Thursday, May 04, 2006

தனியே.... தன்னம் தனியே!

யாரும் அற்ற வனாந்திரத்திலும்

காட்டுப் பூக்கள் பூக்கின்றன பறிப்பார் யாரோ!

ஒரு வேளை வண்ணத்துப்பூச்சிகளின் வருகைக்கோ

யாரும் இல்லா உலகில் என் இதயமும்

இசைக்கின்றது எண்ணத்தின் ராகங்களை

இதயவீணையின் நாதம் கேட்க இதயமேதுமில்லை

காட்டுப் பூக்களுக்கும் வண்ணத்துப்பூச்சிகளின் வரவுண்டு

எனக்கென்று என்ன உறவுண்டு இவ்வுலகில்?

Wednesday, May 03, 2006

மழை மேகம்!


காரம் சாரமாக எழுத "மேட்டர்" ஒன்னும் சிக்க வில்லை(அரசியல் மட்டும் தான் சூடா இருக்கு அத தான் ஆள் ஆளுக்கு ஏற்கனவே கொத்து பரோட்டா போடுராங்களே அப்புறம் இந்த வவ்வால் எதுக்குன்றேன்!) அது வரைக்கும் சும்மா நேரம் போக மீண்டும் ஒரு கவித !

மழை மேகம்!

வானம் எங்கும் வெண்மேகங்கள்

என் தலைக்கு மேலே கடந்து செல்கின்றன

தினம் தோறும் மழை வருவதில்லை

வீதி எங்கும் பல வண்ண உடைகளில்

பெண்கள் மறைகிறார்கள்

என் பார்வையை விட்டு

மனதில் பதியவில்லை எவர் முகமும்!

மழைமேகம் வர கூடும்

மனதில் பதிந்த முகம் வருமா?

கோடை வெயிலில் ஆவியாகிவிட்டது என் வினா!

தீவிரமாக எழுதி மண்டை தீய வைப்பதில் உடன்பாடு இல்லை



ரொம்ப லைட் ஆக எதாவது எழுதனும்னு ஆசை பட்டேன் ஆனால் கடந்த முறை கொஞ்சம் தீவிரமா போய்டுச்சுங்கண்ணா........அத சரி கட்ட இந்த தடவை ஒரு கவிதை எழுதிடலாம்...னு பார்க்கிரேன்(இது அத விட "தீ"விரம்னு சொல்றிங்களாண்ணா)

நீங்க வேணாம்னு சொன்னாலும் .... விடுவதாக நான் இல்லை ...அப்ரம் எப்போதான் நானும் "கவி பேரரசு "ஆவுரதுங்கண்ணா (தோடா ...பிலாக் போடுரவன் எல்லாம் இப்படியே கிளம்புராங்கப்பா....சாமி இத்தோட 1118 ஆவது ஆளு இவனு சொல்ரது கேட்குதுங்கண்ணா)........

படிச்சு பாருங்கண்ணா... நல்லா இருந்தா வெளில நாலு பேருக்கு சொல்லுங்க நல்லா இல்லனாலும் நல்லா இருக்குனே சொல்லுங்கண்ணா பொய்மையும் வாய்மை இடத்துனு சொல்லுவாங்கண்ணா!........சரி இதோ கவித...... புடிங்க படிங்க ......இது 100 சதவிகிதம் எனது சொந்த படைப்பே...யாரையும் தழுவி எழுதியதல்ல (பெண் கவிதாயினிகள் நன்றாக எழுதும் பட்சத்தில் தழுவும் உத்தேசம் உண்டு கவித எழுத தான் சொன்னென் வேர எதுக்கும் இல்லங்கண்ணா)


பிரிவும்...சந்திப்பும்

அவர் அவர் உணர்வுகள் அவர் அவர் இதயத்தில்


அவர் அவர் பயணம் ஆளுக்கொரு திசையில்

ஏதோ ஒரு புள்ளில் மீண்டும் சந்திக்க நேர்ந்தால் இனம் காண கூடுமோ

அல்லது நீ யாரோ நான் யாரோ என்று

வேறு திசை நோக்கி பயணிப்போமா?

பிரிவது தெரிந்தே பிரிந்தோமா...

மீண்டும் சந்திக்க நேராமல் கூட போகலாம்..

காற்றில் அலைந்தாடும் பட்டம் வெகு தொலைவு பறப்பதில்லை

கையில் நூல் உள்ள வரை கட்டுண்டே பறக்கிறது காற்றில்

உணர்வுகள் தொடரும் வரை விலகி சென்றாலும்

பின் தொடர்ந்தே செல்கிறது மனம்!

ஆப்கான் படு கொலை- சொல்பேச்சு கேளாமையின் விளைவே





ஆப்கானில், ஆந்திராவை சேர்ந்த தகவல் தொழில் நுட்ப பொறியாளர் ஒருவரை தலிபான் தீவட்டிகள் தலை துண்டித்து கொன்று தஙகள் ரத்த வேட்கையை தீர்த்து கொண்டுள்ளார்கள்.இது ஒரு சோகம் என்றால் அந்த மாண்டு போன பொறியாளர் முதல் மனைவி இருக்க இன்னொரு பெண்ணையும் விசாக பட்டினதில் வளைத்து போட்டு விட்டு போய் சேர்ந்து விட்டார்.அந்த பெண்ணை மணந்ததற்கு ஏதும் ஆதாரம் இல்லை ஒரே ஒரு புகைப்படம் மட்டுமே சாட்சியாக உள்ளது.தினத்தந்தி பாஷையில் சொல்வதானால் கள்ளக் காதலி ஆகிவிடுவார் அப்பெண்.

சட்ட ரீதியான மனைவிக்கு தான் அனைத்து பொருளாதார உதவிகளும் போய் சேரும்...இப்பெண்ணின் கதி என்ன (எந்த வெள்ளி திரையிலும் காண முடியாது இதன் கிளைமாக்சை)

என் மனதில் சில கேள்விகள் சுட்டெரிக்கின்றன........

சில மாதங்களுக்கு முன்னால் இந்தியாவை சேர்ந்த லாரி ஒட்டுனர்கள் இது போன்று கடத்த பட்டனர் அப்போதே ஆப்கான் உள்ளிட்ட நாடுகளுக்கு வேலை செய்ய போக வேண்டாம் என அரசால் அறிவுறுத்த பட்டது ...அதை எல்லாம் காதில் வாங்காமல் செல்லும் இவர்களை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது ..கூடுதல் பணம் கிடைக்கும் எனில் நரகலையும் தின்ன போவார்களா...இவர்களுக்காக பரிதாப படுவதே கேலி கூத்தாகிறது.அறிவுரைகளை மதியாமல் செல்லும் இவர்களை என்னவென்பது?

ஒரு மனைவி இருக்க இன்னொரு பெண்ணையும் மணந்து ஏமாற்றி இருக்கிறார் இதனால் முதல் மனைவி தற்கொலைக்கு முயன்று இருக்கிறார்
இப்படி பட்ட பணத்தாசை மிக்க ,வாழ்வியல் தர்மதிற்கு புறம்பான வாழ்க்கை வாழ்ந்த ஒருவர் இறப்பிற்கு இரங்கல் தெரிவிக்க கூட மனம் விரும்ப மறுக்கின்றது.இதுபோன்ற படித்த முட்டாள்களை என்ன செய்வது ? இவர்களை நினைத்து இரக்க படுவதா எரிச்சல் படுவதா?(இதை படித்து என் மீது எரிச்சல் பட வேண்டாம் வெயில் காலம் பாருஙக! கொஞ்சம் கூலா இருங்க)

Tuesday, May 02, 2006

நானும் வந்துவிட்டேன்!

எல்லாம் பிலாக்...பிலாக்னு பினாத்துராங்களே அப்படி என்ன தான் இருக்குனு எட்டி பார்க்க வந்தேன் .தமிழ் வலை பதிவுகளை படித்த வரையில் எனக்கு தோன்றிய நிதர்சனம் என்னவென்றால் பெரும்பாலும் குழு மன பாண்மையோடு தான் அனேக வலை பதிவாளர்கள் செயல் படுவதாக எனது சிற்றறிவுக்கு எட்டியது ... சரி விடுரா விடுரா உனக்கும் ஒரு குழுவ செட் பண்ணிட்டா இந்த ஏக்கம் எல்லாம் போய்டும்னு தோனுது ... சீக்கிரமே நானும் ஒரு குழுவ எனக்குனு சேர்த்து கிட்டு மனம் வீசும் வலைப் பூக்களை என் பங்க்கு கொஞ்சம் நாறவைப்போம்னு ஒரு விபரீத ஆசை வந்து போச்சு (யாரோ வினாச காலெ விபரித புத்தினு சொல்ராங்க !) சரி வெகு விரைவில் கொஞ்சம் சரக்கு தேத்தி கிட்டு முடுக்கா வரேன் மக்களே! அது வரைக்கும் ஆசுவாச படுதிக்கோங்க என்னடா பிளாக்கு வந்த சோதனைனு.......... வருகிரேன் விரைவில்......