Thursday, May 18, 2006

என்னவானேன் நான்...

நீ பிரிந்த தருணம் முதல்...

கண்ணீர் இல்லா கண்கள் ஆனேன்

தண்ணீர் இல்லா தடாகம் ஆனேன்

உணர்வு இல்லா உருவம் ஆனேன்

வேர் இல்லா மரம் ஆனேன்

வேகம் இல்லா காற்று ஆனேன்

தோகை இல்லா மயில் ஆனேன்

தூக்கம் இல்லா துயரம் ஆனேன்

ராகம் இல்லா பாடல் ஆனேன்

மேகம் இல்லா வானம் ஆனேன்

நிலவு இல்லா இரவு ஆனேன்

நிச்சயமில்லா கனவு ஆனேன்

இத்தனையும் ஆன பின்னும்

இறவாது இருக்கின்றேன் மண்மீது

மீண்டும் சந்திப்போம் என்றாவது என்று!

11 comments:

Anonymous said...

பிரிவு சாச்வதமன உலகதில்..தர்காலிக பிரிவு நேரிடுதல்...தவிர்க இயலாத ஒன்ட்ராகி விடுகிரதேய்....கன்னேர் எதர்கோ..

வவ்வால் said...

வாங்க பெபி,

மீண்டும் வருகை தந்தமைக்கு நன்றி,பிரிவு தற்காலிகமோ,நிரந்தரமோ இதயத்தில் ஏற்படும் வலி ஒன்றே,அதன் வெளிப்பாடே கண்ணீர் எனலாம்.சிலர் கவலைகளை கண்ணீரில் கரைக்கிறார்கள் சிலர் டாஸ்மாக் தண்ணீரில் கரைக்கிறார்கள்.ஹெ.... ஹெ..ஹெ!

நரியா said...

Vavaal avargale "Thaadagam" endraal enna ?

Anonymous said...

ovoru pirivilum thaan nesam adigharikkum...so onnum aagamaatengha...

Anonymous said...

adada per varalai...so retry

வவ்வால் said...

வணக்கம் நரியா,நன்றி!
தடாகம் = குளம் என்பது எளிய வார்த்தை தானே திரைப்படங்களில் கூட பயன்படுத்தப்பட்டுள்ளதே

தடாகத்தில் தாமரைப் பூ மீது மீன் இரண்டு தடு மாறி விழுந்ததோ.... என மைதிலி என்னை காதலி படத்தில் பாடல் கூட உள்ளதே!

வவ்வால் said...

வணக்கம் கீரா,நன்றி!
ஆம் ஒவ்வொரு பிரிவிலும் நேசத்தின் அளவு கூடுகிறது ஆனல் பிரிவுற்று இருக்கும் காலத்து ஏற்படும் நினைவுகளின் பதிவே கவிதை!

Anonymous said...

Aha kalakiteengah pongha

வவ்வால் said...

வணக்கம் கீரா

ஹா..ஹா... கலக்கனும்னு கலக்கல அதுலாம் தானா வருதுங்க(ஏய் வவ்வால் அடங்கு நீ!)
தங்கள் வருகைக்கு நன்றி.அடிக்கடி வாங்க!

Anonymous said...

வவ்வால் said...

சிலர் கவலைகளை கண்ணீரில் கரைக்கிறார்கள் சிலர் டாஸ்மாக் தண்ணீரில் கரைக்கிறார்கள்.ஹெ.... ஹெ..ஹெ!


வணக்கம் வௌவால்:
தங்களையும் டாஸ்மாக் கையும் பிரிக்க இயலாது என்பது தங்கள் வரிகளின் மூலமாக புலனாகின்றது.

வவ்வால் said...

வணக்கம் புல்ஸ்,

எல்லாம் அனுபவம் தான், தண்ணீரில் கரைத்துவிடுவது வழக்கம் தானே நாம் இறந்தால் நம் சாம்பலும் தண்ணீரில் தானே கரைக்கிறார்கள். தமிழில் டைப் பண்ண வருதா புல்ஸ் நல்ல முன்னேற்றம்.அடிகடி வாங்க!