ஹாலிவுட் படங்களுக்கு இணையாக தமிழில் ,இந்தியாவில் படம் எடுக்கிறோம்னு சொல்வதெல்லாம் ஒரு எதிர்ப்பார்ப்பை உருவாக்கி மக்களை கவர செய்யும் விளம்பர யுக்தியாகும் , ஹாலிவுட் தொழில் நுட்பத்துக்கு சுமார் 20 ஆண்டுகள் பின் தங்கியே நமது தொழில்நுட்பம் செயல்படுகிறது, ஆனாலும் நமது பொருளாதார நிலையை கணக்கிலெடுக்கும் போது நாம் அவ்வளவு தான் செலவு செய்ய முடியும், எனவே அதில் தவறில்லை,ஆனாலும் "ஹாலிவுட்டுக்கு" இணையானு முழக்கம் மட்டும் குறைவதில்லை.அவங்க 20 வருடம் முன்னர் பயன்ப்படுத்திய ஒரு தொழில்நுட்பத்தினை இப்போ பயன்ப்படுத்திட்டு ஹாலிவுட் தொழில்நுட்பம்னு சொல்லிக்கொள்ளும் போக்கினை எப்போ கை விட போறாங்க?
டெர்மினேட்டர் -2 படம் 1991இல் வந்த படம் அதுக்கு பயன்ப்படுத்திய தொழில்நுட்பத்தினை , இப்போ வந்த எந்திரனில் பயன்ப்படுத்திட்டு ,ஹாலிவுட் அளவுக்கு கிராபிக்ஸ் பயன்ப்படுத்தி இருக்கோம்னு சொல்வதெல்லாம் விளம்பர யுக்தியே.டெர்மினேட்டரில் பயன்ப்படுத்திய மெகட்ரானிக்ஸ், இன்ன பிற பழைய தொழில்நுட்பங்களை எந்திரனில் பயன்ப்படுத்தி "சூப்பர் ஸ்டாரை கஷ்டப்படுத்தி எடுத்தார்கள், தற்போதுள்ள தொழில்நுட்பத்தில் எளிதாக எடுத்திருக்கலாம் ஆனால் அதனை பயன்ப்படுத்திக்கொள்ள இந்தியாவில் முடியாமல் போனதற்கு காரணம் பட்ஜெட், ஹீரோவுக்கு 20 கோடி கொடுப்பாங்க, ஆனால் தொழில்நுட்பத்திற்கு அவ்ளோ செலவு செய்ய மாட்டாங்க, நம்ம தயாரிப்பாளர்கள் சொல்லும் 100 கோடிக்கு மேலான செலவு கணக்கெல்லாம் சும்மா உட்டாலக்கடியென நினைக்கிறேன் :-))
டெர்மினேட்ட்ர்-2 படத்திற்கு 1991ல் 94 மில்லியன் டாலர்கள் செலவு செய்யப்பட்டுள்ளது, அப்போதைய ஹாலிவுட் படங்களில் அதுவே அதிகப்பட்சம், அதில் 51 மிலியன் டாலர்கள் "visual effects&production" க்கு செலவிடப்பட்டுள்ளது என்றால் படத்தின் தரத்திற்கு எத்தனை முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பது புரியும்.
ஹாலிவுட்டில் இதெல்லாம் சாத்தியம் ஆக காரணம் , மிக வேகமான கணினிகளும் ,வேகமான கிராபிக்ஸ் சிப்புகளுமே, மேலும் நினைவகம், கேமரா திறன், மென்பொருள் என அனைத்தும் முன்னேறிவிட்டது.நம்ம நாட்டில இன்னும் சரியான "கம்பியூட்டர் ஹார்ட் வேர் "உள்ள கிராபிக்ஸ் ஸ்டுடியோவே இல்லை எனலாம், சிலிக்கான் கிராபிக்ஸ் ஒர்க் ஸ்டேஷன்களை தாண்டி சிறப்பான "ஹார்ட் வேர்" என எதுவும் இந்தியாவில் பயன்ப்படுத்துவதில்லை, அப்புறம் எங்கே இருந்து ஹாலிவுட்டுக்கு இணையாக கிராபிக்ஸ் செய்ய :-))
நம் ஊரில் புதிய மென் பொருள் வந்தால் உடனே வாங்கிவிடுவார்கள் ஆனால் அதற்கு தேவையான "ஹார்டு வேர்" வாங்காமல் மினிமம் செட் அப்பில் மென்பொருளை இயக்குவதால் காட்சிகளிலும் அதிக துல்லியம் இருக்காது.இப்போது அதிவேக கணினி, GPU, ரேம் மெமரி எல்லாம் உள்ளதால், உடனடியாக திரையில் ரிசட் பார்க்க முடியும், இதனையே "live action" என்கிறார்கள். நம்ம ஊருக்கு இதெல்லாம் வர சில காலம் பிடிக்கலாம்,அது வரையில் எல்லாம் போஸ்ட் புரொடக்ஷனில் தான் வேலை நடக்கும்.
கீழ் கண்ட காணொளியில் எப்படி மோஷன் கேப்சரிங்/பெர்மான்ஸ் கேப்சரிங் செய்யப்படுகிறது, 3டி உருவத்தினை எளிதாக உருவாக்க 3டி கேமிரா எல்லாம் பயன்ப்படுத்துவதனை காணலாம். இதில் சிறப்பு என்னவெனில் live action, 3டி, விர்ச்சுவல் கேமரா ,மோஷன் கேப்சரிங் எல்லாம் ரியல் டைமில் நடக்கும், இப்படியான தொழில்நுட்பத்தில் தான் அவதார், டின் டின் எல்லாம் உருவானது.
video:
விடியோ-2
------------
சூப்பர் ஸ்டார் நடிக்கும் "கோச்சடையான் படம் "பெர்பார்மென்ஸ் கேப்சரிங்க்" தொழில்நுட்பத்தில் எடுக்கப்படுவதாக சொல்லப்படுகிறது, அப்படி எடுக்கப்பட்டால் இந்தியாவின் முதல் படமாக அமையும், பட்ஜெட் அந்த அளவுக்கு தாங்குமா ,எப்படி பயன்ப்படுத்தி எடுக்க இருக்கிறார்கள் என தெரியவில்லை, சூப்பர் ஸ்டார் வரும் காட்சிகளை மட்டும் அப்படி எடுத்து செலவினை குறைப்பார்கள் என நினைக்கிறேன், மற்ற கதாபாத்திரங்கள் இயல்பானவர்களாக இருக்கலாம்.
சுட்டி:
*****
பின் குறிப்பு:
தகவல் மற்றும் படங்கள் உதவி, கூகிள்,filmmakeriq.com இணைய தளங்கள்,நன்றி!
பின் குறிப்பு:
தகவல் மற்றும் படங்கள் உதவி, கூகிள்,filmmakeriq.com இணைய தளங்கள்,நன்றி!
------------
13 comments:
கோச்சடையான் இந்த MOTION CAPTURE TECHNOLOGYஇல் தான் எடுக்குராங்கனு கேள்வி பட்டேன் உண்மையா ???
கவிதை நாடன்,
வாங்க,நன்றி!
கோச்சடையான் பெர்பார்மென்ஸ் கேப்ச்சரிங்கில் எடுப்பதாக சொல்லப்படுகிறது, அந்த அளவு பட்ஜெட் செலவு செய்வார்களா என தெரியவில்லை, படம் பற்றி மார்ச்சிலேயே ஒரு பதிவுப்போட்டாச்சு,
இங்கு பாருங்கள், மேலும் விவரம் கிடைக்கும்.
வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: கோச்சடையானில் ரஜினி நடிப்பது நிஜமா?
வணக்கம்.இப்போதைக்கு இது மட்டும் போதும்.என்ன சொல்றது உங்கள பத்தி..என்ன கமெண்ட் பண்றது ? யோசிச்சிட்டு வரேன்
நம்மூர் படம் ஹாலிவுட் தரத்துல இருக்கறதில்லைங்கறத விட கதை இருக்காங்கிற விவாதம் முக்கியம்..
shwara.blogspot.com
கோவை நேரம்"ஜீவா"
வணக்கம் நண்பா,நன்றி!
என்னைய பெருசா போட்டு தாக்கும் திட்டம் எதுவும் இல்லையே ?:-))
--------
வைத்தீ,
வாங்க, வணக்கம்,நன்றி!
முதல் தடவை வரிங்கன்னு நினைக்கிறேன்,நன்றி!
நம்ம ஆட்கள் படம் வரும் முன்னர் எப்போதும் "ஹாலிவுட்" தரத்தில்னு ஒரு பில்ட் அப் கொடுப்பதால் சொன்னேன்.கதையே ஹாலிவுட்டில் இருந்து சுடுவது தானே:-))
எந்திரனில் மட்டும் 10 ஹாலிவுட் படத்தின் கதை இருக்கு :-))
மிக அருமையான விளக்கம்! நடிகருக்கு கொடுப்பதில் கால்பங்கு கூட தொழில்நுட்பத்திற்கு செலவிடுவதில்லை என்பது வேதனை!
வவ்வால் சார், தளத்தை நீலமாக்கியதால், சரி நீலப்படம் தான் காண்பிக்கப்படும் என்று எதிர்பார்ப்போடு தேடினால்....ம்ம்ம்ம்ம்ம்ம்.
ஓ!, அந்த மாதிரி படத்தை இதில்தான் இப்படிதான் இனிமேல் எடுப்பார்கள் போல. முதல் படம் நான் நீ ஷர்மி வைரமாக இருந்தால் எப்படியிருக்கும். இப்பவே புல்லரிக்குதே.
சினிமா தொழில்நுட்பத்தை விளக்கியுள்ளீர்கள் நன்றி.
//
எந்திரனில் மட்டும் 10 ஹாலிவுட் படத்தின் கதை இருக்கு///
Sony pix ல், i robot படம் பார்த்தபோது, கூட இருந்தவர், நம்ம ஷங்கர் பெரிய ஆளுப்பா!!! வெள்ளைக்காரனே எந்திரனை காப்பியடித்து கிளைமாக்ஸ் எடுத்திருக்கான் பாரேன்- என்ற கமெண்டுகளை கேட்கநேர்ந்தது.
நானும் டிவிடி க்கு தான் வெயிட் பண்றேன்.படம் சூரா மொக்கயாம் தப்பிச்சிக்கோ.
வௌவால் உங்களோடு பேச வேண்டும் என்று ரொம்ப நாள் யோசனை.ஏன் தினமும் கேபிள் கிட்ட கேள்வி கேட்டு அவரை டென்ஷன் பண்றீங்க.அவர் ஏற்கனவே ஷர்ட் டெம்பர்.என்ன கேள்வி கேட்டாலும் எரிந்து விழுவார்.நான் கூட சில சமயம் வாங்கி கட்டி கொண்டதுண்டு.
சுரேஷ்,
வாங்க,நன்றி!
அப்படித்தான் நம்ம ஊரில் பெரும்பகுதி சம்பளமாக போய்விடும், மிச்சம் மீதி பணம் இருந்தால் படம் எடுப்பார்கள், இல்லைனா பாதியில தொங்க விடுவார்கள் :-))
இப்போ எல்லாம் நடிகர், தொழில்நுட்ப நபர்கள் எல்லாம் முழு சம்பளம் வச்சா தான் கால்ஷீட் தருகிறார்கள், இதனால் படம் முடிவதற்குள் தயாரிப்பாளார் வட்டிக்கட்டியே போண்டியாகிவிடுகிறார் :-))
-------
நரேன், வாரும்,நன்றி!
வானத்தை அண்ணாந்துப்பார்த்தால் கூட நீலப்படம் ஓடனும்னு எதிர்ப்பார்ப்பீரோ :-))
ஹி..ஹி ஒரு 10-15 வருஷத்துக்கு முன்னர் மாலைமதியில் வந்திருக்க வேண்டிய கதை , இப்போ எழுதி படமா எடுத்தால் எடுபடாதுனு சினிமா வித்தகருக்கே தெரியும் :-))
டிவிடி எல்லாம் நிறைய இருக்கும் போது நல்ல ஸ்பானிஷ், ஜெர்மன் படம் பார்த்தால் கலகலப்பா கதை பிடிக்கலாம் :-))
உங்கள் நண்பர்களும் குசும்பு பிடித்தவர்கள் போல :-))
----------
வாங்க சீன் கிரியேட்டர்,
நன்றி!
எல்லாருமே அதான் சொல்றாங்க, நான் பெரும்பாலும் லோக்கல் தியேட்டரில் பார்ப்பேன் செலவு கம்மியாகும், இந்த படம் டிவிடி தான் , தியேட்டரில் ஃபாஸ்ட் ஃபார்வர்டு வசதியில்லையே :-))
சும்மா ஒரு தமாசுக்கு கலாய்க்க தான், ஒரு பக்க சார்பாகவே எழுதுவதால் அப்படி, மற்றபடி வேறொன்றும் இல்லை.
என்னமோ பயங்கரவாதியைப்பார்த்து பேசுறாப்போல யோசனையில இருந்து இருக்கிங்களே, நாம ஒரு காமெடியான ஆளு தான் ,தாரளமா பேசலாம் :-))
நிறைய டெக்னிக; தகவல்கள் தெரிந்துகொண்டேன். நன்றி.
வௌவால் "ஹாலிவுட் படங்களுக்கு இணையாக" என்று சொல்லுவதில் தப்பில்லை அது உண்மையும் கூட. அவங்க சொல்லாம விடறது "பழைய" ஹாலிவுட் படங்களுக்கு இணையாக என்பதை. :)) பழையன கழிதல் என்பதை பழையது என்பதை சொல்லாம விடவது என்று புரிந்துள்ளார்கள் என நினைக்கிறேன்.
முரளிதரன்,
வாங்க,நன்றி!
-----------
குறும்பன்,
வாங்க,நன்றி!
அதே ..அதே...நானும் அந்த பழைய என்பதை நினைத்தே எழுதினேன், ஆனால் பழைய என்ற சொல்லை பயன்ப்படுத்த மறந்துவிட்டேன்.
நான் சொல்ல வந்ததும் அதுவே, எப்படியோ அதையே தொட்டுவிட்டீர்கள்,
நம்மாளுங்க காப்பி அடிக்கும் போதும் பல காலத்துக்கு முன்னர் வந்த படமா பார்த்து தான் காப்பி அடிப்பாங்க, பை சைக்கில் தீவ்ஸ் ஐ பொல்லாதவன் ஆக்கியது போல :-))
சுட்டிக்கும் சேர்த்து இங்கேயே பின்னூட்டம் போட்டு விடுகிறேன்.
ரவின்னு அனானி பேர் போட்டா அது செந்தழல் ரவியா!என்னா ஒரு கிளி ஜோஸ்யம்:)
ஒரு ஆளையும் விட்டு வைக்க மாட்டீங்க போல தெரியுதே!முன்பு கமல் இப்ப மாட்டுனது ரஜனியா?
உங்களையெல்லாம் குஷ்பு தமிழ்த்தொண்டு புரியும் சுந்தர் சீ யின் இயக்கத்தில் உண்மைத்தமிழன்,அட்ராசக்கை சி.பி சினிமா விமர்சன சிபாரிசில் கலகலப்பு படத்தைத்தான் பார்க்க வைக்கனும்.திருட்டு வீடியோ பார்க்கும் ஆசைக்கும் கூட மண்ணள்ளிப் போட்டுட்டார் சுந்தர் சீ.
மோஷன் கேப்சரிங் நுட்பமெல்லாம் அவதார் படத்தை சார்ந்தது என்றாலும் கறுப்பு ரஜனியை வெள்ளை ரஜனியாக்கிய மாதிரி ரஜனி சார்ந்த காட்சிகளிலாவது தொழில் நுட்பங்களை புகுத்துவது வரவேற்க தக்க வேண்டிய விசயம்தானே!
Post a Comment