ஜி எடுக்க முதல் மூன்று நாள் ஓப்பனிங்க் கலெக்‌ஷன் தான் வழி எனவே திரையரங்குகள் அதிக கட்டணம் வசூலிக்கின்றன.

எனவே திரையரங்கில் கட்டணம் குறைய வேண்டுமானால் தயாரிப்பாளர் தான் முதல் முயற்சி செய்ய வேண்டும்.

இவ்வளவு பேசும் லோகநாயகர் , திரையரங்குகள் அரசு நிர்ணய கட்டணம் மட்டும் வாங்கிக்கொண்டு எனது படத்தினை திரையிடுங்கள், எத்தனை நாள் ஓடுதோ அதற்கேற்ப எனக்கு வசூலாகட்டும் என சொல்ல வேண்டியது தானே?

மேலும் தமிழில் பெயர் வைத்தால் கேளிக்கை வரி இல்லை என சட்டம் இருக்கிறது, கண்டப்படி பெயரை வைத்துவிட்டு தமிழ் என சொல்லி கேளிக்கை வரிப்பெரும் தயாரிப்பாளர்கள், கேளிக்கை வரி தள்ளுபடிக்கு இணையான அளவுக்கு கட்டணம் குறைக்க சொல்ல வேண்டியது தானே, ஆனால் அப்பணத்தினை எடுத்து செல்வதும் தயாரிப்பாளர்களே அல்லவா?

லோகநாயகர் , விஷ்வரூப் என இந்தியில் பெயர் வைத்துள்ளார், அதனை தமிழில் "விஸ்வரூபம்" என எழுதிவிட்டால் தமிழ்ப்பெயர் என ஏதாவது சொல்லி கேளிக்கை வரி வாங்கிவிடுவார் ,அதற்காக தான் பம்மிக்கொண்டு மம்மியைப்பார்த்ததும், சேட்டலைட் உரிமையை ஜெயா டீவிக்கு கொடுத்ததும் என்பது அனைவரும் அறிந்த ரகசியம்.

லோகநாயகர் , கேளிக்கை வரிக்கு ஏற்ப கட்டணம் குறைப்பேன் என சொல்லி திரையிட்டால் திரையரங்குகள் எதிர்க்க போவதில்லை, ஏன் எனில் எம்ஜியில் வெளியிடாமல் பெர்செண்டேஜில் வெளியிடுகிறேன், திரையரங்குகளுக்கு நஷ்டம் வராது என சொல்கிறார் அல்லவா , செய்ய வேண்டியது தானே?

DTH EFFECT:


# டிடிஎச் இல் வெளியிடுவது புரட்சி , அது திரையரங்குகளுக்கு வர இயலாதவர்களுக்கு வரப்பிரசாதம் என்கிறார்கள், ஆனால் அது வருங்கால சாபமாக முடியும் எனலாம்,

இன்று வரையில் தமிழ்நாட்டில் திரையரங்க நுழைவு கட்டணம் ,சினிமாட்டோ கிராபி ஆக்ட் 1939 படியே அரசு நிர்ணயம் செய்கிறது, இதனால் மல்டிபிளெக்சில் 120 ரூ அளவிலும் நகரப்பகுதியில் 50 ரூ எனவும் அரசு நிர்ணய கட்டணம் உள்ளது.

மும்பை,பெங்களூரில் எல்லாம் மல்டிபிளெக்சில் 250 ரூ அளவிலும்,சாதாரண அரங்கில் 100 ரு போல இருக்கிறது.

ஆந்திராவில் நம்மை விட கட்டணம் குறைவு.

தியேட்டரில் கட்டணம் கூடுதல் என்பதால்  மக்கள் வரவில்லை என்றால், டிடிஎச் இல் ஆயிரம் ரூ 1000 கட்டணம் வைத்தால் மட்டும் அதிலும் பார்த்துவிட்டு பின்னர்  தியேட்டருக்கும் எப்படி மக்கள் வருவார்கள், ஏற்கனவே சுளையாக ஆயிரம் ரூபாய் செலவாகிவிட்டது ,பின்னர் தியேட்டருக்கு செல்ல மீண்டும் ஆயிரம் ரூபாய் செலவிட யாரால் முடியும், மன்னு மோகன் சொன்னது போல பணம் என்ன மரத்திலா காய்க்கிறது, ஒரே வாரத்தில் ஒரே படத்துக்கு இரு முறை ரூபாய் இரண்டாயிரம் செலவு செய்ய ?

டிடிஎச் இல் படம் ரிலீசுக்கு முன்னர் பார்ப்பவர்கள் குறைவான எண்ணிக்கையில் இருந்தாலும், படம் நன்றாக இருந்தால் பக்கத்து வீட்டுக்காரனிடம் கூட நல்லா இருக்குனு சொல்ல மாட்டான்,ஆனால் படம் மோசமா இருந்துச்சுன்னா, முகநூல்,துவித்தர், எஸ்.எம்.எஸ் ,பிலாக்னு எல்லா இடத்திலும் காரித்துப்பி முதல் நாளே நெகட்டிவ் விமர்சனம் செய்து , கல்லாப்பெட்டிக்கு குண்டு வைத்துவிடுவான் :-))

ஆனால் பொது மக்கள் என்ன செய்வார்கள் எனில், தியேட்டர் போனால் செலவாகும், டிடிஎச் இல் பார்த்தால் இன்னும் செலவாகும்,எனவே  டிடிஎச் மூலம்  HD video தரத்தில் உருவாக்கப்பட்டு  கிடைக்கும் திருட்டு டிவிடி பார்ப்போம் என வீட்டில் இருந்து தரமான திருட்டு டிவிடி பார்ப்பார்கள் :-))

ஆனால் எது எப்படியோ திரையரங்க கட்டண நிர்ணயம் என்பது அரசின் கையில் இருப்பதால் ,நினைத்தப்படி கட்டணத்தினை அதிகாரப்பூர்வமாக மற்றவர்களால் உயர்த்த முடியாத கடிவாளம் உள்ளது.

ஆனால் டிடிஎச் இல் என்ன கட்டணம் நிர்ணயம் செய்வது என்ற கட்டுப்பாடு அரசிடம் இல்லை. டிடிஎச் மற்றும் படத்தயாரிப்பாளர் சேர்ந்து நிர்ணயிக்கலாம், அதனால் தான் லோகநாயகரின் படத்துக்கு ஒரே முறை பார்க்க 1000 ரூ என்றெல்லாம் அநியாயமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நாளை சூப்பர் ஸ்டார் படம் டிடிஎச் இல் வெளியானால் என்ன செய்வார்கள், 1,500 ரூ என்பார்கள், பின்னர் விஜய் ,அஜித், சூர்யா எல்லாம் நாங்க மட்டும் இளைத்தவர்களா எனப்போட்டி போட்டு விலை வைக்கக்கூடும்.

அதாவது அரசிடம் இருக்கும் கட்டண நிர்ணய அதிகாரத்தினை எடுத்து டிடிஎச் ஆபரேட்டர்கள் எனப்படும் பெரு முதலாளீகள் கையில் கொடுக்கிறார் லோகநாயகர், இது வருங்காலத்தில் வெற்றியடைந்தால் பணக்காரர்கள் மட்டுமே திரைப்படம் பார்க்கும் சூழலையும் உருவாக்கலாம்.

வால்மார்ட் போன்ற பெரிய நிறுவனங்கள் சில்லரை வர்த்தகத்தில் வந்தால் ஆரம்பத்தில் விலையை குறைத்து போட்டியாளர்களை அழித்துவிட்டு , பின்னர் விலை உயர்த்திவிடுவார்கள் என பூச்சாண்டிக்காட்டுவோர்களும், ஆரம்பத்திலேயே விலையை அதிகமாக வைக்கும் டிடிஎச் பின்னாளில் போட்டியாளர்களான திரையரங்குகள் இல்லாத நிலையில் இன்னும் விலை ஏற்றி நுகர்வோர்களை கட்டுப்படுத்தும் என்பதை உணராமல் ஆஹா  நல்ல முயற்சி என்கிறார்களே, நேரத்துக்கு ஏற்ப கொள்கை போல :-))

# திரைப்பட வியாபார வருவாய் என்பது இது நாள் வரையில் , தியேட்டர்கள், அதன் ஊழியர்கள், போஸ்டர் ஒட்டுபவர்கள்,விநியோகஸ்தர்கள்,அதனோடு தொடர்புடைய ஊழியர்கள், தயாரிப்பாளர்கள் என அனைவருக்கும் பகிரப்பட்டு ,அனைவருக்கும் வாழ்வாதாரமாக விளங்கியது.

டிடிஎச் முறை முழுக்க தலையெடுத்தால் இம்முறையில் வருவாய் டிடிஎச் ஆபரேட்டர்கள் எனும் பெரு நிறுவனத்திற்கும், தயாரிப்பாளருக்கும் இடையில் மட்டுமே பகிரப்படும் நிலை  உருவாகும்.

# வெளிநாட்டிலும் தமிழ்ப்படங்கள் டிடிஎச் இல் வெளியிடலாம் ,எனவே தமிழ்ப்படங்களுக்கு நல்ல வருவாய் பெருகும் என மனக்கோட்டை கட்டுகிறார்கள், ஆனால் வெளிநாட்டில் டிடிஎச் இல் வீடியோ ஆன் டிமாண்ட் முறையில் உள்ள சட்டம் என்ன சொல்கிறது என்றால், குறிப்பிட்ட மொழியில் டிடிஎச் சேவை ஒளிப்பரப்ப உரிமை வாங்கியவர்கள், அம்மொழியில் உள்ள மீடியாவைத்தான் வீடியோ ஆன் டிமாண்ட் முறையில் ஒளிபரப்பலாம் என்கிறது.

ஆங்கில டிடிஎச் சேவையில் ஆங்கிலப்படங்களும் ,பிரெஞ்ச் டிடிஎச் எனில் பிரெஞ்ச் படங்களுமே ஒளிபரப்பலாம், தமிழில் ஒளிபரப்பினால் டிடிஎச் லைசென்ஸ் ரத்து ஆகிவிடும்.

# சேட்டிலைட் உரிமம் என ஒரு தொலைக்காட்சிக்கு வழங்கும் போது ,அதன் டிடிஎச் உரிமம் அதில் அடங்கிவிடுவது போல தான் தற்போதுள்ளது, எனவே ஜெயா டீவிக்கு சேட்டிலைட் உரிமம் வழங்கப்பட்டிருப்பதால் அவர்கள் எதிர்த்தால் டிடிஎச் இல் ஒளிபரப்ப இயலாது. ஒரு வேளை தனியே பிரித்து உரிமம் வழங்கினாரா என தெரியவில்லை.

பிரச்சினை உருவாக்குவது என்றால் , டிடிஎச் உம் சேட்டிலைட் ஒளிபரப்பு எனவே , எங்களுக்கு விற்ற பின் டிடிஎச் இல் ஒளிபரப்ப கூடாது என ஜெய டீவி சொன்னால் , டிடிஎச் திட்டமே எடுபடாது.

இதே போல தொலைக்காட்சி உரிமம் பெறுபவர்கள் சேட்டிலைட் உரிமம் , டிடிஎச் உட்பட அனைத்தும் என்றால் , பெரிதாக வியாபாரம் டிடிஎச் இல் இருக்கு என சொல்வதும் அடிப்பட்டு விடும்.

---------------

ஒலி நுட்பம்:

(Rajni -the Mass)

சிவாஜி -3டி இல் இம்மாதம் மீண்டும் வெளியானதை அனைவரும் அறிவீர்கள், அதோடு அல்லாமல் டால்பி அட்மோஸ் -64 சேனல் 3டி ஆடியோவில் வெளியாகியுள்ளது, இந்தியாவில் சென்னை சத்யம் -செரின் அரங்கிலும், மும்பையில் ஒரு அரங்கிலும் மட்டுமே டால்பி அட்மோஸ் நிறுவப்பட்டுள்ளது. இது ஆரோ 11.1 3டி விட பல சேனல்களில் 3டி ஆடியோவை அளிக்க வல்லது, இதனை 3டி இம்மெர்சிவ் சவுண்ட் என்கிறார்கள்,அப்படி இருந்தும் பெரிதாக இவ்வொலி அமைப்பில்  உருவான முதல் தமிழ் படம் என விளம்பரப்படுத்திக்கொள்ளவில்லை, மேலும் லைப் ஆஃப் பை என்ற படமும் டால்பி அட்மோசில் தான் வெளியானது அவர்களும் நாங்கள் தான் சிறப்பான ஒலியுடன் படம் காட்டுகிறோம் என சொல்லிக்கொள்ளவில்லை.

சிவாஜி பழைய படம் ஆயிற்றே அதற்கு எப்படி டால்பி அட்மோசில் மீண்டும் ஒலிச்சேற்கை செய்திருப்பார்கள், புதிதாக ரீ-ரிக்கார்டிங் ஏ.ஆர் .ரஹ்மான் செய்திருப்பாரா என்றெல்லாம் யாருக்கும் கேள்வியே எழவில்லையா?

உண்மையில் புதிய ரீ -ரிக்கார்டிங் எல்லாம் செய்வதில்லை, எல்லாம் பழைய கள் புதிய மொந்தை டெக்னிக் தான் ,5.1 ஆடியோ டிராக்கினை மீண்டும் அடோப் பிரிமியர் புரோ டூல்ஸ்,MAC pro tool போன்ற ஒலி சேர்க்கை மென்பொருளில் கொடுத்தால் மீண்டும் 5.1 டிராக் ஆக தனியாக பிரித்து கொடுக்கும்(ஆனால் பழைய PCM track போல இருக்காது)  , அதனை அட்மோசின் 64 டிராக்கிற்கு ஏற்ப மறு ஒலிச்சேர்க்கை ,செய்து ,அட்மோஸ் கோடக்கில் கொடுத்தால் 64 டிராக் ரீ-ரிக்கார்டிங் தயார்.

உண்மையில் 64 டிராக் என்பதெல்லாம் கணினி மென்பொருள், கோடிங், மற்றும் மெட்டா டேட்டா வைத்து உருவாக்குவதே , இவ்வாறு பழைய ஆடியோ டிராக்கினை எடிட்டிங்கில் மாற்றுவது அப்ஸ்கேலிங் என்பார்கள்,ஆனாலும் புதிதாக ரீ-ரிகார்டிங் செய்த அளவுக்கு இருக்காது,முழுதாக பின்னர்  இன்னொரு பதிவில் காணலாம்.

இதை விட இன்னொரு எளிய வழி இருக்கிறது, எந்த பழைய ஒலிச்சேர்க்கை கோப்பையும் டால்பி அட்மோஸ்,ஆரோ போன்ற ஒலிச்சேர்க்கை கருவியில் கொடுத்தாலும் தானாகவே பல சேனல் ஆடியோ ஆக மாற்றிவிடும், இதனை அப்மிக்ஸிங் என்பார்கள்.

எனவே தற்போது இந்தியாவில் ஆரோ,அட்மோஸ் ஆகிய ஒலிச்சேர்க்கையில் அனுபவம் கொண்ட ஆடியோ ரெக்கார்டிங் சென்டர்களே இல்லாத சூழலில் அனைவரும் அப்மிக்ஸிங் செய்திருக்கவே வாய்ப்புள்ளது, எனவே தான் சிவாஜி 3டி அட்மோஸ் படம் அமைதியாக வெளியாகியுள்ளது எனலாம், ஆனால் லோகநாயகர் ,படத்தினை விளம்பரப்படுத்த கொஞ்சம் அதிகமாகவே ஆரோ 11.1 3டி என சவுண்டு கொடுக்கிறார் :-))

அடுத்தப்பதில் ஆரோ 3டி, டால்பி அட்மோஸ் போன்ற மல்டி சேனல் ஆடியோ முறைகளை ஒப்பிட்டு அவை எல்லாம் வெறும் எண்ணிக்கை விளையாட்டே, உண்மையான ஒலிதரத்தின் அளவில் பெரிதாக ஏற்பட்ட முன்னேற்றம் என்ன என்பதை காணலாம்.
----------------------

பின்குறிப்பு:

தகவல் மற்றும் படங்கள் உதவி,

டைம்ஸ் ஆப் இந்தியா, இந்து பிசினெஸ் லைன்,இந்தியன் எக்ஸ்பிரஸ்,dreamdth.com, தமிழக வருவாய் துறை, விக்கி, கூகிள் இணைய தளங்கள் ,நன்றி!
-------------------------------------------------