Showing posts with label கொடுமை. Show all posts
Showing posts with label கொடுமை. Show all posts

Tuesday, November 05, 2013

தமிழ்ப்புரட்சி வேந்தர் செயமோகர்!

(இவன் தமிழ் படிச்சா குளு..குளுனு இருக்கு ஹி...ஹி)


ஆசான் செயமோகரு பல மயிர்க்கூச்செறியும் உள்ளொளி புறப்பாடு  கிளப்பும் சமகால நவீன மாயதந்திர மெய்யியல், உபமெய்யியல் உட்ப்பொதிந்த இலக்கியம் படைக்கும் மாபெரும் இலக்கிய சமையல் கலைஞர் என்பதை மறுக்க இவ்வாழி சூழ் உலகில் யாருக்கும் திராணியோ தெம்போ இல்லை என்பதை நாத்திகத்தையெல்லாம் ஒதுக்கி வச்சுட்டு ஆசானுக்காக ,சோட்டாணிக்கரை பகவதியம்மன் சாட்சியாக சூலத்துல தேங்கா உடைச்சு சாம வேதம் ஓதி உரத்துச்சொல்லக்கூட அடியேன் தயார்.

ஷ்ப்பா முடியல ... இப்பவே கண்ணக்கட்டுதேனு யாரும் ஓடிப்போயிராதிங்க, ஹி...ஹி எத்தினி நாளைக்கு தான் மோன்சான்டோ ,பவண்டோனு பேசிட்டு இருக்கிறது நாமளும் கொஞ்சம் எலக்கியம் பேசி ... எலக்கியவியாதியா மெட்டாமார்பாசிஸ் ஆகலாம்னு ஒரு அல்ப ஆசை தான் அவ்வ்!

சரிங்க்ணா நெம்ப டெங்க்ஸன் ஆவாம மேக்கொண்டு படிங்க்ணா...

 இங்கீலீப்பீசு பத்திரிக்க அச்சடிச்ச  இந்து அச்சாபீசு தமிலு வளக்கனே வேல மெனக்கெட்டு தமிலுல ஒரு பத்திரிக்கை அச்சடித்து விக்க ஆரம்பிச்சதும் ...தான் அவுங்க கொண்டையில சே மண்டையில ஒரு பலுப்பு எரிய ஆரம்பிச்சு இருக்கும் போல , தமில இங்கீலீப்பீசு எயுத்துல எழுதிக்கினு இருந்தா என்னாதுக்கு நாம தனியா தமிழு பத்திரிக்க அச்சடிக்க போறோம், ஆனா இந்த பொயப்பத்த தமிலு மக்க விடாம தமிலுளவே எயுதிக்கினு படிச்சிக்கினு இருக்கறதால தானே நமக்கு இம்புட்டு கஸ்டம்னு நினைச்சிருப்பாய்ங்க போல,  செய மோகர கூப்பிட்டு ...இந்த மாரி...இந்த மாரி ஒரு நெலமை அதனால நீங்க அந்த மாரி ...அந்த மாரி ஒரு கட்டுரைய எயுதிக்கொடுங்க ... செமத்தியா கவனிக்கிறோம்னு  சொல்லிருப்பாங்க போல ,ஆசான் ஆச்சே சொம்மாவே கெரகம் எடுத்து ஆடுவார் ... தி இந்து(தமிலு) வே கூப்டு சொன்னதும் டண்டனக்கா டனக்குனக்கானு ஒரு கெதக்களியே ஆடிப்புட்டாரு எயுத்துல :-))

மோன்சான்டோ பிடி பருத்தியை விட செயமோகன்டோ பிடி(வாத) தமிழ் பருத்தி ரொம்ப டேஞ்சரா கீதுப்பா , தமிலுக்கு என்னாத்துக்கு தனி எலுத்து அதாங்க் இங்லீப்பீசு கீதுல்ல அதுலவே எயுதிட்டு போலாம், இங்லீப்பீசுல 26 எயுத்து தான் கீது ஆனாங்காட்டி தமிலுல பாக்கச்சொல்லோ 247 எயுத்து வச்சு கொலையா கொல்லுறய்ங்க படிக்கிற பச்ச கொயந்தய்ங்க இன்னா பாடு படுது தெர்தாப்பா ...ஆக்காங் ஒனக்கு எங்கே தெர்ய போவுது நீ நாலு எயுத்து பட்சிருந்தா தானேனு கொமட்டுல குத்தி கும்டி அடுப்பு கணக்கா பொகையுறாருப்பா அவ்வ்!

மெட்ராசு தமில் பேசிக்கினு ,தஞ்சாவூர் -கடலூர் கலந்த தமிலுல எயுதிக்கினு ... நடுவால இங்கிலீப்பீசுல பீட்டர் வுட்டுக்கினு எம்புட்டு வேலைய நானு செய்ய வேண்டியதிருக்கு எனக்கே ரொம்ப குஷ்டமா ச்சே கஸ்டமாயிருக்குப்பா ...பேயாம ஞானும் ஆசான் செயமோகரு வழியில் சுலுவா இங்கிலீப்பீசு லெட்டரில் தமிலு எயுதினு போயிடலமானு ஆசயா இருக்குபா  அப்பாலிக்கா தி சோ கால்டு தமிலு வெறியர்கள் என்ன தமிலு எனத்துரோவினு சொல்லி கல்லக்கொண்டு எறிஞ்சா இன்னாப்பண்றதுனு நெனைச்சாலே அடிவவுத்துல தண்ணியில்லாம போவுது அவ்வ்!

எனக்கு இன்னா டவுட்டுன்னா ஆசான் செயமோகரு தமிலு நாட்ட விட மலையாளக்கரையில நெம்ப ஃபேமசாம்...இதெப்படி ஒனக்கு தெரியும்னுலாம் கேட்கப்படாது அத அவரே சொல்லிக்கீரார் அவ்வ்!

ஆகவே மகாசனங்களே எனுக்கு ஒன் இஸ்மால் டவுட்டு வந்துடுச்சு, ஆசான் இந்த அரிய தத்துவத்தை ஏன் மலையாள மொழில செய்ய சொல்லி மலையாளப்பத்திரிக்கையில எயுதுலனு ?

ஹி...ஹி மலையாளத்துல கண்டியும் எய்தி இருந்தார்னு வச்சிக்கோ இன்நேரம் கஞ்சிக்காச்சி கயுவி ஊத்தியிருப்பாங்க :-))

செரி மலயாளத்துல எயுதினாத்தான் கஞ்சிக்காச்சுவாங்க ,ஆசான் தான் ஆறுமாசத்துக்கு ஒருக்கா டெலிபோன் டைரக்டரி போல பொஸ்தவம் எயுதுறாரே அதையாச்சும் இப்பிடி பொரட்சியா இங்கிலீப்பிசு லெட்டரில் எயுதி முன்னோட்டங்காட்டியிருக்கலாம்ல.... சும்மாவா அப்பிடி ...டெலிபோன் கும்பெனில கம்பி கட்டினவர் ஆச்சே!

 ஹி...ஹி அப்பிடிலாம் எயுதுனா இப்ப கெடைக்கிற லைப்ரரி ஆர்டர் 1500 பொஸ்தவுமும் கேண்ஜலாகிடும்னு ஆசானுக்கு தெர்யும்ல...கூடவே சுத்திட்டிருக்க கைப்புள்ளிங்க கூட ஒரு புக்கும் வாங்காது... அப்பாலிக்கா சுண்டல் மடிக்க எடக்கு தான் போடனும்னு தெரிஞ்சு தான் உசாரா நமக்கு அட்வைசு கொடுக்கார்... சொல்லுதல் யார்க்கும் எளியவாம்னு தாடிக்கார தாத்தா அன்னிக்கே இதத்தான் சொல்லிட்டு செலையா நிக்கார் குமரிலனு ...நாவர்க்கோயில்க்காரருக்கு தெரியாமலா இருக்கும் அவ்வ்!

செரிப்போவட்டும் காசுக்கு விக்குற புக்குல எல்லாம் வெசப்பரிச்ச செய்ய முடியாது ,பொஸ்தவ கும்பெனி கோச்சுக்கும்னு வச்சிக்கலாம்.. எணையத்துல சொம்மா எயுதுக்கினு கீறார் அதுலவாச்சும் இதமாரி பண்ணிக்கீறாரானு பார்த்தா அதுவும் இல்ல... ஆசானாலேயே செய்ய  முடியாத, புடிக்காத ஒன்ன எங்கள மாரி அரடிக்கெட்டுக்கள செஞ்சு பாக்க சொல்றிங்களே ,இது எந்த ஊரு நாயம்?

இதுல கெல்வெட்டு ஆராய்ச்சியாளர் கணக்கா ... தமில் ஆராய்ச்சிலாம் செஞ்சி ... இப்படி எயுதினா சரியாத்தான் வருங்கீறார்... அத பாருங்களேன்..

//மொழிக்கும் எழுத்துருவுக்குமான உறவு என்பது ஒரு மனப்பயிற்சிதான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். க என்ற எழுத்தைப் பார்த்ததும் அந்த ஒலி நினைவுக்கு வருவதற்கு நாம் இளமையிலேயே குழந்தைகளைப் பழக்குகிறோம். நமக்கு அது இயல்பான ஒன்றாகத் தெரிகிறது. ஆனால், குழந்தைகள் மிகக் கடினமான ஈராண்டுப் பயிற்சி வழியாகவே அந்தப் பயிற்சியை அடைகின்றன.

எழுதுவது என்பது இன்னும் சிக்கலானது. சமூகவியல் ஆய்வாளரான மிஷேல் ஃபூக்கோ “எழுத்து என்பது கைகளுக்கு அளிக்கப்படும் கழைக்கூத்தாட்டப் பயிற்சி” என்கிறார். நம் குழந்தைகளுக்கு அதைக் கட்டாயமாக ஆக்கியிருப்பதால் அவர்கள் இளமையில் கற்றுக்கொள்கிறார்கள். ஆனால், அவர்களின் வாழ்க்கையில் அது மிகக் கடினமான ஓர் உழைப்பு. மிருகங்களையும் பறவைகளையும் வித்தைக்காகப் பழக்குவதற்கும் இதற்கும் பெரிய வேறுபாடு உண்மையில் இல்லை.

இந்நிலையில், இந்தியக் குழந்தை இளமையில் ஒரே சமயம் இரண்டு எழுத்துருக்கள் முன்னால் நிறுத்தப்படுகிறது. இரண்டு மடங்கு உழைப்பு அதற்குக் கட்டாயமாக்கப்படுகிறது. க என்றாலும் ka என்றாலும் ஒரே உச்சரிப்புதான் என அது உணர்ந்து தெளிய நேரமாகிறது.//

நெம்ப நல்லா ஆய்ந்துக்கீறார்..எறா ஆயுறவங்க கூட இம்புட்டு சொத்தமா சோலிய செய்யமாட்டாங்க அவ்வ்!

"க" என ஒலி வர எளமையிலே பழக்குகிறோமாம், தமிலே படிக்காம தமிலுல எய்தினா இப்புடித்தான் தோனும், தமிலு ஒரு எலக்கண மொழி... எல்லாத்துக்கும் எலக்கணம் வச்சிக்கீது... எண் எலக்கணம்,எழுத்திலக்கணம், புணர்ச்சி விதி னு ஏகப்பட்டது கீது... புணர்ச்சிவிதினா வேறதெவும் நெனைச்சிப்புடாதிங்க அப்பாலிக்க அல்டிமேட் கதை கணக்காகிடும் அவ்வ்!

நம்ம தமிலுல ஒரு எழுத்து உருவாகிறதுக்கு கூட எலக்கணம் இருக்கு, இப்பிடி ...இப்பிடினு சொல்லிக்கீறாங்க...

க்+அ = க னு பிரிச்சு காட்டி ..."க" இப்படி தான் வருதுனு சொல்லி "க" ஒலியை உள்வாங்க வைப்பாங்கோ... சொம்மா "A" தான் "A" , A for Apple னு சொல்லிட்டு எயுத்த சொல்லித்தர மாட்டாங்கோ.

இங்கிலீப்பீசுல தமில் போல சாப்ஜாடா அப்படி சொல்லித்தரவும் வய்யே இல்ல, அதுல எலுத்தோட "ஒலி உச்சரிப்புக்கும்" சொல்லோட ஒலி உச்சரிப்புக்குமே தொடர்பேயில்லாம புட்டுக்கினு நிக்கும்.

"CAR" = கார்(kaar)

"CARE"=கேர் (kaer)

"CA" என்ற ரெண்டெலுத்து ஒரே மாதிரி அடுத்தடுத்து ரெண்டு சொல்லிலும் வந்தாலும் ஒரெடுத்துல "கார்"னும் இன்னொரு எட்த்தில "கேர்'னும் படிக்கணும் , இப்படி "ஒலி உச்சரிப்பு" எப்படி மாறுதுனு அடையாளங்காட்ட ஒரு சுட்டி ,சட்டினு எதுவும் உடனே சிக்காது ...படிக்கச்சொல்லவே இப்பிடி..இப்பிடி சொல்லவோணோம்னு "மண்டையில புகுத்தி "வச்சத்தான் உண்டு.

அதான் கடசில ஒரு "ஈ" உக்காந்திருக்கே அத வச்சு ஒலி உச்சரிப்பு அடையாளம் பார்க்கலாம்னு சொன்னா மன்டையில போடுவேன் ... "ஈ" கடசீல தான கீது அது எப்படி முதல்ல வரச்சொல்ல ஒலி மாறுபாட காட்டும்?

ஏன்னா தமிலு எழுத்தொலிக்கு முக்கியம் கொடுக்க மொழி, இங்கிலீப்பீசு சொல் ஒலிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது, ஏதோ ஒரு  இஸ்பெல்லிங்க கூட எயுதிட்டு இத இப்படிக்கா உச்சரிக்கணும்னு வாத்தியாருங்க நம்மள "மனப்பாடம்" தான் செய்ய வைக்க முடியும், ஒலித்திரிபுக்கு எலுத்து அடிப்படையில காரணமே சொல்ல முடியாது.

அதனால தான் நம்மாளுங்க  இங்கிலிப்பீசு பேசச்சொல்லோ "புரநவுண்சியேஷன்"ல தப்பு பண்ணிடுறது,ஆனா கரிக்ட்டா இஸ்பெல்லிங்க் எல்லாம் எயுதிடுவாங்க.

ஹி...ஹி.. இஸ்பெல்லிங்க்,இஸ்கோல் ..ஐஸ்லேன்ட் எல்லாம் இப்படிக்கா "S" எஸ்னு சொல்லி ஒலிய கொடுக்கபோய் வரது. வெள்ளக்காரய்ங்க படிக்க சொல்ல இங்கிலீப்பீசுல எழுத்தின் ஒலி வடிவத்தை பின் தள்ளிட்டு "சொல்லின்" ஒலி வடிவம்னு "கட்டமைச்சு" சொல்லிக்கொடுத்திடுவாங்க எனவே அவங்களுக்கு அது எளிது,நமக்கு தான் நொறத்தள்ளும் அவ்வ்!

அதனால ஆசான் சொல்லுறாப்போல இங்கிலீப்பீசு லெட்டரில் எலுதினா ரொம்ப சுலுவாகிடும் என்பதல்லாம் கப்சா!

எலுத்துக்குனு இல்ல, ரெண்டு சொல்லு பக்கம் பக்கமா வந்து ஜாயின்ட் அடிக்க சொல்லக்கூட இப்படி ஒன்னா ஒட்டி இன்னொரு எலுத்தா மாறி அதுக்கு ஏத்தாப்போல உச்சரிக்கிற "புணர்ச்சி" விதிலாம் தமிலுல இருக்கு, இங்கிலீப்பீசுல அப்படிலாம் இல்லாம எல்லா எலுத்தும் தனியா நிக்கும் ,ஆனா சேத்து சொல்லறப்போ இன்னொரு ஒலி வடிவதை நம்ம மனப்பாடம் செய்யனும் ... அதாவது தமிலுல ஒவ்வொரு எலுத்தா எலுத்துக்கூட்டி அதே ஒலில சொல்லிக்கிட்டே ஒரு சொல்ல சொல்லி முடிச்சாலும் "சொல்லின் ஒலி வடிவமும்" அதாவே வரும்.

அ+ம்+மா = அம்மா +இ+ங்+கே =இங்கே + வா +வா ,

பிரிச்சு சொல்லிப்படிச்சுட்டு அப்படியே ,

சேர்த்து படிச்சு பாருங்க = அம்மா இங்கே வா வா என அயகா சொல்ல முடியும்!

எலுத்தா படிக்கும் போது சொல்லுற அதே ஒலில சொல்லாவும் சொல்லலாம், எனவே புரநவுண்சியேஷன் கொயப்பமே வராது.

ஆனால் இங்கிலீப்பீசுல அப்படிலாம் இல்ல எல்லா எலுத்தும் தனித்தனியா நிக்கும், எலுத்தெலுத்தா சொல்லிட்டு அதே ஒலில சொல்லலாம்னு பார்த்தா சொல்ல முடியாது அவ்வ்!

புள்ளி வச்ச எலுத்து புள்ளி வைக்காத எலுத்து , குறில் ,நெடில் என எதுமே கெடையாது எல்லாம் இப்படித்தான் சொல்லனும்னு "சொல்லை" சொல்லும் போதே" திணிக்கனும்" அவ்வ்! இப்படி இதான் உண்மை,அப்படித்தான் சொல்லணும் அப்படியே ஏத்துக்கிட்டு படினு சொல்லுறது "AXIOM" * என்ற வகையில நம் மண்டையில ஏத்துறதாகும்.

*"An axiom, or postulate, is a premise or starting point of reasoning. As classically conceived, an axiom is a premise so evident as to be accepted as true without controversy"

புணர்ச்சி,உணர்ச்சி... ஒரு மண்ணும் கெடையாது... சொல்லித்தரவங்க தான் எல்லாத்தையும் சொல்லித்தரணும் அது எப்படினு கேள்விக்கேட்டா விளக்கமே இருக்காது. கூட்டு குடும்பமாக சொல்லில் தான் எல்லாத்தையும் வச்சிருப்பாங்க, எழுதுக்குனு ஒன்னியும் இல்லை.

தமிலு எழுத்து, எண் என எல்லாம் பிரிச்சு மேய்ஞ்சி எலக்கணம் போட்டு எளிதாக உள்வாங்க வழி செய்த மொழி ,இது போல ஒலகத்துலவே வெகு சில மொழிங்க தான் இருக்கு.

சீன,சப்பானிய மொழிலாம் படங்காட்டி விளக்கும் மொழி ,அதாவது ரொம்ப எலுத்துக்குனு மெனக்கெடுவதேயில்லை, வூடுனு எழுதினா வூடு படத்தையே சின்னதா வரிஞ்சாப்போல எயுதிடுவாங்க அவ்வ்!

நம்ம தமிலு மட்டும் இப்படி பிரிச்சி மேய்ஞ்சி வச்சிருக்காங்க என்றால் அந்த அளவுக்கு அந்தக்காலத்திலயே ஆய்ந்து அடிப்படை அலகா பிரிச்சு எப்படி வேண்டுமானாலும் "வரி வடிவில்" கொண்டு வர வசதியாக இருக்கத்தான்... அதனால தான் தமிலுல முன்னால பின்னால எப்படி வேண்டுமானாலும் வார்த்தைய தூக்கிப்போட்டு ஒரே மீனிங்க கொண்டு வரது ரொம்ப சுலுவா செய்ய முடியும்.

இதனால தான் நம்ம தமிலுல 2000 வருசத்துக்கு முன்னமே எலக்கியம் எயுதிக்கீறாங்க அதுவும் எப்புடி ... ஓசை நயம் இருக்கும், ஒரு சொல்லுக்கும் இன்னொரு சொல்லுக்கும் இயைபு இருக்கும், சந்தம் இருக்கும், ஒரு இசை போல ஒலிக்கும், கவிதை போல இனிக்கும், ஆனால் ஆழமான பொருளையும் தரும்.

மத்த மொழிலவும் 2000 வருசம் முந்திய படைப்புகள் இருக்கலாம் ஆனால் அவற்றில் எல்லாம் இத்தப்போல மொழிக்கட்டமைப்பு கூறுகள் இருக்காது சொம்மா ஒரு கதைய சொல்லிட்டு போவும்.

சொம்மாவா சொன்னார் பாரதி "யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்"னு!

இப்படி எலுத்துக்குலாம் எலக்கணம் போட்டு ,ஒரு மொழியில என்னவெல்லாம் செப்படி வித்தைக்காட்டலாமோ அதுக்குலாம் வழி வாய்க்கா செஞ்சி வச்சிட்டு 2000 வர்சம் முன்னமே நம்ம முன்னோர்கள் போயிட்டாங்க, இப்போ 13 வருசமா கம்பியூட்டர்ல தமில இங்கிலிபீசுல தட்டுறேன் எனக்கு ஒன்னும் வித்தியாசமே தெரியலைனு சொல்லுறாரே ஆசான், அத டிரான்ஸ்லிட்டரேஷன் மொழிப்பெயர்ப்புக்கு ஒரு ஒரு எலுத்துக்கும் என்ன மாதிரி எலுத்துனு எவனோ வடிவமைச்சதால தானே,

இங்கிலீபீசுல எல்லா தமிலு எழுத்தின் ஒலிக்கும் "இங்கிலீப்பீசு லெட்டர் காம்பினேஷன்" இல்லைனு இன்னும் கூடவா தெரிஞ்சிக்கலை ,அப்படி இல்லாத சொல்லுக்குலாம் சும்மா குன்சா இப்படி எலுதினா அப்படி "டிரான்சிலிட்டரேட் செய்யனும்"னு நம்மாளுங்க தான் "டிசைன்" செய்திருக்காங்க, சும்மா "அம்மா இங்கே வா வா"னு இருக்கிறத இங்கிலீபீசுல எலுதினா ஒலி எப்படி வருதோ அப்படியே தமிலுலவும் வருதுன்னு அடிச்சு வுடக்கூடாது.

ஹி...ஹி அடுத்த வரி "ஆசை முத்தம் தா தா"னு ஏன் எயுதாம போனார்?  அவருங்கண்டியும் எயுதி இருந்தார் இன்னேரம் ,டப்பா டான்ஸ் ஆடியிருக்கும் ,அவ்வ்!

"ஏகபோகம்னு" இங்கிலீபீசுல எலுதினா அப்படியே தமில் ஒலி வடிவத்துல தான் இருக்கானு செக் செய்து சொல்லுங்க பார்ப்போம் :-))

நம்மாளுங்க இப்படி இங்லீப்பீசு லெட்டர சேர்த்துக்க , நீக்கிக்க ,அப்பாலிக்க டைப்படிச்சா அதுக்கு இப்படி தமில் சொல்லு வராப்போல மென்பொருள் எலுதிட்டோம்னு சொல்லிக்கொடுத்தது தப்பா போச்சு அவ்வ்!

#//பள்ளிகளில் இதைக் கற்பித்தால், குழந்தைகளுக்கு ஒரே ஒரு எழுத்துருவைக் கற்பித்தால் போதும். அவர்கள் தமிழை இன்னும் வேகமாக, இன்னும் சகஜமாக வாசிக்க அது உதவும் அல்லவா?//

ஹி...ஹி அப்புறம் , தமிழுல நெடில் வரச்சொல்ல ரெண்டு "a" போடுறாப்போல car க்கு ரெண்டு "a"  போட்டு "kaar"னு எலுதி இங்கிலீப்பீசு டீச்சர்க்கிட்டே ஒதைத்தான் வாங்குவான்.

# ஆங்கிலமே பிராதன மொழியாக புழங்கி வரும் அமெரிக்கா போன்ற நாடுகளில் கூட மாணவர்கள் இன்னொரு மொழிக்கற்க வேண்டும் என "அறிவுறுத்தி" மதிப்பெண் கிரெடிட் கொடுக்கிறார்கள், இதனால் அமெரிக்க குழந்தைகள், ஸ்பானிஷ்,,சீனம், ஃபிரெஞ்ச் என எடுத்துப்படிக்கவும் செய்கிறார்கள், தமிழில் ஆர்வம் உள்ள தமிழ்ப்பெற்றோர்கள் வீட்டில் தமிழும் பேசிய மாரி ஆச்சு குழந்தைக்கு அந்நிய மொழி கிரெடிட் வாங்கிக்கொடுத்த மாரியும் ஆச்சுனு தமிழையே பள்ளியில் அந்நிய மொழி(இரண்டாவது மொழி) என பதியவும் செய்கிறார்கள்.

அப்போ வெள்ளைக்காரனுக்கு தெரியதா ரெண்டு மொழி படிக்க வச்சா குழந்தைகள் கஷ்டப்படும்னு? உண்மையில் ரெண்டு மொழி படிச்சா மொழி ஒப்பீட்டின் மூலம் மொழிக்கற்றல் திறன் கூடவே செய்யும்!

அவர்களை விட எல்லாம் பெரியவர் நம்ம ஆசான் செயமோகர் ஏன்னா அவர் ஒரு வில்லேஜ் மொழிஞானி :-))

# # தமிழே படிக்காம,தமிழ் எழுத்துருவே தெரியாம,தமிழ்வாசிக்க தெரியாத ஒரு தலைமுறை ஒன்னு உருவாகிட்டு இருக்கு,அவங்களை எல்லாம் வாசிக்க வைக்கனும்னா ,வருங்காலத்திலும் தமிழில் நல்ல நூல்கள் வரவேண்டுமெனில் 'தமிங்கிலீஷ்" எழுத்துரு தான் அருமருந்து என்கிறார்,

தமிழே வாசிக்கத்தெரியாதவங்களுக்கு தமிழ் வொக்காபுலரி (சொல்லறிவு)மட்டும் இருக்குமா?

பேச்சு வழக்கில் சில நூறு தமிழ்ச்சொற்கள் மட்டுமே பயன்ப்படுத்திட்டு இருப்பாங்க, வாசிக்கும் போது தான் பலப்புதிய சொற்களும் அறிமுகம் ஆகும், தமிழ வாசிச்சுட்டு இருக்கும் நம்ம மக்களுக்கே திருக்குறள் புரிய ஒரு விளக்க உரைத்தேவைப்படுது, காரணம் என்னனா நாம மொழியில இருக்க பல சொற்களை பயன்ப்படுத்தாம விட்டதால் அதன் பொருள் என்னனு தெரியாம போயிடுச்சு, தமிழ் எழுத படிக்க  தெரிஞ்சவங்க எல்லாம் அதனால தான் பல சங்க இலக்கியங்கள், ஏன் சில நூற்றாண்டுக்கு முன் வந்த இலக்கியங்கள் கூட படிச்சு புரிஞ்சுக்க கஷ்டப்படுறாங்க., தமிழ் நல்லா தெரிந்தவங்களோட நிலைமையே இதான், அப்படி இருக்கும் போது தமிழ் அட்சர சுத்தமாக தெரியாதவங்க எப்படி 'டிரான்ஸ்லிட்டரேஷனில்" இருந்தால் மட்டும் படிச்சு புரிஞ்சுப்பாங்களா?, ஒவ்வொரு சொல்லுக்கும் தமிழ் - தமிழ் அகராதி தேவைப்படும், அப்படி மெனக்கெட்டு படிப்பாங்களா என்ன?

ஆங்கிலத்தில் இப்படி ஏகப்பட மொழிக்கலப்பு இருப்பதால் ,ஆங்கில எழுத்துருக்களை வாசிக்க தெரிஞ்சாலும் பொருள் புரிய ஆங்கில அகராதி தேவைப்படுது, அமெரிக்கன், பிரிட்டீஷ் என அம்மக்களுக்கும் அகராதி தேவைப்படுது, நாம் பெரும்பாலும் தமிழ் -தமிழ் அகராதி இல்லாமலே சமகால தமிழ் இலக்கிய படைப்புகளை படிச்சிடுவோம், அப்படி சமகால தமிழில் புரியிறாப்போல எழுதினால் மட்டுமே போணியாகும் ,அத விட்டுட்டு யாருக்கும் புரியாம எழுதிட்டு ,எழுத்துரு மாற்றினால் எல்லாரும் வாசிப்பாங்கனு சொல்வதெல்லாம் ,மொழியின் பயன்ப்பாட்டுவியல் புரியாத கத்துக்குட்டித்தனம்!

எனவே தமிழே படிக்காத,தமிழ் 'வோகாபுலரி(சொல்லறிவு)" இல்லாத ஒருத்தன் அகராதி வச்சு "டிரான்ஸ்லிட்டரேஷன் தமிழ்" படைப்பை  படிச்சு புரிஞ்சுக்க விரும்ப மாட்டான் ,அதுக்கு பேசாம நேரடியாக நல்லா புரியுற இங்கிலீஷ் புக்க படிக்கலாம்னு போயிடுவான் அவ்வ்! இப்போ ஆசான் புக்கு கூட சரியா விக்காம போக காரணம் மக்களுக்கு தமிழ் வாசிக்க மறந்து போனதால் இல்லை, என்னா சொல்ல வரார்னே பிரியலை, அதுக்கு ஒருத்தங்க "அருஞ்சொற்பொருள்" விளக்கம் கொடுக்க வேண்டியிருக்கு அவ்வ்!


#//இந்தியாவில் உள்ள மொழிகள் அனைத்தும் ஆங்கில எழுத்துருக்களில் எழுதப்பட்டால் பெரும்பாலான மொழிகளை மிகச் சில நாட்களிலேயே வாசித்துப் புரிந்துகொள்ள முடியும். தென்னக மொழிகளைப் பிரிப்பது அவற்றின் வேறுபட்ட எழுத்துருக்கள்தான். மற்றபடி அவை 70% ஒன்றே.//

மிகச்சில நாட்களில் என்றால் ஒரு வாரம் ,பத்துநாள் போதுமா?

ஆசானுக்கு இங்கிலீப்பீசு நல்லாதெரியும் தானே ,அப்போ ஃபிரென்ச்,ஜெர்மன் ,ஸ்பானிஷ், எல்லாம் ஒரு சில நாட்களில் வாசிக்க கத்து இருக்கலாமே அவ்வ்!

ஆசான் ஆசைப்படுறா போல தமிழ் வரிவடிவம் தேவையில்லைனு நம்ம முன்னோர்களும் நெனைச்சிருந்தால் இன்னேரம் எல்லாரும் தேவநகரில இந்திப்போல தான் எயுதிக்கினு இருந்திருப்போம், ஒரு வேளை ஆரம்பத்துல எல்லாம் தேவநகரில எயுதுங்க, இந்திய மொழிகள் பல்வேறு இருந்தாலும் எல்லாம் வாசிக்க பழகிடும், மொழி வழியா இணைஞ்சி ஒருங்கிணைந்த அகன்ற பாரதம் உருவாகிடும்னு  சொல்ல தான்  ஆசைப்பட்டிருப்பாரோனு நினைக்கிறேன் ,ஏற்கனவே இந்துத்வா நாத்தம் அதிகம் அடிக்குதுனு பொலந்துக்கிட்டு இருக்காங்க எனவே பேசாம இங்கிலீப்பீசுனு சொல்லி ஆரம்பிப்போம் எதுக்கு அன்னிய மொழியின் வரிவடிவம்னு சொல்லிட்டு எவனாவது டீவில விவாதம் ஆரம்பிச்சு கூப்பிடுவாங்க  அங்கே போய் அப்போ சுதேசமான மொழி தேவநகரி அதை வச்சிக்கிட்டா என்னனு  திரிய பத்த வைக்கலாம்னு ஒரு மாஸ்டர் பிளான் போட்டிருப்பார் ஏமான் :-))
------------------------

இந்திய மொழிகள் அந்நிய தாக்கத்தினை எப்படி சமாளித்தது?

மலேசியாவில் , லத்தின்(ஆங்கில) எழுத்து வடிவில் மலாய் மொழியை எழுதுகிறார்கள் ,அதே போல தமிழில் செய்தால் என்ன எனவும் ஆசான் கேட்கிறார்,அதற்கு மலேசிய வரலாறும் கொஞ்சம் பார்க்க வேண்டும்,

மலேசியாவை எப்படி ஆங்கிலேயர்கள் பிடித்தார்கள் என்பதை விளக்கும் ஒரு வரலாற்று நூல், சிங்கப்பூரை நிர்மாணம் செய்தவரின் வாழ்க்கை வரலாற்றின் மூலம் அறியலாம்,

(சிங்கப்பூரை உருவாக்கிய தாமஸ் ஸ்டாம்ஃபோர்ட் ரேபேல்ஸ்)

அந்நூல்,

Sir Thomas Stamford Raffles
Kt., LL.D., F.R.S.
Founder of Singapore
1819

By
J. A. Bethune Cook
Author of " Sunny Singapore,"
" Apa Suka, Tuan,"

மலேயா(மலாக்கா) தீபக்கற்பத்தில் அப்பொழுது பெரும்பாலும் வசித்தவர்கள் ,இந்து, புத்தமத பழங்குடியின மக்களே, அவர்களில் பட்டாக்கா பகுதியை சார்ந்த சில இனக்குழுக்களுக்கு நரமாமிசம் சாப்பிடும் வழக்கு கூட இருந்துள்ளது, இப்பொழுது மலேசியா சிங்கப்பூரில் இருப்பவர்கள் எல்லாரும் பூர்வீக மக்களே அல்ல, அக்காலத்தில் பழங்குடியின மக்கள் பலரை கொன்றுவிட்டு சீன வழி வந்தவர்களை குடியேற்றினார்கள்,அப்படி குடியேற்றப்பட்டவர்களில் இந்தியர்களும் அடக்கம்.

முதலில் உள்ள புகுந்தது போர்ச்சுகீசியர்கள் தான் சுமார் 50 பேரை வச்சிக்கிட்டே ,கொஞ்சம் இடங்கொடுங்க வியாபாரம் செய்துட்டு போயிடுவோம்னு சொல்லிட்டு முகாம் போட்டு  ,நைட் கோட்டை சுவர் ஏறிக்குதித்து எல்லாரையும் கொன்று மலேசியாவை
(மலாக்கா) புடிச்ச கதை தெரிய வரும்:-((

கம்போடியாவை ஆண்ட ஶ்ரீவிஜயா வழிவந்த மன்னர்கள் தான் மலேயாவை ஆண்டது, அவனை ராஜேந்திரச்சோழன் வென்றதுலாம் வெள்ளைக்கரன் வரும்  முன்னரே நடந்தது, அப்போவே இந்து மதம்,புத்த மதம் பரவி இருந்தது, இடத்திற்கு ஏற்ப ,pallava grantham,bali,brahmi,malay,ஜரவானிஸ்,சீனம் கலந்து பேசிக்கொண்டிருந்தார்கள், எழுத பெரும்பாலும் பல்லவ கிரந்தம், பிரம்மி ,native Rencong script,வடிவே பயன்ப்பாட்டில் இருந்தது.,பின்னர் டச்சு மற்றும் வெள்ளையர் காலனி அமைத்து ,இந்திய &சீனர்களை,குடியேற்றி இன்னும் பல்குழு இனமக்களாக மாற்றிய  நிலையில்,வெள்ளையருக்கு முன்னரே இஸ்லாமும் உள்ள புகுந்திருந்தாலும், வெள்ளையர்களின் சமகாலத்தில் நன்கு பரவி  ஆதிக்கம் செலுத்த துவங்கியது. இஸ்லாமிய பரவலின் போது அரபிய எழுத்தில் மலாய் மொழியை எழுதிய முறைக்கு jawi என்று பெயர் .மக்களிடையே மத மற்றும் இன அடிப்படையில் ஒற்றுமை இல்லாத நிலையில் வெள்ளைக்காரன் எல்லாத்திலவும் ஆங்கிலம் புகுத்தி ,லிபிலவும் ஆங்கிலம் புகுத்திட்டான். இப்பவும் மலேசியாவில் அரபி வடிவ ஜாவியும் புழக்கத்தில் உள்ளது, தேர்வுகளையும் அம்மொழியில் எழுதலாம்.

இலத்தின் எழுத்து ஆதிக்கம் செலுத்த காரணம் எந்த இனக்குழுவோட மொழியின் லிபியையும் முன்னிலைப்படுத்த மற்ற இனக்குழுக்கள் விரும்பாததே. மேலும் மலேசியாவில் பூர்வீக மொழியில் பெரியளவு இலக்கியம் ,கல்விலாம் அப்போ வளவே இல்லை, வெள்ளைக்காரன் காலத்தில் தான் நாடே முழுசா உருவாச்சு எனவே ,வெள்ளைக்காரன் என்ன செய்தாலும் ஏற்றுக்கொண்டார்கள்,இந்தியாவில் அப்படியில்லையே!

அதக்காலத்தில இந்தப்பக்கம் பர்மாவில இருந்து மலேயா,சிங்கப்பூர், ஜாவா,சுமத்தரா, வியட்நாம்,கம்போடியா என எல்லாம் சேர்த்து ஒட்டுமொத்தமா மலாக்கா தீவுக்கூட்டம்னு தான் குறிப்பிட்டார்கள், மொத்தமா 20 லட்சம் மக்கள் தொகை தான்,காலனி ஆட்சி அமைந்து ஓரளவு ,நவீன மலேசியா,சிங்கப்பூர் உருவான பின் மக்கள் தொகை வெறும் 100 ஆண்டுகளில் வேகமா வளர்ந்து 3.5 கோடி ஆச்சாம்,  ஆனால் இந்தியாவில வெள்ளைக்காரன் வரும் போதே கோடிக்கணக்கில் மக்களும், பல மொழிகளும்,அதுக்கு இலக்கணமும் இருந்துச்சு.எனவே ஆட்சிப்புடிக்க வந்தவர்களால் ரொம்ப ஆதிக்கம் செலுத்தி மாற்ற முடியலை,மொழி வளமும் வளர்ச்சியும் இல்லாத மலாய் மொழி  ஆங்கில எழுத்துருக்கு மாறியதை  உதாரணம் காட்டி பழமையான   தமிழை இப்போ மாற்றஞ்செய்ய துடிக்கிறார் ஆசான் அவ்வ்.

தமிழ் மொழி என்று இல்லை எந்த இந்திய மொழியையும் வெள்ளைக்காரர்களால் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை, காரணம் பெரும்பாலான மக்களுக்கு அக்காலத்திலேயே வட்டார மொழி அறிவு பெருகி இருந்தது,மேலும் நிர்வாகமும் மொழி சார்ந்து இருந்தது. மேலும் வளமான இலக்கிய் வளம், ஏன் அறிவியல் நூல்களுமே உண்டு,பூர்வீக மொழி கல்வி கட்டமைப்பு எல்லாம் இருந்தது. உலகின் மிக பழமையான பல்கலைகழகமே நாளந்தாவில் இருந்தது என்னும் போது இந்தியாவில் எப்படி வெள்ளைக்காரன் லிபிய புகுத்த முடியும்?

மிக நீண்ட காலம் ஆண்ட முகமதிய ஆட்சியாளர்களாலேயே இந்திய முழுக்க "அரபிய " லிபிய கொண்டு வர முடியவில்லை.  நிர்வாக மொழி என அரண்மனையில் பாரசீகமும் மக்களிடையே அந்தந்த வட்டார மொழியுமே செல்லுபடியாச்சு.

இதற்கு மிக முக்கியமான காரணம் என்னவெனில் இந்திய மக்களுக்கு மொழி,இனம் ,மதம் என்றால் கொஞ்சம் பெருமிதம் உண்டு, எனவே  தன்மானம் பொத்துக்கிட்டு வந்துடும், என்ன தான் அடிமையா இருந்தாலும் எப்படி அதுல இன்னொருத்தன் கைய வைக்கலாம்னு கிளம்பிடுவாங்க, இல்லைனா இந்தி திணிப்புனு சொல்லி எல்லாம் ஆட்சிய புடிக்க முடியுமா?

இது ஏதோ தென்னாட்டுல நடக்கிற கூத்து,நம்மாட்கள் தான் உணர்ச்சி வசப்படுறாங்கனுலாம் சொல்லிட முடியாது, காந்தி ,தீவிரமாக மேற்கத்திய கல்வியை எதிர்த்தும்,பலாகங்காதர திலகர்  மத உணர்வை முன்னிறுத்தி பிள்ளையார் கையில தூக்கிட்டு மொழி, இனம்,மத உணர்வை  பயன்ப்படுத்தி தான் வெள்ளையனை எதிர்த்து போராட மக்களை திரட்டினாங்க, ஆனால் என்னமோ அவங்க எல்லாம் அரசியல் போராட்டம் மட்டுமே நடத்தி சாதிச்சுட்டதாவும், நாம தான் மொழி வெறியர்களாகிட்டாப்போலவும் முற்போக்கு இலக்கியவியாதிகள் கற்பித்துக்கொண்டு ,ஆங்கிலத்தில் எழுத வைப்பதை புரட்சினு நினைக்கிறாங்க அவ்வ்
---------------------------------------

தமிங்கிலீஷ் தட்டச்சு எளிதாக்குகிறதா தமிழை?


(Tamil-99 keyboard layout)

நேரடியாக இக்கேள்விக்கு பதில் எளிதாக்குகிறது எனலாம்,அப்புறம் என்ன அதையே பயன்ப்படுத்துகிறோம்,அதையே "கற்றலுக்கும்" எழுத்துருவாக' பயன்ப்படுத்திவிட்டு போய்விடலாமே என செயமோகத்தனமாக முடிவுக்கு வருவதற்கு முன்னர் சற்றே சிந்திக்க சில குறிப்புகள்,

ammaa= அம்மா , என ஃபொனடிக் அடிப்படையில் தட்டச்சு செய்வதை டிரான்ஸ்லிட்டரேஷன் தட்டச்சு என்பார்கள், ஆனால் இம்முறை எளிதாக தெரிந்தாலும் ,நமது உழைப்பை உறிஞ்சக்கூடியது,
எப்படி எனில் நேரடி தமிழ் விசைப்பலகை இருக்குமெனில் 3 விசை அழுத்தங்களில் "அ+ம்+மா" என முடிக்கும் வேலைக்கு , "a+m+m+a+a" என அடிக்க "5" விசை அழுத்தங்களை நாம் கொடுக்க வேண்டியதிருக்கு.

எனவே இம்முறை மிகச்சிறிய  தமிழ் தட்டச்சு வேலைக்கு தான் பயன்ப்படும்,  பின்நவீன எலக்கியவியாதிகள் போல சுமார் 500 பக்கங்கள் தட்டச்சு செய்ய வேண்டுமெனில் ... தமிங்கிலீஷில் தட்டச்சு செய்வதற்குள் விரல் எல்லாம் ஓரங்க்குலம் தேய்ந்து போனாலும் போய்விடக்கூடும் அவ்வ்!

தொழில்முறையில் தமிழ் தட்டச்சு செய்ய TAM,TAB,TASCI, போன்ற விசைப்பலகை லே அவுட்டினைத்தான் பயன்ப்படுத்துகிறார்கள், இவற்றில் பல "கீ"களுக்கு நேரடியாக தமிழ்ச்சொற்கள் ஒதுக்கப்பட்டிருக்கும், எனவே "க" த என எல்லாம் அடிக்க தமிங்கிலீஷ் தட்டச்சு போல ரெண்டு மூன்று ஆங்கில எழுத்தை அடிச்சு நேரம் செலவிட தேவையிருக்காது,மேலும் SHIFT, CTRL  போன்றவற்றை எல்லா எழுத்துக்கும் புடிச்சு அமுக்கிட்டிருக்க வேண்டாம். எனவே நேரமும் ,உழைப்பும் மிச்சம் ஆகும்.

அதாவது இப்பொழுது தமிங்கிலீஷில் தட்டச்சு செய்யும் நாம எல்லாம் சுமார் 100 எழுத்துக்கள் கொண்ட ஒரு தமிழ் பத்தியை தட்டச்ச 200-300 ஆங்கில எழுத்துக்களை அமுக்கிக்கொண்டிருக்கிறோம் அவ்வ்!

இது போல ஏகப்பட்ட எழுத்துக்களை அமுக்கி ஒரு படைப்பை உருவாகுவதற்குள் அயர்ச்சி அடைந்து ,ஸ்ஸ்ப்பாடா என நொறைத்தள்ளிடும், இதெல்லாம் பொழுதுப்போக்காக தமிழில் விளையாடுபவர்களுக்கு தான் பயன்ப்படும், நீண்ட காலப்பயன்ப்பாட்டுக்கு ' தலைவலி போய் திருகு வலியை கொடுக்க வல்ல தட்டச்சு என்பதே உண்மை.

தொழில்முறை தமிழ் தட்டச்சு போன்று மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து விசைப்பலகை அழுத்தல்களை குறைத்து தட்டச்சு செய்வதை எளிமையாக்க ஒருங்குறியில் உருவான ஒரு விசைப்பலகை அமைப்பு இல்லையா எனக்கேட்கலாம், இருக்கு!

உண்மையான இணையத்தமிழ் ஆர்வலகள் பலர் கூடி "தமிழ்-99" என ஒரு தமிழ்விசைப்பலகை அமைப்பினை உருவாக்கியுள்ளார்கள், அதுவே எளிய ,சிறந்த கணினித்தமிழ் உள்ளீடு அமைப்பாகும். இம்முறையில் எழுத்துக்கள் உருவாக்கம் தமிழ் எழுத்திலக்கண முறைப்படியே அமையும்,தமிழ் எழுத்துக்கள் ,தமிழ் எழுத்துக்களாகவே மனதில் பதியும்,எனவே நமக்கும் தமிழ் அறிவு மட்டுப்படாது.

தமிங்கீலீஷ் தட்டச்சு எளிமையாக ,வேகமாக தட்டச்சு செய்ய உதவுவது போல தெரிவதே ஒரு பிரமை தான், நமது நேரத்தையும்,உழைப்பையும், ஏன் தமிழ் சிந்தனையையும் மட்டுப்படுத்தக்கூடியதே அம்முறை.

பீட்சா, பர்கர் எல்லாம் உணவு தான் ,சாப்பிட்டால் பல் சுலுக்குவதில்லை, ரொம்ப எளிதாக சமைக்கக்கூட தேவையில்லாமல் ஆர்டர் கொடுத்தால் வீட்டுக்கே கொண்டு வந்திடுவாங்க, இன்னும் கொஞ்ச நாள் போனால் சந்தை பிடிக்க ஊட்டிவிட்டுக்கூட போவாங்க!!!, அடடே ரொம்ப எளிதாக இருக்கே என மூன்று வேளையும் சாப்பிடக்கூட நமக்கு ஆசையாக இருக்கலாம்,ஆனால் அதையே மூன்று வேலையும் முக்கினால் 'ஜங்க் புட்" உடம்புக்கு ஒத்துக்காது தவிர்க்கணும் என மருத்துவர்கள் முதல் பொதுவான உடல்நல விரும்பிகள் வரை சொல்வதேன்?

எனக்கென்னமோ ஆசானுக்கு டாம்,டேப் ,டாஸ்கி முறையில் ஶ்ரீலிபியில் தட்டச்சு செய்து புத்தகம் உருவாக்கி கொடுப்பவர் "ஏமானே ,ஒரு பக்கத்துக்கு கொஞ்சம் பைசாவ கூட்டிக்கொடுங்க , விலைவாசிலாம் ஏறிப்போச்சுங்க ஏமானேனு" கேட்டிருப்பாரோ, என்னவோ?, எனவே எதுக்கு இந்த முறைலாம் பேசாம "தமிங்கிலீஷ்" தட்டச்சு போலவே கற்பது முதல் எல்லாத்தையும் மாத்திட்டால் பதிப்பகத்துறையிலும் தமிங்கிலீஷ் முறையே முழுக்க பயன்ப்பாட்டிற்கு வந்திடும் ,அப்பாலிக்கா நாமே தெனம் 10 பக்கம்னு தட்டச்சு செய்து  ஒரு 500 பக்கம் பொஸ்தவத்த வெளியிட்டுவிடலாம் காசு மிச்சம் ஆகிடும்னு நினைச்சிருக்கலாம் , கணக்கு பண்ணாமல் எதுலவும் கமிட் ஆக மாட்டார் நம்ம ஏமான் அவ்வ்!

வேகமாக சோர்வின்றி,நிறைய தட்டச்சு செய்ய வேண்டுமெனில் தமிழ் -99 முறையே சிறப்பானது, அதுக்குறித்து மேலும் அறிய,

சுட்டிகள்:

# http://tamil99.org/

# http://blog.ravidreams.net/tamil99/

# http://blog.ravidreams.net/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D99-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/

ஒரு முழுமையான மொழி என்பது எழுத்துருவும், வாசிப்பும்(பேச்சு ,ஒலி) எனக்கொண்டிருக்க வேண்டும், எனவே அதில் சீர் திருத்தம் என செய்யப்பட்டால் ,இரண்டுக்கும் நன்மை பயக்க வேண்டும்,ஒரு மொழிக்கென சிறப்பாக தனித்து உருவாகியுள்ள எழுத்தை அழித்துவிட்டு செய்ய முற்படும் சீர்திருத்தம் மேம்பாடே அல்ல ,பின்நோக்கி செல்வது ஆகும்,

 ஒரு மொழி என்பது முதலில் ஒலி வடிவாக தோன்றி பின்னர் ஒலிக்குறிப்புக்கு "வடிவக்குறிப்பாக" எழுத்துருப்பெறும், இவ்வாறு நிகழ பலக்காலம் ஆகும். ஒரு மனிதக்கூட்டம் ஓரிடத்தில் நிலைத்து வாழ்ந்து புழங்கி வந்தால் மட்டுமே இது சாத்தியம் ஆகும், நாடோடி மொழிகளுக்கே எழுத்து வடிவம் இல்லாமல் , ஒலிவடிவத்தில் இருக்கும், அப்படி எழுத நினைத்தாலும் சென்ற இடமெல்லாம் உள்ள எழுத்தில் எழுதிக்கொள்ளத்தான் முடியும்,தமிழ் நீடித்து நின்று வளர்ந்த மொழி மண்ணோடும், கலாச்சாரத்தோடும் இணைந்த மொழி, தமிங்கிலீஷில் எழுதினால் அம்மொழி தமிழ் மண்ணுக்கு சொந்தமென சொல்லும் உரிமையை தான் இழக்க நேரிடும்!

தமிழ் மொழியில் நீட்டலும் ,மழித்தலும் செய்து சீர்த்திருத்தம் செய்ய நினைத்தால் இம்மொழியின் "உட்க்கூறுகளை" கொண்டு தானே செய்ய வேண்டுமே ஒழிய ,இன்னொரு மொழியின் உட்க்கூற்றினை பிடுங்கி இங்கே நடுவதல்ல!

ஆரம்பத்தில் கொஞ்சம் தடுமாற விட்டாலும் பின்னர் கைவலிக்குறைக்கும் முறை, ஆரம்பத்தில் இதுல கொஞ்சம் நாள் வண்டி ஓட்டிவிட்டு , அப்புறம் மறந்துப்போச்சேனு விட்டுப்புட்டேன், இனிமே ஆசான் செயமோகர் புண்ணியத்துல மீண்டும் தமிழ் -99 கரைக்கு ஒதுங்கிடலாம்னு பார்க்கிறேன் அவ்வ்!
------------------------------

தமிழ் மொழியின் அச்சு வரி வடிவ வரலாறு!

இப்போ கொஞ்சம் பழங்கதையும் பார்ப்போம்,

#  இந்தியாவுக்கு கடல் வழி கண்டுப்பிடிச்சு வந்த முதல் ஐரோப்பியரான வாஸ்கோடகாமா  கி.பி 1498 இல் கோழிக்கோட்டிற்கு வந்தார். வாஸ்கொட காமாவுக்கு வழி ஒன்னும் தானா தெரியலை ,அப்போ மலபார் பகுதியில் இருந்து ,அரேபியா வழியா போன ஒரு இஸ்லாமிய வியாபாரி தான் , எங்கோ நடுவில் கடல்பயணத்தின் போது ,வாஸ்கோடகாமை சந்தித்து வழிக்காட்டி உதவியபடியே சொந்த ஊருக்கும் திரும்பினார்னும் சொல்வாங்க.

எப்படியோ வந்து சேர்ந்த அவர் சும்மா ஒன்னியும் வரலை வரும் போதே மொழி வல்லுனர்கள் எல்லாம் கூட்டாந்தார் ,அவங்கலாம் இந்திய மொழிய ஆராய்ந்து கத்துக்க ஆரம்பிச்சாங்க ,அப்படிக்கத்துக்கிட்ட மொத இந்திய மொழியே "மலபார்" என அப்பொழுது சொல்லப்பட்ட மலபார் தமிழ் தான்.

அதுக்கு காரணம் கோழிக்கோடு பகுதில கரையேறியது,ஆனால் அதே நேரம் கோவாவிலும் ஒரு கூடாரம் போட்டாச்சு.

படம்:



St Francis Church கி.பி.1510 இல் கட்டப்பட்டது இங்கு தான் கி.பி.1524 இல் இறந்த வாஸ்கோட காமாவின் உடல் புதைக்கப்பட்டு, பின்னர்,கி.பி 1538இல் தோண்டியெடுக்கப்பட்டு போர்ச்சுகல்லுக்கே மீண்டும் கொண்டு செல்லப்பட்டது, இப்பொழுது ஒரு நினைவு மண்டபம் மட்டும் உள்ளது.

மேல் விவரங்களுக்கு இங்கே செல்லவும்:
சுட்டி:

http://stfranciscsichurch.org/church/st-francis-csi-church


(தம்பிரான் வணக்கம் அட்டை-வலப்பக்கமா குந்திக்கிறவர் தான் ஹென்றி)

Henrique Henriques (1520-1600) என்ற போர்ச்சுக்கீசிய மொழி ஆய்வாளர் , தமிழை கத்துக்கிட்டு , போர்ச்சுகல்- தமிழ் அகராதிய ,(Cartilha – First Tamil book 1554) லத்தின் வரிவடிவில் சிறு புத்தகமாக கி.பி 1554 இல் லிஸ்பனில்  Vincente de Nazareth, Jorge Carvalho and Thoma da Cruz ஆகியோர் மூலம் அச்சடித்தார். இவர் அப்பொழுது தூத்துக்குடி அருகே ஒரு தமிழ் பல்கலைகழகம் கூட அமைக்க வேண்டும் என ,போச்சுக்கல் அரசுக்கு பரிந்துறையும் செய்தாராம்.




(Cartilha – First Tamil book 1554)

இந்திய மொழிகளிலேயே முதன் முதலில் அச்சு வடிவம் கண்ட முதல் மொழி தமிழ் ஆகும்.

அதன் பின்னர்,கி.பி 1556 இல் இந்தியாவின் முதல் அச்சகம் , தற்போதைய கேரளாவில், கொல்லம் அருகே அம்பளக்காடு எனுமிடத்தில் அமைக்கப்பட்டது என்கிறார்கள். ஒரு சிலர் கோவாவில் அமைக்கப்பட்டது என்கிறார்கள்.

பின்னர் கி.பி 1557 இல் Juan Gonsalves. என்ற ஸ்பானிஷ் பாதிரி ,தமிழுக்கான முதல் "அச்சு எழுத்துக்களை செதுக்கி" உருவாக்கினார்.



இவ்வெழுத்துக்களை வைத்து Henrique Henriques  கொல்லத்தில் உருவாக்கப்பட்ட அச்சகத்தில் தம்பிரான் வணக்கம் என்ற முதல் தமிழ் (மலபார் தமிழ்)அச்சு புத்தகத்தினை அச்சிட்டு வெளியிட்டார்.

இந்நூல் "‘Doctrina Christam en Lingua Malauar Tamul " என இலத்தின் வரிவடிவில் வந்த நூலின் மொழிப்பெயர்ப்பு, கிருத்துவ வழிப்பாட்டு பாடல்கள் பிரேயர்கள் கொண்டது.


அதன் பின்னர் 1559 இல் மலையாள மொழியும் தமிழும்(மலபார் மலையாளம்) கலந்த Doctrina Christam’ alias ‘Kiricittiyani vanakkam’ என்று மொழிப்பெயர்க்கப்பட்ட நூலும் அச்சடிக்கப்பட்டது.

பின்னர் 1586 இல் தூத்துக்குடி புன்னக்காயலில் ஒரு அச்சகம் அமைக்கப்பட்டு ‘Flos Sanctorum’ (Punitar varalaru of 669 pages) புனிதர் வரலாறு என்ற நூல் அச்சடிக்கப்பட்டது, இந்நூல் தான்  முதன் முதலில் தமிழ்நாட்டில் அச்சடிக்கப்பட்ட நூல் ஆகும்.

(‘Flos Sanctorum’ (Punitar varalaru -தமிழ்,of 669 pages)


(‘Flos Sanctorum’ (Punitar varalaru of 669 pages,ஜெர்மானிய மொழிப்பெயர்ப்பு-1672)

நாடு பிடிக்க ,மதம் பரப்ப வந்த ஐரோப்பியர்கள் நினைச்சிருந்தால் இங்க இருக்கவங்களை தாஜா செய்து "லத்தின் வரி வடிவில்" எழுத,படிக்க சொல்லிட்டு போயிருக்கலாம்,ஆனால் அப்படி செய்யாமல் உள்ளூர் மொழியின் மொழி வரி வடிவத்தை மாற்ற விருப்பமில்லாமல் ,நம்ம ஊரு மொழிய கத்துக்கிட்டு,அதுக்கு "type casting " உருவாக்கி,புத்தகம் அச்சடித்து அப்புறமாத்தான் தன் சுயநலத்தையும் காட்டினான், ஆனால் நம்ம ஆசானோ இங்கனக்குள்ள குந்திக்கிட்டு 13 வருசமா டிரான்ஸ்லிட்டரேஷனில் டைப்படிக்கிறேன் நல்லாத்தான் இருக்கு , எல்லாரும் அப்படியே எழுதுங்கடானு "இவரே தமிழின் ஏகபோக பிரதிநிதி" போல தீர்ப்பு எழுதுறார் அவ்வ்!

என்ன கொடுமை சார் இது!
----------------------------

பின்குறிப்பு:

# தப்புத்தப்பா தமிழில் எழுதி தமிழைக்கொலை பண்ணிட்டேன் என பொங்கிட்டு  ,பிழை  திருத்தம் சொல்ல வராதிங்க ,ச்சும்மா தமாசுக்கு வேண்டும்னே மெட்ராஸ் பாஷைய கலந்துக்கட்டி எழுதினேன் :-))

# தகவல் மற்றும் படங்கள் உதவி,

# https://tidsskrift.dk/index.php/fundogforskning/article/view/1298/2076

# http://stfranciscsichurch.org/church/st-francis-csi-church

# http://karkanirka.org/2010/04/14/first_tamil_book/

# http://pazhayathu.blogspot.in/2009/11/first-printing-press-in-indiathe.html

# http://www.nathansholidayhome.com/sightseeing-in-and-around-fort-kochi/

மற்றும் தி இந்து, விக்கிப்பீடியா, & கூகிள் ,இணையத்தளங்கள்,நன்றி!
-------------------------

Sunday, March 31, 2013

என்ன கொடுமை சார் இது-12



(இந்த கொடுமைய பத்திலாம் மனித உரிமை கவுன்சிலில் புகார் கொடுக்க முடியாதா,அவ்வ்,ஹி...ஹி)

# இது தப்பா சார்?

(ஓர் அரசு அலுவலகத்தில் ஓர் அதிகாரிக்கும் ஊழியருக்குமிடையே நடைப்பெற்ற கற்பனை உரையாடல்)

அதிகாரி சார் ,கொஞ்சம் நில்லுங்க ,எனக்கு ஒரு டவுட்டு ,அதை உங்களால மட்டும் தான் கிளியர் செய்ய முடியும்..

என்ன கோந்த்சாமி ,காலையிலே உனக்கு டவுட்டா, உன் கடமை உணர்ச்சியை நினைச்சா ,கண்ணு கலங்குது, கேளு..கேளு, உன்னப்போல ஒரு சின்சியர் பெர்சனுக்கு உதவலைனா அப்புறம் என்ன அதிகாரி நான்.

நீங்களே சொல்லுங்க சார், ரேஷன் கடை கெவர்மெண்டு கடைத்தானே?

ஆமாய்யா அதுல என்னா சந்தேகம்?

அப்போ கெவர்மெண்டு கடையில நான் பொருள் வாங்கினா தப்பா சார்?

எவன் சொன்னான்,தப்பேயில்லை.

ஆபிசுக்கு வரும் போதே  வழியில ரேஷன் கடையில வீட்டுக்கா நான் வாங்கின சக்கரைய ஆபீஸுக்கு எடுத்து வந்தா தப்பா சார்?

ச்சே ...ச்சே தப்பேயில்ல ஒனக்கு நல்ல குடும்ப பொறுப்பு இருக்குபா, குட் கீப் இட் அப்!

அந்த சக்கரையில டேஸ்ட் பார்க்க கொஞ்சம் எடுத்து வாயில போட்டுக்கிட்டா தப்பா சார்?

இதுல என்ன தப்பிருக்கு ,நீ காசுக்கொடுத்து வாங்கின சர்க்கரை...நீ கொஞ்சம் வாயில எடுத்து போட்டுக்கிட்டா என்ன ,மூக்கில போட்டுக்கிட்டா என்ன, எல்லாம் உன் இஷ்டம்யா.

அப்புடி சொல்லுங்க சார், உங்களை தவிர இங்கே யாருக்குமே அறிவில்ல சார்.

ஹி...ஹி தாங்க்ஸ் ,ரொம்ப நல்லவன்யா ...அதான் என்னப்பத்தி நல்லா புரிஞ்சு வச்சிருக்க. நீ எதோ வேலை செஞ்சிட்டிருந்த போல ,சின்சியர் கய் ,யூ கேரி ஆன்!

நீங்க உங்க ரூமுக்கு போங்க சார், நான் என் வேலையை ஆரம்பிக்கிறேன்.

(குவார்ட்டர் புட்டியை பேண்ட் பாக்கெட்டில் இருந்து எடுக்கிறார்)

யோவ் என்னய்யா ,வேலையை ஆரம்பிக்கிறேன்னு சொல்லிட்டு ,சரக்க எடுக்கிற? அதுவும் ஆபீஸ் டைம்ல?

சார் சரக்கு கடையை கெவர்மெண்டு தானே நடத்துது?

ஆமாம்...அதுக்குன்னு.

அப்போ சரக்கும் சக்கரைப்போல கெவர்மெண்ட்டு பொருள் தானே...

ம்ம்...ம்ம் அப்படியும் சொல்லலாம்ம்ம்...ஆனா

என்ன நோனா, கெவர்மெண்டு பொருள் தான் சார், நான் வீட்டுக்கு எடுத்து போறதுக்காக வரும் போதே வாங்கிட்டு வந்தேன், காசு கொடுத்து வாங்கின கெவர்மெண்டு பொருளை வச்சிருக்கிறது தப்பா சார்?

ச்சே சே தப்பேயில்ல, ஆமாம் வீட்டுக்கு எடுத்து போகத்தானே ,வச்சிக்க ,வச்சிக்க ....

ஆனால் கொஞ்சமா டேஸ்ட்  பார்க்க வாயில ஊத்திப்பேன்... நீங்களே சொல்லி இருக்கீங்க, நாம காசுக்கொடுத்து வாங்கின பொருளை டேஸ்ட் பார்க்க நாம சாப்பிட்டா தப்பில்லைனு... இப்போ சொல்லுங்க  , இது தப்பா சார்?

ஙே ...நீ டேஸ்ட் பார்க்க ஆசைப்பட்டது இதானா ... சர்க்கரை மேட்டரை சொல்லி சரக்கு மேட்டரை ஓபன் பண்ணி கவுத்துட்டானே ...அவ்வ்.

டேஞ்சரஸ் ஃபெல்லோ இனிமே இவங்கிட்டே உஷாரா இருக்கணும் ,பீ கேர் ஃபுல்!

என்ன சார் என்னமோ சொன்னிங்களே?

நான் என்னைய சொல்லிக்கிட்டேன், வர்ரட்டா!

(ஹி...ஹி ரொம்ப கொடுமையான எதாவது செய்தி சொல்லணும்னு நினைச்சேன் அப்படி எதுவுமே சிக்கலை, அதான் இப்புடி ஒரு மொக்கையை போட்டேன், நம்ம மொக்கையை விட லோகத்திலே பெரிய கொடுமை உண்டுங்களாண்ணா?)

என்ன கொடுமை சார் இது!

--------------------

# வரிவிலக்கு அரசியல்!




சில ஆண்டுகளுக்கு முன்னர், சென்னை அருகேயுள்ள திருக்கழுக்குன்றத்தினை சேர்ந்த பள்ளிமாணவன் "ஹிதேந்திரன்" இரு சக்கர வாகன விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்து ,பின்னர் அவரது உடல் உறுப்புகள் தானமாக கொடுக்கப்பட்டது. இச்சம்பவம் உடலுறுப்பு தானம் குறித்து ஒரு பரவலான விழிப்புணர்வு ஏற்படுத்தியது என்றால் மிகையில்லை.

இதனை மையமாக வைத்து மலையாளத்தில் டிராபிக் என்ற படம் எடுக்கப்பட்டு நல்ல வரவேற்பினை பெற்றது,எப்பவுமே நம்ம ஊரு சரக்குக்கு நம்ம ஊரில் மதிப்பிருக்காது,அதே சரக்கு வெளியூருக்கு போயிட்டு வந்தால் மதிப்பு அதிகமாகிடும்,அதே போல "மலையாள "டிராபிக்" படமும்  தமிழில் "சென்னையில் ஒரு நாள்" என்றப்பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. படமும் சுமாரா இருக்குனு கேள்வி. இதெல்லாம் எல்லாருக்கும் தெரியுமே, இதுல என்ன கொடுமையா இருக்குனு கேட்கிறிங்களா ? இருக்கு .

தமிழில் பெயர் வைத்து,தமிழ் கலாச்சாரத்துடன் உள்ள தமிழ்ப்படங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு தமிழகத்தில் உண்டு. ஆனால் இந்த வரிவிலக்கு சென்னையில் ஒரு நாள் தமிழ்ப்படத்துக்கு கொடுக்கப்படவில்லை.

படத்தின் தலைப்பு தமிழில் தான் இருக்கு ,கதையும் கலாச்சாரச்சீர்கேடாக இல்லை, உடலுறுப்பு தானம்னு நல்ல செய்தி தான், சரி ரீ மேக் என்பதாலா என்றால் ஏற்கனவே பல ரீமேக் படங்களுக்கு வரி விலக்கு கொடுக்கப்பட்டிருக்கு.

படத்தை தயாரித்தது ராதிகா ஷரத்குமாரின் "ரேடான் டீவி" , ஷரத்குமார் இரட்டை இலையில மூன்றாவது இலையா ஒட்டிக்கிட்டிருக்கிற அரசியல் தலைவர், அப்படி இருந்தும் ஏன் கேளிக்கை வரிச்சலுகை இல்லைனு பார்த்தால், ஹி...ஹி படத்தை வாங்கி வெளியிட்டு இருப்பது சன் பிக்சர்ஸ் ,அப்படிப்போடு அருவாள, ஏற்கனவே கழக குடும்பத்தார் தயாரித்த திரைப்படங்களான ஏழாம் அறிவு, ஓகே.ஓகேவுக்கும் கூட வரிச்சலுகை பிரச்சினை உண்டானது. இப்போ சென்னையில் ஒரு நாளுக்கு.

சன் பிக்சர்ஸ் அவர்களின் ஆட்சிக்காலத்தில் ஏகப்பட்ட தில்லாலங்கடிகள் செய்து அரசியல் துஷ்பிரயோகத்தில் ஈடுப்பட்டிருந்தாலும், அதற்காக இப்பொழுது ,உடலுறுப்பு தானம் எனும் ஒரு நல்ல கருத்தாக்கத்துடன் வந்துள்ள சென்னையில் ஒரு நாள் திரைப்படத்திற்கு கேளிக்கை வரி இல்லாமல் செய்வதெல்லாம் ரொம்பவே ஓவர், இப்படத்திற்கு அரசியல் செய்யாமல் விரைவில் வரிச்சலுகை கொடுக்கப்பட்டால் கொஞ்சம் கூடுதல் நாட்கள் ஓடும் வாய்ப்புள்ளது.

(இனியா-மலையாள படங்களில் இயல்பான "திறமையை" காட்டுபவர் சென்னையில் ஒரு நாளிலும் நடித்துள்ளார்)

அரசியல் வாழ்க்கை ஒரு வட்டம் மேல இருப்பவர் கீழ வருவதும்,கீழ இருப்பவர் மேல போவதும் இயல்பே, ஆனால் மேலிர்ந்தவர் கீழ வந்ததும் மேல சென்றவர் பழி வாங்காமல் நடந்து கொள்வதே அரசியல் நாகரீகம்.

அரசியல் நாகரீகம் என்ற சொல்லே வழக்கொழிந்து விடுமோ எனும் நிலையில் தமிழகம் உள்ளதை நினைத்தால் "அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்" என அரசியல் நீதி சொன்ன தமிழகமா இது என கேள்வி எழும்புகிறது!

என்ன கொடுமை சார் இது!

------------------

#காவல் துறை உங்கள் நண்பன்!

சமீபத்தில் உத்திரப்பிரதேசத்தில் எல்லாம் ஹோலி கொண்டாடி இருக்காங்க, அட இந்தியா முழுக்க கூட கொண்டாடினாங்க அதுக்கின்னா இப்போனு கட்டைய போடாம கொஞ்சம் கவனியும் மக்களே,

ஹி...ஹி  வழக்கமா ஹோலிய சாக்கா வச்சு பயப்புள்ளைங்க ,பொண்ணுங்க மேல சாயம் பூசுறேனுனு தடவுறதுலாம் கூட நடக்கும் ,அதெல்லாம் வாலிப வயசு அப்படித்தான்னு விட்றலாம்.

ஆனால் உத்திரப்பிரதேசத்தில் உள்ள மொராதா பாத் நகரை சேர்ந்த "புத் பஜார் தானா காவல் நிலையத்தில்" பணிப்புரியும் சிலப்போலிசாருக்கும் ஹோலி கொண்டாடினா என்னனு ஆசை வந்திருச்சு ,ஆனாப்பாருங்க அன்னிக்கும் அவங்களுக்கு டியூட்டி ,அதுக்குனு ஹோலி கொண்டாடாம விட்ற முடியுமா,சாமி குத்தமாகிடாது? ஒரு தடவை முடிவு செய்துட்டா எங்க பேச்சை நாங்களே கேக்க மாட்டோம்னு உ.பி காவலர்கள் காவல் நிலையத்திலேயே ஹோலி ஹே ஹோலினு கொண்டாடி இருக்காங்க, அடக்கொண்டாட்டம்னா சரக்கு இல்லாமலா, அதுவும் லோக்கல் போலீஸ் ஸ்டேஷன் ஹோலினா வியாபாரிகள் தாராளமா ஸ்பான்ஸ்ர் அள்ளி விட்டிருப்பாங்க, எனவே எல்லாம் இஷ்டத்துக்கு தீர்த்தத்தை பருகிவிட்டு ஆனந்த பரவசமாகி ஸ்டேஷனை விட்டு வெளியில் வந்து "சகலகலா வல்லவனா" குத்தாட்டம் எல்லாம் போட்டுள்ளார்கள், சிலர் சரக்கு புட்டியை தலையில் வைத்து மாங்குயிலே பூங்குயிலேனு இந்தியில் பாடி கெரகாட்டம் எல்லாம் ஆடி அசத்தியுள்ளார்கள்.

உ.பி காவலர்கள் ரொம்ப நல்லவய்ங்களா இருப்பாங்க போல நாம மட்டும் தீர்த்தம் சாப்பிட்டு இன்பம் துய்த்தால் போதுமா நாளைய சமுதாயமாம் இளைஞர்களும் இன்பம் துய்க்க வேண்டாமா என கரிசனத்துடன், அவ்வழியே சென்ற பள்ளி மாணவர்களை கூப்பிட்டு சரக்கு கொடுத்து குடிக்க சொல்லி இருக்காங்க, உ.பி மாணவர்கள் உருப்படாதவர்கள் போல சரக்கெல்லாம் குடிக்க மாட்டோம் ,ஆத்தா அடிக்கும்னு அடம்பிடிச்சிருக்காங்க, ச்சே இளைய சமூகத்துக்கே பெருத்த அவமானம்! இதே நம்ம பயப்புள்ளைகளா இருந்தா "மச்சி இன்னொரு குவார்ட்டர் சொல்லேன்னு ஒன்னுமண்ணா கொண்டாட்டத்தில் அய்க்கியமாகி இருப்பாங்க :-))

ஆனாலும் உல்லாச கடமை தவறாத உ.பி. காவலர்கள் அடிச்சு குடிக்க வச்சிருக்காங்க, ச்சே என்ன ஒரு நல்ல மனசு ,நம்ம ஊருலவும் தான் இருக்காங்களே காவலர்கள் ,நான் காசுக்கொடுத்து தீர்த்தம் சாப்பிட்டு வந்தாலும், வழியில நிப்பாட்டி, ஊது ,வாய தொறனு சொல்லி வாயில கூட டார்ச் அடிச்சு டார்ச்சர் செய்றாங்கய்யா அவ்வ்!

காவல் துறை உங்கள் நண்பன்! என தமிழ்நாட்டில் சொல்லி வாயாலே வடை சுடும் நிலையில், நடைமுறையில் செய்துக்காட்டிய உ.பிக்காவலர்களின் நல்ல எண்ணம் புரியாத "பாப்பரசி" மீடியாக்கள் ,காவலர்களின் குத்தாட்டத்தை எல்லாம் காணொளியாக எடுத்து தொலைக்காட்சியில் போட்டுவிட்டதால் , நல்லிதயம் படைத்த கருணை மிகு காவலர்கள் விசாரணைக்கு உள்ளாகியுள்ளனர்.

நல்லதுக்கே காலமில்லையா, தான் பெற்ற இன்பம் பெறுக இவ்விளைய சமுதாயம் என சரக்கு ஈந்தோரின் நெஞ்சில் ஈட்டியை பாய்ச்சும் கொடுஞ்சமூகத்தினை தட்டிக்கேட்க யாருமே இல்லையா?

அய்யகோ என்ன கொடுமை சார் இது!

செய்தி மூலம்: http://www.dinamalar.com/news_detail.asp?id=678169

நன்றி!
------------------------

# அள்ளு அள்ளு ,தள்ளு தள்ளு!




படத்தில் காண்பது ,சென்னை -கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை NH-45C ஆகும். இந்த இடம் பண்ருட்டி அருகே தென்ப்பெண்ணையாற்றின் அருகே இருக்கும் கண்டரக்கோட்டை(கண்டராதித்த சோழன் கோட்டை என்பதன் திரிபு) என்ற ஊருக்கு அருகில் உள்ளது .இன்னும் நான்கு வழியாக்கப்படவில்லை, அதற்கான டென்டர் விட்டு சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாச்சு. இப்போது இருப்பது இரட்டைவழிப்பாதை தான் , ஆனால் படத்தில் பார்த்தால் மாட்டுவண்டி போகும் மண்ப்பாதை போல இருக்கேனு நினைக்கலாம் ...ஹி ..ஹி உண்மையில மண்ப்பாதையே தான்.

 இங்கு தென்ப்பெண்ணையாற்றில் அரசு மணல் அள்ளும் மையம் செயல்படுகிறது , ஆற்றில் இருந்து மணல் அள்ளி அருகே கரையோரம் கொட்டி வைத்து பின்னர் லாரிகளில் ஏற்றி அனுப்புவார்கள். இவ்வாறு தினசரி பல நூறு லாரிகள் இரவும் பகலும் அனுமதிக்கப்பட்ட அளவை விட மிக அதிக மணல் லோடுடன் இப்பகுதியில் சாலையில் ஏறி இறங்குவதால் இப்பகுதியில் சில நூறு மீட்டர்களுக்கு சாலையே காணாமல் போயிடுச்சு, அவ்வப்போது மண்ணள்ளி போட்டு நிரவி விட்டுவிடுகிறார்கள். அப்படியான மண்சாலையைத்தான் படத்தில் பார்த்தீர்கள்.

மழைக்காலத்தில் நிலமை இன்னும் மோசமாகிவிடும், வாகனங்கள் சேற்றில் சிக்கிவிடும், சிறிய ரக கார்கள் சிக்கி நின்றுவிடும்.  இதுக்குறித்தெல்லாம் யாரும் கவலைப்படுவதாகவே தெரியவில்லை, எப்பொழுதுமே இவ்விடம் புழுதிப்பறக்கும் மண்சாலையாகவோ அல்லது சேற்றுவயலாகவோ தான் இருக்கிறது.

(மணல் குவாரியில் கர்ம சிரத்தையுடன் மண்ணள்ளுகிறார்கள்)

இங்கு கனரக வாகனங்கள்  இயங்குவது அரசுக்கு நன்கு தெரியும் அப்படி இருக்கும் போது சாலையை அதிக எடை தாங்கும் வகையில் தரமாக போடலாம், அல்லது அளவுக்கு அதிகமாக மணல் லோடு ஏற்றுவதை தடுக்கலாம், ஆனால் எதுவும் செய்வதாக தெரியவில்லை, பெரிய விபத்து எதுவும் ஏற்படும் வரையில் அரசு எந்திரம் கண்டுக்கொள்ளாது என்றே நினைக்கிறேன்.

வாழ்க வளமுடன் ,2020 இல் இந்தியா தான் வல்லரசு!

என்ன கொடுமை சார் இது!
----------------

பின்க்குறிப்பு:

தகவல்,மற்றும் படங்கள் உதவி,

விக்கி,கூகிள்,தினமலர் இணைய தளங்கள்,நன்றி!
**********************

Wednesday, January 23, 2013

என்ன கொடுமை சார் இது-10

(ஹி...ஹி...WISHINGரூபம் இது)

#சட்டி சுட்டதடா!

டிடிஎச் இல் அரங்க வெளியீட்டுக்கு முன் விஷ்வரூபம் வெளியாகும் என லோகநாயகர் சொன்னப்போது பல விசிலடிச்சான் குஞ்சுகளும் யதார்த்தம் புரியாமல் மானாவாரியாக பினாத்தி வந்த போது ,உண்மையான நிலையை ஆதாரப்பூர்வ அலசி வெளியிட்டது , புள்ளி விவர ஆய்வுகளுக்கு புகழ்ப்பெற்ற ஒரு கில்லாடிப்பதிவர் மட்டுமே(ஹி...ஹி), ஆனால் உண்மையான நிலவரம் புரியாமல் பலர் ,லோகநாயகருக்கும் , அந்த கில்லாடிப்பதிவருக்கும் வாய்க்கா வரப்பு தகறாறு போல புனைவுகளை சொல்லி திரிந்தது செம காமெடி.

டிடிஎச் இல் வெளியீடு பின்வாங்கப்பட்டு திரையரங்கத்தில் வெளியிடுவது தவிர வேறு வழியில்லை என்ற நிலை வந்தப்போதும் "மீசையில் மண் ஒட்டவில்லை" என்பது போல என்ப்படம் நான் தான் தேதி சொல்வேன் என தத்துப்பித்துவென பேசினார் லோக நாயகர்,ஆனால் தியேட்டர் உரிமையாளர்கள் சொன்ன தேதி தான் இப்போ படம் வெளியாகும் தேதி என்பது சொல்ல மறந்த கதை. :-))

500  தியேட்டர்கள் தமிழ் நாட்டில் தர முன்வந்துள்ளார்கள் ,அதனால் தான் டிடிஎச் இல் முதலில் வெளியிடவில்லை என தானாகவே வேற சொல்லிக்கிறார், கார்த்தி படமே சுமார் 700 தியேட்டர்களில் தமிழ் நாட்டில் வெளியாகும் காலமிது.

படம் வெளியாகி ஒரு வாரம் கழித்து டிடிஎச் இல் வெளியாகும் என்ற நிலை வந்த பின்னும், என் வழி பின்னால் பொது வழியாகும்னு புதுமை படைச்சாப்போல இன்னமும் சொல்லிக்கொண்டிருப்பது அதை விட பெரிய காமெடி.

படம் வெளியான பின்னர் டிடிஎச் இல் நான்காவது நாளிலேயே இந்திப்படங்கள் வருகிறது( இதனையும் முன்னரே சொல்லியாச்சு), அப்படி இருக்கும் போது ஏற்கனவே இருக்கும் வழியில் போய்விட்டு தானே புது வழியினை முதன் முதலில்  உருவாக்கியது போல ஒரு மாயத்தோற்றம் உருவாக்கி சிற்றின்பம் அடைவதேன் :-))


மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் நடித்து, யூ டீவி தயாரித்த "கிராண்ட் மாஸ்டர் " என்ற மலையாளப்ப்படம் மே -3,2012 அன்று திரையரங்கில் வெளியான அன்றே அமெரிக்கா,கனடா ஆகிய நாடுகளில் நெட்ஃப்ளிக்ஸிலும் 'ராச நடைப்போட்டு' வெளியானது.

அப்போதெல்லாம் மலையாள திரையுலகில் பெரிதாக கரைச்சல் இல்லை ஏன் எனில் , படத்தின் பட்ஜெட் மற்றும் தியேட்டரில் அதிகம் வெளியாகாத இடங்களில் மட்டும் மாற்று முறையான நெட்ஃப்ளிக்ஸ், டிடிஎச் என வெளியானால் யாருக்கும் இழப்பு இருக்காது என்பதால் ஆகும்.

பெருவாரியாக திரையரங்கில் வெளியாகும் இடத்திலும் ஒரு நாள் முன்னதாக டிடிஎச் இல் வெளியிடுவது கண்டிப்பாக திரையரங்க வசூலை பாதிக்கும் என்பதால் தான் தமிழகத்தில் எதிர்ப்பு, ஆரம்பத்தில் டிடிஎச் இல் பணம் கூறையைப்பிய்த்துக்கொண்டு கொட்டும் என மனக்கணக்குப்போட்டு செயல்ப்பட்டதன் ,பலன்  பொங்கல் அன்று வெளியிட முடியாமல் போனதே, பொங்கலை ஒட்டி சுலையாக ஐந்து விடுமுறை நாட்கள் கிடைத்தது ,படம் வெளியாகி இருக்குமானால் மிகப்பெரிய ஓப்பனிங் வசூல் கிடைத்திருக்கும், அதனை இழந்தது தான் மிச்சம். படு மொக்கையான அலெக்ஸ் பாண்டியன் கூட பொங்கல் விடுமுறையில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி கல்லாக்கட்டியது. எனவே படம் வாங்கியவர்களுக்கு பெரிய அளவில் சேதாரம் இல்லை.

மேலும் டிடிஎச் புக்கிங்கில் பெரிய அளவு வருமானம் வரவில்லை, ரசிகர்களும் ஆர்வம் காட்டவில்லை என்பதும் வெட்ட வெளிச்சமாகிவிட்டதால், லோகநாயகருக்கு பெரிய ரசிகர்கள் பின்ப்புலம் இருக்கு என்ற மாயையும் உடைந்துப்போனது தான் மிச்சம்!

இதில் அல்வா வாங்கியது , லோகநாயகர் சொன்னதை நம்பி 1000 ரூவா பணங்கட்டிய சில,பல ஆர்வக்கோளாறு அப்பாவிகள் தான், படம் தியேட்டரில் வெளியான பின் டிடிஎச்சில் பார்க்க ஆயிரம் என்பது டைரக்ட் டு ஹோம் கொள்லை :-))

பெரிய பட்ஜெட்டில் லோகநாயகர் நடித்தால் விலைப்போகாத நிலை உள்ளது என்பதும் வெட்ட வெளிச்சமாகிவிட்டது, எனவே இனி வரும் காலங்களில் எந்த தயாரிப்பாளரும் லோகநாயகரை நம்பி பெரிய அளவில் முதலீடு செய்ய முன்வர மாட்டார்கள்.

எந்த ஒரு நடிகருக்கும் படம் எளிதாக கேட்ட விலைக்கு போகும் நிலையை வைத்தே "மார்க்கெட்" உள்ளது என்பார்கள், எப்பொழுது ஒரு நடிகரின் படத்தினை சொன்ன விலைக்கு வாங்க ஆள் இல்லையோ அவர்களுக்கு மார்க்கெட் போய்விட்டது என்பார்கள் சுருக்கமாக "ஃபீல்ட் அவுட்" என்பார்கள்.

கிட்டத்தட்ட "ஃபீல்ட் அவுட்" நிலைக்கு லோகநாயகரே தன்னைக்கொண்டு போய் நிறுத்திக்கொண்டார் எனலாம், இனி தயாரிக்கவும், வாங்கவும் திரையுலகில் அனைவரும் தயங்குவார்கள், சொந்தமாக தயாரித்து, வெளியிட்டுக்கொண்டால் மட்டுமே களத்தில் நிற்க முடியும் என்ற நிலைக்கு தானே உள்ளாக்கி கொண்டு விட்டார்.

இத்தனை நாளும் லோகநாயகரின் படங்கள் எம்ஜியில் விலையானது , டிடிஎச் இல் பெரிதாக பணம்  வரும் என்ற நப்பாசையில் சதவீதத்தில் வெளியிடுகிறேன் என ஒப்புதல் வாக்கு மூலம் வேறு கொடுத்துவிட்டார், எனவே டிடிஎச் இல் வெளியாகாத நிலையிலும் இப்பொழுதும் சதவீதத்தில் தான் வெளியாகிறது, எனவே இனி வருங்காலத்தில் லோகநாயகர் படம் வெளியானாலும் சதவீதத்தில் வெளியிட சொல்வார்கள், இவ்வாறு வெளியிடுவது தயாரிப்பு தரப்புக்கு பெரிய " ரிஸ்க்" எனவே இனிமேல் வெளித்தயாரிப்பாளர்கள் யாரும் முன் வந்து ரிஸ்க் எடுக்க மாட்டார்கள்.

எனவே விஷ்வரூபம் என்ற ஒரே படத்தின் மூலம் லோகநாயகரின் தமிழ் சினிமா பயணம் ஒரு இறுதிக்கட்டத்திற்கு வந்துவிட்டது  எனலாம், படம் வெளியாகி வெற்றிகரமாக தயாரிப்பு செலவினை மீட்டெடுத்தால் மட்டுமே கொஞ்சம் நிம்மதி மூச்சு விடமுடியும்.

ஆனால் அதற்கும் ஆப்பு வைப்பது போல இஸ்லாமிய அமைப்புகள் கொடி பிடிக்க ஆரம்பித்துவிட்டன  இந்த இடத்திலும் லோகநாயகரின் தப்புக்கணக்கே காரணம்.

படம் தயாரிக்கப்பட்டு ரொம்ப நாட்களாகிறது , ஜனவரி 11 இல் வெளியாகும் என்ற நிலை இருந்தப்போது கூட படத்தினை போட்டுக்காட்ட எண்ணவில்லை,இத்தனை நாளாக போட்டுக்காட்டாதவர் திடீர் என ஏன் போட்டுக்காட்ட வேண்டும்? இலவசமாக விளம்பரம் கிடைக்கும் என நினைத்து போட்டுக்காட்டினார், ஆனால் அவர் எதிர்ப்பார்த்ததைவிட எதிர்ப்பு அதிகமாகி , வளைகுடா நாடுகளில் தடை என பிரச்சினை விஷ்வரூபம் எடுத்துள்ளதால் இப்பொழுது பின்னால் பற்றிக்கொண்டது :-))

மேலும் சமீபத்திய செய்தியாக , தமிழக அரசும் தடை விதித்துள்ளதாக தெரிகிறது. ஆரம்பத்தில் ஜெயா டீவிக்கு சேட்டலைட் உரிமம் கொடுத்துவிட்டதால் எதிர்ப்புகள் வராது என பலரும் சொன்ன நிலையில் , இச்செய்தி ஒரு திருப்பு முனை எனலாம், அனேகமாக டிடிஎச் ஒளிப்பரப்பில் சன் டிடிஎச் ஐயும் சேர்த்துக்கொண்டதன் பின் விளைவாக இருக்கலாம் என நினைக்கிறேன்.


தணிக்கை அறிக்கை:



http://cbfcindia.gov.in/html/uniquepage.aspx?lang=TAMIL&va=vishwaroopam&Type=search

படத்தில் ass, bitch, bastard, matherchood , போன்ற வசைச்சொற்கள் ஒலிநீக்கம் செய்யப்பட்டுள்ளது, வெடித்து சிதறுவது, கையை வெட்டுவது, கழுத்தை அறுப்பது போன்ற காட்சிகள் உட்பட 10 வெட்டுக்களுடன் U/A  கொடுத்துள்ளார்கள்.

அரசியலமைப்புள்ள ஒரு நாட்டில், சட்டப்பூர்வமாக இயங்கும் தணிக்கை அமைப்பால்  பொது மக்கள் பார்க்கலாம் என சான்றளிக்கப்பட்ட பின் , அதில் உள்ள கருத்துக்கள் ஏற்புடையது அல்ல ,வெளியிட கூடாது என இஸ்லாமிய அமைப்புகள் சொல்வது யதேச்சதிகாரம் ஆகும்.

இப்படி படத்தினை போட்டுக்காட்டாமல்,துப்பாக்கி பட பாணியில்  வெளியிட்டு விட்டு பின்னர் எதிர்ப்பு காட்டினால் ,கொஞ்சம் கட் செய்து விட்டோம்னு சொல்லி ஒரு அறிவிப்பு விட்டு இருக்கலாம் , கூடுதலாக அடுத்த படத்தில் ஒரு இஸ்லாமியராக நடிப்பேன், ஒரு இஸ்லாமிய பெண்ணை ஹீரோயினாக நடிக்க வைப்பேன்னு சொல்லி சமாதானக்கொடியை ஆட்டியிருந்தால் துப்பாக்கி போல ஹிட் ஆகிடும்:-))



துப்பாக்கி படம் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் காரைக்காலில் ஷமினா என்ற தியேட்டரில் 25 நாட்களுக்கு மேல் வெற்றிகரமாக ஓடியது, தியேட்டரும் இஸ்லாம்மியருக்கு சொந்தமானது ஆகும்.

எப்படி எனில் படத்தில அப்படி என்ன நம்மளைப்பத்தி தப்பா சொல்லி இருக்காங்கன்னு பார்க்க ஒரு தடவை படம் பார்ப்பாங்க, அப்புறம் சொன்னாப்போல காட்சிகள் நீக்கி இருக்கானு உறுதி செஞ்சுக்க இன்னொரு தடவை படம் பார்ப்பாங்க ,எனவே படம் கண்டிப்பா ஹிட் ஆகிடும் :-))

லோகநாயகர் இனியும் நிம்மதியா நல்ல முறையில் படம் எடுக்கணும் என்றால் அவரை சுற்றி இருந்துக்கொண்டு  தப்பா ஆலோசனை வழங்கும் விசிலடிச்சான் குஞ்சுங்க கூட்டத்தினை விரட்டிவிட்டாலே  போதும் அவரு பொழச்சுப்பார்.

ஹி...ஹி அப்படியே ஆக்கப்பூர்வமான முறையில் ஆலோசனை வேண்டுமெனில் என்னைப்போன்றவர்களை அனுகலாம் :-))

என்ன கொடுமை சார் இது!
***********

# திருட்டு கரும்பு இனிக்கும்!

இந்த கொடுமையும் லோகநாயகரை முன் வைத்தே, டிடிஎச் இல் வெளியிடுவது திருட்டு டிவிடியை ஒழிக்கும் என ஆருடம் சொன்னார், ஆனால் மக்கள் திருட்டு டிவிடி தியேட்டரை விட விலை மலிவாக இருப்பதால் தான் பார்க்கிறார்கள் என்ற அடிப்படை உண்மையை மறந்துவிட்டார்.

டிடிஎச் இல் பார்க்கும் கட்டணம், நியாயமானதாகவும், படம் நன்றாக இருந்தால் மட்டுமே டிடிஎச் இல் பார்ப்பார்கள், ஒரு படம் டிடிஎச் இல் வருகிறது என்பதற்காகவே அனைவரும் பார்க்க மாட்டார்கள்.

திருட்டு டிவிடியை ஒழிப்பது என்பது தயாரிப்பாளர்கள் கையில் தான் உள்ளது. சிங்கப்பூர் ,மலேஷியா, அமெரிக்காவிற்கு விற்கப்படும் திரைப்படங்களில் இருந்து தான் திருட்டு டிவிடி தயாராகிறது, அதனை திருட்டு டிவிடி என சொல்வதே தவறு , அய்ங்கரன், லோட்டஸ் ஆகிய நிறுவனங்கள் 5.1 இல் தரமான டிடிவிடிக்களை விற்கிறார்கள், அதுவும் பெயர், ,முகவரி தொலைப்பேசி எண் , இமெயில் எல்லாம் விலாவாரியாகப்போட்டு :-))



டிவிடியில் முகவரி...


அமெரிக்கா, சிங்கப்பூர் ,மலேஷியாவில் டிவிடி விற்கும் உரிமையா கொடுத்தார்கள், விநியோக உரிமைத்தானே கொடுத்தோம் என இந்த தயாரிப்பாளர்கள் ஏன் கேட்பதில்லை?

அப்படிக்கேட்டால் வெளிநாட்டு விநியோக உரிமையை ஒருத்தரும் வாங்க மாட்டாங்க ,எனவே வந்த வரை லாபம் என  கேள்வியே கேட்காமல் வெளிநாட்டுக்கு விற்கிறார்கள் ,அவர்களும் டிவிடி தயாரிச்சு உலகமெங்கும் விற்கிறார்கள், தமிழ்நாட்டில் ஒரு வாரத்திலேயே தரமாக 5.1 இல் டிவிடி கிடைப்பது இப்படித்தான்,இதில் படம் வந்ததும் ஹீரோவும், தயாரிப்பாளரும் திருட்டு டிவிடிஐ ஒழிக்க வேண்டும் என கமிஷ்னர் அலுவலம் போய் பேட்டிக்கொடுப்பதை பார்த்தால் உலகமகா நடிப்புடா சாமினு சொல்ல தோன்றும் :-))

இந்த கொடுமையில இன்னொரு கொடுமையும் சேர்த்தே சொல்லுறேன், டிடிஎச் இல் வெளியாகிறது என செய்தி வந்ததுமே  ,ஒரு கத்துக்குட்டி,300 கோடிக்கு புக்கிங் ஆகி சரித்திர சாதனைனு முகநூல் ,வலைப்பதிவு  போஸ்டர் ஒட்டியது , அப்படி புரளியக்கிளப்பிவிட்டவர் இதே போல பல புரளிகளை கிளப்பிவதில் வல்லவர், ஒரு காலத்தில் நடிகை சினேகவுடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு திருமணம் செய்யப்போவதாக ஒரு புரளியைக்கிளப்பியவர்.

மேற்படி நபர் ,மச்சக்காரன் படத்திற்கு சிங்கப்பூர் ,மலேஷிய விநியோகம் வாங்கிவிட்டு திருட்டு டிவிடி தயாரிக்க முயன்றப்போது கையும் களவுமாக மாட்டி உதைக்கூட பட்டார்னு செய்தியுண்டு, திரையுலகில் இருப்பவர்களுக்கு எப்படி திருட்டு டிவிடி உருவாகிறது ,யார் செய்கிறார்கள் என தெரியும், ஆனாலும் எந்த முயற்சியும் செய்யாமல் ,புதுசு புதுசா ஒரு காரணம் சொல்வதே வாடிக்கையாகப்போய்விட்டது.

செய்தி:

Nag Ravi Corporate Chief or Thief
Posted by Editor on November 9th, 2007
Nag Ravi Corporate Chief or Thief

Insight Media has offices in Singapore, Canada, New Zealand, Malaysia, UAE, USA and Mauritius with Head Quarters in Chennai.. Insight’s local and overseas distributions include Sivaji, Kireedam, Veerappu and the forthcoming, Bommalattam, Machchakkaran and Vambusandai. Besides Tamil film audio, the company has also brought out a VCD titled Padmini .

The Legend on the legendary actor and educational CDs at rock bottom prices to contain piracy. The ostentatious Nag Ravi, also known as Sneha’s former lover was caught in the act of taking a camera print of Machakaran at Devi Sridevi preview theatre. Ravi was beaten up by the producer Nanthagopal but he managed to escape and is now absconding, while the manager of the preview theatre Eknath and the operator was also beaten up. Ravi and his Insight Media were the overseas distributors of Machakaran. They had taken seven prints of the film from the Lab, but only dispatched six of them on Tuesday evening mainly to Malaysia and Singapore.

http://www.kollywoodtoday.net/news/nag-ravi-corporate-chief-or-thief/

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது!

என்ன கொடுமை சார் இது!

*******************

# அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்!

அஞ்சா நெஞ்ச அண்ணனும், காமாண்டர் தம்பியும் அக்னி நட்சத்திரமாய் அவ்வப்போது உரசிக்கொள்வது வழக்கம், அடுத்த தலிவரு தம்பித்தான்னு சொன்னதும் சங்கரமடமா இதுனு அண்ணன் சாமியாடினார்.

அதுக்கு கொஞ்ச நாளுக்கு முன்னர் , எனது எதிரிகளை இயற்கை பார்த்துக்கொள்ளும்னு சாபம் எல்லாம் விட்டது நினைவிருக்கும். இதனை வைத்து சில அரசியல் வதந்திகளும் அப்போது உலவியது, ஆனால் அதில் உண்மை இருக்குனு  நம்பத்தகுந்த வட்டாரங்களில் ஒரு தகவலும் உலாவுது(எந்த அளவுக்கு நம்பகம்னு தெரியாது கேள்விப்பட்டதை சொல்கிறேன்),  இளையவர் இப்பொதெல்லாம் அடிக்கடி லண்டன் பயணமாவதே மருத்துவ சோதனைக்கு தான் எனவும் ,அவருக்கு ஆரம்ப நிலை இரத்தப்புற்று நோய் எனக்கண்டுப்பிடித்திருப்பதாகவும், அதற்கு ரகசிய சிகிச்சை எடுக்கவே ஏதேனும் ஒரு காரணத்தினை முன்னிட்டு லண்டன் செல்வதாக சொல்கிறார்கள், ஒராண்டுக்கு முன்னர் இருந்தே சிகிச்சை நடக்கிறதாம்.இப்பொழுது அரசல் புரசலாக பலருக்கும் தகவல் கசிந்து , கட்சியின் மேல்மட்டத்திலேயே சூடாகப்பேசப்படும் வதந்தி இது தான்.

இதனை நம்புவதா வேண்டாமா என தெரியவில்லை!

என்ன கொடுமை சார் இது!
-------------------

பின்குறிப்பு:

தகவல் மற்றும் படங்கள் உதவி,

CBFC.gov.in,kollywoodtoday.net, wiki, google,இணைய தளங்கள் நன்றி!
---------------------

Friday, April 20, 2012

என்ன கொடுமை சார் இது!-5





ஜோசியம் பார்க்கலையோ ..ஜோசியம்!

ஆடிப்போய் ஆவணி வந்தா டாப்புல வருவான்னு ஜோஸ்யம் சொல்வாங்க சில மரத்தடி கிளி ஜோதிடர்கள், கல்யாணம், காதுகுத்து, வியாபாரம் செய்ய எல்லாம் ஜோதிடம் பார்க்கிறாங்க. செவ்வாய் வக்கிரமா பார்க்கிறான் ,புதன் உக்கிரமா பார்க்கிறான் புண்ணாக்கு வியாபாரம் செய்தா பின்னிடலாம்னு துணிக்கடை வச்சிருக்கிறவர் பையனுக்கு தொழில் தொடங்க ஆலோசனை சொல்லும் ஜோதிட சிகாமணிகளும் நாட்டில நிறைய இருக்காங்க.

அதை எல்லாம் அலேக்கா தூக்கி சாப்பிடுவது போல என்ன ஜாதகர் என்ன ஷேர் வாங்கலாம், ஜோதிட முறையில் பங்கு வணிகத்தில் பணம் அல்ல பங்கு வணிக ஜோதிடம்னு சுவாமி ஓம்கார்னு ஒருத்தர் கிளம்பிட்டார் .அடப்பாவிங்களா வெள்ளைக்காரன் கஷ்டப்பட்டு கணினி ,மென்பொருள்னு கண்டுப்பிடிச்சா அதை வச்சு நோகாம ஜோசியம் பார்க்க கிளம்பிடுறிங்களே ...என்ன கொடுமை சார் இது!

*****
சென்னை - ஊட்டி வழி கும்பகோணம்!


சென்னையில் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்தில் கண்டது தாங்க அது.

சென்னையில் இருந்து ஊட்டிக்கு வழக்கமாக , சேலம் ,கோவை, ஊட்டினு தான் போவாங்க. இந்த பேருந்து வித்தியாசமாக சென்னை,திண்டிவனம், பாண்டி,கடலூர், சிதம்பரம், கும்பகோணம், திருச்சினு போய் ஊட்டிக்கு போகுதாம், நடத்துனரை விசாரித்தேன் ,அப்படி போக சொல்லி உத்தரவாம். யாருக்காவது ஒரே பஸ் டிக்கெட்டில் தமிழ் நாட்டை சுற்றிப்பார்க்க வேண்டும் என்றால் அணுகவும் அரசு விரைவுப்போக்குவரத்து கழகத்தினை.

ஊட்டிக்கு டிக்கெட் வாங்குறவன் முழுசா ஊட்டிப்போய் சேர்வாங்கிறிங்க :-))

என்ன கொடுமை சார் இது!

*****
ஓ.கே.ஓகே.(விமர்சனமல்ல)

கையில காசு மித மிஞ்சி இருந்தா எல்லாம் படம் எடுக்க கிளம்பிடுறாங்க, படத்துக்கு கதை சொல்ல வரவங்க கொஞ்சம் குஷிப்படுத்துவோம் அப்போ தான் தயாரிப்பாளார் மசிவார்னு , தயாரிப்பாளரப்பார்த்து "சார் உங்கள ஒரு சைடுக்கா பார்த்தா தல போல இருக்கிங்க இன்னொரு சைடுக்கா பார்த்த தளபதி போல இருக்கிங்கனு " சரவண பவன் சர்வர் போல இருக்கிற தயாரிப்பாளர உசுப்பேத்தி விட்டுட்டு போயிடுறாங்க.

பலப்பேரு இந்த காக்காப்பிடிக்கு எல்லாம் அசராம தயாரிப்ப மட்டும் பார்ப்போம்னு ஆசைக்கு அணைப்போட்டு விடுவார்கள்.சிலப்பேரு தூண்டிலில் சிக்கி எத்தனை நாளைக்கு தான் அடுத்தவன் டூயட் பாட நாம செலவு செய்றது, நாமளும் டூயட் பாடிப்பார்ப்போம்னு அரிதாரம் பூசி ஹீரோவாக அவதாரம் பூசிக்கொண்டு சொந்த செலவில் சூன்யம் வைத்துக்கொள்கிறார்கள், அவங்களுக்கு மட்டுமா சூனியம் பார்க்கிறவங்களும் சேர்த்துள்ள பயப்புள்ளைகள் சூன்யம் வைக்குதுங்க :-))

போலீஸ் டி.சி பொண்ணை தியேட்டர்ல டிக்கெட் கிழிக்கும் பையன் ஓ.கே செய்து ஓ.கே சொல்ல வைப்பது தான் ஓ.கே.ஒகே எனும் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தோட ஒன் லைன் கதை , சுருக்கமா சொன்னாலும் அவ்வளவு தான் விரிவா சொன்னாலும் அவ்வளவு தான் கதை.

ஒரு கல்லும் ,கண்ணாடியும் உடையாம மோதிக்கொண்டால் காதலாம்,
 குண்டு துளைக்காத கண்ணாடியா இருந்தா கல்லாவது கடப்பாரையாவது.

படம் முழுக்க மயிலாப்பூர் சபா நாடகம் போல வாய் வலிக்க பேஷிண்டே இருக்கா ஷந்தானம் அண்ட் அவரோட அல்லக்கையா நடிக்கும் உதயநிதி.ஹீரோவ அல்லக்கைனு சொல்ல்லிட்டேன்னு மொறைக்காதேள் படம் பார்த்தா நோக்கும் அப்டிதாண்ணா தோனும் :-))

படம் முழுக்க ரெண்டுப்பேரும் மெட்ராஸ் ஐ வந்தவாள் போல கருப்புக்கண்ணாடியோடவே அலையுறாங்க ,டைட்டில்ல கண்ணாடினு வர்றதே அதுக்காகவோ?

படத்தில ஷந்தானம் மயிலாப்பூர் பார்த்தான்னு ஷொல்லிண்டு இப்படித்தான் ஏதோ பாஷைல படம் பூரா பேஷிண்டு இருக்கார்.இரண்டரை மணி நேர படத்தில ரெண்டே முக்கால் மணி நேரம் பேசுறார்ப்பா .அதெல்லாம் காமெடி வஜனம்னு சொல்றா அப்படி ஷொன்னா தான் தெரியுது காமெடினே.

லொள்ளு சபானு பழைய சினிமாவ எல்லாம் ஷந்தானம் தொலைக்காட்சில கலாய்ச்சுண்டு இருப்பார் முன்ன அப்போ மீந்து போன பழைய ஸ்கிரிப்ட் ஆ இயக்குனர்க்கிட்டே கொடுத்து இருப்பார் போல.

கிளைமாக்ஸில உதயநிதி விடுற பீட்டர ஷந்தானம் மொழிப்பெயர்ச்சி செய்வார் ,இதெல்லாம் பெண்ணின் மனதை தொட்டு படத்தில விவேக் டீம் செய்தது.கொஞ்ச காலமா கவுண்டரை இமிடேட் செய்தார் , இப்போ விவேக் எல்லாம் ஓய்ஞ்சுட்டதால அவரையும் இமிடேட் செய்ய ஆரம்பிச்சுட்டார்.இப்படியே போனால் ஷந்தானம் வந்த வேகத்தில காணாமல் போக வேண்டியது தான்.

ஒரே கதைய அடுத்தடுத்து படமெடுத்தாலும் படம் ஓடுதுனா இயக்குனர் மேல குற்றமா என்ன எடுத்தாலும் பார்ப்போம்னு போகிற மக்கள் மேல குற்றமானு சாலமன் பாப்பையா,திண்டுக்கல் லியோனி வச்சு பட்டி மன்றம் தான் போடனும்.

தாத்தா பிறந்த நாள் என்றால் உண்டியல் வச்சு நிதி திரட்டுவார், பேரன் ஹீரோவா நடிச்சு நிதிதிரட்டுறார், படம் ஓடும் எல்லா ஏரியாவிலும் கட்சிப்பிரமுகர்களே மொத்தமா டிக்கெட் வாங்கிடுறாங்க, எப்படியும் ஒரு வாரத்துக்கு ஹவுஸ்ஃபுல் போர்டு தான் எல்லா தியேட்டர்லயும், படத்தின் உண்மை நிலவரம் இரண்டாவது வாரத்துக்கு பிறகே தெரியும்.

கலைக்குடும்பத்தின் கலையார்வத்துக்கு கலை தொண்டு செய்தே கழக உடன்பிறப்புகள்  கடன்காரர்கள் ஆகிடுவாங்க போல இருக்கே.

என்ன கொடுமை சார் இது!

*****
என்னமா சிந்திக்கிறாங்க!

இந்த சமாச்சாரம் ரொம்ப நாளுக்கு முன்னரே எல்லாருக்கும் தெரிஞ்சு இருக்கும், எப்படிலாம் ஒத்த சிந்தனை வேலை செய்யுதுனு உதாரணம் காட்ட இதை விட நல்ல உதாரணம் கிடைக்காது என்பதால் பயன்ப்படுத்திக்கொண்டேன் , சும்மா பார்த்து எஞ்சாய் செய்யுங்க!

அந்தக்காலம்:



இது இந்தக்காலம்:



(ஹி..ஹி கவுண்டமணி,கார்த்திக் ஆபிஸ் காமெடி கிடைக்கலை ,படம் இது தான் ,கிடைச்சா சொல்லுங்க போடலாம்)
*****

இராசதந்திரம்:

தமிழ் தாத்தா தனது தொண்டரடிப்பொடிகளுடன் ஞானசன்னிதியில் அரசியல் மந்திராலோசனையில் இருக்கிறார்.

பேருந்துக்கட்டணத்தினை உயர்த்தியது மக்கள் விரோத போக்குனு அறிக்கை விட்டு போராட்டம் நடத்தலாமாய்யா?

ம்ம்க்கும் தலைவரே கடந்த பல ஆண்டுகளாக பேருந்துக்கட்டணம் உயர்த்தப்படவில்லை எனவே நஷ்டம் போக்குவரத்துக்கழகத்தினை மூட வேண்டிய நிலையில் கொண்டுவந்து விட்டதே நீங்க தான்னு அம்மையார் கவுண்டர் அறிக்கை விடுவாங்க...

யோவ் அந்தம்மா விடுதோ இல்லையோ நீயே போட்டுக்கொடுப்பய்யா.

ம்ம் பால் விலை ஏத்துனாங்களே அதை கண்டிச்சு அறிக்கை விடலாமே ...

அதுக்கும் அதே தான் நீங்க கடந்த காலங்களில் விலை ஏற்றவில்லை பால்வளத்துறை நட்டம், சரி செய்தேன் பதில் வரும் ...தலைவரே...

யோவ் என்னைய்யா எந்த பக்கம் போனாலும் கேட்டப்போடுறிங்க...இப்படியே போனால் நாம எதிர்க்கட்சியா அரசியல் கடமையே செய்ய முடியாது போல இருக்கே...

ஹி...ஹி தலைவரே நமக்கு  எதுக்கு அந்த கவலை ,எதிர்க்கட்சி இப்போ கறுப்பு எம்ஜிஆர் கட்சி தானே ...நமக்கு பிரச்சினை இல்லை... கவலைய விடுங்க...

யோவ் உனக்கு கொஞ்சம் கூட வெட்கமாவே இல்லையாய்யா எதிர்க்கட்சியா கூட உட்கார விடாமல் அடிச்சு துவைச்சுட்டாங்க மக்கள் அந்த கவலை கொஞ்சமாச்சும் இருக்காய்யா உனக்கு ..உன்னை எல்லாம் வச்சுக்கிட்டு நான் எப்படி அரசியல் நடத்தி ..என் லட்சியத்தியத்தை நிறைவேற்றுவேன்.

(மனசுக்குள்.. உங்க லட்சியம் உங்க மகன தலைவராக்கிப்பார்க்கிறது தானே நடத்துங்க யாரு வேணாம் சொன்னா) ஹி..ஹி இப்படி செய்தா என்ன தலைவரே...

எப்படிய்யா?

கடுமையான மின் வெட்டு, கூடவே வரலாறு காணாத மின் கட்டண உயர்வு என காரசாரமா அடுக்கு மொழில கண்டிச்சு ஒரு அறிக்கை விடுங்க தலைவரே ...அந்தம்மா ஆடிப்போயிரும்ல...

போய்யா நீயும் உன் ஆலோசனையும், கடந்த காலத்தில் மின் உற்பத்தியே செய்யவில்லை, மின்வாரியத்துக்கு 500000 கோடி கடன்னு ரிவிட்டா அடிக்கும்யா ....

என்ன தலைவரே நீங்களே இப்படி பேச ஆரம்பிச்சுட்டிங்க....

உங்களை எல்லாம் நம்பி பயனில்லை, நான் அண்ணாவுக்கு பின்னால் நின்றும் ,காமராஜருக்கு முன்னால் நின்றும் அரசியல் செய்தவன் ,எப்போது ,எப்படி அரசியல் செய்யனும்னு தெரியும்,

தனி ஈழம் அமைக்க பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண இந்தியா உதவி செய்யணும் ஒரு அறிக்கை விடப்போறேன் , 1980 இல் இருந்து கழகம் விட்ட அறிக்கைகளின் தேதி,கிழமை எல்லாம் பட்டியல் போட்டு பத்து பக்கத்துக்கு அறிக்கையை விட்டா ச்சும்மா அதிரும்ல...

தலைவரே எனக்கு ஒரு சந்தேகம், இப்போ மட்டும் அம்மையார் பதிலுக்கு கவுண்டர் கொடுக்க மாட்டாங்களா?

எப்படிய்யா முடியும் .... நம்மை அரசியல் செய்ய விடாம முடக்க மட்டுமே ஈழப்பிரச்சினை தீர நடவடிக்கை எடுக்க வேண்டும்னு சொல்வாங்க ,தனி ஈழம்னு எந்த காலத்திலும் அம்மையார் பேச்சுக்கு கூட பேச மாட்டாங்க,அப்படியே சந்தர்ப்பவசமா அவங்களும் தனி ஈழம் பற்றி அறிக்கை விட்டா ,நாம தான் முன்னாடி அறிக்கை விட்டோம்னு சொல்லிக்கலாம்ல எப்பூடி!

ஆஹா தலைவரே பிரமாதம் அசத்திட்டிங்க, இதுவல்லவோ இராசதந்திரம்... என கோரஸ்சாக தொண்டரடிப்பொடிகள் கூவுகிறார்கள்!

என்ன கொடுமை சார் இது!

Thursday, April 05, 2012

என்ன கொடுமை சார் இது-4






என்ன கொடுமை சார் இது-4

மங்குனி உத்திரம்:

பங்குனி வெயில் பல்லைக்காட்டுது இதுல ஆறுமுகனுக்கு அரோகரானு ஒரு கோஷ்டி பால் காவடி ,பன்னீர் காவடினு தூக்கிக்கிட்டு ஜிங்கு ஜிங்குனு ஆடிக்கிட்டு போகுதுங்க ,கேட்டா பங்குனி உத்திரமாம், எனக்கு தெரிஞ்சு உத்திரம்னா ஓட்டு வீட்டுல நடுவில போடுற மர பீம் இவங்க எங்கே போய் பீம் போட போறாங்களோ :-))

என்னமோ செய்துவிட்டு போகட்டும், ஆனால் ஒரு 2-3 நாளாவே கூம்பு வடிவ ஒலிப்பெருக்கி போட்டு லூர்து மேரி ராஜேஷ்வரி, தொளுகுவா மீனாட்சி சவுந்தர ராஜன் ஆகியோர் பாடிய பக்தி பழரச பாடல்களை உச்சஸ்தாயில அலரவிட்டு என் காது ஜவ்வுல கடப்பாரைய விட்டு ஆட்டிட்டாங்க மை லார்டு முருகா , இதெல்லாம் இல்லைனா நீ அருள் பாலிக்க மாட்டியா ? இதுக்கே மின் வெட்டினால் அவங்க பக்தி சேவை பாதிக்க கூடாதுனு ஜெனெரேட்டர் வேற வச்சு பாட்டுப்போடுறாங்க வேலைய்யா ,இது என்னய்யா நியாயம்.

கூம்பு வடிவ ஒலிப்பெருக்கி ஒலி மாசு செய்வது என்று தடைசெய்தார்கள்னு சொல்றாங்க ,ஆனால் ஆன்மீக ,அரசியல் கூட்டங்களில் அதான் கிழியுது ,அதுக்கு காவல் துறை பாதுகாப்பு வேற, என்ன தடையோ ,சட்டமோ அது எல்லாம் பகவானுக்கே வெளிச்சம்.

ஆறுமுகம்னு சொல்றாங்களே அந்த படம் எப்படி இருக்கும்னு தேடிப்பார்க்கலாம்னு தேடினா பாடாவதி சினிமாக்களான சின்ன தளபதி பரத்தின் ஆறுமுகம், குயிக் கன் முருகன், மூலக்கடை முருகன் போன்ற  படங்கள் தான் முதலில் வருது. மூலக்கூடை முருகன் படம் பவர் ஸ்டாரோடது ஸ்டில்லே செம டெர்ரரா இருக்குனா படம் எம்புட்டு டெர்ரரா இருக்கும் ,அத பார்க்கிறவன் உசுரோட வருவான்னு நினைக்கிறிங்க :-))



சரி சமாச்சாரத்துக்கு வருவோம், ஆறு தலையோட ஒரு படத்த பார்த்தேன், ஆனால் பாருங்க ஒரு கழுத்து தான் இருக்கு ,அதுக்கு இடப்பக்கம் ரெண்டு  தலை, வலப்பக்கம் மூன்று தலை. அடப்பக்தி பதருகளா நடுவில ஒரு தலைய வச்சு ஒரு பக்கம் 2, இன்னொரு பக்கம் 3 வச்ச எப்படியா பேலன்ஸ் ஆவும், ஒரு சைடுக்க இழுக்காதா? வச்சது தான் வச்சிங்க ஒரு 7 தலைய வைக்க என்ன கேடு? , ரெண்டுப்பக்கமும் தலா மூன்று தலைனு பேலன்ஸ் ஆகும்ல :-))

வாரத்துக்கு ஏழு நாள் , அதான் ஏழு தலை எனவே எங்க மதம் அறிவியல் மதம்னு இந்த மதவாதிகள் பதிவு போட உதவி இருக்குமே :-))

எனக்கு தெரிஞ்சது கூட கடவுளை கற்பனை செய்தவங்களுக்கு தெரியலையே என்ன கொடுமை சார் இது!

*****


பாக்தாத் கஃபே:

ஜெர்மனிய ஹாலிவுட் தயாரிப்பு படம் 1987 இல் வந்தது ,ஆஸ்கார் நாமினேஷேன் வரைக்கும் போன ஒரு ஃபீல் குட் படம்.


ஜெர்மானிய சுற்றுலா பயணியான ஒரு பேரிளம் பெண் ஆன் தி வேயில் கணவனுடன் சண்டைப்போட்டுக்கிட்டு , அமெரிக்க மொகாவோ பாலை , சாலை வழிப்பயண சிற்றுண்டி விடுதிக்கு வருகிறார். அந்த சாப்பாட்டுக்கடைப்பேரு தான் பாக்தாத் கஃபே :-))

பாக்தாத் கஃபே ஏற்கனவே நட்டத்தில் ஓடிக்கொண்டிருக்கு, சரியான பராமரிப்பு இல்லை, போனா போவுதுனு சில பேர் வந்து பீர் ,காபி குடிக்கிறாங்க அத வச்சு  கணவனை பிரிந்த ஒரு பெண்மணி ஒரு மகனோடு வாழ்க்கையை ஓட்டுகிறாள்.



இப்படியான சூழலில் அங்கு வரும் கதாநாயகி அங்கே வேலைக்கு சேர்ந்து சுத்தம் செய்து வாடிகையாளர்களை அன்பாக கவனித்து வியாபாரத்தினை பெருக்குகிறாள்.கொஞ்சம் மேஜிக் வித்தையும் தெரியும் என்பதால் அனைவரையும் கவர்கிறாள்.இதுக்கு நடுவே அங்கே வரும் சினிமா செட் ஆர்டிஸ்ட் கு லேசா ஒரு காதல் வருது.இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் என்னனா ஹீரோயின் வயசான பெண்மணி, அதே போல ஆர்டிஸ்டும் தான். அதாவது மெச்சூர்டான லவ்வாம், காதலுக்கு கண்ணு மட்டும் இல்லை வயசும் இல்லைனு இயக்குநர் சொல்ல வரார் :-))

பாலைவனத்துல அழுது வடிஞ்ச சாப்பாட்டுக்கடை திடிர்னு ஜெக ஜோதியா ஜொலிக்குதேனு அந்த ஊர் ஷெரிப் சந்தேகப்பட்டு வந்துப்பார்த்தா ஜெர்மனிய பெண்மணி தான் காரணம்னு தெரியுது. சுற்றுலா விசா தான் வச்சு இருக்கான்னு தெரிஞ்சுக்கிட்டு இன்னும் 24 மணி நேரத்துல நாட்டை விட்டு போகணும், இல்லை நானே நாடு கடத்துவேன் போல ஒரு மிரட்டல் .

நாட்டுக்கு திரும்ப போறதா ,இங்கேயே எப்படி இருப்பதுனு ஒரு குழப்பம்,அப்போ ஆர்டிஸ்ட் ஒரு ஐடியா குடுக்கிறார் ,என்னை கண்ணாலம் கட்டிக்கோ குடியுரிமை கிடைச்சிடும்னு, அப்புறம் என்னாச்சா போங்கப்பா போய் யுடியுப்பில் படம் இருக்கு பாருங்க ,இலவசமா தான்..

இந்த படத்தோட கதைய கேட்டதும் மாதவர் நடிச்ச நள தமயந்திக் கதை நியாபகம் வந்தா அதற்கு அடியேன் பொறுப்பல்ல,எல்லாம் ஒரு ஒத்த சிந்தனையா இருக்கும்னு எடுத்துக்கணும் :-))

இந்த பாக்தாத் கஃபே  படம் மெட்ராஸ் கஃபே, மெரினா கஃபே னு இன்னும் பல வடிவம் தமிழில் எடுக்கும்னு தோன்றுகிறது.

டிவிடி, இணைய படங்கள் எல்லாம் தடை செய்துட்டா தமிழ்ல படம் எடுத்துட்டு ஒலகப்படம் எடுத்தேன்னு சொல்லிக்கிறவங்களாம் காணாமல் போய்டுவாங்க :-))

தமிழ் சினிமாவில மட்டும் தான் தமிழ்ல நடிச்சுட்டு "லோக நாயகன்" எனப்பட்டம் போட்டுக்க முடியும், என்ன கொடுமை சார் இது!

*****
மின் வெட்டு அரசியல்:

மின்சாரம் குறித்து பதிவுகள் சில போட்டிருந்தாலும் , இன்னும் சொல்ல நிறைய இருக்கு, மின் வெட்டு அரசியல் பற்றி இன்னொரு பதிவு வரும், அதுக்கு முன்ன ஒரு டீசர் டிரெய்லர் இது :-))


ஒரு பதிவரின் வலைப்பதிவில் மின்வெட்டு அரசியல் பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது , இப்போதைய மின் வெட்டுக்கு பெரிய காரணம் கடந்த 5 ஆண்டுகளில் புதிய மின் உற்பத்தி திட்டங்கள் எதுவும் கொண்டு வரப்படலை, 2-3 ஆண்டுகளில் புதிய தலைமை செயலகம் கட்ட காட்டிய வேகத்தில் ஒரு 1500 மெ.வாட் மின் திட்டம் கட்ட காட்டியிருக்கலாம்னு சொன்னேன்.

பிரகாசமான அரசியல் எதிர்காலம் உள்ளவரும் ,பிரபல பதிவருமான அண்ணன் எம்.எம்.அப்துல்லா திடிரென பிரசன்னம் ஆகி ,  இல்லை நிர்வாகம் செய்ய தெரியலை அம்மையாருக்குனு சொன்னார்.

நான்: 2001 -2006 காலத்தில்  தமிழகத்தில் மின்சாரம் உபரியாக இருந்தது, ஆனால் 2006-11 காலத்தில் மின் தட்டுப்பாடு ஏற்பட ஆரம்பித்தது அதன் உச்சம் இப்போது எனவே கடந்த 5 ஆண்டுகாலமாக புதிய மின் உற்பத்தி செய்யாததே காரணம் என்றேன்.புள்ளி விவரங்களும் அளித்தேன்.

அதற்கு அப்துல்லா அண்ணன் சொன்னார் பாருங்க ஒரு பதில் அது போல பிரபல அரசியல்வாதிகளால கூட சொல்ல முடியாதுனா பார்த்துக்கோங்க,

2000 க்கு முன்னர் அய்யா காலத்தில போட்ட மின் திட்டங்களால் தான் 2001 -2006 இல் மின் தட்டுப்பாடு இல்லாம இருந்துச்சாம், ஆகா ...ஆகஃக்கா :-))

அப்போ மின் தட்டுப்பாடு இல்லைனா அது அப்போவே அய்யா செய்த சாதனைனு சொல்லிக்கிறார் சரி ஓ.கே வச்சுப்போம், இப்போ மின் தட்டுப்பாடுக்கு காரணம் முந்தைய காலத்தில் எதுவும் செய்யலைனா அப்போ மட்டும் எங்க ஆட்சி காரணம் இல்லைனா எப்படி?

2000க்கு முன்ன 5 ஆண்டுகளில் செய்தார் எனில் ஏன் 2006-11 இல் எதுவும் செய்யலைனு சொன்னா அதையும் ஒத்துக்க வேண்டாமா அப்போ மட்டும் இல்லைனா எப்படி அண்ணே.

எந்தக்காலத்தில் நல்லது நடந்தாலும் அதுக்கு காரணம் நாங்க தான்னு பெருமை தேடும் போது கெட்டது நடந்தா மட்டும் இவங்க தான் காரணம்னு சொல்வது தான் கழக அரசியலா என்ன கொடுமை சார் இது :-))

கடந்த 5 ஆண்டுகளில் தனியாரிடம் இருந்து வாங்கிய மின்சாரத்துக்கு பணம் கொடுக்காமல் உள்ள நிலுவை தொகை மட்டும் சுமார் 10000 கோடி, எனவே இப்போது  தேவைக்கு மின்சாரம் வாங்க முடியாமல் 150 மெ.வாட் மட்டுமே வாங்குகிறது மின்வாரியம். மேலும் காற்றாலை மின்சாரம் குறைந்து விட்டதால் மின் தட்டுப்பாடு 4000 மெ.வாட் ஆகும் எனவே அதிக மின்வெட்டு.

கடந்த 5 ஆண்டுகளில் தனியாரிடம் மின்சாரம் வாங்கிவிட்டு காசுக்கொடுக்காமல் டபாய்த்தால்,இப்போ மின்சாரம் வாங்க முடியவில்லை என டைம்ஸ் ஆப் இந்தியாவில் வந்த செய்தி. சுட்டி


மின்சாரக் கடன்


இப்போவும் கையில காசு கொடுத்தா மின்சாரம் கிடைக்கும் ,அரசு என்னமோ அன்னக்காவடிப்போல செயல்ப்படுது,  மின்க்கட்டணம் உயர்த்திய பிறகாவது மின் தடை நீங்குதா என பார்ப்போம்.

எனக்கு என்னவோ , மின் கட்டணம் உயர்த்தினா மக்கள் அதிக எதிர்ப்பு காட்டாமல், கூட வேண்டும்னா காசு தரோம் மின்சாரத்தை கொடுங்கனு சொல்ல கூடிய மன நிலைக்கு மக்கள் வர வேண்டும் என்பதற்காகவே கடுமையான மின்வெட்டினை செயல்படுத்தினார்களோ என்று தோன்றுகிறது.

அரசு நினைத்தார் போல தான்  இப்போ நடந்திருக்கு, மக்களும் ரொம்ப பெருசா எதிர்ப்பு காட்டவில்லை.இதற்கு பெயர் தான் அரசியல் இராஜ தந்திரமா?

 என்ன கொடுமை சார் இது!

---------------
பின்குறிப்பு: படங்கள் ,செய்திகள் உதவி கூகிள்,விக்கி,IMDB,இணைய தளங்கள்,நன்றி!


Friday, February 17, 2012

என்ன கொடுமை சார் இது!-2




என்ன கொடுமை சார் இது!-2

ஆரம்பக்காலத்தில் நான் பிளிறிய  சிலக்கொடுமைகளை இங்கே அழுத்திக்காணுங்கள்என்ன கொடுமை சார் இது!

மீண்டும் பிளிறல்  தொடர்கிறது....

ஒத்த சிந்தனை!

நம்ம தமிழ் சினிமா ஆளுங்க செம கில்லாடிங்க , உலக மகா சிந்தனையாளர்கள் ,புதுசு ..புதுசா  கற்பனை ஊற்றெடுக்கும் ஆனால் என்ன கொடுமைனா  இவங்க கஷ்டப்பட்டு கற்பனை செய்து உருவாக்கியதை உலகத்துல மத்தவங்க முன்னாடியே செய்து விடுகிறார்கள்!  தாமதமாக கற்பனை செய்தால் அதை எப்படி காப்பி அடிச்சாங்க என்று சொல்ல முடியும்... சொல்லக்கூடாது!ஒத்தசிந்தனை கொஞ்சம் லேட்டா  வந்திருக்குனு சொல்லுங்க! :-))





-----------------

பைசா செலவில்லாமல் விளம்பரம் செய்தல்:


ஒரு அஞ்சுப்பேருக்கு விருது கொடுத்தா அதுக்கு பேரு விருதா?
ஆமாம் விருது தான்!

அந்த அஞ்சுப்பேரு அஞ்சஞ்சு  பேருக்கு விருத கொடுத்தா அது?

அதுக்கூட விருதுனு சொல்லலாம்...

அந்த அஞ்சஞ்சு பேரு ஆளுக்கு அஞ்சு விருதுனு கொடுத்தா?

ம்ம்...ம்ம் விருது மாதிரி தெரியுது....

அஞ்சஞ்சு பேரா அஞ்சஞ்சு பேருக்கு என்று 5 லட்சத்து 55 ஆயிரத்து 5  நூற்று 55 பேருக்கு விருது கொடுத்தா?

ஹி..ஹி நான் இல்லை ரொம்ப பாவம் காலைல டிபன் கூட சாப்பிடல்லை ...எருமைக்கூட்டம் எங்கே இருக்கு சார்?  நானே போய் விழுந்துடுறேன்:-))

உங்கள் தளத்தை பைசா செலவில்லாமல் பிரபலம் ஆக்கணுமா , உடனே ஒரு விருது அறிவிச்சு பதிவர்களுக்கு பந்திப்போடுங்கள் போதும் :-))

விருதுக்கொடுத்தற்கு நன்றி என்று பதிவுப்போட்டே பிரபலம் ஆக்கிடுவாங்க உங்க தளத்தை!

-----------

மின்வெட்டைக்கண்டித்து தி.மு.க ஆர்ப்பாட்டம்!

திமுக முன்னால் அமைச்சர்.வீராபாண்டி ஆறுமுகம் தலைமையில் , மொபைல் போன் விற்பனையாளர்கள்??!! ஒன்றுக்கூடி சேலத்தில் மின்வெட்டைக்கண்டித்து போராட்டம் நடத்தி இருக்காங்க. என்னா கோராமையிது, கடந்த ஐந்து ஆண்டுகளாக வாமணன் போல அளக்காமலே நிலம் அபகரிப்பில் பிசியாக இருந்தவர்கள், ஒரே ஒரு மின் திட்டத்தை கூட செயல்ப்பாட்டுக்கு கொண்டு வரவில்லை.

இதற்கே தி.மு.க தேர்தலில் தோற்றால் அதற்கு மின்வெட்டுக்காரணமாக இருக்கும்னு ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்தது சாட்சாத் மின்வெட்டு துறை அமைச்சராக இருந்த ஆற்காட்டாரே. 

கதை அப்படி இருக்க ,இவங்க இப்படி போராட்டம் நடத்துவாங்களாம் :-))

அதுவும் போராட்டத்துக்கு விவசாயிகள் சங்கம், தொழிலார்கள், விசைத்தறியாளர்கள் என்று கூப்பிடாமல்(கூப்பிட்டாலும் வர மாட்டாங்க) மொபைல் போன் விற்பனையாளர்களை வைத்து நடத்துறாங்க, ஏன் மின்சாரம் இல்லாம மொபைல் போன் சார்ஜ் செய்து பேச முடியலையாமா? நாட்டுக்கு ரொம்ப முக்கியம் பாருங்க :-))

அனேகமாக அடுத்த சட்ட சபைத்தேர்தலிலும் தற்போதைய மின்வெட்டே வெற்றியாளரை தீர்மானிக்கும் என நம்பலாம்.அட...டா திராவிட கட்சிகளுக்கு ஒத்த கொள்கை இருக்குனு சொல்றது இந்த மின்வெட்டுக்கொள்கைய தானா? :-))

என்ன கொடுமை ...சார் இது!
--------------

நேற்று உடுமலைப்பேட்டையில் ஒரு தனியார்ப்பள்ளியின் மாணவர் விடுதியில் +1 படிக்கும் /படித்த மாணவர் ஒருவர் ஆசிரியரின் அடக்கு முறை,தண்டனையால் மனம் உடைந்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.வருத்தத்திற்கும் ,கண்டனத்திற்கும் உரிய சம்பவம்.

கடந்த வாரம் கண்டித்த ஆசிரியையை மாணவர் ஒருவர் குத்திக்கொன்றார். இப்போது மாணவர் ஒருவர் தற்கொலை. இரண்டுமே இந்தியக்கல்விக்கொள்கை, மற்றும் சூழலின் சீரழிவையேக்காட்டுகிறது.

கல்வி என்பது அறிவுக்கு என்பதை தாண்டி பிழைப்புக்கு என்று மாறி மதிப்பென் வேட்டையில் மாணவர்கள் இறங்க வேண்டியதாகிவிட்டது. சிலர் வேட்டையில் வெற்றியும் பலர் வேட்டையின் தீவிரத்துக்கும் பலியாகிறார்களோ என தோன்றுகிறது.

கல்வி வியாபாரமாக ஆனதோடு மாணவர்களை கிளாடியேட்டர்களாக  மாற்றி போராட வைக்கிறது. எனவே மாணவர்களும் மூர்க்கத்தனமாக கல்வியுடன் போரிடுகிறார்கள். அப்படியே வென்றாலும் வெற்றியின் இனிமையை சுவைக்கும் மனநிலை போய்விடுகிறது. தோல்வியை விட தோற்றுவிடுவோமோ என்ற பயம் உயிரெடுக்கிறது.


கல்வியாளர்களோ, அரசோ விழித்துக்கொள்கிறதோ இல்லையோ பெற்றோர்கள் விழிப்படைந்து இது போன்ற அழுத்தங்களை பிள்ளைகளுக்கு தராமல் இருக்கலாம். ஆனால் அவர்களோ வாழ்வில் உயர வசதியாக வாழ கல்வி ,வேலை என்ற இரண்டே அக்‌ஷய பாத்திரம் என்ற முடிவில்  தனக்கு கிடைக்காத ஒன்று பிள்ளைகளுக்கு கிடைக்க வேண்டும் என்று அவர்களையும் வருத்திக்கொண்டு பிள்ளைகளையும் வருத்திக்கொண்டு ,அவ்வப்போது இது போன்ற துர்பாக்கியமான செய்தியாகிவிடுகிறார்கள்.

----------------