Friday, August 17, 2007

இயற்கை கொசு விரட்டிகள்!


செயற்கை கொசுவர்த்தியின் தீமைகளை பார்க்கும் போது அதை விட கொசுக்கடியே மேல் எனத்தோன்றுகிறது.ஆனாலும் கொசு கொடுக்கும் இம்சைக்கு அளவே இல்லை.இயற்கையாக அதை கட்டுப்படுத்த ஏதாவது இருக்கிறதா எனத்தேடியதில் அகப்பட்டது சில இயற்கை வழிகள்.

பல மிக எளிமையான தீங்கற்றவை.

ஒட்டும் கொசுப்பொறி!(sticky mosquito trap):

பெரும்பாலான மளிகை கடைகளில் குழல் விளக்கை தேடி பூச்சிகள் வருகிறது என எண்ணை தடவிய காகிதம் ஒன்றை கட்டி விட்டு இருப்பார்கள், பூச்சிகள் அவற்றில் போய் ஒட்டிக்கொள்ளும். அதே வகை ஒட்டும் பொறி ஒன்றை கொசுக்களுக்கும் பயன்படுத்தலாம். மஞ்சள் வண்ண காகிதம் ஒன்றில் எண்ணைக்கு பதில் எளிதில் காயாத பசை ஏதேனும் ஒன்றை தடவி வீட்டில் கட்டிவிட்டால் போதும். பாதிக்கொசுக்கள் அதில் ஒட்டிக்கொள்ளும்.காரணம் மஞ்சள் வண்ணம் கொசுக்களை கவர்கிறதாம்.

கொசு விளக்கு பொறி!

இதனை பெரும்பாலான உணவு விடுதிகளில் பார்த்து இருப்பீர்கள் , ஒரு மின் விளக்கும் மின்சாரம் பாச்சப்பட்ட கம்பி வலையும் கொண்டது , வெளிச்சத்தால் கவரப்பட்டு வரும் கொசுக்கள் , பூச்சிகளை கொல்லும்!

பெரோமொன் கொசு பொறி!

கொசுக்கள் முட்டை இடும் இடத்தை அடையாளப்படுத ஒரு வகையான பெரோமோன் சுரக்கும் அதே போன்ற பெரோமொன் கொண்டு கொசுக்களை கவர்ந்து அழிக்க வல்ல ஒட்டும் தன்மை கொண்ட பொறிகள் கிடைக்கிறது அவற்றை பயன்படுத்தலாம்.

கொசுவின் இயற்கை எதிரிகள்:

உங்கள் பகுதிகளில் நிறைய தும்பிகள்(dragon fly) இருந்தாலும் கொசுக்கள் வராது , தும்பிகள் கொசுக்கை பிடித்து உண்ணுமாம்.

அதே போல தோட்டத்தில் வவ்வால்கள் brown bats) இருந்தாலும் கொசுக்களை பிடித்து உண்ணுமாம்

நீர் நிலைகளில் கொசு புழுக்களை பிடித்து உண்ணும் மீன்களான டிலாபிய(tilapia), கேம்பூசியா (gambusia affinis), தங்க மீன் வளர்க்க வேண்டும்.

உயிரி்ல் கொல்லி!

பேசில்லஸ் துரிஞ்செனிஸ் இஸ்ரேலியன் (bacillus thuringinsis israeliensis)என்ற நுண்ணுயிர் கொசுவின் லார்வாவை கொல்லும் தண்மை கொண்டது , இதனை குளம் குட்டைகளில் தெளித்தால் போதும் கொசு வளர்ச்சிக்கட்டுப்படுத்தலாம்.

தாவரவியல் கொசு விரட்டி!

சிட்ரொனெல்லா புல்(லெமன் கிராஸ்), கேட்னிப், ரோஸ்மாரி , மரிகோல்ட்
mari gold flower
,ஹார்ஸ்மின்ட் ஆகிய தாவரங்களை தோட்டத்தில் வளர்த்தாலும் கொசுக்கள் குறையும்.இவற்றில் இருந்து பெறப்படும் சாறுகளும் கொசு விரட்டப்பயன்படும்.


கொசு விழுங்கும் தாவரம்:

அகஸ்டாச்சா கானா (agastache cana ) பூக்களில் ஒட்டும் தன்மை கொண்ட பிசின் இருக்கும் .இது கொசுக்கள் , பூச்சிகளை கவர்ந்து அப்படியே சுருட்டி விழுங்கிவிடும்.இதனை வீட்டில் வளர்ப்பதன் மூலம் கொசுவைக்கட்டுப்படுத்தலாம்.

கடைசியாக ஒரு சின்ன குறிப்பு,

கொசுக்கள் மனிதனை இருட்டிலும் அடையாளம் பார்த்து கடிப்பது மனிதனின் உடல் வெப்பம் ,மற்றும் நாம் சுவாசிக்கும் போது வெளியிடும் கரியமில வாயு. நம் உடலில் வேறு வாசனை வரும் திரவியங்களை பூசிக்கொண்டாலும் கொசுகடியில் இருந்து தப்பலாம். பூண்டு வாசனை கொசுவிற்கு ஆகாது , நிறைய பூண்டு சாப்பிட்டால் நாற்றம் தாங்காமல் கொசு ஓடிவிடும்!

47 comments:

Sowmya said...

உயிரியல் கொள்ளி இல்லைங்க..அது உயிரியல் கொல்லி..அருமையான பதிவு, திடீரென்று நததை, கொசுன்னு தாவிட்டீங்க..!!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வவ்வால்!
நீங்கள் மரிகோல்ட் எனக்குறிப்பிட்டது; நமது செவ்வந்தியா???
இயன்றவரை தாவர தமிழ்ப் பெயர்களும் சேர்க்கமுயல்வீட்களா?
பயன் படுத்தக் கூடிய பதிவு.

வவ்வால் said...

ஹாய் செளம்ஸ்,
வாங்க , நன்றி!

வராதவங்க எல்லாம் வந்து இருக்கிங்க , அதிசயம் தான் போங்க! இந்த மடையனின் பதிவை தேடி வந்ததில் எனது ஜென்மம் சாபல்யம் அடைந்தது.நன்றி!

ஆகா எப்படி இப்படி தப்பு செய்தேன்(தட்டச்சு செய்துவிட்டு அப்படியே போடும் கெட்டப்பழக்கத்தை விட முடியவில்லை)

சுட்டிக்காட்டியமைக்கு நன்றி திருத்திவிட்டேன்!

மனிதர்களைப்பற்றி பதிவு போட்டா உதைக்க வருவாங்க , நத்தை கொசு தான் உதைக்காது , திட்டாது அதான் அதுங்கள பத்தி போட்டு தப்பிச்சுகிறேன்!(உதை வாங்க உடம்பில தெம்பில்லை) :-))

வவ்வால் said...

வாங்க யோகன் ,
நன்றி!

எனக்கும் தமிழில் என்ன என சரியாகத்தெரியவில்லை. படத்தை பார்த்தால் அது சாமந்தி பூ போல இருக்கு.படத்தையும் பதிவில் போட்டுவைக்கிறேன் நீங்களே பேர் சொல்லுங்கள்.

வடுவூர் குமார் said...

வாவ்! இவ்வளவு கொசுக்கொல்லி இருக்கா?
தெரியாமல் போச்சே!
அந்த மஞ்சள் கடிதாசி DIY (Do it Yourself) மாதிரி சுலபமாக இருக்கு.
பூண்டு சமாச்சாரம் கொஞ்சம் கஷ்டம் தான்.

வவ்வால் said...

வாங்க குமார்,

நன்றி,

இன்னும் கூட சிலது இருக்கு அதுலாம் ஒத்துவராத போல இருக்கு.

அயல்நாடுகளில் கொசுவை விரட்ட பூண்டு வாசனை ஸ்ப்ரேய் கிடைக்கிறது என போட்டு இருக்கான் , நம்ம நாட்டில் தான் இல்லை.

இன்னும் சிலர் கொசுவின் ஜீன் மாற்ற ஆராய்ச்சி செய்கிறார்களாம் , கொஞ்சம் கொசுவை பிடித்து அதுக்கு ஜீன் மாற்றம் செய்துவிட்டால் அதன் மூலம் இனப்பெருக்கம் ஆகும் கொசுக்கடித்தால் நோய் வராதாம் :-))

Thekkikattan|தெகா said...
This comment has been removed by the author.
Thekkikattan|தெகா said...

வவ்ஸ்,

எப்பொழுதும் போல தாமதமாகத்தான் இந்தக் கொசுத் தொல்லை பதிவைப் பார்த்தேன். :-)

நிறைய இயற்கை சார்ந்த கொல்லிகளை அறிமுகப் படுத்தியிருக்கீங்க. நன்றி!

நான் கொஞ்ச நாட்களுக்கு முன்பு கூட ஒரு பதிவு போட்டிருந்தேனே, பார்க்கலையா? அதில பூண்டுக்குக் கொசுக்கடிக்கும் சம்பந்தமே இல்லை அப்படின்னும், தண்ணியடிச்சா கொசு ஏன் அதிகமா கடிக்குதுங்கிறதுக்கு நீங்க கூட வந்து பதில் சொன்னீங்களே. பதிவு இங்கே இருக்கு பாருங்க... தண்ணியடிச்சா *கொசு* அதிகமா கடிக்குமா!!

Sundar Padmanaban said...

//மனிதர்களைப்பற்றி பதிவு போட்டா உதைக்க வருவாங்க , நத்தை கொசு தான் உதைக்காது , திட்டாது அதான் அதுங்கள பத்தி போட்டு தப்பிச்சுகிறேன்!(உதை வாங்க உடம்பில தெம்பில்லை) :-))

இந்தப் பதிவே மறைமுகமாக ஒரு குறிப்பிட்ட ஜாதியைக் குறித்து எழுதப்பட்ட பதிவென்று மண்டபத்தில் பேசிக்கொள்கிறார்களே - உண்மையா?

-அனானி சுந்தர்! :-)

வவ்வால் said...

தெ.கா ,

உங்கள் பதிவு நினைவில் இருக்கு ஆனா அந்த சைட்டில் இப்படித்தானே சொல்லி பூண்டு ஸ்ப்ரே விலைக்கு இருக்குனு சொல்றான்!

நான் குறிப்பிட்டதை படித்தீர்களா, கரியமில வாயு அதன் வாசனை(உடல் வெப்பம் அடுத்த காரணி) வைத்து தான் அடையாளம் காண்கிறதாம் அதனை தடுக்க வேறு ஒரு வலிமையான வாசனைக்கு பூண்டு வாசனை உதவாலம் என நினைக்கிறேன்.

கொசு வர்த்தி , திரவ கொசு விரட்டி ,மேட் எல்லாமே கொசுவை கொல்வதில்லை அதற்கு பிடிக்காத வாசனையை உருவாக்கி அவற்றை விறட்டுகின்றன. உடலில் தடவும் ஓடோ மாச் போன்ற கிரீம்களில் கூட "DEET" என்ற வணிகப்பெயர் கொண்ட டை எதைல் பாஸ்பர் என்ற ரசாயனம் உண்டு பண்ணும் மணம் பிடிக்காமல் தான் கொசுக்கள் கடிக்காமல் ஓடுகின்றன.

Unknown said...

அருமையான பதிவு வவ்வால்

உண்மையான கொசுவிரட்டி என்பது தெருவில் குப்பைகளை கொட்டாமல் இருப்பது.சாக்கடை நீர் தேங்காமல் செய்வது ஆகியவையே.இப்படி செய்தால் கொசுமுட்டைகள் உற்பத்தி தடுக்கப்படும்.

தெருவை சுத்தமாக வைத்துக்கொண்டு, வீட்டு கதவு ஜன்னல்களை பூட்டி வைத்தால் கொசு நுழைவது ஓரளவு தடுக்கப்படும்.

வவ்வால் said...

//இந்தப் பதிவே மறைமுகமாக ஒரு குறிப்பிட்ட ஜாதியைக் குறித்து எழுதப்பட்ட பதிவென்று மண்டபத்தில் பேசிக்கொள்கிறார்களே - உண்மையா?//

என்னடா யாரும் நம்ம கிட்டே வம்புக்கே வறலையே , ஆனாலும் வவ்வால் மேல நல்ல பயம் தான்னு பெருமையா நினைச்சது உங்களுக்கு எப்படி தெரியும் சுந்தர், ஒரு தீவட்டியே எடுத்து வந்து பத்த வைக்குறிங்க!

கொசுக்குலாம் ஜாதி சங்கம் ஆரம்பிச்சு வச்சா நான் எங்கே போவேன் :-(

ஆமாம் மண்டபம் நா ராமெஷ்வரம் பக்கதில இருக்கே மண்டபம் அதுவா, அங்கே கூட என் பதிவை படிக்கும் மக்கள் இருக்காங்கலா? அப்போ என் புகழ் எட்டு திக்கும் பரவிக்கிட்டு இருக்குனு நினைக்கிறேன்!

நல்லா கிளப்புறாங்கயா பீதிய...:-))

வவ்வால் said...

நன்றி செல்வன்,

நீங்கள் சொல்வது உணமை தான் அக சுத்தம் எப்படி தேவையோ அப்படியே புற சுத்தமும் தேவை. முந்தைய பதிவிலேயே நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளேன்! மேலும் குப்பைகள் , கழிவுகளை கண்டபடியும் கொட்டுவதை தவிர்த்தால் மலேரியா எல்லாம் அண்டுமா?

பி.கு: ஓகை அவர்களின் பதிவில் பெரிதாக பின்னூட்டம் இட்டு இருக்கிறேன் அதையும் கவனியுங்கள். நாளைக்கு தனியாக அது குறித்து பதிவும் போடலாம் என இருக்கிறேன்!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வவ்வால்!
ஆம் , இந்தச் பூவை இலங்கையில்
செவ்வந்தி என்போம்.
தமிழ்நாட்டில் சாமந்தி என்கின்றனர்.
இரண்டும் ஒன்றேனக் கருதுகிறேன்.
இதனால் நுளம்புத் தொல்லையைத் தடுக்கலாமெனில் அழகுக்கு அழகுமாச்சு, நுளம்பு கலைச்சது மாச்சேன வீட்டைச் சுற்றி நடலாம்.

Anonymous said...

இது கொசவைப் பற்றிய பதிவு என்றாலும்,

மரிகோல்ட் பற்றிய செய்தி ஒன்று. காய்கறி


பயிர் செய்பவர்கள்,இதை, காய்கறிச் செடிகளுக்கருகே பயிர் செய்கிறார்கள்.
கேட்டால் பூச்சி வராது என்றார்கள்!

வவ்வால் said...

வாங்க யோகன் ,
நன்றி!

பரிட்ச்சித்து பார்த்து பலன் இருக்கிறதா சொல்லுங்கள் நாமும் செய்வோம்( சோதனைக்கு ஆள்வேணாமா)

செவ்வந்தியும் சாமந்தியும் ஒன்றா, செவ்வந்தி என்றால் சிவப்பாக இருக்குமென நினைத்திருந்தேன், 16 வயதினிலே படத்தில் செவ்வந்தி பூ முடிச்ச செல்லக்கா சேதி என்னக்கா என ஒரு பாட்டு மட்டும் தான் கேட்டுள்ளேன் , ஆனால் மஞ்சள் நிற இப்பூவைப்பார்த்துள்ளேன்!

வவ்வால் said...

அனானி நல்லத்தகவலை சொல்லியுள்ளீர்கள்,

இப்படி செய்யும் வழக்கம் உண்டு எனத்தெரியும் ஆனால் மரிகோல்ட் செய்வார்கள் என்பது புதிய தகவல். trap crop என்பார்கள். இப்படி செய்வதை.

Anonymous said...

http://www.dgsgardening.btinternet.co.
uk/companion.htm
தக்காளி, கத்தரிக்காய், பூசணி, ஸ்காவாஷ்


அருகில் பயிர் செய்யச் சொல்கிறார்கள்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இந்தச் செவ்வந்தி எனும் சாமந்தி நான் 4 நிறங்களில் பார்த்துள்ளேன்.
ஒறேஞ்சு,வெளிர் மஞ்சள்,மஞ்சள்,ஒறேஞ்சு+மஞ்சள்.
இப்போ இங்கே இவற்றைக் காணலாம்.
படமாகத் தரப் பார்க்கிறேன்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

not for public
http://www.flowers.vg/flowers/marigold01.htm

you can see several colour compination of marigold

Anonymous said...

United States Patent 20020121045
ஆரம்பத்திலேயே சிக்கலை சரி செய்ய யோசிக்கிறார்கள்!

வவ்வால் said...

நன்றி யோகன்,
சாதாரணமாக எழுப்பபட்ட சந்தேகம் எனினும் விறைவாக முயற்சித்து தேடி சுட்டி தந்தமைக்கு நன்றி! படங்கள் அருமை!
பல வண்ணங்களிலும் , இதழ் அமைப்புகளிலும் இருக்கிறது நானும் இதில் காணப்பட்ட சில மலர்களை பார்த்துள்ளேன் அவை வேறு மலர்கள் என்றே நினைத்திருந்தேன். செவ்வந்தியும் ,சாமந்தியும் வேறு வேறு மலர்கள் என்று நினைத்தை போல! :-))

வவ்வால் said...

அனானி மீண்டும் ஒரு நல்ல தகவலை தந்துள்ளீர்கள்,

இம்முறை இந்தியாவிலும் உள்ள ஒன்று தான். ஏற்கனவே சொன்னென் அல்லவா "trap crop" என்று அதே போல , முக்கிய பயிர் எதுவோ அதனை காக்க இன்னொரு பயிரை குறைந்த அளவு சாகுபடி செய்து அதனை பூச்சிகளுக்கு பலிகடா ஆக்குவார்கள். இதன் மூலம் பூச்சிகளின் தாக்குதல் ஒரு கட்டுப்பாட்டிற்குல் இருக்கும். பூச்சிகளை அழிக்க முடியாது அதனை கட்டுப்படுத்தி சேதம் அதிகம் ஆகாமல் நிர்வகிக்க தான் முடியும் என்பது விவசாய நடை முறைத்தத்துவம்!

மேலும் இப்படி சில பயிர்களை சேர்த்து விளைவிப்பதால் , மகரந்த சேர்க்கைக்கும் உதவும், சில symbiotic முறையில் சில சத்துகளும் கிடைக்கும்.

அது என்ன ஏதோ ஒரு பேடென்ட் எண் தந்துள்ளீர்கள் , புரியவில்லை! இப்படி கலப்பு பயிர் செய்வதற்கு காப்புரிமையா?

நல்ல தகவல் பூர்வமாக பேசும் நீங்கள் ஏன் அனானியாக வரவேண்டும் , ஏதேனும் குப்பன் ,சுப்பன் என்ற பெயரில் கூட வரலாமே!

Anonymous said...

http://www.patentstorm.us/patents/
6708443-fulltext.html

மரிகோல்ட் பயிர் செய்வதற்கும், இந்த

பேடன்டுக்கும் தொடர்பு இல்லை.

கொசுக்கள் முழுமையாக வளர்வதற்கு முன்

அதை அழிப்பதற்கு வழிகள்!

Unknown said...

வவ்ஸ்,

நல்ல பதிவு. சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருந்தாலே, கொசுக்களைப் பற்றிக் கவலைப் பட வேண்டியது இல்லை!

மரிகோல்ட் - செவ்வந்திப் பூ, சாமந்தி, 'துலுக்கன் சென்டு' (தஞ்சைப் பகுதியில்). இந்தப் பூச்செடி வைத்தால், கொசு மட்டும் அல்ல, முயல் மற்றும் பூச்சி தொந்தரவு இருக்காதுன்னு சொல்றாங்க.

உபதகவல்: செவ்வந்திப் பூக்களில் செய்த வீடு வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடுன்னு ஒரு பாட்டு இருக்கு.

வாசலிலே சாமந்திப்பூ வச்சதென்ன்ன வச்சதென்ன அப்டினும் ஒரு பாட்டு இருக்கு.

வவ்வால் said...

வாங்க தஞ்சாவூரான், நன்றி!

சாமந்தி பூவில் இருந்து இயற்கை பூச்சிக்கொல்லி பைரித்திரம்(pyrithiram) எடுக்கப்படுகிறது எனத்தமிழில் எனப்படித்தேன். ஆனால் மரிகோல்ட் தான் சாமந்தி என அறியாமல் விட்டு விட்டேன் அதை( எப்படி என் புத்திசாலித்தனம்?!! அப்போவே லேசா டவுட் ஆனேன் பதிவு போடும் அவசரத்தில் சரி இதுவே போதும் என இருந்துவிட்டேன்) , பின்னர் யோகனுடன் பேசும் போது இரண்டும் ஒன்று என அறிந்தேன்!

ஆனால் அதில் சாமந்தி பூவை நசுக்கி சாறு எடுத்தால் தான் பூச்சியை விரட்டும் எனப் போட்டு இருந்தார்கள், மேலும் அது எளிதில் ஆவி ஆகிவிடுவதால் நீடித்த பலன் இல்லை என தான் சிந்தடிக் பைரித்திரம் கண்டு பிடித்தார்கள் எனவும் போட்டு இருந்தார்கள்.

நீங்கள் சொல்வதிலிருந்து சாமந்தி இருந்தாலே பூச்சி வராதென அறிகிறேன்.

நல்லப்பாடல்களை குறிப்பிட்டுள்ளீர்கள். அதே போல இந்த பச்சைக்கிளிக்கொரு செவ்வந்தி பூவில் தொட்டிலை காட்டி வைத்தேன் என்ற எம்.ஜி.ஆர் பாடலும் நன்றாக இருக்கும்.

Anonymous said...

சாமந்த்தி- chrysanthemum

மரிகோல்ட்- துலக்க செவந்தி

இரண்டும், ஒரெ குடும்பமாயிருக்குமோ?
மரிகோல்ட் பூக்களை கோடை முழுக்கப்


பார்க்கலாம். சாமந்திப் பூக்களை
செப்டெம்பர்,

அக்டொபர் மாதங்களில்தான் பார்க்க முடிகிறது!

Anonymous said...

துலக்க செவந்தியை, கோயிலுக்கு வேண்டாம் என்று


சொல்வார்கள்!

வவ்வால் said...

அனானி ,

இரண்டும் அப்படி ஒரே குடும்பத்தை சேர்ந்த வேறு வேறு வகையாக தான்.

துலுக்க சாமந்தி என்ற பெயர்காரணத்தால் அப்படி சொல்லி இருக்க கூடும். மேலும் அப்பூவை இஸ்லாமியர்களின் கல்லறை மீதி போர்வையாக போர்த்தும் வழக்கம் இருப்பதும் தவிர்க ஒரு காரணமாக இருக்கலாம்.

துலுக்க சாமந்தி பயன்படுத்துவது குறித்து குற்றாலம் கோயிலில் ஒரு பிரச்சினை வந்தது என செய்தி படித்துள்ளேன்!

ராஜ நடராஜன் said...

நல்ல பயனுள்ள பதிவு.நமது வெப்ப தட்ப சூழலுக்கு கொசு வீட்டுப் பக்கம் அண்டவே கூடாது.எப்படி இத்தனை "கொய்ங்" சத்தங்கள்.அத்தனைக்கும் மருந்து சொன்னீங்க பாருங்க.அபாரம்.

வவ்வால் said...

வங்க நட்டு ,

கருத்திற்கும் ,ஊக்கத்திற்கும் மிக்க நன்றி!

பாம்பு கடிச்சு செத்தவங்களை விட கொசு கடித்து செத்தவங்க தான் அதிகம் என்று உலக சுகாதார நிறுவனமே சொல்லி இருக்குங்க!

துளசி கோபால் said...

நீங்க பசை காகிதமுன்னு சொன்னதும், இன்னொண்ணும் நினைவுக்கு வருது.

நாங்க ஃபிஜித்தீவில் இருந்தப்ப.......... அங்கே எக்கச்சக்கமான கரப்பான் பூச்சி.

ராத்திரியில் சமையலறைக்கு வந்து திடீர்னு விளக்கைப் போட்டால், எல்லாம் அலறி அடிச்சுக்கிட்டுப்
போகும். அங்கே இப்படிப் பசைக் காகிதம் ரெண்டு மூணு போட்டு வைப்போம் ஒவ்வொரு இரவும்.
காலையில் பார்த்தால்...................... yuck(-:

நாங்கள் ஊரில் இல்லாத ஒரு சமயம், அதுகளுக்கு வந்த ஆத்திரத்தில் நான் ஸ்டிக் பாத்திரத்துக்குப்
பயன்படுத்தும் மரக்கரண்டிகளைத் தின்னு முடிச்சிருந்தது:-)))))

வடுவூர் குமார் said...
This comment has been removed by a blog administrator.
வவ்வால் said...

குமார் ,
நன்றி உங்கள் பின்னூட்டம் பார்த்தேன் , அப்படித்தான் இருக்க வேண்டும். உங்கள் பின்னூட்டத்தை தற்போது நீக்கி விடுகிறேன்

வவ்வால் said...

வங்க துளசி கோபால் ,
நன்றி!
ஓ கரப்பான் தொல்லைக்கும் ஒட்டும் காகிதம் இருக்கா, இன்னிக்கு தான் அதன் தொல்லை தாங்காம் ஒரு ஸ்ப்ரே வாங்கினேன் :)

Anonymous said...

http://chemistry.about.com
/b/a/257703.htm
நீங்கள் வாங்கியது டீட் இல்லையே!

டீட் நமக்கும் கெடுதல்.

வவ்வால் said...

அனானி ,

ரொம்ப ஆர்வமா படிக்கிறிங்க போல, இதில் இருப்பது அல்லெத்ரின் என்ற ரசயனம் , என்று போட்டுள்ளான் ,டீட் பற்றியும் பின்னுட்டத்தில் குறிப்பிட்டுள்ளேன் நான். இரன்டுமே கெடுதல் தான்! கரப்பான்களின் தொல்லை எல்லை மீறிவிட்டது ,ரொம்ப நாள் பொறுத்து பார்த்து விட்டு அதான் வாங்கினேன் இன்று!

குமரன் (Kumaran) said...

வவ்வால். உங்க இடுகைகளை எல்லாம் பிரதி எடுத்து வைத்து மொத்தமாகப் படித்துவிடுகிறேன். அதனால் சில நேரம் பின்னூட்டங்கள் இடாமல் போகவும் வாய்ப்புண்டு. நீங்கள் பின்னூட்டத்தை எதிர்பார்ப்பவர் இல்லை என்று தெரியும்; ஆனாலும் நான் படிப்பதைச் சொல்லத் தோன்றியது. :-)

நல்ல அலசல் தான். இயற்கை கொசு விரட்டிகள் எங்க தாத்தாவும் பயன்படுத்திப் பார்த்திருக்கிறேன். தினமும் ஆறுமணிக்குத் தொடங்கினார்னா ஒரு மணி நேரம் வீடு முழுக்க புகை நிரம்புற வரைக்கும் என்ன என்னவோ கங்குல போட்டுக்கிட்டே இருப்பார். :-)

இந்த ஒட்டும் காகிதத்தை நிறைய கடைகளில் பார்த்திருக்கிறேன். வீட்டிலும் ஈசல் வரும் போது முயன்றிருக்கிறோம்.

வவ்வால் said...

வான்க குமரன்,

நன்றி, அட நீங்க இதை எல்லாம் சொல்லனுமா என்ன ,நல்லா இருந்தா படிப்பிங்க என்று எனக்கும் தெரியுமே! பின்னூட்டம் பற்றி கவலை கொள்வதில்லை, நீங்க சொன்ன பிறகு தானே மறுமொழி திரட்டியில் சேர நிபந்தனை இல்லை என தெரிந்து சேர்ந்தேன் அதற்கு பிறகு தான் நமக்கும் கொஞ்சம் கூட்டம் கவனிப்பு கிடைத்து வருது,அதற்கு ஒரு சிறப்பு நன்றி!

வயதானவர்களை நாம் செய்வதை எல்லாம் அலட்சியமாக நினைத்து கொள்கிறோம் ஆனால் அவர்கள் செய்வதிலும் ஒரு அர்த்தம் இருக்கிறது, என்ன ஒன்று அவர்கள் அடுத்தவர்களுக்கு காரண காரியங்களை விளக்குவதில்லை.

யோகன் கொசு விரட்ட போடும் மூலிகைகளை சொல்லியுள்ளார் பாருங்கள்,
//நுளம்புக் காலம் அந்தக் காலத்தில் வீட்டில் புகைச்சட்டி போடுவது வழமை அதாவது நெருப்புத் தணலில் வேம்பமிலை, கஞ்சாந்தகரை, பாவட்டை போன்ற இலைகள் போடுவார்கள். இவை பாதுகாப்பானவை.//

Anonymous said...

வவ்வால், இப்போ தான் கடைகளில் ஒரு டென்னிஸ் மட்டை போல பேட்டரியில் இயங்கும் கொசு கொல்லி விற்கப்படுகிறதே. அதை வைத்துக் கொண்டு கொசுவை விரட்டி, விரட்டி கொல்லலாம்.

சாலிசம்பர் said...

பயனுள்ள பல தகவல்களுக்கு நன்றி வவவால்.
சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள தடாலடி சட்டம் ஒன்று கட்டாயம் தேவை.

வவ்வால் said...

வாங்க பொண்வண்டு,

அதை வைத்து கொசுவை விரட்டிக்கிட்டு இருந்தா எப்போ தூங்குது? :-))

வவ்வால் said...

ஜாலிஜம்பர்,
நன்றி,
சட்டம் போட்டா எல்லாம் திருந்துவாங்களா மக்கள். அதுக்கும் எதாவது வழி கண்டுபுடிப்பாங்க.

ராஜ நடராஜன் said...

வவ்ஸ்!பின்னூட்டப்பகுதி பழசுகளோடு சேர்ந்து களை கட்டுற மாதிரி தெரிகிறதே!வாழ்த்துக்கள்.

மனித சுவாசம் மட்டுமல்ல,முந்தாநாள் வாங்கி வச்ச வாழைப்பழ்த்துக்கு கூடத்தான் கொசு வருது.

கொசுவத்தி சுருள் உபயோகிக்கிற வசதி கொசு வலை போட்டுத்தூங்குவதில் இல்லையோ?கொசுவலைகள் சினிமா பாடல் கனவுக்காட்சி மாதிரியே இன்னும் இருக்குற மாதிரி தெரிகிறதே!

ராஜ நடராஜன் said...

வவ்ஸ்!இது என்ன பழைய வடையா?நான் வந்த புதுசுல உங்க மாதிரி முகமூடி போட்டுகிட்டு போட்ட பின்னூட்டமும் சேர்ந்து பல்லைக்காட்டுகிறதே:)

இப்பத்தான் வருசத்தையே பார்த்தேன்.அவ்வ்வ்வ்வ்.

ராஜ நடராஜன் said...

பின்னூட்ட எண்ணிக்கை அதிகரிக்க இப்படியும் ஒரு புது டெக்னிக் இருக்குதா:)

ராஜ நடராஜன் said...

சரக்கு தீர்ந்து போச்சாக்கும்!

சரக்குன்னு சொன்னதும் கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடிச்ச் மாதிரி பலரும் வவ்வாலைக் கண்டு புடிச்சிட்டேன்ன்னு ஊர்முழுவதும் சொல்லிகிட்டு திரிவது கானா பாட்டுக்கு சிரிச்சதுக்கும் அதிகம்:)