Saturday, December 08, 2012

சினிமா ரகசியம்-4:VISHWAROOPAM IN DTH RELEASE வெற்றியடையுமா?




 லோக நாயகரின் விஷ்வரூபம் திரைப்படம் வெளியாவதில் இதோ,அதோ என கால தாமதம் ஆனதற்கு பலரும் பல காரணங்கள் சொல்லியிருக்கலாம், ஆனால் பலருக்கும் தெரியாத ஒரு காரணத்தினை இப்போது சொல்லப்போகிறேன், அந்த அதி முக்கியமான காரணம் என்னவெனில்,

விஷ்வரூபம் BARCO AURO:3D-11.1  சேனலில் ஒலியமைப்பு செய்யப்பட்டது என முதலில் செய்திகளில் வந்ததை அனைவரும் அறிவீர்கள், அப்பொழுது தமிழ்நாட்டிலோ ,இந்தியாவிலோ  அத்தகைய ஒலியமைப்பு வசதிக்கொண்ட திரையரங்குகளே இல்லை என்ற உண்மையை மாற்றுப்பார்வைகளுக்கு பெயர் பெற்ற ஒரு கில்லாடி தமிழ்ப்பதிவர்  BARCO AURO:3D-11.1  குறித்து பதிவாக வெளியிட்டு ரகசியத்தினை வெட்ட வெளிச்சமாக்கிவிட்டார். (ஹி...ஹி என்ன கொடுமைடேனு சொல்லப்படாது)

அந்த கில்லாடி பதிவர் யார் என அறிய இங்கே செல்லவும் :vishwaroopam in barco auro- 11.1 3d audio.

எனவே புதிய தொழில்நுட்பம் என சொல்லி விளம்பரப்படுத்தி படத்தினை  வெளியிட்டு விடலாம் என நினைத்த நேரத்தில் அப்படி வெளியிட்டாலும் பார்வையாளருக்கு அதனால் பயனே இல்லை என்ற உண்மை  வெளியாகிவிட்டதால், இனி  BARCO AURO:3D-11.1   ஒலியமைப்பு இல்லாத நிலையில் வெளியிட்டால் ஊடகங்கள் கேலி செய்துவிடும் என திரைப்படத்தினை வெளியிடுவதை தள்ளி வைத்துவிட்டு சில திரையரங்குகளையாவது ,  BARCO AURO:3D-11.1   ஒலியமைப்பில் மாற்றம் செய்ய லோகநாயகர் தரப்பு முயன்றது இதனாலே இக்கால தாமதம் என கோலிவுட் பட்சிகள் ரகசியமாக கிசு கிசுக்கின்றன :-))

அப்படியும் தமிழ்நாட்டில் சத்யம் திரையரங்கம் ஒன்று மட்டுமே புதிய ஒலியமைப்பினை உருவாக்கியுள்ளது, மேலும் அவர்கள் ஆரோ ஒலியமைப்பினை விட அதிக திறனுள்ள டால்பி அட்மோஸ் 64 சேனல் ஒலியமைப்பினையும் அமைத்து , லைப் ஆஃப் பை திரைப்படத்தினையும் வெளியிட்டு விட்டார்கள்.

இருந்த போதிலும் ,  BARCO AURO:3D-11.1   என்ற ஒலியமைப்பும் தமிழுக்கு இன்னும் புது தொழில்நுட்பமே என்பதால் தமிழ்நாட்டில் சத்யம் அரங்கம் தவிர வேறு எங்கும் , அவ்வொலியமைப்பின் சிறப்பினை உணரும் வாய்ப்பு இன்றைய தேதி வரையில் உருவாகவில்லை. காரணம் ஒலியமைப்பினை மாற்றி அமைக்க சுமார் 20 லட்சம் முதலீடு தேவைப்ப்படுகிறது,எனவே பல அரங்க உரிமையாளர்களும் யோசிக்கிறார்கள்.

இந்நிலையில் குறைந்த பட்சம் சுமார் 30 திரையரங்குகளையாவது  BARCO AURO:3D-11.1   ஒலியமைப்பில் மாற்றியமைக்க திரையரங்கு உரிமையாளர்களுடன் பேசி வருகிறார் லோகநாயகர்.

ஆனால் இதற்கு இடையில் லோகநாயகர் தனது விஷ்வரூபத்தினை திரையரங்கு வெளியீட்டுக்கு முன்னர் டி.டிஎச் தொலைக்காட்சி மூலம் மூவி ஆன் டிமான்ட் முறையிலும் வெளியிடப்போவதாக அறிவித்து சல சலப்பை உருவாக்கியுள்ளார், எனவே இப்பொழுது திரையரங்க உரிமையாளர்களும் லோகநாயகருக்கு எதிராக திரண்டுவிட்டார்கள், எனவே மேலும் திரையரங்குகள்  BARCO AURO:3D-11.1   ஒலியமைப்புக்கு மாற்றியமைப்பார்களா என்பதும் கேள்விக்குறியாகிவிட்டது?

தற்போதைய சூழலில் விஷ்வரூபத்தினை  BARCO AURO:3D-11.1  ஒலியமைப்பில் காணும் வாய்ப்பு பெரும்பாலோருக்கு கிடைக்க வழியில்லை என்றே தோன்றுகிறது, என்ன செய்யப்போகிறார் லோகநாயகர்?

Movie On Demand @DTH:





டிடிஎச், அல்லது தொலைக்காட்சியில் திரைப்படத்தினை முதலில் வெளியிடுவது அல்லது DVD,VCR Tape, வடிவில் மட்டுமே திரைப்படத்தினை வெளியிடுவது போன்ற நடைமுறைகள் ஹாலிவுட்டில் நீண்டகாலமாகவே இருக்கிறது.

பெரும்பாலும் இண்டிபென்டன்ட் மூவி மேக்கர்ஸ் எனப்படும் சிறு படத்தயாரிப்பாளர்கள் இவ்வாறு செய்வது வழக்கம். குறைவான பட்ஜெட்டில் ஹாரர், ஆக்‌ஷன், கொஞ்சம் கில்மா கலந்து படம் எடுத்துவிட்டு நேரடியாக சேனல்கள், டிவிடி, டேப் என வெளியிட்டு காசுப்பார்த்து விடுவார்கள்.

பின்னர் படம் நல்ல வரவேற்பு பெற்றால் பெரிய அளவில் தியேட்டர்களிலும் ரிலீஸ் செய்யும் வழக்கம் உண்டு. இப்படி முதலில் வீடியோ டேப்பில் வெளியாகி பட்டையை கிளப்பி ,பின்னர் திரைக்கு வந்து கலக்‌ஷணை அள்ளிய ஹாலிவுட் திரைப்படங்கள் நிறைய உள்ளன. இதற்கு சிறந்த உதாரணம், எவில் டெட் என்றப்படமாகும்.

ஆனால் இம்முறை சிறிய பட்ஜெட் படங்களுக்கே நல்ல வியாபார யுக்தியாகும், பெரிய பட்ஜெட் படங்களுக்கு சரிப்படாது, எனவே ஹாலிவுட்டில் உள்ள பெரிய ஸ்டூடியோக்கள் இம்முறையில் வெளியிடுவதில்லை.

இந்தியாவிலும் கூட சில ஆண்டுகளுக்கு முன்னரே ,அரங்குகளில் படம் வெளியான சில நாட்களில் டிடிஎச் சில் மூவி ஆன் டிமாண்ட் முறையில் வெளியிட்டுள்ளார்கள்.

 2009 ஆம் ஆண்டு தீபாவளியன்று வெளியான Main Aurr Mrs Khanna என்ற இந்தி திரைப்படம் வெளியான நான்கே நாட்களில் ரிலையன்ஸ் பிக் டீ.வி, மற்றும் டிஷ் டிடிஎச் இல் வெளியானது. தயாரிப்பாளரும், டிடிஎச் நிறுவனமும்  50:50 என விகிதத்தில் லாபத்தினை பகிர்ந்து கொண்டார்கள்.




சல்மான்கானின் ரெடி, What s your Rashee, Kaminey, Rock On!!, Delhi 6, The President is Coming, Jodhaa Akbar and Aa Dekhe Zara.போன்ற படங்கள் படம் வெளியான முதல் வாரத்திலிருந்து டி.டிஎச் இல் மூவி ஆன்  டிமான்ட் அல்லது பே பெர் வியு முறையில் வெளியிடப்பட்டுள்ளது.

link: http://www.dnaindia.com/money/report_dth-emerging-channel-for-movie-releases_1300685

படத்தின் தயாரிப்பு மதிப்பு, ஸ்டார் வேல்யு, எவ்வளவு சீக்கிரம் டிடிஎச்சில் வெளியாகிறது என்பதை பொருத்து ஒரு படத்திற்கு 25 ரூ முதல் 150 ரூ வரையில் கட்டணம் நிர்ணயம் செய்கிறார்கள்.

ஆனால் விஷ்வரூபம் படத்தினை டிடிஎச்சில் பார்க்க 1000 ரூபாய் வரையில் கட்டணம் நிர்ணயம் செய்யப்படும் என தகவல்கள் வருவதால், அதிகம் பேர் அவ்வளவு அதிக தொகை கொடுத்து பார்க்க விரும்ப மாட்டார்கள் என சொல்லலாம்.

திருட்டு டிவிடி, இணைய தரவிறக்கத்தினை தடுக்க எனில் மலிவான கட்டணம் என்றால் மட்டுமே மூவி ஆன் டிமான்ட் மூலம் பலன் இருக்கும், அதிக கட்டணம் என்றால் , மலிவான திருட்டு டிவிடிக்கே மக்கள் போவார்கள். திருட்டு டிவிடியில் பார்க்க விரும்ப காரணமே திரையரங்க கட்டணம் அதிகமானதால் தான் ,அவ்வாறு இருக்க டிடிஎச் இல் இன்னும் அதிகம் கட்டணம் வாங்குவது எப்படி திருட்டு டிவிடிக்கு போட்டியாக அமைந்து கட்டுப்படுத்தும்?

ஏன் எனில் நல்ல தரமான திரையரங்கில் ,பெரிய திரையில் பார்க்கவே ஒருவருக்கு 120 ரூ தான் கட்டணம் எனும் நிலையில் ஒரு குடும்பத்தில் 5 பேர் திரையரங்கு சென்றாலும் 600 ரூ தான் கட்டண செலவு. மேலும் ஆன் லைன் புக்கிங்க் எல்லாம் உள்ள சூழலில் கொஞ்சம் முன்கூட்டியே முயன்றால் டிக்கெட் வாங்கிவிடலாம். எனவே அவசியம் லோகநாயகர் படம் பார்க்க நினைக்கும் குடும்பம் திரையரங்கில் பார்ப்பதே மலிவாகவும், நன்றாகவும் இருக்கும் எனவே டி.டிஎச்சில் 1000 ரூ கொடுத்து பொது மக்கள் பார்க்க விரும்ப மாட்டார்கள் எனலாம்.

தீவிர லோகநாயகர் ரசிகர்கள் மட்டுமே முதல் நாள் ,முதல் காட்சி பார்க்கும் ஆசையில் டி.டிஎச்சில் 1000 ரூ கொடுத்து படம் பார்க்கலாம்.பொது மக்கள் பார்க்கப்போவதில்லை.மேலும் தொலைக்காட்சியில் பார்த்தால் பெருமையாக விளம்பரப்படுத்தப்பட்ட  BARCO AURO:3D-11.1   இன் ஒலியமைப்பையும் அனுபவிக்க முடியாது போன்ற காரணங்களும் டிடிஎச் ரிலீஸ் முறைக்கு பின்னடைவையே சேர்க்கும்.

பட வெளியீடுக்கு முன்னர் டிடிஎச்சில் வெளியிடுவது  திருட்டு டிவிடி தயாரிப்பவர்களுக்கே லாபகரமான எளிய வழியாக இருக்கும், வெறும்  1000 ரூ கொடுத்து படம் பார்த்துவிட்டு எளிதாக டிவிடி தயாரித்து விடுவார்கள், இதனால் ஒரே நாளில் தரமான திருட்டு டிவிடி கிடைக்க ஆரம்பித்துவிடும், First Day Frist Show வின் பொழுதே திரையரங்க வாயிலிலேயே திருட்டு டிவிடி விற்கப்பட்டாலும் ஆச்சரியமில்லை,இணையத்திலும் அப்லோட் செய்துவிடுவார்கள்,எனவே திரையரங்கங்களின் வசூல் கடுமையாக பாதிக்கப்படவே வாய்ப்புள்ளது.

டிடிஎச்சில் என்கிரைப்டட் வடிவில் இருக்கும் ,அதனை பதிவு செய்ய முடியாது என நினைக்கலாம், எளிதாக பதிவு செய்யலாம் , பல செட் டாப் பாக்ஸ்களில் பதிவு வசதியுடன் இருக்கிறது டிவிஆர் செட் டாப் பாக்ஸ் என்பார்கள், ஒரு வேளை டிடிஎச் நிறுவனம் ஏதேனும் முறையில் செட்டாப் பாக்ஸில் பதிவு செய்வதை தடுத்தாலும் , இன்னொரு முறையில் பதிவு செய்யலாம் , அது எப்படி என பார்ப்போம்.

SET TOP BOX TO COMPUTER:

இரு முறைகளில் தொலைக்காட்சி நிகழ்ச்சியினை கணினியில் காணலாம்.



#.தற்போது வரும் நவீன எல்.இடி டீவிக்களில் HDMI port or wireless networking எல்லாம் உள்ளது எனவே அவற்றின் மூலமும் கணினி, மடிக்கணினியை இணைக்கலாம், பின்னர் விண்டோஸ் மீடியா சென்டர்* மூலம் நிகழ்ச்சியைக்காணலாம் ,பதிவு செய்துக்கொள்ளலாம். அல்லது பல விடியோ கேப்சர் மென்பொருள்கள் உள்ளது அதன் மூலமும் செய்யலாம்.

All in One Media center PC என பல நிறுவனங்களும் கணினி தயாரித்துள்ளன, அவற்றில் புளுரே/டிவிடி ,டிவீ டியுனர் ,HDMI,DVI,USB,LAN,CO-AXIAL jack , CARD Reader,என அனைத்தும் இருக்கும், செட் டாப் பாக்சில் இருந்து இணைப்பை கொடுத்து விண்டோஸ் மீடியா சென்டர்* மூலம் டி.வீ பார்க்கலாம், பதிவும் செய்யலாம்.




* விண்டோஸ் மீடியா சென்டர் மூலம் டீ.வீ பார்க்கும் போது மட்டுமே தொலைக்காட்சி நிறுவனம் சில நிகழ்ச்சிகளை பதிவு செய்வதை கட்டுப்படுத்த முடியும், எனவே மாற்று மென் பொருளை பயன்ப்படுத்தலாம், அல்லது தனியாக ஒரு டீவி ட்யுனர் கார்ட் மற்றும் அதன் மென்பொருளைப்பயன்ப்படுத்திக்கொள்ள வேண்டும்.

#செட் டாப் பாக்சில் அனலாக் மற்றும் டிஜிட்டல் அவுட் புட் என இரண்டும் உள்ளது , அதன் அவுட் புட்டினை நேரடியாக எடுத்து ஒரு டி.வி டியுனர் கார்டின் மூலம் கணினியுடன் இணைக்கலாம், பின்னர் கணினில் பதிவும் செய்துக்கொள்ளலாம்

நேரடியாக செட் டாப் பாக்சினை டிவி டியுனர் கார்டு மூலம் கணினியில் இணைத்து பதிவு செய்யும் முறையை விளக்கமாக காணலாம்.

சந்தையில் 1,500 ரூபாய்க்கு எல்லாம் தரமான எக்ஸ்டெர்னல் யு.எஸ்.பி டீ.வி டியுனர் கார்டுகள் கிடைக்கிறது.200 சேனல்கள் வரையில் காண முடியும், மேலும் எஃப்.எம் வானொலியும் கேட்கலாம்.

உதாரணமாக iBall என்ற நிறுவனத்தின்  External USB T.V Tuner card பற்றி பார்க்கலாம்.



இது ஒரு பென் டிரைவ் அளவிலேயே இருக்கும், ஒரு பக்கம் யு.எஸ்.பி மேல் சாக்கெட்டும் ,மறுபக்கம் அனலாக் கோஆக்சியல் கேபிளை இணைக்க சாக்கெட்டும் இருக்கும்.



டிஜிட்டல் AV cable இணைக்க மினி யுஸ்பியுடன் சாக்கெட்டும் உள்ளது. இதில் மினி யுஸ்.பி  AV cable  அடாப்டர் கொண்டு இணைத்துக்கொள்ளலாம், இவை எல்லாமே நாம் வாங்கும் டியுனர் கார்டுடன் அளிக்கப்பட்டுவிடும்.மேலும் ரிமோட் கண்ட்ரோல் எல்லாம் உண்டு, தொலைக்காட்சி நிகழ்ச்சியை காண்பதற்கான மென்பொருளை கணினியில் நிறுவிக்கொண்டு வழக்கமான தொலைக்காட்சி போல நமது கணினியில் , பதிவு செய்யும் வசதியுடன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை காணலாம்.



இம்முறையில் ஒரு சேனலில் ஒளிப்பரப்பப்படும் நிகழ்ச்சியைப்பார்த்துக்கொண்டு இன்னொரு சேனலின் நிகழ்ச்சியை கணினியில் பதிவும் செய்துக்கொள்ளலாம்.அப்படி கணினியில் பதிவு செய்ததை இணையத்தில் டோரண்ட் மூலம் எளிதில் பகிர முடியும், மேலும் ஒருவரே வெப் ஸ்ட்ரீமிங்க் முறையில் ஒளிபரப்பவும் முடியும்.

recording tv programme:



review :

http://broadbandforum.in/consumer-electronics/74794-exclusive-iball-usb-tv-tuner.html

iBall Claro TV Tuner / AV / FM Radio.

Features:

Clear and Crisp Picture Quality
Slim USB design - easy to carry
Time Shifting - Pause Live TV and Watch later
Real-time and Schedule TV Recording
Watch TV on PC or Laptop
Free Bundled Software - Power Director for Video Capture & Edit, Power Producer for Creating Movie Discs
Listen to FM Radio
Powerful and user-friendly software
Watch and record Analog TV
Video / Audio Capture
Still Image capture with multi-shot mode
Record video in MPEG1/2/4, AVI, VCD or DVD format
Multi-Channel Preview
Scrolling Text marquee support

Powerful and user-friendly software
10-bit analog-to-digital conversion and Noise Reduction

Built-in FM:  Built-in FM Radio with Recording function

Multi AV Input:  Composite and S-Video inputs to connect DVD player, Set Top Box etc.

Interface:  USB Interface

Remote Control:  Full-function IR remote control

System Requirment:

Pentium 2.4 GHz or Centrino 1.4 GHz or above
512MB RAM
1GB free Space for Hard disk
DirectX 9.0C or higher installed
AC97 Compatible Sound Card
One Free USB 2.0 interface

OS Supported:  Windows XP / Vista / 7

Package Contents:

iBall Claro TV Stick
Remote Control & Battery
Quick Installation Guide
FM Antenna
Driver CD with iBall Claro TV Software
Cyberlink Combo CD
Multi AV Cable
USB Extension Cable

MRP:  Rs. 1995( market price around 1500 rs)

Warranty:  1 Year

சுட்டி: http://www.iball.co.in/Product.aspx

இன்னும் கொஞ்சம் தரமாக படப்பதிவு செய்ய வேண்டும் எனில் சுமார் 3000 ரூபாய் விலையில் AverMedia DVD EZMAKER 7 TV Tuner Card என ஒன்று உள்ளது.



அதன்விவரங்கள்:

Specifications of AverMedia DVD EZMAKER 7 TV Tuner Card

IN THE BOX

Sales Package: AverMedia DVD EZMaker 7 (Weight: 50 g), Installation CD (Driver), Installation CD (CyberLink PowerDirector 8 DE & PowerProducer 5 DVD), Quick Installation Guide, USB Cable

GENERAL

Device type: External (PC) for PC
Model ID: DVD EZMAKER 7
Part Number: C039
VIDEO
TV Recording: Yes, TV Recording in MPEG-4 (H.264) formats
Video Analog-to-Digital Converter: Yes
POWER
Input Current: 5 V DC

CONNECTIVITY

Audio Jacks: Yes(In)
Audio L/R In: Yes
Video In: Yes
S-Video In: Yes
USB: USB 2.0

DIMENSIONS

Weight: 50 g

OTHER FEATURES

Additional Features: Edit, Organize and Highlight Video Clips on Storyboard

WARRANTY

Domestic Term: 2 Years
Service Type: Carry In

FlipKart.com போன்ற இணையவர்த்தக தளத்திலும் கிடைக்கின்றன.

http://www.flipkart.com/avermedia-dvd-ezmaker-7-tv-tuner-card/p/itmd2ryha7yuzjhw?pid=TVTD2RYK8AFHJEMV&icmpid=reco_pp_personalhistoryFooter_tv_tuner_card_1_nr

----------------------

கணினி மானிட்டர், எல்.சி.டி ஆகியவற்றையும் ,கணினி இல்லாமல் தொலைக்காட்சியாக பயன்ப்படுத்தவும் எக்ஸ்டெர்னல் டிவி. டியுனர் கார்டு உள்ளது.இதற்கு எந்த மென்பொருளும் நிறுவ தேவையில்லை, கணினியும் தேவையில்லை, மானிட்டர் மட்டுமே போதும்.

iBall External TV Box - CTV27


Features:

Watch TV on LCD / LED or CRT monitor
Plug-n-play, No Software or PC require
Full-band TV signals reception
Enjoy TV programs for leisure entertainment while working on your PC
Built-in FM Radio
High-resolution output delivers clear & stable picture without flicker

HD TV Box - Supports HD resolution up-to 1920 x 1200
3D high efficiency noise reduction to suppress noise effectively
PC / TV Switch

PIP function at PC mode allows you to adjust the size and position of the window

Child Lock function to restrict children from watching certain channels

Full-function remote control

AV interface for multi-media extension to DVD or Set-Top Box

Supports 4:3, 16:9 and 16:10 Aspect ratio

Schedule On/Off function

Built-in speaker

Built-in FM:  Built-in FM Radio

Power Input:  DC 5V / 600mA

RF Input:  47 - 870 MHZ

AV Input:  1Vp-p (PAL/NTSC)
Output Frequency:  Horizontal: 37KHz-75KHz, Vertical: 60Hz (Refresh rate)

Resolution:  800x600@60Hz, 1024x768@60Hz, 1280x1024@60Hz, 1440x900@60Hz, 1680x1050@60Hz, 1920x1080@60Hz, 1920x1200@60Hz

TV System:  PAL(SECAM)-B/G, PAL-I, PAL-D/K

Remote Control:  Full-function Remote control

Package Contents:  XGA TV Box, Stand, Remote Control (Batteries included), Power Adapter, VGA Cable, Stereo Audio Cable, FM Antenna Cable, AV Cable and User Manual

MRP:  Rs. 1899/-
Warranty:  2 Years

http://www.iball.co.in/Product.aspx


குறிப்பு:

தொழில் முறை ரீதியாக வீடியோ கேப்சர் செய்ய பல கிராபிக்ஸ்கார்டுகள் Nvidia, pinnacle போல  உள்ளது , அவற்றை கொண்டு ,நல்ல தரத்தில் டிவிடிக்களை டிடிஎச் ஒளிப்பரப்பின் போது உருவாக்க முடியும், எனவே திரையரங்க வெளியீட்டுக்கு முன் டிடிஎச் ஒளிப்பரப்பு என்பது மொத்த வருமானத்தினை பாதிக்கும் ஒரு முடிவாகும்.
-----------------------

ஒரே கல்லில் பல மாங்காய்கள்:

ஒரு டிடிஎச் செட் டாப் பாக்ஸில் இருந்து பல டீ.விகளுக்கு இணைப்பை கொடுக்க AV splitter எனப்படும் அடாப்டர் உள்ளது. இதில் சிக்னல் பூஸ்டர் மேலும் பல அவுட் புட் முனைகள் என இருக்கும், ஆனால் அனைத்து இணைப்பிலும் ஒரே சேனலே காட்டப்படும். இம்முறையில் தான் உணவகங்கள், பார்கள் ஆகியவற்றில் பல டீ.விக்களில் டிடிஎச் நிகழ்ச்சியினை காட்டுகிறார்கள்.

1:3 AV splitter :

ஒரு செட் டாப் பாக்ஸ் மூலம் மூன்று தொலைக்காட்சிப்பெட்டிகளில் நிகழ்ச்சியினை காணப்பயன்ப்படுத்தலாம், சிக்னல் நன்றாக கிடைக்க இதில் சிக்னல் பூஸ்டரும் உள்ளது.



சென்னையில் ரிட்சி ஸ்ட்ரீட் போனால் பல பிராண்டுகள், பல விலையில் இது போன்ற உபகரணங்கள் கிடைக்கிறது, காசுக்கேற்ற தோசை போல ,கொடுக்கும் காசுக்கு ஏற்ற தரத்தில் வாங்கலாம்.
---------------------------

எனவே லோகநாயகர் தனது விஷ்வ ரூபம் படத்தினை  திரையரங்குகளுக்கு முன்னரே டி.டிஎச்சில் அதிக விலைக்கு வெளியிட்டால் அது திருட்டு டிவிடி தயாரிக்க மட்டுமே உதவும், எனவே திரையரங்குகளுக்கு செல்லும் கொஞ்சம் கூட்டமும் வீட்டோடு முடங்கி விடும் அபாயமே அதிகம் இருக்கிறது.

சிலர் சொல்லலாம் நான் டிவிடியில் படம் பார்த்தாலும் படம் நன்றாக இருந்தால் திரையரங்கிற்கும் செல்வேன் என ஆனால் அதெல்லாம் தனிநபர்களின் விருப்பம், குடும்பத்தோடு படம் பார்க்க செல்பவர்கள்  பெரும்பாலும் டிவிடியில் பார்த்தப்படத்தினை மீண்டும் பார்க்க அரங்கு செல்லும் வழக்கம் தமிழ்நாட்டில் இல்லை என்பதால் திரையரங்க விநியோகம் செய்தவருக்கு பெருத்த நட்டம் உருவாக வாய்ப்புள்ளது.

மேலும் பல இடங்களிலும் கேபிள் டீ.வீ ஆபரேட்டர்கள் டிடிஎச் சேனலை தங்களது கேபிள் ஒளிபரப்பின் மூலமும் பகிர்வதுண்டு, எனவே பல ஊர்களில் கேபிள் ஆபரேட்டர்கள் ஒரே ஒரு டிடிஎச் வைத்து ஊருக்கே படம் காட்டும் சாத்தியமுண்டு , இதனால் பெருத்த வருமான இழப்பும் ஏற்படலாம். இதனை தடுக்க எல்லா ஊரிலும் கேபிள் டீ.வீ ஆபரேட்டர்களை கண்காணிக்க ஆட்களை  நியமிக்க வேண்டும், அதெல்லாம் நடைமுறைக்கு ஒத்து வரக்கூடியதும் அல்ல.

எனவே லோகநாயகரே சொந்தமாக திரையரங்குகளில் ரிலீஸ் செய்தாலும் அவருக்கும் நட்டம் தான் வரும் என்பதே டிடிஎச் சில் ரிலீஸ் செய்வதால் உண்டாகும் பலன்.

லோகநாயகர் தமிழ் திரையுலகில் தொழில்நுட்ப ரீதியாக முன் கூட்டியே சிந்திப்பவர் என  பெருமையாக அவரது ரசிக கண்மணிகள் வேண்டுமானால் சிலாகித்து கொள்ளலாம், ஆனால் அவரது தொழில்நுட்ப அறிவு 100 கோடியில் படம் எடுத்து 1000 ரூபாயில் திருட்டு டிவிடி தயாரிக்க தான் உதவும் என்பதை கூட அறியாத நிலையில் தான் உள்ளது என்பதே அடிப்படையான உண்மை!

*********

முந்தைய திரைநுட்ப பதிவுகள் சில,

#வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: சினிமா ரகசியம்-VFX-1

#வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: சினிமா ரகசியம்-2:2D to 3D conversion.

#வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: சினிமா ரகசியம்-3:DIGITAL PROJECTION

------------------------

பின்குறிப்பு;

தகவல் மற்றும் படங்கள் உதவி,
iBall,FlipKart,DNA news,Times of india,google,AVforum,இணைய தளங்கள்,நன்றி!
--------------------------

64 comments:

Unknown said...

அந்த குழந்தையே நீங்க தான் சார் மாதிரி அந்த கில்லாடி பதிவரே நீங்க தான் சார்

Anonymous said...

Well written article. keep going...Voval.!!!!!

----By Maakkaan

Anonymous said...

Well written article. keep going...Voval.!!!!!

----By Maakkaan

Unknown said...

மிக மிக அருமையான பதிவு , நன்றி , மதம் தவிர பாக்கி எல்லா விஷயங்களிலும் நீங்கள் ஒரு பதிவுலக சூப்பர் ஸ்டார் நண்பா.

சார்வாகன் said...

வணக்கம் சகோ,
//லோக நாயகரின் விஷ்வரூபம்//
விஸ்வரூபம் அலது விஷ்வரூபம் எது சரி? தமிழில் விசுவருபம் என சம்ஸ்கிருத சொல்லை எழுதுகிறோம், எனக்கு இ"ஸ்"க்குதான் சரி எனப்படுகிறது.
**
// பதிவாக வெளியிட்டு ரகசியத்தினை வெட்ட வெளிச்சமாக்கிவிட்டார். (ஹி...ஹி என்ன கொடுமைடேனு சொல்லப்படாது)//

இது பெருமை சகோ. அன்றே கூறினார் வவ்வால் வாரிசு , திரைபட தொழில்நுடப்த்துறையில் இல்லாத ஒருவருக்கு எப்படி இது தெரியும்? ஆகவே இவருக்கு வவ்வால் ஆண்டவர் சொல்லி இருக்க மட்டுமே முடியும்.ஆகவே வாரிசு சொல்லும் சொற்கள், செய்யும் செயல்கள் அனைத்தும் எப்போதும் சரியே!!!அனைவரும் கேள்வி கேட்காமல் பின்பற்ற வேண்டும்!!

எப்புடீ!!!
****
//தற்போதைய சூழலில் விஷ்வரூபத்தினை BARCO AURO:3D-11.1 ஒலியமைப்பில் காணும் வாய்ப்பு பெரும்பாலோருக்கு கிடைக்க வழியில்லை என்றே தோன்றுகிறது, என்ன செய்யப்போகிறார் லோகநாயகர்?//

இதுதான் (பஞ்ச) தந்திரம் என்வும் நினைக்கலாமா!!!

***
//இம்முறையில் ஒரு சேனலில் நிகழ்ச்சியைப்பார்த்துக்கொண்டு இன்னொரு சேனலின் நிகழ்ச்சியை கணினியில் பதிவும் செய்துக்கொள்ளலாம்.//
ஹி ஹி சும்மாவே சுடசுட முதல் காட்சி முடிந்தவுடன் இணையத்தில் படம் ஏற்றுகிறார்.இப்போது ஹி ஹி

***
//ஆனால் அவரது தொழில்நுட்ப அறிவு 100 கோடியில் படம் எடுத்து 1000 ரூபாயில் திருட்டு டிவிடி தயாரிக்க தான் உதவும் என்பதை கூட அறியாத நிலையில் தான் உள்ளது என்பதே அடிப்படையான உண்மை!//

ஹி ஹி அதே முடிவு!!.நம்ம மக்களைப் பத்தி சரியா புரியாமல் செய்யும் வேலை இது!!!

ஆப்பசைத்த குரங்கின் கதைதான்!!

நன்றி!!

வவ்வால் said...

நாடிநாராயனன் சார்,

வாங்க,நன்றி!

ஹி...ஹி நாம ஒரு மீசை வச்ச குழந்தை தாங்க, என்ன கொஞ்சம் கேடி பில்லா ,கில்லாடி ரங்கா போல அட்டகாசம் செய்யும் குழந்தை :-))

நன்றி!
-------------

மாக்கான்,

வாங்க, நன்றி!

என்ன எங்கேயோ கிளம்பி போக சொல்லுறார் போல, கூகிள் பிளஸ், துவித்தர்னு போயிடலாமா :-))

----------

சகோ.மார்க்க பந்து.

வாங்க,நன்றி!

அது என்ன மதம் தவிர அதுலயும் பட்ட கிளப்புவோம்ல :-))

பதிவுலக சூப்பர் ஸ்டாருன்னு எல்லாம் வெளியில சத்தமா சொல்லிடாதிங்க என்னோட சேர்த்து ,உங்களையும் திட்ட ஆரம்பிச்சுடும் ஒரு கோஷ்டி :-))

நாம பதிவுலக வவ்வாலாகவே இருப்போம், நமக்கு தான் போட்டியே கிடையாது , தனிக்காட்டு ராஜா!!!
--------------

சகோ.சார்வாகன்,

வணக்கம், நன்றி!

உங்க கணக்கு பதிவ பார்த்து பேய் முழி முழிச்சிட்டு சத்தம் போடாம வந்துட்டேன் :-))

ஸ் அல்லது ஷ் ஆனு எனக்கும் சந்தேகம் தான், ஆனால் அவாள் பாஷையில் "ஷ்" தானே போட்டுப்பா,அப்போ அதான் சரியா இருக்கும்னு போட்டுக்கிட்டேன்.

சரி விடுங்கோ, நாமளும் அவாள் போலவே பேஷிண்டா போச்சு :-))

# நாம் ஆரம்பத்தில் இருந்து வவ்வால் கடவுளின் தேவ செய்தியையே சொல்லி வந்தோம், குபீர்கள்( ஏக இறைவன் வவ்வால் மீது நம்பிக்கை இல்லாதவர்கள்) சதித்திட்டம் தீட்டி விஸ்கி பாட்டிலின் மூடியில் விஷம் தடவி என்னை சோதித்தார்கள், ஆனால் நான் பிராண்டி மட்டுமே விரும்பியதால், விஷம் தடவிய விச்கியை ஒரு குபீரையே குடிக்க வைத்துவிட்டேன் :-))

எல்லாம் வவ்வாலின் சித்தம் !!!

# வியாபார பஞ்ச் தந்திரம், யாரும் படத்தை வாங்கலையேனு என்ன என்னமோ சொல்லிக்கிட்டு இருக்கார் லோகநாயகர்.

டிடிஎச் இல் போட்டால் திருட்டு டிவிடி காரங்களுக்கு தான் அல்வா சாப்பிட்டா போல இருக்கும் :-))

இணையத்தில் அப்லோட் செய்வதை சொல்ல வேண்டும் என நினைத்தேன் ஆனால் மறந்துவிட்டேன், சரியாக நியாபக படுத்தினீர்கள்.

அப்லோட் மட்டும் இல்லை ஸ்ட்ரீமிங்கும் செய்யலாம்.

ஆப்பசைத்த குரங்கு மட்டுமா மங்குனி மங்கியாகவும் ஆகிட்டார் லோகநாயகர் :-))

வெளிநாட்டில் எல்லாம் செட்டாப் இல்லாமலே நேராக டிவி, கணினி என கொண்டு செல்லவும் அடாப்டர்கள் கிடைக்குது, நேராக செட் டாப் பாக்ஸ் ஸ்மார்ட் கார்டினை அதில் போட்டுக்கொள்ளலாம், வயர்லஸ் முறையில் வீட்டில் உள்ள எல்லாருக்கும் டிவி நிகழ்ச்சி பிராட் காஸ்ட் ஆகும்.

இன்னும் பல கோல்மால்கல் செய்யலாம்.

# பதிவில் சொன்னது கவனித்தீர்களா? நம்ம ஊரில் ரிலீஸ் முன்ன டிடிஎச் இல் வெளியிட்டால், அது அப்படியே உள்ளூர் கேபிள் டி.வியில் காட்டி விடுவார்கள், அவ்ளோ தான் மொத்தமா துண்டு தான்:-))

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

விளக்கமா புட்டுப் புட்டு வச்சுட்டீங்க பாஸ்

Anonymous said...

டாடா ஸ்கை செட்டாப் பாக்ஸை யுஎஸ்பி டியூனர் வழியாக லேப்டாப்பில் இணைத்து டிவி நிகழ்ச்சிகளை பார்ப்பதும், பதிவு செய்துகொள்வதும் எங்கள் வீட்டில் வழக்கமான நடைமுறை. 1000 கொடுத்துப் பார்க்க முன்வரும் அனைவரும் இந்த ஏற்பாடு உள்ளவர்களாகத்தான் இருப்பார்கள் என்று யூகிக்கலாம்! மேலும் நீங்கள் குறிப்பிட்டுள்ள அவர் மீடியா பிராண்டின் பிசிஐ டிவி கார்டைத்தான் நான் மேன்ஷன் அறையில் தங்கும் நேரங்களில் டிவி பார்க்கப் பல ஆண்டுகளாக பயன்படுத்திவருகிறேன். யுஎஸ்பி டியூனர்களைப் பொறுத்தவரை முன்பு சிகரெட் பெட்டி சைஸில் இருந்தவை இப்போது பென் டிரைவ் அளவுக்கு சுருங்கிவிட்டதாக இந்தப் பதிவு மூலம் அறிந்துகொண்டேன்.

ரிச்சி தெரு போனால் வீட்டில் இருக்கும் எதையும் எதனுடனும் இணைக்க அவர்கள் ஒரு அடாப்டர் வைத்திருப்பார்கள்!

இன்னொன்று, ரூ. 1000 கொடுத்தவர்களுக்கு 3 மணிநேரம் தடையில்லாத மின்சாரம் இருக்கும் என்று யார் கியாரண்டி தருவது? இன்வர்ட்டர் கூட அவ்வளவு நேரம் தாக்குப்பிடிப்பது கஷ்டம். எனவே சாதாரணர்கள் யாரும் கண்டிப்பாக ஆன் டிமான்டில் வாங்க மாட்டார்கள்! திருட்டு டிவிடி தயாரிப்பவர்கள் மட்டுமே ஜேனரேட்டர் அல்லது அதிக எண்ணிக்கையில் பேட்டரிகளை வைத்துக்கொண்டு தயாராக இருப்பார்கள்! வழக்கமாக டாடா ஸ்கையில் ஒளிபரப்பாகும் படங்களை ஒருமுறை வாங்கினால் அன்று முழுவதும் 3 ஷோக்கள் வரை பார்க்கும் வசதி இருப்பது மின்வெட்டிலிருந்து பாதுகாக்கிறது. இந்த வசதி இல்லாமல் ரூ. 1000 கேட்பது அபத்தம்!

சரவணன்

வவ்வால் said...

முரளி,

வாங்க,நன்றி!

தொழில்நுட்ப ரீதியாக சிந்திக்காமல் குருட்டாம் போக்கில் செய்யும் வேலையை தான் லோகநாயகர் செய்கிறார்.

-----------

சரவணன்,

நன்றி!

நீங்களும் டி.வி டியுனர் கார் பயன்ப்படுத்தி இருக்கிறீர்களா, நான் 2000 இல் வாங்கிய டெஸ்க்டாப்பில் இன்டெர்னல் டியுனர் கார்டுடனே வாங்கினேன், அப்போவே படங்களை பதிவும் செய்துள்ளேன்.

டாடா ஸ்கையில் யுஸ்பி போர்ட் இருக்கு என கேள்விப்பட்டுள்ளேன், மறந்து விட்டேன் அதனை, அதுவும் ஒரு எளிய வழி தான்.

மேலும் நான் குறிப்பிட்ட படி பல புதிய டிவிக்களில் HDMI,wireless connection என இருப்பதாலும் எளிதில் பகிர்ந்து ,ரிகார்ட் செய்துவிடலாம்.

டிடிஎச் இல் போடுவது நல்ல முயற்சி எப்போது எனில் படம் வெளியாகி சில நாட்கள் கழித்தும், விலை குறைவாக வைத்தாலுமே.

தியேட்டருக்கு முன்னர், 1000 ரூ விலை என்றால் எத்தனை பொதுமக்கள் பார்ப்பார்கள், எவனோ திருட்டு டிவிடி தயாரிப்பவன் தான் ஆஹா லட்டு திங்க ஆசையானு கொடுக்கிறாரு லோகநாயகர்னு 1000 ரூ கொடுப்பான் :-))

ஆனால் இந்த ரசிக கண்மணிகளுக்கும் தொழில்நுட்ப விழிப்புணர்வே இல்லை , கண்ணை மூடிக்கிட்டு ஆஹா புதிய புரட்சி செய்துட்டாரு லோகநாயகர்னு இணையத்தில் விசில் அடிக்குதுங்க :-))

எது எப்படியோ லோகநாயகர் புண்ணியத்தில் சுட சுட தரமான பிரிண்ட்டில் இணையத்தில்,அல்லது திருட்டு டிவிடி மூலம் படம் பார்க்கலாம் :-))

ராஜ நடராஜன் said...

வவ்சு!எல்லோரும் வடை பிரமாதம்!ஆகா!ஓகோன்னு கத்துறாங்க!ருசில கத்துறாங்களா இல்ல காரம் தாங்க முடியாம கத்துறாங்களான்னு தெரியலையே!

எனக்கென்னமோ BARCO AURO:3D முதல் ரெக்கார்டிங் வரை ஆறுன வடையை சாப்பிட்ட பீலீங்!

ஆமா!ஒரு தடவை மண்டைக்குள்ள ரெக்கார்டான பிறகு அப்புறம் எதுக்கு ரெக்கார்டிங்!டிவி டியூனர்ன்னு!

பாக்ஸின்னு ஒண்ணு இருக்குது தெரியுமில்ல!கணினியே வேண்டாம்.இருக்குற புரோகிராம்களை பார்த்து முடிக்கனுமின்னா வவ்வாலா பறந்தாலும் முடியாது.

எந்த வயர் எங்கே போகுதுன்னு நோண்டுவதற்கே மறை கழண்டுக்குது.இதுல ரெக்கார்டிங்க் செய்யலாம் வாங்கன்னு வேற கூப்பிடறீங்க!இதாவது பரவாயில்லை.சகோ.சார்வாகனின் கவலையைப் பாருங்க!ஸ் வருமா இல்ல ஷ் வருமான்னு:)ஏன் விசுவரூபம்ன்னு மென்மையா வாசிக்கிறது!

யூடிவி புரமோட்டர் யாரு ரிலையன்ஸா? நேற்றைக்குத்தான் நெட்பிளக்ஸில் முகமூடி படமே பார்த்தேன்.திருட்டு வீடியோ ஒழிவதற்கும் சந்தா அல்லது பே ஆன் டிமான்ட் முறையில் தமிழில் படம் பார்க்க விஸ்வரூபம் ஏன் முதல் படியாக இருக்க கூடாது?

நீங்க என்னமோ பார்கோ சவுண்ட்க்காக லோகநாயகர் படத்தை தாமதப்படுத்துவதாக சொல்றீங்க!மார்க்க பந்துக்கள் துப்பாக்கி பயத்துல கதையையே மாற்றுவதற்காக தாமதப்படுத்துவதாக சவுண்டு உடறாங்க!இதுல எது உண்மை:)

ராஜ நடராஜன் said...

//ஆனால் இந்த ரசிக கண்மணிகளுக்கும் தொழில்நுட்ப விழிப்புணர்வே இல்லை , கண்ணை மூடிக்கிட்டு ஆஹா புதிய புரட்சி செய்துட்டாரு லோகநாயகர்னு இணையத்தில் விசில் அடிக்குதுங்க :-))

எது எப்படியோ லோகநாயகர் புண்ணியத்தில் சுட சுட தரமான பிரிண்ட்டில் இணையத்தில்,அல்லது திருட்டு டிவிடி மூலம் படம் பார்க்கலாம் :-))//

யாராவது ஒரு புது முயற்சி செய்துடக்கூடாதே!லோகநாயகருக்கு தட்டிக்கொடுக்கறதை விட்டுப்புட்டு நொள்ளை சொல்லிகிட்டு.உங்களையெல்லாம் ஏசியே இல்லாத தியேட்டர்க்குள்ள விட்டு கையிலு முறுக்கு நொறுக்குத் தீனியை கொடுத்துட்டு கதவை தாழ்ப்பாள் போட்டு மூடிட்டு ரித்திஷ்,பவர் ஸ்டார் படங்களை விடாம 10-10 தடவை பார்க்க வைக்கனும்:)

ஒவ்வொரு கால கட்டத்திலும் கிடைக்கும் தொழில் நுட்பங்களை வைத்துக்கொண்டு தமிழக பட்ஜெட்டுக்குள் புது புது முயற்சிகளை தமிழ் சினிமா பிதாமகன்கள் தொடர்ந்து செய்து வருகிறார்கள்.

ராஜ நடராஜன் said...

ப்ளூ ரே,ஹெச் டி இரண்டு தொழில் நுட்பங்கள் ஒரே நேரத்தில் போட்டி போட்டன.ஆனால் பொருளாதார ரீதியாக ஹெச் டி சந்தையை பரப்பிக்கொண்டது.பெருசா கடை விரிக்காட்டியும் கூட ரெசல்யூசன் ஒப்பீட்டில் ப்ளூ ரேதானே உசத்தி.அந்த மாதிரி பார்கோ பரவலாகப் போகாட்டியும் கூட தமிழின் முதல் பார்கோ திரைப்படம்ன்னு பெயர் வாங்கிக்கொள்ளுமே.ராஜ ராஜ சோழன் படம் ஊத்திகிட்டாலும் கூட தமிழின் முதல் சினிமாஸ்கோப் படம் என்ற பெயரை இன்றும் தாங்கி நிற்கிறது.

நீங்க பொங்கினாலும் வருவேன்.எனக்கே பொங்கினாலும் கூட திரும்ப வருவேன்:)

வவ்வால் said...

ராச நட,

வாரும்,நன்றி!

வடை சூடோ, ஆறியதோ நம்ம கடை வடை தனிச்சிறப்பானது, வேறு எங்கும் இதே போல கிடைக்காது.

இப்போ இருக்கிற நிக்ழச்சிகலை மட்டும் பார்த்து முடித்து விட முடியுமா?

லோகநாயகர் செய்வது எப்படி திருட்டு டிவிடியை ஒழிக்கும்?

மக்கள் டிவிடி யில் பார்க்க காரணமே திரையரங்கு போனால் அதிக செலவு என்பதால் தான்,மேலும் நமக்கு ஏற்ற நேரத்தில் பார்த்துக்கொள்ளலாம்.

அதே சமயம் டிடிஎச்சில் ஒரு முறை பார்க்கவே 1000 ரூ என திரையரங்கை விட கூடுதலாக கட்டணம் வைத்தால் மக்கள் அட இது அதை விட பகல் கொள்ளையா இருக்கேனு ,மீண்டும் டிவிடி தானே பார்ப்பாங்க.

திருட்டு டிவிடிக்கு போட்டியா டிடிஎச் வெளியீடு வரவேன்டும் என்றால், அதே அளவுக்கு மலிவாகவும் இருக்க வேண்டாமா?

ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பார்க்க வேன்டும் என கட்டாயம் ஆக்குவதும் ,பார்வையாளருக்கு தொல்லையான ஒன்றே. அந்த நேரம் பவர் ஆகுது, இல்லை வேறு ஏதோ ஒரு பிரச்சினை, எனில் 1000 ரூ தண்டமாயிடாதா?

ஏதோ ஒரு பகுதியில் கன மழை பெய்தால் டிடிஎச் வேலை செய்யாது,அவர்களுக்கும் பணம் தண்டம்.

இப்போ வழக்கமாக டிடிஎச் இல் ஒரு முறை மூவி ஆன் டிமாண்ட் இல் வாங்கினால் 24 மணி நேரத்துக்கு பார்த்துக்கொள்ளலாம். பழைய படம் எல்லாம் ஒரு மாசம் வரைக்கும் பார்க்கலாம்.

எனவே லோகநாயகர் செய்வது , புரட்சி அல்ல, புண்ணாக்கு :-))

ஒட்டகபிரியாணி சாப்பிட்டு மூளை மந்தமாகிடுச்சு போல :-))

இப்போ 1000 ரூ கொடுத்து டிடிஎச் ஐ யாருப்பயன்ப்படுத்துவாங்க என்றால் திருட்டு டிவிடி தயாரிக்கிரவங்க தான் :-))

புது முயற்சி, என்றால் மக்கள் அனைவரும் வாங்கும் விலையில் வைத்தால் தான் எடுபடும், 1000 ரூ கொடுத்துவிட்டு படம் நல்லா இல்லைனா இன்னும் காண்டாகி , தியேட்டருக்கு முதல் போறவங்கலையும் போக வேண்டாம்னு சொல்லிடுவங்க :-))

ஹாலிவுட்டில் ஆரம்பத்தில் இருந்தே சின்னப்பட்ஜெட் படங்கள் இப்படி வருதுனு சொன்னதை ஏன் கவனிக்கலை, அதே சமயம் பெரிய பட்ஜெட் படங்கள் தியேட்டருக்கு வந்த பின்னரே டி.வி,டிவிடி ஆகும், காரணம் பட்ஜெட் தான்.

எனவே தமிழில் ரிவர்சில் செய்வதால் பெரிய பட்ஜெட் படத்துக்கு நட்டம் தான் வரும்.

பதிவையும் ஒழுங்காக படிக்காதிங்க, ஆனால் பேச்சு மட்டும் பெத்த பேச்சு :-))

நாய் நக்ஸ் said...

பார்ப்போம்..........என்ன நடக்குதுன்னு...........!!!!

பெரிய பெரிய அறிஞர்கள் எல்லாம் இருக்காங்க....சோ....நாம வேடிக்கை பார்ப்போம்........

ராஜ நடராஜன் said...

//லோகநாயகர் செய்வது எப்படி திருட்டு டிவிடியை ஒழிக்கும்?//

வவ்சு!போன பதிவிலேயே ப்ரியா கார்த்திக் உங்களை கிள்ளுற போது நானும் சேர்ந்து ஒரு கொட்டு வைக்கலாமான்னு நினைச்சேன்.அட நல்லா போற ஆட்டத்தை களைக்க வேண்டாமேன்னு சும்மா இருந்துட்டேன்.ஆனா இப்ப விடற மாதிரி இல்ல!ஏன்னா இது நம்ம பேட்டை.

இப்படியா டக் அவுட் ஆவீங்க!டிடிஎச் படம் பாருன்னு லோகநாயகர் சொல்றதே நான் மேலே சொன்ன திருட்டு வீடியோவை ஒழிக்கறதுக்கு முதல் படி.காரணம் நீங்க சொல்ற மாதிரி டி.டி.எச் ல படம் பார்த்துட்டு காப்பி செய்ய முடியாதுன்னு நாயகர் சொல்றார்.பார்கோவையெல்லாம் ஆணி வேறா அக்கு வேறா புடுங்கி எடுத்துட்டு டிடிஎச் ல சறுக்குறீங்களே!

விலை மலிவாக இல்லைன்னு சொல்வதை ஏற்றுக்கொள்ளலாம்.ஆனால் போட்ட காசை திரும்ப எடுக்கனும்ங்கிற பட்ஜெட் கணக்கு இருக்கலாம்தானே!அப்படியும் டிடிஎச் ல படம் பார்ப்போம் 1.5 சதவீதம்தான்னு லோகநாயகரே சொல்றார்.

படங்களை டிவிடில பார்க்கறது வசதிதான்.ஆனால் வீட்டுல காலை நீட்டி உட்கார்ந்துகிட்டு வடை சாப்பிட்டுகிட்டே ஜேம்ஸ் கேம்ரூனின் அவதார் படத்தை 32 இன்ஞ் டிவில பார்த்தேன் என்று சொல்லும் அனுபவத்துக்கும் தியேட்டரில் 3D கூகுள் போட்டுகிட்டு ஐமேக்ஸில் பார்த்தேன்னு சொல்ற அனுபவத்துக்கும் வித்தியாசம் இருக்கிறதல்லவா?

நான் மட்டும் சென்னையிலிருந்தால் பார்கோ சவுண்ட் எப்படி இருக்குதுன்னு கேட்பதற்கே சத்யம் தியேட்டர்தான் போவேன்.சவுண்டு பற்றி பேசும் போது முந்தாநாள் 4D சவுண்டு அனிமேசன் படம் ஒன்றை யூடியூப்பில் போல்க் ஆடியோ மூலமா கேட்டேன்.ஒலி வித்தியாசம் ஒலி ஞானசூன்யமான எனக்கே தெளிவா கேட்குது.

சவர்மான்னு துண்டு துண்டா வறுத்த கறியை சாமூன்னு பன்னுக்குள்ள வச்சு அமுக்கிய சாண்ட்விச் கிடைக்குது.அது ஒட்டக கறியா இருக்குமோன்னு ரொம்ப நாளாவே எனக்கு ஒரு சந்தேகம்:)

படிக்காம பின்னூட்டம் போடறதில்லைங்கிற விரதக்காரனுக்கே இப்படியொரு கேள்வி போட்டா வவ்வால் தூங்குற குகையிலதான் போய் முட்டிக்கனும்:)


? said...

லோகத்து மேல கொலவெறியோட இருக்கறீங்க போல.

"பில்டப் கொடுக்குறனோ, பீலா விடுறைனோ, அது முக்கியமில்ல... நாம எது பண்ணாலும் உலகம் உடனே உத்து பாக்கனும்" என வடிவேலு சொல்வதை வேதவாக்காக செயல்படுகிறவர் நம்ம லோகம்! முன்பு ஆஸ்கர் வாங்குகிறேன் பேர்வழி என பில்டப் கொடுத்தார். இப்ப ஹாலிவுட் போறன் என பில்டப் கொடுக்கிறார். என்னமோ ஜூலியா ராபர்ஸ், ஆன்ஜலினா ஜூலி எல்லாம் இவரு கூட ஜோடியாக நடிக்க கால்சீட் கொடுக்க போற மாதிரி ஆளைவிட்டு கேளுவி கேட்க வைத்து சந்தோசப்பட்டு கொள்கிறார். இவரு ஹாலிவுட்டுக்கு வருகிறார் என்று கேள்விப்பட்டதும் ஆன்ஜலினா ஜூலி VRS வாங்கிவிட்டார் போல.கடைசியில் ரஜினி மாதிரி உப்புமா வேடத்தில் நடிக்க போகிறார். இதே போல் பில்டப்புதான் இந்த மேட்டரும். பார்ப்போம் என்ன நடக்குதுன்னு.



//ப்ளூ ரே,ஹெச் டி இரண்டு தொழில் நுட்பங்கள் ஒரே நேரத்தில் போட்டி போட்டன.ஆனால் பொருளாதார ரீதியாக ஹெச் டி சந்தையை பரப்பிக்கொண்டது.//

ப்ளூ ரே,ஹெச் டி இரண்டையும் போட்டு குழப்பிவிட்டிருக்கிறார் சகோ ராச நடை. இரண்டும் வேறு விதமான சமாச்சாரங்கள் அல்லவா?(HD படத்தின் தரம், ப்ளூ ரே- ஸ்டோரேஜ்) HD சினிமா வீட்டில் பார்க்க ப்ளூ ரே அவசியம் அல்லவா? ஒருவேளை டிவியின் HD-யையும் ப்ளுரேவையும் சொல்கிறாரா?

//உங்க கணக்கு பதிவ பார்த்து பேய் முழி முழிச்சிட்டு சத்தம் போடாம வந்துட்டேன் :-))//

Why blood? same blood!

வவ்வால் said...

ராச நட,

வாரும்...வாரும் ...நன்றி!

நம்ம பேட்டைனு உத்ஆர் எல்லாம் சரி தான் பேட்டையின் நுட்பம் தெரியாம பேசினா எப்பூடி...

உங்களுக்கு இது பேட்டையா ... பேதியானு ...பார்த்துடுவோம் :-))

செட் டாப் பாக்சில் இருந்து வெளியில் டிடிஎச் சிக்னல்ல் வந்துவிட்டால் அதில் என்கிரைப்ஷனும் இருக்காது ஒரு மண்ணும் இருக்காது :-))

எல்லாத்தையும் உருவிட்டு வெறும் ஒலி,ஒளி சிக்னல் தான் வரும்.

உண்மையில் அப்படி ஏதேனும் என்கிரைப்ஷனுடன் தொலைக்காட்சிக்கு சிக்னல் அனுப்பப்ப்டுமானால் எல்லா வகை மாடல் தொலைக்காட்சிகளும் எப்படி டிடிஎச் படத்தினை காட்டும்.

அப்போ எல்லா தொலைக்காட்சியிலும் என்கிரைப்ட் செய்தத்ஐ டிகிரைப்ட் செய்ய டிகோடர் இருக்கிறதா?

10 ஆண்டுக்கு முன்னர் வாங்கிய தொலைக்காட்சியிலும் டிடிஎச் எப்படி பார்க்க முடியும்?

டிடிஎச் செட் டாப் பாக்சில் டிஜிட்டல் சிக்னலாக கொடுக்க AV points 3 இருக்கும், பின்னர் பழைய தொலைக்காட்சியுடன் இணைக்க அனலாக் கோ-ஆக்சியல் சாக்கெட் , சிலவற்றில் யு.எஸ்.பி போர்ட் என இருக்கிறது. மூன்றின் வழியாகவும் சிக்னல் எடுத்து தேவைக்கு ஏற்பப்பயன்படுத்த முடியும்.

இதான் இந்திய நிலை.

வெளிநாட்டில் Dgital rights Manahement ,இல் HDCP (High Bandwidh Copyright Porotection) உள்ளது அங்கு கூட ஓரளவுக்கு கட்டுப்படுத்த முடிகிறது. இம்முறையில் டிவி மற்றும் செட் டாப் பாக்ஸ் ஹேண்ட் ஷேக்கிங் என்ற முறையில் தொடர்பை உறுதிப்படுத்த மட்டுமே செய்யும்.

இது எப்படி எனில் ஒரு செட் டாப் பாக்ஸ் உடன் என்ன வகை தயாரிப்பு இணைக்க முடியும் என முன்கூட்டியே பட்டியல் இட்டுவிடுவார்கள்,ஹார்ட் வேர் கம்பேட்டியபில் லிஸ்ட் எனலாம். இதனை செட்டாப் பாக்ஸ் நிறுவனம் தான் செய்யும், அவர்களுக்காக இவ்வேலையை இன்டெல் செய்கிறது. இதனால் அந்த பட்டியலில் இல்லாத டிவி பிராண்டில் படமே தெரியாது. இதற்கு அமெரிக்காவில் எதிர்ப்பு உண்டு, இதனால் எல்லா செட் டாப் பாக்ஸுடனும் எல்லா டிவியும் இணைக்க முடியாத நிலை, டிவி பெட்டி தயாரிப்பவர்கள் புதிய மாடல் தயாரித்தவுடன் , தங்கள் மாடலை பட்டியலில் சேர்க்க இன்டெலுக்கு பணம் கொடுக்க வேண்டும்.

ஆனால் ஹார்ட்வேர் கம்பேட்டியபிள் லிஸ்ட்டை கணினி மூலம் தொலைக்காட்சி பார்ப்பவர்கள் எளிதில் ஏமாற்றிவிட முடியும் :-)) எனவே அமெரிக்கா போன்ற நாட்டிலும் முழுசாக தடுக்க முடியவில்லை.

இதை விட இன்னொரு எளிய வழி , புதிய தொலைக்காட்சி பெட்டிகளில் வீடியோ அவுட் பாயிண்ட்களும் உள்ளன ,அவற்றில் இருந்து கணினிக்கு மாற்றவும் செய்யலாம்.

இந்தியாவில் அப்படியா ஹார்ட்வேர் கம்பேட்டியபிள் லிஸ்ட் போட்டு செட் டாப் பாக்ஸுடன் என்ன வகை டி.வி இணைக்கலாம் என்ற முறையே இல்லை.

அப்படி செய்துவிட்டால் என்ன ஆகும் எனில் , டாடா ஸ்கை செட்டாப் பாக்ஸ் உடன் இணைக்கும் படியான தொலைக்காட்சியை , டிஷ் டிவியின் செட் டாப் பாக்ஸுடன் இணைக்க முடியாத நிலை ஆகும். காரணம் இரண்டும் வேறு வகையான வீடியோ ஃபார்மேட், என்கிரைப்ஷன்.

மேலை நாடுகளிலேயே சாத்தியமாக ஒன்றை , இங்கே 10 வருட பழைய டிவியினை எல்லாம் இணைத்து பார்க்கும் வகையில் இருக்கும் போது எப்படி கட்டுப்படுத்துவாங்க?

சரவணபவனில் வைக்கும் சட்னி அளவுக்கு கூட மூளை இல்லைனா என்ன செய்ய :-))

தொழில்நுட்ப ரீதியாக திருட நினைப்பவர்களை தடுக்கவே முடியாது, அவனவன் எக்ஸ்பாக்ஸ், பிளே ஸ்டேஷன் எல்லாம் டிகிரப்ப்ட் செய்துகிட்டு இருக்காங்க ,நீங்க என்னமோ செட் டாப் பாக்ஸில் இருந்து ரெக்கார்டிங் செய்ய முடியாது என்பதை வைத்து பேசிக்கொண்டு இருக்கிங்க :-))

# திரையரங்க கட்டணம் அதிகம் ஆனதால் தானே எல்லாம் திருட்டு டிவிடி வாங்க்குறாங்க, டிடிஎச் கட்டணம் அதிகமா இருந்தால் எப்படி அது , திருட்டு டிவிடியை தடுக்கும்?

தியேட்டரும் வேணாம், டிடிஎச் உம் வேணாம், திருட்டு டிவிடியே சரணம்னு தான் மக்கள் போவாங்க :-))

அதுவும் நல்ல தரமான பிரிண்ட் லோகநாயகர் புண்ணியத்துல டிடிஎச் இல் இருந்து தயாரித்து கிடைச்சா விடுவாங்களா :-))

தொடரும்...
------------------------

வவ்வால் said...

# வெறும் 1.5 % தான் இவர் படத்தை டிடிஎச் இல் பார்க்கும் எனில் ஏன் அதில் ரிலீஸ் செய்யணும்?

அவர் தமிழ்நாட்டின் மக்கள் தொகைக்கு டிடிஎச் இணைப்பை கணக்கு வச்சு சொல்கிறார், அப்படியானால் 7.5 கோடி மக்களும் ஆளுக்கு ஒரு டிவி,டிடிஎச் ஆ வைத்து இருக்காங்க?

தமிழ்நாட்டில் உள்ள குடும்பங்களின் எண்ணிக்கை , அதில் தொலைக்காட்சி வைத்திருப்போர், அதில் டிடிஎச் வைத்திருப்போர் என கணக்க்கிட வேண்டும்.

total number of electrified houses in tn- 148.73 லட்சங்கள்.

மஞ்சத்துண்டின் உபயத்தில் சுமார் 90% வீடுகளில் டீவீ வந்தாச்சு , அதில் கேபிள் &டிடிஎச் இணைப்பு பெற்றவர்கள் 35% என இந்து பிசினெஸ்லைன் சொல்கிறது.

பார்க்க:

//Tamil Nadu, with almost 35 per cent (of C&S homes) DTH penetration, “is well ahead of the rest of the country”, he said. Cashing in on this trend, all operators are offering special entry fee and monthly subscription packages in the State. Besides, for 2-TV homes, they offer a special monthly package rate of around Rs 150 a month for the second connection – irrespective of the package of one chooses.//

http://www.thehindubusinessline.com/industry-and-economy/marketing/article2059837.ece

டீவி இருக்கும் 90% வீடுகள்= 148.73*90/100=133.857 லட்சம்

இதில் 35% மக்கள் கேபிள் &டிடிஎச் இணைப்பு பெற்றவர்கள் எனில் ,

133.857*35/100=46.849 லட்சம்.

கேபிள்&டிடிஎச் இணைப்புகளின் எண்ணிக்கை மொத்தம் 46.849 லட்சம்,

இதில் 30 சதம் டிடிஎச் இணைப்புகள் எனவும் சொல்கிறார்கள்,

எனவே , 46.8498*30/100=14.05 லட்சம்.

டிடிஎச் இணைப்புகளின் எண்ணிக்கை 14.05 லட்சம் என்பதை கொண்டு போய் மொத்த மக்கள் தொகையுடன் ஒப்பிட்டால் எப்படி?

இதில் சன் டிடி எச் மட்டும் 70% மார்கெட் பிடித்துள்ளது, டாடா, ஏர் டெல், வீடியோகன், டிஷ் ,ரிலையன்ஸ் எல்லாம் சேர்ந்து மீதி 30% மார்க்கெட் வைத்துள்ளார்கள்.

எனவே லோகநாயகர் சொன்னது டாடா ஸ்கையின் தமிழ்நாடு மார்கெட் ஷேர் 3% என்பதாக இருக்கலாமே ஒழிய , மொத்த டிடிஎச் மக்களின் எண்ணிக்கையாக இருக்க வாய்ப்பில்லை.

எனவே டாடா ஸ்கையின் மார்கெட் ஷேர் 3% என்றால்

14.05*3/100= 42164 டாடா ஸ்கை இணைப்புகளே வருது.

இதில் எத்தனை பேரு 1000 ரூ கட்டி விஷ்வரூபம் பார்ப்பார்கள்?

50% பேரு என்றாலும் 21,082 இணைப்புகளே வருது.

21,082*1000=21,082,000 அதாவது 2.1 கோடி ரூபாய் தான் தமிழ்நாட்டில் இருந்து டிடிஎச் மூலம் உருவாகும் வருவாயே. இது பெரிய வருவாயா?

ஆனால் இவ்வருவாயை எடுக்கப்போகிறேன் என திருட்டு டிவிடி தான் உருவாக வழிக்காட்டுகிறார், மொத்தமாக வழிச்சுக்கிட்டு போக போகுது :-))

நீங்க என்னனா லாப்பம் சம்பாதிக்க ஒரு வழின்னு கண்ணை மூடிக்கிட்டு சொல்லுறிங்க :-))

ஆரோ சவுண்டு எப்படி இருக்குன்னு கேட்க தமிழ்நாட்டில் உள்ள எல்லாரும் சத்யம் தியேட்டருக்கே படம் பார்க்க போவாங்களா?

உள்ளூர் தியேட்டரில் வழக்கமான சவுண்டு தானே, திருட்டு டிவிடியே போதும்னு உட்காரும் மக்கள் :-))

மேலும் டிடிஎச் வைத்திருப்பவர்கள் எல்லாம் பணக்காரர்கள் என்று வேறு காமெடி செய்துள்ளார் :-))

குடிசை வீட்டிலும் டிடிஎச் வைத்திருக்கிறார்கள்.
-------------------------------

வவ்வால் said...

நந்தவனம்,

வாங்க,நன்றி!

//. நாம எது பண்ணாலும் உலகம் உடனே உத்து பாக்கனும்" என வடிவேலு சொல்வதை வேதவாக்காக செயல்படுகிறவர் நம்ம லோகம்! //

அதே தான் , மேலும் படம் ஓடவில்லை எனில் நான் புதிதாக முயற்சித்தேன் அதான் தோல்வி என்பார், இப்போ திருட்டு டிவிடி எடுக்க முடியாதுன்னு சொன்ன அதே வாயால் திருட்டு டிவிடி மூலம் படம் படுத்துக்கிச்சுன்னு சொன்னாலும் சொல்வாரு :-))

-------

ராச நட,இப்படித்தான் எல்லாத்தையும் குழப்பிக்கிட்டு நம்மை சறுக்கிட்ட,வழுக்கிட்ட என்பார் :-))

அவருக்கு எப்பவுமே, ஃபார்மேட், பொருள்,பிராண்ட் நேம் இதுக்கான வித்தியாசம்லாம் தெரியாது.
---------

ஹி...ஹி சார்வாகன் கணக்குப்பதிவு பார்த்து உங்களுக்கும் பிளட் ஆஹ் :-))
-----------

நக்ஸ் அண்ணாத்த,

நன்றி!

என்ன அடக்கமா இப்படி சொல்லிட்டீங்க?

பூந்து கலாச வேணாம்.

வவ்வால் said...

ராச நட,

முந்தைய கணக்கை விட இன்னும் கொஞ்சம் துல்லியமாக இன்னொரு கணக்கு இப்போ.

//Sun Direct, with 17.5 lakh connections, controls 80% to 85 % of the DTH subscriber base in Tamil Nadu. The balance is shared by other operators like Airtel, Videocon, Tata Sky and Dish TV.//

http://articles.timesofindia.indiatimes.com/2011-09-16/chennai/30164367_1_dth-arasu-cable-tv-entertainment-tax

தமிழ் நாட்டில் 80-85% டிடிஎச் இணைப்புகளை சன் டிவி வைத்துள்ளதாகவும் அதன் எண்ணிக்கை 17.5 லட்சங்கள் என்கிறார்கள்.

80% என்றே எடுத்துக்கொள்வோம், = 17.5 லட்சம் என்றால் 100%?

17.5*100/80=21.875 லட்சங்கள்.

சன் டிவி யின் புள்ளிவிவரங்கள் சரியாக இருக்குமானால் தமிழ்நாட்டில் செப்டம்பர் ,2011 வரையில் 28.875 லட்சங்கள் தான் மொத்த டிடிஎச் இணைப்புகள்.

இந்த தகவலின் அடிப்படையில் பார்த்தாலும் ,டாடா ஸ்கையின் டிடிஎச் இணைப்புகள் குறைவாகவே வரும்.

சன் டிடிஎச் இன் 17.5 லட்சம் போக மீதம், 4.375 லட்சங்கள்.

அதனை டாடா, டிஷ், ஏர்டெல், பிக் டீவி, விடியோகான் ஆகியோர் பிரித்துகொள்வதாக கொண்டால். டாடா ஸ்கைக்கு குறைவான அளவே வரும் ,

மற்ற 5 டிடிஎச் உம் சமமாக பிரிப்பதாக கொண்டாலும் ,

4.375/5=87,500 என வரும்.

டாடா ஸ்கையின் டிடிஎச் எண்ணிக்கை 87,500 என வைத்துக்கொண்டு அதில் பாதி 50% பேர் 1000 ரூ கட்டி படம் பார்த்தால் வரும் வருமானம் ,

87,500*50/100*1000= 43,750,000

அதாவது 4.37 கோடி ரூபாய்கள் மட்டுமே டிடி எச்சில் திரையிடுவதன் மூலம் வருவாய் வரும், இதனை வைத்து 50 கோடி வருவாய் வரும் ரேஞ்சில் பேசுவதெல்லாம் மிகை என்றே சொல்லலாம்.

மேலும் தமிழை தவிர்த்து மற்ற ,மொழியில் அதிகம் பார்க்க மாட்டார்கள் எனலாம்.

இந்த புதிய கணக்கு ஓரளவு சரியாக வருகிறது.

ஜோதிஜி said...

ஏற்கனவே ஒரு கோரிக்கை வைத்து உள்ளேன். இன்னமும் அதைப் பற்றி எழுதவில்லை .

அடுத்த கோரிக்கை

வீட்டுக்குள் வைக்கும் வைக்க வேண்டிய எளிமையான ஹோம் தியேட்டர் பற்றி உங்கள் பாணியில் அக்குவேறாக பிரித்து மேய்ந்து எழுதுவும்

perumal karur said...

சூப்பர் பதிவு...

Thomas Ruban said...

லோகநாயகரே இவ்வளவு விசியங்களை யோசித்திருப்பார என்பது சந்தேகம்தான்..

இந்த பதிவின் மூலம் அறிந்துக் கொள்வது படம் திரையரங்கில் வருவதற்கு முன்பே நல்ல தரத்துடன் இணையத்தில் கிடக்கும் என்பது அந்த லிங்கையும் நீங்கள் பதிவிட்டால் தான் இந்த பதிவு நிறைவடையும்:) ராச நட அப்போதுதான் நம்புவார்.

Thomas Ruban said...

சில சந்தேகங்கள்
செட்டாப் பாக்ஸ்ல் இருந்து இன்னொரு தொலைக்காட்சிக்கு இணைத்து இரண்டிலும் வெவ்வேறு நிகழ்சிகளை பார்க்க முடியுமா? முடியும் என்றால் அதை எப்படி செய்வது?

உலகம் தோன்றிய பிறகு முதல்முதலில் இறந்த மனிதர் யார்? அதற்கு வரலாற்று ஆதாரங்கள் எதுவும் உள்ளதா?

நன்றி.

Anonymous said...

வவ்வால்...
கமல் ஏதோ செய்து விட்டுப் போகிறார்.. ஆனால் ஒரேயொரு விசயம் எனக்குப் புரியவில்லை.. எந்த வித டிகிரிப்ஷன் என்கிரிப்ஷன் இல்லாமல், டிடிஎச்சில் கொடுக்காமலேயே, படம் வெளியாகி 1 அல்லது 2 நாட்களில் பல திருட்டு விசிடிக்கள் வெளியாகின்றன.. அதெப்படி...? உதாரணத்திற்கு கமல் படங்களையே எடுததுக கொள்ளலாம்... தசாவாதரம் வெளியாகி 7 நாட்களில் எங்கள் ஊர் பிளாட்பாரத்தில் பெயர் போடாமல் டிவிடி விற்றுக் கொணடிருந்தார்கள்... அவரிடம் விசாரிக்க பெயர் போடாததெல்லாம் புதுப் படம் என்றார்.. தூக்கி வாரிப் போட்டது... அதே போல் உன்னைப் போல ஒருவன் படம்கூட நாம் அன்றாடம் பார்க்கும் இணைய தளம் ஒன்றில் , படம் வந்து சில நாட்கள ஓப்பனா டவுன் செய்து கொள்ளுங்கள் என்று பார்த்தேன்...அதனால் கமல் டிடிஎச்சில் விடாவிட்டாலும் திருட்டுத்தனம் செய்கிறவர்கள் செய்து கொண்டுதான் இருப்பார்கள்..

ராஜ நடராஜன் said...

நந்தவனத்தான்!.அனலாக் டேப் காலத்தில் வி.ஹெச்.எஸ்,பேட்டாமேக்ஸ்ன்னு இரண்டு வடிவத்தில் ஒலி,ஒலிகள் டேப்பில் பதிவு செய்யப்பட்டன.நாம் டிஜிட்டலுக்கு தாண்டியதும் 1.சி.டி 2. டிவிடி 3,ஹெச்டி டிவிடி 4 ப்ளூ ரேன்னு பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கிறோம்.அடிப்படையில் பார்த்தால் தொசிபாவுக்கும் சோனி நிறுவனத்துக்குமான ஸ்டோரேஜ் டிவைஸ்க்கான போட்டி என ஹெச் டி,ப்ளூ ரே பார்மேட்களை சொல்லலாம்.ஹெச் டி டிவிடி வட்டுக்கள் சிவப்பு லேயர் டியோட்களையும் ப்ளூரே வட்டுக்கள் நீல,வயலட் டியோட்களால் ஆனது.டியோட்களை லேசர் கதிர்கள் என பொருள்படுத்திக்கொள்ளலாம் என நினைக்கிறேன்.நிறுவனங்களின் சந்தைப் போட்டிகளோடு படங்களை தனித்துவமாக ப்ளூ ரே டிஸ்கில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என்ற அடிப்படை நோக்கத்தோடும் தயாரிக்கப்பட்டது..போட்டி நிறுவனங்கள்,லேசர்,ஆப்டிகல் மூலப்பொருட்கள் இன்னும் பலவென அடிக்கிக்கொண்டே போகலாம்.நம்ம பின்னூட்ட போராட்டத்துக்கு அது வேண்டாம்:) சுருக்கமாக சொன்னால் ரெசல்யூசன் புள்ளிகள் ஹெச் டியில் இருப்பதை விட ப்ளூரேயில் அடர்த்தி அதிகம் என்பதால் மைக்ராஸ்கோப் பார்வையில் ப்ளூரே டிஸ்கின் ரெசல்யூசன் சிறந்தது.சோனி pS3 ரெசல்யூசனுக்கும், டிவிடி ரெக்கார்டர் ரெசல்யூசனுக்கும் வித்தியாசங்கள் இருக்கின்றன.அதே போல் தொலைக்காட்சி பெட்டிகளில் ஹெச்டி, புல் ஹெச்டி,எல் ஈ டி பிக்ஸல் ரெசல்யூசன்களில் வித்தியாசமிருக்கின்றன.எனக்கு பதிவுலக விஜயகாந்த் வவ்சு கூட மல்லுக்கட்ட வேண்டி இருக்குது.கோதாவில் நீங்களும் அவர் கூட சேர்ந்துகிட்டு மோத வந்தாலும் சரியே:)

ராஜ நடராஜன் said...

வ்வ்சு! வவ்வாலுக்குக்கும் மூணு கால்தான்னு நிரூபிக்காம விடமாட்டீங்க போல இருக்குதே!விசயகாந்து மாதிரி புள்ளி விபரம் அடுக்கிட்டே போறீங்களே:)
உங்களை மாதிரி புள்ளி விபரம் தேடினால் அது வவ் வால் மாதிரி நீண்டுகிட்டே போவதால் அடுக்காமல் தர்க்கரீதியாக மட்டுமே அணுகுகிறேன்.ஆரோ 3 டி தொழில் நுட்ப முறையில் நீங்க முன்பே குறிப்பிட்ட ரெட் டெயில் மற்றும் 3D அனிமேசன் படமான ரைஸ் ஆஃப் த கார்டியன் என இரண்டு படங்களே ஆங்கிலத்தில் வந்துள்ளன.இதே நுட்பம் அடுத்து தமிழில் மட்டுமே வருவதை நீங்கள் ஏன் தியேட்டர் இல்ல,திருட்டு வீடியோதான் கதின்னு புலம்புவது லோகநாயகர் மீதான பாசமா அல்லது காண்டான்னு தெரியலையே! திருட்டு வீடியோக்கள் பரவலாக சல்லிசாக கிடைத்தாலும் எந்திரன்,தசாவதாரம் போன்ற படங்களை திரையரங்கில் பார்க்க மட்டுமே உலகளாவிய அளவில் தமிழ் + சேட்டன் சேச்சிகள் கூட்டம் அலைமோதியது.அதே வரிசையில் விஸ்வரூபம் கட்டாயம் இருக்கும். டெனான்,ஓங்கியோ போன்ற AV க்களே 9.1 என ஹோம் தியேட்டர் வசதிகள் இருக்கும் போது தியேட்டர் கூரையை பிரிச்சு மேஞ்சு 13.1 ஆரோ 3D செய்வது ஒன்றும் பெரிய விசயமில்லை.இதில் என்ன பிரச்சினைன்னா ஆரோ தொழில் நுட்பத்தில் முன்னோடியாக இரண்டே ஆங்கில படங்கள் இருப்பதாலும்,ஏனைய தமிழ்படங்கள் இதே தொழில்நுட்பத்தில் செயல்படுமா என கேள்ஃபி எழுவதாலும் திரைப்பட துறை சார்ந்தவர்கள்,தியேட்டர் உரிமையாளர்கள்,விநியோகஸ்தர்கள் தயங்குவார்கள் என்பது வேண்டுமானால் சரியாக இருக்க கூடும்..எலலோருமா அவதார் மாதிரி நுட்பத்தில் படம் எடுக்கிறார்கள்?ஆனாலும் அவதார் விற்பனையில் பிச்சுகிட்டு போகலையா?திரைப்பட துறையினரையும்,தியேட்டர் உரிமையாளர்கள்,விநியோகஸ்தர்களை சமாளிப்பதில் உள்ள சிரமங்களை கடந்து வருவது மட்டுமே லோகநாயகருக்கு முக்கியம்.

நமக்கும் ஆப்டர் எபக்ட்ல டைட்டில் கார்டும்,பிரிமியர் எடிட்டிங்,சவுண்ட் பூத் ஒலி,என்கோர் டிவிடி குறும்படம் தயாரிச்ச குறும் அனுபவம் இருக்குது:) எனவேதான் இது நம்ம ஏரியான்னு சொன்னேன்.எனவே நிங்க கொடுக்குற பேதி மாத்திரையெல்லாம் வேலையே செய்யாது:)

//உள்ளூர் தியேட்டரில் வழக்கமான சவுண்டு தானே, திருட்டு டிவிடியே போதும்னு உட்காரும் மக்கள் :-))//

சவுண்டுதானே! கல்யாண வீட்டு ஒலிபெருக்கில வாத்தியார் பட பழைய பாட்டைப் போடய்யான்னு நீங்க கூவிறீங்க! கிடைக்காத அனுபவமா இளையராஜா,ஏ.ஆர்.ரகுமான் ரெக்கார்டிங் தியேட்டர்ல நேரலை அனுபவம் வித்தியாசமானதுன்னு நான் சொல்றேன்.


//அப்போ எல்லா தொலைக்காட்சியிலும் என்கிரைப்ட் செய்தத்ஐ டிகிரைப்ட் செய்ய டிகோடர் இருக்கிறதா? //

நீங்க தமிழக சூழலில் ஆரோ 3D எப்படி திருட்டு வீடியோ தயாரிக்க முடியும்ன்னு கத்துக்கொடுக்கிறீங்க! அப்படியே திருட்டு வீடியோ தயாரித்து வீட்ல உட்கார்ந்துகிட்ட பார்க்கிற அனுபவத்துக்கும்,சத்யம் தியேட்டரில் உட்கார்ந்து கிட்டு படம் பார்க்கிறதுக்கும் வித்தியாசம் இருக்குதுண்ணேன்!

ஒட்டக பிரியாணி போட்டது சரி!அது என்ன தொட்டுக்க சரவண பவன் சட்னி? என்னதான் காம்பினேசனோ:) விவேக் காக்கா பிரியாணிதான் உங்களுக்கு புடிச்சிருக்குது.தலைப்பா கட்டு பிரியாணி இன்னும் கொஞ்சம் உசத்தியா இருக்குமேங்கிறேன்:)

ராஜ நடராஜன் said...

தாமஸ் ரூபன்! முதல் சந்தேகத்துக்கு மட்டும் நான் பதில் சொல்லிக்கிறேன்.

இரண்டாம் சந்தேகத்துக்கு அணுக வேண்டிய முகவரி சகோ சார்வாகன் vs மார்க்க பந்துக்கள்:)

உலகநாயகன்தான் காப்பி டம்ளரிலிருந்து டபரா தட்டுக்கு காப்பி ஆத்த முடியாதுங்கிறார்.ஆத்த முடியாதபடி ஒற்றை கிளாசில்தான் சூடா தருவேன்ங்கிறார்.

அப்படியே இணையத்தில் தரவிறக்கம் செய்து திருட்டு வீடியோவில் பார்க்கும் அனுபவத்துக்கும் திரையரங்கு ஒலி,ஒளி அனுபவத்துக்கும் வித்தியாசம் உள்ளது என்பதே நான் சொல்ல வருவது.

ராஜ நடராஜன் said...

வெட்டி ஒட்டுதலில் எனக்கு ஒப்புதல் இல்லையென்ற போதிலும் கூட பதிவின் தலைப்புக்கும் சரக்காளருக்கும்,சரக்கை பருகுவோர்களுக்கும் வேண்டி கமலின் அறிக்கை வெட்டி ஒட்டுதலாக இங்கே.

கமல்ஹாசனின் காட்டமான 3 பக்க அறிக்கை புதிய முயற்சிகளை, கண்டுபிடிப்புகளை முதலில் உதாசீனம் செய்வதும் ஏளனம் செய்வதும் ஏன்...அவைகளைக் கண்டனம் செய்வதும் கூட உலக வழக்கம். உலகம் உருண்டை வடிவம் என்று சொன்ன விஞ்ஞானி கலீலியோவை எரித்துக் கொல்ல வேண்டும் என்று சொன்ன இஸ்பானிய ராணி முதல் இன்றைய சினிமாத் துறையினர் வரை இம்மனப்பாங்கு நீடிக்கிறது. ராஜ்கமல் நிறுவனத்தின் DTH முயற்சியையும் புரிதல் இல்லாததால் ‘புறக்கணிப்போம், புறந்தள்ளுவோம்' என்ற பதற்றக்குரல்கள் எழுகின்றன. தேவையற்ற புரளிகளையும் கிளப்புகிறது ஒரு கூட்டம். ஆனால் திரைத்துறையில் ஒரு பெரும் கூட்டம் - பெரும்பான்மை - ‘இது சினிமாவர்த்தகத்தின் புதிய பரிணாம வளர்ச்சி; தமிழ் சினிமாவை, ஏன்...உலக சினிமாவையே புதிய வருமான எல்லைகளைக் கடக்கவைக்கும் முயற்சி' என்று என்னைப் பாராட்டுகிறது. இது சந்தோஷமான செய்தி. DTHற்கு வெகுவானவரவேற்பு உள்ளது. இது சினிமாவை வலுப்படுத்தும் இன்னொரு வியாபாரக்கிளை. ஒரு சிறுபான்மை மட்டும் இதுநாசம் விளைவிக்கும் என்று ஆவேசம் கொள்கிறது.

அறிக்கை இன்னும் தொடரும்.....




ராஜ நடராஜன் said...

இந்த DTH என்பதுஎன்ன? எல்லார் வீட்டிலும் இருக்கும் தொலைக்காட்சிப் பெட்டியாஎன்றால் இல்லை. நல்ல வசதி உள்ளவர்கள் அதிகப் பணம் கட்டி ஒரு கருவியின் மூலம் பல சானல்களையும் சினிமாவையும் பார்க்க உதவும் கருவி. சினிமா அரங்குக்கே செல்ல மறந்த மறுத்த வசதியான கூட்டம் சினிமாவை வீட்டோடு அனுபவிக்க உதவும் ஊடகம் இந்த DTH. இப்படி வீட்டோடு தங்கியவர்களையும் சினிமா பக்கம் ஈர்க்கும் முயற்சியே இது. இதை விடுத்து படம் சரியாக அமையாததால் கிடைத்ததைச் சுருட்டிக்கொண்டு ஓடப்பார்க்கிறார் கமல் என்று புரளிகள் கிளப்புகிறார்கள். கிடைத்ததைச் சுருட்டும் பழக்கம் எனக்கில்லை என்பதற்கு என் சினிமா வாழ்வும் நான் எடுத்த சினிமாக்களும் சான்று. என்படம்முடிந்து 7 மாதங்களாகின்றன. இப்பொழுது என் படத்திற்கு விலை கொடுத்து வாங்கப் பலர் பெரிய விலைகளைச் சொல்லியும் விற்காமல் எல்லா ஊடகங்களிலும் படம் நல்ல வசூலை ஈட்ட வழி செய்யவே இந்த முயற்சி. முழுமையாக மக்களின் ஆர்வம் வருமானமாக மாறி படத் தயாரிப்பாளர்கையில் சேர்ந்தால் திரை உலகு மேம்படும். நேர்மையான வியாபாரத்தில் அனைவரும் ஈடுபட்டு நல்லபடி வரிகட்டி அரசிடம் எடுத்துச் சொல்லி கறுப்புப் பண விளையாட்டைக் குறைத்துக் கொண்டால், 5 வருடத்தில் தமிழ் சினிமா இந்தி சினிமாவின் வசூலுக்கு நிகராகும். ஒரே நாளில் விஸ்வரூபத்தின் தமிழ்இசை இந்தியாவிலேயே அதிக விற்பனையான இசைதகடாக இருக்கிறது. இன்னும் சில தினங்களில் இந்தியாவிலேயே அதிக விற்பனையான இசைதகடாக முதல் இடத்திற்குவிஸ்வரூம் வரும் என்கிறது வியாபார வட்டாரம். இது ஒரு வர்த்தக சாதனை. ஏற்கனவே உலக வர்த்தகம் இந்திய சினிமாவை நல்ல பொருள் ஈட்டும் களம் என நம்புகிறது. உலகத்துக்கு இருக்கும் நம்பிக்கை உள்ளூரிலும் இருக்க வேண்டாமா? DTH ல் ஒரே ஒரு காட்சி காட்டப்படும். இதை பதிவு செய்ய முடியாது. பிரத்தி யேகக்காட்சி முடியும் போது படம் DTH கருவியில் தங்காது. ஒருமுறை இப்படத்தைப் பார்க்க 1000 ரூபாய் கட்டணம். தியேட்டர் கட்டணத்தைப் போல் பத்து மடங்கு. காட்சியை வீட்டில் பார்த்த சந்தோஷம் தவிர சினிமா தியேட்டரில் கிடைக்கும் அனுபவம் கண்டிப்பாய்க் கிடைக்காது. விஸ்வரூபத்தில் ஒலி அமைப்பு இதுவரை இந்திய ரசிகர்கள் கேட்டிராத அளவு அற்புதமாக செய்திருக்கிறோம். ஹாலிவுட் படத் தயாரிப்பில் அதுவும் மேல் தட்டுப் படங்களில் மட்டுமே தென்படும் தரமிது. இத்தனையும் செய்தது TV-ல்காட்டுவதற்கு மட்டும் அல்ல. DTH வசதி தமிழக ஜனத் தொகையில் 3 விழுக்காடு வசதி படைத்தவர்களிடம் மட்டுமே இருக்கிறது. அதில் நாங்கள் 1½ விழுக்காடு வாடிக்கையாளர்களிடம் மட்டுமே காட்ட முடியும் என்கிறது கணக்கு. 100 பேர் ஒருவனுக்கு பயப்படுவது ஆச்சரியம். 7½ கோடியில் ஒரு விழுக்காடு படம் பார்த்தால் குடியே கெடும் என்பவர்கள் நமது வருமானத்தில் 50% ஐ கள்ள DVD வியாபாரிகொண்டுபோவதைத்தடுப்பதற்குசிறுமுயற்சிகளேசெய்கிறார்கள். கள்ள DVDக்காரர்களுடன் கூட்டுச் சேர்ந்து பயிரை மேயும் வேலியை விட்டு விட்டு நேர்மையான வியாபாரத்தைத் தடுப்பது கண்டிக்கத்தக்கது. திருடனுக்கு 50% கொடுத்தாலும் கொடுப்பேன்; உடையவனுக்கு ஒன்றுகூட சேரக் கூடாது என்பது நியாயமில்லாத வாதம். இந்த முயற்சியால் தியேட்டரில் கூட்டம் குறையாது. தொலைக்காட்சியில் இலவசமாய் படம் காட்டினால் வியாபாரம்கெடும் என்று எதிர்த்துத்தோற்ற இதே வியாபாரிகள் இன்று சுபிட்சமாக வாழும் சான்றே போதுமானது. பகுத்தறிவாளனாக இருப்பினும் பெரும்பான்மையினர் புரிந்துகொள்ள ஒருபக்தி விளக்கம். வீட்டில் பெருமாள் படம் காலண்டரில் தொங்குவதால் யாரும் திருப்பதிக்குப் போவதைக் குறைத்துக் கொண்டதாய்த் தெரியவில்லை. கிட்டதட்ட அந்த நிலைதான் சினிமா அரங்க அனுபவத்திற்கும் வீட்டில் மின்விசிறி இருப்பினும் காற்று வாங்க கூட்டம் கடற்கரைக்கு வருகிறது. ரேடியோவில் தன்குரல் கேட்டால் புகழ் குறையும் என்று, நினைத்துப் பாடாமல் இருந்த கர்நாடக பாகவதர்கள் போல் இருப்பது உசிதமல்ல. சமையலறையும் நல்ல சமையலும் பல வீடுகளில் இருப்பதால் ஹோட்டல்களை மூடிவிட்டார்களா என்ன?

ராஜ நடராஜன் said...

வவ்சு!முதல் பின்னூட்டத்தில் யார் சொல்வது சரியென்ற கேள்வியை நகைச்சுவையாக எழுப்பியிருந்தேன்.புள்ளி விபரத்திலேயே கண்ணும் ஒலியாய் வவ்வாலாய் இருந்ததால் விட்டுட்டீங்க போல இருக்குது:)

இதோ லோகநாயகரே விடை சொல்கிறார்.....

முஸ்லீம்களுக்கு எதிரானதா? முடிவாக இது முஸ்லிம்களை தவறாக சித்தரிக்கும் படம் என்று சந்தேகப்படுகிறதாம் ஒரு சில முஸ்லிம் அமைப்புகள். இந்த முஸ்லிம்கள் படத்தை பார்த்து, மனம் மாறி, தேவையில்லாமல் கமல்ஹாசனை சந்தேகப்பட்டு விட்டோமே என்று மனதிற்குள் வருந்துவர். அவர்கள் மனதிற்குள் வருந்தினால் மட்டும் போதாது. நான் விடமாட்டேன். சகோதரனைச் சந்தேகப்பட்டதற்கு பிராயச்சித்தமாக அந்த முஸ்லிம் சகோதரர்கள் அடுத்த பக்ரீத்துக்கு அண்டாஅண்டாவாக பிரியாணி விருந்தளிக்க வாக்களிக்க வேண்டும். அத்தனை பிரியாணியையும் நான் ஒரு ஆள் சாப்பிட இயலாது. ஆதலால் நம் அன்பின் சான்றாக பசித்த ஏழைப் பிள்ளைகளுக்கு அதை விருந்தாக்குங்கள் எப்போதும் போல அக்குழந்தைகளின் சாதி-மதம் பார்க்காமல் அதைச்செய்யுங்கள். அப்பெரு விருந்தில் கலந்துகொள்ள நான் பசியுடன் காத்திருக்கிறேன். -இவ்வாறு அந்த அறிக்கையில் கமல் தெரிவித்துள்ளார்.

Read more at: http://tamil.oneindia.in/movies/heroes/2012/12/kamal-blasting-statement-on-viswaroopam-dth-release-165997.html

ராஜ நடராஜன் said...

வவ்சு!இங்கே நீட்டி முழக்கறது பத்தாதுன்னு பந்திக்கு முந்தி உட்கார்ந்துகிட்டிருக்கற மாதிரி தெரியுதே!

கொஞ்சமா இருந்தால் வெட்டி ஒட்டிடுவேன்.ஆளு யாரு? உண்மைத்தமிழனச்சே!நடக்கற காரியமா:)

ஏதோ அங்கே போகாதவர்களுக்கும்,தேடுறதுக்கு சிரமம் வேண்டாமேன்னு உண்மைத்தமிழன் என்ன வடிச்சு கொட்டுறாருன்னு பார்க்க......

http://truetamilans.blogspot.com/2012/12/blog-post.html#.UMXjJGfvhac

ராஜ நடராஜன் said...

வவ்சு!உங்களை மாதிரியே விஸ்வரூபத்துக்கு ஓசி விளம்பரம் செய்பவர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்பது இப்பொழுதுதான் தெரிந்தது.

கள்ள டிக்கெட்,முதல் வாரத்திலேயே 300,500ன்னு டிக்கட் விலை உயர்த்தி விடும் திரையரங்க நுட்பத்துக்கு லோகநாயகர் வேட்டு வைத்திருக்கிறார்.அதாவது ஒரு நாளைக்கான வாடகை எவ்வளவோ அதனை நாயகர் கொடுத்து விடுகிறேன் என்கிறார்.படம் லாபமோ நஷ்டமோ என்னை சார்ந்தது என்கிறார்.லாபமே குறியாக இருக்கும் திரையரங்கு உரிமையாளர்கள் முணுமுணுக்காம இருப்பாங்களா?

Velu said...

நெற்றிக்கண் திறப்பினும் குற்றமே என வாதிடும் இணையத்தள நக்கீரரே
வணக்கம்
ஒன்று புரிந்துகொள்ளுங்கள்
எல்லோராலும் நெற்றிக்கண் திறக்க முடியாது என்பதையும் நெற்றிக்கண் உள்ளவரால் மட்டுமே
திறக்க முடியும் என்பதனை அறிந்துகொள்ளுங்கள்
குட்டிபிசாசு என்றொரு படத்தை ராம நாராயணன் கிராபிக்ஸ் மூலம் எடுத்தாலும் அதனை எத்தனை பேர்
பார்த்திருப்பார்கள் என எண்ணுகிறிர்கள் ?
எந்திரன் என்ற கிராபிக்ஸ் படத்தை திருட்டு டி.வி.டி.யில் பார்த்தாலும் மறுபடியும் தியேட்டரில் போய் பார்த்தவர்கள் எத்தனை பேர்?
சரக்கு என ஒன்று இருந்தால் மட்டுமே எதுவும் எடுபடும்.
சரக்கு தன் படத்தில் அதிகமாக இருப்பதாக கமல் நம்புகிறார்.
எனவே டி.டி.எச் மூலம் பார்த்தவர்கள் மறுபடியம் தியட்டரில் வந்து தன் படத்தை மறுபடியும் பார்ப்பார்கள் என நம்புகிறார்
சரக்கு என நான் குறிப்பிடுவது கதையை மட்டும் அல்ல .கதை அல்லது ஏதேனும் புதிய தொழில் நுட்பம் .
புதிய ஊருக்கு செல்லவேண்டும் என முடிவெடுத்துவிட்டால் ஏதேனும் ஒரு வகையில் சென்றுதான் தீரவேண்டும்
அதை விடுத்து விபத்து ஏற்படும் என பயந்து இருப்பது நல்லதல்ல.
விபத்து நடந்தபிறகு "நான் அப்போதே சொன்னேன் அல்லவா விபத்து நடக்கும் போகதே என்று " என்று சொல்பதற்குதான் உங்கள் பதிவு உதவிடும்

வவ்வால் said...

ஜோதிஜி,

நன்றி!

நீங்க முன்னர் சொன்னதை பற்றி கொஞ்சம் தகவல்கள் சேகரிக்க வேண்டியது இருக்கிறது. விரைவில் பதிவிடுகிறேன்.

ஹோம் தியேட்டர் பற்றி நம்ம ராச நடையே நல்லா விளக்குவார், ஆனால் எல்லாம் மாத்தி மாத்தி சொல்லுவார், எனவே விரிவாக பதிவே போடுகிறேன்.

--------------------------
பெருமாள் கரூர் ,

நன்றி!
------------------
தாமஸ் ரூபன்,

நன்றி!

லோகநாயகர் அடுத்தவங்க சொல்வதை வைத்து சிந்திக்கிறார், நாம் தேடி அறிந்து சிந்திக்கிறோம்,எனவே கூடுதலாக சிலவற்றை அறிய முடிகிறது.

ஹி....ஹி இப்போ நம்ம கிட்டே டாடா ஸ்கை இணைப்பு இல்லை ,இருந்தா நானே , ரெக்கார்ட் செய்து போட்டுவிடுவேன் :-))

கண்டிப்பாக டோரண்டில் வரும் லின்க் எடுத்து போட்டுவிடலாம்.

# ஒரே கல்லில் பல மாங்காய் என்ற பகுதியில் ஒரே செட்டாப் வைத்து நிறைய டிவி இணைப்பதை சொல்லியுள்ளேன். இங்கு சொன்னது போல செய்தால் ,எல்லா டிவியிலும் ஒரே நிக்ழச்சியே வரும், ஏன் எனில் சேனல் மாற்றுவது செட் டாப் பாக்ஸ் ரிமோட் மூலம் ஆகும்.

அதே சமயத்தில் டிஜிட்டல்- அனலாக் மாற்ற்றி கொடுத்தால் விருப்பப்பட்ட நிகழ்ச்சியை காண முடியும்.

இன்னொரு வகையில் ஸ்மார்ட் கார்ட் ரீடர் வைத்து , செட்டாப் பாக்ஸுக்கு பதிலாக டிடிஎச் சிக்னலை பெற முடியும், அப்போது விருப்பப்பட்ட சேனலை மாற்றி பார்க்கமுடியும். இது ஒரு நெட் கனெக்‌ஷனை ஷேர் செய்வது போல. வெளிநாட்டில் கிடைப்பதாக பல ஆன்லைன் வர்த்தக தளத்தில் உள்ளது, விலை சுமார் 100-150 டாலர்கள் வரும்.

அல்லது கணினியில் இணைப்பை நிறுவி , அதில் இருந்து சிக்னல் பெற்று அனுப்பினாலும் செய்ய முடியும்.இதற்கும் டிஜிட்டல்-அனலாக் கன்வெர்ட்டர் தேவைப்படும்.

#//உலகம் தோன்றிய பிறகு முதல்முதலில் இறந்த மனிதர் யார்? அதற்கு வரலாற்று ஆதாரங்கள் எதுவும் உள்ளதா?//

சரியா யாரு முதலில் பிறந்தார் என சொல்ல சொன்னால் எப்படி? நியாண்டர் தால், ஹோமோ சேப்பியன்ஸ், என படிமங்கள் கிடைக்கிறதே , முதலில் கிடைத்த படிமமே முதல் மனிதன் என வைத்துக்கொண்டார்கள், பேரு கூட வைத்துள்ளார்கள் "ஃபர்ஸ்ட் ஆடம் என்று :-))
------------------
அனானி,

லோகநாயகர் என்னமோ செய்துக்கொள்ளட்டும் அவர் இஷ்டம் தான், ஆனால் ரெக்கார்ட் செய்ய முடியாது என அடுக்குவதெல்லாம் தான் சிரிக்க வைக்குது.

//அதனால் கமல் டிடிஎச்சில் விடாவிட்டாலும் திருட்டுத்தனம் செய்கிறவர்கள் செய்து கொண்டுதான் இருப்பார்கள்..//

எப்படியும் திருட்டு டிவிடி வரத்தான் போகிறது, ஆனால் எப்பொழுது, என்ன தரத்தில் என்பதே முக்கியமாகிறது.

முதல் நாள் முதல் ஷோவிற்கு முன்னரே டிவிடி தரமாக கிடைத்தால், தியேட்டர் வருமானம் பாதிக்கப்படும் என்பதே உண்மை.

தியேட்டர்கள் நஷ்டம் பற்றி கவலை வேண்டாம், வாடகை என்ப்பொறுப்பென்றால் , அப்படியேயாகட்டும்.

இங்கே வலைப்பதிவில் சிலர் விமர்சனத்தில் படம்ம் குப்பை என எழுதினாலே பின்னூட்டத்தில் பலர் நான் தப்பிச்சேன் , 120 ரூ மிச்சம் என்றெல்லாம் சொல்வதை கவனிக்கவில்லையோ?

எனவே டிடிஎச் இல் முதல் காட்சிக்கு முன்னரே படம் குப்பை என செய்தி பரவினால் கண்டிப்பாக படம் ஓப்பனிங் கலெக்‌ஷன் கூட எடுக்காது. எல்லா தயாரிப்பாளர்களும் தியேட்டருக்கு வாடகை கொடுக்க முடியாது,எனவே இது ஒரு பெரிய வியாபார யுத்தியாக பரவலாக கடைப்பிடிக்க முடியாது.

சிறிய பட்ஜெட் படங்களுக்கே இம்முறை சரியானது.

------------------

வவ்வால் said...

ராச நட,

வாரும்,

இன்னும் எச்.டி,. புளுரே கொயப்பம் தீரலை போல, இதில் இன்னும் என்னவெல்லாமோ அடுக்குறிங்க, இதை எல்லாம் நானே பிச்சு வச்சுடுவேன், நந்தவனமே உங்களை பிய்க்கட்டும், அப்போ தான் உங்களுக்கு ஏறும் :-))

#//,சத்யம் தியேட்டரில் உட்கார்ந்து கிட்டு படம் பார்க்கிறதுக்கும் வித்தியாசம் இருக்குதுண்ணேன்!//

தமிழ்நாட்டில் ஒரு சத்யம் அரங்க வளாகத்தில் ஒரு தியேட்டரில் தான் ஆரோ விடுறாங்க, அப்போ எல்லாம் அங்கேயே போய் உன்னத அனுபவம் பெறுவாங்களாங்கிறேன் :-))

படத்தில சவுண்டு தவிற எதுவுமே இல்லைனு டிடிஎச் ஒளிப்பரப்பில் தெரிந்து விட்டால் யார் போவாங்கங்கிறேன் :-))

எப்போதுமே கையை மூடி இருக்கும் வரைக்கும் தான் சுவாரசியம், திறந்து ஒன்னுமில்லைனு காட்டிட்டா எதிர்ப்பார்ப்பு போயிடும்ங்கிறேன்.

# மனிதன் சைவம்னு சொல்லுறவங்களுக்கு சரவன பவன் சட்னியை வச்சால் தான் வாயே தொறப்பாங்களாம் :-))

தலப்பாக்கட்டுன்னு டுபாக்கூர் பிரியாணி தான் நிறைய :-))

-----------------
# வெட்டி ஒட்டினது, உ.த அண்ணாச்சி கடை சரக்கு எல்லாம் பார்த்தாச்சு!!!

டிடிஎச் பணக்காரர்களின் சாதனம்னு நினைச்சிட்டு பேசுற லோகநாயகருக்கு எங்கே மற்ற விவரம் எல்லாம் புரியப்போகுது.

அப்போ ஒரு சில பணக்காரர்கள் பார்ப்பதால் டிடிஎச்சில் எப்படி கோடிக்கணக்கில் கொட்டும்?

மேலும் அப்போ பணக்காரர்கள் எல்லாம் லோகநாயகர் படத்தை பார்க்க துடிக்கிறாங்க என்கிறாரா? ஆஹா பணக்கார ரசிகர்களை கொண்டவன் நான் என சொல்கிறாராக்கும் :-))

அவங்க எல்லாம் we dont like tamil movies type :-))
---------
# //கள்ள டிக்கெட்,முதல் வாரத்திலேயே 300,500ன்னு டிக்கட் விலை உயர்த்தி விடும் திரையரங்க நுட்பத்துக்கு லோகநாயகர் வேட்டு வைத்திருக்கிறார்.//

இது ஏன் உருவாச்சு?

எல்லாம்ம் இவரைப்போன்ற நாயகர்கள் கோடிக்கணக்கில் சம்பளம் கேட்பதாலும், தயாரிப்பு செலவு அதிகம் ஆவதாலும் ,தியேட்டருக்கு படத்தை கொடுக்கும் விலை ஏறியதால், அதிக காசு கொடுத்து படம்ம் வாங்கியவர்கள்,சீக்கிரம் முதலை எடுத்தால் தான் உண்டு, இல்லை எனில் திருட்டு டிவிடி,டோரன்ட் மூலம் படம் பார்த்துவிடுவார்கள்.

பெரிய பட்ஜெட் படத்தினை முதல் நாளே நல்லா இல்லைனு செய்தி வெளியானால் , போட்ட முதல் போயிடும் ,என முதல் மூன்று நாட்களில் பணத்தினை அள்ள அப்படி செய்கிறார்கள்.

இதனை குறைக்க, படத்தினை குறைந்த விலைக்கு கொடுத்தால் போதும், ரிஸ்க் குறைவதால் அதிக கட்டணம் வசூலிக்க மாட்டார்கள்.

சின்ன பட்ஜெட் படத்திற்கு குறைவாக டிக்கெட் வைக்கலாம் என தியேட்டர்காரர்கள் கூட சொன்னார்கள், ஆனால் ஏன் ஒரு தயாரிப்பாளரும் கேட்கவில்லை?

//அதாவது ஒரு நாளைக்கான வாடகை எவ்வளவோ அதனை நாயகர் கொடுத்து விடுகிறேன் என்கிறார்.படம் லாபமோ நஷ்டமோ என்னை சார்ந்தது என்கிறார்.லாபமே குறியாக இருக்கும் திரையரங்கு உரிமையாளர்கள் முணுமுணுக்காம இருப்பாங்களா?//

அப்படி செய்தால் ஏன் முணு முணுக்க போகிறார்கள், எத்தனை தியேட்டரில் வெளியீடோ அத்தனைக்கும் முன்பணம் கட்ட சொல்லுங்கள், அப்புறமும் மாட்டேன் என சொல்வார்களா என்ன?

3000 தியேட்டருக்கு முன்பணம் கட்டி ரிலீஸ் செய்யும் அளவுக்கு பணம் இருந்தால் செய்யலாம், யார் தடுக்க போகிறார்கள்.ஹாலிவுட்டிலும் இம்முறை உண்டு. பெரும்பாலான படங்கள் இப்படித்தான் வெளியாகும், எனவே தான் அங்கே சிறிய பட்ஜெட் படங்கள் டிவிடி, டிடிஎச் என ரிலீஸ் செய்து கொள்கிறார்கள். படத்திற்கு நல்ல பெயர் கிடைத்தால் ஒரு விநியோகஸ்தர் பெரிய அளவில் ரிலீஸ் செய்ய முன்வருவார்.

ஹாலிவுட்டில் விநியோக கமிஷன்,தியேட்டர் வாடகை, புரோமொஷன் செலவு என மொத்தமாக தயாரிப்பாளர் முன் கூட்டியே கொடுத்தால் தான் 99% படங்கள் வெளியாகவே முடியும்.

தயாரிப்பு,விநியோகம் என செய்யும் சக்தியுள்ள நான்கைந்து நிறுவனங்கள் கையில் தான் மொத்த ஹாலிவுட்டே உள்ளது.
-----------------------

R.Puratchimani said...

வவ்வால்,
முதல் கேள்வி: நீங்கள் ஏன் தமிழ்மணத்தில் உங்கள் பதிவுகளை இணைப்பதில்லை. நான் அதைபார்த்து பல பதிவுகளுக்கு செல்வதால் உங்கள் பதிவிற்கு நேரத்திற்கு வர முடிவதில்லை.

இது ஒரு நல்ல அலசல். இருந்தாலும் நீங்கள் ஒரு இடத்தில் மட்டும் கொஞ்சம் சறுக்கி விட்டீர்கள்.
நீங்கள் தமிழ் நாடும் எனும் குண்டு சட்டியில் குதிரை ஒட்டுகிறீர்கள். கமல் தமிழ்நாட்டில் மட்டும் இப்படத்தை வெளியிடப்போவதில்லை,இந்தியா முழுவதிலும், உலகம் முழுவதிலும். எனவே நீங்கள் நினைப்பதை விட நிறைய பேர் படம் பார்க்க வாய்ப்பு உண்டு.
மேலும் இப்படம் தமிழில் மட்டும் வெளியாகவில்லை இந்தி மற்றும் தெலுங்கிலும். எனவே நீங்கள் போட்ட கணக்கைவிட அவர் லாபம் அதிகம் ஈட்டுவர்.
கமல் என்ன முட்டாளா?
http://kelviyumnaaneypathilumnaaney.blogspot.in/2012/12/blog-post_10.html
நன்றி

வவ்வால் said...

புரட்சிமணி,

நன்றி!

ஹி...ஹி தமிழ்மணத்தில் இணைத்துக்கொன்டு அதனையும் விமர்சிக்க கூடாது என்பதால் தான்.

நான் சிலவற்றை விமர்சித்த போது இப்படியான கேள்விகள் எழுந்ததால், அதுவும் நியாயம் தானேனு விலகியாச்சு.

#//நீங்கள் தமிழ் நாடும் எனும் குண்டு சட்டியில் குதிரை ஒட்டுகிறீர்கள். //

லோகநாயகர் தமிழ்நாட்டில் மட்டும் தான் குதிரை, அவுட் சைட் தமிழ்நாடு கழுதை அதனால் தான் தமிழ்நாட்டினை மட்டும் கணக்கில் வைத்து ,வருவாய் கணக்கிட்டேன்.

எனவே உலகமெங்கும் வெளியிட்டாலும் வரும் வருவாய் மொத்த முதலீட்டில் 25% க்கு மேல் போகாது 75% வருவாய் தமிழ்நாட்டுக்குள் தான்.

அயல்நாட்டு வருவாய், அவுட் சைட் தமிழ் ரிலீஸ் வருவாய் பற்றி உண்மையான தகவல்களை யாரும் ஏன் தருவதில்லை என்பதில் இருக்கு உண்மை.

3000 தியேட்டர் என்பதெல்லாம் கூட உடான்ஸ் ஆகவே பல தமிழ் படங்களுக்கும் இருக்கு என்பதை விஷயம் தெரிந்தவர்களிடம் கேட்டு தெரிந்துக்கொள்ளவும்.

தமிழ்ல் நாட்டில் மொத்தமே 1250 அரங்குகள் தான் தற்சமயம் தேறும், அதில் 600 அரங்குகள் தான் தமிழ்நாட்டில் கலெக்‌ஷன் சென்டர்களில் இருக்கும், பல ஒரே ஊரில் இருக்கும், எனவே 600 இலும் படம் போட முடியாது, அதில் ஒரு 350-400 வெளியிட்டாலே சாதனை.

மற்ற தியேட்டர்கள் எல்லாம் கிராம பஞ்சாயத்துகளில் உள்ளவை.


தமிழ்நாட்டில் 700-800 உருப்படியான அரங்குகளில் தான் ஒரே படம் ரிலீஸ் செய்ய அதிகபட்ச வாய்ப்பு.

அப்போ 3000 பிரிண்ட் என்பதெல்லாம் எப்படி, தமிழ்நாட்டுக்கு வெளியில் எல்லாம் , அவ்வளவு பிரிண்ட் ,சுமார் 2000 பிரிண்ட் போணியாகாது.

வேண்டுமானால் விரிவாக , எந்த ஊரில் எத்தனை அரங்கு இருக்கு என போடவா, எல்லாம் தமிழ்நாடு அரசு வருவாய் துறை இணையப்பக்கத்தில் உள்ளது!




வவ்வால் said...

வேலு,

நன்றி!

உங்களுக்கு ஸ்பாம் பொட்டி தான் ரொம்ப புடிக்குமா ,அங்கே போய் குந்திக்கிட்டிங்க :-))

நீங்க சொல்றத பஞ்ச் டயலாக்கா?

அப்போ நானும் சொல்லிக்கிறேன்,

வேலுனு பேரு வச்சிருக்கவங்க எல்லாம் வேல் வீச முடியாது, கையில வேல் வச்சிருக்கவங்க தான் வீச முடியும் :-))

சரக்கு இருக்குன்னு நம்புறது எல்லாம் சரி தான் ,இருக்கணுமே :-))

புதிய தொழில்நுட்பம் இருக்கு ,அதைப்பார்க்க அனைவரும் சத்யம் வாரீர் என சொல்றிங்களா?

ரைட்டு எல்லாம் கன்னியாகுமரி முதல் சென்னைக்கு டிக்கெட் புக் செய்துடுவாங்க சரியா :-))

//புதிய ஊருக்கு செல்லவேண்டும் என முடிவெடுத்துவிட்டால் ஏதேனும் ஒரு வகையில் சென்றுதான் தீரவேண்டும்
அதை விடுத்து விபத்து ஏற்படும் என பயந்து இருப்பது நல்லதல்ல.//

ஆமா ஆமாம் , புதிய ஊருக்கு போவதுன்னு முடிவெடுத்தபின் சும்மா குந்திக்க முடியுமா? பிரேக் புடிக்காத வாகனமா இருந்தாலும் ஏறிப்போயிடனும் , பிரேக் இல்லாத வண்டியில் போகாதேனு சொன்னா தப்பாச்சே :-))

R.Puratchimani said...


//லோகநாயகர் தமிழ்நாட்டில் மட்டும் தான் குதிரை, அவுட் சைட் தமிழ்நாடு கழுதை அதனால் தான் தமிழ்நாட்டினை மட்டும் கணக்கில் வைத்து ,வருவாய் கணக்கிட்டேன்.
//
எனவே உலகமெங்கும் வெளியிட்டாலும் வரும் வருவாய் மொத்த முதலீட்டில் 25% க்கு மேல் போகாது 75% வருவாய் தமிழ்நாட்டுக்குள் தான்.

அயல்நாட்டு வருவாய், அவுட் சைட் தமிழ் ரிலீஸ் வருவாய் பற்றி உண்மையான தகவல்களை யாரும் ஏன் தருவதில்லை என்பதில் இருக்கு உண்மை.//

The Hindi version Dashavatar netted 1.93 crore in six weeks in North India.[71] The film grossed 2 crore in Kerala in the first week.[72] The film, also released in other parts of India, grossed 60 lakh from outside Tamil Nadu.[73] In a fortnight, the Telugu version grossed 3.5 crore in Nizam, 1.6 crore in Ceded, 1 crore in Vizag, 95 lakh in East and West Godavari, 75 lakh in Guntur and 70 lakh in Krishna.[74] The film grossed 25 crore in Andhra Pradesh in its lifetime.[75]
[edit]Overseas
The film grossed an overall $16,356,962 overseas in its lifetime.[76]
Dasavathaaram grossed US$4,632,719 and was ranked No.7 in the opening week, becoming the first Tamil film to reach the Top 10 at the International box office.[77] In Malaysia, the film opened in second place, having collected $601,000 from 58 screens on the opening weekend[78][79] and $1,720,780 in nine weeks.[80]
Dasavathaaram was released in USA with 42 prints, an unprecedented record in US movie history for a South Indian film. With print sharing facility, it was screened in 50 cities across the country. The collection on the opening weekend in the USA was $500,000.[81] The film grossed $750,000 in the USA as lifetime business.[82]
In the UK box office, it collected £126,747 from 19 screens on its opening weekend, debuting at number 12, the third highest position ever for a Tamil film.[81][83] By its second weekend, Dasavathaaram grossed £216,000 at the UK box office.
In Canada, it was distributed by Walt Disney Pictures, the first Tamil film do so. In the UAE, the film grossed 6.3 crore in four weeks including 2.5 crore in Dubai, 2.4 crore in Abu Dhabi and 1.3 crore in Sharjah.[84]
http://en.wikipedia.org/wiki/Dasavathaaram

சிறு துளி பெருவெள்ளம் வவ்வால்.

ராஜ நடராஜன் said...

வவ்சு!உங்க பதிவுக்கான பின்னூட்டத்திற்கு வேண்டியும்,லோகநாயகரின் முயற்சிக்காகவும்,தமிழகத்தில் இனி பார்கோ ஆரோ 3D சொற்கள் பழக்கமாகி விடும் என்ற எதிர்பார்ப்பிலும் இணைய சுட்டிகளை மட்டும் நம்பாமல் நேரடியாகவே சுய பரிசோதனையாக எக்ஸ் பி ஸ்டிரியோ கணினி,5.1 பில்ட் இன் கணினி மற்றும் 7.1 ஒலி,ஒளி அமைப்புடன் தொலைக்காட்சிப் பெட்டியில் கமலின் ஆரோ 3D ட்ரெய்லர் யூடியுப் படம் பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது.ஸ்டிரியோ ஒலி கிட்டத்தட்ட மோனோவுக்கான இரைச்சல்களுடன் ஒலிக்கிறது.5.1 ல் வித்தியாசம் வெளிப்படுகிறது.7.1ல் பட ட்ரெயிலர் ஆரோவில் என்னமோ வித்தியாசமான ஒலி இருக்கலாம் என உணர வைக்கிறது.ஒரு வேளை உங்கள் கணிப்பு படி ஆரோ ஒலி அமைப்பு திரையரங்கில் இணைக்க முடியாவிட்டாலும் கூட தற்போது சந்தையில் இருக்கும் DTS,THX ஒலி அமைப்புடன் கூட திரையரங்குகளில் கூட படத்தை வெற்றிகரமாக ஓட்டி விட முடியுமென நினைக்கின்றேன்.
நிச்சயமாக சத்யம் தியேட்டர் பார்வையாளர்களுக்கு விஸ்வரூபம் ஒரு புதிய அனுபவமாக இருக்கும் என நம்புகிறேன்.

தமிழக சூழலில் மட்டுமே என்றால் உங்களின் வாதத்தில் சில நியாயங்கள் இருக்கவே செய்கின்றன.ஆனால் உலகமயமாக்கலில் தமிழ் திரைப்படமும்,உலகளாவிய தமிழர்களோடு தொடர் பின்னூட்டத்தில் புரட்சிமணி எடுத்துக்கொடுப்பது போல் இந்தி,தெலுங்கு என படத்திற்கான செலவுகள் போக லாப புள்ளியை படம் தொட்டு விடும்.தமிழக உள்ளூர் திரைப்பட அரசியலை சரிப்படுத்தி விடுவது மட்டுமே தற்போது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

ராஜ நடராஜன் said...

வவ்சு!உங்க பதிவுக்கான பின்னூட்டத்திற்கு வேண்டியும்,லோகநாயகரின் முயற்சிக்காகவும்,தமிழகத்தில் இனி பார்கோ ஆரோ 3D சொற்கள் பழக்கமாகி விடும் என்ற எதிர்பார்ப்பிலும் இணைய சுட்டிகளை மட்டும் நம்பாமல் நேரடியாகவே சுய பரிசோதனையாக எக்ஸ் பி ஸ்டிரியோ கணினி,5.1 பில்ட் இன் கணினி மற்றும் 7.1 ஒலி,ஒளி அமைப்புடன் தொலைக்காட்சிப் பெட்டியில் கமலின் ஆரோ 3D ட்ரெய்லர் யூடியுப் படம் பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது.ஸ்டிரியோ ஒலி கிட்டத்தட்ட மோனோவுக்கான இரைச்சல்களுடன் ஒலிக்கிறது.5.1 ல் வித்தியாசம் வெளிப்படுகிறது.7.1ல் பட ட்ரெயிலர் ஆரோவில் என்னமோ வித்தியாசமான ஒலி இருக்கலாம் என உணர வைக்கிறது.ஒரு வேளை உங்கள் கணிப்பு படி ஆரோ ஒலி அமைப்பு திரையரங்கில் இணைக்க முடியாவிட்டாலும் கூட தற்போது சந்தையில் இருக்கும் DTS,THX ஒலி அமைப்புடன் கூட திரையரங்குகளில் கூட படத்தை வெற்றிகரமாக ஓட்டி விட முடியுமென நினைக்கின்றேன்.
நிச்சயமாக சத்யம் தியேட்டர் பார்வையாளர்களுக்கு விஸ்வரூபம் ஒரு புதிய அனுபவமாக இருக்கும் என நம்புகிறேன்.

தமிழக சூழலில் மட்டுமே என்றால் உங்களின் வாதத்தில் சில நியாயங்கள் இருக்கவே செய்கின்றன.ஆனால் உலகமயமாக்கலில் தமிழ் திரைப்படமும்,உலகளாவிய தமிழர்களோடு தொடர் பின்னூட்டத்தில் புரட்சிமணி எடுத்துக்கொடுப்பது போல் இந்தி,தெலுங்கு என படத்திற்கான செலவுகள் போக லாப புள்ளியை படம் தொட்டு விடும்.தமிழக உள்ளூர் திரைப்பட அரசியலை சரிப்படுத்தி விடுவது மட்டுமே தற்போது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

ராஜ நடராஜன் said...

நம்ம பார்வைக்கு பாரதிராஜா எப்படி எடுத்துக்கொடுக்கிறார்ன்னு பாருங்க!

http://www.soundcameraaction.com/cinema-news/item/874-vishvaroopam-dth-issues-director-bharathiraja-advise-fir-distributors

வவ்வால் said...

புரட்சிமணி,

//The film grossed an overall $16,356,962 overseas in its lifetime.[76]//

அட ...அடா என்னா ஒரு புரட்சி செய்திட்டீர் ...

இந்த ஒரு வரியே சொல்கிறதே உண்மையை , ஒரு கோடியே அறுபத்தி மூன்று லட்சத்து ஐம்பத்து ஆறாயிரத்து தொள்ளாயிரத்து அறுப்பத்தியிரண்டு ...டாலர்கள் ...டாலர்கள் :-))

ஒரு டாலர் அண்றைய தேதிக்கு 45 ரூ என வைத்தாலும் , சுமார் 75 கோடி இந்திய ரூபாய்கள் ஆகிடுது, அவ்வளவா வசூல் செய்தது?

இதைப்பாருங்கோ,

//The highest collecting Tamil films in the overseas market up to 2009 are — Sivaji(said to have grossed around 12 crore), Dasavathaaram (rumoured to have grossed around 10 crore) and Pokkiri (around 5 crore).[2]//

இதை சொல்லி இருப்பதும் விக்கிப்பீடியா தான் :-))

http://en.wikipedia.org/wiki/Overseas_Box_office_of_Tamil_films

எனவே தான் உண்மையான தகவல்களை சொல்வதில்லை என சொன்னேன்.

நீங்க கொடுத்த விக்கி சுட்டியில் சிவாஜி ரெக்கார்டை தசவாதாரம் முறியத்தது என இருக்கு, நான் பார்த்த விக்கியில் தசவதாரம் விஜய் படத்துக்கு பின்னாடி 5 ஆம் நிலையில் இருக்கு(யு.கே).

, அப்புறம் மொத்த கலக்‌ஷன், நிகர வருவாய் இடையே வித்தியாசம் உள்ளது.

தசவதாரம் மொத்த கலக்‌ஷனே 10 கோடி என்றால் நிகர வருவாய் எவ்வளவு இருக்கும்?

எந்த தகவலை ஏற்பது? எனவே தான் உண்மையான தகவல்கள் தெரிவிப்பதில்லை என்றேன்.

விஜய் படத்துக்கு அவுட் சைட் தமிழ் நாட்டில் உள்ள மார்கெட் கூட லோகநாயகருக்கு இல்லை என்றே பல தளங்களிலும் உள்ள தகவல் காட்டுகிறது.

டாப்பில் வழக்கம் போல சூப்பர் ஸ்டார் இருக்கார்.

இன்னுமா என்ன இவங்க நம்புறாய்ங்கன்னு லோகநாயகரின் மைண்ட்வாய்ஸ் எனக்கே கேட்குது :-))

வவ்வால் said...

புரட்சிமணி,

விக்கியில் டைம்ஸ் ஆஃப் இந்தியா கட்டுரையின் சாரத்தினை தான் போட்டுள்ளார்கள்,

அதன் முழு வடிவம்...

http://articles.timesofindia.indiatimes.com/2010-02-24/news-interviews/28135943_1_tamil-films-hindi-films-tamizh-padam

அதில் வெளிநாட்டில் தமிழ் படங்கள் சரியாக ஓடாமல் இருக்க காரணம் இணையதளங்களில் படம் போடுவது தமிழுக்கு தான் அதிகம்னு இருக்கு...

//According to an estimate made by an Anti Movie Piracy Company (AMPC), about 1,200 illegal websites upload Tamil films the moment they are released. These websites operate out of overseas countries and cater to the local Tamil audiences. Pirated DVDs of Tamil films get released within a day of the film's release and are sold across the 50 countries where there is revenue potential.//

சும்மாவே ஹேண்டி கேமில் எடுத்தே போடுறவங்க, டிடிஎச்சில் நல்ல தரமா கிடைச்சா விடுவாங்களா?


சும்மா பொறிப்பறக்க டோரெண்டில் அப்லோட் செய்து சூடா டவுண் லோட் நடக்கும் :-))
----------

ராச நட,

பாமரத்தனமான நம்பிக்களைகளுக்கு பதில் அளிப்பது நேர விரயம்.

ஒரே ஒரு தியேட்டர் தான் தமிழ்நாட்டில் ஆரோ சவுண்டு வச்சிருக்குனு தெரிஞ்ச பிறகும் , அதை கேட்டால் தெரியும்னா, தமிழ்நாட்டில் உள்ளவங்க எல்லாம் சென்னைக்கு தான் வரணும்.

சரி ஆரோ 3டி சவுண்டு அனுபவிக்க தியேட்டர் வருவாங்கன்னு சொல்லும் லோகநாயகர் எத்தனை தியேட்டரில் அந்த சவுண்டு இருக்குனு சொல்லுறது என்னாத்துக்கு கள்ள மவுனம்.

அப்போ அந்த சவுண்டு கேட்க வருவாங்க என்றால் சத்யமில் மட்டும் படம் போடலாமே என்னாத்துக்கு 3000 பிரிண்ட் :-))

வெளிநாட்டில் ஆரோ, டால்பி அட்மோஸ் இருக்கும் திரையரங்குகள் எல்லாம் தமிழ்ப்படத்துக்கு கிடைக்காது, அங்கு இருப்பதில் சொத்தை அரங்கம் தான் கிடைக்கும் :-))

அப்புறம் எங்கே உலகலவில் இதன் அருமை தெரிய.

விஜய் அமிர்த ராஜ் ,அஷோக் அமிர்த ராஜ் பேட்டி ஒன்னு இருக்கு , தேடிப்பார்த்து படிங்க, அமெரிக்காவில் திரை விநியோகம் என்ன பாடு படுத்தும்னு சொல்வாங்க.

அவங்களே அமெரிக்காவில் படம் தயாரிக்கிறதா சொல்லிக்கிட்டாலும் எல்லாம் டிவிடி, கேபிள் ரிலீஸ் செய்யும் லோ பட்ஜெட் படங்கள்.

ஊருல யாருகிட்டவாது கதை சொல்லுங்க ,என்கிட்டே எல்லாம் நிலாவில் பாட்டி வடை சுட்ட கதை போணியாகாது :-))

? said...

மிஸ்டர் ராஜ நடராஜன்

முதலில் நீங்கள் தெளிவாக HD-DVD என எழுதியிருக்கலாம். மேலும்

//ப்ளூ ரே,ஹெச் டி இரண்டு தொழில் நுட்பங்கள் ஒரே நேரத்தில் போட்டி போட்டன.ஆனால் பொருளாதார ரீதியாக ஹெச் டி சந்தையை பரப்பிக்கொண்டது.பெருசா கடை விரிக்காட்டியும் கூட ரெசல்யூசன் ஒப்பீட்டில் ப்ளூ ரேதானே உசத்தி.//

என்று வேறு எழுதியிருக்கிறீர்கள். ஆனால் HD-DVD 2008-ல் ஊத்தி மூடிவிட்டது. அமெரிக்காவில blue ray ஃபார்மேட்டில் மட்டுமே படங்கள் வருகின்றன.இப்போது தோசிபாவே blue ray பிளேயருடன் வருகிறது. செத்துப்போன பொணம் சந்தை பரப்புது என நீங்க எழுதினால் குழப்பம் வராதா என்ன?

//சுருக்கமாக சொன்னால் ரெசல்யூசன் புள்ளிகள் ஹெச் டியில் இருப்பதை விட ப்ளூரேயில் அடர்த்தி அதிகம் என்பதால் மைக்ராஸ்கோப் பார்வையில் ப்ளூரே டிஸ்கின் ரெசல்யூசன் சிறந்தது.//

HD-DVD தரம் Blue ray ன் ரெசல்யூசன் தரத்திற்கு ஈடானதே. இரண்டிலும் 1080i/1080p ரெசல்யூசனில் படங்களை பதிவு செய்யலாம். மேலும் HD-DVD விலையும் மலிவு ஆனால் Blue ray வெற்றி பெற்றுவிட்டது. இதற்கு காரணம் Sony நிறுவனத்தின் முயற்சியே. Sony பல பெரிய ஹாலிஉட் ஸ்டியோக்களை வளைத்துவிட்டது. முக்கியமாக வார்னர் பிரதர்ஸ் தாங்களின் படங்களை Blue ray format-ல் மட்டும் வெளியிட சம்மதித்து முக்கிய காரணம். மேலும் தனது Play­Station 3 உடன் Blue ray பிளேயரை இணைத்து வெளிவிட்டது. இது அமெரிக்காவில் Play­Station மிகவும் பிரபலம் என்பதினால் HD-DVDக்கு மரண அடியாகி விட்டது.

ஒரு வேளை நிறைய படித்து குழம்பிவிட்டீர்களா என தெரியவில்லை. எப்படி இருப்பினும் இதில் முண்டா தட்ட ஒன்றுமில்லை. Cool!

வவ்வால் said...

நநந்தவனம்,

//ஒரு வேளை நிறைய படித்து குழம்பிவிட்டீர்களா என தெரியவில்லை. எப்படி இருப்பினும் இதில் முண்டா தட்ட ஒன்றுமில்லை. Cool!//

Blu-ray is an optical disc storage technology.

அவ்ளோ தான்.

டிவிடி இல் எழுதும் டெக்னாலஜி வைத்து சொல்வது டிவிடி ஃபார்மேட், அத்உ வீடியோ ஃபார்மேட் அல்ல.

வீடியோ ஃபார்மெட் என்பது,MPEG2,MPEG4,JPEG2,

SD,Hd,TRUe HD வீடியோவின் தரம், எத்தனை பிக்சல் ரெசொல்யுஷன் இருக்கும் என.

ஒரு புளு ரே டிஸ்க்கில் எந்த வீடியோ வேண்டுமானாலும் பதிவு செய்யலாம், டாக்குமெண்ட்,சாப்ட்வேர், ஆடியோ பைல் என எல்லாம் பதிவு செய்யலாம்.

அதே போல HD-DVD,&DVD இலும் ஏன் CDயில் கூட HD வீடியோவை பதிவு செய்யலாம்,ஆனால் குறைவான நேரமே ஆகும்.மேலும் குறைவான ரெசொலுஷன் எச்.டி பதிவு செய்வார்கள்.

எந்த ஸ்டோரேஜ் மீடியாவில் என்ன தரத்தில் வீடியோவை ,எந்த ஃபார்மேட்டில் பதிவு செய்வது என்பதை தீர்மானிப்பது , மீடியா அல்ல அதன் ரீட் &ரைட் ஸ்பீட் ஆகும்.

ஒரு வினாடிக்கு எத்தனை எம்பிபிஎஸ் டேட்டா படிக்க முடியும் என்பதை வைத்து , பிக்சல் அளவை தீர்மானித்து ,அதற்கேற்ற ஃபார்மேட்டில் பதிவு செய்ய வேண்டும்.அவ்வளவு தான்.

ஒரு ஸ்டோரேஜ் மீடியாவில் இருந்து maximum mum bits per sec required for processing கிடைப்பதை வைத்து முடிவு செய்வார்கள்.இதனால் தான் பலவகையான கம்ப்ரஷன் பயன்ப்படுத்துகிறார்கள்.

BLU-ray disc videp Bit rate 40Mbps ,
எனவே 1080 பிக்சல் எச்.டிக்கு மேல் பதிவு செய்து பிளே செய்வது கடினம், லேக் ஆகும்.

இதே அளவு தான் எச்.டி-டிவிடியும்.

எல்லாம் மார்க்கெட் பிடிப்பதை பொறுத்தே நிற்பது.


ராச நட ,ஸ்டோரேஜ் மீடியா, அதில் உள்ள வீடியோ தரம் ,ஃபார்மேட் எல்லாம் ஒன்றாக்கி குழப்பிக்கொண்டுவிட்டார். அதில் முண்டா வேறு தட்டுகிறார் என்ன கொடுமை சார் இது :-))

Anonymous said...

வௌவால், நீங்க நல்லவரா கெட்டவரா ?? டெக்னிகல் விஷயத்தோட திருடறது எப்படின்னு சொல்லி தரீங்களே அதனால கேட்டேன். :)

நல்ல அலசல் நன்றி

SA


ராஜ நடராஜன் said...

வவ்வால் & நந்தவனத்தான்!

கைப்புள்ள வடிவேலு மாதிரி சிக்கிகிட்டேன்னு நினைச்சு கும்மலாம்ன்னு இரண்டு பேரும் சேர்ந்தே முண்டா தட்டுற மாதிரி தெரியுதே:)

@நந்தவனத்தான்!
//HD-DVD தரம் Blue ray ன் ரெசல்யூசன் தரத்திற்கு ஈடானதே. இரண்டிலும் 1080i/1080p ரெசல்யூசனில் படங்களை பதிவு செய்யலாம்.//

இரண்டிலும் நீங்க சொல்ற மாதிரி பதிவு செய்யலாம்தான்.இங்கேதான் ப்ளூரே ரெசல்யூசன் ஆரோ 3D ஒலி வித்தியாசம் மாதிரி வித்தியாசப்படுகிறது.

ஹெச்டி,ப்ளூரே வட்டுக்களின் ரெசல்யூசன் வித்தியாசங்களை சுமார் இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பே ஹாலிவுட் பாலா சொல்லியது நினைவுக்கு வருகிறது.உங்களுக்காக வேண்டி தேடிப்பிடித்த படம்.

http://www.google.com/imgres?um=1&hl=en&client=firefox-a&sa=N&tbo=d&rls=org.mozilla:en-US:official&channel=np&biw=768&bih=428&tbm=isch&tbnid=QS_utZvjReVwnM:&imgrefurl=http://forums.guru3d.com/showthread.php%3Ft%3D369631&docid=LP_wfyM_P2zB0M&imgurl=http://www.frontroomcinema.com/wp-content/uploads/2011/05/dvd-vs-bluray-full.jpg&w=1073&h=559&ei=EwzHUKK0Bcy0iQerioGoBw&zoom=1&iact=rc&dur=2&sig=107777649405258217573&page=1&tbnh=141&tbnw=221&start=0&ndsp=8&ved=1t:429,r:3,s:0,i:96&tx=65&ty=102


பொதுவாக பார்த்தால் ஹெச் டி,ப்ளூ ரே ரெசல்யூசனுக்கு வித்தியாசம் தெரியாதுதான்.ஆனால் மேக்ரோ செய்து பார்த்தால் ஹெச்டி ரெசல்யூசன் தொபுக்கடீர்ன்னு விழுந்துடும்.

@வவ்சு!

//Blu-ray is an optical disc storage technology.

அவ்ளோ தான்.//

ப்ளூ ரே வட்டுக்கள் பார்ப்பதற்கு திருட்டு டிவிடி வட்டுக்கள் மாதிரியே இருந்தாலும் கூட அளவு,உருவம்,மீடியா,சேமிப்பு கொள்ளளவு,லேசர் நுட்பம்,கட்டமைப்பு,உருவ ரெசல்யூசன்,உபயோக திறன் என பலவிதங்களிலும் வேறுபடுகிறது.

நீங்க தியரி சொல்றீங்க!நான் பரிசோதனைக் கூடத்தில் உட்கார்ந்து சொல்கிறேன்:)

ராஜ நடராஜன் said...

//விஜய் படத்துக்கு அவுட் சைட் தமிழ் நாட்டில் உள்ள மார்கெட் கூட லோகநாயகருக்கு இல்லை என்றே பல தளங்களிலும் உள்ள தகவல் காட்டுகிறது.

டாப்பில் வழக்கம் போல சூப்பர் ஸ்டார் இருக்கார்.//

கடைசி வரி சரியாகத்தான் இருக்கிறது.
விசய்க்கு தமிழ்நாட்டிக்கும் வெளியே கேரள மார்க்கெட் இருக்கலாம்.துப்பாக்கிக்கு முன்னாடி ரவுடி ராத்தூர்ல அக்‌ஷய் குமாரோட ரெண்டு ஸ்டெப் போடறதுக்கு முன்னாடி மும்பாய்க்கே விசயை யாருன்னே தெரியாது.

என்ன கொடுமை இது லோகநாயகரே:)


வவ்வால் said...

ராச நட,

//பொதுவாக பார்த்தால் ஹெச் டி,ப்ளூ ரே ரெசல்யூசனுக்கு வித்தியாசம் தெரியாதுதான்.ஆனால் மேக்ரோ செய்து பார்த்தால் ஹெச்டி ரெசல்யூசன் தொபுக்கடீர்ன்னு விழுந்துடும்.//

நீங்க இருப்பது கற்கால பரிசோதனைக்கூடமா?

நீங்க சொன்ன வித்தியாசம் தெரியாம தான் டிஜிட்டல் புரொஜெக்‌ஷன் பத்திலாம் எழுதுறோமா?

முதலில் ஸ்டோரேஜ் மீடியா, அதில் உள்ள மீடியா கண்டென்ட் இரண்டும் வேறன்னு புரிஞ்சுக்கோங்க :-))

HD என்பது மீடியா கண்டெண்ட்டின் தரம்.புளுரே டிஸ்க்கிலும் எச்.டி கண்டென்ட் தான் இருக்கு.

கம்ப்ரஷன் கோடெக் பொறுத்து ஃபார்மேட் மாறும்.

760 பிக்செல் மேல் இருப்பது எல்லாம் எச்.டி வீடியோ ,கீழ இருப்பது ஸ்டாண்டார்ட் வீடியோ.

பிராட் பேண்ட் என்றால் குறைந்த பட்சம் 256 கேபிபிஎஸ் என வறையறுத்துள்ளது போல எச்.டி வறையரை.

HD video வானது microsof இன் VC_1,அல்லது Mepg2,mepeg4,jepeg2 (digital cinema pacakge ,DI standard)ஆகிய கம்ப்ரஷன் ஃபார்மேட்டில் புளு ரே டிஸ்க்கில் பதியப்படுகிறது.

இப்போ தரம் குறையாம நல்ல கம்ப்ரஷன் ஃபார்மேட் என மைக்ரோசாப்டின் விசி-1 இல் தான் பெரும்பாலான படங்கள் வெளியாகிறது.

எந்த கம்பிரஷனில் வெளியானாலும் எல்லா விடியோவுமே எச்.டி வீடியோ தான்.

அது புரியாம புளுரே வீடியோ அப்படி இருக்கும், எச்.டி வீடியோ இப்படி இருக்கும்னு சொல்லிக்கிட்டு.

எச்.டி.டிவிடினு பேரு வச்சிட்டதால் அது டிவிடிக்கு பேருன்னு நினைக்கிற உங்களை என்ன செய்யுறது, ஒட்டகக்காலால் இடற செய்ய வேண்டியது தான்.

? said...

மிஸ்டர் ராஜ நடராஜன்,

வவ்வாலு குழந்தை புள்ளைக்கு விளக்குவது போல உமக்கு விளக்கிவிட்டரார். கூடவே எனக்கும் சேர்த்துவேறு விளக்கிவிட்டார்.

HD-DVD மற்றும் blueray இரண்டின் தட்டு சுழலும் வேகம் டிரான்பர் ரேட் இரண்டும் ஒண்ணாகவே இருந்தது. ஆக டிஸ்க் பதிவு செய்யும் அளவு தான் வித்தியாசம். single-layer Blu-ray disc= 55 GB, double-layer Blu-ray disc=50GB, single-layer HD-DVD=15GB, double-layer HD-DVD disc=30GB.

1080pல் நல்ல ஒலி தரத்தில் வரும் படங்கள் 20-40 GB ஓடும் அளவை பொருத்து இருக்கும். தேவையெனில் ஒன்னுக்கும் மேற்பட்ட தட்டில் படத்தை பதிவு செய்ய வேண்டியாதுதான். இரண்டு தரப்புமே தாங்களின் தட்டுதான் சிறந்தது என்ற போதும் மூன்றாம் தரப்பு சோதனைகளில் இரண்டிற்கும் எவ்வித தர வித்தியாசமும் இல்லை.

மேக்ரோ அது இது என அடித்து விடுகிறீர்கள். ஒரு எழவும் புரிய மாட்டீங்குது. மேலும் HD_DVD என்ற பிணம் டோன்ஸ் ஆடுது என ஒப்பாரி வைக்கின்றீர்கள் எதுக்கோ தெரியால!

நான் பரிசோதனைக் கூடத்தில் உட்கார்ந்து சொல்கிறேன் என்கிறீர்கள்... ஒரு வேளை விந்து, சிறுநீர், இரத்த பரிசோதனை கூடமோ என்னவோ தெரியல. எதுக்கும் பரிசோதனை முடிஞ்சதும் நல்ல டாக்டரா பாருங்க!:)

? said...

திருத்தம்
single-layer Blu-ray disc= 25 GB

ராஜ நடராஜன் said...

வவ்சு!பழைய படத்தையெல்லாம் ரீமேக் செய்ற மாதிரி அதர புதிரி புராண டெக்னிக்கையெல்லாம் ஒட்டவச்சட்டு நான் கற்கால பரிசோதனைக் கூடத்தில் இருக்கிறேனா:)

720 பிக்ஸல்க்கு மேலே இருந்தால் ஹெச் டி வீடியோ தரம்

720p - 1280×720p: 921,600 pixels (approximately 0.9 megapixels) per frame

டிவிடி ரெக்கார்டரில் ஹெச்டி வட்டில் படம் பார்ப்பதற்கும் PS3 ப்ளூரே டிஸ்கில் ப்ளூரே வட்டில் படம் பார்ப்பதற்கும் வித்தியாசமுள்ளது.நீங்களும் நந்தவனத்தானும் இரண்டு தரமும் ஒன்றே என்று மூன்று மூன்று காலில் நிற்கிறீங்க:)

நீங்க செய்த ஒரே நல்ல விசயம் ஆரோ 3D ஒலி நுட்பத்தை முன்பே நன்றாக விளக்கியதும் இப்பொழுது ஆரோ ஒலிக்கான திரையரங்கு சிக்கல்களை விரிவாக அலசியதுமே.

ஒட்டகம் ஒரு அப்பிராணி!இடற வேலையெல்லாம் செய்யாது:)

ராஜ நடராஜன் said...

நந்தவனத்தான்!இதென்ன மிஸ்டர்ன்னு ஒபாமாவை கூப்பிடற மாதிரி பார்மலா!வவ்சை பாருங்க எவ்வளவு அன்பாக ஒட்டக பிரியாணி,சரவண பவன் சட்னின்னு அன்பாக கூப்பிடறாரு:)

நான் கூகிள் எர்த்துக்கு கூப்பிட்டா நீங்க லேப் பரிசோதனைதான் பிடிக்குதுங்கிறீங்க:)சரி நீங்க லேப் மைக்ரோஸ்கோப்பில்தான் பார்ப்பேன்னு அடம் பிடிச்சாலும் பிக்ஸல் ரெசல்யூசன் அடர்த்தி வெவ்வேற.நான் படம் போட்டு காண்பித்தும் ஏற்றுக்கொள்ள மாட்டீங்கிறீங்க.ஹாலிவுட் பாலா!எங்கய்யா ஆணி புடுங்கிட்டுருக்கிறீங்க!

மேலும் டிவிடி வட்டுக்கள் 4.7 GB பதிவு செய்யும் கொள்ளளவு கொண்டதுதானே!நீங்கள் எதனை 15GB(S)-30GB(D) என சொல்கிறீர்கள் என்பதை விளக்கவும்.

வவ்வால் said...

ராச நட,

உங்களை எல்லாம் மீண்டும் எலிமெண்டரி ஸ்கூலுக்கு படிக்க அனுப்பனும் :-))

சரி விடுங்க உங்களுக்கு எச்டி விடியோவுக்கும், எச்டி டிவிடி தட்டுக்கும் வித்தியாசம் தெரியலை ,இனிமே நான் என்னத்த சொல்ல :-))

2கே இருந்தாலும் அது எச்டி வீடியோ தான் என இவருக்கு எப்படிய்யா புரிய வைப்பேன் அவ்வ்வ் :-))

2கேவில் இருப்பதை ரியல் டி அல்லது ட்ரு டிஜிட்டல் வீடியோ என கொஞ்சம் சிறப்பிப்பார்கள். இதனை high definition video for cinema projection என்பார்கள்.

விஷயம் தெரிஞ்சவங்க கிட்டே பேசலாம், விஷயமே தெரியாதவங்க கிட்டேயும் பேசலாம் ,ஆனால் இந்த அரைகுறையா தெரிஞ்சுக்கிட்டு பேசுறவங்க கிட்டே மட்டும் பேசவே கூடாது, தாவு தீருது :-((

? said...

மிஸ்டர் ராஜ நடராஜன்,

இதே மாதிரி குழப்ப பின்னூட்டம் போட்டுகிட்டே இருந்தீர் சீக்கிரமா நான்தான் ஒபாமா என சொல்ல ஆரம்பித்துவிடுவீர்!

//டிவிடி வட்டுக்கள் 4.7 GB பதிவு செய்யும் கொள்ளளவு கொண்டதுதானே!நீங்கள் எதனை 15GB(S)-30GB(D) என சொல்கிறீர்கள் என்பதை விளக்கவும்.//

விளக்கீட்டாலும்... டிவிடி க்கு முன்னாடி HD-ன்னு எழுதியிருப்பதை பார்த்து தொலையும்...

உம்மோட மல்லுக்கட்ட வவ்வாலுவாலேதான் முடியும்!

வவ்வால் said...

நந்தவனம்,

கூல் ...சில்லுனு ஒரு பியர் அடிங்க, நம்ம தோழர் ராச நட ஒட்டகம் போல மெதுவாத்தான் உள்வாங்குவார், நாம குதிரை ஓட்டம் ஓடுறோம் ,அதான் வித்தியாசம்.

அவரு டிவிடி, புளுரே, எச்டி-டிவிடி, அப்புறம் எச்டி விடியோ என எல்லாம் குழம்பி போய் இருக்காரு ,தெளிய வச்சிரலாம் :-))

----------

எஸ்.ஏ,

வாங்க,நன்றி!

பரபரப்பா பேசிட்டு இருந்ததுல உங்களை கவனிக்காம போயிட்டேன்,

ஹி...ஹி நாம நல்லவனுக்கு நல்லவன் ...அப்போ கெட்டவனுக்கு கெட்டவனானு கேட்கப்படாது ...நீங்களே கண்டுப்பிடிச்சுக்கணும் :-))

---------------

? said...

//டிவிடி வட்டுக்கள் 4.7 GB பதிவு செய்யும் கொள்ளளவு கொண்டதுதானே!நீங்கள் எதனை 15GB(S)-30GB(D) என சொல்கிறீர்கள் என்பதை விளக்கவும்.//

மிஸ்டர் ராஜ நடராஜன்,

அநேகமாக தெரிந்து கொண்டே, சும்மாதான் இருக்கறானுக பதில் எழுதியே சாவட்டும் என்ற நல்லெண்ணம் உங்கள் பின்னூட்டத்தில் தெரியுது! ;)

? said...

//அவரு டிவிடி, புளுரே, எச்டி-டிவிடி, அப்புறம் எச்டி விடியோ என எல்லாம் குழம்பி போய் இருக்காரு ,தெளிய வச்சிரலாம் :-))//

வவ்வால், அவரு குழம்பி போயிருக்காரா இல்லை நம்மள குழப்புறாரான்னு ஒரே குழப்பமா இருக்கு. எல்லாம் முடிஞ்ச பின்னாடி மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்கறாரு. ஆக மொத்தம் ஊத்தி மூடுவதுதான் நமக்கு நல்லது.

Anonymous said...

"டி.டி.எச்.சில் ‘விஸ்வரூபம்’ திரைப்படத்தை ஒளிப்பரப்பியே தீருவேன் என்று கமலஹாசன் முடிவெடுப்பாரானால் நூற்றாண்டுகால சினிமா வளர்ச்சியை கவுரவப்படுத்திட டி.டி. எச்.சில் இந்த படம் ஒளிபரப்பாகும்போது பட்டிதொட்டி எங்கும் வீடியோ ஸ்கோப் என்னும் அகன்ற திரையை பொருத்தி ஊர்மக்கள் ஒன்று கூடிட இந்த திரைப்படத்தை இலவசமாக ஒளிப்பரப்பி, கமலஹாசனை வாழ்த்திட நாங்களும் தயாராகி விடுவோம்" என்று தமிழ்நாடு கேபிள் உரிமையாளர்கள் சங்க மாநில தலைவர் காயல் ஆர்.எஸ்.இளவரசு அறிவித்துள்ளார்.


----By, Maakkaan.

வவ்வால் said...

நந்தவனம்,

ராச நட அப்படித்தான் , சுக்குமி ளகுதி ப்பிலி னு படிச்சு ஏடா கூடாமா புரிஞ்சுப்பார் :-))

ஒட்டக சவாரி ஆரம்பத்தில் கஷ்டமா தான் இருக்கும் , போக போக பழகிடும் :-))
-----------

மாக்கான்,

நன்றி!

நானும் செய்திப்படித்தேன், கேபிள் டீவி முலம் ஒளிபரப்புவார்கள் எனப்பதிவிலும் குறிப்பிட்டு இருக்கிறேன், திருட்டுத்தனமாக பயந்துக்கிட்டு செய்வாங்கன்னு நினைச்சேன், ஆனால் சவால் விட்டு செய்வேனு சொல்கிறார்கள், நல்ல முன்னேற்றம்.

டிடிஎச்சில் போடுவேன் என சொல்வது வெறும் ஸ்டன்ட் தான் கடைசி நேரத்தில் பின் வாங்கிடுவார்னு சில பதிவுகளில் நான் சொல்லி இருந்தேன் ,அது தான் நடக்கும்.

மூவி ஆன் டிமாண்ட்டுக்கு கட்டணம் குறைவாக இருந்தால் தான் வரவேற்பு இருக்கும், 1000 ரூ என்றால் ,தியேட்டரில் பார்த்தால் காசு அதிகம் செலவாகுது என்று தானே திருட்டு டிவிடி பார்க்கிறோம், டிடிஎச்சிலும் அதிக பணம் என்றால் எங்களுக்கு தியேட்டரும்,வேண்டாம் டிடிஎச் உம் வேண்டாம் திருட்டு டிவிடியே போதும்னு மக்கள் இருந்துடுவாங்க :-))

என்ப்பதிவில் மட்டும் தான் அனைத்து சாதக,பாதகங்களையும் சொல்லி இருக்கிறேன்,மற்ற எல்லாம் ஒரு பக்கமாகவே பேசியிருக்கிறார்கள்.

இன்னும் சில தகவல்கள் இருக்கு அதனை வைத்து இன்னொரு பதிவு போட்டிற வேன்டியது தான் :-))

ராஜ நடராஜன் said...

வவ்சு! இந்த பதிவுக்கு தேவையான ஒன்று என்பதால் ஹாலிவுட் பாலாவின் விசுவரூபம் இங்கே.......

http://hollywoodbala.com/kamal-on-demand/

நன்றி.

வவ்வால் said...

ராச நட,

பார்த்தேன், ஒன்றும் பெரிதாக விடயமில்லையே, உணர்ச்சிகரமாக ஒரு கதை எழுதி இருக்கார்.

நம்ம பதிவின் நோக்கம், திருட்டு டிவிடி தயாரிக்க முடியும், மக்கள் டிடிஎச் அதிகம் பார்க்கமாட்டார்கள், தரமான திருட்டு டிவிடியே பார்ப்பார்கள் என்பதே.

இதனால் தியேட்டருக்கும் லாபமில்லை, லோகநாயகருக்கும் லாபம் இருக்கப்போவதில்லை, உண்மை தெரியாமல் பேசிட்டு இருக்கார் அவ்ளோ தான்.

மிச்சம் மீதி அடுத்தப்பதிவில்