Friday, August 31, 2007
சென்னை மத்தியப்பேருந்து நிலையம் இடமாற்றமா?
நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சென்னை மத்திய பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்ய பரிசீலிப்பதாக தமிழக அமைச்சர் பரிதி இளம்வழுதி அறிவித்துள்ளதாக செய்தித்தாள்களில் வந்துள்ளது.
இப்பொழுது அது அவசியமா ,
சென்னை மத்தியப்பேருந்து நிலையம் பற்றி,
*ஆசியாவிலேயே மிக்கபெரிய பேருந்து நிலையம், 37 ஏக்கர் பரப்பு,
*103 கோடி செலவில் கட்டப்பட்டது!
*300 பேருந்துகள் ஒரே நேரத்தில் நிற்கும் வண்ணம் பேக்கள் உள்ளது.
*2000 பேருந்துகள் வந்து செல்கின்றன!
*இலவச கழிப்பிடம் , வாகனம் நிறுத்தும் இடம் , கடைகள் ,உணவுவிடுதிகள் அனைத்தும் உள்ளது!
*தற்போது சிறப்பு நிலை பேருந்து நிலையமாக அங்கீகரிக்கப்பட்டு ISO:9001:2000 சான்றளிக்கப்பட்டுள்ளது.அப்படி சான்று பெற்ற ஒரே இந்திய பேருந்து நிலையம் இது தான்!
இப்படி சகல வசதிகளுடன் புதிதாகக்கட்டப்பட்ட பேருந்து நிலையத்தை அதற்குள் மாற்ற வேண்டும, புதிதாக புறநகர் பகுதிகளிலில் மூன்றாக பிரித்து திருவான்மியூர், தாம்பரம் , பூந்தமல்லி ஆகிய பகுதிகளில் அமைக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். நல்ல யோசனைப்போல தோன்றினாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதை முன்னரே கணக்கிட்டு , அப்பொழுதே மூன்றாகவோ அல்லது இன்னும் கொஞ்சம் புற நகரான பகுதியில் கட்டி இருக்கலாமே.
புதிதாக கட்ட பெரும் செலவு , ஏற்கனவே கட்டியதில் செலவிட்ட 103 கோடியும் தண்டம் , ஆட்சியாளர்களுக்கு அவ்வப்போது ஏற்படும் ஞானோதயங்களுக்கு ஏற்றார் போல திட்டங்களை தீட்டிக்கொண்டு போனால் அதற்கு யார் பணம் செலவு ஆகிறது , எல்லாம் மக்கள் பணம் தானே!
பேருந்து நிலையதிற்கு ISO சான்று அளித்த போது அரசு தரப்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் என்ன சொல்லி இருக்கிறார்கள் என்பதையும் பாருங்கள்...
"After a detailed survey, keeping in mind the traffic density by 2015, the CMDA constructed the "terminus, which was unique in many ways, more particularly the ultra-modern facilities provided for the operation of buses." It was built at an estimated cost of Rs.103 crores, including the cost of 37 acres of land."
2015 இல் ஏற்படும் போக்குவரத்து நெரிசலையும் கருத்தில் கொண்டு கட்டப்பட்டது என்கிறார்கள் ஆனால் அதற்குள் , மாற்ற வேண்டும் என ஆலோசிக்கிறார்கள்! புதிய திட்டங்கள், புதிய ஏல ஒப்பந்தம் , புதிய வருமானம் என்ற கணக்கில் செய்கிறார்கள் போல!
சமிபகாலமா 100 அடி சாலையில் கிண்டி கத்திப்பாரா - கோயெம்பேடு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படுகிறது காரணம், மோசமான சாலைகள், சாலை ஆக்ரமிப்புகள் , முறையற்ற பார்க்கிங்கள், ஷேர் ஆட்டோக்கள் நடு சாலையில் நின்று பயணிகளை ஏற்றுவதும் , இறக்குவதும்,கத்திப்பாரவில் மேம்பாலம் கட்டுகிறேன் என்று சாலையை கொத்திப்போட்டு ஆமை வேகத்தில் பணிகள் நடப்பது என பல காரணங்கள் உள்ளது.இவற்றை முதலில் சரி செய்தாலே பாதி நெரிசல் குறைந்து விடும்.
சிறிது காலத்திற்கு முன்னர், ஆம்னி பஸ்கள் நகரில் வராமல் மதுரவாயல் புறநகர் சாலை வழியாக சென்று வரவேண்டும் என உத்திரவிட்டார்கள் , தனியார் பேருந்துகளுக்கு நட்டம் ஏற்படும் என அவர்கள் யாரையோ கவனித்து மீண்டும் நகருக்குள் வர அனுமதி வாங்கிக்கொண்டார்கள்.முன்னர் போல அவர்களை புறநகர் சாலையில் செல்ல சொல்லலாம் போக்குவரத்து நெரிசல் குறையும்.
அல்லது அனைத்து பேருந்துகளும் நகருக்கு வரும் போது மதுர வாயல் புறநகர் சாலை வழியாக மத்திய பேருந்து நிலையம் வரவேண்டும், சென்னையில் இருந்து செல்லும் போது 100 அடி சாலை மார்க்கமாக வழக்கம் போல செல்லலாம் , இதனால் பேருந்துகளுக்கு பயணிகள் வருவதும் தடைபடாது , நெரிசலும் ஓரளவு குறையும்.
மூன்று வெவ்வேறு இடங்களில் வைத்தால் பயணிகள் சுமைகளை தூக்கிகொண்டு வேறு வேறு ஊர்களுக்கு செல்லும் இணைப்பு பேருந்துகளை பிடிக்க அலைய வேண்டி இருக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
44 comments:
சென்னை போக்குவரத்து சிஸ்டத்தை பற்றி எதுவும் தெரியாது.ஆனால் நீங்கள் சொல்வதை படித்தால் ஒன்று 103 கோடி செலவு செய்து கட்டியவன் கிறுக்கனாக இருக்க வேண்டும் அல்லது இப்போது 3 பஸ்நிலையம் கட்டுகிறேன் என்கிறவன் கிறுக்கனாக இருக்க வேண்டும் என தோன்றுகிறது.
அல்லது பெருமளவு கமிசன் கிடைப்பதாக இருந்தால் இருவருமே புத்திசாலிகள் தான்
வவ்வால்
103 கோடி செலவழித்தால் என்ன 2015 வரை வரப்போகும் மக்கள் தொகையை கணக்கில் காட்டினால் என்ன?
மாற்றம் எதற்கு என்பதை விரிவாக சொல்லவேண்டும்,அதே சமயத்தில் போட்ட 103 கோடி மக்கள் பணம் எப்படி திரும்ப எடுக்கப்போகிறார்கள் என்றும் சொல்லவேண்டும்.
இது இப்படி இருக்க,நாம் ஏன் நம்முடைய ரயில் சேவையை விரிவுபடுத்தக்கூடாது அதன் மூலமும் மக்கள் பயணம் சுகப்படுமே!!
இங்கு சிங்கையில் இன்னும் ரயில் போக்குவரத்தை அதிகப்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள் அதுவும் சுமார் 4 லட்சம் (~640 sq.KM)மக்கள் மட்டுமே வசிக்ககூடிய ஒரு தீவில்.
இந்தூரில் பணம் இருக்கிறது என்று சொன்னால்... 103 கோடி போட்டு பாதியில் மாற்றப்போகிறேன் என்று சொல்வது எவ்வளவு எளிதாகிறதோ அதே இதன் மேலும் பணம் போடலாமே? எல்லாமே முயற்சி தானே? :-)) (ஹூம!் இங்கு சிரிப்பான் போட வேண்டியிருக்கிறது)
சென்னையை பொருத்த வரை போக்குவரத்துக்கு இன்னும் பல வழியில் மேம்பாடு காண முடியும்.
செல்வன் ,
இதில் உள்ள அரசியல் புரியவில்லையா,
103 கோடியில் கட்டியது அம்மையாரின் ஆட்சியில் , அவங்களுக்கு தானே பேரும் , கமிஷனும் போய் இருக்கும், இப்போ அய்யா ஆட்சி இல்லையா ,அவங்க பங்குக்கு கமிஷனும் , புதுசா ஒரு திட்டம் கொண்டு வந்தோம்னு பேரும் வாங்க ஆசை படுறாங்க!
ரெண்டு பேரும் காரிய கிறுக்கர்கள் , இடையில் மக்கள் தான் பாவம்! சொல்றத கேட்டுக்கிட்டு வாய் இருந்தும் ஊமையாக போக வேண்டியது தான்!
குமார் ,
நீங்கள் சொல்றது சரிதான் , புதிதாக மாற்று திட்டங்கள் போடனும், தாம்பரம் ,கிண்டி, கோயம்பேடு என இணைத்து பறக்கும் ரயில் விட திட்டம் ஒன்று போட்டார்கள் அது இன்னும் கருத்தளவில் தான் இருக்கு! மெட்ரோ ரயில் கொண்டுவரலாம் , இதனால் இடம் எடுப்பதும் குறையும்.
நம்ம அரசியல்வாதிகள் தொலைநோக்கு பார்வையே இல்லாமல் பணத்தை சுருட்ட மட்டுமே திட்டம் போடுகிறார்கள்.
தற்போது எளிய தீர்வு , மதுரவாயல் புறநகர் சாலை தான் அதில் லாரிகள் மட்டும் தான் தற்ப்போது சென்றுவருகிறது, அருமையான 4 வழி சாலை அது.பேருந்துகளை அதில் திருப்பி விட்டால் போக்குவரத்து நெரிசலே இருக்காது. ஒரு காலத்தில் 100 அடி சாலையும் புறநகர் சாலையாகத்தான் இருந்தது.
அன்புடையீர்,
மதுரவாயில்:
சில பெங்களூரு பேருந்துகள் இந்த வழியில் சென்னையை அடைவதாக அறிகிறேன். மதுரவாயில் ஒரு தீர்வுதானென்றாலும் கோயம்பேடு சந்திப்பிலிருந்து தொழிற்சாலைகள் உள்ள வானகரம் போன்ற இடங்களுக்குச் செல்லும் சுமையுந்துகளின் போக்குவரத்தால் அதுவும் கூட இன்னும் சிலநாள்களில் நெரிசலாகத் தோன்றலாம். மேலும், மதுரவாயிலில் இருந்து கோயம்பேடு சந்திபை நெருங்கும் சாலைகளின் தற்போதைய நிலையில் இது சாத்தியப்படுமா என்பது தெரியவில்லை.
கத்திப்பாரா:
பாலக்கட்டுமானப் பணிகள் முடிந்த பிறகே இது குறித்து ஏதும் சொல்ல இயலும்.
கோயம்பேடு தேர்வு:
கோயம்பேட்டைத் தேர்வு செய்து வழித்தடங்களை முடிவு செய்தபோது ஈக்காட்டுத் தாங்கலின் இந்த வளர்ச்சியை அரசு தொலைநோக்குச் சிந்தையுடன் அணுகியதா என்பதை சரிபார்த்துக்கொள்ளுதல் நலம். ஈக்காட்டுத்தாங்கலின் வளர்ச்சியானது கோயம்பேட்டிலிருந்து கிளம்பி தாம்பரம் வழியாகச் செல்லும் அனைத்து பேருந்துகளின் பாதையையும் குறுகலாக்கியிருக்கிறது.
அன்புடன்
ஆசாத்
ஆசாத்,
நன்றி!
//சில பெங்களூரு பேருந்துகள் இந்த வழியில் சென்னையை அடைவதாக அறிகிறேன்.//
நீங்கள் சொல்வது பூந்தமல்லி -மதுரவாயல் - கோயெம்பேடு சாலை அதை நான்குவழிப்பாதையாக மாற்றிக்கொண்டு இருக்கிறார்கள் அதனால் அங்கும் நிறைய போக்குவரத்து நெரிசல் தான், அதுவும் மாலைவேலைகளில் அதிகம் இருக்கும்.
தாம்பரம் இரும்புலியூர்- மதுரவாயல் வழி கோயெம்பேடு புறவழிச்சாலையை தென் நோக்கி செல்லும் பேருந்துகளின் போக்குவரத்திற்கு மாற்றிவிடலாம், தற்போதும் ஒரு சில பேருந்துகள் அப்படி பெயர் போட்டே இயக்கப்படுகிறது. முழுவதும் மாற்றிவிடலாம் என சொல்கிறேன்.
ஈக்காட்டு தாங்கள் அருகே சாலை அதே அளவில் தான் இன்னும் இருக்கிறது, கிண்டி கத்திப்பாரா மேம்பாலபணியால் அங்கு நெரிசல் ஏற்படுகிறது.பாலம் வந்ததும் சரி ஆகிவிடலாம், ஆனால் அதைவிட வட பழனி, அஷோக்பில்லர் பகுதி போக்குவரத்து நெரிசல் தான் தீர வழி இல்லை. அங்கும் மேம்பாலங்கள் கட்ட வேண்டியது வரும்.
3 புது பேருந்தூ நிலையம் க்ட்ட எப்படியும் சுமார் 200 கோடி கிட்ட செலவு ஆகும்.
அந்த 200 கோடிக்கு சென்னய்யில் வேறு ஏதாவது இண்வெஸ்ட்மெண்ட் செய்யலாம்.
க்த்திபாரா கட்டி முடிக்க இன்னும் ஒரு வருசம் ஆகும் போல உள்ளது. அந்த மாதிரி முக்கியமான இடங்களில் பாலங்களை வெகு விரைவாக கட்டி முடிக்க , Beam, Pillar போன்றவற்றை வேறு எங்காவது செய்து கத்திபாரவுக்கு transport செய்து assemble பண்ணாலாம்.
யாரவது கட்டுமான துறையில் இருந்தால் அவர்கள் ஆலோசனை த்ரலாம்.
எனக்கென்னமோ வெள்ளக்காரனுக்கு இருந்த அளவுக்கு long term vision and implementation நம்ம ஆளுங்க்ளுக்கு இல்லையோனு தோணுது.
வெள்ளைக்காரன் இந்தியாவை விட்டு போகும்போது railway line நீளம் சுமார் 50,000 KM மேல். ஆனால் அதுக்கு அப்புறம் இந்த 60 வருடத்தில் சுமார் 10,000 KM தான் கூடி உள்ளது.
அப்புறம் சில ஊர்களிள் மீட்டர் கேஜில் இருந்து ப்ராட்கேஜ் ஆக ஆக்க இன்னும் நம்மால முடியவில்லை. சென்னை டூ திருச்சி - ட்புள் லைன் போட இன்னும் 10 வருடம் ஆகும் போல் உள்ளது.
வெள்ளக்காரன் ரயில்வே infrastructure பண்ணிட்டுபோனது 60 வருடம் கழிச்சும் நல்லா இருக்கு. அவன் கண்டி ரயில்வே போடலேன்னா நம்ம பாடு திண்டாட்டமா இருக்குமோனு தோணுது.
பேசி என்ன ஆக போகுது !! :(
ஐயா, சொல்றதுக்கு ஒன்னும் இல்லே. கலக்குறீங்க. நான் சென்னையில ஒரு முறை இந்த பேருந்து நிலையம் சென்ற போது அசற அடித்தது அந்த கம்பீரம். பழைய பாரீஸ் நினைச்சு பார்த்துகிட்டேன். இதையும் மாத்துறாங்களா? கொடுமைடா சாமி.
ஏதோ, எங்க ஊரு பேருங்கல்லாம் நிறைய அடிபடுது. வாழ்க! தொண்ணூறுகளின் தொடக்கத்தில் ஒரு Bajaj cubஐ வைத்துக் கொண்டு சென்னையின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் 15-20 நிமிடங்களில் பயணம் செய்து கொண்டிருந்தேன். அது ஒரு பொற்காலம்.
***********************************
சாலையை கொத்திப்போட்டு ஆமை வேகத்தில் பணிகள் நடப்பது என பல காரணங்கள் உள்ளது.இவற்றை முதலில் சரி செய்தாலே பாதி நெரிசல் குறைந்து விடும்.
***********************************
சரியாய்ச் சொன்னீர்கள்.
*********************************
ஒன்று 103 கோடி செலவு செய்து கட்டியவன் கிறுக்கனாக இருக்க வேண்டும் அல்லது இப்போது 3 பஸ்நிலையம் கட்டுகிறேன் என்கிறவன் கிறுக்கனாக இருக்க வேண்டும் என தோன்றுகிறது.
*********************************
இல்லங்க செல்வன், நாங்கதான் கிருக்கனுக.
வவ்வால்..
நீங்கள் சொல்வது போல் கோயம்பேடு பஸ் நிலையத்தை இடம் மாற்றினால் செலவாகத்தான் செய்யும்.ஆனால் யோசித்து பாருங்கள்.. கோயம்பேடு பகுதி ஒரு காலத்தில் சென்னையின் ஒரு விளிம்பில் இருந்தது.ஆனால் நகர விரிவாக்கத்தில் அது சென்னையின் மைய்ய பகுதியாக மாற வெகு நாட்கள் இல்லை.அப்போது சென்னையின் அசுரத்தனமான நகரமயமாக்கலில் இந்த கோயம்பேடு அமைந்திருக்கும் இடம் அபத்தமாக இருக்கும்.
மத்திய பேரூந்து நிலையத்தை கோயம்பேடில் அமைத்ததே தவறு. என் கருத்துப்படி அது தாம்பரம் அருகில் அமைந்திருக்கவேண்டும். மின்சார ரயில்கள் மூலம் பெரும்பாலான மக்களும் எளிதாக அடையமுடியும்.அதுமில்லமாமல் சென்னக்கு வரும் பேருந்துகள்,ஆம்னி பஸ்களில் பெரும்பாலனவை தமிழ்நாட்டின் தென் பகுதியில் இருந்து தான் வருகின்றன.அவைகளையெல்லாம்
தாம்பரம் அருகிலேயே நிறுத்தி நகருக்குள் வரமாலேயே தடுத்து விடமுடியும்.
ஆனால் இதெல்லாம் ஆட்சியில் உள்ளவர்களுக்கும்,அதிகாரிகளுக்கும் தெரியாத என்ற கேள்வியும் எழுகின்றது.
வவ்வால்..நீங்கள் சொன்னது போல் அவர்கள் 'காரிய கிறுக்கர்களாக' இருக்க வேண்டும்...நாம் மடையர்களாக இருக்கவேண்டும்.
க்த்திபாரா கட்டி முடிக்க இன்னும் ஒரு வருசம் ஆகும் போல உள்ளது. அந்த மாதிரி முக்கியமான இடங்களில் பாலங்களை வெகு விரைவாக கட்டி முடிக்க , Beam, Pillar போன்றவற்றை வேறு எங்காவது செய்து கத்திபாரவுக்கு transport செய்து assemble பண்ணாலாம்.
யாரவது கட்டுமான துறையில் இருந்தால் அவர்கள் ஆலோசனை த்ரலாம்.
ஏங்க நம்மூரிலேயே பல பெரும் தலைகள் உள்ளனர்்,ஏன் நான் வேலை செய்த ECC கம்பெனியே இருக்கே!
கத்திப்பாரா பாலம் நான் பார்த்த வரை அங்கு நில ஆர்ஜிதம் பண்ணுவதில் ஏதோ பிரச்சனை இருக்கும் என்று தோனுகிறது. (உண்மை விஷயம் எனக்கு தெரியாது).மேல் சொன்ன பிரச்சனையில்லை என்றால் இப்போது இருக்கும்/கடைபிடிக்கும் தொழிற்நுட்பம் 20 வருடங்களுக்கு முந்தையது.
Balanced Cantilever முறைப்படி ஏற்கனவே இருக்கும் போக்குவரத்துக்கு இடைஞ்சல் இல்லாமல் கட்டமுடியும்.
சாரம் கட்டி,கம்பி கட்டி...என்னவோ போங்க.
//103 கோடியில் கட்டியது அம்மையாரின் ஆட்சியில் , அவங்களுக்கு தானே பேரும் , கமிஷனும் போய் இருக்கும், இப்போ அய்யா ஆட்சி இல்லையா ,அவங்க பங்குக்கு கமிஷனும் , புதுசா ஒரு திட்டம் கொண்டு வந்தோம்னு பேரும் வாங்க ஆசை படுறாங்க!//
வவ்வால்,
நீங்க சொல்வது எனக்கு தெரிந்த மட்டும் தவறு! அந்த CMBTயை அன்று திட்டமிட்டதும், கட்டியதும் இன்றைய முதல்வர் திரு.கருணாநிதியே!!!
கிலைமேக்ஸில் திறந்து வைக்கும் நேரத்தில் ஆட்சி செல்வி.ஜெயலலிதா கையில் போய்விட அந்த அம்மா திறந்து வைத்தது டாக்டர் ஜெ.ஜெயலலிதான்னு பெருசா போர்ட் போட்டுக்கினாங்க!!!
அதுக்குமே நோ கமெண்ட்ஸ் ;)
//நீங்க சொல்வது எனக்கு தெரிந்த மட்டும் தவறு! அந்த CMBTயை அன்று திட்டமிட்டதும், கட்டியதும் இன்றைய முதல்வர் திரு.கருணாநிதியே!!! //
உண்மைங்க. கலைஞர்தான் CMBTய கொண்டு வந்தவர்.
//கத்திப்பாரா பாலம் நான் பார்த்த வரை அங்கு நில ஆர்ஜிதம் பண்ணுவதில் ஏதோ பிரச்சனை இருக்கும் என்று தோனுகிறது. (உண்மை விஷயம் எனக்கு தெரியாது).மேல் சொன்ன பிரச்சனையில்லை என்றால் இப்போது இருக்கும்/கடைபிடிக்கும் தொழிற்நுட்பம் 20 வருடங்களுக்கு முந்தையது.
//
கத்திபாராவில் பிரச்சனைக்கு மூல காரணமே , ECC , Gammen பொன்ற நிறுவனக்களுக்கு கான்ட்ராக்ட் கொடுக்காமல் , தமிழக அரசு நிறுவனமான TNRDCக்கு கொடுத்ததால் தான்.
TNRDC தொழில்நுட்ப பலம் இல்லாமல் சப் கான்ட்ராக்ட் விட்டது. சப் கான்ட்ராக்ட் எடுத்தவர்களிடமும் பெரிய தொழில் நுட்பம் இருப்பதாக தெரியவில்லை, மொக்கைத்தனமாய் ஏதோ செய்துகொண்டிருக்கிரார்கள்.
பத்மகிஷோர்
பெரிய கம்பெனிகளுக்கு கொடுத்திருந்தால் முதலில் நில ஆர்ஜிதம் முழுமையாக இருக்க வேண்டும் அதோடில்லாமல் இப்படி ஒரு வேலை பல வருடங்கள் செய்துகொண்டு இருக்கமாட்டார்கள்.
பொருட்களின் விலையேற்றமே அவர்கள் லாபத்தை சாப்பிட்டுவிடும்.
நான் இருந்த போது இருந்த இ சி சி இப்போது இல்லை என்று கேள்விப்பட்டாலும் அவர்களிடன் மிஷின்களும் நல்ல திறமையான Design Team இருக்கிறது.
நஷ்டம் வந்தாலும் பாதியில் விட்டுவிட்டு போக மாட்டார்கள்.
சென்னையை பொருத்த வரை
நேரு ஸ்டேடியம்
சில மேம்பாலங்கள்
உதாரணங்கள்.
வவ்வால் கொஞ்சம் பொருத்துக்கனும் உங்க பதிவை hijack பண்ணுகிறேனோ என்று தோனுகிறது.
ஆனந்த லோகநாதன்
உங்கள் ஆதங்கம் நியாயமானதே, தற்காலத்தைய அரசியல்வாதிகளின் தொலைநோக்கு பார்வையற்ற, சுயநல போக்கே பல சீரழிவுகளுக்கும் காரணம்.
இளா,
நன்றி, ஆமாம் சென்னையில் குறிப்பிடத்தக்க லேண்ட்மார்க் ஆகிவிட்டது கோயெம்பேடு பேருந்து நிலையம், நன்றாக கட்டப்பட்டு ,பராமரிப்பும் நன்றாக உள்ளது. அதற்குள் அதற்கு மாற்று ஏற்பாடு என்கிறார்கள், அதான் கொடுமை.
நன்றி,
வாய்ஸ் ஆன்விங்ஸ்,
வெங்கட்ராமன்
பாபு மனோகர்,
நன்றி,
அபோது புறநகராக இருந்தது என்றாலும் ஒரு சில வருடங்களில் மாற்றவேண்டிய அளவு ஏன் ஆக வேண்டும், அதே போல தாம்பரம் , மதுரவாயல் புறவழிச்சாலையை ஏன் பயன்படுத்த கூடாது ? அதை விடுத்து ஒரே அடியாக புதிய பேருந்து நிலையம் எனப்போவது பணம் வீன் ஆகவழி தானே!
குமார் ,
நீங்கள் பேசுவதும் தொடர்புள்ளதே கட்டுமானத்தில் மாற்றம் வேண்டும் , வேலை விறைவில் நடக்கும் என்று பேசுவது எப்படி திசை திருப்பல் ஆகும் நன்றாகவே உள்ளது தொடருங்கள்!
we the people,
இல்லைங்க கலைஞர் காலத்தில் திட்டம் போட்டாங்க , அதை இறுதி படுத்தி காண்ட்ராக்ட் விட்டது எல்லாம் அம்மையார் ஆட்சில தான் , கட்டுமான வேலை துவங்கியதும் அவர்கள் ஆட்சியில் தான். யார் அடிக்கல் நாட்டுகிறார்கள் என்பது முக்கியம் அல்ல , யார் கமிஷன் வாங்கியது தான் பார்க்கணும்! :-))
இளா ,
அடிக்கல் மட்டும் தான் கலைஞர் , கமிஷன் வாங்க அவர் இல்லை, அம்மையாருக்கே போச்சு!
குமார்,
//கத்திப்பாரா பாலம் நான் பார்த்த வரை அங்கு நில ஆர்ஜிதம் பண்ணுவதில் ஏதோ பிரச்சனை இருக்கும் என்று தோனுகிறது. (உண்மை விஷயம் எனக்கு தெரியாது).மேல் சொன்ன பிரச்சனையில்லை என்றால் இப்போது இருக்கும்/கடைபிடிக்கும் தொழிற்நுட்பம் 20 வருடங்களுக்கு முந்தையது.//
நில ஆர்ஜிதம் எல்லாம் பிரச்சினை இல்லை , இடம் எடுத்து வேலை நடைபெறுகிறது ஆனால் மெதுவாக. நீங்கள் சொன்னது போல பழைய முறையில் அது தான் தாமதம்!
பத்மா கிஷோர்,
தமிழகம் முழுவதும் இப்படி தான் காண்டிராக் விடப்படுகிறது. அரசியல்வாதிகளின் பினாமி ,அல்லது ஆதரவாளர்களுக்கு மட்டுமே ஏல விண்னப்பமே தருவார்கள்.
அவர்களும் மெதுவாக வேலை செய்வார்கள், பின்னர் காலதாமதத்தால் விலை ஏறிவிட்டது எனக்கூறி ஏலத்தொகையாஇ உயர்த்தி கேட்டு வாங்குவார்கள். தாமதம் செய்தால் அபராதம் வசூலிக்க வேண்டும் , அதை விடுத்து அவர்களுக்கு கூடுதல் பணம் தரும் நாடு இது தான்!
என்றைக்கோ போடப்பட்ட தங்கநாற்கர சாலை திட்டத்தையே இன்னும் காஞ்சிபுரம் சென்னை இடையே முடிக்காமல் வைத்துள்ளார்களே
'தாம்பரம்,மதுரவாயல் புறவழிச்சாலையை ஏன் பயன்படுத்த கூடாது ?'
அந்த வழியையும் சில வருடங்களுக்கு பயன் படுத்தலாம்.பின்னர் அதுவும் நிரம்பி வழியும்.அப்போது என்ன செய்வது?
வெளியூரிலிருந்து வரும் பேரூந்துகளை நகருக்குள் விடாமலிருப்பதே நல்ல திட்டமாக இருக்கும்.
கோயம்பேடு நிலையம் ஒரு அவசர குடுக்கை திட்டம். இனிமேலாவது இம்மாதிரி திட்டங்களை தொலைத் தூர பார்வையுடன்(குறைந்த பட்சம் 50 ஆண்டுகள்) போடுவது நல்லது.
பாபு மனோகர்,
//அந்த வழியையும் சில வருடங்களுக்கு பயன் படுத்தலாம்.பின்னர் அதுவும் நிரம்பி வழியும்.அப்போது என்ன செய்வது?
வெளியூரிலிருந்து வரும் பேரூந்துகளை நகருக்குள் விடாமலிருப்பதே நல்ல திட்டமாக இருக்கும்.//
தாம்பரம் அதற்கு பின்னர் உள்ள பகுதிகளும் வெகு வேகமாக வளர்ந்து வருவதை பாருங்கள், பின்னர் தாம்பரத்தில் வைத்தாலும் பிரச்சினை தீராது செங்கல்பட்டில் வைக்க வேண்டும் என்பார்கள்! :-))
சாலைகள் நன்கு அகலாம அமைக்க வேண்டும், தற்போதைய போகுவரத்திற்கு 4 வழிப்பாதை கூட பத்தாது , 6 வழிப்பாதை அமைக்கவேண்டும். அல்லது தனியாக எக்ஸ்பிரஸ் லேன் என ஒரு சாலை அமைக்க வேண்டும். அதை விடுத்து கொஞ்சம் கொஞ்சமாக இடம் பெயர்ச்சி செய்வது சரியாக வராது!
'பின்னர் தாம்பரத்தில் வைத்தாலும் பிரச்சினை தீராது செங்கல்பட்டில் வைக்க வேண்டும் என்பார்கள்! :-))'
சரிதான்..பேசாம விழுப்புரம் தாண்டி அமைக்கவேண்டியதுதான்.
"ஆட்டோ...விழுப்புரம் வர்றியா.. எவ்வளவு கேட்கிற?":-)
////103 கோடியில் கட்டியது அம்மையாரின் ஆட்சியில் , அவங்களுக்கு தானே பேரும் , கமிஷனும் போய் இருக்கும், இப்போ அய்யா ஆட்சி இல்லையா ,அவங்க பங்குக்கு கமிஷனும் , புதுசா ஒரு திட்டம் கொண்டு வந்தோம்னு பேரும் வாங்க ஆசை படுறாங்க!
ரெண்டு பேரும் காரிய கிறுக்கர்கள் , இடையில் மக்கள் தான் பாவம்! சொல்றத கேட்டுக்கிட்டு வாய் இருந்தும் ஊமையாக போக வேண்டியது தான்!/////
இதுதான் உண்மை ! எந்த திட்டத்தில் எவ்வளவு கோடி புரட்டலாம் என்பதை முடிவு செய்ய க. வும், ஜெ. வும் தனித்தனி குழுவையே வைத்துள்ளார்களாம். இதில் பலதுறை வல்லுனர்களும் அடக்கம். வளர்ச்சி, எதிர்கால திட்டம், மக்கள் பயன் என்பதெல்லாம் சும்மா பெப்பே.....
-விபின்
பாபு மனோகர்,
//"ஆட்டோ...விழுப்புரம் வர்றியா.. எவ்வளவு கேட்கிற?":-)//
சொத்தையே எழுதி தரணும் ஆட்டோவுக்கு :-))
ஆட்டோக்காரர்களுடன் பேரம் பேசுவது தனிக்கலை, அதைப்பற்றிலாம் எழுதினா இடம் பத்தாது!
விபின்,
நன்றி!
//இதுதான் உண்மை ! எந்த திட்டத்தில் எவ்வளவு கோடி புரட்டலாம் என்பதை முடிவு செய்ய க. வும், ஜெ. வும் தனித்தனி குழுவையே வைத்துள்ளார்களாம். இதில் பலதுறை வல்லுனர்களும் அடக்கம். வளர்ச்சி, எதிர்கால திட்டம், மக்கள் பயன் என்பதெல்லாம் சும்மா பெப்பே.....//
கச்சிதமாக கவ்விட்டிங்க போங்க... :-))
ஊரை விட்டு வெளியே தள்ளிவைப்பது சரி... பேருந்து நிலையத்திலிருந்து நகரத்தின் பிற பகுதிகள் நன்கு இணைக்கப்பட்டிருக்கிறதா... கோயம்பேட்டில் இரவு 11 மணிக்குமேல் இறங்கினால் பிறபகுதிகளுக்கு இரவுநேர பேருந்துகள் இல்லையென்பது கவனிக்க வேண்டிய ஒன்று. கவனிக்க வேண்டிய விஷயங்கள் பல இருக்க... தற்போதைய பேருந்து நிலையத்தை மாற்றுவது தீர்வாகாது.
அரைபிளேட் ,
ஆமாம் பல பகுதிகளுக்கும் இரவில் பேருந்துகள் இல்லை , அதை சரி செய்யலாம், ஒரு வேலை ஆட்டோக்காரர்கள் நலத்திற்காக அப்படி செய்கிறதோ அரசு!
No Vavvaal
you are wrong. It was planned and contructed by DMK rule (on 1996 to 2001). that time they formed one committe headed by Mr. Ponmudi (Transport minister that time). He made all.
you can cross check the details by the foundation stones, work commenced and ingaurateion.
FYI - most of the infractural projects and universities are done by DMK rule only. (commison might be the reason. but they did such works lot)
vic,
நன்றி,
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கட்டுமான பணிகள் , திறப்புவிழா என அனைத்திற்கும் புகைப்படங்களை காட்சிக்கு வைத்துள்ளார்கள் அதில் அப்படி தான் இருக்கிறது.அங்குள்ள செய்திக்குறிப்பும் அப்படித்தான் சொல்கிறது. கலைஞர் அடிக்கல் நாட்டியதோடு சரி என நினைக்கிறேன்!
the work was excecuted by committe, (Chennai Dev. authority, some thing like that)headed by Mr. Ponmudi, members some IAS officers, Parithi(former Dept. speaker).
My friend's relative worked with the committe. so I know it very well. Our relative brought some land near that location for bussines purpose.(so still i am remembering all those developments).
So, no doubts about that. i will try to give more detils soon.
So, எப்படி பாத்தாலும் நாடு முன்னேரதுக்கு இந்த இடமாற்ற idea இல்லை.
- தாம்பரம், கோயம்பேடு, நுங்கம்பாக்கம்னு ஒரு train விட்டா இந்த பொக்குவரத்து நெரிசல, City bus நெரிசல கொரைக்கலாமேங்க...
-- மதுரவாயல் பாதையையும் செயல்படுத்தலாம்
-- தென் தமிழக buses தாம்பரத்திலயோ, பெருங்களத்தூர்லயோ நிருத்தி உள்ள வரதுக்கு mass transport traina பயன்படுதலம்.
இத அரசு அலுவலர்கள் படிப்பாங்களா? இல்ல அரசு web site எதாவது இருக்கா நம்ம idea சொல்ரதுக்கு - இந்த blog மதிரி?
வவ்வால் அன்னாச்சி,
நான் தமிழ் type பன்ன http://www.composetamil.com/tamil/tamilemail.aspx பயன்படுத்துரேன். net connection illaama offline-ல தமிழ type பன்ன என்ன வழிங்க? கொஞ்சம் சொல்லுங்களென் pls.
வாங்க பூவ்,
நீங்கள் சொல்வதும் நல்ல ஆலோசனை தான் அதற்கு முதலில் ரயில் பாதை போடனும்! இப்போது இருக்கும் பறக்கும் ரயில் போல ஒன்று தாம்பரம்- கோயெம்பேடுக்கும் கொண்டுவரும் எண்ணம் அரசுக்கு இருக்குனு முன்னரே சுட்டிக்காட்டியுள்ளேன். அது வரும் வரை என்ன செய்ய?
பெருங்களத்தூரில் எல்லாப்பேருந்தும் நிற்க மீண்டும் ஒரு பெரிய பேருந்து நிலையம் தான் கட்ட வேண்டி இருக்கும்! மேலும் அதிகமாக நகரப்பேருந்து விடனும் , செலவு அதிகம் ஆகுமே!
தற்காலிக நிவரணம் இரும்புலியூர் - கோயெம்பேடு புறவழிச்சாலை , பின்னர் இன்னொரு புறவழி சாலை அல்லது ஒட்டுமொத்தமாக பேருந்து நிலையத்தையே செங்கல்பட்டுக்கு பக்கமாக கொண்டு போய்விடலாம்:-))
தமிழில் இணையம் இல்லாத போதும் தட்டச்சு செய்ய இ.கலப்பை பயன்படுத்துங்கள் அது இந்த சுட்டியில் கிடைக்கும்
http://thamizha.com/modules/mydownloads/viewcat.php?cid=3
இது பற்றி மேலும் விவரங்களை பதிவர்கள் உதவிப்பக்கத்தில் இருக்கிறது.
http://tamilblogging.blogspot.com/search/label/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81
வவ்வால் அன்னாச்சி, ரொம்ப நன்றி. உபயோகமன நல்ல தகவல்கள் கொடுது இருக்கீங்க. இன்னம் சந்தேகங்களுக்கு, உங்கள எப்படி தொடர்பு கொள்வது?
நன்பர்கள் மட்டுமே பார்த்த என் வலைப்பதிவை, பார்த்ததன் மூலம் நன்பராகும் மதிப்பிர்க்குரிய வவ்வால் அன்னாச்சிக்கு,
என் வலைபதிவையும் பார்த்து முதன்முதல Comments எழுதுனதுக்கு நன்றிங்க. (நீங்க நான் கேட்டதுக்கு பதில்தான் சொன்னீங்க அது comment இல்ல - இருந்தலும் நான் comment-ஆ எடுத்துக்கிட்டேன்.)
உங்க வலைபதிவு எல்லாம் தின மனி மதிரின்னா என்னது தினத்தந்தி மாதிரி..பதிவு பற்றி தெரியாதவங்களுக்கு போகுது...அதனால படிசவங்களுக்கு comment போட தெரியல.
இன்னிக்கு ஒன்னு போட்டு இருக்கென்... இதுதான் முதல் முதலா பதிவு..அத பாத்துட்டு ஒரு Comment போடுங்களேன்
போக்குவரத்து நெரிசலும், சோசியலிசமும்
பேருந்து வசதி போதுமானதாக இல்லாததால் தனியார் வண்டிகள் பெருகி நெரிசல் மிகுந்துள்ளது. Peak Hourல் எந்த வழித்தடத்திலும் பேருந்துக்குள் ஏற முடிவதில்லை. போதிய எண்ணிக்கையில் பேருந்துகளை இயக்க அரசாங்கத்தால் இயலவில்லை. காரணம் நஷ்டம் மற்றும் ஊழல். 70களில் தேசிய மயமாக்கப்படுவதற்கு முன் TVSம், LGBயும் அருமையான சேவையினை செய்தன. சோசியலிசம் என்ற பெயரால் இன்று கடுமையான பற்றாக் குறை, ஊழல் மற்றும் நெரிசல். பேருந்தில் ஏற முடியாதவர்கள் இரு சக்கர வாகனங்களை வாங்க முயல்கின்றனர். அவை மலிந்து விட்டன.சென்னையில் ஒரு 700 மினி பஸ்களுக்கு permit வழங்கப்பட்டால் (ஏல முறையில்) பிரச்சனையைக் குறைக்கலாம். தனியார் பேருந்து மற்றும் parking மற்றும் bus stops அனுமதிக்கப்பட்டு, மினி வேன், ஷேர் ஆட்டோ, இரண்டு சக்கர டாக்ஸிகளும் அனுமதிக்கப்பட்டால் பொதுமக்களுக்கு மிகப் பயன்படும். நெரிசல் குறையும்.
இடது சாரிகளும், ஆட்டோ யூனியன்களும், எம் டி சி பஸ் யூனியன்களும் ஊழல் அதிகாரிகளும், அரசியல் தலைவர்களும் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். முதலாளி வளர்ந்து விடுவானாம். மோனோபோலி வந்து விடுமாம். டெலிகாம்மில் நடந்துள்ள புரட்சி இந்த வாதங்களைத் தகர்க்கிறது. BSNLன் மோனோபோலி உடைந்தவுடன் சேவை மலிவாகவும், சிறப்பாகவும் ஆனது. அனைத்துத் துறைகளிலும் இதே கதைதான்.
ஆனால் பூனைக்கு யார் மணி கட்டுவது? எங்கள் ஊரான கரூரில் பஸ் கட்டுமான தொழில் பெருகியுள்ளது. பல முக்கிய தடங்கள் (உம்; சேலம் - ஈரோடு) பல கோடி ரூபாயில் கைமாறுகின்றன. (பெர்மிட்டின் விலை, கருப்பு பணத்தில்). மேலும் புதிய வழித் தடங்கள் அனுமதிக்கப் படவேயில்லை. கேரளாவில் புதிய வழித் தடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.
இதற்கு விடிவு காலம் என்றோ? அதுவரை மக்கள் மிருகங்களை விடக் கேவலமான முறையில் பஸ்களில் திணிக்கப்பட்டு தொங்கிக் கொண்டுதான் செல்ல வேண்டும்..
Post a Comment