Monday, October 09, 2006

எங்கே என் முகம்!

கொஞ்சம் பெரிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் எனது இம்சைகள் துவங்கிவிட்டது இதோ முதல் போனி! அனுபவி ராஜா அனுபவி...

கனவில் ஒரு முகம்,

நினைவில் மறு முகம்,

நிஜத்தில் வேறு முகம்,

நீ காண்பதொன்று,

நான் காண்பதொன்று,

யார் காண்பது என் முகம்?

எனக்கே தெரியவில்லை

எவருக்கேனும் தெரிந்தால் கூறுங்களேன்!

4 comments:

பொன்ஸ்~~Poorna said...

ஒரு வேளை கண்ணாடியோ? ;)

வவ்வால் said...

அம்மா பொன்ஸ்,

வணக்கம் வாங்க! வருகைக்கு நன்றி!

கண்ணாடி இதயம் இல்லை நமக்கு கண்ணாடி போன்ற முகம் தானே இருக்கு. அடுத்தது காட்டும் கண்ணாடி, கடுத்தது காட்டும் முகம்! ஆனால் இந்த கண்ணாடி முகத்தின் சுயம் எது? விடை கொடுப்பார் யாரும் உண்டோ!

Anonymous said...

voval,
mugam paarkamal manam parkka katrukondaal mugam ethuvai irunthalum kavalai illai.enge en manam enru theduthal mugam theduthalai vida sirapillaiya .anal ungal kavalai purikirathu!mugam paarthu manam paarka maruppor than neraiya .thedungal neengal ethirpaaktha neram ungal mugam neengal kaanbeergal.appothu theriyum voval ethani azgagendru!!!!mhum intha kavithai ellam pathathu neraiya ezhuthungal. natpudan veena.

வவ்வால் said...

வாங்க வீணா!

வணக்கம் ,இது தான் தங்கள் முதல் வருகை என நினைக்கிறேன் நன்றி,

இங்கே முகம் என்பது ஒரு குறியீடு, உடல் ரீதியானது அல்ல நான் தேடுவது .. என் சுயம் என்ன ,,, எனபதே.... என் சுயத்தின் அடையாளமாக தெரிவதே முகம்... நான் யார் என்னவாக இருக்கிறேன் என்ற என் தேடலின் ஒரு நிலையில் என் மனம் கேட்டுக்கொள்ளும் கேள்வி தான் இக்கவிதை!