Sunday, May 13, 2012

கெரில்லா மதவாதிகள்: சாந்தியும் சமாதானமும் உலாவுவதாக!




இந்த இஸ்லாமிய பதிவர்களோடு ஒரே நகைச்சுவையப்பா ...கொஞ்ச காலத்துக்கு முன்னர் சாந்தியும் சமாதானமும் என்பதை வைத்து தமிழ்மண நிர்வாகிகளில் ஒருவர் என அறியப்படும் பெயரிலி ஒரு கமெண்ட் சொல்லிட்டார்னு ஏகத்துக்கும் குதிச்சாங்க ...அப்போ சாந்தி, சமாதானம் இரண்டும் ஒரே பொருள் தர வார்த்தை ஆனால் இஸ்லாமிய முகமன்னில் ஒரு முறை தான் சாந்தி(peace) என்ற பதம் வருகிறது எனவே "நடு சென்டர் "போன்று ஏன் இரண்டு முறை தமிழில் சொல்ல வேண்டும் எனவே அப்படி தமிழ்ப்படுத்துவது சரியல்ல ,அப்படி சொல்வதை மாற்றி சொன்னால் தவறும் இல்லை அது இஸ்லாமிய முகமன்னை கிண்டல் செய்வதும் ஆகாது என நான் ஒரு பதிவே போட்டேன் ,பின்ன அரபிய மூலத்தில் இல்லாத வகையில் மொழிப்பெயர்த்துக்கொண்டு அதான் இது என சொல்லிக்கொண்டால் எப்படி? எனக்கு வேலை வெட்டியில்லைப்பாருங்க அதான் சொம்பை தூக்கிட்டு வந்து அப்படி சொன்னேன் :-))


அப்போ சில இஸ்லாமிய அறிவு சீவிக்கள் ஓடி வந்து சாந்தி வேற சமாதானம் வேற எனவே இரண்டு தடவை அழுத்தம் கொடுத்து அரபு மூலத்தினை மொழிப்பெயர்க்கிறோம் எனவே அதனை கிண்டல் எல்லாம் செய்யப்படாது தமிழ்மணம் மன்னிப்பு கேட்க வேண்டும் என சொல்லி அரபு நாட்டில் தடை கூடப்போட்டாங்க.

அப்புறம் ஒரு வழியா பேசி தீர்த்து ,அப்படி சொன்னது தனி நபரின் கருத்து அதற்கு கம்பெனி பொறுப்பாகாது அப்படியே யாருக்கேனும் மனம் புண்ப்பட்டிருந்தால் வருத்தங்கள் என டிப்ளமாட்டிக்கா ஒரு அறிக்கை விட்டு தமிழ்மணம் தண்ணீர் விட்டு அனைத்தது.

இந்த கண்றாவி எல்லாம் ஏற்கனவே தெரியுமே இப்போ என்னாத்துக்கு நீ கூவுற என கேட்பதும் தெரியுது மாமே.... மேட்டரே இனிமே தான்...

அதன் பின்னரும் ஓயாத அலைகளாய் மத வாத பிரதிவாதங்கள் ஓடிக்கொண்டே இருந்தது , அது தமிழ்மண மகுடத்தினை அபகரிக்கும் அல்லது ஆக்ரமிக்கும் வகையில் போய் பல கள்ள ஓட்டு கதாநாயகர்கள் உருவானார்கள் , இது சல சலப்பை உருவாக்கி அமைதியின்மைக்கு அழைப்பு விடுத்தது.

மதவாதிகள் கள்ள/நல்ல ஓட்டுக்களை கூட்டமாக போட்டு மகுடத்தினை ஆக்ரமிப்பதை நிறுத்த வேண்டும் என அனைவரும் சொன்னதால் தமிழ்மணம் ஆழ்நிலை தியானத்தில் இருந்து வெளிவந்து மகுடம்னு இருந்தா தானே சண்டை அதையே தூக்கி விடுகிறோம் என "சாலமன் தீர்ப்பை " சொல்லி இனிமேல் மதம் அல்லது மதம் சார்ந்த இடுகைகள் இடப்பட்டால் நீக்கப்படும் என பிரகடணம் செய்தது. சரி சண்டை சச்சரவு நீங்க ஏதோ ஒன்று செய்தாக வேண்டிய சூழலில் இவ்வளவு தான் செய்ய முடியும் என்பதை உணர்ந்து அனைவரும் ஆல் இஸ் வெல் சொல்லி அமைதியானார்கள்.

இதில் நடுநிலையாக மத மூட நம்பிக்கைகளை அலசும் விமர்சிக்கும் பதிவாளார்களும் பாதிக்கப்பட்டு ,இடுகைகள் நீக்கப்பட்டது அவர்களும் இடுக்கண் வருங்கால் நகுக என்பது போல சிரித்துக்கொண்டே "ஆல் இஸ் வெல் "சொல்லிக்கொண்டார்கள் :-))

மதம்னு லேபிளிலோ அல்லது தலைப்பிலோ மத வாசனை அடித்தால் இடுகை நீக்கப்பட்டது ஆனால் இப்போ பாருங்க தமிழ்மண நட்சத்திரப்பதிவுகளிலேயே பொதுவா விளக்கம் சொல்கிறார்ப்போல "சாந்தியும் சமாதானமும்" என ஒருத்தர் பதிவு போட்டு இருக்காங்க. அதில் நேரடியாக எந்த தூண்டிவிடும் வார்த்தைப்பிரயோகமும் இல்லாவிட்டாலும் ஒரு நுண்ணரசியல் இருக்கு , எந்த கருத்தை வைத்து பிரச்சினை கிளம்பியதோ அதையே நட்சத்திர வாரத்திலும் எழுதுவோம் என்ன செய்ய முடியும் என்ற ஒரு சவால் ஒளிந்திருக்கிறது மேலும் மதம் சார்ந்த இடுகைகள் நீக்கப்பட்டு வரும் வேளையில் இப்படி எழுதினால் என்ன செய்ய முடியும் என கேள்விக்குள்ளாக்குகிறது அப்பதிவு?

சொல்லலாம் இது இஸ்லாமிய முகமன்னை விளக்கும் பதிவுனு ஆனால் பல நாட்களுக்கு முன்னரே அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து அலசி சாறு பிழிந்து சக்கையாகி போன சமாச்சாரம் அப்போதே அனைவரும் விளக்கம் கிளக்கம் எல்லாம் கொடுத்தாச்சு இப்போ மீண்டும் விளக்கம் தேவையா? தேவையே இல்லை ஆனால் மதவாதிகளுக்கு தேவையாய் இருக்கு :-))

மேலும் இரண்டு முறை ஒரே பொருளில் உள்ள சொல்ப்பயன்ப்படுத்தப்பட்டிருக்கு அது தவறான மொழிப்பெயர்ப்பு என சொன்னதற்கு இல்லவே இல்லை என்று வாதிட்டார்கள்,ஆனால் இப்போதைய பதிவில் ஒரே பொருள் வரும் இரண்டு சொற்கள் அவைனு ஒத்துக்கிட்டு இருக்காங்க,அப்போ தவறான மொழிப்பெயர்ப்பை பயன்ப்படுத்திக்கொண்டு அதற்கு ஒரு சண்டையிட்டது ஏன்? சண்டைப்போடனும் அதற்கு ஒரு காரணம் வேண்டும் என்றா ?

இனிமேல் இப்படியான என்கிரைப்டட் மதப்பதிவுகள் மெல்ல வரத்துவங்கும் மீண்டும் குடுமி புடி சண்டை தான் :-)) ஆனால் இதுல மாட்டிக்கிட்டு அவஸ்தைப்பட்டது தேமேனு இருந்த நடு நிலையாளர்கள் தான் .சிலர் மதவாதிகளே சண்டைப்போடாதிங்கன்னு பதிவுப்போட்டதுக்கு எல்லாம் மத பதிவுனு நீக்கப்பட்டிருக்காங்க ... பாவம் சண்டைப்போட்டுக்கிறாங்களேனு சமாதானம் செய்யப்போறேன்னு போய் மூக்கு உடைப்பட்ட வடிவேலுகள் அவங்க :-))

பின் குறிப்பு:

#மதம் சார்ந்த பதிவுகள் நீக்கப்படும் என்ற நிலையில் பல நடுநிலையாளர்கள், மூட நம்பிக்கையை விமர்சிக்கும் பதிவர்கள் ஆகியோரின் இடுகைகள் கும்பலில் கோவிந்தாவாக நீக்கப்பட்டுள்ளது அனைவரும் அறிந்த ஒன்று இந்நிலையில் ,மறைமுகமாக மதம் சார்ந்து பதிவுகள் இடுவதும் அதுவும் நட்சத்திரவாரத்திலும் என்ற நிலையில் இதற்கான அளவு கோள் என்ன என அறிந்துக்கொள்ளவே இப்பதிவு.

# அஹமது (அ) முகமது கூட ஆஷிக் என்பது முன்னாலோ ,பின்னாலோ ஒட்டி இருக்கும் அவர் தான் சாந்தி வேறு சொல் சமாதானம் வேறு சொல்னு சொல்லிக்கிட்டு இருந்தார் அந்த மானஸ்தர் இப்போ என்ன சொல்கிறார் என அறிய ஆவல்!

#இது மதப்பதிவு அல்ல ஆனாலும் பெயரிலி ஏதேனும் ஆங்கில கவிதை படிப்பாரா என தெரியவில்லை :-))

*****

10 comments:

சார்வாகன் said...

சகோ வவ்வால் உங்கள்க்கு நான் ஒரு கதை சொல்லப் போகிறேன்,

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் முருங்கை மரத்தின் மேலேறி வேதாளத்தை வீழ்த்தி தோளில் சுமந்தபடியே சுடுகாட்டை நோக்கி நடக்க தொடங்கினான்.அப்போது வேதாளம் எள்ளி நகையாடியவாறே விக்கிரமா கேள்,நான் ஒரு கதை சொல்கிறேன்.அதற்கு சரியான விடை தெரிந்தும் கூறா விட்டால் உன் தலை வெடித்து சுக்கு நூறாகி விடும் என்றது.வேதாளம் கதை சொல்ல ஆரம்பித்தது.
.........

இது உங்கள் பதிவு

…………..

வேதாளத்தின் கேள்வி : மதம் சார்ந்த பதிவு தடை செய்யப்படும் என்று அறிந்தும்,ஏற்கெனவே பிரச்சினைக்கு உள்ளான சொற்றொடரை மதவாதிகள் நட்சத்திரப் பதிவிலேயே விள்க்கி பதிவு இடுவது எதை காட்டுகிறது?


விக்கிரமன்: ஙேஏஏஏஏஏஏஏஏஎ என் விழித்தான்!!!!!!!!!!!!!

டிஸ்கி:மதசார்பின்மை கொஞ்சம் கொஞ்சமாக் குறைந்து வருவது போன்ற உணர்வில் என்க்கு மட்டும்தான் இப்படி தோன்றுகிறதா என நினைத்தேன்,ஹி ஹி உங்களுக்கும் தோன்றுகிறது என்ற மன நிம்மதி.அபோது என் மத சார்பின்மை குறையாமல் அப்படியே இருக்கிறது,ஹா ஹா ஹா!!!!!

நன்றி

வவ்வால் said...

சகோ.சார்வாகன்,

அஷ்டலக்கடி கொய்யா!

வணக்கம்,நன்றி!

அட உங்களுக்கும் அதே உணர்வா? அப்போ நான் மட்டும் தனியா இல்லை! எனக்கும் இதெல்லாம் கண்டுக்காம இருப்பது மதச்சார்பின்மையா ,கண்டுகொள்வது மதச்சார்பின்மையானு அடிக்கடி குழப்புவதுண்டு, ஆனால் இன்று நட்சத்திர இடுகையிலே அப்படி ஒன்றுப்பார்க்கவும்...மற்றவர்களின் சகிப்பு தன்மையை தங்களது பலமாக சிலர் நினைக்கிறார்களோ எனத்தோன்றியது. சும்மா போறவங்களை கூட கூப்பிட்டு வச்சு வம்பு வளர்க்க ஆசைப்படுறாங்க போல.

இதற்கே நடு நிலையாக /நாத்திகராக இருப்பவர்களான கோவி, ராஜ நடராஜன், தருமி ஆகியோரது பதிவுகளும் கூட மதப்பதிவுகளின் வகையின் கீழ் நீக்கப்பட்டுள்ளது அப்படி இருக்கும் போது நட்சத்திரம் என த.ம வால் தேர்வாகி முகப்பில் வரும் பதிவில் இப்படியான பதிவு அதுவும் முன்னரே பிரச்சினைக்கு ஆளாகி ஏகப்பட்ட விளக்கம் கொடுக்கப்பட்ட சமாச்சாரம் அது.

தேவை இல்லாத சூழலில் தேவை இல்லாத விளக்கப்பதிவு அதன் உள்ளுரை நோக்கம் வேறு என்பதை வெட்ட வெளிச்சம் ஆக காட்டுகிறது.

நாம எதற்கும் கவலைப்படுவதில்லை, முத்திரைக்குத்தினால் குத்திக்கொள்ளட்டும் என நினைப்பதை எழுதுவது வழக்கம், நீங்க சொன்ன கதையில வரும் வேதாளமே கேட்கிற கேள்வி தான் பதிவே :-))

உங்க பதிவுக்கு எதுனா தடா வந்திருக்கா ? வந்தாலும் கவலை வேண்டாம் ... நமது நோக்கம் மூட நம்பிக்கைகளை சாடுவதே... தேவையானவர்கள் தேடி வந்து படிப்பாங்க...கம்பெனிக்கு என்னைப்போல ஆளுங்க இருக்காங்க!இதனால் எல்லாம் நம்ம மதச்சார்பின்மை குறைந்து விடப்போவதில்லை, டோண்ட் ஒர்ரீ ..பீ ..ஹேப்பி!

வேகநரி said...

தமிழ்மணத்தால் வழங்கபட்ட நட்சத்திர அந்தஸ்தையே பயன்படுத்தி மத பிரசாரம் செய்வது இஸ்லாமிய மதவாதியால் தமிழ்மணத்திற்கு விடப்பட்ட சவால்.

சார்வாகன் said...

சகோ வவ்வால்,

நம்க்கு எந்த தடாவும் வரவில்லை.நாம் என்ன பிரபல பதிவரா?.மதவாத பதிவர்கள் செய்யும் செய்லகளில் என்ன சாதித்ததாக நினைக்கிறார்கள் என தெரியவில்லை.நம்மால் பரிணாம் எதிர்ப்பும், மத அறிவியலும் சுதி இறைங்கியதுதான் ஒரே பலன்.

முதல் மனிதன் என மத புத்தகங்கள் கூறும் ஆதம் இப்படி கூறினார் என்றும் மத புத்தகம் கூறுகிறது.

1.முதல் மனிதன் எபோது தோன்றினான் என தெரியாது.

2.ஆனால் அரபியில் எழுதப்பட்ட மிக மிக பழைய கல்வெட்டு பொ.மு 200 என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். சரி அதுக்கு மேலே பேச்சி வழக்கில் ஒரு 2000 வருடம் வைக்க்லாம்.

அரபியின் பல் சொற்கள் அராமைக்[இயேசு அல்லது ஈசாவின் தாய்மொழி] மொழியில் இருந்து வந்தது.

ஆதம் பேசியது அரபி எனில் மனிதன் தோன்றி 7000 வருடம் ஆனது கண்க்கை நம்ப வேண்டும்.

ஆனால் இபோதுள்ள அரபியின் உள்ள பல சொற்கள் வரலாற்றை படித்தால் அனைத்துமே 6ஆம் நூற்றாண்டுக்கு பிந்தையவை.

ஆதம் எப்புடி அரபியில் அமைதி உண்டாகட்டும் என் கூறியிருப்பார்?

இப்படி எல்லாம் யோசித்து கேள்வி கேட்க கூடாது என்பதால் தான் அமைதி அமைதி என கூவுகிறார்களோ என்னும் சந்தேகம் நம்க்கு எழுகிறது.
அதன் உண்மையான் அர்த்தம் " வாயைத் திறக்காமல் அமைதியாக் இரு" என்பதுதான்" எப்படி நம் விள்க்கம்

நன்றி

naren said...

வவ்வால் சார்,
இப்போது வேலை வெட்டி இல்லாமல் இருக்கோமே, நாலு நல்ல விஷயம் தெரிஞ்சிக்கலாமுன்னு இங்கே வந்தா, விடாது கருப்புன்னு சா.ச.உ குரூப்பு தொடருது.

அவஙகதான் சாந்தியும் சமாதானதுக்கு காப்புரிமை, trade mark எல்லாம் வாங்கி வைத்திருக்கும் போது, சாந்தியும் சமாதானுமும் என்று எழுதும்போது கண்டிப்பாக (c) TM போட்டு எழுதவும், இல்லேன்னா அது தப்பு தலை போகிற விஷயம்.

வேதாளம் என்ன செஞ்சாலும் முருங்கை மரம் ஏறத்தான் செய்யும், என்ற நற்செய்தியை புரிந்து கொண்டால் அனைவருக்கும் விடுதலைதான் (டென்ஷனிலிருந்து).

mathavaathi allan said...

கட்டண சேவை பெற்று "சிந்திக்கவும்" என்பவர் இடும் மதவாத பதிவுகளையும், வாஞ்சையுடன் வெறுப்பை வளர்க்கும் ஒருவரையும் இந்த லிஸ்ட்டில் சேர்த்துக்கொளுங்கள்.

ILA (a) இளா said...

தலைப்பு நம் கொளுகைகளுக்கு அப்பாற்பட்டு இருப்பதால் எஸ்ஸாகிங் (ஆமென்)

வவ்வால் said...

வேக நரி,

வணக்கம்,நன்றி!

உங்களுக்கு புரியுது, எனக்கு புரியுது, ஆனால் புரிய வேண்டியங்களுக்கு புரியலையே ராசா!

-------

சகோ.சார்வாகன்,

வணக்கம்,மீள் வருகைக்கு நன்றி!

தடா வராத வரையில் சந்தோஷம்... வந்தா ரொம்ப சந்தோஷம்னு சொன்னாலும் சொல்லுவிங்க :-))

என்ன அப்படி சொல்லீட்டிங்க நீங்களும் பிரபல பதிவர் தாங்க... ஒரு பிரபலப்பதிவரே அதை சொன்னாருங்க(ஹி..ஹி அந்த பிரபலம் அடியேன் தானுங்க, இப்படி தான் பக்கத்து இலைக்கு பாயாசம் ஊத்தனும்)

சுதி ஏத்துறது இறக்குறது தானே நம்ம வேலையே :-))

சினிமாவில 2000 வருடத்துக்கு பிறகுன்னு சொல்லி கதை சொல்லுறாப்போலத்தான் இதுவும், எங்க ஊரு சினிமா கொட்டாய்ல ஜாக்கி சான்னே தமிழ் பேசுறார் அப்படி இருக்கும் போது ஆதாம் அரபி பேசி இருக்க மாட்டாரா எல்லாம் டப்பிங் தான் :-))

அமைதி.. அமைதினு சொல்லுறவங்க சத்தம் தான் அமைதியை கெடுக்கும் :-))

எதுவும் கேட்காமல் அடிப்பணிய தான் அந்த கதை எல்லாம்,சிந்திக்க ஆரம்பிச்சால் எல்லாம் நாத்திகன் ஆகிட மாட்டாங்களா?

------

நரேன்,

வணக்கம்,நன்றி!

ஹி..ஹி எதனை நாளுக்கு தான் நாமளும் கருத்து கந்தசாமியாவே இருக்கிறது ஒரு கமெர்சியல் பிரேக் விடுறாப்போல அப்போ அப்போ இது போல ஒரு ஆட்டம் ஆடுறதும் தேவை தானே!

காப்புரிமை யாருக்கோ ஆனால் ஆப்புரிமை நமக்கே விடாமல் ஆப்படிப்போம்ல!

நாங்கல்லாம் அந்த காலத்திலவே விக்கிரமாதித்தன் அவதாரம் எடுத்தவங்க, விடுவோமா :-))
------------
மதவாதி அல்லன்,

வாங்க,பாருங்கய்யா எப்படிலாம் பேரு வக்கிறாங்க, லிஸ்ட்ல எல்லாருக்கும் சேர்த்து தான் பொதுவா இது, தனி பந்தி கேட்டாலும் பரிமாறப்படும்!

------

இளா,

வாங்க,வணக்கம்,நன்றி!

கொள்கை குன்று நீங்க, பெரியவா எல்லாம் இப்படி கொள்கை,கொப்பரை தேங்கான்னு ஒதுங்கிடறதால தான் அல்லு சில்லு எல்லாம் அளப்பறை பண்ணுதுங்க,நமக்கு அப்படியான கட்டுப்பாடுலாம் இல்லிங்கண்ணா அதான் அப்போ அப்போ வேட்டைக்கு கிளம்பிடுறது :-))
(ச்சே என்னமோ டொக்டர் விசய் பட டயலாக் போல வருது, இனிமே கொஞ்ச நாளைக்கு டொக்டர் படம் பார்க்க கூடாது)

ராஜ நடராஜன் said...

இதெல்லாம் தமிழ்மணத்துக்குள் போக வேண்டிய பதிவு.ஒட்டவும் மாட்டேன் வெட்டவும் மாட்டேன்னு பதிவு போட்டா எந்த வடிவேலுக்கு தெரியும் இப்படியெல்லாம் உலகத்துல நடக்குது.நாலைந்து பேர் கூடி கதைக்கிறாங்கன்னு:)

இல்லாத பொழுதா நம்ம வருணோட பதிவில வேகநரிக்கு மொழி பெயர்த்தேன்.அதுக்கே மொழிபெயர்ப்பாளரின் அங்கீகாரம் கிடைத்தது மகிழ்ச்சிதான்:)

விக்கிரமாதித்தனை தெரியும்.அட நம்ம வேதாளத்தைக்கூட நினைவு இருக்குது.ஆனால் விக்கிரமன்: ஙேஏஏஏஏஏஏஏஏஎ என் விழித்தான்!!!!!!!!!!!!!ங்கிற ஞாபக சக்தியாளர்கள் கலைஞர் கருணாநிதிக்கே சவால் விடவேண்டியவர்கள்:)

வேதாளம் சும்மா அதிருதுலே சொல்லிக்கலாம் சகோ.சார்வாகன்:)

மொட்டைபையன் said...

அதான் சொம்பை தூக்கிட்டு வந்து அப்படி சொன்னேன் :-)).......கூடவே பதினெட்டு பட்டியும் வந்ததா நண்பரே...????????