சென்றப்பதிவில் (வளைவுகள் ஜாக்கிரதை) புருனோ, வற்றிராயிருப்பு சுந்தர் ஆகியோர் கடிகாரச்சுற்றினைப்பற்றி பேசினார்கள், அதன் மீதான மேலும் ஒரு சிறிய விளக்கம் அளிக்கவே இப்பதிவு!
கடிகாரச்சுற்று என்பது ஒரு கடிகாரத்தின் முற்கள் இயங்கும் வட்டப்பாதையை குறிப்பது, இதனை நேர் சுற்று என்பார்கள். கடிகாரங்கள் எல்லாம் அப்படி இயங்குவதால் அதனை இயற்கையான ஒன்றாகவும் , அதற்கு எதிரானதை இயல்புக்கு விரோதமாகவும் சொல்ல ஆரம்பித்தார்களா? ஆனால் உண்மையில் இயற்கை எனப்பார்த்தால் உலகம் தன்னை தானே எதிர் கடிகாரச்சுற்றில் தான் சுழலுகிறது.பூமி மேற்கிலிருந்து கிழக்காக சுழலும், எனவே தான் சூரிய்யன் கிழக்கில் உதிப்பதாக தெரிகிறது. அப்படிப்பார்த்தால் அது தானே இயற்கை.
கோயில்களில் கூட கடிகாரச்சுற்றில் தான் வலம் வர வேண்டும். சிதைக்கு தீ மூட்டும் போது மட்டும் அப்பிரதட்சணமாக (எதிராக) சுற்றி வந்து தீ மூட்ட வேண்டும் என்பார்கள்.
கடிகார சுழற்சியை நம்பும் மனிதன் பூமியின் சுழற்சியை நம்பாதது ஏன்?
கடிகாரம் அப்படி சுற்றும் படி அமைத்தது மனிதனின் தற்செயலான கவனக்குறைவான கண்டு பிடிப்பே என்பது எனது கருத்து.படத்தில் பார்த்தால் எப்படி செலுத்தும் சக்கரத்தின் திசை , கடிகார முட்களுக்கு வரும் போது மாறுகிறது என்பது புரியும்.
ஒரு பல்லிணைச்சக்கரத்துடன் இணைந்த மற்றொரு பல்லிணை சக்கரம் , முதல் சக்கரத்திற்கு எதிராக சுற்றும். அதாவது செலுத்தும் சக்கரம் சுழலுவதற்கு எதிராக சுற்றும் செலுத்தப்படும் சக்கரம், அதே திசையில் இயங்க வைக்க மூன்றாவது ஒரு பல்லிணை சக்கரம் தேவைப்படும். கடிகாரத்தை கண்டு பிடித்தக்காலத்தில் இதனை கவனத்தில் வைக்க தவறிவிட்டார்கள். உண்மையில் கடிகாரத்தின் ஆதார செலுத்தும் விசை சக்கரம் கடிகார எதிர் சுற்றில் தான் சுழலும்.
நமது பூமியை விண் வெளியில் இருந்து வட துருவம் வழியாக பார்த்தால் எதிர் கடிகார சுற்றாகவும், தென் துருவம் வழியாக பார்த்தால் கடிகார சுற்றாகவும் சுழல்வதைக்காணலாம், காரணம் வட துருவம் என்பது மேல் புறமாகவும், தென் துருவம் கீழ்புறமாகவும் இருப்பதால்( சூரிய மண்டல தளத்தை ஆதாரமாக கொண்டு)பூமியில் இருப்பவர்களால் அதனைப்பார்க்க முடியாது , சாட்டிலைட் மூலம் தான் காணலாம்.
9 comments:
வவ்வால்,
பதிவுக்கு நன்றி.
அறிந்திராத பல சங்கதிகளைத் தெரிந்து கொள்ள முடிந்தது.
மீண்டும் நன்றிகள்.
வெற்றி,
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!
புதுத் தகவல்களுக்கு நன்றி வவ்வால்.
இன்று தான் கண்ணில் பட்டது, பயனுள்ள பதிவை அளித்தமைக்கு நன்றி நண்பா
துளசிகோபால்,
நன்றி!
---------
கானா
நன்றி தல!
//வட துருவம் என்பது மேல் புறமாகவும், தென் துருவம் கீழ்புறமாகவும் இருப்பதால்( சூரிய மண்டல தளத்தை ஆதாரமாக கொண்டு)//
'மேல்', 'கீழ்' எல்லாம் இன்னொன்றைச் சார்ந்திருக்கும்போதுதானே, மேல்கீழாய்த் தொங்குபவரே:-) அண்டம், பேரண்டத்தில் 'மேல்' ஏது 'கீழ்' ஏது? சிறுவயதில் நினைத்துக்கொள்வேன்: 'கங்கை, சிந்து எல்லாம் எளிதாய் ஓடி கடலில் கலக்கையில், பாவம் இந்த நைல்; கஷ்டப்பட்டு கீழிருந்து மேலே ஓடி கடலில் கலக்கிறதே:(' என்று! அதைப் போலல்லவா இருக்கிறது இந்த 'மேல்' 'கீழ்' குறியீடு?
காசி,
நன்றி!
எல்லாம் ஒன்றை ஒன்று சார்ந்து வரையறுக்கப்பட்டது தானே , ஐன்ஸ்டீன் கூட சார்பியல் தத்துவம் என்று வைத்து தானே சொல்லி இருப்பார் அண்டத்தில் எதுவும் சாராமல் விளக்க முடியாது அல்லவா?
பூமிக்கு என்று செங்குத்து அச்சு என்று ஒன்றை கற்பனையாக வைத்திருப்பதால் அதன் நோக்கில் பார்த்து சொல்வது தான் இந்த மேல் ,கீழ் சுழலும் திசை.
சுழலும் திசைக்கு நாம் அளிக்கும் முக்கியத்துவத்தை அப்படிலாம் ஒன்றும் இல்லைனு சொல்ல சொன்னது இது!
clock wise , என்பதை நார்மல் என்றும் anti clockwise என்பதை அப்நார்மல் என்று சொல்கிறோம், ஆனால் பூமி எப்படி சுற்றுகிறது என்பதை வைத்து சொன்னால் உல்டா தானே! :-))
//பாவம் இந்த நைல்; கஷ்டப்பட்டு கீழிருந்து மேலே ஓடி கடலில் கலக்கிறதே:(' என்று! அதைப் போலல்லவா இருக்கிறது இந்த 'மேல்' 'கீழ்' குறியீடு?//
நல்ல ஒப்பீடு!
//சுழலும் திசைக்கு நாம் அளிக்கும் முக்கியத்துவத்தை அப்படிலாம் ஒன்றும் இல்லைனு சொல்ல சொன்னது இது!//
அது!
Post a Comment