அறிவியல் தேசம் இந்தியா!
இந்தியா பல சிறப்புகளை உடைய ஒரு தேசம் , உலகத்திற்கே முன்னோடியான நம் நாடு இன்று அணு சக்தி முதல் இன்ன பிற தொழில்நுட்பங்களுக்காக அயல்நாட்டிடம் பரிதாபமாக கையேந்தி நிற்கிறது.அந்த காலத்தில் வெற்றிலையில் மை தடவி " LED tv " க்ளை விட சிறப்பாக தொலைக்காட்சிகளை கொண்டு வந்த விஞ்ஞானிகள் நம் நாட்டில் இருந்துள்ளார்கள். ஆனால் இன்றோ எல்லாம் அன்னிய மயமாகி விட்டது. காரணம் நாம் நம் திறமை மீது நம்பிக்கை வைக்காததும், பழம் பெருமைகளை மறந்து விட்டதுமே ஆகும், போதி தர்மனை எல்லாம் மறந்தூ விட்டோம்.
ஏஆர்.முருகதாஸ் மட்டும் இல்லை என்றால் நம்மில் எத்தனைப்பேருக்கு போதி தர்மனை தெரிந்து இருக்கும்.
எனவே நமது கலாச்சார விஞ்ஞான வேர்களை அடையாளம் காட்டவே இப்பதிவு.
# முதல் கண் தானம், மற்றும் கண் அறுவை சிகிச்சை செய்தது இந்தியாவில் தான், கண்ணப்ப நாயனார், கேடராக்ட் வந்த சிவனுக்கு தனது கண்ணை தானமாக கொடுத்து , அவரே அறுவை சிகிச்சை செய்துள்ளார்.
#பயோ டெக்னாலஜியை கண்டுப்பிடித்தது இந்தியர்களே, பாலை உறையூற்றி தயிராக ஆக்கினர், அந்த தயிரைக்கடைந்து வெண்ணை எடுத்துள்ளனர்,ஆதாரம் கிருஷ்ணர் வெண்ணை திருடி தின்றதே.
# திசு வளர்ப்பு, குளோனிங் ஆகியவற்றை கண்டுப்பிடித்ததும் இந்தியர்களே, காந்தாரிக்கு சிசு பிறக்காமல் ஒரு திசுவாக பிறந்தது அதனை 101 துண்டுகளாக்கி 101 கலசங்களில் இட்டு குழந்தைகளாக மாற்றினார் துர்வாசர் , அவர்களே கவுரவர்கள். கவுரகர்களின் ஒரே தங்கை துசாலை தான் 101 வது உடன்பிறப்பு.
#ஒரு மிகப்பெரும் நிகழ்வினை நேரடி வர்ணனையாக சொல்லும் ரன்னிங் கமெண்டரி கொடுக்கும் முறையை முதன் முதலில் ஆரம்பித்து வைத்தது இந்தியர்களே, மகாப்பாரத போரை களத்துக்கு செல்லாமல் இருந்த இடத்தில் இருந்தே திருதராஷ்டிரனுக்கு லைவ் கமெண்டரி கொடுத்தார்
#முதன் முதலில் ரியாலிட்டி ஷோக்களில் ஜட்ஜ் ஆக பணிப்புரிந்ததும் ஒரு இந்தியரே, மகாப்பாரதபோரில் பாண்டவர்கள் வெற்றி அடைய யார்க்காரணம் என தீர்ப்பு வழங்கியது , போரினை ஆரம்பம் முதல் கடைசிவரைப்பார்த்த பார்பரிக்கா என்பவரே(பீமனின் பேரன்,கடோத்கஜன் மகன்). இவரே உலகின் முதல் போர்ப்பார்வையாளர் ஆவார். இதன் பின்னரே மானாட மயிலாட போன்றவற்றில் கெமிஸ்ட்ரி பற்றிப்பேச ஆரம்பித்தார்கள் நீதிபதிகள்.
# உலகின் முதல் டிரான்ஸ்ஜெனிக் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ததும் இந்தியாவில் தான், சிவன் , யானை தலையை ,மனித உடலுக்கு பொருத்தி வினாயகரை உருவாக்கினார்.
#முதல் பறக்கும் எந்திரம் கண்டுப்பிடித்ததும் இந்தியாவில் தான் , இராவணன் புஷ்பக விமானம் வைத்திருந்தார், அவரே உலகின் முதல் பைலட் லைசென்ஸ் வாங்கியவர்.
#கொரில்லா தாக்குதல் எனப்படும் மறைந்து இருந்து தாக்கும் உத்தியைக்கண்டுப்பிடித்ததும் இந்தியர்களே ,இராமன் மறைந்திருந்து வாலியை தாக்கியதே உலகின் முதல் கொரில்லா தாக்குதல்.(வாலி வானரம், இராமன் மனிதன் என்பது ஒரு முரண்நகை)
#உலகின் முதல் கடல்ப்பால சிவில் கட்டுமான வடிவமைப்பாளர் இராமன் அவர்களே, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே பாலம் கட்டியுள்ளார்.
# உலகின் முதல் போர் நிறுத்த அமைதி தூதர் அனுமன், இராவணனுக்கும் , இராமனுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் போட தூது சென்றுள்ளார்.
#உலகிலே ஸ்டெனோகிராபர் என்ற தொழிலை கண்டுப்பிடித்தது இந்தியர்களே, வியாசர் மஹாபாரதம் எழுத விநாயகரை ஸ்டெனோகிராபராக பணிக்கு வைத்துள்ளார்.
#உலகின் முதல் நில அளவையாளர் வாமனன் அவர்களே ,கால்களாயே உலகை அளந்துள்ளார்.
#உலகிலேயே தொலைநிலைக்கல்வி முறையை முதலில் அறிமுகப்படுத்தியது இந்தியாவே, ஏகலைவன், துரோணரிடம் தொலைநிலைக்கல்வி கற்றுள்ளார்,(கட்டணம் ரொம்ப அதிகம்)
# கெலாக்ஸ் கார்ன் பிளேக்ஸ்க்கு முன்னோடியான ரைஸ் பிளேக்ஸ் எனப்படும் அவலைக்கண்டு பிடித்தது இந்தியா தான், குசேலர் , கண்ணனுக்கு அவல் கொண்டு சென்றதே ஆதாரம்.
இப்படி பல பல அறிய ,பெரிய அறிவியல் தொழில்நுட்பங்களை கண்டறிந்த நம் நாடு இப்போது பின் தங்கியிருக்க காரணம் நாம் வரலாறு , கலாச்சாரம்,அறிவியல் பின்புலம் ஆகியவற்றை மறந்து விட்டது தான், எனவே இனியும் மறக்காமல் நம் பழம் பெருமையை மிட்டு எடுப்போம்! இத்தகைய அறிவியலை வேண்டாம் என்பது பிற்ப்போக்குத்தனமே! :-))
இன்னும் எத்தனையோ பல அறிவியல் சிறப்புகள் இருந்தாலும் என் சிற்றறிவுக்கு எட்டியதை மட்டுமே பட்டியலிட்டுள்ளேன் ,விடுபட்டவை மற்றும் உங்களுக்கு தெரிந்தது எதுவும் இருந்தால் சொல்லுங்கள்!
26 comments:
//இப்படி பல பல அறிய ,பெரிய அறிவியல் தொழில்நுட்பங்களை கண்டறிந்த நம் நாடு இப்போது பின் தங்கியிருக்க காரணம் நாம் வரலாறு , கலாச்சாரம்,அறிவியல் பின்புலம் ஆகியவற்றை மறந்து விட்டது தான், எனவே இனியும் மறக்காமல் நம் பழம் பெருமையை மிட்டு எடுப்போம்! இத்தகைய அறிவியலை வேண்டாம் என்பது பிற்ப்போக்குத்தனமே! :-))//
நமது இந்தியா மூடநம்பிக்கைகளின் கூடாரம் என பகுத்தறிவு வாதிகள் பேசிக்கொண்டு இருக்கிறார்கள் வவ்வால். கவனமாக இருங்க.
நல்லதொரு அலசல். மேலும் பல விசயங்களை வெளிக்கொண்டு வாருங்கள். இதையெல்லாம் படிக்கும்போது எத்தனை சுவாரஸ்யமாக இருக்கிறது.
ஒரு உலகம் அல்ல, ஏழு உலகங்கள் என சொன்னதும் நமது இந்தியர்கள் தான்.
வெளி கிரக வாசிகள் பற்றிய அறிவு குறித்து தேவ தூதர்கள் என வர்ணித்தது கூட இந்தியாதான்.
இன்னும் இன்னும்...
அணு ஆயுதம் - பிரம்மாஸ்திரம் [அஸ்வத்தாமன் விடுத்த பிரம்மாஸ்திரம் உத்தரையின் கருவில் இருந்த குழந்தையை பாதித்தது]
இப்படி பல நேரம் யோசிச்சிருக்கேன்... நம்பிக்கை போன பின் எல்லாம் தமாஷா தெரியுது
வாங்க ரா.கி,
வணக்கம், நன்றி!
//நமது இந்தியா மூடநம்பிக்கைகளின் கூடாரம் என பகுத்தறிவு வாதிகள் பேசிக்கொண்டு இருக்கிறார்கள் வவ்வால். கவனமாக இருங்க.//
ரொம்ப கவலையா இருக்கு இந்த ஆன்மீகவியாதிகளும், பகுத்தறிவுவியாதிகளும் பேசுறதப்பார்த்தா :-))
இன்னும் பல ஆராய்ச்சிகள் செய்து நிறைய உண்மைகளை வெளீக்கொணரலாம்னு இருக்கேன், போதிதர்மன் தான் அருள் புரியனும்!
//ஒரு உலகம் அல்ல, ஏழு உலகங்கள் என சொன்னதும் நமது இந்தியர்கள் தான்.//
இல்லை மொத்தம் பதிநான்கு உலகம், கீழ 7 மேல 7 நடுவில நாம அப்போ 15 இல்ல வரும், ஆனால் ஈரேழு பதிநான்கு சொல்றாங்களே.
அதல,பாதாளம்னு 7 கீழ் உலகத்திலும் பாம்புகள் இருக்காம்.
மேல இருக்க 7 உலகிலும்,தேவர்கள், கந்தர்வர்கள்,கிம்புருடர்கள்,கின்னரர்கள்,கிங்கரர்கள்னு ,கடவுள்கள் எல்லாம் ஆளுக்கு ஒரு லேயராக உலகம் அமைத்து இருக்காங்கலாம்.
எனவே பேரலல் யுனிவர்ஸ் சித்தாந்தம் கூட நம்ம ஆளுங்க சொன்னது தான் :-))
வாங்க சூர்யா,
வணக்கம்,நன்றி!
பிரம்மாஸ்திர கதிர்வீச்சு கருவில் இருக்கும் சிசுவையும் பாதிச்சு இருக்கா, ஆமாம் உத்தரை ஏன் போர்க்கள்ம் போணாங்க?
அந்த காலத்திலயே NPT இருந்திருக்கு பிராம்மணர்களை தவிர யாருக்கும் சொல்லித்தர மாட்டேன்னு பரசுராமர் பாலிசி வச்சு இருந்தாராம்
தமாஷா இதெல்லாம் ரொம்ப தப்பு, நம்ம அறிவியல் பின்புலத்தை மறந்துட்டோம்னு அப்புறம் யாராவது சினிமா டயரக்டர் படம் எடுப்பாங்க :-))
நாம் கண்டு பிடிக்காதது என்ன என்று பட்டியல் போட்டால் எளிதாக இருக்கும் :-))))
ஜாலியா எழுதியிருந்தாலும், சில விசயங்கள் இருந்திருக்குன்னு தெரியுது.
இரண்டாம் மூன்றாம் நூற்றாண்டை சேர்ந்த சுஷ்ர சம்ஹிதா புத்தகம் இப்போது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு கிடைக்கிறது.
http://chestofbooks.com/health/india/Sushruta-Samhita/index.html
http://en.wikipedia.org/wiki/Sushruta_Samhita
//நாம் கண்டு பிடிக்காதது என்ன என்று பட்டியல் போட்டால் எளிதாக இருக்கும் :-))))//
பழைய ஜோக்.
30ஆம் நூற்றாண்டில் அகழ்வாராய்ச்சியாளர்கள்,
அமெரிக்காவை தோண்டி ஒரே டெலிபோன் வயராக கண்டுபிடித்தார்கள். ஆஹா அப்பவே அமெரிக்காவில் டெலிபோன் இருந்திருக்கு என்று கண்டுபிடித்தார்கள்.
இந்தியாவை தோண்டினார்கள். ஒன்றும் கிடைக்கவில்லை. ஆஹா அப்பவே இந்தியாவில் வயர்லெஸ் கண்டுபிடித்திருக்கிறார்கள் என்று சொன்னார்கள்!
:))))
மனிதனுக்கும் குரங்கிற்கும் இடைப்பட்ட ஓர் இனம் இருந்திச்சுன்னு கண்டுபிடிச்சு வாழ வைச்சதே இந்தியாதான்வே...
அதான் - ஹனுமாரு - :))
அனானி,
வாங்க, நாம கண்டுப்பிடிக்காதது எதுவே இல்லையே, எல்லாத்தையும் கண்டுப்பிடிச்சு இருப்பாங்க , நாம தான் தெரிஞ்சுக்காம இருப்போம்! ஏஆர் முருகதாசர்கள் வந்து நமக்கு படம் எடுத்து பாடம் புகட்டுவார்கள் :-))
பூமிக்கு அடில ஓடுற நீரோட்டத்தையே ஒரு வேப்பம் குச்சிய வச்சு கண்டுப்பிடிக்கிற விஞ்ஞானிகள் நம்ம நாட்டில உண்டு!(அதே போல பெட்ரோல் கண்டுப்பிடித்தா தேவலை)
இப்னு ஜாகிர்,
வாங்க, வணக்கம்,நன்றி!
சுஷ்ருதர் தான் முதலில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்தார்னு படிச்சு இருக்கேன், அதை விட தொன்மையான கண்டுப்பிடிப்புகளை இங்கே பட்டியல் போட்டேன், உங்க சுட்டிய படிக்கிறேன்.
உங்க ஜோக் , பழசா இருந்தாலும் எப்போ படிச்சாலும் சிரிப்பு வரும்! நல்ல ஜோக் அது.
தெகா,
வாங்க, வணக்கம்,நன்றி!
இந்த பதிவுக்கு மூலகர்த்தாவே உங்க 7 ஆம் அறிவுப்பதிவு தான்,அங்கே சந்துரு கூடப்பேசும் போது இந்த எண்ணம் வந்துச்சு, இத எல்லாம் அறிவியல்னு அவர் சொல்லிடுவாரோனு ஒரு பயம் கூட உள்ளூக்கு இருந்துச்சு :-))
அனுமார் கதைய திருடி தான் பிளானட் ஆப் ஏப்ஸ் னு ஹாலிவுட்ல படம் எடுத்தாங்களா?
ஹி..ஹி அந்த அனுமார் மேட்டர் நான் கூட யோசித்தேன் ,ஆனால் வானரம்னு சொல்றாங்க நாம தப்பா சொல்லிட்டா அனுமான் சேனை சண்டைக்கு வருமே!
அப்புறம் அனுமார் தான் ஒப்பன் ஹார்ட் சர்ஜரி செய்தார் நெஞ்ச தொறந்து அதில ராமனும் சீதாவும் இருப்பதைக்காட்டினார்ல! :-))
//மகாப்பாரத போரை களத்துக்கு செல்லாமல் இருந்த இடத்தில் இருந்தே திருதராஷ்டிரனுக்கு லைவ் கமெண்டரி கொடுத்தார் விதுரர்.// அது விதுரர் இல்லை...சஞ்சயன்! திருதராஷ்டிரனில் தேரோட்டி. கலக்கலான பதிவு. நாங்கள் எல்லாம் திருநள்ளாறை சாட்டிலைட்டில் இருந்து மறைச்சவங்க!
வாங்க மாயன்,
நன்றி,வணக்கம்,
ஹி...ஹி எல்லாம் ஒரு நினைவில் எழுதினது தான் , இப்போ பாருங்க தப்பா எழுதியதால நீங்க வந்து இருக்கிங்க, இல்லைன வருவிங்களா :-)) ரொம்ப நன்றி மாற்றி விடுகிறேன்.
விதுரர் தான் திருதராஷ்டிரருக்கு நீதிக்கதைலாம் சொன்னார்னு படிச்சிருந்தேனா சரி அவர் தான் போல இதுவும் னு போட்டுடேன்,பாரதம் முழுக்கவே ஒருவர் கதை சொல்வதாக தான் வரும்.அது சஞ்சயன் என்பது மறந்து விட்டது.
திருநள்ளார் பற்றி நானும் முன்னர் செய்தி பார்த்திருக்கேன்.நாசா விஞ்ஞானிகள் வருகைனுலாம்.சனி பகவான் ரொம்ப பவர் தான் :-))
தொலைக்காட்சியை கண்டுபிடித்ததும் நாம தான்
கயிலாயத்தில் சிவன் பார்வதியை கல்யாணம் செய்து கொள்ளும் போது உலகம் மொத்தமும் அங்கே கூடி விட்டதாம்
அப்போது உலகம் ஒரு பக்கமாக சாய்ந்து விட்டதாம்.. அதை ஈடு கட்ட உலகத்தின் மறுபக்கம் செல்லுமாறு அகத்தியரை பணித்தார் சிவபெருமான்.
அவரால் திருமணத்தை பார்க்க முடியாதே என கருதி வானத்தில் திருமணகாட்சியை தெரியும்படி செய்தாரம்...
இதை உலகின் முதல் டிவி, லைவ் வீடியோ காஸ்ட், வெப் காஸ்ட் எப்படி வேண்டுமானாலும் வைத்து கொள்ளுங்கள்...
விவேக் ஒரு படத்தில் சொல்வதை போல் பிரிட்ஜ கண்டுப்பிடிக்கறதுக்கு முன்னாலேயே புளியோதரைய கண்டுபிடிச்சு அஞ்சு நாள் வச்சு சாப்பிட்டவைங்க நாங்கள்லாம் தெரியுமா?
//இப்போ பாருங்க தப்பா எழுதியதால நீங்க வந்து இருக்கிங்க, இல்லைன வருவிங்களா :-))//
//மாயன்,
நன்றி, உங்களைப்போலவே இன்னொரு மாயனும் பதிவில் இருக்கார்ப்போல, அவர்ப்பதிவில் போய் நான் பின்னூட்டம் இட்டால் வருவதே இல்லை :-))//
வணக்கம் வவ்வால்! நீங்கள் என் வலையில் பின்னூட்டம் இட்டீர்களா...அப்படி ஒன்றும் காணக் கிடைக்கவில்லை.. எனக்கு மொத்தமே 40 பின்னூட்டம்தான் வந்திருக்கு(ஞாபகத்தில் வேறு வைத்திருக்கிறேன் புது பதிவர் இல்லையா...)delete ஆகியிருக்க வாய்ப்பில்லையென்றே தோன்றுகிறது.Save ஆகவில்லையென்றே நினைக்கிறேன்.
அய்யோ!நீங்க வந்த நேரமா பார்த்து எனக்கு அலுவலகத்தில் அதிகமா ஆணி புடுங்க விட்டுட்டானுகளே!தமிழ்மணம் வருவதற்கான 10 நிமிட நேரமில்லாமல் ஆணின்னா நம்பவா போறிங்க!
இன்றைக்கு வார இறுதி.மொத்தமா மேஞ்சிடறேன்.
நிறைய உள்குத்து இருக்கிற மாதிரி படறதே!இந்தியாவின் முதல் பீரங்கி கூட திப்பு சுல்தானிடமிருந்துதானாம்.சந்தேகமிருப்பவர்கள் அடுத்த முறை அப்துல்கலாம் கூடங்குளம் வரும் போது கேட்டுக்கவும்.
//மேல இருக்க 7 உலகிலும்,தேவர்கள், கந்தர்வர்கள்,கிம்புருடர்கள்,கின்னரர்கள்,கிங்கரர்கள்னு ,கடவுள்கள் எல்லாம் ஆளுக்கு ஒரு லேயராக உலகம் அமைத்து இருக்காங்கலாம்.//
விட்டலாச்சார்யா படங்கள் வருவதேயில்லைன்னு ரொம்ப நாளா கவலைப்பட்டுகிட்டிருந்தேன்:)
வெள்ளைக்காரன் நீராவி எஞ்சின் கண்டுபிடிக்கறதுக்கு முன்பே இட்லி சுட்டதும் நாமதான்:)
raj ,and mayan nalaiku reply poduren, now full mabbu lol!
தனிமடல்
வணக்கம் வவ்வால்.
உங்களை சந்தித்து பேச விரும்புகிறேன். மின்னஞ்சல் முகவரி கிடைக்குமா ?
மாயன்,
வணக்கம், நன்றீ!
//அதை ஈடு கட்ட உலகத்தின் மறுபக்கம் செல்லுமாறு அகத்தியரை பணித்தார் சிவபெருமான்.
அவரால் திருமணத்தை பார்க்க முடியாதே என கருதி வானத்தில் திருமணகாட்சியை தெரியும்படி செய்தாரம்...
இதை உலகின் முதல் டிவி, லைவ் வீடியோ காஸ்ட், வெப் காஸ்ட் எப்படி வேண்டுமானாலும் வைத்து கொள்ளுங்கள்//
ஆஹா வெளூத்து வாங்கறிங்க, இதை வைத்து தான் அயனோஸ்பியர்ல ரேடியோ வேவ் ரிப்ளக்ட் ஆகும்னு கண்டுப்பிடித்தாங்கனு சொல்லிக்கலாம் போல இருக்கே :-))
அப்புறம் அகத்தியர் கதையே ஒரு உட்டாலக்கடி அதை பின்னர் தனியா பதிவாக போடனும்.
------------------------------
மாயன்,
நான் ஒன்றோ இரண்டோ கமெண்ட் போட்டுப்பார்த்தேன் எந்த செய்தியும் வரலை, சரி ஏதோ என்னமோனு விட்டுடேன்.உங்களை தவறாக சொன்னதாக நினைக்கவேண்டாம், நானும் ஒரு புதுப்பதிவர் தானே , இந்த வாரம் என் புதிய பதிவுகள் எந்த திரட்டிலயும் இணையவில்ல யாராவது சூன்யம் வச்சுட்டாங்களோ என்னமோ? :-))
ராஜ்,
வாங்க ஆணி அதிகமா, அப்போ பெரிய சித்தர் தான் நீங்க ,முள்படுக்கைல வாசம் செய்றிங்களே :-))
நீங்களாம் மேயாம யார் மேய இந்த பதிவு , நல்லா மேயுங்க!
ஹி..ஹி முதல் பீரங்கிய இந்தியாவுக்கு கொண்டு வந்தது பாபர்னு ஸ்கூல் புக்குல போட்டு இருக்கான்! ஆனாலும் ஹைதரலி/திப்பு தான் தென்னிந்தியாவுக்கு கொண்டு வந்திருப்பார்னு நினைக்கிறேன், கர்நாடாகவில இருக்க ஸ்ரிரங்கப்பட்டணத்தில இருக்கு அவரோட வசந்த மாளிகைல ரெண்டு பீரங்கி இருக்கு, பக்கத்தில நின்னு போட்டா கூட எடுத்துக்கிட்டேன்.
//விட்டலாச்சார்யா படங்கள் வருவதேயில்லைன்னு ரொம்ப நாளா கவலைப்பட்டுகிட்டிருந்தேன்:)//
ஹாரிப்பாட்டர் படங்கள் வருதில்ல :-))
வெள்ளைக்காரன் பாட்டி வட சுட்டக்கதைய கூட படமா எடுப்பான்!
//வெள்ளைக்காரன் நீராவி எஞ்சின் கண்டுபிடிக்கறதுக்கு முன்பே இட்லி சுட்டதும் நாமதான்:)//
ஆமாம் அந்த பெருமை நமக்கு மட்டுமே, என்ன ஒன்று அந்த இட்லிப்பானைல நாலு சக்கரம் மாட்டத்தெரியல :-))
பகத்,
வாங்க , நீங்க யாரு சாமி திடீர்னு வரிங்க , மயில் சொல்லுங்க பேசணும் சொல்றிங்க, இங்கேயே பேசலாமே எனக்கு ஆட்சேபனையே இல்லை!
தெகா, வாங்க, வணக்கம்,நன்றி! இந்த பதிவுக்கு மூலகர்த்தாவே உங்க 7 ஆம் அறிவுப்பதிவு தான்,அங்கே சந்துரு கூடப்பேசும் போது இந்த எண்ணம் வந்துச்சு, இத எல்லாம் அறிவியல்னு அவர் சொல்லிடுவாரோனு ஒரு பயம் கூட உள்ளூக்கு இருந்துச்சு :-)) அனுமார் கதைய திருடி தான் பிளானட் ஆப் ஏப்ஸ் னு ஹாலிவுட்ல படம் எடுத்தாங்களா? ஹி..ஹி அந்த அனுமார் மேட்டர் நான் கூட யோசித்தேன் ,ஆனால் வானரம்னு சொல்றாங்க நாம தப்பா சொல்லிட்டா அனுமான் சேனை சண்டைக்கு வருமே! அப்புறம் அனுமார் தான் ஒப்பன் ஹார்ட் சர்ஜரி செய்தார் நெஞ்ச தொறந்து அதில ராமனும் சீதாவும் இருப்பதைக்காட்டினார்ல! :-))
Post a Comment