Thursday, September 27, 2012

திரும்பிப்பார்-1


 (ஹி..ஹி...இப்படித்தான் திரும்பி பார்க்கணுமாம்)


 மண்,மக்கள்,மொழி,கலாச்சாரம்,மதம் ,அரசியல் இவற்றினடிப்படையில் வரலாற்றின் கடந்த கால பக்கங்களை திரும்பிப்பார்க்கலாம் என ஒரு ஆசை, நான் திரும்பிப்பார்த்ததை உங்களுடனும் பகிரவே இப்பதிவு , எத்தனைப்பதிவுகள் போகும் என தெரியாது, எனவே நேரம் இருக்கும் போதெல்லாம் தொடர்வேன், மேலும் காலவரிசைப்படி இல்லாமல் ஒரு நான் லீனியராகவே இருக்கும், கி.மு 3000 ஆண்டினைப்பேசிவிட்டு அப்படியே சமகால நிகழ்வுக்கோ,அல்லது ஏதேனும் ஒரு நிகழ்வுக்கோ தாவிவிடுவேன், எனவே நீங்களாகவே கால வரிசையை ஆங்காங்கே தொடர்பு படுத்திக்கொள்ளவும்.

குழப்புமே என நினைக்கலாம், ஆனால் தொடர்ச்சியாக கால வரிசையில் சொல்லும் போது சில ஒத்த நிகழ்வுகள் வேறு காலத்தில் நடந்திருந்தாலும் ஒப்பிட முடியாது, மேலும் ஒரே மாதிரியான நிகழ்வுகளே ஒரு பதிவு முழுவதுமாக பேசும் நிலை வரும், எனக்கும் ரேண்டமாக நிகழ்வுகளை பிடித்து போவது சுவையாக இருக்கும்(ஹி...ஹி நான் எப்போதும் அங்கு கொஞ்சம்,இங்கு கொஞ்சம் என மாற்றி மாற்றித்தான் படிப்பேன்)

முன்னுரை போதும் திரும்பிப்பார்ப்பதை ஆரம்பிப்போம்.மானிடவியல்,வரலாறு ஆகியவற்றை படிக்கும் அனைவரின் கண்ணிலும் அடிக்கடி சிக்கும் ஒரு சொற்றொடர் "ஆசியா மைனர் பகுதி" என்பதாகும், காரணம் மனித குல நாகரீகம் ,இனக்குழு இந்த பகுதியில் இருந்து தான் உலகின் பல பகுதிகளுக்கும் பரவியது என்றோ அல்லது இவ்வழியே தான் மேலை உலகம் கீழை உலகினை தொடர்பு கொண்டது என்றோ, மனித இனப்பரவலின் மையம் என்றோ ஏசியா மைனர் நிலப்பரப்பினையே பெரும்பான்மை அறிஞர்கள் சுட்டுவார்கள்.

இதற்கு மாற்று கருத்தும் உண்டு, ஏசியா மைனருக்கே இன்னொரு இடத்தில் இருந்து தான் மனிதர்கள் இடம் பெயர்ந்தார்கள் என்பது. அதனை பின்னால் காணலாம்.

ஏசியா மைனர் என்ற பெயரிடலே ரோமனிய/கிரேக்க நாகரீகம் வளர்ந்த பின் தான் துவங்கியது. ஏன் எனில் ரோமானிய /கிரேக்க வரலாறு,புவியியல் வல்லுனர்கள் தான் முதன் முதலில் உலக வரைபடம், நாடுகளுக்கு பெயர் வைப்பது என்றெல்லாம் ஆரம்பித்தார்கள்.

இலத்தின் மொழியில் தான் உலகம் முழுவதும் உள்ள நாடுகள் ,மக்கள்,மொழி எல்லாம் பெயர் சூட்டப்பட்டு முதன் முதலில் ஒரு ஆவணப்படுத்தலாக துவங்கியது.எனவே வட்டார மொழி,நாட்டில் வேறு பெயர் இருந்தாலும் இலத்தின் வழக்கே பயன்ப்பாட்டில் உள்ளது.

ஏசியா மினாரெஸ்  என இலத்தினில் பெயரிடப்பட்டது, மினாரெஸ்= பூதம் , ஆனால் வழக்கில் மைனர் என்றால் சிறிய ,இளைய என்பதால் , பிற்காலத்தில் ஏசியா மைனர் என்றால் சின்ன ஏசியா ,ஏசியாவிற்கு முன்னால் உள்ள பகுதி என குறிக்கப்பயன்ப்பட்டது.

இலத்தின் வழக்கில் தந்தையை மேக்சிமஸ் என்றும் மகனை மைனர் என்றும் சேர்த்து ஒரே பெயரிம் அழைப்பது உண்டு.

அகஸ்டஸ் மேஜரின் மகனை அகஸ்டஸ் மைனர் என்பார்கள், பின்னாளில் அரசன் ஆனதும் தனிப்பெயர் சூட்டிக்கொள்வார்கள்.

இவ்விடம் இப்போது உள்ள துருக்கியியின் ஆசிய பகுதியாகும்,இது கருங்கடலுக்கும், மத்திய தரைக்கடலுக்கும் இடையே உள்ள தீபகற்ப நிலமாகும்.

இதனை அனடோலியா என்றும் சொல்வார்கள், அப்படி ஒரு தேசமிருந்தது,அதோடு

 Bithynia ,Cappadocia,Galatia,Phrygia,Pontus,Aeolia, Aeolis ,Lycia,Lydia,Ionia, ஆகிய நாடுகளும் மற்றும்,Ephesus,Ilion, Ilium, Troy ஆக்கிய நகரங்களும் இருந்தன.

பிற்காலத்தில் ஒட்டமான் ஆட்சியாளர்கள் வீழ்ந்த பின் இளம்துருக்கியர்கள் கேமல் அட்டாதுர்க் தலைமையில் புரட்சி செய்து , சுதந்திர மற்றும் குடியரசு துருக்கியை ஒருங்கினைந்து இப்போது உள்ள வடிவில் உருவாக்கினார்கள்
-------------
கஜினி முகமதின் படை எடுப்பு:

காலிபா அல்-வாலித் பின் அப்துல் மாலிக்கால் கசன்நாவி (இதுவே கஜினி ,கசன்வாடி எனப்பட்டது)பிரதேசத்திற்கு முகமது பின் காசிம் ஆளுநராக நியமிக்கப்பட்டு ,இஸ்லாமிய தேசத்தினை விரிவு படுத்த ஆணையிடப்பட்டார். இன்றைய பாக்கிஸ்தானில் உள்ள Daibul, Raor, Uch and Multan ஆகிய பகுதிகளை வென்று காலிபாவிடம் நல்ல பெயரை வாங்கினார். அல்-வாலித் இறப்புக்கு பின் அல்-சுலைமான் பின் அப்துல் மாலிக் காலீபாவாக வந்தார். அந்த நேரத்தில் முகமது பின் காசிம் சிந்த் மாகணத்தில் உள்ள தாகிர் என்னும் பிரதேசத்தின் மீது படை எடுத்து வென்றார்,அம்மன்னனின் இரண்டு பெண்களையும் கைப்பற்றி வந்தார்.

(முகமது பின் காசிம்)

கலிபா சுலைமான் அப்பெண்களை கன்னித்தன்மையுடன் தனக்கு அனுப்புமாறு கட்டளையிட்டார். முகமது பின் காசிமும் வடை போச்சே என வருந்தினாலும் ராவோடு ராவாக அப்பெண்களை மஜாக் செய்து விட்டு ,காலிபாவிற்கு அன்பளிப்பாக அனுப்பினார், காலிபா லேசுப்பட்டவரா கன்னித்தன்மையுடன் இருக்காங்களான்னு சோதனை செய்து இல்லைனு கண்டுப்பிடிச்சு , பெண்களை விசாரிச்சார், எல்லாம் காசிம் செய்த வேலைன்னு சொன்னதும்,காசிமை புடிச்சு வர சொல்லி வெட்டிட்டார் ..தலையை தான்.

காலிபா  என்பவர்கள் இறைத்தூதாரின் வழி வந்தவர்கள் செய்யுற புனித வேலை இதானா?

முகமது பின் காசிம் 17 வயதிலேயே ஆளுநராக நியமிக்கப்பட்டு , பாரசீகத்தின் சில பகுதிகள், மேலும்,.சிந்த், பஞ்சாப் என சில பகுதிகளை வென்று இஸ்லாமியா விரிவாக்கத்தினை சிறப்பாக செய்த ஒரு படைத்தளபதி ,இத்தனைக்கும் வயது 17 தான், அவரை கைது செய்து தலையை துண்டிக்கும் போது 21 வயது தான்.ஆனால் அதனை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் தனக்கு கன்னிப்பெண்களை அனுப்பவில்லை என்று கலிபா சுலைமான் , காசிமை கொன்றார். இது தான் புனித மார்க்கத்தின் அடிப்படை :-))

பின்னர் அப்போது அடிமையாக இருந்த துருக்கியை பூர்வீகமாக கொண்ட அல்பத்கின் இனக்குழுவினை சேர்ந்த சுப்குத்கின் என்பவரை கசநாவி பகுதி ஆட்சியாளராக நியமித்து ,இஸ்லாமை பரப்பவேண்டும், அவருக்கு நேர்மையுடன் நடந்து கொள்ளவும் ஆணையிட்டார் காலிபா. அல்பத்கின் வம்சத்தில் சுப்குத்கிந்-3 என்பவர் (977-97) கசனாவி பிரதேசத்தின் மூன்றாவது அரசராக ஆட்சிக்கு வந்தார், அவரது முதல் மகன் தான் கஜினி முகமது.
தனது தேசத்தினை விரிவுப்படுத்த சுப்குத்கின் பெஷாவரை தலைமையிடமாக கொண்டு ஆண்டு வந்த ஜாட் மன்னர் ஜயபாலன் மீது படை எடுத்தார் ஆனால் அப்போரில் ஜயபாலன் வெற்றி பெற்றார். மீண்டும் படை எடுக்க நினைத்தாலும் அதற்குள் சுப்குத்கின் நோய்வாய்ப்பட்டு மரணமடைந்தார் , சாகும் தருவாயில் கஜினி மீது நம்பிக்கையில்லாததால் அவரது தம்பி இஸ்மாயிலை அரசனாக்கிவிட்டு இறந்ததார்.
(கஜினி முகமது)

கஜினி பின் படை திரட்டி தம்பியை கொன்றுவிட்டே ஆட்சியில் அமர்ந்தார். முன்னர் அவரது தந்தை ஜயபாலனுடன் போரிட்டப்போது அவருக்கு உதவியாக போரில் கலந்து கொண்ட கஜினிக்கு ஜெயபாலனுடன் ஏற்பட்ட தோல்வி உறுத்திக்கொண்டே இருந்ததால் பழி வாங்க மீண்டும் போரிட முடிவு செய்தார்.

பெஷாவர் படை எடுப்பு:

1001 இல் ஜெயபாலன் மீது படை எடுத்து பெஷாவருக்கு சென்றார், கடுமையாக நடைப்பெற்றப்போரில் 15,000 வீரர்களை கொன்று ஜயபாலனையும்,அரச குடும்பத்தினர் 15 பேரையும் கைது செய்து கூடவே  5,00,000 பெஷாவர் மக்களையும் அடிமைகளாக பிடித்துக்கொண்டு கஜினிக்கு சென்றார்.

பின்னர் மன்னர் ஜயபாலனின் உறவினர்கள் பேச்சு வார்த்தை நடத்தி 2,50,000 தினார்கள் மீட்பு தொகையாக கொடுத்து மன்னரை மீட்டு சென்றார்கள். நாடு இழந்து ,தோல்வியுடன் வாழ விரும்பாத ஜயபாலன் , தீக்குளித்து தன்னை மாய்த்து கொண்டார், இது அக்கால ஜாட்,ராஜ்புத்திர அரச வழக்கம், தங்களுக்கு இழிவு ஏற்பட்டதாக கருதினால் உயிர் துறந்துவிடுவார்கள்.

தமிழ் மன்னர்களும் போரில் வீரமரணம் அடையாமல் , இழிவு ஏற்பட்டால் வடக்கிருந்து உயிர் துறப்பார்கள்.

வடக்கிருத்தல் என்றால் என்ன?

வடக்கு திசை நோக்கி அமர்ந்து , அவர்கள் முன்னால் அவர்கள் உடை வாளினை  கூர் முனை கழுத்தினை நோக்கி இருக்குமாறு நட்டுவிட்டு, அன்னம், தண்ணீர் தவிர்த்து உண்ணா நோன்பு இருப்பார்கள் , பசி,தாகத்தால் உடல் தளர்வுற்று சாயும் போது ,வாள் கழுத்தில் பாய்ந்து இறப்பார்கள்.

சங்க கால தமிழ் மன்னன் ,சோழன் கரிகால் வளவன், வெண்ணி என்ற ஊரில் நடைபெற்ற போரில் சேரமான் பெருஞ்சேரலாதனையும், பாண்டிய மன்னன் ஒருவனையும், வேளிர்குலத்தைச் சார்ந்த பதினொரு சிற்றரசர்களையும் வென்றான். அப்போரில் சேரமான் பெருஞ்சேரலாதனின் மார்பில் பாய்ந்த வேல் அவன் மார்பைத் துளைத்து முதுகையும் புண்ணாக்கியது. தன் முதுகில் புண்பட்டதால் அவன் நாணமுற்று வடக்கிருந்து உயிர் துறந்தான். அதைக் கேள்வியுற்ற வெண்ணிக் குயத்தியார், இப்பாடலில், சேரமான் பெருஞ்சேரலாதனின் செயலை வியந்து, கரிகாலனை நோக்கி, “வேந்தே, போரில் வெற்றி பெற்றதால் நீ வெற்றிக்குரிய புகழ் மட்டுமே அடைந்தாய். ஆனால், சேரமான் பெருஞ்சேரலாதன் உனக்கு வெற்றியை அளித்தது மட்டுமல்லாமல், உன்னால் உண்டாகிய புண்ணுக்கு நாணி, அவன் வடக்கிருந்து பெரும்புகழ் பெற்றான். ஆகவே, அவன் உன்னைவிட நல்லவன் அல்லனா?” என்று கேட்கிறர்.


வெண்ணிகுயத்தி எனும் சங்ககால பெண்பாற் புலவர் பாடிய அப்பாடல்,

"நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி
வளிதொழில் ஆண்ட உரவோன் மருக!
களிஇயல் யானைக் கரிகால் வளவ!
சென்றுஅமர்க் கடந்தநின் ஆற்றல் தோன்ற
5 வென்றோய், நின்னினும் நல்லன் அன்றே
கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை
மிகப் புகழ் உலகம் எய்திப்
புறப்புண் நாணி, வடக் கிருந்தோனே."


இதன் மூலம் சங்கால தமிழ் மன்னர்கள் உயிரினும் மேலாய் மானத்தினை கருதியது புலப்படும்.


ஆனந்த பாலன் மீது படை எடுப்பு;(கஜினி முகமதின் தர்பார்)

கி,மு 1008 இல் ஜயபாலனின் மகன் ஆனந்த பாலன் படைகளை உருவாக்கி , பெஷாவரை மீண்டும் தனது ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார், இதனைக்கேள்விப்பட்டு கஜினி பெஷாவர் மீது படை எடுத்தார்.

இம்முறை ஆனந்த பாலனுக்கு உதவியாக குவாலியர், கன்னூஜ், கோக்ராஸ்,உஜ்ஜயின்,ஆஜ்மீர்,டெல்லி மன்னர்களும் வந்தார்கள், வந்தார்களே ஒழிய யாரிடையேயும் ஒற்றுமையே இல்லை, போருக்கு யார் தலைமை தாங்குவது என்பதில் இருந்து, யாருக்கு முக்கியத்துவம் என்பது வரையில் கவுரப்பிரச்சினை எழுந்து ஒற்றுமையின்றி இருந்தார்கள்.

படை எடுத்து வந்த கஜினிக்கு இம்முறை ஆச்சர்யம் நிறைய படைபலத்துடன் ஆனந்த பாலன் இருப்பதை பார்த்து சண்டையை துவக்க தயங்கி ,படையுடன் எல்லையில் முகாமிட்டு நிற்கவேண்டியதாயிற்று. இரு தரப்பும் போரிட தயங்கி, யாராவது முதலில் ஆரம்பிக்கட்டும் என நினைக்க ,அப்படியே 40 நாட்கள் போயிற்று, அதற்குள் ஆனந்த பாலன் முகாமில் கோஷ்டி சண்டை ஏற்பட்டு ஆளுக்கு ஒரு பக்கம் பிரிய நினைத்தார்கள், இடையில் மற்றவர்களின் பேச்சினைக்கேட்காமல் கோக்ராஸ் படைகள் கஜினி மீது தாக்குதலை துவக்கி போரிட ஆரம்பித்துவிட்டார்கள், கோக்ராஸ் ஆரம்பத்தில் கடுமையாக போரிட்டு 5000 கஜினி வீரர்களை கொல்லவும் செய்தார்கள், பின்னர் மற்ற மன்னர்களும் களத்தில் குதிக்க கஜினி படை பலமாக அடிவாங்க துவங்கியது, அப்போது எதிர்பாராதவிதமாக ஆனந்த பாலன் அமர்ந்திருந்த யானையின் மீது அம்பு தாக்கி காயமுற ,யானை திமிறிக்கொண்டு கட்டுப்பாடில்லாமல் போர்க்களத்தினை விட்டு ஓடிவிட்டது, இதனை பார்த்த மற்ற மன்னர்களுக்கும், வீரர்களுக்கும் குழப்பம் வரவே பல வீரர்களும் போர்க்களத்தினை விட்டு பின் வாங்கலாயினர். இதனை பயன்ப்படுத்திக்கொண்டு ,கஜினி மீண்டும் உற்சாகத்துடன் போரிட்டு எஞ்சியவர்களை தோற்கடித்து போரினை வென்றான்.

இப்போரில் சரணடைந்த சுமார் 20,000 இந்து போர் வீரர்கள் வெட்டிக்கொள்ளப்பட்டார்கள். பெஷாவர் மீண்டும் கஜினி முகமதின் ஆட்சிக்கு கீழ் வந்தது.

இப்போருக்கு பின்னர் தான் இந்து மன்னர்களிடம் ஒற்றுமை இல்லை, எளிதாக தோற்கடிக்கலாம் என புரிந்து கொண்ட கஜினி மற்ற சிறிய தேசங்களையும் தனித்தனியாக படை எடுக்கவும் , மேலும் தனது படை எடுப்பு முறையும் மாற்றிக்கொண்டு படை எடுக்கலான்.

இந்தியாவில் குளிர்காலத்தில் மன்னர்களும், மக்களும் அவ்வளவாக விழிப்புடன் இருப்பதில்லை, என்பதையும் , அவர்களுக்கு விழித்துக்கொண்டு படை திரட்ட வாய்ப்பில்லாமல் திடீர் என தாக்க வேண்டும் என்றும் புரிந்துக்கொண்டான். இந்தியாவில் படை எடுத்து போரிட்டாலும் சூரியன் மறைந்த பின் போரிட மாட்டார்கள் இது ஒரு போர் மரபு. ஆனால் கஜினி மாலை வேலைகளிலும்,இரவிலும் திடீர் என தாக்குதல் நடத்துவதுண்டு. போர் குறித்த எம்முன்னறிவிப்பும் இல்லாமல் இரவில் திடீர் என படையுடன் நகருக்குள் நுழைந்து தாக்கும் உத்தியாலேயே 17 முறை இந்திய பகுதிகள் தாக்குதல் நடத்த முடிந்தது.

பெஷாவர் என்பது கஜினியின் அண்டை நாடு என்பதாலும் இந்திய பகுதிக்கு நுழைய தேவையான வழி என்பதாலும் அதனை பிடிக்க ஆர்வம் காட்டினான். ஆனால் மற்ற படை எடுப்புகளின் போது ஒரு குறிப்பிட்ட நகரை குறிவைத்து தாக்கி கொள்ளை அடித்துவிட்டு , அடிமைகளாக மக்களையும் பிடித்து கொண்டு உடனே நாடு திரும்பிவிடுவது வழக்கம். இந்திய மண்ணில் அதிக பட்சமாக இரண்டு மூன்று நாட்களுக்கு மேல் அவன் படை இருக்காது.காரணம் மற்ற நாட்டில் இருந்து உதவிக்கு படை வந்து பெரிய சண்டையானால் சமாளிப்பது கடினம் என்பதாலே.

கஜினி படை எடுத்த முறை இந்திய போர் முறைகளுக்கு மாறானது ,

#இந்திய மன்னர்கள் போர் புரிய போகிறார்கள் என்றால் முன்னரே யுத்த அறிவிப்பு செய்து தகவல் கொடுப்பார்கள்,

#மேலும் சூரிய உதயம் முதல் அஸ்தமனம் வரையிலே போர் நடக்கும். போர் களத்தில் சரணடைந்தவர்களை கொல்ல மாட்டார்கள்.

#போருக்கு சம்பந்தமில்லாத அப்பாவி பொது மக்களை துன்புறுத்த மாட்டார்கள்.

#பெண்களை தொடக்கூட மாட்டார்கள்.முதியவர்கள், குழந்தைகள்  ஆகியோருக்கு எக்காரணம் கொண்டும் தீங்கு விளைவிக்க மாட்டார்கள்.
-------------------------------------------------------------
சங்ககால போர் மரபு:

வெட்சி நிரை கவர்தல் ; மீட்டல் கரந்தையாம்
வட்கார் மேல் செல்வது வஞ்சி ; உட்காது
எதிர்ஊன்றல் காஞ்சி ; எயில்காத்தல் நொச்சி
அது வளைத்தல் ஆகும் உழிஞை - அதிரப்
பொருவது தும்பையாம் ; போர்க்களத்து மிக்கோர்
செரு வென்றது வாகையாம்

முதலில் ஓலை அனுப்பி எச்சரித்தல்,

பின் வெட்சிப்பூச்சூடி பகைவரின் ஆநிறை,ஆடுகள் என கவர்வர்.

எதிரி மன்னன் பதில் அளிப்பதாயின் ,

கரந்தை பூச்சூடி ஆநிரைகளை மீட்க போரிடுவர்.

வஞ்சி பூச்சூடி படை எடுத்து செல்வர்.

காஞ்சி பூச்சூடி எதிரிகள் நாட்டுக்கு வராமல் தடுப்பர்.

நொச்சி பூச்சூடி கோட்டையை காப்பார்கள்.

உழிஞை பூச்சூடி கோட்டையை முற்றுகை இடுவார்கள்.

தும்பைப்பூச்சூடி இரு தரப்பும் போர்க்களத்தில் ஒருவருக்கு ஒருவர் மோதுவார்கள்.

வாகைப்பூச்சூடி வென்றவர்கள் களிப்பார்கள்.

இதுவே அக்கால தமிழ் மன்னர்கள் போர் மரபு ஆகும்.
------------------------------------------------------

ஆனால் கஜினி  படை எடுப்பின் போது கொள்ளை அடிப்பதுடன் முடிந்தவரையில் எத்தனை பேரை கொல்ல முடியுமோ அத்தனைப்பேரை கொண்டு விடுவது வழக்கம்.

ஊரில் இருக்கும் பெரும்பாலான ஆண்களை கொன்றுவிட்டு பெண்களை அடிமைகளாக கைப்பற்றுவது வழக்கம்.

பின்னர் எஞ்சியவர்களை அடிமைகளாக ,அவனது நாட்டுக்கு கைப்பற்றி சென்றுவிடுவார்.

ஒரு அடிமையின் விலை அப்போது 10 தினார்களாம், ஒவ்வொரு முறை படை எடுப்பின் போதும் அடிமைகளை விற்ற வகையிலே சில லட்சம் தினார்கள் வருமானம் கிடைப்பதுண்டாம்.இப்படி ஏகப்பட்ட இந்துக்களை அடிமைகளாக ஆப்கானிஸ்தான், கசநாவி பகுதிகளில் விற்றதால் அப்பகுதிகளே இந்தியாவின் ஒரு நகரம் போல விளங்கியது என வரலாற்று ஆசிரியர்கள் சொல்கிறார்கள்.

மற்ற படை எடுப்புகளை அடுத்து காணலாம்.

திரும்பிப்பார்த்தல் தொடரும்...

-----------
பின்குறிப்பு;

தகவல், படங்கள் உதவி,

கூகிள் ,கூகிள் புக்ஸ், விக்கி, ஆர்க்கியாலஜி ஆன் லைன், ஹிஸ்டரி ஆப் இந்துஸ்தான் -அலெக்ஸாண்டர் டோவ். மேலும் பல இணைய தளங்கள்.நன்றி!
-------------


49 comments:

சார்வாகன் said...

வணக்கம் சகோ நல்ல முயற்சி,

வரலாறும் அறிவியலும் ஒரு சமூகத்தின் இரு கண்கள். வரலாறு கடந்தகாலத்தின் தவறுகளில் இருந்து பாடம் கற்க, அறிவியல் நிகழ்,எதிர்கால சிக்கல்களை சமாளிக்க தேவைப்படுகிறது.
**********
அசினைத் திரும்பி பார்க்க்லாம்.ஷகீலவாவை சுற்றிப் பார்க்கணும் ம்ம்ம்ம்ம்ம்!!

*************
//அகஸ்டஸ் மேஜரின் மகனை அகஸ்டஸ் மைனர் என்பார்கள், பின்னாளில் அரசன் ஆனதும் தனிப்பெயர் சூட்டிக்கொள்வார்கள்.//

இதே போல் மைனர் குஞ்சுவுக்கும் பெயர் விளக்கம் உண்டா?? ஹி ஹி பொது அறிவு வளர்க்கத்தான்!!
********
உம்மையாது கலிஃபா அப்துல் மாலிக் இபின் மர்வான்(646_705) ஜெருசலேம் டோம் ஆஃப் ராக்[பொ.ஆ 691] கட்டியவர்.இவர் பற்றி பல அரிய த்கவல்கள் உண்டு. இவர் பற்றி குறிப்பாக எழுதினால் விவாதிப்போம்.
[அரபியில் இபின் என்றால் தமிழில் மகன் அல்லது இலத்தினில் மைனர் என் பொருள்]
****
முகமது பின் காசிம்(695_715) இந்தியாவின் சிந்து மாகாணத்தின் மீது 712ல் படை எடுத்டு வெற்றி கொண்டார்.இவரை போட்டுத் தள்ளிய கலிஃபா சுலைமான் இபின் அப்துல் மாலிக்[674_717] முந்தைய மாலிக்கின் மகன்.
****
//இது தான் புனித மார்க்கத்தின் அடிப்படை :‍))//

இது ஹலால் தலை!!
****
//இதன் மூலம் சங்கால தமிழ் மன்னர்கள் உயிரினும் மேலாய் மானத்தினை கருதியது புலப்படும்.//

ஹி ஹி அத்னால்தான் தோற்று உயிர் விட்டார்கள்.
அதனால்தான் இபோதிய அரசியல் தலைகள் மானத்தை விட உயிரையே ...ஹி ஹி...........

//#பெண்களை தொடக்கூட மாட்டார்கள்.முதியவர்கள், குழந்தைகள் ஆகியோருக்கு எக்காரணம் கொண்டும் தீங்கு விளைவிக்க மாட்டார்கள்.//

எதிர்பாராத நேரத்தில் திடீடென தாக்கி ஆண்களைக் கொன்று பெண்களை அடிமைகளாக்கி ,ஆசை நாயகி ஆக்கி மக்கள் தொகையை பெருக்கினால் மட்டுமே சாம்ராஜ்யம்,மார்க்கம் வளரும்!! இதை அன்றே கூறினார் "அ ஆ இ ஈ".


****
தொடருங்கள்!!!

நன்றி!!

குட்டிபிசாசு said...

அங்கங்கு தாவிச் செல்வேன் என்று சொல்லிவிட்டு ஒரேயடியாக அனுமார் போல, ஆசியாமைனரிலிருந்து சிந்து வரை தாவிட்டிங்களே. காலரீதியாக சம்பவங்களை சொல்லாவிட்டால் தவறில்லை, ஆனால் இடரீதியாக, கருத்துரீதியாக என எதாவது ஒரு ஒற்றுமை இருந்தால், சொல்லப்படுவது நீரோட்டம் போல இருக்கும். படிக்கவும் சுவாரசியமாக இருக்கும் என்பது அடியேனின் கருத்து.

//ஆசியா மைனர் பகுதி//
ஒட்டாமன் அரசு மத்தயதரக்கடலில் நடத்திய கொள்ளைகள், கொலைகள், அடிமைவாணிபம் முதலியவற்றையும் கொஞ்சம் படித்துச் சொல்லுங்கள்.

//காலிபா என்பவர்கள் இறைத்தூதாரின் வழி வந்தவர்கள் செய்யுற புனித வேலை இதானா?//

இறைதூதர் என்பவரே வன்புணர்வு,கொள்ளை, கொலைகளுக்குப் பெயர்போனவர் அவர் வழியில் வந்தவர்களிடம் நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள். புளிமரத்தில் பூசனியா வரும்.

//#போருக்கு சம்பந்தமில்லாத அப்பாவி பொது மக்களை துன்புறுத்த மாட்டார்கள்.

#பெண்களை தொடக்கூட மாட்டார்கள்.முதியவர்கள், குழந்தைகள் ஆகியோருக்கு எக்காரணம் கொண்டும் தீங்கு விளைவிக்க மாட்டார்கள்.//

(மத) பொஸ்தகம் வைத்து பொழப்பு ஓட்டுபவர்கள் கூட (போர் பற்றி) இதையே தான் சொல்கிறார்கள்.
இவையெல்லாம் (புத்தக) ஏட்டிலே இருக்கிறது. (உலக) நடைமுறையில் எல்லாரும் (உண்மையாக) கடைபிடித்திருப்பார்களா என்பது (முற்றிலும்) சந்தேகமே? (வரவர அடைப்புக்குறி போடாட்டி கையெல்லாம் ஒதருது)

//ஒரு அடிமையின் விலை அப்போது 10 தினார்களாம், ஒவ்வொரு முறை படை எடுப்பின் போதும் அடிமைகளை விற்ற வகையிலே சில லட்சம் தினார்கள் வருமானம் கிடைப்பதுண்டாம்.இப்படி ஏகப்பட்ட இந்துக்களை அடிமைகளாக ஆப்கானிஸ்தான், கசநாவி பகுதிகளில் விற்றதால் அப்பகுதிகளே இந்தியாவின் ஒரு நகரம் போல விளங்கியது என வரலாற்று ஆசிரியர்கள் சொல்கிறார்கள்.//

அவர்கள் அடிமைகளாக பிடிக்கப்பட்டிருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை அவர்களாகவே இந்துமதத்தின் சாதியக்கொடுமை தாளாமல் கஜினிமுகம்மது பின்னர் பொட்டிபடுக்கையோடு ஆப்கானிஸ்தான் போய் இருப்பார்கள்.

வவ்வால் said...

சகோ.சார்வாகன்,

வாங்க,நன்றி!

கண்டிப்பாக அனைவரும் அவர்கள் பிறந்த மண்ணின் வரலாற்றினை அவசியம் அறிந்திருக்க வேண்டும்.
---------

மலையை சுற்றி தான் பார்க்கணும்@ஷகிலா
-------

மேஜர் குஞ்சுவின் பையனாக இருக்கும் :-))
-----------

காலிபா பற்றிய மேல் விவரங்களும் சரியே, இன்னும் முந்தைய காலிபாக்கள்,ஏன் காலிபா முறை ஒழிக்கப்பட்டது எல்லாம் பின்னர் வருகிறது.

இப்பதிவு கொஞ்சம் பழமையான காலம், அப்புறம் மத்திய காலம் என எல்லாப்பதிவிலும் கலந்து ஆனால் ஒன்றுக்கு ஒன்று பின்னர் தொடர்பு ஆகும்.

ஒரு நான் லீனியராக முயற்சிக்கிறேன்.

------

அன்பு மார்க்கம் அல்லவா எனவே ஹலால் கொலைகளை மதம் ஆதரிக்கிறது :-))

நன்றி!
-----------

குட்டிப்பிசாசு,

வாரும்,நன்றி!

//அங்கங்கு தாவிச் செல்வேன் என்று சொல்லிவிட்டு ஒரேயடியாக அனுமார் போல, ஆசியாமைனரிலிருந்து சிந்து வரை தாவிட்டிங்களே. காலரீதியாக சம்பவங்களை சொல்லாவிட்டால் தவறில்லை, ஆனால் இடரீதியாக, கருத்துரீதியாக என எதாவது ஒரு ஒற்றுமை இருந்தால், சொல்லப்படுவது நீரோட்டம் போல இருக்கும். //

அப்படி எழுதலாம் ஆனால் ஒரு பதிவு முழுக்க ஒற்றை சம்பவமாக இருக்கும் எனவே தான் நான்ன் லீனியராக போகிறேன்.

மீண்டும் ஆசிய மைனர் பகுதி, கிரேக்க, இலத்தின், பாராசீகம் என எல்லாம் வரும்.

அதாவது ஒவ்வொரு பதிவிலும் கொஞ்சம் பழங்காலம்,மத்திய காலம், அப்புறம் எனக்கு தோன்றும் ஏதேனும் ஒன்று என கலவையாக ,நான் லீனியரில் ஓடும்,

ஹி...ஹி குத்து மதிப்பாக நிறைய தளங்களில் படித்துவிட்டேன், எதுவும் குறிப்பு எடுக்கவில்லை,மேலும் எங்கே ஆரம்பிப்பது என குழப்பம், எனவே ஒரு கல்வையாக எழுதிப்பார்க்கலாம்னு பார்க்கிறேன்.

நீங்கள் சொன்ன ஓட்டமான்,அடிமை வியாபாரம் போர் எல்லாம் வருது.

------
//இறைதூதர் என்பவரே வன்புணர்வு,கொள்ளை, கொலைகளுக்குப் பெயர்போனவர் அவர் வழியில் வந்தவர்களிடம் நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள். புளிமரத்தில் பூசனியா வரும்.//

பூசணி வராது தான் ,ஆனால் காலிபா எல்லாம் நேர்மையானவர்கள் என மார்க்கப்பந்துக்கள் சொல்லுறாங்களேன்னு உதாரணம் காட்டினேன்.

//(உலக) நடைமுறையில் எல்லாரும் (உண்மையாக) கடைபிடித்திருப்பார்களா என்பது (முற்றிலும்) சந்தேகமே? (வரவர அடைப்புக்குறி போடாட்டி கையெல்லாம் ஒதருது)//

ஒரு கட்டிங் விட்டால் கை உதறல் போயிடும் :-))

மற்ற நாட்டு மன்னர்கள் எப்படி இந்தியாவில் போர் நெறிமுறைகளை கடைப்பிடித்துள்ளார்கள். நான் சொன்னது யுவான் சுவாங்கின் குறிப்பில் இருந்து.

அவரே சில போர்க்கள காட்சிகளை பார்த்து ஆவணப்படுத்தியுள்ளார், மேலும் இந்தியாவில் அந்நிய பயணிகளை அச்சுறுத்துவதும் அக்காலத்தில் இல்லையாம். இங்கும் கொள்ளையர்கள் எல்லாம்ம் உண்டு, மங்கோலியா, ஆப்கான் சில்க் ரூட்டில் நடைப்பெறும் வழிப்பறி அளவுக்கு இல்லை என நினைக்கிறேன்.
----------

ஹி..ஹி எல்லாம் தானாக கஜினிக்கு கோயிலை தொறந்து சிலையை ஒடைச்சு ,பொக்கிஷத்தினை கொடுத்துட்டு கஜினி பின்னாடியே போயிருக்கலாம் :-))


Anonymous said...

வவ்வால் சாரே !!! ஏன் இப்படி போட்டு குழப்பி அடிச்சிட்டீங்க ... நெஜமா சொல்றேன், தலைகீழாத் தொங்கினப் போல இருக்கு ... !!! எதாவது ஒன்னைத் தொட்டு இருக்கலாம், எல்லாப் பழத்திலும் வாயை வச்சிட்டிங்களே !!! புதுசாப் படிக்கிறவங்களுக்கு செமையாக் குழப்பும், நாளைக்கு சுபி வந்து முகமது காசிம் பற்றி சங்க இலக்கியத்தில் இருக்கின்றது என சொல்லிடப் போறாரு !!!

இந்தப் பதிவு நல்லதை நோக்கிப் போனாலும், நல்லா இல்லை, :(

Anonymous said...

இந்திய மன்னர்களும் போர்களில் கொள்ளை, கொலை, பாலியல் வன்புணர்வில் ஈடுப்பட்டுள்ளனர் சகோ. அதற்கான பல குறிப்புக்கள் உள்ளன ... !!! ஆனால் நேரம் சொல்லியே போர்களம் சந்தித்தனர் ... இஸ்லாமிய படையெடுப்பாளர்கள் அதனை செய்திருக்கவில்லை ...

நாய் நக்ஸ் said...

ஹாய்.....
தல வௌவால்...
எனாதிது ???

படிக்க முடியலை...

எனி வே....
உங்களால இன்னும் ஒரு....

சியர்ஸ்....வேற வழி இல்லை....

சியர்ஸ்....சியர்ஸ்....சியர்ஸ்....சியர்ஸ்....சியர்ஸ்....சியர்ஸ்....சியர்ஸ்....

இது உங்க பதிவின் பாதிப்பு.....

:-)))))))))))

நாய் நக்ஸ் said...

அது சரி.....

இனும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாஆஆஆஆஆ

அசின்.....???????????????????????????????????????????

நீங்க ஒரு வேலை பழைய ஒளி வட்ட பதிவரோ.....???????????

வவ்வால் said...

இக்பால்,

வாங்க,நன்றி,

இது ஒரு நான்-லீனியர் தொடராக எழுதும் பதிவு,வசதிக்கு ஆங்காங்கே சம்பவங்களை சேர்க்க,முன்னால்,பின்னால் செல்ல எளிதாக இருக்கும். ஒவ்வொன்றும் ஒரு டிராக் ,கூடவே ஆங்காங்கு சில தகவல்கள்,போக போகத்தான் ஒருங்கிணைப்பு புரியும். பாடப்புத்தகம் போல வரிசையாக சம்பவங்களை அடுக்கி செல்வதை மட்டும் படித்து பழக்கப்பட்டவர்களுக்கு ஆரம்பத்தில் குழப்பவே செய்யும்.

-------
இந்திய,தமிழ் மன்னர்களின் படை எடுப்பின் போது சில வரம்பு மீறல் இருந்து இருக்கலாம், ஆனால் அதுவே போர் முறை என வைத்துக்கொண்டதில்லை.

ஆனால் இஸ்லாமிய படை எடுப்புகளின் அடிப்படையே அது தான், பின்னால் விரிவாக வரும்.
---------

நக்ஸ் அண்ணாத்த,

படிக்க முடியலையா சந்தோஷம் :-))

என்னாது ஒளிவட்ட்மா, இங்கே இருள் வட்டம் தான் இருக்கு :-))


பதிவுல கிளுகிளுப்பா எதுவும் இல்லைனு சிலர் ஃபீல் செய்தாங்கன்னு படம் போட்டால் ,1000 கேள்வி கேளுங்க.

ச்சியர்ஸ்!!!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

கஜினி பற்றி வந்தார்கள் வென்றார்கள் புத்தகத்தில் படித்திருந்தாலும் அவரது ஆரம்ப கால படையெடுப்புகளை இப்போதுதான் அறிந்தேன்.

ராஜ் said...

வவ்வால் ,
பதிவு நான்-லினியர்ரா இருக்கு.. சங்க வரலாறு அப்புறம் இந்திய படை எடுப்பு பத்தி சொல்லறீங்க...ரெண்டையும் எப்படி இன்னைக்க போறேங்க என்று எனக்கு ரொம்ப ஆர்வமா இருக்கு..தொடருங்க..
இதுல கஜினி முகமது என்பவன் தானே 17 முறை இந்தியா மீது படை எடுத்து, கடைசி தடவை (18th Time) வெற்றி கொண்டார் ...???? இதை சொல் வழி செய்தியாக கேள்வி பட்டு இருக்கேன். இப்ப தான் தெரியுது , அந்த ஆள் முறை தாக்குதல் மட்டுமே நடத்திட்டு ஓடிட்டார் என்று ....
//17 முறை இந்திய பகுதிகள் தாக்குதல் நடத்த முடிந்தது.//

அஞ்சா சிங்கம் said...

ஆஹா வவ்வால் .பதிவு போகும் திசை எனக்கு நல்லா புரியுது ........கலக்குங்க தொடர்கிறேன் ..
கலிபா ஆட்சிமுறை பற்றி எழுதும்போது கண்டிப்பாக . செங்கிஸ்கான் கையால் அடிபட்டு இறந்த கலீபாவை மறந்து விடாதீர்கள் செம காமடியா இருக்கும் ..............................................
சங்ககால படையெடுப்பு வச்சி, கரந்தை , வஞ்சி, காஞ்சி ,உளுந்கை,நொச்சி,தும்பை, வாகை ,பாடான் பொதுவியல்,கைகிளை,பெருந்திணை,.................இதை மட்டுமே தனி பதிவாக போட்டிருக்கலாம் ..
...............................................................
கிரேக்க கடவுள்களுக்கும் பண்டைய தமிழ் கடவுள்களுக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கு .இங்கு இந்திரன் ..இந்திரவிழா கேள்விபட்டிருப்பீர்கள் என்று நினைகிறேன் . அங்கு அப்பல்லோ . கடலுக்கு ஒரு பொசைடன் .இங்கு திருமால் . அங்கு மெடுசா . இங்கு நாகம்மை ... பெண்பித்து பிடித்த கடவுள்கள் ரெண்டு இடத்திலும் உண்டு கதைகள் கூட ஏற தாள பொருந்தி வருவது போல் தெரிகிறது ..ஏதாவது சுட்டி கிடைத்தால் எனக்கு தந்து உதவ முடியுமா ..?

அஞ்சா சிங்கம் said...

இன்னும் பொதுவான கதைகள் கூட இருக்கு. இரண்டு இனமும் ஓரளவிற்கு அறிவியலில் நாட்டம் உள்ளதாகத்தான் இருந்திருக்கிறது . கடல் சார்ந்த பயணங்கள் கப்பல் கட்டும் முறை ஆகியவை பொதுவாக இவர்கள் திறன் படைத்தவர்கள் .அவர்கள் முன்னோர்கள் கடலில் மூழ்கிப்போன அட்லாண்டீஸ் நகரத்தை சேர்ந்தவர்கள் என்று ஒரு கதை உண்டு . நமக்கு மூழ்கி போன குமரிகண்டம் என்று கதை ..என்னமோ நானே இன்னும் தெளிவாக வில்லை .ரெண்டு இனத்திற்கும் முன்னர் கலாசார ரீதியாக ஏதாவது தொடர்பு இருக்குமோ என்று ஒரு சந்தேகம் .....

வவ்வால் said...

முரளி,

வாங்க,நன்றி,

இன்னும் நிரைய வரலாறு இருக்கு, நாம் பள்ளியில் மேலோட்டமான ஒரு சுருக்கத்தினை மட்டுமே படித்து வந்த்தோம். இணையத்தில் தேடினாலே நிறைய கிடைக்கும்.

-------
ராஜ்,

வாங்க ,நன்றி!

3000 ஆண்டுகளுக்கு முன் போனால் உலக மனித இனமே ஒன்றாக இருந்து பிரிந்தது புலப்படும், எனவே அனைத்து மனித இனக்குழுக்களுக்கும் ஒரு தொடர்பு உண்டு. மேலும் பின்னர் பிரிந்த போதும் மக்களிடையே கருத்து பரிமாற்ர நிகழ்ந்து கொண்டு தான் இருந்தது ,நாம் நினைப்பது போல் தனித்தனியாக யாரும் தொடர்பற்று இல்லை.

சிந்து சமவெளி நாகரீகத்தில் படிகளுடன் கூடிய குளம், பாதால சாக்கடை இருந்துள்ளது என்றால் அவர்கள் ஒன்றும் காட்டுவாசிகள் அல்ல என்பது புரியும் ,காலம் கிமு 1700, சிந்து நதிக்கு அந்த பக்கம் வரையில் ரோமானியர்கள் தாக்கம் இருந்துள்ளது. கிமு 233 இல் காஷ்மீரை தலைநகராக கொண்ட ஹர்ஷவர்தர் பாபிலோன் வரையில் சென்று கிரேக்க மன்னன்ன் செலுக்கஸ் நிக்கேடாரை வென்றுள்ளார். இரான் ,இராக் எல்லாம் அவர் ஆட்சியில்,அதன் விளைவே இந்து குஷ் மலைத்தொடரில் பாமியானில் புத்த சிலைகள் செதுக்கப்பட்டது.

எனவே கிமுவிலேயே மேற்கும் கிழக்கும் சந்தித்து கலாச்சார கலப்பு எல்லாம் ஆகிவிட்டது.

--------
கஜினி முகமது தாக்கிய முறை கொரில்லா தாக்குதலை போன்றது, சோம்நாத் கோயிலை இரவில் ,அனைவரும் நாட்டியம் ரசித்துக்கொண்டு இருக்கும் போது ,சுவரில் ஏணி போட்டு உள்ளே சென்று தாக்கியுள்ளார், கோயிலில் அப்போது 50,000 மக்களும், சில சிற்றரசர்களும் இருந்தாலும் ஆயுதமின்றி கோயிலில் இருந்துள்ளார்கள், விடிய விடிய அனைவரையும் வெட்டிக்கொன்றுவிட்டு கொள்ளையடித்துள்ளார்கள்.

2-3 நாள் தான் படை எடுப்பு பின்னர் வந்த வழியே ஓடிவிடுவது ,இதனை படை எடுப்பு என்பதை விட கொள்ளை தாக்குதல் என்று தான் சொல்ல வேண்டும்.

கஜினி படை திரும்பி செல்லும் போது ,ஆங்காங்கு உள்ள கிராம பஞ்சாயத்தின் ஊர்க்காவலர்களே அடித்துள்ளார்கள் அதனை கூட சமாளிக்க முடியாமல் ஓடியவர்களே, இதில் முக்கியமாக ஜாட் சமூகம் இடம் பிடித்துள்ளது.எனவே ஜாட் சமூகத்தினரை குறிவைத்து சில முறை கஜினி தாக்கியதும் நடந்துள்ளது.

வவ்வால் said...

அஞ்சா ஸிங்கம்,

வாரும் நன்றி!

நான் - லீனியராக இருக்கு புரியலைனு சிலர் சொல்லவும் குழம்பிட்டேன்,நல்ல வேளை உமக்கு புரியுது சொல்லிவிட்டீர்.

ஆசிய மைனரை வைத்து அந்த பக்கம் ரோமன்,கிரேக் மற்றும் மத்திய ஆசிய வரலாறு, அதில் இருந்து இந்தியா என வரலாற்றினை இணைத்து சொல்லவே இப்படி, ஒரே நேரத்தில் இரண்டு டிராக் தனி தனியாக போய் ஒரு பொது புள்ளியில் எல்லாம்ம் தொடர்புக்கு வந்துவிடும்.
----------

கிரேக்க ,ரோமானியர்களுக்கும் இந்தியாவிற்கும், மேலும் திராவிட நாகரீகத்துக்கும் தொடர்புள்ளது.

ஆசியா மைனரில் மனித நாகரீகம் துவங்கவில்லை, சைபீரியாவில் இருந்து மனித இனக்குழு ஒன்று புறப்பட்டு ஆசியா மைனர் வந்தது அவர்கள் வெள்ளை நிறத்தவர், அதே காலத்தில் எத்தியோப்பியாவில் கறுப்பு நிற மனித இனக்குழு உருவானது. இரண்டும் கலந்து ஒன்று கலக்காமல் தனி தனியாக என இரண்டு என உலகம் முழுக்க விரவியது என்பது ஒரு தியரி.

ஆரியர்கள் தான் ரோமன்,கிரீக் மக்கள் இது முதல் ஆரிய பரவலின் போது என சொல்கிறார்கள். அக்காலத்தில் கருப்பின மக்கள் இந்திய நிலப்பகுதிக்கு வந்து திராவிட இனக்குழுவாக ஆனார்கள் என சொல்கிறார்கள்.

இரண்டும் கலந்து ஆசிய மைனரில் ஒரு இனக்குழு, பின்னர் மீண்டும் கிரீக் ,ரோமனில் இருந்து ஆசிய மைனருக்கு வந்து கலப்பு செய்தார்கள் எனவும்.கிமு 1700 காலத்தில் சிந்து சமவெளி நாகரீகம் வீழ்ச்சியடையும் தருவாயில் இப்போதைய இராக் பகுதியில் இருந்து ஆரியர்கள் சிந்து சமவெளிக்கு வந்தார்கள் எனவும் சொல்கிறார்கள்.

இதன் மூலம் அக்காலத்தில் அனைவருக்கும் இடையே பொதுவான கருத்துபரிமாற்றம் நிகழ்ந்திருக்க கூடும்.

ஹோமரின் இலியட்,ஒடிசி, ராமாயணம்,மகாபாரம் எல்லாம் கிட்டத்தட்ட ஒத்து போகும்.ஏக்கிலஸ்= கிருஷ்ணன் , ஹெலன் =சீதை, பாரிஸ் என்ற இளவரசன் ஹெலனை கடத்தி வருவதால் தான் டிராஜன் சண்டையே, டிராய் நகரில் நடக்கும். டிராய் நகரம் ஆசிய மைனரில் உள்ளது.

ராம் என்ற பெயர் உலகம் முழுக்க பல நாகரீகத்திலும் உள்ளது கிரேக்க மன்னர்கள் ராம்சே-1,2 என்றெல்லாம் உள்ளார்கள், பிரமிட்டிலும் ராமயண கதை போன்ற சுவர் புடைப்பு சிற்பங்கள் உள்ளது.இரானில் ராமாயணம் ஒத்த ஓவியங்கள், சிற்பங்கள் உள்ளது.எனவே அங்கெல்லாம் ஆரிய தாக்கம் இருந்துள்ளது அறியலாம்.

சொராஷ்டிரர்களும் ஆரியர்களே, ஆரியன் என டாரியஸ் -1 இன் கல்வெட்டில் சொல்லியுள்ளார்.

கி.மு.1700 வரையில் சிந்து நதிக்கு இந்த பக்கம் ஆரிய கலப்பில்லாமல் பூர்வ குடி மக்கள் இருந்துள்ளார்கள்,அவர்களே திராவிடர்கள் எனப்பட்டுள்ளார்கள்.

எல்லா இன நாகரீகமும் கைக்கெட்டும் தொலைவில் இருந்துள்ளதால் சிந்தனை, கருத்துக்கள் பரிமாற்றம்ம் நிகழ்ந்திருக்கும்.

மேலும் கோன்டுவானா நிலம் என்ற தியரியின் அடிப்படையில் உலக கண்டம் எல்லாம் ஒரே நிலப்பரப்பாக இருந்து பின்னர் பிரிந்தன என்றும் சொல்கிறார்கள்,எனவே எல்லா மக்களும் ஒரே இடத்தில் இருந்தும் இருக்கலாம்.

-----------

http://www.pantheon.org/

http://www.archaeologyonline.net/artifacts/vedic-discoveries.html

http://www.britannica.com/EBchecked/topic/507905/ancient-Rome

மேற்கண்ட தளங்களில் நிறைய விவரங்கள் உள்ளன. இன்னும் பல தளங்கள் உள்ளது. எனது புக் மார்க்க்கில் தேடிப்பார்த்து சொல்கிறேன்.

ஆர்க்கியாலஜி ஆன் லைன் என்ற தளத்தில் ஆரியன், சிந்து சமவெளிப்பற்றி நிரைய தகவல்கள் உள்ளது, நம்பகமான தளமும் கூட.

ராஜ நடராஜன் said...

வவ்வால் சொன்னா நான் லீனியர்!
நடராஜன் சொன்னா காண்டக்ஸ்:)

பதிவு பல விசயங்களை தொட்டுச் செல்கிறது.வித்தியாசமான முயற்சி.

ராஜ நடராஜன் said...

நக்ஸ்!வவ்வால் இடம்,காலம்,அடையாளமெல்லாம் சொல்லி கடிதம் போட்டாரா இல்லையா:)

நாய் நக்ஸ் said...

ராஜ நடராஜன் said...
நக்ஸ்!வவ்வால் இடம்,காலம்,அடையாளமெல்லாம் சொல்லி கடிதம் போட்டாரா இல்லையா:)//////////////////

டாப் சீக்கரட்.!!!!!!!!

வவ்வால் said...

ராச நடராசரே,

வாரும்,நன்றி!

உங்களுக்கு எல்லாம் புரிய வைக்க தனியா கோச்சிங் கிளாஸ் தான் நான் போகணும்.

பதிவு- வினை

பின்னூட்டம் -எதிர்வினை.

எனவே வினைக்கு ,எதிர் வினை காண்டெக்ஸ்ட்டில் இருக்க வேண்டும் இல்லை எனில், அது செய்வினை ஆகிவிடும் :-))
--------

நக்ஸ் அண்ணாத்த,

என்னாதான் உங்க கணக்கு, ராச நடராசரோட ஏதோ உள்ளடி வேலை செய்யுறாப்போல இருக்கே.

ம்ம்ம்ம் ...நடக்கட்டும் ...நடக்கட்டும்.
----------

குட்டிபிசாசு said...

// கிமு 233 இல் காஷ்மீரை தலைநகராக கொண்ட ஹர்ஷவர்தர் பாபிலோன் வரையில் சென்று கிரேக்க மன்னன்ன் செலுக்கஸ் நிக்கேடாரை வென்றுள்ளார்.//

தலைவரே! ஒரு சந்தேகம். இது ஹர்ஷவர்தனரா அல்லது முதலாம் சந்திரகுப்தரா?

//கிரேக்க ,ரோமானியர்களுக்கும் இந்தியாவிற்கும், மேலும் திராவிட நாகரீகத்துக்கும் தொடர்புள்ளது.//

அஞ்சாசிங்கம் கேள்விக்கு ஒரு இடுகையா?

//கி.மு.1700 வரையில் சிந்து நதிக்கு இந்த பக்கம் ஆரிய கலப்பில்லாமல் பூர்வ குடி மக்கள் இருந்துள்ளார்கள்,அவர்களே திராவிடர்கள் எனப்பட்டுள்ளார்கள்.//

சிந்துசமவெளி நாகரீகமும் திராவிட நாகரீகம் தான். அதன் விட்டகுறை தொட்டகுறையாக பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தானில் திராவிட மொழி பழங்குடி இனத்தவரால் பேசப்படுகிறது.

//ஹோமரின் இலியட்,ஒடிசி, ராமாயணம்,மகாபாரம் எல்லாம் கிட்டத்தட்ட ஒத்து போகும்.ஏக்கிலஸ்= கிருஷ்ணன் , ஹெலன் =சீதை, பாரிஸ் என்ற இளவரசன் ஹெலனை கடத்தி வருவதால் தான் டிராஜன் சண்டையே, டிராய் நகரில் நடக்கும். டிராய் நகரம் ஆசிய மைனரில் உள்ளது.//
அக்லிஸ் கிருஷ்ணர் இல்லைங்க. அனுமாரு.

வவ்வால் said...

குட்டிப்பிசாசு,

வாரும்,நன்றி!

ஹி...ஹி ஹர்ஷர் இல்லை அது கனிஷ்கர், ஹர்ஷர் ஆறாம் நூற்றாண்டு பக்கம்.

இஷ் ,இஷ் என வந்ததால் ஒரு ஃப்லோல அப்படி போட்டுவிட்டேன்.

ஹர்ஷரும் ,கனிஷ்கர் அளவுக்கு சாதனை செய்து அதே பகுதிகளை பிடித்துள்ளார். ஆனால் கனிஷர்கர் தான் பாக்டீரியா எனப்படும் மெசபபடோமியா வின் பகுதி, பாபிலோன் எல்லாம் போட்டு தாக்கியவர்.
---------
பலுச்சிஸ்தானில் இருந்தவர்கள் நொமாடிக் டிரைபல் எனவே சொல்கிறார்கள். அப்பகுதி இப்போதைய ஆப்கனில் இந்து குஷ் மலைப்பகுதியில் வரும். இவர்கள் சிந்து சமவெளி மக்களை தாக்கும் வழக்கம் கொண்டவர்களாக இருந்துள்ளார்கள்.

குஷ் - கொலை செய்பவர்கள்.

இந்து குஷ் என்றால் இந்து பகுதி மக்களை கொல்பவர்கள், இம்மலைக்கு அப்பயெர் வரக்காரணம், கைபர்,போலன் கணவாய் மூலமே சிந்து சமவெளிப்பகுதிக்கு வர முடிவதால்.

---------
சிந்து சமவெளி என்பதை தான் சிந்து நதிக்கு இந்தப்பக்கம் என சொல்லி இருக்கேன்.சிந்து சமவெளி நாகரீகம் திராவிடர் நாகரீகம் என்றே சொல்லி இருக்கேன்.

---------

அக்கிலியஸ் அனுமார் இல்லை, கிருஷ்ணர் தான், அப்பொல்லோவுக்கும் கடல் தேவத்ஐக்கும் பிறந்த ஒரு மனிதன், மேலும் அக்கிலியஸுக்கு கால் பாதத்தில் தான் உயிர் என வரம், இப்போவும் மனிதனின் கால் பாதத்தில் உள்ள எலும்புக்கு அக்கிலியஸ் போன் என்று தான் பெயர்.

கால் பாதத்தில் பாரிஸ் விட்ட அம்பு பாய்ந்து தான் அக்கிலியஸ் இறப்பான்.மேலும் அக்கிலியஸ் எந்த அணிக்கு ஆதரவு அளிக்கிறானோ அந்த அணி வெற்றிப்பெறும் என்றெல்லாம் புராணம் சொல்லுது.

அதே சமயத்தில் அக்கிலியஸில் ஒரு கர்ணனும் இருக்கிறான்.

அக்கிலியசின் தலைமை மன்னன் உடன் கருத்து வேறுபாடு வந்து ,அவன் உயிரிரோடு இருக்கும் வரை போர்க்களம் வர மாட்டேன் என போரில் இருந்து விலகிவிடுவான்,பின்னர் தான் போரில் கலந்து கொண்டு இறப்பான்.

குட்டிபிசாசு said...

//அக்கிலியஸ் அனுமார் இல்லை, கிருஷ்ணர் தான், அப்பொல்லோவுக்கும் கடல் தேவத்ஐக்கும் பிறந்த ஒரு மனிதன், மேலும் அக்கிலியஸுக்கு கால் பாதத்தில் தான் உயிர் என வரம், இப்போவும் மனிதனின் கால் பாதத்தில் உள்ள எலும்புக்கு அக்கிலியஸ் போன் என்று தான் பெயர்.

கால் பாதத்தில் பாரிஸ் விட்ட அம்பு பாய்ந்து தான் அக்கிலியஸ் இறப்பான்.//

நீங்கள் சொல்வது மகாபாரதத்தில் வரும். துரியோதனன் கடைசியாக பீமனுடன் போர்புரிவதற்கு முன் நடக்கும் சம்பவத்துடன் ஒத்துப் போகும்.

குட்டிபிசாசு said...

சீவக (ஜீவக) சிந்தாமணி கதை பாரசீகத்தில் (தற்போதைய ஈரானில்) இருந்து வந்த கதை என்பதை எப்போதோ கேள்விப்பட்டேன். தெரிந்தால் சொல்லவும், தெரியாவிட்டால் விசாரித்துச் சொல்லவும்.

குட்டிபிசாசு said...

//அக்கிலியஸ் அனுமார் இல்லை, கிருஷ்ணர் தான், அப்பொல்லோவுக்கும் கடல் தேவத்ஐக்கும் பிறந்த ஒரு மனிதன், மேலும் அக்கிலியஸுக்கு கால் பாதத்தில் தான் உயிர் என வரம், இப்போவும் மனிதனின் கால் பாதத்தில் உள்ள எலும்புக்கு அக்கிலியஸ் போன் என்று தான் பெயர்.//

அக்கிலிஸ் பிறந்தவுடன் அவன் தாய் அவனை ஆற்றில் முக்கி எடுப்பாள். ஆற்றுநீர்பட்ட இடமெல்லாம் வைரம்பாய்ந்துவிடும். தாய் குழந்தையை பிடித்திருந்த குதிக்கால் மட்டும் வைரம்பாய்ந்திருக்காது. அதுதான் அவனுடைய பலகீனம். ஒருவருடைய/ஒரு பொருளுடைய பலகீனத்தை அக்கிலிஸ் ஹீல் என்பார்கள்.

துரியோதனன் கடைசியாக பீமனுடன் போருக்குப் போகும் முன், தாயிடம் ஆசி பெறவருவான். ஆற்றில் குளித்துவிட்டு நிர்வாணமாக வந்து, காந்தாரி அவன் உடலைப் பார்த்தாள் அவன் உடல் வஜ்ஜிரமாகிவிடும் எனச் சொல்லுவாள். அவள் சொன்னது போல் குளித்துவிட்டு வரும்போது நிர்வாணத்தைப் பார்த்து கண்ணன் சிரிப்பான். சிரித்தவுடன் துரியன் கீழே இலையைக் கட்டிக்கொள்வான். உடல் வஜ்ஜிரமானாலும் இடுப்புக்குக் கீழான இடம் அவனுக்கு பல்கீனமாகிவிடும். பிறகு அவன் சண்டையில் தொடையில் அடிவாங்கி உயிர்விடுவான்.

வவ்வால் said...

குட்டிப்பிசாசே,

ஏனிந்த குழப்பம், முதலில் அனுமன் என்றீர், இப்போது துரியோதணன் என்கிறீர்.

சிரி கிருஷ்ணா எப்படி இறந்தார் என சிரிமத்பாகவதம் படிக்கவும், மேலும் சிரி கிருஷ்ணா போலவே அகிலியஸ் நடந்து கொள்வார்.

கர்ணன், சிரி கிருஷ்ணா என எல்லாம் கலந்து கட்டிய கேரக்டர் அவ்ளவு தான்.

துரியோதணன் எல்லாம் நெருக்கத்தில் கூட இல்லை.

குட்டிபிசாசு said...

அக்லிஸ் ஹீல் சம்பவம் துரியனுடன் ஒத்திருப்பது மட்டுமே சொன்னேன்.

//அக்கிலியஸ் எந்த அணிக்கு ஆதரவு அளிக்கிறானோ அந்த அணி வெற்றிப்பெறும் என்றெல்லாம் புராணம் சொல்லுது.//

இது போதுமே. கிருஷ்ணன் என்று சொல்ல.

//சீவக (ஜீவக) சிந்தாமணி கதை பாரசீகத்தில் (தற்போதைய ஈரானில்) இருந்து வந்த கதை என்பதை எப்போதோ கேள்விப்பட்டேன். தெரிந்தால் சொல்லவும், தெரியாவிட்டால் விசாரித்துச் சொல்லவும்.//

இதை மறந்துடாதிங்க.

Thuvarakan said...

தகவல்களுக்கு நன்றி அண்ணா.....இவளவையும் ஆங்கில தளங்களில் வாசிக்க போயிருந்தாலே மண்டை காய்ந்திருக்கும்....இன்று தான் முதல் முறையாக உங்கள் தளத்தை படிக்கிறேன்.....கடவுள்களின் அடிப்படையும் புராதன கதைகளின் உண்மைத்தன்மையையும் ஆராய்வதில் எனக்கு சிறிது ஆர்வமுண்டு.....அது உங்கள் தளத்தில் தீருமென நம்பிகிறேன்.....

தொடருங்கள் மேலும் பல விபரங்களுடன்.....

துவாரகன் ( www.vtthuvarakan.blogspot.com )

Anonymous said...

Dear Mr. Vavval,

I always surprised with your comments, (daring and informative)
You are blessed with full of knowledge.

I am always interested to read your comments as well as blog writings

I have seen Achielus painted picture at one of the underground Palmyra tomb (Syria)

could you please post more information about this Achieus
K.Sundaramurthy, Coimbatore

Anonymous said...

wow.......val,

வவ்வால் said...

குட்டிப்பிசாசு,

சீவக சிந்தாமணி பற்றி கேள்விப்பட்டு இருக்கேன், அது கொஞ்சம் பலானதா இருக்குமாம். ஆனால் அதனை எழுதியது சமண துறவி திருத்தக்க தேவர்.

அதன் மூலம் ஒரு வட இந்திய நூல் , என்ற வரையில் அது தெரியும், ஆனால் பாரசீகம்னு நீங்க சொல்லி தான் கேள்விப்படுறேன், தேடிப்பார்த்து சொல்கிறேன்.

கூடுதலாக ஒரு தகவல், இரண்டாம் குலோத்துங்கன் ,சீவக சிந்தாமணி தான் சிறந்த இலக்கியம் என நினைத்ததால் தான், சேக்கிழார் ,பெரிய புராணம் எழுதி ,குலோத்துங்கனை சைவ மதம் திரும்ப வைத்தார்னு சொல்வங்க.

---------

துவாரகன்,

வாங்க,நன்றி!

வரலாற்றில் நிறைய பேருக்கு ஆர்வம் இருக்காது என நினைத்தேன், ஆனால் படிக்க இத்தனை பேர் ஆர்வமாக இருக்கிங்களே, நன்றி.

முடிந்த வரை சரியான தகவல்களை திரட்டி அளிக்கவே நானும் விரும்புவேன்.

நீங்க சொன்னாப்போல நிஜமாவே மண்டைய காய வைக்கும் சில தளங்கள். :-))

உங்களை போன்றவர்கள் ஆர்வம் தான் ,நமக்கான ஊக்கமருந்து!
----------

சுந்தரமூர்த்தி,

வாங்க,நன்றி!

என்ன சார் ரொம்ப பெரிய வார்த்தை எல்லாம் சொல்லிக்கிட்டு, ஏதோ நம்ம ஆர்வத்துக்கு கொஞ்சம் படிக்கிறோம்,அதனை மற்றவர்களுடனும் பகிர்ந்துக்கொள்கிறேன்.

பின்னூட்டங்களும் ஆர்வத்துடன் படிக்கிறிங்களா(மொக்கைனு சிலர் சொல்வாங்க), நன்றி!

நேராகவே பார்த்து இருக்கிங்களா ,கிரீக்,ரோமன் வரலாறும் சொல்லலாம் என்றே இருக்கிறேன், கண்டிப்பாக அக்கிலியஸ் பற்றி முடிந்த வரை கூடுதல் தகவல் சேர்க்கிறேன்.

டிராய் படம் பார்த்தீர்களா? அதில் அக்கிலியஸ்( Brad Pitt,) பாத்திரம் தான் ஹீரோ.நன்றாக இருக்கும்.

அடிக்கடி இந்த பக்கம் வாங்க சார்,நன்றி!
----------

அனானி,

வாங்க,நன்றி!
------------

சதுக்க பூதம் said...

நல்ல முயற்சி. சங்க கால தமிழர்களின் போர் தர்மத்தை வட நாட்டினர் கடை பிடித்தார்களா என்பது கேள்வி குறியே

naren said...

வவ்வால்,

சரித்திரம் படைக்க கிளம்பிட்டீங்க. தமிழில் நான் லீனியரில் எழுதுவதற்கு ஒருத்தருக்கு மட்டுமே காப்பிரைட் உள்ளதாமே, அவரிடம் அனுமதி வாங்கிட்டீங்களா.

பதிவு தகவல்களில் சொல்லும்விதம் அருமை. நீங்க போட்ட பின்னூட்டங்களை தொகுத்தாலே அருமையான சரித்திரமாக வரும்.

பொது ஆண்டுக்கு முன் இராக், இரான், ஆப்காணிஸ்தான் போன்ற இடங்கள், ஒரு கலாச்சார கலவையாக தான் இருந்திருக்கிறது.

என்ன திராவிடர்களும் வந்தேறிகள் என்று சொல்கிறீர்களா. அப்போ தென் இந்தியாவின் உண்மையான பூர்வகுடிமக்கள் யார்????

கஜினி காலத்தில் இந்தியாவில் மததிற்கு முக்கியத்துவம் தரவில்லையா????

ராஜ்புத்திரர்கள் ஆதரவு இல்லையென்றால் மக்கள் விரும்பிய புனிதமான கொகலாய ஆட்சி தொடர்ந்திருக்குமா????

இந்த தொடரை இத்துடன் நிறுத்தாமல் தொடர்ந்தால் சரி.

நன்றி.

வவ்வால் said...

பூதம்,

வாங்க,நன்றி!

சங்க காலத்தைய போர் மரபுகள் ரொம்பவே நெறிப்படுத்தப்பட்ட ஒன்றாக இருந்துள்ளது, அது போல பலவகை பூச்சூடி ,படிப்படியஅக வட நாட்டு மன்னர்கள் போர் செய்யவில்லை, என்றாலும் , ஒரு அறம் உண்டு.

போருக்கு முன் தெரிவித்தல்

இரவில் போர் புரியாமை.

சரண் அடைந்தவர்களை கொல்லாமல் உரிய மரியாதை அளித்தல்.

போர்க்களத்திற்கு சம்பந்தமில்லாத பொது மக்களை கொல்லாமை.

பெண்களை சூறையாடுதல் அறவே தவிர்க்கப்பட்டிருந்தது.

வரலாற்றின் அண்மை கால நாயகர்கள் கூட கண்ணியம் காத்துள்ளார்கள், மருத நாயகம் என்கிற யூசப் கான் , இஸ்லாமியராக மாறிய பின்னும் பெண்களை சூறையாடினால் தண்டித்துள்ளான், ஆர்காட் நவாப் ,மூலம் கம்பெனிப்படையில் சேர்ந்து ,மதுரையின் ஆளுநராக இருந்த போது,ஆர்க்காட் நவாப்பின் தம்பி என நினைக்கிறேன் பெண்களை கைப்பற்றியதை தடுத்து அடித்ததாலேயே நாவாப்பின் கோபத்திற்கு ஆளாகி பின்னர் எதிரியாக வேண்டியதாயிற்று,மேலும் ஒரு வெள்ளைக்கார அதிகாரியை இதே போல காரணத்திற்காக சவுக்கால் அடித்து தண்டித்ததும் ஒரு காரணம், நாம் வைத்த வேலைக்காரன் நம்மையே அடிப்பதா என்று.

ஏன் போர்க்களத்த்தில் காயமுற்றவர்களை பொதுவாக சிகிச்சை அளிக்க ,புத்த பிக்குகளை எல்லாம் அனுமதித்து இருக்காங்க, செஞ்சிலுவை சங்கம் போல எனலாம், அசோகர் காலத்திலேயே இப்படி செயல்ப்பட்டதாக வரலாறு கூறுகிறது.

யுவான் சுவாங்க் தனது குறிப்புகளில் இதை போலவே சொல்லி இருக்கிறார்.

தமிழக வரலாறு என்பது பெரும்பாலும் இலக்கியங்கள் மூலமே அறியப்படுவதால் கொஞ்சம் கவித்துவமாக,கற்பனையும் கலந்து இருக்கிறது.
----------

நரேன் ,

வாரும்,நன்றி!

அந்த அல்டிமேட் தான் நான் லீனியர கண்டிப்பிடிச்சாராமா :-))

பின்னூட்டங்கள் வள வளன்னு இருக்குன்னு சொல்லுறிகளோ? ஆனாலும் ரொம்ப புகழுறிங்க :-))

மத்திய ஆசியா முழுவதுமே கலவையாக தான் இருந்துள்ளது. ஜொர்டான் ,சிரியா பகுதிகள் எல்லாம்ம் இலத்தின் ,கிரேக்க கலப்பு அதிகமாக இருக்கும், இரான்,இராக் பகுதிகளில் இந்திய கலப்பு அதிகமாக இருக்கும்.

இரானில் யாளி எனப்படும் சிங்க முக சிற்பங்கள் எல்லாம் இருக்கு.

சரியான வரலாறே தெரியாத ஒரு மத்திய ஆசியப்பகுதி என்றால் இப்போதைய சவுதி பகுதி, வரலாற்று ஆசிரியர்கள் ,அங்கு இருந்த வரலாற்று தடங்கள் எல்லாம் 7 நூற்றாண்டு காலகட்டத்தில் அழிக்கப்பட்டிருக்காலம் என்கிறார்கள். ஏன் அழித்தார்கள் என்பதற்கு புனித மார்க்கவாதிகள் தான் பதில் சொல்லணும் :-))

#தென்னிந்தியா, இந்தியாவின் முதல் மனித குடியேறிகள் திராவிடர்கள் எனலாம். கோண்டுவானா ,ஒரே கண்டம், கண்ட இடப்பெயர்வு என பல சொல்கிறார்கள்.மேலும் சைபீரியா, மற்றும் எத்தியோப்பியா இங்கு தான் முதல் மனிதன் ஹோமோ சேப்பியன்,ஹோமோ எரக்டல்,நியாண்டார் தால் எல்லாம் உருவான இடமாம்.

#கஜினி காலத்தில் இஸ்லாம் எல்லாம் குழந்தையாக இருந்தது. அப்போது இந்தியாவில் மீண்டும்,சைவமும், வைணவமும் ,சமணம், புத்தத்திலிருந்து விடுபட்டு வளர துவங்கி காலம், ஆதிசங்கரர் அக்கால கட்டமே.

தென்னிந்தியா முழுவதும் சோழர்கள் சைவத்தினை நன்கு பரப்பினார்கள், சோழர்களின் தாக்கத்தினால், கம்போடியாவில் ஶ்ரீவிஜயா அரச பரம்பரையை சேர்ந்த மன்னன் உலகின் மிகப்பெரும் இந்து கோவிலான அங்கோர் வாட் எல்லாம் கட்டியுள்ளார், இத்தனைக்கும் அவர்கள் புத்தமதம் சோழர்களால் இந்துவாகி ,பின்னர் மீண்டும் புத்தமாக மாறினார்கள்.

சிங்களர்கள் ஶ்ரீவிஜய வம்சாவளியினர் என சொல்லிக்கொள்வார்கள், ஆனால் செம கொடுமை என்னவெனில் ஶ்ரீவிஜயா அரசாட்சி காலம் 10-12 நூற்றாண்டு தான். அப்படியெனில் இலங்கையின் தொன்ம குடிகள் யார்?

ஶ்ரீவிஜயா மன்னனுக்கு இலங்கை அரசாங்கம் தபால் தலை எல்லாம் வெளியிட்டுள்ளது.

ராஜபுத்திரர்களுடன் அக்பர் திருமண பந்தம் செய்தே மொகலாய சாம்ராஜ்யத்தினை விரிவுப்படுத்தினார், பாபர்,ஹிமாயுன் எல்லாம் சிறிய பகுதியை தான் ஆண்டார்கள். அக்பருக்கு மொத்தம் 34 அதிகாரப்பூர்வ மனைவிகள் அதில் பாதி ராஜபுத்திர, ஜாட் வகை,இந்து மன்னர்களின் மகள்களே.

எனவே ராஜபுத்திர மன்னர்களின் ஆதரவு இல்லாமல் மொகலாய சாம்ராஜ்யம் விரிவடைந்து இருக்காது. ராணா பிராதாப் சிங் போன்ற சில ராஜபுத்துகள் மட்டுமே மொகல்களை எதிர்த்தார்கள்.

ஹி..ஹி நிறுத்தாம வண்டி ஓட்டவே நானும் ஆசைப்படுகிறேன், என்ன ஆகும் என தெரியவில்லை.
----------

தி.தமிழ் இளங்கோ said...

என்னங்க சார்! Comparative Study மாதிரி இருக்கிறது.

தி.தமிழ் இளங்கோ said...

என்னங்க சார்! Comparative Study மாதிரி இருக்கிறது.

IlayaDhasan said...

//வடக்கு திசை நோக்கி அமர்ந்து , அவர்கள் முன்னால் அவர்கள் உடை வாளினை கூர் முனை கழுத்தினை நோக்கி இருக்குமாறு நட்டுவிட்டு, அன்னம், தண்ணீர் தவிர்த்து உண்ணா நோன்பு இருப்பார்கள் , பசி,தாகத்தால் உடல் தளர்வுற்று சாயும் போது ,வாள் கழுத்தில் பாய்ந்து இறப்பார்கள்.
//

நல்ல தகவல்,ஆனா அவ்ளோ கஷ்டபடுரதுக்கு பதிலா , சரக்குன்னு அறுதுக்கலாமில்ல? நேற்று இரவு செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் பார்த்துக் கொண்டிருந்த போது,
ஒரு சீனில் சில காட்டுவாசிகள் , தப்ப வழியில்லை என்றவுடன் , கேமராவுக்கு எதிர்ப்புறமாகத் திரும்பி நின்று கொண்டு கழுத்தை தாங்களாகவே அறுத்துக் கொண்டு சாவார்கள் , என்னடா வித்யாசமா சாகுரானுங்கலேன்னு நினச்சேன் இது அதை விட வித்யாசம், வேற காரணமும் கூட இருந்திருக்கும்...

பதிவர்களுக்கு கண்ணதாசன் சொன்ன அறிவுரை!

வவ்வால் said...

தி.தமிழ் இளங்கோ சார்,

வாங்க,நன்றி!

சரியா சொன்னீங்க, ஒப்பிட்டால் தான் பல்வேறு நாடு,இனம், வரலாற்றின் ஒற்றுமை,வேற்றுமைகள் புரியும்.


மேலும் மனிதநாகரீகம் எப்படி பல்கி பெருகி வளர்ந்து, தனிக்கலாச்சாரமாக பிரிவடைந்தது என்பதும் புரிந்து கொள்ளமுடியும்.

---------
இளையதாசன்,

வாங்க,நன்றி!

எளிதாக கழுத்தை அறுத்து கொண்டு சாகலாம் தான், ஆனால் தன்னை தானே அப்படி மாய்த்து கொள்வது மரபாக கருதப்படவில்லை, மேலும் தனது நிலையை நினைத்து மனம் வருந்துவதை காட்டவும் இப்படி வடக்கிருந்து உண்ணாநோன்பு இருக்கும் மரபு வந்திருக்கலாம்.

ராஜபுத்திரர்களிடையே இன்னொரு முறையும் இருக்கிறது, தங்களது வாளை மேலே தூக்கிப்போட்டு அதற்கு நேராக நெஞ்சை காட்டி நெஞ்சில் வாள் இறங்க வைத்து இறப்பார்கள்.

ஒரு பழைய தெலுங்கு படம் அதில் நடிகர் திலகம் சிவாஜி ஒரு முக்கியமான படைத்தளபதியாக நடித்திருப்பார், அவருக்கு அவமரியாதை ஏற்பட்டதும் வாளை மேலே தூக்கிப்போட்டு ,கழுத்தை குறுக்கே காட்டி தலையை துண்டித்து இறப்பதாக காட்சி இருக்கும்.

தற்கொலையாக கழுத்தினை அறுத்து இறப்பது வீரனுக்கு அழகல்ல என்ற கொள்கையாக கூட இருக்கலாம்.

தற்கொலை செய்து கொண்டால் ஆன்மா சாந்தியடையாது என ஒரு நம்பிக்கையும் இருக்கிறது(நம் கையால் நேரடியாக உயிரை போக்குதல்)

எனவே தமது உயிரை எடுக்கும் ஆயுதம் தம் கையில் இல்லாமல் உயிரை போக்குவதை மரபாக ,வீரமரணம் அடைவதாக எடுத்துக்கொண்டிருக்கலாம் என நினைக்கிறேன்.

ராஜ நடராஜன் said...

சுவனப்பிரியன் அண்ணனைக் கேட்டால் அடிக்கிற அடிக்கெல்லாம் பொறுமையிலும் பெருமையாக்கும்ங்கிறார்.

கோவி.கண்ணனைக் கேட்டால் அதுக்கு பேரு தடித்த தோல் என மறுபெயர் சொல்கிறார்.

இரண்டுக்கும் நடுவே ஓ!ஜீசஸ் சிவாஜியே என் முன் வந்து போகிறார்:)

ராஜ நடராஜன் said...

முந்தைய பின்னூட்டம் கோவி.கண்ணன் தளத்திற்கான இடம் தவறிய பின்னூட்டம்.மன்னிக்கவும்.பின்னுட்டத்தை திருப்பி அனுப்பவும்:)

குறும்பன் said...

கஜினி முகமது கொள்ளைக்கார பயலா? என்னமோ அவன் 18 முறை முயற்சித்து 18வது முறை வென்றான் என்று பாடபுத்தகத்தில் இருக்கு. வரலாறு சரியாக தெரியாதவர்களால் எழுதும் வரலாற்றை படிக்கிக்கும் நிலைக்கு ஆளாயிட்டமே. மார்க்க பந்துக்கள் எல்லாம் இங்க வரமாட்டாங்களா? :) தொடருங்கள்.

Robin said...

எனக்கு வரலாறு படிப்பதில் அதிக ஆர்வம் உண்டு. தொடர்ந்து எழுதுங்கள் வவ்வால்.

சமுத்ரா said...

நல்ல முயற்சி..

முட்டாப்பையன் said...

முட்டாப்பையன் said...

வணக்கம் சுபி சாமிகள்.
உங்களுக்காக ஒரு பதிவு போட்டிருக்கோம்.மோடி எல்லாம் கிடக்கட்டும்.
நம்ம ஊர் செந்தில் என்றால் நடிகர் செந்தில்தானே.அவர் தேவர் என்பதால் உங்களுக்கு ஆகாதவரா?ராஜபிரியன் சொன்னாலும் நீங்க சாதாரணமாக,வழக்கமாக உங்க பாஷையில் வழவழ கொழகொழா என்று பதில்.உங்க பதிவில் அவர் பேரை எடுக்கவில்லை பாருங்க.அப்ப செந்தில் என்றால் இளக்காரமா?ஏன்?இந்த வெறி. அவர் தேவர் என்பதால் தானே?

அப்ப தேவர் என்றால் உனக்கு கீழ்த்தரமா?

இந்த கமமென்ட் நீங்க வெளி இடாவிட்டால் இந்த கமெண்ட் உங்க சகோ போடும் பதிவில் எல்லாம் மீண்டும் மீண்டும் போடப்படும்.
எங்கள் பதிவில் இதை காப்பி&பேஸ்ட் பண்ணி போட்டுக்கொல்கிறோம்.

கடைசியில் எங்களையும் தேவர்மகன் கமல் மாதிரி கொலை(பதிவுலகில்)
பண்ண வைத்துவிடுவீர்கள் போல. நாங்கள் நடு நிலை தவறாமல் இருக்க
உறுதி பூண்டுள்ளோம்.எங்களை கெடுக்காதீர்கள்.

நீங்களும்,உங்களை சார்ந்தவர்களும் எங்களை எரிச்சல் மூட்டுகிரீர்கள்.புரிதலுக்கு நன்றி!


Blogger சுவனப் பிரியன் said...

சகோ முட்டாப் பையன்!

//உங்களுக்காக ஒரு பதிவு போட்டிருக்கோம்.மோடி எல்லாம் கிடக்கட்டும்.
நம்ம ஊர் செந்தில் என்றால் நடிகர் செந்தில்தானே.அவர் தேவர் என்பதால் உங்களுக்கு ஆகாதவரா?ராஜபிரியன் சொன்னாலும் நீங்க சாதாரணமாக,வழக்கமாக உங்க பாஷையில் வழவழ கொழகொழா என்று பதில்.உங்க பதிவில் அவர் பேரை எடுக்கவில்லை பாருங்க.அப்ப செந்தில் என்றால் இளக்காரமா?ஏன்?இந்த வெறி. அவர் தேவர் என்பதால் தானே?//

செந்தில் தேவர் சாதியை சேர்ந்தவர் என்பது எனக்கு நீங்கள் சொல்லித்தான் தெரியும். அவர் படத்தில் நடிப்பதை நடிப்பாகவே பாருங்களேன். இங்கு ஏன் சாதியை வந்து புகுத்துகிறீர்கள். அப்படி என்றால் நீங்கள் தேவரா? எனக்கு தேவரானாலும், தலித் ஆனாலும், பார்ப்பணர் ஆனாலும் எல்லாம் ஒன்றே. அனைவரும் ஒரு தாய் மக்களே! தயவு செய்து சாதி வெறியை தூக்கி எறியுங்கள். எல்லோரும் இந்தியர் என்ற பரந்த மனப்பான்மைக்கு வாருங்கள்.

10:22 AMBlogger முட்டாப்பையன் said...

சுவனப் பிரியன் said...

சகோ முட்டாப் பையன்!

//உங்களுக்காக ஒரு பதிவு போட்டிருக்கோம்.மோடி எல்லாம் கிடக்கட்டும்.
நம்ம ஊர் செந்தில் என்றால் நடிகர் செந்தில்தானே.அவர் தேவர் என்பதால் உங்களுக்கு ஆகாதவரா?ராஜபிரியன் சொன்னாலும் நீங்க சாதாரணமாக,வழக்கமாக உங்க பாஷையில் வழவழ கொழகொழா என்று பதில்.உங்க பதிவில் அவர் பேரை எடுக்கவில்லை பாருங்க.அப்ப செந்தில் என்றால் இளக்காரமா?ஏன்?இந்த வெறி. அவர் தேவர் என்பதால் தானே?//

செந்தில் தேவர் சாதியை சேர்ந்தவர் என்பது எனக்கு நீங்கள் சொல்லித்தான் தெரியும். அவர் படத்தில் நடிப்பதை நடிப்பாகவே பாருங்களேன். இங்கு ஏன் சாதியை வந்து புகுத்துகிறீர்கள். அப்படி என்றால் நீங்கள் தேவரா? எனக்கு தேவரானாலும், தலித் ஆனாலும், பார்ப்பணர் ஆனாலும் எல்லாம் ஒன்றே. அனைவரும் ஒரு தாய் மக்களே! தயவு செய்து சாதி வெறியை தூக்கி எறியுங்கள். எல்லோரும் இந்தியர் என்ற பரந்த மனப்பான்மைக்கு வாருங்கள்.//////////////////

இந்த பதில் உங்களில் இருக்கும் சுன்னி,வாபி,இன்ன பிற அனைத்துக்கும் உண்டுதானே?
மாட்டுநீங்க தல.
வாங்க.இதுக்குதான் காத்துக்கொண்டு இருக்கோம்.இந்த வார்த்தையை இனி நீங்க காப்பாத்துவீங்க என்று நம்புகிறோம்.

ஆதாரத்துக்காக இந்த கமெண்ட் எங்கள் பதிவில் காப்பி&பேஸ்ட்.

முட்டாப்பையன் said...
This comment has been removed by the author.
வவ்வால் said...

குறும்பன்,

வாங்க,நன்றி!

கொள்ளை, கொலை .பாலியல் வன்முறை,அதற்கு ஒரு படை எடுப்பு அவ்வளவே.

தொடர்ந்து படியுங்கள்.
---------

ராபின்,

வாங்க,நன்றி,

வரலாறு படிக்க சுவையானது.
---------

சமுத்ரா,

வாங்க,நன்றி!
---------

ராசநடை,

திருப்பி அனுப்ப ஸ்டாம்ப் ஒட்டுங்க.
---------

முட்டாப்பையர்,

என்னையா கலாட்டா இது?

Unknown said...

அடேய் முண்டகழப்ப உனக்கு எழுதனுன ஒரு கேவலமான செக்ஸ் ஸ்டோரி எழுது.அதெல்ல விட்டுட்டு வராத வரலாறு எல்லா என்ன _____இதுகெல்லா எழுதுவேன (அடுத்து என்னா நடக்கும்நு wait & Watch போடா_____

Unknown said...

அடேய் முண்டகழப்ப உனக்கு எழுதனுன ஒரு கேவலமான செக்ஸ் ஸ்டோரி எழுது.அதெல்ல விட்டுட்டு வராத வரலாறு எல்லா என்ன _____இதுகெல்லா எழுதுவேன (அடுத்து என்னா நடக்கும்நு wait & Watch போடா_____

அஞ்சா சிங்கம் said...

யாருப்பா அது பூட்டுன கடையில ஷட்டரை தட்டி சண்டைக்கு கூப்பிடுறது ......

வவ்வால் said...

அஞ்சா ஸிங்கம்,

அதானே பூட்டின கடையிலே யாருமே இல்லாத இடத்தில யாருக்கு டீ ஆத்துறான்?

உம்ம தோஸ்த்தா, கூட்டிக்கினு நம்ம புது பதிவுக்கு வாரும் சுட சுட சோக்கா சண்டைப்போட்டு சொக்கா கிளிச்சுக்கலாம்.
-------------

நானே பெரிய லவுட் ஸ்பீக்கர் நம்ம கிட்டவே சவுண்டா ... கொய்யாலே பிச்சுப்புடுவேன் பிச்சு @ஃபால்கன் ஐ.

Radhakrishnan said...

அட, ஆசியா மைனர் குறித்து குறிப்பு வைத்திருக்கிறேன். பல விசயங்களை பதிவு சொன்னதோடு பின்னூட்டங்கள் சொன்னது கூடுதல் சிறப்பு. :)