நண்பர் ராஜ நடை நேத்தில இருந்து "உனக்கு பொறுப்புணர்வு இருக்கா ,துவைப்பானுக்கு பதிவு போடுற ,சென்னை மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை தோண்ட சீனாக்காரன் பெருசா மெஷின் எடுத்து வந்திருக்கான் அதைப்பற்றி பதிவு போட தெரியாதானு துவைச்சு எடுக்கிறார்" .பதிவு போடலாம்னு பார்த்தால் ஏனோ ஒரு " உற்சாகமே" வரவில்லை.
காரணம் என்னவெனில் சென்னைக்கு முன்னரே பெங்களூரு தோண்டல், டெல்லி தோண்டல் எல்லாம் எட்டிப்பார்த்து விட்டதால் சென்னையில தோண்டுவது பெரிதாக என்னை ஈர்க்கவில்லை, இன்னும் சொல்லப்போனால் எல்லா ஊரிலும் நாம இருக்கும் போது தான் தோண்டி உயிர எடுக்கிறாங்கன்னு ஒரு சலிப்பே வந்துடுச்சு. டிராபிக் ஜாம்ல மாட்டினவங்களை கேட்டா சொல்லுவாங்க ,இப்போ யாரு கேட்டா மெட்ரோனு, ஆனால் நான் அப்படி சொல்ல மாட்டேன் ,மெட்ரோ தேவையான ஒன்று தான் ,ஆனால் நம்ம ஊரில இந்திய முறையில் வேலை செய்யுறாங்க அதான் பிரச்சினை என்பேன்.
லண்டன் வாசி ஒருத்தர் சொன்னார் என்ன இப்படி வேலை செய்யுறாங்க, லண்டனில் ஒரு வழியா இருக்கும் மெட்ரோ வழிகளை இருவழியாக ஆக்க சுரங்கம் தோண்டிக்கிட்டு இருக்காங்கா , வேலை நடக்கிறதே தெரியாது, வெட்டிய மண்ணை எடுத்து போவது கூட யாருக்கும் தெரியாத அளவுக்கு மிகவும் கச்சிதமாக வேலை நடக்கிறதாம்.
chennai metro plan
அந்த அளவுக்கு எல்லாம் எதிர்ப்பார்த்தால் நம்ம ஊரில் ஒரு சாக்கடை கால்வாய் கூட கட்ட மாட்டாங்க, எனவே 2014-15 வரைக்கும் டிராபிக்ல நீச்சல் அடிச்சு வாழ கற்றுக்கொண்டால் நாமும் மெட்ரோ ரயிலில் சொகுசா போகலாம்னு பொறுமை காப்போம் மக்களே.
நம்ம ஊரு மெட்ரோ திட்டத்தில் பாதி தரைக்கடியிலும்(under ground tunnel), பாதி உயர்த்தப்பட்ட (elevated)தடத்திலும் என திட்டம் போட்டுள்ளார்கள். போக்குவரத்து நெரிசலுக்கு இதுவும் காரணம். முழுவதும் நிலத்தடியில் செயல்ப்படுத்தினால் நன்றாக இருந்திருக்கும்.
சென்னை நிலத்தடி மண் ஒத்துவரவில்லை என்பது போல இதற்கு காரணம் சொல்லியிருந்தார்கள். ஜப்பான் போன்ற நிலநடுக்க பூமியில்,கடலுக்கு அடியில் எல்லாம் சுரங்கம் அமைக்கும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது.எனவே சென்னை மண் ஒரு காரணம் அல்ல பொருளாதார காரணங்களே இப்படி கலந்து செய்ய காரணம்.
ஏன் எனில் ஒரு கிலோமீட்டர் நிலத்தடி சுரங்கப்பாதை அமைக்க 300 கோடி செலவாகும், அதே சமயம் உயர்த்தப்பட்டப்பாதை அமைக்க ஒரு கிலோ மீட்டருக்கு 100 கோடி போதும்.
மேலும் நிலத்தடி ரயில் நிலையம் ஒன்று அமைக்கவும் 300 கோடி ஆகும், உயர்த்தப்பட்ட ரயில் நிலையம் அமைக்க 100 கோடி என்றளவில் செலவாகும் என திட்டமதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. எனவே செலவை குறைக்க தான் உயர்த்தப்பட்ட பாதை .
இந்தியாவில் மெட்ரோ ரயில் திட்டம் முதன் முதலில் செயல்படுத்திய நகரம் என்ற பெருமை கொல்கட்டாவிற்கே ஆகும். 1984 முதல் அங்கு செயல்ப்பாட்டில் உள்ளது. இப்போது இரண்டாவது கட்டப்பணிகள் நடைப்பெறுகிற்து.
அடுத்து டெல்லி, பெங்களூருவிலும் செயல்ப்பாட்டுக்கு வந்துவிட்டது.மும்பையில் வேலை நடந்துக்கொண்டுள்ளது ,கடைசியாகவே சென்னைக்கு எட்டிப்பார்த்துள்ளது மெட்ரோ ரயில்.அதுவும் பல அரசியல் சித்து விளையாட்டுகளை தாண்டியே.இப்போதைக்கு அரசியலை ஓரம் கட்டிவிட்டு தொழில்நுட்ப விவரங்களுக்கு போவோம்.
நிலத்தடி சுரங்க துளைப்பான்:
(Tunnel boring machine)
schematic picture
மண் புழுவினை அனைவரும் பார்த்திருப்போம் அது எப்படி மண்ணிற்குள் துளைத்து உள் செல்கிறதோ அப்படித்தான் சுரங்க துளைப்பானும் செயல்படுகிறது.
மண் புழு மண்ணில் உள்ள தாவர எச்சங்களை உண்டு விட்டு எச்சமாக மண்ணினை பின் புறமாக வெளியேற்றிவிட்டு தொடர்ந்து மண்ணை துளைத்து முன் செல்கிறது, அதே தத்துவத்தின் அடிப்படையிலே சுரங்க துளைப்பான் மண்ணை முன் புறமாக வெட்டி எடுத்து பின்னால் அனுப்பிக்கொண்டு முன்னோக்கி செல்லும்.
எந்திரத்தினை விட இயற்கை மிக திறமையானது எப்படி எனில் மண் புழு பின்னால் திரும்ப வர வேண்டும் எனில் அப்படியே பின் புறமாகவும் மண்ணை உண்டு அடுத்தப்பக்கம் தள்ளிவிட்டுக்கொண்டு வர முடியும்.இரண்டு பக்கமும் செயல்படக்கூடியது மண் புழு, மேலும் மண்ணிற்கு வளம் சேர்க்க கூடியது,உரம் என்பதையெல்லாம் இங்கே பேசினால் யாரேனும் அடிக்க வரலாம் :-))
அக்கால சுரங்க துளைப்பான்.
முதலில் சிறிய அளவிலான சில சுரங்க துளைப்பான்கள் பயன்ப்படுத்தப்பட்டு சுரங்கங்கள் வெட்டப்பட்டுள்ளது. இப்போதைய வடிவில் ஒரு பெரிய சுரங்க துளைப்பான் வடிவமைத்து ,1853 இல் காப்புரிமை பெற்றவர் சார்லஸ் வில்சன் என்ற அமெரிக்கர் ஆவார். அந்த எந்திரத்திற்கு வில்சன் ஸ்டோன் கட்டிங் மெஷின் என்றே பெயர்.
குறுக்களவில் மிக பெரியது செயின்ட்.பீட்டர்ஸ் பர்க்கில் தோண்டப்படும் ஓர்லோவ்ஸ்கி சுரங்கப்பாதை ஆகும்.19.25 மீ விட்டம் உடைய சுரங்கம் .
சீனர்களின் சுரங்க துளைப்பான் முகப்பு.
அடுத்து சீனாவில் ஷாங்காய்-யாங்ட்சி ஆறுகளின் அடியில் செல்லுமாறு தோண்டப்படும் சுரங்கப்பாதையாகும் விட்டம் 15.43 மீட்டர்.
மிக அதிக ஆழத்தில் சுமார் 2000 மீட்டரில் ஆல்ப்ஸ் மலையில் தோண்டப்படும் கோத்தார்ட் சுரங்கம் (gotthard base tunnel)ஆகும்.ஜெர்மனிக்கும்,இத்தாலிக்கும் இடையே அமையும் இச்சுரங்க வழியே உலகின் மிக நீளமான ஒன்றாகும் .ஆல்ப்ஸ் மலையில் 57 கி.மீ யும் மொத்தமாக 151.84 கி.மீ நீளம் கொண்ட சுரங்கவழி ரயில்ப்பாதை.
நிலத்தடி சுரங்க துளைப்பான்:(Tunnel boring machine-TBM)
பாகங்கள்:
#சுழல் வெட்டு சக்கரம்(rotary cutting wheel)
சக்கரத்தின் வெட்டுப்பற்கள் அல்லாது ,நூற்றுக்கணக்கணக்கான தனித்த டங்க்ஸ்டன் கார்பைடு (tungsten carbide)வெட்டுப்பற்களும் தனித்து இயங்கும் வகையில் ஒரே அசெம்பிளியாக இருக்கும்.அதிர்வுகளை தாங்கும் வகையில் காற்று தாங்கிகள் கொண்டவை.
#மத்திய அச்சு.(central axis)
இது காற்று அழுத்தத்தின் (pneumatic pressure)உதவியுடன் செயல்படுகிறது.
# சேகரிக்கும் அறை:(excavation chamber)
வெட்டி எடுத்த பாறை,மண் இங்கு சேகரித்து ,பின்னால் அனுப்பப்படும்.
#திருகு கடத்தி:(screw conveyor)
சேகரித்த மண்,பாறைகளை பின்னால் அனுப்ப உதவும்.
#உந்து குழல்கள்:(Thrust cylinders)
தொடர்ந்து முன்னால் வெட்டு சக்கரத்தினை அழுத்தி வெட்ட வைக்க அழுத்தம் தரும்.
#இயங்கு பாதை அமைப்பான்:(segment erector)
நிலத்தடி துளைப்பான் தொடர்ந்து முன் செல்ல வசதியாக கான்கிரிட் துண்டுகளை அடியில் பாவும்.
#கூறை ஓடு பாவும் அமைப்பு:(lining erector)
முன் கூட்டியே தயாரித்த கான்கிரீட் வார்ப்பு ஓடுகளை (reinforced precast lining segments )கூறையில் பொருத்தி செல்லும்(bolted and cemented).அப்போது தான் மண் சரியாமல் பாதுகாப்பாக இருக்கும்.
கான்கிரிட் ஓடு வேய்ந்த சுரங்கத்தின் படம்.
நிலத்தடி சுரங்க துளைப்பான் ஒரே எந்திரமாக கீழ்கண்ட பணிகளை எளிதாக செய்யும் ஒரு கூட்டு எந்திரம் ஆகும், இதனால் , சுரங்கம் அமைப்பதில் உள்ள சிக்கல்களை குறைக்கிறது எனலாம்,
மண் வெட்டுதல்
அள்ளுதல்,
வெளியேற்றுதல்,
முன் செலுத்துதல்
,தேவையான திசைக்கு ஏற்ப துளைத்தல்
பிடிமானம் உருவாக்குதல்,
துளைப்பான் கவசம் அளித்து பாதுகாப்பது.
தரையில் நிலை செய்தல், மற்றும் கட்டுப்பாடு
மேற்கூறையில் பாதுகாப்பு ஓடு அமைத்தல்
காற்றோட்டம் அளித்தல்,
மின்சாரம் அளித்தல்
ஆகிய அனைத்தினையும் ஒருங்கிணைத்து பணி செய்ய கூடிய வல்லமை உடையது நிலத்தடி சுரங்க துளைப்பான்.
video:
மண்ணின் தன்மை மற்றும் பாறை உள்ள பகுதி என தேவைக்கு ஏற்ப நிலத்தடி துளைப்பான் வடிவமைக்கப்படும்.
இரண்டு வகையில் சுரங்க துளைப்பான் உள்ளது
# ஒற்றை கவச சுரங்க துளைப்பான்(single shield TBM)
இதில் முன்னால் சுழல் வெட்டு சக்கரப்பகுதிக்கு மட்டும் மண்சரியாமல் தாங்கும் கவசம் இருக்கும்.
#இரட்டை கவச சுரங்க துளைப்பான்.(double shield TBM)
இதில் முன்னால் உள்ள கவசத்தோடு ,பின்பகுதியிலும் ஒரு கூடுதல் கவசம்,மண் சரிவை தடுக்க இருக்கும்.
இதில் மேலும் பொதுவாக மூன்று வகையில் உள்ளது.
மலையை துளைக்க தயாராகும் துளைப்பானின் படம்.
கடின பாறை சுரங்க துளைப்பான்,(hard rock TBM)
கடினப்பாறை பகுதிக்கு திறந்த பிடிப்பு துளைப்பான்(Open Gripper Type) என்ற வகையினைப்பயன்ப்படுத்துவார்கள்.
பாறைகள் உள்ள மலைப்பாங்கான பகுதியில் பயன்ப்படுத்தப்படுவது.
மற்ற இரண்டிலும் பிடிப்பானுக்கும் கவசம் இருக்கும் (Closed Segment-Shield Type)
நில அழுத்த சமநிலை துளைப்பான்(Earth pressure balanced TBM)
மிதமான கடினத்தன்மை, மற்றும் சிறிதளவு பாறைகளும் உள்ள பகுதியில்.
இம்முறையில் எவ்வளவு மண் முன்பகுதியில் வெட்டப்படுகிறதோ அவ்வளவு மண் பின்னால் சென்ற பிறகே அடுத்து வெட்டும்.அப்பொழுது தான் எந்திரம் ஒரே சமமான அழுத்தத்தினை தரையில் உருவாக்கும்.
கூழ்ம முகப்பு துளைப்பான்.(slurry face TBM)
நெகிழ்வான மண் ,மற்றும் நிலத்தடி நீரோட்டம் உள்ள இடங்களில் பயன்படுவது.
இந்த எந்திரங்கள் அனைத்துமே தனி தனிப்பாகங்களாக கொண்டு சென்று வேலை நடக்கும் இடத்தில் பொருத்தி ஒன்றாக்குவார்கள், எனவே தேவைக்கு ஏற்ப எந்த வகையான கருவியையும் பொருத்திக்கொள்ள முடியும்.
நீர் கசியும் இடங்களில் வேலை நடைபெறும் விதம்.
slurry face tunnel boring machine இவ்விடங்களில் பயன்ப்படுத்தப்படும்.
நிலத்தடி நீர் கசியும் மற்றும் ,நெகிழ்வான மண் உள்ள இடங்களில் அழுத்தப்பட்ட காற்றினை தரையில் உருவாக்கி நிலையாக எந்திரம் நிறுத்தப்படும் , பின்னர் சோடியம் பென்டோநைட்(sodium bentonite) வேதிப்பொருளை நீரில் கரைத்து அதனை செலுத்துவார்கள் இது தரையில் உள்ள நுண்துகள்களை அடைத்து நீர் கசிந்து ஊறுவதை தடுக்கும்.
எண்ணை கிணறுகள் வெட்டும் போதும் நிலத்தடி நீர் உள்ளே கசிந்து புகாமல் இருக்கவும் சோடியம் பென்டோநைட் கரைசல் பயன்ப்படுகிறதாம்.
மேலும் வெட்டு முகப்பிலும் பென்டோநைட் கரைசைலை செலுத்தியவாறே மண்னை வெட்டி கரைசலாக குழாய் மூலம் வெளிக்கொண்டு செல்வார்கள். இதன் மூலம் தொடர்ந்து நீர்கசிவினை தடுத்தவாறே முன்னோக்கி வெட்டி செல்ல முடியும்.
வெளியில் மண்கரைசலைகொண்டு சென்ற பின் சோடியம் பென்டோநைட் மட்டும் பிரித்து எடுக்கப்பட்டு மீண்டும் சுரங்கம் வெட்டப்பயன்ப்படுத்தப்படும். இப்படியாக சுழற்சியாக வேலை நடைப்பெறும்.
மிதமான கடின மண்ணில் வேலை நடைப்பெறும் முறை:
single shield or double shield earth pressure balance TBM இவ்விடங்களில் பயன்ப்டுத்தப்படும்.
சுழலும் வெட்டு சக்கரம் ,மற்றும் தனித்து இயங்கும் வெட்டுப்பற்கள் வெட்டி எடுக்கப்படும் மண் , திருகு கடத்தி மூலம் பின்னால் உள்ள பகுதிக்கு கொண்டு செல்லப்படும் ,பின்னர் அது தொடர் கடத்தி பட்டை(conveyor belt) மூலம் சுரங்கத்திற்கு வெளியிலோ அல்லது டிராலிகளுக்கோ கொண்டுசென்று பின்னர் சுரங்கத்திலிருந்து வெளியேற்றும்.
சுரங்க துளைப்பான் நவீன மின்னணு மற்றும் கணினி கட்டுப்பாட்டு கருவிகளை கொண்டது.முன்கூட்டியே ஆணைகளை கொடுத்துவிட்டால் தானே இயங்க வல்லது தேவைப்படும் போது மட்டும் மனிதர்களும் இயக்கலாம்.
கட்டுப்பாட்டு அறையின் படம்.
சென்னையில் இவ்வகையிலான சுரங்க துளைப்பானே பயன்ப்படுத்தப்படும் என நினைக்கிறேன்.ஏன் எனில் சென்னை நிலத்தடியில் பகுதி பாறை ,மற்றும் இலகுவான மண் உள்ளதாக சென்னை மெட்ரோ நில ஆய்வில் கண்டறிந்துள்ளார்கள்.
இவ்விரண்டு முறையிலும் தொடர்ந்து முன் கூட்டியே தயாரிக்கப்பட்ட கன்கிரீட் வார்ப்பு ஓடுகளை கூறையில் அமைக்கும் பணியையும் சுரங்க துளைப்பான் செய்து விடும்.
வார்ப்பு ஒடுகளை பொறுத்த தேவை இல்லாத /முடியாத சூழலில் ,அதிக அழுத்தத்தில் சிமெண்டினை சுவற்றில் பீய்ச்சி அடித்து உறுதி செய்வார்கள். இதனை ஷார்ட் கிரிட் (shortcrete)என்பார்கள்.
இதில் உலர் ஷார்ட் கிரிட்(dry shortcrete),ஈர ஷார்ட் கிரிட் (wet shortcrete)என இரண்டு வகையுண்டு.
உலர்ந்த சிமெண்டினை நீரில் கலக்காமல் தனியே பீய்ச்சி அடித்து ,அப்போது மட்டும் தேவைக்கு நீரினை கூடவே செலுத்துவார்கள். இது உலர் வகை ஷார்ட் கிரிட்.
முன்னரே சிமெண்ட், நீர் கலந்த கலவையை பீய்ச்சி அடித்து பலப்படுத்து ஈர வகை ஷார்ட் கிரிட்.
மேலும் அதிக வலுப்படுத்துதல் தேவை எனில் ரப்பர் வலை, கம்பி வலை (rubber or wire mesh)பொறுத்தி அதன் மீது ஷார்ட் கிரிட் செய்வார்கள்.
இது வேலை நடக்கும் போது மண் உள்வாங்காமல் இருக்கவே பின்னர் முழுவதும் கான்கிரிட் ஓடுகளை பொறுத்தி நிரந்தரமாக வலுவாக்குவார்கள்.
இலகுவான மண் உள்ள இடத்தில் எளிதாகவும் வேகமாகவும் சுரங்கம் அமைக்கலாம் என நினைக்கலாம்,ஆனால் அவ்வகை மண்ணில் தான் மெதுவாக தோண்டுவார்கள் ஏன் எனில் மண் சரிவு,நீர்கசிவு என அனைத்தினையும் நிறுத்த வேலை செய்ய வேண்டும். மலை அல்லது பாறையில் வேகமாக சுரங்கம் தோண்ட முடியும். ஏன் எனில் அவை வலுவானவை என்பதால் சரிவு ஏற்படும் அபாயம் குறைவு.நீர் கசிவும் இருக்காது.
திசை மாறாமல் துளைத்து செல்ல லேசர் வழிக்காட்டி.
மலையில் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 40 மீட்டர் கூட வெட்ட இயலும், இலகுவான மண்ணில் ஒரு நாளைக்கு ஒரு மீட்டர் என்ற அளவிலேயே வேலை நடக்கும்.
இவ்வகை நிலத்தடி சுரங்கம் அமைப்பதிலும், எந்திரங்கள் அமைப்பதிலும் ஜெர்மனி, அமெரிக்கா ஆகியவை முன்னோடியாக இருந்தாலும், ஜப்பானும் ,சீனாவும் குறைவான செலவில் ,பல புதிய முயற்சிகளை செய்துள்ளன.
ஜப்பானின் இரட்டை சுரங்க வழி துளைப்பான் படம்.
வழக்கமாக ஒரே நேரத்தில் ஒற்றை சுரங்க வழி (single tube)தான் தோண்டுவார்கள், அதற்கேற்பவே எந்திரம் இருக்கும் ,ஆனால் இப்போது ஜப்பானியர்கள் ஒரே நேரத்தில் இரட்டை வழி சுரங்கம்(double tube TBM) தோண்டும் வகையில் எந்திரம் வடிவமைத்துள்ளார்கள்.
சீனார்களோ சுரங்கம் தோண்டும் போது அதிக அதிர்வு ஏற்படாத வகையில் செயல்படும் வகையில் எந்திரங்களை மாற்றியமைத்துள்ளார்கள்.மேலும் ரயில் சுரங்கத்தில் செல்லும் போது நிலத்தில் அதிர்வு உண்டாகாதவாறும் கட்டும் நுட்பம் கண்டுப்பிடித்துள்ளார்கள்.
எனவே உலக அளவில் மலிவாக சுரங்கப்பாதை அமைக்க இவர்களை விட்டால் ஆள் இல்லை.
இந்தியா தொழில்நுட்பத்தில் முன்னேறுதுன்னு சொல்லிக்கொள்வதெல்லாம் வெற்றுப்பேச்சாகவே படுகிறது. ஒரு ஏவுகணையை செலுத்திவிட்டு அதை நினைத்தே பெருமைப்பட்டுக்கொள்கிறோம் ,அதுவே போதும் என நினைக்கிறோம்.
சிறப்பு கட்டுமானம், கனரக கப்பல் கட்டுதல் , கனரக எந்திரவியல் போன்ற கனரக தொழிலில் இந்தியா மிகவும் பின் தங்கியுள்ளதாகவே படுகிறது.
மெட்ரோ திட்ட பொருளாதார பார்வை:
(economics of metro project)
மேலும் சுரங்கம் தோண்டியதுடன் வேலை முடிந்து விடாது, பல கட்டுமான வேலைகள் உள்ளது. காற்றோட்ட வசதி, அவசரகால வெளியேறும் வசதி, மின்சாரம்,பாதுகாப்பு வசதி, சிக்னல் அமைப்பு , தண்டவாளங்கள் அமைப்பது ,நிலையங்கள் அமைப்பது.என பல செலவு பிடிக்கும் வேலைகள் உள்ளது.
மெட்ரோ திட்ட முதலீடும் ,பின்னர் தொடர்ந்து இயக்க மற்றும் பராமரிப்பு,பாதுகாப்பு செலவுகளும் மிக அதிகம் ஆகும். பொதுவாக உலகெங்கும் உள்ள பெரும்பாலான மெட்ரோ திட்டங்கள் செய்த முதலீட்டுக்கு ஏற்ப வருமானம் அளிக்காமல் நஷ்டத்திலயே உள்ளது.முதலீட்டினை திரும்ப பெற ஆகும் காலமும் மிக அதிகமாகும்.
போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், இடவசதி இல்லாமையுமே மெட்ரோ வகை திட்டங்களை நாடக் காரணம்.முதலீடு செய்த பணத்தினை எடுப்பது அடுத்த வேலை,பெரும்பாலான திட்டங்க்களில் இயக்க செலவினை கூட கட்டணத்தின் மூலம் ஈடு செய்ய முடியவில்லை.ஆண்டு தோறும் அரசே மாநியமாக ஒரு தொகை கொடுத்தே இவ்வகை திட்டங்கள் உலகெங்கும் நடக்கிறது. எனவே பெரும்பாலும் தனியார் இத்திட்டத்தினை எடுத்து நடத்துவதில்லை.
ஏர்போர்ட் எக்ஸ்பிரசின் உள்தோற்றம்.
டெல்லி மெட்ரோ திட்டத்தில் ஏர் போர்ட் எக்பிரஸ் என்ற ஒரு பகுதி டெல்லி ரயில் நிலையம் - துவரகா செக்டர்-21 இடையே டெல்லி ஏர்ப்போர்ட் வழியாக இயங்குவதை மட்டும் ரிலையன்ஸ் அமைத்து, இயக்க 2885 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் எடுத்து இப்போது செயல்ப்படுத்தி வருகிறது.
#உலக அளவில் மொத்தம் 183 மெட்ரோ ரயில் திட்டங்கள் பயன்ப்பாட்டில் உள்ளன. இதில் டெல்லி மெட்ரோ ரயில் திட்டம் மட்டுமே உலகிலேயே கரியமில வாயு(co2) வெளிப்படுத்துதலை குறைக்கும் திட்டம் என UNO சான்றளிக்கப்பட்டு, கார்பன் கிரடிட் ரேட்டிங்க் கொடுக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு சுமார் 630,000 tons கரியமில வாயுவை கட்டுப்படுத்துகிறதாம்.இதன் மூலமும் சிறிது வருமானம் வர வாய்ப்புள்ளது.
#update:-
சென்னை மெட்ரோ ரயில் சுரங்கத்தின் கூறை சுவர்களில் பாவ முன் செய்த வார்ப்பு சிமெண்ட் ஓடுகள் சென்னை அருகே உள்ள வானகரம், வயநல்லூர் மற்றும் முட்டுக்காட்டில் வட்டவடிவ கான்கிரீட் வார்ப்புகள் 5.8 மீட்டர் உள் விட்டம் மற்றும் 6.2 மீட்டர் வெளிவிட்டம் அளவுகளில் கடந்த மூன்று மாதங்களாக தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை இரண்டு கி.மீ., தூரம் சுரங்கப்பாதை அமைக்கும் அளவிற்கு வானகரம் மற்றும் வயநல்லூரில் வட்டவடிவ கான்கிரீட் வாப்புர்கள் தயாரிக்கப்பட்டு தரப் பரிசோதனையும் முடிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வட்ட வடிவ வார்ப்பும் 6 பகுதிகளாக, 1.2 மீட்டர், 1.4 மீட்டர் மற்றும் தேவையான இடங்களுக்கு மட்டும் 1.6 மீட்டர் அகலத்தில் கான்கிரீட் வார்ப்புகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
தகவல் இன்றைய தினமலர்:நன்றி!
தயாராக உள்ள சிமெண்ட் வார்ப்பு ஓடுகள்:
துளைப்பான் துண்டுகள்:
#சுரங்கம் போன்ற மூடிய இடங்களுக்கு செல்ல சிலர் பயப்படுவார்கள் அதற்கு பெயர் கிளஸ்ட்ரோ போஃபியா(Claustrophobia) .
# எல்லாத்தையும் படமாக்கும் ஹாலிவுட் ,இப்படியான சுரங்க வழியில் விபத்தானால் என்ன ஆகும்னு எடுத்த படம் தான் "டே லைட்" (DAYLIGHT)நியூயார்க்கில் ஹட்சன் நதியின் அடியில் செல்லும் சுரங்கப்பாதையில் விபத்து ஏற்பட்டு உள்ளே மாட்டிக்கொண்டால் என்ன ஆகும் இதான் கதை. நாயகன் கட்டு மஸ்து "சில்வர்ஸ்டார் ஸ்டாலோன்" "தான். வழக்கமான டச்சிங்காக சுரங்கத்தில் சிக்கிய ஒரு நாயையும் விடாமல் ஹீரோ காப்பாத்திடுவார்.
# The taking of pelham 123 என்ற படமும் ஒரு மெட்ரோ டிரெயின் படம் தான். நியுயார்க் மெட்ரோ டிரயினை சுரங்கத்தில் கடத்தி வச்சுக்கிட்டு பணம் கேட்டு மிரட்டும் வில்லனாக ஜான் டிரவோல்டாவும், அவரோட பேரம் பேசும் ரயில்வே அதிகாரியா டென்சல் வாஷிங்டனும் நடித்திருப்பார்கள், பரபரனு சண்டை இல்லைனாலும் பார்க்கிறாப்போல இருக்கும். தமிழில் டப்பிங் வெர்ஷன் பார்த்தேன் ,ஜான் டிரவோல்டா மச்சி,மாமுனு பேசுவார் :-))
--------
பின் குறிப்பு:
தகவல், படங்கள் உதவி,
கூகிள், விக்கி,யுடுயுப், சென்னை மெட்ரோ, டெல்லி மெட்ரோ ,U.S.Federal highways administration இணைய தளங்கள் நன்றி!
*****
38 comments:
அது!
நான் நேற்றே மோடியா?கட்காரியான்னு திரும்ப பார்க்க வந்தேன்.சரி,வித்தைக்கான பொருட் சேகரிப்பில் இருப்பீங்கன்னு அந்த கேப்புல Revenge of the electric car ன்னு ஒரு டாகுமென்டரி பார்த்தேன்.உங்க பொருளாதாரம்,கடிகார காரிகை,தீப்பிடிச்ச நானோ காரெல்லாம் நினைவுக்கு வந்தது.
மெட்ரோவை பார்த்துட்டு சொல்றேன்.நல்லபிள்ளையா சமர்த்தா நடந்துகிட்டதுக்கு நன்றி.
அது!
நான் நேற்றே மோடியா?கட்காரியான்னு திரும்ப பார்க்க வந்தேன்.சரி,வித்தைக்கான பொருட் சேகரிப்பில் இருப்பீங்கன்னு அந்த கேப்புல Revenge of the electric car ன்னு ஒரு டாகுமென்டரி பார்த்தேன்.உங்க பொருளாதாரம்,கடிகார காரிகை,தீப்பிடிச்ச நானோ காரெல்லாம் நினைவுக்கு வந்தது.
மெட்ரோவை பார்த்துட்டு சொல்றேன்.நல்லபிள்ளையா சமர்த்தா நடந்துகிட்டதுக்கு நன்றி.
மண்புழுவோடு நிறுத்திகிட்டு இங்கே ஓடி வந்து விட்டேன்.Fresh ன்னு இன்னுமொரு விவசாயம்,உணவு பற்றியும் அமெரிக்கா காரனே வேண்டாம்ன்னு வெறுத்து ஒதுக்கிய Genetically modified Industrial Food products பின் விளைவுகளையும்,விமானத்திலிருந்து புகையாக தூவும் உரம் தரும் பக்க விளைவுகளையும் இயற்கையான விவசாயம் எப்படி மனித,மிருக,சுற்றுசூழலுக்கு சிறந்ததுன்னு மக்கிப்போன இலை தழைகள்,இயற்கை உரமாகவும் அதோடு உயிருடனான மண்புழுக்கள் விவசாயத்துக்கு எவ்வளவு முக்கியம்ங்கிறதையும் விளக்கும் படம்.நான் சிறுவனாக இருக்கும் போது அப்பா பயிரிடும் நிலத்தில் இந்த மண்புழுக்கள் மிக சாதாரணம்.பசுமை புரட்சின்னு சுவாமிநாதனின் கோசத்திற்கு பிறகு இப்பொழுது பெருமூச்சே வருகிறது.
நாம் தொழில்நுட்பத்தில் மிகப்பின்தங்கி உள்ளோம் என்பதில் சந்தேகமே இல்லை. இங்கு வங்கிப் பயன்பாட்டு சாஃப்ட்வேர் எழுதுவதைத்தான் பொறியியல் என்கிறோம்! கனரக இயந்திரங்கள், ராட்சத கட்டுமானம், கப்பல் கட்டுவது, சுரங்கம் தோண்டுவது இதெல்லாம் நம் பொறியியலாளர்களுக்கு அறிமுகமே இல்லாத விஷயங்கள்!
சரவணன்
பீஜிங்கில் நடந்த மெட்ரோ வேலை பற்றி டிஸ்கவரியில் முன்பு பார்க்கும் போது இவற்றை பார்த்த ஞாபகம் இருக்கிறது. உங்கள் பதிவில் இன்னும் மேலதிகமான தகவல்கள்..... நன்றி.
ராஜ்,
வாங்க,நன்றி!
நேத்து நைட் தான் கொஞ்சம் உற்சாகம் ஏறிச்சு அதை வச்சு ஆரம்பிச்சேன்,அப்போவே மோடியா/கட்காரியா பார்க்க வந்தா ஜாடி காலியாத்தான் இருக்கும் :-))
பதிவு படிக்கும் போதுலாம் ஒன்றும் புரியாது,படம் பார்க்கும் போது தான் நினைவுக்கு வரும் :-))
மண்ப்புழுவோட ஓடிட்டிங்க போல,பின்னாடித்தான் எந்திரப்புழு வருது.
ராபர்ட் கிளைவ் தான் ரசாயன உரத்துக்கு காரணம்னு சொல்லாம எம்.எஸ் சுவாமிநாதன்னு சொல்லுறிங்க :-))
எல்லாத்துக்கும் வெள்ளைக்காரன் மேலயே பழிப்போடணும் அப்போ தான் தோழர் ஆகலாம்.கினவு பாராட்டும் :-))
முழுசா படிச்சிட்டு வாங்க, எழுதினவனுக்கு கூட வலிக்கலை படிக்க வலிக்குது மக்களுக்கு :-))
---------
சரவணன்,
வாங்க ,நன்றி!
முழுசா படிச்சிட்டிங்க போல இருக்கே,பலே!
// இங்கு வங்கிப் பயன்பாட்டு சாஃப்ட்வேர் எழுதுவதைத்தான் பொறியியல் என்கிறோம்!//
இது தட்டச்சும் போது என் விரல் நுனி வரைக்கும் வந்துடுச்சு, அதை சொன்னா ஒரு கும்பல் மொத்த வரும்,வழக்கமா அதை எல்லாம் கண்டுப்பதில்லை, இந்த பதிவில் எதுவும் கரைசல் வேண்டாம்னு ஏவுகணையோட நிறுத்திட்டேன்.
நீங்க சரியா விட்டுப்போனதை சொல்லிட்டிங்க.நாம மென் பொருள்னு சொல்லிக்கிட்டு எதையோ செய்து துட்டு சம்பாதிக்கிறோம் அதுவே இந்தியா தொழில்நுட்பத்தில் முன்னேறிடுச்சுனு ஒரு பிரமையை உண்டாக்கிடுச்சு.
தொழில் நுட்ப ரீதியாக நாம் போக வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கு.
diaphragm wall என்று ஒன்று சென்னை மெட்ரோவிற்கு கட்டப்படுவதை விளக்கும் வீடியோ ஒன்றை சமீபத்தில் யூடியூபில் பார்த்தேன். http://www.youtube.com/watch?v=pgMZGGShvF4
இது மெட்ரோ அன்டர்கிரவுண்ட் டன்னலில் எங்கு வருகிறது? இதன் பயன்பாடு என்ன?
சரவணன் சொல்லி இருப்பது முழுக்க முழுக்க சரி, நாம் இன்னும் industrialization ஆகவே இல்லை. சில மென்பொருள் நிறுவனங்களும், எலக்ட்ரானிக் அசெம்ப்ளி ப்ளாண்ட்களும், கார் அசெம்பிளி ப்ளாண்டுகளும் தான் இண்டஸ்ட்ரிகள்னு நினைச்சிட்டு இருக்கோம்.
ப.ரா,
வாங்க,நன்றி!
நீங்க சொன்ன பீஜிங்க் மெட்ரோ பத்தி போன பதிவின் பின்னூட்டத்தில ராஜ் க்கு சொல்லி இருந்தேன், அந்த நிகழ்ச்சி நானும் டிஸ்கவரில பார்த்திருந்தேன் "மெக எஞ்சினியரிங்க்" அப்படினு பேரு போல. அதை வச்சு தான் இந்தப்பதிவே. அந்த வீடியோ கிடைக்கலைனு மலேசியா டன்னல் வீடியோ இணைத்தேன்.
----
மெட்ரோவுக்கான சுரங்க ரயில் நிலையங்கள் குடையப்படுவதில்லை ,அவை கட் அன்ட் கவர் முறையில் திறந்த சுரங்கமாக பாக்ஸ் டைப்பில் வெட்டப்பட்டு பின்னார் கூறை அமைத்து மூடிவிடுவார்கள்.
அப்படி வெட்டுவதற்கு முன்னர் அகலம் குறைவாக ,ஒரு சுவர் அளவுக்கு பள்ளம் வெட்டி உள்ளே கம்பி வலையுடன் கூடிய கான்கிரிட் (ரி இன்ஃபோர்ஸ்ட் கான்கிரிட்)சுவர் எழுப்புவார்கள். இதுவே டையாபிரம் வால் ஆகும்.பின்னர் சுவருக்கு இந்த பக்கம் மண்ணை வெட்டினால் மண் சரியாது.
டையாபிரம் என்றால் இரண்டாக பிரிப்பது ,தடுப்பது,நடுவில் இருப்பது என்று பொருள்.இது ஒரு பாதுகாப்பு அஅமைப்பு. ரயில் நிலையங்களுக்கு மெட்ரோவில் பயன்படுகிறது. பின்னர் இன்னும் வலுவேற்றி முழுசாக கட்டி முடித்துவிடுவார்கள்.
---
சரவணன் சொன்னது சரியே அதனை தான் பதிவிலும் சொல்லி இருப்பேன். கன ரக தொழில்களை குறிப்பிட்டு.நாம் செய்வது எல்லாம் இலகு ரக தொழில் வகை ஆகும்.
பாரத் ஹெவி எலெக்ட்ரிகல்ஸ் போல சில தொழில் நிறுவனங்களே கன ரகத்தொழிலில் இருக்கின்றன. மெட்ரோ ரயில் எஞ்சின் ,பெட்டிகள் கூட வெளிநாட்டு இறக்குமதி தான். உயர் ரக எஞ்சின்கள் இந்தியாவில் தயாரிப்பது இல்லை.
நான் ஒரு முறை மென்பொருள் தொழில் வளர்ச்சி எல்லாம் ஒரு தொழில் வளர்ச்சியே இல்லைனு சொன்னதுக்கு ஒரு கும்பலே வந்து கும்மிடுச்சு :-))
நன்றி வவ்வால்.
அந்த டயஃப்ரம் வாலை டன்னலுடன் சேர்த்து குழப்பிக் கொண்டிருந்தேன். அது ஸ்டேசனுக்கு என்றவுடன் இப்போது புரிகிறது.
பதிவர்களுள் மென்பொருள் வல்லுனர்கள் பலர் உள்ளனர், அதனால் அவர்கள் பொங்குவது இயல்பே!
நான் படிச்சிகிட்டே வரும் போது கதவை சாத்துறேன் போடா வெளியேன்னு பாஸ் சொல்லிட்டதால மூன்றாவதான பின்னூட்டத்தை இணைக்காமல் ஓடிட்டேன்.
மண் வெட்டுதல்
அள்ளுதல்,
வெளியேற்றுதல்,
முன் செலுத்துதல்
,தேவையான திசைக்கு ஏற்ப துளைத்தல்
பிடிமானம் உருவாக்குதல்,
துளைப்பான் கவசம் அளித்து பாதுகாப்பது.
தரையில் நிலை செய்தல், மற்றும் கட்டுப்பாடு
மேற்கூறையில் பாதுகாப்பு ஓடு அமைத்தல்
காற்றோட்டம் அளித்தல்,
மின்சாரம் அளித்தல்
ஆகிய அனைத்தினையும் ஒருங்கிணைத்து பணி செய்ய கூடிய வல்லமை உடையது நிலத்தடி சுரங்க துளைப்பான்.
என்று சொல்லும் போதே எனக்கு டியுப் லைட் எரிய ஆரம்பிச்சது.மிச்சத்தை வீட்டுலே போய் ஆற அமர படிக்கலாம்ன்னு வந்தா நேற்று பார்த்த Revenge of the electric car (2011) டாகுமெண்டரி பார்த்த பாதிப்பில் who killed the electric car என்ற டாகுமெண்டரி பார்த்தேன்.நம்ம ஊருக்கு ஓடி வந்து விட்ட ஜி.எம் கார் நிறுவனம் 1996ல் உருவாக்கி பின் திரும்ப பெற்றுக்கொண்டு காயலாங்கடை ஆக்கிய மின்சார காரின் பின்புலத்தில் உள்ள கார் தயாரிப்பாளர்களின் சுயநலம்,அமெரிக்க அரசியல்,அரேபிய ஷேக்குகளின் லாபி,பசுமை கனவு,மின்சார காரின் சாதக பாதகங்கள் என பலவற்றை இரண்டு படங்களும் விவரிக்கின்றன.
இதையெல்லாம் யோசிக்கும் போது புதிய தொழில்நுடபங்களில் முயற்ச்சி இல்லாத வெறும் ஆட்டுவிக்கும் பொம்மையாக பெட்ரோல் விலையேற்றம் பற்றியெல்லாம் இந்திய அரசியல் களம் இருக்கிறதென்றே தெரிகிறது.
நீங்கள் போடும் படங்கள் இங்கே மலைப்பாக இருக்கிறது.உடனே காரிகைக்கு ஓடி விடவேண்டாம்.பதிவுக்கும் படத்துக்கும் ஒரு ஒற்றுமையிருக்க வேண்டும்.கடிகார காரிகைக்கும் காருக்கும் என்ன தொடர்பு இருக்கிறது? காரிகை விளம்பரமாகவே இருந்தாலும் ஒமேகா கடிகாரத்துக்கு சிண்டி கிராபோர்டு முன்பு கொடுத்த போஸ் ஏகப்பொருத்தம்.
எங்கே சிரிப்பான் எங்கே சீரியஸ்ன்னே நீங்களே குழம்பிக்கொள்ளவும்.
நான் பாதியில் விட்ட பதிவை படிச்சு முடிக்கிறேன்.
நான் படிச்சிகிட்டே வரும் போது கதவை சாத்துறேன் போடா வெளியேன்னு பாஸ் சொல்லிட்டதால மூன்றாவதான பின்னூட்டத்தை இணைக்காமல் ஓடிட்டேன்.
மண் வெட்டுதல்
அள்ளுதல்,
வெளியேற்றுதல்,
முன் செலுத்துதல்
,தேவையான திசைக்கு ஏற்ப துளைத்தல்
பிடிமானம் உருவாக்குதல்,
துளைப்பான் கவசம் அளித்து பாதுகாப்பது.
தரையில் நிலை செய்தல், மற்றும் கட்டுப்பாடு
மேற்கூறையில் பாதுகாப்பு ஓடு அமைத்தல்
காற்றோட்டம் அளித்தல்,
மின்சாரம் அளித்தல்
ஆகிய அனைத்தினையும் ஒருங்கிணைத்து பணி செய்ய கூடிய வல்லமை உடையது நிலத்தடி சுரங்க துளைப்பான்.
என்று சொல்லும் போதே எனக்கு டியுப் லைட் எரிய ஆரம்பிச்சது.மிச்சத்தை வீட்டுலே போய் ஆற அமர படிக்கலாம்ன்னு வந்தா நேற்று பார்த்த Revenge of the electric car (2011) டாகுமெண்டரி பார்த்த பாதிப்பில் who killed the electric car என்ற டாகுமெண்டரி பார்த்தேன்.நம்ம ஊருக்கு ஓடி வந்து விட்ட ஜி.எம் கார் நிறுவனம் 1996ல் உருவாக்கி பின் திரும்ப பெற்றுக்கொண்டு காயலாங்கடை ஆக்கிய மின்சார காரின் பின்புலத்தில் உள்ள கார் தயாரிப்பாளர்களின் சுயநலம்,அமெரிக்க அரசியல்,அரேபிய ஷேக்குகளின் லாபி,பசுமை கனவு,மின்சார காரின் சாதக பாதகங்கள் என பலவற்றை இரண்டு படங்களும் விவரிக்கின்றன.
இதையெல்லாம் யோசிக்கும் போது புதிய தொழில்நுடபங்களில் முயற்ச்சி இல்லாத வெறும் ஆட்டுவிக்கும் பொம்மையாக பெட்ரோல் விலையேற்றம் பற்றியெல்லாம் இந்திய அரசியல் களம் இருக்கிறதென்றே தெரிகிறது.
நீங்கள் போடும் படங்கள் இங்கே மலைப்பாக இருக்கிறது.உடனே காரிகைக்கு ஓடி விடவேண்டாம்.பதிவுக்கும் படத்துக்கும் ஒரு ஒற்றுமையிருக்க வேண்டும்.கடிகார காரிகைக்கும் காருக்கும் என்ன தொடர்பு இருக்கிறது? காரிகை விளம்பரமாகவே இருந்தாலும் ஒமேகா கடிகாரத்துக்கு சிண்டி கிராபோர்டு முன்பு கொடுத்த போஸ் ஏகப்பொருத்தம்.
எங்கே சிரிப்பான் எங்கே சீரியஸ்ன்னே நீங்களே குழம்பிக்கொள்ளவும்.
நான் பாதியில் விட்ட பதிவை படிச்சு முடிக்கிறேன்.
ஏவுகணை,பொருளாதாரம்,பின்னூட்டங்கள் மூன்றையும் மெதுவா தொட்டு விடுகிறேன்.இல்லைன்னா பதிவைப்படிக்காமலே பின்னூட்டம் போடுறேன்னு பிராது கொடுப்பீங்க!
ஒரு பக்கம் மத அரசியலில் சிக்கிக்கொண்ட பாகிஸ்தானுக்கு Deterrent factor என்றும்,சீனாவுக்கு பொருளாதார போட்டி என்றும் சொல்லி விஞ்ஞான வளர்ச்சியென அடிப்படைக் கட்டமைப்பில் கவனம் செலுத்தாத பட்ஜெட் பெரும் துண்டு விழும் ராணுவ செலவுகள் பெயருக்கு மட்டுமே வலலரசு கனவு.
கப்பல் கட்டுமானத்துறையெல்லாம் இந்தியாவில் இருக்கவே செய்கின்றன.ஆனால் சுய தேவை பூர்த்தி இல்லாமலும்,உலக வியாபாரம் என்ற தொலைநோக்கு பார்வையற்றே இருக்கின்றன.
இந்திய கணினி தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் முந்தைய காலத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கலாமே.கிடைக்கும் சந்தர்ப்பங்களைக் கொண்டே முன்னேற வேண்டிய கட்டாய கல்யாண பொருளாதாரமல்லவா இந்தியா கொண்டிருக்கிறது.இன்னும் சில தலைமுறைக்கான காலகட்டத்தில் இன்னும் கொஞ்சம் மாற்றங்கள் வரும் என எதிர்பார்ப்போமே!
இன்னா பின்னூட்டங்கள் இரண்டு இரண்டா வந்து விழுகுது?
அருமையான விளக்கம்
ப.ரா,
வாங்க,நன்றி!
இதிலென்ன இருக்கு, நான் கூட டையாஃப்ரம் வால் பார்த்துட்டு அவ்ளோ முக்கியம் இல்லைனே விட்டுட்டேன்,மேலும் டன்னல் பத்தி எழுதினாப்போதும்னு இருந்தேன்,உங்களைப்போல யாராவது குறிப்பிட்டு கேட்கும் போது நமக்கும் விட்டத சேர்த்தாச்சுன்னு வசதியாபோயிடுது.
இப்படி கேள்விகள் கேட்பதை எப்போதும் வரவேற்பேன்,ஆனால் சொல்லியிருப்பதையே மீண்டும் கேட்கும் போது தான் முழுசா படிய்யான்னு சொல்வேன் ,சில பேர் காண்டாயிடுறாங்க. :-))
ஹி...ஹி இந்த இடத்தில ஒரு உண்மைய சொல்லிடுறேன், டையாஃப்ரம் வால்னு குறிப்பா பேரு கவனிக்கவே இல்லை ,விளக்கத்த மட்டும் படிச்சுட்டு இது ஒரு பாதுகாப்பு சுவர்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன், நீங்க பேர குறிப்பிட்டு சொன்னபிறகு தான் கவனிச்சேன் இந்த சுவத்துக்கும் பேரு வச்சு இருக்காங்க என்பதே கவனத்தில் வந்துச்சு.
ஆமாம் நிறைய பேரு மென்பொருளில் இருப்பவங்க பதிவில் இருப்பதால் அது மட்டுமே நாட்டுக்கு போதும்னு நினைக்கிறாங்க. எதாவது சொன்னா பொங்கிடுறாங்க, அவங்க நான் பொங்கனு ஒரே பொங்கலோ பொங்கல் தான் போங்க.
----------------
ராஜ்,
வாங்க,நன்றி!
நீங்க தான் ரோபோ போல படிக்கிறவர் ஆச்சே :-))
ஒரு வழியா ட்யுப்லைட் எரிய ஆரம்பிச்சுடுச்சா அப்போ பிரச்சினை இல்லை :-))
எல்லா இடத்திலயும் எல்லாத்தையும் சொல்லுங்க, இப்போ கார்,பெட்ரோல்னு வண்டிய வேற பக்கம் இழுங்க :-))
அமெரிக்க கார் சந்தை அரசியல் பெரும் அரசியல் அதை அப்புறமா பார்க்கலாம்.
பதிவுக்கும் ,படத்துக்கும் சம்பந்தம் பேச தரகர கூப்பிடுங்க :-))
இதே வேலைய சிலர் செஞ்சிட்டு இதான் மக்களுக்கு பிடிக்குதுன்னு சொல்லுறாங்க, படம் மட்டும் தான் இருக்கும் ,பதிவில சரக்கே இருக்காது.சில அல்லக்கைஸ் நாங்க டைம் பாசுக்கு தான் பதிவே படிக்கிறோம், இதுவே போதும்னு வேற சப்பை கட்டுதுங்க, அவர்களை கலாய்க்கவே கடிகார காரிகை எல்லாம்.
ஒமேகா விளம்பரம் எல்லாம் சொல்லுங்க, ஜே.பி சிமெண்ட் விளம்பரம் பார்க்காதீங்க, பிகினில கடலில் குளிச்சிட்டு வரும் யுவதிய காட்டி ஜே.பி சிமெண்ட்னு விளம்பரம்ம் ஓடுது.
நமீதா டி.எம்.டி ராட் வாங்க சொல்லுது :-))
---
கப்பல் கட்டுறாங்க எவ்ளவு பெரிய கப்பல்? அதை எல்லாம் கப்ப்ல்னு சொன்னா சீனாக்காரன் மூக்கால சிரிப்பான் :-))
லைட் மோட்டார் வெசல் வகையில வருமானே சந்தேகம்.மேலும் எஞ்சின், கியர், ஏன் கப்பல் கட்ட தேவையான உலோக தகடு கூட இறக்குமதி தான். இப்போ தான் இந்திய கடற்படைக்காக செயில் கப்பல் கட்ட உலோக தகடு தயாரிக்கவே ஆரம்பிச்சுள்ளது.காரணம் மற்ற நாடுகள் ராணுவத்திற்கு என உலோக தகடுகள் தற ஏக கெடுபிடி.ரஷ்யா மட்டுமே தரும்,அதுவும் ஒரு கோட்டா வச்சு குறிப்பிட்ட அளவே. விரிவா குர்ஷ்கோவ் விமானம் தாங்கி கப்பல் பற்றி சொல்லும் போது சொல்கிறேன்.
அவ்வளவு ஏன் மெட்ரோ ரயில் எஞ்சின், பெட்டி இன்ன பிற எல்லாமே இறக்குமதி தான். நம்ம நல்ல தொழில் வளர்ச்சி தான் இல்ல?
------------------
விஜயகுமார் , நன்றி, வணக்கம்.
nice post
மிகவும் நேர்த்தியான கட்டுரை..
நிறைய தகவல்களை ஒருங்கிணைத்து கலக்கலாக தந்திருக்கிறீர்கள் வவ்வால்.
மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
திரைப்படங்கள் பற்றியும் கூறியிருப்பதுதான் ஹைலைட்..!!
பதிவுலகில் பயனுள்ளதாக எழுதும் குறைவான மனிதர்களில் நீங்களும் ஒருவர்..!!
வாழ்த்துக்கள் வவ்வால் ஜி..! தொடரட்டும் மக்கள் பணி! :))
நேற்று பின்னூட்டத்துக்கு பின்னூட்டம் நீங்க போட்டதுல ஒன்று விட்டுப்போச்சு.நான் சுவாமிநாதனின் பசுமை புரட்சி காலத்தை சொன்னா நீங்க ராபர்ட் கிளைவ்தான் உரம் கொண்டு வந்தான்னு பழைய பஞ்சாங்கம் பாடுறீங்க!ராபர்ட் கிளைவ் காலம் தொட்டு மரபணு மாற்றுப்பயிர்களின் தீவிரமும்,விவசாயிகளின் தற்கொலைகளும் இருந்ததா என்ன?சொல்றது சரியா இருந்தாத்தான் கேட்போம்.தப்பா சொன்னா நாட்டாமை தீர்ப்பை மாத்தி சொல்லுன்னு திரும்ப சொன்னா சிலர் கோன் ஆயிடறாங்க குச்சியாயிறாங்கன்னு ப.ரா கிட்ட ஏன் சாடை பேசுறீங்க.இந்தக் காலத்தில் பெண்கள் யாரும் சாடை பேசுவதில்லைன்னு நீங்க குத்தகைக்கு எடுத்துக்கிறீங்களாக்கும்!
கார்,பெட்ரோல்ன்னு இங்கேயே பேசுவதன் காரணம் வரம்புகளற்ற பின்னூட்டமென்பதாலும் உங்க கடைக்கு தேறும் சிலர் கடைசியா என்ன சொல்லியிருக்கீங்கன்னுதான் பார்ப்பாங்க.இங்கேயே சொல்வதால் ஒரு வேளை அங்கேயும் போய் கார்,பெட்ரோல்ன்னு கூட சாத்தியமிருக்குது.நான் அங்கேயே போய் பின்னூட்டம் போட்டா நீங்களே போய் பின்னூட்டம் போடுவீங்களோ என்னமோ.
எனக்கு இரண்டு நாளா இந்த அமெரிக்க பசங்க மேலேயே ஒரு கடுப்பு.(கடுப்புன்னு நல்ல வார்த்தையெல்லாம் தமிழில் இருக்குது தெரியுமில்ல.)
கடுப்பு ஏனென்று கேட்டால் ஒரு மின்சார கார்தொழில் நுட்பத்தை கண்டு பிடிச்சதுமில்லாமல் 5000 கார்களை சந்தைக்குள் விட்டும் காரண காரியமில்லாமல் காரை திரும்ப பெற்று காயலாங்கடைக்கு அனுப்பிட்டானுங்களே பாவிகள்ன்னுதான்.
ஜி.எம் காரன் மறுபடியும் ஒரு வண்டியை கண்டுபுடிச்சிருக்கான்.பெட்ரோலும் ஊத்திக்கோ,பாட்டரியிலும் கார் இயங்கும்ங்கிற மாதிரி.பார்க்கலாம் இதுவாவது தேறுமான்னு.
தலைக்குள்ள என்ன சுத்துதோ அதுக்குத்தான் பின்னூட்டம் போடமுடியும்.துளைப்பானெல்லாம் தெரிஞ்சா உங்ககிட்டே ஏன் விண்ணப்பம் அனுப்பறேன்!
அருள்,
வாங்க,நன்றி!
--------
சுரேகாஜி,
வாங்க,நன்றி!
இன்னும் கொஞ்சம் தகவல்களை சேர்க்க நினைச்சு விட்டுட்டேன்,பதிவு பெருசாபோயிடுச்சு, (ஏற்கனவே பெருசா எழுதி கொல்லுறேன்னு சொல்றங்க) வேற எங்கேயாவது பிட்டா ஓட்டிற வேண்டியது தான்.
நண்பர் ராஜ நடராஜன் தான் இதுக்கெல்லாம் காரணம், ராவோட ராவா எழுத வச்சுட்டார் :-))
ஹி...ஹி வாரத்திற்கு 2,3 னு டிவிடி பார்க்கிறேன், எங்கேயும் சொல்லிக்க வாய்ப்பில்லை, அதான் கிடைச்ச கேப்பில செறுகிவிட்டேன், நீங்க அதை ஹை லைட்னு சொல்லுறிங்க,அப்போ இப்படி குத்து மதிப்பா எதாவது செஞ்சா ஹைலைட்டாகிடுமா? இது தெரியாம நான் இம்மாம் நாளா தடவிக்கிட்டு இருந்தேனே அவ்வ்வ்!
பயனுள்ளதாக இருக்கா ,நீங்க ஒருத்தராவது நம்ம பக்கம் இருக்கீங்க ,மொக்கைனு சொல்லுறாங்க மக்கள் :-))
ஹி..ஹி எம்.பி, எம்.எல்.ஏ ரேஞ்சில என்னை மக்கள் பணியாற்ற சொல்லுறிங்களே அடுக்குமா ஜி!
நன்றி!
--------------
ராஜ்,
வாங்க, நன்றி!
நான் எங்கே ராபர்ட் கிளைவ் காலத்தில அப்படி ஆச்சுன்னு சொன்னேன் ,அப்படி சொல்லவில்லையானு உங்களை கேட்டேன்.
அப்புறம் எம்.எஸ்.சுவாமி காலத்தில மட்டும் மரபணு விதை இருந்துச்சா...நாட்டாமை தீர்ப்ப மாத்துன்னு இப்போ நான் சொல்வேனாக்கும் :-))
ப.ரா கிட்டே எங்கே சாடை,காடை எல்லாம் சொன்னா நேரடியா சொன்னேன்,பதிவப்படிக்காம ,சொன்னதையே திருப்பி சொல்லுவதை,அப்படி சில மக்கள் இருக்காங்க தானே. நீங்க ஏன் அதுக்கு ஃபீலிங்ஸ் ஆகுறிங்க,அதெல்லாம் படிக்காம சொல்றவங்களை சொன்னது.
வரம்பு,பிரம்பு எதுவும் இல்லை தான், ஆனால் அதெல்லாம் நாம கார்,பெட்ரோல்னு பதிவு போடாமல் இருந்தால் விரிவா பதிவு போட்டுக்கொண்டு இருக்கும் போது,அங்கே எல்லாம் விட்டாச்சேன்னு சொன்னேன்.
அங்கே போய் போட்டா பதில் சொல்வேனானு கேட்டால், பதில் சொல்வேன்,அந்த பதிவு காலத்திலேயே கேட்கப்பட்டால் , புதுசா நான்கைந்து போட்ட பிறகு ஃப்ளாஷ் பேக்கில் போனால், எப்படி சொல்வாங்க்?
அமெரிக்க காரனுங்க மேல ஆரம்பத்திலேயே அந்த காண்டு என்கிற கடுப்பு வந்திருக்கணும் :-))
அவங்க செய்கிற கார் மற்றும் பெட்ரோல் அரசியல அவ்வப்போது சொல்லிக்கொண்டு தானே இருக்கேன்.காணொளி கண்ட பிறகு தான் லைட் எரிய ஆரம்பிச்சு இருக்கு போல :-))
ஜி.எம் கு முன்னாடியே ஹோண்டா சூடா போண்டா போட்டு விற்க ஆரம்பிச்சுட்டாங்க,அவங்களுக்கு போட்டி கொடுக்க தான் ஜி.எம் இப்போ இறங்கி இருக்கணும், ரொம்ப நாளா மாற்று சக்தி கார்கள் பத்தி பதிவு போடணும்னு வெயிட்டிங்கல இருக்கு ,பார்ப்போம்.
உங்க தலைக்குள்ள சின்ன கவுண்டர் விட்ட பம்பரம் சுத்துதா :-))
அதுக்கு ஏத்தாப்போல பின்னூட்டம் போடுறேன்னு என் தலைய உருட்டப்பார்க்கிறிங்க போல அவ்வ்!
நல்ல அருமையான தகவல் பகிர்வுக்கு நன்றி
//பதிவர்களுள் மென்பொருள் வல்லுனர்கள் பலர் உள்ளனர், அதனால் அவர்கள் பொங்குவது இயல்பே!
//
மெக்கானிக்குகளுக்கும், பொறியாளர்களுக்கும் வேறுபாடு அறியாதவர்கள்.
அதுவும் இப்ப புதுசா வேலைக்கு சேரும் மெக்கானிக்குகளுக்கு ஹூண்டாய் காருதான், ஹோண்டா காரு மட்டுந்தான் கழட்டி மாட்டுவேன்னு வீராப்பு வேற! வாட்டர் சர்வீஸ் (prod support work) பண்ணச் சொன்னா வேற ஷெட்டுக்குப் போயிருவேன், அங்க 40% கூலி சாஸ்தின்னு மிரட்டல் வருது :(
பொது மாத்து போட வருபவர்களுக்கு: நானும் பத்து வருசங்களுக்கு முன்னால Praful Bidwai rediff-ல எழுதியதைப் பார்த்துப் பொங்கியவன்தான்.
வவ்வால்,
சினிமா, கவிஜ, சிந்தி சிரிக்கும் சந்திப்புகள், அரசியல், ... என்ற கதம்பதத்திற்கு மத்தியில், இளைப்பாற எப்போதாவது இப்படி சில தகவல் தீவுகள் கிடைக்கிறது. இவைகளே தமிழ் இணயத்தில் இன்னும் நம்பிக்கை வைக்க உதவுகிறது.
ஜாப் வெல்டன் வவ்வால்
பதிவுலகில் பயனுள்ளதாக எழுதும் குறைவான மனிதர்களில் நீங்களும் ஒருவர்..!!
சினிமா, கவிஜ, சிந்தி சிரிக்கும் சந்திப்புகள், அரசியல், ... என்ற கதம்பதத்திற்கு மத்தியில், இளைப்பாற எப்போதாவது இப்படி சில தகவல் தீவுகள் கிடைக்கிறது. இவைகளே தமிழ் இணயத்தில் இன்னும் நம்பிக்கை வைக்க உதவுகிறது.
மணி மகுடத்தில் இரண்டு வைரக்கல்.
http://en.wikipedia.org/wiki/The_Core இந்தப் படமும் அப்படித்தாங்க. ஆனா இது அடீஈஈஈஈஈஈஈஈஈ ஆழம் வரைக்கும் போவாங்க.
கீதப்பிரியன்,
வாங்க,நன்றி,வணக்கம்.
---------
பொட்டி ,
வாங்க, என்னமோ சொல்லுறிங்க, உங்களுக்கு பெட்ரோ மாக்ஸ் லைட்டே தான் வேணுமா ... "ஆல் இன் ஆல் அழகு ராஜா "ப.ரா தான் வந்து சொல்லணும், அவரு வீல் அஹ் சிற்பி மாதிரி தட்டி தட்டி பெண்டு எடுக்கிற மெக்கானிக், பார்த்து சாக்கிரதை :-))
------
ஆஹா கல்வெட்டு,
வாங்க,வணக்கம்,நன்றி!
உங்க உளியின் ஓசைய கேட்க "துளைப்பான் "வச்சு துவைச்சா தான் வருவீங்க போல :-))
ஆனாலும் நீங்க என்னை ரொம்ப புகழுறிங்க(வவ்வாலுக்கு புகழ்ச்சி புடிக்காதாம்ல....ஒலக மகா நடிப்புடா சாமினு சொல்லுவாங்க சிலர்)
தமிழ் இணையத்தில் நிறைய தகவல் தீவுகள் இருக்கலாம்..நீங்களே அப்படியாகப்பட்டவர் தான் என்னமோ தெரியல அமைதியா ஆக்கிட்டிங்க.
மறுபடியும் உங்க உளியை தீட்டிக்கிட்டு வாங்க கல்வெட்டின் சொல்வெட்டுகளை பின்னூட்டமாக மட்டும்ல்லாமல் பதிவாகவும் பார்க்கணும்.
நன்றி!
---------
ஜோதிஜி,
வாங்க,நன்றி!
அது என்ன சொல்லிவச்சாப்போல கல்வெட்டுப்பின்னாடியே வரிங்க :-))
இரண்டு வைரக்கல்லா ,அப்போ ஆளுக்கு ஒன்னு எடுத்துக்கலாம் :-))
எல்லாப்புகழும் துளைப்பான் போட சொல்லி துவைச்சு எடுத்த ராச நடைக்கே!
---------
இளா,
வாங்க,நன்றி!
நீங்க சொன்னப்படமும் நல்லா இருக்கும் போல தெரியுதே, கதை சுருக்கம் பார்த்தால் ஆர்மெகெடான் போல இருக்கு.சி.டி கவர் படம் பார்த்து இருக்கேன், சரி இது எப்படியான படம்னு தெரியலைனு வாங்கலை ,அடுத்த தபா வாங்கிட வேண்டியது தான்.
ஜர்னி துரு சென்டர் ஆப் தி எர்த், டீப் ரைசிங், இன்னும் சில சுரங்க படம் இருக்கு, ஆனால் அதெல்லாம் பயணிகள் ரயில் படம் இல்லியேனு விட்டுட்டேன்.
இப்போ ரிட்லி ஸ்காட்டின் புரொமெத்தியாஸ்னு வந்திருக்காம்,பார்த்திங்களா,படம் எப்படி? டிவிடி கிடைக்குதானு பார்த்து வாங்கணும்.
நீங்க முன்னாடியே ராபர்ட் கிளைவை வம்புக்கு இழுத்ததால் கிளைவ்தான் உரத்தைக் கொண்டு வந்து இந்தியாவிலே கொட்டிட்டாரோன்னு நினைச்சேன்.
நல்ல புள்ளயா பயோடீசல் வரைக்கும் ஓடிப்போய் பதில் சொன்னதுக்கு நன்றி.ஆனால் நீங்க சொல்ற மாதிரி ஹோண்டா முந்திகிட்டதால் ஜி.எம் போட்டியா மின்சார காருக்கு தாண்டியதான்னு தெரியல.ஆனால் முன்னாடி ஜி.எம் நிறுவனம் 5000 மின்சார காரை காயலாங்கடைக்கு திரும்ப வாங்கிப் போட்டு விட்டதால் டெஸ்லா மோட்டார்ஸ் என்ற நிறுவனம் போட்டியில் இறங்கியதால் ஜி.எம் இறங்கியது.ஜப்பானின் நிசான் நிறுவனமும் போட்டியில் இறங்கியது.இப்ப இருக்குற காரின் கம்பஸ்டன் எஞ்சினை எடுத்துட்டு மின்சார பேட்டரி வச்சுத்தாரேன் என்று கிரீக் அப்பா(Greg Abbott)என்ற கார் மெக்கானிக்கும் சேர்ந்த போட்டி மைதானம்.இது 2011ம் வருட நிலவரம்.இப்போதைய நிலைமைக்கு அப்படி ஒன்றும் மின்சார கார் பூம் பூம் மாடாக இருப்பதாக தெரியல.
மின்சார கார்ன்னா இப்படியிருக்கனும்!
http://www.teslamotors.com/roadster
நீங்களும்தான் ஒரு காரிகையை கார்ல நிறுத்தி வச்சிருக்கீங்களே!சாடை ப.ராவுக்கே கூட இருக்கலாம்.ஆனால் பீலிங்ஸ் எனக்குத்தான்.எசப்பாட்டு பாடினா பாட்டோடு வரிகளைப் படிச்சிட்டுப் பாடுன்னு எனக்குத்தான் சொன்னீங்க.
இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை மாதிரி இருக்குற பக்கமெல்லாம் திரும்பி பார்த்தால் அமெரிக்காகாரனே பரவாயில்லைன்னுதான் தோணுது.புதுசா கண்டுபிடிச்சாலும் அமெரிக்காதான்.ஷேக்குகளோடவே இன்னும் ஒரு நூற்றாண்டு நோம்பு கும்பிடலாம்ன்னுதான் நினைச்சாலும் அமெரிக்காவேதான்.இந்தியப் பெட்ரோல் விலைக்கே நீங்க அமெரிக்காதானே ஒப்பீட்டுக்கு ஓடுறீங்க...ஹி....ஹி....
மாற்று சக்தி கார்கள் பற்றி பதிவு போடறதுக்கு முன்னாடி முடிஞ்சா நான் சொன்ன Revenge of the electric car டாகுமெண்டரி பார்க்கிறீங்க.முடியலைன்னாலும் பரவாயில்லை விக்கிபீடியா துணைக்கு வரும்.
http://en.wikipedia.org/wiki/Revenge_of_the_Electric_Car
நீங்க வேற!பம்பரம் விட்ட ஆளுக்கே இப்ப பம்பரம் விடுறது எப்படின்னு மறந்து போயிருக்கும்.காலம் கடிகார காரிகை வரை முன்னேறிடுச்சு தெரியுமோன்னேன்!
பதிவும்,பின்னூட்ட வடையும் நீங்க சுட்டாலும் மாங்கு மாங்குன்னு தொழிலாளர்களும் தொழில்நுட்ப வல்லுனர்களும் கட்டி எழுப்பிய கட்டிடத்தை நோகாமல் நொங்கு தின்னு ரிப்பன் வெட்டறதுமில்லாமல் இது இன்னாரால இன்ன இன்ன தேதிக்கு திறந்து வைக்கப்பட்டதுன்னு சொல்லி நினைவுச்சின்னமும் எழுப்பி விடறமாதிரி பின்னூட்டத்துல என்னை ரிப்பன் வெட்ட வச்சதுக்கு நன்றி.
ராஜ்,
வாங்க,நன்றி!
உங்களுக்கு புரியறதுக்குள்ள,எனக்கு மறந்துடும் போல இருக்கு :-))
அப்புறம் நான் பேசுறது ஹைப்பிரிட் கார் பற்றி நீங்க சொல்லுறது எலெக்ட்ரிக் கார் பத்தி.
இப்போ தனி எலக்ட்ரிக் காருக்கு மார்க்கெட் இல்லை.பெட்ரோல் + எலெக்ட்ரிக், அல்லது ,அழுத்தக்காற்று, ஹய்ட்ரஜன் என பல மாற்று செய்றாங்க.
ஹோன்டா இன்சைட் உலகின் முதல் மாஸ் புரோடக்ஷன் ஹைபிரிட் கார்.
ஃபோர்ட்,ஜி.எம்,டொயோட்டா எல்லாம் களத்தில் இருந்தாலும் முதலில் வணிக ரீதியாக விற்பனையை ஹோன்டா ஆரம்பித்துவிட்டது.
விரிவா அப்பாலிக்கா சொல்லுறேன்.
// பின்னூட்டத்துல என்னை ரிப்பன் வெட்ட வச்சதுக்கு நன்றி.//
சுத்தம், பதிவின் முதல் வரியிலேயே ரிப்பன் வட்ட வச்சா ,அதைப்பார்க்காமல் பின்னூட்டதில பாருங்க, முழுசா படிக்க சொன்னா ஒட்டகம் போல ப்க்கீர்ர்ர்...ப்க்கீர்ர்னு செறும வேண்டியது :-))
அய்யோ!அய்யோ!பெட்ரோலை உபயோகிக்காத எந்த எரிபொருளும் ஹைபிரிட் வகையைச் சாரும்.முக்கியமாக மின்சார கார்கள் ஹைபிரிட் வகையைச் சார்ந்தவை.
A hybrid vehicle is a vehicle that uses two or more distinct power sources to move the vehicle.[1] The term most commonly refers to hybrid electric vehicles (HEVs), which combine an internal combustion engine and one or more electric motors.
கோனார் நோட்ஸ் உதவி விக்கிபீடியா.
http://en.wikipedia.org/wiki/Hybrid_vehicle
இந்த ஊர்ல இருந்தும் நான் ஒட்டகம் செறுமி பார்க்கவில்லை.இப்பத்தான் முதல் தடவையா பார்க்கிறேன்:)
பாட புஸ்தகத்தில்
நுழைய வேண்டிய பதிவு . .
பாராட்டுக்கள்
ராஜ்,
வாங்க,
முடியலை அவ்வ்வ்! எலெக்ட்ரிக் கார் தான் ஹைபிரிட்னு சொல்லிட்டு போட்டு இருக்க கோனார் நோட்ஸ் ஐ நீங்களே படிக்கலைனா எப்படி :-))
சரி விடுங்க உங்களைப்பொறுத்த வரைக்கும் எலெக்ட்ரிக் கார் தான் ஹைபிரிட் :-))
----
கு.பெ,
பாடப்பொஸ்தவமா சரியாப்போச்சு ...அதில கேலிச்சித்திரம் வரையுர வேலை எல்லாம் உங்களுதான்னா :-))
அப்புறம் ஹைபிரிட் கார்னா என்னனு ராச நடராசருக்கு சொல்லிக்கொடுக்கிறது நான் சொன்னா பூ வா னு சொல்லலாம் அப்புறம் மலர்னு சொல்லலாம் னு சொல்லுறார் :-))
வவ்!விட மாட்டீங்க போல இருக்குதே!உங்களுக்கு என்னதான் வேணும்!எண்ணதானே வேணும்?மின்சார காரும் ஹைபிரிட் வகயில் சேருமென்றே சொல்கின்றேன்.நீங்க போட்ட பயோ டீசலில் ஓடினாலும் ஹைபிரிட் வகையைச் சார்ந்ததே.
Hybrid energy is apart from any sustainable energy like petrol.
கோனார் நோட்ஸ் போட்டா தப்புன்னு நீங்க சொல்றதாலே இது நானே போட்டுகிட்ட ராஜ நோட்ஸ்:)
அய்யோ ராசா ,
ஆளைவிடுங்க...
எலெக்ட்ரிக் காருக்கு சொன்னதை சப்பைக்கட்டுறேன்னு சொல்லிக்கிட்டு ..பெட்ரோல் ஐ சஸ்டெயினபிள் எனர்ஜினு அடுத்து ஒரு சொதப்பல் செய்யுறிங்களே ... முடியலை அவ்வ்!
இதுக்குத்தான் மெட்ரோ போகலியான்னு கேட்டீங்களாக்கும்:)
Sustainable:adjective...
avoiding using up natural resources
இனி நீங்களாச்சு!ஆக்ஸ்போர்டு டிக்ஸனரியாச்சு.ஆளை விடுங்க சாமி.
ராஜ்,
ஹா ...ஹா ..ஹி..ஹா ..ஹா ஊ ...ஊ ..ஊவ்வ் :-))
சூப்பர் !!!
செந்தழலாரே,
வாங்க வாங்க, கண்டு கனக்காலம் ஆச்சு, நலமா?
ஒரு வாசகம் என்றாலும் திருவாசகம்னு சொல்றது இதானா?
பாராட்டுக்கு நன்றி! அடிக்கடி வாங்க!
உங்கள் பதிவுகள் அருமை
நீங்க என்ன தொழில்நுட்பம் செய்றீங்க
Post a Comment