Sunday, April 14, 2013

வாழ்த்து சொல்லும் நேரம்!


(ஹி...ஹி வாழ்த்தினது சரியா கேட்கலை ,காதுல சொல்லுன்னு கேட்கிறாங்க)


மலையாள புத்தாண்டு "விஷூ" வாழ்த்துக்கள்!

மலையாளம் பேசும் மக்களுக்கு இன்னிக்கு "விஷூ" தினமாம், அதான் புது வருட பிறப்பாம், எனவே நம்ம பக்கத்து மாநில மக்கள்,நம்ம உறவுகள் ஆச்சே , விட்ற முடியுமா எனவே விஷூ வாழ்த்துக்கள் சொல்லி நட்புறவை பேணிக்காப்போம்.

விஷூ வாழ்த்துக்கள்!

*******

ஹிந்து சித்திரா புத்தாண்டு வாழ்த்துக்கள்!

ஹி...ஹி வைதீக (திராவிட)ஹிந்துக்களுக்கும் இன்னிக்கு புத்தாண்டாம்,14.04.2013 ,ஞாயிறு ,நள்ளிரவு 2.38 AM, க்கு தான் புது வருஷமே "விஜயம்" ஆகுதாம் எனவே அவசரப்பட்டு ஆங்கில வழக்கப்படி நள்ளிரவு 12 .00 மணிக்கே கொண்டாட்டத்தை ஆரம்பிச்சிடாதிங்க மக்களே, மத நல்லிணக்கத்துக்காக அவாளுக்கும் புத்தாண்டு வாழ்த்து சொல்லுவோம்.

சித்திரா புத்தாண்டு வாழ்த்துக்கள்!

************

 இன்னிக்கு பொழுது போகாம விடுமுறை தின /பண்டிகை /சித்திரை புத்தாண்டு தின சிறப்பு நிகழ்ச்சிகள் என்ற பெயரில் மொக்கை படங்களையும், நிகழ்ச்சிகளையும் பார்த்து போரடிச்சா ,தமிழ்ப்புத்தாண்டு குறித்து நாம் முன்னர் இட்ட இடுகைகளின் சுட்டியை இணைத்துள்ளேன்,படித்து இன்புறவும் :-))

# வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: புத்தாண்டு வாழ்த்துகள்!- தைப்புத்தாண்டு பின்னணி ஒரு மாற்றுப்பார்வை!

வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: சித்திரை-1 இல் புத்தாண்டு கொண்டாடுவோருக்கு வாழ்த்துகள்

# வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: அஃதே,இஃதே-6.

----------
பின்க்குறிப்பு:

தகவல் மற்றும்படங்கள் உதவி:

இலவச காலண்டர் மற்றும் கூகிள் படங்கள்,நன்றி!
---------------------

17 comments:

Anonymous said...

அப்பாடா.........கடைசியில் ஒரு சிறிய பதிவு உங்களிடமிருந்து.

புத்தாண்டு வாழ்த்துக்கள்! உங்களுக்கும்.

முரட்டுக்காளை said...

ஓய் ஐதிங்க் சாமியோவ்

புத்தாண்டு எல்லாம் சரி தான் ! ஒவ்வொரு பதிவிலும் கவர்ச்சிப்படம் போட்டு நீர் அந்தக்காலத்து பத்திரிகையோட விசிறி ன்னு நிரூபிச்சிட்டீர் ! உமக்கும் பதிவு போடுறது மொக்கையா போய்டுச்சு போல அதுனால தான் வாழ்த்து சொல்ல கிளம்பிட்டீரா ஹி ஹி ஹி ... உம்மோட யாஹூ நண்பர்கள் யாரும் கிடைக்கலையா மொக்கை போட ஹி ஹி ஹி ....

குட்டிபிசாசு said...

விஷூ வாழ்த்துக்கள்! என்சாய்!

வவ்வால் said...

வேற்றுகிரகவாசி,

நன்றி!

அடடா பதிவு சின்னதா போச்சேனு நான் வருத்தப்பட்டா, இவங்களுக்கு சந்தோஷமா இருக்கே அவ்வ்.

உண்மையில கொஞ்சம் பெருசா போட்டு தாளிக்கலாம்னு தான், பார்த்தேன் நாமும் ஆன்டு தோறும் இதையே சொல்கிறோம் மக்கள் கேட்டதா தெரியலை, எதுக்கு வீணா பெருசா போட்டுக்கிட்டுனு தான் சுருக்கிட்டேன்.

சித்திரா வாழ்த்துக்கள்!

----------

பில்ஸ் சுவாமி ,

வாரும்,நன்றி!

தாங்களும்,தங்கல் உற்றார் உறவினர் அனைவரும் ஷேமமா?

உமக்கு யுகாதி வாழ்த்து தானே சொல்லனும், யுகாதி வாழ்த்துக்கள்!

பதிவெழுதி இந்த சமூகத்துக்கு கருத்து சொல்லி திருத்தாம விட்ருவோமா, அதெல்லாம் எழுதிக்கிட்டு தான் இருக்கோம்,நீர் தான் பார்ப்பதில்லை.

அதான் கூட்டத்தை கலைச்சுட்டாங்கன்னு சொல்லிட்டீர் அப்புறம் எப்படி மொக்கை போட, எப்போவது உம்மை போல யாராவது எட்டிப்பார்க்கிறாங்க.

பாடகர்.பி.பி.சிரினிவாஸ் காலமாகிட்டாராம், அவரோட பாடல்கள் எத்தனையோ நாட்கள் நம்ம அரட்டை கச்சேரிக்கு பயன்ப்பட்டது.அவரது ஆத்மா சாந்தியடையட்டும்.
---------

குட்டிப்பிசாசு.

நன்றி!

விஷூ வாழ்த்துனு சொன்னதில் நுண்ணரசியல் எதுவும் இல்லையே அவ்வ்!

ஹி...ஹி பட் மி லைக் விஷூ வாழ்த்து :-))

? said...

எவ்வளவோ தலை போகிற பிரச்சனைகள் தமிழ்நாட்டில் தலை விரித்தாடுகிறது. அதையெல்லாம் விட்டுவிட்டு, பொது தமிழன் ஜனவரி 1-க்கு புத்தாண்டு நாளை மாற்றிவிட்டதையும் அறியாது வெட்டிவிவாதம் செய்து கிடக்கறதெல்லாம் கிடக்கட்டும்
கிழவனைத்தூக்கி மனையில வை என்கும் தமிழ்நாட்டு அறிவுஜீவிகளுக்கு 'என்னமோ எழவு வாழ்த்துக்கள்'!

நீர் இந்த பதிவு எழுதியதுக்கு 'அசின் திருமணம் நின்னு போனது ஏன்? - வெளியில் வராத அதிர்ச்சி தகவல்கள்' என தலைப்பிட்டு நக்கீரன் ஸ்டைலில் மொக்கை போட்டிருந்தால் தலைப்பாவது சுவாரஸ்மாக இருந்திருக்கும்! :)

சார்வாகன் said...

சகோ வவ்வால்,

பண்டிகை நாள் வாழ்த்துக்கள்!!![ எதுக்கு வம்பு]

நமக்கு மதம், இனம்,சாதி,மொழி இவற்றை விட மனிதர்களே முக்கியம்.
எது தமிழ்ப் புத்தாண்டு என்பது தேவையற்றது.

மகிழ்ச்சியாக ,சுற்றுசூழலை பாழ் படுத்தாமல் சுற்றம் நட்பு சேர்ந்து கொண்டாடி மகிழ்க!!!

தமிழர்கள் நன்றாக இருந்தால் தமிழும் நன்றாக இருக்கும்!!!

சீக்கிரம் ஈழத் தமிழர்களுக்கும் ஒரு தீர்வு வரட்டும்!!!

பி.பி சீனிவாஸ் அய்யா மறைவுக்கு அஞ்சலி

வாழ்க வளமுடன்!!

நன்றி!!

முரட்டுக்காளை said...

ஓய் ஐதிங்க்

நீர் ஸ்டெடி இல்லைன்னு நல்லாவே தெரியுதய்யா !

// பில்ஸ் சுவாமி //

இதென்ன பில்ஸ் சுவாமி ?

// தாங்களும்,தங்கல் உற்றார் உறவினர் அனைவரும் ஷேமமா? //

தங்கள் .... தமிழ் மறந்து போச்சா இல்ல போட்ட சரக்கு மறக்கடிச்சிடுச்சா ஹி ஹி ஹி ...
ஷேமமா ? 1947 ல தானே இப்படி கடுதாசி போடுவாங்க ... நீர் என்ன 1925 ல பிறந்தீரா

// பதிவெழுதி இந்த சமூகத்துக்கு கருத்து சொல்லி திருத்தாம விட்ருவோமா, அதெல்லாம் எழுதிக்கிட்டு தான் இருக்கோம்,நீர் தான் பார்ப்பதில்லை. //

பார்த்துகிட்டு தான்யா இருக்கேன், நீர் ஏன் கற்பனையா சொல்றீர்?

// பாடகர்.பி.பி.சிரினிவாஸ் காலமாகிட்டாராம், அவரோட பாடல்கள் எத்தனையோ நாட்கள் நம்ம அரட்டை கச்சேரிக்கு பயன்ப்பட்டது.அவரது ஆத்மா சாந்தியடையட்டும்.//

இது ஒண்ணு போதாதா நீர் 1947 விடுதலைக்கு முன் பிறந்த ஆசாமின்னு தெரியறதுக்கு ...

ஹி ஹி ஹி ... பேரப்பிள்ளைகளோட விளையாடுறத விட்டுட்டு முகம் தெரியாத ஆசாமிகளோடவும் மாமிகளோடவும் சுண்டல் (கடலை ன்னு சொன்னா புரியாதுல்ல உமக்கு) எதுக்கு?

Muruganandan M.K. said...

இனிய சித்திரைப் புத்தாண்டு வாழத்துக்கள்

வவ்வால் said...

நந்தவனம்,

வாரும்,நன்றி!

"தல" சூட்டிங்க் போவாரு ,பைக் ஓட்டப்போவார், அவர் போகிறது எல்லாம் ஒரு பிரச்சினையா? 'தல'அசித்துக்கு பின்னாடி ஆயிரக்கணக்கான ரசிகப்பட்டாளம் இருக்கு அவாப்பார்த்துப்பா :-))

# விட்டா நான் தான் கண்ணாலத்தையே தடுத்தேன்னு சொல்வீர் போல இருக்கே, நான் இப்போ தான் மெக்சிகோ ஹேட் வாங்கி இருக்கேன்,இன்னும் எவ்வளவோ இருக்கு அவ்வ் :-))
-----------

சகோ.சார்வாகன்,

வாங்கோ,நன்றி!

புத்தாண்டோ, பழைய ஆன்டோ,லீவு வுட்டா சரித்தேன்,ஆனால் ஞாயிற்று கிழமையா வர மாதிரி செய்யக்கூடாது :-))

பண்டிகை தின,புத்தாண்டு வாழ்த்துக்கள்!

-----------

புல்ஸ் சுவாமி,

வாரும்,நன்றி!

என்ன ஓய் சூடேத்திடுச்சு போல இருக்கு ,வழக்கம் போல பீர்ல செவன் அப் ஊத்தி பெக் கணக்கில் குடியும் :-))

சுகர்,பிபி,கொல்ஸ்ட்ரால்,அல்சர்,அல்சீமைர்னு ஏகப்பட்ட மாத்திரை சாப்பிடும் உம்மை "பில்ஸ்"னு சொன்னாலும் தப்பில்லை தானே :-))

#நான் இந்த லோகத்துக்கு வந்து சுமார் 2000 ஆண்டுகளுக்கு மேல் ஆச்சு,எதுக்கு குறைச்சு சொல்லுறீர், அந்த காலத்தில பொழுது போகாம நான் சொன்னதை என்னோட அசிஸ்டெண்ட் எழுதி வச்சார்,அதை தான் இப்போ எல்லாம் திருக்குறள்னு சொல்லுறாங்க :-))

நீர் சப்தகிரி எக்ஸ்பிரசில் சீனியர் சிட்டிசன் பாஸ்ல போற அளவுக்கு யூத்துனு எனக்கும் தெரியும் :-))

# என்ன ஓய் சுண்டல், சுக்கு காபினு பீச் வியாபாரி போல பேசிட்டு :-))

அதான் யாஹூல சபைய கலைச்சிட்டா ,இனிமே புதுசா எங்கே சபை கூடுதுனு பார்த்து சொல்லும் வாரேன்.
--------------

முருகானந்தம்,

வாங்க,நன்றி!

உங்கள் மருத்துவப்பதிவுகள் சில படித்துள்ளேன்,தொடரட்டும் உங்கள் சேவை.


சித்திரா புத்தாண்டு வாழ்த்துக்கள்!
-------------------

Anonymous said...

வவ்வால்,

//மெக்சிகோ ஹேட் வாங்கி இருக்கேன்...//

நான் இப்போ தான் "கிமோனோ" வாங்கி இருக்கேன்...:-)

இனிய தமிழ் புத்தாண்டு வாழத்துக்கள்...

--கொங்கு நாட்டான்.

Anonymous said...

அசின் அதிர்ச்சி தகவல்கள்

http://epaper.maalaimalar.com/showtext.aspx?parentid=28900&boxid=16734734&issuedate=coimbatore/1542013


RSK

Unknown said...

வவ்வால் ஆண்டு வாழ்த்துக்கள்...-:)

This is your shortest post I guess...-:)

Anonymous said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்!


மாக்கான்

Anonymous said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்!


மாக்கான்

வவ்வால் said...

கொங்கு நாட்டார்,

சப்பானிய கலாச்சாரத்தை கப்புனு கவ்வீட்டீரே :-))

இனிய சித்திரா புத்தாண்டு வாழ்த்துக்கள், விஜயா வந்தாச்சு :-))

வேகரியை தான் காணோம் நான் கேட்ட கேள்வியில் சோகநரியாகி போயிட்டார் போல!
----------------
RSK

ஓய் அடுத்தவனுக்கு வயிரெரிஞ்சா அதுல ஒரு சந்தோஷம்?

நான் அதிர்ச்சியாவுறதுனு ,சின்னப்புள்ளையில மாதுரி தீட்சித்துக்காலத்துல இருந்தே பல அதிர்ச்சிகளை அடைந்திருக்கணும் :-))
---------

ரெவரிஜி,

வாங்கோ,நன்றி!


சாலிவாகன சகாப்தம் போல வவ்வால் சகாப்தம் ஆண்டல்ல :-))

ஹி..ஹி சின்னதா பதிவு போட்டா எத்தனைப்பேருக்கு சந்தோஷமா இருக்கு அவ்வ்!

அது சரி நீங்க திடீர்னு பிராபல்ய பதிவராக ஆகிட்டிங்களே, உங்க பதிவுல பின்னூட்டப்பகுதியே காணோம்,ஏன் இந்த மியுட்டேஷன்?
----------------

மாக்ஸ்,

நன்றி!

சித்திரா புத்தாண்டு வாழ்த்துக்கள்!


-------------------

ஜோதிஜி said...

ஒவ்வொன்னா குறைத்துக் கொண்டே வந்து இப்போது இது போன்ற புத்தாண்டுகளைக் கூட கண்டு கொள்வதே இல்லை. அந்தஅளவிற்கு ஞானி ஆகி விட்டேன்

வவ்வால் said...

ஜோதிஜி,

வாங்க,நன்றி!

உங்க ஊருல போதி மரமெல்லாம் இருக்கு போல ஞானியாகிட்டிங்க ,எங்க ஊருல கரண்ட் கம்பி மரம் தான் இருக்கு ஆனால் கரண்டு தான் இல்லை ,அப்புறம் எப்படி எனக்கு ஞானம் வரும் அவ்வ்!

நாம ஞானம் வந்துடுச்சுனு சும்மா போயிட முடியுமா, நமக்குனு ஒரு சமூக கடமை இருக்குல்ல, எத்தனப்பேரு தமிழ்ப்புத்தாண்டுக்கு என்ன சொல்லி இருக்காங்கனு ஆவலா படிக்க வருவாங்க ,அவங்களை ஏமாத்தலாமா என்ன? கடமைய செய்து வைப்போம் :-))