Thursday, September 27, 2007
மாவீரன் பகத் சிங்க் நூறாண்டு பிறந்தநாள் தினம்!
இன்று சுதந்திர போராட்ட தியாகி மாவீரன் பகத் சிங்கின் நூறாண்டு பிறந்த நாள் நினைவு தினம்.
அவரைப்பற்றிய ஒரு வாழ்கை வரலாற்று சிறு குறிப்பு:
செப்டம்பர் மாதம் 27 ஆம் நாள் 1907 ஆண்டு, பஞ்சாபில் உள்ள லாயல் பூர் என்ற கிராமத்தில் சர்தார் கிஷன் சிங்க் மற்றும் வித்தியாவதிக்கும் பிறந்தார். அவர் குடும்பமே விடுதலைப்போராட்ட வீரர்களை கொண்டதால் இளம் வயதிலே நாட்டுப்பற்று மிக்கவராக வளர்ந்தார்.
சிறு வயதிலேயே ஜாலியன் வாலாபாக் படுகொலையை கேள்விப்பட்டு அங்கு சென்று இரத்தம் படிந்த மண்ணை ஒரு புட்டியில் அடைத்து எடுத்து வந்து கடைசிவரை தன்னுடன் வைந்திருந்த கொள்கை பற்றாளர்.
லெஜண்ட் ஆப் பகத் சிங்க் திரைப்படத்தில் இருந்து ஒரு காட்சி!
அவரது நண்பர்கள் சுக்தெவ், ராஜ்குரு, ஆகியோருடன் சேர்ந்து சந்திர சேகர்ஆசாத்தின் உதவியுடன் " Hindustan Socialist Republican Army (HSRA)" என்ற அமைப்பை உருவாக்கி சுதந்திரப்போரில் ஈடுபட்டார். சிறு வயதிலேயெ கோதுமை வயலில் துப்பாக்கி விளைய வைத்து வெள்ளையர்களை வேட்டையாட வேண்டும் எனக்கனவு கண்டவர்.
அவர் புரிந்த சாகசங்கள் எண்ணற்றவை இறுதியாக செண்ட்ரல் அசெம்பிளி ஹாலில் வெடி குண்டு மற்றும் துண்டு பிரசுரம் போட்டு இன்குலாப் ஜிந்தாபாத் என்று முழக்கம் இட்டு தானே சரணடைந்து பின்னர் நடைப்பெற்ற லாகூர் கொலைவழக்கு விசாரணையில் தூக்கு தண்டனை அவருக்கும் அவர் நண்பர்களுக்கும் விதிக்கப்பட்டது . அப்போது விடுதலைப்போர் என்பதும் ஒரு போர் தான் எனவே எங்களை போர்க்கைதிகளாக நடத்தி தூக்கில் போடாமல் துப்பாக்கியால் சுட்டுக்கொள்ள வேண்டும் என மரணத்தையு விரும்பி வரவேற்ற வீரன்!
தூக்கு தண்டனையை நிறுத்த சொல்லி காந்தியிடம் பலரும் முறையிட்டனர், அப்பொழுது இர்வின் பிரபுவிடம் ஒரு ஒப்பந்தம் இட காந்தி இருந்தார், பகத் சிங்க் தூக்கை நிறுத்தினால் தான் ஒப்பந்தம் போடுவேன் என சொன்னால் வெள்ளையர்கள் கேட்பார்கள் என நேரு முதலானோர் எடுத்து சொல்லியும் காந்தி வன்முறை வழியில் செயல் படுபவர்களுக்கு ஆதரவாக செயல் பட மாட்டேன் என வேதாந்தம் பேசி மறுத்து விட்டார். கடைசியில் மார்ச் 23, 1931 இல் பகத் சிங்க் அவர் நண்பர்கள் சுக்தேவ், ராஜ்குரு ஆகியோர் தூக்கில் இடப்பட்டனர். அதற்கு ஒரு நாள் முன்னதாக காந்தியும் ஒப்பந்தம் செய்து கொண்டார். காந்தியின் தீவிர சீடர் ஆன நேருவே மனம் வெறுத்து , இன்னும் ஒரு நாள் கழித்தி கை எழுத்து போட்டிருந்தால் அதற்கு பகத் சிங்கின் ரத்தம் கிடைத்து இருக்கும் என சொன்னார்.
பகத் சிங்க் தூக்கில் சில மர்மங்களும் உள்ளது, அவர் தூக்கில் இட்டும் சாகாமல் இருந்ததாகவும் எனவே , சாண்டர்ஸ் என்ற அதிகாரியின் உறவினர்கள் துப்பாக்கியில் சுட்டும் , வெட்டியும் கொன்றார்கள் எனவும் ஒரு நூல் சொல்கிறது(சாண்டர்சை கொன்றதாக தான் லாகூர் கொலை வழக்கு). மேலும் அவரது உடலை உறவினர்களிடம் ஒப்படைக்காமல் ஆங்கில அரசே எரிக்கப்பார்த்தது. இது தொடர்பாக ஒரு காட்சியும் ஹிந்தியில் எடுக்கப்பட்ட லெஜெண்ட் ஆப் பகத் சிங்க் படத்திலும் வரும்.
ஒரு சே கு வேரா போல இந்தியாவில் இளைஞர்களை வசிகரிக்கும் திறன் கொண்ட மாவீரன் பகத் சிங். அவருக்கு இந்தியா என்றென்றும் கடமைப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
14 comments:
ஒரு சிறிய அறிவிப்பு:
ஒரு சில இணையத்தளங்களில் பகத் சிங்க் பிறந்த தினம் செப்டெம்பர் 28, 1907 என இருக்கிறது.நான் பார்த்த புத்தகத்தில் செப்டெம்பர் 27 எனத்தான் உள்ளது,எனவே நான் தவறாக தகவல் அளித்துவிட்டேன் என யாரும் எடுத்துகொள்ளக்கூடாது!
சிறு வயதுகளில் பள்ளி பாட புத்தகங்கள் வழி அறியாமல் அல்லது வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்யப்பட்டு போனதாலோ என்னவோ, இப்போது சினிமா மூலம் தெரிந்து கொள்ளவேண்டிய கட்டாயத்திற்கு வந்துவிட்டோம்.
எப்படியோ, நல்லவர்களுக்கு என்றுமே சாவு இல்லை என்று சொல்வார்களே! அது இதுதான் போல்.
மாவீரன் பகத் சிங் என்றும் நம் மனதில் நிற்க, இளைய சமுதாயத்தினர் அவரை மேலும் நன்கு அறிந்து கொள்ள தவராமல் நம்மால் முடிந்த அவர் நினைவு கூறும் முயற்சிகளை செய்து வீரத்தையும், போர் குணங்களையும், நாட்டுப் பற்றையும் வளர்ப்போம்.
இன்குலாப் ஜிந்தாபாத்!
மாசிலா,
நன்றி,
நூல்கள் வாயிலாக படிப்போருக்கு சேரும் , கல்லாதவரும் அறிந்து கொள்ள சினிமா பயன்படும் எனவே அதில் தரமான வரலாற்றை திரிக்காத படங்கள் வர வேண்டும்.
//மாவீரன் பகத் சிங் என்றும் நம் மனதில் நிற்க, இளைய சமுதாயத்தினர் அவரை மேலும் நன்கு அறிந்து கொள்ள தவராமல் நம்மால் முடிந்த அவர் நினைவு கூறும் முயற்சிகளை செய்து வீரத்தையும், போர் குணங்களையும், நாட்டுப் பற்றையும் வளர்ப்போம்.
இன்குலாப் ஜிந்தாபாத்!//
இந்த உணர்வு தான் அனைவருக்கும் அத்தியாவசிய தேவை மாசிலா!
வவ்வால்,
நல்ல பதிவு. பகத் சிங் பற்றிக் கொஞ்சம் கேள்விப்பட்டிருக்கிறேன்.
இந்திய சுதந்திரத்தில் பகத் சிங் போன்றவர்களின் பங்கு முக்கியமானது. பகத் சிங் போன்றவர்களின் அழுத்தங்களும் பிரிட்டிஸ் அரசு காந்தி போன்றவர்களை முதன்மைப்படுத்தி , பல ஒப்பந்தங்களுக்கு வழி போலியது என்பது என் கருத்து.
சரியான விசயத்த சரியான நேரத்துல சொன்னதுக்கு நன்றி வவ்வால்.
சின்ன கட்டுரையாக இருந்தாலும், பல புதிய மற்றும் புல்லரிக்க வைத்த தகவல்கள்.
//சிறு வயதிலேயே ஜாலியன் வாலாபாக் படுகொலையை கேள்விப்பட்டு அங்கு சென்று இரத்தம் படிந்த மண்ணை ஒரு புட்டியில் அடைத்து எடுத்து வந்து கடைசிவரை தன்னுடன் வைந்திருந்த கொள்கை பற்றாளர்//
காந்தி என்ற மாமனிதர் மேல் மரியாதையும் மதிப்பும், பிரமிப்பும் இருந்தாலும், பகத்சிங்க் போல தெரிந்த, தெரியாத ஆயிரம் ஆயிரம் வீர மக்களின் தியாகத்தால் வந்த சுதந்திரம், காந்தி தாத்தா வாங்கி தந்தார் என்று மழழைகள் படிப்பதும், நாம் சொல்வதும் கொஞ்சம் கஷ்டமா இருக்கு.
மாவீரன் பகத்சிங்கின் நூறாவது பிறந்தநாள் என்று உங்கள் இடுகை மூலம் அறிந்தேன் வவ்வால். இந்த இடுகையில் இருக்கும் பல தகவல்கள் (வாலியன் ஜாலா பாக் குருதிமண்ணை என்றும் தன்னுடன் வைத்திருந்தது, கோதுமை போல் துப்பாக்கி விளையவைக்கக் கனவு கண்டது) இதுவரை அறியாதவை. ஒவ்வொரு முறை வாலியன் ஜாலா பாக் படுகொலைகளை நினைக்கும் போதும் பார்க்கும் போதும் உடலும் உள்ளமும் பதைபதைக்கிறது.
பகத்சிங் பற்றி அவரது பிறந்ததினத்தில் பதிவு இட்டு அறியத்தந்தமைக்கு நன்றிகள்..
ஓங்குக மாவீரன் பகத்சிங் புகழ்..
பகத்சிங் பற்றி அவரது பிறந்ததினத்தில் பதிவு இட்டு அறியத்தந்தமைக்கு நன்றிகள்..ஓங்குக மாவீரன் பகத்சிங் புகழ்..
வெற்றி!
நன்றி!
//பகத் சிங் போன்றவர்களின் அழுத்தங்களும் பிரிட்டிஸ் அரசு காந்தி போன்றவர்களை முதன்மைப்படுத்தி , பல ஒப்பந்தங்களுக்கு வழி போலியது என்பது என் கருத்து.//
அப்படியும் இருக்க வாய்ப்புகள் அதிகம், ஆயுத போராட்டத்தினை மழுங்க செய்ய ஒரு யுக்தியாகவும் இருந்து இருக்கலாம்!
பூவேந்திரன்,
//பகத்சிங்க் போல தெரிந்த, தெரியாத ஆயிரம் ஆயிரம் வீர மக்களின் தியாகத்தால் வந்த சுதந்திரம், காந்தி தாத்தா வாங்கி தந்தார் என்று மழழைகள் படிப்பதும், நாம் சொல்வதும் கொஞ்சம் கஷ்டமா இருக்கு.//
கண்டிப்பாக ஆயிரம் ஆயிரம் பேரின் ரத்தம் சிந்தி தான் சுதந்திரம் வந்தது ஆனால் அகிம்சையால் வந்தது என ஒட்டு மொத்தமாக சொல்லிக்கொள்வதில் தான் நம்மவர்களுக்கு பெருமை அதிகம்! :-))
குமரன்,
நன்றி!
//ஒவ்வொரு முறை வாலியன் ஜாலா பாக் படுகொலைகளை நினைக்கும் போதும் பார்க்கும் போதும் உடலும் உள்ளமும் பதைபதைக்கிறது.//
இன்றைய நாகரீக உலகில் அப்படியும் நடந்ததா எனத்தான் ஆச்சரியம் தரும் , ஆனால் அப்படிப்பட்ட படுகொலைகள் தான் அன்று கோலோச்சியது என்பதே பதை பதைக்கும் உண்மை! உங்களைப்போன்றே எனக்கும் தோன்றும்! பதைபதைப்புடன் ஆத்திரமும் ஏற்படும் ஏன் வெள்ளைக்காரனிடம் பேசிக்கொண்டு இருந்தார்கள் , அடித்து துரத்தி இருக்கலாமே என!
எர்னஸ்டோ!
நன்றி!
//பகத்சிங் பற்றி அவரது பிறந்ததினத்தில் பதிவு இட்டு அறியத்தந்தமைக்கு நன்றிகள்..ஓங்குக மாவீரன் பகத்சிங் புகழ்..//
சே வின் பெயரைத்தாங்கி இருக்கிறிர்கள்! உங்கள் உணர்வு கண்டிப்பாக எத்தகையது என புரிகிறது! ஓங்கட்டும் அவர் புகழ்!
Post a Comment