Tuesday, August 28, 2007

என்ன வளம் இல்லை இந்நாட்டில்!

நம் நாட்டில் படித்து விட்டு வெளிநாட்டிற்கு வேலைக்கு போவோர் எண்ணிக்கை அதிகம் இதனை பிரெயின் டிரெயின்(brain drain) என்பார்கள்.எனினும் சமீப காலமாக பல ஐ.ஐ.எம் மாணவர்கள் அப்படி கிடைத்த வெளி நாட்டு வேலைவாய்ப்புகளை உதறி தள்ளிவிட்டு இந்தியாவில் கிடைத்த வேலையை ஏற்றுக்கொண்டுள்ளார்கள். காரணம் தற்போது அயல்நாடுகளுக்கு இணையான அல்லது மிக நல்ல சம்பளங்கள் இந்திய நிறுவனங்களில் தரப்படுகிறது. இது ஒரு நல்ல மாற்றம் தான்.

இந்த எண்ணிக்கை குறைவென்றாலும் ஒரு நல்ல முன்னுதாரணம் ஆக அமைந்துள்ளது.

பெரும்பாலும் அயல்நாட்டிற்கு வேலைக்கு சென்றாலும் அனைவரின் மனதும் இந்தியாவில் தான் இருக்கும் , வெகு சொற்பமானவர்களே "Dirty country" என்பது போல இந்தியாவை மட்டமாக நினைக்க கூடும். பெரும்பாலோர் ஆத்மார்த்தமாக இந்தியாவின் வளர்ச்சியை விரும்புகிறார்கள்.வருங்காலத்தில் அயல்நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் நம் அறிவுத்திறன் குறைந்து அனைவரும் இந்தியாவில் இருந்து செயல்படும் சூழல் வரும் , அந்நாள் வெகு தொலைவில் இல்லை.

ஒவ்வொரு மாணவனும் படிக்க என அரசு குறிப்பிட்ட தொகை ஒதுக்குகிறது அப்பணம் பல இந்தியர்களின் உழைப்பில் வந்தது. வரி கட்டுபவர்கள் பணம் மட்டும் அல்ல, சாதாரணமாக ஒரு உப்பு பொதி வாங்கினால் அதில் விற்பனை வரி என எல்லா சராசரி இந்தியனும் அரசுக்கு வருமானம் தருகிறான் , எனவே வரிக்கட்டுவோர் மட்டும் கவலைப்பட வேண்டியது அல்ல, அனைவருக்கும் உண்டு பொறுப்பு!

என்ன தான் வெளிநாட்டில் நிறைய சம்பளம் கொடுத்தாலும் அதனை இந்திய பணத்துடன் ஒப்பிடும் போது தான் அதிகமாத்தெரியும், அன்னாட்டு வாழ்கை முறைக்கு அது சாதாரணமான சம்பாத்தியம் தான். இந்தியாவில் மாதம் 20,000 ரூபாய் சம்பாதிப்பவர்கள் கூட வீட்டு வேலைக்கு , கார் டிரைவர் என வேலைக்கு ஆட்களை வைத்துக்கொள்ள முடியும் , அயல் நாட்டில் அப்படி வைத்துக்கொள்வது எத்தனை பேருக்கு சாத்தியமாகும்.எவ்வளவு சம்பாதித்தாலும் அவர்களே கார் ஓட்டி , வீடு கழுவி,பெருக்கி , துணி துவைத்து என கஷ்டப்படவேண்டும், வாங்கும் பணத்தை அனுபவிக்க முடியாது. இந்தியாவில் மிதமான சம்பளம் அதற்கு ஏற்ப வாழ்வை அனுபவிக்கலாம்!

இந்த அயல்நாடுகளுக்கு வேலைக்கு செல்வதை பற்றி சினிமா நடிகர் விஜய் வேறு தத்துவ முத்துக்களை உதிர்த்துள்ளார், இது குறித்து சிவபாலன் ஒரு பதிவும் போட்டுள்ளார்,

சொந்த நாட்டில் வேலை செய்யுங்கள்"- நடிகர் டாக்டர் விஜய் அறிவுரை.

யார் சொன்னது எனப்பார்க்காமல் சொன்னதை பார்த்தால் சரி எனத்தான் தோன்றுகிறது , ஆனால் அவரே தெலுங்கில் வெற்றிப்பெற்ற படங்களின் கதையை தான் விரும்பி வாங்கி நடிக்கிறார் , தமிழில் நல்ல கதைகளே இல்லையா, முதலில் அதை யாராவது அவருக்கு எடுத்து சொல்லுங்கண்ணா!

மக்களே உங்களுக்கும் இது குறித்து மாற்றுக்கருத்துகள் இருக்கும் இருந்தால் சொல்லலாமே!

47 comments:

சிவபாலன் said...
This comment has been removed by the author.
சிவபாலன் said...

வவ்வால்,

மிக அழகாக தொகுத்துள்ளீர்கள்.

// பல இந்தியர்களின் உழைப்பில் வந்தது. வரி கட்டுபவர்கள் பணம் மட்டும் அல்ல, சாதாரணமாக ஒரு உப்பு பொதி வாங்கினால் அதில் விற்பனை வரி என எல்லா சராசரி இந்தியனும் அரசுக்கு வருமானம் தருகிறான் , எனவே வரிக்கட்டுவோர் மட்டும் கவலைப்பட வேண்டியது அல்ல, அனைவருக்கும் உண்டு பொறுப்பு! //

இது மிக முக்கியமான விடயம். பல பேருக்கு இதில் புரிவதில்லை.


மேலும், வெளி நாட்டு அனுபவம் என்று ஒரு விடயம் உள்ளது. அதைப் பற்றி தாங்கள் கூறாமல் விட்டுவிட்டீர்கள்.

மற்றபடி நீங்கள் சொன்னது அத்தனையும் உண்மை. ( லோக்கல் மொழியில் சொன்னால் .. வெளி நாட்டு வாழ்க்கை.. நாய் படாதபாடு... :) இது என் அனுபவம்)

வவ்வால் said...

வாங்க சிவபாலன் ,
நன்றி,
சரியாக சொன்னீர்கள்!

காலச்சூழல் மாறிவருகிறது , வருங்காலத்தில் நாம் அனைவருக்கும் வேலை கொடுக்கும் நிலையும் வரலாம், அரசியல்வாதிகள் கொஞ்சம் பெரிய மனசு வைக்கனும். ஊழல் , உள்நாட்டு அரசியல் பழிவாங்கள் இவறை குறைத்தாலே நாடு வளரும்.

//மேலும், வெளி நாட்டு அனுபவம் என்று ஒரு விடயம் உள்ளது. அதைப் பற்றி தாங்கள் கூறாமல் விட்டுவிட்டீர்கள்.//

அதை நீங்களே சொல்லிவிடுங்களேன்!

//( லோக்கல் மொழியில் சொன்னால் .. வெளி நாட்டு வாழ்க்கை.. நாய் படாதபாடு... :) இது என் அனுபவம்)//

ஹா ...ஹா ... அதிக விளக்கம் தேவைப்படாத ஒரு விளக்கம் இது!

Anonymous said...

//என்ன தான் வெளிநாட்டில் நிறைய சம்பளம் கொடுத்தாலும் அதனை இந்திய பணத்துடன் ஒப்பிடும் போது தான் அதிகமாத்தெரியும், அன்னாட்டு வாழ்கை முறைக்கு அது சாதாரணமான சம்பாத்தியம் தான்.//
வெளிநாட்டில் வ‌ரிக‌ளும் அதிக‌ம். நானே 33% வ‌ரி க‌ட்ட‌றேன். வீட்டில் சொன்னால் அப்ப‌டியா என்று அதிச‌யிப்பார்க‌ள். ஒரு சில‌ ந‌ண்ப‌ர்க‌ள் சும்மா பொய் சொல்றேன்னு கூட‌ நினைப்பார்க‌ள். வேலைக்கார‌ர் வைத்துக்கொள்வ‌து நினைத்துக்கூட‌ பார்க்க‌ முடியாது. நாம‌ வாங்க‌ற‌ ச‌ம்ப‌ள‌த்த‌ அப்ப‌டியே அங்க‌ குடுக்க‌ வேண்டிய‌துதான். வேலைய‌ ர‌ங்க‌மணி கூட‌ ப‌கிர்ந்த்துக்க‌ற‌துதான் பெஸ்ட். ஏன்னா இங்கெல்லாம் குறைந்த‌ப‌ட்ச‌ ஊதிய‌ம் த‌ந்ந்தாக‌ வேண்டும். இந்தியாவில் பேர‌ம் பேசி இவ்வ‌ள‌வுதான் குடுக்க‌முடியும்னு சொல்ல‌ முடியாது. (இதெல்லாம் க‌ண‌வ‌ன் ம‌னைவி ரெண்டு பேருமே வேலைக்குப்போகும் போதே)
ஆனால் இன்னும் ஏன் அங்கே இருக்கீங்க‌ன்னு கேக்காதீங்க‌. அத‌ற்கு வேறு கார‌ண‌ங்க‌ள்

வவ்வால் said...

சின்ன அம்மினி,
//ஆனால் இன்னும் ஏன் அங்கே இருக்கீங்க‌ன்னு கேக்காதீங்க‌. அத‌ற்கு வேறு கார‌ண‌ங்க‌ள்//

நீங்கள் சொல்வது புரிகிறது அதனால் தான் அயல்நாட்டில் வேலை செய்வதை காட்டமாக குறை கூறவில்லை. ஆனால் தற்போது இந்திய நிறுவனங்கள் நல்ல சம்பளம் அளிக்க முன்வருவதால் , டிரென்ட் மாறி வருகிறது என்பதை சுட்டிக்காட்டினேன்.

இந்தியாவில் மிதமான சம்பளம் கொடுத்தாலும் இனிமேல் போதும்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

நமது நாடுகளில் உள்ள ஊழல், அசட்டையீனம்,பாகுபாடு,திறமையை மதியாமை போன்ற தன்மைகளில் மாற்றம் வருமெனில் ,என்னதான் இங்கே தேனும் பாலும் ஓடினாலும்
நமது நாடுகள் போல் வரா!
வெளிநாட்டு வாழ்க்கை,ஓடி ஓடி உழைத்து உள்ள பில் எல்லாம் கட்டச் சரி.

வவ்வால் said...

யோகன் ,
நன்றி
சரியா சொன்னிங்க,வருங்காலத்தில் கதை மாறப்போவுது , எல்லாம் திரும்ப வருவாங்க! அந்த நாள் வெகு தொலைவில் இல்லை!

ILA (a) இளா said...

வவ்வால் சரியா சொன்னீங்க.சில IT மக்களும் இந்தியாவுக்கு வர ஆரம்பிச்சுட்டாங்க. நானே நிறைய பேரை interview பண்ணி இருக்கேன். இன்னும் கொஞ்சம் நாள்தான். அமெரிக்காகாரங்க நம்ம ஊருக்கு வந்துருவாங்க. அப்புறம் இப்படி இருக்கும் பாருங்க.

//லோக்கல் மொழியில் சொன்னால் .. வெளி நாட்டு வாழ்க்கை.. நாய் படாதபாடு.//
சிவபாலன், :)

துளசி கோபால் said...

//ஆனால் இன்னும் ஏன் அங்கே இருக்கீங்க‌ன்னு கேக்காதீங்க‌.
அத‌ற்கு வேறு கார‌ண‌ங்க‌ள்//

இந்தியாவில் இருக்கும் கூட்டத்தில் கொஞ்சம் குறையட்டுமுன்னுதான் நாங்கள் வெளியே இருக்கோமுன்னு
சொன்னா நம்பணும்.

நாங்க எல்லாம் வெளியே இருந்து ஆதரவு தருவோம்:-)))

வவ்வால் said...

வாங்க இளா,
நீங்கள் கொடுத்த சுட்டியில் இருந்த வ.வா பதிவும் பார்த்தேன் நன்றாக இருந்தது. அப்படிலாம் நடக்க வேண்டும் , கனவென்றாலும் சுகமானது!

கொஞ்சம் நிலை மாறிவருகிறது , விரைவில் இன்னும் மாறும்!

மாசிலா said...

விஜய் சொன்னதை நான் ஆமோதிக்கிறேன்.

அவர் சொன்னது மிகச்சரியானதே. பணத்திற்கு மட்டும் படித்தவர்கள் வெளிநாடுகளுக்கு போகக்கூடாது.

மேலும், தாய் நாட்டில் நல்ல குடும்ப சூழலில், பண்பாட்டு, பாரம்பரிய, கலாச்சார, மொழி, சொந்தம், பந்தம், நட்பு போன்ற ஊட்டச்சத்துகளுடன் வளர்ந்து நன்றாக வேர்பிடித்த பசுமையான கன்றுகளை திடீரென்று பணத்துக்காக இவ்வேர்களில் இருந்து பிய்த்து அறுக்கப்பட்டு அந்நிய நாடுகளில் அந்நியன் என்கிற முத்திரையுடன் சிறுமை படுத்தப்பட்டு கூனிகுறுகி இயந்திர வாழ்க்கை வாழ்க்கை வாழ்வதால் இந்தியர்கள் மட்டும் அல்லாத அனைத்து அந்நிய புது குடியேறிகளும் மிகுந்த மன உலைச்சள்களுக்கு ஆளாகி தங்களது அடையாளத்தை இழந்து அவதிப்படுகின்றனர்.

என் விசயத்தில் இது உண்மையே.

அறிவாளிகள் அரசாங்க பொறுப்பாளர்கள் சீரிய முறையில் சிந்தித்து இதற்கு ஒரு நல்ல முடிவுகளை காணவேண்டும்.

நானே இதைப்பற்றி ஒர் கட்டுரை எழுத எண்ணமிட்டு வருகிறேன். இது சம்பந்தமாக தோழியர் தமிழச்சியுடனும் கலந்துரையாடியும் உள்ளேன்.

நல்ல செய்தி பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

விவாத களத்தில் சந்திப்போம்.

வவ்வால் said...

வாங்க துளசி கோபால்,
//நாங்க எல்லாம் வெளியே இருந்து ஆதரவு தருவோம்:-)))//

அப்படி மனதால் நினைப்பவர்கள் அதிகம் என்று தான் நானும் சொல்லியுள்ளேன். ஆதரவு தாங்க அப்போ தான் இந்தியா உருப்படும்!

வவ்வால் said...

வாங்க மாசிலா,
விஜய் சொன்னதையும் நான் மறுக்கவில்லை , ஆனால் மாறிவரும் சூழலை சொன்னேன். தற்போது முன்னெப்போதும் இல்லாதவகையில் ஒரு மாற்றம் ஏற்படுகிறது ,வெளிநாட்டு வேலை கூட வேண்டாம் எண்ணுமளவுக்கு ,அது மேலும் வளர வேண்டும்.

இது பற்றி மேலும் பேசுங்கள்!

இந்தியாவில் படித்து விட்டு வெளிநாட்டுக்கு செல்வோரிடம் வரி வசூலிக்க வேண்டும் என்று கூட சமீபத்தில் செய்தி தாள்களில் ஒரு தகவல் வந்தது, அது சரியாக நினைவில் இல்லை.

வடுவூர் குமார் said...

"Dirty country" என்பது போல இந்தியாவை மட்டமாக நினைக்க கூடும்.
போன சனிக்கிழமை இங்கு கோமளவிளாஸ் சாப்பாடுக்கடையில் முன் காத்திருக்கிறேன் ஒரே ஒரு தோசை Take away காக.
அப்போது ஒரு மாமி சுமார் 60 ஐ தாண்டி இருக்கும,பக்கத்தில் இருக்கும் இரு பெண்களிடம் பேச்சுக்கொடுத்துக்கொண்டிருந்தார்,காற்று வாக்கில் விழுந்தது.
அவருக்கு 2 மகள்களாம். இருவரும் வெளிநாட்டில் இருக்கிறார்களாம் ஒருவர் சிங்கையில் மற்றொருவர் ஆஸ்திரேலியா/அமெரிக்காவோ சொன்னார்.கேள்விப்பட்ட பல விஷயங்களைச் சொல்லி என்னால் அங்கு இருக்க முடியவில்லை அதற்கு சிங்கை எவ்வளவோ பெட்டர் என்றார்.அது வரை சரி,அவர் எண்ணம்.
கடைசியாக " இங்கெல்லாம் இருந்து விட்டு என்னால் இனிமேல் இந்தியாவில் இருக்க முடியாது " என்று சொல்லி கூட்டம்,அசுத்தம் என பட்டியல் போட ஆரம்பித்தார் "இந்தியாலில் பிறந்து/வளர்ந்த மாமி".
இது அவருடைய கருத்து அது அப்படியே இருக்கட்டும் அதில் நான் குற்றம் காண முடியாது அதை பொதுவில் வைத்து சொல்லும் போது தான் மிகவும் கஷ்டமாக இருந்தது.

Unknown said...

வெளினாட்டு வாழ்க்கை நாய்படாத பாடுதான். என்ன பன்றது, வந்தாச்சு.. காச சம்பாதிச்சுகிட்டு நடைய கட்ட வேண்டியதுதான்.

யோகன் சொன்னமாதிரி, எவ்வளவுதான் சம்பாதிச்சாலும், மாசக் கடைசில, கிரெடிட் கார்ட நம்பிதான் வாழ்க்கை ஓடுது. ஆனா, எத்தன பேரு இத ஒத்துக்கிறாங்க? அப்பா அம்மா ஊர்ல, வறட்டுக் கவுரவத்துக்கு 'எம் பையன் வெளினாட்ல இருக்கான்' அப்டினு சொல்லிக்கறததான் நம்மள்ல நிறைய பேர் விரும்புறோம்.

சின்ன அம்மினி சொன்ன மாதிரி, இங்கே தங்கமணியும் ரங்கமணியும்தான் சேர்ந்து வீட்டு வேலை பாக்கனும். அதுவும் சில ரங்கமணிகள், தங்கமணி சம்பாதிச்சாதான் வீட்டு வேலையப் பகிர்ந்துகிறாங்க!!

dirty country னு இந்தியாவை சொல்றவங்கதான் இங்கே வீட்டுக் கக்கூசக் கழுவுறாங்க!

ஆனா, brain drain மாறி இப்போ brain gain ஆகிட்டு வருது. நல்ல விஷயம். நானும் 2010 ல மொத்தமா ஊருக்குப் போறேன் (நெசமாத்தாங்க:) இந்தியாவுல படிச்சிட்டு வெளினாட்ல வேலை பாக்குறவங்களுக்கு வரி போட்றது நல்ல விசயம்தான். ஆனா, அன்னிய செலவாணி (செலாவனியா? இதுவும் வம்சாவளியும் எனக்கு இன்னும் பிடிபடலே!) இந்தியாவுக்கு வறதுனாலே அது தேவை இல்லை என்பது என் தனிப்பட்ட கருத்து. இந்த நடிகர்களும், அரசியல்வாதிகளும் மற்ற தொழிலதிபர்களும் ஒழுங்கா வரி கட்னாலே பாதி கஜான நிரம்பிடுமே!

வவ்ஸ்,
நீண்ட பின்னூட்டத்துக்கு சாரிங்கோ!
நல்ல இடுகை.

வவ்வால் said...

வாங்க குமார்,
நன்றி!
//என்று சொல்லி கூட்டம்,அசுத்தம் என பட்டியல் போட ஆரம்பித்தார் "இந்தியாலில் பிறந்து/வளர்ந்த மாமி".//

நன்றாக சொன்னீர்கள்,
நானும் அப்படி ஒரு சிலரை இங்கேயும் பார்த்துள்ளேன் அதனால் தான் ஒரு சிலர் என சொல்லிவைத்தேன்!

அந்த மாமி போன்றோர் இந்தியாவில் இருந்த காலத்தில் வீட்டை சுத்தம் செய்து தெருவில் கொட்டுவார்கள் , கேட்டால் குப்பை தொட்டி இருக்கும் இடம் வரைக்கும் போக முடியவில்லை வேலை என்பார்கள. இப்படித்தான் பலரும் சுத்தம் பேணுகிறார்கள். கேட்டால் நாட்டை குறைசொல்வது!

சிலர் என்னமோ வெளிநாடு எல்லாம் குளிர்ச்சியாகவே இருக்கும் என்பது போல என்னா வெயில், அங்கே எல்லாம் டிராபிக் இல்லாதது போல் என்னா டிராபிக் இன்னும் மாறவே இல்லைனு அலுத்துக்கொள்வார்கள்!

இதை சொன்னால் வெளிநாடு வாழ் அன்பர்கள் கோவித்துக்கொள்ள கூடாது , ஒருவர் சொன்னார் , இனிமே எங்களால எல்லாம் இங்கே வந்து இருக்க முடியாது பசங்க எல்லாம் அந்த பாணில வளர்ந்துடாங்க தமிழ் எழுத படிக்க தெரியாது ஆனா பேசுவாங்க என்று பெருமையாக சொல்லிக்கொண்டார், இதில் என்ன பெருமை என்பது புரியவில்லை.

இப்படி தமிழ் எழுத , படிக்க தெரியாதுனு சொல்லிக்க ஆசைப்படும் இந்திய பெற்றோரும் இருக்காங்க, ஆனால் அவரால் இந்தியாவிற்கு வர இயலாது என்பதற்கு இதை ஒரு காரணமாக சொன்னது தான் சப்பைகட்டா தோன்றியது.

வலைப்பதிவால் என்ன நன்மையோ தெரியாது வெளிநாடுவாழ் தமிழர்களின் எழுத படிக்கும் ஆர்வம் அணையாமல் இருக்கு! பசங்களையும் எழுத படிக்க சொல்லி தருவாங்கனு நினைக்கிறேன்.

Unknown said...

இதில் பொதுப்படையாக "இந்தியாவில் வேலை பாருங்கள்" என்றோ "அனைவரும் வெளிநாட்டில் தங்கியிருங்கள்" என்றோ கூற முடியாது வவ்வால்.

ஒவ்வொருவரையும் அவர் சூழல்,பணிவாய்ப்புகள் அவர் இருக்கும் நாட்டின் அரசியல் ஆகியவற்றை பொறுத்த விஷயம் இது.

அன்பான குடும்பம், அருமையான பணியிடம், உற்ற தோழமை அமைந்தால் ஒரு மனிதன் வாழும் இடமெல்லாம் சொர்க்கம் தான்.

ஆனால் எந்த நாட்டில் இருந்தாலும் பிறந்த மண்ணுக்கு செய்ய வேண்டிய கடமையை ஒருவன் மறக்காமல் செய்ய வேண்டும்.

வவ்வால் said...

வாங்க தஞ்சாவூரார்,
நன்றி!

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை, பலர் மட்டும் பகட்டுக்காக உண்மைகளை மறைத்து வாழ்கிறாகள்.

//ஆனா, brain drain மாறி இப்போ brain gain ஆகிட்டு வருது. நல்ல விஷயம். நானும் 2010 ல மொத்தமா ஊருக்குப் போறேன்//

பாராட்டுக்கள்!

நமக்கு லாபம் என்றாலும் , பல மருத்துவ வல்லுனர்கள் எல்லாம் அயல்நாட்டிற்கு செல்வதால் பெரும் இழப்பு தானே. இங்கே கிரமாங்களில் எல்லாம் ஆபத்து என்றால், 50 கிலோ மீட்டருக்கு ஓடனும்.

நீங்களே பத்திரிக்கைகளில் படித்து இருப்பீர்கள் , உளுந்தூர் பேட்டையில் பேருந்து விபத்து ஏற்பட்டால் கூட சிகிச்சைக்கு புதுவை ஜிப்மர்கு தான் கொண்டு போக வேண்டும்.சென்னை - திருச்சி 300 கி.மீ. தூரம் எங்கு விபத்து ஏற்பட்டாலும், சென்னை, புதுவை, திருச்சி என்று மூன்று இடங்க்ளுக்கு தான் போகனும்.

எவ்வளவோ வளர்ந்தாலும் சாலை விபத்து & மருத்துவம் இதில் வளர்ச்சி, குறைவு, பெரு நகரங்களில் மட்டும் தான் அனைத்தும் உள்ளது. காரணம் மருத்துவர்கள் பற்றாக்குறை தானே.

பெரிய பின்னூட்டம் என்று எல்லாம் கவலைப்படாதிங்க நான் வழக்கமா பெருசா தான் போடுவேன்! ;-)

வவ்வால் said...

வாங்க செல்வன் ,
நன்றி,

நீங்கள் சொல்வதும் சரி தான் தனி நபர் சூழல் என்று ஒன்றும் இருக்கிறது தான்,

ஆனால் " top notch" வல்லுனர்கள் எல்லாம் அயல்நாட்டிற்கு போய்விட்டு போக முடியாதவர்கள் மட்டும் தான் நாட்டு சேவை செய்ய வேண்டுமா? நல்ல சம்பளம் கிடைத்தால் , இங்கு இருக்கலாம் தானே. அதிக ஆசை படாமல் பார்த்தால் அது சரியாக தோனும்!

iim மாணவர்கள் சிலரை பாருங்கள் அயல்நாட்டை விட குறைவு என்ற போதிலும் இந்தியாவில் மிக அதிகம் என்ற சம்பளம் கிடைக்கும் போது ஏன் போக வேண்டும் என இங்கேயே இருந்துவிட்டார்கள்!

இந்தியாவில் குறைந்த சம்பளம் தான் என்ற மாயை எல்லாம் உடைந்து வருகிறது!

சதங்கா (Sathanga) said...

//சொந்த நாட்டில் வேலை செய்யுங்கள்"- நடிகர் டாக்டர் விஜய் அறிவுரை.
யார் சொன்னது எனப்பார்க்காமல் சொன்னதை பார்த்தால் சரி எனத்தான் தோன்றுகிறது//

டாக்டர் சார் ஏதாவது சாஃப்ட்வேர் கம்பேனி ஆரம்பிக்கப் போறாரோ ?

ஜோ/Joe said...

வவ்வால்,
//ஆனால் மாறிவரும் சூழலை சொன்னேன்.//
இந்த மாறி வரும் சூழல் எப்படி வந்தது ஐயா! வெளிநாட்டுக்கு சென்ற இந்தியர்கள் தங்கள் திறமையை நிருபித்ததால் வந்தது .அவர்கள் வெளிநாட்டுக்கு செல்லாமல் இருந்திருந்தால் இந்த புதிய சூழலே வந்திருக்காது ஐயா!

ஜோ/Joe said...

//"என்ன வளம் இல்லை இந்நாட்டில்!" //

மக்கள் தொகைக்கேற்ற வேலை வாய்ப்பு வளம் இல்லை .அவ்வளவு தான்.

Unknown said...

வவ்வால்

நான் வெளிநாடு போனதால் என் வேலை இன்னொரு இந்தியனுக்கு கிடைத்தது.வேலை இல்லா திண்டாட்டத்தை குறைக்க என்னால் ஆன சிறு உதவி.

வவ்வால் said...

வாங்க சதங்கா,

அவர் படம் பார்க்க ஆள் குறைஞ்சு போகுதுனும் சொல்லி இருக்கலாம் :-))

Unknown said...

வருடா வருடம் 1 லட்சம் இந்தியர்கள் அமெரிக்கா H1B விசா வாங்கி வெளிநாடு செல்கின்ரனர்

உள்நாட்டில் 1 லட்சம் வேலைவாய்ப்புகளை புதிதாக உருவாக்குவதற்கு சமம் இது.

100 கோடி ஜனத்தொகை கொண்ட, வேலை இல்லா திண்டாட்டம் மிகுந்திருக்கும் நாடு நமது.முடிந்தவரை அனைவரும் வெளிநாடு சென்று அங்கிருக்கும் வேலைகளை கைபற்றுவோம். அதுதான் உள்நாட்டு வேலை வாய்ப்புகளை பெருக்கும் சிறந்த வழி

வவ்வால் said...

வாங்க ஜோ,
//வெளிநாட்டுக்கு சென்ற இந்தியர்கள் தங்கள் திறமையை நிருபித்ததால் வந்தது .அவர்கள் வெளிநாட்டுக்கு செல்லாமல் இருந்திருந்தால் இந்த புதிய சூழலே வந்திருக்காது ஐயா!//

அப்படினு நீங்க நினைத்துக்கொண்டால் அது உங்க எண்ணம்.

அவுட் சோர்சிங் என்ற ஒன்றால் இந்திய மென்பொருள் துறைக்கு அதிக வாய்ப்புகள் கிடைத்து அதனை இந்தியாவில் உள்ள மனித ஆற்றலால் திறம்பட செய்து காட்டியதால் தான் இந்த வளர்ச்சி என்பது தான் உண்மை.

வெளிப்படையாக சொல்கிறேன் , அயல்நாட்டிற்கு இந்தியர்கள் வேலைதேடி போனதால் இந்தியாவில் தொழில் துறை வளர்ந்தது என்பது எல்லாம் பெரிய காமெடி! அவர்களால் ஏற்படும் ஒரே பயன் அன்னிய செலவாணி, மேலும் அவர்கள் குடும்பத்திற்கு வருமானம்!

இப்படி இந்தியாவில் தகவல் தொழிநுட்ப துறை வளர்ந்ததால் தான் முன் எப்போதும் விட தற்போது அதிக மென்பொருள் வல்லுனர்கள் வெளிநாடு செல்ல வாய்ப்பு பெறுகிறார்கள் ஒழிய வெளி நாட்டிற்கு போனதாம் இங்கே வளர்ச்சி ஏற்படவில்லை!

வவ்வால் said...

செல்வன்,
நன்றி அற்புதமாக சொல்கிறீர்கள் :-))

//நான் வெளிநாடு போனதால் என் வேலை இன்னொரு இந்தியனுக்கு கிடைத்தது.வேலை இல்லா திண்டாட்டத்தை குறைக்க என்னால் ஆன சிறு உதவி.//

இதை இப்படி கூட சொல்லலாமா, நீங்கள் பிஸ்ஸா சாப்பிடுவதால் ஒரு ஏழைக்கு அரிசி கிடைக்க வழி செய்வதாக!

//வருடா வருடம் 1 லட்சம் இந்தியர்கள் அமெரிக்கா H1B விசா வாங்கி வெளிநாடு செல்கின்ரனர்

உள்நாட்டில் 1 லட்சம் வேலைவாய்ப்புகளை புதிதாக உருவாக்குவதற்கு சமம் இது.//

அப்படியே அந்த 1 லட்சம் பேரும் வெளி நாட்டில் போய் படித்திருந்தால் படிப்பறிவு குறைவான இந்தியாவில் மேலும் ஒரு லட்சம் பேர் படிக்க வாய்ப்பும் பெற்று இருப்பார்கள்!

அதில் எத்தனை பேர் நேரடியாக படித்ததும் வெளி நாடு வேலைக்கு போனார்கள் இருக்கும் வரைக்கும் இங்கே ஒரு வேலைப்பார்த்துவிட்டு தானே அங்கே போய் இருப்பார்கள்.

ஒரு பேருந்தில் அமர்ந்து கொண்டு வரும் ஒருவர் இறங்க வேண்டிய இடம் வந்ததும் இறங்கி விட்டு ஒருவருக்கு அமர இருக்கை கொடுத்தேன் என பெருமை பட்டுக்கொள்வதா?

வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்வது ஒன்றும் குற்றம் இல்லை. அங்கே அதிக சம்பளம் என சொல்லிவிட்டு போங்கள் அதை விட்டு எதற்கு இந்த கதை எல்லாம்!

Unknown said...

வவ்வால்

சிம்பிளான கணக்கு

வெளிநாட்டில் இருக்கும் 10 லட்சம் பேர் உள்நாட்டுக்கு திரும்பி வந்தால் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்குமா குறையுமா?

சம்பளம் அதிகம் கிடைக்கும் எனதான் பலரும் வெளிநாடு போகிறார்கள்.அதில் தவறொன்றும் இல்லையே?திரைகடலோடியும் திரவியம் தேடியவன் தான் தமிழன்.

Unknown said...

அப்படியே அந்த 1 லட்சம் பேரும் வெளி நாட்டில் போய் படித்திருந்தால் படிப்பறிவு குறைவான இந்தியாவில் மேலும் ஒரு லட்சம் பேர் படிக்க வாய்ப்பும் பெற்று இருப்பார்கள்!//

ஆம்..முடிந்தவரை பலரும் வெளிநாட்டில் படிப்பது உள்நாட்டில் சீட்டுகளுக்கு தட்டுப்பாடு ஏற்படுவதை குறைக்கும்.

//அதில் எத்தனை பேர் நேரடியாக படித்ததும் வெளி நாடு வேலைக்கு போனார்கள் இருக்கும் வரைக்கும் இங்கே ஒரு வேலைப்பார்த்துவிட்டு தானே அங்கே போய் இருப்பார்கள்.//

அந்த வேலை இப்போது வேலை இல்லாதவருக்கு கிடைத்து வேலை இல்லா திண்டாட்டத்தை குறைக்கும் அல்லவா?

வவ்வால் said...

செல்வன் ,
அதைத்தான் நானும் சொன்னேன் நான் சொன்னதையே திரும்பவும் , ஒரு வட்டம் போட்டு வந்துசொல்றிங்க!

சம்பளம் அதிகம் அதனால் போகிறார்கள் என்பது நியாயம்.வெளிநாட்டு வேலைக்கிடைக்கும் என்று உறுதியாக இருந்து ,இங்கே வேலைக்கு போகாமல் இருந்தால் கூட, போட்டி தவிர்க்கப்பட்டு ஒருவருக்கு வேலை கிடைத்து இருக்கும்!

அதை விடுத்து அங்கே போனதால் இங்கே ஒருவருக்கு வேலை கிடைக்கும் என்ற தியாகி வேஷம் தான் பம்மாத்து.

அமெரிக்கா நாசா, அணுசக்தி துறைகளில் நிறைய விஞ்ஞானிகள் நம்ம ஆளுங்க தான் அவங்க எல்லாம் எப்படி அங்கே போனாங்க , இங்கே இந்திய வின்வெளி துறை, அணுசக்தி துறைல வேலை செய்தவர்கள் அவர்களை அதிக சம்பளம் என ஆசை காட்டி அமெரிக்கா இழுத்துக்கொண்டுள்ளது. இதனால் இந்தியாவிற்கு இழப்பா , இல்லை நன்மையா ?

அப்துல் கலாம் அவர் வேலை செய்த காலத்தில் இஸ்ரோவின் முன்னனி விஞ்ஞானி அவருக்கு வாய்ப்பு வந்திருக்காதா, அவர் போய் இருந்தால் , பிரம்மோஸ், அக்னி என ஏவுகணைகள் வந்திருக்குமா? அவர் பணம் பண்ண ஆசைப்படாமல் இங்கேவே இருந்ததால் தானே வின்வெளித்துறையில் இந்தியா முன்னேறியது!

உங்கள் லாஜிக் படி அடுத்தவருக்கு வேலை கிடைக்க வழி செய்தேன் என அப்துல்கலாம் யோசிக்கவில்லை அது இந்தியாவின் நல்ல நேரம்!

ஒரு சிறு செடி வைத்து மரம் ஆகி கனி தரும் நேரத்தில் மரத்தை வேரோடு பிடிங்கி வெளி நாட்டிற்கு விற்பது சரியாகுமா?

வவ்வால் said...

செல்வன்,

திரும்பி வா என்பது கட்டாயம் அல்ல வந்து முன்னேற்றலாம், ஆனால் இங்கு சொல்ல வருவது, வெளி நாட்டுக்கு தொடர்ந்து செல்பவர்களைத்தான், இந்தியாவிலே நல்ல சம்பளம் கிடைக்க ஆரம்ப்பித்துள்ளது .இனியும் அதை விட அதிக சம்பளம் என ஆசைபடணுமா என்று தான்!

தொடர்ச்சியான brain drain ஐ தான் சொல்லவருகிறேன்! அதனால் பின்னடைவு ஏற்படாதா?

பட்டுக்கோட்டை பாரி.அரசு said...

வவ்வால்,
சிங்கையில் NUS உள்ளது, அங்கு இருப்பவர்கள் பெரும்பாலனோர், தமிழ்நாட்டில் பல்கலைகழகங்களில் முனைவர் பட்டம் வாங்கியவர்கள்... அவர்களில் பெரும்பான்மையானவனர்களின் அனுபவம், அவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாலேயே வெளிநாடுகளுக்கு விண்ணப்பிக்க தொடங்கினார்கள்.

ஆராய்ச்சியாளர்கள் பெரும்பாலும் ஆடம்பர வாழ்க்கை முறை கொண்டவர்கள் கிடையாது. அவ்வாறு ஆடம்பர வாழ்க்கையை விரும்புகிறவர்கள் ஆராய்ச்சியில் கவனமும் இருக்காது.

அவர்களுக்கு தேவையெல்லாம் அவர்களை அங்கீகரித்து வாய்ப்புகள் வழங்குவதே... அதை நமது அரசியல் அமைப்பு செய்ய தவறுகிறது.

ஓரு குறிப்பிட்ட சாரர் மட்டுமே ஆராய்ச்சி துறை, விளையாட்டு துறை மற்றும் இன்னும் பிற துறைகளெல்லாம் அமர்ந்துக்கொண்டு மற்றவர்களுக்கு வாய்ப்புகளை மறுக்கும் போது... இவ்வாறான இடப்பெயர்வு தவிர்க்க முடியாது.

அடுத்து இரண்டாம் நிலை பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் (diploma level), இவர்கள் வேலையில்லா திண்டாட்டதால் அவதிபடுகிறார்கள், அவர்களின் வெளிநாடு வேலைவாய்ப்பை ஆதரிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது, ஏனென்றால் இன்னும் நம்மால் முழுமையான அளவில் வேலைவாய்ப்பை அவர்களுக்கு உருவாக்க முடியவில்லை.

அடுத்தது கடைநிலை தொழிலாளர்கள்...
தொழிலாளர்களை மனிதராக கூட மதிக்காத சமூக அமைப்பை வைத்திருக்கும் நாம்... அவர்கள் குறைந்தபட்சம் வெளிநாடு போயி பொருளீட்டுவதை குறை சொல்ல வெட்கப்பட வேண்டும்.

Unknown said...

//எவ்வளவு சம்பாதித்தாலும் அவர்களே கார் ஓட்டி , வீடு கழுவி,பெருக்கி , துணி துவைத்து என கஷ்டப்படவேண்டும், வாங்கும் பணத்தை அனுபவிக்க முடியாது. //

வவ்வால்,
வாழ்க்கை என்பது அனைத்து செயல்கள்/வேலைகளிலும் பங்கு கொள்வதுதான். சோறு மட்டும் திண்ணுவேன் கழுவ வேறு ஆள் வைத்துக் கொள்வேன் என்பது மகா மட்டமான நடைமுறை.

வேலைக்கு ஆள் வைப்பது தவறு அல்ல. ஆனால் உன்னை உனது நிர்வாகம் நடத்தும் அளவுக்கு நீ உன் வேலை ஆட்களை நடத்துகிறாயா? என்று அவரவர் மனதிடம் கேட்டுக் கொள்ள வேண்டும்.

இங்கே வேலைக்கு ஆள் என்று மனித உழைப்புச் சுரண்டப்படுகிறது. மேலை நாடுகளில் வேலை செய்யும் வேலைக்காரர்களும் மனிதர்களாக மதிக்கப்பட்டு அதே சமயம் சராசரி வாழ்க்கை வாழத் தேவையான வருமானம் அவர்கள் செய்யும் வீட்டு வேலைகளிலேயே கிடைக்கும். இங்கே அப்படி அல்ல ...

மாதம் ஒரு இலட்சம் சம்பாதிக்கும் ஒருவனின் வீட்டில் கொத்தடிமைகளாக இரண்டு குழந்தைகள் உண்டு....ஆம்..இங்கே ஏழையின் உழைப்பச் சுரண்டி சொகுசாக வாழலாம். உண்மைதான்.

***

வீட்டில் வேலை செய்யும் பெண் அவர் குழந்தைக்கு உடல்நலம் சரியில்லை என்று வாராததால், வீட்டுப் பாத்திரங்களைக் கழுவ அவரை வருந்து வேலை போய்விடும் என்று அழைத்து வந்தனர் எனது வீட்டின் அருகே உள்ளவர்கள். மாதம் வாங்கும் 400 வோவா சம்பளத்திற்கு (தினம் Rs 13 ) அந்தப் பெண்ணிற்கு விடுமுறையே கிடையாது.

ஒரு நாளைக்கு குறைந்தது 4 மணி நேரம் வேலை. இப்படி அடுத்தன் வயித்தில் அடித்து உழைப்பச் சுரண்டுவதுதான் இந்தியாவில் மத்திய தர மக்களிடம் இன்னும் உள்ளது.


பிரபு இராஜதுரையின் ...
ஏன் நிகழவில்லை, அதிசயம்?
http://marchoflaw.blogspot.com/2007/06/blog-post.html

// இந்தியாவிலிலேயே வசதியான சம்பளம் பெற முடிகிறது. ஆனால், எத்தனை ஆயிரம் சம்பளம் பெற்றாலும், வீட்டில் தேங்கும் பழைய செய்தித்தாள்களை பெற்றுச் செல்ல வருபவருக்கு, இலவசமாகக் கூட அதைத் தர முடியும் என்பது இதுவரை நினைத்துக் கூட பார்க்கப்பட்டதில்லை!
//

Unknown said...

//அதை விடுத்து அங்கே போனதால் இங்கே ஒருவருக்கு வேலை கிடைக்கும் என்ற தியாகி வேஷம் தான் பம்மாத்து.//

இது தியாகி வேஷமில்லை வவ்வால்.

வெளிநாட்டுக்கு ஒரு இந்தியர் போவதால் உள்நாட்டில் வேலை வாய்ப்பு பெருகுகிறது என்பதை சுட்டி காட்டும் உதாரணமே அது.

//அமெரிக்கா நாசா, அணுசக்தி துறைகளில் நிறைய விஞ்ஞானிகள் நம்ம ஆளுங்க தான் அவங்க எல்லாம் எப்படி அங்கே போனாங்க , இங்கே இந்திய வின்வெளி துறை, அணுசக்தி துறைல வேலை செய்தவர்கள் அவர்களை அதிக சம்பளம் என ஆசை காட்டி அமெரிக்கா இழுத்துக்கொண்டுள்ளது. இதனால் இந்தியாவிற்கு இழப்பா , இல்லை நன்மையா ?//

இதுபோன்ற ராணுவ தேசபாதுகாப்பு சம்பந்தப்பட்ட துறைகளில் வேலை செய்வோருக்கு உலக அளவில் ஒப்பிடக்கூடிய சம்பளம் தரவேண்டும்.அப்போதுதான் காசுக்கு ஆசைப்பட்டு வெளிநாடுகளுக்கு ரகசியங்களை விற்கும் போக்கு நிற்கும்.

மற்றபடி எனக்கு தெரிந்து இந்த துறைகளில் நமது விஞ்ஞானிகளை நாசா இழுத்ததாக தெரியவில்லை.புதிய கிராஜுவேட்டுகளைத்தான் பணியில் அமர்த்தியுள்ளனர்

//அப்துல் கலாம் அவர் வேலை செய்த காலத்தில் இஸ்ரோவின் முன்னனி விஞ்ஞானி அவருக்கு வாய்ப்பு வந்திருக்காதா, அவர் போய் இருந்தால் , பிரம்மோஸ், அக்னி என ஏவுகணைகள் வந்திருக்குமா? அவர் பணம் பண்ண ஆசைப்படாமல் இங்கேவே இருந்ததால் தானே வின்வெளித்துறையில் இந்தியா முன்னேறியது!//

அடுத்து உளவுத்துறையில் வேலை பார்ப்பவர்கள் அதிக சம்பளத்துக்கு ஆசைப்பட்டு சி.ஐ.ஏவுக்குக்கு வேலைக்கு போயிருந்தால் என்ன ஆயிருக்கும் என்று கேட்பீர்களா?:))

இதுபோன்ற துறைகளில் உள்நாட்டில் உலகத்தரம் வாய்ந்த சம்பளம், போட்டி,வசதி வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும்.இதுபோன்ற துறைகளில் வேலைக்கு சேர்வோர் வெளிநாட்டு வேலைக்கு போக கட்டுப்பாடுகள் உலகெங்கும் உண்டு.நாசா விஞ்ஞானி ஈரானில் வேலைக்கு போக அமெரிக்க அரசு அனுமதிக்காது அல்லவா?நம் நாட்டிலும் அதேதான் விதி.

Unknown said...

//இந்தியாவிலே நல்ல சம்பளம் கிடைக்க ஆரம்ப்பித்துள்ளது .இனியும் அதை விட அதிக சம்பளம் என ஆசைபடணுமா என்று தான்!//

சம்பளத்துக்கு வெளிநாட்டில் இருப்பதை விட வாழ்க்கை தரத்துக்காக வெளிநாட்டில் இருப்பவர்களே அதிகம்.

வவ்வால் said...

பாரி அரசு,

வாய்ப்புகள் மறுக்கப்பட்டு செல்வது ஒன்று வாய்ப்பு கிடைக்கும் வரை இங்கே நல்ல வேலை செய்து அதிகப்பணத்திற்காக செல்வதும் இருக்கு.

அதிக அளவில் அயல் நாடு செல்வதும் பாதிக்கும் தானே, இதில் ஒரு சம நிலை ஏற்பட வேண்டும்!

top notch தொழில்வல்லுனர்கள் எல்லாம் வெளி நாட்டிற்கு போய்விட்டால் , இங்கு இருக்கும் அடுத்த தர வல்லுனர்களைக்கொண்டு என்ன செய்ய முடியும்.

Unknown said...

//இந்தியாவில் மாதம் 20,000 ரூபாய் சம்பாதிப்பவர்கள் கூட வீட்டு வேலைக்கு , கார் டிரைவர் என வேலைக்கு ஆட்களை வைத்துக்கொள்ள முடியும் , அயல் நாட்டில் அப்படி வைத்துக்கொள்வது எத்தனை பேருக்கு சாத்தியமாகும்.எவ்வளவு சம்பாதித்தாலும் அவர்களே கார் ஓட்டி , வீடு கழுவி,பெருக்கி , துணி துவைத்து என கஷ்டப்படவேண்டும்,//

அவரவர் வேலையை அவரவரே செய்துகொள்வதில் என்ன கஷ்டம்?

அவனவன் துணியை அவனவன் துவைப்பதில் என்ன கஷ்டம் வந்து சேர்கிறது?வீட்டை சுத்தமாக வைத்திருப்பதை ஒரு வித பெருமிதத்துடன் நினைக்க வேண்டும்.நீங்கள் சொல்லும் இந்த வேலையை எல்லாம் செய்வதற்கு எனக்கு வாரத்துக்கு ஒரு இரண்டு மணிநேரம் கூட ஆகாது.

வவ்வால் said...

வாங்க கல்வெட்டு,

நீங்கள் பல கருத்துகளையும் சொல்லியுள்ளீர்கள் அதில் சொல்லவருவது வீட்டு வேலைக்காரர்களை சரியாக நடத்தவில்லை என்பதற்கு தான் அதிகம் முக்கியத்துவம் தந்துள்ளீர்கள் , அதுவும் தேவை தான் ஆனால் இங்கே மூளை வெளியேற்றம் குறித்து தான் முக்கியமாக பேசப்படுகிறது.

//இங்கே வேலைக்கு ஆள் என்று மனித உழைப்புச் சுரண்டப்படுகிறது. மேலை நாடுகளில் வேலை செய்யும் வேலைக்காரர்களும் மனிதர்களாக மதிக்கப்பட்டு அதே சமயம் சராசரி வாழ்க்கை வாழத் தேவையான வருமானம் அவர்கள் செய்யும் வீட்டு வேலைகளிலேயே கிடைக்கும். இங்கே அப்படி அல்ல ...//

இதை சொன்னீர்கள் இதையும் சொல்லுங்கள் அமெரிக்காவில் இந்திய வல்லுனரும் அமெரிக்க வல்லுனரும் சம சம்பளம் பெருகிறார்களா? இருவரும் ஒரே காலத்தில் வேலையில் சேர்ந்தாலும்.

அப்படி எனில் அவர்களும் நம்மை சுரண்டுகிறார்கள் தானே! இந்தியாவை விட அதிகம் என்று ஒரே பல்லவியை தானே எல்லாம் பாடுறிங்க இதை விட்டுடு!

வவ்வால் said...

செல்வன் ,
அப்துல் கலாம் போய் இருந்தால் என்பதற்கு எதுவும் பதில் இல்லை ஆனால் எதிர்மரையாக ஒரு பதில் ,
//அடுத்து உளவுத்துறையில் வேலை பார்ப்பவர்கள் அதிக சம்பளத்துக்கு ஆசைப்பட்டு சி.ஐ.ஏவுக்குக்கு வேலைக்கு போயிருந்தால் என்ன ஆயிருக்கும் என்று கேட்பீர்களா?:))//

RAW இணை இயக்குனராக இருந்த ரவிந்தர் சிங்க் என்ற நபரை அமெரிக்க cia பணத்திற்கு வாங்கி அமெரிக்க குடியுரிமை அளித்தது பற்றி செய்திகள் வந்ததே அதை படிக்கவில்லையா?

இஸ்ரோ, அணுசக்தி துறையில் இந்தியாவில் அனுபவம் பெற்றவர்களை அமெரிக்க அரசு அதிக சம்பளம் என ஆசைக்காட்டி அழைத்துக்கொண்டுள்ளது , இது பர்றி முன்னர் இந்தியா டுடே, அவுட் லூக் போன்றவற்றில் கட்டுரைகள் வந்துள்ளது. நீங்கள் சொல்வது போல புதிதாக எல்லாம் அவ்வளவு சீக்கிரம் அங்கே ஆள் எடுக்க மாட்டார்கள் அது வெகு குறைவே!

//சம்பளத்துக்கு வெளிநாட்டில் இருப்பதை விட வாழ்க்கை தரத்துக்காக வெளிநாட்டில் இருப்பவர்களே அதிகம்.//

இந்த வாழ்கை தரம் என்பதை விளக்கவும்! நான் பதில் சொல்ல வசதியாக இருக்கும்!

செல்வன் said...

//இதை சொன்னீர்கள் இதையும் சொல்லுங்கள் அமெரிக்காவில் இந்திய வல்லுனரும் அமெரிக்க வல்லுனரும் சம சம்பளம் பெருகிறார்களா? இருவரும் ஒரே காலத்தில் வேலையில் சேர்ந்தாலும்.//

இதென்ன கேள்வி?

ஆம்.ஒரே சம்பளம்தான்.

You cannot discriminate on any basis in USA.It's illegal

வவ்வால் said...

செல்வன் ,
//அவரவர் வேலையை அவரவரே செய்துகொள்வதில் என்ன கஷ்டம்?//

அவரவர் வேலையை செய்வதில் கஷ்டமே என்று சொல்லவில்லை. ஆனால் அதிக பணம் இருக்கிறது அங்கே அதனால் இதை கூட செய்து கொள்ள முடியாது என உதாரணம் காட்ட சொன்னது!

மேலும் இதனை உண்மையாக சொல்லவும் , இந்தியாவில் நீங்கள் அதிக சம்பளம் வாங்கும் வேலையில் இருந்தால் இப்படி உங்கள் வேலையை நீங்களே செய்து கொள்வீர்களா?

இந்தியாவில் கை நிறைய சம்பளம் வாங்குபவர்கள் எத்தனை பேர் அவர்கள் வேலையை அவர்களே செய்கிரார்கள்.
ஒரு உதாரணம்,
நான் இருக்கும் இடத்தில் துணிகளை இஸ்திரி செய்பவர் வருவார், அவரிடம் அனைவரும் கொடுப்பார்கள், நிறைய துணி வருவதால் அவர் தாமதம் செய்வார், அதனால் சிலர் புலம்புவார்கள், அப்போது கேட்டேன் நீங்களே செய்து கொள்ளலாமே என்று , நேரம் இல்லை என்றார்கள்(நான் எனக்கு நானே தான்)

அவர்கள் எல்லாம் ஒன்றும் மிகப்பெரும் பணக்காரர்கள் அல்ல ஏன் அப்படி இருக்கிறார்கள், நீங்கள் இங்கு இருந்தாலும் இப்படி தான் செயல்படுவீர்கள்.

எனவே கொஞ்சம் யதார்த்தம் வேண்டும் செல்வன்.வெளி நாட்டில் வேறு வழி இல்லாமல் தான் சுயசேவை செய்து கொள்கிறார்கள்!

செல்வன் said...

//RAW இணை இயக்குனராக இருந்த ரவிந்தர் சிங்க் என்ற நபரை அமெரிக்க cia பணத்திற்கு வாங்கி அமெரிக்க குடியுரிமை அளித்தது பற்றி செய்திகள் வந்ததே அதை படிக்கவில்லையா?//

இது போன்ற ராணுவ தேசபாதுகாப்பு சம்பந்தப்பட்ட துறைகளை பொறுத்தவரை தடை சட்டம் போட்டால் தப்பில்லை.பல நாடுகளில் அம்மாதிரி விதிகள் இருக்கின்றன.பல கம்பனிகளில் கூட போட்டியாளரின் கம்பனியில் ஐந்து வருடத்துக்கு வேலை பார்க்க கூடாது என விதி இருக்கிறது.

ராணுவம்/தேசபாதுகாப்பு தவிர்த்த துறைகளை பற்றி சொல்லுங்கள்.

செல்வன் said...

//மேலும் இதனை உண்மையாக சொல்லவும் , இந்தியாவில் நீங்கள் அதிக சம்பளம் வாங்கும் வேலையில் இருந்தால் இப்படி உங்கள் வேலையை நீங்களே செய்து கொள்வீர்களா?//

பொதுவாக ஏழையாக இருந்தால் இந்த வேலையை அவரது மனைவி செய்வார்.பணக்காரனாக இருந்தால் இன்னொரு ஏழையின் மனைவி செய்வார்.

//அவர்கள் எல்லாம் ஒன்றும் மிகப்பெரும் பணக்காரர்கள் அல்ல ஏன் அப்படி இருக்கிறார்கள், நீங்கள் இங்கு இருந்தாலும் இப்படி தான் செயல்படுவீர்கள்.//

இந்தியாவில் நான் இருந்தபோது அப்படித்தான் இருந்தேன்.அதற்காக வெட்கப்படுகிறேன்.திரும்பி வந்தால் கண்டிப்பாக அப்படி இருக்க மாட்டேன்.இது விஷயத்தில் அமெரிக்கர்களிடம் நான் நிறைய கற்றுகொண்டேன்.அதற்கு அவர்களுக்கு என் நன்றியை தெரிவிக்கிறேன்.

//வெளி நாட்டில் வேறு வழி இல்லாமல் தான் சுயசேவை செய்து கொள்கிறார்கள்! //

ஆர்மபத்தில் அப்படிதான்.ஆனால் உழைப்பின் அருமை தெரிந்தபின் கோடி ரூபாய் சம்பளம் கிடைத்தாலும் அவரவர் வேலையை அவரவரே தான் செய்துகொள்வர்.

Unknown said...

//மூளை வெளியேற்றம் குறித்து தான் முக்கியமாக பேசப்படுகிறது.//

அப்புறம் எதுக்கு இங்கே எல்லா வேலைக்கும் ஆள் உண்டு என்று சொன்னீர்கள்? மூளை வெளியேறக்கூடது என்பதுக்கு இதை ஒரு காரணமாக, அல்லது இருப்பவர்களுக்குச் சாதகமாகவா? நீங்கள் இதைச் சொல்லாத பட்சத்தில் எனக்கு ஒரு வேலையும் இல்லை இங்கே :-))) ஏன் என்றால் இது பல முறை விவாதிக்கப்பட்டு ..இன்னும் விவாதிக்கப்படும் ஒரு ever green விசயம்... :-)))


//இதை சொன்னீர்கள் இதையும் சொல்லுங்கள் அமெரிக்காவில் இந்திய வல்லுனரும் அமெரிக்க வல்லுனரும் சம சம்பளம் பெருகிறார்களா? இருவரும் ஒரே காலத்தில் வேலையில் சேர்ந்தாலும்.//

எனது அனுபவங்கள் பொது விதியாகாது ......

இருந்தாலும்.... கண்ணுக்குப் புலப்படதா அந்தச் சிக்கலில் மாட்டி சிக்கி இருந்தவர்களுக்கு மட்டுமே காணக்கிடைக்கும் இந்த அமெரிக்கா டிஸ்கிரிமினேசன்.

நம்மூர் மக்கள் பலர் அமெரிக்கா சொர்க்கம் டிஸ்கிரிமினேசனே கிடையாது என்பார்கள். அப்படிச் சொல்பவர்கள் பெரும்பாலும் இந்திய நண்பர்கள் வட்டத்திலேயே பொழுதை ஓட்டுபவர்கள்... இவர்கள் அமெரிக்காவில் தெருவில் இறங்கி எந்த போராட்டங்களிலும் பங்கேற்காதவர்கள்..... இரண்டு உலகங்கள் எல்லா இடத்திலும் உண்டு


உங்களின் கேள்விக்கு விடை:
அமெரிக்காவிலும் உண்டு டிஸ்கிரிமினேசன்.

--
ஒப்பீட்டளவில் மற்ற நாடுகளைக் காட்டிலும் குறைவு.அரபு நாடுகளில் கண் முன்னே இது தெரியும் ஆனால் அமெரிக்காவில் நிறைய கஷ்டப்பட்டு தேடிப் பார்க்க வேண்டும். அவ்வளவே வித்தியாசம்.

நம்மளை விடுங்கள் வெள்ளை/கருப்பு பிரச்சனையே இன்னும் முடிந்த பாடில்லை அங்கே.
---

இது நம்மூரிலும் உள்ளது தெரு அளவில் ,ஊரளவில்,நாடளவில் எல்லா இடங்களில்லும் மண்ணின் மைந்தர்கள் சம்பந்தமான உணர்வும் மற்றவர்களுக்கான டிஸ்கிரிமினேசனும் உள்ளது.

அமெரிக்கா... சொந்த நாட்டு மக்களே (சிவப்பு இந்தியர்கள்) அகதியாக உள்ள நாடு ....

இது பற்றி நிறைய பேசலாம். எனது எதிர்கருத்து ..இந்தியாவில் வீட்டு வேலை செய்யும் மனிதர்களை நடத்தும் மிருகங்களைப் பற்றியது மட்டுமே...ஓவர் டூ Brain Drain --> :-)) வழிவிட்டு .....

வவ்வால் said...

கல்வெட்டு,
நன்றி,

இதை குறிப்பிட காரணம் சுரண்டல் என்பதை நீங்கள் சொன்னதால் தான். மேலும் இந்த டிஸ்கிரிமினேஷன் இருப்பதால் தான் வெளி நாடு செல்கிறோம் என்று சொன்னவர்களுக்கு நினைவூட்டவும்!

உழைப்பாளியின் உழைப்பு சுரண்டலும் பல காலமாக பேசப்படும் ever green சமாச்சாரம் தானே!

brain drain மற்றும் உழைப்பு சுரண்டல் இரண்டும் வெளி நாட்டு வேலையில் ஒருங்கே,நடைப்பெறுகிறது.

அமெரிக்கா போன்ற நாடுகளாவது நீங்கள் சொன்னார் போல பரவாயில்லை, மலேசியா ,சிங்கப்பூர், மொரிசியஸ், அரபு நாடுகளில் வேலைக்கு செல்வோரில் பெரும்பாலும் குறைந்த சம்பளம் , அதிக வேலை என கஷ்டப்படுகிறார்கள் என செய்திகள் நிறைய வருகிறது.

வவ்வால் said...

செல்வன்,
//ஆம்.ஒரே சம்பளம்தான்.

You cannot discriminate on any basis in USA.It's illegal//

கண்மூடித்தனமாக இருக்கிறது, அமெரிக்காவில் முதலில் சேரும் வேலையில் இந்தியர்கள் குறைவான சம்பளம் தான் பெறுகிறார்கள்,(அதன் பின்னர் அடுத்த வேலையில் தான் சம்பளம் கூடும்) அதே காலத்தில் அவருடன் சேரும் அமெரிக்கர் அதிகம் பெருவார். இதான் உண்மை , இதனை வலியுறுத்துவது போல கல்வெட்டும் சொல்லியுள்ளார், மேலும் அயல்நாட்டில் வேலை செய்பவர்களும் வந்தால் கேட்டு பார்ப்போம்!

//இந்தியாவில் நான் இருந்தபோது அப்படித்தான் இருந்தேன்.அதற்காக வெட்கப்படுகிறேன்.திரும்பி வந்தால் கண்டிப்பாக அப்படி இருக்க மாட்டேன்//

அதானே பார்த்தேன், உங்களுக்கு வெளி நாடு போகும் வாய்ப்பு இல்லை எனில் இப்படி செய்வீர்களா, அதற்குள் என்னமோ வேலைக்கு ஆட்கள் வைத்துக்கொள்வார்கள் என உதாரணம் காட்டியதும் கொதித்துவிட்டீர்கள் :-))
மற்றவர்களுக்கு வெளி நாடும் போகும் வாய்ப்பு வரவில்லை எனவே அவர்கள் சம்பளத்திற்கு வேலைக்கு ஆட்கள் வைக்கிறார்கள், அதுவும் ஒரு வேலைவாய்ப்பு உருவாக்கம் தானே , அதற்குள் , அதை எல்லாம் கேவலம் என்ற ரேஞ்சில் சொல்ல கிளம்பிட்டிங்க :-))

ராணுவம் , அணுசக்தி, வின்வெளி, இன்ன பிற துறைகளிலும் அயல்நாடு செல்வதால் ஏற்படுவது இழப்பு என்று எடுத்துக்காட்ட தான் அதையும் சொன்னென். நாட்டுக்கு அறிவு இழப்பு என்பது இழப்பு தான் நீங்கள் உங்கள் ஆறுதலுகு பல காரணங்கள் சொல்லலாம்.
அயல் நாடு போவது குற்றம் அல்ல என ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டேன். ஒரே அடியாக முதன்மையான அறிவாளிகள் எல்லாம் அயல் நாடு போய்விட்டால் என்னாவது நிலை இது தான் கேள்வி!

இதற்கு ஒரு தீர்வு வேண்டாமா? அரசு கல்விக்காக செலவழிப்பது இதற்கு தானா? இது தான் கேள்வி, இதற்கு விடைகள் இருக்கா?

தென்றல் said...

//அவுட் சோர்சிங் என்ற ஒன்றால் இந்திய மென்பொருள் துறைக்கு அதிக வாய்ப்புகள் கிடைத்து அதனை இந்தியாவில் உள்ள மனித ஆற்றலால் திறம்பட செய்து காட்டியதால் தான் இந்த வளர்ச்சி என்பது தான் உண்மை.//

இந்த அவுட் சோர்சிங் ல் இந்தியாவுக்கு எப்படி அதிக வாய்ப்புகள் கிடைத்தது ... நம் மக்கள் வெளிநாட்டில் போய் தங்களுடைய திறமைகளை நிருபித்ததும் ஒரு காரணம்தானே?!

//வெளிப்படையாக சொல்கிறேன் , அயல்நாட்டிற்கு இந்தியர்கள் வேலைதேடி போனதால் இந்தியாவில் தொழில் துறை வளர்ந்தது என்பது எல்லாம் பெரிய காமெடி! அவர்களால் ஏற்படும் ஒரே பயன் அன்னிய செலவாணி//

அன்னிய செலவாணி "மட்டும்" என்கிற கருத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை, வவ்வால்!
எனக்கு தெரிந்தே... இந்தியா திரும்பும் நம்மவர்கள் இங்குள்ள பல நல்ல பழக்க வழக்கங்கள்/ திட்டங்களை நம் நாட்டில் செயல் முறை படுத்தியுள்ளனர்.