இந்தப்பதிவு "உள்ளது உள்ளபடி -ஓகை அவர்கள் பார்வைக்கு" என்றப்பதிவின் தொடர்ச்சியாக வருவது.அப்பதிவை படித்து விட்டு தொடர்ந்தால் இதன் அர்த்தம் எளிதாக புரியும்.
அப்பதிவு ஓகை அவர்களின் பதிவிற்கு பதிலாக எழுதப்பட்ட ஒன்று எனவே ஓகை அவர்களின் பதிவிற்கான சுட்டி: ஓகை
கிராமங்களில் வாழ்ந்த விவசாயி , விவசாய தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு , வருமானம் இவற்றின் காரணமாக நகர்ப்புரங்களுக்கு இடம் பெயர்வது அதிகரித்து வரும் சூழலில் , அவர்களுக்கு கிடைப்பது சிறிய வருமானம் ஆனால் அவர்கள் அதற்காக இழப்பது அதிகம். கிராம , நகர்ப்புர வசிப்பிட சூழல், மற்றும் அவர்களுக்கு ஏற்படும் இன்னல்களை ஒப்பீட்டளவில் காண்போம்!
வசிப்பிடம்:
கிராமத்தில் ,
ஏழையாக இருந்தாலும் சொந்தமாக குடிசை என்று ஒன்று இருக்கும் , அது எவ்வளவு மோசமான குடிசையாக இருந்தாலும் அவனுக்கே உரியது , அதற்கு வாடகை எதுவும் இல்லை.
நகரத்தில்,
வேலை தேடிவரும் இடத்தில் தங்க வசதிகள் பெரும்பாலும் செய்து தருவதில்லை. அவன் வாங்கும் சொற்ப சம்பளத்தில் வாடகை வீடு பிடிப்பது சாத்தியம் இல்லை. எனவே சாலை ஓரங்களில் , அல்லது பாலங்கள் அடியில் , கட்டுமான பணி நடைபெறும் இடத்திலே தகர கூறை வேய்ந்த இடங்களில் பலருடன் இடத்தை பகிர்ந்து கொள்ளவேண்டும்.
பெண்கள் , வயது வந்த பெண் குழந்தைகள் வைத்து இருப்பவர் பல கஷ்டங்களை சந்திக்க நேரிடும், அவர்களுகு பாலியல் ரிதியான பல தொந்தரவுகள் ஏற்படலாம், பாதுகாப்பு இருக்காது.
குடிநீர்:
கிராமத்தில் ,
குடிநீர் வேண்டும் என்றால் கிணரு , குளம் , அடி பைப்புகள் என ஏதோ ஒன்று இருக்கும் , தேவைப்பட்ட நேரத்தில் போய் நீர் கொண்டு வரலாம். குளிப்பது , துணி துவைப்பது எல்லாம் ஒரு பிரச்சினை அல்ல.
நகரத்தில் ,
குடிநீர் லாரி எப்போது வருகிறதோ அப்போது தான் பிடிக்க முடியும் . குளிப்பது , துணி துவைப்பது எல்லாம் பெரும் பிரச்சினை. வாரத்தில் ஒரு முறை அல்லது மாதத்தில் ஒரு முறை குளிக்க இயலும்.கிராமத்தில் சுத்தமாக வாழ்ந்தவர்கள் நகரத்தில் அசுத்தமாக வாழ வேண்டும்.
உணவு:
கிராமத்தில்,
சமையல் கூழோ ,கஞ்சியோ வீட்டில் பொறுமையாக சமைத்து உண்ணலாம், அரிசி , போன்ற சமையல் பொருட்கள் வாங்க வேண்டி இருக்காது. அல்லது அரிசியை நியாயவிலைக்கடைகளில் குடும்ப அட்டை மூலம் வாங்கலாம். காய்கரிகள் , கீரை எதுவும் வாங்கும் நிலை இல்லை , பெரும்பாலும் இலவசமாக வீட்டு பின்புறம் தானே பயிரிட்டு பயன்படுத்திக்கொள்வார்கள். விறகு ,வரட்டி எல்லாம் செலவில்லாமல் கிடைக்கும் .
நகரத்தில்,
குறைந்த சம்பளத்தில் உணவு விடுதிக்கு எல்லாம் போய் சாப்பிட முடியாது. எனவே சமைக்க வேண்டும். அதற்கு தேவையான அனைத்தும் கடையில் வாங்கி தான் செய்ய வேண்டும். வேலைத்தேடி வந்த இடத்தில் குடும்ப அட்டையும் பயன்படுத்த முடியாது.விறகு கிடைக்கவில்லை என சாலை ஓரம் கிடக்கும் குப்பைகளை எல்லாம் எரித்து சமைக்கும் சூழலும் ஏற்படும்.
குழந்தை வளர்ப்பு:
கிராமத்தில்,
குழந்தைகள் அனைத்தும் பள்ளிக்கு போகும் என்று சொல்ல இயலாவிட்டாலும் , குறைந்த பட்சம் மதிய உணவிற்காக துவக்கப் பள்ளிக்கு போகும் குழந்தைகள் அதிகம் இருக்கும். அப்படி படிக்க போகாத போதும் குழந்தைகள் பாதுகாப்புடன் இருக்கும். ஏதோ ஒரு வகையில் வீட்டிற்கு உதவியாக இருப்பார்கள் , உ.ம் ஆடு ,மாடு மேய்ப்பது , அல்லது விறகு பொறுக்கி தருவது என. அவர்கள் கெட்டுப்போவதற்கு வாய்ப்புகள் குறைவு.
நகரத்தில்,
புதிதாக வந்த இடத்தில் பள்ளியில் சேர்ப்பதில் பிரச்சினை இருக்கும். எங்கு வேலை கிடைக்கிறதோ அங்கு என இடம் மாறும் சூழலில் பலரும் பள்ளியில் சேர்ப்பதில்லை. எனவே பெற்றோர் வேலைக்கு சென்ற நேரத்தில் சாலை ஓரம் இருக்கும் சிறுவர்கள் என்ன செய்வார்கள், பிச்சை எடுக்க போவார்கள் சிலர்,குப்பை பொறுக்கலாம் , அதில் கிடைக்கும் காசை பெற்றோர்க்கு தெரியாமல் செலவு செய்வார்கள் , புகை பிடித்தல் , பான் பராக் என பல தீய பழக்கங்களும் கற்றுக்கொள்வார்கள். வருங்காலத்தில் தீய நட்பினால் குற்றவாளியாகவும் நேரிடலாம்.
சமூக பாதுகாப்பு:
கிராமத்தில் ,
ஒரு சமூக பாதுகாப்பு இருக்கும், எல்லோரும் ஒருவரை ஒருவர் அறிந்தவர்களாக இருப்பார்கள் அசம்பாவிதம் ஏற்பட்டால் உதவிக்கு ஆட்களும் வருவார்கள்.
நகரத்தில் ,
புது இடம் , அங்கேவே இருக்கும் அடாவடி ஆட்கள் தகராறு ,செய்தால் அடித்தால் வாங்கிக்கொண்டு தான் இருக்க வேண்டும். பெண்களை கிண்டல் செய்தால் , பாலியல் தொல்லை கொடுத்தால் கூட எதுவும் செய்ய இயலாது. காவல் நிலையத்தில் சொன்னால் கூட சாலை ஓரம் இருப்பவர்கள் தானே என அலட்சியம் காட்டுவார்கள்.
உடல் ஆரோக்கியம்:
கிராமத்தில்,
இருக்கும் வரை அவர்கள் உடல் ஆரோக்கியம் தானாகவெ நன்றாக இருக்கும் , காரணம் சுத்தமான சூழல். அவ்வபோது சாதாரண காய்ச்சல் தலை வலி தவிர வேறு எதுவும் வருவதில்லை
நகரத்தில்,
அனைத்து விதமான வியாதிகளும் வரும். ஒரு ஆய்வறிக்கையில் இப்படி இடம் பெயர்ந்து வேலை செய்வோரால தான் எய்ட்ஸ் அதிகம் பரவுகிறது. நகரத்தில் வேலை செய்து விட்டு திரும்புபவர்களால் கிராமங்களிலும் எய்ட்ஸ் தற்போது பரவி வருகிறது என தெரிவித்துள்ளது.
வேலைவாய்ப்பு மற்றும் பணிச்சூழல்:
மேலும் கிராமத்திலிருந்து வருபவர்களுக்கு மிக குறைந்த கூலியே தருகிறார்கள், ஒரு ஒப்பந்த தாரர் வசம் இவர்கள் மாட்டிக்கொள்ளும் சூழலும் உண்டு. அதிக நேரம் வேலைக் குறைந்த கூலி என இவர்களின் உழைப்பை சுரண்டுகிறார்கள்.பல இடங்களில் கொத்தடிமை போன்று ஆகும் நிலையும் ஏற்படும்.
பணி நிரந்தரம் இல்லை. எல்லா நாட்களுக்கும் வேலை கிடைக்கும் எனவும் சொல்ல இயலாது.
இப்படி பலவற்றையும் ஒப்பிட்டு பார்க்கையில் மிக குறைந்த ஒரு தொகைக்காக தங்களது வாழ்க்கையை சீர் அழித்துக்கொள்ளும் நிலை தான் இப்படி இடம் பெயரும் விவசாய தொழிலாளர்களுக்கு நேரிடுகிறது.
நகரத்தில் ஏற்படும் செலவீனங்கள் போக அவர்கள் கையில் எஞ்சுவது ஒரு சொற்ப தொகை தான் அதனைக்கொண்டு வருங்காலத்தை வளப்படுத்துவதும் இயலாது, எனவே மீண்டும் மீண்டும் கூலி வேலை தேடி நகரம் , நகரமாக அலையும் ஒரு நாடோடி வாழ்க்கை தான் அவனுக்கு கிடைக்கிறது!
அப்படி எனில் இவர்கள் வாழ்கை என்னாவது ,இதற்கு என்ன தீர்வு,
கிராமப்புற வேலை வாய்ப்பை பெருக்குவது, அவர்களுக்கு கிராமத்திலே தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை செய்து தருவதும் ஆகும். இது பற்றி முந்தைய பதிவில் கொஞ்சம் விரிவாகவே பார்த்தோம்.
சுருக்கமாக சொன்னால் கிராமத்தை சிறு நகரம் அளவிற்கு தரம் உயர்த்த வேண்டும். அதற்கு ஏற்றவாறு அரசு திட்டங்கள் போடவேண்டும்.
இல்லை எனில் இடம் பெயர்பவர்களின் வருகையால் ஏற்படும் திடீர் மக்கள் தொகைப்பெருக்கத்தால் நகரங்கள் திணறி விடும்! நகரத்தில் அனைவருக்கும் அனைத்து வசதியும் செய்து தருவது சாத்தியம் இல்லாது போய்விடும்!
22 comments:
நன்றாக இருக்கிறது.தொடருங்கள்.
ஓரளவு வசதியான விவசாயிகள் நகர்புறம் நோக்கி நகர்வதை பற்றி என்ன கருதுகிறீர்கள்?நீங்கள் சொல்லும் சாலையோர வாசம் போன்ற பிரச்சனைகள் அவர்களுக்கு வராதல்லவா?
நகருக்கு குடிபெயர்ந்தால் எய்ட்ஸ் வரும் என்பது எந்த அளவுக்கு உண்மை?லாரி டிரைவர்களால் தானே எய்ட்ஸ் பெருமளவு பரவுகிறது?
செல்வன்,
நன்றி,
//ஓரளவு வசதியான விவசாயிகள் நகர்புறம் நோக்கி நகர்வதை பற்றி என்ன கருதுகிறீர்கள்?நீங்கள் சொல்லும் சாலையோர வாசம் போன்ற பிரச்சனைகள் அவர்களுக்கு வராதல்லவா?//
அவர்கள் வெகு சிலரே , நான் பேசுவது பெரும்பாண்மை குறித்து.பெரும்பாலோர் மிக கடின வாழ்க்கை தான் வாழுகிறார்கள்.
லாரி டிரைவர்கள் மட்டும் அல்ல , இப்படி வெளியூர்களுக்கு இடம் பெயர்பவர்களும் பெரும் பங்கு வகிக்கிறார்கள் என , ஒரு சர்வே சொல்கிறது.
அதற்கான சுட்டி:
http://gateway.nlm.nih.gov/MeetingAbstracts/102238414.html
நகர்புறத்தில் 10 வருடங்களுக்கு முன்பெல்லாம் தங்க வசதி கிடையாது அங்கங்கே ஏதோ துணியை மறைத்து தான் வாழ்கை நடத்துவார்கள்.
சமீபத்தில் சென்னை போன போது பழவந்தாங்கல் ரயில் நிலையத்துக்கு வெகு அருகில் ஒரு சைட்டில் தங்க இடம் கட்டிக்கொடுத்து தண்ணீர் வசதியும் செய்துகொடுத்திருந்தார்கள்.இந்த மாற்றம் கொஞ்சம் சந்தோஷத்தை வரவழைத்தது.
உங்கள் அலசல் நன்றாக இருந்தது.
குழந்தைகள் படிப்பு கெடுவது காணச்சகிக்காதது.
வாங்க குமார் ,
நன்றி,
நீங்கள் பார்த்த ஒப்பந்ததாரர் ரொம்ப நல்லவராக இருக்கவேண்டும்.
அப்படி தங்கும் வசதி எல்லோரும் செய்து கொடுப்பதில்லை. அது தானே பெரிய பிரச்சினை.
உங்கள் பார்வையில் இன்னும் என்ன என்ன இன்னல்கள் அவர்களுக்கு ஏற்பட வாய்ப்புள்ளது என்பதையும் சொல்லுங்கள்.
வவ்வால் அவர்களே,
உங்கள்மேல் எனக்கு கோபமில்லை. டோண்டுக்கு நீங்கள் ஆதரவளித்தால் கீழே அவன் சொன்னவற்றை ஏற்றுக் கொள்வீர்களா?
*திருமணம் செய்யாமலே ஆண் தனது இச்சையை தணித்துக் கொள்வதுபோல பெண்களும் தணித்துக் கொள்ளலாம்.
*ஆண்கள் கண்டவளிடமும் சென்று வந்தால் பெண்களும் அவ்வாறே செய்யலாம்.
* தற்சமயம் பெண்கள் தங்கள் இச்சைகளை வெளிப்படுத்துவதில் அதிகம் தயங்குவதில்லை.
*ஒரு பெண் தன்னுடைய இச்சையை யாருடனாவது தணித்துக் கொள்ள முயல்வது(திருமணத்துக்கு முன்னும் பின்னும்) அவர்களின் உரிமை.
*பெண்களை அவர்கள் விருப்பம்போல எப்போது வேண்டுமானாலும் யாருடன் வேண்டுமானாலும் சுயமாக உடலுறவு கொள்ள அனுமதிக்க வேண்டும்.
* உடல் இச்சையை அபாயமின்றி எவ்வாறு பெண்கள் பூர்த்தி செய்து கொள்வது?அடுத்த பதிவில் பார்ப்போம்.
* இப்படி அப்படி என்று இருந்தாலும் மற்றவர்களுக்கு தெரியாமல் எச்சரிக்கையுடன் நடந்து கொண்டால் பின் விளைவுகளிலிருந்து தப்பிக்கலாம்.
* குஷ்பு சொன்னதையே நானும் பின்மொழிகிறேன். பெண்கள் தங்கள் உடல் இச்சையை தணித்துக் கொள்ளட்டும். ஆனால் மிகுந்த தற்பாதுகாப்புடன் செயல்படவேண்டும்.. கருவுறக் கூடாது.
*கருக்கலைப்பு உடலுக்கு கெடுதல். பால்வினை நோய்கள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
*ஆணுறை உபயோகத்தை வலியுறுத்த வேண்டும்.
*ரொம்ப முக்கியம், பரம ரகசியமாகச் செயல்படவேண்டும். மாட்டிக் கொள்ளக் கூடாது. என்னதான் இருந்தாலும் இப்போது இருக்கும் சமூகக் கட்டுப்பாடுகள் கடுமையானவை. ஆகவே மாட்டிக் கொள்ளக் கூடாது.
* ஒரு மாதவிடாய் வந்தால் அதற்கு முன் எவ்வளவு உடலுறவு கொண்டாலும் கணக்கில் வராது. ஆகவே தேவையில்லாது குற்ற உணர்ச்சி கொள்ள வேண்டாம்.
* ஆனால் ஒன்று. எந்த செயலுக்கும் எதிர்வினை வரும். ஆகவே அதற்கெல்லாம் துணிந்தவர்கள்தான் இதையெல்லாம் செய்ய வேண்டும். மற்றவர்களுக்கு? fire-தான்.
*சிறு குழந்தைகளுக்கும் காம ஆசை பீறிட்டுக் கிளம்பியதால்தான் பால்ய விவாகங்கள் தோன்றின.
*கைமுட்டி எல்லாரும் அடிக்கலாம். என்ன துணி மட்டும்தான் பாழாகும். துவைத்தால் சரியாகி விடும்.
மேலும் விபரங்களுக்கு:-
http://copymannan.blogspot.com/2006/06/blog-post_20.html
http://karuppupaiyan.blogspot.com/2006/08/blog-post_21.html
http://santhoshpakkangal.blogspot.com/2006/06/88.html
வாங்க போலியாரே,
என் தலையிலும் கைவைத்து விட்டீர்களா ?
நான் யாருக்கும் ஆதரவாளன் அல்ல , இன்னும் சொல்லப்போனால் எனக்கே நான் ஆதரவாளன் இல்லை! :-))
நீர் சொல்லி நான் அவரை புறக்கணிக்க வேண்டும் என்று இல்லை.ஏற்கனவே அவர் பதிவுகளை கண்டுக்கொள்வது இல்லை.ஆரம்பத்தில் ஒரு சிலவற்றைப் படித்துள்ளேன் இயல்பாகவே அவரது பதிவுகளில் உடன் பாடு இல்லை ,எனவே அவர் பதிவு பக்கமே போவதும் இல்லை, விமர்சிப்பதும் இல்லை.
அவர் சுதந்திரம் பதிவு போடுகிறார், எனக்கு அதை குற்றம் சொல்ல உரிமை இல்லை. அவர் போக்கில் அவர் போகட்டும் , எனக்கு என்ன வந்தது.
அய்யா என்பதிவில் கொஞ்சம் ஆக்கப்பூர்வமாக ஏதோ போட்டு வருகிறேன்.இந்த இடத்தில் நம்ம எதுவும் பேச வேண்டாம் , வேண்டும் என்றால் உங்கள் பதிவில் பேசிக்கொள்ளலாம்.
வவ்வால்!
மிக அருமை; நமது நாடுகளில் கிராமப்புறங்களைச் சிறு நகருக்குரிய வசதிகள் செய்து கொடுத்து; அவர் அவர் கிராமத் தொழிற் துறையை முன்னேற்ற உரிய நடவடிக்கை எடுத்தால்; இந்த மக்கள் இடம் பெயரார்.
அதனால் பெருநகர் திணறாது.
இதையே வளர்ந்த நாடுகள் பின்பற்றுகின்றன.
யோகன் ,
நன்றி,
மிக சரியாக நான் என்ன சொல்லவருகிறேன் என்பதை புரிந்துகொண்டீர்கள் , நான் கூட சொல்லவந்ததை சரியாக சொல்லவில்லையோ என நினைத்துக்கொண்டிருந்தேன்.மற்றவர்கள் அது எப்படி சரியாக வரும் என கேள்வி எழுப்பிக்கொண்டே இருந்ததால் நான் இன்னும் எப்படி இதை சரியாக சொல்வது என யோசித்துக்கொண்டிருந்தேன்.
உங்களுக்கு வெளி நாட்டில் என்ன நடக்கிறது என்பதை பார்த்த அனுபவம் இருப்பதால் சரியாக புரிந்துகொண்டீர்கள் என நினைக்கிறேன்.
நாட்டுக்காளைகள் படம் எடுத்து போட்டுள்ளேன் பாருங்கள்!
நகர வாழ்க்கையின் அவலங்களை ஒரு பட்டியலாகத் தந்திருக்கிறீர்கள். வெகு நாட்களுக்கு முன்பு பட்டிணப் பிரவேசம் என்ற ஒரு திரைப்படம் வந்தது. ஒரு கிராமத்துக் குடும்பம் சென்னை வந்து சீரழிந்து போவதான கதை. கே பாலச்சந்தர் அவர்கள் இயக்கிய படம். ஆனால் அது Conquirers of golden city என்ற ஒரு ஆங்கிலப் படத்தின் தழுவல். இதிலிருந்து தெரிவது என்னவென்றால் நகர வாழ்வின் அவலங்கள் என்பது உலகளாவிய ஒரு தன்மை. ஆனால் விவசாயம் சார்ந்த தொழிலாளர்களின் கஷ்டம் என்பது இன்றைய இந்தியாவின் ஒரு முக்கியமான பிரச்சனை.
நரகமான நகரத்துக்கு வருமளவுக்கு பிரச்சனைகள் குவிந்தவண்ணம் இருக்கின்றன என்பதும் நகரம் புகலிடம் அளிக்கிறது என்பதும் அப்பட்டம்.
கிராமத்தில் சொந்தமான குடிசை, பெண்களுக்கான பாதுகாப்பு, நல்ல குடிநீர், குறைந்த விலையிலும் சில இல்வசமாகவுமான உணவுப் பண்டங்கள், குழைந்தகளுக்கான நற்பழக்கங்கள், உடல் ஆரோக்கியம், சமூகப் பாதுகாப்பு, சுத்தமான காற்று, இவை எல்லாம் இருந்தும் அங்கு இருப்பவர்களை அங்கேயே இருக்க வைக்க முடியவில்லை.
இதற்கான தீர்வாக நீங்கள் சொல்லியிருப்பது கிராமங்களை சிறு நகரங்கள் அளவுக்கு உயர்த்தவேண்டும் என்பதுதான்.
//சுருக்கமாக சொன்னால் கிராமத்தை சிறு நகரம் அளவிற்கு தரம் உயர்த்த வேண்டும். அதற்கு ஏற்றவாறு அரசு திட்டங்கள் போடவேண்டும்.//
இது நடக்கும்பொழுதில் கிராமத்தின் நற்பண்புகள் பலவற்றையும் இழக்க வேண்டும். விவசாயம் சார்த்த கிடைமட்ட மற்றும் செங்குத்து வளர்ச்சிகளால் மட்டுமே இதை சாதிக்க முடியாது.
மேலும் இது காலத்தின் கட்டாயம்.
வவ்வால், நல்ல கருத்தை சொல்ல உங்களை அடிச்சிக்க ஆளே இல்லேன்னு நினைக்கிறேன். நமக்குள்ள Graphics பற்றி ஆரம்பிச்ச கருத்து பரிமாற்றம் நல்ல போகுது. நல்ல எழுத்துக்கள். வாழ்த்துக்கள்.
உங்கள் பதிவை என் சுவடுகளில் சேர்க்க விரும்புகிறேன்(விவசாயம் பற்றிய பதிவுகளை ஓரிடத்தில் சேமிச்சுக்கலாம்னு ஒரு எண்ணம்) அனுமதி வேணும்.
ஓகை சார்,
கொண்ட கொள்கையில் உறுதியாக இருப்பது வேறு, கொடுக்கப்பட்ட உதாரணங்களின் அடிப்படையில் யதார்த்தமாக சிந்திப்பது வேறு. நீங்கள் கொள்கைவாதி என மட்டும் அடையாளம் காண விரும்புகிறீர்கள்.
சரி நீங்கள் தான் நான் சுட்டிக்காட்டிய பிரச்சினைகள் இல்லாத நகர இடம்பெயர்தல் சாத்தியம் என சொல்லுங்களேன்!
நான் சொல்வது கிராமத்தின் அடிப்படை வசதிகளை சிறு நகரம் அளவுக்கு உயர்த்த சொல்வது, ஆனால் மனிதர்கள் அதே கிராமத்து மனிதர்களே , எனவே இத்தகைய கேடு விளையாது, மேலும் யோகன் சொன்ன கருத்தினையும் கொஞ்சம் கவனியுங்கள். இதெல்லாம் மேலை நாடுகளில் கிராமங்களில் செயல் படுத்தப்பட்ட ஒன்று என்பது புரியும்.
கிராமத்தினை விட்டு நகரத்திற்கு இடம பெயர்வதால் ஏற்படும் விளைவுகளை நான் பயன்பாட்டின் அடிப்படையில் தான் விளக்கியுள்ளேன் அது கற்பனை அல்ல!
ஒரு நிலையற்ற வருமானத்தினை முன்னிட்டு நகரத்திற்கு இடம் பெயர்பவர்களுக்கு அங்கு என்ன இடம் கிடைக்கும் சொல்லுங்கள். அங்கே அவர்கள் அகதிகள் போன்ற ஒரு வாழ்வை தான் வாழ நேரிடும்.
நகரத்தில் அனைவருக்கும் இடம் , குடி நீர் ,சுகாதாரம் , கல்வி என அனைத்தும் வழங்கும் சக்தி இருக்கிறதா? நீங்கள் தனி நபர் பெறப்போகும் ஒரு நாள் வருமானத்தின் அடிப்படையில் மட்டும் இதனை பார்க்க கூடாது!
உங்கள் மூளைக்கும் வேலைக்கொடுங்கள் சார்!
இளா ,
நான் சொல்லவருவது சரியாக இல்லையோ என அடிக்கடி நினைப்பேன். நான் சரியாக எடுத்து கூறாவிட்டாலும் நீங்கள் அதன் கருத்தை புரிந்து கொண்டீர்கள் என்பதை காட்டுகிறது உங்கள் பதில்!
இதற்கெல்லாம் கேள்வி கேட்கணுமா, தாரளமாக செய்யலாம்.
உங்கள் புரிதலுக்கு மிக்க நன்றி!
வவ்வால்
நல்ல பதிவு! பகிர்வுக்கு மிக்க நன்றி!
சிவபாலன் ,
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க
நன்றி!
வவ்வால்,
கிராமத்தில அக்கிரகாரத்திலோ,இல்லாடி மேட்டுக்குடி தெருவிலோ இருந்தால் சினிமாதனமா சிந்திக்கலாம்.
கிராமங்களுக்கு மறுபுறம் உண்டு. இந்த தலைமுறைல நகரத்துக்கு வந்து கூலியா ஆரம்பிக்கும் போது அடுத்த தலை முறைல மேஸ்திரியாக போகறதுக்கு வாய்ப்பு உண்டு.
அதே கிராமத்தில இந்த தலைமுறை அறுப்புக்கும், களை எடுக்கவும் போனா அடுத்த தலை முறைக்கும் அது மட்டுமே சாத்தியம்.
சுடுகாட்டுக்கு பிணம் எடுத்துப் போக கூட சுலபம் இல்லை.
கிராமத்தில கோவிலுக்கு சாமி கும்பிட போய் இருக்கிங்களா?
இரட்டை டம்பளர் முறை நகர் புறத்தில பார்த்து இருக்கிங்களா?
கிராமங்களில் உரித்து எரிய முடியாத சாதியை நகரத்தில கொஞ்ச நேரமாவது மறந்து போக வாய்ப்புண்டு.
சாலையோர வாசம் முறைபடுத்த வழி கிராமத்தில நம்மை சிறை வச்சிகறது இல்லை.
// நீங்கள் கொள்கைவாதி என மட்டும் அடையாளம் காண விரும்புகிறீர்கள்.//
என் நோக்கத்தைச் சந்தேகிப்பதை விட்டுவிடுங்கள் வவ்வால் ஐயா. நான் கண்டு கேட்டு உணர்ந்த விஷயங்களையே எழுதுகிறேன். உங்கள் விவாதம் என்னை மாற்றட்டும். 'என் ஓகை பெயர்க் காரணம்' பதிவைப் படித்துப் பாருங்கள். உங்களை நீங்கள் வெரும் வாதத்துக்காக மட்டும் எழுதுகிறீர்கள் என்று நான் நினைக்கவில்லை.
// நான் சுட்டிக்காட்டிய பிரச்சினைகள் இல்லாத நகர இடம்பெயர்தல் சாத்தியம் என சொல்லுங்களேன்!//
சாத்தியமில்லை என்பது உண்மை. வேறு வழிகளைப் பற்றி மட்டும் பேசலாம். இவ்விவாதம் கிராம நகர வாழ்வுகளுக்கான ஒப்பீடு அல்ல.
//மேலை நாடுகளில் கிராமங்களில் செயல் படுத்தப்பட்ட ஒன்று என்பது புரியும்.//
மேலை நாட்டு நகரங்களில் நமது நகரவாழ்வின் பல அவலங்கள் இல்லை.
//ஒரு நிலையற்ற வருமானத்தினை முன்னிட்டு நகரத்திற்கு இடம் பெயர்பவர்களுக்கு அங்கு என்ன இடம் கிடைக்கும் சொல்லுங்கள். //
இன்றைய பசிக்கான வழியும் நாளைய முன்னேற்றத்துக்கான வாய்ப்பும் கிடைக்கும்.
வருமானத்தின் நிச்சயமற்றத் தன்மை கிராமங்களில் உயர்ந்து, நகரங்களில் குறைந்துள்ளது என்பதை உங்களால் மறுக்க முடியுமா?
// நீங்கள் தனி நபர் பெறப்போகும் ஒரு நாள் வருமானத்தின் அடிப்படையில் மட்டும் இதனை பார்க்க கூடாது!//
உன்மையில் நான் நிலச்சுவான்தார்களுக்காக இதை சிந்திக்கவில்லை. அடிமட்டத்தில் தவிக்கும் தனிமனிதர்களுக்காகவே சிந்தித்து எழுதுகிறேன். இந்த மாதிரி மக்களின் தொகை சிறிதாக இருந்தால் என்னை இந்த அளவுக்கு இது பாதித்திருக்காது.
//உங்கள் மூளைக்கும் வேலைக்கொடுங்கள் சார்!//
நான் நன்றாக சிந்தித்தே எழுதுகிறேன். இனி உங்களுக்கு எழுதும்போது இன்னும் கொஞ்சம் மூளைக்கு வேலை கொடுக்கிறேன். உங்கள் சந்தேகத்தைப் போக்க முயல்கிறேன்.
வவ்ஸ்,
ஆக்கப் பூர்வமான உங்கள் இடுகைகள் தொடரட்டும். சென்னை வரும்போது சந்திக்கலாமா?
விவசாயிகளே நரகத்துக்கு...ச்சே .. நகரத்துக்கு இடம் மாறும்போது, பாவம் விவசாயக் கூலிகள் என்ன செய்வார்கள்?
நகரத்தைப் பற்றிய ஒரு மாயை கூட (உ.ம்: நகரத்துக்குப் போனா நிறைய சம்பாதிக்கலாம்) நகரத் திணறலுக்கு ஒரு காரணியா இருக்கு. ஒவ்வொரு கிராமத்தையும் (அல்லது சிறு நகரத்தை) எடுத்து, அந்தப் பகுதியில் என்னென்ன வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தலாம் என்று ஒரு ஆய்வு செய்து, அதன்படி வேலை வாய்ப்புகளை செய்து கொடுத்தாலே, நகர மக்கள்தொகை பெருகுவதை தடுக்கலாம்.
என் நோக்கங்களை சந்தேகிப்பவர்களுக்கு ஒரு சுட்டி:
ஓகை - பெயர்க் காரனம்
அனனானி ,
நீங்கள் பெயரோடு வந்திருந்தாலும் எதுவும் சொல்லப்போவது இல்லை.
நன்றாக சொல்லியுள்ளீர்கள். கிரமாத்தில் இருக்கும் எதிர்மறையான அம்சங்கள் அவை , அதை எல்லாம் சகித்துக்கொள்ள சொல்லவில்லை. நீக்கப்பட வேண்டும். எப்படினு தானே பார்க்கறிங்க , பொருளாதாரம் மேம்பட்டால் தானே அந்நிலை மாறிவிடும்.
யோசித்து பாருங்கள் மேல்சாதியினரின் அடக்குமுறைக்கு ஏன் மர்றவர்கள் அடங்கவேண்டும், அவர்களை நம்பி பிழைக்க வேண்டும் என்ற நிலை. அதுவே பொருளாதார தற்சார்பு கிடைத்து விட்டால் , அவன் சொன்னா கேட்பாங்களா. ஒரு சிலர் பணக்காரர்கள் ஆனால் எல்லாம் நிலை மாறாது , ஒட்டுமொத்தமாக சமுதாயமே மேம்படணும்.
அதற்கு தான் கிராமங்களில் வேலைவாய்ப்பும், வசதியும் ஏற்படுத்த வேண்டும் அரசு என்று சொல்லியுள்ளேன்!நகரத்தில் என்ன கிடைக்கும் என இடம்பெயருகிறார்களோ அதை கிராமத்தில் கிடைக்க செய்ய வேண்டும். நான் சும்மா அங்கேவே அடிமையா இருக்க சொல்லவில்லை.
தஞ்சாவூரர் ,
நன்றி!
//நகரத்தைப் பற்றிய ஒரு மாயை கூட (உ.ம்: நகரத்துக்குப் போனா நிறைய சம்பாதிக்கலாம்) நகரத் திணறலுக்கு ஒரு காரணியா இருக்கு. ஒவ்வொரு கிராமத்தையும் (அல்லது சிறு நகரத்தை) எடுத்து, அந்தப் பகுதியில் என்னென்ன வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தலாம் என்று ஒரு ஆய்வு செய்து, அதன்படி வேலை வாய்ப்புகளை செய்து கொடுத்தாலே,நகர மக்கள்தொகை பெருகுவதை தடுக்கலாம்.//
இதைத்தான் நானும் எதிர்ப்பார்க்கிறேன். சரியாக சொல்லிவிட்டிர்கள். எது கிராம்த்தில் கிடைக்கவில்லை என இடம் பெயர்கிரார்களோ அதை அங்கு கிடைக்க செய்ய வேண்டும். தற்காலிக தேவைகளுக்கு இடம் பெயர்ந்து தீர்க்க முடியாத ஒரு புது சிக்கலை உருவாக்குகிறது இடம்பெயர்தல்.
ஓகை சார்,
//என் நோக்கத்தைச் சந்தேகிப்பதை விட்டுவிடுங்கள் வவ்வால் ஐயா//
மன்னிக்கவும்,உங்கள் நோக்கத்தை சந்தேகிக்கவில்லை. ஒரு நோய்க்கு சிகிச்சை அறுவை சிகிச்சை மட்டும் தான் என்று சொல்வது போல , இதை நீங்கள் சொல்கிறீர்கள் என்று தான் சொல்ல வந்த்தேன். வேறு சிகிச்சைகளும் இருக்கிறது என்பது தான் எனது கருத்து.
இங்கு யாருமே வாதத்திற்காக பேசவில்லை, ஆனால் பார்வைகள், கோணங்கள் மாறுபடுகின்றது. அதில் ஒருமித்த தன்மையை கொண்டுவர முயற்சிக்கிறேன் அவ்வளவுதான்!
//இவ்விவாதம் கிராம நகர வாழ்வுகளுக்கான ஒப்பீடு அல்ல.
//
நான் வெறும் ஒப்பீடு மட்டும் செய்யவில்லை ,வருமான்ம் மேம்பட ஒரு சில மாற்று ஏற்பாடுகளும் சுட்டிக்காட்டியுள்ளேன். மேலும் முயன்றால் பல மாற்று வழிகள் கிடைக்கும்.
அரசு நினைத்தால் சாதிக்கலாம்.
கிராமங்களில் அந்த நிச்சயமற்ற தன்மை குறைவு. எத்தனை ஏக்கர் விவசாய்ம் நடக்கிறது எத்தனை பேர் வேலைக்கு தேவை என்பதை அறிவார்க்ள், நீண்ட காலமாக அங்கேயே வாழ்பவர்கள்.
கிராமத்தில் என்ன கிடைக்கும் , கிடைக்காது என்பது முன் கூட்டியே அறியக்கூடியது. நகரத்தில் அப்படி அல்ல, ஒரே மாதிரியான கூலி வேலைக்கு கூட மாறுபட்ட சம்பளம் தருவார்கள். ஏன் என்று கேள்விக்கேட்டால் அடுத்த நாள் வேலை இருக்காது.
//உன்மையில் நான் நிலச்சுவான்தார்களுக்காக இதை சிந்திக்கவில்லை. அடிமட்டத்தில் தவிக்கும் தனிமனிதர்களுக்காகவே சிந்தித்து எழுதுகிறேன். //
நீங்கள் தவறாக புரிந்துக்கொண்டீர்கள் என நினைக்கிறேன், அடிமட்ட விவசாயி, விவசாய தொழிலாளர்களுக்கு தான் மாற்று வருமான வழிகளை சொல்லிவருகிறேன், அவர்கள் நிலை உயரத்தான் அரசு திட்டம் போட வேண்டும் என்கிறேன் , எந்த இடத்தில் நில சுவாந்தார்களுக்கு என சொல்லவில்லை.
//இனி உங்களுக்கு எழுதும்போது இன்னும் கொஞ்சம் மூளைக்கு வேலை கொடுக்கிறேன//
அதனை தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள் , நன்றாக யோசித்து பாருங்கள் , உணர்ச்சிவசப்படாமல் பாருங்கள் என சொல்லத்தான அப்படி சொன்னேன். தவறு எனில் மன்னிக்கவும்.
உங்கள் கருத்துக்களை திறந்த மனதுடன் வரவேற்கிறேன்!
sorry for english...to avoid confusion, I'm a new Anony...from part-1....
/*
அப்போ என்ன செய்யலாம் சொல்லுங்கள் எல்லாவற்றுக்கும் அரசியல் தான் காரணம் பாழ் படுத்துகிறார்கள் என சொல்லிவிட்டு தப்பிச்சுகலாமா?
*/
Do what Vaval is doing - stop farming, and hold the land with you.
1)stop farming immediately, so farmer can stop new losses from farming and stop accumulating his ever growing debt (the only outcome of longterm farming in india).
2)hold the land and give a 10 year gap. review after 10 year, how to move forward.
/*
அவர்கள் கௌரவத்துடன் வாழ்க்கை நடத்தும் படியான பொருளாதார அமைப்பை ஏற்படுத்திக் கொள்வது நமது தேவை.
*/
Precise point and truth is we don't have such eco system.
So, any logical outcome is immediate stopping of any loss making business(farming).
Yes, farming is business.
Let's face the reality - neither country nor the society gives a damn about a farmer. So any farmer shouldn't give a damn about the country or society. His immediate action should be stopping his loss, cutting his debt and holding his treasure (land).
I do have farming past, ours was mid-level(10+ acre) farming family, stopped all farming 10 year back when our debt back then was 8+ lacks(all came from longterm farming). We are still holding farm land(just leasing).
/*
இப்படி பத்து பேரு இறங்கி புதிய உத்திகளைக்கொண்டு விவசாயம் செய்தால் போதும். இந்தியா சுபிட்சம் அடைந்து விடும்.
*/
Please, please and please...stop this..this false hope. 99 out of 100 in farming is loss making(long term).
/*
கட்டிட வேலை என கூலி வேலை, அல்ல , நல்ல தரமான வாழ்கைக்கு வழிகாட்டி விவசாயத்தில் இருக்கும் அதிகப்படியானவர்களை வெளியேற்றலாம். அப்படி செய்ய முடியவில்லை எனில் மேலும் விவசாயம் அதன் சார்ந்த தொழில்களையும் மேம்படுத்த வேண்டும்.
*/
Agreed, a decent job is better option. But on the parallel - just because such decent jobs doesn't exists, the continual of a loss making farming is not healthy either(to the farmer).
Post a Comment