நேற்று நள்ளிரவு முதல் பெட்ரோல் 2 ரூ விலைக்குறைப்பு செய்யப்பட்டுள்ளது .ஏற்றியது 7.50 ரூ இறக்கியது 2 ஆக நிகர விலையுயர்வு 5.50 ரூ.உண்மையில் மத்திய அரசின் திட்டமிட்ட விலையுயர்வு 5.5 ஆகவே இருக்கும், கொஞ்சம் கூடுதலாக ஏற்றிவிட்டு பின்னர் மக்கள் நலன் கருதி குறைத்தது போல ஒரு செட் அப் செய்யவே இந்த விலை ஏற்றம் ,இறக்கம்.
இதற்கிடையில் மஞ்சள் துண்டு அய்யா, ரய்யில் பொட்டி அக்கா எல்லாம் அவங்க மிரட்டி குறைக்க வச்சோம்னு கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம அறிக்கை விட்டுப்பாங்க :-))
பெட்ரோல் விலை ஏற்றமே ஏமாற்று வேலை ,அன்னிய செலவாணி உயர்வால் கச்சா விலை உயரவில்லை என
ஆகிய இரண்டு பதிவிலும் முன்னரே சொன்னேன்.
மேலும் பெட்ரோல் விலையில் பெருமளவு அரசின் வரியே என்பதை விளக்கும் பதிவு...
அங்கு சொன்னது மீண்டும் இங்கு,
"உண்மையில் அரசுக்கோ எண்ணை நிறுவனங்களுக்கோ அன்னிய செலவாணி பணப்பரிமாற்று விகிதத்தில் பெரிய நட்டம் வருவதில்லை என்பதே உண்மை,ஆனால் அப்படி சொல்லி விலையேற்ற வழிக்காண்கிறார்கள் எனலாம், எப்படி எனில்,
டாலரின் மதிப்பு இந்திய ரூபாய்க்கு எதிராக உயர்ந்தது போல ,உலக அளவிலும் உயர்ந்தே வருகிறது,எனவே எண்ணை உற்பத்தி நாடுகளின் நாணயத்திற்கு எதிராகவும் உயரும்,இதனால் முன்னர் ஒரு பேரல் கச்சா எண்ணை 100 டாலருக்கு விற்றது எனில், டாலர் உயர்வுக்கு ஏற்ப குறைந்து 90 டாலர்கள் என்பது போல குறைவான விலையிலே விற்பனை ஆகும்.
அதாவது வழக்கமாகவே டாலரின் மதிப்பு சரிந்தால் கச்சா எண்ணையின் விலை ஏறும், டாலர் உயர்ந்தால் கச்சா விலை குறையும்.
எனவே தற்போது நாம் வாங்கும் கச்சாவுக்கு கொடுக்கும் டாலரின் அளவுகுறைந்து விடுவதால், கூடுதலாக உயர்ந்த டாலரின் மதிப்பு சரி செய்யப்பட்டு விடும். எனவே பெரும்பாலும் எண்ணை நிறுவனத்திற்கு நட்டம் வராது, அல்லது மிகச்சிறிய அளவில் இருக்கலாம். அதனை விலையேற்றாமல்லே சமாளிக்க முடியும்.ஆனால் எப்போது விலை ஏற்றலாம் என ஏங்கிக்கொண்டு இருக்கும் எண்ணை நிறுவனங்கள் கிடைத்த வாய்ப்பை வீணாக்க விரும்பாமல் விலை ஏற்றி மக்களோடு விளையாட ஆரம்பித்து விட்டன."
மேலும்,
இந்த விலையேற்றத்திற்கு பின்னால் தனியார் எண்ணை நிறுவனங்களான ரிலையன்ஸ், ஷெல், எஸ்ஸார் போன்றவர்களின் கைவரிசையும் இருக்கலாம், ஏன் எனில் பொது துறை நிறுவனங்களுக்கு நஷ்டம் வரவில்லை அப்படியே வந்தாலும் அரசு மீட்டு எடுக்க நிதிக்கொடுக்கத்தான் போகிறது. ஆனால் தனியார் எண்ணை நிறுவனங்களுக்கு அவையே பொறுப்பு என்பதால் நல்ல லாபத்தில் விற்க வேண்டும். ஏற்கனவே தனியார்கள் பொது துறை எண்ணை நிறுவனங்களை விட ரூ 1 அல்லது 2 கூடுதலாகவே விற்கிறார்கள்.
மேலும் விலையேற்றம் செய்யவும் தனியார்களுக்கு ஆசை இருக்கிறது ஆனால் பொது துறை நிறுவனங்கள் விலையை ஏற்றவில்லை எனில் தனியாராலும் விலை ஏற்ற முடியாது, எனவே அவர்களுக்கு விலை ஏற்றம் செய்ய வேண்டும் என்பதற்காகவே பொதுத்துறையை விலை ஏற்றம் செய்ய அழுத்தம் கொடுத்து செய்திருக்கலாம் என தோன்றுகிறது.
கார்ப்பரேட்களின் கைக்கூலியாக மாறிவிட்ட அரசும், தலையாட்டியும்அவர்களுக்காக எதுவும் செய்வார்கள்.
இப்படி நாடகம் ஆடி மறைமுகமாக நாட்டுமக்களிடம் சுரண்டுவதற்கு மன்னு மோகன் மற்றும் குழுவினர் முகமூடிப்போட்டுக்கொண்டு கொள்ளையே அடிக்கலாம் யார் கேட்கப்போகிறார்கள் :-))
இவங்க சாப்பிடுற சாப்பாட்டின் ஒவ்வொரு பருக்கையிலும் நாட்டு மக்களின் வியர்வை இருக்கு, ஆனால் குனியாமல் ,நிமிராமல் தலையை ஆட்டி மட்டுமே சம்பாதிக்கும் இவருக்கு எப்படி சாப்பிட்ட சாப்பாடு செரிக்கும் என தெரியவில்லை.
*****
9 comments:
துவைப்பானுக்குப் போகலாமுன்னு வந்தா ஒரு மார்க்கமா படம் ஒட்டுற மாதிரி தெரியுதே!இன்னா இது புது டெக்னிக்கு?
ராஜ்,
வாங்க ,நன்றி!
எல்லாம் நம்ம மக்களின் ரசனை எப்படி இருக்குன்னு சொல்லத்தான்.கில்மா ,படம் ஆபாச துணுக்குகள் படிக்க தானே மக்கள் வலைப்பதிவுகளை நாடுங்கறாங்க.
நம்ம பதிவ எல்லாம் வறட்சியா ,சுவாரசியமா இல்லைனு சொல்லிடுறாங்க, அதான் இப்படி எதாவது போட்டு வைப்போம்னு போட்டு வச்சேன். பதிவுக்கு தொடர்பா இருக்கா இல்லையானு இங்கே யார் கவனிக்க போகிறார்கள் :-))
ஹி..ஹி பாப்பா கட்டி இருக்க கை கடிகாரம் நல்லா இருந்துச்சு, அதனால தான் இந்தப்படம் போட்டேன். டிஸ்ஸாட்னு பிரபலமான பிராண்ட் அது, ஆனால் ஆண்கள் கைக்கடிகாரம் கட்டிக்கிட்டு போஸ் கொடுக்குது.
நீங்களும் வாட்ச்ல டைம் தெரியுதானு வாட்ச் செய்யுங்க :-))
டைம் நல்லாத்தான் தெரியுது...........
http://www.thehindu.com/todays-paper/tp-business/article3467127.ece
http://www.thehindu.com/business/companies/article3456365.ece
Seems IOC got subsidy from government and posted profit and the profits have trebled. Ideally if the profit is used for public then rising the price could be justified. But the price rise is to fill the coffers of share holders who need triple the amount of profit. No respite for common man.
SA
ப.ரா,
வாங்க நன்றி!
டைம் மட்டும் தானே பார்த்தீங்க :-))
---
அனானி-எஸ்.ஏ,
நீங்க சொன்ன இந்து கட்டுரையும் உண்மையாக இருக்க வாய்ப்புள்ளது.
பெட்ரோல் விலை ரகசியம் பதிவு படிச்சிங்களா, அதில் போர்ப்ஸ் பத்திரிக்கை இந்தியாவில் அதிகம் லாபம் ஈட்டும் துறை எண்ணை துறை என்றும் முதலில் ஐஓசி அடுத்து எல்லாமே எண்ணை நிறுவங்க என சொன்னதை சுட்டிக்காட்டியிருப்பேன்.
மேலும் பாரத் பெட்ரோலியத்தின் பேலன்ஸ் ஷீட் அடிப்படையில் லாபம் வ்ந்திருப்பதையும் சுட்டியிருக்கிறேன்.
நல்ல டிவிடெண்ட் தருகிறார்கள் ,ஊழியர்களுக்கு அதிக போனஸ்,சம்பளம் தருகிறார்கள். அதெல்லாம் போகவே லாபம். கூடுதலாக லாபம் சம்பாதிக்கவும், தனியாருக்கு லாபம் கிடைப்பதை அதிகரிக்கவுமே விலை ஏற்றம்.
ஷெல் மானியம் இல்லாமலே 1 ரூ கூடுதல் விலையில் விற்கும் போது நட்டம் அடையவில்லை, எனவே விலைக்கூட்டுவதாக இருந்தாலும்1 ரூ அ 2 ரூ தான் கூட்டி இருக்க வேண்டும்,
பொது மக்களை ஏமாற்றவே அன்னிய செலவாணி , கச்சா விலை கணக்கெல்லாம்.
Another good joke.. Even after profit trebled, how could these corporate honchos lie blatantly??
http://timesofindia.indiatimes.com/business/india-business/Oil-firms-reject-profit-claims/articleshow/13793133.cms
--SA
வணக்கம் சகோ,
நல்ல பதிவு.பல பதிவுகளில் விவாதித்த விடயம் என்றாலும் இப்படி விலை ஏற்றி குறைக்கும் நாடகமும்,எதையும் தாங்கும் அனைத்தும் கொண்ட இந்திய குடிமகன் இதனை மறந்து போவதும் அரசியலில் இயல்பான ஒன்று.
கடிகாரமும் ,நேரமும் நல்லா இருக்கு! என்ன விலை? ஹி ஹி
நன்றி!!!!!!!!!!!!!!!
கார்ப்பரேட்களின் கைக்கூலியாக மாறிவிட்ட அரசும், தலையாட்டியும்அவர்களுக்காக எதுவும் செய்வார்கள்.
இப்படி நாடகம் ஆடி மறைமுகமாக நாட்டுமக்களிடம் சுரண்டுவதற்கு மன்னு மோகன் மற்றும் குழுவினர் முகமூடிப்போட்டுக்கொண்டு கொள்ளையே அடிக்கலாம் யார் கேட்கப்போகிறார்கள் :-))//
எங்கள் அனைவருக்குள்ளும் இருக்கும் ஆதங்கத்தை
மிக மிக அருமையாக பதிவு செய்துள்ளீர்கள்
அனைவரும் அவசியம் படிக்கவேண்டிய
மனதில் இருத்திவைத்துக் கொள்ளவேண்டிய பதிவு
வாழ்த்துக்கள்
அனானி.எஸ்.ஏ,
நான் தொடர்ந்து பெட்ரோல் பற்றிய செய்திகளை வாசித்தே வருகிறேன், உங்கள் சுட்டியும் பார்த்தேன்.
கூசாமல் புழுகுகிறார்கள்.
அண்டெர் ரெக்வரினு ஒரு ஜல்லி அடிக்கிறாங்க, அதை விளக்கி அடுத்த பதிவில் காய்ச்சலாம்னு இருக்கேன்.
----
சகோ.சார்வாகன்,
வாங்க, நன்றி!
நாடகம் தான்,ஆனால் என்னமோ மக்களுக்கு பாடுப்படுறாப்போல ஒரு ஒலக மகா நடிப்பை காட்டுறார் மன்னு :-))
கடிகாரம் விலை கேட்டு சொல்லிடலாம், கடிகாரம் கட்டியுள்ள காரிகையின் விலையை மல்லையா மகனிடம் தான் கேட்கணும் :-))
-----
ரமணி சார்,
வாங்க, வணக்கம்,நன்றி!
அது என்ன எங்கள்னு சொல்லிட்டிங்க, நம்ம ஆதங்கம் னு சொல்லுங்க.
வெளிப்படையான பாரட்டுக்கு மிக்க நன்றி!
Post a Comment