Tuesday, October 10, 2006

சிக்குன் குன்யா சிறப்பு கவிதைகள்!

சிக்குன் குன்யா சிறப்பு கவிதைகள்!

கொசுக்கடி தாங்காமல் அர்த்த ராத்திரியில் என் கவிதை உள்ளம் விழித்துக்கொண்டதால் , கடித்த கொசுவை பழி வாங்கும் வன்மம் என் மனதில் கொழுந்து விட்டு எரிந்ததன் விளைவே இந்த சிக்குன் குன்யா கவிதைகள்.


கொசுவை பழிவாங்குறதா சொல்லிட்டு எங்களை ஏன்யா பழி வாங்குறனு புலம்புறது கேட்கிறது என்ன பண்றது கொசுவுக்கு கடிக்க மட்டும் தான் தெரியும் படிக்க தெரியாதே.... உங்களுக்கு படிக்க தெரியுமே... ஹே... ஹே ஹே.
கொசு கடியை விட இந்த வவ்வால் கடி பெரும் கடியா இருக்கேனு திட்டாம ,சிக்குன் குன்யா சிறப்பு கவிதைகளைப்படித்து விட்டு சிக்கனமா ரெண்டு வரி பின்னூட்டமாவது போடுங்க மகா ஜனங்களே!.
********************************************************************

* நாட்டில பாதி பேரு ஆண்யா

பெண்கள் தலைல இருக்கு பேன்யா

கொசு கடிச்சா எல்லாருக்கும் சிக்குன் குன்யா..

இது ஏன்யா?

******************************

* குடிச்சா கிக் தருவது

'ரம்'யா

கொசு கடிச்சா வருவது

சிக்குன் குன்யா!

*****************************
* சிக்குனு உடைப்போட்டா

அது டென்னிஸ் சான்யா

பக்குனு கொசு கடிச்சா

அது சிக்குன் குன்யா!

****************************
* பெண் டைகர் போல

ஏஸ் அடிச்சா

அது டென்னிஸ் சான்யா!

ஏடிஸ் டைகரிஸ்

பெண் கொசு கடிச்சா

அது சிக்குன் குன்யா!

*****************************

* சச்சின் டெண்டுல்கர் தூக்கி அடிச்சா

வரும் சிக்ஸ் ரன்யா!

கொசு ஓங்கி கடிச்சா

வரும் சிக்குன் குன்யா!

*****************************

* பார்ல கடிச்சுக்க வச்சா

போன்லெஸ்

சிக்கன் துன்யா!

போன்லெஸ் கொசு

கடிச்சு வச்சா

வரும் சிக்குன் குன்யா!

*****************************

* அரட்டை அரங்கம்

நடத்தியது விசு

கொரட்டை விடும் மனிதனை

கடிப்பது கொசு!

12 comments:

நாமக்கல் சிபி said...

சிக்கன் முனியாவின் விளைவுகளைத் தாங்கிங்கொள்ளா மஹா ஜனங்களே இக் கவிதைகளைப் படிப்பீர்.

சிக்கன் குனியா வெறும் ஜுஜுப்பி என்று அறிவீர்.

வவ்வால் said...

வணக்கம் சிபி!

வருகைக்கு நன்றி!

இடுக்கன் வருங்கால் நகுக என்பதை மக்கள் மறக்காம இருக்க தான் இது போல பொது சேவைலாம் செய்கிறேன் அத புரிஞ்சுக்க மாட்டேன்கிறாங்களே மக்கள்....

இலவசக்கொத்தனார் said...

//பெண்கள் தலைல இருக்கு பேன்யா //

ஏன் ஆண்கள் தலையில் பேன் இருக்காதா?

//குடிச்சா கிக் தருவது 'ரம்'யா//

ஏனுங்க? குடிக்காமலேயே கிக் தருவதும் ரம்யாதானுங்களே.....

இது போன்ற வரலாற்று புரட்டுகளை அவிழ்த்து விடும் வவ்வாலை வன்முறையாகக் கண்டிக்கிறேன்.

வவ்வால் said...

வணக்கம் இ.கொ.

நன்றி!

இதெல்லாம் வரலாற்று புட்டும் இல்லை புரட்டும் இல்லை அய்யா முற்றிலும் அக்மார்க் , ஐ.எஸ்.ஐ உண்மை. பெண்களின் கூந்தலுக்கு மணம் உண்டா என்று மட்டும் கேட்பது ஏன் , ஆண்கள் என்ன பாவம் செய்தார்கள் மணம் இருக்காதா என்ன?. ஆனால் ஆண்கள் பாவம்யா , அவன் மட்டும் நீளமா முடி வளர்த்த குடுமினு சொல்லிடுறாங்க!

உங்க பக்கது வீட்டுல ரம்யானு ஒரு கட்டிளம் வாளைக்குமரி இருப்பதும் அதை நினைத்து நீர் புளகாங்கிதம் அடைவதும் இதன் வாயிலாக தெரியவருகிறது! (இரவு உமக்கு வீட்டுல மண்டகப்படி தான் தலைவா!)

இலவசக்கொத்தனார் said...

என் பக்கத்தில் உங்களுக்கு பதில் சொன்னால் தெரியுமோ தெரியாதோ. உலாவியில் யூனிகோட் செட்டிங் எல்லாம் செக் செய்தீர்களா? வேறு யாரும் அந்த மாதிரி சொல்லவே இல்லையே? ஏன் தெரியவில்லை? இது யார் செய்த சதி?

எனது பதிவில் உங்களுக்களித்த பதில்

வாங்க வவ்வால். இது நம்ம பாப்புலாரிட்டி பிடிக்காம எதிர் கட்சியினர் செய்கின்ற சதி. ஆனால் அதையெல்லாம் மீறி வந்து வாழ்த்தும் உங்களுக்கு என்ன பட்டம் கொடுப்பதென தெரியவில்லை.

..நம்ம ஊரு தமிழ்குடிதாங்கிகள் விளம்பர பலகையில் தார் பூசுவது விட்டு விட்டு இது போல பிரச்சினைகளில் கவனம் செலத்தாலாம். ..

அய்யய்யே நீங்க வேற, அதெல்லாம் இவங்க செய்யலைன்னா யாரு செய்வா? அப்புறம் தமிழ் எப்படி வளரும்? போர்டில் தார் பூசறது வந்து களையெடுக்கறா மாதிரி. சினிமாக்களுக்கு தமிழ் பெயர் வைக்கிறது உரம் போடறா மாதிரி. களையெடுத்து உரம் போட்டா தமிழ் வளராமலையா போயிடும்.....

வவ்வால் said...

வாங்க இ.கொ, வணக்கம்,

ஆயிரம் கரங்கள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை. சதி வலையை கிழித்து நம் புகழை எட்டு திக்கும் பரப்புவோம்.

வார்த்தைகள் எல்லாம் உடைந்து தெரிந்தது ஆனாலும் படிக்க முடிந்தது . செட்டிங் எல்லாம் சரியாத்தான் இருக்கு.ஏதோ ஒரு மாய சக்தி உடைத்து விட்டது போலும் ...

Anonymous said...

Nalla 'kadi':)

வவ்வால் said...

வணக்கம் ஹனிப்,

நன்றி!

உலக இலக்கியதரத்தில்!!?? எழுதின இப்படி கடி சொல்லிடிங்களே. விஞ்ஞானத்தையும் செந்தமிழில் சொன்னால் இது தான் பரிசோ அய்யகோ!

எனது படைப்பையும் படித்து கருத்து சொன்ன தங்களின் பெரும் தன்மைக்கு மீண்டும் நன்றி!

Anonymous said...

Lollu pa.

வவ்வால் said...

நன்றி கீரா , அடிக்கடி வருகை தரவும்!

நரியா said...

நகைச்சுவையான கவிதைகள். மிகவும் அருமை. என் தமிழ் அறிவுக்கு ஏற்ற தீனி. நடிகர் விவேக் இந்த கவிதைகளை சினிமாவில் கூறுவது போல் நினைத்துப் பார்த்தால், இன்னமும் அதிகமாக சிரிப்பு வருகிறது :))

வாழ்த்துக்கள்.

வவ்வால் said...

நரியா ,
வாங்க நீண்ட நாட்களாயிற்று உங்களைப் பார்த்து , ரொம்ப பிசி போல ,

வருகைக்கு நன்றி!