சென்னையில் என்னைப்போல புனிதர்கள் இருப்பதன் அடையாளமாக இன்று இரவு நல்ல மழை தாராளமாக பெய்கிறது.
ரஜினி ரசிக கண்மணிகள் அவர்கள் தலை படம் வருவதால் தான் சென்னையில் மழை என்று கொஞ்சம் போல உடான்ஸ் விட்டுக்கொள்ளலாம்,யார் கேட்கப் போகிறார்கள்.
மழையைப் பார்த்து ஒரு மாமாங்கம் ஆகப் போகிறது என்பதால் ஆர்வமாக வேடிக்கைப் பார்த்தேன். ஒரு தம் பற்ற வைத்துக்கொண்டு (நமுத்து விட்டது பாதி தம்)
மழை பெய்தால் சினிமாவில் கதாப்பாத்திரங்கள் எல்லாம் ஓடிப்போய் நனைகிறார்கள் (பாத்திரத்தில் தண்ணீர் பிடிக்கவோ?) நாம் மட்டும் ஒதுங்கி நிற்கிறோமே என்று தோன்றியது ஆனால் நாளைக்கு நமககு தான் மூக்கடைப்பு ,காய்ச்சல் ,இன்ன பிற எல்லாம் வந்து நான்கு விரல் காட்டும் அனாசின் தேவைப்படும்!
மழை பெய்த்ததும் மண் வாசனை வருமே எங்கே காணோம் என்று கொஞ்ச நேரம் மண்டையை பிறாய்ந்துக்கொண்டேன் இந்த கான்கிரிட் காட்டில் அதற்கெல்லாம் கொடுப்பினை இல்லை என்பதை தாமதமாக விளங்கிக் கொண்டேன்.
சரி அந்த மண்வாசனை வரக்காரணம் ஒரு பேக்டீரியா என்று படித்த நியாபகம் அது என்ன என்று யோசித்து கடைசியில் ஒரு பழைய புத்தகத்தை தேடி கண்டுக்கொண்டாயிற்று, "ஆக்டினோமைசெட்ஸ்" என்ற நுண்ணுயிர் , வறண்ட காலத்தில் ஸ்போர்களை உருவாக்கி மண்ணில் விட்டு செல்லும் மழை நீர் பட்டதும் அவை உடைந்து நுண்ணுயிர் வெளிப்படுகிறது,எனவே மண்வாசனை வருகிறது என ஆழமாக சுவாசித்தால் நுண்ணுயிர் தான் நம் மூக்கில் போகும் ஜாக்கிரதை(பயம் வேண்டாம் நோய் எதுவும் வராது அது ஒரு தாவரங்களுக்கான நுண்ணுயிர்)
9 comments:
அந்த மண்வாசம் மிகப்பிடிக்கும். ஆனால் இங்கு ஒரு நாளும் உணரவில்லை.
ஆம் கொங்கிறீற் காடல்லவா?
உங்களால் மழை ஓகே! ஒத்துக்கொள்கிறேன் ஆனால் பாதி சிகரெட் நமுத்து போச்சு சொல்லி உங்களுக்கு சீக்கிரமே பால் ஊத்த வைச்சிடாதீங்க!!
தமிழ் எழுதுவதே கொஞ்சம் பேர் தான்.தமிழை காப்பாற்ற ஆள் வேண்டாம்? :-))
எங்கள் கிராமத்தில் ஒரு நாள் மதியம் சும்மா சிறிய தூரலாக போட்டுப்போன மழைத்துளி கொடுத்த மண்வாசத்துக்கு இணையான வாசனைத்திரவியம் இது வரை நான் முகர்ந்ததில்லை.
வருகைக்கு நன்றி யோகன் பாரிஸ்,
கான்கிரிட் காட்டில் பெட்ரோல் புகையும் ,டயர் ,குப்பை எரிக்கும் வாசம் தான் அடிக்கடி கிடைக்கும் சுவாசிக்க ,
------------------
வருகைக்கு நன்றி வடுவூர் குமார்,
//தமிழ் எழுதுவதே கொஞ்சம் பேர் தான்.தமிழை காப்பாற்ற ஆள் வேண்டாம்? :-))//
ஏற்கனவே தமிழ் என்னால் தான் வாழ்கிறது என்று நான் மனப்பால் குடித்து வருகிறேன் ,நீங்கள் வேறு உசுப்பி விடுறிங்க !
மண்வாசனை சுகமாக தான் இருக்கும் அதுவும் கோடை உழவு செய்த வயலில் மழை பெய்ததும் வரும் வாசம் சிறப்பு.
தம் அடிச்சா ஆயுசு குறையும் அதே போல ஒரு முறை சிரிச்சால் ஆயுசு கூடுமாம் அதற்கு தான் தமிழ்மணத்தில் வரும் பதிவுகள் போதுமே!
அகா, இந்த மண் வாசனையை சொல்லி எங்க கிராமத்தை நினைவுபடுத்திவிட்டீர்கள்
mazhai melliyathaaga thoorinal mattume man vaasam varum endru kelvi pattu irukirene..! vegama vizhum mazhaiyinal man vaasam ezhumba saathiyama..
வருகைக்கு நன்றி சிவபாலன்,
எல்லா மனிதர்களின் வேர்களும் கிராமத்திலிருந்து தான் கிளம்புகிறது, எனவே எல்லாருக்கும் கிராமிய நினைவுகள் அவ்வப்பொழுது பீறிடுவது சஜமே தங்களுக்கும் கிராம நினைவுகள் கிளம்பிவிட்டதா அருமை!
--------------------------------
வாங்க பெபி, நன்றி,
ஆரம்பத்தில் சிறு தூறலாகத்தான் மழை கிளம்பும் உடனே மெல்லிய மண்வாசம் கிளம்பும் அதை தான் குறிப்பிட்டுள்ளேன். பின்னர் மழை நின்றதும் அந்த வாசம் நன்கு கிளம்பும்.அதெல்லாம் புழுதிக்காட்டில் தான் இந்த சென்னைப்பட்டினத்தில் அல்ல என்று தான் சொல்லியுள்ளேன்.மலரும் நினைவுகள் இதெல்லாம்!
thalaiva ealla visayangalaum ezuuthureenga namma aasaramathai patriyum ezhithunga ..sisyar,sisyaihal venaama?....
ஆகா ஆலம் நம்ம ஆஸ்ரமம் பத்திலாம் இங்கே பெஅசினா , கல்லடிதான் கிடைக்கும் :-))
மண்வாசனைக்கு அழகான தகவல். இதைவிட *வெளவால்* என்ற தலைப்பு இதைவிட அழகு.
Post a Comment