Friday, May 05, 2006

நீங்காத நினைவுகள்!

அன்பர்களே கவிதைக்கு பொய் அழகு இதை நான் கவிதை என்று சொல்வது உ(எ)னக்கு அழகானு கேட்காம ..திரைப்படம் பார்க்கும் போது வரும் பாடல் காட்சிகளுக்கு எல்லாம் கதாநாயகியின் நாபிகமல தரிசனத்தை தியாகம் செய்து புகை பிடிக்க போவது போல் போகாமல் தம் கட்டி படிக்கவும் இந்தக் கவிதையை!

நீங்காத நினைவுகள்!


சிலந்தி பின்னும் வலையென

என் மனகுகையெங்கும் நினைவு வலைகள்

முடிவற்று படர்கின்றது

முன்னிரவில் தேய்பிறை நிலவொளியில்

தேங்கிய மழை நீரில்

நான் கண்ட உன் பிம்பம்

நாள் தோறும் வளர் பிறையென வளர்கிறது

நினைவு அடுக்குகளில் நீக்கமற நிறைந்துவிட்ட

நீங்காத நினைவுகள் முடிவற்று நீள்கிறது

தூக்கமற்ற இரவுகளின் நினைவோடை கனவுகளில்!

5 comments:

வவ்வால் said...

நரியா,
மனம் பின்னிய வலையில் மனிதன் சிக்கி கொள்கிறான் என்பதையே அப்படி சொல்லி உள்ளேன்.தங்கள் வருகைக்கு நன்றி! -வவ்வால்

Anonymous said...

vavval...silanthi patri pesukiratho..

valai aanal enna pazhadaintha kugai aanal enna...

manitha manam...pala ganangalai kooda kuruki ..andam kadakum thiran kondathitre...

vavalaga irupinum atharkum manam vithivilakillaye NANBA...

வவ்வால் said...

நன்றி மற்றும் வணக்கம் பெபி!
/மனம் பல கானகங்களை கூட குறுக்கி அண்டம் கடக்கும் திறன் வாய்ந்ததாயிற்றே/

உங்கள் சிந்தனை வீச்சு பிரமிப்பூட்டுகிறது! மனம் ஒரு மந்திர பெட்டகம் அதன் புதிர்கள் அவிழ்க்க பட இயலாது எளிதில் என்பதனையே என் கவிதையில் வெளிப்படுத்தி இருக்கிறேன். மனிதனுக்கு மனம் உண்டு அதன் சிந்தனைகள் சிக்கலானது ஒரு கட்டுக்குள் அடங்காது என்பது தான் இதன் உள்ளடக்கம்!

Anonymous said...

Greets to the webmaster of this wonderful site! Keep up the good work. Thanks.
»

வவ்வால் said...

நன்றி ,அனானி 1 மற்றும் 2 ,மீண்டும் வருக!