தமிழ்மணத்திற்கு ஒரு அன்பான,பண்பான,பாசமிகு ,
வேண்டுதல்!.
நட்சத்திரப்பதிவுகள் என்பது சிறப்பாக எழுதும் பதிவரை மேலும் சிறப்பாக எழுத தூண்ட தமிழ்மணம் மிக சிரத்தை எடுத்து தீட்டிய ஒரு நெடுங்கால திட்டம் ஆகும். ஆனால் தற்போதெல்லாம் பெரும்பாலும் நட்சத்திரமாக தேர்வானவர்கள் காபி&பேஸ்ட்*(terms and conditions apply) பதிவையே நட்சத்திரப்பதிவாக போடுவதைக்காண்கிறேன்.
இது வரைக் காபி & பேஸ்ட் பதிவு போட்டிருந்தாலும் நட்சத்திரமாக தேர்வான காலத்திலாவாது புதிதாக எழுதக்கூடாதா?
அரைவேக்காடு லகடன்கள்,அமுதம் போன்றவை ஏற்கனவே எந்த ஒரு பத்திரிக்கையிலும் வெளிவராத ஆக்கங்கள் மட்டுமே அனுப்ப வேண்டும் என சொல்லும் போது, உலக தமிழ் திரட்டிகளின் தாயான தமிழ் மணம் நட்சத்திரப்பதிவர்கள் கண்டிப்பாக சுயமாக,புதிதான படைப்புகளை மட்டுமே நட்சத்திர வாரத்தில் அரங்கேற்ற வேண்டும் என சொல்லக்கூடாதா, சொல்லலாமே!
பின்குறிப்பு:
இது ஏதோ நான் டைம் பாசுக்கு எழுதுறேன்னு நினைக்ககூடும் , ஆனால் ஏன் தமிழ்மண நட்சத்திர வாரத்திலும் ஒரு பதிவு நேர்,எதிர் என ஓட்டு வாங்கி இருக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
*a copy and paste is always copy &paste!