Thursday, June 07, 2012

ஏற்றிய பெட்ரோல் விலையை குறைக்குமா அரசு?


(ஹி..ஹி பெட்ரோல் விலை ஏறிக்கிட்டே போனால் காருக்கு இதான் கதி)


பெட்ரோல் விலையை ரூ 7.50 ஏற்றிவிட்டு பின்னர் ரூ 2 இரண்டு குறைத்து அரசு ஆடிய நாடகத்தினை கடந்தப்பதிவில் பார்த்தோம். நடத்திய நாடகத்தினை ஒழுங்காக நடத்துகிறார்களா என்றால் அதுவும் இல்லை.

ரூபாய் மதிப்பு டாலருக்கு எதிராக சரிந்துவிட்டது என்று சொல்லி தான் விலை ஏற்றினார்கள் , கேட்பதற்கு ஏதோ லாஜிக் இருப்பது போல தோன்றினாலும் அது ஜமுக்காளத்தில் வடிக்கட்டிய பரிசுத்தமான கலப்பிடமில்லா பொய் என்பதையும் முந்தைய பதிவுகளில் விளக்கியிருந்தேன்,

அதாவது ரூபாய் மதிப்பு குறைந்து டாலர் உயர்ந்தால் அதற்கேற்றார்ப்போல கச்சா எண்ணையின் விலையும் குறைந்து விடும் என்று. இப்போது அதன் படியே 120 அமெரிக்க டாலர் இருந்த ஒரு பேரல் கச்சா(பிரெண்ட்) இப்போது சுமார் 102 அமெரிக்க டாலர் என்ற அளவில் குறைந்துவிட்டது. மேலும் குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

"LONDON (Reuters) - Oil fell towards $102 on Thursday as disappointing data from the United States and India fuelled nervousness around the global demand outlook, compounding eurozone worries and putting oil on course for its biggest monthly percentage drop in two years.
Brent crude futures for July delivery were down $1.19 at $102.28 per barrel by 10:06 a.m. EDT (1406 GMT), after hitting a new seven-month low at $102.07. Prices were on track for the biggest monthly loss since May 2010, after slipping 3 percent on Thursday."

டாலர் உயர்ந்தாலும் ,கச்சா எண்ணை விலை உயர்ந்தாலும் அதனை காரணம் காட்டி விலை ஏற்றம் செய்யும் அரசு குறையும் போதும் அதற்கேற்ப விலையை குறைக்க வேண்டாமா?

இதனை ஒரு கணக்குடன் விளக்கமாக காண்போம்,


ஒரு டாலர்= 55.10 ரூ இருந்த நிலையில்

கச்சா எண்ணை ஒரு பேரல் 120 அமெரிக்க டாலர்கள் எனில்

இந்திய ரூ வில்= 120*55.10=6612 ரூ ஆகும்.

ஒரு பேரல் கச்சா எண்ணை வாங்க 6612 ரூ ஆகிறது எனவே விலை ஏற்றினோம் என சொன்னார்கள்.

தற்போது ஒரு பேரல் கச்சா எண்ணை 102 டாலர் எனில்

இந்திய மதிப்பில்= 102*55.10=5620 ரூ மட்டுமே.

தற்போது ஒரு பேரல் கச்சா எண்ணை வாங்க 5620 ரூ மட்டுமே செலவாகும்,தற்போது கிட்டத்தட்ட 1000 ரூ கச்சா எண்ணை வாங்க ஆகும் செலவு குறைந்துள்ளது.

அப்படி எனில் அதற்கு ஏற்ப விலையைக்குறைக்க வேண்டாமா எனக்கேட்டால், டீசல்,மண்ணெண்ணை ,சமையல் எரிவாயுவினை விலைக்குறைவாக விற்கிறோம், இதனை அண்டர் ரெகவரி என்று சொல்கிறார்கள் எனவே விலையுயர்த்துகிறோம் என்கிறார்கள், ஆனால் அதற்கு தான் அரசு தனியாக மாநியம் கொடுக்கிறதே பின்னர் ஏன் விலையை உயர்த்த வேண்டும் எனக்கேட்டால் அப்பவும் சர்வதேச விலையை விட குறைவான விலையில் விற்கிறோம் என மீண்டும் அண்டர் ரெகவரி புராணமே பாடுகிறார்கள்.

அண்டர் ரெகவரி:

பொது சந்தையில் விலை அதிகம் கொடுத்து வாங்கிய பொருளை குறைவான விலைக்கு விற்பது. இதன் மூலம் வாங்க செலவிட்ட தொகையினை மறு விற்பனையின் மூலம் பெற முடியாது என்பதே அண்டர் ரெகவரி என சொல்லப்படுகிறது.

மக்களுக்கு சில அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க வேண்டும் என்றே இப்படி செய்ய அரசு சொல்லும், ஏற்படும் இழப்பினை அரசின் பொது நிதியில் இருந்து கொடுத்து சரிக்கட்டிவிடும், இதுவே மானியம் எனப்படுகிறது.

கடந்த ஆண்டு மட்டும் அரசு பெட்ரோலிய துறை மாநியமாக சுமார் 1,38,000 கோடிகள் கொடுத்திருக்கு.

அப்படியும் நஷ்டம் , அண்டர் ரெகவரி ஆகிறது எனப்பஞ்சப்பாட்டுப்பாடி விலையை ஏற்றவே செய்கிறார்கள் எண்ணை நிறுவனங்கள் ,உண்மையில் அண்டர் ரெகவரி ஆகிறதா எனப்பார்ப்போம்.

டீசல் சர்வதேச விலையை விட குறைவாக விற்கிறோம் என்கிறார்கள், எனவே டீசல் விலையில் ஏற்படும் இழப்பை பெட்ரோ விலையில் ஈடுகட்டுவதாகவும், எனவே பெட்ரோல் விலையை அதனால் ஏற்றுவதாகவும் அபாரமாக கணக்கு சொல்லுகிறார்கள் ,அப்படி எனில் அமெரிக்காவில் ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் ஒரு லிட்டர் டீசல் என வாங்கினால் ஆகும் செலவை விட இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் வாங்க குறைவாக செலவாகிறதா, இல்லை கூடுதலாக ஆகிறதா, மானியம் தேவையான என ஒரு விலை ஒப்பீடு செய்து பார்ப்போம்.

அமெரிக்காவில் கேலனில் சொல்லப்பட்ட விலையை ஒரு லிட்டருக்கு என மாற்றப்பட்டுள்ளது, விலை அனைத்தும் பெட்ரோல் பங்க் விலை,அனைத்துவரிகள் உட்பட.

ஒரு கேலன்=3.78 லிட்டர், ஒரு டாலர்= 55.10 ரூ

அமெரிக்கா:

ஒரு லிட்டர் பெட்ரோல்= 0.95 டாலர்=52.26 ரூ

ஒரு லிட்டர் டீசல்=1.016 டாலர்க்ள்= 55.89ரூ
---------------
108.15 ரூபாய்.
----------------
america fuel price:


இந்தியாவில்,

ஒரு லிட்டர் பெட்ரோல்=74.40 ரூ

ஒரு லிட்டர் டீசல் == 43.95 ரூ
------------
118.35 ரூபாய்
-------------
chennai fuel price:


அமெரிக்காவில் மொத்தம் 108.15 ரூ விலைப்போகும் ஒன்றை இந்தியாவில் 118.35 ரூ என சுமார் 10 ரூ கூடுதல் விலை வைத்து விற்றுவிட்டு சர்வதேச விலையை விட குறைவாக விற்பதால் அண்டர் ரெகவரி ஆகிறது என்று எப்படி சொல்ல முடிகிறது இவர்களால்?

சொல்லப்போனால் உண்மையில் இதனை ஓவர் ரெகவரி என தான் சொல்ல வேண்டும்.

இப்போது உள்ள விலையை விட ரூ பத்து குறைவாகவே பெட்ரோலை விற்கலாம், அண்டர் ரெகவரி ஆக வாய்ப்பே இல்லை.அப்படி இருக்கும் போது ஏன் பல ஆயிரம் கோடி மானியம்? எல்லாம் அரசின் நிதியை கள்ளக்கணக்கு காட்டி சுருட்ட தான்.

மாநியமாக கொடுக்கும் பணத்திற்கு பதிலாக வரி விகிதத்தினை குறைத்துவிட்டாலே பெட்ரோலிய பொருட்களின் விலை குறைந்து விடும், ஆனால் அப்படி செய்யாமல் வரியை அதிகமாக விதித்து மக்களிடம் கூடுதல் தொகை வசூலித்துவிட்டு பின்னர் ,விலையை குறைக்க மானியம் என்று சொல்வதேன்?

அதில் தான் அரசியலும், வணிகமும் கலந்திருக்கு. மக்களிடம் போய் சேர்ந்துவிட்டால் எப்படி கள்ளக்கணக்கில் சுரண்ட முடியும் அரசியல்வாதிகளால்,எனவே ஒரு சில பொது துறை நிறுவனங்களுக்கு மானியம் என சொல்லிவிட்டு ,அங்கு செல்லும் பணத்தில் அரசியல்வாதிகள் ஆதாயம் அடைகிறார்கள்.

இதன் மூலம் பொதுத்துறை நிறுவனங்கள் மக்கள் நலனுக்காக என்ற சித்தாந்தமே சிதைக்கப்படுகிறது.


எண்ணை சுத்திகரிப்பு ஆலை

எப்படி சுருட்டுவார்கள் எனில் எண்ணை நிறுவனங்களின் காண்டிராக்ட் பெரும்பாலும் அரசியல் பினாமிகளே செய்வார்கள், மேலும் எண்ணை கொண்டு செல்லும் டேங்கர்களும் அரசியல் பினாமிகளின் வசமே எனவே அவற்றின் மூலம் எண்ணை நிறுவங்களுக்கு கொடுக்கும் பணத்தில் பங்கு அரசியல்வாதிகளின் பாக்கெட்டுக்கு வந்துவிடும்.

மேலும் பெறப்படும் பல ஆயிரம் கோடி மானியம் கூடவே விற்பனையில் லாபம் வேறு , அதனை முறையாக செலவிடாமல் வீண் ஆடம்பர செலவுகளிலேயே எண்ணை நிறுவனங்கள் செலவிடுகின்றன.

அவை என்னவெனில்,

#ஊழியர்களுக்கு ஆறு மாசத்திற்கு ஒரு முறை ஊக்கத்தொகை, அதிக சம்பள உயர்வு.

#தேவைக்கும் மேல் அதிக ஊழியர்கள்

#உயர் அதிகாரிகளின் ஆடம்பர பயணங்கள், நட்சத்திர விடுதி கொண்டாட்டங்கள்.

#பங்கு தாரர்களுக்கு அதிக டிவிடெண்ட் அளித்து தாரளமாக இருப்பது. 100 கோடிமக்களிடம் தினசரி பிடுங்கி சில லட்சம் பங்கு சந்தை முதலீட்டாளர்களுக்கு லாபமாக பகிரப்படுகிறது.

#டாஸ்மாக் போல பெட்ரோல்,டீசல் போன்றவை விளம்பரம் இல்லாமலே விற்பனையாகும் ஒன்றாகும் ஆனால் அதற்கும் பல கோடிகளில் விளம்பரம் செய்வது, தோனி,சேவாக் போன்ற கிரிக்கெட்டர்களூக்கு பல கோடி கொடுத்து பிராண்ட் அம்பாசடர்களாக நியமிப்பது என பல ஆடம்பரங்களில் பணத்தினை விரயம் செய்வது.

ஒவ்வொரு சாமானிய இந்திய குடிமகனின் வருமானத்தினை நோகாமல் அண்டர்வேரோடு உருவிக்கொண்டு, அண்டர் ரெகவரி, நஷ்டம் என ஊளையிடுகின்றன ஊதிப்பெருத்த எண்ணை நிறுவனங்கள், இவை பொது துறை நிறுவனமாம், அதற்கு ஜனநாயக அமைப்பில் உருவான அரசாங்கம் தான் காவலனாம் , ஆனால் மக்களுக்கு யாரு காவலன் என ஒருத்தரும் சொல்ல மாட்டார்கள் :-))

நல்லா இருக்குய்யா மன்னு மோகனின் புதிய பொருளாதார கொள்கையும், அன்னை சோனியாவின் சனநாயக கடமையும் :-))

இதை எல்லாம் பார்க்கும் போது கண்டிப்பாக இந்தியா வல்லரசாகிடும் என்ற நம்பிக்கை எனக்கு வந்திடுச்சு ஏன்னா எதையும் தாங்கும் சக்தியுள்ள மக்கள் இருக்க நாடு தானே வல்லரசாக முடியும்!

--------
பின் குறிப்பு:

தகவல், படங்கள் உதவி,

எக்கனாமிக்ஸ் டைம்ஸ், reuters&msnbc,,eia, google நன்றி!
*****

24 comments:

Anonymous said...

வவ்வால் FYI...

http://peakoil.com/production/india-land-of-energy-opportunity/ ...

பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்...

நல்ல அலசல்..

வவ்வால் said...

ரெவரி,

வாங்க,நன்றி!

பீக் ஆயில் கிரைசிஸ் முன்னரே பார்த்தது என்றாலும் ,மோகன்குமார் பதிவில் சொன்னப்போதே மீண்டும் பார்த்தேன்.

இப்போது ஏற்படும் விலையேற்றத்திற்கு அது ஒரு காரணம் அல்ல. ஆனால் வ்ருங்காலத்தில் எண்ணைவளம் வற்றிவிடும் என்பதனை கணக்கிட உதவும்.

பி.பி ஆயிலின் வருடாந்திர எனர்ஜி ஆய்வு ரிப்போர்ட் பார்த்தீர்களா, அதில் எந்த நாட்டில் இன்னும் எத்தனைக்காலம் எண்ணை இருக்கும் என்று எல்லாம் விவரம் கொடுத்துள்ளார்கள்.

பொதுவாக இன்னும் 70 ஆண்டுகளில் இலகுரக கச்சா காணாமல் போய்விடும் பின்னர் மட்டமான ஷேல் வகையில் காய்ச்ச வேண்டும், எப்படியிருந்தாலும் எண்ணைக்கு எதிர்காலம் இல்லை.

அமெரிக்க விலையை ஒப்பிடுகையில் இங்கு அதிகமே ,காரணம் அதிக வரி அவ்வளவே.மற்றபடி இந்திய எண்ணை நிறுவனங்கள் சொல்வதெல்லாம் கப்சா தான்.

வாய்ப்பு இருப்பின் தொடரும் பதிவுகளில் அலசலாம் என இருக்கிறேன்.

கோவி said...

புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்..

ILA (a) இளா said...

அமெரிக்காவுல விலை கம்மியாகும், அதிகமாகும். ரெண்டும் உண்டு. நம்மூர்ல குறைஞ்சதா சரித்திரமே இல்லையே, ஏன்?

வவ்வால் said...

கோவி,

வாங்க,நன்றி!

ஹி..ஹி நீங்க உண்மையில கோவமா சொல்றிங்களா ,இல்லை நான் பொலம்புறேன்னு கலாய்க்க சொல்றிங்களா?

எனக்கு மட்டும் அதற்கான அதிகாரம் இருந்தா தூக்கு தண்டனையே கொடுப்பேன்.

-----

வாங்க இளா,

நன்றி!

அறச்சீற்றம் தணிந்ததா!

உங்க ஏன்? தான் என்னோட கேள்வியும்.

சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப விலை நிர்ணயம்னு சொல்லிக்கிட்டு ஏற்ற மட்டுமே செய்யுறாங்க ,விலையை இறக்க மாட்டேன்கிறாங்க, இன்றைய நிலைக்கு 10 ரூ ஆவது குறைக்க வாய்ப்பு இருக்கு.

அமெரிக்கா முதலாளித்து தேசம் என்றாலும் நுகர்வோர் ,குடிமக்கள் நலனில் அக்கரையோட தான் இருக்கு. அதோட நாட்டாமை எல்லாம் சர்வதேச நாடுகளோட தான்.(அதுவும் எண்ணைக்காக)

நீங்க எல்லாம் சர்வதேச நிலவரத்தை நேராப்பார்க்குறவங்க இதை எல்லாம் நம்ம மக்களுக்கு சொல்ல வேண்டாமா? இல்லை எனக்கு துப்பு கொடுங்க ,நான் கச்சேரி வைக்குறேன் :-))

இதுல என்னக்கொடுமைனா நம்ம அமைச்சர்களும்,அதிகாரிகளும் இது காலத்தின் கட்டாயம் நாங்க இதை செய்வதை தவிர வேற வழி இல்லை என்பது போல கரிசனமா பேசுறாங்க டீ.வில ,அப்படியே காரித்துப்பணும் போல இருக்கும் :-))

bandhu said...

நீங்கள் சொன்ன விஷயத்தில் ஒரு சிறு துளியை நான் நேற்று பதிவாக எழுதியிருந்தேன். நீங்கள் எழுதியதை படித்தவுடன் வெட்கமாக இருக்கிறது. நன்றாக விளக்கமாக எழுதியிருக்கிறீர்கள்.

ராஜ நடராஜன் said...

புது டெக்னிக்கை கைவிடற மாதிரியான ஐடியா இப்போதைக்கு இல்லையாக்கும்!

இம்மா பெரிய பதிவு போடுறவருக்கு ஏன் என்ற இளா வின் கேள்விக்கு பதில் தெரியலையாக்கும்?எங்கே மூளையைக் கொஞ்சம் கசக்குங்க.கழுதை கெட்டா வவ்வால் சுவரு:)நான் மறுபடியும் வாரேன்.

தி.தமிழ் இளங்கோ said...

மறைந்த சபாநாயகர் காளிமுத்து பாணியில் சொல்ல வேண்டுமென்றால் கருவாடு மீனாகாது ஏறிய பெட்ரோல் விலை மீண்டும் இறங்காது.

வவ்வால் said...

பந்து,

வாங்க,நன்றி!,

உங்கப்பதிவையும் பார்த்தேன், நீங்கள் ஒப்பிட்டுள்ள மற்ற நாடுகளின் விலை, வரி விகிதம் எல்லாம் ஒப்பிட்டு முன்னரே "பெட்ரோல் விலை ரகசியம்" என்றப்பதிவில் சொல்லியாச்சு, தொடர்ந்து பல பதிவுகளிலும் அப்போதைய நிலாவரங்களியே பேசிவருவதால் , மீண்டும் குறிப்பிடவில்லை.

வெட்கப்படுகிற மாதிரி நான் என்ன முருங்கைகாய் சமாச்சாரமா சொல்லிட்டேன் :-))

வெட்கப்பட வேண்டியது அரசியல்வியாதிகள் தான், நாட்டு மக்களை ஏமாத்துறவங்களே ,தெம்பா பேட்டிக்கொடுத்துக்கிட்டு திரியறாங்க!

---------

ராஜ்,

அழகை ஆராதிக்கணும் ஓய்,!

முதலில் கண்ணை கசக்கிவிட்டு திறந்து படிங்க, ஏனுக்கு அப்புறம் எப்படியும் இருக்கு!

ஏன் என்ற கேள்வி கேட்காத மனிதர் இங்கில்லை...

பதிவைப்படிக்காமலே பின்னூட்டம் போடுறவங்க கண்ணுல மொளகாப்பொடிய தூவணும் :-))

------

இளங்கோ சார்,

வாங்க,நன்றி!

காளிமுத்து சொன்னதுலாம் நியாபகம் வச்சு இருக்கிங்களே ,பலே,பலே!, "உதிர்ந்த முடி ஒட்டாது,கறந்த பால் மடி புகாது,கருவாடு மீன் ஆகாது" என்று சொல்லிட்டு மீண்டும் ஜெ விடம் ஒட்டிக்கொண்டார் :-))

அப்போது உதிர்ந்த முடி ஒட்டிக்கொண்டதுனு கூட கிண்டலா செய்திப்போட்டன பத்திரிக்கைகள்.

நானும் ரொம்ப நாளா இதை எதாவது பதிவில பயன்ப்படுத்தணும் நினைப்பேன்,ஆனால் மறந்துடுவேன்,நீங்க மறக்காம பின்னூட்டத்தில பயன்ப்படுத்திட்டிங்க :-))

நம்ம அரசியல்வாதிகள் முழுசா கருவாட்டை மீன் ஆக்காமல் 2 ரூ மட்டும் குறைச்சு வாலை மட்டும் மீன் ஆக்கிட்டாங்க!

சௌந்தர் said...

அன்பின் வவ்வால்,

தங்களின் இந்தப் பதிவினை எங்களது கழுகு தளத்தில் பகிர விரும்புகிறோம் தங்கள் பெயரோடு. விருப்பமிருப்பின் தங்கள் அனுமதியை இந்த கருத்து படிமத்திலோ அல்லது எங்களது கழுகு மின்னஞ்சல் முகவரிக்கோ தெரிவிக்கும். ( kazhuku@gmail.com )

நன்றிகள்!!!!

வவ்வால் said...

சவுந்தர்,

வருகைக்கும் ,கருத்திற்கும் நன்றி!

எனது பதிவின் வலப்புற அடியில்" திற மூல தமிழ்ப்பதிவுகள்" என்றே போட்டு வைத்திருக்கிறேன், யார் வேண்டுமானாலும் பயன்ப்படுத்திக்கொள்ளலாம் என்றே அவ்வாறு போட்டுள்ளேன்.

எனவே நீங்கள் தாரளமாக பகிரலாம், கேட்காமல் செய்தாலும் நான் ஒன்றும் சொல்லப்போவதில்லை. அப்படி பகிரும் போது நம்ம பதிவுனு சுட்டினால் ஒரு சந்தோஷம் இல்லைனாலும் வருத்தமில்லை என நினைப்பவன்.

இந்தப்பதிவு என்றில்லை எந்தப்பதிவு தேவைப்பட்டாலும் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.

நன்றி!

சௌந்தர் said...

ரொம்ப நன்றி... எங்களுக்கு தேவையான பதிவை பயன்ப்படுத்தி கொள்கிறோம் நண்பா...

என் மின்ஞ்சல் முகவரி soundarapandian1987@gmail.com

தொடர்புகொள்ளுங்க :)

ராஜ நடராஜன் said...

என்னாது!பதிவை படிக்கலையா?ரோபோ ஸ்டைலில் இந்த பதிவை படிக்க எம்மா நேரமெடுக்குமின்னு நினைக்கிறீங்க?சரி!இளாவின் கேள்விக்கு அப்படித்தான் என்ன மொளகா பொடி தூவி வெச்சிருக்கீங்கன்னு மறுபடியும் பார்த்துட்டுப் போச்சு.

நான் வந்த வேலையை விட்டுட்டு உங்களுக்கு பதில் சொல்லிகிட்டிருக்கேனே!நீங்க கீழ்பாக்கத்திலேதானே இருக்கீங்க:)அட!சென்னையில்தானே இருக்கீங்கன்னு கேட்க வந்தேன்.இன்றைக்கு ஹிந்து பத்திரிகையைப் பற்றி மேயும் போது மெட்ரோ ரயில்வுக்கு பாதாள சுரங்கம் தோண்டுவதா படித்தேன்.படித்ததோடு வந்திருந்தால் பிரச்சினையில்லை.இதோ இவர்கள்தான் சீனர்கள் என்று ஒரு படம் வேறு போட்டுக்காட்டிட்டாங்க.நாம பார்க்காத சீனாக்காரனான்னு சுரங்கத்தை உற்றுப் பார்த்தா சதுரமா சுவரு கட்டி விமான எஞ்சினை நட்ட நடுவுல வச்சிருக்கிற மாதிரி தெரியுது.இந்த மெஷினை வச்சு எப்படி குடையுறாஙகன்னு தெரியலையே!ஒரு வீட்டு மெஷினுக்கே எங்கெங்கோயோ தேடிப்புடிச்சு இந்த துவைப்பான் இப்படித்தான் துவைக்கும்ன்னு விளக்கவுரை எழுதுற நீங்க ஒரு நாட்டுக்கே பயன்படும் மெஷினைப் பத்தி அப்ப எவ்வளவு அக்கறை கொள்ள வேண்டும்ங்கிற ஞானோதயத்தில் இந்த சுட்டியை தருகிறேன்.

http://www.thehindu.com/news/cities/chennai/article3502044.ece?homepage=true

முடிஞ்சா கீழ்ப்பாக்கமோ,நேரு பூங்கா பக்கம் ஒரு ரவுண்டு போய்ட்டு வந்து சீனாக்காரன்கிட்டயும் கொஞ்சம் கதைத்து விட்டு வந்து பதிவு போடுறீங்க.போட்டீங்கன்னா வரும் காலத்தில் மெட்ரோவுல போற ஆளுக பாரு!அப்பவே நம்மாளுக எவ்வளவு பொறுப்பா இது பற்றியெல்லாம் சொல்லி வெச்சிருக்காங்கன்னு உங்களை பாராட்டுவாங்க.

கழுகு தளமெல்லாம் கூட உங்களை மேய ஆரம்பிச்சாட்டாங்களா!பரவாயில்லையே!

ராஜ நடராஜன் said...

ஊர்ல யாரு ஒப்பாரி வைத்தாலும் நமக்குத்தான் அரபி ஷேக்குகள் ஒரே விலையில் நிரந்தரமாக பெட்ரோல் கொடுக்கிறார்களே என்ற நினைப்பில் பதிவை தினமும் கண்ணுக்கு விளக்கெண்ணை விடுற நான் இன்றைக்கு எண்ணை ஊற்றாமலே மீண்டும் படித்தேன்:)நீங்க சொல்றது அமெரிக்காவுக்கும் ,இந்திய சந்தைக்குமான ஒப்பீடு.இளா கேட்டதுக்கு நான் கேட்டது உலக சந்தையில் பெட்ரோல் விலை குறைந்தாலும் நம்மாளுக ஏன் விலையைக் குறைப்பதில்லையென்பது.கம்யூனிஸ்ட்டுகள்,இன்னும் பல அரசு தணிக்கை குழுக்கைகளையெல்லாம் குல்லா போட்டு விட்டா தனியார் நிறுவனங்கள் அரசு நிறுவனத்தோடு சேர்ந்து விலையை ஏற்றி விடுகிறார்கள்?அப்படியே உங்கள் வாதப்படி வைத்துக்கொண்டாலும் அதனை புள்ளி விபர கணக்குப்படி ஊழலை வெளிக்கொண்டு வருவது ஊடகங்கள்,சமூக ஆர்வலர்களின் கடமையல்லவா?பொத்தாம் பொதுவில் இப்படியிருக்க கூடுமென்ற ஒப்பீடு செல்லாது!செல்லாது.சுப்ரமணி சுவாமியே எங்கெங்கோ ஆவணங்களை சுட்டு ஆதாரம் கொண்டு வந்தாலும் கூட ப.சி சுபரமணிய சுவாமிக்கும் பெப்பே இந்திய மக்களுக்கும் பெப்பேங்கிறார்.

வவ்வால் said...

சவுந்தர்,

நன்றி தோழரே.

-------

ராஜ்,

வாங்க, எதாவது ஹலால் பீர் குடிச்சிங்களோ? இல்லை மோந்து கீந்து பார்த்துட்டிங்களோ?

இப்போ மெட்ரோவை பார்த்துட்டு அப்புறமா அதுக்கு வரேன்.

அது என்ன மாயமோ தெரியலை நான் எந்த ஊருக்கு போரேன்னோ அங்கெல்லாம் மெட்ரோ வேலை நடக்குது டிராபிக் ஜாம் ஆகிடுது.

பெங்களூருவில் இருந்த போதும் இதே கூத்து தான், ஏகப்பட்ட ஒன்வே, டிராபிக் ஜாம் என காய்ச்சினாங்க, இப்போ வேலை முடிஞ்சு மெட்ரோ ஓடுது ஆனால் நான் இங்கே.

இந்த நிலத்தடி துளைப்பானை பெங்களூருவிலே பார்த்து இருக்கேன், சுரங்கத்துல இருந்துச்சு .சேட்டிலைட் பேருந்து நிலையம் அருகே வேலை நடக்கும் போது நல்லா பார்க்க முயற்சி செய்தேன் தொறத்திவிட்டுடாங்க.

டெல்லிக்கு போயிருந்த போது ,அன்னைக்குனு பார்த்து நோய்டா போற வழியில் மெட்ரோ கர்டர் விழுந்து ரோடு குளோஸ் ஆகி பல மணி நேரம் டிராபிக்ல நின்னேன்.

இப்போ நீங்க வந்து சென்னை நிலவரம் பார்த்து பதிவ போட சொல்றிங்க. இங்கே மெட்ரோவால செம டிராபிக் ஜாம் ஆகுது.

அண்ணாசாலையே ஒரு வழிப்பாதை ஆகிடுச்சு , அப்புறம் பூந்த மல்லி சாலை, நூறடி சாலை எல்லாம் காலை, மாலையில் மூச்சு முட்ட வைக்குது.

இந்த துளைப்பானை பற்றி நிறைய பேசியிருக்கோம் சாட்டில் என்பதால் என்னமோ பழைய சமாச்சாரம் என்பது போல இது கவனத்தில் வரவே இல்லை.

சீனர்களை ஏன் அழைத்து வந்தார்கள் என்றால் விலை மலிவு என்பது ஒன்று இன்னொன்று அவர்கள் புதிய யுத்தியினை பயன்ப்படுத்தி பீஜிங்கில் மெட்ரோ போட்டுள்ளார்கள்.

சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் டிஸ்கவரி சேனலில் விலாவரியாக காட்டினார்கள். வழக்கமாக சாலை நடுவே தான் டன்னல் போடூவார்கள்.சீனர்கள் ரிஸ்க் எடுத்து பழங்கால அரண்மனையின் அடியிலும் டன்னல் போட்டு இருக்கிறார்கள்.அதிர்வில் அரண்மனை பாதிப்பு அடையாத வகையில் துளைப்பானிலும் மாற்றங்கள் செய்தார்களாம்.

ஒரு வேளை சென்னையிலும் கட்டிடங்கள் அடியிலும் டன்னல் அமைக்க போகிறார்களோ என்னமோ.

பதிவு போடலாம்னு பார்த்தா இங்கேயே எல்லாம் சொல்லிடுவேன் போல.

பெட்ரோல் கதைய அடுத்து வச்சுகிறேன்.

வவ்வால் said...

ராஜ்,

மொளகா பொடி மட்டும் போடலாம்னு பார்த்தேன் மூக்குப்பொடியும் சேர்த்து போடணும் போல இருக்கே.

//அரசு தணிக்கை குழுக்கைகளையெல்லாம் குல்லா போட்டு விட்டா தனியார் நிறுவனங்கள் அரசு நிறுவனத்தோடு சேர்ந்து விலையை ஏற்றி விடுகிறார்கள்?//

இதனை போன பதிவில் சொல்லியாச்சு. கைக்கடிகாரம் கட்டிய காரிகையை மட்டும் பார்த்துட்டு கேள்வி வேற?அப்புறம் சர்வதேச விலை வித்தியாசம் எல்லாம் ஒப்பிட்டு பதிவு போட்டே ஆறுமாசம் ஆச்சு.

ஷார்ட்டெர்ம் மெமரி லாஸ் போல எதாவது வந்துடுச்சா?

அப்புறம் அமெரிக்கா உலகில் அதிகம் பெட்ரோல் பயன்ப்படுத்தும் நாடு(உற்பத்தியும் கூட)மேலும் நியுயார்க் ஸ்டாக் எக்ஸ்சேஞ் தான் கச்சா எண்ணையின் விலையை உலக அளவிலேயே தீர்மானிக்குது. அங்கே என்ன மாற்றம் நடந்தாலும் ,லண்டன், சிங்கப்பூர் என எங்கும் எதிரொலிக்கும்.

எனவே அமெரிக்காவினை ஒரு பெஞ்ச் மார்க் ஆக எடுத்து ஒப்பிட்டேன்.மேலும் பலப்பதிவுகளிலும் ,பின்னூட்டத்திலும் பேசப்பட்டாச்சு, எதையுமே அப்போ படிக்காம எப்படி முழ நீள பின்னூட்டம் போடுறிங்க?

இதுக்கும் மேல என்ன சொல்லவிலை ,புரியவில்லை. இதுவே புரியவில்லை உங்களுக்கு அப்புறம் இன்னும் விரிவா சொன்னா மட்டும் புரிஞ்சிடுமா?

ராஜ நடராஜன் said...

உங்களுக்கென்ன ஊரு ஊருக்கு சுத்திகிட்டு சரக்கு ஏத்துறீங்க!நான் பதிவை சொன்னேன்.இங்கே டி.வி பார்த்துட்டு ஏதாவது சொன்னா அதுக்கும் பிளிருறீங்க.சரின்னு பேப்பர் மேஞ்சுட்டு ஏதாவது சொன்னாலும் மூக்குப்பொடி போடறீங்க.ஹலால் பீரா?அப்படின்னா...நம்ம சகோ.சு.பி எப்பயாவது குடிக்கிறேன்னு சொன்னாரே அதுவா?அதைக் குடிக்கிறதுக்கு பதிலா நான் பைப்பு தண்ணியை குடிச்சிட்டுப் போறேன்.நான் குடிக்கறதுக்கு ஒரு பார்முலா நானே கண்டு புடிச்சு வச்சிருக்கிறேன்.ஒரு வேளை உங்களுக்கும் கூட பயன்படக்கூடும்.என்னன்னா நம்மூர் லவங்கப்பட்டை,ரோஜா...ரோஜா...ரோஸ் வாட்டர்,அதுவே வடநாட்டுல தாடி வச்சிட்டு விற்கிறாங்களே டபூர்...டபூர் சிரப்பு,நம்மூர்ல திருவிழாவில் ரங்கராட்டினம் ஒரு பக்கம் சுத்தும் போது இன்னொரு பக்கம் ஒரு வண்டியை வெச்சுட்டு சர்பத் போடுவாரே...சர்பத் விதை இது வெள்ளையாக ஒன்றும் கருப்பா ஒன்றும் இரண்டையும் நீரில் கலக்கி ஊற வச்சிடனும்.அப்புறம் நம்மூர்ல வீட்டுக்கு முன்னாடி துளசி செடியை வளர்த்து பெண்கள் சுத்தி சுத்தி வருவாங்களே அந்த துளசி இலையை இங்கே தைம் வாட்டர்ன்னு சொல்லி விற்கிறாங்க.இதையெல்லாம் ஒரு தேக்கரண்டி விதமா கலந்து அந்த டபூர் ரோஸ் சர்க்கரைப்பாகு மட்டும் இரண்டு தேக்கரண்டி கலந்து நம்ம சகோ.சு.பி சொல்லும் பாலாறு மெய்யாலுமே சவுதில பாலா ஓடுது.ஆனால் அதை அவர் மதத்துக்குள் கொண்டு போய் குளப்பி விட்டுட்டார்.அந்த சவுதி அல்மராய் பால் இல்லைன்னா பிளாக்பெர்ரில விம்டோன்னு ஒரு சர்பத் விக்குது.இதையெல்லாம் கலந்துதான் குழந்தைகள் உட்பட அனைவரும் வீட்டில் பருகுகிறோம்.பார்முலா பேடண்ட் ரைட்ஸ் நானேதான்.

நான் கேட்டது சீனாக்காரன் விமான எஞ்சின் மாதிரி ஒன்றை வச்சுகிட்டு ஏதோ கான்கிரீட் ரூம்க்குள்ள நிற்கிறார்களே மண்ணை எப்படி எடுக்குறார்கள்.எப்படி எடுத்த இடத்துக்கு கான்கிரீட் பூசுகிறார்கள் என்பதே.தெரியாதை கேட்டா நல்லபுள்ளய இது இது இப்படிப்பா...அது அது அப்படிப்பான்னு சொல்லிக்கொடுக்கனும் அதை விட்டுப்புட்டு நம்மூர் மோடி மஸ்தான் வேலையைக் காட்டுறீங்களே.எனக்கும் சிரிப்பான் போட்டு போட்டு அலுத்துப்போச்சு.இனிமேல் ராவா அடிக்கலாம்.

படிக்காம எப்படிங்க முழுநீள பின்னூட்டம் போட முடியும்?யப்பா யாராவது இந்தப்பக்கம் பின்னூட்டம் பார்க்க வந்தா நீங்களே நியாயத்தை சொல்லுங்க.

ராஜ நடராஜன் said...

உங்களுக்கு ஒரு பின்னூட்டம் போட்டுகிட்டே யூரோ 2012 கால்பந்தாட்டம் யாராவது லைவ்வா காட்டுறாங்களான்னு ஸ்கேன் செய்தேன்.அதுல பேஷன் டிவியும் வந்ததும் உடனே நீங்க போட்ட கடிகார காரிகை நினைப்பு வந்துடுச்சு.இங்கே குதிச்சு குதிச்சு ஓடுறதுகளைப் பார்க்கவே நமக்கு நேரமில்லை.நீங்க என்ன்னனா ஒட்ட வச்ச போஸ்டரை வச்சுகிட்டு பிலிம் காட்டுறீங்க!

நான் யாராவது யூரோ 2012 காட்டுறாங்களான்னு பார்த்துட்டு பிறகு வாரேன்.

வவ்வால் said...

ராஜ்,

யேயப்பா ஏதோ முடிவோட தான் சுத்துறிங்கனு தெரியுது, உங்களுக்கு பதிவ போட்டுட்டுடு மீண்டும் எந்த பாராவில் என்ன சொல்லி இருக்குன்னு விளக்கி சொல்லணும் போல இருக்கு. இதுல பஞ்சாயத்துக்கு ஆள் வேற தேடுறிங்க :-))

உங்க பின்னூட்டமே மத்தவங்களுக்கு புரிவதில்லை நேற்று கூட பதிவ திருடுறாங்கன்னு வருத்தப்பட்டவங்க பதிவுல ஒருத்தங்களுக்கு நீங்க என்ன சொல்லவரிங்கன்னு விளக்கிட்டு வந்தேன்.

//பதிவு போடலாம்னு பார்த்தா இங்கேயே எல்லாம் சொல்லிடுவேன் போல.//
இப்படி சொன்னா பதிவு போடறதா சொல்வதாக அர்த்தம்.பதிவா போடுறதுனு சொல்லிட்டேன்ல அப்புறம் என்ன மோடி, கட்காரின்னு பொலம்பிக்கிட்டு.

டிஸ்கவரி சேனல்ல போட்ட நிகழ்ச்சியோட காணொளி தேடணும் அதைப்பார்த்தாலே பாதி புரிஞ்சிடும்.மீதிய நான் புரிய/குழப்பி வைக்கிறேன்!

ஒட்ட வச்ச ஒரு கடிகார காரிகையைப்பார்த்ததுக்கே இந்த கொழப்பு கொழப்புறிங்க நேரா துள்ளூர,துடிக்கிற காரிகையை தொ.காவில பார்த்தா என்ன செய்வீங்களோ :-))

நீங்க சொன்ன கலவையில சர்பத் போல எல்லாம் சென்னையில் திருவல்லிக்கேணி பகுதில எல்லாம் முன்னர் கிடைக்கும்.ஜல்ஜீரா சோடா, ஜிகிர் தண்டா, ஃப்ருட் மிக்சர்னு. சவ்கார் பேட்லவும் இது போல கடைகள் உண்டு.

அந்த விதைகள் வெள்ளரி, மற்றும் முலாம்பழ விதைகள்னு சொல்வாங்க. கூட ஜவ்வரிசிலாம் போட்டு ஒருவகையான ஷர்பத் விக்குறாங்க. ஆரஞ்ச்,பச்சை, ரோஸ்னு பல வண்ணங்களில் விற்பாங்க.இப்போ அது போன்ற கடைகள் பல காணாமல் போயிடுச்சு, எல்லாம் உங்க ஏழு அப்பு, கோலா கம்பெனிகளின் படை எடுப்பு தான் காரணம்.

இப்போ ஜிகிர் தண்டா கிடைக்குமானு தேடி தேடிப்பார்க்கிறேன் காணோம். எங்கேனும் மூலையில் சில கடைகள் இருக்கலாம். கண்டுப்பிடிக்கணும்.

ராஜ நடராஜன் said...

யப்பே!பின்னூட்டம் படிக்கிற அளவுக்கு யாருக்கும் நேரமில்லைன்னு சொல்லுங்க.ஏற்றுக்கொள்கிறேன்.பதிவு திருட்டு பத்தி சொன்னதே புரியலைன்னா நான் என்ன செய்ய முடியும்.இத்தனைக்கும் பதிவை திருடாதபடிக்கு காப்பி ஆத்த முடியாதபடி வழிகள் இருக்குதுன்னு அவங்களுக்கு சொல்லிட்டுத்தானே வந்தேன்.

நீங்க ஜல்சீரா பானம் அருந்துறீங்கன்னு இப்பத்தான் சிட்டிசன் வத்தி வச்சாரு.அதுக்குள்ள சௌகார்பேட்டை பானங்களையெல்லாம் நினைவுக்கு கொண்டு வந்திட்டீங்க.ராத்திரி நேரத்துல ஒரு இனிப்பு விற்பாங்களே...என்னாது....குல்பி...குல்பி...அதுவும் கூடவா காணமல் போயிடுச்சு?அதுக்கும் போட்டியா ஐஸ்கிரிம் வந்துடுச்சு இல்ல.இந்த ஜிகிர்தாண்டாங்கிறது இங்கே சில கடைகளில் திருட்டுத்தனமா விற்கிற மானிக்சந்த் பீடாவா?

நானும் பார்க்கிறேன் மோடியா?கட்காரியான்னு.

Santhose said...

Your Comparison (Petrol + Diesel)is not correct. Diesel consumption is more than Petrol in India. So simply adding the both price and compare with U.S is not correct.

வவ்வால் said...

ராஜ்,

வாங்க,

ஜிகிர்தண்டானா பீடா என்ற அளவில இருக்கே உங்க தமிழ்நாட்டு அனுபவம் :-))

மருதக்காரய்ங்க மட்டும் கேட்டாங்க ,கொண்டேப்பூடுவாங்க, எங்க ஊரு ஜில் ஜில் ஜிகிர்தண்டாவ ,பீடானா சொல்லுதன்னு :-))

---------

சந்தோஸ்

மூளைக்காரர்ப்பா ,அமெரிக்காவை விட இந்தியா தான் அதிகமா பெட்ரோ/டீசல் உபயோகிக்குதுன்னு நினைச்சுக்கிட்டு இந்தியாவில் டீசல் அதிகம் பயன்ப்படுத்துவதால் தப்புன்னு சொல்லுறார்.

இந்தியாவை போல பல மடங்கு டீசல் ,பெட்ரோல் அமெரிக்காவில் பயன்ப்படுத்தியும் எப்படி விலைக்கம்மியா இருக்குனு யோசிங்க சாரே.

அப்புறம் கச்சா விலைக்குறைஞ்சு போன பிறகும் ஏன் விலை குறைக்கவில்லை? இப்போ தான் பிரணாப் முகர்ஜி கச்சா எண்ணை விலை குறைஞ்சு போய் இருக்கு , விலைக்குறைப்பை பற்றி யோசிப்போம்னு பேட்டிக்கொடுக்கிறார்(என் பதிவை படிச்சாரோ என்னமோ)

rabab saad said...
This comment has been removed by the author.
على محمد said...



شركة تنظيف موكيت بالخبر

شركة تنظيف موكيت بالقطيف

شركة تنظيف موكيت بالاحساء

شركة تنظيف موكيت بالدمام

شركة تنظيف موكيت بالجبيل